Saturday, December 14, 2013

பாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்


1) பள்ளியில் இருந்த மைதானத்தில் பல்வேறு உபயோகமான மரங்கள் வளர்த்து பசுமை சேர்ப்பதோடு, விழிப்புணர்ச்சியும் ஊட்டும் புதுக் கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி.


தற்போது 135 மாணவிகளுடன் 263 பேர் படிக்கும் இப்பள்ளியில் வேம்பு, புங்கன், சரக்கொன்றை, மயில்கொன்றை, வாகை, செம்மரம், அத்தி, இலுப்பை, மலை வேம்பு, உதியன், மாவிலிங்கம் உள்ளிட்ட சூழலைக் காக்கும் 1250 மரங்கள் புவிக்கு குடையாக உள்ளன. பள்ளியில் பயிலும் மாணவர்களைவிட 5 மடங்கு அதிகமாகவே மரங்கள் இங்கு உள்ளன.

கிராம மக்கள் மரங்களின் மகத்துவத் தைப் புரிந்துகொண்டதால் விடுமுறை நாள்களில், கிராம மக்களே மரங்களைப் பாதுகாக்க ஒத்துழைக்கின்றனர். நாட்டின் எதிர்காலமே வகுப்பறையில்தான் தீர்மானிக் கப்படுவதால் மாணவர்களிடையே கல்வி யைக் கற்றுக்கொடுப்பதோடு மட்டுமில்லா மல் இயற்கை வளங்களையும் சூழலை யும் காப்பதும் நமது கடமை என்பதை மாணவர்கள் உணரவேண்டும் என்கிறார் பள்ளியின் தலைமை ஆசிரியர் எஸ். பாபு.


2) அரசு மானியத்துடன், 'பயோகேஸ்' தயாரிக்கும் கருவியை, குறைந்த விலையில், கிராமங்களில் நிறுவி வரும், ராமகிருஷ்ணன்


3) எல்லோருக்கும் பயன்படவேண்டும் என்று டீக்கடையையே நூஅகமாக மாற்றிய பட்டதாரி அஷெரப் அலி.

4) பிரஷாந்த் பாண்டே. பெங்களுருவிலிருந்து மும்பைக்குப் புறப்பட்ட ஆம்னி பஸ் டிரைவரின் தூக்கத்தால் ஹாவேரி நெடுஞ்சாலையில் சாலை நடுவில் இருக்கும் சிமெண்டில் உரசி, தீப்பிடிக்க தூக்கத்திலிருந்த பயணிகளை சத்தம் போட்டு எழுப்பி, தலைக்கு மேலே இருந்த ஏர் விண்டோவைக் காலால் உதைத்துத் திறந்து தான் மட்டும் தப்பிப்பதா என்று தன்னால் முடிந்த அளவு (20பேர்) கை பிடித்து மேலே தூக்கிக் காப்பாற்றியிருக்கும் இளைஞர்.

5) அனுதாபம் விரும்பாத தன்னம்பிக்கை. மாளவிகா.
 
 

17 comments:

வெங்கட் நாகராஜ் said...

சிறப்பான பாசிட்டிவ் செய்திகள்....

தொடரட்டும்....

ADHI VENKAT said...

அனைத்துமே நம்பிக்கையூட்டும் செய்திகள்...நன்றி..

Ramani S said...

நம்பிக்கையூட்டிப் போகும் பகிர்வு
வாரம் ஒருநாள் நீங்கள் தரும் எனர்ஜி டானிக்
எதையும் நேர்மறையாகப் பார்க்க மிகவும்
உதவிகரமாக இருக்கிறது
பகிர்வுக்கும் தொடரவும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Rupan com said...

வணக்கம்

நம்பிக்கையூட்டும் மகிழ்ச்சியூட்டும் பதிவு அருமை வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Pattabi Raman said...

அனுதாபமும்,பச்சாதாபமும் பாதிக்கப்பட்டவர்களை
மேலும் படுகுழியில் தள்ளிவிடும். நம்பிக்கையூட்டும் பெற்றோர்களும் நண்பர்களுமே இவர்கள் போன்றவர்களை மேலே ஏற்றிவிடும் ஏணி
அவர்களின் ஒத்துழைப்பும் இந்த நேரத்தில் பாராட்டப்படவேண்டும். நல்லதோர்பதிவு. நம்பிக்கையை விதைக்கும் பதிவு. பாராட்டுகள் .

Pattabi Raman said...

அனுதாபமும்,பச்சாதாபமும் பாதிக்கப்பட்டவர்களை
மேலும் படுகுழியில் தள்ளிவிடும். நம்பிக்கையூட்டும் பெற்றோர்களும் நண்பர்களுமே இவர்கள் போன்றவர்களை மேலே ஏற்றிவிடும் ஏணி
அவர்களின் ஒத்துழைப்பும் இந்த நேரத்தில் பாராட்டப்படவேண்டும். நல்லதோர்பதிவு. நம்பிக்கையை விதைக்கும் பதிவு. பாராட்டுகள் .

கவியாழி கண்ணதாசன் said...

மனதுக்கு இதமாய் இருக்கிறது.தொடர வாழ்த்துக்கள்

திண்டுக்கல் தனபாலன் said...

பாசிட்டிவ் செய்திகள் அனைத்தும் அருமை... நன்றி...

இராஜராஜேஸ்வரி said...

பசுமையான பாஸிட்டிவ் செய்திகள் பாராட்டுக்கள்..

கீத மஞ்சரி said...

நூலகங்களில் டீக்கடை வைத்து காசு பார்ப்பவர்களைப் பார்த்திருக்கிறேன். டீக்கடையில் நூலகம் வைத்து வாசகர்களை உருவாக்கும் ஒரு நல்லிதயத்தை இப்போதுதான் காண்கிறேன். பாசிடிவ் செய்திகள் ஒவ்வொன்றும் வாழ்க்கையின் மீதான பிடிப்பை இறுக்குகின்றன. பகிர்வுக்கு நன்றி.

ஸாதிகா said...

அனைத்து செய்திகளும் மகிழ்வூட்டுபவனவாக இருந்தன.

G.M Balasubramaniam said...

பல நாட்களுக்கு முன் நானும் ஒரு பாஸிடிவ் பதிவு எழுதி இருந்தேன். எதிலும் நம்மைப் பற்றிக் குறை காண்பவர்களுக்கு இப்படியும் நல்ல விஷயங்கள் இருக்கின்றன என்று தெரிவிக்க வேண்டி எழுதியது. இது நல்ல முயற்சி பாராட்டுக்கள்.

rajalakshmi paramasivam said...

உங்கள் பாசிடிவ் செய்திகள் நம்பிக்கை விதைக்கின்றன.
வாழ்த்துக்கள்......

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

அனைவருக்கும் பாராட்டுக்கள். பிரமிக்க வைக்கின்றன செய்திகள்

ராமலக்ஷ்மி said...

அனைத்து செய்திகளும் நல்ல பகிர்வு.
4. பாராட்டப்பட வேண்டிய செயல்.

5. /மாற்றுத்திறனாளிகள் படிக்கிற ஸ்கூல்ல நான் படிக்கல. என்கூட இருந்த ஃப்ரெண்ட்ஸ் யாரும் என்ன விலக்கி வைக்கல. அதனால தான் இன்னிக்கு இவ்வளவு தூரம் வர முடிஞ்சுது. இதேபோல எல்லா மாற்றுத் திறனாளிகளுக்கும் வாய்ப்பு கிடைக்கணும். /

சரியாகச் சொல்லியிருக்கிறார்.

கோமதி அரசு said...

இயற்கை வளங்களையும் சூழலை யும் காப்பதும் நமது கடமை என்பதை மாணவர்கள் உணரவேண்டும் என்கிறார் பள்ளியின் தலைமை ஆசிரியர் எஸ். பாபு./
நல்ல முயற்சி. 1250 மரங்கள் வைக்கும் அளவுக்கு பள்ளி வளாகம் பெரிதாக இருப்பது மகிழ்ச்சி.
டீக்கடை நூலகம் மிக அருமை அஷெரப் அலி அவர்களுக்கு பாராட்டு.
கண்ணில் பட்ட பாசிட்வ் செய்திகள் பகிர்வுக்கு நன்றி.

ஸ்ரீராம். said...

வெங்கட் நாகராஜ்
ஆதி வெங்கட்,
ரமணி எஸ்,
ரூபன்,
கவியாழி கண்ணதாசன்,
பட்டாபி ராமன்,
DD,
ராஜராஜேஸ்வரி,
கீதமஞ்சரி,
ஸாதிகா,
ஜி எம் பி ஸார்,
rajalakshmiparamasivam,
TNM,
ராமலக்ஷ்மி,
கோமதி அரசு...

அனைவருக்கும் நன்றி.

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!