சனி, 30 நவம்பர், 2013

பாஸிட்டிவ் செய்திகள் சென்ற வாரம்


1) அமெரிக்காவில் உள்ள ஐநா சபையில் ஒருவர் ஒரு முறை பேசினாலே வாழ்க்கையில் பாக்கியம் பெற்றவர் ஆவார் ஆனால் பார்வையற்ற சென்னை மாணவி சுவர்ணலட்சுமி ஒரு முறைக்கு இரு முறை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஐநாவில் பேசியுள்ள  சென்னை பத்தாம் வகுப்பு மாணவி என்ன செய்தார் இப்படி பாஸிட்டிவ் மனிதராக மாற? படியுங்களேன்.
 

               
 
2) வழி தவறிய குழந்தைகள் கண்ணில் பட்டால் அல்ல, தினமும் பஸ், ரயில் நிலையங்களுக்குச் சென்று அப்படி  வரும் குழந்தைகளை உரியவரிடத்தில் ஒப்படைப்பதோடு, உரியவர் கிடைக்காத பட்சத்தில் அவர்களை இவரே படிக்கவும் வைக்கிறார்.  பால் சுந்தர்சிங் 
 
 

3) "கார் என்ன தண்ணியிலா ஓடுது?" ஓடினாலும் ஓடும்! அதற்கான மாதிரியைச் செய்து காட்டி பரிசு வாங்கியிருக்கும் சென்னை சேத்துப்பட்டு மகரிஷி வித்யா மந்திர் மேல் நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படிக்கும் அபிஷேக்கும், ரேஹானும்
 
4) குழந்தையைக் காக்க கிணற்றில் குதித்த தலைமைக் காவலருக்குக் கிடைத்த பரிசுத் தொகையையும் ஊர் மக்களின் நன்மைக்காகச் செலவிடும் தலைமைக் காவலர் சுபாஷ் ஸ்ரீனிவாசன். [ஆனால் ஒரு காவலர் நீச்சல் தெரியாமல் இருக்கலாமா?]
 


 
5) புத்தகம் படிக்கும் வழக்கம் குறைந்து வரும் இந்நாளில் மதுரை மாநகராட்சிப்பள்ளிப் பள்ளியில் அந்தப் பள்ளியின் தலைமையாசிரியை முருகேஸ்வரி செய்திருக்கும் முயற்சி முன்மாதிரியாகக் கொள்ளவேண்டிய ஒன்று.
 


 
 
 
 
 
7) "ஏற்கெனவே என்னோடு 5-ம் வகுப்பு படித்தவர்கள், அப்போது 10-ம் வகுப்புக்குச் சென்றுவிட்டார்கள். அந்த வயதில் 6-ம் வகுப்பு என்பது கொஞ்சம் சங்கடமாகத்தான் இருந்தது. விடுமுறை நாள்களில் எனது வகுப்புத் தோழர்கள் எல்லாம் தங்கள் பாட்டி வீடு, உறவினர்களின் வீடுகளுக்குச் செல்வார்கள். ஆனால் நான் மட்டும் தீப்பெட்டி ஆலைக்குச் செல்வேன். எனது படிப்புச் செலவுகளை ஈடுகட்ட வேலைக்கு செல்வது கட்டாயமாக இருந்தது"... குழந்தைத் தொழிலாளியாய் இருந்து பள்ளித் தலைமை ஆசிரியை ஆன ஏ.ராஜேஸ்வரி. 
 
 
 
8) இந்தக்கால இளைஞர்கள் சினிமாவுக்குப் போவார்கள், பீச்சுக்குப் போவார்கள், 'மாலு' க்குப் போவார்கள். வருங்காலம் நன்றாக இருக்க, பள்ளிப் பிள்ளைகளுக்கு உதவும் இந்தப் பாஸிட்டிவ் இளைஞர்கள் பற்றி மோகன் குமார் சொல்லியிருப்பதைப் படியுங்கள். சந்தோஷமான விஷயம்.


 
9) ஈர நெஞ்சத்தின் அடுத்த ஈரமான செயல்.14 கருத்துகள்:

 1. வழி தெரியாமல் திகைக்கும் நபர்களை, குறிப்பாக சிறுவர்களை அவரவர் இடத்திற்கு சேர்த்திடும் பண்பாளர் திரு பால சுந்தர் சிங் எனக்கு சுமார் 45 வருடங்களுக்கு முன்பு எனது வீட்டில் நடந்த ஒரு நிகழ்வினை நினைவூட்டி விட்டார்.

  திருச்சியை அடுத்த கிராமம் ஆலக்குடியில் ஒராண்டு வசிக்கவேண்டிய சூழ்நிலை.

  நான் அப்போது தஞ்சையில் வேலை . அன்று ஆலக்குடிக்கு வந்து இருந்தேன்.

  மாலை நேரத்தில், எனது தங்கை 8 அல்லது 9 வது படிப்பவள், தம்பி 3 வது அல்லது 4 வது படிப்பவன்.

  திருச்சி டவுன் ஸ்டேஷன் ரயில் நிலையத்தில் கூட்டமாக இருந்ததால், பாசஞ்சரில் ஏறுவதற்கு பதிலாக, எக்ச்ப்ரெஸ் டிரைனில் ஏறி விட்டான்.
  அது ஆலக்குடியை கடந்தபின் தான் அவனுக்கு தெரிந்திரு இருக்கிறது.

  அவனை பத்திரமாக அன்று இரவு ஒரு ரயில்வே தொழிலாளி ஆலக்குடிக்கு கொண்டு வந்து சேர்த்தார்.

  அன்று இரவு நானும் என் அம்மாவும் பொன்மலை, ஆலக்குடி என்னும் ரயில் நிலையங்களுக்கு ஒரு பத்து தடவை நடந்து சோர்ந்து போய் விட்டு திரும்பி இருந்தோம்.

  என் தம்பியை பத்திரமாக கொண்டு வந்து சேர்த்தவருக்கு இரவு 11 மணி அளவில் ஒரு மோர் கூட கொடுத்து அனுப்பவில்லை என்பது இன்னமும் என் மனதை உறுத்திக்கொண்டே இருக்கிறது.


  சுப்பு தாத்தா.
  PS: I lost your cell no. Mr.Sriram/KG Gowtham. Would u inform me?

  பதிலளிநீக்கு
 2. வணக்கம்
  பதிவை படிக்கும் போது.. இவர்களின் சாதனைமிகப் பெரியது. இவர்கள் இறைவனின் பிள்ளைகள் என்று கூறலாம்
  இந்த பூமியில் நல்லமனிதர்களும் இருக்கிறார்கள் என்தை பதிவின் மூலம் உணர முடிந்தது.
  பதிவு அருமை வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 3. வணக்கம்
  பதிவை படிக்கும் போது.. இவர்களின் சாதனைமிகப் பெரியது. இவர்கள் இறைவனின் பிள்ளைகள் என்று கூறலாம்
  இந்த பூமியில் நல்லமனிதர்களும் இருக்கிறார்கள் என்தை பதிவின் மூலம் உணர முடிந்தது.
  பதிவு அருமை வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 4. காலை நேரத்தில் இப்படி பாஸிடிவ்வான செய்திகளை படிக்கும் பொழுது மனதிற்கு ஒருவித நிம்மதியும் மகிழ்ச்சியும் கிடைக்கிறது .,மிக்க நன்றி!

  பதிலளிநீக்கு
 5. தாங்கள் வாரம் தோறும் தரும் செய்தித் தொகுப்பு வரவேற்கத் தக்கது! இப் பணி தொடர வாழ்த்து!

  பதிலளிநீக்கு
 6. ஒரு மட்டும் புரிகிறது... வதனப் புத்தகத்தில் விழுந்து விட்டீர்கள் என்று....!

  பாஸிடிவ்வான செய்தி எங்களுக்கு கிடைக்கிறது... நன்றிகள் பல...

  பதிலளிநீக்கு
 7. அடிக்கடி செய்தித்தாளில் படிக்கும்
  நெகடிவ் செய்திகளின் மனப் பாதிப்பில் இருந்து
  தங்கள் பாஸிடிவ் செய்திகளைப் படித்து
  கொஞ்சம் தெளிவடைகிறேன்
  பகிர்வுக்கும் தொடரவும் நல் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 8. உங்களின் பாசிடிவ் செய்திகள் மனதுக்கு இதமாய் உள்ளது.அனைவருக்கும் பாராட்டுக்கள்

  பதிலளிநீக்கு
 9. பாசிடிவ் செய்திகள் மகிழ்ச்சியளிக்கும் பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

  பதிலளிநீக்கு
 10. சேவை உள்ளங்களுக்குப் பாராட்டுகளும் சாதனை மனிதர்களுக்கு வாழ்த்துகளும்.

  பகிர்வுக்கு நன்றி.

  செய்தி 7-ன் இணைப்பு திறக்கவில்லையே.

  பதிலளிநீக்கு
 11. உங்கள் பாசிடிவ் செய்திகள் வாழ்க்கையின் நம்பிக்கை சிதையாமல் இருக்க உதவும். உங்கள் பாசிடிவ் செய்திகள் அனைத்தையும் தொகுத்து ஒருபுத்தகமாக வெளியிடலாம். எல்லோருக்கும் நலம் பயக்கும்.

  பதிலளிநீக்கு
 12. சுவர்ணலட்சுமியின் சாதனை பிரமிப்பு. புதிய கண்டுபிடிப்பில் ஈடுபட்ட மாணவர்களுக்கு வாழ்த்துக்கள். நேர் மறைசெய்திகள் அனைத்தும் அருமை

  பதிலளிநீக்கு
 13. தடைகற்களை படிகற்களாக மாற்றிய சுவர்ணலட்சுமிக்கு வாழ்த்துக்கள்.
  குழந்தைகளிடம் ஒரு ரூபாய் பெற்று இரண்டு மாணவர்களுக்கு படிக்க உதவியது மகிழ்ச்சி.
  குழந்தைகளுக்கு உதவும் பாலசுந்தர்சிங் பாராட்டுக்குரியவர்.
  சுற்றுசூழல் பாதிக்காத கார் கண்டு பிடித்த அபிஷேக், ரேஹானுக்கு வாழ்த்துக்கள்.
  சுபாஷ் சீனிவாசனுக்கு வாழ்த்துக்கள்.

  படிக்கும் ஆர்வத்தை தூண்டி படித்தவற்றை சிறப்பாய் எடுத்து சொல்ல வைத்து பரிசு கொடுப்பது மிகவும் நல்ல விஷ்யம்.
  பாராட்டுக்கள் தலைமை ஆசிரியர் முருகேஸ்வரி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
  அனைத்து பாஸிட்வ் செய்திகளும் அருமை.அனைவருக்கும் வாழ்த்துக்கள். பகிர்ந்த உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 14. ஒவ்வொரு சுட்டியிலும் சென்று பாசிட்டிவ் செய்திகளைப் படித்தேன்....

  தொடரட்டும் பாசிட்டிவி செய்திகள். அனைவருக்கும் பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!