இன்றைய பதிவுக்கு என எதையோ எழுத ஆரம்பிக்கும்போதுதான் போன வாரம் என்னவோ எழுதி அம்போ என்று பாதியில் தொங்க விட்டோமோ என்று சந்தேகம் வந்து சென்று பார்த்தால்.. ஆமாம்...
கொஞ்ச நாட்களாகவே வாடகை ஓட்டுநர்கள் நான் கேட்கும் நேரத்துக்கு அமையவில்லை. காத்திருந்து பார்த்து விட்டு ஊபர் போடுவது வழக்கமாக, இப்போது பல்லைக் காட்ட புறப்படும்போதும் நேரடியாக ஊபரையே நாடி விட்டேன்.
ஊபரில் என் கருத்துக் கணிப்பு ஒன்று.. இந்து ஓட்டுநர்கள் வந்தால் ஒன்று உடனே கேன்சல் செய்து விடுவார்கள்; அல்லது ரூபாய் அதிகம் கேட்பார்கள். அதுவும் எவ்வளவு என்கிறீர்கள்..
வந்திருக்கும் தொகைக்கு அதிகமாய்
நூறு ரூபாய் நூற்றைம்பது ருபாய் கூசாமல் கேட்பார்கள். கட்டுபடியாகாது என்று கேன்சல் செய்யச் சொன்னால் அதுவும் செய்ய மாட்டார்கள்.
ஆனால் முன்னர் போல நாம் கேன்சல் செய்தால் நமக்கு அபராதம் விழுவது குறைந்திருக்கிறது. எந்தப் புண்ணியவான் போராடி மாற்றத்தை ஏற்படுத்தினாரோ.. எங்கு போராடவேண்டும் என்று கூட தெரியாதே.. எதிரே வெறும் காற்றுதான் இருக்கும்! அல்லது வெறும் சுவர்! இப்போது நாம் மாற்றிவிட்டு ஆறேழு காரணங்கள் வரும். அதில் டிரைவர் மேல் பழியைப் போட்டு அடுத்த டிரைவருக்கு அலையலாம். முன்னரும் இந்த வசதி இருந்ததுதான். ஆனால் எப்போதும் வராது. எப்போதாவது வரும்!
ஆனால் முஸ்லீம் ஓட்டுநர்கள் அமைந்தால் 99 % பேரம் பேசுவதில்லை. வந்து விடுவார்கள். நான்தான் அப்படி கருத்து வைத்திருக்கிறேன் என்று பார்த்தால், என் தங்கை, மருமகள், நண்பர் எல்லோரும் கூட இதே கருத்தைச் சொன்னார்கள்.
இப்போதும் இரண்டு மூன்று முறை புக் ஆகி கேன்சல் ஆகி கடைசியில் ஒருவர் வந்தார். வழக்கம்போல உரையாடல்... ஆரம்ப உரையாடல்களை தாண்டி,
"ஸார் ஊபர் போட்டிருக்கீங்களா?"
இதென்ன கேள்வி.. போடாமல் அவர் எப்படி என்னுடன் பேசமுடியும்? கர்மம்..
"ஆமாம்.."
"எவ்வளவு காட்டுது?"
"183"
"ஸார்.. 250 ஆ கொடுக்கறீங்களா?"
"அவ்வளவெல்லாம் முடியாது வேண்டுமானால் 200 ஆ தருகிறேன்" என்றேன்.
"சரி ஸார்.. வர்றேன். கேன்சல் பண்ணிடாதீங்க"
"நீங்க பண்ணாம இருந்தா சரி.."
"வந்துக்கிட்டுதான் இருக்கேன்"
"நான் எப்பவுமே கேன்சல் பண்ண மாட்டேன்"
கொஞ்ச நேரம் போனது, மறுபடியும் ஒரு கால். என்ன சொல்லப் போகிறாரோ என்று எடுத்தேன்.
"ஸார்.. கேன்சல் செய்துடாதீங்க.. வந்துகிட்டே இருக்கேன்"
"ஓகே கீழே வந்ததும் கால் பண்ணுங்க.. இறங்கி வர்றேன்"
வந்தார். புறப்பட்டோம். வழியில் எதிர்ப்பட்ட, குறுக்கிட்ட வண்டிக்காரர்களுக்கு அர்ச்சனை செய்து கொண்டே வந்தவரிடம் "பஞ்சு.. ஏன் கோபப்படறீங்க... எல்லாமே ஒரு காரணத்துக்காகத்தான் நடக்குதுன்னு பொறுமையா இருங்களேன்.. வேகமா போறீங்க.. வேகத்தை குறைக்கறாங்க அவங்க.."
அவரும் ஏதோ பதில் சொன்னார். அவர் பெயர் பஞ்சாபகேசன் என்று பார்த்திருந்தேன். 35 வயது மதிக்கலாம் என்பதால் அப்படி விளித்து பேசினேன். மேலும் மேலும் அவர் சாலைப் போக்குவரத்தின் குறுக்கீடுகளில் பொறுமை இழக்க "சாப்டீங்களா" என்று கேட்டேன். "ஆச்சு" என்றார்.
அப்புறம் கொஞ்சம் சகஜமாகி பேசிக்கொண்டே வந்தார். சென்னை மேம்பாலங்கள் அவசியத்தையும், பெருமையையும் சிலாகித்துக் கொண்டே வந்தார்.
"DMK .. DMK ஸார்.. அவங்க இல்லைன்னா இவ்வளவு வசதி நமக்கு கிடைச்சிருக்காது.. எவ்வளவு மேம்பாலம் கட்டி விட்டிருக்காங்க பாருங்க"
நான் எதிர்வாதம் செய்ய விரும்பவில்லை. எவ்வளவு பணம் கமிஷன் அடித்தார்களா என்னும் விஷயத்தையும் மீறி அவர் சொன்னது ஓரளவு உண்மையும் கூட.
போக்குவரத்து நெரிசலை எதிர்பார்த்து நான் கொஞ்சம் முன்னதாகவே ஆட்டோ புக் செய்தும், கேன்சல் ஆகி கேன்சல் ஆகி ஆட்டோ வந்த நேரம் கொஞ்சம் இழுபறியாய்தான் இருந்ததது. ஆனால் பஞ்சு மிகத் திறமையாய் ஓட்டினார். அபாயகரமாக இல்லாமல் திறமையாய் வேகம் எடுத்து கிடைத்த இடுக்குகளில் புகுந்து பத்து மணிக்கு அப்பாயிண்ட்மெண்ட் என்றால் ஒன்பதரைக்கே கொண்டு சேர்த்தார். நிறைய நேரம் இருந்ததால் பஞ்சுவை ஒரு டீ சாப்பிட்டு போகலாம் என்று அழைத்தேன்.
வரமாட்டேன் என்று விட்டார். காலை ஒரு டீ. அப்புறம் மாலை ஒரு டீ அவ்வளவுதான் என்றார். காலை டிபன் சாப்பிட்டால் இடையில் வேறு எதுவும் கொறிக்க மாட்டாராம். மதியம் அளவாய் ஒரு சாப்பாடு. அளந்தாரோ, நிஜமோ டீயை மறுத்து விட்டு வட்டமடித்து கிளம்பிச் சென்று விட்டார்.
நான் ஒரு மெதுவடையும், டீயும் சாப்பிட்டு விட்டு கடைகளை பராக்கு பார்த்துக்கொண்டே க்ளினிக்கை அடைந்தேன். மணி 9;55
பல் காரர்கள் என்னை பத்தரைக்கே அழைத்திருக்கலாம். எல்லோரும் அப்போதுதான் வரத்தொடங்கினார்கள். வாசல் பெருக்கி கோலம் போட்ட அம்மா என்னை இங்கே நகரு, அங்கே நகரு என்று நகர்த்தி பெருக்கி சுத்தம் செய்துகொண்டிருந்தார். அப்புறம் மருத்துவமனை ஊழியர்களிடமே என்னை பத்தரை மணிக்கு அழைத்திருக்கலாம் என்பதைச் சொன்னேன். சங்கடமாக புன்னகைத்தார்கள்.. பத்தரைக்கு மேல் திடீரென வந்து என்னை அழைக்க, நான் என் டாக்டர் வரவில்லையே என்றேன். யார் வேண்டுமானாலும் பார்க்கலாம் என்றார்கள். நான் ரித்திகா வரட்டும் என்று உட்கார்ந்து விட்டேன்.
இடைப்பட்ட நேரத்தில் என்னிடம் ப்ராக்ட்டோ அபிப்ராயம் கேட்டு வாங்கினார்கள். நானும் நல்லவர் வல்லவர் சிறந்தவர் சூப்பர் என்றெல்லாம் அபிப்ராயம் அள்ளி வழங்கி மகிழ்விக்கும்போதுதான் கவனித்தேன். செல் திரையில் சிறிய கோடு போல ஏதோ ஒட்டிக் கொண்டிருந்தது. பார்க்கும் எழுத்துகளை அது பாதித்தது. அதை எடுத்து சுத்தம் செய்தேன். ஊபருக்குச் சென்று அப்படியே ஸ்டார் கொடுத்து விடுவோம் எப்படியும் அடுத்த அழைப்புக்கு முன்னர் அதைக் கொடுத்துதானே ஆகவேண்டும் என்று ஊபர் பக்கம் போனேன்.
கடைசி ஆக்டிவிட்டியில் கைபட அது ஓபன் ஆனது. அது எனக்கு காட்டிய தொகை 133.
ஆஹா பஞ்சு.. கில்லாடிய்யா நீ.. நான் ஏதோ உளறுகிறேன் என்பதை கணத்தில் உணர்ந்து அதைத் தெரிந்ததாக வெளிப்படுத்திக் கொள்ளாமல் வந்து பணம் வாங்கிச் சென்றாயே.. நண்பா.. எங்கிருந்தாலும் நீ..
இதில் ஆயிரம் நியாய தர்மங்கள் பற்றி பேச்சு வேற...
உன் கண் உன்னை ஏமாற்றினால் டடடா டடடா டடடா...
==============================================================================================
மாயா யாரை மாடலாக வைத்து வரைந்திருக்கிறார் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி
இது எதற்கான விளம்பரம்? தெரியவில்லை!!
படிக்க முடியுது இல்லே?
மறுபடியும்... மாயா யாரை மாடலாக வைத்து...
================================================================================================================================================================
மகன் சிவகுமார் வந்து தன் சொத்துகளிலிருந்தும், அப்பா என்ற உறவிலிருந்தும் விடுதலை பத்திரம் எழுதி கையெழுத்து வாங்கிச் செல்கிறான். சிவாஜியின் உணர்ச்சிகள்...
=======================================================================================
சங்க கால நூலான அகநானூற்றில் உறையூருக்குக் கிழக்கே உள்ள ஒரு குன்று பற்றி குறிப்பிடப்பட்டாலும், அதன் பெயர் குறிக்கப்படவில்லை. முதன்முதலில் திருஞானசம்பந்தர் மற்றும் திருநாவுக்கரசர் பாடிய தேவாரப் பதிகங்களில்தான் 'சிராப்பள்ளி' என்ற பெயர் காணப்படுகிறது.
சிராப்பள்ளிக் குன்றின் உச்சிப் பிள்ளையார் கோயிலுக்குப் பின்புறம் இன்றும் கி.பி. 5-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சமண முனிவர்களின் கற்படுக்கைகளைக் காணலாம்.
இத்தவப் பள்ளியின் தலைவராக 'சிரா' என்ற சமண முனிவர் இருந்துள்ளார்.
சிரா முனிவரின் பள்ளி (ஆசிரமம்/மடம்) என்பதால் இது 'சிராப்பள்ளி' என்று அழைக்கப்பட்டது.
பல்லவ மன்னனின் மாற்றமும் சிவாலயமும்
கி.பி. 7-ஆம் நூற்றாண்டில் தொண்டை மற்றும் சோழ நாடுகளை ஆண்ட முதல் மகேந்திரவர்ம பல்லவன் ஆரம்பத்தில் சமண சமயத்தைப் பின்பற்றினார்.
சமய மாற்றம்: சமணர்களால் கருங்கல்லில் கட்டிக் கடலில் வீசப்பட்ட திருநாவுக்கரசர், சிவபெருமானின் அருளால் அக்கல்லையே தெப்பமாகக் கொண்டு கரை சேர்ந்தார். இப்புதுமையைக் கண்ட மகேந்திரவர்மன் சமணத்தைத் துறந்து சைவ சமயத்தைத் தழுவினார்.
கோயில்கள் நிர்மாணம்
சைவனாக மாறிய மன்னன், பாடலிபுரத்தில் (திருப்பாதிரிப்புலியூர்) இருந்த சமணப் பள்ளியை இடித்துத் திருவதிகையில் தன் பெயரால் 'குணபரேச்சுரம்' என்ற சிவன் கோயிலைக் கட்டினார்.
அதேபோல, திருச்சிராப்பள்ளிக் குன்றில் இருந்த சமணப் பள்ளியை மாற்றி, குடையறைக் குகையாகச் சிவாலயம் ஒன்றை அமைத்தார். மன்னனின் இம்மாற்றங்களை அங்குள்ள அவனது 8 வடமொழிச் சுலோகங்கள் உறுதிப்படுத்துகின்றன.
சமண மடமாக இருந்த இடம் சிவாலயமாக மாறிய பின்னரும், அதன் பழைய பெயரான 'சிராப்பள்ளி' என்பது அப்படியே நிலைத்துவிட்டது.
பண்டைய தமிழ்நாட்டில் ஊரின் பெயரும், அங்குள்ள கோயிலின் பெயரும் வெவ்வேறாக இருக்கும் வழக்கம் இருந்தது. இது தேவாரப் பதிகங்களாலும் கல்வெட்டுகளாலும் உறுதியாகிறது.
உ.தா:
உறையூர் - மூக்கீச்சுரம்
கருவூர் - ஆனிலை
இந்த அடிப்படையில் பார்க்கும்போது, 'சிராப்பள்ளி' என்பது ஒரு கோயிலின் பெயர் மட்டுமே. அப்படியானால், அந்தக் கோயில் அமைந்துள்ள ஊரின் உண்மையான பெயர் என்ன?
திருச்சிராப்பள்ளியின் பண்டைய பெயர் "சிற்றம்பர்" என்பதாகும்
சிராப்பள்ளி கோயில் அமைந்துள்ள நகரின் பண்டைய பெயர் சிற்றம்பர் என்பதாகும். இதற்கு இரண்டு முக்கிய கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன
சோழர் கல்வெட்டு (கி.பி. 1000)
முதல் ராஜராஜ சோழனின் 16-ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டில், விக்கிரமசிங்க மூவேந்த வேளான் என்பவன் உறையூர்க் கூற்றத்து 'சிற்றம்பர்' என்னும் ஊரில் உள்ள சிராப்பள்ளிக் கோயிலுக்கு நிலம் வழங்கிய செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது.
பாண்டியர் கல்வெட்டு (கி.பி. 9-ஆம் நூற்றாண்டு)
முதல் வரகுண பாண்டியனின் 11-ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டில், விளக்கெரிக்கப் பொன் வழங்கிய செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் அவ்வூர் பின்வருமாறு குறிக்கப்படுகிறது:
"...சிற்றம்பர் நகரத்தோம்... சிற்றம்பர் பதியும் பாதமூலத்தோமும்..."
தமிழகத்தில் அம்பர், இன்னம்பர், நல்லம்பர் எனப் பல ஊர்கள் இருப்பதைப்போலவே, இந்தப் பழம்பெரும் நகரமும் 'சிற்றம்பர்' என்றே அக்காலத்தில் அழைக்கப்பட்டுள்ளது.
'சிரா' என்ற சமண முனிவரின் தவப்பள்ளியாக இருந்த இடம் 'சிராப்பள்ளி' எனப்பட்டது. மகேந்திரவர்ம பல்லவன் அங்குச் சிவாலயம் கட்டிய பின்னும் அக்கோயில் அதே பெயரில் தொடர்ந்தது. காலப்போக்கில், கோயிலின் பெயரான சிராப்பள்ளி என்பதே அந்த ஊருக்கான (திருச்சிராப்பள்ளி) பெயராக மாறிவிட்டதால், 'சிற்றம்பர்' என்ற அதன் உண்மையான பழைய பெயர் வரலாற்றில் மறைந்துவிட்டது.
===========================================================================================
நெல்லை கண்ணன் பக்கம் :
=================================================================================================
ஜாலி வாலி! #வாலி
கையில் மதுவுடன் கமல் பாடும் ‘வந்தனம் என் வந்தனம்’ பாடலில், ‘நீ மன்மதன் ஓதிடும் மந்தி’ரம்’.. புன்னகை சுந்த’ரம்’ பூமுகம் பொன்னி’றம்’ என்று எழுதியதாகட்டும்,
அவ்வை ஷண்முகி ‘ருக்கு ருக்கு’ பாடலில் பெண்வேடமிட்டு மீனா முன் பாடும்போது, மீனாவுக்கு ஞாபகம் வரட்டும் என்று கதாநாயகன் பெயரான ‘பாண்டி’ அடிக்கடி வருமாறு ‘தூணுக்குள்ளும் இருப்பாண்டி / துரும்பிலும் இருப்பாண்டி / நம்பியவர் நெஞ்சில் நிற்பாண்டி / குங்குமத்த வெப்பாண்டி / கொஞ்சி கொஞ்சி நிற்பாண்டி’ என்று எழுதியதாகட்டும் வாலி இந்த மாதிரி விஷயத்தில் Always Special!
எப்படியாவது பட சம்பந்தப்பட்ட ஒன்றை பாடல் வரியில் புகுத்திவிடுவார். சிவராத்திரி தூக்கமேது பாடலில் ‘தேமாங்கனி தேவரூபிணி’ என்று பாடலுக்கு ஆடும் நடிகை பெயரோ,
‘தமிழ்நாட்டு COPதான் தரணியெல்லாம் Topதான்’ என்று படத்தின் டைரக்டர் பெயரோ.. இப்படிப் பலப்பல.
இரண்டே இரண்டு மட்டும் இங்கே பகிர்கிறேன்.
தசாதவதாரம் படத்தின் ‘கல்லை மட்டும் கண்டால்’ பாடல். ‘ ராஜலக்ஷ்மி நாயகன் ஸ்ரீனிவாசன்தான். ஸ்ரீனிவாசன் சேய் – இந்த விஷ்ணுதாசன் நான்’ என்றொரு வரி. கமலஹாசனின் பெற்றோர் பெயர் ராஜலக்ஷ்மி – ஸ்ரீனிவாசன். படித்த கமல், ஒருநிமிடம் புருவமுயர்த்தி ‘ஹ!’ என்றிருக்கவேண்டும். அடுத்தவரியிலேயே, ‘நாட்டில் உண்டு ஆயிரம் ராஜராஜர்தான் / ராஜனுக்கு ராஜன் இந்த ரங்கராஜன்தான்’ என்று ‘வாலிடா’ என்று சொல்ல வைத்துவிட்டார்.
ரங்கராஜன், வாலியின் இயற்பெயர் ரங்கராஜன்!
மெல்லத்திறந்தது கதவு படத்தில் தேடும் கண்பார்வை தவிக்க பாடல். ‘சொன்ன வார்த்தைக் காற்றில் போகுமோ.. வெறும் மாயமானதோ’ – இந்த வரிகளில் என்ன விஷயமிருக்கிறது என்று யூகிக்க முடிகிறதா?
காட்சிப்படி, ஒரு தோப்புக்குள் அமலாவைத் தேடியபடியே மோகன் பாடும் பாடல். அமலா கண்ணுக்குச் சிக்காமல் ஓடிக்கொண்டே இருப்பார். இது இராமாயணத்தில் இராமன், மாயமானைத் தேடி ஓடியதை ஒப்பிட்டு, ‘பார்க்க முடியுமா.. இல்லை அவள் வெறும் மாய மானா?’ என்று மோகனுக்கு சந்தேகம் இருப்பதுபோல ‘வெறும் மாய மான் அதோ?’ அர்த்தம் வரும்படி எழுதியிருக்கிறார் வாலி. பிரிக்காமல் பாடும்போதும், ‘நீ சொன்ன வார்த்தை மாயமானதோ?’ என்றும் பிரித்தால் இப்படியும் பொருள் வருum
இதேபோல் உங்களுக்கு ஏதும் வாலி ஐயாவின் வரிகள் நினைவிருந்தால் இங்கு பதிவு செய்யுங்கள்?
======================================================================================
S P பாலசுப்ரமணியமும் கங்கை அமரனும் நெருக்கமான நண்பர்கள்...
=======================================================================================
ப்ரோட்டோ டைப் சுஜாதா - கோமல் ஸ்வாமிநாதன் - சுபமங்களா - 1991


ரொம்ப நாளைக்கு முன்னால் சுஜாதா குமுதம் பத்திரிகையில் ஒரு கன்னட நாடகத்தை பெங்களூரில் பார்த்துவிட்டு (அது பெர்டோல்ட் பிரெஹ்ட் மொழி பெயர்ப்பு என்று நினைக்கிறேன்) பாராட்டி எழுதினார். அதோடு கூடவே 'தமிழ் நாட்டு நாடக ஆசிரியர்களுக்கு பிரெட்டைத் தெரியுமா? அவர்களிடம் கேட்டால், 'பிரிட்டானியா பிரெட்டா என்று கேட்பார்கள் என்கிற ரீதியில் எழுதியிருந்தார்.
உடனே எனக்குக் கோபம் பொத்து கொண்டு வர... உனக்குப் பிரெட்டைத் தெரியாது. உங்கப்பனுக்குப் பிரெட்டைத் தெரியாது உங்க தாத்தாவுக்கு பிரெட்டைத் தெரியாது (நிச்சயமாக இப்படி இல்லை). இந்த ரீதியில் பதில் எழுதினேன்.
அப்புறம் பெங்களூரில் என் நாடகம் நடக்கும்போதெல்லாம் முன் வரிசையில் இரண்டு சீட்டு அவருக்காக ஒதுக்குவது எனக்குப் பழக்கமாசி விட்டது. ஒன்பதேகாலுக்கு நாடகம் முடிந்து ஒன்பதே முக்காலுக்கு பெங்களூர் மெயிலைப் பிடிக்க வேண்டிய அவசரத்திலும் அவர் விமர்சனத்தைக் கேட்டு விட்டுத்தான் போவேன். தெளிவாக, நாருக்காக இருக்கும். நாடக மேடையில் அவரை பூரணம் குத்தகை எடுத்துக் கொண்டு விட்டார்.
அவருடைய சமீபத்திய நாடகம் 'ஊஞ்சல்' 'ப்ரோட்டோடைப் -ப்ரோட்டோடைப் என்று அலைகிற பழைய காலத்து இன்வென்டர், எலக்ட்ரானிக் யுகத்தில் வால்வு ரேடியோவுக்கு டிஸைன் அமைப்பவர்களைப் போல வரதராஜன் என்கிற பெருங்காய டப்பா. அற்புதமான குணச்சித்திரம் தமிழ் நாடக மேடையில் புதிதான character புதிதான சூழ்நிலை.
சுஜாதாவின் குல்லாவில் பல இறகுகள் 'ஊஞ்சல்' என்பது கிடைப்பதற்கு அரிதான ஃபீசன்ட் கோழியின் இறகு.
பூரணம் விஸ்வநாதன் இந்த தலைமுறையின் மிகச் சிறந்த நடிகர். (மேடையிலும், திரையிலும்) என்பதோடு சின்னத் திரையையும் இணைத்துக் கொண்டார். என் தயாரிப்பான வாழ்வின் வாசல்' தொலைக் காட்சித் தொடரில் - அப்படி ஒரு முழுமையான ஈடுபாடுள்ள நடிப்பு, "தண்ணீர் தண்ணீர் படப் பிடிப்புக்காக ஒருமாதம் மஞ்சநாயக்கன் பட்டியில் இருந்தது என் வாழ்க்கையின் இனிய அனுபவம். அடுத்து பூர்ணம் விஸ்வநாதன், ஸ்ரீவித்யா, கிட்டி போன்றவர்களுடன் இணைத்து செயல்பட்ட 30 நாள் படப்பிடிப்பும் எனக்கு அடுத்த இனிய அனுபவம்.
=======================================================================================================
இளையபாரதி கவிதைகள் :- 1991 - சுபமங்களா
===========================================================================================
===================================================================================================
ரசமான பிரச்னைகள் தான் காதலுக்கு சுவையான ஆரம்பமாக அமையும் என்பார்கள். புதிய தொடர் கதையான 'காதல் நெஞ்சம்' தன் பெயரில் காதல் என்ற சொல்லைக் கொண்டதனாலோ என்னவோ ஒரு சுவையான பிரச்னையை ஆரம்பத்திலேயே ஏற்படுத்தி யிருக்கிறது.
'காதல் தெஞ்சம்' தொடர் கதையின் விளம்பரம் விகடனில் வெளியானவுடன், முன்பு 'என்றும் உங்கள்' தொடர் கதையை எழுதிய, திரைப் படத் தயாரிப்பாளரான திரு கே. ஜே. மகாதேவன், இது எத்தக் கதை? நான் எழுதியதா? நான் எழுதப் போவதாகப் போட்டிருக்கிறதே' என்று குழப்பம் அடைந்து, விளக்கம் கோரி ஒரு கடிதம் எழுதியிருந்தார்.
அப்போதுதான் சுவை மிக்க இந்தக் குழப்பம் எங்களுக்குப் புலனாகியது. ஒரே பெயரில் இரண்டு ஆசிரியர்கள் இருப்பது புரிந்தது. எனவே, வாசகர்களுக்குக் குழப்பம் ஏற்படாமல் இருக்க, காதல் நெஞ்சம்' சுதாசிரியரை, அவருடைய பெயரை மாற்றிக் கொள்ளும்படிக் கேட்டுக் கொண்டோம். அவரும் அன்புடன் அதற்கு இசைவு தந்தார். இனி கே. எஸ். பார்வதி' என்ற 'பெயரில் காதல் நெஞ்சம்' தொடர் கதை வெளியாகும் என்பதை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்தக் குழப்பம் நேர்ந்ததற்காக வாசகர்களிடம் மன்னிப்புக் கோருகிறோம்.
==========================================================================================================













ஸ்ரீராம் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். வாழ்க பல்லாண்டுகள்! சந்தோஷமாக, ஆரோக்கியமாக!
பதிலளிநீக்குநன்றி கே ஜி ஜி.
நீக்குஇனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஶ்ரீராம்.
பதிலளிநீக்குவாங்க நெல்லை. நன்றி.
நீக்குHappy Birthday Sriram!
நீக்குThank you Surya.
நீக்குஸ்ரீராம்! இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். எல்லா நலன்களும் பெற்ற இனிமையான் வாழ்க்கை அமைய ஆசிகள்.
பதிலளிநீக்குஅன்புடன்,
ஜீவி
வாங்க ஜீவி ஸார். மிக்க நன்றி.
நீக்குமாயா யாரை மனத்தில் நினைத்து இந்த படங்களை வரைந்திருக்கிறார் என்று கேட்கும் போதே அந்தப் படப்பெண்ணை மனத்தில் கொண்டு தான் கேட்கிறீர்கள் என்று தெரிகிறது.
பதிலளிநீக்குஏன் அப்படி நினைப்பு ஓடுகிறது என்பது முற்றிலும் மனத்தத்துவம் சார்ந்த
ஓரவஞ்சனை. ஆண் என்றால் ஒரு பொருட்டாகவே நினைக்காத பூமியாகி விட்டது. என்னத்தைச் சொல்ல?..
சரோஜாதேவி கதைக்காரர் இன்று சீக்கிரமே எழுந்து விட்டார் போலிருக்கு.
அதனால் அவர் 'என் கேள்விக்கு என்ன பதில் என்பதைச் சொல்லலாம்.
அப்படி இல்லை ஜீவி ஸார்.. ஆணை யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள் என்பதும் ஒரு காரணம். அதில் சட்டென அடையாளமும் தெரியாது என்பதும் ஒரு காரணம்.
நீக்குமாடல் பெண் கன்னடத்துப் பைங்கிளிதானே?
நீக்குஆணை யாரும் கண்டு கொள்ள மாட்டார்களா?..
நீக்குபெண்கள் ஆண்களைக் குறுகுறு என்று பார்த்து மாராப்பை சரி செய்து கொள்வது,, கண்களைத் தாழ்த்திக் கொள்வது, உதடுகளை லேசாக ஒற்றி எடுப்பது --இதையெல்லாம் நீங்கள் கவனித்ததில்லையா, ஸ்ரீராம்?
அச்சச்சோ... இத்தனை வருடங்களை வீணாக்கி விட்டேனே....
நீக்குஅடடா! நானும் வீணா(வா)க்கி விட்டேனே!
நீக்கு:-))
நீக்குமேலும் இந்தக் காலத்துப் பெண்கள் உடையில் மாராப்பு
நீக்குமாறும் பூ எல்லாம் கிடையாதே!
ஓ.. அப்படி ஒண்ணு வேற இருக்கோ...
நீக்குமாராப்பு என்ற சொல் ஒரு குறியீடு. அதற்கான இந்தக் காலத்து சொல்லைப் பயன்படுத்தினால் லஜ்ஜையே இல்லாத 'அட! இதுக்குப் போய் இவ்வளவா என்று ஆகிப்போயிருக்கும்.
நீக்குஇல்லை:)))
நீக்குஇந்தக் காலத்தில் லஜ்ஜையே இல்லை என்கிறீர்கள்.. சரிதானே!
நீக்குஇல்லையா?.. சுஜாதா அந்த வார்த்தையை எழுதி எழுதி ஒருவழி பண்ணியதை ஊர் உலகம் அறியுமே!..
நீக்குஎனக்கு லஜ்ஜாவதியே என்கிற பாட்டுதான் நினைவுக்கு வருகிறது!
நீக்குஅப்பன்-- மகன் இடையே சொத்து - பங்கு என்ற வார்த்தைகளைக் கேட்பதே அசிங்கமாக இருக்கிறது.
பதிலளிநீக்குபணக்கார குடும்பத்தினர்களையே பெரும்பாலும் கதை நாயகர்களாக்கி நடுத்தர ஏழை மக்களை ஒரு காலத்தில் உணர்வு வெள்ளத்தில் ஆழ்த்திப் பாடாய்ப் படுத்தியிருக்கிறார்கள்.
ஹா.. ஹா.. ஹா... நீங்களும் அந்த கரைக்கு மாறி விட்டீர்களா?!! நடக்காதது ஒன்றையும் படமாக்கவில்லை என்பதோடு, அப்படி நடந்தால் என்று கற்பனை செய்த்தாலே...
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா.. வணக்கம். இணைந்து பிரார்த்திப்போம்.
நீக்குவணக்கம் ஸ்ரீராம் சகோதரரே
பதிலளிநீக்குதங்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். பல்லாண்டுகளுடன் நல்ல ஆரோக்கியமான வாழ்க்கையை இறைவன் தர வேண்டுமாய் பிரார்த்தித்துக் கொள்கிறேன். நன்றி.
அன்புடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி கமலா அக்கா.
நீக்குமுருகா சரணம்
பதிலளிநீக்குவாங்க செல்வாண்ணா.. வணக்கம்.
நீக்குநலமே விளைக
பதிலளிநீக்குவிழைவோம்.
நீக்குஆண்டொன்று போனால் வயதொன்று போகும்
பதிலளிநீக்குமனிதனின் வாழ்வும் மலர்வதும் உதிர்வதும்
இன்பத்தின் விதிதானே
Jayakumar
அப்பாடி... இன்று பழுதில்லை.. இருக்கிறோம்!
நீக்குஅன்பின் ஸ்ரீராம் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
பதிலளிநீக்குவாழ்க பல்லாண்டு!
நன்றி செல்வாண்ணா.. 'அவர்கள்' என்பதை தவிர்த்திருக்கலாமே..
நீக்குவாலி அவர்களுக்கு நிகர்
பதிலளிநீக்குவாலி அவர்களே...
அவளுக்கு நிகர் அவளே என்று ஒரு படம் வந்ததது போல வாலிக்கு நிகர் வாலியே!
நீக்குதிருச்சி, குணசீலம், ஸ்ரீரங்கம் என ஒரு ரவுண்டு அடித்துவிட்டு இரண்டு நாள் முன்புதான் பெங்களூரு திரும்பினேன். சிராப்பள்ளி கதை சுவாரஸ்யம். பெண்ணிடம் சொல்லி அவளது தமிழ்நாட்டு அறிவைக் கொஞ்சம் வளர்க்கப்பார்க்கிறேன்!
பதிலளிநீக்கு..சிற்றம்பர்' என்ற அதன் உண்மையான பழைய பெயர் வரலாற்றில் மறைந்துவிட்டது.//
வரலாற்றைத் திரிப்பதில், மறைப்பதில், மறக்கடிப்பதில் .. நம்ம ஆட்களை மிஞ்சமுடியாது!
வாங்க ஏகாந்தன் ஸார்.. அவரவர்கள் மனமாச்சர்யங்களுக்கேற்ப பேசுகிறார்கள், எழுதுகிறார்கள்.
நீக்குஎன்ன, திடீரென்று ஒரு ஆன்மீக சுற்று?
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய வெள்ளிச் சிதறல் அருமை. பாடல் பகிர்வில் "அமைதி புறாவே" மிக அழகான பாடல். எனக்குப் பிடித்தமான பாடல். இப்போதும் கேட்டு ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஆமாம். அமைதியான பாடல். சரோஜாதேவி சொல்கிறாற்போல் சொல்ல வேண்டுமென்றால் அமேதியான பாடல்! சுசீலாம்மாவின் குரல் அருமை.
நீக்குஎன்ன.. இப்போது தீடிரென ச. தே தலை உருண்டு கொண்டே உள்ளது. புதனில் சகோதரர் கௌதமன் அவர்கள் உருவாக்கிய கதையின் பாதிப்பா..? ஹா ஹா ஹா.
நீக்குவாலி மறைந்தபின் வந்த அஞ்சலிக் கட்டுரைகளில் ஒன்றாக இளையபாரதியின் கட்டுரையைப் படித்திருந்தேன். உருக்கமாக எழுதியிருந்தார். ’அந்திமழை’யிலா அது வந்தது? சரியாக நினைவில்லை.
பதிலளிநீக்குஎதில் வந்தது அது என்று நானறியேன். இது சுபமங்களாவிலிருந்து எடுக்கப்பட்டது.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குநீங்கள் ஏறிச் சென்ற வண்டியின் டிரைவர் இறுதியில் உங்களிடம் பேசிய தொகையை விட 133 ரூபாயை அதிகமாக வாங்கி விட்டாரா.?
என்ன இருந்தாலும், ஓவியர் மாயாவின் மாடல்கள் அழகுதான். முதல் படம் தேவிகாவோ.? இரண்டாவது ச. தே. ( முழுப்பெயரைச் சொல்லவே பயமாக இருக்கிறது. :)). ) என். டி.ஆர் என நினைக்கிறேன். இன்னொரு கதையின் படத்திலும் மாயாவே வருகிறார். .
இன்று தங்கள் தந்தையின் பக்கம் வெளிவரவில்லையோ .? கடந்த கால முன்னாள் முதல்வரின் எழுத்துக்களைப் படித்தேன்.
குழந்தையின் ஆரோக்கியமான உணவை குறித்து அந்த விளம்பரம் வந்திருக்கும் என்னவோ..? அத்தனைப் பகிர்வுக்கும் நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஊபர் சம்பவம் நான் புரியும்படி எழுதவில்லையோ..
நீக்குஎந்த நடிகை சாயல்.. கொஞ்சம் போகட்டும் பார்க்கலாம்...
பாஹே பக்கம் தயாராக வைக்கவில்லை. நேரமாகி விட்டது.
கணினி முன் உட்கார முடியாத அளவு வெக்கை!!
அந்த விளம்பரம் எதற்கானது என்று நிஜமாகவே எனக்கும் தெரியாது.