செவ்வாய், 5 பிப்ரவரி, 2013

ஜீவாத்மா, பரமாத்மா

                   
கீழே தந்திருப்பதை நீங்கள் படிக்கும் முன்பு ஒரு செய்தி.  நான் பிரம்ம குமாரி இயக்கத்தில் இருக்கும் நபர் அல்ல. அவர்கள் கொள்கைகளை பரப்புவதில் எனக்கு ஆர்வம் இல்லை.  சிந்தனையைத் தூண்டுவதாக கொஞ்சம் காதில் விழுந்ததை குறிப்பிட ஆசை. அவ்வளவே  இனி மேலே பார்க்கலாம்.
    
தினசரி காலை ஐந்து மணிக்கு பொதிகை தொலைக் காட்சியில் பிரம்ம குமாரிகள் இயக்கத்தை சேர்ந்த ஒரு நிகழ்ச்சி இடம் பெறும்.  பள்ளித் தேர்வு காரணமாக சிலநாட்களாக காணவில்லை.  ஹெட் லைன்ஸ் டுடே தொலைக் காட்சியில் காலை ஆறரை மணிக்கு ஷிவானி என்கிற பெண்மனி இதே பிரம்மகுமாரிகள் அமைப்பைச் சார்ந்தவர் மிக சுவாரசியமான நிகழ்ச்சியை அளிக்கிறார்.
                 
அவர் சொன்னதில் சில கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசை:
                   
பரமாத்மாவும் ஜீவாத்மாக்களும் தனித் தனியானவை.  இரண்டும் அனாதிகாலமாக இருந்து வருபவை.
                 
பொன் மற்றும் சிவப்பு நிறத்தில் பரந்தாமம் என்ற மேல் உலகு இருக்கிறது.  இதுவே ஜீவாத்மாக்கள் மற்றும் பரமாத்மாவின் உறைவிடம்.  இங்கிருந்து அவ்வப்போது ஜீவாத்மாக்கள் உலகுக்கு வந்து "வாழ்க்கை" யை அனுபவிக்க வருகின்றனர்.  இது மாடியிலிருந்து குழந்தை கீழே விளையாடச் செல்கிறேன் என்று வருவது போன்றது.
                  
உலக வாழ்க்கை ஆரம்பத்தில் உல்லாசமாக இருக்கிறது.  இடையில் சிலருக்கு அலுப்பு, சிலருக்கு காயம், சிலருக்கு வெற்றி, சிலருக்கு தோல்வி என்று பலவகையாக நிகழ்கிறது.
                 
ஆடி அலுத்த, அல்லது ஆடி அடிபட்ட குழந்தைகள் துயருற்று வீட்டுக்கு அம்மாவை நோக்கி செல்வது போல் ஜீவாத்மாக்கள் மேல் உலகம் செல்கின்றன. சிலகாலம் கழிந்ததும் மீண்டும் விளையாட ஆசை மேலிடுவதால் மீண்டும் உலக வாழ்க்கையை நாடி வருகின்றன.
                 
பரந்தாமத்திலிருந்து புதிது புதிதாக ஜீவாத்மாக்கள் பிறப்பெடுத்து வருகிறார்கள்.  உலகின் ஜனத் தொகை அதிகரித்துக் கொண்டே வருவதற்கு இதுவே காரணம்.
                      
'அன்பும் அமைதியும் நிறைந்த பரந்தாமத்தின் இயல்பே எனது இயல்பு' என்று புரிந்து கொண்ட ஜீவர்கள் அமைதியாக வாழ முடியும். இதற்கு வேண்டியது எல்லாம் நல்ல எண்ணங்கள் பால் நாட்டம்தான். இதை "என் உண்மை இயல்பு இது" என்று புரிந்துகொண்ட ஜீவர்கள் எளிதில் சாதிக்க முடியும். 
                
இன்னும் கொஞ்சம் இருக்கிறது.  அதுவும் குறிப்பிட வேண்டுமா என்று சொல்லுங்கள்.
             

13 கருத்துகள்:

  1. காலையில் சில நாட்கள் நானும் இந்நிகழ்ச்சியைப் பார்த்திருக்கிறேன். ஆனால் தொடர்ந்து சேனல் மாற்றும் போது தான்!

    பதிலளிநீக்கு
  2. //பரமாத்மாவும் ஜீவாத்மாக்களும் தனித் தனியானவை. //

    மத்வாச்சரியார் அருளிய துவைத சித்தாந்ததின் அடிப்படையில் உள்ளது மாதிரி தெரிகிறது இந்த கருத்து.

    பதிலளிநீக்கு
  3. அருமை. ஒரு சின்ன டவுட்டு.

    ரமண மகரிஷி. உள்ள பொருள் ஒன்றே தான்னு சொல்லியிருக்காரே. அதுக்கு அர்த்தம் என்ன?

    பதிலளிநீக்கு
  4. வாத்தியார் பாட்டு ஒன்று ஞாபகம் வருகின்றது .. '' எத்தனைக் காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே '' அந்தப் பாட்டைக் கேட்பவர்கள் மட்டும் சூன்யாத்மாவைத் தெரிந்து தப்பிக் கொள்ளக் கடவ, என எல்லாம் வல்ல எங்கள் கூகிளாண்டவரை வேண்டிக் கொள்கின்றேன் !

    பதிலளிநீக்கு
  5. 'அன்பும் அமைதியும் நிறைந்த பரந்தாமத்தின் இயல்பே எனது இயல்பு' என்று புரிந்து கொண்ட ஜீவர்கள் அமைதியாக வாழ முடியும். //

    எனக்கு இது பிடித்து இருக்கிறது.

    நானும் காலை பொதிகையில் பார்ப்பேன். இப்போது மின்சாரம் காலை தடை படுவதால் பார்க்க முடியவில்லை.
    பகிர்ந்து கொள்ளுங்கள் மேலும். நல்லவை எங்கே இருந்தாலும் தேடி கண்டு கொள்வது நல்லது தானே இன்னும் கொஞ்சம் பகிர்ந்து கொள்ளுங்கள்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  6. ரொம்ப கஷ்டங்க....இன்னமுமா....

    பதிலளிநீக்கு
  7. "என் உண்மை இயல்பு இது" என்று புரிந்துகொண்ட ஜீவர்கள் எளிதில் சாதிக்க முடியும்..

    பொறுமையாக நிகழ்ச்சியை பார்த்து கேட்டு பகிர்ந்ததற்குப்பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  8. முதல் முதலாக மவுன்ட் அபு போன 75-ஆம் வருடம் இந்த இயக்கம் குறித்து அறிய நேர்ந்தது. இதிலும் சில சொல்ல முடியாத செய்திகள் உண்டு. பொதுவாக ஆன்மிகமே அடிப்படை என்றாலும் குடும்பம், வாழ்க்கை என்னும் அமைப்பை மறைமுகமாய் எதிர்க்கிறதாய்த் தோன்றும். எங்கள் நண்பர் ஒருவரின் மனைவி இந்த இயக்கத்தில் சேர்ந்த பின்னர் குடும்பம், குழந்தைகளை விட்டுப் பிரிந்து விட்டார். இது தொண்ணூறுகளில் குஜராத் மாநிலம் புஜ் மாவட்டத்தில் நடந்தது. கர்நாடகத்தைச் சேர்ந்த அந்தத் தம்பதியரில் மனைவி சில நாட்கள் குடும்பத்திற்கு வந்து போய்க்கொண்டிருந்துவிட்டுப் பின்னர் நிரந்தரமாய்ப் பிரிந்து விட்டதாய்க் கேள்வி. எதிலும் நன்மையும் உண்டு, தீமையும் உண்டு. அப்படியே இதுவும். என்னைப் பொறுத்த வரை இம்மாதிரி நிகழ்ச்சிகளைப் பார்த்தாலும் பெருமளவு பாதிப்புக்கு உள்ளாவதில்லை. அந்த நிமிடங்களோடு சரி. அதோடு இப்போ மின்வெட்டுக் கடுமையாக அதிகரிக்க ஆரம்பித்திருப்பதால் காலையில் தொலைக்காட்சி பார்க்கச் சந்தர்ப்பமே இல்லை. :((((((

    பதிலளிநீக்கு
  9. கொஞ்சம் புரிந்து கொள்ள கஷ்டமான விஷயம்! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  10. சமீப காலமாக இங்கும் சிலர் இவரை பற்றி பேசுகிறார்கள். இப்பொழுது நீங்களும் சொல்கிறீர்கள். youtube -இல் இவர் உரையாடல்களை கேட்க வேண்டும்.

    // "என் உண்மை இயல்பு இது"//
    இதை நாம் முழுமையாக உணர்ந்து கொண்டாலே நம் விருப்பங்கள் ஒரு கட்டுபாட்டுக்குள் இருக்கும். மனமும் அமைதி பெரும்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!