வெள்ளி, 23 பிப்ரவரி, 2018

வெள்ளி வீடியோ 20180223 : அடி இரவில் மலரும் பூவே - எந்தன் இளமை பருகும் தேனே



     "மத்தியானம் பன்னிரண்டு மணி, ஒரு மணி இருக்குங்க...   வெய்யில்...   அப்போ என் காதலியைப் பார்த்தேன்..."  என்றோ  

     "காலை எழுந்து பல்விளக்கும் முன்னரே காதலியைப் பார்த்தேன்" என்றோ யாரும் சொல்வதில்லை!  ஏனோ காதலியை எல்லோரும் மாலையில் - அதுவும்  அந்தியும் மாலையும் கூடும் வேளையிலேயே - சந்திக்க விழைகிறார்கள்!  முன்னது கடுப்பு.  பின்னது நடக்க முடியாதது என்பதால் (பெரும்பாலும்)

     இன்று இளமாலை நேரம் வந்த ஒரு காதலியைப் பார்ப்போம்.  



     அனுராதா ரமணன் எழுதிய கூட்டுப்புழுக்கள் நாவல் படமானது.  அதில் வந்த பாடல்.  ஆர் ஸி சக்தி இயக்கம்.  



      புலமைப்பித்தன் எழுதி, எம் எஸ் விஸ்வநாதன் இசையில் எஸ் பி பி பாடிய பாடல்.  எம் எஸ் விஸ்வநாதனும் இடையிடையில் ஸ்வரம் பாடுவார்.  வெளிவந்த ஆண்டு 1987. 

     ஒரு சிறு புதிர்.  ரகுவரன் கையில் வைத்திருக்கும் புத்தகம் என்ன?



     ரகுவரன்-அமலா காதலர்களாக நடித்த படம்.  இதில்தான் ரகுவரனுக்கு அமலா மேல் காதல் வந்தது போலும்.  எப்போதோ அவர் தயாரித்த ஒரு குமுதம் இதழில் சொல்லி இருந்ததாய் நினைவு.  அமலா நாகார்ஜுனைக் காதலித்து கடிமணம் புரிந்தார்.  (இன்று அவர் மகன் நாகசைதன்யா சமந்தாவை காதலித்து மணந்திருக்கிறார்)



      அழகான ரகுவரன் - அழகான அமலா.   தாவணி அணிந்த அமலா.  காட்சியை ரசிக்கலாம்.  ரகுவரனுக்கு காதல் உணர்வை முகத்தில் காட்டவே தெரியவில்லை!  அழகாய் இருந்தால் போதுமா!   ஆனால் எஸ் பி பி குரலின் இனிமையை ரசிக்க காட்சியைப் பார்க்காமலும் ஒருமுறை கேட்கவும்!  



நித்தம் நித்தம் என் கண்ணோடு இன்பக்கனா 
நெஞ்சம் எங்கும் வெண் பன்னீரைச் சிந்தும் நிலா 
இளமாலை நேரம் வந்தாள் விழியோரம் ஏதோ சொன்னாள் 
எதையோ நினைத்தாய்  சிரித்தாய் ஓடினாய் 

மண்ணிலே வீடுகட்டி ஆடவந்தாய் நேற்று நெஞ்சிலே 
கூடுகட்டி வாழவந்தாய் இன்று 
அந்த மலரும் நினைவு தோன்றும் 
அதில் உலகம் மறந்து போகும் 
அந்த உறவு தொடர வேண்டும் இன்பக் 
கனவு பலிக்க வேண்டும் 


மின்னலோ சேலைகட்டி வீதி எங்கும் போகும் அம்மம்மா 
பார்த்திருந்தால் கண்கள் பட்டு போகும் 
இது பருவம் அளித்த சீரோ  உன்னைப் 
படைத்த கலைஞன் யாரோ 
அடி இரவில் மலரும் பூவே  - எந்தன் 
இளமை பருகும் தேனே 










85 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம்..

    துரை அண்ணா ஸ்ரீராம்..

    கீதா

    பதிலளிநீக்கு
  2. அட!! என்ன இன்று யாரையும் காணோம்...எல்லோரும் ஸ்பாமில் ஒளிஞ்சுட்டுருக்காங்களோ!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  3. அன்பின் ஸ்ரீராம் மற்றும் கீதா/கீதா அனைவருக்கும் வணக்கம்...

    பதிலளிநீக்கு
  4. காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார். "வந்துட்டேன் நான்" என்று நீங்கள் நேற்றைய பதிவில் அட்டெண்டன்ஸ் போட்ட நேரம் கீதா முந்திக்கொண்டார் போலும்!!!!!!

    பதிலளிநீக்கு
  5. அதிராஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஅ அங்கு கேக்குதா.....ஓ இப்ப நீங்க நல்ல நித்திரையில் இருப்பீங்க..குர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....சரி சரி வேற ஒண்ணுமில்லை இன்னிக்கும் நான் தான் ஃபர்ஸ்ட்டூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊனு சொல்லத்தான் ஹா ஹா ஹா ஹா ...அதிசயம் ஆச்சரியம்

    கீதா

    பதிலளிநீக்கு
  6. இந்தப் பாடலை இப்போது தான் கேட்கிறேன்...

    நன்றாகத் தானே இருக்கிறது...

    பதிலளிநீக்கு
  7. இன்று பதிவு சீக்கிரம் வரும் என்றதை மறந்து போனேன்...

    பதிலளிநீக்கு
  8. துரை அண்ணா நலமா...இன்று பதிவு கொஞ்சம் ஒரு நிமிடம் முன்ன போடறேன்னு ஸ்ரீராம் சொல்லிருந்தாரே...

    கீதா

    பதிலளிநீக்கு
  9. சரி...இருக்கட்டும்...
    அமலா பாட்டைக் கேட்டுட்டு அப்படியே நம்ம தளத்துக்கு வாங்க எல்லாரும்...

    பதிலளிநீக்கு
  10. காலை வணக்கம்! பின்னர் வருகிறேன்.

    பதிலளிநீக்கு
  11. அருமை. இப்போதுதான் முதல்முறை கேட்கிறேன்; அல்லது என் கவனத்திற்கு வந்துள்ளது...! இனிமை.

    பதிலளிநீக்கு
  12. ரகுவரம் டூயட் பாடியிருக்கிறாரா
    வியப்பாக இருந்தது
    நன்றி நண்பரே

    பதிலளிநீக்கு
  13. நன்றி பாரதி. முதல் முறை என்பது ஆச்சர்யமே.

    பதிலளிநீக்கு
  14. ரகுவரன் கையில் ரீடர்ஸ் டைஜஸ்டா? இப்படி ஒரு படம் வந்ததும் தெரியாது. பாட்டும் கேட்டதில்லை! ஹிஹிஹி! :)

    பதிலளிநீக்கு
  15. இப்பாடல் நான் முன்பு கேட்டதாக நினைவு இல்லை பாடல் ரசிக்க வைத்தது.

    பதிலளிநீக்கு
  16. இந்தப் பாடல் இப்பத்தான் கேக்கறேன் ஸ்ரீராம்...நல்லாருக்கு ...ஹம்மிங்க் எம் எஸ் வி இல்லையா!! வரிகள் இருவர் எழுதிருக்காங்க...புலமை பித்தன் அண்ட் உமா கண்ணதாசன்?? கண்ணதாசன் மகளா?

    ரகுவரன் ஹீரோ அதுவும் காதல் ஸீனுக்கெல்லாம் பொருந்த மாட்டார்....வில்லனாக நடிக்கத்தான் அவர்...

    கீதா

    பதிலளிநீக்கு
  17. ரகுவரனுக்கு காதல் உணர்வை முகத்தில் காட்டவே தெரியவில்லை! //

    ஏழை பாட்டு வாத்தியார் பையன், தனக்கு கீழ் தங்கை, தம்பியை படிக்க வைக்க வேலை தேடும் பைனாக நடிப்பார். அப்பாவுக்கு பயந்தவர். அமலாதான் கனவில் ரகுவரன் பாடுவது போல் நினைக்கிறார். அதனால் அந்த முகபாவம் இது போதும் என்று நினைத்து இருப்பார் சக்தி.

    ரகுவரன் வேலை வாய்ப்புக்கு பொது அறிவு புத்தகம் கையில் வைத்து இருக்கிறார்
    என்று நினைக்கிறேன்.
    படம் மூழுவதும் சோகமாய் தான் இருப்பார் ரகுவரன்.

    // இன்பக்
    கனவு பலிக்க வேண்டும்//

    பலிக்கவே இல்லை.

    இப்போது ஒருவாரம் முன்பு தொலைக்காட்சியில் வைத்தார்கள் இந்த படம் பாதி பார்த்தேன்.

    பதிலளிநீக்கு
  18. ரெம்ப நல்ல பாடல். முன்பு இலங்கை வானொலியில் கேட்டது. இப்போ இப்பாடல் வானொலியில் ஒலிபரப்பி கேட்டதே இல்லை. எஸ்.பி.பி யின் குரல் இனிமை ரசிக்கவைக்கிறது..

    பதிலளிநீக்கு
  19. ரசிக்க வைக்கிறது - பாடலும், அமலாவும் ;)

    பதிலளிநீக்கு
  20. படம்,பாடல் இரண்டுமே இப்போதுதான் முதல் முறையாக கேள்விப்படுகிறேன்.
    ரகுவரன் என்ன கமல்ஹாசனைத்தவிர வேறு எந்த ஹீரோ காதலை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள்? நாமெல்லாம் அப்போது ஹீரோயினை கவனித்துக் கொண்டிருந்ததால் அதை பொருட்படுத்துவதில்லை ஹாஹாஹா

    பதிலளிநீக்கு
  21. //கமல்ஹாசனைத்தவிர வேறு எந்த ஹீரோ காதலை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள்? // ஹெஹெஹெஹெஹெஹெஹெஹெ ஹிஹிஹிஹிஹிஹிஹி! :)))))

    பதிலளிநீக்கு
  22. எல்லோருக்கும் இனிய வணக்கம்!

    சகோ.. இப்பொழுதுதான் இந்தப் பாடலைக் கேட்கின்றேன். என்றும் சொல்வதுதான் காட்சியைவிடப் பாடலைக் கேட்பது எனக்குப் பிடித்தமான விடயம்.
    இந்தப் பாடலும் எஸ் பி பி இழைய இழையப் பாடியிருப்பது திரும்பத் திரும்பக் கேட்க வைத்தது.

    நல்ல பாடல். வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  23. @ கீதா சாம்பசிவம்: //.. ஹெஹெ.. ஹிஹி..//

    இதற்கென்ன அர்த்தம்? கமலுக்குத்தான் உங்கள் ஓட்டா? ரகுவரனின் அருமை உங்களுக்கெல்லாம் தெரிய வாய்ப்பில்லை!

    பதிலளிநீக்கு
  24. //இதற்கென்ன அர்த்தம்? கமலுக்குத்தான் உங்கள் ஓட்டா?// க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், இந்த அநியாயத்தைக் கேட்பார் இல்லையா? எனக்குக் கோபமும் வருத்தமும் பொயிங்கி (சரியா அதிரடி?) வருதே! லெக்ஸும் ஓடலை! ஹாண்ட்ஸும் சேச்சே, காண்ட்ஸும் ஓடலை. இதோ இப்போவே ஓடிப் போய் ஜன்னல் வழியாக் காவிரியில் குதிக்கப் போறேன்! :)))))

    பதிலளிநீக்கு
  25. ஏகாந்தன் சார், அந்தக் கமலுக்கு நான் வைச்ச பெயர் "உல"க்"கை நாயகன்! போயும் போயும் அவரோட ரசிகைனு சொல்லி என் மனசைப் புண்படுத்திட்டீங்க! :))) சொல்லப் போனால் எனக்கு ஆரம்பத்தில் ஜெமினி, முத்துராமன், சிவகுமார் கொஞ்சம் கொஞ்சம் பிடிச்சுட்டு இருந்தது. ஆனால் சில, பல படங்களைப் பார்த்ததும் தலையில் அடிச்சுக்கலாமானு தோணும்! :)))) ஆகவே இப்போப் பிடிச்ச நடிகர், நடிகைனு யாருமே இல்லை. ரகுவரன் நடிப்புப் பிடிக்கும். வில்லனாக நடிக்கையில்! இந்தப் படம்ஹீரோவாக நடிச்சது பார்த்தது இல்லை. அவ்வளவு ஏன்! இப்படி ஒரு படம் வந்ததே தெரியாது. பொதுவாக எனக்குத் திரைப்பட அறிவு பூஜ்யம்! :))))

    பதிலளிநீக்கு
  26. ஆனாலும் ஜெமினி மிஸ்ஸியம்மாவிலும் (ஹிஹிஹி) முத்துராமன் சூரியகாந்தியிலும் சிவகுமார் ரோசாப்பூ ரவிக்கைக்காரி படத்திலும் நல்லா நடிச்சிருந்தாங்க! :)))) ஏதோ ஒரு படத்திலே அரைப்பைத்தியமா நடிச்சிருப்பார்! அதுவும் நல்லா இருக்கும்.

    பி.கு. இந்தப் படங்கள் எல்லாம் தொலைக்காட்சியில் பார்த்தவை. அதுவும் சென்னை தூர்தர்ஷனில் ஆரம்ப காலங்களில் போட்ட சில படங்களில் இவையும்! :))))நான் அதிகம் திரைப்படம் பார்த்ததே தொலைக்காட்சி மூலமே! :))))

    பதிலளிநீக்கு
  27. ஜிவாஜி நடிச்சே ஒரே படம் (ஹிஹிஹி) முதல் மரியாதை மட்டும்! :))))

    பதிலளிநீக்கு
  28. அப்பாடா! இன்னிக்குச் சாப்பாடு ஜீரணம் ஆகும்! :))))

    பதிலளிநீக்கு
  29. /////Thulasidharan V ThillaiakathuFebruary 23, 2018 at 6:02 AM
    அதிராஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஅ அங்கு கேக்குதா.....ஓ/////

    ஆஆஆஆஆ இண்டைக்கும் கீதாவோ 1ஸ்ட்டூஊஊஊ:) ஹையோ அப்போ இந்த ஷோல் ஐ கொஞ்சம் ... நான் குடுத்ததா சொல்லி கீசாக்காவுக்கு குடுங்கோ... மீ கொஞ்சம் லேட்டா வாறேன்ன்ன்ன்:)...

    பதிலளிநீக்கு
  30. //பொதுவாக எனக்குத் திரைப்பட அறிவு பூஜ்யம்// தோடா! இவங்கதான் சென்ற வார பு.பு.வில் 10/10 வாங்கினவங்க!!!

    பதிலளிநீக்கு
  31. ஏகந்தன் சார், ரகுவரன் அருமை பெருமை எல்லாம் நன்றாகவே தெரியும். அஞ்சலி, என் பொம்மு குட்டி அம்மாவுக்கு போன்ற படங்களில் மட்டுமல்ல முதல்வன் அவரைத்தவிர வேறு யாரையாவது நினைத்துப்பார்க்க முடியுமா? தனுஷீக்கு அப்பாவாக நடித்திருப்பாரே?அதுதான் கடைசி படம் என்று நினைக்கிறேன். முந்தாநாள் கூட அவருக்காக சிவப்பதிகாரம் பார்த்தேன்.

    பதிலளிநீக்கு
  32. கீதா அக்கா, முத்துராமன்,சிவகுமார் இவர்களைத்தான் பிடிக்குமா? அவர்தம் புதல்வர்கள்??

    பதிலளிநீக்கு
  33. ஹெஹெஹெ, பானுமதி, இப்போ அவங்களையே பிடிக்கலை. புதல்வர்களை எப்படிப் பிடிக்கும்! என்றாலும் காமெடியில் முத்துராமன் பிள்ளை பரவாயில்லை ரகம்! சூரியாவைச் சுத்தமாய்ப் பிடிக்காது! :)

    பதிலளிநீக்கு
  34. அது சரி, காவேரியில் போய் குதிப்பதாக சொல்கிறீர்களே? காவேரியில் தண்ணீர் இல்லை என்ற தைரியம்தானே?? ஹாஹா!

    பதிலளிநீக்கு
  35. @பானுமதி வெங்கடேஸ்வரன், உங்களோட இலக்கிய சந்தேகத்துக்கு ஒரு மாதிரி, கவனிக்கவும், ஒரு மாதிரித் தான்! பதில் சொல்லி இருக்கேன். :))))))

    பதிலளிநீக்கு
  36. //தோடா! இவங்கதான் சென்ற வார பு.பு.வில் 10/10 வாங்கினவங்க!!!// அது என்னமோ எனக்கே ஆச்சரியம்! !!!!!!!!!!!!!!!!!!

    பதிலளிநீக்கு
  37. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  38. @ கீதா சாம்பசிவம்:

    //..அநியாயத்தைக் கேட்பார் இல்லையா? எனக்குக் கோபமும் வருத்தமும் பொயிங்கி ..//

    புரிந்துகொண்டேன்..புரிந்துகொண்டேன். (இப்படி ஏதும் படமில்லையே தமிழில்)
    நீங்களும் படங்களைக் குறைவாகப் பார்ப்பவரா? திரைப்பட அறிவு பூஜ்யமா? நம்புவதில் சிரமம் இருக்கிறதே! சரி, அப்படியே வைத்துக்கொள்வோம், உங்களது சாப்பாடு ஜீரணமாகும்வரையாவது..

    (typo இருந்த கமெண்ட்டைக் காலிசெய்து மீண்டுமிட்டேன்)

    பதிலளிநீக்கு
  39. @ Bhanumathy Venkateswaran :

    //.. ரகுவரன் அருமை பெருமை எல்லாம் நன்றாகவே ..//

    நீங்கள் குறிப்பிட்ட ரகுவரன் படங்களில் ’என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு’ பார்த்திருக்கிறேன். அவரைப்போன்ற ஒரு கலைஞர் (யாருக்காவது மஞ்சள் நிறமெல்லாம் ஞாபகத்தில் வந்தால் நான் பொறுப்பில்லை) கொஞ்சம் அபூர்வம்தான் தமிழ்த்திரையில். மனுஷன் சட்டுப்புட்டுன்னு புறப்பட்டுபோய்விட்டாரே என்றிருக்கிறது.

    //..வாசக தோஷ..// சரி, சரி.

    பதிலளிநீக்கு
  40. கடைசில காணொலியையும் போட்டுப் பார்த்துட்டேன். பாடலை இதுவரை கேட்டதே இல்லை. ஶ்ரீராமின் ரசனையும் எனக்கு ஆச்சர்யமா இருக்கு. நான் இந்த அளவு திரைப்படப் பாடல்களைக் கேட்டதே இல்லை.

    பதிலளிநீக்கு
  41. கடைசில காணொலியையும் போட்டுப் பார்த்துட்டேன். பாடலை இதுவரை கேட்டதே இல்லை. ஶ்ரீராமின் ரசனையும் எனக்கு ஆச்சர்யமா இருக்கு. நான் இந்த அளவு திரைப்படப் பாடல்களைக் கேட்டதே இல்லை.

    பதிலளிநீக்கு
  42. /// "மத்தியானம் பன்னிரண்டு மணி, ஒரு மணி இருக்குங்க... வெய்யில்... அப்போ என் காதலியைப் பார்த்தேன்..." என்றோ

    "காலை எழுந்து பல்விளக்கும் முன்னரே காதலியைப் பார்த்தேன்" என்றோ யாரும் சொல்வதில்லை! ///

    ஹா ஹா ஹா வெயிலுக்குள் கறுத்துப்போய்ப் போனாலோ இல்ல வாய் மணக்க மணக்கப் போனாலோ:) காதலி கையை விட்டிடுவா எனும் பயத்திலதான் அப்படி பண்ணுகிறார்களோ என்னமோ:)..

    பதிலளிநீக்கு
  43. ///இன்று இளமாலை நேரம் வந்த ஒரு காதலியைப் பார்ப்போம். //

    ஆருடைய காதலி எண்டு ஜொள்ளவே இல்லை:)) ஜொள்ளியிருந்தா கற்பனை பண்ணுவது ஈசியாவெல்லோ இருந்திருக்கும்:) சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்:))

    பதிலளிநீக்கு
  44. //ஒரு சிறு புதிர். ரகுவரன் கையில் வைத்திருக்கும் புத்தகம் என்ன?//

    அது கவிஞர் ஸ்ரீராமின் கவிதைத் தொகுப்பு:)..

    //ரகுவரனுக்கு காதல் உணர்வை முகத்தில் காட்டவே தெரியவில்லை! அழகாய் இருந்தால் போதுமா! ///

    ஹா ஹா ஹா 100 வீதம் உண்மை.. படம் எனில் நடிக்கவும் தெரியோணும்.. நிஜ வாழ்விலும் பலர் இப்படி இருக்கிறார்கள் அதனாலேயே நல்லவர்களாக அன்பானவர்களாக இருந்தாலும் குடும்ப வாழ்க்கை தோத்து விடுகிறது.

    எந்த உணர்வையும் மனதில் வைத்திருந்தால் எப்படிப் புரியும்.. எல்லாமே புரிவது கஸ்டமெல்லோ அதனால வெளிப்படுத்திடோணும்.

    மிக நல்ல வரிகள் அடங்கிய பாடல்..
    படம் பார்த்ததில்லை.. பாடல் காதில் விழுந்திருக்கலாம் பெரிதா நினைவில்லை எனக்கு.

    பதிலளிநீக்கு
  45. ///அமலா நாகார்ஜுனைக் காதலித்து கடிமணம் புரிந்தார். //

    அவர்களின் மகனின் பெயரை எனக்கு ரொம்பப் பிடிச்சுப் போச்ச்ச்ச்:) என்பதால் எங்கள் மகனுக்கு செல்லப்பெயராக அதனை வைப்போம் என வைத்துக் கூப்பிடுகிறோம்... வீட்டில் மட்டுமல்ல ஸ்கூலில் அப்பெயர்தான் அவர் பெயரா இருக்குதிப்போ.. ஆனா அது என்ன பெயர் என அடிச்சுக் கேட்டாலும் ஜொள்ள மாட்டனேஏஏஏஏஏ:))

    பதிலளிநீக்கு
  46. ///Geetha Sambasivam said...
    //கமல்ஹாசனைத்தவிர வேறு எந்த ஹீரோ காதலை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள்? // ஹெஹெஹெஹெஹெஹெஹெஹெ ஹிஹிஹிஹிஹிஹிஹி! :)))))///

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) கீசாக்கா கமல் அங்கிள் ஃபானோ?:) நேக்குப் பிடிக்காதூஊஊஊஊ ஏன் தெரியுமோ அவரின் படங்கள் எப்பவும் குடும்பத்தோடு சேர்ந்து பார்க்க முடியாதவை கர்ர்:)).. ஹையோ எதுக்கு இப்போ கீசாக்கா என்னைக் கலைக்கிறா?:) அப்பூடி என்ன ஜொள்ளிட்டேன் நான்ன்ன்ன்:))...

    //Geetha Sambasivam said...
    ஹெஹெஹெ, பானுமதி, இப்போ அவங்களையே பிடிக்கலை. புதல்வர்களை எப்படிப் பிடிக்கும்! என்றாலும் காமெடியில் முத்துராமன் பிள்ளை பரவாயில்லை ரகம்!///

    அப்பூடிச் சொல்லுங்கோ கீசாக்கா.. முத்துராமன் மாமாவின் மூத்த மகன் கார்த்திக்கை ஆருக்குத்தான் பிடிக்காது:) சின்ன வயசிலிருந்தே எனக்கு பிடிச்ச ஹீரோ அவர்:).. ஆனா இப்போ நிறைய மாறிட்டார்.. உருவத்திலும் சரி அனைத்திலும்..

    பதிலளிநீக்கு
  47. வணக்கம் சகோதரரே

    இந்த பாடல் இதுவரை கேட்டதில்லை. எஸ். பி. பியின் குரல் இனிமையில் இன்றுதான் முதலில் ரசித்தேன். ரகுவரன் நடிப்பு அலட்டிக் கொள்ளாத இயல்பானதாக இருக்கும். எனக்கும் அவர் நடிப்பு பிடிக்கும். அவர் கையில் இருப்பது G.K புக்காயிருக்கலாம்! நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  48. "மத்தியானம் பன்னிரண்டு மணி, ஒரு மணி இருக்குங்க... வெய்யில்... அப்போ என் காதலியைப் பார்த்தேன்..." // நோ நோ நோ!!! ஸ்ரீராம் நீங்கள் எந்தக் காலத்தில் இருக்கீங்க?!!!

    சென்னையிலதானே இருக்கீங்க!!! ஹா ஹா மெரினா பார்த்ததில்லையா? மதியம்?!!!!பல படகுகள் காதல் கதை சொல்லும்..! அது போல சில பார்க்குகள்!!! காதலுக்கு நேரமாவது ஒன்னாவது!!!வெயிலாவது...இரவாவது...ஹா ஹா ஹா...

    கீதா

    பதிலளிநீக்கு
  49. அவர்களின் மகனின் பெயரை எனக்கு ரொம்பப் பிடிச்சுப் போச்ச்ச்ச்:) என்பதால் எங்கள் மகனுக்கு செல்லப்பெயராக அதனை வைப்போம் என வைத்துக் கூப்பிடுகிறோம்... வீட்டில் மட்டுமல்ல ஸ்கூலில் அப்பெயர்தான் அவர் பெயரா இருக்குதிப்போ.. ஆனா அது என்ன பெயர் என அடிச்சுக் கேட்டாலும் ஜொள்ள மாட்டனேஏஏஏஏஏ:))//

    ஹிஹிஹி பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய ரகசியம்!!! ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  50. //ஒரு சிறு புதிர். ரகுவரன் கையில் வைத்திருக்கும் புத்தகம் என்ன?//

    அது கவிஞர் ஸ்ரீராமின் கவிதைத் தொகுப்பு:)..//

    ஹைஃபைவ் அதிரா....நான் அப்படிச் சொல்லி ஸ்ரீராமைக் கலாய்க்க நினைச்சது..ரகுவரனுக்குக் காதலனாய் நடிக்க அந்த ஃபீல் காட்டவே தெரியாதே..ஸோ..ஸ்ரீராம் எழுதின காதல் கவிதை எல்லாம் வாசித்தாலாவது முகத்துல வருதோனு ...ம்ம் எனக்கும் காதல் எல்லாம்வ் வரும்னு அமலாக்கு ஜொள்ளிட...ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  51. கூட்டுப்புழுக்கள் அப்படின்ற படமே இப்பத்தான் கேள்விப்படுகிறேன். இத்தனைக்கும் நான் படங்கள் பார்ப்பவன். ராசிங்கபுரத்தில், மதுரையில், நாகர்கோவிலில் இருந்தவரை படங்கள் நிறைய பார்த்திருக்கேன். படத்தைப் பற்றி கூகுளில் பார்த்தால் தான் தெரிகிறது 1987ல் வந்த படம் என்று. நான் 85ல் கேரளாவிற்குப் போய்விட்டதால் விட்டிருக்கிறேன்...பாடலும் கேட்டதில்லை. இப்போதுதான் கேட்டேன்...பரவாயில்லை..

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  52. அது சரி, காவேரியில் போய் குதிப்பதாக சொல்கிறீர்களே? காவேரியில் தண்ணீர் இல்லை என்ற தைரியம்தானே?? ஹாஹா!//

    ஹா ஹா ஹ பானுக்கா அந்த ரகசியம் தெரியாதா...கீதாக்கா பாராசூட் போட்டுத்தான் குதிப்பாங்க!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  53. புரிந்துகொண்டேன்..புரிந்துகொண்டேன். (இப்படி ஏதும் படமில்லையே தமிழில்)//

    ஹா ஹா ஹா ஹா..ஏகாந்தன் அண்ணா எதுக்கும் இந்தப் பெயருக்கு ராயல்டி பண்ணி வைச்சுக்கோங்க...

    கீதா

    பதிலளிநீக்கு
  54. //ஏகாந்தன் அண்ணா எதுக்கும் இந்தப் பெயருக்கு ராயல்டி பண்ணி வைச்சுக்கோங்க// சூப்பர் கீதா! எங்கயோ போய்ட்டீங்க.!

    பதிலளிநீக்கு
  55. ஶ்ரீராம், அழகன் திரைப்படத்தில் மரகதமணி இசையில் எஸ்.பி.பி.பாடியிருக்கும் 'சாதி மல்லி பூச்சரமே,சங்கத்தமிழ் பாச்சரமே' என்னும் பாடல் உங்கள் கலக்ஷனில் இருக்கிறதா?

    பதிலளிநீக்கு
  56. @ கீதா:

    //.. எதுக்கும் இந்தப் பெயருக்கு ராயல்டி பண்ணி வைச்சுக்கோங்க...

    தேவையில்லை என்று தோன்றுகிறது. இப்போதெல்லாம் குலேபகாவலி, மக்களைப்பெற்ற மகராசி போன்ற பழையபடங்களின் பெயர்களைத்தான் தூசிதட்டிக்கொண்டிருக்கிறார்கள், புதுப்படங்களுக்கு வைக்க! மிஞ்சி மிஞ்சிப் போனால் தானாப்போட்ட ஆட்டம், தானாத் தின்ன கூட்டம் என்று சிந்திக்கலாம்..

    பதிலளிநீக்கு
  57. / அழகான ரகுவரன் - அழகான அமலா. தாவணி அணிந்த அமலா. காட்சியை ரசிக்கலாம். ரகுவரனுக்கு காதல் உணர்வை முகத்தில் காட்டவே தெரியவில்லை//

    கர்ர்ர் எப்படி எப்படி :) நாச்சியாரின் மாமனார் காட்டுவாரே அப்படியா ??:)


    அமலா கியூட் செம அழகு அவங்க ஹிந்தி தெலுங்கு பக்கம் போகும் வரை நல்லா குளு குளுனு அதிரா சொல்றமாதிரி இருப்பாங்க
    கூட்டுப்புழுக்கள் டிவியில் பார்த்த நினைவு ..
    ஒன்று கவனிச்சீங்கன்னா எந்த படத்தில் அமலா பாட்டு சீன்ஸ் வண்டகளும் அதில் கடற்கரை அந்தி சாயும் மாலை நேரம் ஒரு பரதநாட்டிய சீன வரும் அது அழகோ அழகு

    ரகுவரன் வாசிப்பது ரீடர்ஸ் டைஜஸ்ட் கலர் கலரா அட்டை தெரியுது .
    ஆனா கண்டிப்பா ஆங்கில புத்தகம்தான்
    இல்லைனா செகண்ட் ஆப்ஷன் Jeffrey Archer third M அண்ட் B ஹாஹாஆ :)

    பதிலளிநீக்கு
  58. கீதா அக்கா :) சேம் பின்ச் :) என்னமோ தெரில அந்த குடும்பமே ஓவர் ஓவர் ஓவரா ஆக்ட் பண்ற மாதிரி இருக்கும் புதல்வரின் கஜனி மட்டும் பார்த்தேன் . ஹெ ஹெ ஹெ
    கார்த்திக்குக்கு மவுன ராகம் டைமில் செம விசிறி நான் அப்புறம் அவ்ளோதான் .
    இன்னிக்கும் எனக்கு ரொம்ப பிடிச்ச நடிகர் 1. அவர் நடிச்ச சமீபத்து படங்கள்லாம் பார்தத்த்தில்லை ஆனால் பிடிக்கும் .
    முடிஞ்சா ஸ்ரீராம் கண்டுபிடிப்பார் :) ஆனா அது சித்தப்பா இல்லை
    அப்புறம் சின்ன அங்கிள் கமல் ஹாசன் என்னமோ பிடிக்கும் அவ்ளோதான் கொஞ்சம் வருஷம் முன் அரவிந்த்சாமி
    அப்புறம் ப்ரித்திவிராஜ் சுகுமாரன் ,,நிவின் பாலி இப்போ ..

    பதிலளிநீக்கு
  59. மிக அழகான பாடல். எனக்கு ரகுவரன் பிடிக்கும் அமலாவும் தான்.

    ஏழாவது மனிதன் பார்த்திருக்கிறீர்களா. நல்ல நடிகன் அவர்.
    திருமணம் நடந்தது நாக சைதன்யாவுக்கு, நாகார்ஜுனின் முதல் மனைவி மகனுக்கு
    இல்லையோ.
    நன்றி ஸ்ரீராம் மிக அழகான பாடல்

    பதிலளிநீக்கு
  60. ஆமாம், வல்லி, நாகார்ஜுனாவின் முதல் மனைவியின் மகனுடன் தான்! :)

    பதிலளிநீக்கு
  61. ஒரு நிமிஷம் முன்னாடி வைச்சிருக்கார் ஶ்ரீராம். பார்க்கணும்! :)

    பதிலளிநீக்கு
  62. // ரகுவரன் கையில் ரீடர்ஸ் டைஜஸ்டா? இப்படி ஒரு படம் வந்ததும் தெரியாது. பாட்டும் கேட்டதில்லை! ஹிஹிஹி! :)//

    கீசாக்கா... இதுவரைக்கும் சரி, இப்போ கேட்டீங்களா? எப்படி இருந்தது?

    பதிலளிநீக்கு
  63. // இந்தப் பாடலை இப்போது தான் கேட்கிறேன்...

    நன்றாகத் தானே இருக்கிறது...//

    நன்றி துரை செல்வராஜூ ஸார்...

    பதிலளிநீக்கு
  64. // வரிகள் இருவர் எழுதிருக்காங்க...புலமை பித்தன் அண்ட் உமா கண்ணதாசன்?//

    இல்லை கீதா... புலமைப்பித்தன் மட்டும்தான் எழுதி இருக்கார். சொல்லி இருக்கேனே... அந்தப் படம் சும்மா சுவாரஸ்யத்துக்காக... அப்படி.... அப்படி விவரங்கள் திரட்டி எழுதறேனாம்....!!!

    பதிலளிநீக்கு
  65. வாங்க கோமதி அக்கா.. சமீபத்தில் டீவியில் போட்டார்களா? நான் முன்பு எப்போதோ தொலைக்காட்சியில் பார்த்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  66. வாங்க ப்ரியசகி... வருகைக்கு நன்றி. தொடர்ந்து வந்து ஆதரவு கொடுங்க...

    பதிலளிநீக்கு
  67. நன்றி ஸ்ரீகாந்த்! அமலாவுமா!

    // கமல்ஹாசனைத்தவிர வேறு எந்த ஹீரோ//

    வாங்க பானு அக்கா... ஜெமினி இருக்காரே... எம் ஜி ஆர்? அந்தக் காலத்தில் டி ஆர் எம்?!! கீதா அக்காவின் சிரிப்புக்கு சரியான காரணம் எனக்கு மட்டும்தான் தெரியும் என்பது தொடர்ந்த பின்னூட்டங்களில் தெரிந்தது!

    பதிலளிநீக்கு
  68. வாங்க இளமதி சகோ...

    எனக்கும் காட்சியை விட பாடலைக் கேட்பதுதான் பிடித்த விஷயம். சில சமயங்களில் - மிகச்சில சமயங்களில் - காட்சியும் நன்றாயிருக்கும். இதுவும் ஒன்று. ஒருமுறை காட்சியையும் பார்க்கலாம்!

    பதிலளிநீக்கு
  69. கீதா அக்கா... அடுத்தடுத்து போட்டு உலக்கை நாயகனையும், ஜிவாஜியையும் சந்தடி சாக்கில் வறுத்தெடுத்து விட்டீர்கள்!

    பதிலளிநீக்கு
  70. பானு அக்கா..


    // தோடா! இவங்கதான் சென்ற வார பு.பு.வில் 10/10 வாங்கினவங்க!!!//

    ஹா... ஹா... ஹா... அதானே.... ஏழாவது மனிதன், ஒரு ஓடை நதியாகிறது படங்களிலும் ரகுதான் ஹீரோ. ஆனால் ஆரம்ப காலப் படங்களில் இவர் சுமாராகத்தான் நடித்திருப்பார். பின்னர் ரொம்பவே பண்பட்டுவிட்டார். கீதா அக்கா காவேரியில் குதித்தால் நான் கூவத்தில் குதிப்பேன்!!!!

    பதிலளிநீக்கு
  71. வாங்க ஏகாந்தன் ஸார்...

    // புரிந்துகொண்டேன்..புரிந்துகொண்டேன். //

    இப்படி படம் இல்லை. கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் என்றுதான் படம் இருக்கிறது! அது சரி.. இன்று போட்டிருக்கும் பாட்டைப்பற்றி ஒன்றுமே.....

    பதிலளிநீக்கு
  72. வாங்க நெ.த..

    // ஶ்ரீராமின் ரசனையும் எனக்கு ஆச்சர்யமா இருக்கு//

    என்ன சொல்ல வர்றீங்க? பாராட்டா, ஆச்சர்யமா, கிண்டலா? அதைவேற இரண்டு தடவை சொல்லி இருக்கேங்க.. சந்தேகமா இருக்கு! டோட்டலா அபுரி.

    // நான் இந்த அளவு திரைப்படப் பாடல்களைக் கேட்டதே இல்லை.//

    நான் பாடல்களிலேயே மூழ்கி வளர்ந்தேன்.

    பதிலளிநீக்கு
  73. வாங்க அதிரா...

    // ஹா ஹா ஹா வெயிலுக்குள் கறுத்துப்போய்ப் போனாலோ இல்ல வாய் மணக்க மணக்கப் போனாலோ:) //

    ஹா... ஹா... ஹா..

    // ஆருடைய காதலி எண்டு ஜொள்ளவே இல்லை:)) //

    நாகார்ஜுனுடைய காதலி.

    // அது கவிஞர் ஸ்ரீராமின் கவிதைத் தொகுப்பு:)..//

    ஆ.... நான் கவிஞாயிட்டேன்...கவிஞாயிட்டேன்.. சே... சந்தோஷப் பதட்டத்தில் ஸ்பெல்லிங் மிஸ்டேக்கா கத்தறேன்.. கவிஞனாயிட்டேன்.... கவிஞனாயிட்டேன்...

    // அதனாலேயே நல்லவர்களாக அன்பானவர்களாக இருந்தாலும் குடும்ப வாழ்க்கை தோத்து விடுகிறது.//

    இதை ஒத்த்துக்கொள்வது சற்றே சிரமம். காதலில் தோற்றால் வாழ்க்கையில் தோற்றமாதிரி ஆயிடுமா!!!

    // அது என்ன பெயர் என அடிச்சுக் கேட்டாலும் //

    நாகசைதன்யா... அமலாவுக்குப் பிறந்திருந்தால் அகிலேஷ்!

    சூர்யா தேவலாம் என்பது என் கருத்து. கீசாக்காவின் கருத்து வேற...

    பதிலளிநீக்கு
  74. வாங்க சகோதரி க.ஹரிஹரன்..

    // அவர் கையில் இருப்பது G.K புக்காயிருக்கலாம்! //

    வேலை தேடுபவர் என்பதாலா?!! எனக்கு பழைய பைண்டிங் புத்தகம் போல இருந்தது!

    பதிலளிநீக்கு
  75. வாங்க கீதா...

    // சென்னையிலதானே இருக்கீங்க!!! ஹா ஹா மெரினா பார்த்ததில்லையா? //

    இதை முக நூலில் லிங்க் கொடுக்கையில் சொல்லியிருக்கேன்! தெரியுமே... மேலும் அங்கு அந்த நேரத்தில் அமரும் ஜோடிகள் பல க.கா ஜோ!

    // ஸ்ரீராம் எழுதின காதல் கவிதை எல்லாம் வாசித்தாலாவது முகத்துல வருதோனு //

    அதனால்தான் உணர்ச்சியே வரல்லையோ....!!!!

    பதிலளிநீக்கு
  76. வாங்க துளஸிஜி... பாடல் பரவாயில்லைதானா? எனக்கும் என் பாஸுக்கும் அந்தக் காலம் முதலே மிகவும் பிடித்த பாடல். அடிக்கடி கேட்போம்.

    பதிலளிநீக்கு
  77. பானு அக்கா..

    // ஶ்ரீராம், அழகன் திரைப்படத்தில் மரகதமணி இசையில் எஸ்.பி.பி.பாடியிருக்கும் 'சாதி மல்லி பூச்சரமே,சங்கத்தமிழ் பாச்சரமே' என்னும் பாடல் உங்கள் கலக்ஷனில் இருக்கிறதா?//

    இல்லாமல் இருக்குமா? அற்புதமான பாடல் அது. கூடவே 'மழையும் நீயே' பாடலும்! இருங்க ஒருவாட்டி மழையும் நீயே பாட்டு கேட்டுட்டு வர்றேன்!

    பதிலளிநீக்கு
  78. வாங்க ஏஞ்சல்...

    // நாச்சியாரின் மாமனார் காட்டுவாரே அப்படியா ??://

    கர்ர்ர்ர் .... நான் சொன்னேனா?
    // அமலா பாட்டு சீன்ஸ் வண்டகளும் அதில் கடற்கரை அந்தி சாயும் மாலை நேரம் ஒரு பரதநாட்டிய சீன வரும்//

    நீங்க மைதிலி என்னைக் காதலி படத்தை மனதில் வைத்து சொல்றீங்க...

    கார்த்திக் நடிச்சு இப்ப ஒரு படம் வரப்போகுது.. சூர்யா தேவலாம் என்றுதான் நினைக்கிறேன். இயல்பாய் நடிப்பவர்களில் நாசரையும் பிடிக்கும்.

    பதிலளிநீக்கு
  79. வாங்க வல்லிம்மா... ஏழாவது மனிதன் பார்க்கவில்லை. ஆனால் அதில் 90 சதவிகித பாடல்கள் பிடிக்கும். குறிப்பாக "காக்கைச் சிறகினிலே"

    // நாகார்ஜுனின் முதல் மனைவி மகனுக்கு
    இல்லையோ.//

    ஆமாம். ஆனாலும் அமலாவுக்கு மகன் முறைதானே! (நாங்க சமாளிப்போம்ல...!)

    பதிலளிநீக்கு
  80. இனிமையான பாடல் ரசித்தேன் பாராட்டுகள் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!