நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
3.9.26
பொய் சொல்லப்போறேன் பொய் சொல்லப்போறேன்
பொய் சொல்லக்கூடாது காதலி...
பொய் சொல்லப்போறேன் பொய் சொல்லப்போறேன்
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த
ஒரு பொய்யாவது சொல் கண்ணே
இப்படி பொய் பற்றி சில பாடல்கள் கேட்டிருக்கிறீர்களா? பொய்மையும் வாய்மையிடத்து புரை தீர்ந்த நன்மை பயக்குமெனின் என்று வள்ளுவர் கூட சொல்லி இருக்கார்.ஆனால் அந்த புரை தீர்ந்த நன்மை யாருக்கு என்று அவர் சொல்லவில்லை !
எனக்கு பொய் சொல்வதில் பயமுண்டு. நிஜம் சொன்னால் நடக்கிறதோ இல்லையோ, பொய் சொன்னால் நடந்து விடும். ஸ்கூலில் இரண்டு மூன்று முறை வாத்தியாரின் "ஏண்டா லேட்?" கேள்விக்கு "சைக்கிள் டயர் பஞ்சர் சார்" சொல்லி, அன்றே அது அப்படியே நடந்து செலவு வைத்திருந்திருக்கிறது!.
ரெகார்ட் நோட் படம் வரையாததால் தொலைந்து விட்டது என்று சொல்லப்போக, அது நினமாகவே தொலைந்து நான் அவஸ்தைப்பட்டது தனிக்கதை. கடனே என்று அவசர அவசரமாக எல்லாம் முதலிலிருந்து தயார் செய்தவுடன் காணாமல் போன ரெகார்ட் நோட்டே கிடைத்தது. கடுப்பாயிருக்காது?!!
சரி, இதெல்லாம் நடக்கிறதே என்று இன்று எனக்கு இருபது ரூபாய் கையில் கிடைக்கும் என்றோ, ப்ராகிரஸ் கார்டில் அப்பா ஒன்றும் சொல்லாமல் கையெழுத்திட்டு விடுவார் என்றோ சொன்னால் அதெல்லாம் நடக்காது!
அதைவிட ஒருமுறை அம்மாவுக்கு உடம்பு சரியில்லை என்று சொல்லப்போக, நிஜமாகவே அம்மாவுக்கு உடம்பு சரியில்லாமல்போய் ராஜாஜி ஹாஸ்பிடலில் அட்மிட் செய்யுமளவு போனது. நான் சொன்னதால்தானா, எப்படி இருந்தாலும் அம்மாவுக்கு உடம்புக்கு வந்திருக்குமே என்கிற லாஜிக் எல்லாம் எனக்குள்ளே செல்லுபடியாகவில்லை.
எனவே எந்த மாதிரி சந்தர்ப்பங்களில் பொய் சொல்வது நடக்கும் என்று தெரிந்து போனதால் முடிந்தவரை பொய் சொல்ல வாய் வராது!
வகுப்பைப் புறக்கணித்து தங்கச்சுரங்கம் பார்த்து வந்த நாளில் உள்ளே நுழையும்போதே அம்மா "சினிமாவுக்கு போயிட்டு வர்றியா?" என்று கேட்டதும் ஆச்சர்யம். இத்தனைக்கும் ஸ்கூல் விட்டு டியூஷன் விட்டு வீடு வரும் எல்லாம் சரியாக வீடு வந்து விட்டேன்.
இது மாதிரி அம்மா வேறு சில சமயங்களிலும் நேரில் பார்த்தது போல கேள்வி கேட்பார்.
பொய் சொல்ல மாட்டேன்தான். அதேபோல தேவைப்படும் நேரங்களில் உண்மையும் சொல்ல மாட்டேன்! அதாவது ஒன்றும் சொல்லாமல் இருந்து விடுவேன். அல்லது வேறு ஏதாவது மாற்றி குழப்பி விட்டு விடுவேன்!
பொய் பேசாமல் உண்மை பேசுவது சிரமம் இல்லையா என்றால் இல்லை! ஏனெனில் பொய் சொல்பவர்களை நம்பும் இந்த உலகம், உண்மை பேசுபவர்களை நம்பாது. எனவே துணிந்து உண்மை பேசலாம்! பொய்மையும் வாய்மையிடத்து மாதிரி சில இடங்களில் உண்மையையே பொய் என்று நினைக்குமளவு பேசி விடலாம்!
'தங்கச்சுரங்கம்' படம் வெளிவந்த ஆண்டு 1969. 'மெக்கனாஸ்கோல்ட்' ஆங்கிலப்படம் பார்த்து அதுபோல தமிழில் எடுக்க வேண்டும் என்று நினைத்தார்களோ என்னவோ.. சிவாஜி கணேசன் முதன் முதலாக ஜேம்ஸ்பாண்டாக நடித்த படம். அப்போதைய அந்த ஸ்டைல் காட்சிகள் இப்போதும் பார்த்தால் கொஞ்சம் சிரிப்பக இருக்கும். படம் பிளாக்பஸ்டர் வெற்றி. எனவே அதை ஹிந்தியிலும் தெலுங்கிலும் கூட எடுத்தார்கள்.
அப்போதைய படங்களில், வெளிநாட்டில் அல்லது சென்னை டெல்லியில் வேலை பார்க்கும் கதாநாயகன் சொந்த கிராமம் திரும்புவது ஆரம்பக் காட்சியாகவும் அந்தக் காட்சியில் ஒரு பாடலும் இருக்கும். அப்படி இந்தப் படத்தில் வரும் பாடல் 'நான் பிறந்த நாட்டுக்கெந்த நாடு பெரியது?'
கண்ணதாசன் பாடலுக்கு T K ராமமூர்த்தி இசை. TMS குரல்.
இங்கிலாந்து ராணியின் அரண்மனையில் பத்தாயிரம் ஜன்னல்கள்
ராணிக்குப் பிடித்த மாமியார்...
இங்கிலாந்து ராணியின் பக்கிங்ஹாம் அரண்மனயில் வேலை செய்பவர்களின் எண்ணிக்கை 220.இவர் களில் சிலர் செய்யும் வேலைகள் கேட்பதற்கு ரசமானவை.
ராணி அளிக்கும் ராஜாங்க விருந்தில், ஓர் அதிகாரி, ராணி அமர்ந்திருக்கும் நாற்காலிக்குப் பின்னால் நிற்பார். போக்குவரத்து விளக்குகளைப் போட்டு அடை யாளம் காட்டுவது போல, விளக்குகளைப் போட்டும் அணைத்தும், விருந்தில் பரிமாறுவதற்கு எப்போது எதைக் கொண்டு வர வேண்டும் என்பதை ஒழுங்கு படுத்துவார் இவர்.
இன்னொருவர், நாள் முழுக்க அரண்மனையைச் சுற்றி வந்து, அங்குள்ள கடிகாரங்களுக்குச் சாவி கொடுக்கிறார். அங்கே 250 கடிகாரங்கள் இருப்பதால். இவருக்கு வேலை சரியாக இருக்கும்.
அரண்மனையில் உள்ள பத்தாயிரம் ஜன்னல்களை 12 பேர்கள் சுத்தப்படுத்தி, மினுமினுப்புடன் இருக்கச் செய்யும் வேலையைச் செய்கிறார்கள். பத்தாயிரம் ஜன்னல்களைத் துடைத்து முடிப்பதற்குள், மறுபடியும் மற்ற ஜன்னல்களில் தூக படிவதால் இவர்களுக்கு இடைவிடாத வேலை இருந்து கொண்டே யிருக்கிறது.
மைக்கேல் அடினி என்பவர்தான். ராணியின் அந்தரங்கக் காரியதரிசி, காலையில் சரியாகப் பத்து மணிக்கு இவர் பத்துப் பெட்டிகள் நிறையப் 'பைல்' பெட்டிகள் நிறைய பைல்களுடன் ராணியைச் சந்திக்க வருவார். பல அரசாங்கக் காரியங்களுக்கு ராணி ஒப்புதல் அளித்துக் கையெழுத்திட வேண்டியவை அவை. பின்னர், காலையில் வந்த கடிதங்களைப் பார்வையிடுகிறார்.
இவர் நேரிடையாகப் பார்க்கும் கடிதங்களின் எண்ணிக்கை மட் டும் 250.
ஓர் ஆங்கிலேயர் தன் மாமியாரைப் பற்றி வானளாவப் புகழ்ந்து ராணிக்குப் பக்கம் பக்கமாகக் கடிதம் எழுதினார். ராணி அதற்கு எழுதிய பதில்: "உங்கள் மாமியாரைப் பற்றிப் படிப்பதற்குச் சுவையாக இருக்கிறது. நிச்சயமாக உங்கள் வயதான மாமியார் ஓர் அற்புதப் பெண் தான்!"
ராணியின் கணவருக்குத் தலை வழுக்கையாக இருப்பது பற்றி ஒருவர் மருந்துகளைச் சிபாரிசு செய்திருந்தார்!
ஒரு பள்ளிக்கூடத்துச் சிறுமி எழுதிய கடிதம் ராணியின் நெஞ்சைத் தொட்டது.
கான்வென்ட்டில் படிக்கும் அந்தச் சிறுமி. " நீங்கள் எங்கள் பள்ளியின் வழியாகக் காரில் தினமும் போகிறீர்களே, மெதுவாகப் போகக்கூடாதா? நாங்கள் உங்களைத் தினமும் பார்க்கலாமே?" என்று எழுதியிருந்தாள்.
அதன்படி அப் பள்ளி அருகே காரில் போனால், ராணியின் கார் மெதுவாகத்தான் செல்லும். ராணி கையை அசைக்க, குழந்தைகள் ஆரவாரம் செய்வார்கள்.
........ இவர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்? நான் கனடாவிலும், அமெரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும் விமானநிலையக் காவலர்களில் இருந்து பரிசாரகர்கள் வரை விதவிதமான வெள்ளையர்களைச் சந்தித்திருக்கிறேன். ஒவ்வொருமுறையும் ஓர் எழுத்தாளன் என்பவனின் இடமென்ன என்று அவர்களுக்குத் தெரிந்திருப்பதையே கண்டிருக்கிறேன். மிகமிகக் கறாரான ஆஸ்திரேலிய சுங்கத்துறையில்கூட எழுத்தாளன் என்றதுமே ஊழியர்களின் பாவனையில் மரியாதை வருவதை கவனித்திருக்கிறேன்.
ஏன், என் இதுநாள் வரையிலான இலக்கியவாழ்க்கையில் எழுத்தாளன்மீது மதிப்பில்லாத, அவன் இடமென்ன என்று அறியாத ஒரே ஒரு ஈழத்தமிழரைக்கூட சந்தித்ததில்லை. ஒரு வரிகூட வாசிக்காத ஈழத்தமிழர்களை நூற்றுக்கணக்கில் சந்தித்திருக்கிறேன். கடுமையான கருத்துமுரண்பாட்டுடன் கோபம் கொண்டு என்னிடம் பேசவந்தவர்களையும் கண்டிருக்கிறேன். ஆனால் அவர்கள் எழுத்தாளன் என்ற மதிப்பை இழந்து ஒரு சொல் சொன்னதில்லை, ஒருமெல்லிய பாவனைகூட வந்ததில்லை.
அதைவிட முக்கியமாக ஓர் ஈழத்தமிழர் அப்படிச் செய்யக்கூடும் என்ற சிறிய ஐயம் கூட எனக்கு வந்ததில்லை.
ஒரு வெள்ளையரிடம், ஈழத்தமிழரிடம் , மலையாளியிடம், கன்னடனிடம் என்னை எழுத்தாளன் என அறிமுகம் செய்துகொள்ள் எனக்கு தயக்கமில்லை. ஆனால் ஒருபோதும் தமிழகத் தமிழரிடம் அப்படி என்னை முன்வைக்கும் தைரியம் வருவதில்லை. ஏனென்றால் எழுத்தாளன் என்றால் என்ன ,அவனிடம் எதைப்பேசலாம், எதைப் பேசக்கூடாதென்று அவர்கள் அனைவருக்கும் தெரியும்.
நாம் மட்டும் ஏன் இப்படி இருக்கிறோம்? நம்மிடம் மிக ஆழமான உளவியல் கோளாறு ஏதோ உள்ளது. அறிவுக்கு எதிரான ஒரு நரம்பு இறுக்கமா அது?
இந்த பதிவை கொண்டு வர நிறைய உழைத்திருக்கிறீர்கள். /பொய் சொல்பவர்களை நம்பும் இந்த உலகம், உண்மை பேசுபவர்களை நம்பாது. எனவே துணிந்து உண்மை பேசலாம்! // உண்மை பேசுவதற்க்கு நீங்கள்கற்பித்திருக்கும் நியாயத்தை ஏற்க முடியவில்லை. உண்மையும்,பொய்யும் கலந்து பேசினால் நம்ப மாட்டார்கள். உண்மைதான் பேசுவோம் என்றால் நிச்சயம் நம்புவார்கள்.
வாங்க பானு அக்கா.. நீங்கள் உண்மைதான் பேசுவீர்கள் என்று அவர்கள் நம்ப வேண்டும்! அது யாருக்குமே வராது. உதாரணமாக நான் பொய் சொல்ல மாட்டேன் என்று நான் சொல்வதை உங்கள் மனம் அப்படியே ஏற்றதா?
நான் பெரும்பாலும் பொய் சொல்ல மாட்டேன் என்பதால் மற்றவர்களும் என்னைப்போலத்தான் இருப்பார்கள் என்று நம்புவேன். நான் பொய் சொல்ல மாட்டேன் என்பது என்னை நன்றாக அறிந்தவர்களுக்குத் தெரியும். "எப்போதும் உண்மைதான் பேச வேண்டும் என்பதில்லை" என்பது எனக்கு கொடுக்கப்படும் அறிவுரை. மற்றவர்கள் பொய் சொல்கிறார்கள் என்பது அவர்களின் உடல் மொழி, ந்ம் உள்ளுணர்வு மூலம் அறியலாம்.
பொய் சொல்வதைத் தவிர்த்தாலும், உண்மையை எல்லாக் காலங்களிலும் சொல்லிவிட முடியாது. அதிலும் நம் குடும்பம், குழந்தைகள் விஷயத்தில். காரணம் இட்டுக் கட்டி அதீதமாகப் பரவிவிடக் கூடாது, வதந்திக்கு வழி வகுத்துவிடக் கூடாது எனப் பல காரணங்கள்.
அலுவலகத்தில் வேறு வழியில்லாமல் பல நேரங்களில் பொய் சொல்ல நேரிடும், வேறு நன்மைகளை உத்தேசித்து.
அவரிடம் நான் இதுவரை பொய் சொன்னதில்லை. நான் யாருடைய அலைபேசியையோ கடிதங்களையோ பார்க்க மாட்டேன். இது என் அப்பாவிடமிருந்து வந்த ஒழுக்கம். என் அலைபேசி மெயில் லேப்டாப் பாஸ்வேர்ட் எல்லாம் மனைவிக்கும் மகனுக்கும் தெரியும், அவர்கள் இருவரும் எப்போ வேண்டுமானாலும் எடுத்து எந்தச் செய்திகளையும் பார்க்கும்படி வைத்திருக்கிறேன்.
/// நாம் பொய் சொல்லத் தேவையில்லாத நபர் மனைவி ஒருவர்தாம்//
ஆனால் அவரிடம்தான் நிறைய பொய் சொல்வோம்!!// கணவன் சொல்லும் பொய்யை மனைவி மன்னிப்பது போல, மனைவி சொல்லும் பொய்யை கனவன் மன்னிப்பது உண்டா? எனக்கு இந்தக் கால பெண்களைப் பற்றி தெரியாது.
பேனா ஜோக்... அந்தக் காலத்தில், என் அப்பா காலத்தில் இங்க் தொட்டு எழுதும் பேனாதான். பள்ளியில் மேல் வகுப்பு பெஞ்சுகளில் மை புட்டியை வைக்க வட்டமான இடம் இருக்கும். பிறகுதான் இங்க் பேனா வந்தது.
மை தொடும் பேனா உபயோகித்த ஆபீசர், இங்க் பேனா வாங்கியும் பழக்க தோஷத்தில் மை புட்டியில் தோய்க்கிறார்.
ஏன் நடிக்காமல்? இங்கே கால் பாதிக்க ஒரு வாய்ப்பு கிடைக்கிறதே என்று நினைக்கலாம். ஆனால் காமினி பொன்சேகா இலங்கையில் ஒரு நல்ல நடிகை என்று பெயரெடுத்தவர்தான். அவர் கணவர் அரசியலில் இருந்தார்.
அது தெரியாது. ரஜினிக்கு மகளாக நடித்த மீனா, காதலியாக, மனைவியாக நடித்திருக்கிறார். இப்போ வரும் படத்தில் மீனாவுக்கு வயதாகிவிட்டதால் ரஜினியின் மனைவியாக நடிக்க முடியாது. ஶ்ரீதேவி, கீசா மேடத்தின் ஆதர்ச நடிகரான சிவாஜியின் மகளாக, மனைவியாக நடித்திருக்கிறார்.
ஜெஜெ அவர்கள் மனமாச்சர்யம் பார்க்காமல் தன்னை ஆரம்பத்தில் எதிர்த்தவர்களையும் அரவணைத்து அவங்களைத் தன் விசுவாசியாக ஆக்கியிருக்கிறார். அவர்களுக்கு தகுந்த பதவிகளையும் கொடுத்திருக்கிறார்.
அரசியலில் நன்றி கெட்ட பச்சோந்திகளில் வைகோவும் திருமாவும் குறிப்பிடத் தகுந்தவர்கள்.
பொய் சொல்வதற்கு எல்லோரும் வள்ளுவரை துணைக்கு அழைப்பார்கள். நான் சுஜாதா சொன்னதை கடை பிடிப்பேன். 'சிவந்த கைகள்' கதையில் அவர் "பொய் சொல்வதற்கு அசோக்கின் இரண்டு விதிகள் 'பொய் சொல்லாதே, சொன்னால் அதை எப்படியாவது உண்மையாக்கிவிடு' என்னால் எந்தப் பொய்யை அதிகம் கஷ்டப்பட்டாமல், உண்மையாக்க முடிகிறதோ அந்தப் பொய்யை மட்டுமே சொல்வேன்.
முதல் பகுதியாகிய பொய் சொல்ல கூடாது என்ற எண்ணங்கள் பகுதி ரசித்தேன். நானும் பொய்யே சொல்லாமல் உண்மையை மட்டும் கூறி பல சமயங்களில் இக்கட்டுகளில் மாட்டியுள்ளேன். இதற்கு எதுவுமே சொல்லாமல் இருந்திருக்கலாம் என்ற ஞானோதயம் பிறகு தோன்றும்.
தங்களின் ஆபரேஷன் பிரச்சனை என்னவாயிற்று? அதை முடித்த பின் வேறொன்றை தொடர்ந்திருக்கலாமே.! சென்ற வாரம் "ஓரம் கட்டிய வண்டியோடு" அதையும் இப்படி ஓரம் கட்டி விட்டீர்களே.!
தங்கள் அப்பாவை போல எழுதிய கவிதைகள் இரண்டும் சூப்பராக உள்ளது. வரிகள் நிதசர்னங்களை சுட்டிக் காட்டுகிறது. படித்து ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
இன்றைய பகுதிகள் அனைத்தும் நன்றாக இருந்தன.
பதிலளிநீக்குவாங்க நெல்லை.. நன்றி.
நீக்குஇந்த பதிவை கொண்டு வர நிறைய உழைத்திருக்கிறீர்கள். /பொய் சொல்பவர்களை நம்பும் இந்த உலகம், உண்மை பேசுபவர்களை நம்பாது. எனவே துணிந்து உண்மை பேசலாம்! // உண்மை பேசுவதற்க்கு நீங்கள்கற்பித்திருக்கும் நியாயத்தை ஏற்க முடியவில்லை. உண்மையும்,பொய்யும் கலந்து பேசினால் நம்ப மாட்டார்கள். உண்மைதான் பேசுவோம் என்றால் நிச்சயம் நம்புவார்கள்.
பதிலளிநீக்குவாங்க பானு அக்கா.. நீங்கள் உண்மைதான் பேசுவீர்கள் என்று அவர்கள் நம்ப வேண்டும்! அது யாருக்குமே வராது. உதாரணமாக நான் பொய் சொல்ல மாட்டேன் என்று நான் சொல்வதை உங்கள் மனம் அப்படியே ஏற்றதா?
நீக்குநான் பெரும்பாலும் பொய் சொல்ல மாட்டேன் என்பதால் மற்றவர்களும் என்னைப்போலத்தான் இருப்பார்கள் என்று நம்புவேன். நான் பொய் சொல்ல மாட்டேன் என்பது என்னை நன்றாக அறிந்தவர்களுக்குத் தெரியும். "எப்போதும் உண்மைதான் பேச வேண்டும் என்பதில்லை" என்பது எனக்கு கொடுக்கப்படும் அறிவுரை. மற்றவர்கள் பொய் சொல்கிறார்கள் என்பது அவர்களின் உடல் மொழி, ந்ம் உள்ளுணர்வு மூலம் அறியலாம்.
நீக்கு(Y)
நீக்குஅபுரி
நீக்குsign of Thumbs up.
நீக்குபொய் சொல்வதைத் தவிர்த்தாலும், உண்மையை எல்லாக் காலங்களிலும் சொல்லிவிட முடியாது. அதிலும் நம் குடும்பம், குழந்தைகள் விஷயத்தில். காரணம் இட்டுக் கட்டி அதீதமாகப் பரவிவிடக் கூடாது, வதந்திக்கு வழி வகுத்துவிடக் கூடாது எனப் பல காரணங்கள்.
பதிலளிநீக்குஅலுவலகத்தில் வேறு வழியில்லாமல் பல நேரங்களில் பொய் சொல்ல நேரிடும், வேறு நன்மைகளை உத்தேசித்து.
முடிந்த அளவு. பெருமளவு. தேவை இல்லாத இடத்தில் எல்லாம் பொய் சொல்ல வேண்டாம் பாருங்கள்..
நீக்குஉண்மையிலேயே நாம் பொய் சொல்லத் தேவையில்லாத நபர் மனைவி ஒருவர்தாம். அப்பாவிடம்கூட, நம் மனைவி மற்றும் மனைவி குடும்பம் பற்றி உண்மையைப் பகிர இயலாது
நீக்கு// நாம் பொய் சொல்லத் தேவையில்லாத நபர் மனைவி ஒருவர்தாம்//
நீக்குஆனால் அவரிடம்தான் நிறைய பொய் சொல்வோம்!!
அவரிடம் நான் இதுவரை பொய் சொன்னதில்லை. நான் யாருடைய அலைபேசியையோ கடிதங்களையோ பார்க்க மாட்டேன். இது என் அப்பாவிடமிருந்து வந்த ஒழுக்கம். என் அலைபேசி மெயில் லேப்டாப் பாஸ்வேர்ட் எல்லாம் மனைவிக்கும் மகனுக்கும் தெரியும், அவர்கள் இருவரும் எப்போ வேண்டுமானாலும் எடுத்து எந்தச் செய்திகளையும் பார்க்கும்படி வைத்திருக்கிறேன்.
நீக்குநீங்கள் சொல்வது எல்லாம் எனக்கும் பொருந்தும்.
நீக்குMe too.
நீக்கு/// நாம் பொய் சொல்லத் தேவையில்லாத நபர் மனைவி ஒருவர்தாம்//
நீக்குஆனால் அவரிடம்தான் நிறைய பொய் சொல்வோம்!!// கணவன் சொல்லும் பொய்யை மனைவி மன்னிப்பது போல, மனைவி சொல்லும் பொய்யை கனவன் மன்னிப்பது உண்டா? எனக்கு இந்தக் கால பெண்களைப் பற்றி தெரியாது.
எனக்கும் தெரியாது!
நீக்குபிரிட்டன் அரண்மனையில் வேலை பார்ப்பவர்கள் பற்றிய தகவல்கள் சுவாரஸ்யம்.
பதிலளிநீக்குஇப்போ எல்லாம் மெஷின் செய்யுமா இருக்கும். இது பழசு!
நீக்குமிஷினை இயக்க ஒரு மனிதர் வேண்டாமா? குயின் சீரீஸில் கடிகாரத்திற்கு சாவி கொடுக்கும் காட்சி ஒன்று வரும் என்று நினைவு.
நீக்குகுறைவான மனிதர்கள் போதுமே
நீக்குபேனா ஜோக்... அந்தக் காலத்தில், என் அப்பா காலத்தில் இங்க் தொட்டு எழுதும் பேனாதான். பள்ளியில் மேல் வகுப்பு பெஞ்சுகளில் மை புட்டியை வைக்க வட்டமான இடம் இருக்கும். பிறகுதான் இங்க் பேனா வந்தது.
பதிலளிநீக்குமை தொடும் பேனா உபயோகித்த ஆபீசர், இங்க் பேனா வாங்கியும் பழக்க தோஷத்தில் மை புட்டியில் தோய்க்கிறார்.
சிரிப்பு வராத ஆனால் காலம் காட்டும் ஜோக்
ஓ... உண்மையிலேயே நீங்கள் சொல்லும் வரை எனக்கு புரியவில்லை.
நீக்குஅம்மாவைப் பற்றிய செய்திகள் குழந்தைகள் அனைவரும் அறிய வேண்டியது
பதிலளிநீக்கு__/\__
நீக்குரபி பெர்னார்ட் பேட்டி இரண்டு மூன்று என் பார்வைக்கு வந்தும், கடந்து சென்று விட்டேன். இங்காவது கேட்கிறேன்.
பதிலளிநீக்குஅது பிட் பிட்டாய் நிறைய வருகிறது. முதல்ல தி மு க பேட்டியாளராகவும், பின்னர் அம்மாவின் விசுவாசியாகவும் ஆனவர். நினைவிருக்கிறதா?
நீக்குஅவர் தனியாக ஒரு சேனல் தொடங்கினார், அது அ.தி.மு.க.வினரால் அடித்து நொறுக்கப்பட்டது.
நீக்குஅடப்பாவமே.... அவங்க ஆளுதானே அவர்?!
நீக்குவெளிநாட்டு நடிகைகளுடன் நடிக்கும்போது, கூச்சம் தாழ்வு மனப்பான்மை இருந்திருக்கும் என நினைக்கிறேன்.
பதிலளிநீக்குஎனக்கு தோன்றவில்லை. அங்கே அவர்கள் மூன்றாம் லெவல் நான்காம் லெவல் நடிகைகளாகவோ, அல்லது நடிப்பதற்கே புதுமுகமாகவோ இருந்திருந்தால்?
நீக்குஆசை தோசை அப்பளம்.. முதல் இரண்டாம் தர நடிகைகள் நம்ம கிழடுகளிடம் சேர்ந்து நடிப்பார்களா என்ன?
நீக்குஏன் நடிக்காமல்? இங்கே கால் பாதிக்க ஒரு வாய்ப்பு கிடைக்கிறதே என்று நினைக்கலாம். ஆனால் காமினி பொன்சேகா இலங்கையில் ஒரு நல்ல நடிகை என்று பெயரெடுத்தவர்தான். அவர் கணவர் அரசியலில் இருந்தார்.
நீக்குஎழுத்தாளர்களிடம் நமக்கு, தமிழர்களுக்கு பெரிய மதிப்பு கிடையாது.
பதிலளிநீக்குஉளவியல் ரீதியாக பணக்கார்ர்களையும், அதிகாரத்தில் இருப்பவர்களையும், நடிக நடிகைகளையும் மாத்திரமே மதிப்பது, பெருமைப்படுவது தமிழர்களின் குணம்.
ஜெமோவின் நீண்ட ஒரு கட்டுரையின் ஒரு சிறு பகுதி இது!
நீக்குமுருகா சரணம்
பதிலளிநீக்குவாங்க செல்வாண்ணா வணக்கம்.
நீக்குநலம் வாழ்க
பதிலளிநீக்குவாழ்க வாழ்க
நீக்குஅனைவருக்கும் இனிய காலை வணக்கம். நல்லதே நடக்கட்டும்.
பதிலளிநீக்குவாங்க வெங்கட்... வணக்கமும் நன்றியும்.
நீக்கு///முதல் இரண்டாம் தர நடிகைகள் நம்ம கிழடுகளிடம் சேர்ந்து நடிப்பார்களா என்ன?...///
பதிலளிநீக்குகிழடுகளுடன் தான் நடித்திருக்கின்றார்களே!...
ஹா.. ஹா.. ஹா... அவர்கள்தானே அப்போது டாப்!
நீக்குநல்லதொரு தொகுப்பு. பாராட்டுகள்.
பதிலளிநீக்குநன்றி வெங்கட்..
நீக்குரிக்சாக்காரன் படம் வெளிவந்த போது அதன் நடிகைக்கு
பதிலளிநீக்குவயதென்ன?..
என்ன, ஒரு பதினாலு இருக்குமா?
நீக்குஅது தெரியாது. ரஜினிக்கு மகளாக நடித்த மீனா, காதலியாக, மனைவியாக நடித்திருக்கிறார். இப்போ வரும் படத்தில் மீனாவுக்கு வயதாகிவிட்டதால் ரஜினியின் மனைவியாக நடிக்க முடியாது. ஶ்ரீதேவி, கீசா மேடத்தின் ஆதர்ச நடிகரான சிவாஜியின் மகளாக, மனைவியாக நடித்திருக்கிறார்.
நீக்குஸ்ரீதேவி ஜெய்சங்கருக்கும், மகளாக, காதலியாக நடித்திருக்கிறார்.
நீக்குசிவாஜிக்கும் ஸ்ரீதேவிக்கும் 37 வயது வித்தியாசம். இந்த வித்தியாசம் வேறு எந்த நடிக நடிகைக்கும் இல்லைனு நினைக்கிறேன்
நீக்குஸ்ரீதேவி என் டி ராமராவுக்கும் ஜோடியாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது NTR 1923 ல் பிறந்தவர்.
நீக்குகாமினி பொன்சேகா பைலட் பிரேம் நாத்
பதிலளிநீக்குபடத்தின் கதாநாயகி
அவர் ஆண். மாலினியின் கணவர். மாலினிதான் கதாநாயகி! மாலினி பொன்சேகா.
நீக்கு//இரட்டை எதற்கு உருவங்களாக/ இரட்டை துருவங்களாக என்று வந்திருக்க வேண்டுமோ?
பதிலளிநீக்குஅசோ எந்த இடத்துலன்னு தெரியலையே.... பார்க்கணுமே.. தேடனுமே...
நீக்குவெளிநாட்டை சேர்ந்த கதா நாயகிகளோடு நடித்த நடிகர்கள் பற்றிய தகவல்கள் பகுதியில் கமல், ரஜினி பற்றி வருகிறது.
நீக்குஜெஜெ அவர்கள் மனமாச்சர்யம் பார்க்காமல் தன்னை ஆரம்பத்தில் எதிர்த்தவர்களையும் அரவணைத்து அவங்களைத் தன் விசுவாசியாக ஆக்கியிருக்கிறார். அவர்களுக்கு தகுந்த பதவிகளையும் கொடுத்திருக்கிறார்.
பதிலளிநீக்குஅரசியலில் நன்றி கெட்ட பச்சோந்திகளில் வைகோவும் திருமாவும் குறிப்பிடத் தகுந்தவர்கள்.
அரசியலே சாக்கடைதானே
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
பொய் சொல்வதற்கு எல்லோரும் வள்ளுவரை துணைக்கு அழைப்பார்கள். நான் சுஜாதா சொன்னதை கடை பிடிப்பேன். 'சிவந்த கைகள்' கதையில் அவர் "பொய் சொல்வதற்கு அசோக்கின் இரண்டு விதிகள் 'பொய் சொல்லாதே, சொன்னால் அதை எப்படியாவது உண்மையாக்கிவிடு' என்னால் எந்தப் பொய்யை அதிகம் கஷ்டப்பட்டாமல், உண்மையாக்க முடிகிறதோ அந்தப் பொய்யை மட்டுமே சொல்வேன்.
பதிலளிநீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய வியாழன் கதம்பம் எப்போதும் போல் அருமை.
முதல் பகுதியாகிய பொய் சொல்ல கூடாது என்ற எண்ணங்கள் பகுதி ரசித்தேன். நானும் பொய்யே சொல்லாமல் உண்மையை மட்டும் கூறி பல சமயங்களில் இக்கட்டுகளில் மாட்டியுள்ளேன். இதற்கு எதுவுமே சொல்லாமல் இருந்திருக்கலாம் என்ற ஞானோதயம் பிறகு தோன்றும்.
தங்களின் ஆபரேஷன் பிரச்சனை என்னவாயிற்று? அதை முடித்த பின் வேறொன்றை தொடர்ந்திருக்கலாமே.! சென்ற வாரம் "ஓரம் கட்டிய வண்டியோடு" அதையும் இப்படி ஓரம் கட்டி விட்டீர்களே.!
தங்கள் அப்பாவை போல எழுதிய கவிதைகள் இரண்டும் சூப்பராக உள்ளது. வரிகள் நிதசர்னங்களை சுட்டிக் காட்டுகிறது. படித்து ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.