ஞாயிறு, 1 டிசம்பர், 2013

ஞாயிறு 230: ஒற்றையடிப் பாதை!

           
                           
கவிதைகள் எழுதுவோர் எழுதலாம்! 
   
குறிப்பு: இது, திருவாரூர் பக்கத்தில் உள்ள, கல்யாணமஹாதேவி கிராமத்தில், பாண்டவ ஆற்றின் கரை. இந்த பூமியில், இந்த இடத்தில், என்னுடைய அப்பா, தாத்தா, கொள்ளுத் தாத்தா, எள்ளுத் தாத்தா எல்லோரும் கால் பதித்து நடந்திருப்பார்கள். அவர்களுடைய ஆசீர்வாதத்தை, பிறந்த நாளில் வாங்குவதற்காக இந்தப் படம், இன்று, இங்கு பதியப்பட்டது. 
அன்புடன், 
கௌதமன். 
              

23 கருத்துகள்:

 1. அருமையான தலைப்பு
  அழைப்புக்கு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு

 3. பாரம்பர்யங்கள் தொடரும்
  பாதையில் பதிக்கும்
  பாசமுள்ள பாதங்கள்..!

  முன்னால் உறுத்தும்
  முள் செடிகளைக் களையும்
  முனைப்பு எப்போ வருமோ...!!??

  பதிலளிநீக்கு
 4. ஒத்தையடிப் பாதையிலே ஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ
  அத்த மக போகையிலே
  யாரடியோ வந்தா? அம்மாடி
  அவ ..........????

  ஹிஹிஹி, மறந்துட்டேன் அப்புறமா.

  பதிலளிநீக்கு
 5. என்னுடைய அத்தை மகள்கள் எல்லோரும் என்னை விட இருபது, முப்பது வயது பெரியவர்கள்! என்னுடைய ஒரு அத்தையின் பேத்தி, என் மனைவி!

  பதிலளிநீக்கு
 6. @கேஜிஜி, பாட்டைத் தானே மறந்து போச்சுனு சொல்லி இருக்கேன்? :))))

  எனிவே தகவலுக்கு நன்னி ஹை. எங்க வீட்டிலும் என் மைத்துனர் அத்தை பேத்தியைத் தான் கல்யாணம் செய்துட்டு இருக்கார். :))))

  இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

  மூணாம் முறையாச் சொல்றேன். கண்டுக்காமல் போறீங்க! :))))

  பதிலளிநீக்கு
 7. பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
 8. வாழ்த்தியவர்கள் எல்லோருக்கும் நன்றி!

  பதிலளிநீக்கு
 9. ஒற்றையடிப் பாதை... அருமையான படம்...

  இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா...

  பதிலளிநீக்கு
 10. ஒற்றையடிப் பாதை. நல்லா இருக்கு படம்....

  மனம் நிறைந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
 11. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

  தடம் பற்றி
  நடந்தால்
  தடுமாற்றம் இல்லை!

  பதிலளிநீக்கு
 12. மேலும் வாழ்த்தியவர்களுக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 13. பிறந்த நாள் வாழ்த்துகள்! உங்கள் காலடித் தடங்களும் இருக்கும், இல்லையா? உங்கள் பேரன் பேத்திகளும் பின்பற்றி நடந்து போவார்கள்.

  @ கீதா, அருமையான பாட்டை நினைவுபடுத்தியிருக்கிறீர்கள்!டிஎம்எஸ், சுசீலா இருவரும் பாடியது என்று நீனைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 14. அத்தை பேத்தி போகயிலேனு மாத்திட வேண்டியது தானே?

  பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 15. பாதை வகுத்துக் கொடுத்தால்
  இவள்
  புதர் வளர்த்துக் கெடுக்கிறாள் முள்
  புதர் வளர்த்துக் கெடுகிறாள்.
  வழி காட்டிக் கொடுத்தால்
  இவள்
  வேலி கட்டி மறைக்கிறாள் முள்
  வேலி கட்டி மறைகிறாள்.

  பதிலளிநீக்கு
 16. அப்பாதுரை! ஆஹா! கவிதை, கவிதை! ஒவ்வொரு முறை படிக்கும் பொழுதும் ஒவ்வொரு பொருள் புலப்படுகிறது!

  பதிலளிநீக்கு
 17. ஒற்றையடிப் பாதை என ஒற்றையாய் முடிக்காமல், அதில் எள்ளுத்தாத்தன், கொள்ளுத்தாத்தன், முப்பாட்டான் என முன்னோர்களும் கால் பதித்து நடந்திருப்பார்கள் என்ற யாதார்த்தத்தையும் உணர்த்தியதால் படத்தின் "மதிப்பு" கூடிவிட்டது...

  வணக்கம்...

  நீங்க செல்போன் வச்சிருக்கீங்களா?

  அப்போ கண்டிப்பா ஆண்ட்ராய்ட் போனாதான் இருக்கும்..

  சரியா...?

  உங்களோட செல்போனை மத்தவங்க அநாவசியமா பயன்படுத்த கூடாதுன்னு நினைக்கிறீங்களா?

  அப்போ தொடர்ந்து படிங்க...

  ஸ்மார்ட் போன்களை பாதுகாக்க புதிய சாப்ட்வேர்..!

  பதிலளிநீக்கு
 18. வணக்கம்...

  நீங்க செல்போன் வச்சிருக்கீங்களா?

  அப்போ கண்டிப்பா ஆண்ட்ராய்ட் போனாதான் இருக்கும்..

  சரியா...?

  உங்களோட செல்போனை மத்தவங்க அநாவசியமா பயன்படுத்த கூடாதுன்னு நினைக்கிறீங்களா?

  அப்போ தொடர்ந்து படிங்க...

  ஸ்மார்ட் போன்களை பாதுகாக்க புதிய சாப்ட்வேர்..!

  பதிலளிநீக்கு
 19. அழகான ஒத்தையடிப்பாதை. பாதை ஒத்தையேதவிர பலதலைமுறைகள்
  தடம் பதித்த பாதை. பிடியுங்கள் எங்களின் வாழ்த்துகளையும்.

  பதிலளிநீக்கு
 20. முன்னோர் தடத்தைத்
  தேடித்தேடி நடந்ததில்
  பாதை புலப்பட்டது
  பயணம் தொடர்கிறது.

  இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 21. வாழ்த்தியவர்கள் எல்லோருக்கும், மீண்டும் என் நன்றி.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!