திங்கள், 20 பிப்ரவரி, 2012

உள் பெட்டியிலிருந்து ... 02 2012

                 
நட் பூ
   
உன் சோகம், உன் வருத்தம்  என்னிடம் சொல்லாதது வருத்தம்தான். இதில் என் வெட்கம்,  என் நட்பு உன் சோகத்தை அறிந்தும் காரணத்தை  என்னால் தானாகவே அறிய முடியாமல் போனதே என்பதே...  
================== 
இ.கா....எ.கா...
இறந்த காலம் யாருமே முழுவதும் சரி இல்லை என்கிறது. எதிர்காலம் எல்லாமே மாறக் கூடியதுதான் என்கிறது. 
==================== 

சம்பிரதாய உண்மை!
  
முகத்தில் தெரியும் பாவனைகளை விட இதயத்தில் இருக்கும் உணர்வுகளை மதிப்போம். ஏனென்றால் பாவனைகள் சம்ப்ரதாயம். உணர்வுகள் உண்மை. 
=====================
கேட்கிறதா....
   
மற்றவர்கள் ஆர்வமாகக் கேட்கும் வண்ணம் பேசுங்கள்; மற்றவர்கள் மனம் விட்டுப் பேசும் வண்ணம் கேளுங்கள்.  
=============================
சொல்லியிருக்காங்க...

முடியும் என்றால் முயற்சி எடு; முடியாது என்றால் பயிற்சி எடு! (கலாம்)

என்னுடைய 99% பிரச்னைகள் என்னுடைய 1% கவனமின்மையாலேயே வருகிறது! (ஹிட்லர்)
   
விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்குவதில்லை. (கார்ல் மார்க்ஸ்)

என்னை நேசிப்பவர்களை நான் நேசித்துக் கொண்டிருப்பதால் என்னை வெறுப்பவர்களை வெறுக்க எனக்கு நேரமில்லை. (டேல் கார்னகி.)
    
ஒரு மனிதன் தன்னையே தன் எதிரியாக உணர்வதுதான் அல்டிமேட் ஆச்சர்யம். - (வெர்னன் ஹோவார்ட்).

இன்றைய பிரச்னைகளைத் தவிர்ப்பதன் மூலம் நாளைய பொறுப்புகளிடமிருந்து  நீங்கள் தப்பிக்க முடியாது. (ஆ.லிங்கன்.)

கற்றல் படைப்பாற்றலைப் பெருக்குகிறது.
படைப்பாற்றல் எண்ணங்களை ஊக்குவிக்கிறது.
எண்ணங்கள் அறிவை வளர்க்கிறது.
அறிவு மனிதனை முழுமையாகுகிறது. (கலாம்)
===================================
தொற்று நோய்
    
எல்லாப் புன்னகைகளும் இன்னொரு புன்னகையால் தொடரப் படுகின்றன. எதிராளி புன்னகைக்க ஏன் காத்திருக்க வேண்டும்? நம்மிடமிருந்து தொடங்கட்டுமே..
  
புன்னகை எப்போதும் சந்தோஷத்தை மட்டும் குறிப்பதில்லை. சில சமயம் நம் மன உறுதியையும் காட்டுகிறது.
===============================
அப்படியா!
     
இரண்டு முகங்களை மனிதனால் மறக்க முடிவதில்லை. ஒன்று கஷ்ட நேரத்தில் கை கொடுத்தவன். இன்னொன்று கஷ்ட நேரத்தில் கை விட்டவன்.
உங்களோடு பேசுவதை நிறுத்துபவர்கள், உங்களைப் பற்றிப் பேசத் தொடங்குவார்கள்.
                       
நீங்கள் அனுசரித்துப் போகும் சிலர் உங்கள் நண்பர்கள். அப்படிப் போகாத பலர் உங்களின் சிறந்த நண்பர்கள்.
============================= 
                         

11 கருத்துகள்:

 1. ஒவ்வொன்றும் நெஞ்சில் நிறுத்தி கொள்ள வேண்டிய கருத்துகள். திரும்ப, திரும்ப வாசித்தேன்.

  பதிலளிநீக்கு
 2. அருமையான பதிவு.
  அருமையான கருத்துகள்.
  வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 3. அருமையான கருத்துகள்.
  வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 4. உன் சோகம், உன் வருத்தம் என்னிடம் சொல்லாதது வருத்தம்தான். இதில் என் வெட்கம், என் நட்பு உன் சோகத்தை அறிந்தும் காரணத்தை என்னால் தானாகவே அறிய முடியாமல் போனதே என்பதே... //

  அருமை! நிஜமான ஃபீலிங்ஸ்!

  பதிலளிநீக்கு
 5. உள்பெட்டியிலிருந்து கிடைத்த விஷயங்கள் எல்லாமே அருமை. உள்பெட்டியைக் காலி செய்யுமுன்பு அவ்வப்போது இப்படிப் பகிருங்கள் ஐயா...

  பதிலளிநீக்கு
 6. அத்தனையும் அருமை.
  எல்லாவற்றையும் ஒற்றி எடுத்துக்கொண்டேன்.நன்றி !

  பதிலளிநீக்கு
 7. உள் பெட்டியில் அனைத்து கருத்துக்களுமே அருமை.

  //முடியும் என்றால் முயற்சி எடு; முடியாது என்றால் பயிற்சி எடு! (கலாம்)//

  சிறப்பு.

  பதிலளிநீக்கு
 8. அத்தனையுமே சிறப்பு. இன்னும் அள்ளித் தரக் காத்திருக்கிறோம்.

  பதிலளிநீக்கு
 9. எல்லாமே அருமையா இருக்கு. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 10. உள்பெட்டி அஞ்சறைப் பெட்டிபோல
  நல்ல ஆரோக்கியமான சங்கதிகளைக்
  கொண்டிருந்தது
  பகிர்வுக்கு நன்றி

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!