Saturday, October 10, 2015

பாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.
1) சோலார் சக்தி மூலம் முழுக்க, முழுக்க இயங்கும் கிராமம் ஒடிசாவில் வெற்றி பெற்றுள்ளது.
  
2) "உலகில் உள்ள வாகனங்கள், ஒரு நாள் வெளியிடும் புகையின் அளவு, ஒரு ஹைட்ரஜன் குண்டு வெடிப்பிற்கு சமம். பெட்ரோலை மிச்சப்படுத்தி, சுற்றுச்சூழலை பாதிக்காத விதத்தில், 'வேபர் பிரஷர் விதிப்படி' இயங்கும் புதிய கருவியை கண்டறிந்தேன்.  சோதனை அடிப்படையில், என், 125 சி.சி., டூவீலர், இக்கருவியின்றி, ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு, 40 கி.மீ., துாரம் சென்றது. கருவி பொருத்திய பின், அதே பெட்ரோல், 52 கி.மீ., துாரம் வரை செல்வதை உறுதி செய்தேன்." - சிவகங்கை, மதுரை சாலையைச் சேர்ந்த, ஓய்வுபெற்ற தாசில்தார் ஞான பண்டிதன் மகன் கண்ணன்.
 


 
  
4)  Sri Aurobindo International Centre of Education (SAICE) பள்ளியின் பெருமை.
 


 
5)  அவர் வாழ்க்கையை அவர் வாழ்கிறார்.  ஆனால் அவர் மேல் நமக்கு ஒரு ப்ரியம் வருகிறது. பாராட்டத் தோன்றுகிறது. ஏன்? ஓல்ட் புக் முருகேசன்.
 

 
 
6)  குறை சொல்லாத மனிதர்.  'அவர்களி'ன் கஷ்டம் தெரிந்து, தன்னால் ஆன முயற்சிகளையும் எடுக்கும் மனிதர் சந்தோஷ்.
 


 
7)  லாலேட்டனின் எளிமை.
 


 
8) இயற்கையைக் காக்க இளையவர்களைத் தயார் படுத்தும் தமிழ் ஆசிரியை அலமேலம்மாள்.
 

 
9) இப்படி இருந்தால் என்ன ஆகும் என்று அறிந்திருந்ததும், எனக்கென்ன என்று போகாமல் விபத்தைத் தவிர்த்தவருமான நாடுகண்டனுார் விவசாயி ரங்கசாமி.
 


 
10) பாராட்டப்பட வேண்டிய அதிசய மனிதர் சிவக்குமார்.
  
11) மனோஜ் பார்கவா, தன் சொத்தில், 99 சதவீதத்தை, 'பில்லியன்ஸ் இன் சேஞ்' என்கிற அமைப்பின் மூலம் உலகை மேம்படுத்தும் சிறு சிறு கண்டுபிடிப்புகளை உருவாக்குவதற்காக வழங்குவதாக அறிவித்துள்ளார்.
 12)  குழந்தைகளை மகிழ்வித்திருக்கும் பி ஸி அலெக்சாண்டருக்குப் பாராட்டுகள்.  செய்திக்கு நன்றி வெங்கட்.


8 comments:

Geetha Sambasivam said...

ஒடிசாவும், கண்ணனும் ஏற்கெனவே தெரியும்,
குழந்தை பிழைத்தது அதிசயமே
லாலேட்டன் பத்தி நிறையச் சொல்கிறார்கள், ஆடம்பரமின்றிச் செய்கிறார். ஆனால் இதுவே இங்கே உல(க்)கைநாயகனா இருந்தால் அமர்க்களப்பட்டுப் போயிருக்கும். :(
கடைசிச் செய்தி ஏற்கெனவே பார்த்தேன். மற்றவையும் அருமை, புதுமை.

அப்பாடா, பதிவு போட்ட அன்னிக்கே வந்துட்டேன். :)

Geetha Sambasivam said...

ஹை, மீ த ஃபர்ஷ்டு கருத்து சொல்லிங்?

மனோ சாமிநாதன் said...

படிக்கட்டில் தூங்கும் பெற்றோர்! கீழே உருண்டு விழுந்த குழந்தை! விபரம் படிக்கும்போதே நெஞ்சு பதறுகிறது! எங்கோ அனாதையாக விழுந்து கிடந்த பச்சிளங்குழந்தையை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்து காவல் நிலையத்திற்கும் சென்று தகவல் சொன்ன இளைஞர் ராஜாவின் மனித நேயம் மிக‌ உயர்ந்தது! அவருக்கு தலை வணங்குகிறேன்!

இளமதி said...

பலவகை உணர்வுகளையும் தரவல்ல தொகுப்புப் பதிவு!
மிக அருமை!

பகிர்விற்கு நன்றியுடன் வாழ்த்துக்கள் சகோ!

KILLERGEE Devakottai said...

அனைத்தும் நல்ல தகவல்கள் நண்பரே அலமேலம்மாள் பாரபாட்டுக்குறியவரே... வாழ்த்துவோம்.

ரூபன் said...

வணக்கம்
ஐயா
சிறப்பான தகவலை தொகுத்து தந்தமைக்கு நன்றி... ஐயா அறிந்தேன் த.ம 6

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

வெங்கட் நாகராஜ் said...

சிறப்பான செய்திகள். சோலார் என்றதும் இன்னும் ஒரு தகவல் படித்தது/பார்த்தது நினைவுக்கு வந்தது. கொச்சின் விமான நிலையம் முழுவதும் சோலார் பேனல் மூலம் மின்சாரம் பெற்று பயன்படுத்துகிறார்கள். நமது நாட்டில் இங்கு தான் [இந்த ஏர்போர்ட்] முதல்....

Thulasidharan V Thillaiakathu said...

சோலார் இப்போது பரவலாக வந்து கொண்டிருக்கின்றது...நம் நாட்டிலும். கேரளாவில் சாலை விளக்குகளில் பொருத்தப்பட்டிருக்கின்றது. குறிப்பாக மலப்புரம் பகுதியில்....சென்னையில் அடையாரில் மத்யகைலாஷ் அருகில் ஒரு சாலை விளக்குக் கம்பத்தில் பொருத்தி இருக்கிறார்கள். அது வேலை செய்யத் தொடங்கிவிட்டதா என்று தெரியவில்லை....

இரு செய்திகள் ஒன்று வெங்கட்ஜி, மற்றொன்று தஞ்சையம்பதி தளத்தில் வாசித்த போது அட இது எங்கள் ப்ளாக் போட வேண்டிய செய்தியாயிற்றே என்று தோன்றியது..இங்கு வந்துவிட்டது...

அலமேலம்மாள் போன்ற ஆசிரியர்கள் இன்னும் வர வேண்டும்....பாராட்டப்பட வேண்டியய்வர்,

ட்ராஃபிக் போலீஸ் செய்தி அருமை....இது நல்லதொரு தொடக்கம்தான்...கூடவே ட்ராஃபிக் ஒழுங்குமுறையும் வருவதற்கு ஆவன செய்தால் நன்றாக இருக்கும்...(.ஹும் நமக்குத்தான் எப்பவுமே நல்லதைப் படிக்கும் போதே அதைப் பாராட்டாமல் அடுத்த ஒரு குறை சொல்லி கோரிக்கை வைக்கறதே பழக்காமாகிடுச்சு..)

லாலேட்டன் நல்லதும் அதுவும் எளிமையாக, நல்லது செய்யத்தான் செய்கின்றார். ஆனால், பெரும்பாலும் நாம் நடிகர்களைப் பற்றிய அவதூறான செய்திகளை வாசித்து அவர்களைப் பற்றி ஒரு ஜட்ஜ்மென்டிற்கு வந்து விடுகின்றோம். பெண் பித்தன், குடிகாரன்...என்றெல்லாம்..ஆனால், அவர்களிடமும் நல்ல விஷயம் இருக்கும் என்பதை நாம் பார்ப்பதில்லை...நல்லது வந்தாலும், அதை வாசித்து விட்டு..."ஆனா அவன் ரொம்ப மோசம் ...."என்று ஏதோ நமக்குத் தெரிந்தது போல், அவருடன் இருப்பது போல் ஒரு பட்டியல் இடுவோம்...சேற்றினிடையே செந்தாமரை என்பது போல் லாலேட்டன் எப்படியோ இருந்துவிட்டுப் போகட்டும்..... நல்லதையும் சொல்லும் எங்கள்ப்ளாகிற்கு வாழ்த்துகள். பாராட்டுகள்..

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!