'எங்கள் கண்ணில் பட்டவரை' கடந்த வார பாசிட்டிவ் செய்திகள். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
'எங்கள் கண்ணில் பட்டவரை' கடந்த வார பாசிட்டிவ் செய்திகள். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

5.9.20

ஆசிரியர்களை நன்றியுடன் நினைவு கூர்வோம் !

இந்த வார பாசிடிவ் செய்திகள் எல்லாவற்றிற்கும் எங்கள் நன்றி: தினமலர் telegram குழு. 
====
புனே; ஆபத்தான கட்டத்தில் இருந்த நோயாளியை, ஆம்புலன்சில் ஏற்றி, மருத்துவமனைக்கு ஓட்டிச் சென்று உயிர் காத்த டாக்டருக்கு பாராட்டுகள் குவிகின்றன.

15.8.15

பாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.



1)  "நீங்க மட்டும்தான் பணத்தைத் திருப்பித் தருவீங்களோ ஆட்டோக்காரர்களே....  நாங்களும் தருவோமில்லே நேர்மையாக..."  ரிக்ஷா இழுக்கும் அபித் குரேஷி.
 


 
2)  வலிகளைத் தாண்டி வெற்றி.  சுமன்.
 


 
3)  44  வீரர்களைக் காப்பாற்றப் போராடி மறைந்த அந்த இரண்டு கான்ஸ்டபிள்கள்.
 


 
4)  மனமிருந்தால் பொழுது போக்குச் சாதனத்திலும் முன்னேற வழி தேடலாம். ரேடியோ ரத்னவாணி.
 


 
5)   இங்கேயும் மனிதர்கள்..  எங்கேயும் மனிதர்கள்.  கவனமில்லாப் பெண்ணுக்கு உதவிய முகம் தெரியாத மனிதர்கள்.  அதில் ஒருவரான சரவணன் பற்றி...  உதவி கேட்கக்கூட தயங்கி நின்ற சூழலில் வலியச்சென்று அவர்களுக்கு பேருதவி செய்த சரவணன் மற்றும் அவருடைய நடைபயிற்சி நண்பர்கள் குழுவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து கொண்டே இருக்கிறது இப்போது.  உதவிய அந்த நால்வரைப் பற்றிய செய்தியும் வந்து விட்டது.
 


 

 
6)   டாக்டர் சங்கீதா திலீப்குமார்.  வேலையில், சேவையில் பாகுபாடு இல்லை.
 


 
7)   A G பத்மநாபன் செய்யும் சேவை.
 


 
8)  யாம் பெற்ற கல்வி பெறுக எம் ஏரியா ஏழைக் குழந்தைகள்!  பாபர் அலி.
 



 
9)  திலீப்பாய் புஜாராம் பாட்டில்.  இவரின் அர்ப்பணிப்பும், சேவையும் அறியப்பட வேண்டியது.
 



 
10)  இந்த நிலையிலும் பெற்றோரைக் காப்பாற்ற என்னும் இவரது பாஸிட்டிவ் எண்ணம்.  ஆனால் அவருக்கு உதவி தேவைப்படுகிறது.  சங்கர சுப்ரமணியம்.
 


 
11) துன்ப நேரங்களில் வாழ்வைப் பாஸிட்டிவாக எதிர்கொண்டு நண்பர்களைச் சேமித்து வைத்திருக்கும் ராணி.
 



12) இவருக்கா மன நலம் சரியில்லை?! அவரால் திருந்திய மக்களில் ஒருவராவது இப்போது அவரைக் குணப்படுத்த முயற்சிக்கக் கூடாதோ?


13.6.15

பாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.



1) இந்த ஆசிரியர்கள் பாராட்டுக்குரியவர்கள்.
 



2) ‘எண்ணும் எழுத்தும்’ இயக்கத்தை நடத்தி வரும் யுரேகா அறக்கட்டளை யின் இயக்குநர் டாக்டர் அ.ரவிசங்கர்.
 


3) ஜெயதேவி.  சேமிப்பின் பெருமையை உணர்த்தி பொருளாதார ரீதியாக அந்த கிராமத்துப் பெண்களைத் தயார் படுத்தியதால் இவர் சாதித்திருப்பது என்ன தெரியுமா?
 


4) மகனைப் பள்ளியிலிருந்து அழைத்துவரச் சென்று பார்க்கும்போது, மகன் வகுப்பின் வெளியே நின்றிருக்க, காரணம் கேட்டால், வகுப்பில் பேசிக் கொண்டே இருந்தான் என்ற அந்த வார்த்தை அந்தத் தாயை அவ்வளவு சந்தோஷப் படுத்துமா?  தன மகனுக்கு  மட்டுமின்றி,இது போலக் கஷ்டப்பட்ட எல்லா குழந்தைகளுக்கும் பெற்றோருக்கும் உதவியும் செய்த ராமகிருஷ்ணன் தம்பதியர்.
 


5) 22 மாடிக் கட்டிடத்திலிருந்து 7 8 அல்லது முறை மேலும் கீழும் ஏறி, இறங்கி சுமார் 25 பேர்களைத் தீயிலிருந்து காப்பாற்றிய பிஸா பாய் ஜிதேஷ்.
 


6) வழிகாட்டும் கிராமம்.
 


7) ஜானகி கிருஷ்ணன்.
 


8) வேலை செய்தால் சரிதான். சபாஷ் மாணவச் செல்வங்களே...
 


9) உதவும் உள்ளங்களும், வித்யாவுக்குக் கிடைத்த வேலையும்.
 


10) பெயரிலேயே தர்மம் இருப்பதால்தான் தர்ம சிந்தனையுடன் இருக்கிறாரோ?  தாராபுரம் மக்களையும் பாராட்ட வேண்டும். 


8.2.14

Positive NewS


1) தேனியைச் சேர்ந்த, சென்னையில் பணிபுரியும், சந்த்ரசேகர் ஆதரவற்றொருக்குச் செய்யும் சேவை.




2) மலேரியாவை விரட்டுகிறதோ இல்லையோ, கொசு கடிக்காமல் 8 மணிநேரம் காப்பாற்றினால் போதாது?!!! 2...... 3
 

 
 

 
5) ஈரோடு, சென்னிமலையைச் சேர்ந்த கார்த்திகேயனின் கண்டுபிடிப்பு.
 


 
 6) ராய்ப்பூர்: சத்தீஸ்கரில், ஒரு கிராமத்தை சேர்ந்தவர்கள், பசு மாடுகள் வளர்த்து, பால் பண்ணை தொழிலின் மூலம், ஆண்டுக்கு, 1.5 கோடி ரூபாய் சம்பாதிக்கின்றனர்.
 


பா.ஜ.,வைச் சேர்ந்த, முதல்வர், ரமண் சிங் தலைமையிலான சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ளது, கோத்ரபாதா கிராமம். எட்டாண்டுகளுக்கு முன், இக்கிராம மக்களின் விவசாய நிலங்கள், ஏதோ ஒரு காரணத்தால், மாநில அரசால் கையகப்படுத்தப்பட்டது.இதனால், வேலைஇழந்த அக்கிராமத்தினருக்கு, இழப்பீடு வழங்கப்பட்டது. அந்தத் தொகையை வைத்து, கறவை மாடுகள் வாங்கிய கிராம மக்கள், பால் உற்பத்தியில் அபரிமிதமான வளர்ச்சி அடைந்துள்ளனர்.

அந்த கிராமத்தில், 200 வீடுகள் உள்ளன. ஒவ்வொரு வீட்டிலும், 75 - 100 பசு மாடுகள் இருக்கின்றன. தினமும், 12 ஆயிரம் லிட்டர் பால் இங்கு உற்பத்தியாகிறது. இதன் மூலம், மாதத்திற்கு, 1.5 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறது.மாதந்தோறும், ஒவ்வொரு வீட்டிற்கும், தலா, ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் வருவதால், இந்த கிராமம், செல்வச் செழிப்பில் உள்ளது. இங்கு கிடைக்கும் பாலை, 'அமுல்' போன்ற முன்னணி நிறுவனங்கள், முன்பணம் செலுத்தி வாங்கிச் செல்கின்றன.
 
 
7) படிக்கும்போதே சுய சம்பாத்தியத்துக்கு வழி வகுத்த ரசனை. மதுரை தியாகராஜர் கல்லூரியில், இரண்டாம் ஆண்டு ஆங்கிலம் படிக்கும் மாணவன் கிறிஸ்டோபர். 
 
 

1.2.14

பாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்!











2) 90 வயதில் திருமணம் செய்யக் காரணம்.


3) முன்பு டாக்டர் ஹரிசங்கர் (இவரைப் பற்றி கடந்தவார கல்கியிலும் கட்டுரை வெளியாகி இருக்கிறது) பற்றிப் படித்தோம். இப்போது ஒரு கிராமத்தைத் தத்தெடுத்து, பல் சொத்தை இல்லாத கிராமமாக அதை மாற்றுவது இவரது இலக்குகளில் ஒன்றாக வைத்திருக்கும் வித்யா கிரிசபரி



4) உடலுழைப்புத் தொழிலாளர்களுக்கு ஆதரவாகத் தொடர்ந்து குரல் கொடுத்துவருகிறார். அவர்களுக்கு மறுக்கப்படும் உரிமைகளைக் கோரியும், அவர்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய சலுகைகளை வலியுறுத்தியும் போராடிவரும் ஆர் கீதா.



5) 'பாக்கெட் மணி'யை சேமித்து, தேவைப்படுபவர்களுக்கு உதவும் கல்லுாரி மாணவன், பிரகலாதன்



6) மதுரை மாவட்டம் இடையப்பட்டியில் 6-ஆவது படிக்கும் மாணவி அர்ச்சனா அந்த ஊரில் உள்ள பெரியாண்டி என்னும் நூறு வயது மூதாட்டி குளிக்கவும், உணவருந்தவும் உதவி செய்துவருகிறார்.


7) கூழ் விற்கும் பாட்டியின் நேர்மை.


8) அர்ஜுன்... படிப்பது எட்டாம் வகுப்பு... உனக்குள் இப்படி ஒரு உதவும் கருத்தா? அட!





 9)  யார் சொல்லியும் சிகரெட் பழக்கத்தை விடாத பல இளைஞர்கள் இவர் மைக்கில் பேசுவதைக் கேட்டு அந்த நிமிடமே சிகரெட்டை தூக்கி எறிந்திருக்கின்றனர். இப்படி ஒருவரல்ல இருவரல்ல பல ஆயிரம் பேரை சிகரெட் பழக்கத்தில் இருந்து மீட்டு இருக்கிறார் மீட்டு வருகிறார். இவரது இந்த தன்னலமற்ற சேவையை பாராட்டி பலர் பாராட்டி விருதுகள் கொடுத்த போதும், எம்புள்ளைய சிகரெட் பழக்கத்தில் இருந்து மீட்டுக்கொடுத்த ஐயா நீங்க நல்லா இருக்கணும் என்று சொல்லும் ஏழை பெற்றோர்களின் வாழ்த்தையே பெரிதாக எண்ணுகிறார்.


இவரது போன் எண்: 9445170464. (வருகின்ற 4ம்தேதி கேன்சர் தினம், உலகம் முழுவதும் ரோஸ் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.) 





 















10) படிப்படியாக முன்னேறு...





4.1.14

Positive செய்திகள்

1) அரசின் சலுகைகள் வேண்டாம். தனக்கும், அமைச்சர்களுக்கும் சுழல் விளக்கு பந்தா கிடையாது. பதவியேற்ற அன்றே வேலைகள் தொடக்கம். பதவியேற்க மெட்ரோ ரயிலில் பயணம்.  இவை தொடரவேண்டும். வதவத என்று அமைச்சர்கள் இல்லாமல் ஐந்தே அமைச்சர்கள். "இப்போதைக்கு" பாஸிட்டிவ் மனிதராகவே தெரிகிறார் கேஜ்ரிவால். ஸ்டன்ட் என்று தோன்றினாலும் ஒரு ஆரம்பமாக இருக்கட்டுமே....     

  



2) மறுபடியும் ஒரு ரயில் விபத்து. 26 பேர் பலி. சோகமான விஷயம். அதில் ஒரு பாசிட்டிவ் செய்தி கண்ணில் பட்டது. அதே ரயிலில் பயணம் செய்த பெங்களுருவைச்சேர்ந்த சரண், அவரின் மனைவியையும் மாமனாரையும் காப்பாற்றமுடியாத நிலையிலும் 20 பேர்களின் உயிரைக் காப்பாற்றியிருக்கிறார். இன்னொருவரும் அதேபோல மனைவி, மாமனார் தீயில் கருகினாலும் 3 பேர்களுக்கும் மேல் காப்பாற்றி இருக்கிறார்.






தீ மற்ற பெட்டிகளுக்குப் பரவாமல் அந்தப் பெட்டியை மற்ற பெட்டிகளிலிருந்து விரைந்து கழற்றி விட்ட டிரைவரின் விரைந்த செயல்பாடும் பாராட்டுக்குரியதே. 


3) உயிருக்கு பயப்படாத ATM காவல் வீரர் சஹாபுதீன்.


4) ஏழைக் குழந்தைகளின் கல்விக் கண் திறக்கும் (முன்னாள்) லாரி ஓட்டுனர் எஸ் பி செல்வராஜ்.


 


5) நந்தினி


14.12.13

பாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்


1) பள்ளியில் இருந்த மைதானத்தில் பல்வேறு உபயோகமான மரங்கள் வளர்த்து பசுமை சேர்ப்பதோடு, விழிப்புணர்ச்சியும் ஊட்டும் புதுக் கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி.


தற்போது 135 மாணவிகளுடன் 263 பேர் படிக்கும் இப்பள்ளியில் வேம்பு, புங்கன், சரக்கொன்றை, மயில்கொன்றை, வாகை, செம்மரம், அத்தி, இலுப்பை, மலை வேம்பு, உதியன், மாவிலிங்கம் உள்ளிட்ட சூழலைக் காக்கும் 1250 மரங்கள் புவிக்கு குடையாக உள்ளன. பள்ளியில் பயிலும் மாணவர்களைவிட 5 மடங்கு அதிகமாகவே மரங்கள் இங்கு உள்ளன.

கிராம மக்கள் மரங்களின் மகத்துவத் தைப் புரிந்துகொண்டதால் விடுமுறை நாள்களில், கிராம மக்களே மரங்களைப் பாதுகாக்க ஒத்துழைக்கின்றனர். நாட்டின் எதிர்காலமே வகுப்பறையில்தான் தீர்மானிக் கப்படுவதால் மாணவர்களிடையே கல்வி யைக் கற்றுக்கொடுப்பதோடு மட்டுமில்லா மல் இயற்கை வளங்களையும் சூழலை யும் காப்பதும் நமது கடமை என்பதை மாணவர்கள் உணரவேண்டும் என்கிறார் பள்ளியின் தலைமை ஆசிரியர் எஸ். பாபு.


2) அரசு மானியத்துடன், 'பயோகேஸ்' தயாரிக்கும் கருவியை, குறைந்த விலையில், கிராமங்களில் நிறுவி வரும், ராமகிருஷ்ணன்


3) எல்லோருக்கும் பயன்படவேண்டும் என்று டீக்கடையையே நூஅகமாக மாற்றிய பட்டதாரி அஷெரப் அலி.

4) பிரஷாந்த் பாண்டே. பெங்களுருவிலிருந்து மும்பைக்குப் புறப்பட்ட ஆம்னி பஸ் டிரைவரின் தூக்கத்தால் ஹாவேரி நெடுஞ்சாலையில் சாலை நடுவில் இருக்கும் சிமெண்டில் உரசி, தீப்பிடிக்க தூக்கத்திலிருந்த பயணிகளை சத்தம் போட்டு எழுப்பி, தலைக்கு மேலே இருந்த ஏர் விண்டோவைக் காலால் உதைத்துத் திறந்து தான் மட்டும் தப்பிப்பதா என்று தன்னால் முடிந்த அளவு (20பேர்) கை பிடித்து மேலே தூக்கிக் காப்பாற்றியிருக்கும் இளைஞர்.

5) அனுதாபம் விரும்பாத தன்னம்பிக்கை. மாளவிகா.