30.1.26

காந்தாரி திரௌபதி யசோதரை ஊர்மிளை யாருக்கு துன்பம் அதிகம்?

சென்ற வாரம் JKC அலுவலகத்தில் முதல் இரவு அனுபவம் எழுதி இருந்தார்.  என்னுடைய அனுபவம் ஒன்று..  

தணிக்கைக் குழு வரப்போகும் நாட்கள் பற்றி ஓரிரு மாதங்களுக்கு முன்னரே ஒரு  ATP அனுப்பி விடுவார்கள்.  எந்தெந்த அலுவலகத்துக்கு அவர்கள் செல்வதாக இருக்கிறார்களோ அந்தந்த அலுவலகங்களுக்கு மட்டும் ஒரு காபி தபால் போகும்.  

அப்படி எங்களுக்கும் தபால் வந்தது.  எப்போதுமே அரசுத் துறை என்ன செய்யும் என்றால், 'இருபத்தைந்தாம் தேதி  மாலைக்குள் இது சம்பந்தமாக பதிலளிக்க வேண்டும்' என்று கெடு விதித்து அனுப்பும் தபால் நமக்கு ஐந்தாறு நாட்கள் தாண்டி முப்பதாம் தேதிதான் கிடைக்கும்.  சமயங்களில் பதிலளிக்க வேண்டிய தபால் வரும் முன்னர், 'ஏன் பதில் வரவில்லை, உங்கள் மேல் ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது?'  என்று கேட்டிருக்கும் கேள்வித் தபால் முதலில் வந்து விடும்.  தணிக்கைக்கு என்று சொல்லவில்லை.  அதற்கு பதில் எல்லாம் எதிர்பார்க்க மாட்டார்கள்.  பொதுவான அரசு நடைமுறைத் தபால்கள், அல்லது பழைய தணிக்கைக்கான பதில்கள்.  நாம் சிண்டைப் பிய்த்துக் கொள்ள வேண்டும்!  

இதைச் சொல்லும்போது எங்கள் வீட்டில் நடந்ததாக சொல்லப்படும் தாத்தா பற்றிய ஒரு பழைய நிகழ்வு ஞாபகத்துக்கு வருகிறது.  நான் பிறந்திருந்த சமயம் என்று நினைக்கிறேன்.  வருடம் தேவையில்லை..  ஹிஹிஹி...  செங்கல்பட்டில் இருந்தோம்.  அங்கே ஒருமுறை தாத்தா வந்திருந்தார்.  அப்போது நடந்த ஒரு கூத்து பற்றி KGG நினைவு வைத்திருக்கிறாரா என்று தெரியவில்லை.  அதாவது, ஏதோ  Food  Allergy ஆகி, வயிற்றுப்போக்கு ஆரம்பித்து, அது வீர்யம் பெற, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  நிலைமை கொஞ்சம் மோசமாகவே ஊருக்கு தந்தி அடித்திருக்கிறார்கள்.  ஆனால் அன்று அப்புறம் அவர் நார்மலுக்கு திரும்ப, மறுநாள் சரியாகி விட்டார். அதற்கும் இப்போது சரியாகி விட்டார் என்று தந்தி கொடுத்திருக்கிறார்கள்.  இரண்டாவது தந்தி முதலிலும், முதலாவது தந்தி இரண்டாவதாகவும் சென்று சம்பந்தப்பட்ட மக்களைக் குழப்பி இருக்கிறது!

இந்த மாற்றி வரும் மெஸேஜ் சம்பந்தமாக ஒரு ATM சம்பவம் கூட முன்னர் எழுதி இருந்தேன்.  யாருக்காவது நினைவில் இருக்கிறதா?!!

எனவே அரசு இயந்திரத்தின் இந்த சுறுசுறுப்பு இயக்கத்தில், சுமார் 45 நாட்களுக்கு முன்னால் கையெழுத்தான தணிக்கைக் குழுவின் ATP தபால் எங்களுக்கு அவர்கள் வருவதற்கு ஒரு வாரம் முன்னர் கிடைத்தது.  சமயங்களில் தணிக்கைக் குழு திடீரென காலை எங்கள் முன் தோன்றி அதிர்ச்சி அளிப்பார்கள்.  நாங்கள் அதிர்ச்சியுடன் பார்க்கும்போது "தபால் வரவில்லை?" என்பார்கள்.  "ரெண்டு மாசத்துக்கு முன்னாலேயே அனுப்பினோமே" என்பார் செயற்கையான கோபம் ப்ளஸ் இகழ்ச்சியுடன் கண்காணிப்பாளர்.  அதில், 'இவ்வளவு கேவலமாவா நீங்கள் வேலை பார்க்கிறீர்கள்?' என்கிற த்வனி இருக்கும்.  உடனே உதவியாளர் "அந்தத் தபால் புக்கை எடுங்க...  சரியா மெயின்டெயின் பண்றீங்கதானே?' என்று கடமையில் கண்ணாகி முதல் பீதி அஸ்திரத்தைப் பிரயோகிப்பார்.  என்ன சொன்னாலும் நம்ப மாட்டார்கள்.  ஒருமுறை  அவர்கள் வந்தபிறகு - சில சமயம் அவர்கள் தணிக்கை முடிந்து கிளம்பும் சமயம் - அவர்கள் குறிப்பிட்ட தபால் வந்து சேர்ந்திருக்கிறது!  அப்போது மட்டும் அவர்கள் அதை பெரிதாக சொல்லாததற்கு காரணம் அது அவர்கள் சார்ந்திருக்கும் தலைமை அலுவலகத்தின் தவறு.

இந்த ஆடிட் பற்றியும் கொஞ்சம் சொல்ல வேண்டும்.  ஆடிட் என்பது வேலைகளை ஒழுங்கு படுத்துவதற்கு ஆரம்பிக்கப்பட்டிருக்கலாம்.  சில தவறுகளையும், சில அலட்சியங்களையும், தாமதங்களையும் சுட்டிக்காட்ட, கண்டு பிடித்திருக்கலாம்.  ஆனால் காலப்போக்கில் தணிக்கைக்கு வரும் அலுவலர்களின் மனோபாவம் இருக்கிறது பாருங்கள்..  மக்களுக்காக சட்டமா, சட்டத்துக்காக மக்களா கேள்வி போலதான் இதுவும்.  அவர்களையும் ஒன்றும் சொல்ல முடியாது.  தணிக்கையில் அரசுக்கு லாபம் தரும் வகையில் ஏதாவது பணவரவு அபராதம் இருக்க வேண்டும்.  குற்றம் கண்டு பிடித்தால்தான் இவர்கள் கொஞ்சமாவது வேலை பார்த்திருக்கிறார்கள் என்று தெரியும்!  பயன்பப்டி, அதற்கான கூடுதல் டி ஏ எல்லாம் கிளெய்ம் செய்வார்களே..   அது மட்டுமல்லாது எப்போதும் வெளியூர்களில் முகாமிடும் தணிக்கைக்குழு,  சரியாக தீபாவளி பொங்கல் சமயங்களில் சென்னையில் முகாம் அமைத்து கொண்டாடுவார்கள்.  எங்கள் பாடுதான் சொல்லவும் முடியாமல், முழுங்கவும் முடியாமல் என்று இருக்கும்.  வரும் கோபத்தையும் எரிச்சலையும், வெறுப்பையும் கடைசிவரை காட்டவே முடியாது.  செலவுக்கும் ஒன்றும் குறைவிருக்காது.  இதில் விதிவிலக்காளர்கள் உண்டு என்றாலும் மிகச்சொற்பம்.  நம் காசில்தான் மஞ்சள் குளிப்பார்கள்.  கடைசியில் நம்மைப் பற்றியே எழுதி வைத்து விட்டும் செல்வார்கள்!  

ஒரு தணிக்கைக்குழுவின் தலைவர் இருபத்தொரு நாட்கள் தணிக்கையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அசைவ ஹோட்டலிலிருந்து உணவு வாங்கித்தரச் சொல்லி யோசனை சொல்லி சாப்பிட்டார்கள்.  கடைசி நாளுக்கு முதல்நாள் அந்தத் தலைவர் என்னைக் கூப்பிட்டுச் சொன்னார்... "இதோ பாருங்க ஸ்ரீ...  நீங்க கோழி வாங்கி கொடுத்தீங்க..  மட்டன் வாங்கிக் கொடுத்தீங்கன்னு எதுவும் எழுதாமல் விடமாட்டோம்..  நீங்கள் ஏதோ அன்பில் வாங்கி கொடுத்தீர்கள்..  புரியுதா?' என்று தூத்துக்குடி பாஷையில் கேட்டார்.  அன்பிலா?  நீங்கள் என்ன என் மாமனா, மச்சானா?!!  நான் சுருக்கமாக என் கடுப்பை வெளிப்படுத்தினேன்..  "இதை நீங்கள் முதல் நாளே சொல்லி இருக்க வேண்டும் ஸார்"

இதில் ஒரு வெளியூர்க்கார குமாஸ்தா ஆபீஸிலேயே தங்கினார்.  இரவு வரை வீட்டுக்கு விடாமல் படுத்துவார்.  தினசரி அவருக்கு வில்ஸ சிகரெட் ஒரு பாக்கெட்டும், குவார்ட்டரும் வாங்கி கொடுக்க வேண்டும்!  அதை அவர்கள் டிமாண்ட் செய்யும் முறை வித்தியாசமாக இருக்கும்.  வெளிப்படையாக இருக்காது!

'நீங்கள் ஒழுங்காக வேலை செய்தால் இந்தப் பிரச்னை எல்லாம் வருமா?' என்று கேட்கலாம்.  நிறைய விஷயங்களை வெளியே எழுத முடியாது!  இதுவே அதிகம்!

இரவுப்பணி பற்றி சொல்ல வந்தேன்.  விஷயம் எங்கெங்கோ தாவிக் கொண்டிருக்கிறது - வழக்கம்போல..  இதற்கு மேலேயும் அது தேவைதானா என்று தோன்றுகிறதா?  சரி என்றால் பின்னர் தொடர்கிறேன்!  இன்று இது போதும்!!

=================================================================================================

சென்ற வாரம் ஜவஹர்லால் நேரு பற்றி 'அந்த நாளில்' என்று தலைப்பிட்ட  பகுதியில் பார்த்தோம்.  இந்த 'அந்த நாள்' விகடனில்  வாராவாரம் தொடர் போலவே வெளிவந்திருக்கிறது.  என்னிடமுள்ள கலெக்ஷனில் (பாதி புத்தகம் ஏடு ஏடாக காணாமல் போய்விட, பாக்கி இருக்கும் புத்தகத்தின் பெரும்பாலான பக்கங்களை கரையான் படித்திருக்க, கிடைத்தவரை எடுத்து பகிர்கிறேன்! ) இதில் அடுத்து இருப்பது கப்பலோட்டிய தமிழர் பற்றி...  அது இந்த வாரம்.  

இப்படி சுருக்கமாக இருப்பவையும் இருக்கிறது. இரண்டு மூன்று பக்கங்கள் வருபவையும் இருக்கிறது!

இப்போது எனக்குள் ஒரு கேள்வி..  "ஆமாம், இந்த "அருண்" யாராயிருக்கும்?"


இங்கே மீசையுடன் காணப்படும் வாலிபர், கட்டபொம்மனின் பாஞ்சால நகருக்குப் பக்கத்தில் பரம்பரை வக்கீல் குடும்பத்தில் பிறந்தவர். 

'நீச்சல், சிலம்பம், குஸ்தி, குதிரை சவாரி ஆகியவற்றில் ஈடுபட்டு ஆனந்தமாகக் காலம் தள்ளி வந்திருக்கிறார், சிறுவயதிலே ஆனால் 14-வது வயதில் வாழ்க்கையில் அவருக்கு விரக்தி ஏற்பட்டு சந்நியாசமும் கொண்டார் காரணம், இவர் செய்யாத ஒரு குற்றத்திற்காகத் தகப்பனார் இவரை அடித்து விட்டதுதான். 

தலையை மொட்டை அடித்துக் கொண்டார். கெளபீனத்துடன் கால் நடையாகவே மதுரை நகர் போய்ச் சேர்ந்தார். பெற்றோர் பதறினார்கள்; தேடினார்கள். பயன் இல்லை. சில நாட்களில், சாமியார் வாழ்வு சுலப வாழ்வு அல்ல என்பது வாலிபருக்குத் தெரிந்தது. ஆனால் நேரே வீட்டுக்கு வருவதை கௌரவம் தடுத்தது ! நண்பர் ஒருவருக்கு எழுதினார். அவர் இவரது பெற்றோருக்கு விஷயத்தைச் சொல்லவே, அவர்கள் மதுரை சென்று, பிள்ளையை ஊருக்கு அழைத்துப் போயினர்.

சென்னையில் அத்தையின் வீட்டுக்கு வந்தபோது தான். இவரது வாழ்க்கையி லேயே புரட்சி உண்டாக்கும் சம்பவம் ஒன்று நடந்தது. விவேகானந்தரின் மடத்தைச் சேர்ந்த ராம் கிருஷ்ணானந்தரை இவர் சந்தித்தபோது,"நம் நாட்டுக் கைத்தொழிலை வளர்க்க என்ன செய்தாய் நீ ? சுதேசியமே சுகம் தரும்" என்ற உபதேசம் கிடைத்தது.  சம்பவம் வாலிபர் ஊர் திரும்பி குடிசைத் தொழில் வளர் சங்கம்துவக்கினார். 

கஷ்டமான காலத்திலும் ஹாஸ்யமாகப் பேசும் சுபாவம் உடையவர். விடுதலைக் கிளர்ச்சியில் இவர் சிறையில் அடைக்கப் பட்டபோது, 'வார்டர்' கொடுத்த சட்டைகளைப் பார்த்து.இது என்ன ஐயா, கை இல்லாத கைச் சட்டை ! கால் இல்லாத கால் சட்டை!' என்று வர்ணித்து, ஏளனமாகச் சிரித்தார். பக்கத்தி லிருந்த அதிகாரிகளும் சேர்ந்து சிரித்தனர்.

வ.உ. சிதம்பரம் பிள்ளை அவர்களே இவர். படத்தில் பக்கத்தில் ஆம்; சுதேசக் கப்பல் விட்டு, விதேசிகளை நடுங்க வைத்த இருப்பவர் அருமைப் பத்தினியார் மீனாக்ஷி அம்மாள் அவர்கள்.

-"அருண்"

========================================================================================​

வேலைகள் நிறைய இருந்தாலும், ஒருநாள் கிடைத்த அவகாசத்தில் இணையத்தில் AI யுடன் ஒரு பேட்டி நடத்தியபோது...!  பள்ளிப்பருவத்தில் தமிழ் துணைப்பாடத்தில் 'இதை இப்படி என்று இத்தனை வரிகளுக்கு மிகாமல் எழுதி நிறுவுக' என்று 15 மதிப்பெண் கேள்விகள் வருமே..  அப்படியான கேள்விக்கு பதில் சொல்வது போல AI நான் கேட்ட சிறு கேள்விகளுக்கு இபப்டியான புள்ளி விவரக் கட்டுரை எழுதி நிறுவ முயன்றது.  


ஸ்ரீராம்  : காந்தாரி திரௌபதி யசோதரை ஊர்மிளை யாருக்கு துன்பம் அதிகம்?

AI  : ராமாயண மற்றும் மகாபாரத இதிகாசங்களிலும், வரலாற்றிலும் இந்த நான்கு பெண்களுமே பெரும் துயரங்களைச் சந்தித்தவர்கள். ஆனால், யாருடைய துன்பம் அதிகம் என்று பார்க்கும்போது, அது அவர்கள் சந்தித்த இழப்புகளின் தன்மையைப் பொறுத்து மாறுபடும்:
1. காந்தாரி (மிகப் பெரிய இழப்பு):
இவர்கள் நால்வரில் காந்தாரியின் துயரம் மிகவும் கொடூரமானது. தனது 100 பிள்ளைகளையும் போர்க்களத்தில் இழந்து, ஒட்டுமொத்த வம்சமே அழிவதைக் கண்முன்னே பார்த்தவர். 100 மகன்களுக்கு ஈமச்சடங்கு செய்ய வேண்டிய துரதிர்ஷ்டவசமான தாய் அவர். எனவே, இழப்பின் அடிப்படையில் காந்தாரியின் துயரம் முதன்மையானது.
2. திரௌபதி (மிகப் பெரிய அவமானம்):
திரௌபதியின் துன்பம் 'மானுட அறத்திற்கு' எதிரானது. ஒரு பேரரசியாக இருந்தும், சபையினரின் முன்னிலையில் துகிலுரியப்பட்டு அவமானப்படுத்தப்பட்டார். தனது ஐந்து மகன்களையும் (உபபாண்டவர்கள்) போரின் இறுதியில் அஸ்வத்தாமாவால் பறி கொடுத்தார். சமூக மற்றும் மானசீக சித்திரவதையின் அடிப்படையில் திரௌபதியின் துயரம் மிக அதிகம்.
3. ஊர்மிளை (நீண்ட கால தனிமை):
ஊர்மிளாவின் துயரம் 'தனிமை' சார்ந்தது. எந்தத் தவறும் செய்யாமல், திருமணமான சில காலத்திலேயே கணவனை 14 ஆண்டுகள் பிரிந்து, அரண்மனைச் சுவர்களுக்குள் முடங்கிக் கிடந்தவர். சீதைக்கு ராமரின் துணை இருந்தது, ஆனால் ஊர்மிளைக்கு யாருமில்லை. மௌனமான தியாகத்தில் ஊர்மிளை முதலிடம் பிடிக்கிறார்.
4. யசோதரை (ஏமாற்றம் மற்றும் தேடல்):
தன்னையும் குழந்தையையும் ஒரு வார்த்தை கூட சொல்லாமல் பிரிந்து சென்ற கணவனை எண்ணி வருந்தியவர். ஒரு இளவரசியாக இருந்துவிட்டு, கணவன் சென்ற பிறகு துறவறக் கோலம் பூண்டு வாழ்ந்தவர். ஆனால், இறுதியில் தனது கணவன் 'புத்தராக' மாறி உலகிற்கே வழிகாட்டியது அவருக்கு ஒரு ஆறுதலாக அமைந்தது.
முடிவு:
  • உயிரிழப்பு மற்றும் வம்ச அழிவால் வாடிய காந்தாரிக்கும், சபையில் நேர்ந்த அவமானத்தால் சிதைந்த திரௌபதிக்கும் ஏற்பட்ட துன்பங்கள் வாழ்நாள் முழுவதும் ஆறாத வடுக்கள்.
ஒப்பீட்டளவில், ஊர்மிளை மற்றும் யசோதரையின் துன்பங்கள் 'பிரிவு' சார்ந்தது. ஆனால் காந்தாரி மற்றும் திரௌபதியின் துன்பங்கள் 'மரணம் மற்றும் அவமானம்' சார்ந்தது என்பதால், காந்தாரி மற்றும் திரௌபதியின் நிலையே அதிகக் கொடுமையானது எனக் கருதலாம்.
ஸ்ரீராம்  :  கணவர் புத்தராக மாறி உலகிற்கு வழிகாட்டியது யசோதனைக்கு ஆறுதலாக அமைந்தது என்பது என்ன நிச்சயம் யார் அப்படி சொல்லி இருப்பது?!
AI   :  பௌத்த இலக்கியங்கள் மற்றும் வரலாற்றுச் சான்றுகளின்படி, யசோதரைக்கு அது ஆறுதலாக அமைந்தது என்பதற்கான ஆதாரங்கள் அவரது பிற்காலச் செயல்களிலேயே காணப்படுகின்றன. இது குறித்துப் பின்வரும் குறிப்புகள் முக்கியமானவை:
1. பாலி இலக்கியங்கள் (Therigatha):
பௌத்த நூல்களான 'தேரிகாதா' மற்றும் 'அபதானா' ஆகியவற்றில், யசோதரை (பௌத்தத்தில் 'பத்தா கச்சானா' என்று அறியப்படுகிறார்) பிற்காலத்தில் ஒரு பிட்சுணியாக (துறவி) மாறி 'அர்ஹந்த்' நிலையை (முழுமையான ஞானம்) அடைந்ததாகக் கூறப்படுகிறது. அவர் ஒருவேளை தன் கணவர் மீது வெறுப்பிலோ அல்லது தீராத துயரத்திலோ இருந்திருந்தால், அவர் காட்டிய அதே வழியில் பயணித்துத் துறவறம் பூண்டிருக்க வாய்ப்பில்லை.
2. புத்தரும் யசோதரையும் சந்திப்பு:
புத்தர் ஞானம் பெற்ற பிறகு கபிலவஸ்துவுக்குத் திரும்பியபோது, யசோதரை அவரைச் சந்திக்க மறுக்கவில்லை. மாறாக, புத்தர் அவரிடம் வந்து பேசியபோது, யசோதரை அவரது காலடியில் விழுந்து வணங்கினார். அப்போது புத்தர், "யசோதரை இந்த ஜென்மத்தில் மட்டுமல்ல, பல பிறவிகளாக எனது தேடலுக்குத் துணையாக இருந்தவர்" என்று அவரைப் பாராட்டியதாக ஜாதகக் கதைகள் குறிப்பிடுகின்றன.
3. யசோதரையின் துறவற வாழ்க்கை:
யசோதரை வெறும் துறவியாக மட்டும் மாறவில்லை, பெண்களுக்கான பௌத்த சங்கத்தில் ஒரு முக்கியத் தலைவராகவும் திகழ்ந்தார். அவர் தனது கணவர் கண்டறிந்த உண்மைகளை ஏற்றுக்கொண்டு, அதன் மூலம் தனது துயரங்களிலிருந்து விடுபட்டதாகவே பௌத்த சரித்திரங்கள் கூறுகின்றன.
யார் அப்படிச் சொன்னது?
  • பௌத்த அறிஞர்கள்: அஸ்வகோஷர் எழுதிய 'புத்தசரிதம்' போன்ற காவியங்கள் மற்றும் நவீன கால பௌத்த வரலாற்று ஆசிரியர்கள் (எ.கா. கரேன் ஆம்ஸ்ட்ராங்), யசோதரை தனது கணவரின் ஞானம் மூலம் தனது தனிப்பட்ட துயரத்தைக் கடந்தார் என்று குறிப்பிடுகின்றனர்.
  • அசோகவதனா: போன்ற நூல்களும் யசோதரை மற்றும் ராகுலனின் ஆன்மீக விடுதலையை ஒரு வெற்றியாகவே சித்திரிக்கின்றன.
நிச்சயமாகச் சொல்ல முடியுமா?
வரலாற்று ரீதியாகப் பார்த்தால், இது ஒருவரின் 'மனநிலை' சார்ந்தது. ஒரு மனைவியாக அவருக்குப் பிரிவுத் துயரம் இருந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அவர் புத்தரின் சீடராக மாறியது, அவர் தனது கணவரின் செயலில் இருந்த 'பெரிய நோக்கத்தைப்' புரிந்துகொண்டார் என்பதையே காட்டுகிறது.
எனவே, அவர் தற்கொலை செய்துகொள்ளவோ அல்லது வாழ்நாள் முழுவதும் தன் கணவனைச் சபித்துக்கொண்டோ இருக்கவில்லை; மாறாக, அவர் காட்டிய வழியிலேயே சென்று அமைதி பெற்றார் என்பதுதான் நமக்குக் கிடைக்கும் வரலாற்றுப் பதிவு.
மேற்கோள்கள்:
  1. தேரிகாதா - பௌத்த பெண்களின் பாடல்கள்
  2. பௌத்த அகராதி - யசோதரை பற்றிய குறிப்புகள்
  3. புத்தரின் கபிலவஸ்து வருகை - ஜாதகக் கதைகள்
  4. புத்தசரிதம் - அஸ்வகோஷர்
  5. ========================================================================================
  6. 2016, பேஸ்புக்கில் பகிர்ந்ததை இங்கு பகிர்கிறேன்.  தளத்தில் பகிர்ந்தேனா என்று நினைவில்லை.  இருந்தாலும் சுவாரஸ்யமான, அதிசயிக்கத்தக்க, நெகிழ்வூட்டும் சம்பவம்.  உங்களுக்கும் நினைவிருக்கிறதா?
அதிசயம் ஆனால் உண்மை.
கர்நாடகாவில் ஒரு தாய்ப் பசு தன் கன்றுடன் ஜன சந்தடிமிக்க அந்த பஸ் நிலையத்தில் சென்று கொண்டிருந்த சமயம் KSRTC பஸ் ஒன்று சற்றும் எதிர்பாராத நேரத்தில் அந்த கன்றின் மீது மோதியதில் பசு கன்று பேருந்தின் முன் அடிப்பக்கத்தில் சிக்கி இறந்துவிட்டது
அந்த கன்றை அப்புறப்படுத்தி விட்டனர்.
ஆனால் அன்று முதல் அந்த தாய்ப்பசு அந்த இடத்திற்கு குறிப்பிட்ட பஸ் வரும்போதெல்லாம் இன்னும் தன் கன்று அந்த பஸ்ஸின் அடியில் இருப்பதாக நினைத்து சுற்றி சுற்றி வருவதும் அந்த பஸ்ஸின் முன் அடிப்பக்கத்தில் தேடுவதுமாக இருக்கிறது.
KSRTC அதிகாரிகள் பஸ்ஸின் நிறத்தை மாற்றி பார்த்தனர்', சில நாட்கள் சர்வீஸ் ரத்து செய்தனர். ஒன்றும் பலனளிக்கவில்லை.
இன்றுவரை அந்த குறிப்பிட்ட பஸ் வரும் போது அந்த தாய்ப் பசுவின் தேடல் தொடர்கிறது .

தாய்மையின் மகத்துமே மெய்சிலிர்க்க வைக்கிறது.
==============================
வாட்ஸப்பில் வந்ததை அப்படியே பகிர்கிறேன். அந்தத் தாயைப் பார்க்க மனதுக்கு ரொம்பவே கஷ்டமாக இருக்கிறது.  - 5-1-2016


========================================================================================

இப்போதும் இப்படி வழிகாட்டுன்றனவா என்று தெரியவில்லை!  சிம்பன்ஸி இருக்கும் காடுகள் எங்கே இருக்கு AI?!!
வனத்தில் வழிதவறினால் சிம்பன்ஸி வழிகாட்டும் :
அடர்ந்த காட்டுக்குள் வழி தவறிவிட்டால், வழியைக் கண்டுபிடிக்க சிம்பன்ஸியிடம் உதவி கோரலாம். சிம்பன்ஸிகள் எளிதில் வழியைக் கண்டுபிடிப்பதுடன், உணவு இருக்கும் இடத்தையும் கண்டுபிடித்துக் கொடுக்கும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.
சிம்பன்ஸிகளின் தகவல் தொடர்பு பரிமாற்றம் குறித்து அமெரிக்க மற்றும் பிரிட்டன் விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். ஆய்வின் ஒரு பகுதியாக, சிம்பன் ஸிகள் வழிதவறிய மனிதர்களுக்கு வழியைக் காட்டிக் கொடுக்குமா என ஆய்வு நடத்தப்பட்டது.
அப்போது, சிம்பன்ஸிகள் சைகை மூலம் வழியைக் காட்டிக் கொடுக்கின்றன என்பது தெரிய வந்தது. இதனை பரிசோதித்துப் பார்க்க, பரந்த வனப்பரப்பில் ஓரிடத்தில் உணவு மறைத்து வைக்கப்பட்டது. காட்டுக்குள் விடப்பட்ட மனிதர் தானாக முயன்று அந்த இடத்தைக் கண்டு பிடிக்க முயன்றும் முடியவில்லை. ஆனால், சிம்பன்ஸிகள் இருந்த இடத்தில் இருந்த மனிதர், அவற்றின் உதவியை சைகை மூலம் கோரவே, அவை உணவு இருந்த இடத்தை எளிதில் கண்டுபிடித்துக் கொடுத்தன.
இது தொடர்பான ஆய்வில் ஈடுபட்டவர்களுள் ஒருவரான செஸ்டர் பல்கலைக் கழக பேராசிரியர் அண்ணா ராபர்ட்ஸ் கூறுகையில், “இந்த ஆய்வு முடிவு மொழிகள் எப்படி உருப்பெற்றன என்பதற்கான ஆய்வில் மிகவும் உதவிகரமாக இருக்கும்” என்றார்.
ஸ்டெர்லிங் பல்கலைக்கழக பேராசிரியர் சாரா ஜான் விக் கூறுகையில், இதற்கு முந்தைய ஆய்வுகள் சிம்பன்சிகளின் சைகை மொழியில் நெகிழ்வுத் தன்மை இருப்பதைச் சுட்டிக்காட்டின. தற்போது, மிகவும் சிக்கலான சூழலில் அவற்றின் அறிவுத் திறனை வெளிப்படுத்த முடியும் எனத் தெரியவந்துள்ளது” என்றார் அவர்.
[தி இந்து] 2014

6 கருத்துகள்:

  1. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்....

    அலுவலக அனுபவங்கள்..... இப்படித்தான். அப்படி வருபவர்களுடன் மல்லுக்கட்டுவது பெரிய சவால்.

    மற்ற விஷயங்களும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வெங்கட். வணக்கம். ஆடிட்களில் பெரும்பாலும் நான் மெயினாக உட்கார வேண்டி இருக்கும். அது ஒரு பெரிய தொல்லை. உங்களுக்கு அந்த அனுபவம் உண்டா?

      நீக்கு
  2. இன்றைய பதிவு வெகு சுவாரசியம். ரொம்பவே ரசிக்கும்படி இருந்தது.

    வ.உ.சி படத்தைப் போட்டுவிட்டு பாஞ்சாலங்குறிச்சினு சொல்றாங்களேன்னு தோன்றியது, கடைசியில் பெயரைப் பார்க்கும்வரை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை... பதிவை ரசித்ததற்கு நன்றி.

      நீக்கு
  3. ஆடிட். வெங்கட் நாகராஜ் பாஷையில் தேவையில்லாத ஆணி.

    எங்கள் ஃபேக்டரியிலும், அரசு அலுவலர்கள் பல்வேறு ஆடிட்டுக்கு (தனியார் தொழிற்சாலை), காசு என்னவோ நல்லா வாங்கிக்கிட்டு, அதிகாரத் த்வனியுடன் சத்தம் போடுவதைப் பலமுறை பார்த்திருக்கிறேன். தொழிலாளர் பிரச்சனை வரும்போது, பத்திரிகை நிறுபர்கள் கவர் வாங்கிக்கொண்டு செய்தியை மேனேஜ்மென்டுக்குப் பாதகமில்லாமல் எழுதும் கூத்தும் நடந்திருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தனியார் அலுவலகங்களுக்கு அரசு அலுவலர்கள் ஆடிட்டுக்கு வருவார்களா? எப்படி? ஆடிட் என்பதே ஒரு பெரிய தொல்லை! உங்கள் தோளுக்கு அருகில், உங்கள் தோளில் முகம் வைத்து இன்னொருவர் நீங்கள் செய்யும் வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறார் என்றால் அந்த வேலையை எப்படி செய்வது!!

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!