1) எந்தவகைப் புத்தகங்களைப் படிப்பதில் அதிக ஆர்வம் உங்களுக்கு? நிறைய அடுக்காமல் பிடித்த முதல் இரண்டு எழுத்தாளர்கள் யார்? ஏன்?(எந்த மொழியாயினும்) அவர்களின் எந்த படைப்பு உங்களுக்கு மாஸ்டர்பீஸ்?
நகைச்சுவை உள்ள புத்தகங்கள். சுய முன்னேற்றப் புத்தகங்கள்.
பி ஜி வோட்ஹவுஸ். (சரியாகச் சொல்லியிருக்கின்றேனா - பெயரை?) மாஸ்டர் பீஸ் என்று தனியாக / குறிப்பாக எதுவும் சொல்ல இயலவில்லை.
2) சமீபத்தில் 'ரொம்ப நாளைக்கப்புறம் ரொம்ப நேரத்துக்கு மனம் விட்டுச் சிரித்தேன்' என்று சொல்லவைத்த நிகழ்ச்சி என்ன?
இதனுடைய ஒரிஜினல் பதிவான 'வாசகர்களுக்கு 3 கேள்விகள்' பதிவில், முதல் கேள்விக்கான படத்தை, உருவாக்கி விட்டு, அதைப் பார்த்து ரொம்ப நேரம் சிரித்துக் கொண்டிருந்தேன். ("ஹி ஹி - பொடிமட்டையே தும்மக்கூடாது!" மைன்ட் வாய்ஸ்!)
3) இந்தியாவில் உடனடியாக இது மாற வேண்டும் என்று நீங்கள் நினைக்கும் ஒரு விஷயம்....
மற்றவர்களிடம் குறை காண்கின்ற மனப்பான்மை. (ஏதிலார் குற்றம் போல் தன குற்றம் காண்கின் ....)
(டிஸ்கி : யார் பெயரில் பதிவிடப் படுகின்றதோ, அவருடைய பதில்கள் அல்ல!)
(டிஸ்கி : யார் பெயரில் பதிவிடப் படுகின்றதோ, அவருடைய பதில்கள் அல்ல!)