வியாழன், 16 மே, 2019

அந்தர் ஜெகா ஹை க்யா?

"அந்தர் ஜெகா ஹை க்யா?"

அப்பர் பெர்த் என்பதால் நிமிர்ந்து உட்கார முடியாது.  எனவே புத்தகம் படிக்கும் கதை நடக்காது.  இல்லைன்னாலும்....!!  

ஆனால் மேலே நமக்கு மட்டும் என்று ஒரு சிறு பல்ப் பொருத்தி இருந்தது.  தேவைப்படும்போது அதை ஆன் செய்து கொள்ளலாம்- பல்புக்கு அருகிலேயே சுவிட்ச்.  அதே போல ஒவ்வொரு இருக்கைக்கும் தனித்தனியே செல் சார்ஜ் செய்ய ஒரு மூன்று பின் இணைப்பு.

நான் கஷ்டப்பட்டு  எடுத்துப் போயிருந்த பவர் பேங்குக்கு ரயிலில் வேலை இல்லை.  பவர்  பேங்க் சம்பந்தமாக ஒன்று சொல்லவேண்டும்!  திரும்பிவரும்போது விமானத்தில் வரும் பட்சத்தில் பவர் பேங்க் அனுமதிக்க மாட்டார்கள் என்று க்ரூப்பில் சொன்னார்கள்.

க்ரூப்?

பயணத்திட்டம் தயாரானதும் இந்த எட்டு பேர்களை வைத்து ஒரு வாட்ஸாப் குழு ஆரம்பிக்கப்பட்டிருந்தது!ஆஹா...    20,000 mah பவர் பேங்க் வாங்கி அது உபயோகமில்லாமல் போகப்போகிறதா என்று ஆதங்கம் வந்தது.  பயணச் சித்தர் வெங்கட்டைத் தொடர்பு கொண்டேன்.  அவரிடம் கேட்டபோது 'ஹேண்ட் லக்கேஜில் அதைக் கொண்டுபோவதில் சிரமமில்லை..  இப்போது கூட திருச்சியிலிருந்து அப்படிக் கொண்டு வந்தேன்' என்றார்.  நெல்லைத்தமிழனோ ஒருமுறைக்கு இருமுறை விசாரித்து விடுங்கள் என்றார்.  அந்த ஏர்லைன்ஸ் காரனையே கேட்டு விடுங்களேன் என்றார்.

குழுவில் இருவர் "பவர் பேங்க் வேண்டவே வேண்டாம், நீ என்ன செல் வைத்திருக்கிறாய்?  அது எவ்வளவு நேரம் பேட்டரி தாங்கும்?  தேவை இல்லை" என்றார்கள்.  வேண்டாம் என்று வெளியில் எடுத்து வைத்து விட்டு  ஆனால் கிளம்பும் நேரம் கடைசி நிமிடம் அதையும் எடுத்துக் கொண்டுவிட்டேன்!

சென்றவாரம் வெளியிட்டிருந்த ரயில் படத்தில் புரியாத படம் ஒன்று இருந்திருக்கும்.  அது ஏஸி கேபினுக்குள் இருக்கும் ஒரு போர்டுக்கான பவர் சப்ளை பற்றிய படம்.  உள்ளே இருக்கையிலிருந்து வரும்போதே பாத் ரூம் வேகண்ட்டா, ஆள் இருக்கிறார்களா, என்று இதைப்பார்த்து அறியும் வண்ணம் உள்ள போர்ட்.  இது நிறைய ரயில்களில் கிடையாது என்றார் ஒரு மாமா!

இரவு எங்கள் ஆறு பேர்களில் ஐந்து பேர்களுக்குள் உறவுமுறைகள் பற்றிய ஒரு காரசார விவாதம் நடந்ததில் (என் பங்கு மிகவும் கம்மி) இரண்டுமணி நேரம் சென்றது.   

மறுநாள் காலை காபி சாயாவுக்கு வழி இல்லை.  ரயிலில் விற்றுக்கொண்டு வந்த டீ குடித்தோம்.  காஃபியும் முயற்சித்தோம்.  சகிக்கவில்லை!  நமக்கு நாக்கு நாலு முழம்..   வீட்டிலேயே குறை காணும் என் நாக்கு ரயிலில் வரும் காபியை எல்லாம் ஏற்றுக்கொள்ளுமா?  ஆனால் வேறு வழி?காலை ஏழேகால் மணி சுமாருக்கு இட்லி டிஃபன் கொண்டு வந்து கொடுத்தார்கள்.  இட்லியும் மிளகாய்ப்பொடியும்!  மிளகாய்ப்பொடியை சாம்பார் வாளியில் நிறைத்துக் கொண்டு வந்திருந்தது காட்சியாய் இருந்தது.  என் இளையவன் சப்பாத்தி, பூரிக்கெல்லாம் மிளகாய்ப்பொடி தொட்டுக்கொள்வான்.  மிளகாய்ப்பொடிப்பிரியன்.  அவன் நினைவு வந்தது!   எண்ணெயில் மிளகாய்ப்பொடியை முங்க வைத்து அந்தப் பெரிய வாளியில் கொண்டு வந்திருந்ததை படம் பிடிக்க மறந்து விட்டேன்.

காஃபி டீ சமோசா என்று பொழுது போய்க்கொண்டிருந்தது.  உறவுகள் பிரிந்து கிடந்ததில் பேச்சும் கம்மி. அந்தக் கல்லூரிப்பெண் சளைக்காமல் உறங்கி கொண்டிருந்தாள்.  அவ்வப்போது எழுந்து டீ, டிஃபன், முடித்து தொடர்ந்துறங்கினாள்!  நடுவில் அவள் கண்மலர்ந்திருந்த சில நிமிடங்களில்தான் அவள் கல்லூரிப்பெண், தோழியின் சகோதரி திருமணத்துக்குச் செல்வது என்றெல்லாம் தெரிய வந்தது.    "ஆண்ட்டி..  ஜபல்பூர் வரும்போது என்னை எழுப்பி விடுகிறீர்களா?  சுமார் ஐந்தரை மணிக்கு வரும்" என்று வேண்டுகோள் விடுத்து மீண்டும் கண் அயர்ந்தாள் அந்த குண்டு தேவதை.  அத்தை அவள் மேல் ஏனோ இனம் தெரியாத பிரியம் கொண்டுவிட்டார்.  "சரிம்மா...   நீ தூங்கு" என்று உறுதி அளித்தார்.

"பாவம்...  நல்ல பெண்"என்றார் எங்களிடம்.

ரயில் நெல்லூர். ஓங்கோல், விஜயவாடா, வாரங்கல், ராமகுண்டம், சிர்பூர்  என்று ஆந்திர எல்லையையே தாண்ட வெகு நேரம் பிடித்தது.  பாலார்ஷா வரும்போதுதான் மஹாராஷ்ட்ரா எல்லைக்குள் செல்கிறோம்.

எவ்வளவு நேரம் பாதி படுத்த நிலையில், அல்லது படுத்தேயிருப்பது?  எழுந்து உலாவத்தொடங்கினேன்.  டீ சமோசா விற்பனையாளர்கள் அவ்வப்போது அங்கு ஓரமாக இருந்த இருக்கையில் அமர்ந்து சிற்றோய்வு எடுத்துச் சென்று கொண்டிருந்தனர்.

பிரசாந்த் குழு வாளிகளுடன் வர, மதிய உணவுக்குத் தயாரானோம்.  நாங்கள் பேசியபடியே புளியோதரையும் (சோறு...  வெகு பொருத்தமாய் சாம்பாரு...பூரிக்கிழங்கு பாரு...என்று பாடவில்லை!)  தயிர் சாதமும்!  புளியோதரைக்குத் தொட்டுக்கொள்ள சிறிய காராபூந்தி பாக்கெட் ஒன்று.  தயிர் சாதத்துக்கு ஊறுகாய்.
சாப்பிட்டபின் அந்தப் பேப்பர் தட்டை மடக்கி கொண்டுபோய் குப்பைத்தொட்டியில் போட்டோம்.  குப்பைத்தொட்டியை அவ்வப்போது சுத்தம் செய்துகொண்டே இருந்தனர்.  எப்படி சுத்தம் செய்கிறார்கள்?

இப்படித்தான்! 


சரசரவென வந்த ஒரு பையன் சிறு குப்பைகளை எடுத்து கையில் கொண்டுவந்திருந்த ஒரு பேக்கில் போட்டுக்கொண்டான்.  பின்னர் இந்த குப்படித்தொட்டியைப் பிரித்தெடுத்தான்.  கதவைத் திறக்க சந்தோஷ் உதவ....  அப்புறம் பேக்கில் சேகரித்து வைத்திருந்த குப்பபைகளையும் இதே போல டிஸ்போஸ் செய்தான்!  இவை அனைத்தும் ஓடும் ரயிலில்...  ஸ்டேஷனில் அல்ல!

கழிவறையை ஒட்டி இருந்த கேபின் போன்ற இடம் ஸ்க்ரூ கழன்று ஆடிக்கொண்டிருக்க, அது என்ன என்று சந்தோஷிடம் கேட்டேன்.  இரண்டு பக்கமும் இருந்த அது கழிவறைக்கான தண்ணீர் சேகரிப்புக் கலனிருக்கும் இடம் என்று சொன்னார் சந்தோஷ்.

ஆமாம் யார் சந்தோஷ்?

இதோ இவர்தான்!  கேபின் கேர்டேக்கர்.

ரொம்ப முக்கியம்!

இவர் பீஹாரியாம்.  ஒன்பதாம் வகுப்பு வரை படித்தவர்.  அவர் அப்பா பஹுத் பீமாரீஸே படுக்கையில் விழ நடுச்சகோதரரான இவர் குடும்பத்தைக் காப்பாற்ற உழைக்கத் தொடங்கினாராம்.  அங்கு வேலை சரியில்லாமல் வெளிவேலைகளுக்குச் சென்று வந்தாராம்.  பாட்டில் தொழிச்சாலையோ ஏதோ ஒன்றில் முதலில் வேலை பார்த்தாராம்.  பின்னர் இந்த வேலை.  பெங்களூருவிலிருந்து பாட்னா வரை சென்று அப்படியே திரும்பி பெங்களூரு வரை இதே ரயிலில் இப்படி வரவேண்டும்.  ஒரு ட்ரிப்புக்கு இரண்டாயிரம் ரூபாய் சம்பளமாம்.  இந்த ரயில் ஓடும் நாட்களில் இதில் வேலை.  இது ஓடாத நாட்களில் இன்னொரு ரயில் மார்க்கம் சொன்னார்.  அதில் வேலை.  வார ஒய்வு , விடுப்பு என்பது கிடையாது.  பயணத்திலேயே அவ்வப்போது கிடைக்கும் இடைவேளையில் இரண்டு கேபினுக்கு இடையே இருக்கும் மூடும் பெட்டி போல இருக்கும் படுக்கையில் படுத்து ஓய்வெடுத்துக் கொள்கிறார்.

திருமணமானவராம்.  மூன்று வயதுக்குழந்தை உண்டு.  ஆறு மாதங்களுக்கொருமுறை ஊர் சென்று குடும்பம் பார்த்து வருவாராம்.  முப்பத்திரண்டு வயது.  இவர் சகோதரர்கள் உடல்நலம் குன்றி இருக்கும் தந்தையைப் பார்த்துக்கொள்ள மறுக்கிறார்கள். ஆனால் இவரிடமிருந்து அவ்வப்போது பயன்பெற்றுக் கொள்கிறார்கள்.

பீகாரில் படிப்பறிவு கம்மியாம்.  ஏழ்மை மிக ஜாஸ்தியாம்.  தொழிற்சாலை எல்லாம் ஒன்றும் கிடையாதாம்.  அப்படித் தொழிற்சாலை வைத்தால் அதற்கு மின்வசதி செய்து கொடுக்க அரசாங்கத்தால் முடியாதாம்.

முந்தைய ஆட்சிகளில் கொலை, கொள்ளை வழிப்பறி சர்வ சாதாரணமாம்.  கையில் வைத்திருக்கும் நூறு ரூயாயைப் பிடுங்க கத்தியால் குத்தி விட்டுச் சென்றுகொண்டே இருப்பார்களாம்.  நிதிஷ் வந்த பிறகு இதெல்லாம் ரொம்பவே குறைந்திருக்கிறதாம்.  ஆனாலும் பெரும்பாலான மக்கள் வேலைவாய்ப்பு, பிழைப்பு தேடி தென் மாநிலங்களுக்குதான் அதிகம் வருகின்றனராம்.  விளை நிலங்களுக்கு மேலும் சில வார்த்தைகளுக்கெல்லாம் பீஹாரியில் சில வார்த்தைகள் சொன்னார்.  மறந்து விட்டது.

வல்லிம்மா படம் நிறைய கேட்டாங்கதான்...   அதுக்காக இப்படியா!!!!

இடார்சியிலோ பிபார்யாவிலோ வண்டி சற்றே நின்றபோது சந்தோஷ் எங்கள் கோச் கதவைத் திறந்து பார்த்த பாவம்..  ஒரு ரயில்வே ஊழியர் - அல்லது அதிகாரி - ஓடிவந்து பெட்டியில் ஏறிக்கொண்டார்.

"கேபின் மே ஜெகா ஹை க்யா?" என்றார் என்னிடம்.  நிறைய இடம் இருந்தது.  ஏன் சொல்லவேண்டும்?  நான் மண்டையை தெரியாது என்கிற பாணியில் ஆட்டினேன்.  அதற்கு  அவருக்கு இல்லை என்கிற அர்த்தம் தெரிந்திருக்கும் போலும்!  கண்ணாடி போட்டுக் கொண்டு  எங்கேயோ பார்த்த முகமாய் இருந்தார்.  என்னைத் தற்சமயம்  ஏமாற்றிக் கொண்டிருக்கும் சஜ்ஜத் நினைவு வந்தது எனக்கு!    ஒரு ஹிந்தி செய்திப் பத்திரிகையைத் திறந்து வைத்துக்கொண்டு அதன் செய்திகளில் ஆழ்ந்தார்.  நடுவில் ஏதோ பேச்சு வந்தபோது அவர் யார் என்று கேட்டேன்.  ஸ்டேஷன் மேனேஜர் என்றார்.  அப்படி ஒன்று இருக்கிறதா என்ன?!  ஸ்டேஷன் மாஸ்டரைதான் அப்படிச் சொல்கிறாரோ என்னவோ...  நானும் மாமாவும் எடுத்த செல்பியில் இருந்தவரை ஜூம் செய்து....!

காசிப் பயணக்கட்டுரைக்கும் இவருக்கும் என்ன தம்பி சம்பந்தம்? என்று கீதாக்கா கேட்பது போலிருக்கிறது. 

வண்டி மெதுவாக நிற்பது போல ஸ்லோ ஆகவும் 'என்ன ஸ்டேஷன் வருகிறது' என்று அவரிடம் கேட்டேன்.  மதன்மஹால் என்றார்.  

மதன்மஹால் என்றதும் எனக்கு மைக்கேல் மதன காமராஜன் நினைவுக்கு வந்தது.

நன்றி இணையம்.

ஆமாம், ஏன் அதற்கு அப்படி ஒரு பெயர்?

"மதனமாளிகையில்...   மந்திர மாலைகளாம்...   உதய காலம்வரை....உன்னத லீலைகளாம்...."

======================================================================================================


மனதில் ஈரமாகவே இருப்பதால் மறுபடியும் பகிர்ந்தாலும் தப்பில்லை...  2013 இல் ஃபேஸ்புக்கில் ஷேர் செய்தது!


"நினைவோ ஒரு பறவை...   விரிக்கும் அதன் சிறகை... " 

====================================================================================================

செய்தித்தாளில் பாஸிட்டிவ் செய்திகளுக்காக மேய்ந்தபோது படித்த ஒரு செய்தி.    ஹிந்தி ஒழிக ஹிந்தி ஒழிக என்று கோஷம் போட்டது ஒரு காலம்.  இப்போது கட்டிடம் கட்டும் துறையில் 80 சதவிகிதத்துக்கும் மேலாக வடமாநிலத்தவர் வேலை பார்க்கும் சூழலில் மேஸ்திரிகளும், பொறியாளர்களும் தமிழ்நாட்டில் இருந்து கொண்டே ஹிந்தி கற்கிறார்களாம்.  அவர்களை வேலை வாங்கவேண்டுமே!

"காலம் செய்த கோலமடி.. கடவுள் செய்த குற்றமடி...   கடவுள் செய்த குற்றமடி..."

=======================================================================================================


நாம் செய்யும் ஒவ்வொரு நல்ல‍ காரியத்தின் புண்ணியம் எத்த‍னை தலைமுறைக்கு சென்று சேரும் சேரும் என்பது குறித்து பெரியவர்கள் சொல்லி கேட்ட வரையில் :

பட்டினியால் வருந்தும் ஏழைகளுக்கு உணவளித்தல் …….. 5 தலைமுறைக்கு.

புனித‌நதிகளில் நீராடுதல்=====> 3 தலைமுறைக்கு

திருக்கோயிலில் தீபம் ஏற்றுதல் =====> 5 தலைமுறைக்கு.

அன்னதானம் செய்தல் =====> 3 தலைமுறைக்கு.

ஏழைப்பெண்ணுக்கு திருமணம் செய்வித்தல் =====> 5 தலைமுறைக்கு.

பித்ரு கைங்கர்யங்களுக்கு உதவுவது =====> 6 தலைமுறைக்கு.

திருக்கோயில் புனர்நிர்மாணம் =====> 7 தலைமுறைக்கு.

அனாதையாக இறந்தவர்களுக்கு அந்திம கிரியை செய்தல்=====> 9 தலைமுறைக்கு.

பசுவின் உயிரைக் காப்பாற்றுவது =====> 14 தலைமுறைக்கு.

முன்னோர்களுக்கு கயாஷேத்திரத்தில் பிண்டம் அளித்து திதிபூஜை செய்தல் =====> 21 தலைமுறைக்கு.

நாமும் முடிந்தவரை நல்ல‍ காரியங்கள் செய்து நமக்கும் நமது வருங்கால தலைமுறைக்கும் புண்ணியம் சேர்ப்போம்

நமது பிந்தைய தலைமுறையாவது நன்றாக இருக்கட்டும்.


நல்ல‍ காரியங்கள் செய்யும்போது அதற்கான புண்ணியம் எப்ப‍டி நமது தலை முறையினருக்கு சென்று சேருகிறதோ அதேபோல் நாம் செய்யும் தீய செயல்களுக்கான பாவங்களும் நமது தலைமுறையினருக்கு சென்று சேரும் என்பதை மறக்காதீர்.
 


படூர் ரங்கன் - ஃபேஸ்புக்கில்  


"ஆசை கோபம், களவு கொள்பவன், பேசத் தெரிந்த மிருகம்.., அன்பு நன்றி, கருணை கொண்டபவன், மனித வடிவில் தெய்வம்.., இதில் மிருகம் என்பது, கள்ள மனம், உயர் தெய்வம் என்பது, பிள்ளை மனம்.."
================================================================================================================================

லாச ரா சிறுகதைகள் இரண்டு தொகுதிகள் வாங்கினேன்.  ஒன்று ஜீவி ஸாரிடம் இருக்கிறது.  சமீபத்தில்  அவர் தளத்தில் அவர் கூடச் சொல்லி இருந்தார்.இன்னொரு தொகுதி என் அக்காவிடம் இருக்கிறது.  அக்கா ஒரு புத்தகப்புழு!  கையில் கிடைக்கும் புத்தகம் எல்லாம் வாசிப்பார்.  வீட்டுக்கு வந்தால் புத்தக அலமாரியைச் சுற்றியே அவர் நடமாட்டம் இருக்கும்.

லா ச ரா சிறுகதைகள் படித்துக் கொண்டிருந்த அவர் இரண்டு நாட்களுக்கு முன் தொலைபேசினார். 

"ஸ்ரீ...  இந்தப் புத்தகத்தைப் படித்தது போதும்டா...   கொண்டு வந்து கொடுத்துடறேன்.  படிக்கப் படிக்க தொண்டைக்குப் பக்கத்தில் ஏதோ சங்கடம் செய்கிறது.  வயிற்றில் ஏதோ சங்கடம் செய்வது போல..  அழுகை வருகிறது போலவும் இருக்கிறது..  ஏதோ புரிவது போல இருக்கிறது..   அது இல்லை வேறு என்று நினைவு எங்கோ ஓடுகிறது... கதையை நிறுத்தி விடுகிறேன்...  யோசனைகள் ஓடுகின்றன...  அப்புறம் விட முடியவில்லை...  மறுபடியும் படிக்கவும் ஆர்வம் வருகிறது...  கஷ்டமாய் இருக்குடா...   ஒருவேளை உசந்த எழுத்து என்றால் இதுதானா?  தெரியவில்லை..   ஆனால் படிக்கவே வேண்டாம் என்று தோன்றுகிறது...  என்னிடம் அந்தப் புத்தகம் இருக்கும் வரை படிக்காமலும் இருக்க முடியாது என்று தோன்றுகிறது...  கஷ்டமாய் இருக்குடா..."

நான் இன்னும் சென்று புத்தகத்தை வாங்கவில்லை!

இந்த உணர்வு வெளிப்பாடு என் அக்காவிடமிருந்து நான் எதிர்பாராதது.  நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

உறவுகள் தொடர்கதை...   உணர்வுகள் சிறுகதை....
=========================================================================================

229 கருத்துகள்:

 1. ஆஆஆஆவ்வ்வ்வ் அதிரா லாண்டிங்ங்ங்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஆஆ உங்க வாலைப் பிடிக்கத்தானே வந்தேன் நழுவிட்டீங்களே எதிர்பார்த்தேன்

   கீதா

   நீக்கு
  2. குட்மார்னிங் அதிரா... உங்களை இங்கு இன்று முதலில் நான் எதிர்பார்த்திருந்தேன் என்றால் நம்புவீர்களா?

   நீக்கு
  3. நான் முதல்ல இங்க வந்தாச்சாக்கும் இஞ்சி இடுப்பழகியால உங்களியத் தள்ளி விட முடியுமா சொல்லுங்க!! ஹா ஹா

   கீதா

   நீக்கு
  4. ஹா ஹா ஹா கீதா... பயத்தில வாலைச் சுருட்டி எல்லோ வச்சிருந்தேன்:)

   ஆஆஆ அதெப்பூடி என்னை இன்று எதிர்பார்த்தீங்க?:).... நான் அஞ்சுவிடம் சொன்னேன், நாளைய ஶ்ரீராம் போஸ்ட்டுக்கு நாங்க போகாமல் ஒளிச்சிருந்து பார்க்கோணும் அவருக்கு கோபம் வருதோ என... என்று ஹா ஹா ஹா

   நீக்கு
  5. அனைவருக்கும் குட் மோனிங்கூஊஊஊ:)

   நீக்கு
  6. பாருங்க நானும் ஸ்ரீராமுமே எதிர்பார்த்தோம்!! நீங்க இங்க வ்னது குதிப்பீங்கனு அதுக்காவே நான் தயாரா இருந்தேனாக்கும்!!
   எப்படினு கேட்டா அதெல்லாம் ரகசியம்!! ஹா ஹா ஹா

   கீதா

   நீக்கு
  7. //ஆஆஆ அதெப்பூடி என்னை இன்று எதிர்பார்த்தீங்க?:).... நான் அஞ்சுவிடம் சொன்னேன், நாளைய ஶ்ரீராம் போஸ்ட்டுக்கு நாங்க போகாமல் ஒளிச்சிருந்து பார்க்கோணும் அவருக்கு கோபம் வருதோ என... //

   நேற்றைய அரட்டை காரணம். அதில் என் பெயர் இரண்டு மூன்று முறை இழுக்கப்படும் நான் காணோம் என்பது மனதில் பட்டிருக்கும்!!! போதாதற்கு தவறான பப்ளிஷிங் வேறு...!!!

   வராவிட்டால் கோபம் எதற்கு?

   நீக்கு
  8. ஹா ஹா இஞ்சி இடுப்பழகியால ஓட முடியல்ல:)... எங்கே எங்கட ரிபிள்... ஆவ்வ்வ். வாணாம் நெல்லைத் தமிழன் தம்பி( கீதாட முறையில் சொன்னேன்):))) ஐ இன்னும் காணம்:)...
   கீசாக்கா தலை மறைவு...
   சரி இனி போஸ்ட் படிச்சிட்டுத்தான் பேசுவேன் பிக்க்க்க்கோஸ் மீ ரொம்ப நல்ல பொண்ணு:)

   நீக்கு
  9. //பாருங்க நானும் ஸ்ரீராமுமே எதிர்பார்த்தோம்!! //

   ஓ... அப்படிப்போடுங்க கீதா... நீங்களும் எதிர்பார்த்தீங்களா? அட...

   நீக்கு
  10. எதுக்கு ஶ்ரீராம் ஒளிச்சிருக்கிறார் என யோசிச்சேன் ஆனா எங்காவது போயிருந்தால் கீதா எப்படியும் ஓரிடத்திலாவது சொல்லி விட்டிருப்பா ஹா ஹா ஹா அதனால நீங்க ஒளிச்சிருந்து வோச்டிங் எனத் தெரியும்:)...

   //வராவிட்டால் கோபம் எதற்கு?///
   சே சே கோபம் எனில் சீரியசாக இல்லை ச்ச்ச்சும்மா வம்புக்கு... கெள அண்ணன் போஸ்ட்டுக்கு வந்தீங்க இன்று எங்கே போயிட்டீங்க என:)

   நீக்கு
  11. நீங்க இருவரும் எதிர்பார்க்கிறீங்க என தெரிஞ்சே வந்தேன்:) பிக்கோஸ் மீ ஞானி எல்லோ:)..

   நீக்கு
  12. ஆமாம் ஸ்ரீராம்!! மேலேயே சொல்லிட்டேன்...எதிர்பார்த்தேன் அப்படினு!! ஹா ஹா

   ஸ்ரீராம் நமக்கு இந்த ரகசியம் எல்லாம் கண்டுபிடிக்கும் கில்லாடிகளாக்கும்னு பூஸாருக்குச் சொல்லிக்குவோம்!! ஹிஹிஹி

   கீதா

   நீக்கு
  13. ஆனா எங்காவது போயிருந்தால் கீதா எப்படியும் ஓரிடத்திலாவது சொல்லி விட்டிருப்பா//

   ஹிஹிஹி நாங்க சொல்லமாட்டோமே!!

   நாங்க சொல்லாமலேயே கண்டுபிடிக்கும் ஞானிகளாக்கும் அதுவும் ஸ்ரீராம் இப்ப காசிக்கு போய் வந்திருக்காராக்கும்!!

   கீதா

   நீக்கு
  14. //அதுவும் ஸ்ரீராம் இப்ப காசிக்கு போய் வந்திருக்காராக்கும்!!//

   ஹா... ஹா... ஹா... காசி சென்று வந்தால் ஓசியில் ஞானிப் பட்டம்!

   நீக்கு
  15. //எதுக்கு ஶ்ரீராம் ஒளிச்சிருக்கிறார் என யோசிச்சேன் ஆனா எங்காவது போயிருந்தால்//

   வேறு சில வேலைகள்... மேலும் மதியங்களில் கணினிமுன்னர் உட்கார முடியாத அளவுக்கு வெயில், அனல்!

   நீக்கு
 2. பதில்கள்
  1. இரண்டாம் மூன்றாம் இடங்களோடு நிறுத்திக் கொண்டமைக்கு நன்றி!!!!

   நீக்கு
  2. சே சே நான் ஓவரா எல்லாம் ஆசைப்படுவதில்லை:) கீதாவுக்கு விட்டுக் குடுத்தேனாக்கும்:) ஹா ஹா ஹாஆஆ

   நீக்கு
 3. இனிய காலை வணக்கம் எல்லோருக்கும்

  இட்லியும் மிளகாய்ப்பொடியும், தயிர்சாதமும் தான் முதலில் கண்ணில் பட்டது ஹா ஹா ஹாஹ்

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஆஆ கீதா ஏன் நீங்க லேட்டூஊஊஉ எலாம் வைக்கேல்லையோ.... ஹா ஹா ஹா

   நீக்கு
  2. இனிய காலை வணக்கம் கீதா... நீங்க நம்ம கட்சி!

   நீக்கு
  3. ஹலோ நான் லேட்டில்ல எபிய ப்ரெஸ் பண்ணும் போதே வராம சுத்திச்சு அப்பவே நினைச்சே ரொம்ப வெயிட்டான நம்ம அப்பாவி பூஸாரை தாங்கி வருதுனு!!! அதான் என்னாலு உள்ள நுழைய முடியலைனு!! ஹா ஹா ஹா

   கீதா

   நீக்கு
 4. சந்தோசம் பொயிங்குதே சந்தோசம் பொயிங்குதே :)... ஹையோ பாட்டுப் பாடிட்டேன் ஆனா போஸ்ட் என்ன எனத் தெரியல்லியே:)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. போஸ்ட் படித்துவிட்டு கருத்து மழை பொழிவீர்கள் என்று நம்புகிறேன் அதிரா... இப்போதா? அப்புறமா? முந்தைய பயணப்பதிவுகள் படித்தீர்களா?!!!!

   நீக்கு
  2. போஸ்ட் என்ன எனத் தெரியல்லியே:)//

   ஹா ஹா ஹா அது. நாங்கலாம போஸ்ட் பார்த்து அதுல ஒரு வரியேனும் சேர்த்துத்தான் குதிப்போமாக்கும் ஸோ மீதான் ஃபர்ஸ்டு, செகண்டு தேர்டு!!! ஹா ஹா ஹா

   கீதா

   நீக்கு
  3. இன்Dஉ கருத்து மழை நிறையப் பொழிவதென கங்கணம் கட்டியிருக்கிறேன்ன்ன்... இப்போ முடியாது நாளைக்கு கொம்பியூட்டரூடாக வாறேன்ன்ன்..
   முதல்ல என் செக் க்கும் துவக்கு காட்டி:) மிரட்டிக் கூட்டி வரோணும்:)...
   இதுக்கு மேலயும் அரட்டை பண்ணினால் ஆரிடமாவது அடி வாங்கிடுவேன்:)... அதனால இன்று போய் நாளை வாறேன்ன்ன்:)...
   கீதா ... பந்திக்கு முந்தோணுமாக்கும்:) என்ன கறி எண்டெல்லாம் விசாரிச்சா இடம் போயிடும்:)..

   நீக்கு
  4. சென்று நித்திரை கொண்டு பின்னர் வாருங்கள் அதிரா...

   நீக்கு
  5. நித்திரை கொண்டு பின்னர் வாருங்கள்//

   ஹா ஹா ஹா ஹா! ஆஹா நித்திரைய கொண்டு வரச் சொல்லிட்டீங்களே! அப்புறம் அதிரா எஸ்கேப் ஆயிடுவாங்க... அதிராவோடும், அவங்க வாலைப் பிடிக்க வரும் ஏஞ்சலோடும் கும்மி அடிக்கணுமே!!! ஹா ஹா

   கீதா

   நீக்கு
  6. நித்திரை கொண்டு வந்துதான் கொடுத்திட்டார் போல... அம்மாடி 122 கமெண்ட்ஸா? பதில் சொல்லணுமா? ஃபியூ.... மயக்கமோ தூக்கமோ எதுவோ ஒன்று கண்களை அசத்துகிறது கீதா!

   நீக்கு
  7. ஶ்ரீராம் நீங்க வரவரக் கெள அண்ணன் போல வாறீங்க:), அவர் இப்போ உங்களைப்போல மாறி சுடச்சுடப் பதில்கள் ஒழுங்காகக் குடுப்பதால அவர் 200 ஐத் தொடுகிறார்:)....
   கெள அண்ணனுக்கு நான் பேசினேன் எல்லோ:) அதில இருந்து அவர் சுறுசுறுப்பாகிட்டார்ர்ர்ர்ர்ர்ர்ர் ஹா ஹா ஹா:)..

   பதில் சொல்வதும் கடமையே என நினைச்சுச் சொல்லாமல் கொமெண்ட்ஸ் உடன் உருண்டு பிரண்டூஊஊ கலந்து சொன்னால் இன்னும் மக்கள் வரவு கூடும்:)....

   நீக்கு
 5. இல்லைன்னாலும்....!! //

  ஹா ஹா ஹா அதானே கீழ இருந்த அந்தச் சின்னப் பொண்ணு என்ன பண்ணுது பதிவுக்கு கொஞ்சம் தேத்த முடியுமானு யோசனையிலேயே போயிருக்குமே!! ஹிஹிஹிஹி..

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //தானே கீழ இருந்த அந்தச் சின்னப் பொண்ணு என்ன பண்ணுது பதிவுக்கு கொஞ்சம் தேத்த முடியுமானு//

   ஹா... ஹா... ஹா.. ஆனாலொரு நாள் ரெண்டு நாள் என்றால் அப்பிரவாயில்லை... பத்து நாள் ஞாபகம் வச்சுக்கணுமே...!!! பத்து நாட்கள் மட்டுமா? நம்ம சோம்பேறித்தனத்துக்கு உடனே எழுத முடியா விட்டால் எத்தனை நாட்களோ!!!

   நீக்கு
 6. அனைவருக்கும் காலை வணக்கம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காலை வணக்கம் பானு அக்கா... லொக் லொக் தேவலை ஆகிவிட்டதா?

   நீக்கு
 7. பதில்கள்
  1. இன்னுமா?

   ஜலதோஷம் இருமல் எல்லாம் தானாகவே ஏழு நாட்களில் சரியாகி விடும். இல்லாவிட்டால் மருந்து சாப்பிட்டால் ஒரு வாரத்தில் குணமாகிவிடும் என்பார்களே...

   அச்சச்சோ...

   நீக்கு
  2. பானுக்கா என்னக்கா இன்னும் குறையவில்லையா? கொஞ்சமானும் தேவலாமா?!!

   கீதா

   நீக்கு
 8. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம் மற்றும் அனைவருக்கும். நீங்க முதுகைக்
  காட்டி நிற்பதுதான் நிறையப் படங்களா ஹாஹாஹா. நன்றி மா.நீங்க தானா அது.

  அந்தப் பொண்ணு அத்தையைக் கட்டிப்போட்டு விட்டதா.சரிதான்.

  இட்லி மிளகாய்ப் பொடி யம் யம்
  அதென்ன புளியோதரை இத்தனூண்டு கொடுத்திருக்கிறார்கள்.
  தொட்டுக்க வறுவல் கொடுக்கக் கூடாதோ.

  ஆற்றுக் கவிதை அழகு. காலம் கடந்து விடுகிறது
  நினைவுகள் தங்கி விடுகின்றன.
  நான் நகருகிறோம் ,
  நினைவுகளும் கூடத்தான் பயணிக்கின்றன.
  எங்கள் வீட்டில் சென்னையில் ஒரு புதுப்பாப்பா வரப் போகிறது.
  இனி மகிழ்ச்சி கூடும் என்று நினைக்கிறேன்.

  குப்பைகளை ட்ராக்கிலா கொட்டுகிறார்கள். அடப்பாவமே.
  டாய்லெட் ஆக்குபைடா இல்லையா என்று தெரிந்து கொள்ள
  அறிவிப்பு வைத்திருப்பது நல்லது.

  பாவம் அந்த சந்தோஷ். ஆறு மாதங்களுக்கு ஒருமுறைதான்
  வீட்டுக்குப் போகிறாரா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க வல்லிம்மா... கலந்து கட்டி விமர்சனம் எழுதிடீங்க.. திரும்பி நிற்பது நானில்லை. சந்தோஷ். புளியோதரை இன்னும் கேட்டால் கொடுப்பார்கள். நான் கேட்கவில்லை. பயணம்... அதிலும் ரயில் பயணம்... இன்னும் ஒன்பது நாட்கள் பயணம் நல்லபடிபோகவேண்டும்... எனவே நாவைக் கட்டுப்படுத்தியே வைத்திருந்தேன். சென்னையில்புதுவராவா? யார் அது? வாழ்த்துகள்.

   நீக்கு
  2. வல்லிம்மா... உங்க சகோதரர் முரளி அவர்கள் படத்துடன் ஒரு திருமண போட்டோ முன்பு பகிர்ந்திருந்தீர்களே... அதுவா?

   நீக்கு
  3. அட! வல்லிம்மா சென்னையில் புது பாப்பாவா சூப்பர்!! வீடே நிறைந்துவிடும்! குதூகலிக்குமே!!!

   ஸ்ரீராம் மற்றும் அனைவருக்கும். நீங்க முதுகைக்
   காட்டி நிற்பதுதான் நிறையப் படங்களா //

   ஆஹா இன்று அதிராவுக்கு இன்னொன்று கிடைத்துவிட்டதே!!! இதுதான் ஸ்ரீராம்னு நான் சொல்லக் கூடாதுனு நினைச்சேன்....வல்லிம்மா இப்படிச் சொல்ல ஹா ஹா ஹா ஹிஹிஹீ ஹூஊ அதிரா இதை வைத்துக் கொண்டு அப்பாவியாக கொஞ்ச நாள் ஓட்டிக் கொண்டிருப்பார்!!! அப்பாவி!!!!! ஹா ஹா ஹா ஹா

   கீதா

   நீக்கு
  4. சந்தோஷ் முன்பக்க படமும் போட்டிருக்கிறேனே.. பார்தாலேயே அது அவர் பின்பக்க போஸ் என்று தெரிகிறதே...!

   நீக்கு
  5. அன்பு நெல்லைத்தமிழன், ஸ்ரீராம் ஆமாம், தம்பி முரளி அகத்தில் தான் புதுப்பாப்பா
   இன்னும் 3 வாரத்தில் வந்துவிடும்.
   திருமண படத்தில் ,அதாவது மகளின் திருமண படத்தில் நின்று கொண்டிருப்பான்.

   நீக்கு
  6. Oh, Sriram, is that Santhosh. okay. I thought you had boken your vows ,not to show your face haha.

   நீக்கு
 9. காலை வணக்கம்... இன்றும் இரயில் யாத்திரையா? குளிக்க வாய்ப்பில்லையா?

  வாளியில் மிளகாய்ப்பொடி எண்ணெயா? இட்லியாவது தேவையான அளவு கொடுத்தாங்களா? இப்போல்லாம் அடுப்பு எடுத்துக்கொண்டு செல்லக்கூடாதாமே! அப்புறம் எப்படி இட்லி?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் நெல்லை... ரயிலில்தான்! குளிப்பதா? என் மாமா ஒருவர் குளித்தார்! நான் ஊ..ஹூம்! ஏற்கெனவே செய்து வைத்திருந்ததைத்தான் கொடுத்துக்கொண்டிருந்தார்கள்.

   நீக்கு
  2. நெல்லை ரயிலில் எப்படிக் குளிப்பது?!! ஆஆஆஆஆஆஆ....

   கீதா

   நீக்கு
  3. ஒரு விஷயம் சொன்னா 'ஆராயப்படாது' கீதா ரங்கன். நான் தினமும் குளிப்பவன், அது இரயில் பிரயாணமாக இருந்தாலும் சரி, நெடிய விமானப் பயணமாக இருந்தாலும் சரி (அதாவது நிற்கும் ஏர்போர்ட்டில் ஹாஹா)

   நீக்கு
  4. நெல்லை ஏர்போர்ட்டில், ரயில்வே ஸ்டேஷனில் இருக்கும் குளியல் அறையில் குளிக்கலாம் நெல்லை. ரயிலில்!!!?? அதான் ஓசிச்சேன்...

   கீதா

   நீக்கு
  5. ///நெல்லைத்தமிழன்16 மே, 2019 ’அன்று’ முற்பகல் 10:43
   ஒரு விஷயம் சொன்னா 'ஆராயப்படாது' கீதா ரங்கன். நான் தினமும் குளிப்பவன், அது இரயில் பிரயாணமாக இருந்தாலும் சரி, நெடிய விமானப் பயணமாக இருந்தாலும் சரி (அதாவது நிற்கும் ஏர்போர்ட்டில் ஹாஹா)///

   ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. நான் வீட்டால் வெளிக்கிட்டால் 99 விதமும் ரியிலட்டுக்குள்ளே போகாதபடி இருக்க முயற்சிப்பேன்ன்ன்ன்.. இதில் குளிப்பது.. ஓ மை கடவுளே... நெல்லைத்தமிழன் நீங்க கோடு போட்டு வாழுறீங்க... அது சிலசமயம் கஸ்டம் எல்லோ...

   நீக்கு
  6. //அது சிலசமயம் கஸ்டம் எல்லோ...// - ஆமாம் அதிரா... கஷ்டம்தான். என் மனைவிகூட எங்கிட்ட சொல்லுவா... ஒரு செயலைச் செய்ய ஆரம்பித்தீங்கன்னா ரொம்ப தீவிரமா அதைச் செய்ய ஆரம்பித்துடுவீங்கன்னு. ஆனா பாருங்க..இப்படி கோடு போட்டு வாழ்ந்தா, ரொம்ப கஷ்டம்தான் (நமக்குன்னு இல்லை, கூட இருக்கறவங்களுக்கு). இந்த மாதிரியே இருந்தோம்னா, பசங்களே நம்மை 'டை வ ர் ஸ்' பண்ணிடுவாங்க ஹாஹாஹா.

   நீக்கு
  7. அந்த டாய்லெட்டுக்குள் குளிப்பதைப் பற்றி என்னால் யோசிக்கக்கூட முடியவில்லை. ஆனால் டாய்லெட் என்னவோ சுத்தமாகத்தான் இருந்தது... அதற்காக?

   நீக்கு
  8. என்னதான் ரொயிலட்ஸ் பளிங்கு மாளிகை போல இருபினும் நம் நம் வீட்டு ரொயிலட்டுக்கு ஈடாகாதே...

   நீக்கு
 10. "நல்ல காரியம் செய்யும்போது எப்படி புண்ணியம் நம் தலைமுறைகளுக்கு சேருகிறதோ அப்படி தீமை செய்யும்போது.... சத்தியமான உண்மை. மனதறிந்து நாம் யாருக்கும் தீங்கிழைக்க வேண்டாமே...??

  பதிலளிநீக்கு
 11. //நாம் செய்யும் ஒவ்வொரு நல்ல‍ காரியத்தின் புண்ணியம்//

  அற்புதமான தகவல் ஜி மிக்க நன்றி.

  பயண விடயங்கள் சுவாரஸ்யம்.

  பதிலளிநீக்கு
 12. நான் மட்டும் தனியாக எதையும் அனுபவிக்க கூடாது என்று வீட்டில் அத்தனை பேருக்கும் கொடுத்த பிறகும் என் மீது பாசமாக இருக்கிறது. லொக் லொக் 😔😔

  பதிலளிநீக்கு
 13. நெருப்பு என்றால் வாய் வெந்து விடுமா? என்பார்கள். ஆனால் நெருப்பு என்று எழுதியதை படித்தால் வாய் வெந்து போக வேண்டும் என்பார் லா.ச.ரா. அவர் எழுத்து அப்படித்தான் இருக்கும். ஒரு அலையாய் வந்து நம்மை அடிப்பார், பின் கடலாய் மாறி நம்மை இழுத்துக் கொண்டு சென்று விடுவார்.

  பதிலளிநீக்கு
 14. அருமை
  பயண நிகழ்வுகள் தொடரட்டும்

  பதிலளிநீக்கு
 15. லா ச ரா. கதைகள் அவ்வளவு சிறப்பானவையா? வாசித்துப் பார்க்கவேண்டும்.

  கேப்ஷன்கள்ல போடும்போது அருமையான திரைப்படப் பாடல்கள்லாம் ஶ்ரீராமுக்கு ஞாபகம் வருது. வெள்ளிக்கிழமை என்றால்தான் ஞாபக மறதி போலிருக்கு. ஹா ஹா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நெல்லை - வேண்டாம் இந்த விஷப்பரிட்சை. எனக்கு லா ச ரா எழுத்து சின்ன வயதிலும் புரியவில்லை - இப்பவும் புரியலை. மூச்சைப் பிடித்துக்கொண்டு படித்து முடித்தால் ..... ஒரு மாதிரியா ஆயிடுவீங்க! என்னுடைய நூலகத்திலிருந்து உங்கள் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரு லா ச ரா நாவல் அனுப்புகின்றேன். ஈஸ்வரோ ரக்ஷது.

   நீக்கு
  2. கௌ அண்ணா நீங்க சொல்லிருக்கறதும் சரிதான் புரிவது கடினம் தான். நான் வாசித்தது ஒரு கதை தான். அது அப்பா மகன் என்பதால் வாசித்துவிட்டேன். அக்கதை புரிந்தது. இறுதியில் முடிவு கொஞ்சம் புரியவிலை. கதை முடிந்துவிட்டது என்று கொஞ்ச நேரம் கழித்துத்தான் புரிந்தது.

   வேறொன்று படிக்கலாம் என்று லாசரா வின் ஜனனி நெட்டில் கிடைக்க அதை எடுத்து வாசிக்கத் தொடங்கினேன். அதற்கு முன்னுரை எழுதியிருந்தவர் அமானுஷ்யமான தெய்வீகச் சூழல் சார்ந்தது என்று எழுதியிருந்ததால் ஓர் ஆர்வம் வர எடுத்து வாசிக்கத் தொடங்கினேன். 5, 6 பக்கங்கள்தான் வாசித்திருப்பேன்....தொடர முடியவில்லை.

   கீதா

   நீக்கு
  3. கௌதமன் சார்... அப்போ எனக்குலாம் முத்து காமிக்ஸ், பி டி சாமி நாவல்கள்தான்னு சொல்லிட்டீங்க. சரி சரி எனக்கு எதுக்கு விஷப் பரீட்சை

   நீக்கு
  4. நமக்கு எல்லாம் அதுதான் சரி.

   நீக்கு
  5. லா ச ரா இரண்டு பாகம் வாங்கி வைத்திருக்கிறேன். என்ன கஷ்டம் என்றால் இரண்டு பாகமுமே இப்போது என் கையில் இல்லை. வாசிக்க வேண்டும்...

   நீக்கு
 16. அந்தர் ஜெகஹ் இல்லையோ? ஜெகத் னு எழுதியிருக்கீங்க. ஹிந்தி பண்டிதிகள்லாம் ஒண்ணும் சொல்லாம போயிட்டாங்க?

  இட்லி ரொம்பச் சின்னதா இல்லை தட்டு மட்டும் ரொம்பப் பெரிசா? கன்ஃப்யூஸிங் மொமன்ட்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹிந்தி பண்டிதிகள்லாம் ஒண்ணும் சொல்லாம போயிட்டாங்க?//

   ஹா ஹா ஹா ஹா நெல்லை ஜகஹ்....நு சொல்லாம போனது...நான் என்ன அப்பாவியா டமில்ல டினு சொல்றாப்புல ஹிந்தில நான் டி னு சொல்லிக்க!!! ஹா ஹா ஹா ஹா ஹா...

   எனக்கும் இப்படி அடிக்கும் போது மிஸ்ரேக் வருமே அப்படி அது அடிக்கும் போது தவறாயிருக்கும்னு நினைக்கிறேன் நெல்லை...ஸ்ரீராமுக்கு ஹிந்தி தெரியுமே! இல்லையோ?!

   சரி சரி நீங்க ஹிந்தில டி வாங்க நெருங்கியாச்சுன்னு தெரியுது!! நீங்களும் பூஸார் போல டமில்ல டி, ஹிந்தில டி!! ஹா ஹா ஹா ஹா

   கீதா

   நீக்கு
  2. மேரா ஆல்சோ இந்தி மாலும் நஹி!

   நீக்கு
  3. கௌ அண்ணா ஹா ஹா ஹா ஹா ஹா..

   மைம் பி ஹிந்தி பஹூத் கம் ஜான்தா ஹூம்! வோ பி பட்லர் ஹிந்தி!! ஹிஹிஹி....

   ஹிந்தில டி வாங்கப் போற என் அருமைத் தம்பி இதைப் பார்த்து ஆஹா என் தங்கை என்னமா ஹிந்தில பொளந்து கட்டறா நு பெருமிதம் கொள்ளூவார் நு நான் சொல்லலைப்பா...ஹா ஹா ஹா

   கீதா

   நீக்கு
  4. ///நெல்லைத்தமிழன்16 மே, 2019 ’அன்று’ முற்பகல் 8:20
   அந்தர் ஜெகஹ் இல்லையோ? ஜெகத் னு எழுதியிருக்கீங்க.///

   ஆங்ங்ங் இதை நானும் கவனிச்சேன்ன்ன்ன்:)) ஹா ஹா ஹா.
   அதெப்பூடி ஹிந்தியைத் தப்பா எழுதலாம்? மோடி அங்கிளுக்குக் கோபம் வரப்போகுதூஊஊஊ:))

   நீக்கு
  5. // அந்தர் ஜெகஹ் இல்லையோ? ஜெகத் னு எழுதியிருக்கீங்க. //

   அச்சச்சோ... நினைப்பில் சரியாய்த்தான் இருந்தது. எழுத்தில்தான் சொதப்பல். திருத்தி விட்டேன்!

   நீக்கு
 17. புளியோதரைக்குத் தொட்டுக்கொள்ள மிக்சர் பாக்கெட்டா? என்ன கொடுமை சரவணன்.... ஆனா டிராவல்ல இது கொடுப்பதுதான் சாத்தியம்... நீங்கள் ரயிலில் வேறு ஏதாவது சாப்பிட்டீர்களா இல்லை பகோடா, ஸ்வீட்ஸ் போல ஏதேனும் வாங்கிக்கொண்டு சென்றிருந்தீர்களா?

  நாங்கள் போன முக்திநாத் டிரிப்பில் ஆந்திராவிலிருந்து வந்த ஐய்யங்கார் குடும்பம் நிறைய எடுத்துக்கொண்டு வந்திருந்தார்கள் போலிருக்கு. பத்து நாள் பயணம் முடிந்து திரும்பும் ரயில் பிரயாணத்தில் (மிகுந்திருந்ததை?) மற்றவர்களுக்கு விநியோகம் செய்தார்கள். நான் வாங்கிக்கொள்ளவில்லை...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவர் போட்டிருக்கும் படம் மிக்சர் பாக்கெட் போல இல்லை - காரபூந்தி போல இருக்கு!

   நீக்கு
  2. கௌ அண்ணா எல்லாம் ஒண்ணுதேன்!! ஹா ஹா ஹா

   கீதா

   நீக்கு
  3. கேஜிஜி சார்.. காலையில் நினைத்து எழுத விட்டுப்போயிடுத்து. உணவு நம் இருவரின் கண்களிலிருந்து தப்பாது போலிருக்கு.. உங்க ராசியும் தனுரோ?

   நீக்கு
  4. நானும் நினைத்தேன் காராபூந்தி போல் இருக்கே! ஸ்ரீராம் மிக்சர் என்று சொல்கிறாரே என்று.

   நீக்கு
  5. காராபூந்தி...

   ஆம் காராபூந்திதான் கொடுத்தார்கள்...

   பின்னர் ஏன் மிக்ஸர் என்று எழுதினேன்?

   தெரியவில்லை.

   அது தெரியவில்லை...

   என்னவோ போங்க! அதையும் மாற்றி விட்டேன்.

   நீக்கு
  6. ///
   ஸ்ரீராம்.16 மே, 2019 ’அன்று’ பிற்பகல் 2:08
   காராபூந்தி...

   ஆம் காராபூந்திதான் கொடுத்தார்கள்...

   பின்னர் ஏன் மிக்ஸர் என்று எழுதினேன்? ////
   நீங்க எங்களைப் பேய்க்காட்டுறீங்க:)... ஆனாலும் பாருங்கோ நாம் எல்லோரும் வலு உசார்ர்ர்ர்ர்ர்:) ஹா ஹா ஹா

   நீக்கு
 18. உள்ளே இருக்கையிலிருந்து வரும்போதே பாத் ரூம் வேகண்ட்டா, ஆள் இருக்கிறார்களா, என்று இதைப்பார்த்து அறியும் வண்ணம் உள்ள போர்ட். இது நிறைய ரயில்களில் கிடையாது என்றார் ஒரு மாமா!//

  ஆமாம் கிடையாது ஸ்ரீராம்.

  ஸ்ரீராம் எங்கள் வீட்டிலும் மி பொ செமையா போணியாகும். நானுமே சப்பாத்தி பூரிக்கு எல்லாம் தொட்டுக்கொள்வேன். எப்படிப் பழகியது என்றால் பெரும்பாலும் என் பயணம் தனிப்பயணம் என்பதால் பயணத்தில் சில சமயம் சைவ உணவு கிடைக்காத பட்சத்தில் சப்பாத்தி, பூரி கிடைக்கும் போது அதை மட்டும் வாங்கிக் கொண்டு இப்படிப் பொடி கொண்டு போவது வழக்கம் (எண்ணை இல்லாமல் தேங்காய் மி பொ. சில சமயம் எண்ணை கலந்த மி பொ) அதைத் தொட்டுக் கொண்டு சாப்பிட்டுவிடுவேன்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் வெளிநாட்டு டிரிப்பின்போது ஊறுகாய் பாட்டில், கார எலுமி ஊறுகாய், எடுத்துச் செல்வேன். பிரெட்டில் தொட்டுக்கொண்டாவது சாப்பிடலாம்னு. மற்றபடி பழங்கள் (fruits). ஹாஹா

   நீக்கு
  2. நெல்லை நானும் ஊறுகாய் வைத்துக் கொள்வேன். என்ன எதுவும் வழியாமல் ஜாக்கிரதையாகக் கொண்டு செல்ல வேண்டும். சில சமயம் சப்பாத்தி பூரி கூட வாங்கப் பிடிக்காத அளவு சூழல் இருக்கும். எனவே நானும் ப்ரெட் தான் அதுக்கு ஊறுகாய் தான். இல்லைனா ஃப்ரூட்ஸ் தான் நானும்...

   கீதா

   நீக்கு
  3. பொடி போட்டு உண்போரே உண்பர் மற்றெல்லாம்
   பசி எடுத்துத் துன்புறுவர்

   நீக்கு
  4. ஹையோ கௌ அண்ணா எனக்கு என் சின்ன வயது காலத்தை நினைவுபடுத்திட்டீங்க...எங்கள் வீட்டுக்கு ஒருவர் வருவார் எப்போதும் மூக்குப் பொடி டப்பியுடன்...அப்ப எடுத்துவுட்டது...கொஞ்சம் வித்தியாசமாக ஆனால் இங்கு சொல்லலை நான்...

   கீதா

   நீக்கு
  5. கீதா... என் இளையவன் அளவு மிபொ சாப்பிடுபவர் என் வீட்டில் வேறு யாரும் கிடையாது.

   நெல்லை... எனக்கென்னவோ எலுமிச்சை ஊறுகாயில் இச்சை எழுவதில்லை!

   நீக்கு
  6. கேஜிஜி... எனக்கு இன்று காலை டிஃபன் சப்பாத்தி என்று சொல்லப்பட்டிருந்தது அப்புறம் பார்த்தால் பொடிதோசை... அதுவும் அந்த கடைசி தோசை.... எண்ணெய் வழிய...

   கீதா... பொடி என்றதும் உங்களுக்கு மூக்குப்பொடி நினைவு வந்துவிட்டதோ...!

   நீக்கு
  7. //காலை டிஃபன் சப்பாத்தி என்று சொல்லப்பட்டிருந்தது// - ஸ்ரீராம்.. எனக்கிருக்கும் ஒரு (கெட்ட) வழக்கம்... இந்த உணவு என்று சொல்லியாச்சுன்னா அதனை மாற்றினா பிடிக்கவே பிடிக்காது, அது என்னவா இருந்தாலும் (அல்லது என் ரொம்ப ஃபேவரைட் உணவா இருக்கணும்..அதுவுமே ஒத்துக்கொள்வது டவுட்டுதான்). சாயந்திரம் தோசை, மிளகாய்ப்பொடின்னு சொல்லிட்டு, இட்லி பண்ணினாலும் எனக்குப் பிடிக்காது. மதிய உணவும் அப்படித்தான்.

   நீக்கு
  8. ஆஆஆஆஆஆஆஅ நெல்லைத்தமிழனை இவ்ளோ காலமும் அண்ணி வீட்டுக்குள்ளுள் வச்சிருப்பதற்காகவே அவவுக்கு கோயில் கட்டிக் கும்பிடோணும்:)) ஹையோ வைரவா முடியல்ல:))

   நீக்கு
 19. அப்பர் பெர்த் நாலடியாரான எனக்கே தலை தட்டும் நிமிர்ந்து உட்கார முடியாது ஆனால் சில ரயில்களில் நிமிர்ந்து உட்கார முடியும். என்றாலும் ஜன்னல் சீட் தான் மிகவும் பிடித்த சீட்/லோயர் பெர்த்

  கீதா

  பதிலளிநீக்கு
 20. அடப் பாவிகளா! குப்பையைக் கொட்டும் படம்! இப்படியா கொட்ட வேண்டும் அவ்வப்போது க்ளீனிங்குனு பேரு..ஸ்வச் பாரத்!!!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நம்ம ஊர்ல எப்பத்தான் பப்ளிக் சுத்தம் வருமோ தெரியலை. அடுத்த ஸ்டேஷ்ன வரும் சமயம் எல்லாவற்றையும் க்ளீஈன் செய்யலாமே. ஏன் இன்னும் நம்ம ஊரில் இப்படி விழிப்புண்ர்வு வரவில்லை? என்ன மாற்றம் கொண்டு வந்து என்ன பிரயோசனம்?!! மக்கள் ரொம்ப மோசம்...மனசுக்குக் கஷ்டமாக இருக்கு இதை எல்லாம் பார்க்கும் போது

   கீதா

   நீக்கு
  2. வழியில் கொட்டப்படும் குப்பைகளை யார் ஆட்சேபிக்கப் போகிறார்கள் என்கிற தெனாட்டு...!

   நீக்கு
 21. ஆமாம் ஸ்ரீராம் பிஹார் மோசமான மாநிலம். ஊழல் நிறைந்த மாநிலம். அவர் சொல்லியிருப்பது அப்படியே. மக்கள்தான் பாவம் என் மாமா மாமி குடும்பம் அங்குதான் இருந்தார்கள் பின்னர் குழந்தைகள் கல்லூரி வரும் சமயம் சென்னைக்கு வந்துவிட்டார்கள். கல்லூரி எல்லாம் அங்கு படிப்பது வேஸ்ட் என்பார். அதிலும் மகள் மட்டும் அங்கு வேறு வழி இல்லாமல் கல்லூரி சேர்ந்து மிகவும் கஷ்டப்பட்டார். அவர் சான்றிதழ் வாங்க போராடியது எல்லாம் கதை கதையாச் சொல்வார்.

  பாவம் சந்தோஷ். பெயர் தான் சந்தோஷ்! எத்தனை கஷ்டங்கள். பல குடும்பங்கள் போலத்தான் போலும் அவர் சகோதரர்கள் அப்பாவைப் பார்த்துக் கொள்ளவில்லை...இவர் குடும்பம் நன்றாக இருக்க வாழ்த்துவோம் ஸ்ரீராம் பாவம் உழைத்துப் பார்த்துக் கொள்கிறாரே!.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பல பீகார் மக்கள் ரயில்வேயில் வேலையில் சேர்(ந்)ததில் லாலுபிரசாத் அவர்களுக்குப் புண்ணியம்!

   நீக்கு
  2. சந்தோஷ் பெயரின் நகைமுரணை நானும் அவரிடமே சொன்னேன் கீதா...

   கேஜிஜி.. நேற்று ஹிந்துவில் லாலு பற்றிய ஒரு சுவாரஸ்யமான சம்பவம் படித்தேன்.

   நீக்கு
 22. நானும் மாமாவும் எடுத்த செல்பியில் இருந்தவரை ஜூம் செய்து....!//

  ஹா ஹா ஹா ஜந்தகமே இல்லை! இன்று அதிரா இந்தப் படத்தைப் பார்த்து ஸ்ரீராம் பேய்க்காட்டரார் இதுதான் ஸ்ரீராம் நான் பார்த்துவிட்டேன் அப்படினு!! ஹா ஹா ஹா ஹா

  அதிரா அவரேதான்!!! அவரேதான்!!!! விடு ஜூட்!!!!!!!!!!!!!!!!!!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆங்ங்ங்ங் என்னை ஆரும் பேய்க்காட்ட முடியாதூஊஊஊஊ:)).. குட்டித்தாடி இருந்தால்தான் நான் நம்புவேனாக்கும்:))

   நீக்கு
  2. ஆனால் உண்மையில் பயணத்தின் பாதியில் தாடியை எடுத்து விட்டேன் அதிரா... அதற்கு காரணம் இருந்தது!

   நீக்கு
  3. ஆஆஆஆ இதென்ன புயுக்கதை ஶ்ரீராம்... கெதியா திரும்ப வளர்த்திடுங்கோ இல்லை எனில் என்னால அடையாளம் கண்டுபிடிக்க முடியாதெல்லோ:) ஹா ஹா ஹா..

   நீக்கு
 23. ஸ்‌ரீராம் மதன்மஹால் என்றதும் எனக்கும் அந்தப் பாட்டுத்தான் நினைவுக்கு வருது..படத்தைப் பார்த்ததும் மைமகாரா வில் க்ளைமாக்ஸில் வருமே ஒரு வீடு அதுவும் நினைவுக்கு வருது. நாங்கள் சென்ற பர்வதமலையும் இப்படித்தான் தூரத்திலிருந்து பார்க்க மொட்டை மலை உச்சியில் கோயில் கட்டிடம் தெரியும்.

  அங்கு புகழ்பெற்ற பழமையான கோட்டை நீங்க படம் போட்டிருக்கீங்களே அது...இருப்பதால் இந்தப் பெயர் மதன்மஹல்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அந்தக் கோட்டையை துர்கா கோட்டை என்றும் சொல்கிறார்கள் கீதா.

   நீக்கு
 24. ஸ்ரீராம் உங்கள் கவிதை அருமை!!! அருமை!! மிகவும் ரசித்தேன்!!

  பாடல் வாவ் அருமையான பாடல்! பிடித்த பாடல். இந்த முறை ஒவ்வொன்றிற்கும் பொருத்தமான பாடல்!! சூப்பர் ஸ்ரீராம்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி கீதா. என் கவிதை முயற்சிகளில் நான் நினைவு வைத்துக்கொள்ளும் கவிதையில் ஒன்று!

   நீக்கு
 25. பயண நிகழ்வுகள் சுவாரஸ்யம்... அட அங்கங்கே பாடல் வரிகள்...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி டிடி. பாடல் வரிகளை ரசித்தீர்களா? நன்றி.

   நீக்கு
 26. நல்ல‍ காரியங்கள் செய்யும்போது அதற்கான புண்ணியம் எப்ப‍டி நமது தலை முறையினருக்கு சென்று சேருகிறதோ அதேபோல் நாம் செய்யும் தீய செயல்களுக்கான பாவங்களும் நமது தலைமுறையினருக்கு சென்று சேரும் என்பதை மறக்காதீர்.//

  சூப்பர் !

  ஆனால் அந்தப் புண்ணியம் சேரும் என்பதற்காகச் செய்வது கூட ஒரு எதிர்பார்ப்பில் செய்வது என்று எனக்குத் தோன்றும். அது சொல்லப்பட்ட நோக்கம் நல்லதே தான். இருந்தாலும் அதையும் எதிர்பார்க்காமல் அந்தக் கணக்கையும் மனதில் கொள்ளாமல் நல்லது செய்யலாமே என்று எனக்குத் தோன்றும்...என் தனிப்பட்டக் கருத்து இது.

  அதே சமயம் நாம் செய்யும் தவறுகள் நமக்குப் பின் விளைவுகள் உண்டாக்கும் என்பதில் ரொம்பவே நம்பிக்கை உண்டு.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. // புண்ணியம் சேரும் என்பதற்காகச் செய்வது கூட ஒரு எதிர்பார்ப்பில் செய்வது என்று எனக்குத் தோன்றும். //

   எனக்கும். அடுத்த வரிக்கும் சேர்த்தே "எனக்கும்" சொல்லிக்கொள்கிறேன் கீதா!

   நீக்கு
 27. ஸ்ரீராம் லா ச ரா கதைகள் பற்றி அக்கா சொன்னதை நான் அப்படியே அப்படியே டிட்டோ செய்கிறேன். நான் இத்தனைக்கும் ஒரே ஒரு கதைதான் வாசித்திருக்கிறேன் அதுவும் மாமானார் பைன்ட் செய்து வைத்திருக்கும் எதோ ஒரு இதழில் வந்த தொடர்கதை தொகுப்பின் இடையே ஒன்று லா ச ராவினுடையது. சில வரிகள் மனதை அப்படியே தைக்கும். உண்மை என்று சொல்லும். யதார்த்தம் என்று சொல்லும். மீண்டும் படிக்கத் தோன்றும் ஆனால் நம் மனதை எங்கேயோ கொண்டு செல்லும். தத்துவங்களும் இடையே இருக்கும். படித்து முடித்ததும் கதையை எழுதிய எழுத்தாளரை மெச்சுவதா..எனக்கு மிகவும் பிடித்திருந்தது ஆனால் நம் மனம் ஏதோ இனம் புரியாத ஓர் உணர்வில் சிக்கியிருப்பதை கொஞ்சம் மனம் எதையோ நினைத்து சிக்கித் தவிப்பதைச் சொல்லுவதா, அந்தத் தத்துவங்களில், வரிகளில் நம்மை இழுத்துச் செல்வதைச் சொல்வதா என்று தோன்றும். அப்படித்தான் நான் அந்தத் தொகுப்பில் இருந்த கதையை வாசித்தேன்...முடிவில் மனம் என்னவோ செய்தது.

  மனைவி இல்லை. பெரியவர் பங்களூரில் இருக்கும் மகனிடம் வரும் போது இருவரும் பேசிக் கொள்ளும் உரையாடல்கள்...பெரியவர் மனதில் ஓடும் எண்ணங்கள் என்று...மகன் அப்பாவிடம் வாத்சல்யமாகத்தான் பேசுவான்...

  எனக்கு அதை வாசித்த பொது ஏனோ தெரியவில்லை நீங்களும் பாஹே வும் நினைவுக்கு வந்தீர்கள் சில இடங்களில்...ஒரு வேளை அப்பாவின் தூறல்கள் புத்தகத்தில் பல வரிகள் நறுக் சுருக் பளிச் என்று யதார்த்த இருப்பது போல லா ச ராவின் சில வரிகளும் இருக்கும்...சிலது நெற்றிப் பொட்டில் அறையும். சிலவற்றை மீண்டும் வாசித்துப் புரிந்து கொள்ள வேண்டியிருக்கும் தத்துவ வரிகள். அந்தக் கதையில் இவை எல்லாம் இருக்கும். .இதைச்..சொல்ல நினைத்து மறந்த ஒன்று ஸ்ரீராம். இங்கு லாசரா பற்றி வாசித்ததும் டக்கென்று நினைவுக்கு வந்துவிட்டது.

  நீங்கள் சொல்லியிருக்கீங்களே பாடல் உறவுகள் தொடர்கதை உணர்வுகள் அதே அதே அதே பொருத்தமான பாடல்..

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நானும் பாஹேவுமா? நன்றி கீதா... கதைத்தலைப்புச் சொல்லுங்கள். நானும் வாசித்துப் பார்க்கிறேன் - புத்தகங்கள் கைக்கு வந்ததும்!

   நீங்களும் அந்த உணர்வுகளுக்கு ஆதரவு கொடுத்திருக்கிறீர்கள் என்பதை அக்காவும் அப்புறம் வாசிப்பார்கள். நான் இன்னும் அவர்களுக்கு லிங்க் தரவில்லை!

   நீக்கு
 28. பதில்கள்
  1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இதாரிது ஜாமத்தில குரல் கொடுப்பது:).. ஓ அஞ்சூஊஊஊ ஆஆஆஆஆஆ வாங்கோ நாம் இருவரும் இந்த சனி சே..சே.. டமில சரியா வருதில எழுத சன்னி:) ஆஆஆஆ கரீட்டு சன்னியில:) இருந்து குட்மோனிங் சொல்லுவம்:)) பின்ன என்ன இப்ப கீதாவோ வந்து சொல்லுவா கர்ர்ர்ர்ர்ர்:))

   நீக்கு
  2. வாங்க ஏஞ்சல்!!! வாங்க...

   ஹலோ பூஸார் சனி நு நீங்க சொல்லக்கூடாதாக்கும்! 7.5 நினைவுருக்கில்லே!! ஹா ஹா ஹா கீதா வந்து சொல்லியாச்சு!!!

   கீதா

   நீக்கு
  3. வாங்கஏஞ்சல்.. லண்டன் வெயில் என்ன, சென்னை வெயிலை விடவா கொடூரம்?!

   நீக்கு
  4. இங்கு யூவி கதிர்த்தாக்கம் அதிகம் ஶ்ரீராம்... சூரியனுக்கு கிட்டவாக நாம் இருக்கிறோம்... ஊரில் எவ்ளோ வெயில் எனினும் தோல் சுட்டதில்லை எனக்கு... இங்கு கொஞ்ச நேரம் நின்றாலே முகத்தோல் பொசுங்கிப் போயிடுது...
   இதனாலதான் வெள்ளையர்களுக்கு ஸ்கின் கான்சர் அதிகமாம்:(..

   நீக்கு
 29. //"அந்தர் ஜெகத் ஹை க்யா?"///
  ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் இங்கெல்லாம் தெலுங்கில பேசப்புடாதாக்கும்... ஆமி பிடிக்கும் ஜொள்ளிட்டேன்ன்ன்:)) ஆஞ் ஜி ஆஞ் ஜி:).

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஏஞ்சல் ஹிந்திலயும் டி வாங்கினவங்க அப்படித்தான் சொல்லுவாங்க!!! ஹா ஹா ஹா

   கீதா

   நீக்கு
  2. மாத்திட்டேன்... மாத்திட்டேன்... உங்களிடம் எல்லாம் மாட்டின பிறகு மாத்திட்டேன்.. தப்பை எல்லாம் திருத்திட்டேன்....

   நீக்கு
  3. ஹா ஹா ஹா.... அம்மம்ம சொல்லுவா எனக்கு” உந்த வாய் இல்லை எனில் நாய் தூக்கிக்கொண்டு போயிடும்” என:)... ஹா ஹா ஹா...

   நீக்கு
 30. பிரயாணம் படிக்க நன்றாக இருக்கிறது. ஸந்தோஷ் பெயரை வைத்துக்கொண்டு உழைக்கிறான். அப்பா அம்மாவைப் பார்த்துக் கொள்கிறான். இப்படி ஒருவன் கதை. இம்மாதிரி கதைகளுக்கு பீஹார் மட்டும் விதிவிலக்கா? குப்பைக் கொட்டுகிறார்கள். கேபின் கிளீன். அதுதான் அவர்களின் சித்தாந்தம். நீங்கள் படம் பிடித்து விட்டீர்கள். எத்தனைபேருக்கு இது தெரியும்?
  நல்ல காரியங்கள் பலன். நம்மையறியாமலேயே நல்ல காரியங்கள் பழக்கத்தில் வரவேண்டும். அதற்கும் உடம்பில் ரத்தத்தில் ஊறி இருக்க வேண்டும் தகுதி. கவிதை எல்லாம் அசத்துகிறீர்கள். ரயில் பிரயாணத்தின் போது பெரிய ஜங்ஷன்களில் ரயில் அரைமணி நிற்கும். அப்போது ப்ளாட்பாரத்தில் உள்ள குழாய்களில் பலர் குளிப்பார்கள்.இப்படி எல்லாம்பார்த்த அனுபவம் உண்டு. புளியஞ்சாதம்,தயிர்சாதம் படம் அனுபவம் பேசுகிறது. அன்புடன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //குப்பைக் கொட்டுகிறார்கள். கேபின் கிளீன். அதுதான் அவர்களின் சித்தாந்தம்.//

   வாங்க காமாட்சி அம்மா... நீங்கள் சொல்வது சரி... நமக்குப்பையை நாம் பக்கத்து வீட்டில் அல்லது பக்கத்துத் தெருவில் காட்டுகிறோம். நம்வீடு க்ளீன்! சமயங்களில் வீட்டை சுத்தம் செய்கிறோம் என்று ரூமில் இருக்கும் குப்பையை ஹாலில், ஹாலில் இருக்கும் குப்பையை இன்னொரு ரூமில்...

   //நம்மையறியாமலேயே நல்ல காரியங்கள் பழக்கத்தில் வரவேண்டும். அதற்கும் உடம்பில் ரத்தத்தில் ஊறி இருக்க வேண்டும் தகுதி.//

   நன்றாய்ச் சொன்னீர்கள்.

   கவிதையைப் பாராட்டி இருப்பதற்கு நன்றிகள்.

   பிரயாணத்தில் இப்போதெல்லாம் பிளாட்பார்மில் யாரும் குளிப்பதில்லை என்றே நினைக்கிறேன் அம்மா.

   நீக்கு
 31. //அப்பர் பெர்த் என்பதால் நிமிர்ந்து உட்கார முடியாது. எனவே புத்தகம் படிக்கும் கதை நடக்காது. இல்லைன்னாலும்....!! ///

  ஓ நான் இதுவரை அப்ப பேர்த் ல இப்படி போனதில்லை, இலங்கையில் தனித்தனியாக இருக்கும் ரூம் பேர்த் ல சில தடவைகள் போயிருக்கிறேன்ன்ன்.

  //ஆனால் மேலே நமக்கு மட்டும் என்று ஒரு சிறு பல்ப் பொருத்தி இருந்தது. தேவைப்படும்போது அதை ஆன் செய்து கொள்ளலாம்- பல்புக்கு அருகிலேயே சுவிட்ச். அதே போல ஒவ்வொரு இருக்கைக்கும் தனித்தனியே செல் சார்ஜ் செய்ய ஒரு மூன்று பின் இணைப்பு.///

  பிறகென்ன ஸ்ரீராம் நீங்க ரெயினில போகேல்லை பிளேனிலதான் போயிருக்கிறீங்க காசிக்கு:)... மூன்று நாளாக மேலேயே இருந்தீங்களோ.. என்ன கொடுமை இது..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இல்ல அதிரா அப்பப்ப கீழ வந்தார்!!!! அந்த தூங்குற நல்ல பெண்ணைப் பார்த்து ச்சே இந்தப் பொண்ணு தூங்கிட்டே இருக்கே இதைப் பத்தி எழுத நாலு வரி கூட தேறாது போல இருக்கேன்னு! பார்த்துட்டு எழுந்திருக்குதா எழுந்திருக்குதானு பார்த்து நடை போட்டிருக்கார்!!! அப்பத்தான் அந்த சந்தோஷ், ஸ்டேஷன் மெனேஜர் செல்ஃபி எல்லாம்!!!

   கீதா

   நீக்கு
  2. எனக்கு வாய்ப்பதெல்லாம் அப்பர் பெர்த்தான் அதிரா... சின்னப்பையன் என்பதால் அதையே எனக்குக்கொடுத்து விடுவார்கள்.

   //ஸ்ரீராம் நீங்க ரெயினில போகேல்லை பிளேனிலதான் போயிருக்கிறீங்க காசிக்கு:)..//

   ஹா... ஹா... ஹா...

   நீக்கு
  3. //ச்சே இந்தப் பொண்ணு தூங்கிட்டே இருக்கே இதைப் பத்தி எழுத நாலு வரி கூட தேறாது போல இருக்கேன்னு! பார்த்துட்டு எழுந்திருக்குதா எழுந்திருக்குதானு பார்த்து நடை போட்டிருக்கார்!!! //

   ச்ச்சே... தூங்கி கொண்டே இருந்த பெண்ணைப் பற்றியே இவ்வளவு எழுதி இருக்கேன்... அதைப் பாராட்ட ஆள் இல்லையே!!! எல்லாவற்றுக்கும் சேர்த்து வைத்து பின்னாடி திட்டப்போறீங்க... முக்கியமான நேரத்தில் சுருக்கமா முடிச்சுடப் போறேன்!

   நீக்கு
  4. ///Thulasidharan V Thillaiakathu16 மே, 2019 ’அன்று’ பிற்பகல் 1:36
   இல்ல அதிரா அப்பப்ப கீழ வந்தார்!!!//

   நீங்க பார்த்தீங்க:) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா கீதா அவருக்கு மேலேயிருந்து அந்தக் குண்டுத் தேவதையை வோச் பண்ணுவதிலேயே ரெயின் மூணு நாள் ஓடிவிட்டது:)).

   //ஸ்ரீராம்.16 மே, 2019 ’அன்று’ பிற்பகல் 2:32
   எனக்கு வாய்ப்பதெல்லாம் அப்பர் பெர்த்தான் அதிரா... சின்னப்பையன் என்பதால் அதையே எனக்குக்கொடுத்து விடுவார்கள். ///

   ஓ மைக் கடவுளேஏஏஏஏஎ என்னை ஆராவது தூக்கிக் கொண்டுபோய்க் காசிக் கடல்ல எறியுங்கோ:)) முடியல்ல காசிநாதா முடியல்ல...
   எங்கள் அப்பாவுடன் வேர்க் பண்ணிய ஒரு அங்கிளின் பெயர் காசிநாதர்.. ஆனா அவர்கள் கத்தோலிக்கர்.. அப்போ எப்படி இந்தப் பெயர் வந்ததோ? இதை அப்போ நான் யோசிக்கவில்லை:)..

   நீக்கு
 32. ///சென்றவாரம் வெளியிட்டிருந்த ரயில் படத்தில் புரியாத படம் ஒன்று இருந்திருக்கும். //

  நேரம் கிடைக்கும்போது விடுபட்டதை முடிக்க வேணும் என நினைச்சுக் கொண்டிருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சரி சரி!! பொன்னியின் செல்வணும் இருக்குதுணு சொல்லி வைக்கிறேன்!!!!! அதிரா!!!

   கீதா

   நீக்கு
  2. //நேரம் கிடைக்கும்போது விடுபட்டதை முடிக்க வேணும் என நினைச்சுக் கொண்டிருக்கிறேன்.//

   ஹிஹிஹி... ரொம்பவே ஓடிப்போச்சு அதிரா... ஆனாலும் நான் என்னவோ இன்னும் ட்ரெயினை விட்டு இறங்கவில்லை!!!!

   நீக்கு
  3. பொன்னியின் செல்வ்ச்னோ கீதா? அப்பூடி எண்டால்????? ஹா ஹா ஹா...

   ஒண்ணும் அவடரமில்லை ஶ்ரீராம் மெதுவா இறங்குங்கோ இடைக்கிடை உங்கட செல்வியையும் சே சே செல்பியையும் போட்டால் நல்லது:)

   நீக்கு
  4. செல்பி போட்டிருக்கேன். அதிலிருந்து ஜூம் செய்து எடுக்கப்பட்டவைதான் அந்த சந்தோஷ் போட்டோவும், இன்னொருபோட்டோவும். அந்த போட்டோக்களில் முன்னால் நான் இருக்கிறேனே!!

   நீக்கு
  5. இருங்கோ ஒரு நாளைக்கு மாட்டாமலோ போயிடுவீங்க:) ஹா ஹா ஹா.. நான் கெள அண்ணனைப் ஃபிரெண்ட் பிடிக்கப் போகிறேன்ன்:))

   நீக்கு
 33. ////மறுநாள் காலை காபி சாயாவுக்கு வழி இல்லை. ரயிலில் விற்றுக்கொண்டு வந்த டீ குடித்தோம். காஃபியும் முயற்சித்தோம். சகிக்கவில்லை! நமக்கு நாக்கு நாலு முழம்.. வீட்டிலேயே குறை காணும் என் நாக்கு ரயிலில் வரும் காபியை எல்லாம் ஏற்றுக்கொள்ளுமா? ஆனால் வேறு வழி?/////

  ஓ இந்தியாவிலும் இதே நிலைமையோ... இங்குள்ளவர்களுக்குத்தான் ரீ ஊத்தவே தெரியாது வெறும் கழுநிர்த்தண்ணிபோல இருக்கும்... பால் புறிம்பா தருவினம் ஆனாலும் கப்பில தேயிலையை போட்டு கப் முட்ட தண்ணியை ஊத்தித்தருவார்கள் அப்ப்போ சாயம் இல்லாமல் போய் விடும். எங்களுக்கும் ரீ எனில் அந்தமாதிரி இருக்கோணும்...

  ஆங்ங் நான் சூப்பரா ரீ கோப்பி ஊத்துவேன் தெரியுமோ.. இங்கு பலரிடம் சேர்டிபிகேட்டும் வாங்கி இருக்கிறேன்:)

  ஊசிக்குறிப்பு:
  அஞ்சுவுக்கு சரியா ஊத்த வராது:).. நான் ரீ யைச் சொன்னேன்:))ஹா ஹா ஹா ஆளைக் காணல்ல.. சொல்றதைச் சொல்லிப்போட்டு ஓடிடப்போறேன்ன்ன்:))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கர்ர்ர் :) நான் பனங்கருப்பட்டி அப்புறம் சுக்கு காப்பி சுலைமானி டீ கட்டஞ்சாயா எல்லாம் போடுவேன் .
   நீங்க pour தி டீயை அப்டியே ஊத்துவேன்னு சொன்னா எங்க ஊர்ல கீழே ஊத்துவேன்னு சொல்றபோல் அர்த்தம் ஹஆஹாஆ

   நீக்கு
  2. ஏஞ்சல்! செஃப் புதுசா என்னவோ சொல்றாங்க!!! ரீ கோப்பியாமே !!! ஆஆஆஅ ரெண்டும் மிக்ஸா!! சர்டிஃபிக்கெட்டா!! ஆஆஆஆஆஆஅ தலை சுத்துது!!

   ஆமாம் அங்கல்லாம் டிக்காக்ஷன் தண்ணியா ஒரு கப் கொடுத்துட்டு அதுல க்ரீம சேர்த்துக்கங்கனு ஒரு பாக்கெட் கொடுத்துருவாங்க...கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...

   கீதா

   நீக்கு
  3. இங்கு பயணத்தில் இரண்டு வகையான ரீ தருவார்கள் அதிரா... ஒண்ணு ரெகுலர் ரீ... வாங்கி அப்படியே குடிக்கலாம். இன்னொண்ணு டிப் ரீ!

   ஊசிக்குறிப்பை ரசித்தேன்!

   நீக்கு
  4. பனங்கருப்பட்டி அப்புறம் சுக்கு காப்பியா? ஏஞ்சல்... ஹையோ... நான் ஓடிடுவேன்! எனக்கு நாக்கு நாலு முழம்!

   நீக்கு
  5. சாப்பாட்டில மட்டும்தானே ஶ்ரீராம் நாலு முழம்?:) இல்ல ச்சும்ம ஒரு டவுட்டூ:)... நீங்கள் அதிகம் பேச மாட்டீங்களெல்லோ...

   நீக்கு
  6. மௌனமல்ல.. மயக்கம்..

   இப்படி ஒரு பாட்டு கேட்டிருக்கீங்களா அதிரா...

   அப்படிப்பட்ட ஒரு மயக்கம் எனக்கு...

   நீக்கு
  7. ///Angel16 மே, 2019 ’அன்று’ பிற்பகல் 1:26
   கர்ர்ர் :) நான் பனங்கருப்பட்டி அப்புறம் சுக்கு காப்பி சுலைமானி டீ கட்டஞ்சாயா எல்லாம் போடுவேன் .///

   என்னாதூஊஊஊஊஊஊஊஉ காச்சுச்சாராயமோ.. ஓ மை கடவுளே... :)) நான் ஜொன்னனே:)) அஞ்சுவுக்கு எல்லாம் வரும் ஆனா ரீ ஊத்த வராது:)) ஹா ஹா ஹா..

   அதேதான் கீதா.. அதனால நான் வெளியே போனால் கஸ்டப்பட்டு கோப்பிதான் குடிப்பேன்ன்.. அது கொஞ்சம் ஓகேயாக இருக்கும்.

   நீக்கு
  8. மயக்கமென்ன.. இந்த மெளனமென்ன.. இப்பாடல்தான் எனக்கு தெரியும் ஸ்ரீராம்.. நீங்க சொல்வது புதுசா இருக்கு.

   நீக்கு
 34. இட்லி சைஸ் பார்க்க, தேசிக்காய் பெரிசாக இருக்கும்போல இருக்கு:) ஹா ஹா ஹா..


  ///அந்தக் கல்லூரிப்பெண் சளைக்காமல் உறங்கி கொண்டிருந்தாள். அவ்வப்போது எழுந்து டீ, டிஃபன், முடித்து தொடர்ந்துறங்கினாள்!/// மீண்டும் கண் அயர்ந்தாள் அந்த குண்டு தேவதை.////

  ஹா ஹா ஹா...ஆலையில்லா ஊரில இலுப்பைப்பூச் சக்கரையாம் எனும் பயமொயி நினைவுக்கு வந்து கூடவே அனுக்காவும் நினைவுக்கு வந்தா:).. ஸ்ரீராமுக்குப் பொழுது போகவில்லைப்போலும் ரெயினில:))...

  போனதொடர் படிச்சால்தான் இதுபற்றிய விபரம் தெரியவரும்போல இருக்கு:)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //தேசிக்காய் பெரிசாக இருக்கும்போல இருக்கு...// - சொல்லவந்ததை முடிங்க அதிரா... உங்களுக்காக நான் எழுதுகிறேன்.

   பெரிசாக இருக்கும்போல இருக்கு..... இப்படி ஒரு வேளைக்கு மூணு மினி இட்லிதான் சாப்பிட்டால், ஏன் ஒட்டடைக் குச்சி மாதிரி உடம்பு இருக்காது ஸ்ரீராமுக்கு :-) ஹா ஹா ஹா...

   இதைத்தானே எழுத நினைத்தீங்க?

   நீக்கு
  2. பூஸார் அந்தக் குண்டு தேவதைக்கு நான் போன பதிவிலேயே அனுஷ் சொல்லிட்டேனே!!!!! அவள் காலேஜ் பெண்ணு...கொஞ்சம் குண்டு..செருப்பு சீட்டிற்கு அடியில் மாட்ட அதை இவர்களை எடுத்துத் தர சொல்ல...அத்தை அவளையே எடுக்கச் சொல்ல அப்புறம் அத்தையிடம் நல்ல பெயரும் வாங்கிவிட்டாள் அந்த குண்டு தேவதை....நோட் திஸ் அதிரா போன பதிவுல குண்டு தேவதைனு சொல்லலை இந்த குண்டு தேவதை!!!!

   கீதா

   நீக்கு
  3. இட்லியோ, புளிக்காய்ச்சலோ இன்னும் கேட்டாலும் அவர்கள் போடத்தயார்தான். ஆனால் அவர்கள் டேஸ்ட்டில் சற்றே இரண்டாம் தரமாக கொடுப்பதே அளவாக சாப்பிட வைக்கும் தந்திரம்தானோ என்னவோ!!!

   நீக்கு
  4. //அளவாக சாப்பிட வைக்கும் தந்திரம்தானோ என்னவோ!!!// - இது பாசிடிவ் சிந்தனை இல்லை. டபுள் பாசிடிவ் சிந்தனை.

   நீக்கு
  5. இல்லை நெல்லை.. வியாபார தந்திரம். குருமா போன்றவற்றில் அரை உப்பு கம்மியாய் இருந்தால் நிறைய உள்ளே இறங்கும். உப்பு சரியாய், அல்லது கால் உப்பு தூக்கலாய் இருந்தால் அளவாய்த்தான் போட்டுக்கொள்வோம். அதுபோலதான் இனிப்புப் பண்டங்களில் இனிப்பும்!

   நீக்கு
 35. ///எப்படி சுத்தம் செய்கிறார்கள்?

  இப்படித்தான்! ///
  ஒ மை கடவுளே... அப்படியே வீசுகின்றனரோ வெளியே...

  வீட்டால புறப்பட்டு விட்டால் எந்த சைகரியங்களையும், நல்ல உணவையும் எதிர்பார்க்க முடியாதுதான்.. அதே நேரம் வீட்டில் வராத பசி எல்லாம் அடிக்கடி வந்து துலைக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வீட்டில் வராத பசி வரும் உண்மைதான். எனக்கும் அப்படி தோன்றும். ஆனால் இந்தப் பயணத்தில் நாவைக்கட்டுப்படுத்தி மிகவும் கவனமாக இருக்க முயற்சி செய்தேன்.

   நீக்கு
 36. ///இவர் பீஹாரியாம். ஒன்பதாம் வகுப்பு வரை படித்தவர். அவர் அப்பா பஹுத் பீமாரீஸே படுக்கையில் விழ நடுச்சகோதரரான இவர் குடும்பத்தைக் காப்பாற்ற உழைக்கத் தொடங்கினாராம். அங்கு வேலை சரியில்லாமல் வெளிவேலைகளுக்குச் சென்று வந்தாராம். //

  ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) முடியல்ல காசி நாதா:)) போற வாற இடங்களிலெல்லாம் ஆட்களைப் பிடிச்சு விடுப்ஸ் அறிஞ்சிருக்கிறார்ர் ஹா ஹா ஹா நான் சொன்னனே ஸ்ரீராமுக்குப் பொழுது போகேல்லை:)).

  ///வார ஒய்வு , விடுப்பு என்பது கிடையாது. பயணத்திலேயே அவ்வப்போது கிடைக்கும் இடைவேளையில் இரண்டு கேபினுக்கு இடையே இருக்கும் மூடும் பெட்டி போல இருக்கும் படுக்கையில் படுத்து ஓய்வெடுத்துக் கொள்கிறார்.
  ///
  எவ்ளோ பாவம்... இப்படியும் மனிதர்கள் கஸ்டப்பட்டு உழைக்கிறார்கள்..

  //திருமணமானவராம். மூன்று வயதுக்குழந்தை உண்டு. ஆறு மாதங்களுக்கொருமுறை ஊர் சென்று குடும்பம் பார்த்து வருவாராம்//
  ஓ நான் நினைச்சேன் இனும் திருமணமாகவில்லை, அதுவரை இப்படிக் கஸ்டப்படுகிறார் போலும் என.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதிரா.... இங்க ஒரு சில தடவைகள் ஜிம்முக்குப் போயிருக்கிறேன். மனுஷனை நிம்மதியாக எதையும் செய்யவிடாமல் (சைக்ளிங், டிரெட்மில் போன்றவை), அங்க வருகிற பெண்கள் (ஆண்டீஸ்...ஆன்ரீஸ்) பேச்சு பேச்சு என்று ஒரே பேச்சு. இந்தப் பெண்களுக்கு எப்படித்தான் இவ்வளவு எனெர்ஜியோ... எப்போப் பார்த்தாலும் பேசிக்கொண்டு (அரட்டை அடித்துக்கொண்டு).

   ஆண்கள்... ரொம்ப சிந்தனை செய்கிறவர்கள். அதுனால போரடிக்கும்போது இந்த மாதிரி கண்ணில் அகப்படுபவர்களிடம் கதை கேட்கிறார் ஸ்ரீராம். அது டப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பா

   நீக்கு
  2. சுற்றும் இடங்களிலிருந்து எழுத எதாவது சுவையாக கிடைக்காதா என்கிற நப்பாசைதான்! ஒன்று ஒருவருக்கு போரடித்தால், இது அவர்களுக்கு சுவையாக இருக்குமே என்கிற எண்ணம்தான்!!!!

   நீக்கு
  3. //அதுனால போரடிக்கும்போது இந்த மாதிரி கண்ணில் அகப்படுபவர்களிடம் கதை கேட்கிறார் ஸ்ரீராம். //

   பொது அறிவை வளர்த்துக் கொள்ளலாமே என்றுதான் நெல்லை. மேலும் பதிவு தேத்தும் கடமை உணர்ச்சிதான்!

   நீக்கு
 37. //வல்லிம்மா படம் நிறைய கேட்டாங்கதான்... அதுக்காக இப்படியா!!!!//
  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இனியும் வல்லிம்மா ஆசையாக் கேட்பாவோ ஹா ஹா ஹா..

  //நானும் மாமாவும் எடுத்த செல்பியில் இருந்தவரை ஜூம் செய்து....!///

  ஆவ்வ்வ்வ் அவர் இந்த புளொக் பார்த்தாரோ அவ்ளோதேன்ன்ன் சைபர் கிரைம் ஆகிடபோகுது:)) ஹா ஹா ஹா..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்தத் தெளிவற்ற புகைப்படம் பார்த்தால் அவருக்கே அவரை அடையாளம் தெரியாது! ஹிந்திக்காரர் தமிழ் பிளாக் படிக்கப் போகிறாரா என்ன!

   நீக்கு
 38. வணக்கம் சகோதரரே

  இந்த வாரம் பயணத் தொடர் குறித்த செய்திகளுடன் நன்றாக உள்ளது.
  ஆமாம். எவ்வளவு நேரந்தான் இடைஞ்சலான இருக்கையிலேயே அமர்ந்திருப்பது? கீழே இறங்கி உலாவ ஆரம்பித்ததும்,"அவலாக" கிடைத்த நிறைய செய்திகள், படங்கள் என கிடைத்ததை எங்களுடன் பகிர்ந்த விதமும் மிகவும் ருசிக்க வைத்தது.

  சந்தோஷ் கதை மிகவும் கஸ்டமாக இருந்தது. குடும்பத்திற்கு தேவையான பணத்திற்காக குடும்பத்தையே விட்டு பிரிந்திருப்பது கஸ்டந்தான்.

  இட்லி சாம்பார் மாதிரி, மிளாகாய்ப்பொடியும் சாம்பார் மாதிரி வாளியில் இடம் பிடித்து விட்டதா? இப்போதெல்லாம் மி.பொடிக்குப் பின் பொடி நடையாக (என்னைப் பின் தொடர்ந்து வா.! என்ற மி. பொடியின் கட்டளையையும் மீறி,) ந.எண்ணை பின் தொடர்ந்து வர சோம்பல்பட்ட காரணத்தால், கல்யாண வீடுகளிலும் கூட எண்ணெய் கலந்த மிளகாய் பொடியையும், சிறு கரண்டியில் இட்லி, தோசைக்குப் பின் ஊற்றிச் செல்கிறார்கள். ஹா.ஹா.

  மாயா பஜார் பாட்டைப்பாடியதால் மிக்ஸர் மறுப்பேதும் சொல்லாமல் புளியோதரையுடன் ஜோடி சேர்ந்ததா? ஆனால் தயிர் சாதமும் ஊறுகாயும் பிறந்ததிலிருந்தே என்றுமே பிரியாத இணைப்பறவைகள்.

  எனக்கும் மதன் மஹால் இரட்டை வேடமோ என எண்ணும்படிக்கு மை.ம.கா.ராஜன் பட வீட்டைத்தான் நினைவூட்டுகிறது.

  கவிதை நன்றாக உள்ளது.
  உண்மை.. உண்மை.. காலம் நதியோடு கட்டவிழ்த்து கொண்டு சுகமாக சென்று விடுகிறது. சுமையான ஈரமண் மட்டும் நம் நினைவுகளில் சுமையை அதிகரித்து கொண்டு அமர்ந்திருக்கிறது. ரசித்தேன்.

  தலைமுறை தலைமுறையாக தொடரும் புண்ணிய செயல்கள் பகிர்வு அருமை. பயனுள்ளவை. விபரம் அறிந்து கொண்டேன். ஓவ்வொன்றுக்கும் பொருத்தமான பாடல்கள் மிகவும் ரசிக்க வைத்தது. பாடல்களை தேர்ந்தெடுத்து பதிந்ததற்கு மனமார்ந்த பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ​​வாங்க கமலா அக்கா...

   ஒரே இடத்தில இருந்தால் எழுத விஷயம் சிக்காதே! அதுதான்!

   எண்ணெயைக் கலக்கிக் கலக்கி அவர் மிபொ ஊற்றிய அழகு... ஆனால் காரமே இல்லை!

   அன்று புளியோதரையை விட தயிர் சாதம் நன்றாய் இருந்தது கமலா அக்கா.

   //கவிதை நன்றாக உள்ளது.//

   நன்றி. நன்றி.

   //ஓவ்வொன்றுக்கும் பொருத்தமான பாடல்கள் மிகவும் ரசிக்க வைத்தது. பாடல்களை தேர்ந்தெடுத்து பதிந்ததற்கு மனமார்ந்த பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி. //

   நன்றி.. நன்றி. நன்றி.

   நீக்கு
 39. ///காசிப் பயணக்கட்டுரைக்கும் இவருக்கும் என்ன தம்பி சம்பந்தம்? என்று கீதாக்கா கேட்பது போலிருக்கிறது. ///

  ஓ நீங்க காசிக்கோ போறீங்கள்?:) உங்கள் பயண அனுபவம் இட்லி பூரி எல்லாம் பார்த்ததில மீக்கு காசி மறந்து போயிந்தி:)) ஹா ஹா ஹா..

  மதன் மஹாலோ... அழகாக இருக்கு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //ஓ நீங்க காசிக்கோ போறீங்கள்?://

   ஓ.. அதைச் சொல்ல மறந்து விட்டேன் அதிரா. நான் காசிக்குச் சென்று வந்தேன். காசிப் பயணத்தைத்தான் சொல்லிக்கொண்டிருக்கிறேன். நம்புங்கள்!

   நீக்கு
 40. நினைவோ ஒரு பறவை... அது அப்பப்ப விரிக்கும் தன் சிறகை...
  கவிதையின் கற்பனை அழகு...

  ///ஏழைப்பெண்ணுக்கு திருமணம் செய்வித்தல் =====> 5 தலைமுறைக்கு.//
  ஜெயலலிதா அவர்கள் நினைவுக்கு வந்தா.. அவவுக்குத் தலைமுறையே இல்லையே..

  ///"ஆசை கோபம், களவு கொள்பவன், பேசத் தெரிந்த மிருகம்.., அன்பு நன்றி, கருணை கொண்டபவன், மனித வடிவில் தெய்வம்..///
  எனக்கும் பிடிச்ச வரி இது....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனக்குப்பிடிச்ச வரிகளை மட்டும் தனியாய் எழுதி வைத்திருந்தேன் அதிரா... இப்போ காணோம்! மறுபடியும் சேர்த்து வருகிறேன்!

   நீக்கு
 41. பதில்கள்
  1. யார் முதல்ல வரான்னு முக்கியமில்லை ஆனா யார் முதல் நூறை எட்டரங்களோ அவங்கதான் க்ரேட் :)
   ஆமா இதை சொன்னதாரு ??

   நீக்கு
 42. ///இந்த உணர்வு வெளிப்பாடு என் அக்காவிடமிருந்து நான் எதிர்பாராதது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?///

  உங்கள் நீரோடைக் கவிதைக்கு இது பொருத்தமான உதாரணம்... எத்தனையோ புத்தகங்கள் படித்தாலும் சிலது மனதைப் பின்னிப் பெடல் எடுத்துவிடும்.... ஆனா அதுக்காக உங்கள் அக்காவுக்கு வந்த அதே ஃபீலிங் எல்லோருக்கும் அக் கதைக்கு வரும் எனவும் எடுக்க முடியாது. சில கதைகள் படிக்கும்போது நமக்காகவெ எழுதப்பட்டது போலவும், நம் கடந்த காலத்தைப் பிரதிபலிப்பதாகவும் இருக்கும்....
  கடந்த காலங்கள் இனிமையானவை ஆக இருப்பினும்.. இளமைக் காலங்களை இப்போ நினைச்சுப் பார்க்கையில் அது ஒரு பயங்கர மிஸ்ஸிங்காகவும் அதனால கவலியும் வந்து துக்கம் தொண்டையை அடைக்கும் பல சமயம்.

  ஊசிக்குறிப்பு:
  இப்போ நான் படிக்கத் தொடங்கியிருப்பது “கையில்லா பொம்மை”.. அம்மா வந்திருப்பதாலும், நல்ல வெயில்.. கார்டினிங் வேலை இப்படி அதிகரித்திருப்பதாலும்.. இப்போ புக் படிக்க ரைம் கிடைக்குதில்லை...

  அப்போ நான் போட்டு வாறேன் .. வெளியே போகும் அலுவல் இருக்கு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ரசனையான பின்னூட்டம். அதாவது உணர்ந்து எழுதப்பட்டிருக்கும் பின்னூட்டம்.

   //உங்கள் நீரோடைக் கவிதைக்கு இது பொருத்தமான உதாரணம்... எத்தனையோ புத்தகங்கள் படித்தாலும் சிலது மனதைப் பின்னிப் பெடல் எடுத்துவிடும்....//

   அப்போ ன் கவிதை பின்னிப்பெடலெடுத்து விட்டது என்று சொல்ல வருகிறீர்கள்... ஓகே... ஓகே...

   கையில்லா பொம்மை ரா கி ர எழுதியது இல்லையா? மாருதி ஓவியம். என் பைண்டிங் கலெக்ஷனில் எங்கோ இருக்கிறது!

   நீக்கு
 43. நான் வெளியிடங்களில் காபி தேநீர் அருந்தமாட்டேன் :) என் கைசுவைக்கு பழகின நாவு வேறெதையும் வேண்டாது :)
  பவர்பேங்க நான் இன்னும் வாங்கலை :) காரில் சார்ஜர் இருக்கு அதில் யூஸ் செய்வேன் .
  ஆஹா பேப்பர் ப்லேட்ஸ் நல்லது .இட்லிஸ் என்ன மினி இட்லி அளவிற்கு இருக்கு !!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஏஞ்சல்... ரயில் என்பதால் பேப்பர் பிளேட்ஸ்... மற்றபடி நாங்கள் எவர்சில்வர் தட்டு, டம்ளர் எடுத்துச் சென்றிருந்தோம். சார்ஜ் செய்ய வசதி இருக்கிறது என்றால் பவர் பேங்க் அவசியமில்லையே.. பயணத்தில் தேவையாயிருக்குமோ என வாங்கி இருந்தேன்.

   நீக்கு
 44. // என் இளையவன் சப்பாத்தி, பூரிக்கெல்லாம் மிளகாய்ப்பொடி தொட்டுக்கொள்வான். மிளகாய்ப்பொடிப்பிரியன்.//
  என் பட்டுக்குட்டிக்கும் இதே தான் பிடிக்கும் :) இன்னிக்கும் தோசை மிளகாய்ப்பொடி சாப்பிட்டு ஸ்கூல் போனா :)
  அதுக்குமுந்தி 12 வயதுவரை ஒரு பெயர் வச்சிருந்தா தொட்டு தொட்டு :) இட்லி தோசா வை அதில் தொட்டு சாப்பிடுவதால் மேடம் சூட்டிய நாமம் :)
  தங்கேற்றாப்போல் பேர் ரையும் உச்சரிப்பா :) ஒரு ட்ரெயினி டீச்சர் வந்திருப்பதா சொன்னா மிஸ்டர் .வடையநேத்தன் :) என்ன பேர்னு சொல்லுங்க பாப்போம் :))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஏஞ்சல்! மி பொ காதலர்கள் நிறைய இருக்காங்க போல ஏஞ்சல்!!! தொட்டு தொட்டு ஹா ஹ ஹா ஹா சூப்பர்!!

   வடையநேத்தன் நம்மூர் ஆளா? இந்தியரா?
   கெஸ் செய்து பார்க்கத்தான்...அம்பேரிக்காவுல பத்மநாபன் paddy!!
   நேத்தன் - நாதன்?

   வடைய...ம்ம்ம்ம்ம் யோசிக்கிறேன்...

   கீதா

   நீக்கு
  2. குழந்தைகளின் பாஷையே தனி. அது அம்மாக்களுக்கு மட்டுமே புரியும்! பல வருடங்கள் சில வார்த்தைகள் நினைவில் இருந்து சொல்வார்கள். வடையநேத்தன் என்ன என்று யூகிக்க முடியவில்லை!

   நீக்கு
  3. haahaaa :)its vaidyanathan

   வைத்தியநாதன் .. நண்பி ஜாய்ட்டி ஜாய்ட்டி என்று சொல்வாள் நான் எதோ ஜாய்ஸ் என்ற பேரை சொல்றான்னு நினைச்சா அம்மா இட் மீன்ஸ் flame என்றா ..அது ஜாய்ட்டி :)))))))) jyothi ஜோதி யைத்தான் ஜாய்ட்டின்னு ஸ்கூல் முழுதும் கூப்பிட்டிருக்கு

   நீக்கு
 45. ஸ்ஸ்ஸ் தயிர் அன்னமும் புளியோதரையும் நாவூற வைக்குதே ஆமாம் மிக்ஸர் பாக்கெட்டில் பூந்தி மட்டுமிருக்கே எங்கே அந்த ஓமப்பொடி ??

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓமப்பொடி, மிக்ஸர் இல்லை. காராபூந்திதான் அது. பிழை பொறுத்தருள்க!

   நீக்கு
  2. அதுதானே நாங்கல்லாம் யாரு விளக்கெண்ணெய் பாட்டிலோட உலவரோமே

   நீக்கு
 46. பீஹாரிகள் இங்குமுண்டு .மிகவும் ஏழை ஸ்டேட் ஒவ்வொருவரின் ஸ்டோரீஸ் கேட்கும்போது பாவமா இருக்கும் .
  6 மாதத்துக்கு ஒருமுறைதான் குடும்பத்தை சந்திப்பாரா பாவம் அவர் பேரில் மட்டும் சந்தோஷ் இருக்கு :(

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பாவமாய்த்தான் இருந்தது. இப்படியெல்லாம் கஷ்டப்படுகிறார்களே என்று எண்ணம் வந்தது. காலை ஒரு டீ மட்டும் இலவசமாம். மற்றவை எல்லாம் இவரே காசு கொடுத்து வாங்கிக்கொள்ளவேண்டும். பதிவில் சேர்க்க மறந்து போன விஷயம் இது!

   நீக்கு
 47. //பசுவின் உயிரைக் காப்பாற்றுவது =====> 14 தலைமுறைக்கு.//

  ஸ்ஸ் அப்படி நிம்மதி எங்கப்பா புண்ணியத்தில் நாங்க பிழைத்தோம் .எத்தினி பசு மாடுகளை டெலிவரி டைமில் காப்பாற்றியிருக்கார்
  .
  அப்புறம் ஈ எறும்பு பல்லி நத்தை பறவை பூஸ் பைரவர் இவங்களுக்கெல்லாம் எத்தினி தலைமுறைன்னு சொல்லலியே ??

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்புறம் ஈ எறும்பு பல்லி நத்தை பறவை பூஸ் பைரவர் இவங்களுக்கெல்லாம் எத்தினி தலைமுறைன்னு சொல்லலியே ??//

   ஏஞ்சல் இதை மிகவும் ரசித்தேன்!!! நல்ல கேள்வி! நான் கேட்க நினைத்து கேட்கலை...மகன் நிறைய பைரவர் பூஸ் காப்பாற்றுகிறானே!! (அவன் காப்பாற்றுகிறான் என்று சொல்லக் கூடாதுதான்!! பை த க்ரேஸ் ஆஃப் அல்மைட்டி!)

   கீதா

   நீக்கு
  2. @கீதா ரங்கன்.... நட்புனால எழுதறேன்... 'தலைமுறை' என்பது செய்பவருடைய தலைமுறை, அதற்கு பின் வரும் தலைமுறை. அதுனால அவர் செய்யும் செயலினால் உங்களுக்கு 'புண்ணியம்' வரும்னு தோணலை... அதுமாதிரி, சரவண பவன் சமையல் பரிமாறுபவர், நான் இத்தனை பேருக்கு அன்னதானம் செய்தேன்னு சொல்லமுடியுமா?

   உங்க பையர் செய்வது, 'உயிர் காக்கும் தொழில்'. அதற்கான புண்ணிய பலங்கள் அவரைச் சேரும். அதிலும் 'உண்மையான எண்ணத்தோடு' அவர் உதவிகளைச் செய்வதால், நல்ல பலன்கள் உண்டு (தன் டார்கெட்டை அடைவதற்காக சிசேரியன் செய்யச் சொல்லும் மருத்துவர்களைவிட). அலுவலகப் பணியைத் தவிர, மற்ற சமயங்களில் அவரே முயற்சி எடுத்துக்கொண்டு செய்கின்ற உதவிகள், அலுவலகப் பணியின் அங்கமாகச் செய்யும் பணியைவிட மிக மிக அதிக பலன்களைத் தரும்.

   அவர் மனதில் நல்ல எண்ணத்தை விதைத்துள்ள உங்களைப் பாராட்டறேன்.

   நீக்கு
  3. நம்மை அறியாமல் செய்யும் நல்ல செயல்கள் பலவற்றை நாமே உணர்ந்திருக்க மாட்டோம். கீதா சொன்னதுபோல நல்ல செயல்கள் செய்கிறோம் என்கிற உணர்வு இல்லாமல், அதை ஒருகடமை போல நினைத்துச் செய்யாமல் இயல்பாக நடக்க வேண்டும் அது. சரவணா பவனில் அன்னம் தருபவர் காசுக்கு விற்கிறார். உண்ணும் உணவை காசுக்கு விற்பவர்களுக்கு ஏதோ பாவம் சேரும் என்கிற நம்பிக்கையும் உண்டு.

   நீக்கு
 48. ஸ்ரீராம் பாவம் உங்க அக்கா உடனே போய் அந்த புத்தகத்தை எடுத்திட்டு வாங்க ..சில கதைகள் பாடல்கள் உள்ளத்தை என்னமோ செஜிடும் அது வார்த்தையில் வடிக்கமுடியாது .
  ஒவ்வொருவருக்கும் இந்த உணர்வுகள் வேறுபடும் .சிலருக்கு சிலரின் எழுத்துக்கள் சிலருக்கு சினிமா பாடல்வரிகள் சிலருக்கு ஓவியம் .எங்காச்சும் அந்த க்ரையிங் பேபிThe Curse of the Crying Boy Painting படத்தை பார்த்தா நெஞ்சு வெடிக்கும் எனக்கு அப்புறம் ரூட்டில் வீசி கிடைக்கும் குட்டி பொம்மை .இப்படி உணர்வுகள் ஆளாளுக்கு வேறுபாடும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் எங்கே உடனே போய் வாங்க? நாளாகும்! அதுவரைக்கும் அவங்க படிச்சு அழுவாங்கன்னு நினைக்கிறேன்!!!!

   நீக்கு
 49. கீதா அக்காவைக் காணோம்?! என்ன ஆச்சு? பயணத்தில் இருக்காங்களோ?!!!

  கீதா

  பதிலளிநீக்கு
 50. கல்லூரி பெண் எப்படி தொடர்ந்து சளைக்காமல் தூங்கி வந்தார்? ஜபல்பூரில் இறங்கி விட்டரா அத்தையின் அன்பை பெற்று.
  பயணத்தில் சரியான பேச்சு துணை இல்லையென்றால் போர் அடிக்கும்தான்.
  காபி, டீ நம் வீட்டைப் போல் இருக்காது, நான் இரண்டு குடிப்பதில்லை என்பதால் பிரச்சனை இல்லை பயணத்தில்.

  மதன்மஹால் நன்றாக இருக்கிறது.


  பயணத்தில் குறைந்த அளவு உணவு நல்லது தான். தொட்டுக் கொள்ள காரா பூந்தி பயணத்தில் சரிவருமா?


  கேபின் கேர்டேக்கர் சந்தோஷ் வாழ்கை வரலாறு மனதை சங்கடப்படுத்துகிறது.
  குப்பைகளை ரயில் நிற்கும் போது அங்கு உள்ள குப்பைகூடையில் கொட்டக்கூடாதா?

  பயண நட்பு அத்தைக்கு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஜபல்பூரில் இறங்கினார். அவர் லக்கேஜ்களை இறக்க நானும் உதவினேன். அவர் தோழிகள் ஒல்லியாய் இருந்தது ஆச்சர்யம்! அது சரி, அவர்களும் குண்டாய்த்தான் இருக்க வேண்டுமா என்ன!!!

   நன்றி கோமதி அக்கா.

   நீக்கு
 51. கவிதை மிக அருமை.
  அத்ற்கேற்ற திரை பாடல்கள் அருமை.

  //நாம் செய்யும் ஒவ்வொரு நல்ல‍ காரியத்தின் புண்ணியம் எத்த‍னை தலைமுறைக்கு சென்று சேரும் சேரும் என்பது குறித்து பெரியவர்கள் சொல்லி கேட்ட வரையில் ://

  நல்ல பகிர்வு.

  //படிக்கப் படிக்க தொண்டைக்குப் பக்கத்தில் ஏதோ சங்கடம் செய்கிறது. வயிற்றில் ஏதோ சங்கடம் செய்வது போல.. அழுகை வருகிறது போலவும் இருக்கிறது.. //

  அக்கா சொல்வது சரிதான். அவர் கதைகள் படித்தால் இந்த உணர்வுகள் வரும்தான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கோமதி அக்கா ஏன் அமைதியா இருக்கிறா?... போஸ்ட்டும் போடாமல்....
   வெளியே நிற்பதால் நிறைய கும்மி போட முடியவில்லை... வீட்டுக்கு வந்து தொடர்கிறேன் அதுவரை யாரும் நித்திரை கொள்ளக்குடா ஜொள்ளிட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன் கர்ர்ர்ர்ர்:)

   நீக்கு
  2. அதிரா, கோமதி அக்கா வீட்டில் உறவினர் வருகை.
   இன்று தான் ஊருக்கு போனார்கள்.
   உடல்நிலை சரியில்லை தொடர்ந்து விழாக்களில் கலந்து கொண்டு இருக்கிறேன்.
   வெயில் கடுமையாக இருக்கிறது. தலைவலி, கால்வலி, என்று உடல்நிலை தொந்திரவு அது தான் அமைதி.
   பதிவு போட தோன்றவில்லை.

   நீக்கு
 52. நன்றி கோமதி அக்கா. நான் லா ச ரா படித்ததில்லை. எப்போதோ படித்திருக்கிறேன். கேஜிஜி சொன்ன உணர்வுதான் எனக்கும் தோன்றியது.

  பதிலளிநீக்கு
 53. ல ச ர வின் கதைகள் படித்த போது ரசித்திருக்கவில்லை எல்லாமெ ஏதோ அப்ஸ்ட்ராக்டாக இருக்கும்

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!