புதன், 22 பிப்ரவரி, 2012

மூன்று பதில்கள் 01


1)  எந்தவகைப் புத்தகங்களைப் படிப்பதில் அதிக ஆர்வம் உங்களுக்கு? நிறைய அடுக்காமல் பிடித்த முதல் இரண்டு எழுத்தாளர்கள் யார்? ஏன்?(எந்த மொழியாயினும்) அவர்களின் எந்த படைப்பு உங்களுக்கு மாஸ்டர்பீஸ்?
                     
நகைச்சுவை உள்ள புத்தகங்கள். சுய முன்னேற்றப் புத்தகங்கள். 
பி ஜி வோட்ஹவுஸ். (சரியாகச் சொல்லியிருக்கின்றேனா - பெயரை?) மாஸ்டர் பீஸ் என்று தனியாக / குறிப்பாக எதுவும் சொல்ல இயலவில்லை. 
   
2)  சமீபத்தில் 'ரொம்ப நாளைக்கப்புறம் ரொம்ப நேரத்துக்கு மனம் விட்டுச் சிரித்தேன்' என்று சொல்லவைத்த நிகழ்ச்சி என்ன?   
       
இதனுடைய ஒரிஜினல் பதிவான 'வாசகர்களுக்கு 3 கேள்விகள்'  பதிவில், முதல் கேள்விக்கான படத்தை, உருவாக்கி விட்டு, அதைப் பார்த்து ரொம்ப நேரம் சிரித்துக் கொண்டிருந்தேன். ("ஹி ஹி - பொடிமட்டையே தும்மக்கூடாது!" மைன்ட் வாய்ஸ்!)
     
3)  இந்தியாவில் உடனடியாக இது மாற வேண்டும் என்று நீங்கள் நினைக்கும் ஒரு விஷயம்....  
    
மற்றவர்களிடம் குறை காண்கின்ற மனப்பான்மை. (ஏதிலார் குற்றம் போல் தன குற்றம் காண்கின் ....)
(டிஸ்கி : யார் பெயரில் பதிவிடப் படுகின்றதோ, அவருடைய பதில்கள் அல்ல!)
     

11 கருத்துகள்:

 1. மூன்றாவது மாற வேண்டிய ஒன்றுதான்.

  டிஸ்கி: இதை வைத்து ஒரு போட்டி வைக்கலாம் போலிருக்கே:)!

  பதிலளிநீக்கு
 2. Enakkum Wodehouse pidikkum!! Masterpiece - Jeeves or Wooster - character masterpiece aaga irukkak koodaatha?!!

  பதிலளிநீக்கு
 3. மி கி மா - ஒரு எழுத்தாளர் படைக்கும் ஒவ்வொரு காரக்டரிலும், அந்த எழுத்தாளரின் பத்து சதவிகிதமாவது இருக்கும். அந்த வகையில் வோட்ஹவுஸின் காரக்டர்களில் யாரையாவது மாஸ்டர் பீஸ் என்று சொல்லாமல், அவர்களைப் படைத்த மாஸ்டரை மாஸ்டர் பீஸ் என்று சொல்லிவிடலாம் என்று தோன்றுகிறது.

  பதிலளிநீக்கு
 4. வோடௌஸ் தான் மஸ்டர் பீஸ். நினைத்து நினைத்து சிரிக்க வைக்கும் மன்னன்.

  பதிலளிநீக்கு
 5. //டிஸ்கி// ...யருடைய பதில்கள் என்று ஒரு போட்டி வைக்க போகிரீர்களா??

  பதிலளிநீக்கு
 6. ஏற்கெனவே நாங்க வெச்ச போட்டி, பரிசு அறிவிப்பு எல்லாவற்றையும் பார்த்து, செம கிண்டல் பண்ணிவிட்டார் ஒரு வாசக பதிவர். அதைப் படித்து, எங்கள் எல்லோர் முகமும் நாணிச் சிவந்துவிட்டன! அப்படி இருக்கும் போது, மேலும் ஒரு போட்டி வைத்து சிவந்த முகங்களை கருப்பாக்கிக் கொள்ள வேண்டுமா!!! வேண்டாம் அம்மா வேண்டாம்!! :)))))

  பதிலளிநீக்கு
 7. இந்த மூன்று கேள்விகளுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை !

  பதிலளிநீக்கு
 8. யாருங்க அது.. கொஞ்சங்கூட இங்கிதமில்லாம உங்களைக் கிண்டல் செஞ்சு எழுதினது.. தெரியாம போச்சே..
  அதுக்காக தளந்துடாதீங்க.. அட்ச்சு விடுங்க சொல்றேன்..

  பதிலளிநீக்கு
 9. கருகின தோசையைப் பார்த்துட்டு வந்தால் இங்கே நாணிச் சிவந்த முகங்கள்???? :P:P:P

  யாரு அந்தப் பதிவர்?? கண்டு பிடிப்பவர்களுக்கு ஆயிரம் பொற்காசுகள். எங்கள் ப்ளாகின் ஐந்து ஆ"சிரி"யர்களும் தரப் போறதா மெயில் அனுப்பி இருக்காங்க.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!