"சஞ்சய், நான் ரெடி நீங்க ரெடியா?" என குறும்பாய் கேட்டபடி அறையை விட்டு வெளியே வந்த மருமகள் சுவாதியை பார்த்ததும், மகனை கேள்வியாய் பார்த்தார் மீனாட்சி
"மூவி போறோம்மா" என எழுந்தான் மகன் சஞ்சய்
"டிவில தான் தெனம் நாலு சினிமா போடறானே... அங்க போய் தான் பாக்கணுமாடா சஞ்சய்?" என எரிச்சலை அடக்கியபடி மீனாட்சி கேட்க
"அத்த... டிவில போடறதெல்லாம் பழைய சினிமா. இது என்னோட பேவரெட் ஹீரோ விஜய் நடிச்ச புது படம், இது இப்போதைக்கு டிவில போட மாட்டான்" என விரிவான விளக்கம் அளித்தாள் சுவாதி
"போன வாரம் ஏதோ சினிமாவுக்கு போனீங்களே?" என மீனாட்சி விடாமல் கேட்க
"அது ஹிந்தி படம் மீனாட்சி, இது தமிழ். அப்படிதானேம்மா சுவாதி" என மாமனார் சுந்தரேசன் எடுத்து தர
"ரெம்ப கரெக்ட் மாமா. உங்க புள்ளயோட ப்ரில்லியன்ஸ் எங்க இருந்து வந்ததுனு இப்ப புரியுது" என சிரித்தபடி கூறிய சுவாதி
"ஐயோ சஞ்சய் டைம் ஆச்சு... விஜய் படம் ஒரு சீன் மிஸ் ஆனாலும் என்னை மறுபடி அழச்சுட்டு போணும் சொல்லிட்டேன்" என்றாள் பொய் மிரட்டலுடன்
"ஐயையோ... உன் ஹீரோ படத்த இன்னொரு வாட்டியா?" என்ற சஞ்சயின் கேலிக்கு சுவாதி முறைக்க
"ஒகே ஒகே லெட்ஸ் கோ சுவாதி" என்றவன் "அம்மா நாங்க வரோம்... அப்பா பை" என்றபடி மனைவியுடன் வெளியேறினான்
"ஹ்ம்ம்... எல்லாம் காலக்கேடு, யார கொற சொல்றது" என மீனாட்சி புலம்ப தொடங்கினாள்
"என்ன மீனாட்சி... ஏன் உனக்கு நீயே பேசிக்கற?" என்ற கணவர் சுந்தரேசனை முறைத்தாள் மீனாட்சி
"என்ன செய்யறது? எனக்கு நானே பேசிக்கணும், நான் பேசறதை கேக்க வேற யாரும் தயாரா இல்லையே"
"ஆஹா, என்ன இப்படி சொல்லிட்ட. பேசு மீனாட்சி பேசு, உன் பேச்சை கேட்க ஆவலோடு ஓடோடி வந்த என்னை ஏமாற்றி விடாதே மீனா ஏமாற்றி விடாதே" என சுந்தரேசன் கேலி செய்ய
"எல்லாம் நேரம்... உங்களுக்கு கூட என்னை கண்டா கேலியாத்தான் இருக்கு. நீங்களும் உங்க மருமகளுக்கு தானே சப்போர்ட். போங்கோ" என மீனாட்சி விசும்ப
"ஐயோ என்ன மீனா இது, இதுக்கு போய் கொழந்த மாதிரி கண்ண கசக்கிகிட்டு" என சமாதானம் செய்தார்
"பின்ன என்ன? நானெல்லாம் அந்த காலத்துல உங்க அம்மா முன்னாடி உங்கள்ட்ட ரெண்டு வார்த்த பேசவே யோசிப்பேன். இவ என்னடான்னா பேர் வெச்சவளாட்டமா வார்த்தைக்கு வார்த்தை சஞ்சய் சஞ்சய்னு, ச்சே ச்சே. அது மட்டுமா, நம்ம முன்னாடியே என் பேவரெட் ஹீரோ விஜய்னு, கேக்கவே கூசுதுண்ணா. வாரா வாரம் சினிமா டிராமானு சுத்தினா காசு என்ன மரத்துலயா காயக்கறது, பொண்ணா பொறந்தா பொறுப்பு வேணாமோ" என நிறுத்தாமல் புகார் வாசித்த மனைவியை யோசனையாய் பார்த்தார் சுந்தரேசன்
பின் அமைதியாய் "மீனாட்சி, கொசுவத்தி இருக்கா?" என கேட்க
"நான் என்ன சொல்றேன், நீங்க என்ன கேக்கறேள்" என கோபமாய் பார்த்தாள்
மௌனமாய் சிரித்தவர் "அது ஒண்ணுமில்லடி, ப்ளாஷ்பேக் சொல்லும் போது சிச்சுவேசன் படி கொசுவத்தி வேணுமில்லையா? அதான் கேட்டேன்"
"ப்ளாஷ்பேக்கா? அதென்ன?" என மீனாட்சி விழிக்க, அப்படியே கொசுவத்தி சுத்த, ஸ்க்ரீன் ப்ளாக் அண்ட் வைட்டுக்கு மாறி முப்பத்தி நான்கு வருடங்கள் பின்னோக்கி செல்கிறது
1984
"ஓ நெஞ்சே நீ தான் பாடும் கீதங்கள்" என்ற பாடலை முணுமுணுத்தபடி வாழை இலையில் சுற்றி வைத்திருந்த பூச்சரத்தை அலுங்காமல் எடுத்து தன் நீண்ட பின்னலில் சூடினாள் மீனாட்சி
"மீனா... டீ மீனாட்சி..." என மாமியார் சுந்தரவள்ளியின் அழைப்பில் அவசரமாய் முற்றம் நோக்கி ஓடினாள் மீனா
"கூப்ட்டீங்களா அத்த?"
"ஏன் நான் கூப்டாமையே நோக்கு அசீரிரி கேட்டுதோ?"
"....." என்ன சொல்வதென தெரியாமல் மீனா விழித்தபடி நிற்க
"அது சரி... இதென்னடிமா கோலம். டான்ஸ்காரி கணக்கா ஜிகுஜிகுனு பொடவைய சுத்திண்டு ஜெட நீளத்துக்கு பூவ வெச்சுண்டு... எங்க பொறப்பாடு?"
"அத்த...அது... உங்க புள்ள தான்... சினிமாவுக்கு போலாம்னு..." என இழுக்க
"யாரு? சுந்தரேசனா? அவன் சொன்னான்னு நீயே சொல்லிக்கறது. ஹ்ம்ம்... ஆத்துல ஒரு நா தங்கறதில்ல, இதென்னா வீடா இல்ல சத்தரமா? பெரியவா சின்னவா மரியாத இல்ல, கேக்கணும் சொல்லணும்னு பொறுப்பு இல்ல. நானெல்லாம் அந்த காலத்துல என் மாமியார் கண் காட்டினா தான் என் ஆத்துகாரர் நிழலையே பாப்பேன். ஹ்ம்ம்... கலி முத்திடுத்துடிம்மா, வேறென்ன சொல்ல" எனும் போதே
"மீனா மீனா..." என்றபடி சுந்தரேசன் வீட்டினுள் நுழைய, விட்டால் போதுமென மீனாட்சி உள்ளே சென்றாள்
"ஏண்டாப்பா... இங்க ஒருத்தி குத்துகல்லாட்டமா உக்காந்துண்டு இருக்கேன், கண்ணு தெரியலியோ. ஆத்துக்குள்ள நொழயற போதே ஆத்துக்காரி பேரை ஏலம் போட்டுண்டு தான் வரணுமோ"
"அ...அதில்லம்மா... மொதல் ஆட்டம் போடற நேரமாய்டுத்து. அதான்..." என சுந்தரேசன் இழுக்க
"ஆகட்டும், நாளைக்கி போறது... அதுக்குள்ள பிரபஞ்சம் அழிஞ்சுடுமோ? வெள்ளிகிழம வெளக்கு போடற நேரத்துல போயே தீரணுமோ? நாளைக்கி போய்க்கலாம் போ. போய் கை கால் அலம்பிண்டு சந்தியாவந்தனம் சொல்லு" எனவும், தப்பித்தால் போதுமென சுந்தரசன் உள்ளே சென்றான்
மாமியார் பேசியதை எல்லாம் கேட்டபடி தங்கள் அறைக்குள் அமர்ந்திருந்த மீனாட்சியின் கண்ணில் நீர் கோர்த்தது
"மீனா... " என்றபடி உள்ளே வந்த கணவனிடம் முகம் திருப்பினாள்
"என்னம்மா இது? அம்மா சொல்றதயெல்லாம் பெருசா எடுத்துக்காதேனு சொல்லி இருக்கேனில்லையா" என சமாதானம் செய்ய
"பாக்யராஜ் படம் டார்லிங் டார்லிங் டார்லிங்... சாந்தி தியேட்டர்ல இன்னைக்கி தான் கடைசி நாள்... எவ்ளோ ஆசையா இருந்தேன்..." என மீனா அழுகையுடன் கூற
"போட்டும் விடு மீனு. அடுத்த வாரம் சரஸ்வதி தியேட்டர்ல போடறானாம், அழச்சுண்டு போறேன் சரியா" என தாஜா செய்ய
"உங்கம்மாக்கு ஏன்தான் இப்படி எண்ணமோ. சின்னஞ்சிறுசுக சந்தோசமா போயிட்டு வரட்டும்னு தோணாதோ. இப்பவே சொல்றேன், நேக்கு வர்ற மருமகள நான் தங்கமாட்டம் வெச்சுப்பேன், நானே தெனமும் வெளில போயிட்டு வாங்கோனு அனுப்பி வெப்பேன்" என சரஸ்வதி சபதம் போல் மீனாட்சி சபதத்துடன் ப்ளாஷ்பேக் முடிவுக்கு வருகிறது
2018
"என்னடி மீனாட்சி, சொன்னது என்னாச்சு? அன்னைக்கி நீ சொன்ன வார்த்தை காற்றோடு போயாச்சு. வார்த்தை தவறி விட்டாய் கண்ணம்மா, மார்பு துடிக்குதடி...." என சுந்தரேசன் சிரிப்புடன் பாட
"ஐயோ... கொஞ்சம் சும்மா இருங்கோண்ணா..." என பழைய நினைவில் மீனாட்சி முகம் சிவக்க
"ஆஹா... எவ்ளோ நாளாச்சு என் ஆத்துக்காரி வெட்கப்பட்டு பாத்து..." என சுந்தரேசன் மேலும் கேலி செய்தார்
"பேசாம இருங்கோ" என பொய் கோபம் காட்டியவள் "நீங்க சொல்றது சரிதாண்ணா... தப்பு என் மேல தான், நான் தான் புரிஞ்சுக்காம சுவாதி மேல கோபப்படறேன்" என மீனாட்சி வருத்ததுடன் கூற
"மீனா... தப்பு யார் மேலயும் இல்ல. அன்னைக்கி எங்கம்மா மேலயும் தப்பில்ல இன்னைக்கி உன் மேலயும் தப்பில்ல. உங்க ரெண்டு பேருக்கும் கொடுக்கப்பட்ட மாமியார்ங்கற பதவி தான் இப்படி பேச வெக்குது. மகனை நம்மகிட்ட இருந்து பிரிக்க வந்த ஒருத்தியா மருமகளை பாக்காம மகளுக்கு பதிலா கடவுள் நமக்கு குடுத்த செல்வம்னு எல்லா மாமியாரும் நினைக்க ஆரம்பிச்சா, மருமகளுக்கும் மாமியாரை அம்மாவாதான் நெனக்க தோணும். அதோட, காலம் மாறும் போது பெரியவங்களும் அதை புரிஞ்சுண்டு சில விசயங்கள கண்டும் காணாம இருந்துட்டா வாழ்க்கை சக்கரம் தடையில்லாம சுழலும், புரிஞ்சதா?"
"ம்... நன்னா புரிஞ்சது. நேக்கு கொஞ்சம் வேலை இருக்கு, நான் போலாமா?"
"அப்படி என்னம்மா வேலை?"
"ம்... என் மருமக சுவாதி கொழுக்கட்டை சாப்ட்டு நாளாச்சு அத்தைனு நேத்தே சொன்னா, அதான் செய்ய போறேன் போதுமா?" என மீனாட்சி சிரித்தபடி கூற
"ஓஹோ... மருமகள் மெச்சும் மாமியாரா ஆகற திட்டமா... நடத்து நடத்து. நான் வாக்கிங் போயிட்டு வரேன்" என சிரித்தபடி எழுந்தார் சுந்தரேசன்.
(முற்றும்)
[ அப்பாவி தங்கமணி தளம் பெர்மிஷன் டினைட் என்று வருகிறது. எனவே இணைப்பு தரமுடியவில்லை. மன்னிக்கவும். ]
today ATM?
பதிலளிநீக்குவாழ்க..
பதிலளிநீக்குஇனிய காலை வணக்கம் ஸ்ரீராம், துரை அண்ணா, கீதாக்கா, பூசார்
பதிலளிநீக்குகீதா
me already late! and nobody is here! where is Durai's comment? :)
பதிலளிநீக்குஅன்பின் ஸ்ரீராம் மற்றும் கீதா/கீதா அனைவருக்கும் வணக்கம்..
பதிலளிநீக்குகாலை வணக்கம் கீதா அக்கா.
பதிலளிநீக்குகாலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.
பதிலளிநீக்குகாலை வணக்கம் கீதா ரெங்கன்.
பதிலளிநீக்குஹை கீதாக்கா இன்று காபி ஆத்தியாச்சா....ஃபர்ஸ்டூஊஊஊஊஊஊஊஊஊ....ஒரு வேளை அ அ சொன்னது போல் ராசி மாறிடுச்சா..ஹா ஹா ஹா
பதிலளிநீக்குகீதா
ஆமாம் அக்கா... அப்பாவி தங்கமணியின் கதைதான்.
பதிலளிநீக்குஒரு நிமிடம் தாமதமாகவே எபி திறக்கின்றது....
பதிலளிநீக்குஜலதோஷம் போல அதற்கு!?....
எங்கே பூசார்??..
பதிலளிநீக்குஆறு மணி என்று ஷெடியூல் செய்தும் எனக்குமே திறக்க நேரம்தான் எடுத்துக் கொள்கிறது துரை செல்வராஜூ ஸார். பூசார் தூக்கம். நேற்று பதிவு போட்டதால் விழிப்பு!
பதிலளிநீக்கும்ம்ம்ம், ஏற்கெனவே ஏடிஎம் எழுதி இருக்காங்களோ? படிச்ச நினைவு! இப்போல்லாம் இந்த மாதிரி மாமியார் எல்லாம் இல்லை. ஏடிஎம்முக்கு வயசாச்சா அதான் இன்னும் பழைய நினைப்புலே இருக்காங்க! :))))))
பதிலளிநீக்கும்ம்ம்ம் துரை, தி.கீதா வந்தாச்சு! பூஸாரும் வரதாச் சொல்லி இருந்தாங்களா? வரட்டும் வரட்டும். ஹிஹிஹி,இன்னிகுக் கணினியைத் திறந்ததும் நேரே இங்கே தான் வந்தேன். ஏதோ ஒரு அதிர்ஷ்டம்! ஃபர்ஷ்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்! :)
பதிலளிநீக்குகீதா அக்கா... இது ஏற்கெனவே போட்ட கதை இல்லை. புதிதாக எழுதிய கதை.
பதிலளிநீக்குதி/கீதா, கஞ்சி வேலை முடிச்சுட்டுக் காஃபியும் ஆத்திட்டு சாவகாசமாத் தான் வந்தேன்! :)))) இன்னிக்கு நாலாவதோ, மூணாவதோனு நினைச்சுட்டு வந்தால் யாருமே இல்லை! ஹிஹிஹி!
பதிலளிநீக்கு// பொண்ணா பொறந்தா பொறுப்பு வேணாமோ!?...//
பதிலளிநீக்குகாலங்கள் மாறினாலும் காட்சிகள் மாறினாலும் மாறாத வார்த்தைகள்..
அழகான கதை...
சக்கரம் சுற்றி வருகிறது தானே!..
வாழ்த்துக்களுடன் நலம் வாழ்க....
ஹா ஹா ஹா சிந்திக்கவும் சிரிக்கவும் வைத்த கதை...கதாசிரியர் புவனா கோவிந்த் அவர்களுக்கு வாழ்த்துகள்...பாராட்டுகள்! (பரிச்சயமான பெயரா இருக்கே...ஆனா டக்கென்று எப்படி என்பது நினைவுக்கு வரலை!) ..மாமியார்களின் மன நிலை மாறப் போவதில்லை ஹைடெக் யுகமானாலும் இப்படித்தான் என்று ஆகிவிடுமோ என்று சொல்லப் போகிறாரோ என்று வந்தால் ஆஹா!! மன நிலை மாறுகிறது....2018 சுந்தரேசனின் வார்த்தைகள் யெஸ் யெஸ் அதேதான்...
பதிலளிநீக்குநல்லாருந்துச்சு!! கதை...
கீதா
முதலில் படம் இணைத்திருந்ததாய் நினைத்திருந்தேன். இணைக்கவில்லை என்று தெரிந்தது. பின்னர் இப்போது இணைத்து விட்டேன். ஒரு சிறிய பின் குறிப்புடன்.
பதிலளிநீக்குதி/கீதா, கஞ்சி வேலை முடிச்சுட்டுக் காஃபியும் ஆத்திட்டு சாவகாசமாத் தான் வந்தேன்! :)))) இன்னிக்கு நாலாவதோ, மூணாவதோனு நினைச்சுட்டு வந்தால் யாருமே இல்லை! ஹிஹிஹி!//
பதிலளிநீக்குஹா ஹா ஹா ஹா அட கீதாக்கா அப்ப எபி தான் லேட்டு!!!! துரை சகோவுக்கும் எபி திறக்கல... கை கொடுங்க!!! பொக்கே ஃபர்ஸ்ட்டூஊஊஊஊக்கு....இது பூஸாரின் கண்ணில் படணும்....கொஞ்சம் க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சொல்லிவுட்டுப் போவார்...ஹா ஹா
ஹான் ஸ்ரீராம் இப்பத்தான் புவனா அவர்களின் ஃபோட்டோ தெரியுது!!! முதல்ல தெரியலை...எபி யில் என்னெல்லாமோ மாயம் மந்திரம் எல்லாம் நடக்குது...எபி கதவு அலி பாபாவும் 40 திருடர்களும்ல வர மாதிரி அண்டா காகசம் கதவு, அந்தமாதிரியான உலகமோ!!! ஹா ஹா ஹா ஹா..
கீதா
காலை வணக்கம்!
பதிலளிநீக்குமுதலில் படம் இணைத்திருந்ததாய் நினைத்திருந்தேன். இணைக்கவில்லை என்று தெரிந்தது. பின்னர் இப்போது இணைத்து விட்டேன். ஒரு சிறிய பின் குறிப்புடன்.//
பதிலளிநீக்குஓகே ரைட்டோ!! பி கு பார்த்தேன் அப்பாவி தங்கமணி இப்ப நினைவுக்கு வந்துருச்சு....நம்ம தளத்துக்கு வந்தப்ப அவங்க தளம் போய்ப் பார்த்தேன்..அப்புறம் நானும் தங்கமணி என்று கதையில் எங்கள் ஊர்ப் பெண்ணின் பெயரைப் பயன்படுத்தியப்ப..பின்னூட்டத்தில் நெல்லையின் பின்னூட்டமும் நினைவுக்கு வந்துச்சு...
கீதா
காலை வணக்கம் பானு அக்கா.
பதிலளிநீக்குஅருமையான கதை
பதிலளிநீக்குகதாசிரியருக்கு வாழ்த்துகள்
நன்றி நண்பரே
அன்பின் கீ சா அவங்க வீட்டுக்கு முன்னால நரி ஏதும் சுற்றி வருதா..ந்டு பார்க்க வேணும்....
பதிலளிநீக்கு//அந்தக் காலத்துல என் மாமியார் கண் காட்டினாத்தான் என் வீட்டுக்காரர் நிழலையே பார்ப்பேன்//
பதிலளிநீக்குஆகவே அன்று விவாஹரத்துகள் குறைவு
(மீனாட்சியும் சுந்தரேசனும் பார்க்க போன படத்தில்கூட கடைசிவரை விவாஹரத்து ஆகாது)
//இது என் பேவரிட் ஹீரோ விஜய் நடிச்ச புதுப்படம்//
ஆகவே இன்று விவாஹரத்துகள் பெறுகி விட்டன.
(இவன் நடித்த படத்தில் ஒரு வருட குத்தகைக்கு மனைவியோ)
காலம் மாறவில்லை மனிதனின் எண்ணங்கள் அழுக்கடைந்து விட்டன அதை ஒத்துக் கொள்ளாத மனிதன் காலம் மாறி விட்டது என்று பொய் சொல்கின்றான்.
இயற்கை ஒருபோதும் மாறாது
வாழ்த்துகள் திருமதி. புவனா கோவிந்த் கதையை அல்ல! வாழ்க்கையை மிகவும் இரசித்தேன்.
போதும் இதற்கு மேல் எழுதினால் நண்பர் நெல்லைத்தமிழன் நீங்கள் இந்தக்கால ஆளில்லை என்று சொன்னாலும் சொல்வார் எதுக்கு வம்பு நான் போறேன் ஊரணிக்கு குளிக்க...
"கேட்டு வாங்கி கதை"யை போட்ட "எங்கள் பிளாக்"'குக்கும், கருத்தும் வாழ்த்தும் அளித்த அனைவருக்கும் மிக்க நன்றி :) என்னோட பிளாக்ல எதுவும் எழுத நேரமிமலலைனு தற்காலிகமா சாத்தி வெச்சிருக்கேன், அதான் லின்க் ஆகி இருக்காது, நன்றி மீண்டும் :)
பதிலளிநீக்குகீதா பாட்டி சாரி சாரி கீதா மாமி :) - yes yes the same ATM. எல்லா மாமியாரும் உங்கள போல நல்லவங்க இல்லயே, இன்னைக்கும் இந்த கதைல வர்றத போல மாமியார்கள் நிறையவே உண்டு :(
பின்குறிப்பு : இந்த கதை வேற எங்கயும் போடல மாமி, புதுசு தான்
வாழ்த்துகள்! இருவருக்கும்!
பதிலளிநீக்குநல்ல கதை. சுவாரசியமா எழுதியிருக்காங்க. 'காரணங்கள்' மாறுபடலாமே தவிர இது பெரும்பாலும் 'பெண்' மனைவியாக ஆகும்போதும், 'தாயாக' ஆகும்போதும் அவங்களோட பார்வையும், எதிர்பார்ப்புகளும் மாறிக்கொண்டே இருக்கிறது.
பதிலளிநீக்குஇதுல எக்செப்ஷன்ஸ் என்பது ரொம்ப ரொம்ப அபூர்வம். எப்போவும் தலைமுறை இடைவெளி இருந்துகொண்டே இருக்கும். பொதுவா, பெற்றோர், தங்கள் பையன் திருமணம் ஆனபிறகு, அவங்க குடும்பத் தலைவர்/தலைவி என்பதைப் புரிந்துகொண்டு, சகித்துக்கொண்டு, இருக்கும் நிலைமையை இன்னும் மகிழ்ச்சியாக்க என்ன செய்யவேணும் என்று புரிந்துகொண்டு, முடிந்த அளவு 'காதைக் கூர்மையாக வைத்தும்', 'வாயை எப்போதும் மூடிவைத்தும்' இருப்பது, பாராட்டுவதற்கு மட்டுமே திறப்பது, முடிந்த அளவு மருமகளைப் பாராட்டுவது, வாய்ப்பு இருக்கும்போது பையனை விட அவளை ஆதரித்துப் பேசுவது என்றுதான் இருக்கவேண்டும். அதுவே எல்லோருக்கும் மகிழ்ச்சியளிக்கும்.
சிறப்பு. அருமை. சிறப்பான கதையோட்டம். வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குஇலக்கியம் | அரசியல் | விளையாட்டு | பல்சுவை | வெள்ளித்திரை | தொழிநுட்பம் -அனைத்துத் தகவல்களையும் அழகு தமிழில் தாங்கி வரும் உங்கள் இணையத்தளம் - சிகரம்
https://www.sigaram.co
என் ஜொந்தக் கதை ஜோகக் கதை கொஞ்சம் கேளுங்கோ:)..
பதிலளிநீக்குஇன்று புதன் கிழமை ஆச்சே கெள அண்ணன் ஸ்லீப் பண்ணுவார்:) என புளொக்கை காலையில் அவசரமா எட்டிப் பார்க்கல்ல:).. பிறகுதான் கிட்னியில் தட்டிச்சுது இல்லையே இன்று செவ்வாய்கிழமை விரத நாளாச்சே... ஓ கதை கதை.. இன்று ஆருடையதோ என ஓடி வந்தால் ...
அடி என்னடி மீனாட்ஷி:)... தலைப்புப் பார்த்ததும்.. ஆஆஆஆஆஆ வெள்ளிக்கிழமை வீடியோவாஆஆஆ.. இது ஒரு தடவை நான் போடோணும் என நினைச்சிருந்தேனே.. ஸ்ரீராம் முந்திட்டாரே:).. என நினைச்சு கீழே இறங்கினால்:).
புவனாவின் கதை.. யாரோ தெரியாதவர் என நினைச்சனா.. அது நம்மட அப்பாவி டங்கமணி:).. ஹையோ இது கூடப் பறவாயில்லிங்கோ...:)
கீசாக்காவாமே 1ஸ்ட்டூஊஊஊஊ:).. அதுவும் கஞ்சி எல்லாம் காச்சி வச்சிட்டு வந்தும் 1ஸ்ட்டாமே:)) தான் தான் முதலாவது எண்டதால .. அவவுக்கு டமில்கூட வரல்ல:) ஒரே ஈங்கிலீசுதான் வந்திருக்குப் பாருங்கோ இதுதான் வாயடைச்சுப் போதல் என்பினம் அதுவா இருக்குமோ?:).. துரை அண்ணன் இண்டைக்கும் சார்ஜரை மறந்திட்டர் போல கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..
சரி எவ்வளவோ தாங்கிட்டோம் இதைத் தாங்க மாட்டனோ:) என நினைச்சனா:))... முந்தேநாள் கீசாக்கா 1ஸ்ட்டா வந்ததுக்கு துரை அண்ணன் பால் ஆயாசம் குடுங்கோ என்றார்ர்:).. இண்டைக்கு அவ வந்ததுக்கு கீதா பொக்கே குடுக்கட்டாமே:).. ஹையோ வைரவா அந்த பொக்கேக்குள்ள நல்ல குண்டுத் தேனி இருக்கச் செய்யப்பா:))..
பின்ன என்னவாம் நேற்று 1ஸ்ட்டா வந்த நேக்கு:)) ஒரு ரீ கூட இல்லாமல்.. நானே போட்டுக் குடிச்சனே கர்ர்ர்ர்ர்ர்:)).. இதுக்கு மேலயும் மீ பொறுப்பனோ?:)).. இதோ புறப்படுறேன்ன்ன் சுப்பையா அங்கிள் கோர்ட்டுக்கு நேக்கு நீடி:) வேணும்ம்ம்ம்ம்ம்:)).. தேவர்கோட்டையைப்போல ஒரு ஜாதிக்கலவரம் [உப்தய்க்லம்வ: ந்ம்ெல்லைத்தமிழன்:)] ஹா ஹா ஹா உருவாக்காமல் இந்தப் புயல் ஓயாதூஊஊஊஊஊஊஊஊஉ:))..
என்னைத் தடுக்காதீங்கோ.. ஹையொ என் செக் எங்கே.. ஒரு சோடா உடைச்சுக் குடுங்கோ.. கை கால் எல்லாம் நடுங்குது:))
அது உபயம்: நெல்லைத்தமிழன் எனப் போட்டேன்ன் நாக்குக் குளறுதே:))
பதிலளிநீக்கு//கீசாக்காவாமே 1ஸ்ட்டூஊஊஊஊ:).. அதுவும் கஞ்சி எல்லாம் காச்சி வச்சிட்டு வந்தும் 1ஸ்ட்டாமே:)) தான் தான் முதலாவது எண்டதால .. அவவுக்கு டமில்கூட வரல்ல:) ஒரே ஈங்கிலீசுதான் வந்திருக்குப் பாருங்கோ இதுதான் வாயடைச்சுப் போதல் என்பினம் அதுவா இருக்குமோ?:).. துரை அண்ணன் இண்டைக்கும் சார்ஜரை மறந்திட்டர் போல கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))../// ஹாஹாஹாஹா, துரை சொல்றாப்போல் நரி முகத்தில் முழிச்சேனோ! :))))
பதிலளிநீக்கு///KILLERGEE Devakottai said...
பதிலளிநீக்கு//அந்தக் காலத்துல என் மாமியார் கண் காட்டினாத்தான் என் வீட்டுக்காரர் நிழலையே பார்ப்பேன்//
ஆகவே அன்று விவாஹரத்துகள் குறைவு///
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்* 237658498 :) எல்லோரும் ஓடி வந்து ஒரு கை குடுங்கோஓஓஒ இண்டைக்கு கில்லர்ஜியை தேம்ஸ்ல தள்ளாமல் எனக்கு தொண்டையால தண்ணியே இறங்காதூஊஊஊ:).. என்னா பேச்சுப் பேசுறார் கில்லர்ஜி கர்ர்ர்:)).. அவ என்ன வேலைக்காரியாகக்கூட மதிப்பிருக்காதே வீட்டில்.. அதுக்கு எதுக்கு திருமணம் செய்து குடுக்கோணும்:))..
ஹையோ இன்னும் கதை படிக்காமலேயே மீ பொயிங்கிறேன்ன்.. நில்லுங்கோ கதை படிச்சிட்டு வாறேன்ன்:)) ஹா ஹா ஹா..
////// ஹாஹாஹாஹா, துரை சொல்றாப்போல் நரி முகத்தில் முழிச்சேனோ! :))))//
பதிலளிநீக்குஇல்ல கீசாக்கா அது நீங்க கடக ராசியாச்சே:)).. இந்த வருடம் முழுக்க “வெள்ளி துலாவிலயாமே”.. அதுதான் போல:))
//இல்ல கீசாக்கா அது நீங்க கடக ராசியாச்சே:))// நான் கடகராசியே இல்லை! என்னனு கண்டுபிடிங்க பார்க்கலாம்! :) உங்களாலே முடியாது!
பதிலளிநீக்குஹா ஹா ஹா அழகிய கதை.. அக்காலத்தையும் இக்காலத்தையும் ஒப்பிட்டுச் சொல்லும் கதை நல்ல சுவாரஸ்யமாக இருக்கு.. அப்பாவி டங்கமணி.. இந்த “அப்பாவி அடிராவை”:) நினைவிருக்கும் தானே.
பதிலளிநீக்குநிறைய விசயங்கள் இதில் சொல்ல மனம் துடிக்குது.. அதாவது வாழையடி வாழை போலத்தானே இந்த மாமி மருமகள்.. திரும்ப மாமி இன்னொரு மருமகள்... இப்படியே போகுது.. இதில் மாமியாக வருபவ நடத்தும் விதத்திலேயே மருமகளுக்கு எண்ணம் வரோணும் தன் மருமகளையும் இப்படியே தான் நடத்தோணும் என... கொடுமையை அனுபவிச்சால்ல்.. நான் அக்காலத்தில் எவ்ளோ கொடுமைகளை என் மாமியிடம் அனுபவிச்சேன் இப்போ நீ மட்டும் சொகுசாக இருக்க விட்டிடுவேனா என சில மாமிகள் எண்ணுகிறார்கள் போலும்..
///"பின்ன என்ன? நானெல்லாம் அந்த காலத்துல உங்க அம்மா முன்னாடி உங்கள்ட்ட ரெண்டு வார்த்த பேசவே யோசிப்பேன். இவ என்னடான்னா பேர் வெச்சவளாட்டமா வார்த்தைக்கு வார்த்தை சஞ்சய் சஞ்சய்னு, ச்சே ச்சே. அது மட்டுமா, நம்ம முன்னாடியே என் பேவரெட் ஹீரோ விஜய்னு, கேக்கவே கூசுதுண்ணா. ///
மாமி தன் மருமகளை நல்லபடி நடத்தினால்.. அப்படியே தனக்கு வரும் மருமகளையும் தான் நடத்தோணும் எனும் எண்ணம் உருவாகும் என நினைக்கிறேன்.. சிலர் மட்டும், தான் பட்ட துன்பம் தன் மருமகளுக்கு கொடுக்கக்கூடாது என நினைப்பினம்.. ஆனா அதுக்கு எல்லோர் மனமும் பக்குவப்பட்டிருக்காதே.
பதிலளிநீக்குஎன் மாமி .... நான் வேண்டாம் மாமி எனச் சொன்னாலும், சோபாவில் சரிஞ்சிருந்து ரி வி பார்க்கும்போது ரீ போட்டுக் கொண்டு வந்து கையில் தந்து குடியுங்கோடா என்பா...
இடியப்பம் அவிக்கும்போது சுடச்சுட ரெண்டு எடுத்து அதனுள் சீனியும் தேங்காய்ப்பூவும் போட்டுக் குழைத்து சாப்பிட அவவுக்கு பிடிக்கும்... அப்படியே கொண்டு வந்து என் கணவருக்கு ஒரு வாய் தீத்தி.. எனக்கும் ஒரு வாய் தீத்திப்போட்டுப் போவா.. தன் குழந்தைகள்போலவே பார்ப்பா.. மாமாவும் அப்படியே... பழங்கள் கட் பண்ணி எடுத்து வந்து கையில் தந்திட்டுப் போவார்ர்...
இதனாலோ என்னமோ எனக்கும் எப்பவும், எனக்கு வரும் மருமகள்களை.. குழந்தைகள்போலவே பார்க்கோணும் எனும் எண்ணமே எப்பவும் மனதில் இருக்கு... என் பிள்ளைகளோடு இப்பவும் அடிச்சுப் பிடிச்சு விளையாடுவேன்.. சாப்பாடு தீத்தி விடுவேன்.. அப்படியே மருமகள் மாருக்கும் செய்யோணும் எனத்தான் ஆசை:)) பார்ப்போம் அப்போ மனநிலை எப்படி ஆகுமென:))[இந்தச் சாட்டில மருமகளுக்கு அடிக்கப் போறீங்களோ எனக் கேய்க்கப்புடா கர்ர்ர்:))]
///Geetha Sambasivam said...
பதிலளிநீக்கு//இல்ல கீசாக்கா அது நீங்க கடக ராசியாச்சே:))// நான் கடகராசியே இல்லை! என்னனு கண்டுபிடிங்க பார்க்கலாம்! :) உங்களாலே முடியாது!///
ஹா ஹா ஹா ஒரு நாளைக்கு ஒரு ராசியா சொல்லி வருவோம்.. முடிவில உண்மை தெரியவரும் :) எனும் தெக்கினிக்கை :) ஊஸ் பண்ண நினைச்சேன்ன்.. அப்போ நீங்க மேஷம் அல்லது மீனம்:))
எளிமையான கதை. பாராட்டுக்கள்!
பதிலளிநீக்குஇனிய எளிய கதை பாராட்டுக்குரியது
பதிலளிநீக்குசீதை-ராமனைப்போல் மாமியார்-மருமகள்..ஹ்ம்..ஓட்டினால் சரி.
பதிலளிநீக்குஒரு டவுட். கதாசாரியர் படம் மேலே இருப்பது என்றால், இந்த தங்கமணி யாரோ? புஷ்பா தங்கதுரை ஸ்டைலா?
1984 / 2018 .காலங்கள் மாறினாலும் காட்சிகள் சேம் ..பிறகு மாமியார் சுவாதிக்கு கொழுக்கட்டை செய்ய கிச்சனுக்குள் நுழைவது அன்பின் வெளிப்பாடு .அழகான கதை அப்பாவி தங்கமணி
பதிலளிநீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குநல்ல கதை. பழைய நினைவுகளை ஞாபகபடுத்தியதும், திருந்தி விட்ட மாமியாரை கண்டிப்பாக பாராட்டியே ஆக வேண்டும். உண்மையிலேயே நல்ல மனமிருந்தால்தான் இது சாத்தியமாகியிருக்கிறது. அன்பை மறவாத அழகான கதை தந்த கதாசிரியருக்கு பாராட்டுக்கள். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சு? எல்லா சுந்தரேசன்களும் எப்போதோ உணர்ந்தாச்சு. மீனாட்சிகளெல்லாம் உணர்வதற்குக் காலதாமதம் ஆகியது. நல்ல கருத்தாகக் கதை நகர்வது கால மாற்றம். வரவேற்கத் தக்கது. மாமியார்களுக்கு சீரியல் போதும் என்று நினைக்கும் காலமிது. பாடலும் கதையும் அனாயாஸமாகப் பொருந்துகிறது. எத்தனை தாமதமானாலும் பின்னூட்டமிடவேண்டும் என்ற உந்துதலை ஏற்படுத்திய ஸ்வாரஸ்யம். அன்புடன்
பதிலளிநீக்குஎனக்கு கதை மிகவும் பிடித்து விட்டது.
பதிலளிநீக்குகாலத்திற்கு ஏற்ற கதை.
புவனா கோவிந்த்க்கு வாழ்த்துக்கள்.
மீனாட்சி சபத ப்ளாஷ்பேக்கை கண்வர் நிணியவு படுத்திய விதம் அருமை.
//'வாயை எப்போதும் மூடிவைத்தும்' இருப்பது, பாராட்டுவதற்கு மட்டுமே திறப்பது, முடிந்த அளவு மருமகளைப் பாராட்டுவது, வாய்ப்பு இருக்கும்போது பையனை விட அவளை ஆதரித்துப் பேசுவது என்றுதான் இருக்கவேண்டும். அதுவே எல்லோருக்கும் மகிழ்ச்சியளிக்கும்.//
அருமையாக சொன்னீர்கள் நெல்லைத் தமிழன்.
நான் அப்படித்தான் நடந்து வருகிறேன்.
என் மாமியார் அதிரா சொல்வது போல் சுட சுட உணவு தருவார்கள்.
சூடாய் சாப்பிட பிடிக்கும் அவர்களுக்கு அது போல் நமக்கும் தருவார்கள்.
நானும் மருமகள் வந்தால் அவளுக்கு பிடித்த உணவை சமைத்து கொடுப்பேன் புவனா கோவிந்த் சொல்வது போல்.
நேற்று ஒரு கல்யாணத்திற்கு போனேன். கலயாணம் முடிந்து மாலை நலங்கில் மாமியார் சாமி பாடல் , சினிமா பாடல் பாடினார், மாமியாரின் அண்ணா அருமையாக பாடினார். மாப்பிள்ளை பையன் புது பாடல் மனைவியை எதிர்பார்க்கும் பாடல் பாடினார் பாடல் புதுசு என்பதால் நினைவுக்கு வரவில்லை, வரிகள் அருமையாக இருந்தது. பென்ணையும் வற்புறுத்தி பாட வைத்தார்கள். மாமியார் அப்புறம் ஆடினார், பெண் மாப்பிள்ளை எல்லோரும் ஆடினார்கள்.வந்திருந்த மாப்பிள்ளை சொந்தங்கள் எல்லோரும் பழைய புதிய என்று பாடல்கள் பாடி அசத்தினார்கள்.
மாமியார் நலங்கில் மருமகளுக்கு சப்போர்ட் செய்தார்கள். (அப்பளம் தட்டும் போது)
மாமியார், மருமகள் உறவு நன்றாக எப்போதும் இப்படி மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று வந்தவர் அனைவரும் வாழ்த்தினர்.
க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
பதிலளிநீக்குஓஹோ, இன்னிக்கு பு.கி. கேஜிஜி இன்னும் எழுந்துக்கலையா? ஓகே, ஓகே!
பதிலளிநீக்கு//..ஓஹோ, இன்னும் கேஜிஜி எழுந்துக்கலையா? ஓகே!//
பதிலளிநீக்குமாமி காப்பிப் போட்டுக்கொண்டு வந்தால்தானே எழுந்திருக்கமுடியும்?
ஆஹா.... இட்லி புகழ் அல்பாவி எழுதிய கதை நன்று.
பதிலளிநீக்குஎன்னது!?
பதிலளிநீக்கு10.30 ஆகின்றதே!..
சென்ற வார ரிசல்ட் வெளியாக வேண்டுமே!..
//மாமி காப்பிப் போட்டுக்கொண்டு வந்தால்தானே எழுந்திருக்கமுடியும்?// மாமிக்கும் சேர்த்து கேஜிஜி தான் போடுவார்னு கேள்வி! சரிதானே மிஸஸ் கேஜிஜி! நீங்க சொன்னாப்போல் சொல்லிட்டேன்! :)
பதிலளிநீக்குவருஷக் கணக்கிட்டு எழுதிய முறை நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குகணவனை விளிக்கும் பொழுது, 'அண்ணா'வுக்கும் 'அன்னா'வுக்கும் வித்தியாசம் தெரியும் படி எழுத்தில் எழுதும் பொழுது எழுத வேண்டும்.
கேக்கவே கூசுதுண்ணா -- நீங்க சொல்றது சரிதாண்ணா --
-- என்கிற இடங்களில்
கேக்கவே கூசுதுன்னா -- நீங்க சொல்றது சரிதான்னா..
என்று எழுதி அண்ணன், கணவன் வித்தியாசத்தைக் காட்டலாம்.