கேள்வி பதில்கள் :
நெல்லைத்தமிழன் :
1. பத்திரிகையாளர்கள், இந்தக் கட்சிதான் வெற்றி பெறணும் என்று கட்சி சார்பு நிலை எடுத்துப் பேசுவதை ரசிப்பதுண்டா? இல்லை அவங்களும் 200 ரூ ஆட்கள் என்ற எண்ணம் தோன்றுமா?
# பத்திரிகைகளுக்கு கொள்கை (ஏதோ ஒரு கட்சிக்கு ஆதரவு) இருப்பது தவறல்ல. ஆனால் தான் சார்ந்துள்ள கட்சி எது செய்தாலும் சரியே என்ற நிலையை எடுத்துக் கொள்வதோ, அது தவறே செய்வதில்லை என்று பிரச்சாரம் செய்வதோ சரியாக இராது. தவறை சுட்டிக்காட்டாமல் இருப்பது சில சமயம் ஏற்றுக் கொள்ளத் தகாததாக ஆவதும் உண்டு. என்ன சொல்லப்பட்டாலும் அதில் பொய் கலப்பு இருக்கக் கூடாது என்பது மிக முக்கியம். இப்போதைய நாட்களில் அது போன்ற ஒரு நியாயமான பத்திரிகையை அடையாளம் காண்பது மிகவும் கடினம்.
& மீடியா ஆட்கள் சொல்வது எதையும் நம்புவது இல்லை.
2. ஒரு பத்திரிகையின் வேலை என்ன? நடப்பதை நடக்கின்றபடியே செய்தியாக மக்களிடம் சேர்ப்பதா இல்லை ஒரு கட்சிக்கு ஜால்ரா அடித்து காசு தேற்றுவதா?
# செய்திகளை உண்மையாக மூடி மறைக்காமல் சொல்வதுதான் பத்திரிகைகளின் முக்கியமான வேலை.
& காசேதான் கடவுளப்பா !
3. கருத்துக் கணிப்பு எடுத்து வெளியிட்டவர்கள், தாங்கள் சொன்னது போல ரிசல்ட் வராமல் முற்றிலும் வேறுவிதமாக வந்தால், மன்னிப்பு கோருவார்களா?
# கருத்துக்கணிப்பு என்பது ஒரு சில நபர்களின் உள்ளீடுகளை வைத்து பெரும்பாலோரின் கருத்துக்களை கணிப்பதாகும். இதில் தவறு ஏற்பட வாய்ப்புகள் பெருத்த அளவில் உண்டு. அதற்கு மன்னிப்பு கோருவது பயனற்றது, தேவையில்லாதது.
& ஹி ஹி ஹி !!!
4. நாம் எதிர்பார்க்கும் கட்சி வெற்றி பெற்றால் சந்தோஷமும் தோல்வியடைந்தால் வருத்தமும் கொள்வதன் காரணம் என்ன?
# இது மனித சுபாவம். நம் ஊரில் நாலு பேர் செத்தால் மிகப்பெரிய சோகம். அதே ஏதோ ஒரு வெளிநாட்டில் 100 பேர் செத்தால் அது வெறும் செய்தி.
& வெற்றி பெறக்கூடாது என்று நான் நினைத்த கட்சி தோல்வியடைந்தால் எனக்கு மகிழ்ச்சி! மத்தபடி வருத்தங்கள் எதுவும் இல்லை!
5. தமிழகத்தில் நடக்கும் தேர்தலுக்கு உங்களிடம் (பெங்களூரில் வசிக்கும்) கருத்து கணிப்பு எடுத்திருக்கிறார்களா? எனக்கு அடிக்கடி அந்த மாதிரி போன் வரும். நானும் இஷ்டப்படி அடித்துவிடுவேன் என்பதால் கேட்கிறேன்
# என் கருத்தை யாரும் கணித்ததில்லை. நீங்கள் இஷ்டத்துக்கு அடித்து விடுவதன் காரணம் என்ன என்று சற்று ஆராய்ந்து பார்த்திருக்கிறீர்களா ?
& இதுவரை கருத்து கணிப்பு என்று எவரையும் நான் சந்தித்தது இல்லை!
6. கருத்து கணிப்பு எடுக்கும் ஊடகம், ஆளைப் பார்த்து இந்தக் கட்சிக்கு வாக்களிப்பேன் என்று சுத்தல்ல விடுபவர்கள்தாம் அதிகம் என்று நினைக்கிறேன். உங்கள் எண்ணம் என்ன?
# தவறான தகவல்கள் கொடுப்பதில் ஆர்வமாக இருப்பவர்கள் பலர் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டுதான். கருத்துக் கணிப்பு செய்பவர்கள் இந்த சாத்தியக் கூறையும் கணக்கில் எடுத்துக் கொண்டுதான் தங்கள் முடிவுகளைத் தருவார்கள் என்று நான் எதிர்பார்க்கிறேன். உடல் மொழிப் பகுப்பாய்வு மூலம் வேண்டுமென்றே சுற்றி விடுபவர்களை அடையாளம் கண்டு கொள்வதில் சிரமம் இருக்காது.
= = = = = = = = = =
படமும் பதமும் :
பானுமதி வெங்கடேஸ்வரன் :
ஊரிலிருந்து வந்த ஒரு உறவினர் எனக்காக இந்த இரண்டு தீபாவளி மலர்களை கொண்டு வந்தார். தூக்கம் வராத இரவுகளில் படிக்க புத்தகங்கள் கிடைத்து விட்டன. பானு ஹேப்பி :)))
என் பேத்திகள் படிக்கும் பள்ளியிலேயே குழந்தைகள் காப்பகமும் இருக்கிறது. Pre K.G. வகுப்பில் படிக்கும் பள்ளி முடிந்து காப்பகத்திற்கு அழைத்துச் செல்கிறார்கள். ஒரே ப்ராமில்(Pram - perambulator) ஐந்து குழந்தைகளை அழைத்துச் செல்லலாம்.
கனடாவில் ரிச்சர்ட் ஹில் என்னும் இடத்தில் இருக்கும் சித்தி விநாயகர் ஆலயத்தில் நேற்று தேர்த்திருவிழா. நாங்கள் செல்லும் பொழுது முடிந்து விட்டது. தேரை மட்டும் படம் பிடித்தேன். கோவிலுக்குள் படமெடுக்க அனுமதி இல்லாததால், வாகனங்களையும், ஆழ்வார்களும் மாத்திரம் படமெடுத்தேன்.
நெல்லைத்தமிழன் :
நான் தாய்வானில் சியாங் கை ஷேக் நினைவிடத்திற்குச் சென்றிருந்தேன். அவர் ஒட்டுமொத்த சீனாவில் பிரெசிடண்ட் ஆக இருந்ததும் பிறகு கம்யூனிஸப் போரில் அவர் தாய்வானுக்கு வர நேர்ந்ததும் வரலாறு. அவற்றைப் பற்றியெல்லாம் ஏதோ ஒரு ஞாயிறு தொடரில் எழுதணும். அங்கு நான் பார்த்த, பிரெசிடெண்டை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குக் கொண்டு செல்லும் டோலி போன்ற அமைப்பு. இதில் பிரெசிடெண்ட் உட்கார்ந்துகொள்ள நால்வர் தூக்கிச் செல்வர். எனக்குத் தோன்றும், அதைப்போன்ற அசௌகரியக் குறைவான பயணம் ஏதேனும் இருக்குமா என்று. எவ்வளவு கஷ்டம் பாருங்கள். என்ன ஒன்று, அவர் நடந்து செல்லவேண்டிய அவசியம் இல்லை.
இதைப் பார்க்கும்போது அஹோபில யாத்திரையில் பார்த்த, பகிர்ந்துகொண்ட டோலி நினைவுக்கு வருகிறது. அதில் கிட்டத்தட்ட ஆள் நன்கு சாய்ந்திருக்கும் போஸில் உட்கார்ந்ததும் கடகடவென நான்கு ஆட்கள் மலைப்பகுதியில் தூக்கிச் செல்வார்கள். ஆள் அவுட்டான பிறகு நால்வர் தூக்கிச் செல்லும்போது அந்தப் பயணம் எப்படி இருக்கும் என்று அனுபவித்துத் தெரிந்துகொள்ள இயலாது. ஒருவேளை டோலியில் சென்றால் அந்த ஃபீல் வருமோ என்னவோ
உங்களில் யார் யார் எல்லாம் இந்த மாதிரி பயணிக்க ஆசைகொண்டிருக்கிறீர்கள்? நான் கிருஷ்ணதேவராயன் என்ற சரித்திர நாவலில் ராகிர, இளவரசர்களை அரண்மனையின் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நல்ல வலுவான பணிப்பெண்கள் முதுகில் தூக்கிச் செல்வார்கள் என்று குறிப்பிட்டிருந்தார். நிச்சயம் வாசகர்களில் ஆண்கள், அந்தமாதிரி பயணத்திற்குத் தயாராக இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். ஹாஹாஹா
KGG:
முன் காலத்தில் - அதாவது என் அம்மாவுக்கு நான்கு / ஐந்து வயது இருக்கும் காலத்தில், திருப்பதிக்கு அவர்களின் குடும்பம் யாத்திரை செல்லும்போது, அம்மாவை திருப்பதி கோயிலுக்கு சுமந்து செல்ல செல்ல கூலியாட்களை அமர்த்துவார்களாம். அந்த கூலியாட்களின் வியர்வை நாற்றம் தனக்கு ஒவ்வாதது பற்றி அம்மா எங்களிடம் சொன்னது உண்டு.
= = = = = = = = = = =
KGG பக்கம்:
முன்கதை சுருக்:
பகுதி 01 : பாபா ஒரு துப்பறியும் நிறுவனத்தில் private detective ஆக வேலையில் சேர்கிறான். நாநா என்பவரிடமிருந்து appointment கேட்டு - சந்திக்க நேரம் கேட்டு வாட்ஸ் ஆப் செய்தி வருகிறது. பாபா சம்மதிக்கின்றான்.
பகுதி 02 : நாநா வருகிறான். சரோஜா மெமரி கார்ட் பற்றி விளக்குகிறான். பாபாவின் ஜாதகம் கேட்கிறான். பாபா உள்ளே சென்று ஜாதகம் கொண்டுவருகிறான்.
பகுதி 03 : நாநா பாபாவிற்கான சரோஜா மெமரி கார்ட் உருவாக்கி, அதை இயக்கி ஒரு ஜோதிட முன் நிகழ்வை சொல்கிறான்.
சரோஜா தேவி பகுதி 04: " காயம் பட்ட மாயம்!"
பாபா சொன்ன எதிர் வீட்டு நிகழ்வு.
" எதிர் வீட்டுக்கு சில சமயங்களில் வீணாவின் தாய் மாமா சேலத்திலிருந்து வருவதுண்டு. அவருக்கு அவருடைய பையனை வீணாவிற்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று ஆசை. முன்பு அவர் வந்தபோது, வீணாவிடம் அதற்கு சம்மதம் கேட்டிருக்கிறார்.
ஆனால் அதுக்கு வீணா ஒப்புக்கொள்ளவில்லை. வீணா, தன்னை கல்யாணம் செய்துக்க வருபவர் ஃபாரினில் வேலை செய்பவராக இருக்க வேண்டும். கை நிறைய சம்பாதிப்பவராக இருக்க வேண்டும், மாமனார் மாமியார் நாத்தனார் யாரும் கூட இருக்கக் கூடாது என்று பல கண்டிஷன்கள் போட அதைக் கேட்ட தாய் மாமா , எப்படியாவது வீணாவின் மனதை மாற்ற முடியுமா என்று யோசனை செய்து வருகிறார் - இங்கே சென்னைக்கு ஏதாவது வேலையாக வரும் போதெல்லாம் வீணாவிடமும் அவளுடைய அப்பாவுடனும் பேசிப் பார்க்கிறார். ஆனால் வீணா மசிவது போல இல்லை. "
" இந்தத் தகவல்கள் உங்களுக்கு எப்படி தெரியும்?"
" அவர்கள் வீட்டில் வேலை பார்க்கும் பெண்மணியும் என் வீட்டில் வேலை பார்க்கும் பெண்மணியும் சகோதரிகள்."
" ஓ கே! அப்போ நம்பத் தகுந்த வட்டார செய்திகள்தான்! வீணாவின் அம்மா எங்கே இருக்கிறார்கள்?"
" வீணா மற்றும் விமலா இருவரின் அண்ணன் ஜெர்மனியில் இருக்கிறார். கல்யாணம் ஆயிடுச்சு. மருமகள் கர்ப்பமாக இருப்பதால் உதவியாக இருக்க வீணாவின் அம்மாவும் அந்த மருமகளின் அம்மாவும் ஜெர்மனி சென்று அங்கே அவர்களுக்கு உதவியாக இருக்கிறார்கள். "
" சரி. நேற்று நடந்த கதை என்ன?"
" அதைத்தான் சொல்ல ஆரம்பிச்சேன். முன்னுரையே இவ்வளவு தூரம் வந்துடுச்சு. அந்த தாய் மாமா நேத்திக்கு மத்யானம் சாப்பாட்டுக்குப் பின் வெளியே வந்து நின்று கொண்டு இருந்தார். நேத்திக்கு வீணா, விமலா ரெண்டு பேருமே ஆபீஸ் போயிட்டாங்க. வீட்டுல இந்த தாய் மாமா, ஜெயராமன், வீட்டில் வேலை செய்யும் பெண்மணி இவங்க மட்டும்தான் இருந்துருக்காங்க. இந்தத் தெருவில் அடிக்கடி ஆங்காங்கே சில இளம் ஜோடிகள் அதிக நடமாட்டம் இல்லாத நேரத்தில் நின்று காதல் பார்வைகள், சிறு தீண்டல்கள் எல்லாம் செய்து சந்தோஷமாக பொழுது போக்குவார்கள். அப்படி சமீப காலமாக இந்தத் தெருவில் அடிக்கடி சந்திக்கும் ஒரு ஜோடி வலது பக்கத்து வீட்டு வாசல் காம்பௌண்ட் சுவர் பக்கத்துல வந்து நின்று கடலை போட்டுக்கொண்டு இருந்தாங்க போலிருக்கு. "
" வீணாவின் மாமா தெருவில் இவர்களை நோட்டமிட்டபடி தெருவின் இரண்டு கோடிகளுக்கும் மெதுவே நடை போட்டிருக்கிறார். அவருக்கு , வீணா யாரையோ லவ் பண்ணுறதுனாலதான் தன் மகனை வேண்டாம் என்று சொல்கிறாளோ என்று மனதுக்குள் ஒரு சந்தேகம் அல்லது கோபம் இருந்தது போலிருக்கு. "
" அவர் அந்த லவ் ஜோடி அருகில் போய் அவங்க கிட்ட ' நீங்க ரெண்டு பேரும் இந்த தெருவில் இருக்கறவங்களா ' என்று கேட்டிருக்கிறார். இல்லை என்று தெரிந்ததும் அந்தப் பெண்ணிடம், 'நீ ஸ்கூல் யூனிஃபார்ம் போட்டிருக்கியே என்ன கிளாஸ் படிக்கறே? ' அப்படீன்னு கேட்டு அந்தப் அதற்கு நைன்த் ஸ்டாண்டர்ட் என்று சொல்லிவிட்டு அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் கவனம் தங்கள் மேல் விடுவதைப் பார்த்து உடனடியாக இங்கேயிருந்து கிளம்பி போய்விட்டாள். "
" அந்தப் பெண் கிளம்பி போனதும் ஜோடிப் பையனுக்கு பயங்கர கோபம்.
' யோவ் பெருசு நாங்க பேசிக்கிட்டு இருந்தா உனக்கு எங்கே எரியுது? அந்தப் பொண்ணுக்கு பாடத்தில் கொஞ்சம் சந்தேகம். அதை என் கிட்ட கேட்டா' என்றான்.
- இவர் அப்போதாவது ஓ அப்படியா சாரி என்று சொல்லி பேசாமல் போயிருக்கலாம். ஆனா இவர் ' அப்படியா நீங்க ஆசிரியரா என்று கேட்க அவன் 12 ஆம் வகுப்பு மாணவன் என்று சொல்ல , இவர் பதிலுக்கு, சந்தேகம் இருந்தால் ஸ்கூலிலேயே கேட்கலாமே இங்கே எதுக்கு தனியாக ஒரு தெருவுல வந்து சந்தேகம் கேக்கறது என்று சொல்ல ... இப்படியே வாய் வார்த்தைகள் சண்டைன்னு போய் கடைசியாக அந்தப் பையன் இவரிடம் ' யோவ் பெருசு தைரியம் இருந்தா நாளைக்கு இதே இடத்துக்கு இந்த நேரத்துக்கு வா. உனக்கு நான் யாருன்னு காட்டறேன்'னு சொல்லி இவரைப் பார்த்தவாறே போய்விட்டான். "
" அப்புறம் பக்கத்து வீட்டுக்காரர் வெளியே வந்து அவரிடம் ' சார் நீங்க இந்த விஷயத்தை பெரிது பண்ணாம விட்டிருக்கலாம். இந்தப் பசங்க எல்லாம் ஸ்கூலுக்குப் போகாம சுத்தற பசங்க. அல்லது கிளாஸ்லேருந்து எதுக்காகவாவது வெளியில துரத்தி விடப்பட்டவங்க. பக்கத்துல இருக்கற பொண்ணுங்க பள்ளிக்கூடத்து பொண்ணுங்க லஞ்ச் டயத்துல வெளியே வந்தாங்கன்னா இவங்க இங்கே வந்து ஜோடி போட்டு ஏதாவது பேசி சிரிச்சுகிட்டு பொழுது போக்குவாங்க. ரெண்டு வருஷம் முன்னாடி இப்படி பேசிக்கிட்டு இருந்த ஜோடி ஒன்றை இந்தத் தெருவில் அந்தக் கோடியில் குடி இருந்த ஒருவர் கண்டித்ததால் வந்த கலாட்டாவில் அவர் வாடகை வீட்டைக் காலி பண்ணிட்டு வேறு இடத்துக்குப் போயிட்டார். நீங்க ஜெயராமன் சாருக்கு சொந்தமா? நல்ல வேளை நீங்க எந்த வீட்டிலிருந்து வந்தீங்கன்னு அந்தப் பையன் கவனிக்கலை. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் உங்க ஊருக்குத் திரும்பி போயிடுங்க. ஏதேனும் கலாட்டா நடந்தால் நாங்க சமாளிச்சிக்கறோம் - என்றார். "
" வீணாவின் மாமா நேற்றே சேலத்துக்கு அவசரமாகத் திரும்பி போய்ட்டார். இன்றைக்கு ஜெயராமன், வீணா ரெண்டு பேரும் ஆபீஸ் போயிட்டாங்க. விமலா வொர்க் ஃப்ரம் ஹோம் போலிருக்கு. வீட்டில் விமலாவும் வேலைக்காரப் பெண்மணி மட்டும்தான் இருக்காங்கன்னு நினைக்கிறேன்."
இதை பாபா சொன்ன அதே நேரத்தில் தெருவிலிருந்து ஒரு குரல் " டேய் யாருடா இங்க அந்த நரைச்ச முடி நரைச்ச மீச கிழவன்? வீட்ட விட்டு வெளியே வாடா .. எங்க சாதி பையன திட்டற அளவுக்கு உனக்கு என்னடா தில்லு?"
விஷயம் விபரீதமாகும் போல் தெரிந்ததும் நாநா, பாபாவிடம் " பாபா உங்க வேலைக்காரப் பெண்மணிக்கு ஃபோன் செய்து அவங்க லிஸ்டரிடம் சொல்லி அவங்களையும் விமலாவையும் 'இந்த ஆட்கள் தெருவிலிருந்து போகும் வரை வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம். வாசல் பக்கம் தலை காட்ட வேண்டாம்' என்று சொல்லச் சொல்லுங்க" என்றான்.
பாபா உடனே அதை செய்தான்.
அதற்குள் தெருவில் கூடியிருநத கூட்டத்திலிருந்து ஓரிருவர்" அந்த ஆளு வெளியில வரலைன்னா எல்லா வீட்டுலயும் கல்லெறிவோம்" என்றான்.
நாநா தன்னுடைய ஃபோனில் உள்ளூர் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டரை தொடர்பு கொண்டு பேசி, லைவ் லிங்க் அனுப்பினான்.
பாபா வீட்டு ஜன்னலருகே ஏதோ சத்தம் கேட்டது.
பாபா ஜன்னலருகே சென்று பார்த்தான். எங்கிருந்தோ பறந்து வந்த சிறு கருங்கல் ஒன்று பாபாவின் நெற்றியைப் பதம் பார்த்து கீழே விழுந்தது.
பாபாவின் நெற்றியில் சிறிய ரத்தக் காயம்.
(தொடரும்)
இன்னைக்கு லவ் ஜிஹாத் சம்பவத்தில் கை வைத்திருக்கிறீர்களே...
பதிலளிநீக்குபயமாகத்தான் இருக்கு!
நீக்குகனடா மற்றும் வெளி நாடுகளில், ஊரை மறக்காமல் கலாசாரத்தை இழக்கக்கூடாது என பல கோயில்கள் கட்டி விழாக்கள் நடத்துவது சிறப்பு.
பதிலளிநீக்குநேற்றுகூட, ஆஸ்திரேலியாவிற்கு அர்ஜன்டாமூணு பட்டாச்சாரியார்கள் வேண்டும் மூன்று லட்சத்திற்கு மேல் சம்பளம் என்று ஒரு வாட்சப் குழுமத்தில் பார்த்தேன்.
அட!!
நீக்குதிருப்பதியில் குழந்தையைத் தூக்கிச் செல்ல தொண்ணூறு வருடங்களுக்கு முன் கூலியாட்களா? ஆச்சர்யம்தான்.
பதிலளிநீக்குஆம்!
நீக்குதிருப்பதியில் நம் அனுபவங்கள் என ஒவ்வொருவரும் எழுதினால் காலம் எவ்வளவு மாறுகிறது எனத் தெரிந்துகொள்ளலாம். திருமலையிலும் கோயில் நடைமுறைகளிலும் பல மாற்றங்கள்.
பதிலளிநீக்குஆமாம்.
நீக்குஅட! வீணா....
பதிலளிநீக்குஹி ஹி இது வேலைக்காரப் பெண்மணி! வீணா ஆபீஸ் சென்றிருக்கிறார்!
நீக்குமேகங்களின் மெகா பின்னணியில் தேர்ப் படங்கள் அட்டகாசம்.
பதிலளிநீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
பிரார்த்தனைகளுக்கு நன்றி.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குதங்களின் இன்றைய கதைப் பகுதி நல்ல விபரம். நான் சென்ற வாரம் சொன்னது போல எதிர் வீட்டு வம்பினால் பாபாவிறகு நெற்றியில் காயம் வந்து விட்டது.
ஆமாம்.. . இந்த வீணா எந்த வாரத்திலிருந்து கதையில் வருகிறார்.? அவர்களது வீட்டில் வேலை செய்பவரே நல்ல பளிச்சென்று இருக்கிறார். அடுத்த வாரம் வீணாவும், அவரது படமும் வருமோ.? இன்றைய விபரங்களினால் , கதை ஸ்வாரஸ்யமாக செல்கிறது. தொடர காத்திருக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி. பொறுத்திருந்து பார்ப்போம்!
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குகேள்வி பதில்கள் அனைத்தும் எப்போதும் போல் அருமை. படமும் பதிவும் பகுதியும் அருமை. சகோதரி பானுமதி வெங்கடேஸ்வரன் அவர்களின் அனுப்பிய தேர் படங்களை மிகவும் ரசித்தேன்.
சகோதரர் நெல்லைத் தமிழர் அவர்கள் அனுப்பிய ஆட்களை சுமந்தும் செல்லும் டோலி படங்களும் நன்றாக உள்ளது. நன்கு விபரமாக அதைப்பற்றி எழுதியுள்ளார். படித்து தெரிந்து கொண்டேன். நாம் போன பிறகு கிடைக்கும் அனுபவங்களை இருக்கும் போதே பெறுவது சுவாரஸ்யந்தான். ஆனால், உயிர் மீது இருக்கும் விருப்பு அதை முழுதாக அனுபவிக்க விடாது.
தங்கள் குழந்தைகளை தாங்களே சுமக்க இயலாத நிலை அப்போதே உண்டாகி விட்டனவா.? ஆனாலும் விபரம் தெரிந்து கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
விளக்கமான கருத்துரைக்கு நன்றி!
நீக்குதனிப்பட்ட முறையில், இப்படி டோலிலாம் போய் தரிசனம் செய்யும் ஆசை இல்லை.
நீக்குஅப்படிச் செல்பவர்களை படங்கள் எடுத்திருக்கிறேன். நல்லா இருக்காது
பானுக்கா படங்கள் எல்லாம் அட்டகாசம்.
பதிலளிநீக்குஅதுவும் தேரின் படங்கள் எல்லாம்.
படம் என்பதை வடம் என்று வாசித்து ஓ லேட்டா வடம் பிடிச்சீங்க போலன்னு ...ஹிஹிஹி
அப்படி எங்கள் ஊரில் செய்வதுண்டே தேர் நிலைக்கு வந்ததும் கீழ இருக்கும் வடத்தை தூக்கிப் பிடிச்சுக் கண்ணுல ஒத்திப்பாங்க வயசானவங்க...ஆ!!!! நீங்க வயசானவங்க இல்லை!!!! ஹாஹாஹா
கீதா
:))))
நீக்குமுருகா சரணம்
பதிலளிநீக்குமுருகா சரணம், வடிவேலா முத்துக்குமரா சரணம் .
நீக்குப்ராம் வசதி செம இல்ல? என்னமா யோசிக்காய்ங்க!
பதிலளிநீக்குகல்கி தீபாவளி மலர் நல்லாருக்கா? நீங்க வந்ததும் வாங்கிக்கொள்கிறேன்...
கீதா
ஆசை தோசை! நானும் ஸ்ரீராமும் ஏற்கெனவே விண்ணப்பம் அனுப்பிவிட்டோம்!
நீக்குயார் வேணும்னாலும் விண்ணப்பம் அனுப்பலாம் ஶ்ரீராம் தவிர. அடுத்த புத்தகத் திருவிழாக்குள்ள பழைய புத்தக திருவிழாக்களில் வாங்கின புத்தகங்கள் படித்து முடிக்க வேண்டாமா? வியாழன் வெள்ளி தவிர அவர் எபிக்கு வராத்தன் காரணம் அதுதான்னு நினைச்சுட்டிருக்கேன்.
நீக்கு2017 கல்கி தீபாவளி மலர் என்னிடமும் இருக்கிறது. தேட வேண்டும்!!
நீக்குஇல்லை நெல்லை... ஒரு வித மன இறுக்கம். சமயங்களில் மனம் ஒத்துழைக்க மறுக்கிறது்
நீக்குஅந்த மேகப் பின்னணி, தேர் செமையா இருக்கு...பளிச் படம்!
பதிலளிநீக்குகீதா
ஆம்!
நீக்குநலமே விளைக
பதிலளிநீக்குவேண்டுவோம்
நீக்குஅதுவும் ஒரு தேரின் உள் வழி ஃப்ரேம்ல மேகம் தெரியுது பாருங்க சூப்பர்ப்!!! நல்ல ஆங்கிள்!
பதிலளிநீக்குகீதா
டோலி, ரொம்ப அழகா இருக்கு நெல்லை...கிட்டத்தட்ட கைவண்டி ரிக்ஷா போல இருக்கு சைக்கிள் இல்லைனா முன்பக்கம் இழுக்கும் கட்டை இல்லை அவ்வளவுதான்...
பதிலளிநீக்குஎனக்கென்னவோ ஒருவரை இப்படித் தூக்கி வைத்து அவரைச் சுமக்க ஆட்கள் என்பது கஷ்டமாக இருக்கு...மூன்று விஷயங்களுக்கு மட்டுமே என் மனம் ஒப்பும். இறைவனை ஏளப்பண்ணுவது, இறந்தவரைச் சுமப்பது, வயதானவரை அப்படித் தூக்க வேண்டிய சூழல் வந்தால் ஆனால் இப்பலாம் அதுக்கு வேறு வசதிகள் வந்துவிட்டனவே..
படங்கள் செமையா இருக்கு
கீதா
உங்களில் யார் யார் எல்லாம் இந்த மாதிரி பயணிக்க ஆசைகொண்டிருக்கிறீர்கள்? //
பதிலளிநீக்குநெவர்!
கீதா
1. எனக்குப் பிடிப்பதில்லை.
பதிலளிநீக்கு2. ஒரு பக்கம் சாய்வது எனக்குப் பிடிப்பதில்லை
3. நெவர்....உதாரணம் இருக்கே....ஆனால் குப்புற விழுந்தாலும் மீசைல மண் ஒட்டலை! யார்னு எல்லாருக்கும் தெரியும். அந்தச் சானலை பார்ப்பது இல்லை...அந்தச் சானலும் influencer ஆக மாறிவருகிறது.
4. அதை எல்லாம் கடந்தாச்சுங்க! இதில் கௌ அண்ணாவின் கருத்தே!
5. அப்படியா? ஒரு வேளை நான் தெரியாத நம்பர் அழைப்புகளை எடுப்பதில்லை என்பதால் தெரியலை
6. அதே...
பத்திரிகைகள், ஊடகங்கள் அதான் யுட்யூபர்கள் நடுநிலையாக இருப்பவர்கள் மிக மிகக் குறைவு. அப்படி ஒரு இளைஞரைப் பார்க்கிறேன் பக்குவமானவர்...
கீதா
யாரோ அவர் யாரோ அறிந்து சொல்வீரேல் அடியேனுக்கு மகிழ்ச்சி.
நீக்குஎனக்கும்!
நீக்குராமன் சார்.. ஆசை வேண்டாம். நடுநிலையா ஆரம்பிக்கறவங்களுக்கு, உதாரணமா பாஜக ஆதரவு மனநிலையில் உள்ள சப்ஸ்க்ரைபர்கள் அதிகமாவாங்க. பிறகு அவருக்கு பாஜக தவறுகளைச் சுட்டிக்காட்ட மனமிருக்காது.
நீக்குஒருத்தர் நடுநிலைனு நாம நினைச்சோம்னாஅதுக்கு ஒரே காரணம்தான் உண்டு. நாம் எண்ணியிருப்பதை, நம் கருத்தை ஒட்டி அவர் சொல்லணும்.
நீக்குதேறும் மேகமும் சேர்ந்து இதிகாச புஷ்பகவிமானம் போன்று தோற்றத்தைக் கொடுக்கிறது.
பதிலளிநீக்குJayakumar
கல்கி தீபாவளி மலர் பார்க்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது. படங்கள் சூப்பர். கோவில் தேர்படங்கள் கண்டோம்.
பதிலளிநீக்குடோலி தூக்கும் போது ஒரு பக்கம் சரியாது:) . இந்தியாவில் ரிக்க்ஷாவில் ஒரு தடவை ஏறிய அனுபவம் உண்டு..
கதை இறுதி..... நெற்றியில் காயம் வந்துவிட்டதே.. ஹா....ஹா...
கருத்துரைக்கு நன்றி.
நீக்கு