புதன், 24 ஏப்ரல், 2019

புதன் 190424 :: பொன்னியின் திரை செல்வன் எடுபடுமா?


சென்ற வாரப் பதிவில் வழக்கம்போல் எங்களைக் கேள்விகள் கேட்க எல்லோரும் மறந்துட்டீங்க. 

ஆனாலும் வாட்ஸ் அப் இருப்பதால், எங்களுக்கு கேள்விகள் கிடைத்தன. 
கேள்விகள் கேட்ட இருவருக்கும் எங்கள் நன்றி! 


நெல்லைத்தமிழன் : 

1. வீட்டில் பெட் டாக் வளர்ப்பது நல்லதா?-குறிப்பா தமிழகத்தில்  

# வீட்டில் செல்லப் பிராணிகளை வளர்ப்பது வளர்ப்பவரின் விருப்பத்தைப் பொறுத்தது. என்னைக் கேட்டால் எனக்கு வீட்டில் பிராணிகள்  வளர்ப்பதில் நாட்டமில்லை.  அவற்றை பராமரிப்பது மிகவும் பெரிய தலைவலி என்று எனக்குத் தோன்றும். ஆனால் செல்லப்பிராணிகள் மேல் உயிராய் இருப்பவர்களை நான் பார்த்திருக்கிறேன்.  அவை இறக்கும் போது வீட்டில் ஒரு பெரிய சோகம் கவ்வுவதையும் கண்டிருக்கிறேன்.

& எனக்குத் தோன்றுவது இது: குழந்தைகள் இல்லாத வீட்டில் பெட் டாக் வளர்த்தால், ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், சிறு குழந்தைகள் உள்ள வீட்டில் பெட் டாக் வளர்த்தால், அங்கு வளரும் குழந்தைகளின் மன நலம் சிறிது பாதிப்பு அடைகிறது, என்று நினைக்கிறேன். நிறைய உதாரணங்கள் பார்த்துள்ளேன். 

2.  ஏன் காட்டு விலங்குகளை வீட்டில் வளர்க்கக் கூடாதுன்னு சொல்றாங்க?  

# காட்டு விலங்குகளை வீட்டில் வளர்ப்பதில் இரண்டு பிரச்சினைகள் வரும் ஒன்று அவற்றுக்கு பரிச்சயம் இல்லாத சூழ்நிலையில் அவை மிகவும் அவஸ்தைப்படும்.  அடுத்தது காட்டு விலங்குகளால் நம் வீட்டு விலங்குகளுக்கு( 2 & 4 கால்) கெடுதல் நேரக்கூடும்.

& அதானே ஏன்? சப்போஸ் என் வீட்டில் பாம்பு வளர்க்கிறேன் என்று சொன்னால், என் வீட்டிற்கு வந்து இயல்பாக உட்கார்ந்து, பேசிக்கொண்டு இருப்பீர்களா? 

3. கோவில்களில் யானைகள் இருப்பதை ஆதரிக்கிறீங்களா?

# கோவில்களில் யானைகள் இல்லாவிட்டால் நம் வீட்டு குழந்தைகள் யானைகளை எங்கு பார்ப்பது ?  அந்தக் கால அரசர்கள் யானைப்படை குதிரைப்படை என்று வைத்திருந்து யானைகளுக்கு ஒரு அந்தஸ்து கொடுத்து விட்டார்கள். யானைகள் போர் இல்லாத காலங்களில் என்ன செய்யும் ? கோவில் திருவிழாக்களில் கலந்து கொள்ள வேண்டியது தான்.

& யானை உள்ள கோவில்களுக்கு, குழந்தைகளோடு செல்லும்போது, யானையைக் காணும் அந்தக் குழந்தைகளின் கண்களில் தெரியும் பயம், ஆர்வம், வியப்பு எல்லாமே கவிதைகள். ஆதரிக்கிறேன். 

 4. கல்ஃபில் இருக்கும்போது, ஏசியில்தான் 90%க்கு மேல் இருப்போம். அப்போ, ஏசி இல்லாதபோது அவங்க எப்படி வாழ்ந்திருப்பாங்க என்று யோசிப்பேன்.  பிரச்சனைகளை கண்டுபிடிப்புகள் தீர்க்குதா அல்லது புதுப் பிரச்சனைகளை உண்டாக்குகிறதா?  

# கண்டுபிடிப்புகள் முதலில் வசதியைக் குறிவைத்து தான் கண்டுபிடிக்கப்படுகின்றன. தொடக்கத்தில் அவற்றில் பிரச்சினை இருக்கிறது என்பதே நமக்குத் தெரிவதில்லை. அதன்பின் பிரச்சனை என்று வந்தால் நாம் என்ன கண்டுபிடிப்புகள் வேண்டாம் என்று விலக்கி வைக்கிறோமா என்ன ?  பிரச்சனைகளை சமாளிக்க புதிய கண்டுபிடிப்புகளை நாடுகிறோம்.  அப்புறம் என்ன ? புதுப்புது பிரச்சினைகள் - புதுப்புது கண்டுபிடிப்புகள்.  இது ஒரு தொடர்கதை.

 5.  சினிமா கிசு கிசுக்களை ஆர்வமாகப் படிக்கிறோமே...அதன் காரணம் என்ன?   

# கிசுகிசுக்கள் பிரபலமாக இருப்பதன்  காரணம் மனிதர்களுக்கு ஊர் வம்பில் இருக்கும் அளப்பரிய நாட்டம் தான்.

& இந்தக் கேள்வியை செல்லப்பூனைப் பெயர் கொண்ட ஒரு நடிகையின் முன்னாள் காதலன் ஒருவரின் பெயரில் உலவும் இசைக் கவிஞர் ஒருவரிடம் கேட்டால், அவர் என்ன சொல்லுவார் என்று நினைத்து அச்சமுறுகிறேன்! 

6.  நடிகைகளை 'கனவுக் கன்னி' என்று சொல்றோமே... அது நம்முடைய தனிப்பட்ட ஒழுக்கத்தைக் குறைப்பதுபோல இல்லையா?


# காரணம் மனிதனின் ஆசை அவ்வளவு தீவிரமானது. 

நிறைவேறாத ஆசைகளை தீர்த்துக்கொள்ள மனித மனம் கனவு காணுதல்,  மனக்கோட்டை கட்டுதல் இவற்றை நாடுகிறது.  இது சரியல்ல என்று தெரிந்தாலும் மனம் அந்த "நியாயங்களை"  ஏற்றுக் கொள்வதில்லை. 

நம் வலைப்பதிவில் பாவனா, தமன்னா படும்பாட்டை பார்த்த பிறகுமா இப்படி ஒரு கேள்வி ? சார் அனுஷ்காவை மறந்து விட்டீர்களே என்று யாரோ சொல்வது காதில் விழுகிறது!!

& கொஞ்சம் யோசனை செய்தால், 'கனவுக்கன்னி' என்பது எதிலிருந்து வந்தது? Dream girl? அதன் தமிழாக்கம் கனவுப் பெண் என்றுதானே இருக்கவேண்டும்? கனவுக்கன்னி = dream virgin? dream maiden? 

வாழ்க்கைல வேலையோ எதுவோ, இரண்டு மூன்று வழி தென்படும்போது சரி.. இதைத் தேர்ந்தெடுக்கலாம் என நம்மை இட்டுச் செல்வது எது?

# நம் நம்பிக்கை.  இது வேண்டாம் என ஒதுக்குவது அச்சம் அல்லது தெளிவு.

& விதி. 

பானுமதி வெங்கடேஸ்வரன்: 

பெரிய பழுவேட்டரையராக சத்யராஜ், நந்தினியாக ஐஸ்வர்யா ராய், வந்தியத்தேவனாக கார்த்தி, குந்தவையாக கீர்த்தி சுரேஷ், பூங்குழலியாக அனுஷ்கா போன்றவர்கள் நடிக்க மணிரத்தினத்தின் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் தயாராகப் போகிறதாமே..?


# வாசகர்கள் மனதில் சித்திரித்துக் கொண்ட உணர்வுகளை யார் யாராக நடித்தாலும் படம் பார்ப்பவர் மனதில் தோற்றுவிக்க முடியாது..
" இளவரசர் மாறுவேடத்தில் வந்து" என எளிதாக எழுதி விடலாம். திரையில் அந்த சஸ்பென்ஸ் நொடியில் உடைந்து போகும். கதை மிகப் பெரியது. திரைக்காக அது நசுக்கப்படும்போது உயிர்ப்பை இழந்துவிடும். ஆனால் நாவலைப் படிக்காதவர்கள் மட்டுமாவது  ரசிக்கும் வண்ணம் படம் எடுக்கும் சாமர்த்தியம் மணிரத்னத்துக்கு உண்டு.  மற்றவரும் எப்படித்தான் எடுத்திருக்கிறார் பார்க்கலாம் என்று வரக் கூடும்.
பார்ப்போம். நந்தினியாக ஜஸ்வர்யா ராய் மிஸ் ஃபிட். கார்த்தி கொஞ்சம் வெகுளி டைப். பூங்குழலியாக அனுஷ்கா !! கடவுள் காப்பாற்றட்டும்.  ஆழ்வார்க்கடியானாக நடிக்க நம்மிடையே நடிகர் இல்லை.

& கதையில் வருகின்ற நூற்றுக்கணக்கான பாத்திரங்களிலும் நடிக்க ஒரு பெரிய நட்சத்திரப்பட்டாளம் தேவை. அவ்வளவு நடிக, நடிகைகள் தமிழ்த் திரையுலகில் உள்ளனரா என்பதே பெரிய கேள்வி. 

மேலும் இரண்டு 'னா' நடிகைகளை பட்டியலில் காணவில்லை என்பதால் நானும், நெ த வும் இந்தப் படத்தைப் பார்க்கத் தயாரில்லை! மணிரத்னம் பேச்சு, 'கா' விட்டுட்டோம்! 

நம் ஊர் சினிமாக்களில் தீவிரவாதிகள் என்றால் பாகிஸ்தானியர்கள் என்று காண்பிப்பது போல அந்த ஊர் சினிமாக்களில் தீவிரவாதி என்றால் இந்தியர்கள் என்று காட்டுவார்களா?

தீவிரவாதம் என்றால் ஒரு குறிப்பிட்ட இனத்தவர் என்று எண்ணுமளவுக்கு நிலைமை இருக்கிறது. தீவிரவாதி இந்தியர் எனும் அடையாளம் இதுவரை வரவில்லையே. எனவே அப்படிக் காட்டினால் எடுபடாது. மேலும் தீவிரவாதத்தை மோசமாகக் காட்டும் நிலையிலா பாக். இருக்கிறது ?
   
கடைபிடிக்க சுலபமான பொன்மொழி ஒன்று கூறுங்களேன்.

$ தன்னைப்போல் பிறரையும் நினை.

ஆறுவது சினம்.
இதுவும் கடந்து போகும்.

& வெற்றி என்பது நிரந்தரமானது அல்ல; தோல்வி என்பது இறுதியானதுமல்ல. 

=========================

எங்களின் இந்த வாரக் கேள்வி : 

உங்கள் வாழ்க்கையில் நீங்க கடந்து வந்த நாட்களில், ஏதோ ஒரு நாளை, திரும்ப கொண்டுவரலாம் என்றால், நீங்கள் திரும்பக் கொண்டு வர நினைக்கின்ற நாள் எது? ஏன்? 

=============================

நன்றி, மீண்டும் சந்திப்போம்! 

=============================


168 கருத்துகள்:

 1. அன்பின் KGG, ஸ்ரீராம், கீதாக்கா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நல்வரவு அளித்த துரைக்கும் மற்றவர்க்கும் நல்வரவு, நன்றி. வணக்கம்.

   நீக்கு
  2. நல்வரவு துரை ஸார்.. உங்களுக்கும், இனி வரப்போகும் அனைத்து நட்புறவுகளுக்கும்.

   நீக்கு
 2. >>> ஆழ்வார்க்கடியானாக நடிக்க நம்மிடையே நடிகர் இல்லை...<<<

  உண்மை.. உண்மை..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒருமித்த கருத்துரைத்ததற்கு நன்றி!

   நீக்கு
  2. ஏன் இல்லை? நம்ம கோவை ஆவியை விடப் பொருத்தமானவர்கள் ஆழ்வார்க்கடியான் பாத்திரத்துக்குச் சரியாக வராது. அவர் மிகப் பொருத்தம். அதே போல் மற்றவர்களுக்கும் தேர்வு இருக்கு! ஆனால் மனசுக்குள்ளேயே படம் எடுத்துப் பார்த்துக்கறேன். மனசில் கோயில் கட்டிய பூசலார் நாயனாரைப் போல! :))))))

   நீக்கு
  3. அப்போ மற்ற பாத்திரங்களுக்கெல்லாம் நடிக்க ஆளிருக்கா?!!

   நீக்கு
 3. இனிய காலை வணக்கம் கௌ அண்ணா மற்றும் எல்லோருக்கும்.

  அட துரை அண்ணா வந்துட்டீங்கள்!

  பதில்கள் வாசித்துவிட்டு வருகிறேன்.

  கீதா

  பதிலளிநீக்கு
 4. பொன் மொழிகள் மிகவும் சிறப்பு. பிடித்த பொன்மொழிகள்

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பொன்மொழி ஒன்று தானே கேட்டாங்க!?...

   நீக்கு
  2. துரை அண்ணே ஒன்றுதான் கேட்டாங்க

   ஆனா பதில் சொல்லும் ஆசிரியர்கள் மூன்று பேராச்சே!!!

   கீதா

   நீக்கு
  3. எது பிடிக்கிறதோ அதை எடுத்துக்கொள்ளட்டும்! அவங்களுக்குப் பிடிச்சதை எடுத்துகிட்ட பிறகு, மற்றவர்களும் எடுத்துக்கொள்ள வசதியாக உபரி !

   நீக்கு
 5. >>> 3. கோவில்களில் யானைகள் இருப்பதை ஆதரிக்கிறீங்களா?..<<<

  நேற்று குற்றாலத்திற்கு அருகிலுள்ள இலஞ்சி குமரன் கோயிலின் யானை கோயிலின் பிரகாரத்துக்குள்ளேயே மயங்கி விழுந்து உயிர் துறந்து விட்டது...

  நூற்றுக் கணக்கான யானைகளை வைத்துப் பராமரித்த தமிழகத்தில் -
  யானை வைத்துக் காப்பாற்ற!...

  அட போங்கப்பா!.....

  பதிலளிநீக்கு
 6. >>> மேலும் இரண்டு 'னா' நடிகைகளை பட்டியலில் காணவில்லை என்பதால் ... <<<

  ... முந்திரி, திராட்சை இல்லாத பாயசமா!...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மணிரத்தினத்துக்கு சொல்லுங்க சார்!

   நீக்கு
  2. கேஜிஜி சார்... இப்போ எனக்கும் துரை செல்வராஜு சாருக்கும் சண்டை வந்தாச்சு. இப்போ எனக்கு யார் முந்திரி, யார் எந்திரி-இல்லை இல்லை திராட்சை என்று தெரிஞ்சாகணும். 'எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் துரை சார்'

   நீக்கு
  3. முந்திரி த அக்கா; திராட்சை பா ...... என்று அடக்கத்தோடு கூறி விடைபெறுகிறேன். மீண்டும் வருவேன் (நெ த கருத்து கூறினால் ..... :))

   நீக்கு
 7. //ஆழ்வார்க்கடியானாக நடிக்க நம்மிடையே நடிகர் இல்லை.//

  அதே அதே அதே...

  & கதையில் வருகின்ற நூற்றுக்கணக்கான பாத்திரங்களிலும் நடிக்க ஒரு பெரிய நட்சத்திரப்பட்டாளம் தேவை. அவ்வளவு நடிக, நடிகைகள் தமிழ்த் திரையுலகில் உள்ளனரா என்பதே பெரிய கேள்வி. //

  உள்ளனரா என்பதையும் விட பொ செ வை திரையில் எப்படி வடிவமைப்பார்கள். பெரிய நாவல் அதனை இரண்டரை/மூன்று மணி நேரத்திற்குள் அடக்க முடியுமா? என்பதே தோன்றுகிறது.

  பல பிக்ஸல் கொண்டுள்ள படத்தை சின்னதாகவோ பெரிதாகவோ மாற்றினால் எப்படிச் சிக்கலாகிறதோ அப்படியும் தோன்றுகிறது.

  //மேலும் இரண்டு 'னா' நடிகைகளை பட்டியலில் காணவில்லை என்பதால் நானும், நெ த வும் இந்தப் படத்தைப் பார்க்கத் தயாரில்லை! மணிரத்னம் பேச்சு, 'கா' விட்டுட்டோம்! //

  ஹா ஹா ஹா இதைச் சொல்லி உங்களையும் நெல்லையையும் கலாய்க்க நினைத்த வேளையில் உங்களின் இந்த பதில் கண்ணில் பட்டுவிட்டது!!!

  அதானே! மணியோடு கா விட்டுருங்கண்ணே!! ரெண்டு பேரும். ரசித்த பதில்!!

  கீதா

  பதிலளிநீக்கு
 8. ஸ்ரீராம் குட்மார்னிங்க் எங்க ஆளைக் காணோம்?!!!!!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதானே ! ஸ்ரீராம் - எங்கே இருந்தாலும் மேடைக்கு வரவும்!

   நீக்கு
  2. வந்துட்டேன்... வந்துட்டேன்.... வந்துட்டேன்... ஹ.....ஹ....ஹ.....ஹ..... (இது சிரிப்பு இல்லை, கால்வாங்கி இல்லை பாருங்க... மூச்சிரைப்பு!!!)

   நீக்கு
  3. குட்மார்னிங் கீதா ரெங்கன்.

   நீக்கு
 9. பல இருக்கின்றன. ஆனாலும் எந்தத் தவறை என் மனம் விரும்பவில்லையோ அதைச் சரி செய்துக்க வேண்டிய ஓர் நாளைத் தான் தேர்ந்தெடுக்கணும். அப்படிப் பார்த்தால் 91 ஆம் வருடம் ஓர் நாள். எங்க பெண்ணைச் சென்னை ராணி மேரி கல்லூரியில் சேர்த்துவிட்டு நாங்க ஜாம்நகரில் இருந்தோம். அந்த ஒருவருஷம் பெண்ணைப் பிரிந்திருப்பது எங்க எல்லோருக்குமே கஷ்டமாக இருந்தது. இப்போது நினைத்தால் அங்கே சேர்த்திருக்க வேண்டாமோ என்னும் எண்ணம்! அந்த நாளை மாற்றி அமைக்க முடிந்தால்! :)))))))

  பதிலளிநீக்கு
 10. பொன்னியின் செல்வனுக்கு ஓவியம் வரைந்ததிலேயே முதலில் வரைந்த மணியம் போல் பின்னர் வரைந்த வினு வரையவில்லை. வித்தியாசங்கள் இருந்தன. மணியத்தின் ஓவியங்களே மனதில் பதிந்திருந்த நிலையில் பின்னால் வந்தபோதெல்லாம் பத்மவாசன் வரைந்தார் எனக் கேள்விப் பட்டேன். ஏனெனில் அப்போதெல்லாம் கல்கி வாங்குவதை நிறுத்தியாச்சு! இப்படி ஓவியம் மற்ற ஓவியர்களால் வரையப்பட்டதையே மனம் முழுவதாக ஏற்காத போது நடிகர்கள் தேர்வு எப்படிச் சரியாக வரும்?

  பதிலளிநீக்கு
 11. நாங்க சின்ன வயசிலே பொன்னியின் செல்வனைத் திரைப்படம் எடுத்தால் ஆதித்த கரிகாலனாக "ஜிவாஜி"யையும், இஃகி,இஃகி, இஃகி, நந்தினியாக பத்மினியும், பெரிய பழுவேட்டரையராக எஸ்.வி.ரங்காராவையும், சின்னப்பழுவேட்டரையராக எம்.என். நம்பியாரும் வந்தியத் தேவனாக ஜெமினி, குந்தவையாக பானுமதி, (அவர் கம்பீரம் ஜாஸ்தி காட்டுவார் என்பதால்) என்றெல்லாம் யோசிப்போம். நல்லவேளையா ஜிவாஜி நடிச்சுப் பொன்னியின் செல்வன் வரலை! பிழைச்சது! :))))))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கீதாக்கா... நீங்கள் சொல்லி இருப்பது பெட்டர் செலெக்ஷன்.

   நீக்கு
  2. பொன்னியின் செல்வனாக எம்ஜியாரும் வானதியாக ஜெயல்லிதாவையும் யோசிக்க மனமில்லையா கீசா மேடம்?

   நீக்கு
  3. பொன்னியின் செல்வனாக நடிக்கும் நடிகருக்குக் கொஞ்சம் நடிக்கவும் தெரிந்திருக்கணுமே நெல்லைத் தமிழரே! சும்மாக் கையைத் தூக்கிக் கொண்டு பாட்டுப் பாடினால் போதுமா?

   ஜெயலலிதாவின் அழகுக்கும், திறமைக்கும், கம்பீரத்துக்கும், நடனத்திற்கும் அவர் குந்தவை பாத்திரத்துக்குப் பொருந்தி வருவார். வானதி போன்ற சாதாரணப் பாத்திரங்களுக்கு அல்ல. வானதிக்கு வேறே யாரானும் இரண்டாம்,மூன்றாம் நிலைக் கதாநாயகிகள் சரியாக வருவார்கள்.

   நீக்கு
  4. கீசா மேடம்..... நிங்களுக்கு ஞான் ஒந்து பறயும். சிவாஜிக்கு இந்திய அரசு ஒரு பரிசும் கொடுத்தில்லா. ஒன்லி எம்ஜியாருக்கு மாத்திரம் அவரது நடிப்புத் திறமைக்கு பாரத் பட்டம் கொடுத்து. மனசிலாயோ.... இனி எங்கள் தலைவரை 'மத்' குறை சொல்வது. ஹாஹா

   நீக்கு
  5. //வானதி போன்ற சாதாரணப் பாத்திரங்களுக்கு அல்ல// - உங்கள் கதைவசனத்தில் சினிமா எடுத்தால் அரை நாள் கூட ஓடாது போலிருக்கு. வானதி-அருள்மொழி காதல் காட்சி, பின்னணியில் தோழிகள் வெள்ளை உடையில் டான்ஸ், நல்ல பாடல் -இதெல்லாம் இல்லாமல் படம் எப்படி எடுப்பது? எப்படி ஓடும்? ம்ம்ம்ம் மக்களைக் கவரும் படம் எடுப்பதைப் பற்றி நான் உங்களுக்குச் சொல்லித்தர வேண்டியிருக்கு...ஹையோ ஹையோ

   நீக்கு
  6. ஜெயலலிதா கம்பீரமானவர். அவருடைய துறுதுறுப்புக்கும், புத்திசாலித்தனத்துக்கும் குந்தவை பாத்திரமே பொருந்தும். அதுவும் அவர் போட்டியாகக் கருதிய நடிகை நந்தினி எனில் அவரே குந்தவை! வானதி கதைப்படி பயந்தாங்கொள்ளி. எதற்கெடுத்தாலும் பயந்து விழும் பேர்வழி.

   அதோடு கதையில் ஆங்காங்கே பூங்குழலியோடு தான் அருள்மொழிச் செல்வன் ஓடத்தில் தனியாகப் பாட்டுப் பாடிக்கொண்டு செல்வது போல் கனவுகள் கண்டிருப்பதாக வரும். வானதியோடு அல்ல! ஆகவே வானதியும் அருள்மொழிச் செல்வனும் சந்திக்கும் காட்சியில் காதல் காட்சி என எடுத்தால் அது வானதியின் கற்பனை என்றே காட்டும்படி இருக்கும்.

   நீக்கு
  7. ஜிவாஜிக்குப்பரிசு கொடுத்தால் என்ன?கொடுக்காட்டி என்ன? ஆதித்த கரிகாலன் உணர்ச்சி மிகுந்த கோபத்தை வெளிக்காட்டுகிற தொட்டதற்கெல்லாம் வாளைத் தூக்கும் கதாபாத்திரம்.நந்தினியோடு தனியே சந்திக்கும்போது அவர்கள் இருவரும் நிறைய வசனங்கள் பேசவேண்டி இருக்கும்.அதுக்கு ஜிவாஜி தான் சரிப்பட்டுவருவார்.அதே போல் நந்தினியாகக் கோபம், ஆத்திரம்,வெறுப்பு, பழிவாங்குதல் என எல்லாம் நிரம்பியவர் பத்மினியே!இவங்கல்லாம் இப்போ இல்லை என்பதால் பேசாமல் படம் எடுக்கும் எண்ணத்தைக் கைவிட்டுடலாம்.

   நீக்கு
  8. ஆஹா! தன்னையும் அறியாமல் சிவாஜியும், பத்மினியும் நல்ல கலைஞர்கள் எனறு கீதா அக்கா ஒப்புக் கொண்டு விட்டார். வெற்றி வெற்றி!😊😊

   நீக்கு
  9. நானும் அதைத்தான் நினைத்தேன்!

   நீக்கு
  10. இஃகி,இஃகி, இஃகி, கௌதமன் சார், பானுமதி! நான் ஜிவாஜி நடிச்சதே இல்லைனு எங்கேயானும் சொல்லி இருக்கேனா என்ன? மிகை நடிப்பு என்று தானே சொல்லி வருகிறேன். ஐந்தாம் பாகத்தில் ஆதித்த கரிகாலனும், நந்தினியும் சந்திக்கும் காட்சிகள் மிக உணர்ச்சிகரமானது! அதை அடக்கி வாசிக்கும் நடிகர், நடிகையர் நடித்தால் எடுபடாது! ஜிவாஜியும், பத்மினியும் ஓவர் ஆக்டிங்கில் பயங்கரப் போட்டி! அதான் அவங்களைத் தேர்வு செய்தேன். அதோடு அதெல்லாம் தேர்வு செய்தது நாங்கல்லாம் குழந்தைங்களா இருக்கையில். சுமார் 10,12 வயசு வரைக்கும், நானும் நேருமாமா என்னோட தலைவர், ஜிவாஜி மாதிரி யாரும் நடிப்பாங்களானு சொல்லிக் கொண்டிருந்தேன் தானே! அந்தச் சமயத்துத் தேர்வுகள் என்றாலும் இன்னி வரை மாத்திக்கலை என்பதைத் தாழ்மையுடன் தெரிவிச்சுக்கறேன். :))))))

   நீக்கு
  11. அதோடு முழ நீள வசனங்கள் எல்லாம் பேச வேண்டாமா? அதுக்கெல்லாம் ஜிவாஜி தான் சரி! இப்போ உள்ள நடிகர்களைப் போட்டால், "நந்தினி" என்பதற்கு "நந்திணி" என்பார்கள். "ழ" "ள" "ல" வுக்கு வித்தியாசமோ "ண" "ன" "ந" வுக்கு வித்தியாசமோ தெரியாது. கேட்க மாட்டேன் என்று சொல்கிறாளே என்பதற்குக் "கேட்க மாட்றாளே!" என்று சொல்லி மாட்டி விடுவாங்க! இப்போதைய நடிகர்கள் யாருமே இந்தக் கதாபாத்திரங்களுக்குப் பொருத்தமில்லை.

   நீக்கு
  12. சிம்மக்குரலோன் சார்பில், நன்றி!

   நீக்கு
  13. நீங்க வேறே கௌதமன் சார், அந்த முழ நீள வசனங்களை ஜிவாஜி உணர்ச்சிகரமாகப் புருவங்களை நெளித்துக் கொண்டும், உதடுகளைச் சுழித்துக் கொண்டும், தொண்டையின் "ஆடம்ஸ் ஆப்பிள்" அங்கும் இங்கும் ஏறி இறங்குவதைக் காட்டிக் கொண்டும் கைகளை ஆட்டிக் கொண்டும் பேசுவதைக் கண்டு ரசித்து சிப்புச் சிப்பாய்ச் சிரிச்சிருக்கலாமே என்னும் வருத்தத்தில் நான் இருக்கேன்! நீங்க வேறே! உண்மையில் இப்படி ஒரு படத்தில் நடிக்காமல் இருந்ததுக்கு ஜிவாஜிக்குத் தான் நாம் நன்றி சொல்லணும்!இல்லைனா சினிமா தியேட்டர்கள் அதிர்ந்து போயிருக்கும்! :))))))

   நீக்கு
 12. காலை வணக்கம். இன்றைய பதில்களை ரசித்தேன். என்னுடைய ‘னா’ ரேஞ்சுக்கு உங்கள் ‘னா’வைக் கொண்டுவந்ததுதான் கொஞ்சம் நெருடுகிறது. இன்றைக்கு படங்களுக்கு யார் தடா போட்டார்கள்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அட, இங்கே பாருங்க! போனால் போகிறது என்று என்னுடைய னா ரேஞ்சுக்கு உங்க னா வை சமமா ஒரு காம்ப்ரமைஸ் செய்யலாமே என்று எழுதினால் .... இந்த அடாவடி!

   நீக்கு
 13. நீங்கள் பாம்பை பெட் ஆக வளர்த்தால், கீரியை பெட் ஆக வளர்க்கும் நான் என் பெட்டோடு உங்கள் வீட்டிற்கு வருவது பொருத்தமா இருக்கும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனக்குத் தெரிந்து எந்த வீதி மாஜிக்காரரும் பாம்புக்கும் கீரிக்கும் சண்டை விட்டதே இல்லை. உங்கள் புண்ணியத்தில் அதைப் பார்க்கும் சந்தர்ப்பம் வாய்த்தால் சரிதான்!

   நீக்கு
 14. கோயில் காளைகள் கோயில்களுக்கு நேர்ந்து விடப்படுவதே திருவிழாக்களில் அவற்றின் மீது நகராவை வைத்துக் கொட்டிக் கொண்டு ஸ்வாமி புறப்பாட்டை அறிவிக்கத் தான். அந்தப் பழக்கமே இப்போதெல்லாம் இல்லை. சமீபத்திய மதுரைச் சித்திரைத் திருவிழாவில் நகரா வரவில்லை என கோமதி அரசு சொல்லி இருந்தார்கள். மனம் வேதனைப்பட்டது. அப்படித் திருவிழாவில் ஸ்வாமி வருகிறார் என்பதை அறிவிப்பதற்காகவே யானைகள் எல்லாம் கோயில்களில் வளர்க்கப்படுகின்றன. அவை சொந்தக் குழந்தை போலவே வளர்க்கப் படுகின்றன. பெயரும் அந்த அந்தக் கோஉஇலின் முக்கியமான மூர்த்தியின் பெயராகவே வைப்பார்கள். அந்த யானையைக் குறிப்பிட்ட தெய்வமாகவே கருதி மக்கள் வழிபடுவார்கள். ஆனால் இப்போதெல்லாம் சமூக ஆர்வலர்கள் என்னும் ஒரு சிலரால் இதெல்லாம் நீதிமன்றங்கள் மூலம் தடுக்கப்பட்டு வருகின்றது. இன்னும் கொஞ்ச நாட்களில் நம் திருவிழாப் பாரம்பரியங்கள், கோயில் நடைமுறைகள், ஆகமமுறைகள் எல்லாமும் மறைந்துவிடுமோ என்னும் அச்சமும் ஏற்படுகிறது. :(

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தர்மசம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே, யுகே!

   நீக்கு
 15. நம் வாழ்க்கைல திரும்ப பயணித்து ஏதேனும் முடிவுகளை மாற்ற முடியும்னா அது நல்ல வாய்ப்பா இருக்கும். முக்கிய நாளுக்கு மட்டும் டிராவல் பண்ணி சில மணிநேரம் மீண்டும் நல்லதை அனுபவித்துத் திரும்ப வருவதில் என்ன பிரயோசனம்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நல்லதை அனுபவித்து ..... திரும்ப வருவது .... நான் அப்படி ஒன்றும் சொல்லவில்லையே?

   // உங்கள் வாழ்க்கையில் நீங்க கடந்து வந்த நாட்களில், ஏதோ ஒரு நாளை, திரும்ப கொண்டுவரலாம் என்றால், நீங்கள் திரும்பக் கொண்டு வர நினைக்கின்ற நாள் எது? ஏன்?//

   நீக்கு
  2. சந்தோஷமான முழு நாள் என்று ஒன்று இருக்கிறதா என்ன? நிறைய நாட்களில் சந்தோஷம் அதிகமாகவும் வருத்தம் குறைவாகவும் இருக்கும். முழுமையான சந்தோஷமான நாள்? யோசிக்கணும்.

   யாராவது அவங்க 'திருமண நாள்' என்று சொல்வாங்களான்னு பார்க்கிறேன்.... இதுவரை யாரையும் காணோம்

   நீக்கு
  3. நானும் அதைத்தான் பார்த்துக்கொண்டிருக்கேன் ...... ஹூம்.... ஊஹூம் !

   நீக்கு
  4. திருமண நாள் என்பது கணவன், மனைவி இருவருக்கும் பொதுவான சந்தோஷமான நாள்.ஆகவே அதைச் சொல்ல முடியாது.

   நீக்கு
  5. அட இதப்பாருடா ! இவங்களுக்கு மட்டும் சந்தோஷம் இருக்கிற நாளாக வேண்டுமாம். கணவனுக்கு சந்தோஷ நாளாக இருக்கக்கூடாதாம்!

   நீக்கு
  6. grrrrrrrrrrrrrrrrrrrrrஅந்த அர்த்தத்திலே சொல்லலை. :))))) திரும்பக் கொண்டு வரும் நாள் என்பது எனக்குத் திருமண நாளாக இருக்கலாம். அவருக்கு வேறே ஏதேனும் முக்கியமான நாளாக இருக்கலாம். இல்லையா? அன்றைய தினம் இருவருக்குமே சந்தோஷ நாள் என்பதால் இருவரும் சேர்ந்தே அதை விரும்பலாம். :)))) இஃகி,இஃகி, உளறி இருக்கேனோ?

   நீக்கு
  7. ரொம்பத் தெளிவா உளறி இருக்கீங்களோ?

   நீக்கு
  8. //திருமண நாள் என்பது கணவன், மனைவி இருவருக்கும் பொதுவான சந்தோஷமான நாள்// - அப்படியா கீசா மேடம்? அந்த நாளை திரும்ப கொண்டுவந்து, கச கச புடவையில், கண் எரிச்சல் புகையில், பார்த்தபோதெல்லாம் சிரித்துக்கொண்டு, மேடை லைட்டில் யார் ஹாலில் உட்கார்ந்திருக்கிறார்கள் என்று தெரியாமல், எப்படா இவர் மந்திரம் சொல்லி முடிப்பார் என்று பார்த்துக்கொண்டு, நார்மலான முகத்தில் கண்மை இட்டுக்கொண்டு 'ஒரு மாதிரி' தெரியும் கணவனோடு, சொன்னபோதெல்லாம் எழுந்திருந்து வணங்கி, சிரித்து..காலையிலும் ஒழுங்காக சாப்பிடமுடியாமல், மதியம் சாப்பிட்டமாதிரி போஸ் மட்டும் கொடுத்துக்கொண்டு, சொன்னபோதெல்லாம் அறைக்குச் சென்று புடவை மாற்றிவந்து.. - இதுல என்ன சந்தோஷம் கண்டீங்க... சின்னப் பையங்க எங்களுக்கெல்லாம் சொல்லுங்களேன்...

   நீக்கு
  9. இருவருக்கும் சந்தோஷ நாள் என்பது, முதல் வாரிசு பிறந்தபோது, இல்லை முதன் முதலில் இருவரும் தனியாக (ஸ்டாப்...ஏடா கூடமா கற்பனை செய்யாதீங்க) வாழ்க்கையை ஆரம்பித்து அவள் சமையல் செய்து பரிமாறியபோது (அக்கம் பக்கம் கணவன் பெற்றோர் இல்லாமல்)... .... இதெல்லாம் விட்டுட்டு.... திருமண நாளாம். நெல்லைக் காரங்களுக்கெல்லாம் காது குத்தியாச்சு கீசா மேடம்...

   நீக்கு
  10. உங்க கருத்து உங்களுக்கு, என் கருத்து எனக்கு! நான் இதில் வாதாட விரும்பவில்லை. திருமண நாள் என்பது இருவரின் வாழ்க்கையிலும் ஓர் முக்கியமான நாள்! எங்கள் கல்யாணத்தில் மேடையும் இல்லை. மேடையில் விளக்குகளும் இல்லை. காமிராக்களின் கூட்டமும் இல்லை. ஆகையால் அது ஓர் மறக்க முடியாத நன்னாளே என்னைப் பொறுத்தவரையில்! இதிலே காது குத்தியாச்சா இல்லையா என்பதற்கு என்ன இருக்குனும் எனக்குப் புரியலை! நீங்களாக ஏதேதோ நினைத்துக் கொண்டு எழுதுவது பல சமயங்களில் புரிவதும் இல்லை! எந்தப் பெண்ணுக்கும் அவளை முறையாகத் திருமணம் செய்து கொள்ளும் ஆணுக்கும் அந்த நாள் ஓர் மறக்க முடியாத நாளே!

   நீக்கு
  11. நானும் அப்படித்தான் நினைக்கிறேன். திருமணநாள் சந்தோஷமான நாள்தான். அதை முழுமனதுடன் சொல்பவர் மனைவியா அல்லது கணவனா என்ற சந்தேகம் இன்னமும் தீரவில்லை.

   நீக்கு
  12. இருவருமே சொல்லணும். எல்லோர் வாழ்க்கையிலும் ஓர் நாள் தான் திருமண நாள். அந்த நாளைத் திரும்பக் கொண்டு வருவது என்பது அதை நினைத்து மகிழ மட்டுமே இருக்கணும். இல்லையா? நான் சொல்லி இருக்கும் நாள் செய்த தப்பைத் திருத்திக்க! ஆனால் லாஜிகலாகப் பார்த்தால் அதுவும் முடியாது. நீ அந்தத் தப்பைத் திருத்திக்கலாம், அதற்காக உனக்கு எந்த நாள் வேண்டுமோ அதைத் தேர்ந்தெடுத்துக் கொள் என்று சொன்னால் நான் தேர்ந்தெடுப்பது எங்க பெண்ணைச் சென்னையிலேயே விட்டுவிட்டு வந்ததைத் தான்!

   நீக்கு
 16. எந்த காலகட்டத்திலும் நான் நடிகைகளை கனவுக்கன்னியாக நினைத்ததில்லை.

  இதனால் நான் உத்தமன் என்று சொல்லிக் கொள்வதாகவும் அர்த்தமல்ல!

  நடிகைகள் இளைஞிகளை சீரழித்த விஷப்பூச்சிகள்.

  விஷப்பூச்சிகளை விண்வெளி தேவதைகளாக வளர்த்து விட்ட நாம் கலாச்சாரக் கொலையாளிகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஐயோ கில்லர் அருவாளைத் தூக்கிட்டார் ! நான் ஓடிப்போய் கட்டிலுக்கு அடியில் ஒளிந்துகொள்ளவேண்டியதுதான்!

   நீக்கு
  2. //நடிகைகள் இளைஞிகளை// - கில்லர்ஜி.... இளைஞர்களை என்று வந்திருக்க வேண்டாமோ? அவசரத்தில் தட்டச்சியதா இல்லை இளைஞிகள் டிரெஸ்ஸினால் கோபப்பட்டு சொல்கிறீர்களா?

   நீக்கு
  3. இளைஞிகளைத்தான் குறிப்பிட்டேன் நண்பரே...
   இளைஞனுக்கு நஷ்டமில்லை என்பதையும் குறிப்பிடுகிறேன்.

   நீக்கு
 17. நான் கனவு காணும் சமயம், (எங்க அப்பாவுடன் சந்திப்பது போன்றோ இல்லை முக்கியக் கடவுகளோ), போட்டோ எடுக்க முயல்வேன். கேமரா ஆபரேட் பண்ணாது. எவ்வளவு அமுக்கினாலும் படம் விழாது. இது எப்போதும் நடக்கும். என்ன காரணமாயிருக்கும்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அடுத்த வாரத்துக்குக் கேள்விதானே? பதில் சொல்வோம்.

   நீக்கு
 18. அனைவருக்கும் காலை வணக்கம், வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
 19. கேள்விகளே வரலைனு வருத்தப்பட்டீங்களே! இதோ கேள்விகள்! இத்தோடு இன்றைய காலை வருகையை முடித்துக் கொண்டு பின்னர் மதியம் வருகிறேன்.

  இப்போது திருமணம் ஆகாமல் பல "முதிர்கன்னர்கள்" இருப்பதற்கு உண்மையான காரணம் எது என நீங்கள் கருதுகிறீர்கள்?

  பெண்கள் இப்போதெல்லாம் திருமண வாழ்க்கையில் நிபந்தனைகள் பல போடுகின்றனர். அது சரியா? எங்க சொந்தத்திலேயே ஒரு பெண் நாத்தனார் இருக்கக் கூடாது என நிபந்தனை போட்டு அப்படி வந்த ஒரு பையரையே திருமணமும் செய்து கொண்டாள். இது சரியா?

  இப்போதைய பெற்றோர் பெரும்பாலும் ஒரே குழந்தையுடன் நிறுத்திக் கொள்கின்றனர். இது சரியான முடிவா? என்னைப் பொறுத்தவரை முதல் குழந்தைக்குத் தாய் தந்தையர் அளிக்கும் மிகப் பெரிய பரிசே அதற்கு ஓர் தம்பியோ, தங்கையோ கொடுப்பது தான் என்னும் கருத்து! இது சரியானதா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கேள்விகளுக்கு நன்றி. பதில் சொல்வோம்.

   நீக்கு
  2. //அதற்கு ஓர் தம்பியோ, தங்கையோ கொடுப்பது தான் என்னும் கருத்து! இது சரியானதா?// - அப்போ இரண்டாவது குழந்தைக்கு பரிசு கொடுக்காமல் ஓரவஞ்சனை செய்வது நியாயமா? அப்புறம் மூன்றாவது குழந்தைக்கு? பேசாம உங்களை 'குடும்பக் கட்டுப்பாடில்லா நிறுவனத்துக்கு' தலைவராகப் போட சிபாரிசு செய்யறேன் கீசா மேடம்..

   நீக்கு
  3. நெல்லைத் தமிழரே,பஞ்சாபில் குறைந்த பட்சம் 3 குழந்தைகள் ஒரு பெற்றோருக்கு இருப்பார்கள். ஒரே குழந்தை என்பது வட மாநிலங்களிலேயே அப்போவும், இப்போவும் அரிதாகவே பார்க்கலாம். எனக்குத் தெரிந்து தமிழ்நாட்டில் தான் ஒரே குழந்தையுடன் நிறுத்திக் கொள்கிறார்கள்.இதன் கடும் விளைவுகள் அடுத்த பத்து வருஷங்களில் தெரியும்! :(

   நீக்கு
 20. செல்லங்கள் வளர்ப்பு , அதன் பிரிவு மனதுக்கு சங்கடம் தரும் அதனாலே வளர்க்கவில்லை.
  கேள்வியும் பதிலும் அருமை.

  செல்லங்களுடன் குழந்தைகள் காணொளி கண்டால் பார்த்து சந்தோஷமாக இருந்தாலும் குழந்தைகளுக்கு ஏதாவது நோய் வந்துவிடுமோ! என்று கவலை வந்து விடும். (எவ்வளவு தான் நல்ல முறையில் தடுப்பு ஊசிகள் மற்றும் சுத்தம், சுகாதாரமாய் பார்த்துக் கொண்டாலும் பயம் தான் எனக்கு)

  அமெரிக்க சென்ற போது 'பெட் அணிமல்'விற்கும் கடைக்கு போனோம் மக்கள் எதை எல்லாம் மக்கள் விரும்பி வளர்க்கிறார்கள் என்று வியந்து போனேன்.

  பதிவு போட வேண்டும் அங்கு எடுத்த படங்களை.

  பாகிஸ்தான் கிரிகெட் வீரர் ஒருவர் சிங்கத்தை வளர்க்கிறார் என்று படித்தேன் செய்தியில்.

  பதிலளிநீக்கு
 21. கோவில் யானைகளை குழந்தைகள் மட்டும் அல்ல என் போன்ற வயதானவர்களும் ரசிப்போம்.
  கெடுதல் தரும் என்று நினைக்கும் சாதனங்களை தவிர்க்க வேண்டும், அதன் உற்பத்தியை நிறுத்திவிட வேண்டும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். ஆனால் தீமைகள் குறைவாக முன்பைவிட சிறப்பாய் வேலைசெய்யும் சாதனம் என்று புதிய கண்டுபிடிப்புகள் வந்து கொண்டுதான் இருக்கும் ,தவிர்க்க முடியாது.

  நீங்கள் சொல்வது சரிதான் இது ஒரு தொடர்கதைதான்.

  பதிலளிநீக்கு
 22. பொன்மொழிகள் அருமை.
  பொன்னியின் செல்வன் நிறைய பேர் எடுக்க முயற்சி செய்து கைவிட்டார்கள்.
  பார்ப்போம் வெற்றிகரமாக வரும் நாளை.

  பதிலளிநீக்கு
 23. //கோயில் காளைகள் கோயில்களுக்கு நேர்ந்து விடப்படுவதே திருவிழாக்களில் அவற்றின் மீது நகராவை வைத்துக் கொட்டிக் கொண்டு ஸ்வாமி புறப்பாட்டை அறிவிக்கத் தான். அந்தப் பழக்கமே இப்போதெல்லாம் இல்லை. சமீபத்திய மதுரைச் சித்திரைத் திருவிழாவில் நகரா வரவில்லை என கோமதி அரசு சொல்லி இருந்தார்கள்.//

  நான் பார்த்த அன்று வரவில்லை. தொலைக்காட்சியில் பார்த்த போது கோவில் முன்பு வரும் போது காளை முரசுகளை மாட்டிக் கொண்டு நின்றது.

  பதிலளிநீக்கு
 24. திவா கி திவா

  http://dindiguldhanabalan.blogspot.com/2013/02/If-I-get-back-to-life.html

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. போய்ப் பார்த்தேன். முன்னரும் படித்துக் கருத்துச் சொல்லி இருக்கேன்.

   நீக்கு
 25. & இந்தக் கேள்வியை செல்லப்பூனைப் பெயர் கொண்ட ஒரு நடிகையின் முன்னாள் காதலன் ஒருவரின் பெயரில் உலவும் இசைக் கவிஞர் ஒருவரிடம் கேட்டால், அவர் என்ன சொல்லுவார் என்று நினைத்து அச்சமுறுகிறேன்! //

  கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அட! உங்களுக்குத் தெரிஞ்சிடுச்சா!

   நீக்கு
  2. கீதா ரங்கன் - சும்மா இசையமைப்பாளர் தேவான்னு வச்சுக்குங்க. (நயனதாரா->பிரபுதேவா->தேவா... அவர் சும்மா அடிச்சு விட்டிருக்கார். கிசு கிசுல என்ன அட்வாண்டேஜ்னா எதுக்கும் யாராவது ஒருவர் பொருந்துவாங்க)

   நீக்கு
  3. ஆஹா - இவரும் கண்டுபிடிச்சுட்டாரே!

   நீக்கு
  4. அதாவது குருட்டுப் பூனை விட்டத்தில் பாய்ந்த மாதிரி!...

   ஆகா!...

   நீக்கு
  5. நீங்களும் கண்டுபிடிச்சுட்டீங்க!

   நீக்கு
  6. ஒன்றும் சொன்னதாகத் தெரியவில்லையே!

   நீக்கு
  7. இந்தக் கேள்வியை செல்லப்பூனைப் பெயர் கொண்ட ஒரு நடிகையின் முன்னாள் காதலன் ஒருவரின் பெயரில் உலவும் இசைக் கவிஞர் ஒருவரிடம் கேட்டால், அவர் என்ன சொல்லுவார் என்று நினைத்து அச்சமுறுகிறேன்....hahahahah.

   நீக்கு
  8. வந்தியத்தேவனா பாஹுபலியைப் போட்டால் எப்படி இருக்கும். இது அது வாரத்துக்கான கேள்வி.

   2, நீங்கள் கொடுத்திருக்கும் பொன்னியின் செல்வன் படம்
   எந்தப் பத்திரிக்கையில் எப்போது வந்தது.

   நீக்கு
  9. திரும்பிப்பார்க்க விழையும் நாள் எங்கள் திருமண நாள் தான். நாங்கள் இருவருமெ
   மிக சந்தோஷமாகப் பேசிச் சிரித்த நாள்.

   நீக்கு
  10. மிக மிக சுவாரஸ்யமான புதன். வாழ்த்துகள்.

   நீக்கு
  11. நன்றி, நன்றி, நன்றி வல்லிசிம்ஹன்!

   நீக்கு
 26. உங்கள் வாழ்க்கையில் நீங்க கடந்து வந்த நாட்களில், ஏதோ ஒரு நாளை, திரும்ப கொண்டுவரலாம் என்றால், நீங்கள் திரும்பக் கொண்டு வர நினைக்கின்ற நாள் எது? ஏன்? //

  ஒன்றா, ரெண்டா அந்த நாட்கள்! நிறையவே இருக்குதே! ஹா ஹா ஹா ஹா...

  சிலது என்னதான் நினைத்தாலும் அந்த நாள் மீண்டும் கிடைத்து அதை மாற்ற முடியாதே! போனது போனதுதானே. சில தவறுகள், அதனால் நேர்ந்த இழப்புகள். தவறைத் திருத்திக் கொண்டுவிடலாம். ஆனால் இழப்பு இழப்புதான்..

  பல நல்ல தருணங்கள் உண்டு. அவற்றை நினைத்து மகிழ்வுறுவதுதான். மீண்டும் அதே போன்று நடக்குமா என்றால் ம்ம்ம்ம்

  கீதா


  பதிலளிநீக்கு
 27. திரைப்படங்களில் வரும் ஆபாசக்காட்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது நமது கடமையா ?
  அல்லது அரசின் (தணிக்கைக்குழுவின்) வேலையா ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அடுத்த வாரத்துக்கான கேள்வியா கில்லர்ஜி?

   நீக்கு
  2. ஆபாசக் காட்சிகளுக்கு எதிர்ப்பு தெரிக்க வேண்டிய கடமை -

   நம்முடையதா?..
   தணிக்கைக் குழுவினுடையதா?...

   வாழைப்பழம் வேணாம் என்று சொல்லும் மந்திகளும் உண்டா!...

   ஆகவே,
   ஆபாசத்திற்கு எதிர்ப்பு சொல்ல வேண்டியது அப்படியான காட்சிக்கான நடிகையே!...

   நீக்கு
  3. ஹி ஹி பணம் பத்தும் செய்யும், படத்திலும் நடிக்க வைக்கும்!

   நீக்கு
 28. மதன் Style கேள்வி பதில்களை இத்தனை தாமதமாய் பார்த்தது என் தப்பு தான். ரொம்ப சுவாரசியமாய் இருக்கு💐

  பதிலளிநீக்கு
 29. வந்தியத் தேவன் பாத்திரத்திற்கு கார்த்தியை விட அதர்வா பொருத்தமாக இருக்க மாட்டாரா?
  ஸ்ரீவித்யா இருந்திருந்தால் அவர்தான் செம்பியன் மாதேவி.
  அநிருத்த பிரம்மராயர் பாத்திரத்தை யார் ஏற்றுக் கொள்வார்கள்?
  freak out personality ஆன பூங்குழலி பாத்திரத்திற்கு அனுஷ்கா செட் ஆக மாட்டார். அந்த கம்பீரம், எதிராளியின் புத்தியை மழுங்கடிக்கும் அழகு, கொஞ்சம் திமிர் அவையெல்லாம் கொண்ட அவருக்கு நந்தினி பாத்திரம் நன்றாக பொருந்தும்.
  கீர்த்தி சுரேஷ் குந்தவையாம். சுந்தர சோழர் பிக் பியாம். மதுராந்தக தேவனாக பிரசன்னாவை போடலாம்.அவர்தான் கௌரவம் பார்க்காமல் மூடிய பல்லக்கில் வருவார்.
  ஆழ்வார்கடியானாக யோகி பாபு..? சரி சரி ஏதோ சொல்லி விட்டேன், அடிக்கவெல்லாம் வரக்கூடாது. மீ எஸ்கேப்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சொல்வதை எல்லாம் சொல்லிவிட்டு ...... எஸ்கேப்பா !

   நீக்கு
 30. பூங்குழலியாக அனுஷ்!?...

  கோடியக்கரை உப்பங்கழியில் ஓடம் செலுத்த வேண்டியிருக்குமே... உப்புக் காற்று உடம்புக்கு ஒத்துக்குமா?...

  அலையாத்திக் காடுகள் ஆபத்தானதாச்சே!...

  ராத்திரிய கொள்ளிவாய்ப் பிசாசுகள் வேறு சிரித்துத் தொலைக்குமே!?...

  சஷ்டி கவசம் பாராயணம் செய்துகொள்ள வேண்டியது தான்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா ஹா ஹா அப்படிப்போடுங்க ! அனு ரசிகர் மன்றத் தலைவர் இங்கே வருவதற்குள் நம்ப ஓடிடலாம்!

   நீக்கு
  2. துரை செல்வராஜு சார்..யாரை கொள்ளிவாய்ப் பிசாசுகள் என்று சொல்லறீங்க. நான் அவர் ரசிகரா இல்லாத்துனால அவரை அப்படி முறைத்துப் பார்த்ததில்லையே

   நீக்கு
  3. // கோடியக்கரை உப்பங்கழியில் ஓடம் செலுத்த வேண்டியிருக்குமே... உப்புக் காற்று உடம்புக்கு ஒத்துக்குமா?...// அந்த வெயிட்டை, ஓடம் தாங்குமா என்றுதான் முதலில் கேட்கணும்! ஆஹா ஸ்ரீராம் இதையும் பார்க்கக்கூடாது!

   நீக்கு
  4. ஹாஹாஹா, கோடிக்கரையில் பூங்குழலி இரவு வேளைகளில் கொள்ளிவாய்ப் பிசாசுகளைப் பார்க்கத் தன்னந்தனியே போவாளே! அதைச் சொல்றார் துரை! நீங்க நாவலை ஒழுங்காவே படிச்சதில்லைனு புரியுது!:)))))

   நீக்கு
  5. பொன்னியின் செல்வன் ப்ராஜெக்டே வேண்டாம் எனும் கட்சி நான்! நிச்சயமாக அதில் அனுஷ் வேண்டாம். அவரை விட்டு விடுங்களேன்....

   நீக்கு
  6. பொன்னியின் செல்வன் நாடகம் போட்டு வசூல் பண்ணறாங்க. டிக்கெட் விலை மிக அதிகம். மேல்தட்டு மக்கள் மட்டும் பார்க்கறாங்கன்னு நினைக்கறேன்.

   பொன்னியின் செல்வன் போன்ற கதையைப் படித்து நாம் நிறைய கற்பனை செய்வோம். அதெல்லாம் படத்தில் கொண்டுவர முடியாது. அந்தப் படம் எடுப்பது வீண் வேலை. ஏதேனும் ஏமாந்த தயாரிப்பாளரை போண்டியாக்கும் வேலை. A, B ரசிகர்கள் நாவலைப் படித்திருப்பார்கள்... ஏமாற்றம் பெறுவார்கள். அந்தப் பேச்சிலேயே நிறையபேர் தியேட்டருக்கு வரமாட்டார்கள். C ரசிகர்கள்தான் தியேட்டர் வசூலுக்குக் காரணம். அதனால் ஆதித்தகரிகாலன் ஆபாசமான நடனம் நந்தினியோடு ஆடணும், முத்தக் காட்சிகள் வைக்கணும், நந்தினி குளிக்கும்போது ஆற்றில் ஆடை போய்விடுவதாகவும் ஆதித்த கரிகாலன் தன் உடையை அவருக்குக் கொடுத்து மீட்பதாகவும் கிளைக்கதைகள் வைக்கணும். சிரிப்புக்கு ஆழ்வார்க்கடியானை ஜோக்கராக சித்தரிக்கணும், உசிலைமணிபோல அசட்டுச் சிரிப்புடன். படம் ஓடணும் என்று பெரிய நடிகர்களை கதாநாயகனாக்கினால், பஞ்ச்ச்ச்ச்ச்ச் டயலாக் எழுதணும்.

   பா.வெ. சொல்லுவதுபோல் சுந்தரச் சோழர் பிக்.பி யாம். ஸ்ரீவித்யா செம்பியன் மாதேவியாம்...அப்புறம் கீர்த்தி சுரேஷாம். ஒவ்வொருவருக்கும் கனவுக் காட்சி, பாடல் காட்சிலாம் வைக்கவேண்டும். கதைக்கு இடம் இருக்காது.

   நீக்கு
  7. பயங்கரக் கற்பனையா இருக்கே!

   நீக்கு
  8. நெல்லைத் தமிழர் சொன்னாப்போல் எல்லாம் கற்பனைகளைக் காட்சியாகக் கொண்டு வரவே வேண்டாம். பொன்னியின் செல்வனிலேயே அத்தகைய காட்சிகள் கொட்டிக் கிடக்கின்றன. உதாரணமாக நாலாம் பாகம் முடிவில் புலியைத் தேடிக் கொண்டு செல்லும் நந்தினியும், மணிமேகலையும் ஏரியில் மூழ்குவார்கள். ஆதித்தகரிகாலனும், வந்தியத் தேவனும் தான் காப்பாற்றுவார்கள். நந்தினியிடம் வந்தியத் தேவனை ஆதித்த கரிகாலர் அனுப்பி வைப்பார். நந்தினியைத் தனியாகச் சந்திக்கணுமேனு பயத்தில்! :))))

   நீக்கு
  9. பொன்னியின் செல்வன் மேடை நாடகமாகப் பிரபலமான நாடகக்குழு ஒன்றினால் மேடையில் அறிமுகம் செய்யப்பட்டு பலத்த வரவேற்பைப் பெற்று, இங்கே திருச்சியிலும் வந்து போட்டார்கள். பிரம்மாண்டமான செட் எனக் கேள்வி. ஆனால் அப்போ நாங்க எங்கோ யாத்திரையில் இருந்ததால் திருச்சியில் வந்தப்போப் போக முடியலை!

   நீக்கு
 31. தவறான முடிவெடுத்த சில நாட்களுக்கு திரும்பச் சென்று, அதை மாற்றலாம் என்று தோன்றுகிறது. ஆனால், திரும்பச் செல்லும் பொழுது இந்த தெளிவு வர வேண்டுமே? பழைய சிந்தனையிலேயே இருந்தால்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வித்தியாசமான சிந்தனைதான். ஒருநாள்தான் திரும்ப வரும் என்றால் .... எடுத்த முடிவுகளை மாற்றி அமைக்க இயலாதே!

   நீக்கு
  2. பானுமதி சொல்லுவதும் சரியே! நான் ஒரு முறை எங்கள் குருவிடம் சொன்னப்போ அவரும் இதைத் தான் என்னிடம் கேட்டார். அந்த நாளைக்கு நீங்க போனால் அதே பழைய சிந்தனை தானே உங்களிடம் இருந்திருக்கும். மாற்றி அமைப்பது எனில் இப்போதைய நாளைப் பற்றியும், அதிலிருந்து நீங்கள் முந்தைய காலத்துக்கு வந்திருக்கீங்க என்னும் சிந்தனையும் இருக்கணுமே! என்று சொன்னார். நான் இதைத் தான் பதிலாகச் சொல்ல நினைத்தேன். அது ரொம்பவே தத்துப்பித்துவம் எனத் தோன்றியதால் சொல்லலை! :))))))

   நீக்கு
 32. நெல்லை தமிழன் கேட்ட கேள்வியை கொஞ்சம் மாற்றி, கனவு கன்னியர் என்று நடிகைகளை குறிப்பிடுகிறோம், ஆனால் கனவு கண்ணன்கள் என்று நடிகர்களை குறிப்பிடுவதில்லையே? ஏன் ? என்று கேட்க நினைத்தேன். நிறைய பெண்கள் தங்களுக்குப் பிடித்த நடிகர், பிடித்த நடிகையை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைப்பது போல் ஆண்கள் நினைப்பதாகவும் தெரியவில்லை. என் பெரிய அக்கா சொல்லுவார், ஜெய் சங்கரும், ஜெயலலிதாவும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று அவருடைய தோழி சாமியிடம் வேண்டிக் கொள்வாராம். கமலஹாஸன் வாணியை திருமணம் செய்து கொண்டபொழுது, நாங்களெல்லாம் சீ! போயும்போயும் இவளையா கல்யாணம் செய்து கொள்ள வேண்டும்? ஸ்ரீப்ரியா, ஜெயசுதா,ஜெய பிரதா இவர்களெல்லாம் இருக்கிறார்களே? என்று சிபாரிசு செய்தோம். சிவகுமார் ஜெய சித்ராவை திருமணம் செய்து கொள்வார் என்று ஆவலோடு எதிர்பார்த்தோம். சூர்யாவும், ஜோதிகாவும் மணந்து கொண்ட பொழுது என் மகளுக்கு மட்டற்ற மகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விடலைப் பட்டாளங்களாகிய நாங்களும் தேன் சிந்துதே வானம் கல்யாண மாலையில் முடியும் என்றே எதிர்பார்த்தோம்...

   நீக்கு
  2. சுவையான கற்பனைகள்தான். நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை !

   நீக்கு
  3. சிவகுமாரை வைத்துக் கூட கிசுகிசுவா?!!

   நீக்கு
  4. ஶ்ரீராம், எனக்குத் தெரிந்து சிவகுமாரின் அக்கா மகள் அவரையே நினைத்துக் கொண்டு கல்யாணம் செய்துக்க ஆசைப்பட்டுப் பின்னர் அது நடக்காமல் போகவே அவர் வீட்டிலேயே தன்னைத் தானே எரித்துக் கொண்டு உயிர் விட்டதாகப் படித்திருக்கிறேன். ஒரு பழைய காலத்திய கல்கியில் சில திரைப்படப் பிரபலங்களின் உண்மை வாழ்க்கைச் சம்பவங்கள் பற்றி ஒருத்தர் எழுதி இருந்தார். அதிலே படிச்சேன். அவர் பெயர், ஊரெல்லாம் சொல்லாமல் தான் எழுதி இருந்தார். ஆனால் பின்னால் சூரியா தன் நினைவுகளைக்கல்கியில் பகிர்ந்தப்போ இதைக் குறிப்பிட்டிருந்தார்.எங்கவீட்டிலேயே எங்களுக்கு ரொம்பப் பிடிச்ச அக்கா தீ விபத்தில் இறந்து போனாங்க என்பதாக!

   நீக்கு
  5. நான் கேள்விப்பட்டதில்லை.

   நீக்கு
  6. ஒரு இருபது வருஷத்துக்கு முந்தைய கல்கிகளில் தேடுங்கள். அல்லது சூர்யா எழுதிய "திரும்பிப் பார்க்கிறேன்!"???? என்னும் தலைப்பில் வந்த அவரது அனுபவங்களில் நிச்சயம் கிடைக்கும். சூரியா அதைக் குறிப்பிட்டிருந்தார்.

   நீக்கு
  7. //நிறைய பெண்கள் தங்களுக்குப் பிடித்த நடிகர், பிடித்த நடிகையை திருமணம் செய்து கொள்ள வேண்டும்// - வந்துவிட்டேன் நக்கீரன்.... வரியே குழப்புதே... பெண்கள் எதற்கு பிடித்த நடிகையைத் திருமணம் செஞ்சுக்கணும்னு நினைக்கறாங்க?

   நீக்கு
  8. சிவகுமாரின் அக்கா மகள் அவரை மணந்து கொள்ள வேண்டும் என்று தன் மனதிற்குள் ஆசையை வளர்த்துக் கொண்டதாகவும், தான் தூக்கி வளர்த்த குழந்தையை தன்னால் மணந்து கொள்ள முடியாது என்று சிவகுமார் மறுத்து விட, அந்தப் பெண்ணால் அவருடைய மண வாழ்க்கையில் பிரச்சனை வந்ததாம். சூர்யா பிறந்த பிறகு பிறந்த வீட்டுக்கு சென்ற சிவகுமாரின் மனைவி மறுபடியும் சென்னை வர மறுத்து விட்டாராம். சிவகுமார் மனைவியிடம் இனிமேல் பிரச்சினை வராமல் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று அவருக்கு உத்தரவாதம் அளித்து அழைத்து வந்தாராம். இந்த செய்தி சிவகுமாரின் மனைவி ஒரு பத்திரிகையில் சொல்லியிருந்தது.

   நீக்கு
  9. ஆமாம், பத்திரிகைகள், வாராந்தரிகள் படித்த காலத்தில் இவற்றை எல்லாம் படித்திருக்கிறேன். எனினும் அதையும் இங்கே சொல்லி இருந்திருக்கணுமோ? :))))))

   நீக்கு
 33. இந்தியாவிலேயே திரைப்பட நடிகர்களின் மேல் ஓர் ஈர்ப்பு இருக்கத் தான் செய்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் அது மிக அதிகமாக, அவர்களைக் கடவுள் போல் நினைப்பது ஏன்?

  இந்த நிலை மாறவே மாறாதா?

  ஒரு திரைப்படம் வெளிவந்தால் எல்லோரும் உடனே போய்ப் பார்த்துக் கருத்து/விமரிசனம் என்னும் பெயரில் எழுதி விடுகிறார்கள்.இது ஆர்வமா? திரைப்பட மோகமா?

  படத்துக்கான டிக்கெட் எல்லாம் இப்போது நூற்றுக்கணக்கில் இருப்பதாகச் சொல்கின்றனர். (ஹிஹிஹி, எனக்குத் தெரியாது, தியேட்டர்களுக்குப் போய்ப் படம் பார்த்து 30 வருஷம் இருக்கலாம்.) அவ்வளவு பணம் கொடுத்து டிக்கெட் வாங்கிப் படம் பார்ப்பதால் கிடைக்கும் நன்மை என்ன?

  ஒருத்தருக்கே250 ரூ டிக்கெட் என வைத்துக் கொண்டால் நான்கு பேர் கொண்டஒரு குடும்பத்துக்கு டிக்கெட் மட்டுமே ஆயிரம் ரூபாய் ஆகிவிடுகிறது. ஒரு மாசத்துக்கான எரிவாயுவுக்கான விலைனுவைச்சுப்போம்.(மானியம் இருக்கு இல்ல, அதான், வைச்சுக்கச் சொல்றேன்.)இதைத் தவிர்த்துப்போக வரச்செலவுகள், அங்கே ஏதேனும் வாங்கித் தின்றால் அந்தச் செலவுனு ஐநூறு ஆயிடும்னு நினைக்கிறேன். இவ்வளவு பணம் செலவு செய்து திரைப்படம் பார்ப்பது தேவையான ஒன்றா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நியாயமான கேள்வி. நானும் அப்படித்தான் நினைக்கிறேன்.

   நீக்கு
  2. ஒரு மாசத்துக்கான எரிவாயு நூறு ரூபாய் கூடும்போது மட்டும் லபோதிபோ என்போம்! என்னையும் சேர்த்துதான் சொல்றேன். ஆனால் நானும் திரையரங்கில் சென்று திரைப்படங்கள் பார்ப்பதை விட்டு 15 வருடங்கள் ஆகின்றன.

   நீக்கு
  3. எரிவாயுவுக்கான மானியம் சரியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுவிடுகிறது!

   நீக்கு
 34. மறுபடி வந்தாலும் வருவேன். இன்னிக்கு என்னமோ கேள்விகளாகவே நினைவில் வருது! ஏன்? புதன்கிழமை என்பதாலா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கேள்விக் கணைகளைத், தொடுங்க, தொடுங்க, தொடுத்துக்கொண்டே இருங்க!

   நீக்கு
 35. ஆழ்வார்க்கடியானா அப்புக்குட்டியை நடிக்க வெச்சா சொதப்புமா? கொஞ்சமாச்சும் பொருத்தமா இருக்குமா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அது யாருங்க அப்புக்குட்டி!

   நீக்கு
  2. யோகி பாபுவைச் சொல்றார் போல...!

   நீக்கு
  3. எனக்கு யோகி ஆதித்யநாத் மட்டும்தான் தெரியும்!

   நீக்கு
  4. யோகி பாபு சமீபத்திய பிரபல காமெடியன். பரட்டைத்தலையும் குண்டு உடல் வாகும் கொண்டவர்.

   நீக்கு
 36. ஒரு காலத்தில் படிப்பில் நன்றாகப் படிக்கணும், புரிந்து படிக்கணும் என்பதே முக்கியமாக இருந்து வந்தது. ஆனால் இப்போது? மதிப்பெண் வாங்குவதற்காகவே படிக்கின்றனர். இது நல்லதா?
  பாடங்களைப் புரிந்து கொண்டு படிப்பது நல்லதா? மதிப்பெண் குறைந்தாலும் பரவாயில்லை என இருப்பது நல்லதா?
  இந்தக் குழந்தைகள் படிக்கும் இந்தப் பாடங்கள்/பாடத் திட்டங்கள் அவர்கள் வாழ்க்கைக்குப் பயன் தரக் கூடியதா?

  இப்போது முதல் மதிப்பெண் பெற்றுத் தொலைக்காட்சி, தினசரிகளில் இடம் பெறும் குழந்தைகள் கல்லூரிப் படிப்பிலும் அவ்வாறு முன்னிலையில் இருப்பார்களா?/இருந்திருக்கிறார்களா?

  நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என அரசியல் கட்சிகள் அறிவித்துள்ளன. ஆனால் கடந்த இரு வருடங்களாக அரசுப் பள்ளி மாணவ, மாணவியர் பலரும் நீட் தேர்வு முறையில் மருத்துவப் படிப்புக்கான இடம் பெற்றுப் படிப்பதைப் பற்றிச் செய்திகள் வந்தன. யாரும் இதுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அரசே இலவசப் பயிற்சி முகாம்களை நடத்தவும் செய்கிறது.

  இந்நிலையில் நீட் தேர்வை ரத்து செய்வது/செய்ய வேண்டும் என்று கோருவது சரியா?

  பதிலளிநீக்கு
 37. பின்னூட்டங்கள் சுவாரசியம்

  பதிலளிநீக்கு
 38. காலையிலேயே ஒரு கேள்வி கேட்கலாம் என்று இருந்தேன்... பயணத்தில் இருப்பதால் எனது பதிவின் இனணப்பை மட்டும் கொடுக்க முடிந்தது... இப்போது என் கேள்வி :-

  ஒரு வேளை நாம் பொன்னியின் செல்வனில், அதாவது நம் வலைப்பதிவர்களுக்கு என்னென்ன வேடம் மற்றும் மற்ற பொறுப்புகள்...? (அடியேன் ஒப்பனை கலைஞன் + பாடல் வரிகள்...! ம்... ம்ஹீம்... ம்...! ஓடி விடு DD)

  ஸ்டார்ட் ம்யூசிக்...! நாட் நௌ... @ உழைப்பாளர்கள் தினம்... ப்ளிச்சூ...

  நன்றி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. DD தனது இந்தக் கேள்விக்கு பதிலை இப்போது யாரும் எழுதவேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறார். அவர் வியாபாரப் பயணத்தில் இருக்கிறார். அடுத்த வாரமே எல்லோரது பதில்களும் வரவேண்டும் என்று விரும்புகிறார்.

   நீக்கு
 39. வணக்கம் சகோதரரே

  இன்றைய கேள்வி பதில்கள் எப்போதும் போல் சூப்பர். பின்னூட்ட அலசல்கள் அதை விட அருமை. பொன் மொழிகளும் அருமை. தாமதமானலும் அனைத்தையும் படித்து மிகவும் ரசித்தேன்.பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 40. கேள்வி பதில்கள் அருமை.
  பொன்னியின் செல்வன் - என்னை பொறுத்தவரையில் படிப்பதில் இருக்கும் சுவாரசியம் பார்ப்பதில் இருக்காது என்று நினைக்கிறவன்.
  ஆனால் இந்த கால குழந்தைகளுக்கு (வாசிப்பில் ஆர்வமில்லாத குழந்தைகளுக்கு) இந்த புதினம் ஒரு படமாக வந்தால், அந்த கால வாழ்க்கை முறை,அரசியல் சதுரங்கம் எல்லாம் தெரிந்து கொள்ள முடியும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் கருத்து சரிதான். ஆனால் நாவலில் இருந்த நயம், சினிமாவில் வருவதற்கு வாய்ப்பு அதிகம் இல்லை. குழந்தைகள் சினிமாக்களிலிருந்து கற்றுக்கொள்வார்களா என்பதும் சந்தேகம்தான். நன்றி உண்மையானவரே!

   நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!