புதன், 14 பிப்ரவரி, 2018

180214 சினிமாப் பெயர் தெரியுமா?எல்லாம் சினிமாப் படப் பெயர்கள். தமிழ் சினிமா. 

முதல் எழுத்தும் கடைசி எழுத்தும் கொடுக்கப்பட்டுள்ளன.

அடைப்புக் குறிக்குள் மொத்த எழுத்துகள். 


உதாரணம் : 
அ - வி (3) என்றால் அருவி. எவ்வளவு சுலபமா இருக்கு (எனக்கு) !! 

மீதி எல்லாம் உங்களுக்கு. 

எச்சரிக்கை : 

1) கமெண்ட் மாடரேசன். அதனால் காபி அடிக்க முடியாது. 

2) தவறான விடைகளுக்கு மைனஸ் மதிப்பெண்கள்.

3) மறந்துட்டேன். 

இதோ கேள்விகள்: 

1) மா - - - - - - - - - - - - - ளே. (15)

2) நீ - - - - - - - - - - சு (12)

3) ச - - - - - தி (7)

4) ப - - - - - - லே (8) 

5) பூ - - - - பை (6)

6) ஸ்- - - - - ர் (7)

7) எ - - - - - - - - - - - ம் (13) 

8) ம - - - - - - ஸ் (7)

9) எ - - - - - - - ண் (9) 

10) து - - ம் (4) 


59 கருத்துகள்:

 1. நடுராத்திரியில மழை பெய்த மாதிரி இருக்கு!....

  வாழ்க வளமுடன்...

  பதிலளிநீக்கு
 2. அட??? லேட்டாப் போடுவீங்கன்னு லேட்டா வந்தால் ஆறு மணிக்கே போட்டிருக்கீங்க? இன்னிக்குக் காலம்பரக் காஃபி சீக்கிரம் கிடைச்சுடுச்சா?

  பதிலளிநீக்கு
 3. எத்தனை பேர் சொல்லி இருக்காங்களோ தெரியலை! :)

  பதிலளிநீக்கு
 4. காலை வணக்கம். பின்னர் வருகிறேன்.

  பதிலளிநீக்கு
 5. 7. எங்களுக்கும் காலம் வரும், எங்களுக்கும் காதல் வரும். (இன்னிக்குக் காதலர் தினமாச்சே! அதான்)
  9. எங்க வீட்டுப் பெண்
  3. சாதிக்கொரு நீதி ( சதி லீலாவதியா இருக்குமோனு நினைச்சேன். ஆனால் 6 எழுத்துத் தான் வருது)
  10. துகாராம்

  2. நீலாவுக்கு நெறஞ்ச மனசு
  4. பணம் பந்தியிலே

  5. பூலோக ரம்பை

  1. மாமியாரும் ஒரு வீட்டு மருமகளே

  6. ஸ்கூல் மாஸ்டர்
  1

  பதிலளிநீக்கு
 6. 1மாமியாரும் ஒரு வீட்டுமருமகளே
  3 சதி லீலாவதி
  5பூ லோக ரம்பை

  பதிலளிநீக்கு
 7. 8. மலபார் போலீஸ் 4. பணம் பந்தியிலே 3. சக்ரவர்த்தி அல்லது சாதிக்கொரு நீதி

  பதிலளிநீக்கு
 8. கீதா சாம்பசிவம் மேடம்! 3) நெடில் இல்லை, குறில்.

  பதிலளிநீக்கு
 9. ரேவதி மேடம். மூன்றாம் கேள்விக்கு தவறான விடை.

  பதிலளிநீக்கு
 10. >>> இன்னிக்குக் காலம்பரக் காஃபி சீக்கிரம் கிடைச்சுடுச்சா?... <<<

  நானும் அப்படித் தான் நெனைக்கிறேன்...

  பதிலளிநீக்கு
 11. இன்றைக்கு மனசுல இந்த சப்ஜெக்ட் ஏறமாட்டேன் என்கிறது. பிறகு வருகிறேன்.

  பதிலளிநீக்கு
 12. நானும் காலையில இருந்து மண்டையை குடைஞ்சிக்கிட்டு இருக்கேன்...

  ஒன்னும் புரியலை....

  நாலு பதிலாவது சொல்லிடனும்..ந்னு பார்க்கிறேன்...

  சமைச்சாச்சு... சாப்பிட்டு தூங்க வேண்டிய நேரம்...

  சார்... சார்... எப்ப சார் ரிசல்ட் பேப்பர் ஒட்டுவீங்க!?....

  பதிலளிநீக்கு
 13. 10 - துகாராம்

  5 - பூலோகரம்பை

  இன்னும் கொஞ்சம் யோசிக்குக் கண்டுபிடிக்கணும்...வரேன்

  துளசி சினிமா நிறைய தெரிந்தவர்...அவருக்கும் பதிவு அனுப்பிட்டேன்..ஸோ அவர் சொன்னதும் வரேன்..

  கீதா

  பதிலளிநீக்கு
 14. கீதா சாம்பசிவம் மேடம்! 3) நெடில் இல்லை, குறில்./// ம்ம்ம்ம்ம்??? நான் கொடுத்தது பொருந்தலையா? யோசிக்கணும்! பல படங்கள் வந்ததே தெரியாது! :)))))

  பதிலளிநீக்கு
 15. பேசாம 3 ஆவது கேள்விக்கு நெடில் பரவாயில்லைனு ஒத்துகுங்க இல்லைனா "தி" முடிவு எழுத்தை மாத்துங்க! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

  பதிலளிநீக்கு
 16. 1. மாமியாரும் ஒரு வீட்டு மருமகளே
  2. நீலாவுக்கு நெறஞ்ச மனசு
  3. சக்ரவர்த்தி
  4. பணம் பந்தியிலே
  5. பூலோக ரம்பை
  6. ஸ்கூல் மாஸ்டர்
  7. எங்களுக்கும் காலம் வரும்
  8. மலபார் போலீஸ்
  9. ஏகம்பவாணன், எங்கவீட்டுப் பெண், என்னம்மா கண்ணு - தெரியலையே
  10. துகாராம்

  அப்பா... ஒன்றைத் தவிர மற்றவை சரின்னு நினைக்கறேன்.

  பதிலளிநீக்கு
 17. என்ன பதில் போட்டாச்சு. உங்க கமென்ட் காணோமே கேஜிஜி சார்... இன்னைக்காவது, ஏமாத்தாம ஏதாவது கொடுப்பீர்கள்னு நினைக்கறேன்.

  பதிலளிநீக்கு
 18. KGG Sir, 3 மட்டும் தானே நெடில்ங்கறதாலே தப்பு? மத்ததெல்லாம் சரியா? அப்போ நெடிலுக்கு மட்டும் கொஞ்சம் குறைச்சுண்டு மிச்சத்தை அனுப்பி வைங்க! எங்க வீட்டு விலாசம் தெரியுமில்லை? செக்/ட்ராஃப்ட்/காஷ் எதுவானாலும் சரி. இல்லை உங்க வசதிக்குப் பூ வைக்கிற இடத்திலே பொன்னை வைச்சாலும் நல்லாத் தான் இருக்கும்! :))))

  பதிலளிநீக்கு
 19. @கீதா சாம்பசிவம் மேடம் - //பேசாம 3 ஆவது கேள்விக்கு நெடில் பரவாயில்லைனு ஒத்துகுங்க இல்லைனா "தி" முடிவு எழுத்தை மாத்துங்க//

  இப்படிக் கேட்பதற்குப் பதில், தெரிந்த திரைப்படப் பேரை (உதாரணமா சிவாஜி) வைத்துக்கொண்டு, 10 வது கேள்வியில், ச பதில் சி வச்சுக்கோங்க. முடியற எழுத்து 'ம்' பதில் 'ஜி' இருக்கக்கூடாதா? எதுக்கு 4 எழுத்து, 3 போதாதா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்று எழுதியிருக்கலாமே?

  பதிலளிநீக்கு
 20. 1. மாடி வீட்டு மாப்பிள்ளை
  2. நீலாவிற்கு பெரியமனசு3.
  3. சதிநீலாவதி

  4.பலே பாண்டியா பலே

  பதிலளிநீக்கு
 21. ஐயா :) எனக்கு உடல்நிலை சரியில்லாததால் இம்முறை பரீட்சை எழுத இயலாது
  அதனால் இன்னிக்கு லீவ் லெட்டர் சமர்ப்பிக்கிறேன்

  The Head Teacher ,
  Engal Blog School.

  Subject: Sick Leave Application

  Respected Sir ,

  I have to notify you that I am not in a position to come to school as I am ill.
  I request you to kindly grant me leave for 14 th February , 2018.
  I shall be utterly obliged in for this.

  yours truly

  Angel

  பதிலளிநீக்கு
 22. முதல் படத்தைக் கண்டு பிடித்து விட்டேன்!
  1. மாமியாரும் ஒரு வீட்டு மரும்களே

  பதிலளிநீக்கு
 23. ம்ம்ம்ம்..பதில் அப்புறம் தான் தெரிஞ்சுக்கணும். எனக்கும் சினிமாக்கும் ரொம்ப தூரம்.

  பதிலளிநீக்கு
 24. ஏழாவது படம்: ' எங்களுக்கும் காலம் வரும்'!!

  பதிலளிநீக்கு
 25. இரண்டாவது படம்: நீலாவுக்கு நெறைஞ்ச மனசு

  இந்தப்படம் தான் ஞாபக சக்தியை ரொம்பவும் சோதித்த படம்.
  நிறைய ஞாபக சக்தியைத் தோண்டச் செய்ததற்கு இனிய நன்றி!!

  பதிலளிநீக்கு
 26. தங்களது கேள்விக்கான பதில்கள் இதோ:-

  1.மாமியாரும் ஒரு வீட்டு மருமகளே (15)

  2.நீலாவுக்கு நெறஞ்ச மனசு (12)

  3.சந்தனநம்பி (7)

  4.பணம் பந்தியிலே (8)

  5.பூலோக ரம்பை (6)

  6.ஸ்கூல் வாத்யார் (7)

  7.எங்களுக்கும் காலம் வரும் (13)

  8.மலையப்ப தாஸ் (7)

  9. எங்க வீட்டுப் பெண் (9)

  10. துகாரம் (4)

  பரிட்சைக்கு நேரமாச்சி!
  ஸாரி! ப்ளைட்டுக்கு நேரமாச்சி
  பரிசு பொருள் உண்டா?

  பாரிசுக்கு (PARIS) அனுப்பி வையுங்க ஐயா!

  நட்புடன்,
  புதுவை வேலு
  www.kuzhalinnisai.blogspot.com

  பதிலளிநீக்கு
 27. தங்களது கேள்விக்கான பதில்கள் இதோ:-
  1.மாமியாரும் ஒரு வீட்டு மருமகளே (15)
  2.நீலாவுக்கு நெறஞ்ச மனசு (12)
  3.சந்தனநம்பி (7)
  4.பணம் பந்தியிலே (8)
  5.பூலோக ரம்பை (6)
  6.ஸ்கூல் வாத்யார் (7)
  7.எங்களுக்கும் காலம் வரும் (13)
  8.மலையப்ப தாஸ் (7)
  9. எங்க வீட்டுப் பெண் (9)

  10. துகாரம் (4)

  பரிட்சைக்கு நேரமாச்சி!
  ஸாரி! ப்ளைட்டுக்கு நேரமாச்சி
  பரிசு பொருள் உண்டா?
  பாரிசுக்கு (PARIS) அனுப்பி வையுங்க ஐயா!

  நட்புடன்,

  புதுவை வேலு

  பதிலளிநீக்கு
 28. கடைசி கேள்வி துரோகம். ஹ்ஹஹாஹஹ்ஹாஹ்ஹ

  பதிலளிநீக்கு
 29. 3.சக்ரவர்த்தி, 4. பணம் பந்தியிலே, 5. பூலோக ரம்பை.

  பதிலளிநீக்கு
 30. ஏதோ.. எனக்குத் தெரிந்தவரை முயற்சி செய்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 31. எங்களில் இந்த சி கே கொஞ்சம் உள்ள துளசி பதில் அனுப்ப ரொம்ப லேட்....மொபைல் வஹியாக.

  எழுத்துப் பிழை இருந்தால் கண்டுக்காம மார்க் போடவும் என்று ..கெட்டுத் கொள்கிறோம்..

  1.....

  2. நீலாவுக்கு நெறஞ்ச மனசு

  3. சக்ரவர்த்தி

  4. பணம் பந்தியிலே

  5. பூலோகரம்பை

  6. ஸ்கூல் மாஸ்டர்

  7. எங்களுக்கும் காலம் வரும்

  8. மலபார் போலீஸ்

  9. எங்க வீட்டுப் பெண்

  10. துகாராம்

  தாமதத்திற்கு ஆசிரியர் தாழ்மையுடன் மன்னிக்குமாறு கெட்டுத் கொள்கிறோம்.கீதாவுக்கு..உடம்பு முடியலைநாளும் கீதா லீவ்லெட்டர் கொடுக்கலாம சின்சியரா ஏகசாம் அட்டெண்ட் பண்ணியிருப்பதால்...எங்கள் விடைகளைக் கொடுத்திருப்பதால்...

  துளசி, கீதா


  பதிலளிநீக்கு
 32. கேஜிஜி சார், அடுத்தவாரம் வரை முடிவை தள்ளிப் போடாதீங்க!

  பதிலளிநீக்கு
 33. ஹை ஏஞ்சல் நீங்க லீவ் லெட்டர் கொடுத்துருக்கீங்களா??!! ஆ!!! நாங்களும் கொடுக்க நினைத்து கடைசியில் துளசி விடைகள் கொடுக்க இன்றைக்குக் காலைல மொபைல்லருந்து தப்பித் தப்பி அடிச்சாச்சு...லீவ் லெட்டர் கொடுக்காம தாமதமா கொடுத்தத்க்கு கன்ஸிடரேஷன் வேற கேட்டுருக்கோம் ஸ்கூல் மாஸ்டர்கிட்ட ஹிஹிஹி

  கீதா

  பதிலளிநீக்கு
 34. ஏஞ்சல் லீவ் லெட்டர் பார்த்து பழைய நினைவுகள் வந்தன.

  எனக்கு இல்லை எனக்கு இல்லை எல்லா பரிசும் நெல்லைக்கு தான்.

  பதிலளிநீக்கு
 35. நீளமாக் கருத்துச் சொல்லி இருந்தேன். ப்ளாகர் முழுங்கிடுச்சு! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!

  3 ஆவது கேள்விக்குக் குறைஞ்சது 30 தரமாவது பதில் சொல்லி இருந்தேன். ஆனால் இங்கே வரலை. எங்கே போச்ச்ச்ச்? காக்கா ஊஷ்? கேஜிஜி சார்? இது என்ன அநியாயம்? உங்க ப்ளாகர் இப்படி எல்லாத்தையும் முழுங்குதே!

  சந்தன நம்பினு ஒரு இடத்தில் சொல்லி இருந்தேன். சக்ரவர்த்தினு இன்னொரு இடத்தில் சொல்லி இருந்தேன். இரண்டையும் காணோம்! எங்கே போச்சு?

  பதிலளிநீக்கு
 36. 7 எழுத்தில் கீதாக்காவும், யாதவன் நம்பியும் வேறு வேறு சொல்லியிருக்காங்க...ஸோ அதுவும் விடைகள் தானே...

  கீதா

  பதிலளிநீக்கு
 37. // எனக்கு இல்லை... எனக்கு இல்லை... எல்லாப் பரிசும் நெல்லைக்குத்தான் //

  ஹா... ஹா... ஹா.... கோமதி அக்கா ரசித்தேன் ரொம்பவே... அவர் என்னடான்னா சினிமா பார்ப்பதில்லை, பாட்டு கேக்கறதில்லைங்கறார்!

  பதிலளிநீக்கு
 38. என்னாது? எல்லாப் பரிசும் நெல்லைக்குத்தானா? அப்போ நாங்க? நாங்க தான் முதல்லே சொல்லி இருக்கோம் எல்லாத்தையும்! பொற்கிழி எனக்கே எனக்கு கேஜிஜி சார்! மறந்துடாதீங்க!

  பதிலளிநீக்கு
 39. கீசா மேடம்... எனக்கென்னவோ யாரோ கேட்ட கேள்விக்கு நம்மகிட்ட பதில்கள் வாங்கிக்கிட்டு அவருக்கு (கேஜிஜிக்கு) பொற்கிழி வாங்கிக்கப் போயிருக்கார்னு தோணுது. வந்தவுடனே நமக்குத் தகவல் தருவார்.

  பதிலளிநீக்கு
 40. அப்படீங்கறீங்க? சேச்சே, கேஜிஜி அப்படி எல்லாம் செய்ய மாட்டார். எனக்கு அவரை துவரை கதை எழுதினப்போவும் அப்புறமா வேறே ஏதோ ஒரு போட்டிக்காகவும் பரிசு கொடுத்திருக்காரே! :) அதனால் நிச்சயமாப் பொற்கிழி தான் வரும்! :))))

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!