Monday, October 12, 2015

"திங்க"க்கிழமை 151012 :: தேங்காய் சாதம்- இது வேற மாதிரி!படித்துப் பார்த்து விட்டு இதுதான் எனக்குத் தெரியுமே என்பவர்களுக்கு...

 Image result for coconut rice images     Image result for coconut rice images
முன்பு நாங்கள் பதிவிட்ட தே.சா. ஒரு வகை என்றால்,  இது வேற மாதிரி!

"என்ன?  புளியோதரை,  தேங்காய் சாதம், சர்க்கரைப் பொங்கல் என்று அமர்க்களப் படுது?"

"ஆடி பதினெட்டு..  பதினெட்டாம் பெருக்கு...  அதான்" 
(அப்போது எழுதி வைத்த பதிவு)

"அது காவிரிக் கரையில் வசிப்பவர்களுக்கு... அல்லது ஆற்றோரம் வசிப்பவர்களுக்கு.. உங்களுக்கு என்ன?  நீ என்ன விதை விதைச்சு பொங்கல்ல அறுவடை செய்யப் போறியா"

                         Image result for கலந்த சாதம்  images  Image result for கலந்த சாதம்  images


"இல்லைதான்..  இன்னிக்கும் விட்டா இந்தக் கலந்த சாதம் அப்புறம் எப்போ செய்யறது?"


                   Image result for கலந்த சாதம்  images          Image result for கலந்த சாதம்  images


"அது என்ன வெள்ளையா?  தேங்காய் சாதமா?"

"ஆமாம்.. நீங்கள் சொல்லிக் கொடுத்தது போல செய்யும் தேங்காய் சாதம் இன்று செய்யவில்லை.   இது சுலப வழி..  மசாலா இல்லாதது"

"நான் சொல்லிக் கொடுத்தது நினைவில் இருக்கா...  நாலைந்து வருஷங்கள் ஆச்சே நான் சொல்லிக் கொடுத்து..."

"ஆமாமாமாம்...  ஆனால் அடிக்கடி அப்படியும் செய்யறோமே...  சொல்லவா எப்படின்னு?"

"ம்ம்.. சொல்லு"

"ம்ம்...ஓகே..  ஐந்து பேர் சாப்பிடும் அளவு செய்ய எப்படின்னு சொல்றேன்.  ஓகேயா?  

பெரிய தேங்காயாக இருந்தால் இரண்டு தேங்காய் - அதாவது நான்கு மூடி- எடுத்து தேங்காய்ப்பால் எடுத்துக் கொள்ளணும்.  

50 கிராம் இஞ்சி, ஒரு பதினைந்து பல்லு பூண்டு, பச்சை மிளகாய் அவரவர்கள் காரத்துக்குத் தகுந்தவாறு பட்டை கொஞ்சூண்டு எடுத்து அரைத்துக் கொள்ளணும்.

குக்கரில் எண்ணெய் ஊற்றி, கொஞ்சம் பெருஞ்சீரகம் போட்டு, முந்திரிப் பருப்பு தேவையானால் சேர்த்து, பொடியாக நறுக்கிய  இரண்டு மூன்று பெரிய வெங்காயத்தைப் போட்டு, பதினைந்து நிமிடமாவது ஊறிய கால் படி அரிசியைப் போட்டு, அரைத்து வைத்ததையும் இதில் கலந்து, தண்ணீருக்கு பதிலாக (அரிசி அளவுக்கு ஒன்றுக்கு மூன்றோ, நான்கோ) தேங்காய்ப்பாலை அதில் ஊற்றி, உப்பு சேர்த்து மூடி ஒரு விசில், மூன்று நிமிடம் சிம்மில் வைத்து இறக்கி விடலாம்.

தேங்காய் சாதம் ரெடி.  இதற்குத் தொட்டுக்கொள்ள உருளைக் கிழங்கு ஃபிரை நன்றாக இருக்கும்..."

பின் குறிப்பு : இது சமீபத்தில் எங்கள் வீட்டில் செய்யாத காரணத்தால் சுடச்சுட இங்கு படங்கள் பகிராமல், இணையத்திலிருந்து (நன்றியுடன்) படங்களைப் பகிர்ந்திருக்கிறேன்.

40 comments:

Geetha Sambasivam said...

ஹாஹாஹா, இந்தச் சாதம் யாருக்கும் பிடிக்கலை போல! போணியே ஆகலை! நான் தக்காளி சாதம் செய்கையில் இம்மாதிரித் தக்காளி ஜூஸும், தேங்காய்ப் பால் அரைக்கிண்ணமும் (தண்ணீர் ஊற்றக்கூடாது நினைவாக) விட்டுச் செய்வேன். வெஜிடபிள் பிரியாணி தென்னிந்திய முறைப்படி செய்யும்போதும் தேங்காய்ப் பால் சேர்ப்பது உண்டு! :) இதோடு ட்ரை ஃப்ரூட்ஸ், நட்ஸ் (ஹிஹிஹி, நம்மை மாதிரி நட்டுகள் இல்லை) பாதாம், பிஸ்தா, அக்ரூட் போன்றவை முந்திரிப்பருப்போடு சேர்த்து நெய்யில் வறுத்துச் சேர்த்து டுட்டி ஃப்ரூட்டியும் சேர்த்தால் அல்லது பழங்கள் ஆப்பிள், மாதுளை, கொய்யா, பப்பாளி போன்றவற்றை நெய்யில் ஒரு நிமிஷம் வதக்கிச் சேர்த்தால் காஷ்மீரி புலவ்!

Geetha Sambasivam said...

நான் போணி பண்ணிட்டேன், இனிமே யாரானும் வாங்கப்பா! :)

ஸ்ரீராம். said...

ஹிஹிஹி.... கீதா மேடம் நான் பதிவிட்டே ஐந்து நிமிடம்தான் ஆகிறது!

ஸ்ரீராம். said...

ட்ரை ஃப்ரூட்ஸ் .சேர்த்ததில்லை. நட்ஸ் சேர்த்ததுண்டு! நன்றி கீதா மேடம்.

Geetha Sambasivam said...

//ஹிஹிஹி.... கீதா மேடம் நான் பதிவிட்டே ஐந்து நிமிடம்தான் ஆகிறது!//

க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், என்னோட டாஷ்போர்டை வன்மையாகக் கண்டிக்கிறேன். :)

சென்னை பித்தன் said...

தேங்காய் சாதத்தில் பூனடா?நோ வே!

ஸ்ரீராம். said...

அப்போ பட்டை ஓகேயா? இது வேற மாதிரி தேங்காய் சாதம் சென்னை பித்தன் ஸார். நன்றி.

Bagawanjee KA said...

இது வேற மாதிரியா இருக்குமான்னு சாப்பிட்டு பார்த்து சொல்கிறேன் :)

ஸ்ரீராம். said...

அவசியம் சொல்லணும் பகவான்ஜி!!

வருகைக்கும், வாக்குக்கும் நன்றி.

Thulasidharan V Thillaiakathu said...

அட! இப்படியும் செய்வதுண்டே!! ஆனால் இதைத் தேங்காய் சாதம் என்று சிலர் சொல்லுவதுண்டு என்றாலும் இதை மைசூர் பிரியாணி என்றும் சொல்லுகிறார்கள். திருநெல்வேலிக்காரர்கள் சிலர் இதை இப்படிச் செய்வதுண்டு. சேம் ரிசிப்பி ஒவ்வொருவர் ஒவ்வொரு பெயர் சொல்லி...ம்ம்

கீதா

மனோ சாமிநாதன் said...

இது கிட்டத்தட்ட தேங்காய்ப்பால் புலவு தான்!! நீங்கள் குக்கரில் வைப்பதால் இது தேங்காய் சாதம் ஆகிறது! இதுவும் வித்தியாசமாகவே இருக்கிறது! ஆனாலும் கால்படி அரிசிக்கு இரு தேங்காய்களின் பால் அதிகம் தான்!

KILLERGEE Devakottai said...

ஆஹா புகைப்படங்களே பசியைக் கிளப்புகிறதே....

Geetha Sambasivam said...

//ஆனாலும் கால்படி அரிசிக்கு இரு தேங்காய்களின் பால் அதிகம் தான்!//

@மனோ சாமிநாதன், ஹெஹெஹெஹெஹெ, நான் நினைச்சேன், நீங்க எழுதிட்டீங்க! கொஞ்ச நாளைக்குக் குற்றம் கண்டுபிடிக்க வேறே ஆள் மாட்டினதால் இங்கே சொல்லப் போறதில்லை! :) வேறே யாரானும் சொல்லுவாங்களானு பார்க்கப் போறேன். :)

‘தளிர்’ சுரேஷ் said...

இதுவும் வித்தியாசமாத்தான் இருக்கு! நன்றி!

ரூபன் said...

வணக்கம்
ஐயா
பார்த்தவுடன் பசி வந்து விட்டது... செய்முறை விளக்கத்துடன் அசத்தல் சிறப்பு.. த.ம 6
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

கரந்தை ஜெயக்குமார் said...

ஆகா
நன்றி நண்பரே
தம =1

பாரதி said...

பூண்டு சேர்க்காமல் விட்டால் எடுபடாதோ......???

'நெல்லைத் தமிழன் said...

நீங்கள் பின்-குறிப்பு எழுதவில்லைன்னா, ரொம்பப் பசில, படமெடுப்பதற்கு முன்னால் எல்லாம் காலி பண்ணியிருப்பீர்கள் என்று நினைத்திருப்பேன்.

கலவை சாதத்துக்குச் சம்பந்தமேயில்லாத படங்களை ஏன் போட்டுள்ளீர்கள்?

வெறும்ன தேங்காய் உபயோகப்படுத்துவதால், அது எப்படி இந்த சாதத்தைத் தேங்காய் சாதம் என்று கூறலாம்?

ராமலக்ஷ்மி said...

பட்டாணி, தக்காளி, வெஜிடபிள் புலவ் போன்றவற்றுக்கு தேங்காய்பால் எப்போதுமே சேர்ப்பதுண்டு.

குறிப்பு அருமை.

ஸ்ரீராம். said...

அப்படியா? நாங்கள் நீண்ட நாட்கள் எங்கள் பழைய முறையில்தான் தேங்காய் சாதம் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். அப்போது ஒரு நண்பர் வீட்டில் சொல்லிக் கொடுத்த முறை இது. நன்றி சகோதரி கீதா.

ஸ்ரீராம். said...

நன்றி மனோ சாமிநாதன் மேடம். அடுத்த முறை தேங்காயை குறைத்து செய்து பார்க்கிறோம். அல்லது என் பாஸ் அரிசி அளவைக் குறைத்துச் சொல்லியிருக்க வேண்டும்.

ஸ்ரீராம். said...

நன்றி கில்லர்ஜி.

ஸ்ரீராம். said...

இதுவும் ஒரு சுவைதான் கீதா மேடம். கொஞ்சம் இனிப்பு கலந்த காரச்சுவையில் இருக்கும். ஹி...ஹி...ஹி...

ஸ்ரீராம். said...

நன்றி 'தளிர்' சுரேஷ்.

ஸ்ரீராம். said...

நன்றி ரூபன்.

ஸ்ரீராம். said...

நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.

ஸ்ரீராம். said...

அவ்வளவாய் எடுபடாது. நன்றி பாரதி.

ஸ்ரீராம். said...

கிடைத்த படங்களை இணைத்துள்ளேன் நண்பர் நெல்லைத் தமிழன். புளியோதரை, லெமன் சாதம், தயிர் சாதம் கலந்த சாத லிஸ்ட்டில் உண்டே...

தேங்காய் சாதம் என்று சொல்லாமல் வேறு என்ன சொல்லலாம்? நெல்லை புலாவ்?

ஸ்ரீராம். said...

நன்றி ராமலஷ்மி.

G.M Balasubramaniam said...

தேங்காய்ப் பாலில் முதல் பால் இரண்டாம் பால் மூன்றாம் பால் என்றெல்லாம் உண்டு. முதல் பாலில் மட்டும்தான் செய்ய வேண்டும் என்றால் இரண்டு தேங்காய்கள் போதாது என்று நினைக்கிறேன்

வெங்கட் நாகராஜ் said...

தேங்காய்ப் பால் கொண்டு தேங்காய் சாதம். இது வரை சாப்பிட்டதில்லை! செய்து பார்க்க பொறுமை வேண்டும்... முயற்சிக்கிறேன்!

கோமதி அரசு said...

தேங்காய் பால் சாதம் இதன் பேர். நன்றாக இருக்கிறது.

தனிமரம் said...

இனித்தான் செய்து பார்க்க வேண்டும்.

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

பட்டை, கிராம்பு போட்டு, பூண்டும் இஞ்சியும் தட்டிப்போட்டு அதன் பின் நீங்கள் சொல்வது போல் தேங்காய்ப் பாலுடன் செய்வேன்.
இப்படியும் செய்து பார்க்கிறேன், நன்றி சகோ

ஸ்ரீராம். said...

நன்றி GMB sir! இது நல்ல point.

ஸ்ரீராம். said...

பொறுமையாக செய்து பார்த்த பின் சொல்லுங்க, பதிவு போடுங்கள் வெங்கட்.

ஸ்ரீராம். said...

நீங்கள் சொல்லியுள்ள பெயர் பொருத்தமாகவும், நன்றாகவும் இருக்கிறது கோமதி அரசு மேடம். நன்றி.

ஸ்ரீராம். said...

நன்றி நண்பர் தனிமரம்.

ஸ்ரீராம். said...

செய்து பார்த்து சொல்லுங்க சகோதரி கிரேஸ். நன்றி.

துளசி கோபால் said...

ரேத்து பழைய முறை (மீனாட்சி அம்மாள்) தே.சா. நம்ம வீட்டில்.

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!