சென்ற வாரப் புதிரின் விடை பூசணி அல்வா. சரியான பதில் சொன்னவர்கள் எல்லோருக்கும் அல்வாதான்!
நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
3 Questions லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
3 Questions லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
25.10.17
தி ர் பு ன் த பு 171025
சென்ற வாரப் புதிரின் விடை பூசணி அல்வா. சரியான பதில் சொன்னவர்கள் எல்லோருக்கும் அல்வாதான்!
1.3.17
1.2.17
புதன் கிழமை 170201 :
சென்ற வாரக் கேள்விகள்:
1) If yesterday becomes tomorrow, what will be the day after tomorrow?
2) What is {(circle - triangle) - right angle} ?
3) இயற்பெயர் ஐந்தெழுத்து,
ஏற்ற பெயர் நான்கெழுத்து,
செல்லப்பெயர் மூன்றெழுத்து.
கின்னஸ் சாதனையாளர்.
யாரிந்த சினிமா பிரபலம்?
பதில்களைப் பார்ப்போம்.
ஒன்று : அட yesterday க்குப் பைத்தியம் பிடித்து அது tomorrow ஆயிடிச்சுன்னா போய்த் தொலையட்டும். அதுக்காக, day after tomorrow க்கும் பைத்தியம் பிடிக்கணும்னு ஏதாவது வேண்டுதலா? அது டே ஆ ஃப்டர் டுமாரோவாகத்தான் இருக்கு.
(No bad words please! )
எனவே. அதிரா ஆன்சர் ரைட்டு! தேம்ஸ் நதிக்கரை / உண்ணாவிரதம் எல்லாம் வேண்டாம். தேம்ஸ் நதியை நல்ல படம் ஏதாவது எடுத்திருந்தால், அதை, kggouthaman@gmail.com க்கு அனுப்புங்கள். ஞாயிறு படமாக போட்டுடறோம்!
==========================
இரண்டு: 90 is the right answer. பானுமதி வெங்கடேஸ்வரன் முதலில் சரியான பதில். பிறகு பாபு. பிறகு பெ சொ வி.
half circle, semi circle என்று கூறியவர்களிடம், ரகசியமாக ஒப்புக் கொள்கிறேன், நான் ஒரு அரைப் ;
=============================
மூன்று. மனோரமா என்ற பதில் சரி. முதல் சரியான பதில் கூறியவர் : பல (!) கணேஷ். ஆமாம்! அவர் மட்டும் ஆச்சியைப் பூச்சியாக்கி, கோபிசாந்தாவை காலை ஒடித்து, கோபிசந்தா ஆக்கலாமா! நாங்களும் கால் ஓடிப்போமில்ல!
Jokes apart, well done Bala Ganesh!
==============================
இந்த வாரக் கேள்விகள்:
ஒன்று :
புதன் கிழமை என்றால், செவ்வாய் என்ன?
இரண்டு :
எங்கள் வீட்டு, பழைய சுவர்க் கடிகாரம் ஒன்று, வீதியில் கிரிக்கட் ஆடிய சிறுவன் அடித்த பந்து மூர்க்கமாக வந்து தாக்கியதில், அதன் எண் தகடு, பொடிப்பொடியாக உதிர்ந்து கீழே விழுந்தது. அப்படி உடைந்து விழுந்த ஒவ்வொரு துண்டிலும் ஒரு எண் மட்டுமே இருந்தது!
ஆனால் பெரிய எண் கொண்ட துண்டுகள் மொத்தம் நான்கு இருந்தன.
அந்தப் பெரிய எண் கொண்ட தகடில் இருந்த எண்(ணிக்கை) என்ன?
மூன்று:
முன் காலத்து டி ராஜேந்தர் யார்? (குறிப்பு : அவருக்கு தாடி கிடையாது)
25.1.17
170125:: புதனும் புதிரும்
சென்ற வாரக் கேள்விகளுக்கு விடைகளைப் பார்ப்போம்.
முதல் கேள்விக்கு நான் நினைத்திருந்த பதில், ஆறு.
பாபு முதலில் திகைக்க வைத்துவிட்டார்! கணக்கு சரியாத்தான் போட்டிருக்கார். ஆனா மைனஸ் இருபத்தெட்டு மைனஸ் இருபத்தொன்பது எல்லாம் எந்த மைனா (பட்சி ) சொல்லியது என்று எனக்குத் தெரியவில்லை. அப்புறம் மறுபடியும் வந்து மைனஸ் முப்பத்தொன்று, மைனஸ் முப்பத்தொன்று ... ஈஸ்வரா ! இது என்ன சோதனை!!!
மாதவன் சரியான பதில் சொல்லியிருக்கார். பிறகு, பானுமதி.
இரண்டாவது கேள்விக்கு, ஒன்றே ஒன்று மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். அது என்ன என்றால், ............... எனக்கும் பதில் தெரியாது. திட்டுபவர்கள் எல்லோரும் கெட்ட வார்த்தைகள் இல்லாமல், நல்ல வார்த்தைகள் கூறித் திட்டலாம்! யாராவது பதில் சொன்னால் சரியாக இருக்குதா என்று பார்க்க்கலாம் என்று நினைத்தால் .......... ஹூம்!
மூன்றாவது கேள்விக்கு பிரேம் நசீர் என்று கூறியவர்களுக்கு, நூற்றுக்கு நூறு! முதலில் கூறிய நெல்லைத் தமிழனுக்கு, சிறப்புப் பாராட்டுகள்.
நெல்லைத் தமிழனுக்கு அளிக்கப்பட்ட பாராட்டுப் பத்திரத்தில் பாதியை மைனஸ் செய்கிறேன். --- யானை வரும் பின்னே ; மணி ஓசை வரும் முன்னே என்ற பழமொழியை அவர் தவறாக கூறியதால்!
சென்ற வாரப் புதிர்களுக்கு, ஆர்வத்தோடு பங்கேற்று, எல்லா கேள்விகளுக்கும் நகைச்சுவையுடன் பதில்கள் அளித்திருந்த அதிரா (உச்சரிப்பு சரிதானே?) அவர்களுக்கு எங்கள் சிறப்புப் பாராட்டுகள். பிரேம் 'நசீராம்' .... என்று அவர் எழுதிய உடனேயே அவர் கூகிள் தேடல் / மற்ற தேடல்கள் எதுவும் செய்யவில்லை என்று தெரிந்துகொண்டோம். !!!!
13 X 13 = 139 என்று எழுதிய பிருகஸ்பதிகள் எல்லோரும் பத்து நிமிடங்கள் பெஞ்சு மேல ஏறி நில்லுங்கோ.
============================================
இந்த வாரக் கேள்விகள்:
1) If yesterday becomes tomorrow, what will be the day after tomorrow?
2) What is {(circle - triangle) - right angle} ?
3) இயற்பெயர் ஐந்தெழுத்து,
ஏற்ற பெயர் நான்கெழுத்து,
செல்லப்பெயர் மூன்றெழுத்து.
கின்னஸ் சாதனையாளர்.
யாரிந்த சினிமா பிரபலம்?
18.1.17
வந்தது புதன் 170118 :: எழுந்தது புதிர்.
சென்ற வாரக் கேள்விகளுக்கு விடைகள் பார்ப்போம்.
முதல் கேள்வியாகிய மணி ஓசைக்கு சரியான பதிலை முதலாக எழுதியவர். கீதா சாம்பசிவம்.
எல்லோரும் பலமாகக் கைதட்டி, அவர் பொற்காசு கேட்கும் சப்தம் எங்கள் காதில் கேட்காமல் செய்யுங்கள்.
இரண்டாவது கேள்வியாகிய ஏ டு இசட் கேள்விக்கு எவ்வளவோ பதில்கள் சரி என்று சொல்லும் வகையில் பதியலாம்.
அந்த வகையில், பெசொவி, நெல்லைத் தமிழன், துளசிதரன், பாபு ஆகியோருக்கு எங்கள் பாராட்டு. மாதவன் கூறிய மைனஸ் இன்பினிட்டி டு பிளஸ் இன்பினிட்டி சரியான பதிலாகத் தெரியவில்லை. அவர் எங்களோடு சண்டை போட வருவார், ஆவலோடு எதிர்பார்க்கிறோம்!!!
மூன்றாவது கேள்வியாகிய ஏ பி என் + டி எம் எஸ் கேள்விக்கு, சரியான பதிலை (தி மோ) முதலாகக் கூறி பாராட்டைப் பெறுபவர் பானுமதி வெங்கடேஸ்வரன். அவர் கூறிய பாடலில் ஆண் குரல், எஸ் சி கிருஷ்ணன்.
====================================
இந்தவாரக் கேள்விகளைக் கேட்டு வைப்போம் .
(கேள்விகளைப் பார்த்து, யாரும் பயந்து பின் வாங்கவேண்டாம். இது போட்டி இல்லை. ஜாலியான வினா விடைப் பகுதி. தவறான பதில்கள் நிச்சயம் கேலி செய்யப்படமாட்டாது. விடை கூறி, அது சரிதான் என்று சாமர்த்தியமாக வாதாடுதலும் ஒரு திறன். பழைய புதன் புதிர்க் கேள்விகளில், திரு மாதவன் வாதங்களை கவனித்துப் படியுங்கள். அவர் திறமையாக பல வாதங்கள் செய்துள்ளார். )
ஒன்று :
What is (January 2017 - Feb 2017) * (Jan 2020 - Feb 2020)
இரண்டு
What is ( A to M) * (N to Z)
மூன்று
In south Indian films, who has acted as hero in maximum no of films?
5.4.12
வாசகர்களுக்கு மூன்று கேள்விகள் .. படப்புதிர்!
இந்த தடவை ரொம்ப சிம்பிள் கேள்விகள் கேட்டு விடுகிறோம். கீழே, மூன்று படங்கள் கொடுக்கப் பட்டுள்ளன. அனைத்துமே நெட்டிலே சுட்டவைகள்தான்.
ஒவ்வொரு படத்தின் மீதும் ஆங்கிலத்தில் இரண்டு வரிகள் எழுதப்பட்டுள்ளன. தமிழ்ப் படங்கள்தான். அநேகமாக பாடல் காட்சிகள் என்று தோன்றுகிறது.
நீங்கள் செய்யவேண்டியது எல்லாம் இவ்வளவுதான்:
ஒவ்வொன்றும் என்ன (தமிழ்) பாடல் என்று எழுதவேண்டும். இங்கே காணப்படுவது எந்த வரிகள் என்று எழுதினாலும் ஓ கே. ஒவ்வொரு படத்தைப் பற்றியும் சுவையான மேலதிக தகவல்கள் பகிர்வோருக்கு சி சி சி பட்டம் அளிக்கப்படும். (சி சி சி = சினிமா உலக சிந்தனை சிற்பி!)
பங்கு பெறுங்கள்; பட்டம் பெறுங்கள்! வாழ்த்துகள்!
8.2.12
வாசகர்களுக்கு மூன்று கேள்விகள் 02
பத்திரிகைகளுக்கு நாம் கேள்விகள் அனுப்பினால், அது பிரசுரமானால், அந்தக் கேள்விகளுக்கு அவர்கள் பதில் சொல்வார்கள்.
இங்கு ஒரு மாறுதல்.
இங்கு எங்கள் கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்லுங்களேன்.......
1) எந்தவகைப் புத்தகங்களைப் படிப்பதில் அதிக ஆர்வம் உங்களுக்கு? நிறைய அடுக்காமல் பிடித்த முதல் இரண்டு எழுத்தாளர்கள் யார்? ஏன்?(எந்த மொழியாயினும்) அவர்களின் எந்த படைப்பு உங்களுக்கு மாஸ்டர்பீஸ்?
2) சமீபத்தில் 'ரொம்ப நாளைக்கப்புறம் ரொம்ப நேரத்துக்கு மனம் விட்டுச் சிரித்தேன்' என்று சொல்லவைத்த நிகழ்ச்சி என்ன?
3) இந்தியாவில் உடனடியாக இது மாற வேண்டும் என்று நீங்கள் நினைக்கும் ஒரு விஷயம்....
ஆசிரியர்களின் பதில்கள் தனிப் பதிவில்....!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)





