9.7.26

உவ்வே

 

டெல்லி குழுவிற்காகவா, இல்லை தினமும் நடக்கும் நிகழ்வுதானா தெரியாது.  தினசரி  ஒரு அழகிய பெண்மணி டீக்கான உடையுடன் தோன்றுவார்.  கையில் ஒரு File. 

"இன்று ஏதும் குறைகள் உண்டா?" என்று கேட்பார்.  

நேரத்துக்கு ஊசி போட்டார்களா, நன்றாக கவனித்துக் கொண்டார்களா, விளக்கம் கேட்டால் பொறுமையாக பதில் சொன்னார்களா என்றெல்லாம் கேள்விகள் கேட்டு குறித்துக் கொள்வார்.  இது மாதிரி இரண்டாம் நாள் அவர் வந்து  பேசியதை கொஞ்சம் மானே தேனே சேர்த்து எழுதி, அன்றே வாட்ஸாப்பில் என் உறவுகளுக்கு அனுப்பினேன்!

அது...

******************************

Knock...  Knock..


"Yes..  Come in"

"Good evening  Sir ..  நான் இங்கே அட்மினிஸ்ட்ரேடிவ் சூப்பர்வைசர் உங்களுக்கு இங்கே ஏதாவது இஷ்யூஸ் இருந்தால் சொல்லுங்கள்" 

"ஒன்றுமில்லை மேடம்" 

"நன்றி.  அப்படியே ஏதாவது இருந்தால் இதோ இந்த கார்டில் உள்ள எண்ணுக்கு போன் பேசி சொல்லுங்கள்" 

"நன்றி மேடம் ஒரு விஷயம்...  ஒரு சின்ன இஷ்யூ... " 

"என்ன?" 

"ஊசி போட்டால் வலிக்கிறது மேடம்" 

புன்னகைத்தார்.  

"அதற்கு ரெமடி கிடையாதா?"

மறுபடியும் ஒரு அழகிய புன்னகை = கையிலுள்ள கோப்பைப் பார்த்தபடியே...

"இந்த நோட்டில் கையெழுத்து போடுகிறீர்களா?  நான் வந்து கேட்டேன் என்பதற்கான ஆதாரம்" 

நான் பாஸைக் காட்டி,   "அவர் போடலாமா?" என்றேன்.  


"ஓ... வேண்டியவர் என்றால் போடலாம்"

"வேண்டியவர்தான்..."

"தாராளமா போடலாம். அவர் உங்களுக்கு என்ன வேண்டும்?"  என்றார். 

"கொஞ்சம் நெருங்கிய சொந்தம் " 

"ஸிஸ்டரா?".

 "இல்லை வொய்ஃப்"" 

"என்னது?  என்ன வேண்டும்?" என்றார் சற்றே குழப்பத்துடன்.

"அவர் எனக்கு வொய்ஃப் வேண்டும்"

அவர் என் பார்வையைத் தவிர்த்து விட்டு பாஸிடம் கையெழுத்து வாங்க நோட்டை நீட்டினார்.  

பாஸ் அவர் முகத்தை சங்கடத்துடனும், என் முகத்தை சற்றே எரிச்சல் கலந்த கோபத்துடனும் பார்த்தவாறே File ஐ வாங்கினார்.

அட்மினிஸ்ட்ரேடிவ் சூப்பர்வைசர் கையெழுத்து வாங்கிக் கொண்டு கிளம்பினார்.  "ஏதாவது கம்ப்ளெயின்ட் இருந்தா சொல்லுங்க"

புன்னகையை ரத்து செய்திருந்தார்.

=============================================================================================

இன்ஸ்ட்டாவிலிருந்து பகிர்வதால் அனைவராலும் பார்க்க முடிகிறதா என்று தெரியவில்லை.  பிரிவியூவில் எனக்கு ஒழுங்காக காட்டுகிறது.

TMS பின்பற்றிய சில பாணிகள் பற்றி சொல்கிறார் வீரமணி ராஜு.

View this post on Instagram


======================================================================================= 


தமிழே அறியாத சரோவை வசந்தியாக்குவதற்குள் ஸ்ரீதரின் யூனிட் திண்டாடித் தெருவில் நின்றது.
‘இரண்டு நாள்கள் ஷூட்டிங் முடிந்திருந்தது. ‘எப்படி நம்மப் புதுமுகம்...? ’ என்று கேட்டார் ஸ்ரீதர்.
’எல்லாம் சரி. லேங்வேஜ்தான் ப்ராப்ளம். ’ என்றார் ஒளிப்பதிவாளர் வின்சென்ட்.
‘கொஞ்சம் கொஞ்சமாக வ(மொ)ழிக்குக் கொண்டு வர வேண்டும். ’ என்றார் உதவி டைரக்டர் பி. மாதவன்.
ஒரு ரூபா என்கிற வார்த்தையை ‘வரு ரூபா’ என்பதாக சரோ உச்சரித்தார். ரிகர்சல் பார்த்த ஸ்ரீதர், என்னிடம் சாமியாடினார்.
‘என்னடா நீ முன்னாடியே படிச்சுக் காமிச்ச லட்சணம் இதுதானா...? ’
என்னை முறைத்தவாறே ஸ்ரீதரும், கடைசி வரையில் சரோவின் ‘கொஞ்சும் கிளி’ தமிழைத் திருத்த முயற்சித்துத் தோற்றார்.
ஒத்திகையில் மட்டுமல்லாமல் டேக்கிலும் ‘வரு ரூபா’ என்றே சொல்லி, ஃபிலிமைத் தின்று நாள் முழுவதும் ஏப்பமிட்டார் சரோ.
ஸ்ரீதராலும் சரோவின் சந்தனத் தமிழைத் திருத்த முடியவில்லை என்கிற சந்தோஷத்தில் எனக்குத் தனி குஷி பிறந்தது.
ப்ளைமூத்தில் தாயார் ருத்ரம்மா, சகோதரிகள் சகிதம் கல்யாணப் பரிசு செட்டுக்கு வரும் சரோ, கம்பெனி தரும் ஹோட்டல் டிபனை ஒரு பிடி பிடிப்பார்.
ஸ்டில்ஸ் அருணாச்சலம்- ‘என்ன குழந்தே... தெம்பா இல்ல? ’
ருத்ரம்மா - ‘அது தூங்கப் போனது ரொம்ப லேட்டு. டயலாக் படிச்சது. ’
ஸ்டில்ஸ் ஆனாரூனா - ‘நீங்களும் வாங்கி அப்பப்பப் படிங்க. தமிழ் பொழைக்கும்! ’ ‘சித்ராலயா’ கோபு.
சினிமா உரையாடலை மட்டுமல்ல. கோபுவின் முழுப்பெயர் சடகோபன். அதை ‘ஜடைகோபால்’ என்றே சரோ தவறுதலாக அழைத்தார்.
பி. மாதவன், ஸ்ரீதரிடம் அது பற்றி முறையிட்டார்.
ஸ்ரீதர் - ‘அது அவனுக்குப் பொருந்தும். அவன் ஒன்பதாம் வகுப்பு வரை குடுமி வைத்திருந்தான். ’
சரோ - ‘குடுமின்னா என்னா...? ’
கோபு- ‘ரொம்பப் புத்திசாலி என்று அர்த்தம். ’
தமிழ் தெரியாவிட்டாலும் தன்னை யாராவது கலாய்த்தால் சரோ உஷாராகி விடுவார். அவர்கள் யாராக இருந்தாலும் பதிலடி கொடுக்காமல் விட்டதில்லை.
பின்னர் ஒரு காலத்தில் அந்த கோபால் என்ற உச்சரிப்பில் அந்த கன்னட பைங்கிளியை தமிழ் நாடு அன்றும் இன்றும் மறக்க வில்லை என்பது உண்மையே.
- சித்ராலயா கோபு
முகநூல் பதிவு- பிரசாந்த்!
இன்று பிறந்தநாள் காணும் சித்ராலயா கோபு அவர்களின் பிறந்தநாள் சிறப்பு பதிவு!


============================================================================================

1979 ல் 22 நாட்களில் எடுத்து முடிக்கப்பட்ட படம் புதிய வார்ப்புகள். ரத்தி அக்னிஹோத்ரிக்கு முதல் படம். பாக்யராஜுக்கும் ஹீரோவாக முதல் படம். பாரதிராஜா முதன்முதலாக சொந்தமாக தயாரித்த படம், 'முதன் முதலா சொந்தமா படம் எடுக்கறீங்க.. என்னை ஹீரோவா போட்டு ஏன் ரிஸ்க் எடுக்கறீங்க' ன்னு பாக்யராஜ் கூட கேட்டாராம், படம் பாரதிராஜாவுக்கு வெற்றியைக் கொடுத்தது, இரண்டு விருதுகளையும் கொடுத்தது,.. படம் இதுவரை நான் பார்க்கவில்லை என்பது பெரிய தகவல் அல்ல என்பதால் அதை இங்கு சொல்லாமல் விடுகிறேன். சிறிய ஒரு வேடத்தில் நடித்த மனோபாலாவுக்கும் முதல் படம்.

முதல் பாடல் கண்ணதாசன் எழுதி இளையராஜா இசையில் மலேஷியா வாசுதேவனும், ஜானகியம்மாவும் பாடி மோகனமாய் ஒலிக்கிறது.

==================================================================================================

ஜெயகாந்தன் :

ஒன்பதாம் பிராயத்தன் என் விழிக் கோது காதை சகுந்தலை ஒத்தனள்' என்று, பாரதியார் எழுதியிருப்பது போல், எனக்கும் பன்னிரண்டு வயதில், ஒரு காதல் அனுபவம் ஏற்பட்டது.
'வயது முற்றிய பின்னறு காதலே மாசுடைத்து...' என்கிறார் பாரதியார். அதில் மாசு இருந்ததா, இல்லையா என்று எனக்குத் தெரியாது. ஆனால், அவள், மேல் எனக்கு காதல். அவளுக்கு உண்டா என்றும் தெரியாது. அவள், என்னைச் சுற்றிச் சுற்றி வருவாள்; என்னோடு விளையாடுவாள்.
நானும், அவளும் தனிமையில் பேசி, சிரித்து, தோட்டமெல்லாம் திரிவோம். நான், என்ன சொன்னாலும், விழுந்து விழுந்து சிரிப்பாள். நான் பேசுவதெல்லாம், அவளுக்கு, 'ஜோக்' தான். அவளை, ஒரு நாள் காணாவிட்டால், நான் தவித்து போவேன். கண்டதும், அப்படி ஒரு மகிழ்ச்சி ஏற்படும்.
நான் வேலை செய்து கொண்டிருந்தேன். அவளோ கான்வென்ட்டில் படித்தாள். மதிய நேரம் வருவாள். மாலை வரை வேலைக்கு டிமிக்கி கொடுத்து, அவளோடு நான் விளையாடுவேன்.
ஒருநாள் அவள் வரும் போது, நான் உடல்நலம் இல்லாததால், தூங்கி விட்டேன். அவள் வந்து பார்த்து விட்டு போய் விட்டாள். தூங்கி எழுந்த போது, அவள் நினைவுடனே எழுந்தேன். அவள் வந்து போய் விட்டதாக கூறினர். எனக்கு அந்த ஏமாற்றத்தை தாங்க முடியவில்லை.
தனிமையில் போய், மொட்டை மாடியில் கவிழ்ந்து படுத்து, எதையோ இழந்தவனாக சோகம் தாளாமல், கதறிக் கதறி அழுதேன்.
அடுத்த நாள் அவள் வருவாள் தான். ஆனால், அன்று அவளைப் பார்க்காத வருத்தத்தில், அவ்வளவு அழுகை, சோகம்.
அதன்பின், அவள் எங்கோ, நான் எங்கோ பிரிந்த பின், இடையில், ஆறு ஆண்டுகள் கழித்து, எனக்கு பதினெட்டு வயதில், அவளைப் பதினாறு வயதுப் பெண்ணாக, மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. அதுவரையில், அவளது பெயரையும், நட்பையும் மறவாமல், நினைவில் பாதுகாத்து, வைத்திருந்தேன்.
அவள் வரப் போகிறாள் என்று, முன்னாலேயே எனக்கு தெரியும். எனவே, அவள் வருகைக்காக, நான் காத்திருந்தேன். அவளும், வீட்டில் நுழைந்ததும், என் பெயரை கூறி, 'எங்கே?' என்று கேட்டு, ஆவலாய் வந்து, கதவைத் திறந்து, நின்றாள்.
அந்த வினாடி, என் காதல், அவள் காலடியில் வீழ்ந்து செத்தது. காரணம், அவள், 'நெடு நெடு'வென, என்னை விட, உயரமானவளாக வளர்ந்திருந்தது தான். அதனால், என் மனம் ஏன் மாற வேண்டும்... இது என்ன, 'சைக்காலஜி' என்று, எனக்கு புரியவில்லை.
அவள் என்னோடு மிகவும் ஆர்வத்தோடும், நட்புணர்வோடும் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தாள். அந்தப் பழைய நாட்களை நினைவுறுத்தி, அவள் பேசும் போது, எனக்கு வருத்தமாகவும், ஏன் கோபமாக கூட இருந்தது. 'இவள் யார் அந்த அழகான நினைவுச் சித்திரங்களை கலைப்பதற்கு...' என்று, தோன்றியது. அதன் பின், அவளை நான் சந்திக்கவே இல்லை.

— 'நினைத்துப் பார்க்கிறேன்' என்ற கட்டுரையில், ஜெயகாந்தன்.
வாரமலர் - திண்ணை 2017 ஜூலை

=============================================================================

பெர்முடா முக்கோணம் மர்மம்.  ஜீவி ஸார் அனுப்பி வைத்தது.  இந்த பெர்முடா முக்கோண மர்மம் எப்போதுமே எல்லோருக்குமே பிடித்த புதிர்களில் ஒன்று.  இப்போது இது சம்பந்தமாய் இந்தப் பெண் சொல்வதையும் கேளுங்களேன்...


=============================================================================================

நகுலன் பாணியில் ஒரு கவிதை முயற்சிக்கிறேன்...  ஜீவி ஸார் மன்னிப்பாராக...

'அது என்ன' என்று அவள் 
என்னைக் கேட்டாள்.
'தெரியாது' என்றேன்.
எதைபபற்றிக் கேட்டாள் என்று 
நானும் கேட்கவில்லை.
அவளும் சொல்லவில்லை.



உவ்வே 

இடுப்பில் சொருக நினைத்த 
கர்சீப் 
விழுந்தது தெரியாமல் 
முன்னால் நடந்து சென்ற 
இடையழகியிடம் 
அதை எடுத்து நீட்டினேன் 
வேறொரு கர்சீப்பால்
'கர்கர்ரெ'ன்று  
மூக்கை 
சீந்திக் கொண்டிருந்தவள்  
திரும்பி, 
'வேண்டாம்' என்று சைகை 
செய்தாள்.  
'ரொம்ப ஈரமாகி விட்டது.  
அதுதான் 
வேறு எடுத்திருக்கிறேன்'.
  
அப்போ அந்த ஈரம்
வியர்வை இல்லையா?

==========================================================================================

இந்தப் படத்தின் பாடல்கள் சென்னை பிரசிடெண்ட் ஹோட்டலில் வைத்து பதிவு செய்யப்பட்டதாம்.  இப்போது வரும் பாடல் ஜென்ஸி மற்றும் B. வசந்தா பாடிய பாடல்.   பாடல் பேஸ் ஷண்முகப்பிரியா ராகம் என்று சொன்னதோடு அடிக்கடி சமீப காலங்களில் கங்கை அமரன் இந்தப் பாடல் பற்றி சிலாகித்து பேசுகிறார் என்பதோடு அந்தப் பாடலின் வரிகளை இப்போதும் மனனமாக ஒப்பிக்கிறார்..  உண்மையிலேயே மனத்தைக் கொள்ளை கொள்ளும் சந்தநயம்.

ஒரு ஜாங்கிரியை எடுத்துக் கொள்ளுங்கள். ஓரிடத்தில் ஆரம்பித்து ஏகப்பட்ட வளைவு நெளிகளுடன் சுற்றிச்சுற்றி வந்து ஆரம்பித்த இடத்திலேயே முடியும் இல்லையா..  இப்போது ஆரம்பம் எது முடிவு எது என்று தெரியாது.  முடிவே இருக்காது!  அது போலதான் இந்தப் பாடல்.  அப்போது இந்தப் பாடலின் அருமை தெரியவில்லை.  இப்போல்லாம் தவறவிடுவதில்லை!

இளையராஜா வேண்டுமென்றே இந்த கஷ்டமான சந்தத்தை அமரனிடம் கொடுத்து பாடல் எழுதி வா என்றதும் ஹோட்டலின் மொட்டை மாடி சென்று அமர்ந்து வாகன சத்தங்கள் இடையே பத்து நிமிடத்தில் எழுதிய பாடலாம்.

புதிய வார்ப்புகள் படத்தில் முதலில் கங்கை அமரன்தான் பாக்யராஜ் நடித்த பாத்திரத்தில் நடிப்பதாக இருந்ததாம்.


=========================================================================================

OTT யில் பார்த்த படம்.



ஒரு நிறுவனத்தில் கடுப்பேத்தும் ஒரு மானேஜர் திடீரென மரணமடைகிறார்.  அது கொலை என்று அறியப்படுகிறது.  போலீஸ் எல்லாம் வரவில்லை.  அந்தக் கொலைக்கு நான்கு பேர்கள் மேல் சந்தேகம்.  துப்பறிவாளர் யாரும் வரமாட்டார்கள்.  நான்கு பேர்களுக்குமான சம்பவங்கள் ஒன்று இரண்டு என்று விவரிக்கப்படுகின்றன. கொலையாளி யார் என்று படம் பார்க்கும் நாம் கண்டுபிடிக்க வேண்டும்!  விதார்த், கலையரசன், சுந்தரா டிராவல்ஸ் ராதா ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.  மானேஜராக ஜான் விஜய்.  SunNext தளத்தில் பார்த்தேன்.  பார்க்கலாம்.

=============================================================================================

ஜோக்ஸ்....





64 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. யார் யாருக்கு அதில் சுவாரஸ்யம் இருக்கிறதோ...

      நீக்கு
  2. பெர்முடா முக்கோண மர்மம் பற்றி சக வாசகர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை வாசிக்க ஆசை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜீவி ஸார்.. வணக்கம்.

      நீக்கு
    2. பெர்முடா ரகசியம் மாதிரி இங்கே பதிவிலும் அது ரகசியமாகவே முடங்கிப் போயிருக்கே? யாருக்குத் தெரிஞ்சது? அதுவும் ரகசியமா?

      நீக்கு
  3. நலுலன் பாணி உங்கள் கவிதையில் அந்த கடைசி வரிகள் இரண்டையும் நீக்கி விட்டால் இன்னும் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சேர்க்கும்போதே எனக்கும் தோன்றியதுதான் .  இப்போது நீக்கி விட்டேன்!

      முதல் இரண்டு பின்னூட்டங்களுக்கு பதில் மாறி விழுந்திருப்பதற்கு மன்னிக்கவும்!

      நீக்கு
  4. பாக்யராஜின் முயற்சியில் எனக்கு மிகவும் பிடித்த் படம் 'சுவரில்லாத சித்திரங்கள்'. அனுபவித்து எடுத்திருப்பார் போலிருக்கு. கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்த அந்த படத்தில் நடிகர்களையும் பாராட்ட வேண்டும்.
    அவர்களில்லாமல் அந்தப் படமுமில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இயக்குனர் அவதாரத்தில் அது அவர் முதல் படம். இன்று நான் பகிர்ந்திருக்கும் படம் கதாநாயகனாக அவர் முதல் படம். எனக்கு அவர் நிறைய படங்கள் பிடிக்கும்.

      நீக்கு
    2. எந்தத் துறையிலும் யாருக்கும் தன்னை ஸ்தாபித்துக் கொள்ள செய்யும் முயற்சிகள் பெருமைக்குரியதாக அமைந்து விடும். போகப்போக நமுத்த பட்டாசுவதை தவிர்க்க முடியாமலேயே போய்விடும்.

      நீக்கு
    3. முருக்கைக்காயை அவர் அதீதமாக உபபோகப்படுத்திக் கொண்டது போல. விரசம் போர்த்திய சொல்லாடல்களை சகஜமாக்கிய விஷயத்தில் கரை கண்டவர்.
      'முந்தானை முடிச்சு' -- கொஞ்சம் கற்பனை பண்ணிப் பாருங்கள்.
      குமுதம் வாசிக்கக் கூடாது என்று சிறார்களைக் கண்டித்த அந்த நாளைய பெரியவர்களைக் கூட சப்புக்கொட்டி ரசிக்க வைத்தவர்.

      பாரதிராஜா -- பாலசந்தர் -- பாக்யராஜ் இந்த மூவரணியில் இவருக்கான அடையாளம் இது.

      நீக்கு
    4. ஆபாசமாக இல்லாமல் அதை நகைச்சுவை கலந்து அழகாகக் கொடுத்தார்.  நிஜமாகவே திரைக்கதை மன்னன் அவர்.

      நீக்கு
  5. நகுலன் பாணிக் கவிதை நல்லா இருந்தது.

    நீக்கிய இரண்டு வரிகள் எவை என்று நானும் கேட்கப் போவதில்லை. நீங்களும் சொல்லப்போவதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா...  ஹா..  ஹா..  வாங்க நெல்லை.  ஸூப்பர்.

      நீக்கு
    2. இரண்டு வரிகளை நீக்கினாராம்
      சொல்லித் தான் தெரிந்தது
      சொல்லாமல் இருந்திருந்தால்
      அதுவும் தெரிந்திருக்காது
      எதற்காக நீக்கிநாரென்று
      நானும் கேட்கவில்லை
      அவரும் சொல்லவில்லை.

      நீக்கு
    3. ஹா.. ஹா.. ஹா... கீதா வந்து ஒன்று முயற்சி செய்வார்!

      நீக்கு
  6. உவ்வே கவிதை, வெண்ணிறாடை மூர்த்தி பாணி நகைச்சுவை. எடுத்துக்கொள்பவர் மனதைப் பொறுத்தது

    பதிலளிநீக்கு
  7. சரோஜாதேவியைப் பற்றிய சித்ராலயா கோபு எழுத்து புன்னகைக்க வைத்தது.

    சிலருக்கு அதிர்ஷ்டம் வந்து மேலே ஏற்றிவிடுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லா கிண்டல் பண்ணுவாங்க..  ஆனால் அவரை கனவுக் கன்னியா கொண்டாடுங்க...

      நீக்கு
    2. கன்னடத்துப் பைங்கிளி

      நீக்கு
  8. புதியவார்ப்புகள் படத்தில் தம்தன தம்தன பாடலா? ஐபேடில் வரவில்லை.

    படமும் அப்போதே ஹாஸ்டல் சமயத்தில் பார்த்துவிட்டேன். இந்தப் பாடல் நெடுநாள் மனதில் இருந்து முணுமுணுப்பேன். அப்போ இரண்டு பேர்கள் பாடினர் என்று தெரியாது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரண்டு பாடல்கள் இணைத்திருந்தேன்.  நெல்லையில் கமெண்ட் பார்த்து சென்று பார்த்து ஒன்று இணையவில்லை என்று அறிந்து இப்போது இணைத்து விட்டேன்.

      நீக்கு
  9. தந்தன தந்தன
    தாளம் வரும்..

    அப்போதிருந்தே மனம் கவர்ந்த பாடல்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரண்டு பாடல்கள் இன்று.. இன்னொன்றும் உண்டு!

      நீக்கு
  10. பாரதிராஜாவுக்கு வீம்பு (அல்லது மனோஜ் மாதிரியா இருந்திருப்பாரு) ரத்தி அக்னிஹோத்ரியை அந்தப் படத்தில் போட.

    இவரும் ஒரு காரணம், அரசியல்வாதிகள் சொல்லும், புளித்துப்கோன, தொழில் வேறு கொள்கை வேறு என்ற பதிலுக்கு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எப்படியோ படம் வந்து வெற்றியும் பெற்றுவிட்டது!  படத்தில் குங்குமம், இதயம் பேசுகிறது பத்திரிகைகளை வைத்து வரும் வசனம் ரசனை.

      நீக்கு
  11. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இணைந்து பிரார்த்திப்;போம்.  வாங்க கமலா அக்கா..  வணக்கம்.

      நீக்கு
  12. TMS அவர்களைப் பற்றிய தகவல் சிறப்பு..

    பதிலளிநீக்கு
  13. வணக்கம் சகோதரரே

    இன்றைய வியாழன் கதம்பம் எப்போதும் போல் அருமை.

    ஆஸ்பத்திரியில் ரவுண்டு வந்த அட்மினிஸ்ட்ரேடிவ் சூப்பர்வைசரின் இயல்பான புன்னகையை ரத்து செய்ய வைத்த உங்கள் பதில்களை ரசித்தேன்.:))

    முதலில் சகோதரர் ஜீவி சாரின் கருத்துக்கு வந்த தங்களின் பதில்கள் மாறியிருக்கின்றன.

    இன்றைய தலைப்பே ஒரு வித்தியாசந்தான். அதற்கான கவிதை படித்ததும் புரிந்தது. கவிதையையும் ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கமலா அக்கா.. ஒரு ஓட்டத்தில் பாதி பதிவை முடித்து விட்டீர்களே...

      நீக்கு
    2. இன்று கவிதை மட்டும் நகுலன் அவர்களின் பாணியில் இல்லை. கருத்துக்களும், பதில்களும் சுஜாதா அவர்களின் பாணியில்

      நீக்கு
    3. அப்படியா?  சுஜாதா பாணியா?  அட!

      நீக்கு
  14. ​ஆஸ்பத்திரி அனுபவங்கள் - அந்த கடைசி வரி //புன்னகையை ரத்து செய்திருந்தார்.// நச்சென்று இருக்குது. பல்பு கொடுப்பதில் மன்னர் நீங்கள்.
    நகுலனுக்கு என்று தனி பாணியை உருவாக்கிவிட்டுருவாக்கி விட்டர்கள்.

    நல்லாயிருக்கா என்று
    கேட்டார் அவர்
    நல்லாயிருக்கு
    எது என்று அவரும்
    கேட்கவியில்லை
    நானும் சொல்லவில்லை.

    பொக்கிஷ ஜோக்குகள் த்ராபை.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி JKC ஸார்..  இனி நகுல கவிதைகள் கொட்டும்!  

      // பொக்கிஷ ஜோக்குகள் த்ராபை. //

      போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் அதை எழுதியவர்களுக்கே...!

      நீக்கு
    2. / இனி நகுல கவிதைகள் கொட்டும்! /

      கொட்டட்டும். உடன் படித்து ரசிக்க சகா(சக)தேவன்கள் நாங்கள் உள்ளோமே..:))

      நீக்கு
  15. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.....

    பெர்முடா - Something went wrong என்று வருகிறது.

    இன்றைக்கு கொடுத்திருக்கும் இரண்டு பாடல்களும் ரசித்த பாடல்கள்.

    சரோ - கோபால் எனக்கு நினைவுக்கு வந்தது....

    அனைத்தும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. ​வாங்க வெங்கட்.. வணக்கம். ​பெர்முடா ரன் ஆகவில்லையா? மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்க்கிறேன்.

      நீக்கு
  16. வணக்கம் சகோதரரே

    இன்றைய முதல் கவிதையையும் இரண்டாவதின் இறுதியுடன் சேர்க்கலாம்

    /அப்போ அந்த
    ஈரம் வியர்வை இல்லையா/
    ஆனால்,
    கண்டதும் காதல் என்ற
    கருமத்தில் நான் அதை
    என் கைகளுக்குள்
    மறைத்தது அவளுக்கு
    உறுத்தியது.

    இப்போது முதல் கவிதை.

    /அது என்ன' என்று அவள்
    என்னைக் கேட்டாள்.
    'தெரியாது' என்றேன்.
    எதைபபற்றிக் கேட்டாள் என்று
    நானும் கேட்கவில்லை.
    அவளும் சொல்லவில்லை..

    இதுவும் ஒரு பாணி.. :)) உண்மையான உவ்வே..:))

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  17. "ஊசி போட்டால் வலிக்கிறது மேடம்"

    புன்னகைத்தார்.

    "அதற்கு ரெமடி கிடையாதா?"

    மறுபடியும் ஒரு அழகிய புன்னகை //

    தெய்வீகப் புன்னகையாக இருந்ததா! ஸ்ரீராம்...?!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா..  அந்தப் புன்னகை எப்படியிருந்தது என்றால்.. 

      வேண்டாம் விடுங்க!

      நீக்கு
    2. ஓ! பிரச்சனை ஆகிடுமோ!! இல்லை அனுஷ் கோச்சுக்குவாங்களா!!!ஹாஹாஹா

      கீதா

      நீக்கு
  18. மானே தேனே எங்க வந்து பாயுதுன்னு புரிஞ்சு போச்!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹிஹிஹி...  ஆனால் ஜெமினி நாம் கேட்பதைக் கொடுக்கக் கூடாது என்று விரதமே வைத்திருக்கிறது!

      நீக்கு
  19. அப்பெண் செய்வது ஒரு சில மருத்துவமனைகளில் உண்டு என்றாலும் ஒரு வேளை அப்படிச் செய்வதும் கூட தில்லி குழுவோ வேறு ஏதேனும் குழுவுக்காக இருக்குமோ டவுட்டு....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இருக்கலாம்.  முன்னர் இதே ராமச்சந்திராவில் இப்படிப் பார்த்ததாக நினைவில்லை.

      நீக்கு
  20. டி எம் எஸ் பிரமாதம். அதான் அவர் குரலில் பாடலுக்கு ஏற்ற அப்படி ஒரு உணர்வு!!!! லயித்து அதிலேயே மூழ்கிப் பாடும் இந்த டெக்னிக்..!!

    கீதா

    பதிலளிநீக்கு
  21. பெர்முடாவை பேஸ்புக் பெர்முடாவில் போட்டுவிட்டது, go back என்று சொல்கிறது.
    link மட்டும் கொடுத்திருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  22. கூடவே ஆதித்யா டிவி விளம்பரம் போல சிரித்தாலே இனிக்கும் பாருங்கன்னு சொல்றாங்களே

    கன்னட பைங்கிளி பகுதி சிரித்துவிட்டேன்...

    கீதா

    பதிலளிநீக்கு
  23. உவ்வே படிக்கிறச்சேயே நினைச்சேன். இஃகி,இஃகி,இஃகி. நகுலன் பாணி கவிதை அபாரம்னு சொல்ல முடியாட்டியும் பரவாயில்லை ரகம்.
    புதிய வார்ப்புகள் அம்பத்தூரில் இருந்தப்போக் கணுப்பொடி வைக்க ஆழ்வார்ப்பேட்டையில் இருந்த அப்பா/சகோதரர்கள் வீட்டுக்குப் போனப்போ தம்பி மிட்லன்ட் தியேட்டர்? அல்லது சாந்தி? அல்லது தேவி? எதுனு நினைவில் இல்லை. அங்கே மாட்னி காட்சிக்கு முன்பதிவு செய்து வைச்சுட்டுத் தம்பி குடும்பத்தோடு எல்லோரையும் அழைத்துப் போனார். கொஞ்சம் இந்தப்படத்துக்கும் வேதம் புதிது படத்துக்கும் நான் குழப்பிப்பேன். ஆனாலும் இதில் மேல் முகவாயில் மச்சம் உள்ள ரத்தியும் வேதம் புதிது படத்தில் அமலாவும் என்பது மட்டும் புரிஞ்சிருந்தது. அதோடு வேதம் புதிது அம்பத்தூரிலேயே ஸ்டேஷனுக்கு அந்தப்பக்கம் இருந்த முருகன் தியேட்டரில் பார்த்தோம். நான், குழந்தைகள், இரண்டாவது நாத்தனார், குழந்தைகள், அவங்க வீட்டுக்காரர், மைத்துனர், ஓர்ப்படினு எல்லோருமாப் போயிருந்தோம். படம் முடிவு/படம் இரண்டுமே எங்களுக்குப் பிடிக்கலை. ஆனாலும் வெளிக்காட்டிக்கலை.

    பதிலளிநீக்கு
  24. படம் இதுவரை நான் பார்க்கவில்லை என்பது பெரிய தகவல் அல்ல என்பதால் அதை இங்கு சொல்லாமல் விடுகிறேன். //

    அதான் சொல்லிட்டீங்களே!!!! பெரியதகவல்!

    ஆமா மோகனமாய்...அருமையான இசை!! மெட்டு. இப்பவும் கேட்டு ரசித்தேன்.

    இதே படத்தில்தானே கோயில் மணி ஓசை தன்னை இப்படமோ? அதுவும் அழகான ராகம் சுத்த சாவேரி.

    டிப்பிக்கல் பா ரா மேக்கிங் ஸ்டைல்.

    ர அ கோ இப்ப என்ன செய்யறாங்களோ?

    கீதா

    பதிலளிநீக்கு
  25. ஜெயகாந்தனை ஏற்கெனவே படிச்சிருக்கேன். இதைத் தவிர்த்தும் அவர் தினமணி கதிரில் கிட்டத்தட்ட தன் சுயசரிதையைக் கடலூர் வாழ்க்கையை எழுதி வந்தார். அது இன்னும் சுவாரசியம். அது சரி, ஜெயகாந்தன் நண்பர்களோடு இருந்த வீடு ஆழ்வார்ப்பேட்டை ராமசாமி நாயக்கன் தெரு முனையில் இருந்த பிள்ளையார் கோயில் மாடி என்பது தெரியுமா? அங்கே தான் நண்பர்களைச் சந்திக்க, வாத, விவாதங்கள் செய்ய, எழுதனு வைச்சிருந்தார். சித்தப்பா ஓரிரு முறை அங்கே வந்திருக்கார். ஆனால் நாங்க போனதில்லை. அப்போல்லாம் ஜீன்ஸ், டீ ஷர்ட் என ரொம்பவும் நாகரிகமாக இருப்பார் ஜெயகாந்தன். கண்ணாடி, கூலிங்கா, சாதாரணமானதா, பவரானு தெரியாது. அணிந்திருப்பார். போய்ப் பேசினதில்லை. அங்கே இருந்து எதிர்சாரியில் சில வீடுகள் தள்ளித் தான் அண்ணா வீடு. எதிர் வீடு ஸ்ரீதேவியின் சொந்தச் சித்தி.

    பதிலளிநீக்கு
  26. ஜெயகாந்தன் பகுதி சுவாரசியம்.

    கீதா

    பதிலளிநீக்கு
  27. பெர்முடா முக்கோணம் இங்கும் மர்மமாக லிங்க இழுத்துருச்சு போல!!!!

    கீதா

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!