வியாழன், 8 பிப்ரவரி, 2018

வெளி கிரகத்திலிருந்து வந்திருக்கும் உயிரினம் போல.. வேதகாலம், சிந்து திராவிட காலம் - அரட்டை

வேதகாலம், சிந்து திராவிட காலம்

ஜனவரி 30,  2015 - - தி இந்து -

வேத கால பண்பாட்டைவிட சிந்துவெளி நாகரிகம் மிகப் பழமையானது: ஐராவதம் மகாதேவன் பேச்சு :

சிந்துவெளி நாகரிகம் வேத கால பண்பாட்டைவிட மிகப் பழமையானது, அது திராவிட மொழிக் குடும்பத்தைச் சார்ந்தது என்றார் கல்வெட்டு ஆய்வாளர் ஐராவதம் மகாதேவன்.

தமிழ்ப் பல்கலைக்கழக கடல்சார் வரலாறு மற்றும் கடல்சார் தொல்லியல் துறை சார்பில் நேற்று நடைபெற்ற முனைவர் எ. சுப்பராயலு, முனைவர் செ.ராசு அறக்கட்டளைச் சொற்பொழிவில் அவர் பேசியதாவது:

சிந்துவெளி நாகரிகம் திராவிட சமுதாயத்தைச் சார்ந்தது. மொகஞ்சோதாரோவில் கிடைத்த முதுகைக் காட்டி உட்கார்ந்த நிலையில் உள்ள விலங்கு வடிவம், கொக்கி வடிவம், நாற்சந்தியைக் குறிக்கும் வடிவம், குவளை வடிவம் ஆகியவை கொண்ட முத்திரைகள் ஆய்வு செய்யப்பட்டன.

சிந்துவெளியில் காணப்படும் சிந்துவெளி எழுத்துக்களின் இறுதியில் காணப்படும் ‘அன்’, நகரத் தலைவன், பாண்டி, பாண்டியன் போன்றவற்றைக் குறிக்கின்றன. இதற்கு இணை யான வார்த்தைகள் பழந்தமிழிலும் உள்ளன. இந்த 4 எழுத்துகளையும் சேர்த்து வாசிக்கும்போது நகர வணிகன் என்ற வாக்கியம் கிடைக்கிறது. இதை, மாற செழிய வழுதி/பாண்டியன் எனவும் வாசிக்க முடியும்.

இதையெல்லாம் ஆராய்ந்து பார்க்கும்போது, சிந்துவெளி மக்கள் பேசியது திராவிட மொழி. அங்கு வாழ்ந்த மக்களே புலம்பெயர்ந்து தென்னகத்துக்கு வந்ததால், சிந்துவெளி மொழிக் கூறுகள் பழந்தமிழ் மொழியில் காணப்படுகின்றன என்பது என் கருத்து.

பாண்டியர்களின் மூதாதையர்கள் சிந்துவெளியில் வணிகத்தில் ஈடுபட்டிருக்கலாம். அவர்கள், தெற்கு நோக்கி நகர்ந்து, திராவிட மொழி பேசியிருக்கலாம். குறிப்பாக, பண்டைய தமிழ் பேசியவர்களாக இருந்திருக்கலாம்.

வெளியிலிருந்து வந்த ஆரியர்கள் சிந்துவெளியில் குடியேறிதன் காரணமாக அங்கு இந்திய- ஆரிய சமுதாயம் உருவாகியிருக்கலாம். இந்திய- ஆரிய பண்பாட்டில் இருந்த ரிக் வேதத்தில் உள்ள வார்த்தைகள் சிந்துவெளியில் இருந்து கடன் பெற்றவை. ரிக் வேதத்தில் வரும் பூசன் என்ற கடவுளின் பெயர் சிந்துவெளி மக்களிடம் இருந்து எடுக்கப்பட்டது.

சிந்துவெளி குறியீடுகளுக்கும் பண்டைய தமிழ் வார்த்தைகளுக்குமான தொடர்பு அதிகமாக இருப்பதை சங்க காலத் தமிழ்ச் சொற்கள் மூலமாக அறியலாம். இதன் மூலம், சிந்துவெளி நாகரிகம், வேத பண்பாட்டைவிட காலத்தால் மிகப் பழமையானது என்பதும் சிந்துவெளி நாகரிக மொழி, தொல் திராவிட வடிவம் கொண்டது என்பதும் எனது முடிவு என்றார் ஐராவதம் மகாதேவன்.

துணைவேந்தர் ம.திருமலை, புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தின் இந்தியவியல் துறைத் தலைவர் எ.சுப்பராயலு, பதிவாளர் சே.கணேஷ்ராம், சுவடிப்புலத் தலைவர் சு.ராசவேலு, பேராசிரியர் ந.அதியமான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


"இதன் மூலம் தாங்கள் சொல்ல வருவது......?"

=============================================================================================================

காதல் மழை 
"காதல்....   இதுல நானும் க்ளீன் பௌல்ட்  ஆனவன்தான்..."
=========================================================================================================
வண்ணக்கவி 

எதிர்காலம்
என்ன நிறமென்று தெரியவில்லை
கடந்தகாலம்
கருப்பு வெள்ளையில்
நிகழ் காலம்
மட்டுமே
ண்ணங்கள் காட்டுகிது.


"என்னை விடுங்கோ...   என்னை விடுங்கோ...  ஆரும் என்னைத் தடுக்காதீங்கோ...   நான் ரைன்ல குதிக்கப் போறேன்...."===================================================================================================================

ஷாங்காய்

[ கொஞ்ச நாட்களுக்கு முன்னால் ஜப்பானியர் பாவம் என்று மொகுசாட்சு வில் பார்த்தோம்..  அவர்களின் மறுபக்கம்! ]1937 இல் ஜப்பானியர் வந்து சீனாவின் ஷாங்காய் நகரை ஆக்ரமிக்கிறார்கள்.  அந்நிய ஆக்ரமிப்பு மக்களிடையே மனக்கசப்பை வளர்த்தது.  

சர்வதேச செட்டில்மென்ட், பிரெஞ்சுப்பகுதி இரண்டையும் வேறுபடுத்தி நகரின் சீனப்பகுதியை ஜப்பானியர் வளைத்துக் கொண்டார்கள்.  நகரின் இருபகுதிகளையும் இணைக்கும் தங்கப் பாலத்தடியில் ஜப்பானிய பாராக்காரர்கள் நின்றார்கள்.  

அந்தப் பாலத்தைக் கடக்கும் ஒவ்வொரு சீனனும் சீனச்சியும் நெடுஞ்சாண்கிடையாக தரையில் விழுந்து அந்த பாராக்காரர்களை தண்டனிட வேண்டும்.  தவறினால், 'பட்பட்டென சீனன் அல்லது சீனச்சியின் கன்னங்களில் அறை விழும்.  அந்த ஜப்பானியனின் கோபம் அடங்கும்வரை இப்படி அறை விழுந்து கொண்டே இருக்கும்.   

கண்ணியம் வாய்ந்த முதியவர்களை இந்த அவமதிப்புக்கு உள்ளாக்குவதிலே ஜப்பானியனுக்கு விசேஷ ஆனந்தம்.  வயது முதிர்ந்த எந்த சீன ஆணையோ, பெண்ணையோ ஜப்பானியன் அடிக்கும்போதெல்லாம் சீனர்களால் அதைப் பார்த்து சகிக்க முடியவில்லை. எனவே, பெரும்பாலான சீனர்கள் அந்த பால வழியருகில் நாடவேயில்லை.  அயலார் பகுதியில்  இருந்த சீனர்களுக்கும், சீனப்பகுதியில் இருந்த சீனர்களுக்கும்  நடுவே இடைவெளி விழுந்தது.`ராபர்ட் லோ - Escape from Red China (சீனாவிலிருந்து தப்பினேன்) என்கிற புத்தகத்தில் "கில்லாடிப்பா ஜப்பான் ஆளுங்க....  ஆனா நான் இன்னும் கொஞ்சம் அதிகமா எதிர்பார்ப்பேன்"

=================================================================================================================


மதுரை  நாக தீர்த்தம் செல்லும் வழியில் உள்ள பழமையான மரம். என்ன வயதிருக்குமோ...

பரந்து, கைகளைப் பரப்பிக் கொண்டு நிற்கும் ஒரு ராட்சத மனிதனைப்போல...

வெளி கிரகத்திலிருந்து வந்திருக்கும் உயிரினம் போல..

பார்த்துக் கொண்டேயிருந்தால் மனதில் தோன்றும் பல காட்சிகள்!"மரமாம்...   மரத்துல உருவமாம்....   ஹா...   ஹா...   ஹா... வெட்டி வேலை.."
=================================================================================================


"இந்த வாரம் அவ்வளவுதானாம்..   ஸ்ரீராம் கிளம்பச் சொல்றான்..  வர்றேன்..."

79 கருத்துகள்:

 1. காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.

  பதிலளிநீக்கு
 2. ஸ்ரீராம் மற்றும் கீதா/ கீதா அனைவருக்கும் வணக்கம்..

  பதிலளிநீக்கு
 3. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அங்கே பார்த்துட்டு இருக்கிறச்சே இங்கே வந்திருக்கு!

  பதிலளிநீக்கு
 4. என்றாலும் இன்னிக்கு தாமதம் தான்! :(

  பதிலளிநீக்கு
 5. இப்போதெல்லாம் தலைகீழ்...

  கடந்த காலமே வண்ண மயமாக இருக்கின்றது..

  நிகழ்காலம் கறுப்பு வெள்ளையாக இருந்தாலும் கொஞ்சம் ரசிக்கும் படியாக!...

  ஏதோ அ......கா புண்ணியம்...

  பதிலளிநீக்கு
 6. எல்லாமே அருமை! ஐராவதம் மகாதேவன்! ஹூம்! அவருமா ஆரியர்கள் வெளியே இருந்து வந்ததாகச் சொல்லி இருக்கார்? ஜப்பானியர்கள் செய்ததைப் படித்தேன். இதையே தான் இப்போது திபெத்தியருக்குச் சீனர்கள் செய்கின்றனர்! :( சிலவற்றை விபரமாக எழுத முடியாது!

  பதிலளிநீக்கு
 7. ஹிட்லரைத் தேடிப் பிடிச்சிருக்கீங்க! க்ர்ர்ர்ர்ர்ர்ர் ஆனாலும் அந்தக் காப்ஷன்ஸ் எல்லாம் ரசனையோடு இருக்கு! :)))))

  பதிலளிநீக்கு
 8. வெள்ளி கிராகத்திலிருந்து வர கொஞ்சம் லேட்டாகிப் போச்....
  இனிய காலை வணக்கம்...வந்தனம் சுசுவாகதம்...ஸ்ரீராம், துரை செல்வா அண்ணா, கீதாக்கா

  கீதா

  பதிலளிநீக்கு
 9. // ஏதோ அ......கா புண்ணியம்...//

  அ... கா ? என்னவாக இருக்கும்? புதிர் போடுகிறீர்கள் துரை செல்வராஜூ ஸார்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. // புதிர் போடுகிறீர்கள்..//

   அதான் சரி...

   ஆனாலும் புதிருக்கே புதிர் போட முடியுமா!?...

   நீக்கு
 10. கீதா அக்கா...

  // ஐராவதம் மகாதேவன்! ஹூம்! அவருமா ஆரியர்கள் வெளியே இருந்து வந்ததாகச் சொல்லி இருக்கார்?//

  இதைப் பற்றி இந்தளவில் முடித்துக் கொள்ளாமல் இன்னும் ஏதாவது எழுதுவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்!

  பதிலளிநீக்கு
 11. கீதா அக்கா...

  சிலவற்றை வெளியில் சொல்ல முடியாது என்று நீங்கள் முன்னர் மேனகா பற்றிச் சொல்லியிருந்ததில் கொஞ்சம் எனக்கும் தெரியும். வெளியில் சொன்னால் தெரியாதவற்றையும் தெரிந்து கொள்ளலாம்! அங்கும் சரி, இங்கும் சரி!

  பதிலளிநீக்கு
 12. கீதா அக்கா...

  // க்ர்ர்ர்ர்ர்ர்ர் ஆனாலும் அந்தக் காப்ஷன்ஸ் எல்லாம் ரசனையோடு இருக்கு! :)))))

  நன்றியோ............... நன்றிகள்!

  பதிலளிநீக்கு
 13. கீதா அக்கா...

  // அந்த மரம்! அற்புதம்! //

  முன்...........னாடி முகநூலில் பார்த்திருப்பீர்கள். மறந்திருப்பீர்கள்!

  பதிலளிநீக்கு
 14. வாங்க கீதா ரெங்கன்... லேட் அட்டெண்டென்சில் கையெழுத்து போடுங்க!!!!!!!

  பதிலளிநீக்கு
 15. இதன் மூலம் தாங்கள் சொல்ல வருவது......?"//
  என்ன சொல்ல வரேன்னா.....அடுத்ததா வருதே .காதல் மழை...அதை ரசிக்கோணும்னு....நாங்க திராவிடனோ...ஆரியனோ...மூலம் ஆராயாம.. காத்திருக்கும் என்னை சேர்த்து வைங்கன்னு.... அதுங்க சொல்லுது....னு சொல்ல வரேன்...
  ஹிஹிஹி...

  அருமை ஸ்ரீராம்....காதல் மழை

  காதல்.... இதுல நானும் க்ளீன் பௌல்ட் ஆனவன்தான்..."///

  அதான் தெரியுமே....!!!! யாருன்னு யாரும் கேய்வி கேயக்கக் கூடாது...ஹாஹாஹா...அதிரா வந்து பதில் சொல்லுவாங்க.... ஹாஹாஹா

  மரத்துல ஏறனும்...எதிர்காலக் கலர் என்னனு பார்க்கணும்...வரேன்...அப்பால்

  கீதா


  பதிலளிநீக்கு
 16. கீதா ரெங்கன்...

  // நாங்க திராவிடனோ...ஆரியனோ...மூலம் ஆராயாம.. காத்திருக்கும் என்னை சேர்த்து வைங்கன்னு.... அதுங்க சொல்லுது....னு சொல்ல வரேன்...//

  ஹா... ஹா.... ஹா....

  பதிலளிநீக்கு
 17. // அருமை ஸ்ரீராம்....காதல் மழை//

  நன்றி கீதா.

  பதிலளிநீக்கு
 18. // மரத்துல ஏறனும்...எதிர்காலக் கலர் என்னனு பார்க்கணும்...வரேன்...அப்பால்

  கீதா//

  அப்பால வந்து அட்டகாசம் பண்ணுவீங்கன்னு நம்பறேன்!

  பதிலளிநீக்கு
 19. // சர்வம் ஹிட்லர் மயம்...!! //

  அநியாயம் பாரதி... மற்றவை எல்லாம் கண்ணில் படவில்லையா?

  பதிலளிநீக்கு
 20. படத்திற்கான கமெண்ட்ஸ் சூப்பர்....ரிஜிஸ்டர் எங்கே...நான் வெளி கிராகத்துலருந்து வந்திருக்கேன்.ஹிஹிஹி....பூமி நேரம் பழகனும்

  கீதா

  பதிலளிநீக்கு
 21. எங்க போச் என் கமெண்ட்....

  படத்துக்கான கமெண்ட்ஸ் சூப்பர் ஸ்ரீராம்....

  ரிஜிஸ்டர் எங்கே...நான் வெளிக்கிரகத்துலருந்து வந்தத்துல....இன்னும் பூமி நேரம் பழகல... ஹிஹிஹி

  கீதா

  பதிலளிநீக்கு
 22. வண்ணக்கவியை இரசித்தேன்.
  சீனர்களுக்கு நேர்ந்த அவமானம் மனதை கனக்க வைத்தது.

  ஹிட்லர் உங்களோடு லந்து பண்ணும் அளவுக்கு பழகி இருக்கிறாரே...

  பதிலளிநீக்கு
 23. வாங்க கில்லர்ஜி.. ஹிட்லர் இன்று "எங்களுடன்
  ஜிக்ரி தோஸ்த் ஆகிவிட்டார்!1 வண்ணக்கவியையும் ரசித்ததற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 24. // ஆனாலும் புதிருக்கே புதிர் போட முடியுமா!?..//

  ஆனாலும் விடை சொல்வதாயில்லை!

  பதிலளிநீக்கு
 25. உங்கள் கமெண்ட் இருக்கே கீதா ரெங்கன்...

  பதிலளிநீக்கு
 26. நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.

  பதிலளிநீக்கு
 27. //என்னை விடுங்கோ... என்னை விடுங்கோ... ஆரும் என்னைத் தடுக்காதீங்கோ... நான் ரைன்ல குதிக்கப் போறேன்...."//
  ஹாஹாஹா...நான் வேற அவங்க பதில் சொல்வங்கன்னு சொல்லிட்டேன்....ஸோ..இதுதான்..அவங்க சொல்வாங்க...ஹாஹாஹா..

  அப்பால வந்து அட்டகாசம் பண்ணுவீங்கன்னு நம்பறேன்!//

  வரணும்னு.... இருக்கு..ஆனா நேத்து வந்து சரி பண்ணியும்... வந்த நெட் போயிருச்....இன்னிக்கு வரேன்னு சொல்லிருக்கங்க....வந்ததும் வரேன்....

  கீதா

  பதிலளிநீக்கு
 28. கமெண்ட் வந்தது இப்பத்தான் கண்ணுல படுது....

  கீதா

  பதிலளிநீக்கு
 29. கவிதை நன்றாக இருக்கிறது
  மதுரையில் நல்ல மழை நேற்று.
  உங்கள் பழைய நினைவுகள் மதுரை தானே?
  மழையை அழைத்தவுடன் வந்து விட்டது .

  வண்ணக்கவியும் அருமை.
  நிகழ்காலம் வண்ணமயமாய் இருந்தால் நல்லதுதான்.

  //கண்ணியம் வாய்ந்த முதியவர்களை இந்த அவமதிப்புக்கு உள்ளாக்குவதிலே ஜப்பானியனுக்கு விசேஷ ஆனந்தம்.//

  இதில் என்ன ஆனந்தமோ? படிக்கும் போது கஷ்டமாய் இருக்கிறது.
  ஹிட்லர் மென்மையானவர் ஆகி விட்டார் உங்கள் பதிவில்.
  அதிரா போல் வேறு பேசுகிறார்.

  மதுரை மரம் போல் என் மாமியார் வீட்டை சுற்றி இருக்கும் பழமையான தூங்கு மூஞ்சி மரத்தில் பலவித தோற்றங்களை பார்த்து இருக்கிறேன். அடி மரம் வெகு அகலமாய் பரந்து விரிந்து போகும் எங்கள் வீடு மரக் கூடாரத்தில் இருக்கும்.


  பதிலளிநீக்கு
 30. கதம்பம் நல்லா இருந்தது. வியாழக் கிழமையை இன்டெரெஸ்டிங்கா கொண்டுபோறீங்க.

  ஹிட்லர் படங்களும் உங்கள் குறிப்புகளும் நல்லா இருந்தது.

  ஆரியப் படையெடுப்பே நம்பும்படி இல்லை. காதல் மழை கவிதைக்கு ஆச்சர்யமா, உங்க ஆள் படம் போடலை.

  போர் என்று வந்துவிட்டால் அங்கு நெறி என்பது எப்போதும் காணாமல் போய்விடும். இதில் ஒரு குறிப்பிட்ட தேச இராணுவத்தைச் சொல்லமுடியாது. ஜப்பானியர்கள் செய்தவற்றிர்க்கு அவர்களுக்கு உடனே கிடைத்தது. இப்போதும் சீனர்கள், ஜப்பானியர்களை வெறுக்கிறார்கள். (கொரியர்களையும்)

  பதிலளிநீக்கு
 31. ஜப்பானியர் சீனரைத் துன்புறுத்த, சீனர்களும் லேசுப்பட்டவர்களா என்ன?

  இப்படி இது ஒரு தொத்துவியாதி போன்று... ஒவ்வொரு நாட்டினர் மற்றொரு நாட்டினரைச் சீண்டுவது...துன்புறுத்துவது அடிமைகள் போல நடத்துவது...

  வண்ணக் கவி அருமை! யதார்த்தம் சொட்டும் கவி.

  மரம் ரொம்ப அழகா இருக்கு...ஹிட்லர் சொல்லும் உருவம் நானாகத்தான் இருக்கும்...ஹிஹிஹி..நான் தான் மரத்தின் மீது ஏறி எதிர்காலம் தெரியுதானு பார்த்தேன்.....அதான் ஹிட்லர் அப்படிச் சொல்றார்...

  ஸ்ரீராம் கவிதைல கலக்குறீங்கப்பா....

  கீதா

  பதிலளிநீக்கு
 32. காதல் மழை கவிதைக்கு ஆச்சர்யமா, உங்க ஆள் படம் போடலை. //

  ஹா ஹா ஹா ஹா அதானே!! அட்லீஸ்ட் தமன்னா படமாவது போட்டிருக்கலாம் இல்லையா...நெல்லை. பாருங்க ரெண்டு பேரும் இப்ப ஸ்ரீராம்கிட்ட சண்டை போடப் போறாங்க..அவங்க படத்தைப் போடாம...ஹிட்லர் படத்தைப் போட்டதுக்கு...அனுஷ்கா வுக்கு ரொம்பவே கோபமாம் அதனால அரம எல்லாரும் போராடப் போறோம்..ஸ்ரீராம் வீட்டு முன்னாடி உட்கார்ந்து...

  அதிரா தேம்ஸ்ல போராட்டம் பண்ணப் போறாங்க..குதிச்சுருவேன்னு...

  நல்ல காலம் அந்த மரம் முருங்கி மரம் இல்லை...ச்சே அதிரா வந்து ஏறி உட்கார முடியாம போச்சு..!!!

  கீதா

  பதிலளிநீக்கு
 33. சீனர்களுக்கு நேர்ந்த அவமானம் மனதை கனக்க வைத்தது.//

  கில்லர்ஜி ..சீனாவும் லேசிப்பட்டதில்லை...எந்த நாடானாலும் சரி மேலிடம் ஆட்சி செய்பவர்கள் பண்ணும் அராஜகங்களுக்கு அப்பாவி மக்கள் பலியாடுகள் ஆகிறார்கள் அதான் மனதிற்கு வேதனை...எல்லோருமே மண் வெறியர்கள். அந்தக் காலத்தில் அரசர்கள் பக்கத்து நாடுகளின் மீது படை எடுத்துச் சென்று வென்று தாங்கள் முடிசூடா மன்னன், சக்கரவர்த்தி என்று பெயர் பெற்றார்கள்...அப்போதும் எத்தனையோ அப்பாவிகள் தான் பலியானார்கள் அதேதான் காலமாற்றத்திற்கு ஏற்ப இப்போது போர் என்று சில இடங்களிலும் பல நாடுகளில் வேறு விதமாக ஆட்சியாளர்களின் அராஜகம் தொடர்கிறது. சில இடங்களில் ஹைடெக்காக உள்ளது...ஆனால் பலியாடுகள் அதே அப்பாவி மக்கள்தான்.

  கீதா

  பதிலளிநீக்கு
 34. திராவிட ஆரிய சர்ச்சைகளுக்கு முடிவு இருக்காது ஏன் என்றால் சொல்லப்படுபவை எல்லாம் ஹேஷ்யங்களின் அடிப்படையில்தான் அறுதி யிட்டுக் கூறும்படி எந்த முடிவும் எட்டியதாகைல்லை ஐராவதம் மஹாதேவன் கூற்றும் அப்படித்தான் ஜெர்மனியின் ஹிட்லர் தன்னை ஒரு ஆரியனாக கூறிக் கொண்டான் பழங்காலத்தில் இந்தியாவை ஆரிய வர்த்தனம் என்று சொல்லிக் கொண்டார்கள் கிடைத்திருக்கும் புலன்கள் எல்லாமே அண்மையது அதை வைத்து தொன்மையை அறிய முடியுமா

  பதிலளிநீக்கு
 35. /
  மதுரை நாக தீர்த்தம் செல்லும் வழியில் உள்ள பழமையான மரம். என்ன வயதிருக்குமோ...

  பரந்து, கைகளைப் பரப்பிக் கொண்டு நிற்கும் ஒரு ராட்சத மனிதனைப்போல...

  வெளி கிரகத்திலிருந்து வந்திருக்கும் உயிரினம் போல..

  பார்த்துக் கொண்டேயிருந்தால் மனதில் தோன்றும் பல காட்சிகள்!/ ஒரு சொல்வழக்கு நினைவுக்கு வருகிறது AS THE FOOL THINKETH THE CLOCK CLICKETH

  பதிலளிநீக்கு
 36. wrt escape from red china இது நம்மூரில் சாதி இந்துக்கள் கட்டிய சுவர்போல இருந்திருக்குமோ

  பதிலளிநீக்கு
 37. வேத காலம், சிந்து வெளி நாகரீகம் பற்றிய தகவல்கள் யோசிக்க வைத்தன.

  குடைக்குள் நடக்கும் முகமறியா குழந்தைகளின் படம் ரசிக்க வைத்தது.

  வண்ணக்கவியின் வண்ணங்கள் மனதை ஈர்த்தன!

  ஜப்பானியர்களின் மறுபக்கம் அதிர வைத்தது.

  அந்தப் பழமையான மரம் பிரமிக்க வைத்தது.
  மொத்தத்தில் தொகுப்பு அருமை!!

  பதிலளிநீக்கு
 38. ஹஹஹா. To be continued ah? The Schindler's List, Inglorious Basterds மாதிரி படங்கள் பாத்துட்டு, Hitler இப்படி humour senseல பார்ப்பது different & comedyயா இருந்தது. Super compilation..

  பதிலளிநீக்கு
 39. நான் வரும் நேரம் ஆருமே கம்பி மேல:) நிற்க மாட்டேன் என்கினமே கர்ர்ர்:)) தனியாவே புலம்பிக்கொண்டு போக வேண்டிக்கிடக்கே:)) சரி சரி இது என்ன புதுசோ மீக்கு:))...

  //இதன் மூலம் தாங்கள் சொல்ல வருவது......?"/// அதானே இப்போ எதுக்கு இந்த பில்டப்பூ என்கிறேன்?:))

  ஹையோ சிந்துவெளி நாகரீகம் என எங்கள் சிலபஸ் ல இருந்துதே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

  பதிலளிநீக்கு
 40. ஒற்றைக் குடையோடு
  காத்திருக்கிறேன்..
  மழைக்காகவும்..
  உனக்காகவும்..///

  காண்ட்கூஊஊ கவிச நன்றாகத்தான் இருக்கு, ஆனா படத்துக்கும் கவிஜைக்கும் சம்பந்தம் இல்லையே:)).. கவிதை புரியாதவர் ..படம் இணைச்ச கதையாவெல்லோ இருக்கு.. அதிரா கண்ணுக்கு எல்லாம் தெரியுமெல்லோ.. விட்டிடுவமோ நாங்க:)..

  பதிலளிநீக்கு
 41. //"காதல்.... இதுல நானும் க்ளீன் பௌல்ட் ஆனவன்தான்..."//

  ஹா ஹா ஹா கீழே இப்பூடிக்கு ஸ்ரீராம் எனப் போட மறந்திட்டார் போல:))..

  //நிகழ் காலம்
  மட்டுமே
  வண்ணங்கள் காட்டுகிறது.//
  இதுதானே முக்கியம்.. வெள்ளையர்கள்போல நாமும் இன்றைய பொழுதை மட்டும் நினைச்சு ரசிக்கப் பழகி வ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது புரியுது.

  பதிலளிநீக்கு
 42. ///"என்னை விடுங்கோ... என்னை விடுங்கோ... ஆரும் என்னைத் தடுக்காதீங்கோ... நான் ரைன்ல குதிக்கப் போறேன்...."///

  ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அது ரெயின்:).. நோஓஓஓஓஓஓஓஒ ஒரு சொல்லை மாத்திப்போட்டால் மட்டும் விட்டிடுவேனோ:) இது என் கொப்பி வலதாக்கும்... இப்பவே போகிறேன் சுப்பையா கோர்ட்டுக்கூ... அந்த மொட்டை மாடியை வித்தாவது நேக்கு நஷ்ட ஈடு கட்டோணும்ம்ம்ம்:))

  .. அந்தப் பெரிய மரம்... ச்சும்மா பார்த்திட்டுப் போயிட்டால் ஓகே.. ஆனா கொஞ்சம் உற்றுப் பார்த்தா அழுகை வந்திடும்.. ஏனோ சின்ன வயசு நினைவுகள் எல்லாம் தட்டப்பட்டு விடும்... இம்முறை காலை ஆறு மணி பஸ்ஸில போனபோது எடுத்த படம்போல:) சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்ஸ்:)).

  //"இந்த வாரம் அவ்வளவுதானாம்.. ஸ்ரீராம் கிளம்பச் சொல்றான்.. வர்றேன்..."///

  அப்போ ரீ கொஃபி ஏதும் கிடையாதோ?:).. சே.சே.. பேய்க்காட்டிப் போட்டினம்:)).. ஹா ஹா ஹா கீதா நிண்டால் கொஞ்சம் கதைச்சிட்டுப் போகலாம் என வந்தேன்..

  இந்த திங்களில் இருந்து மீயும் டெய்லி இங்கின கதைச்சுக் கொண்டே இருக்கிறேன் ஆருமே பேச வருகினம் இல்லையே கர்:)).. சரி சரி எல்லோரும் பிசிதானே மீயும் ஓடிடறேன்:)..

  பதிலளிநீக்கு
 43. //வரணும்னு.... இருக்கு..ஆனா நேத்து வந்து சரி பண்ணியும்... வந்த நெட் போயிருச்....இன்னிக்கு வரேன்னு சொல்லிருக்கங்க....வந்ததும் வரேன்....

  கீதா//


  ஏன் கீதா உங்களுக்கு மட்டும் அடிக்கடி நெட் பிரச்சனை பண்ணுது.. இங்கு பதிவர்கள் பலர் ஸ்ரீராம் உட்பட சென்னையில்தானே இருக்கினம்.. அவர்களின் நெட் வேர்க்குக்கு மாத்திடுங்கோவன்..

  பதிலளிநீக்கு
 44. @ கோமதி அக்கா..

  //இதில் என்ன ஆனந்தமோ? படிக்கும் போது கஷ்டமாய் இருக்கிறது.
  ஹிட்லர் மென்மையானவர் ஆகி விட்டார் உங்கள் பதிவில்.
  அதிரா போல் வேறு பேசுகிறார்.///

  ஹா ஹா ஹா இது இப்போதானே என் கண்ணில பட்டுதூஊஊஊஊஊ.. ஆவ்வ்வ்வ் அதிராவை கிட்லருக்கு ஒப்பிட்டூஊஊஊஊஊஊஊ ஒரு மாபெரும் சபையில் வச்சு மீயை மானபங்கப் படுத்திட்டார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))... இதோ போகிறேன்ன்.. தேம்ஸ்ல குதிக்க அல்ல:), குயின் அம்மம்மாவிடம்ம்ம் நேக்கு நீதி வேணும்ம்ம்ம்ம்ம்:))...

  பிக்கோஸ் குயின் அம்மம்மா டொல்லியிருக்கிறா.. தான் கண்ணை மூடிட்டால் அந்த வைரம் அதிராப்பேத்தியிடம் கொடுத்திடோணும் என:)).. அதுக்காகவே மீ என் உசிரை, காண்ட்ல பிடிச்சுக் கொண்டு திரிகிறேன்:))

  பதிலளிநீக்கு
 45. //பிக்கோஸ் குயின் அம்மம்மா டொல்லியிருக்கிறா.. தான் கண்ணை மூடிட்டால் அந்த வைரம் அதிராப்பேத்தியிடம் கொடுத்திடோணும் என:)).// வைரத்தை வாங்கி பத்திரமா என் கிட்டே கொண்டு வந்து கொடுத்திடுங்க! :))))) ஹையா, ஜாலி!

  பதிலளிநீக்கு
 46. //இதைப் பற்றி இந்தளவில் முடித்துக் கொள்ளாமல் இன்னும் ஏதாவது எழுதுவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்!// நிறைய இருக்கு! ஆனால் எல்லோருக்கும் ரசிக்குமா என்பது சந்தேகமே! உண்மை எப்போதும் கசக்கும். :)

  பதிலளிநீக்கு
 47. ///வைரத்தை வாங்கி பத்திரமா என் கிட்டே கொண்டு வந்து கொடுத்திடுங்க! :))))) ஹையா, ஜாலி!//

  ஹா ஹா ஹா ஏன் கீசாக்கா உங்களுக்கும் ஏதும் நேர்த்தி இருக்கோ பொய்யாப் பிள்ளையாருக்கு?:)..

  //உண்மை எப்போதும் கசக்கும். :)///
  இது கரீட்டூஊஊஊஊஊஊஊஉ.. இதனால தேன் மீ சுவீட் 16 எண்டால் எல்லோருக்கும் கசக்கப் பார்க்குது:)) அதுக்காக மீ பொய் ஜொள்ள முடியுமோ?:) உண்மையைத்த்த்த்தேன்ன்ன்ன் பேசுவேன்ன்ன்:).

  பதிலளிநீக்கு
 48. அனைவருக்கும் இனிய வணக்கம்!

  கதம்ப மாலையாய் நறுமணம் வீசுகிறது பதிவு!
  கடந்த காலம் மீளாது, வருங்காலம் எப்படியோ?.. வண்ணமயமான நிகழ்காலமே நிதர்சனம்!
  அழகிய கவிதை! ரசித்தேன்.

  ஜப்பானியர்களின் மறுபக்கம் அதிர்ச்சி தந்தது.

  பழமையான மரம் பிரமிக்க வைத்தது.
  தொகுப்பு அருமை! வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 49. அதிரா உங்களை வம்புக்கு இழுத்துருக்கேனே பார்க்கலையா...ஹா ஹா ஹா

  எங்க வீட்டு நெட் இப்ப ஓகே!! இங்கு சென்னையில் பெரும்பாலும் ஸ்ரீராம் உட்பட எல்லாரும் இதெ பி எஸ் என் எல்தான் ஹா ஹா ஹாஹா....

  அது எங்கள் வீட்டு மாடியில் போகும் வொயர் பிரச்சனை பல நாட்கள் இப்போது எங்கள் வீட்டு லான்ட்லைன்ஃபோந்தான் பிரச்சனை - அதாவது வாய்ஸ் அண்ட் டேட்ட ரெண்டும் வந்து அப்புறம் ஸ்பிளிட்டரில் பிரிக்கப்பட்டு வாய்ஸ் தனியா, டேட்டா தனியா வரும். அந்தப் பிரிவில் வாய்ஸ் டேட்டாவை டாமினேட் பண்ணிடுச்சாம்...அதனால் எனச் சொல்லிவிட்டு இப்போ ஃபோனைக் கட் செய்து ப்ராட்பேன்ட் மட்டும் கனெக்ட் ஆகிருக்கு....ஹோஃப்புல்லி இனி பிரச்சனை வராதுனு நினைப்போம்..

  நானும் வந்துட்டேன் இனி நாம சேர்ந்து போராட்டம் செய்வோம் அதிரா அனுஷ்கா படம் போடலை பாருங்கோ.....

  கீதா

  பதிலளிநீக்கு
 50. நான் வரும் நேரம் ஆருமே கம்பி மேல:) நிற்க மாட்டேன் என்கினமே கர்ர்ர்:)) தனியாவே புலம்பிக்கொண்டு போக வேண்டிக்கிடக்கே:)) சரி சரி இது என்ன புதுசோ மீக்கு:))...//

  இனி கம்பி மேல நிப்பேன்...ஆனா விழாம பிடிக்க வேண்டியய்து பூஸார்!!!! ஓகேயா...

  கீதா

  பதிலளிநீக்கு
 51. காதல் மழை கவிதையும், வண்ணக்கவியும் ரொம்ப நல்லாருக்கு ஸ்ரீராம். மரம் படமும் ரொம்ப அழகு! ஒவ்வொரு நாடும் ஏதேனும் ஒரு நாட்டின் மீது இப்படி...ஒரு சில பழைய ஆங்கிலப்படங்களைப் பார்த்தால் இது நிறையவே தெரியவருகிறது.

  நல்ல தொகுப்பு

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
 52. ஹிட்லர் படங்களும், கமென்ட்ஸும் நல்லாருக்கு ஸ்ரீராம்...

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
 53. @அதிரா

  ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அது ரெயின்:). - ஜெர்மனி (ஹிட்லர்) ஆறு Rhineஐக் குறிப்பிட்டிருக்கிறார். அதை ரைன் என்றுதான் சொல்லணும்.

  இதைச் சொல்லிக்கொடுத்ததுக்கு, உங்க செக்ரெட்டரி, அடுத்த முறை அவங்களுக்குத் தேவையான பணத்தை எடுத்துக்கிட்டு, மீதியை மட்டும் உங்களுக்கு அனுப்பட்டும்.

  பதிலளிநீக்கு
 54. வணக்கம் சகோதரரே

  பதிவில் தொகுத்த கதம்பம் நன்றாக இருக்கிறது. கவிதைகள் நாலு வரிகளில் நன்றாக மனதில் பதியும்படியாய் அருமை. வெட்டு காயங்களிலிருந்து தப்பித்து பழமை மாறாமல் தன் கிளைகளை வளர விட்டுக் கொண்டிருக்கும் அந்த மரம் கண்களுக்கு இனிமை மட்டுமல்ல! வணக்கத்துகுரியது. தங்கள் விமரசனங்களுக்கு ஏற்ப ஹிட்லரின் முகபாவங்களுடைய படங்கள் அருமை.
  கதம்பம் மணந்தது.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்

  பதிலளிநீக்கு
 55. //சிந்துவெளி நாகரிகம் திராவிட சமுதாயத்தைச் சார்ந்தது. //

  இது குறித்து திராவிடத் தலைவர்கள் கருத்து ஏதானும் சொல்லியிருக்கிறார்களா?

  பதிலளிநீக்கு
 56. //வேத கால பண்பாட்டைவிட சிந்துவெளி நாகரிகம் மிகப் பழமையானது..//

  வேத கால பண்பாட்டிற்கும் சிந்துவெளி நாகரிகத்திற்கும் என்ன வித்தியாசம் என்று ஐ.மஹாதேவன் ஏதாவது சொல்லியிருக்கிறாரா?

  பதிலளிநீக்கு
 57. நன்றி கோமதி அரசு மேடம். ​ பழைய நினைவுகள் மதுரை மட்டுமல்ல, தஞ்சையும்! மரம் பற்றிய உங்கள் கமெண்ட் படித்த உடன்இன்னொரு மரத்தின் படத்தையும் (மறுபடி?) பகிர ஆசை. விரைவில் பகிர்கிறேன்.

  பதிலளிநீக்கு
 58. வாங்க நெல்லைத்தமிழன், பாராட்டுக்கு நன்றி. ஆரியப்படையெடுப்பு என்னும் கதை ஒவ்வொருவராலும் ஒவ்வொரு வகையாகச் சொல்லப்படுகிறது. என்னைப்பொறுத்த வரை இவை எல்லாமே பிரிட்டிஷ்க்காரர்கள் மாற்றி எழுதி கிளப்பி விட்ட வம்புகள்.

  பதிலளிநீக்கு
 59. வாங்க கீதா... //சீனர்கள் லேசுப்பட்டவர்களா என்ன?// அதானே?


  //ஸ்ரீராம் கவிதைல கலக்குறீங்கப்பா..// நன்றி! பாராட்டுவது உங்கள் அன்பு!

  காதல் மழை கவிதைக்கு அனுஷ் படம் போடவில்லையோ... என்ன அநியாயம்? எப்படி மறந்தேன்? சந்திராஷ்டமமோ!

  பதிலளிநீக்கு
 60. வாங்க ஜி எம் பி ஸார்... ஆரிய திராவிட சர்ச்சை பற்றி நீங்கள் சொல்வது சரி.

  பதிலளிநீக்கு
 61. வாங்க மனோ சாமிநாதன் மேடம். குடடைக்குள் குழந்தைகள் என்பதை விட காதலர்கள் என்பதே பொருத்தமாக இருக்கும்!

  பதிலளிநீக்கு
 62. வாங்க அதிரா.... நீங்க வரும்போது ஏன் நாங்க கம்பி மேல நிற்கவேண்டும்? சிந்துவெளி நாகரீகம் எங்க சிலபஸ்லயும் இருந்தது! ''காண்ட்கூஊஊ கவிச" என்றால் என்ன? அபுரி.

  //இப்பூடிக்கு ஸ்ரீராம் எனப் போட மறந்திட்டார் போல:))..//

  இவா ப்ரவுனை மறந்துட்டீங்களே!

  //நாமும் இன்றைய பொழுதை மட்டும் நினைச்சு ரசிக்கப் பழகி வ்ந்து கொண்டிருக்கிறோம் //

  நேற்று என்பது உடைந்த பானை ; நாளை என்பது மதில்மேல் பூனை ; இன்று என்பதுதான் கையில் உள்ள வீணை அல்லவா!

  மரம் உங்கள் சோக நினைவுகளைக் கிளப்பி விட்டதில் வருத்தம்தான்.

  பதிலளிநீக்கு
 63. வாங்க கீதா அக்கா... அதிரா வராதபோது நீங்கள் வந்து போவதும், நீங்கள் வராதபோது அதிரா வந்து போவதும்... சரியான கலாட்டா!

  பதிலளிநீக்கு
 64. வாங்க சகோதரி இளமதி... "கவிதை"களை ரசித்தமைக்கு நன்றி. மரத்தைப் பார்க்கும்போது என்ன காட்சிகள் உங்களுக்குத் தோன்றியது என்று ஏனோ யாருமே எழுதவில்லை.

  பதிலளிநீக்கு
 65. வாங்க கீதா... அனுஷ் படம் போடாததற்கு அதிரா ஒன்றும் சொல்ல மாட்டார்கள். பானு அக்கா வந்து பொங்கினால் உண்டு.

  பதிலளிநீக்கு
 66. வாங்க துளஸிஜி. ரசித்தமைக்கும் பாராட்டுக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 67. வாங்க நெல்லை.... நீங்கள் சொல்லியிருப்பதே சரி. ஜெர்மனியில் ஓடும் ஆறுதான் அது!

  பதிலளிநீக்கு
 68. வாங்க சகோதரி கமலா ஹரிஹரன். மரம் பற்றிய வர்ணனைக்கு நன்றி. பாராட்டுக்கும்!

  பதிலளிநீக்கு
 69. வாங்க ஜீவி ஸார்...

  திராவிடத் தலைவர்கள் ஏதாவது சொன்னார்களா என்பது குறித்து நினைவில்லை. மஹாதேவன் சொன்னது அங்கு படித்தவரை எடுத்து வைத்திருந்தது இவ்வளவுதான். வேறு ஏதாவது சொல்லியிருந்தாரா என்று............... தெரியவில்லை.

  பதிலளிநீக்கு
 70. கிட்லரை வைத்து போட்ட கலாய் பதிவு போல் தெரிகிறதே...!

  பதிலளிநீக்கு
 71. அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 72. ரைன்ல குதிக்கப் போகிறேன் என ஹிட்லர்.... ஹாஹா....

  அனைத்தும் ரசித்தேன்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!