Saturday, December 7, 2013

பாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்


1) குற்றாலம் பக்கம் உள்ள ஆய்க்குடி அமர்சேவா சங்கம்-
கழுத்திற்கு கீழுள்ள உறுப்புகள் செயல்படாத ராமகிருஷ்ணன், சங்கரராமன் போன்றோரை தலைவராகவும்,செயலாளராகவும் கொண்டு செயல்பட்டுவரும் இந்த சங்கம், உடல் ஊனமுற்றோரை முன்னேற்றும் மையமாக உள்ளது.
2) இது தொடுவதாலோ, பேசிப் பழகுவதாலோ பரவாது. அறிமுகமில்லா நபரை தொட்டுப் பேசி, கொஞ்சி மகிழும் இந்த சமூகம், அந்த நபர் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர் எனத் தெரிந்தால் ஒதுக்குகிறது. ஆனால், இயல்பாக பேசிப் பழகினால் போதும், நோயாளி கூட நோயை மறந்துவிடுவர். உண்மையிலேயே, எய்ட்ஸ் நோய்க்கு கண்டுபிடிக்கப்பட்ட மருந்து இதுதான் என்கிறார் மர்ஜுக் பேகம்.

  இவரும், இவரது கணவர் ரியாஸும்இணைந்து மெர்சி என்ற பெயரில், கோவையில் எச்.ஐ.வி. பாதித்த குழந்தைகளுக்கான மையத்தை நடத்தி வருகின்றனர்.

3) கர்நாடகாவின் வடக்கு எல்லையில், அமைந்திருக்கின்றது குல்பர்கா. அங்கே சூரிய சக்தி உதவி கொண்டு. மாம்பழம், கொய்யாப்பழம், கரும்பு யாவும் விளைகின்றன! 


எப்படி? 

விவசாயியின் பெயர் தத்தாத்ரேயா கொல்லூர். இவருக்கு சொந்தமான வயல் இருபத்தைந்து ஏக்கர்கள்.  குல்பர்காவில், டேவல் கங்காபூர் என்னும் இடத்தில், இவருடைய பழத்தோட்டம் உள்ளது. இவர் இருபத்தொன்று சோலார் பி வி பானல்கள் (flexible photovoltaic panels) தோட்டம் அருகே நிறுவியுள்ளார். மொத்த செலவு ஆறு லட்சம் ரூபாய்கள். இந்த அமைப்பினால், இவருக்கு, காலை எட்டு மணி முதல் மாலை நான்கு மணி வரையிலும், தடை இல்லா மின்சாரம் கிடைக்கின்றது. இந்த மின்சாரம், அவருடைய பழத் தோட்டங்களுக்கும், விவசாய நிலங்களுக்கும், நீர்ப்பாசனம் செய்ய, பம்பு செட்டுகளை இயக்கப் பயன்படுகின்றது. 


மேக மூட்டமான நாட்களில் மட்டும், சூரிய சக்தி கிடைக்காது. அந்த நாட்களில் அவர், குல்பர்கா எலெக்ட்ரிக் சப்ளை கம்பெனி அளிக்கின்ற மின்சாரத்தை உபயோகிக்கின்றார். இவர் பயன்படுத்தும் சோலார் பானல்கள் இருபத்தைந்து வருட உத்திரவாதத்துடன் நிறுவப்பட்டவை. அவ்வப்பொழுது தூசி அகற்றி, சுத்தம் செய்தால் போதும்.
 (தி ஹிந்து, ஆங்கில நாளேடு. பெங்களுரு. 03-12-2013) 
                   
4) கடத்தல்காரர்களிடமிருந்து 11 குழந்தைகளைக் காப்பாற்ற தான் அவர்கள் கூட வருவதாகக் கூறி, துப்பாக்கியுடன் இருந்த அந்த நபர் அசந்த நேரம் தப்பி வந்த 14 வயது குஞ்சன் சர்மா. பள்ளியிலிருந்து வேனில் திரும்பிக் கொண்டிருந்த அந்தக் குழந்தைகள் கடத்தப்படுவதைத் தவிர்க்க வேனின் டிரைவர் டி எஸ்டேட்டின் நடுவே புத்திசாலித்தனமாக வேனை நிறுத்தி வைத்த செயலும் பாராட்டப் பட்டிருக்கிறது.


17 comments:

sury Siva said...

ஒரு சிங்கத்தின் இதயம் கொண்ட அந்த
தங்கத்தின் நெஞ்சம்
அஞ்சி அஞ்சி செல்லாது
குஞ்சன் என பெயர் கொண்டதால்
எதற்கும்
அஞ்சேன் என
நிமிர்ந்ததோ ?
பஞ்சு இளம்
சிராக்களை
சிறையிலிருந்து
மீட்டதோ?

சுப்பு தாத்தா.
www.subbuthatha72.blogspot.com

இராஜராஜேஸ்வரி said...

பாசிட்டிவ் செய்திகள்
பராக்ரமம் நிறைந்தவை..!

கவியாழி கண்ணதாசன் said...

மனதுக்கு இதமான செய்திகள்.நன்றி

Pattabi Raman said...

இதுபோன்ற உண்மை சம்பவங்கள்
பள்ளிப்பாட புத்தகத்தில் இடம்பெறவேண்டும்.
நிஜ வாழ்க்கைக்கு தேவையற்ற குப்பைகளை பள்ளி மாணவர்களின் மூளையில் திணிக்கும் கல்வி முறை நிறுத்தப்பட்டு. வாழ்க்கையின் சவால்களை எதிர்நோக்கும் மன திண்மையை உண்டாகும் கல்வி முறை உடன் கொண்டுவரப்படவேண்டும்
.
வாழ்க்கையில் தோல்விகளையும், இழப்புகளையும் தைரியமாக சந்திக்க ஒவ்வொரு மாணவனுக்கும் பயிற்சி அளிக்கும் வகையில் ஒரு பாட திட்டம் உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

கோவை ஆவி said...

செய்திகள் அருமை..

திண்டுக்கல் தனபாலன் said...

பாஸிட்டிவ் செய்திகள் அனைத்தும் அருமை... நன்றி...

ராஜி said...

தென்றல் போல மனதை வருடிச் செல்லும் பாசிட்டிவ் செய்திகள்

Ranjani Narayanan said...

//'இவர்களுக்கு சேவை செய்யும் அளவுக்கு நான், நல்லபடியாக இருக்கிறேன் என்றால், அதற்கு, இறைவனின் கருணைதான் காரணம்.இதை தொண்டு என்ற பெரிய வார்த்தைக்குள் அடக்க விரும்பவில்லை...' என்கிறார்.//
லாராவிற்குப் பாராட்டுக்கள்!
கோவையில் எச்.ஐ.வி. பாதித்த குழந்தைகளுக்கான மெர்சி என்ற பெயரில்மையத்தை நடத்திவரும் மர்ஜுக் பேகம், அவரது கணவர் ரியாஸ் இருவர்க்கும் பாராட்டுக்கள்.
சூரிய சக்தியை கொண்டு விவசாயம் செய்யும் விவசாயி தத்தாத்ரேயா கொல்லூர் நிறைய பேருக்கு வழிகாட்டுவார் என்று நம்புவோம்.

குஞ்சன் ஷர்மா பற்றி நேற்று செய்தித்தாளிலும் படித்தேன். அவருக்கு வீர சேவா பதக்கம் சிபாரிசு செய்யப் பட்டிருக்கிறது என்றும் படித்தேன். வாழ்த்துக்கள்.

Rupan com said...

வணக்கம்
அனைத்தும் சிறப்பு...வாழ்த்துக்கள்

எனது புதிய வலைப்பூவின் ஊடாக கருத்து எழுதுகிறேன்... உங்களை அழைக்கிறது..http://tamilkkavitaikalcom.blogspot.com

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

சே. குமார் said...

பாசிட்டிவ் செய்திகள் அருமை அண்ணா...

14 வயது சிறுமி பாராட்டப்பட வேண்டியவள்.

வெங்கட் நாகராஜ் said...

அருமையான செய்திகள். அனைவருக்கும் பாராட்டுகள்.

Geetha Sambasivam said...

முற்றிலும் புதிய செய்திகள். அனைவருக்கும் பாராட்டுகள்.

Geetha Sambasivam said...

தொடர

சீனு said...

வெகுநாட்களுக்குப் பின் இந்தப் பக்கம் வருகிறேன்... இன்று இதுவும் பாசிடிவ் செய்தி தானே :-)))))

ராமலக்ஷ்மி said...

அனைத்தும் நல்ல செய்திகள். பகிர்வுக்கு நன்றி.

ஸாதிகா said...

மனம் நிறைந்த பகிர்வு.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

நல்ல மனிதர்களையும் செய்திகளையும் அறிந்ததில் மனநிறைவு ஏற்படுகிறது.
நன்றி ஸ்ரீராம்

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!