பத்திரிகைகளுக்கு நாம் கேள்விகள் அனுப்பினால், அது பிரசுரமானால், அந்தக் கேள்விகளுக்கு அவர்கள் பதில் சொல்வார்கள்.
இங்கு ஒரு மாறுதல்.
எங்கள் கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்லுங்களேன்...
====================================================================
1) இந்த வருட பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வேண்டும் என்று நீங்கள் விரும்புவது?
=========================================================
2) அபரிமிதமான விஞ்ஞான வளர்ச்சி அழிவைத் தராதா? (சுஜாதாவிடம் கேட்கப்பட்ட கேள்வி!)
===========================================================
3) கதை முதலில் வந்திருக்குமா? கவிதை முதலில் வந்திருக்குமா?
=============================================================
படங்கள் : நன்றி இணையம்.
1) இந்த வருட பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வேண்டும் என்று நீங்கள் விரும்புவது?
பதிலளிநீக்குபெருஸ்ஸா ஒண்ணுமில்லை. இருக்கிற வெலவாசியையும், வரியையும் ஏத்திவிடாம இருந்தாலே போதும்!!
2) அபரிமிதமான விஞ்ஞான வளர்ச்சி அழிவைத் தராதா?
ஒருசமயங்களில் “போதும், இத்தோட நிறுத்திக்குவோம்”னு தான் தோணுது. மருத்துவ கண்டுபிடிப்புகளைத் தவிர.
3) கதை முதலில் வந்திருக்குமா? கவிதை முதலில் வந்திருக்குமா?
ரொம்போ முக்கியம்.
1) மின் வெட்டு - இனிமேல் 24 மணி நேரம் மட்டுமே (தினமும்)
பதிலளிநீக்கு2) அபரிமிதமான விஞ்ஞானம் வளர்ச்சி அடைவதற்குள் உலகம் இருண்டு விடும் (இருக்காது)
3) விதை கதைக்குள் உதைத்தால் கவிதை...
ஹூம், நாம விரும்பறதை எங்கே அறிவிக்கிறாங்க! நான் விரும்புவது பெட்ரோல், எரிவாயு விலை குறையணும்னு! :(
பதிலளிநீக்குவிஞ்ஞானம் இயற்கையை ஒரு நாளும் தோற்கடிக்க இயலாது. ஆகவே போதும்னு தான் நினைக்கிறேன். அழிவைத் தராது என விஞ்ஞானிகள் சொன்னாலும் எதிர் விளைவுகள் இருக்கத்தான் செய்கின்றன.
ஜாடையிலே பேசறது தான் முதல்லே வந்திருக்கும். கைகளால் சைகை காட்டிக் கண்களால் பேசுவது. பின்னர் ஒலி மட்டும். அப்புறம் தானே பேச்சு. பேச்சிலே கதை தான் முதல்லே இருந்திருக்கணும். கவிதை எல்லாம் கொஞ்சம் நாகரிகமான பின்னாடி வந்திருக்கும். :)))))
கேட்பதை அவங்க கொடுக்கப் போறதில்லை.ரயில் பயணமும் உயர்ந்து விமானமே தேவலை என்று ஆக்கிவிடப் போகிறது.
பதிலளிநீக்குபோதுமே கண்டுபிடிப்பு. மருத்துவ ஆராய்ச்சி மட்டும் தொடரலாம். அதைத்தான் எங்களை மாதிரி ஆட்களைவைத்துப் பரிசோதிக்கிறார்களோ எனக்கு ரொம்ப நாட்களாச் சந்தேகம்.
கவிதைதான் முதல்.
உரையாடல் அதிகமாகக் கதை வந்திருக்கும்,.
1. தங்கம் விலை கட்டுப்பாட்டுக்கு கொண்டுவர ஏதாவது செய்யவேண்டும் என்று எதிர்பார்ப்பு! விலைவாசிகுறையும் அல்லவா? 2. விஞ்சானத்தால் ஆக்கம் இருக்கும் அளவிற்கு அழிவும் இருக்கத்தான செய்யும். 3. முதலில் கவிதைதான் தோன்றியிருக்கும். உரைநடை பின்னர்தான் தோன்றியிருக்கும் பழைய சினிமாக்களே உதாரணம் தியாகராஜ பாகவதர் காலத்து படங்கள்!
பதிலளிநீக்கு1. Implementation of Goods and Services Tax (I know it can't come before 1.4.2014).
பதிலளிநீக்கு2. Advancement in science is inevitable; if that is going to be the nemesis for mankind, so be it.
3. Why not a Poetic Story?
//3. Why not a Poetic Story?//
பதிலளிநீக்குஆஹா, அருணாசலம், நல்ல பதில். அருமை! :))))))
தொடர்ந்து 40 வருடங்களுக்கு மேல் வருமான வரி கட்டிக்கொண்டு இன்று பென்ஷனில் நிலை தடுமாறிக்கொண்டு இருக்கும் மூத்த குடி மகன்களுக்கு சிறப்பு சலுகை தரவேண்டும்.
பதிலளிநீக்கு2. சுஜாதா வை நான் சீக்கிரமே சந்திப்பேன் என நினைக்கிறேன். அவரிடம் கேட்டு சொல்கிறேன்.
3. இரண்டுக்கும் முன்னாள் கழுதை பிறந்திருக்கும். கழுதை கத்தி கேட்ட ஒருவன் கவிதை எழுதியிரக்கலாம். அந்த நிகழ்ச்சியை பார்த்தவன் அதை கதையாக எழுதி இருக்கலாம்.
ஏன்ய்யா தெரியாமதான் கேட்கிறேன். உனக்கு கேள்வியியே கேட்க தெரியல்லையே. ? நீ எல்லாம் பார்லிமென்ட்டுக்கு தான் லாயக்கு.
1. சீனியர் சிடிசன்ஸ்ற்கு சிறப்புச் சலுகைகள்
பதிலளிநீக்கு2. அபிரிமிதமான அறிவியல் வளர்ச்சி அழிவுப்பாதைக்கு நம்மை கை பிடித்து அழைத்துப் போகின்றன என்பது என் கருத்து.
3.கோழி முதலிலா ?இல்லை முட்டை முதலிலா என்பது போல் உள்ளது.
1. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த திட்டங்கள்.
பதிலளிநீக்கு2.அபிரிமிதமான விஞ்ஞான வளர்ச்சி அழிவைத்தான் தரும்.
3.கவிதைதான் முதலில் வந்திருக்கும்.கதை பிறகுதான்.காப்பியங்களெல்லாம் செய்யுள் வடிவில்தானே இருக்கு.அதனால் கவிதைதான் முதலில் வந்திருக்க்கும் என நினைக்கிறேன்.
1) இந்த வருட பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வேண்டும் என்று நீங்கள் விரும்புவது?
பதிலளிநீக்கும்ம்ம் . . .
2) அபரிமிதமான விஞ்ஞான வளர்ச்சி அழிவைத் தராதா?
அதற்காக மாட்டுவண்டியில் பயணம் செய்யவும், நாரை கொண்டு வரும் செய்திக்காக வாய் பிளந்து வானத்தை பார்த்திருக்கவும் என்னால் முடியாது.
அப்பேற்பட்ட அழிவு வரும் வேளை நான் இருக்க மாட்டேன் என்று நம்புவதில் தைரியமடைகிறேன். இருப்பவர்கள் அந்த சூழலுக்கேற்ப தன்னை தயார் படுத்திக் கொண்டிருப்பார்கள்.
3. கதை முதலில் வந்திருக்குமா? கவிதை முதலில் வந்திருக்குமா?
ஆதிதமிழ் எனக்கு புரியுமா என்பது சந்தேகமே! அதனால் அதை கவிதை என்று கொள்கிறேன்.
நல்ல கேள்விகள்.....
பதிலளிநீக்குஇதுவரை வந்திருக்கும் பதில்களும் அருமை!
என் பதில் ? :)))
1. பட்ஜெட்டில் விலைவாசிகள் குறைந்தால் நல்லது தான். என் கணவருக்கு வருமானவரி உச்சவரம்பு அதிகமானால் நல்லது.
பதிலளிநீக்கு2. விஞ்ஞான கண்டுபிடிப்புகள் பின் விளைவை ஏற்படுத்தாமல் இருக்க முடியாது. எடுத்துக்காட்டு குளிர்சாதனக்க்ருவி ஓசோன் படலத்தை பாதிக்கிறது.
3. கவிதை தான் முதல் வந்து இருக்கும்.
1) இந்த வருட பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வேண்டும் என்று நீங்கள் விரும்புவது?
பதிலளிநீக்குஎன் பதில்: விலைவாசி உயர்வற்ற, வரிச் சலுகைகள் நிறைந்த பட்ஜட் (தேர்தல் வரப் போகிறதே!!)
2) அபரிமிதமான விஞ்ஞான வளர்ச்சி அழிவைத் தராதா? (சுஜாதாவிடம் கேட்கப்பட்ட கேள்வி!)
என் பதில்: எந்த அறிவியல் கண்டுபிடிப்பும் is a good servant but a bad master!! பயன்படுத்தும் விதத்தைப் பொறுத்தே அமையும்!
3) கதை முதலில் வந்திருக்குமா? கவிதை முதலில் வந்திருக்குமா?
என் பதில்: கதை தான்! குழந்தைகளைக் கவிதை சொல்லித் தூங்க வைத்துப் பாருங்களேன்! :-))
A high class input from middlclassmadhavi . .
நீக்குமுதல்ல கதை வந்திச்சு அப்புறமா ஒரு 'வி' நடுவுல வந்துடிச்சு
பதிலளிநீக்குநல்ல பதில்களைப் பெற்றுத் தந்த சுவாரஸ்யமான கேள்விகள்:)!
பதிலளிநீக்கு1. Ini vilaivaasi uyaraadhu endra arivippu. 2. Tharaadhu ena nambugiren...! 3. Kadhaidhaan...! Eppadinnu ketkak koodaadhu...!
பதிலளிநீக்கு-Saminaatha Bharathi.
பதிலளிநீக்குவணக்கம்!
புதிய முறையில் புனைந்துள பக்கம்
பதிவுலகம் வாழ்த்தும் பணிந்து!
கவிஞா் கி. பாரதிதாசன்
பிரான்சு
சில நாடுகளில் சர் பிளஸ் பட்ஜட்டுகள் போடுகிறார்களாமே ..!
பதிலளிநீக்குநம் நாட்டிலும் பற்றாக்குறை - துண்டு விழும் பட்ஜட் போடும் நிலைமாறி உபரி பட்ஜட் போடும் நிலை வரவேண்டும்
1 அதிக வரி. கமல்ஹாசனுக்கு. விஸ்வரூபம் போல் படமெடுத்து, போலி விளம்பரம் தேடி பணம் பண்ணியதற்காக
பதிலளிநீக்கு2 ராது. மூக்கு பிடிக்க அபரிமிதமாகத் தின்று கொழுக்கும் வளர்ச்சியை அஞ்சுகிறேன், விஞ்ஞான வளர்ச்சியை ஆதரிக்கிறேன்
3 கதை (கவிதை இன்னும் வரவில்லை என்பதிலிருந்தே தெரியவேண்டாமா?)