திங்கள், 12 பிப்ரவரி, 2018

"திங்க"க்கிழமை : கம்பங்-கொள்ளுப் புட்டு:) - அதிரா ரெஸிப்பி

கப்பங்-கொள்ளு சுவீட் புட்டு:)..

கடவுளே.. இண்டைக்கு என் சுவீட் புட்டுக்கு என்ன ஜொள்ளுவினமோ?:))
  


ம்பில், கொள்ளில் எல்லோரும் தோசை, இட்லி செய்கிறார்கள், நான் புட்டு அவிப்பமே எனக் களம் இறங்கினேன்... யூப்பரா வந்துதே...

முக்கால் கப் கொள்ளும், அரைக்கப் கம்பும் எடுத்து  ஊறப்போட்டேன்.. கிட்டத்தட்ட ஒரு இரவு முளுக்க.

பின்பு தண்ணியை வடித்து நன்கு உலர விட்டேன். உலர்ந்தபின் வறுத்து எடுத்தேன். வறுத்தபின் அப்படியே மிக்ஸியில் போட்டு அரைத்து, அரிக்காமலேயே புட்டு அவித்தேன்... நல்ல இனிமையாக மிக யூப்பராக வந்துதே.

அரித்து எடுக்காமையால், கரகரப்பாக இருந்தது, அப்போ மா கடுமையான உதிர்வாக இருந்திடுமோ எனும் பயத்தில் 3,4 மேசைக்கரண்டி அரிசி மாச் சேர்த்துக் குழைச்சேனாக்கும்:)..

ஊறப்போட்ட கம்பன் கொள்ளு ஃபமிலி:))

உலர விட்டபின் ஒன்றாக வறுத்தேன்

நன்கு வறுத்து, அரைத்து எடுத்தபின்... அரிசி மா கொஞ்சம் சேர்த்தேன் + உப்பும் சேர்த்து.....
 
ண்ணியை நன்கு கொதிக்க விட்டு, பின்பு கொஞ்சம் ஆவி போக விட்டபின், கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து குழைக்க வேண்டும்.... குழைச்ச பின்னர், பெரிய சிறிய கட்டிகளாக வரும்.. அதனால இப்படி சுளகில் போட்டு, அல்லது பேப்பர், அல்லது அகல போர்ட் எதிலாவது போட்டு, இப்படி நல்ல விழிம்புள்ள கப்பால்... டொக்கு டொக்கு டொக்கென கொத்த வேண்டும், அப்போ எல்லாம் ஒரே சைஸ் உருண்டைகளாகி விடும்:)... நிறைய மா எனில் மிக்ஸியின் நடுக் கப் இருக்குதுதானே, அதில் கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு ஒரு ஒரு தடவை சுத்த விட்டும் எடுக்கலாம்..

இந்தச் சுளகு ஃபுரொம் சென்னை ஆக்கும்:)) அக்கா தந்தவ.. இலங்கைச் சுளகு பெரிதாகவும் நல்ல வெள்ளையாகவும் இருக்கும், இது சின்ன சைஸ் ஆகவும், உள்ளே ஏதோ மெழுகு போல போட்டிருக்கினம்.. அது சாணி போட்டு மெழுகியதைப்போல இருக்கு:)), ஏன் அப்படி எனத் தெரியவில்லை.த்தோடு தேங்காய்ப்பூவுக்குள் கொஞ்சம் உப்பும் கொஞ்சம் சீனியும் கலந்து எடுத்து, ரெடியா வையுங்கோ.. இன்னொரு டிஸ் ல சக்கரையை தூளாக்கி வச்சிருக்கிறேன்...

இப்போ புட்டுப் பானையில் தண்ணி நன்கு கொதிச்சதும், குழலை எடுத்து முதலில் தேங்காய்ப்பூ.. பின்பு மா... பின்பு சக்கரை .. திரும்ப தேங்காய்ப்பூ.. பின்பு மா... இப்படி மாறி மாறிப் போட்டு, கொதிக்கும் பானையில் வைத்து மூடி விடவும்.

============================= இடைவேளை================================
கொஞ்ச நேரம் அவியட்டும், அதுவரை கொஞ்சம் பேபி அதிராவோடு பேசுவோம்:)
ஸ்ஸ்ஸ்ஸ் எதுக்கு ஜோகமா:) இருக்கிறீங்க :)) எல்லோரும் இம்முறை இப்புட்டு அவிச்சு, கொமெண்ட்ஸ் உம் போடுவினம்.. சிரியுங்கோ:))
======================================================================
 நன்கு அவிந்து ஆவி வரத் தொடங்கியதும் இறக்கவும்.
 

இனிப்புப் பிரியர்கள் எல்லோரும் ஓடி வாங்கோ.. ஆளுக்கு ஒரு புட்டு எடுங்கோ:)) 

ஊசி இணைப்பு:
இவதான் எங்கள் ஊருக்கு ஒவ்வொரு வருடமும் சமரில், தவறாமல் வந்து போவா.. இவவுக்கு நான் வச்சிருக்கும் பெயர்.. “கண்ணழகி”... 
கீதா!! இவவைத்தான் சொன்னேன்:)


தமிழ்மணம்.

117 கருத்துகள்:

 1. வணக்கம் இனிய காலை வணக்கம்... ஸ்ரீராம், துரை செல்வராஜு அண்ணா, கீதாக்கா
  கீதா

  பதிலளிநீக்கு
 2. ஸ்ரீராம் மற்றும் கீதா/ கீதா அனைவருக்கும் வணக்கம்...

  பதிலளிநீக்கு
 3. பட்டுக் குஞ்சுலுவை நினைச்சுட்டு இருந்தேனா! இங்கே வர மறந்துட்டேன்! :)

  பதிலளிநீக்கு
 4. மொபைலில் இருந்து....
  ஓ அதிராவின் வெயிட் குறைப்பு ரெசிப்பியா...சூப்பர்...அப்பால் வரேன்...

  கீதா

  பதிலளிநீக்கு
 5. அதிரா ஏதோ விடுப்பு என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால் சில பதிவுகளுக்கு ஆளையே காணோம். அஞ்சு நீண்ட நாட்களாகவே காணோம். ஏகாந்தன் ஸார் ஏதோ பயணத்தில் இருப்பதாய்ச் சொன்னார். பாஸிட்டிவ் பதிவுக்கு வந்தார். வெள்ளி விடியோவுக்கு அவரை எதிர்பார்த்தேன். காணோம்! ம்ம்ம்....

  பதிலளிநீக்கு
 6. கீதாக்கா உங்கள் பட்டு குஞ்சுலு எப்படி இருக்கிறா....
  கீதா

  பதிலளிநீக்கு
 7. // பட்டுக் குஞ்சுலுவை நினைச்சுட்டு இருந்தேனா! //

  அது யார் அது கீதா அக்கா?

  பதிலளிநீக்கு
 8. ஸ்ரீராம் ஏஞ்சல் வாலண்டீர் வேலை மற்றும் கார்ட் மேக்கிங் பிசி....இந்த வாரம் வருவார் என்று நினைக்கிறேன்..

  கீதா

  பதிலளிநீக்கு
 9. அதுக்குள்ளே பாருங்க,எல்லோரும் முன்னாடி வந்துட்டாங்க! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! ஏதோ சதி நடக்குது! என்னானு கண்டு பிடிக்கணும்! :)

  பதிலளிநீக்கு
 10. புட்டு சுவையோடு கண்ணழகியை இரசித்தேன்.

  பதிலளிநீக்கு
 11. அதிராவின் புட்டு செய்முறை நல்லா இருக்கு! கொள்ளு சேர்த்திருக்கிறதாலே நான் சாப்பிடலை! :)

  பதிலளிநீக்கு
 12. கவிதை, கதை - இப்படியெல்லாம் விட்டுப் போட்டு

  கம்பங்கொள்ளையும் வறுத்தியளோ!...

  அருமை..அருமை..

  பதிலளிநீக்கு
 13. ஹாஹாஹா, தில்லையகத்து கீதா! ஶ்ரீராமிடம் பட்டுக்குஞ்சுலு யார்னு சொல்லிடாதீங்க! :)))) நமக்குள் இருக்கட்டும்!

  பதிலளிநீக்கு
 14. ஏகாந்தன் அண்ணாவும் பயணம்....அவரே சொல்லிருஇருந்தார்.....
  அதிரா....ஆம் விடுப்புன்னு சொன்னார்....

  கீதா

  பதிலளிநீக்கு
 15. கண்ணழகியோடு பயணம் செய்ய ஆசையா இருக்கு. நடக்குமா?

  பதிலளிநீக்கு
 16. ஸ்ரீராம் பட்டு குஞ்சுலு....கீதாக்காவின் பேத்தி னு என் யூகம்.... ஹிஹிஹி..

  கீதா

  பதிலளிநீக்கு
 17. ஒரு வாரம் முன்.... கொள்ளு கஞ்சிப் பொடி...யாரும் சீண்டாம இருந்துச்சுன்னு...அடை, புட்டு னு செஞ்சு தீர்த்தேன்..குழல் புட்டு..அதிராவின் செய் முறை..பார்க்கணும்

  கீதா

  பதிலளிநீக்கு
 18. நேற்று இரவு சாமை, வரகு காஞ்சிபுரம் இட்லி . இன்று காலையும் அதே....

  கொள்ளு கொஞ்சம் வித்தியாசமான. சிலப்போ கசக்கும் னு நான் குழல் புட்டு செஞ்சப்ப கொஞ்சம் ப்ரவுன் சுகர் சேர்த்து செஞ்சேன்...

  கீதா

  பதிலளிநீக்கு
 19. என் இரு வார வெளியூர்ப் பயணத்திறகுப் பின் பதிவினைக் கண்டேன். கண்ணழகியை ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
 20. அதிரா ஒரு டிப்ஸ்....புட்டு மாவு தண்ணீர் தெளித்து கட்டி கட்டி யா இருந்தா இப்படி க் குத்தி குத்திக் காஷ்ட்டப ட வேண்டாம்..... மிக்சியில்போட்டு ஒரு சுற்று சுற்றினால் போதும்.....ஈவனாகிடு ம்....

  கீதா

  பதிலளிநீக்கு
 21. கம்பங்கொள்ளு புட்டை பார்த்துட்டுத்தான் பூஸார் இப்படி கதி கலங்கி இருக்குதா!...

  பதிலளிநீக்கு
 22. புது காமிநேசன்..

  அருமையா இருக்கு அதிரா...இது இப்போ தான் புதுசா பார்க்கிறன்...கம்பு இல்ல சோ கொள்ளும் வேற யார் கூடவாது சேர்த்து செஞ்சு பார்க்கிறேன்...

  பதிலளிநீக்கு
 23. செய்முறை நல்லா இருக்கு. ஆனால் எனக்கு புட்டு பிடிக்காது. இரண்டு தடவை இங்குள்ள கேரளக் கடைகளில் வாங்கினேன். எனக்கு அவ்வளவு பிடிக்கலை.

  சுளகு/முறம் - ரொம்ப வருஷம் கழித்துப் பார்க்கிறேன். உங்களிடம் இருக்கு என்பதே ஆச்சர்யமா இருக்கு.

  இந்தக் கண்ணழகியைப் பார்த்ததும் சென்ற வாரம் மீண்டும் பார்த்த டைட்டானிக் ஞாபகம் வந்துவிட்டது.

  தட்டில் புட்டு அழகாக வைத்திருக்கிறீர்கள். பக்கத்துல முதலில் கிரேப் ஃப்ரூட் ஜூஸ் (யூஸ்) ஆக்கும் என நினைத்தேன். அப்புறம்தான் அது மெழுகுவர்த்தி என்று கண்டுகொண்டேன்.

  இங்கல்லாம், புட்டு/கடலைக் கறி என்பதுதான் காம்பினேஷன். நீங்கள் வெறும்னவே சாப்பிட்டீங்களா?

  பதிலளிநீக்கு
 24. எங்கள் வீட்டில் என் மகனைத்தவிர எல்லோருக்கும் புட்டு கடலை மிகவும் பிடிக்கும். ஒரு முறை ராகிமாவில் புட்டு செய்தேன், கொஞ்சம் ஹெவியாக இருப்பதாக தோன்றியது. கொள்ளு எப்படி இருக்கும் என்று தெரியவில்லை. ட்ரை பண்ணணும்.

  பதிலளிநீக்கு
 25. அதிரா சுளகு அல்லது முறம் போன்றவைகளை சாணி போட்டு மெழுகி வைத்துக் கொள்வதுதானே பழக்கம்?
  ஓட்டை விழாமல் இருப்பதற்காக என்று நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 26. அதிரா புட்டு அருமையாக இருக்கு செய்முறை குறிப்பு அருமை.
  அதிரா செய்து கொடுத்தால் சாப்பிடலாம்.
  செய்யதான் சோம்பல்.
  முறத்திற்கு(சுளகு) பேப்பர் ஊறவைத்து அரைத்து இப்போது மெழுகியே விற்கிறார்கள். முன்பு போல் சாணம் மெழுகுவது இல்லை.
  முறம் பழுது பார்ப்பவர்கள் பேப்பர் கூழ் அரைத்து கொண்டு வந்து மெழுகி தருகிறார்கள்.
  ஒரு காலத்தில் பசுமாடு வைத்து இருப்பவர்கள் வீட்டுக்கு போய் வாங்கி வந்து மெழுகுவோம்.
  இப்போது அந்த வேலையும் எளிதாக போய் விட்டது.
  நானும் பேப்பர் ஊறவைத்து அதனுடன் வெந்தயமும் போட்டு அரைத்து மெழுகி இருக்கிறேன்.
  படங்கள் அழகு.

  பதிலளிநீக்கு
 27. ஹா ஹா ஹா நான் வந்திட்டேன்ன்ன்.. ஏதோ வேற்றுக் கிரகத்தில கால் வைப்பதுபோலவே ஒரு ஃபீலிங்கா இருக்கு:).. ரெண்டு நாள் புளொக் பாராமல் இருந்து பாருங்கோ பின்பு கால் வைக்கவே மனம் வராது:).. இதனாலதான் விடாமல் தொடர்ந்து வரோணும் என்பது.

  போஸ்ட் போடாமல் இருக்கப் பழகினால்.. அதுவும் ஒரு வித சுகந்திரமாக இருக்கு.. பின்பு போட்டிட்டால் அது ஒரு வித உற்சாகத்தைக் குடுக்குது. இதே நிலைமைதான் என் செக் க்கும்:) சத்து நில்லுங்கோ இன்று அவவை கிரெயின் வச்சாவது தூக்கி வந்திடுறேன்ன் பூஸோ கொக்கோ:))..

  நேற்று இங்கின வந்தனே எருமைம் சகோதரங்களைப் பார்த்தனே:).. அதுக்குப் பொறகு வந்து துரை அண்ணன்.. அதிராவைக் காணோம் எனத் தேடி தேம்ஸ் கரையிலெல்லாம் தேடியிருக்கிறார் ஹா ஹா ஹா:).. இருப்பினும் இந்த கீசாக்கா தேடவே இல்லை கர்ர்ர்ர்ர்:))..

  எல்லோரும் இப்போ கம்பிமேல ஏறுங்கோ பீஸ்ஸ்ஸ்ஸ்:)).. மீக்கு தனியே ஏறி நிக்கப் பயம்மாக் கிடக்கூஊஊஊஉ:))

  பதிலளிநீக்கு
 28. வாங்கோ துரை அண்ணன்.. புட்டு சாப்பிடுங்கோ..

  //அதிரா வந்தாச்சு!...//
  ஹா ஹா ஹா மீ எங்கேயும் போகல்ல.. இங்கு ஹொலிடே இப்போ, ஆனா ஒரெ ஸ்னோ.. எங்கட டெய்சிப்பிள்ளைக்கும் ஸ்னோ விளையாடி அலுத்து விட்டது, வெளியே போக விரும்பாமல் ஜன்னலால பேர்ட் வோச்சிங்:)).. ஹா ஹா ஹா.

  பதிலளிநீக்கு
 29. வாங்கோ கீதா.. வாங்கோ ஸ்ரீராம்... வாங்கோ கீசாக்கா..

  //Geetha Sambasivam said...
  ஹையோ மறந்தே போயிட்டேன்! :)//
  இது என்னமோ சிதம்பர ரகசியம்போல:) எனக்குத்தான் தெரியுமே கீசாக்காவுக்கு மறதி அதிகம் என:)) ஹா ஹா ஹா மீ கம்பி மேல நிற்கும் தெகிறியம்:) கீதாக்காவால ஏற முடியாதே :))

  பதிலளிநீக்கு
 30. ஸ்ரீராம் .. நானும் ஏகாந்தன் அண்ணனை நேற்று நினைச்சேன்.. காணல்லியே என.

  மதுரைப்புகழ் பாடும் தமிழரையும் காணல்ல கொஞ்சக் காலமா:).. என் செக்:) கொஞ்சம் பிஸி இன்று வந்திடுவா:) இல்லாட்டில் தேம்ஸ்ல தள்ளிடுவேன்ன்:))

  பதிலளிநீக்கு
 31. //Thulasidharan V Thillaiakathu said...
  கீதாக்கா உங்கள் பட்டு குஞ்சுலு எப்படி இருக்கிறா....
  கீதா///

  ஹா ஹா ஹா புட்டு நினைப்பில படிச்சனா:) புட்டுக் குஞ்சுலு என படிச்சிட்டேன்ன்ன்ன்:)).. அதாரது புது வரவு கீசாக்காவுக்கு:)..

  பதிலளிநீக்கு
 32. ///KILLERGEE Devakottai said...
  புட்டு சுவையோடு கண்ணழகியை இரசித்தேன்.//
  வாங்கோ கில்லர்ஜி.. இந்தக் கண்ணளகி ஒவ்வொரு கோடைக்கும் வந்து போவா.. எங்கள் வீட்டிலிருந்து எடுத்த படம்தான் அது யூம்ம் பண்ணி:)).. மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 33. Geetha Sambasivam said...
  அதிராவின் புட்டு செய்முறை நல்லா இருக்கு! கொள்ளு சேர்த்திருக்கிறதாலே நான் சாப்பிடலை! :)///

  கீசாக்கா காலை உணவா சேர்க்காதீங்க கொள்ளு.. நைட் க்கு சாப்பிடுங்கோ ஒண்ணும் பண்ணாது.. மிக்க நன்றி

  பதிலளிநீக்கு
 34. ///துரை செல்வராஜூ said...
  கவிதை, கதை - இப்படியெல்லாம் விட்டுப் போட்டு

  கம்பங்கொள்ளையும் வறுத்தியளோ!...

  அருமை..அருமை..//

  ஹா ஹா ஹா புது முயற்சி.. நன்றாகவே வந்துது.. கிட்டத்தட்ட குரக்கன் புட்டுப்போலவே இருந்துது. மிக்க நன்றி துரை அண்ணன்.. கதை கவிதை எழுதத் தொடங்கோணும்:).. இல்லை எனில் என் மகாகவி:) கதாஅசிரியர்:) பட்டங்களைப் பறிச்சுப் போடுவினம்:))

  பதிலளிநீக்கு
 35. ///Geetha Sambasivam said...
  கண்ணழகியோடு பயணம் செய்ய ஆசையா இருக்கு. நடக்குமா?//

  நடக்கும் கீசாக்கா நடக்கும்.. தூரப் பயணம் போகோணும் எண்டில்லை... அடுத்த ஸ்ரொப் வரை பயணிக்க கொஞ்சக் காசுதான் வரும்... ஆனா எதுக்கும் சுவிமிங், டான்சிங் எல்லாம் பழகிட்டு வாங்கோ:)) ஹா ஹா ஹா..

  பதிலளிநீக்கு
 36. Thulasidharan V Thillaiakathu said...
  நேற்று இரவு சாமை, வரகு காஞ்சிபுரம் இட்லி . இன்று காலையும் அதே....

  கொள்ளு கொஞ்சம் வித்தியாசமான. சிலப்போ கசக்கும் னு நான் குழல் புட்டு செஞ்சப்ப கொஞ்சம் ப்ரவுன் சுகர் சேர்த்து செஞ்சேன்...

  கீதா///

  ஹா ஹா ஹா கீதா மீயும் கம்பு , ரவ்வை இட்லிக்கு போட்டிருக்கிறேன்.. பொயிங்கிட்டுதே:))..

  இன்னொன்று சொல்ல மறந்திட்டேன்.. இம்முறை டமில்க் கடையில் கீசாக்கா சொன்ன “குதிரைவாலி” பார்த்தனே:) அவ்வ்வ்வ் வரகரிசிபோலவேதான்.. வங்கி வந்திட்டேன்.. இனி என்ன செய்வது என சேர்ஜ் பண்ணோனும்:)..

  சக்கரைக்குப் பதில் பிரவுண் சுகரோ? இல்ல மாவுக்குள் போட்டீங்களோ கீதா?.. மாவுக்குள் போட்டால் கொஞ்சம் குழைந்துவிடும் புட்டு உதிர் பதமா வராது, ...

  பதிலளிநீக்கு
 37. //Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...
  என் இரு வார வெளியூர்ப் பயணத்திறகுப் பின் பதிவினைக் கண்டேன். கண்ணழகியை ரசித்தேன்.//

  வாங்கோ வாங்கோ மிக்க நன்றி.. அவ அழகியேதான் ஹா ஹா ஹா..

  பதிலளிநீக்கு
 38. //Thulasidharan V Thillaiakathu said...
  அதிரா ஒரு டிப்ஸ்....புட்டு மாவு தண்ணீர் தெளித்து கட்டி கட்டி யா இருந்தா இப்படி க் குத்தி குத்திக் காஷ்ட்டப ட வேண்டாம்..... மிக்சியில்போட்டு ஒரு சுற்று சுற்றினால் போதும்.....ஈவனாகிடு ம்....

  கீதா//

  அதைத்தான் என் போச்ட்டிலேயே எழுதியிருக்கிறேன் கீதா, ஆனா நிறையக் குழைக்கும்போதுதான் அப்படி செய்வேன், நமக்கு கொஞ்சமா செய்யும்போது, பிளெண்டர் எடுத்து, அடித்து பின் கழுவித் துடைச்சு வைப்பதை விட இது 2 நிமிட வேலை எனக்கு:) ஹா ஹா ஹா மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 39. //இருப்பினும் இந்த கீசாக்கா தேடவே இல்லை கர்ர்ர்ர்ர்:))..//அக்கிரமம், அராஜகம், அநியாயம், நான் ரெண்டு பேரையுமே காணோமே, போரடிக்குதேனு தேடிட்டுக் கவலைப்பட்டுத் தண்ணியா உருகிட்டிருக்கேன்! தேடவே இல்லையா? நேத்திக்குப் பதிவிலே போய்ப் பாருங்க! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

  பதிலளிநீக்கு
 40. //துரை செல்வராஜூ said...
  கம்பங்கொள்ளு புட்டை பார்த்துட்டுத்தான் பூஸார் இப்படி கதி கலங்கி இருக்குதா!...//

  ஹா ஹா ஹா அவருக்கு தொண்டையில சிக்கிப் போட்டுதோ புட்டு:)..

  பதிலளிநீக்கு
 41. Anuradha Premkumar said...
  புது காமிநேசன்..

  அருமையா இருக்கு அதிரா...இது இப்போ தான் புதுசா பார்க்கிறன்...கம்பு இல்ல சோ கொள்ளும் வேற யார் கூடவாது சேர்த்து செஞ்சு பார்க்கிறேன்...///

  வாங்கோ அனு... குரக்கனோடு சேர்த்துப் பாருங்கோ.. மிக்க நன்றி...

  பதிலளிநீக்கு
 42. //வந்து உட்கார்ந்துட்டுப் பார்த்துட்டு இருக்கேன். இன்னிக்கு என்ன நடக்கப்போகுதுனு! அது சரி, அதிரா மியாவின் வழக்கமான கலக்கல் கருத்துக்களும் அதுக்கு எதிர்வினை ஆற்றும் அஞ்சுவும் இல்லாமல் போரடிக்குதுங்கோ! சீக்கிரமா வாங்க ரெண்டு பேரும் பழைய உற்சாகத்தோடு!// இது என்னாவாம்? துரை தேடும் முன்னே நான் கேட்டிருக்கேனாக்கும்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

  பதிலளிநீக்கு
 43. நெல்லைத் தமிழன் said...//

  வாங்கோ நெலைத் தமிழன்.. ஓ உங்களுக்குப் புட்டுப் பிடிக்காதோ.. அப்போ இடியப்பம் பிடிக்குமோ ஆதுவும் பிடிக்காதோ? தமிழ்நாட்டில் பலருக்கு புட்டு இடியப்பம் விருப்பம் என அறிஞ்சேன் ஏனெனில் தோசை இட்லியையே அதிகம் சாப்பிடுவதால்..

  //சுளகு/முறம் - ரொம்ப வருஷம் கழித்துப் பார்க்கிறேன். உங்களிடம் இருக்கு என்பதே ஆச்சர்யமா இருக்கு.//

  ஹா ஹா ஹா எங்கட இலங்கை ஆட்கள் பெரும்பாலும் இப்படி புராதனப் பொருட்களை தேடித் தேடி வாங்கி உபயோகிக்கினம்.. பனை ஓலையில் புட்டவிக்க நீத்துப்பெட்டி என ஒன்றிருக்கும்... அதுகூட சிலர் ஊரிலிருந்து வாங்கி வந்திருக்கினமாம்.. சுளகு ஸ்பெஷலா புட்டுக் கொத்தவே பயன்படுது. இது அக்கா க்களுக்கு ஒரு சென்னை நண்பர் குடும்பம் நிறைய வாங்கி அனுப்பியிருந்தார்கள்.. அப்போ நானும் ஒன்றை எடுத்து வந்தேன்.

  ஆனா இலங்கை சுளகு நல்ல வெள்ளையா, இதைவிடப் பெரிசாவே இருக்கும்...

  பதிலளிநீக்கு
 44. ஹலோவ்வ்வ் இனிய திங்கள் கிழமை அனைவருக்கும் :)கொள்ளு புட்டை எனக்கு மிச்சம் வைக்காம சாப்பிட்டு என்னை காப்பாத்திய எல்லாருக்கும் டான்க்சொ thanks :)

  பதிலளிநீக்கு
 45. நெல்லைத் தமிழன் said...//
  இந்தக் கண்ணழகியைப் பார்த்ததும் சென்ற வாரம் மீண்டும் பார்த்த டைட்டானிக் ஞாபகம் வந்துவிட்டது.//

  ஹா ஹா ஹா ரைட்டானிக் கப்பல் இதைவிடப் பெரிசு என நினைக்கிறேன்.. இவ சின்னவ 6,7 மாடிகள்தானே இதில் இருக்கு, சில சமயம் 15 மாடிக் கப்பல்கள்கூட வரும்... அது பார்த்தால் கடலில் ஒரு பெரீயா பிளாட்ஸ் பிட்லிங் அசைவதுபோல இருக்கும்.. அதுவும் நைட் இல் தான் திரும்புவினம்.. திரும்பிப் போகும்போது லைட்ஸ் போட்டுப் போகும்.. என்ன சூப்பரா இருக்கும்.

  இதில் உங்களுக்கு தெரியுமோ.. கப்பலுக்கும் கோன் இருக்கு. ரெயின் கோன் மாதிரி பெரிய சத்தமா அடிப்பினம்... இங்குள்ள வீடுகள் சவுண்ட் புரூஃப் தானே.. அப்படி இருந்தும் சிலசமயம் சத்தம் கேட்கும்.. அவ்ளோ சவுண்ட்:).

  //அப்புறம்தான் அது மெழுகுவர்த்தி என்று கண்டுகொண்டேன்.//

  ஹா ஹா ஹா கர்:)).

  //இங்கல்லாம், புட்டு/கடலைக் கறி என்பதுதான் காம்பினேஷன். நீங்கள் வெறும்னவே சாப்பிட்டீங்களா?//

  பொதுவா நம் நாட்டில் குழல்புட்டு எனில் பொரிச்சு இடிச்ச உதிர் சம்பல்தான் மிக பொருத்தம், இதுக்கும் அதுவேதான் பொருந்தும்... அல்லது ஏதும் பிரட்டல் கறி... கத்தரிக்காய் பொரிச்ச பிரட்டல் அப்படி.

  இன்னொரு முறையிலும் அவிப்போம் தானே.. அது பார்த்திருப்பீங்களோ தெரியாது, புட்டு மாவுக்குள்ளேயே தெங்காய்ப்பூவைக் கொட்டிக் கலந்து ஒன்றாக ஸ் ரீமரில் போட்டு அவிப்பது... அதுக்கு கொஞ்சம் தண்ணிக் கறிகள் நன்றாக இருக்கும்.. சாம்பாறுகூட பொருந்தும்.

  தனிக் கடலைக்கறி நாங்கள் யாரும் செய்வதில்லை.. இப்போ இப்போதான் எபோதாவது செய்வதுண்டு.. ஆனா யாருக்கும் பெரிசா பிடிக்குதில்லை... மிக்க நன்றி நெல்லைத்தமிழன்.

  பதிலளிநீக்கு
 46. ///Geetha Sambasivam said...
  //இருப்பினும் இந்த கீசாக்கா தேடவே இல்லை கர்ர்ர்ர்ர்:))..//அக்கிரமம், அராஜகம், அநியாயம், நான் ரெண்டு பேரையுமே காணோமே, போரடிக்குதேனு தேடிட்டுக் கவலைப்பட்டுத் தண்ணியா உருகிட்டிருக்கேன்! தேடவே இல்லையா? நேத்திக்குப் பதிவிலே போய்ப் பாருங்க! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்////

  ஓஓஓஓஓஒ கீசாக்கா கம்பிமேல ஏறிட்டாஆஆஆஆஆஆ:))... அவ்வ்வ்வ்வ்வ்வ் அப்பூடியா கீதாக்கா உருகிடாதீங்க.. மன்னிச்சுக்கோங்க பார்க்கத் தவறிட்டேன்:) அதுதானே கீசாக்காவாவது தேடாமல் இருப்பதாவது:))

  பதிலளிநீக்கு
 47. குரக்கன் - கேப்பை மாவுன்னு நினைக்கறேன். (கேழ்வரகு, ராகி)

  பதிலளிநீக்கு
 48. ///Geetha Sambasivam said...
  //வந்து உட்கார்ந்துட்டுப் பார்த்துட்டு இருக்கேன். இன்னிக்கு என்ன நடக்கப்போகுதுனு! ///

  ஹா ஹா ஹா எஞ்சின் மெதுவாத்தானே கீசாக்கா ஸ்ராட் ஆகி பின்புதான் ஸ்பீட் எடுக்கும்:) இடையில ஓய்வு எடுத்தமா:) ஓஃப் மூட் க்குப் போயிட்டோம்:)) என் செக் ஐ ஒரு தடவை ஆவது தேம்ஸ்ல தள்ளினால்தான் எனக்கு பழையபடி உசார் வரும்போல:)).. ஹா ஹா ஹா ஹையோ எங்கள்புளொக் ஆடுதேஏஎ:))..

  செக்:) லாண்டட் போல:)) ஹையோ 89 கிலோ எனில் ச்ச்ச்சும்மாவோஓஓஓஓஒ ஹா ஹா ஹா கீசக்கா பீச்ச்ச்ச்ச்ச் படிச்சதும் கிழிச்சு:) காவெரிக் கரையில புதைச்சிடுங்கோ:)) இப்போ மீக்கு தெம்பில்லை சண்டைப்பிடிக்க:)..

  பதிலளிநீக்கு
 49. //Anuradha Premkumar said...
  குரக்கன்..?//

  //நெல்லைத் தமிழன் said...
  குரக்கன் - கேப்பை மாவுன்னு நினைக்கறேன். (கேழ்வரகு, ராகி)///

  இதேதான்...:)

  பதிலளிநீக்கு
 50. //Bhanumathy Venkateswaran said...
  எங்கள் வீட்டில் என் மகனைத்தவிர எல்லோருக்கும் புட்டு கடலை மிகவும் பிடிக்கும். ஒரு முறை ராகிமாவில் புட்டு செய்தேன், கொஞ்சம் ஹெவியாக இருப்பதாக தோன்றியது. கொள்ளு எப்படி இருக்கும் என்று தெரியவில்லை. ட்ரை பண்ணணும்.//

  பானுமதி அக்கா குரக்கன்/ராகி புட்டு ஹெவிதான்.. இதுவும் அப்படியே... ஆனா குரக்கன் புட்டில் தெக்கினிக்கி இருக்கு அவிப்பதில்:).. அதாவது குரக்கன் புட்டை சும்மா அவிச்சுப் போட்டு இறக்கி சுடச்சுட நல்ல புதுத் தேங்காய்ப்பூவிம் சீனி அல்லது சக்கரை சேர்த்துச் சாப்பிடத்தான் அது சுவை... மற்ற்ம்படி கொஞ்சம் ஆறினாலும் கல்லுப்போலாகிடும்.

  அரைத்த மாவை நான் அரிக்காமல் செய்தேன், அரித்துச் செய்தால் இன்னும் சொஃப்ட்டாக வரும் என நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 51. //Bhanumathy Venkateswaran said...
  அதிரா சுளகு அல்லது முறம் போன்றவைகளை சாணி போட்டு மெழுகி வைத்துக் கொள்வதுதானே பழக்கம்?
  ஓட்டை விழாமல் இருப்பதற்காக என்று நினைக்கிறேன்.//

  ஓ.. இல்ல பானுமதி அக்கா, இலங்கையில் அப்படி நான் கண்டதில்லை.. அப்படியே பளபளவென மினுங்கும் பனை ஓலை:)).. அதில் உணவுப்பொருள் கொட்டி எடுக்க கஸ்டமில்லை, இது மண்போல இருக்குது பார்க்க அதனால ஆரம்பம் அந்தரமா இருந்துது, பின்பு நன்கு துடைத்து, வேறு பொருட்கள் போட்டு பிரட்டி எடுத்த பின்பே புட்டுக் கொத்த தொடங்கினேன்... தட்டிக் கொட்டிப் பார்த்தேன் மெழுகியது போகுதில்லை கர்:) ஹா ஹா ஹா மிக்க நன்றி பானுமதி அக்கா.

  பதிலளிநீக்கு
 52. என் செக்:) ட கொமெண்ட் பார்த்தேன் இப்போ காணவில்லை:) ஸ்ரீராம் கம்பிமேல இருந்தால் ஒருதடவை ஜங் மெயில் செக் பண்ணுங்கோ:))

  பதிலளிநீக்கு
 53. கோமதி அரசு said...
  அதிரா புட்டு அருமையாக இருக்கு செய்முறை குறிப்பு அருமை.
  அதிரா செய்து கொடுத்தால் சாப்பிடலாம்.
  செய்யதான் சோம்பல்.///

  வாங்கோ கோமதி அக்கா...

  ஹா ஹா ஹா இதோஓஓஓஒ செய்து தாறேன்.. இலங்கைத்தமிழர்களுக்கு புட்டு அவிப்பதென்பது டக்கு டிக்கு டோஸ் போல:).. 20 நிமிடம் போதும்.. எப்பவும் மா அவிச்சு, வறுத்து ரின் ல போட்டு வச்சிருப்போம்.. டக்கென தண்ணி கொதிக்க விட்டிட்டு , தேங்காய்ப்பூவும் இப்போ எல்லாம் ரெடிமேட்டாவே இருக்கு, அல்லது திருவி ஃபிரீசரில் போட்டு விடுவேன்... சோ புட்டு அவிப்பதென்பது ச்சோ ஈசி:)..

  ///முறத்திற்கு(சுளகு) பேப்பர் ஊறவைத்து அரைத்து இப்போது மெழுகியே விற்கிறார்கள். முன்பு போல் சாணம் மெழுகுவது இல்லை.///

  ஓஓ இது சரிதான், என் சுளகு சாணம்போல தெரியவில்லை ஆனா ஏதோ பூசியிருக்கு என்பது மட்டும் தெரிஞ்சுது.. ஓ அப்போ மெழுகுதானாக்கும்.

  ஓ சுளகு ரிபெயாரும் இருக்கோ? ஹா ஹா ஹா இது நான் கேள்விப்படாத ஒன்று... சுளகு இலகுவில் பழுதடையாதெல்லோ.. ஆகவும் காலம் போனால் அதன் விளிம்புதான் பிஞ்சிருக்கு.. பின்பு எறிஞ்சு போட்டு புதுசுதான் வாங்க முடியும்.

  மிக்க நன்றி கோமதி அக்கா.

  பதிலளிநீக்கு
 54. மொபைல் கமெண்ட் காணஆம் கர்ர்ர்ர்

  பதிலளிநீக்கு
 55. வணகக்கம் சகோதரரே

  அதிரா அவர்களின் குழல் புட்டு செய்முறை படங்களோடு வெகு அற்புதமாய் இருந்தது.அதுவும் புதுமாதிரியாய்,கம்புடன் கொள்ளையும் சேர்த்து அறிமுகபடுத்தியது பாராட்டுக்குரியது .இந்த மாதிரியெல்லாம் செய்ததில்லை. செய்து பார்க்க வேண்டுமென்ற ஆவலை தூண்டியது இப்பதிவ.
  இயற்கையோடு இணைந்த படகு சவாரியும் அருமை..கண்ணழகி என்ற பெயர் பொருத்தந்தான். பகிர்வுக்கு நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 56. //Angel said...
  Curious i am curious geetha akka who is that cutie Patti kunjulu.///

  ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) இவ்ளோ நாள் கழிச்சு வந்தும் விடுப்ஸ் போகுதோ பாருங்கோ அதிரா நலமா எனக் கேய்க்காமல் பட்டுக் குஞ்சம் பற்றி விசாரிக்கிறா கர்ர்ர்ர்ர்ர்:))ஹா ஹா ஹா...

  பதிலளிநீக்கு
 57. ஸ்ஸ்ஸ்ஸ் :) ஹப்பா இப்த்தான் லாப்டாப் வழியே வரேன் :) போன்ல போட்ட கமெண்ட்ஸ் எங்கேதான் போகுதோ :)
  பப்லிஷ் ஆகுது அப்புறம் காணாம போகுதே !!

  சரி முதலில் இங்கே வருகைதந்து கம்பம்கொள்ளு புட்டை உண்டு என் உயிரை காப்பாற்றிய துரை அண்ணா கீதா அக்கா ,துளசி அண்ணா அன்ட் கீதா ,கில்லர்ஜி ஸ்ரீராம் பானுக்கா நெல்லைத்தமிழன் அனுபிரேம் எலலாருக்கும் நன்றியோ நன்ரிஸ் :)

  பதிலளிநீக்கு
 58. அஆவ் !! கோமதி அக்காவும் கமலா ஹரிஹரனும் கூட சாப்பிட்டாச்சா :) சரி எல்லாருக்கும் ஒரு antidote அனுப்பறேன் :)

  பதிலளிநீக்கு
 59. ஹாஹாஹா :) மியாவ் வாலை புடிச்சி இழுக்காம எனக்கும் கூட ரொம்ப போரடிச்சுது :) துரை அண்ணா ஸ்ரீராம் கீதாக்கா கீதா :)
  இதோ தெம்போட அரைவ் ஆகிட்டேன் :)

  பதிலளிநீக்கு
 60. எனக்கு தூக்கத்தில் பசி மாதிரி இருந்தது :) மியாவ் ரெசிப்பித்தான் காரணமோ :)
  மியாவ் இந்த புட்டை கொள்ளு சேர்த்து கம்பு சேர்த்து செஞ்சதே இல்லை வித்யாசமா இருக்கே !!
  கொள்ளு தோசைக்கு சேர்த்திருக்கேன் புட்டு எப்படி !! ஸ்வீட்ட்டா வந்ததா !!
  எங்க வீட்ல அரிசிப்பிட்டு நல்லா சாப்பிடுவாங்க இதையும் ட்ரை செய்யறேன் .

  நீங்க ஓட்ஸ் பிட்டு செஞ்சிருக்கீங்களா !! அதையும் வறுத்து மிக்சில பவுடராக்கி அரிசி மாவு கூட கலந்து பிட்டு செஞ்சி பாருங்க

  பதிலளிநீக்கு
 61. அதிராவ் !! இந்த முறம் சுளகு செய்யற ஏரியா பக்கம் எங்க வீடு இருந்தது தட் வாஸ் லோங் லோங் எகோ :)
  தர்மபுரில ஒரு தெரு முழுக்க பேப்பரை களி கூழாக்கி முறத்தில் பூசுவதை பார்த்திருக்கேன் அது ஓர் வித்யாசமான வாசனை வரும்
  கோமதி அக்கா சொன்ன மாதிரி இந்த சாணம் பேப்பர் மெழுகிடறது அந்த ஹோல்ஸை இடைவெளிகளை மூடவாம் அப்போதான் அரிசி ஓட்டை வழியா விழாது

  பதிலளிநீக்கு
 62. மியாவ் அந்த கண்ணழகி படம் எத்தனை தரம் பார்த்தாலும் அலுக்காது :) அந்த கண்ணுக்கு மை தீட்டினவர் ரொம்பவே ரசித்து curls பெண்ணின் கூந்தல் போல நெளிநெளியா தீட்டியிருக்கார் :)

  பதிலளிநீக்கு
 63. நிறைய மா எனில் மிக்ஸியின் நடுக் கப் இருக்குதுதானே, அதில் கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு ஒரு ஒரு தடவை சுத்த விட்டும் எடுக்கலாம்..//

  ஸாரி அதிரா இதைக் காலையில் கவனிக்கலை...மொபைலில் வாசித்ததால்...அப்படியே ஓடிடுச்சு...அப்புறம் இப்பத்தானே நெட் வந்துச்சு...பதிவு போட்டதில பிஸி..படம் எல்லாம் அப்லோள்ட் செய்ய கஷ்டமா போச்சு...

  இப்பத்தான் ஃபுல்லும் வாசிக்கிறேன் ...நல்லாருக்கு அதிரா.

  சர்க்கரையை மாவில் கலக்கலை...தேங்காப்பூவுடன்..நான் வெள்ளைச் சர்க்கரை பயன்படுத்துவதில்லை. வேறு வழியில்லை என்றால் பயன்படுத்துகிறேன்...

  கீதா

  பதிலளிநீக்கு
 64. அதிரா கண்ணழகி சூப்பர்!!!

  நானும் வீட்டில் புட்டு மாவு ரெடியாகவெ வைத்திருப்பேன்...பொடித்து வறுத்து என்று...அடிக்கடிச் செய்வதால்...ஆமாம் அதிரா கேழ்வரகுப் புட்டு ஆறினால் கெட்டியாகிவிடும்...

  கேரளத்தவரும் புட்டு மாவு எல்லாம் ரெடியயக வைத்திருப்பார்கள்.

  கீதா

  பதிலளிநீக்கு
 65. ஹை ஏஞ்சல் வந்தாச்சா!!!! நைஸ் டு ஸீயு ஏஞ்சல்....அண்ட் அதிரா..அதிராவும் இடையில் ஓடி தேம்ஸ்ல ஒளிஞ்சுக்கிட்டாங்க...

  கீதா

  பதிலளிநீக்கு
 66. ஹை 5 டு கீதா :)

  எங்க ஊர் வெதர் குளிர்தான் எங்களை OFF ஆக்குது :) வரேன் எல்லார் பக்கமும்

  பதிலளிநீக்கு
 67. ஏஞ்சல் ஓட்ஸ் புட்டு வான் கொஞ்சம் கெட்டி யான் ஓட்ஸ் கிடைச்சுது ஒரு முறை...உறவினர் கொண்டு வந்தாங்க. ஆஃப்ரிக்காவுலருந்து. அதுல நீங்க சொன்னா மாதிரி ரெட் ரைஸ்ல கலந்து செஞ்சேன் ஸாஃப்டா வந்துச்சு..

  எல்லா சிறு தானியமும் கலந்தும் செஞ்சு பாருங்க வித்தியாசமா இருக்கும்...அதுல நவ தானியமும் சிலது கலந்து...நல்லா வருது...

  கீதா

  பதிலளிநீக்கு
 68. "கறுப்பொரு நிறமோ காந்தல் ஒரு சுவையோ" அப்படீன்னுதான் சொல்லுவாங்க. நிறத்துல அழகு 'கறுப்பு பெண்-மா நிறம் எல்லாம் இதுல சேரும்', சுவைல, 'காரம்'தான் முதலான சுவைன்னு சொல்லுவாங்க.

  நீங்க என்னடான்னா 'தமன்னா' படங்களாப் பார்த்து, 'பேபி அதிரா'ன்னு பெருமையாப் போட்டுக்கறீங்க.

  பதிலளிநீக்கு
 69. பேபி அதிரா க்யூட்!! தூக்கிக் கொஞ்சனும் போல இருக்காங்க...

  மேல பூசார் ஏன் இப்படி முழிக்கிறார்!!! புட்டு உள்ள போகலியோ...தொண்டைய சீட் மேல வைச்சு அழுத்திட்டுருக்காரே...ஹா ஹா ஹா

  கீதா

  பதிலளிநீக்கு
 70. ஹையோ நெல்லை...//நீங்க என்னடான்னா 'தமன்னா' படங்களாப் பார்த்து, 'பேபி அதிரா'ன்னு பெருமையாப் போட்டுக்கறீங்க// அது தமன்னாவா?!!!!!!!!!!!!!!!!! ஆ!...அதிரா ஓடி வாங்கோ பதில் சொல்லுங்கோ இதுக்கு...

  கீதா

  பதிலளிநீக்கு
 71. ஆவ்வ்வ்வ்வ்வ் மீ வந்துட்டேன்ன்ன்ன்ன்ன்:) ஆங்ங்ங் எங்கின விட்டேன் ஜாமீஈஈஈஈஈஈ:))..

  ஆஆஆஆ அஞ்சு பாருங்கோ நாங்க வந்தமே என ஸ்ரீராம் ஒரு ஹலோ கூட ஜொள்ளல்லே:)) ஆனா வராட்டில் தேடுறார்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா.. விடுங்கோ மீ காசிக்குப் போகப்போறேன்ன்ன்ன்ன்ன்:)).. எனக்கு ஆராவது பிசுனெஸ்ஸு கிளாஸ் ல ரிக்கெட் வாங்கித்தாங்கோ:)) ஹா ஹா ஹா:).. அப்பூடியே என் செக் க்கும் ஒரு 3ர்ட் கிளாஸ் ரிக்கெட் பிளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:)).... நான் தனியப் போக மாய்ட்டேன்ன்ன்ன்:))..

  பதிலளிநீக்கு
 72. //Kamala Hariharan said...
  வணகக்கம் சகோதரரே

  அதிரா அவர்களின் குழல் புட்டு செய்முறை படங்களோடு வெகு அற்புதமாய் இருந்தது.அதுவும் புதுமாதிரியாய்,கம்புடன் கொள்ளையும் சேர்த்து அறிமுகபடுத்தியது பாராட்டுக்குரியது .இந்த மாதிரியெல்லாம் செய்ததில்லை. செய்து பார்க்க வேண்டுமென்ற ஆவலை தூண்டியது இப்பதிவ.
  இயற்கையோடு இணைந்த படகு சவாரியும் அருமை..கண்ணழகி என்ற பெயர் பொருத்தந்தான். பகிர்வுக்கு நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.//

  வாங்கோ வாங்கோ.. மிக அருமையா புட்டை ரசிச்சு ரசிச்சு எழுதிய விதம் என்னை இன்னும் ரெசிப்பி அனுப்பச் சொல்லி மனம் தூண்டுது... கொள்ளு கடினமாக இருக்குமோ என்றுதான் கம்பு சேர்த்தேன்.. நன்றாகவே இருந்துது.

  கண்ணழகி ஹா ஹா ஹா அது அவவுக்கு நான் வச்சிருக்கும் பெயர்... இனி இந்த யூன் யூலையில் வருவா:).. மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 73. ///Angel said...
  ஸ்ஸ்ஸ்ஸ் :) ஹப்பா இப்த்தான் லாப்டாப் வழியே வரேன் :) போன்ல போட்ட கமெண்ட்ஸ் எங்கேதான் போகுதோ :)
  பப்லிஷ் ஆகுது அப்புறம் காணாம போகுதே !!

  சரி முதலில் இங்கே வருகைதந்து கம்பம்கொள்ளு புட்டை உண்டு என் உயிரை காப்பாற்றிய துரை அண்ணா கீதா அக்கா ,துளசி அண்ணா அன்ட் கீதா ,கில்லர்ஜி ஸ்ரீராம் பானுக்கா நெல்லைத்தமிழன் அனுபிரேம் எலலாருக்கும் நன்றியோ நன்ரிஸ் :)///

  ஆவ்வ்வ்வ் வாங்கோ அஞ்சு வாங்கோ... ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஹைபினேட் ஆகி இருந்து எழும்பி வந்த ஆள் மாதிரித் தெரியல்லியே:) பழசை மறக்காமல் அப்பூடியே அடி அடி என அடிக்கிறா வந்த வேகத்தில கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. இம்முறை துரை அண்ணன் தேன் லாப்எலி:) ஹையோ இதை ஜி எம் பி ஐயா பார்த்திடக்குடா ஜாமீஈஈஈஈ:))..

  நீங்க ஜஸ்ட்டு மிஸ்ட்டு அஞ்சு:) பறவாயில்லை ஒரு புட்டு மிஞ்சி இருக்கு கச் இட்:) ஹா ஹா ஹா

  பதிலளிநீக்கு
 74. //Angel said...
  ஹாஹாஹா :) மியாவ் வாலை புடிச்சி இழுக்காம எனக்கும் கூட ரொம்ப போரடிச்சுது :) துரை அண்ணா ஸ்ரீராம் கீதாக்கா கீதா :)
  இதோ தெம்போட அரைவ் ஆகிட்டேன் :)//

  என்னாது தெம்போடயோ?:) ஹையோ மீ இப்போ தென்பில்லாமல் இருக்கிறேன்:) காசிக்குப் போகும் மூட் ல இருக்கிறேனாக்கும்:)..

  பதிலளிநீக்கு
 75. Angel said...
  எனக்கு தூக்கத்தில் பசி மாதிரி இருந்தது :) மியாவ் ரெசிப்பித்தான் காரணமோ :)
  மியாவ் இந்த புட்டை கொள்ளு சேர்த்து கம்பு சேர்த்து செஞ்சதே இல்லை வித்யாசமா இருக்கே !!
  கொள்ளு தோசைக்கு சேர்த்திருக்கேன் புட்டு எப்படி !! ஸ்வீட்ட்டா வந்ததா !!
  எங்க வீட்ல அரிசிப்பிட்டு நல்லா சாப்பிடுவாங்க இதையும் ட்ரை செய்யறேன் .///

  ஆவ்வ்வ்வ் இது சூப்பர் அஞ்சு, ஆனா நான் இதில் மாவை அரிக்கவில்லை, எனக்கென்னமோ அரிச்செடுத்து செய்வது இன்னும் நல்லது எனத் தோணுது... கம்பு ஒருவித இனிமையானது அதனால கொள்ளுடன் கம்பு சேரும்போது புட்டு இனிமையாகுது.. தோசையும் அப்படியே..

  //நீங்க ஓட்ஸ் பிட்டு செஞ்சிருக்கீங்களா !! அதையும் வறுத்து மிக்சில பவுடராக்கி அரிசி மாவு கூட கலந்து பிட்டு செஞ்சி பாருங்க//

  இல்ல அஞ்சு.. ஓட்ச் இட்லி, தோசை செய்தேன் அது கழி விழுகுதே.. எனக்கு கரகரப்பாக இருப்பதுதான் பிடிக்குது.

  அதில் புட்டு ட்ரை பண்ணுறேன்.. இதுவரை செய்ததிலை.

  பதிலளிநீக்கு
 76. Angel said...///

  ஓ சுளகுக் கதை இன்றுதான் விபரமா விளக்கமா அறிகிறேன் கோமதி அக்காவும் சொல்லியிருக்கிறா... நம்நாட்டில் அப்படி எதுவும் பண்ணி நான் பார்க்கவில்லை..

  பதிலளிநீக்கு
 77. //Angel said...
  மியாவ் அந்த கண்ணழகி படம் எத்தனை தரம் பார்த்தாலும் அலுக்காது :) அந்த கண்ணுக்கு மை தீட்டினவர் ரொம்பவே ரசித்து curls பெண்ணின் கூந்தல் போல நெளிநெளியா தீட்டியிருக்கார் :)//

  ஹா ஹா ஹா நீங்க 2011 இல் இருந்தே பார்க்கிறிங்க என நினைக்கிறேன் எனக்கும் அவவை அடிக்கடி போட்டுக் காட்டுவதில் ஒரு ஆசை.. இம்முறையும் வரட்டும் படம் எடுத்திடுறேன்.. ஒரு தடவை ஆத்தங்கரையோரம் போய் நிண்டு எடுக்கோணும்.. இன்னும் சூப்பரா இருக்கும்...

  அது பாம்புபோல கீறியிருக்கஞ்சு.. முடிவில் பாம்பின் தலைபோல கண் வருது:)..

  பதிலளிநீக்கு
 78. ///சர்க்கரையை மாவில் கலக்கலை...தேங்காப்பூவுடன்..நான் வெள்ளைச் சர்க்கரை பயன்படுத்துவதில்லை. வேறு வழியில்லை என்றால் பயன்படுத்துகிறேன்...

  கீதா//

  ஓ கீதாவீட்டிலும் நியூ போஸ்ட்டா ஹையோ மீட கண்ணுக்கு இன்னும் தெரியல்லியே:) அப்போ நான் அங்கு மீ ட 1ஸ்ட்டூஊஊஊஉ இல்லயா....:(

  கீதா நான் சக்கரை எனச் சொல்வது உங்கள் பாசையில் வெல்லம்... சுகர் அல்ல.. பூவோடு கலந்தால் சூப்பர்... பூவுக்குள் கொஞ்சம் சுகர் கொஞ்சம் உப்பும் சேர்த்து இப்படி அவிக்க நல்ல சுவையா இருக்கும்.

  பதிலளிநீக்கு
 79. ஹை அதிரா நீங்களும் சர்க்கரை என்பதை வெல்லம் என்றுதான் ஜொள்ளுவீங்களா ஹைஃபைவ்!!!! நாங்களும் சர்க்கரை என்றால் வெல்லம் தான்..ஹையோ அதை ஏன் கேக்கறீங்க,,..இங்கன இந்த சென்னை வீட்டுக்கு வந்தப்புறம்தான் ஒரே கன்ஃப்யூஷன் எனக்கு முதல்ல....ஹையோ நான் சீனி என்றும் சர்க்கரை என்றும் சொல்லுவேன்..இவங்க கன்ஃப்யூச் ஆவாங்க....இனி இங்க நான் சர்க்கரைனு சொன்னா ப்ராக்கட்டுக்குள்ள அது சுகரா...வெல்லமானு போட்டுடணும் போல..ஹா ஹா..

  அது சரி அதிரா எதுக்கு ஃப்ளைட் டிக்கெட்....நீங்க ஸ்விம்மிங்க்ல ஃபர்ஸ்டு இல்லியோ.....நீந்தியே வந்துருவீங்களே....ஆ!! மீ எஸ்கேப்...

  கீதா.  நான் எது கலந்தாலும் பூவோடுதான் கலப்பேன்...ஆம் உப்பும் சேர்த்துத்தான் சுவை கூடும்ஆம் அதிரா...ஹைஃபைவ்!!!!

  பதிலளிநீக்கு
 80. அதிரா எங்க வீட்டுலயும் போஸ்ட் தான் நீங்க ஃபர்ஸ்ட் இல்லாம போச்சு..கில்லர்ஜி கூட இல்லை... நெல்லைதான் ஃபர்ஸ்டூ பிடிங்க அவரை அதிரா...ஹா ஹா

  கீதா

  பதிலளிநீக்கு
 81. புட்டும்,கடலையும் எப்போதுமே செய்ததில்லை. அந்தமாதிரி புட்டுமா வேகவைக்கும்,பாத்திரமும் என்னிடம் இல்லை. இந்த புட்டும் புதியரெஸிபிதான். அழகாகப் படங்களும்,செய்முறையும் வழக்கம்போல அதிராவின் கைப்பக்குவம். தாமதமான பின்னூட்டம் என்னுடயது. நன்றி அதிரா.அன்புடன்

  பதிலளிநீக்கு
 82. சுளகு என்றால் முறம் இபோதுதான் தெரிந்து கொண்டேன் கண்ணழகி இன்னும் புரியவில்லை பேபி அதிரா க்யூட்டோ க்யூட்

  பதிலளிநீக்கு
 83. சுளகு என்கிற வார்த்தையை எங்கள் ஊரிலும் உபயோகப்படுத்தி இருக்கிறோமே...

  பதிலளிநீக்கு
 84. ///Thulasidharan V Thillaiakathu said...
  ஹையோ நெல்லை...//நீங்க என்னடான்னா 'தமன்னா' படங்களாப் பார்த்து, 'பேபி அதிரா'ன்னு பெருமையாப் போட்டுக்கறீங்க// அது தமன்னாவா?!!!!!!!!!!!!!!!!! ஆ!...அதிரா ஓடி வாங்கோ பதில் சொல்லுங்கோ இதுக்கு...

  கீதா///

  ஆஆஆஆஆஆஆஆஆ மீ வந்துட்டேன் கீதா:))... ஹா ஹா ஹா அழகானவை எல்லாம் தமனா வாத் தெரியுது அவருக்கு ஹா ஹா ஹா:).. ஆனா உண்மையில தமனாவில எந்த அயகுமே இல்லை ஹையோ ஹையோ:)).. கீதா படிச்சதும் கிழிச்சு வைகையில வீசிடுங்கோ பிளீஸ்ஸ்ஸ்ஸ்:))

  பதிலளிநீக்கு
 85. ///Thulasidharan V Thillaiakathu said...
  பேபி அதிரா க்யூட்!! தூக்கிக் கொஞ்சனும் போல இருக்காங்க...///

  அதிரா எண்டாலே கியூட் தானே:) இதில பேபி என்ன சுவீட் 16 என்ன:)) ஹா ஹா ஹா ஹையோ நான் தான் காசிக்குப் போறனே பிறகெதுக்குக் கலைக்கிறீங்க:))

  பதிலளிநீக்கு
 86. @கீதா.///
  ///ஹையோ நான் சீனி என்றும் சர்க்கரை என்றும் சொல்லுவேன்..இவங்க கன்ஃப்யூச் ஆவாங்க....இனி இங்க நான் சர்க்கரைனு சொன்னா ப்ராக்கட்டுக்குள்ள அது சுகரா...வெல்லமானு போட்டுடணும் போல..ஹா ஹா..//

  அதேதான் ஆரம்பம் இண்டநெட்டில் மீயும் குழம்பி இப்போ தெளிவாகிட்டேன் இருப்பினும் நெல்லைத்தமிழனும் காமாட்சி அம்மாவும் ஜீனி எனவும் சொல்லுவினம்..

  ///அது சரி அதிரா எதுக்கு ஃப்ளைட் டிக்கெட்....நீங்க ஸ்விம்மிங்க்ல ஃபர்ஸ்டு இல்லியோ.....நீந்தியே வந்துருவீங்களே....ஆ!! மீ எஸ்கேப்...///

  அது என் செக்:) ஐயும் எல்லோ கூட்டிப் போகோணும்:) அவோக்கு நீந்தத் தெரியாது கர்ர்ர்ர்:)).. காதைக் கொண்டு வாங்கோ கீதா:).. ஸ்ஸ்ஸ்ஸ் சந்திரிகா வாசனை சோப் போட்டுக் கழுவிட்டீங்கதானே:)).. ஹையோ நான் தோட்டில டச்சூ பண்ண மாய்ட்டேன் நம்பிக் குடுங்கோ காதை:))... அது கீதா, காசிக்குப் போனால் நமக்குப் பிடிச்ச எதையாவது அங்கின விட்டிட்டெல்லோ வரோணுமாம்:).. அதனாலதான் செக்:) ஐ கூட்டிப் போறேன்:) ஹா ஹா ஹா :))

  பதிலளிநீக்கு
 87. //Thulasidharan V Thillaiakathu said...
  அதிரா எங்க வீட்டுலயும் போஸ்ட் தான் நீங்க ஃபர்ஸ்ட் இல்லாம போச்சு..கில்லர்ஜி கூட இல்லை... நெல்லைதான் ஃபர்ஸ்டூ பிடிங்க அவரை அதிரா...ஹா ஹா

  கீதா//

  ஓ இம்முறை நெல்லைத்தமிழனோ 1ஸ்ட்டு கர்ர்ர்ர்:)).. கீசாக்கா வீட்டில மீதான் 1ஸ்ட்டு என நினைக்கிறேன் ஆனா அவ இன்னும் பப்ளிஸ் பண்ணவே இல்ல கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

  பதிலளிநீக்கு
 88. வாங்கோ காமாட்ஷி அம்மா..

  //காமாட்சி said...
  புட்டும்,கடலையும் எப்போதுமே செய்ததில்லை. அந்தமாதிரி புட்டுமா வேகவைக்கும்,பாத்திரமும் என்னிடம் இல்லை. இந்த புட்டும் புதியரெஸிபிதான். அழகாகப் படங்களும்,செய்முறையும் வழக்கம்போல அதிராவின் கைப்பக்குவம். தாமதமான பின்னூட்டம் என்னுடயது. நன்றி அதிரா.அன்புடன்///

  ஓ நீங்க புட்டு செய்ததே இல்லையோ... அதுக்கு உரிய பாத்திரம் இல்லை எனில் செய்ய முடியாதுதான், ஆனா இட்லித்தட்டோடு கூடவே ஒரு நெட் போல துவாரங்கள் போட்ட தட்டும் வருமே.. அதன்மேல் கொட்டின் துணியைப் போட்டு விட்டும் அவிக்கலாம், தேங்காய்ப்பூவை ஒன்றாக மாவில் கலக்கிப் போட்டு...

  நீங்க லேட் இல்லை.. மிக்க நன்றி காமாட்ஷி அம்மா.

  பதிலளிநீக்கு
 89. //G.M Balasubramaniam said...
  சுளகு என்றால் முறம் இபோதுதான் தெரிந்து கொண்டேன் கண்ணழகி இன்னும் புரியவில்லை பேபி அதிரா க்யூட்டோ க்யூட்//

  வாங்கோ ஜி எம் பி ஐயா... ஓ சுளகு கேள்விப்படாத வார்த்தையோ.. இலங்கையில் முறம் என்பது எல்லோருக்கும் தெரியாத வார்த்தை... உபயோகிப்பதில்லை..

  கண்ணழகி.. அது அந்தக் கப்பலுக்கு நான் வச்ச பெயர்:)... மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 90. ஆஆஆஆஆஆஆஆ அஞ்சு ஸ்ரீராம் லாண்டட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்:) ஆனா புளொக் ஆடவில்லை:)) ஹா ஹா ஹா:)..
  ///ஸ்ரீராம். said...
  சுளகு என்கிற வார்த்தையை எங்கள் ஊரிலும் உபயோகப்படுத்தி இருக்கிறோமே...//

  ஓ ஊருக்கு ஊர் பெயர் வித்தியாசம் இருக்குது போலும்... புளொக் எழுதுவதால் பல ஒத்த கருத்துச் சொற்கள் அறிகிறோம்... மிக்க நன்றி ஸ்ரீராம் அனைத்துக்கும்... அதுசரி உங்களுக்குப் புட்டுப் பிடிக்காது போலும்:).

  பதிலளிநீக்கு
 91. // அதுசரி உங்களுக்குப் புட்டுப் பிடிக்காது போலும்:). //

  ஹிஹிஹி... ஆமாம்... எப்படியோ நீங்க கண்டு பிடிச்சுடறீங்க அதிரா...

  பதிலளிநீக்கு
 92. ///ஸ்ரீராம். said...
  // அதுசரி உங்களுக்குப் புட்டுப் பிடிக்காது போலும்:). //

  ஹிஹிஹி... ஆமாம்... எப்படியோ நீங்க கண்டு பிடிச்சுடறீங்க அதிரா...//

  ஹா ஹா ஹா இண்டியூசன் :))

  பதிலளிநீக்கு
 93. நான் நினைச்சன் கம்பங்கொள்ளு என்று ஏதோ தானியம் இருக்கெண்டு. அது கம்பு+கொள்ளு சேர்த்த செய்த புட்டு என்று பிறகுதான் விளங்கிச்சு. கொள்ளு இருக்கு கம்புக்கு எங்கன போவேன். ஏதோ புதுசுபுதுசா செய்யிறீயள். அழகா செய்திருக்கிறீங்க. நீண்ட நாளாச்சு கண்ணழகி பார்த்து..

  பதிலளிநீக்கு
 94. ஓ வாங்கோ அம்முலு வாங்கோ...

  ஹா ஹா ஹா மீக்கு புதுசு புதுசா பெயர் வைப்பதில் ஒரு இன்பம்:).. இப்போ கம்பு பாகிஸ்தான் .. சில அஃப்றிக்கன் சொப்ஸ் லயும் கிடைக்குது அம்முலு.. பின்பு அவர்கள் உபயோகிக்கும் பெயர் சொல்கிறேன்..

  போன சமரில் நாங்க இங்கு நிக்காமையால் அவவை மிஸ் பண்ணிட்டோம்.

  மிக்க நன்றி அம்முலு.

  பதிலளிநீக்கு
 95. ஆகவும் காலம் போனால் அதன் விளிம்புதான் பிஞ்சிருக்கு.. பின்பு எறிஞ்சு போட்டு புதுசுதான் வாங்க முடியும்.//

  அந்த விளிம்புகள் பிஞ்சி இருப்பதை பனநார் வைத்து பின்னி முறத்தை கட்டி படுத்துவார்கள். கட்டி படித்தி பேப்பர் கூழ் மெழுகி கொடுத்தால் புது முறமாய் மாறி விடும் அதிரா.

  பதிலளிநீக்கு
 96. மிகவும் நன்று பாராட்டுகள்

  பதிலளிநீக்கு
 97. ///அந்த விளிம்புகள் பிஞ்சி இருப்பதை பனநார் வைத்து பின்னி முறத்தை கட்டி படுத்துவார்கள். கட்டி படித்தி பேப்பர் கூழ் மெழுகி கொடுத்தால் புது முறமாய் மாறி விடும் அதிரா.//

  ஓ கோமதி அக்கா.. இப்படியும் ரிப்பெயார் இருக்கோ ஹா ஹா ஹா.. மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 98. Asokan Kuppusamy said...
  மிகவும் நன்று பாராட்டுகள்///

  வாங்கோ வாங்கோ மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 99. @அதிரா - "கீசாக்கா வீட்டில மீதான் 1ஸ்ட்டு என நினைக்கிறேன் ஆனா அவ இன்னும் பப்ளிஸ் பண்ணவே இல்ல" - நாங்க பேச்சு வழக்கில், 'அவா' என்று சொன்னால் மரியாதையாகவும், 'அவ' என்பது சிறியவர்களுக்கும் உபயோகப்படுத்துவோம். பெரும்பாலானவர்கள், 'அவள்' என்று சிறியவர்களுக்கும், 'அவர்கள்' என்று பெரியவர்களுக்கும் உபயோகப்படுத்துவார்கள். இலங்கையில், நீங்கள் சிறியவர்களைக் கூட, 'நீங்கள்' என்று சொல்கிறீர்கள். 'அவ' என்பது என்ன மாதிரியான வார்த்தை? 'அவ்வ' என்று வருமா இல்லை பெண்களுக்கு 'அவ' என்றுதான் உபயோகப்படுத்துவீர்களா? அப்போ ஆண்களுக்கு என்ன வார்த்தை? 'அவர்' என்றா இல்லை வேறு ஏதாகிலுமா?

  பதிலளிநீக்கு
 100. ஆஹா புட்டு பார்க்கவே நல்லா இருக்கே... தமிழகம் செல்லும்போது செய்துதரச் சொல்ல வேண்டும். புட்டுக்குழல் அங்கே தான் இருக்கு.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!