புதன், 1 பிப்ரவரி, 2012

உலகைக் காத்திடும் ....

               

வழக்கம்போல் எஃப் எம் ரேடியோவில் கச்சேரி கேட்டுக் கொண்டிருந்தேன். 
         
" உலகைக்காத்திடும் ஊமையின் மகனே! " என்று பாடகி பாடியதும் ஒரு கணம் திகைத்துப் போனேன். பாக்களில் இந்த மாதிரி பிரயோகங்களை நிந்தாஸ்துதி என்று சொல்வர்.  இறைவன் அல்லது இறைவியை திட்டுவது போல துதி செய்வது நிந்தாஸ்துதி. 
            
வாதக்காலாம் தமக்கு மைத்துனருக்கு நீரிழிவாம் 
போதப் பெருவயிறாம் புத்திரர்க்கு -- மாதரையில்
வந்த வினை தீர்த்தறியான் வேளூரான் 
எந்த வினை தீர்த்தான் இவன்?
                       
வைத்தீஸ்வரன் கோவில் ஆண்டவன் தீராத வினையெல்லாம் தீர்ப்பவன் என்று காளமேகப் புலவருக்கு யாரோ சொன்னார்களாம். அதற்கு பதிலாக அவர் சொன்னது இந்தப் பாடல் என்பார்கள். தன காலில் வாதம் வந்து ஒருகாலை தூக்கி ஆடுகிறான். மகன் விநாயகனுக்கு வயிறு வீங்கி மகோதரம். மாது அரை இல் பார்வதி பாதி உடம்பை பிடித்து வைத்துக் கொண்டாள். தனக்கு வந்த வினையையே தீர்க்க முடியாத இந்த நடராஜன் எந்த வினையை தீர்ப்பான்? இது நிந்தாஸ்துதிக்கு ஒரு பிரகாசமான உதாரணம். 
              
உலகைக் காத்திடும் ஊமை!  அடடா! இறைவன் அல்லது இறைவி இருவருக்கும் பொருத்தமான சொல்! உலகைக் காக்கும் இறை ஊமை! நீ என்ன கதறினாலும் அது பதில் சொல்வதில்லை. அது பாட்டுக்கு தன்னுடைய தொழிலை செய்து கொண்டு இருக்கிறது. நீயோ நானோ அந்த இறைவி அல்லது இறைவனின் மகன் தான்! என்னே சொல்லாட்சி! என்னே பொருள் வளம்!  
                     
என் ரசனையில் நானே மெய் மறந்திருக்கும் போது பாடகி அடுத்த முறை சரியாகப் பாடினார்! 
                     
" உலகைக் காத்திடும் உமையின் மகனே!....." 
                   

19 கருத்துகள்:

  1. மைத்துனருக்கு நீரிழிவு??? என்ன அர்த்தம். திருமாலுக்கு எந்த விதத்தில் பொருந்தும்னு பார்க்கணும்.

    பதிலளிநீக்கு
  2. நிந்தாஸ்துதி தகவல் அற்புதம். இக்கால அரசியல் தலைவர்களுக்குத் தொண்டர்படை இது போல நிந்தாஸ்துதியில் பேனர் வைத்தால் எப்படியிருக்கும் என்று நினைத்துப் பார்த்தேன். சிரிப்பு வந்தது. :-)

    பதிலளிநீக்கு
  3. நிந்தாஸ்துதி தகவல் இப்பொழுதுதான் கேள்வி படுகிறேன். அற்புதமான விஷயம். நன்றி பகிர்வுக்கு.

    பதிலளிநீக்கு
  4. இந்தப் பதிவில் உள்ள நிந்தாஸ்துதி பாடலை இயற்றியவர், வீரமாமுனிவர் என்று கூகிளாண்டவர் சொல்கின்றார்!

    பதிலளிநீக்கு
  5. நிந்தாஸ்துதியில் காளமேகமே சிறந்த பெயர் வாங்கினவர். மேலும் வீரமாமுனிவரா இந்துக் கடவுளரைக் குறித்து எழுதி இருப்பார்? கூகிள் தப்பு அல்லது காளமேகன் தேடுதலில் ஏதோ தவறு. இது காளமேகம் பாடல் தான்.

    இப்போ பதிவு குறித்த விமரிசனம். நீங்க எழுதின முதல்வரியிலேயே விஷயம் புரிந்து போச்சு. :))))

    ஆனாலும் நீங்கள் தொடர்ந்தது சூப்பர். அப்படியே நிந்தாஸ்துதி அறிமுகமும். பலருக்கும், குறிப்பாய் இளைய தலைமுறை அறியாத ஒன்று.

    பதிலளிநீக்கு
  6. ஹிஹிஹி, இதைப் படிச்சதும் பெப்ஸி உங்கள் சாய்ஸ்னு ஒரு நிகழ்ச்சி ஏதோ ஒரு சானலில் வருமாம். அதிலே வரும் உமா மகேஸ்வரி என்ற பெண் விடை பெறுகையில் ஊங்க்கள் ஊமா என்றே சொல்லுவதாக விகடன்,, குமுதம், கல்கி பத்திரிகைகளில் கிண்டல் செய்திருப்பார்கள். அது நினைவுக்கு வருது. :)))))

    பதிலளிநீக்கு
  7. அந்தக் கடைசி வரி சரியான பஞ்ச்!!!!!!!!!!!!!!!!!!

    பதிலளிநீக்கு
  8. உமை மகன் ஊமை மகன் இரண்டும் பொருத்தமாத்தான் இருக்கு கல்லான சாமிக்கு !

    பதிலளிநீக்கு
  9. வாங்க ஹேமா, சாமி கல் இல்லை; நாம தான் கல்லில் சாமியைச் சிலையாகச் செய்து அந்த உருவம் கொடுத்திருக்கோம். :)))))) சாமி கல்லா? மண்ணா? நீரா? காற்றா? வாயுவா? அக்னியா? எதுவும் இல்லை; ஆனால் எல்லாத்திலும் இருக்கார். :)))))

    இன்னிக்குக் காலம்பர பூத்திருக்கும் சின்னச் சங்குப் பூவில் இருந்து அனைத்திலும் இருக்கார்.

    பதிலளிநீக்கு
  10. வயிறாம் புத்திரர்க்கு என்று இருக்க வேண்டியது தவறாக பதிவாகி இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  11. மைத்துனர் ஆகிய திருமால் பால் கடலில் பள்ளி கொண்டு இருக்கிறார். நீர்க்கடல் மட்டம் என்று எண்ணினார் போலும் என்று பொருள் கொள்ளலாம். திருமாலுக்கு நீரிழிவு அதனால் பாலை சேர்த்துக் கொள்ளாமல் ஜாக்கிரதையாக விலகி ஆதிசேஷன் மேல் பள்ளி கொண்டிருக்கிறார் என்றும் சொல்லலாம்.

    பதிலளிநீக்கு
  12. நன்றி கீதா அக்கா.கடவுள் எங்கும் இருக்கிறார் என்பது உங்கள் தத்துவம்.எனக்குள் மட்டும் இருக்கிறார்,என் முன்னால் நிற்பவரில் இருக்கிறார் அல்லது எங்குமே இல்லை என்பது என் தத்துவம்.தத்துவங்கள்
    எங்களுக்கு மட்டுமே.

    பொதுவாகக் கடவுள் என்று அறிமுகமாகியவர் சிவனும்,உமையும் அம்மா அப்பாவாம்.
    பிள்ளையாரும்,முருகனும் பிள்ளைகளாம்.இவர்கள் குடும்பத்தில் இன்னும் பலபேர்.இவர்களை கல்லாகத்தானே இன்றுவரை கண்டிருக்கிறேன்.

    ஆனால் இன்று இப்போ நீங்கள் எனக்கு நல்லதைச் சொல்லித் தந்தவர்.எனவே உங்களுக்குக் கடவுள் என்று பெயர் வைத்துவிடுகிறேன் !

    பதிலளிநீக்கு
  13. சாமி எல்லாத்துலயும் இருந்தா அப்புறம் தனியா சாமினு சொல்வானேன்?

    பதிலளிநீக்கு
  14. கந்த்சாமி முன்சாமி க்ருஷ்ன்சாமி கோவிந்த்சாமி கோவால்சாமி ராம்சாமி ரங்க்சாமி ஐயாசாமி அப்பாசாமி மாடசாமி முத்சாமி சின்சாமி பெரிசாமி.. இப்போது புரிந்தது.. எங்கெங்கு காணிலும் சாமியடா!

    பதிலளிநீக்கு
  15. Hema, ippo pathil solla neram illai. appurama varen, :))))))))

    Appadurai, ellarukkum puriyara varaikkum ippadi onnu thevai. ninga solrapola engengu kaninum samiyada than. michathukku apurama varen. :P:P:P:P

    பதிலளிநீக்கு
  16. சுவாரசியமான சமாசாரம்னா இப்போ நேரமில்லைனு சொல்றது ந்யாயமா சொல்லுங்க :-)

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!