Wednesday, February 8, 2012

வாசகர்களுக்கு மூன்று கேள்விகள் 02

                    
பத்திரிகைகளுக்கு நாம் கேள்விகள் அனுப்பினால், அது பிரசுரமானால், அந்தக் கேள்விகளுக்கு அவர்கள் பதில் சொல்வார்கள். 

இங்கு ஒரு மாறுதல்.

இங்கு எங்கள் கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்லுங்களேன்.......
            
1)  எந்தவகைப் புத்தகங்களைப் படிப்பதில் அதிக ஆர்வம் உங்களுக்கு? நிறைய அடுக்காமல் பிடித்த முதல் இரண்டு எழுத்தாளர்கள் யார்? ஏன்?(எந்த மொழியாயினும்) அவர்களின் எந்த படைப்பு உங்களுக்கு மாஸ்டர்பீஸ்?
   
2)  சமீபத்தில் 'ரொம்ப நாளைக்கப்புறம் ரொம்ப நேரத்துக்கு மனம் விட்டுச் சிரித்தேன்' என்று சொல்லவைத்த நிகழ்ச்சி என்ன?
     
3)  இந்தியாவில் உடனடியாக இது மாற வேண்டும் என்று நீங்கள் நினைக்கும் ஒரு விஷயம்....
      
ஆசிரியர்களின் பதில்கள் தனிப் பதிவில்....!  
        

25 comments:

HVL said...

1) எந்தவகைப் புத்தகங்களைப் படிப்பதில் அதிக ஆர்வம் உங்களுக்கு? நிறைய அடுக்காமல் பிடித்த முதல் இரண்டு எழுத்தாளர்கள் யார்? ஏன்?(எந்த மொழியாயினும்) அவர்களின் எந்த படைப்பு உங்களுக்கு மாஸ்டர்பீஸ்?

psychology related books.

1. sujatha (all short stories
)
2. s. ramakrishnan (thunai ezuththu). I like their style of writing

2) சமீபத்தில் 'ரொம்ப நாளைக்கப்புறம் ரொம்ப நேரத்துக்கு மனம் விட்டுச் சிரித்தேன்' என்று சொல்லவைத்த நிகழ்ச்சி என்ன?

my children’s timely joke.

3) இந்தியாவில் உடனடியாக இது மாற வேண்டும் என்று நீங்கள் நினைக்கும் ஒரு விஷயம்....
All should speak in their mother tongue

மோகன் குமார் said...

1. சிறுகதைகள், அனுபவங்கள் சார்ந்த கட்டுரைகள், சுய சரிதைகள் இவை வாசிக்க பிடிக்கும். பிடித்த எழுத்தாளர் சுஜாதா. வாழும் எழுத்தாளர்களில் எஸ். ராமகிருஷ்ணன்

3 . மோசமான அரசியல் வியாதிகள் தான் இந்தியாவில் மாற வேண்டிய விஷயம் என நினைப்பது. ஆனால் அது மிக சிரமம் என தெரியும் !

வல்லிசிம்ஹன் said...

பிடித்த எழுத்தாளர்கள் நிறைய.
அலுக்காமல் படிக்கலாம் என்ற நம்பிக்கையை எனக்குத் தருபவர்கள் சுஜாதா சார். முக்கியமான புத்தகங்கள் ஸ்ரீரங்கத்து தேவதைகள் அவரே கையெழுத்துப் போட்டுக் கொடுத்தது:0)
2,சுஜாதாவின் குறுநாவல்கள் புத்தகமாக வெளிவந்தது
இன்னோரு எழுத்தாளை கி.ராஜநாரயணன் ஐய்ய. அவரது எல்லாப் படைப்புகளும் பிடிக்கும். முக்கியமானது ''கோபல்லபுரத்து மக்கள்''
2, சமீபத்தில் மனம் விட்டுச் சிரித்தது எஸ்வி சேகரின் அல்வா நாடகம் கேட்டு.
3,இந்தியாவில் உடனடியாக மாற வேண்டியது பட்டினிக் கொடுமை.

கீதா சாம்பசிவம் said...

hehehe count me out! :P

கீதா சாம்பசிவம் said...

1) எந்தவகைப் புத்தகங்களைப் படிப்பதில் அதிக ஆர்வம் உங்களுக்கு? நிறைய அடுக்காமல் பிடித்த முதல் இரண்டு எழுத்தாளர்கள் யார்? ஏன்?(எந்த மொழியாயினும்) அவர்களின் எந்த படைப்பு உங்களுக்கு மாஸ்டர்பீஸ்?//

தமிழில் "தேவன்" எழுதிய எல்லாமும். தேவன் எழுதிய எல்லாமும் மாஸ்டர்பீஸ் தான்.

ஆங்கிலம் என்றால் அகதா கிறிஸ்டி. Cat among the Pigeons

2) சமீபத்தில் 'ரொம்ப நாளைக்கப்புறம் ரொம்ப நேரத்துக்கு மனம் விட்டுச் சிரித்தேன்' என்று சொல்லவைத்த நிகழ்ச்சி என்ன?//

நேத்திக்கு அப்பு எங்க ரெண்டு பேரையும் பார்த்து, "Do you like each other? Then hold your hands!" னு சொன்னப்போ. :))))))


3) இந்தியாவில் உடனடியாக இது மாற வேண்டும் என்று நீங்கள் நினைக்கும் ஒரு விஷயம்....

திடீர்னு எங்க தெரு வழவழனு மாறிச் சும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா விர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்னு போகணும்! எங்கே! :(

இது மாநிலமாப் போச்சுனு நினைச்சீங்கன்னா, திடீர்னு இந்திய அரசியல்வாதிகளெல்லாம் நாட்டுக்குச் சேவை செய்யறவங்களா மாறிடணும். அம்புடுதேன்.

அப்பாதுரை said...

சட்டென்று மனதில் தோன்றியவை:
மிக மிகப் பிடித்த நூல்: மகாபாரதம்
அதற்கு ரொம்பக் கீழே இரண்டாம் இடம்: count of monte cristo
சலிக்காமல் திரும்பத் திரும்பப் படித்த, மிகவும் பிடித்த கதாசிரியர்: pg wodehouse
விரும்பிப் படிக்கும் இன்றைய எழுத்தாளர்: போகன்.

தினம் ஒரு தடவையாவது மனம் விட்டுச் சிரிக்கணுங்க.. இல்லாட்டி நமக்குக் கட்டுப்படியாவாது. தினம் ஏதாவது கிடைச்சுட்டே இருக்கும். அப்படி எதுவும் கிடைக்காம,
சிரிச்சேயாவணும்னு தோணிச்சுனா பாக்குற சினிமா:my cousin vinny, groundhog day, அனுபவி ராஜா அனுபவி; படிக்கிற புத்தகம்: அப்புசாமியும் ஆப்பிரிக்க அழகியும், jeeves கதைகள், சென்னை பித்தன் பதிவுகள்..

அப்பாதுரை said...

அது ரொம்ப சுளுவாச்சே கீதா சாம்பசிவம்.. உங்க தெரு குப்பையெல்லாம் அடுத்த தெரிவுல தள்ளிட வேண்டியது தான்.

அப்பாதுரை said...
This comment has been removed by the author.
அப்பாதுரை said...

சமீபத்தில் ரொம்ப நேரம் மனம் விட்டுச் சிரிக்க வைத்தது போகனின் எழுத்தை விமரிசித்த ராஜகோபாலின் கமெந்ட்: "மனம் ஒரு சந்தோஷ நிலையில் இருக்கும் தருணத்தில் உம்ம கதையவோ, கவிதையையவோ படிப்பதில்லை. படிச்சா ஒரு விதமான எரிச்சல் கலந்த மனோநிலை நிகழும். இருந்தாலும் படிக்காமல் இருந்ததில்லை. காலையில் இருந்து நல்ல இருந்திச்சு. எளவு, இப்ப இந்த கவிதையை படிச்சிட்டேன்".

bandhu said...

பிடித்த எழுத்தாளர் எல்லோரும் பதிவுலகில்!. சீரியஸ் எழுத்துக்களில்.. அப்பாதுரை (நசிகேத வெண்பா.. படித்ததையே மறுபடி மறுபடி படிக்க படிக்க புதிது புதியதாய் புரிகிறது!) .. பல்சுவை எழுத்துக்களில்.. அப்பாதுரை.. (மூன்றாம் சுழி!) .. சமுத்ரா (வார்த்தைகளிலிருந்து மௌனத்திற்கு)..டுபுக்கு..தக்குடு..
சமீபத்தில் மனம் விட்டு சிரித்தது.. 2G ஊழலுக்கு பி ஜே பி மன்னிப்பு கேட்கவேண்டும் என்று கபில் சிபல் சொன்னபோது!
இந்தியாவில் மாறவேண்டும் என்று நினைப்பது.. எல்லோருக்கும் எத்திகல் வால்யுஸ் அதிகரிப்பது.. லஞ்சம் வாங்குபவர்களை பிழைக்க தெரிந்தவன் என்று சொல்பதை விட்டு திருடன் என்று எண்ண வேண்டும்!

Madhavan Srinivasagopalan said...

1)
a) எங்கள் பிளாகில் வரும் பதிவுகளை பிரின்ட் எடுத்து புத்தகமாக படிப்பது எனக்கு பிடிக்கும்.
b) பிடித்த இரு ஆ'சிரி'யர்கள் -- ஸ்ரீராம் சார், கே.ஜி.கௌதமன் சார்..
c)பிடித்த படைப்பு..இதுதான்.
இதுக்கு
(வித்தியாசமா யோசிச்சு என்னால பதில் சொல்ல முடிஞ்சிதே.. அதுக்காக..)

2) இன்னைக்குத்தான்... ஈவினிங்.. சிரிச்சேன்.. எதுக்கா..?
எவ்ளோ அடிச்சாலும் தாங்குறாணுக..... அவங்க ரொம்ப நல்லவங்கனு...
நெனச்சிட்டே கெடந்த எல்லாருக்கும்.. ஆச்சர்யம் கொடுக்கும் வகையில இலங்கைய கெளிச்ச நம்ம இந்திய கிரிக்கெட் டீமோட நிலை..

3) அடடா... இந்திய வரைபடத்த கொடுத்து இப்படி கேள்வி கேட்டா எப்படி ?
வரைபடத்த மாத்தற உரிமை நமக்கு கெடையாதே..!

கீதா சாம்பசிவம் said...

Madhavan Srinivasa Gopalan, Ice, Ice, Ice!! :P:P:P:P

கீதா சாம்பசிவம் said...

@Appadurai, roade illai, kuppai than irukku; nan ketkirathu road! :P:P:P kuppaiyai enge podanumnu illai! :))))))

geetha santhanam said...

1.ஆதர் ஹேய்லி அவர்களின் நாவல்கள். தமிழில் பாக்கியம் ராமசாமி அவர்கள்.
2.மனம்விட்டு சிரித்தது- பாக்கியம் ராமசாமி அவர்களின் 'விமு யாரை விட்டது' என்ற சிறுகதை படித்து. குழந்தை வளர்ப்பு பற்றிய கட்டாயம் படிக்க வேண்டிய கதை. எத்தகைய சிடுமூஞ்சியும் சிரிக்கக் கூடிய கதை.
3.இந்தியாவில் மாற வேண்டியது: ஊழல்; சுகாதாரமின்மை.

பத்மநாபன் said...

சுஜாதா ..... அவர் எழுதிய சலவை குறிப்பு கிடைத்தால் அந்த குறிப்பு உட்பட அனைத்தும் .....மாஸ்டர் பீஸ் நிறைய இருக்கிறது சமிபத்தில் படித்தது எனும் வகையில் சொல்ல விரும்புவது ''கண்ணீரில்லாமல் '' எனும் ஓரு சின்ன தொகுப்பு ....நாம் ஏன் வாத்தியார் வாத்தியார் என சிலாகிக்கிறோம் என்பதற்கு விடை தரும் புத்தகம் .அதில் ...யாப்பை பிரித்து மேய்ந்திருப்பார் ... கர்னாடக சங்கிதம் மேலை சங்கிதம் எல்லாம் அழகாக சொல்லிக்கொடுத்திருப்பார் ..

அடுத்து எழுத்தில் ஈர்த்தவர் அப்பாதுரை ......எழுத்தில் எல்லா ரசமும் வைக்க தெரிந்தவர் மாஸ்டர் பீஸ் ''தந்தை சொல்''
எனும் புகுந்து விரியும் கதை ...அப்புறம் நசிகேத வெண்பாவில் நிறைய அதில் புத்தூர் திறப்பு விழா.... மனத்தொய்வுக்கு அருமையான ஒத்தடம் ....


சமிபத்தில் மனம் விட்டு சிரித்தது '' சோ '' துக்ளக் ஆண்டுவிழா பேச்சு .....


மாறவேண்டியது ...சுயநல அரசியல் ....

கக்கு - மாணிக்கம் said...

1 - பிடித்த கதாசிரியர் தமிழில் ...தி .ஜானகி ராமன். அவர் எழுதிய அனைத்தும். குறிப்பாக மரப்பசு...மோக முள், அம்மா வந்தாள்.

பின்னர்.....Sindey Sheldon. இவரின் நாவல்கள் என்றால் எனக்கு உயிர். அவர் எழுதின எல்லாமே என்னிடம் உள்ளன.
மிகவும் பிடித்தது....Master of the Game ...and ...If Tomorrow Comes.

2- இங்கோ குளிர்காலம். ரெண்டு கட்டிங் விட்டு பாத்ரூம் போன நண்பன். வெந்நீர் வரும் பக்கமாக குழாயை திருப்பி சூடு வைத்துக்கொண்டு அலறியதை நினைத்தால் ........தாங்கல சாமிகளா. இவ்வளவுக்கும் அவன் ஒன்றும் புதிய ஆள் இல்லை


3- சினிமா காரர்களை, அவர்களும் நம்மபோலதான் என்றில்லாமல் அளவுக்கு அதிகமாக போற்றி துதிப்பது. நாடு முழுவதும் இது உடனடியாக மாறவேண்டும்

கீதா சாம்பசிவம் said...

http://sivamgss.blogspot.com/2012/02/blog-post_09.html

விருது வாங்கிக்கவும். :)))

மனோ சாமிநாதன் said...

1. மிகவும் பிடித்தது வரலாற்று புதினம்தான்.
மிகவும் பிடித்த எழுத்தாளர்கள் கல்கி, அகிலன்.
க‌ல்கியின் மாஸ்ட‌ர் பீஸ் சிவ‌காமியின் ச‌ப‌த‌ம்.
அகில‌னின் மாஸ்ட‌ர் பீஸ் வேங்கையின் மைந்தன்.
ஆங்கில‌த்தில்
1.James hadley Chase
2. Sydney Sheldon.
2. ச‌மீப‌த்தில் ம‌ன‌ம் விட்டு சிரித்த‌து குட்டிப்பேர‌னின் குறும்புக‌ளைப்பார்த்து!!

3. இந்தியாவில் அங்கிங்கெனாத‌ப‌டி புரையோடியிருக்கும் ல‌ஞ்ச‌ம்! இது தான் உட‌ன‌டியாக‌ மாற‌ வேண்டும். மாற்ற‌‌ப்ப‌ட‌வேன்டும்!

ராமலக்ஷ்மி said...

1. /சுஜாதாவின் கரையெல்லாம் செண்பகப்பூ, பிரிவோம் சந்திப்போம், இரத்தம் ஒரே நிறம், கனவுத் தொழிற்சாலை, காகிதச் சங்கிலிகள்; ஸ்டெல்லா புரூஸின் அது ஒரு நிலாக்காலம், ஒருமுறைதான் பூக்கும்; பாலகுமாரனின் 'ஆரம்பக்கால' நாவல்களாகிய இரும்புக்குதிரைகள், மெர்க்குரிப் பூக்கள், பச்சை வயல் மனது; தற்போது எஸ்.ரா (குறிப்பாக ‘துணையெழுத்து’)/

”நிறைய அடுக்காமல்” எனும் விதியை மீறி எனது கட்டிப் போட்டக் கதைகள் பதிவிலிருந்து வெட்டிக் கொண்டு வந்து ஒட்டிவிட்டேன், மன்னிக்கவும்!

இப்போது நாவல்கள் வாசிக்கும் பொறுமை போய்விட்டது. கட்டுரை, சிறுகதை தொகுப்புகள் வாசிக்கப் பிடிக்கிறது.


2. வெகுநேரம் என சொல்ல முடியாவிட்டாலும் வாய்விட்டு.. சிரிக்க வைத்துக் கொண்டிருக்கிறது மீண்டும் தொகுப்பாக தற்போது வாசிப்பில் இருக்கும் ‘மூங்கில் மூச்சு’:)!

பதிவுலகில் அம்பியின் நகைச்சுவை எழுத்து பிடிக்கும்.

3. முக்கியமான மாற்றமாக வேண்டுவது ‘நல்ல தலைமை’. அதன் கீழ் அனைத்து தரப்பு, குறிப்பாக அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரம் முன்னேற்றம் அடையும் வகையில் ஒரு 'செழுமை புரட்சி’!

வல்லிசிம்ஹன் said...

இரண்டாம் சாய்ஸ்
தி.ஜானகிராமனின் உயிர்.

கல்கியின் சிவகாமியின் சபதம்.
சிரிக்க வைக்க இரண்டு பதிவர்கள் இருக்கிறார்கள்
அப்பாவி,
தக்குடு.:)

எங்கள் said...

நன்றி...நன்றி....
HVL, உங்கள் மூன்றாவது பதில்!

மோகன் குமார், சுஜாதாவை ரசிக்காதார் குறைவு..!

வல்லிசிம்ஹன் இன்னும் பழைய எழுத்தாளர்கள் பெயர் சொல்வீர்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது!

கீதா சாம்பசிவம், தேவன்..ஆஹா...அரசியல்வாதிகளிடம் எதிர்பார்ப்பு - நம் பேரனுக்குப் பேரன் காலத்திலாவது இது நிகழட்டும்!! அப்புசாமி-சீதாப் பாட்டி எவர்க்ரீன்!

அப்பாதுரை, //சட்டென்று மனதில் தோன்றியவை// அதுதான் வேண்டும்...! யோசித்தால் நிறைய ஆப்ஷன் கிடைக்குமே...!

bandhu, பதிவுலக எழுத்தை ரசித்தேன் என்று முதலில் ஆரம்பித்து விட்டீர்கள். அதுதான் அடுத்த பாக கேள்வி லிஸ்ட்டில் இருந்தது! கபில் சிபல், திக்விஜய் சிங் எல்லார் பேச்சும் நகைச்சுவைதான்!

மாதவன், ஆஹா....அவரா நீங்க.....சரி...சரி....!

பத்மநாபன், மூன்றுமே டாப். பதிவுலகு பற்றி யோசித்து வைத்திருந்த அடுத்த பகுதி கேள்வி அவுட்!

கக்கு-மாணிக்கம், மூன்றாவது பாய்ன்ட் ரொம்பவே நல்ல பாய்ன்ட்

மனோ சாமிநாதன், நன்றி

ராமலக்ஷ்மி, எஸ்ரா எல்லோருக்கும் பிடித்த எழுத்தாளராகி வருகிறார். அம்பி பக்கம் வலைப்பக்கம் சென்று ரசித்ததுண்டு.

நன்றி அனைவருக்கும்.

கீதா சாம்பசிவம் said...

அப்புசாமி-சீதாப் பாட்டி எவர்க்ரீன்!//


grrrrrrrrrrrrrrrrrrrrrஅப்புசாமியையும் சீதாப்பாட்டியையும் நினைவு கூர்ந்தது, கீதா சந்தானம் அவர்கள். நானில்லை. :P:P:P:P:Pவயசானாலே இப்படித்தான் தடுமாறும். :))))

கீதா சாம்பசிவம் said...

பழைய எழுத்தாளர்களைப் பத்திச் சொன்னதாலே, எஸ்.வி.வி. அவர்களின் எழுத்தையும் ரொம்பப் பிடிக்கும். ஆனால் நகைச்சுவை என்றால் முதல்லே தேவனுக்கு அப்புறம் தான் மத்தவங்க.

கீதா சாம்பசிவம் said...

எஸ்.வி.வி.யின் உல்லாஸ வேளை அருமை. அதுவும் அந்தக் காலத்து விகடன் பைன்டிங்கில் ராஜூ அவர்களின் சித்திரங்களோடு படித்தால்..................ஆஹா, ஆஹா, ஆஹா தான்.

அப்பாதுரை said...

அடடே, இது வேறேயா? ரொம்ப ரொம்ப நன்றி bandhu, பத்மநாபன் (ஆளைக் காணோமே?). made my day.

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!