செவ்வாய், 2 ஏப்ரல், 2019

கேட்டு வாங்கிப்போடும் கதை : தனிமரம் - நெல்லைத்தமிழன்தனிமரம்
நெல்லைத்தமிழன் 


"என்னப்பா யோசிச்சுண்டிருக்க?"

பத்மநாபன் தன் பையன் வாசுவைப் பார்த்தார்.  அவர் வழியில் அவனுக்கும் கற்பனைத்திறன் இருப்பது அவருக்கு மகிழ்ச்சியாக இருந்தது.  பலர் வீட்டில், எழுத்தாளர்களின் குழந்தைகள், எழுத்தை விரும்புவதில்லை.  இக்காலத்துக்குத் தேவையான காசை, எழுத்து மூலம் சம்பாதிப்பது கடினம்.  அதனால் 'எழுத்தாளர்', 'கதாசிரியர்' என்ற சொல்லையே பெரும்பாலான எழுத்தாளர்களின் வாரிசுகள் வெறுப்பார்கள்.  அப்பாவைப் பொருட்படுத்துவதுமில்லை.  ஆனால் வாசு கதைகளில் நிறைய ஆர்வம் காட்டுவான்.  அவனுமே சென்ற வருடம் கல்லூரி மலரில் ஒரு கதை எழுதி இருந்தான்.

"இல்லைடா....   ஒரு கதை எழுதணும்.படம் கொடுத்திருக்காங்க.  அதுக்கேத்ததா இருக்கணும்.  இன்னும் முழுமையான ஃப்ளோ கிடைக்கலை."

"இது என்னப்பா கஷ்டம்?  நீங்கதான் நிறைய கதை எழுதுவீங்களே. படத்தைக் காட்டுங்க..."

"இதோ பாரு...  ஒரு வயசானவர் படித்துறைல உட்கார்ந்துகிட்டு கையைக் கூப்பிட் கொண்டிருக்கிறார்.  அவர் பூணூல்ல சாவி இருக்கு.  உனக்கு என்ன தோணுது?"

"என்னப்பா இது?  வயசானவர்...  படித்துறைல இருக்கார்...  குளிக்கறதுக்கு முன்னாடி தண்ணீரைப் பார்த்துக் கும்பிட்டுட்டு தன்னிலை இறங்குவாராய் இருக்கும்..."

“அப்படி இருக்காதுடா. சாயந்திரம் வந்து பாரு. கதையை அவுட்லைனா எழுதிவைக்கிறேன். உன் அபிப்ராயம் சொல்லு”.

***

கருவேப்பிலை -  சிறுகதை – எழுத்தாளர் பத்மநாபன்


அப்பா… அம்மாவோட காரியம்லாம் நல்லாவே பண்ணியாச்சு. ரெண்டுவாரம் லீவு போட்டாச்சு. இப்போ ஆபீஸ் வேலைலாம் நிறைய இருக்கு. நான் கிளம்பவா?
தன்னிடம் சொல்லிக்கொண்டு போவதற்காக வந்த பையனைப் பார்த்தார். அவன் பெண்டாட்டி ஒரு வாரம் முன்னமே சென்றுவிட்டாள்.

***

கஷ்டப்பட்டு நில புலன்களை விற்றுப் படிக்க வைத்த ஒரே மகன், தன் தந்தை தனியாக எப்படி காலம் தள்ளமுடியும் என்ற எண்ணமே இல்லாமல் போய் வருகிறேன் என்று சொல்வதைப் பார்த்து மனசு வருத்தப்பட்டது. 

அவருடைய கடமை அவனை ஒரு ஆளாகக் கொண்டுவருவது. அவனும் கஷ்டத்தை உணர்ந்து படித்தான், பெரிய ஆளாகினான். அவனுடைய படிப்பையும் வேலையையும் பார்த்து அவனுக்கு நிறைய வரன்கள் வந்தன.  கருணாகரனுக்கோ தன் பையன், அவன் மாமாவின் மகளைத் திருமணம் செய்துகொள்ளணும் என்று ரொம்ப ஆசை.

‘மாதவா… கல்பனாவைக் கல்யாணம் பண்ணிக்கறயா? ஜாதகமும் பொருந்தியிருக்கு’

‘அப்பா… என்னை ஆளாக்கறதுக்கு நீங்க ரொம்பவே கஷ்டப்பட்டுட்டீங்க. நான் நல்ல உத்தியோகத்துல இருக்கேன். எனக்கு கொஞ்சம் வசதியான பெண்ணாப் பாருங்க’

“கல்பனா உன் மாமா பொண்ணுடா. உறவு விட்டுப்போலாமா? அழகுக்கு ஒண்ணும் கொறச்சல் இல்லையேடா”

“அப்பா… எனக்கு சாதாரண சாப்பாடு போடறதுக்கே நீங்க எவ்வளவு உழைச்சிருக்கீங்க. ஒரு சைக்கிள் வாங்கிக்கவே நாம எவ்வளவு யோசிச்சோம்னு நினைச்சுப்பாருங்க. வெறும்ன உறவு என்பது மட்டும் போதுமாப்பா? நல்ல உத்தியோகத்துல இருக்கேன். நிறைய பணக்காரங்க வீட்லேர்ந்து பெண் கொடுக்க வருவாங்க. அதுல நமக்கு ஏத்த இடமாப் பார்த்து முடிச்சுடுங்கப்பா. நாளைக்கு என் மகனை நான் ரொம்ப நல்லா வளர்க்கணும், கேட்டதெல்லாம் கிடைக்கும்படியான வாழ்க்கை கொடுக்கணும்னு நினைக்கறேன்பா”

“அதுல தப்பில்லை. ஆனா சாதாரணமா இருந்து, அந்தக் கஷ்டத்துல நம்ம குழந்தையை வளர்த்து பெரிய ஆளாக்கும்போது அது ஒரு தனி சுகம்பா.  உனக்காக நாங்க எதையும் இழந்ததுபோல நாங்க என்னைக்குமே நினைச்சது கிடையாது. நம்ம குடும்பத்துக்கு பணத்தால இல்லைனாலும், மனசால உதவ உங்க அம்மாவோட சகோதரன்கள் இருந்தாங்க. உறவு என்பது முக்கியமில்லையா?”

“அப்படி நான் நினைக்கலைப்பா. நான் இப்போ பெங்களூர்ல வேலை பார்க்கிறேன். இன்னும் உத்தியோகத்தில் ப்ரமோஷன்லாம் வரும். பெரிய பெரிய பதவிகளுக்கெல்லாம் நான் வந்துடுவேன்பா.  அதுக்கு ஒத்தாசையா இருக்கறமாதிரி கொஞ்சம் பணக்காரக் குடும்பத்துலதாம்பா எனக்கு பொண் பார்க்கணும். அம்மாவுக்கு இதெல்லாம் புரியாதுப்பா. அவள்டயும் என் எண்ணத்தைச் சொல்லிடு”

மச்சினன் ரங்கநாதனிடம் இதனைச் சொல்வதற்குள் அவர் தவித்துப்போனார்.  மனைவியில் வருத்தம் ஒரு புறம். நல்ல பெண்ணை, வெறும் பணத்தின் பெயரால் விட்டுவிடுகிறானே என்ற தவிப்பு.

“அத்திம்பேர்… இது ஒரு பெரிய விஷயமா… சொல்றதுக்குள்ள இவ்வளவு குமைஞ்சு போறதுக்கு… வாழப்போறது மாதவன். அவன் எண்ணப்படித்தான் கல்யாணம் நடக்கணும். கல்பனா ஒருவேளை இந்தச் சம்மந்தத்தை விரும்பமாட்டாள்னு எனக்குத் தோணினாலே கட்டாயப்படுத்தி கல்யாணம் செய்துகொடுக்கமாட்டேனே. அதுனால ஒண்ணும் விசாரப்படாம மாதவனுக்கு வரன் பாருங்கோ”

ரங்கநாதனின் பேச்சு அவருக்கு வருத்தத்தை அதிகப்படுத்தியது. கையில் இருக்கும் வைரத்தை விட்டுவிட்டு இன்னொன்றைக் கேட்கிறானே பையன் என நினைத்தார்.***
மாதவன் நினைத்தபடியே பெங்களூரில் இருந்து அவனுக்கு ஒரு ஜாதகம் வந்தது. நல்ல பணக்கார இடம். மாதவன் ஆசைப்பட்டபடியே அவனுக்குத் திருமணம் செய்துவைத்தார். திருமணம் முடிந்து குலதெய்வக் கோவிலில் வழிபாடு முடிந்ததும் மாதவன் அப்பாவை நோக்கி வந்தான்.

“அப்பா… நாங்க கிளம்பறோம்.  மாமா மாமி கிட்டயும் சொல்லிண்டாச்சு. மாசம் மாசம் பணம் அனுப்பிடறேன். கவலைப்படவேண்டாம். அம்மாக்கு முடியலைனா சமையல் பண்ணி சிரமப்பட வேண்டாம். யாரேனும் மாமியை சமையலுக்கு ஏற்பாடு பண்ணிக்கோங்கோ”.

திருமணத்துக்குப் பிறகு சில சமயங்களில் கடிதம் எழுதுவான். 6-8 மாசத்துக்கு ஒரு தடவை அந்தப் பகுதியில் வந்தால் வந்து பார்த்துவிட்டுப் போவான்.  மாதம் 1ம் தேதின்னா பணம் அனுப்பிவிடுவான்.

அந்தக் கிராமத்தில் கருணாகரன் மனைவியோடு சந்தோஷமாகத்தான் இருந்தார். தன் ஒரே பையனோடு இருக்கமுடியவில்லையே என்ற வருத்தம் இருவருக்கும் உண்டு. விதியை யாரால் மாற்ற முடியும்?

பையன், தன் மனைவியோடு சென்றபிறகு, கிராமத்தில் அவர்கள் இருவரும்தான்.  எதற்கும் அவசரப்படவேண்டியதில்லை.  காவிரி கரையில் ஸ்னானம் செய்துவிட்டு, கோவிலுக்குப் போய்விட்டு மெதுவாக வீட்டிற்கு வந்தால், காலை உணவு தயாரா இருக்கும்.  அப்போ அப்போ மச்சினன் வீட்டிற்கும் போக வர இருப்பார். முடிந்தபோது கோவில் நந்தவனத்தைச் சரி செய்துகொண்டிருப்பார். கோவிலுக்கான பணிகளைச் செய்வார்.  மதியம் சிறிது உறக்கத்திற்குப் பிறகு, திரும்பவும் காவிரிக்கரை, தினப்படி கடமைகள், கோவில், இரவு உணவு என்று அவருடைய வாழ்க்கை ஒரே வட்டத்தில் உழன்றுகொண்டிருந்தது, மனைவி மறையும்வரை.

***எப்படித் தனியா இருப்பேனோ… அவ இருந்தது எனக்கு ரொம்பவும் ஆறுதலா இருந்ததுடா. இனிமே தனியா எப்படி இருக்கப்போறேன்னு தெரியலை.

“எனக்கும் அம்மா போனது ரொம்ப வருத்தம்தான். ஆனால் என்ன, பெங்களூர் வாழ்க்கைக்கு திரும்பியாச்சுன்னா, மனசுல நீங்க ரெண்டு பேரும் கிராமத்தில் எப்போதும்போல் சந்தோஷமாக இருக்கீங்கன்னு நினைச்சுண்டுடுவேன்”

‘நீங்க கவலைப்பட வேண்டாம்பா.. மாமா மாமி இந்த ஊர்லதானே இருக்காங்க. அவங்க பாத்துக்கமாட்டாங்களா?  உங்களுக்கு தினமும் சமைச்சுத் தரதுக்கு ஆள் இந்த ஊர்ல கிடைப்பாளே. எவ்வளவு கேட்டாலும் கொடுத்துடலாம்.   எனக்கு லீவு கிடைக்கும்போதெல்லாம் இங்க வர்றேன்.  மாசா மாசம் பணமும் அனுப்பிடறேனே… எப்போ வேணும்னாலும் எவ்வளவு வேணும்னாலும் அனுப்பறேன்பா. பணத்தைப் பத்தி நீங்க எப்போவும் கவலைப்படவேண்டாம். கிராமத்துலேயே வளர்ந்து வாழ்ந்த உங்களுக்கு பெங்களூர் சரிப்பட்டுவராதுப்பா. நானும் அடிக்கடி ஆபீஸ் விஷயமா ஊர் சுற்றிக்கொண்டிருப்பேன். பசங்களை ஸ்கூலுக்கு கொண்டு விடறது, பாட்டு, கராத்தே கிளாஸுக்கு கொண்டு விடறதுன்னு கவிதா ரொம்ப பிஸியா இருப்பா.  அந்த ஊர்ல உன்னைக் கவனிக்க எங்களுக்கு நேரமே இருக்காதுப்பா. அதுக்கு இந்த ஊர்லயே இருந்தயானா தெரிந்த ஜனங்கள், உறவுகள்லாம் இங்க இருக்கு. ஒண்ணும் கஷ்டம் இல்லைப்பா”

வாழ்கைல மகனிடம் தனக்கென்று ஒன்றுமே கேட்டறியாத அந்தத் தந்தை, மனதில் உள்ளதை வெளிப்படையாக அப்போதும் சொல்ல விரும்பவில்லை.
மகன் பஸ்ஸில் ஏறினபோது அவரது கண்ணை கண்ணீர் மறைத்தது.

நாம நல்லா வாழ்ந்தோம் என்பதற்கு என்ன அர்த்தம்? பெத்த பசங்களை படிக்கவைத்து ஆளாக்குவது மட்டும்தான் வாழ்க்கையோட நோக்கமா? அவனுக்குன்னு ஒரு குடும்பம்னு ஆனப்பறம் நாம ஒதுங்கிடணுமா? அதுக்கப்புறம் நாமே, நம்முடன் கூட யாரும் வராத சாலையில் நம் முடிவை நோக்கி பயணத்தைத் தொடரணுமா?

நம்ம தலைமுறைல நான் வேலைக்காக பக்கத்தூருக்குப் போனாலும், அப்பா அம்மாவோட சேர்ந்துதானே வாழ்ந்தோம். அதுனால வரும் சிக்கல்களையெல்லாம் சகித்துக்கொண்டு, அவங்களோட இருக்கறதுல சந்தோஷத்தைத்தானே கண்டோம்.  இந்தத் தலைமுறைல, நம்மை கரை ஏற்றும் கடமை பசங்களுக்குக் கிடையாதா? இப்போ உள்ள வாழ்க்கைல, அப்பாவோ அம்மாவோ, பசங்களுடைய வாழ்க்கைல வெறும் கருவேப்பிலைதானோ?

***

“என்னப்பா ஒரே சோகமா எழுதியிருக்க”

“இல்லைடா… அந்த போட்டோவைப் பார்க்கும்போது, அந்தப் பெரியவர், தனியா கஷ்டப்படறதா என் மனசுக்குத் தோணித்து. படித்துறைலேர்ந்து காவிரி நீர் சல சலத்து ஓடறதைப் பார்த்து, தன் வாழ்க்கைல நடந்ததை நினைச்சு மனசு குமுறறதா நினைச்சு கதை எழுதியிருக்கேண்டா. இன்னும்கூட சோகத்தைக் கூட்டி, படிக்கறவங்க மனசுலயாவது கண்ணீர் வர வைக்கணும்னு ஆசை. அவுட்லைன் நல்லா வந்திருக்கா”

“ஏம்பா… இதை எழுதும்போது கிராமத்துல தனியா இருக்கற நம்ம தாத்தா நினைவுக்கு வரலையா?”

221 கருத்துகள்:

 1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம் மற்றும் தொடரும் அனைவருக்கும்

  அட நெல்லையின் கதையா!!

  வரேன்...நானும் இந்த படித்துறைப் பெரியவர் குறித்து இன்னொரு கதை எழுதி முடிக்காமல் வைச்சுருக்கேன்

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன்.

   நீக்கு
  2. வணக்கம் கீதா ரங்கன் மற்றும் வருகை தரும் அனைவருக்கும். இங்கெல்லாம் கேஜிஜி சார் வரதில்லை போலிருக்கு.

   நீக்கு
 2. கடைசில வர கருப்பு எழுத்துகள் குறிப்பாக ஒரு வரி மனதை என்னவோ செய்துவிட்டது.

  வரேன் பிறகு

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காலை வேலைகளுக்கிடையிலும் வந்ததற்கு நன்றி கீதா ரங்கன்(க்க்க்க்க்க்க்க்க்க்க்க்கா)

   நீக்கு
 3. அப்பப்பா! கடைசி வரியில் வைத்தீர்கள் பாருங்கள் ஒரு பஞ்ச்! சுருண்டு விட்டேன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அந்த ஒரு வரிக் கருவை மனதில் வைத்துதான் முழுக்கதையும் உருவாகி இருக்கிறது.

   விஷயம் என்னவென்றால் நானும் இதைக் குறிப்பிட்டுதான் ப்ளஸ்ஸிலும், பேஸ்புக்கிலும் பகிர்ந்து விட்டு வந்திருக்கிறேன்.

   [ அந்தக் கடைசி வரி பன்ச்...
   அது கதையை முழுதாகப் படித்தபின் படித்தால்தான் மனதில் அடிக்கும்.]

   நீக்கு
  2. யெஸ் அந்த வரிதான் அந்தக் கடைசி வரிதான் பாதித்தது! ஸ்ரீராம்.

   செம அது!!! அது அது தான் அடிக்கும்!! எனக்கு காலையில் முதலும் கடைசி கருப்பும் தான் கண்ணில் பட்டது....

   அதான் அந்தக் கடைசி வரியை மட்டும் சொல்லிட்டுப் போய்ட்டேன்..

   மீண்டும் வரேன்...

   கீதா

   நீக்கு
  3. வாங்க Bandhu. முதல் முறையா உங்களைப் பார்க்கிறேன்.

   நான் பொதுவாவே பலவற்றை (இதுக்கு என்ன செய்யணும், அவங்க என்ன பண்ணணும்) நினைக்கும்போது நான் என்ன செய்கிறேன் என்றும் நினைத்துப் பார்ப்பேன். அதுதான் இந்தக் கதைக்குத் தூண்டுகோல்.

   நீக்கு
  4. ஸ்ரீராம்... அபூர்வமான உங்கள் விமர்சனத்திற்கும், உற்சாகப்படுத்துவதற்கும் மிக்க நன்றி... நான் முகநூலில் இல்லாததான் அங்கு நடப்பது தெரியாது...

   நீக்கு
 4. காலை வணக்கம்.

  ஆஹா இன்றைக்கு நெல்லைத் தமிழன் கைவண்ணத்தில் கதை. நன்றாக இருக்கிறது.

  கடைசி வரி - “தனியா இருக்கிற தாத்தா நினைவுக்கு வரலையா?” மனதைத் தொட்டது...

  சிறப்பாக எழுதி இருக்கிறார். பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி வெங்கட்... உங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும்.

   நீக்கு
 5. மனசிலே நினைச்சேன். இன்னிக்கு நெ.த.வோட கைவண்ணமா இருக்குமோ என! அதே போல்! இந்த வாரம். நெ.த. வாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆரம்!. வாழ்த்துகள். கதை நல்லா வந்திருக்கு. யதார்த்தம். பலரும் இப்படித் தான் தங்கள் தவறை நினைக்காமல் இருக்காங்க!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கீசா மேடம்... ஏன் அப்படி நினைத்தீங்க...இன்றைக்கு நான் எழுதும் கதையா இருக்குமோ என்று?

   வாஆஆஆஆஆஆரம்லாம் கிடையாது. இப்போல்லாம் யாராக இருந்தாலும் திங்கள், செவ்வாய் ஸ்லாட் மட்டும்தான். முன்னால் 'புதன் புதிர்' இருந்தது. இப்போ அங்க கேள்வி மட்டும்தான் கேட்கலாம். ஞாயிறு அன்று, ஒருவேளை கேஜிஎஸ் அவர்கள் பிரயாணம் போகவில்லை என்றால், நாம் அனுப்பும் படங்கள் வெளியாகக்கூடும். ஹாஹா.

   நீக்கு
  2. மனித மனம் அது கீசா மேடம்... மத்தவங்க தவறு பளிச்சுனு கண்ணுக்குப் படும் (வெள்ளை வேஷ்டியில் உள்ள கறை போல). நம் தவறுகள், கருப்பு வேஷ்டியில் உள்ள கறைபோல இருந்தாலும் 'இல்லை' என்றே நம்புவோம்.

   நீக்கு
 6. கடைசி வரி ட்விஸ்ட் கதை படிக்கும்போதே மனதில் தோன்றியது. எதிர்பார்த்த முடிவு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அந்த வரி முதலிலேயே உங்களுக்குத் தோன்றியிருந்தால், கதை எழுதுவதில் நீங்க கில்லாடிதான் கீசா மேடம்... எத்தனையோ நிகழ்வுகளைப் பார்த்திருப்பதனால் உங்களுக்குத் தோன்றியிருக்கலாம்.

   நீக்கு
 7. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
  நெல்லைத்தமிழன் கதை மனதைத் தொட்டது. எத்தனையோ
  வயதானவர்களின் நிலமை இதுதான்.

  கலங்க வைத்துவிட்டது உங்கள் எழுத்து. என் பெற்றோரை நினைத்துக் கொண்டேன்.
  ஒரே ஊரில் இருந்தும் வாரம் ஒரு முறைதான் சென்று பார்ப்பேன்.

  இப்பொழுது தினம் எங்கள் பிள்ளைகள் தொலைபேசியில் விசாரிக்கிறார்கள்.
  மகள் அருமையாகக் கவனித்துக் கொள்கிறாள்.

  உங்கள் கதை எல்லோரையும் தொட்டுவிடும். மனம் நிறை வாழ்த்துகள் மா.
  வரும் காலம் இனிதே நடக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் வல்லிம்மா. உங்கள் கருத்தும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ந்தேன்.

   பொதுவா சுயநலம் கொஞ்சம் அதிகமானதால்தான் இந்த நிலைமை. நம்ம மகிழ்ச்சி, நமக்கு முந்தைய தலைமுறையின் மகிழ்ச்சியோடு இயைந்து போகலை. அவங்களுக்கு கோவில், குளம், கச்சேரி என்று இருந்தால் நமக்கு செல்ஃபோன், சினிமா, ஆங்கிலப்பாடல்கள் என்று மாறிவிடுகிறது. இதில் நாம் மறப்பது, நமக்கு அடுத்த ஸ்டேஜ் அதுதான் என்பது.

   நன்றி..

   நீக்கு
  2. உண்மையே மா. என்னைவிட என் குழந்தைகள் பொறுப்புள்ளவர்கள்.

   எனக்கு வீட்டுப் பெரியவர்கள் இருந்தார்கள்.அம்மாவுக்கு
   இதய சிகித்சையின் போதுதாப் என்னால் முழுமையாகக் கவனம் செலுத்த
   முடிந்தது. நான்,தம்பிகள், அப்பா எல்லோரும் அப்போது பலமாக இணைந்திருந்தோம்.

   நீக்கு
 8. அனைவருக்கும் காலை வணக்கம். இது நெல்லைத் தமிழன் வாரமா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காலை வணக்கம் பானு அக்கா. Yes!

   நீக்கு
  2. வாங்க பானுமதி வெங்கடேச்வரன் மேடம்.... வாரத்தின் தொடக்கம்தான். நாளை கேஜிஜி என்று மாறிவிடும்...

   நீக்கு
 9. பதில்கள்
  1. எதற்கு யாரிடம் மன்னிப்பு எனக் கேட்டேன். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் பதிலே இல்லை? என்ன நெல்லை ஒளிஞ்சுண்டு இருக்கார் போல! :)))))

   நீக்கு
  2. ஒளியவில்லை கீசா மேடம்... காலை வேலைகள்... இன்னும் சில வேலைகள் பாக்கி இருக்கு. ஒத்திப்போட்டுள்ளேன்.

   நீக்கு
  3. கீதாக்கா ஸ்ரீராம் மன்னிப்பு என்று சொன்னது, கவனமின்மை என்று சொன்னதுக்குக் காரணம் புதன் பதிவு வெளியாகி பின்னர் எடுக்கப்பட்டது சென்ற ஞாயிறு பதிவு போல...

   அதுக்குத்தான் என்பது எனது ஊகம்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

   கீதா

   நீக்கு
 10. அனைவருக்கும் அன்பின் வணக்கம்..
  வாழ்க நலம்...

  பதிலளிநீக்கு
 11. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்.
  இன்று என்ன செவ்வாய் கதையும், புதன் பதிவும் வந்து இருக்கிறது?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாழ்க வளமுடன் கோமதி அரசு மேடம்... 'செவ்வாய் கதை/புதன் பதிவு' - அபுரி

   நீக்கு
  2. நாளைய பதிவையும் இன்னிக்கே பப்லிஷ் பண்ணிட்டார் ஸ்ரீராம்

   நீக்கு
  3. ஆனா நான் பாக்குறதுக்குள்ளே நீக்கிட்டார் :)

   நீக்கு
  4. ///Angel2 ஏப்ரல், 2019 ’அன்று’ பிற்பகல் 12:52
   ஆனா நான் பாக்குறதுக்குள்ளே நீக்கிட்டார் :)///

   இதுக்குத்தான் அதிராவைப்போல சுறுசுறுப்பா இருக்கோணும் என்பது:))

   நீக்கு
  5. @அதிரா... நாங்கள்லாம் பிறர் தவற விடுவதை லபக் என அமுக்கமாட்டோம். தவறுதலா புதன் இடுகையை வெளியிட்டதை, செவ்வாய் கேவாபோக முன்னால் எப்படிப் படித்தீர்கள்? கேட்டா "சுறுசுறுப்பாம்"

   நீக்கு
 12. வணக்கம் சகோதரரே

  இன்றும் நெல்லை சகோதரரின் கதையாக (அவர் எழுதிய கதையாக ஹா ஹா) இருக்குமென நேற்றே அனுமானித்தேன். கொஞ்சம் படித்தேன். முடிவு வரிகள் மனதில் இறங்குகின்றன. பிறகு பொறுமையாக அனைத்தையும் படித்து உள் வாங்கி விட்டு வருகிறேன். தாங்கள் ஏதோ டென்ஷனில் இருப்பது தெரிகிறது.
  ஏன் அப்படி?

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸ்ரீராம், பயணம் செய்ய போகிறார் அதனால் தானே!

   நீக்கு
  2. டென்ஷன் என்றில்லை... கவனமின்மை!

   நீக்கு
  3. வாங்க கமலா ஹரிஹரன்... நீங்கள் எப்படி அனுமானித்தீர்கள்? நான் கதை எழுதுவது அபூர்வம்னா... மீண்டும் வருக

   நீக்கு
  4. பின்ன ஊருக்குப் போறதுனா சும்மாவா ஸ்ரீராம். அதுவும் வடக்கு...கிட்டத்தட்ட .10 நாள் பயணம் எனும் போது அதுக்கான ஏற்பாடுகளே மனசுல ஓடும்...

   கீதா

   நீக்கு
  5. @கீதா ரங்கன் - //ஊருக்குப் போறதுனா சும்மாவா ஸ்ரீராம்.// - ரொம்ப பில்டப் கொடுக்கறீங்களே... ஸ்ரீராம் எங்கேயும் பயணம் போவதுபோல் தெரியலையே.. அவருக்கு இன்னும் இரண்டு மாதங்களுக்கு ஆபீஸில் வேலை கடுமையா இருக்குன்னு சொன்னதாத்தான் ஞாபகம்...

   நீக்கு
 13. நெல்லைத்தமிழன் கதை முடிவு மிக அருமை.


  முன்பு நீதிக்கதைகள் திண்ணை, தட்டு கதைகள் நினைவுக்கு வந்தன.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனக்கு, 'சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்' என்ற குறள்தான் நினைவுக்கு வந்தது. நன்றி..

   நீக்கு
 14. //நானும் அடிக்கடி ஆபீஸ் விஷயமா ஊர் சுற்றிக்கொண்டிருப்பேன். பசங்களை ஸ்கூலுக்கு கொண்டு விடறது, பாட்டு, கராத்தே கிளாஸுக்கு கொண்டு விடறதுன்னு கவிதா ரொம்ப பிஸியா இருப்பா. அந்த ஊர்ல உன்னைக் கவனிக்க எங்களுக்கு நேரமே இருக்காதுப்பா. அதுக்கு இந்த ஊர்லயே இருந்தயானா தெரிந்த ஜனங்கள், உறவுகள்லாம் இங்க இருக்கு. ஒண்ணும் கஷ்டம் இல்லைப்பா”//


  இன்றைய நிலையை அழகாய் எழுத்தில் கொண்டு வந்து விட்டார்.
  முன் பின் தெரியாத இடத்தில் தனிமையில் வாடுவதற்கு தெரிந்த மனிதர்கள், உறவுகளோடு இருப்பது மேல்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //முன் பின் தெரியாத இடத்தில் தனிமையில் வாடுவதற்கு// - உண்மைதான் கோமதி அரசு மேடம்... இருந்தாலும் அவ்வப்போது, ஒரு சில மாதங்களாவது, அல்லது பெற்றோர்கள் விரும்பும்போதெல்லாம், பேரன் பேத்தியோடு இருப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சியை அனுபவிக்கச் செய்யவேணும் அல்லவா?

   நீக்கு
  2. நெல்லை இதைத்தான் சொல்ல நினைத்து வந்தேன் கோமதி அக்காவுக்கு....நீங்க சொல்லிட்டீங்க!! அதை அப்படியே டிட்டோ செய்கிறேன். பெரியவர்களுக்கு வெளியில் போகணும் ஊர் சுற்றணும் என்ற எண்ணம் எல்லாம் இருக்காது. ஜஸ்ட் நம் உறவுகள் குழந்தைகள் அவர்க்ளோடு இருப்பதே மனதிற்கு ஒரு செக்யூர்ட் ஃபீலிங்க் கொடுக்கம்...சந்தோஷம் கொடுக்கும். அருகில் இருக்கும் சிறிய கோயிலுக்கு அழைத்துச் செல்லலாம். அவர்கள் போகும் போது....where there is a will there is a way out.

   கீதா

   நீக்கு
  3. அதைதான் நான் என் பதிவில் குறிப்பிட்டு இருக்கிறேன், "ரயில் பயணம் "பதிவில் விடுமுறைக்கு தாத்தா, பாட்டி வீட்டுக்கு அழைத்து போகச்சொல்லி. நீங்கள் தான் எல்லா பதிவுக்கும் வருவது இல்லையே! பேரனுடன் இருக்க கூப்பிடுகிறான் மகன் சார், அவ்வளவு தூரம் பயணம் செய்ய முடியவில்லை என்கிறார்கள். விடுமுறையில் அந்த வகுப்பு, இந்த வகுப்பு என்று அவர்களை சேர்க்காமல் உறவுகளை சந்திக்க அழைத்து செல்ல சொல்லி இருக்கிறேன்.

   உங்கள் கதைக்கு எழுத பட்ட கருத்து இது.

   நீக்கு
  4. @ கீதா ரங்கன் (+கோமதி அரசு மேடம்) - //ஜஸ்ட் நம் உறவுகள் குழந்தைகள் அவர்க்ளோடு இருப்பதே // - சில பெரியவர்கள் என்ன செய்யறாங்கன்னா, ரொம்பவும் பசங்க லைஃப்ல மூக்கை நுழைக்கறாங்க. இப்படிச் செய், இந்த மாதிரி நடந்துகொள், இந்த மாதிரி சமையல் செய், இப்படிச் சுத்தம் செய், இது போல உடை உடுத்து என்று ரொம்பவே தங்கள் நம்பிக்கைகளைத் திணிக்கிறார்கள். அவங்களும், 'எதுக்கு சண்டை போட்டு வருத்தம் தரணும்' என்று நினைத்து சிலவற்றைச் செயல்படுத்துகிறார்கள் (கஷ்டமாக இருந்தபோதும்)... இந்த மாதிரி உறவு ரொம்ப நாள் சந்தோஷமா இருக்காது. பெரியவர் மறைந்தால், 'நல்லவேளை டார்ச்சர் ஓவர்' என்று மனதில் தோன்றிவிடும்.

   பெரியவர்கள் இதனை கருத்தில் கொள்ளணும். பசங்க வீடுன்ன, அங்க அவங்க அவங்கதான் ராஜாக்கள். முடிந்த வரை அவங்க சந்தோஷத்தில் மூக்கு நுழைக்கக்கூடாது. போலீஸ்காரர் வேலையைச் செய்யக்கூடாது.

   நீக்கு
  5. நெல்லை, அந்தக் காலத்தில் வயதாகி விட்டால் மகனுக்கு பட்டம் கட்டி விட்டு வானபிரஸ்தம் போய் விடுவார்கள்.
   அவன் நாட்டை, வீட்டை நன்றாக பார்த்துக் கோள்வது அவர்கள் பாடு.

   மகன் சந்தோஷமாய் வாழ மருமகளை கொண்டு வந்து விட்டவுடன் அவனை, குடும்பத்தை நன்றாக பார்த்துக் கோள்வாள் என்று நம்ப வேண்டும். இனி அவர்களுக்கு என்ற உலகத்தில் மூக்கை நுழைக்கக்கூடாது.

   பழைய பாடல் நினைவுக்கு வருது. மாமியாருக்கு ஒரு சேதி அதை மதித்து நடந்தால் மரியாதை.

   என் மகனுக்கு இப்படி செய்தால்தான் பிடிக்கும் என்று சொல்லக் கூடாது. குழந்தைகள் வளர்ப்பும் அப்படித்தான் .
   அவள் நன்றாக வளர்க்கிறாள் என்று ஒதுங்கி இருந்து மகிழ்ந்து பாராட்டி, மன திருப்தியாக காலத்தை ஓட்ட வேண்டும். ஏனென்றால் நாம் இப்போது வானபிரஸ்தம் போக முடியாது.

   நீக்கு
  6. இப்போ வந்திருந்தப்போ எங்கள் பையரும் கூப்பிட்டார். அதுவும் கடுங்கோடையில் இங்கே இருக்க வேண்டாம் என்பது அவர் கருத்து. ஆனால் நாங்கள் போகவில்லை.குழந்தையைத் தூக்கிக் கொஞ்ச முடியலை, தொட முடியலைனு ஆதங்கம் இருக்கத் தான் செய்யறது! ஆனால் இந்த வரைக்கும் பார்க்கவாவது முடியுதேனு சந்தோஷம்!

   நீக்கு
  7. எனக்குத் தெரிந்தவர்கள் (1988ல்). அந்த அம்மா தன் ஒரே மகனுக்கு பார்த்துப் பார்த்துச் செய்வார். திருமணம் ரொம்பவும் பார்த்துச் செய்தார். திருமணத்துக்கு முன் அந்தப் பெண், அவரிடம் 'அம்மா அம்மா' என்று இழைந்தது. ஆனால் திருமணத்துக்குப் பின், 'இதை இப்படிச் செய்', 'இதுதான் டிசிப்பிளின்', 'இவனுக்கு இதுதான் பிடிக்கும்' என்றெல்லாம் சொல்லியிருப்பார்.. ஒரே வருடத்தில் மகன்/மருமகளைப் பிரிந்திருக்கவேண்டியதாகிவிட்டது.

   இதுதான் பொதுவாக நான் பல குடும்பங்களில் காணும் நிலைமை. "நாங்க அந்தக்காலத்துல எங்க மாமியாருக்குப் பணிந்து...'என்ற கதையையெல்லாம் கேட்பதற்கே யாரும் தயாராக இல்லை.

   நீக்கு
  8. @கீதா சாம்பசிவம் மேடம் - நீங்க பெரியவங்க, அனுபவஸ்தங்க... ஆனால் நான் நினைப்பது, இப்போது உடம்பு ஓரளவு முடியும்போல் தோன்றினால், இந்த மாதிரி வாய்ப்புகளை (சேர்ந்து இருக்கும் வாய்ப்பு) தவறவிடக்கூடாது. குழந்தை, 5வது படிக்க ஆரம்பித்துவிட்டால் அதன் ப்ரயாரிட்டி மாறிவிடும். அல்லது இன்னும் பல வருடங்களில் உங்களுக்கே அவ்வளவு நேரப் பிரயாணமே விருப்பமில்லாமல் போய்விடும். அதனால் முடிகிறது என்று தோன்றினால், போய்வாருங்கள்.

   நீக்கு
 15. பதில்கள்
  1. வாங்க கரந்தை ஜெயக்குமார் சார்... எனக்கும் பல்வேறு நினைவுகளால் எழுந்த கதைதான் இது. சொல்வது எளிது...

   நீக்கு
 16. //வாழ்கைல மகனிடம் தனக்கென்று ஒன்றுமே கேட்டறியாத அந்தத் தந்தை, மனதில் உள்ளதை வெளிப்படையாக அப்போதும் சொல்ல விரும்பவில்லை.//

  நிறைய தந்தைகள் மனதில் உள்ளதை சொல்லுவதில்லை. ஆணும், பெண்ணும் பெற்ற தந்தை ஒருவர் தன் மனைவியை இழந்த பின் தனியாக சமைத்து சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறார்.

  மகன், மகளுடன் போய் இருந்தால் என்ன ? என்று கேட்டால் அவர் சொல்லும் பதில் அவர்களே அவர்கள் பிள்ளைகளின் பிள்ளைகளை பார்த்து கொள்ள அயல் நாடுகளுக்கு பறந்து கொண்டு இருக்கிறார்கள்! நான் வேறு அவர்களுக்கு சுமை .பாவம் அவர்கள் என்றார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான் கோமதி அரசு மேடம்... தாயாவது சொல்லிவிடுவாள். தந்தை எப்போதும் சொல்வதில்லை.

   "மனைவியோடு, வாழ்க்கைச் சுகம் போம்" என்பது உண்மைதான்.

   என்னதான் தந்தை, 'பிள்ளைகள் பாவம்' என்று சொன்னாலும், தன்னை அவர்களால் கவனிக்க முடியவில்லையே என்ற வருத்தம் இருக்கத்தானே செய்யும்....

   நீக்கு
  2. அந்த வருத்தம் இல்லாமல் போகுமா?

   கால சூழ்நிலைகல் யாரையும் குறை சொல்ல முடியாமல் இருக்கிறது.
   நடைமுறை உண்மையை அவர் புரிந்தி கொண்டார்.
   இப்போது உள்ளவர்கள் செல்போனில்,, ஸ்கைப்பில் குழந்தைகளை பேரன், பேத்திகளை கண்டு மகிழ்கிறார்கள்.
   அந்தக் காலத்தினருக்கு அதுவும் கிடையாது. எப்போது பார்ப்போம் என்ற ஏக்கத்திலேயே இருப்பார்கள் பெரியவர்கள்.

   நீக்கு
  3. //ஸ்கைப்பில் குழந்தைகளை பேரன், பேத்திகளை கண்டு மகிழ்கிறார்கள்.// - உண்மைதான். இருந்தாலும் தொட்டுப் பேசுவதுபோல் வருமா? நான் தினமும் என் பசங்கள்ட ஸ்கைப்ல பேசுவேன் (அங்க தனியா வேலை பார்த்த வருடங்களில்). ஆனாலும் கூட இருப்பதுபோல, தொட்டுப் பேசுவதுபோல வரவே வராது. வேணும்னா, ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரைன்னு நினைத்துக்கொள்ளலாம்.

   நீக்கு
 17. நெல்லை, தலைப்பு அப்புறம் எழுத்தாளர் ஒருவர் எழுதுவது போல எழுதிய விதம் கதை அட்டகாசம்.

  மனதை வேதனைப்படுத்தியது தான்.

  சூப்பர் பாராட்டுகள். மீண்டும் வருகிறேன் வேலைகள் முடித்துவிட்டு

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க தில்லையகத்து கீதா ரங்கன்... கதைக்குள் கதை எழுதியது எனக்கும் திருப்திதான். இதுக்கு முன்பும் இதுபோல கதைக்குள் கதை எழுதியிருக்கிறேன்.

   நீக்கு
 18. நெல்லைத் தமிழன் கதை என்றுமே மற்றவர்களை சிந்திக்க வைக்கும்.
  பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
  கதையை சொல்லிய விதம் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் உண்மை சகோதரி.. அது நெல்லையின் மண் வாசனை..( சமயம் கிடைக்கும் போது பிறந்த ஊரின் பெருமையை, தாய் மண்ணின் புகழைப் பறைச்சாற்றி கொள்ள வேண்டுமில்லையா? அதுதான் இப்படி இடைப்பட்ட நேரத்தில் தீடிர் வருகை. ஹா ஹா ஹா.)

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   நீக்கு
  2. //ஆமாம் உண்மை சகோதரி.. அது நெல்லையின் மண் வாசனை..(//

   பிறந்த ஊரின் பெருமை இடையில் இழுத்து வந்து விட்டதா? காலை வேலைகளுக்கு இடையில் .
   வாங்க கமலா புகழ் பாடுவோம் நெல்லையின், நெல்லைத் தமிழனின் புகழை.


   நீக்கு
  3. கோமதி அரசு மேடம்... உங்கள் பாராட்டுக்கு நன்றி... நான் கொஞ்சம் செண்டிமெண்ட் ஆள். (நினைப்பிலாவது). அதனால் கதையில் உணர்வு இருக்கும்.

   நீங்களும் நெல்லையைப் பூர்வீகமாகக் கொண்டவர்தாமே... இல்லையா?

   நீக்கு
  4. சாதாரணமாகவே திருநெல்வேலிக்காரர்களுக்கு மண் பாசம் கொஞ்சம் அதிகம்தான். நடக்கட்டும், நடக்கட்டும். எங்களுக்கு தெரிந்த ஒரு மாமி, பழக ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே "உங்களுக்கு தின்னவேலியா என்பார்?" ஆனால் இங்கு தின்னவேலிக்காரர் எங்கள் கொண்டாடியிருப்பது காவிரியைத்தான். ஹிஹி..

   நீக்கு
  5. பா.வெ... மேடம்... அப்படி அல்ல. ஒரு இடத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்களுக்கு அந்த இடங்கள், அந்த இடத்தைச் சேர்ந்தவர்கள், தனிதான். தஞ்சை, மதுரை, நெல்லை, கோவை, திருச்சி போன்றவற்றைச் சொல்லலாம். தஞ்சாவூர்க் காரங்களுக்கு, அவங்க ஊர்தான் பெரிசா சொல்லுவாங்க, எழுதுவாங்க. இதில் தவறில்லை...இயல்புதான்.

   ம்ம்ம்ம்ம்ம்ம்ம் தாமிரவருணி ஒருகாலத்தில் என் வாழ்வில் பிணைந்திருந்தது... காவிரி பிணைந்திருக்கும் காலம் வரப் போகிறது.... மாற்றம் என்பதே மானிடத் தத்துவம்தான்....

   நீக்கு
  6. பானுக்கா ஆமாம் ஆமாம் எங்களுக்குக் கொஞ்சம் அதிகம்தான்...நானும் தின்னவேலியாக்கும்!!!! இதை இங்கு ஊசி கேப்பில் சொல்லிக்கறேன் அதுவும் எங்கண்ணன் நெல்லையில் காதில சத்தமா கேட்கறா மாதிரி!!! ஹையோ அவர் கம்பை தூக்கிட்டு வரதுக்குள்ள மீ ஆன் த ரன்வே டு தேம்ஸ்!!!

   கீதா

   நீக்கு
  7. @கீதா ரங்கன்.... என்னத்தை திருநெவேலியோ நீங்க. அனேகமா நாரோயில் காரங்களாயிருக்கும். நானும் கமலா ஹரிஹரன் மேடமும், கோமதி அரசு மேடமும் (அப்படீன்னு நினைக்கறேன்) நெல்லைக்காரங்க. ஹாஹா

   நீக்கு
  8. க்ர்ர்ர்ர்ர்ர்ர், வல்லியை விட்டுட்டீங்க! மதுரைக்காரங்களுக்குத் தான் ஊர்ப்பாசம் அதிகம். அநேகமா மதுரையை விட்டே முன்னெல்லாம் போக மாட்டாங்க! இப்போத் தான் கொஞ்சம் கொஞ்சம் வெளிக்கிளம்பறாங்க!

   நீக்கு
  9. @கீதா சாம்பசிவம் - ஸாரி... நிஜமாவே திருக்குறுங்குடி வல்லிம்மாவை எழுத விட்டுப்போயிடுத்து.

   மதுரைக்காரங்களுக்கு ஊர்ப்பாசம் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. என் அனுபவத்தின் பிரகாரம் (வேற என்ன அனுபவம்... ஸ்ரீராம், மீனாட்சி மேடம்-இக்கி இக்கி பதிவுகள்தான்) மதுரைக்காரங்களுக்கு ஊரைவிட, அங்கு கிடைக்கும் உணவில்தான் பாசம் ஜாஸ்தி. சந்தேகம் இருந்தால் 'பிரேமாவிலாஸ் அல்வா', "காலேஜ் ஹவுஸ்", 'கோபு ஐயங்கார் ஹோட்டல்' இவை இல்லாத மதுரைப் பதிவுகளை இவங்க எழுதியிருக்காங்கன்னு காட்டுங்க பார்க்கலாம்.

   நீக்கு
  10. https://marudhai.blogspot.com/2008/12/blog-post_29.html இங்கே போய்ப் பார்க்கவும். மதுரைக்காரங்க எல்லோருமே ஒரு காலத்தில் எழுதிக் கொண்டிருந்தோம். அதிலும் நான் சுமார் 20 பதிவுகளாவது எழுதி இருப்பேன்! ஶ்ரீராம் என்னைப் போல் மதுரையிலேயே பிறந்து வளர்ந்தவர் இல்லையே! சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக மதுரை வாசியாக ஆனவர்! :))))) நாங்கல்லாம் மதுரை அசல்! எண்ணம், எழுத்து, பேச்சு, நடத்தை அனைத்திலும். இதனால் பல விமரிசனங்களுக்கும் உள்ளாகி இருக்கேன். :)))))

   நீக்கு
  11. சும்மா கலாட்டா பண்ணினால் பொங்கி எழுகிறீர்களே கீசா மேடம்... நானும் மதுரையில் ஒரு சில வருடங்கள் வாழ்ந்தவன். காலேஜ் ஹவுஸ் பட்டர்-நான், கற்பகம் ஹோட்டல் ரவாதோசை/மசாலா பால், அசோக் ஹோட்டல் பூரி மசாலா, அப்புறம் அனுப்பானடி பக்கமா (ஞாபகமில்லை) ஜீனி போடாத ஐஸ்கிரீம், ஜிகர்தண்டா, பஸ்ஸ்டாண்டில்-காலேஜ் அட்டூழியத்தில் ஒரு பகுதியாக-மினி மீனா பரோட்டா என்று கலந்துகட்டி அடித்தவன்.... அப்புறம் வேறு அனுபவங்கள் பின்னொரு சமயம்.

   நீக்கு
  12. நெல்லைத்தமிழன்!

   நான் மருதைக்காரப் பதிவர்தான்! திங்கற விஷயமோ அல்லது ஊர்ப்பெருமை பேசியோ ஒரு பதிவு கூட எழுதியதில்லை! நீங்க எழுதியதை பார்த்தால் அப்படி இருந்ததே தப்போன்னு யோசிக்க வச்சுட்டீங்களே!

   நீக்கு
  13. வாங்க கிருஷ்ணமூர்த்தி சார்... சும்மா வம்பு வளர்க்கத்தான் நான் அப்படி எழுதினேன். யாரேனும் பொங்கி வர்றாங்களான்னு பார்க்க. நான் மதுரையிலும் வாழ்ந்தவந்தான் (கல்லூரிக் காலங்களில்).

   மதுரைல எத்தனை மணிக்குனாலும் உணவு கிடைக்கும். மசாலா பால் கிடைக்கும். அந்தப் பகுதிக்கே உரித்தான மைதா மாவை பொரித்து அதன் மேல் ஜீரா ஊற்றிய பன் சைஸுல ஒரு தின்பண்டம் கிடைக்கும் (பேர் மறந்துபோச்சு.. நாங்க பொடி நடையா டீக்கடைக்குப் போய் அதில் ஒன்றும் ஒரு டீயும் சாப்பிட்டுவிட்டு-நடு ராத்திரியில், எங்கள் படிப்பைத் தொடர்வோம்)

   திங்கற பதிவு எழுதாமல் இருப்பதும் தவறுதான். அது நம் வாழ்க்கையில் கால் பகுதியை எடுத்துக்கொள்கிறது. அதை எப்படித் தவிர்க்கமுடியும்?

   நீக்கு
  14. திங்கறது ஒண்ணே போதாதா? பதிவு வேறு எழுதி நோகணுமா? :)))
   GMB சார் போஸ்டில் அவர் எழுதியதை பின்னூட்டங்களோடு சேர்த்துப் படித்தேன்.பலவிதமான மனவோட்டங்கள் பார்த்துச் சலித்துவிட்டதால் அங்கே எதையும் எழுதவில்லை. ஆனால் டிடிக்கு மனக்குறை இங்கேயும் தொடர்வதை பார்க்க ஆச்சரியமாக இருந்தது.

   நீக்கு
  15. அதுவும் சரி கிருஷ்ணமூர்த்தி சார்.. எல்லாரும் செய்முறை பதிவு எழுதவேண்டாம்தான். ஆனா அபூர்வமா ரிலாக்ஸ் பண்ணிக்க எழுதுங்க.

   இந்தியர்கள் ஒவ்வொருவருக்கும் அரசியல்ல வித்தியாசமான கண்ணோட்டம் இருப்பது இயல்புதானே.. ஒவ்வொரு ரீஜனுக்குமே ப்ரயாரிட்டி மாறுபடுகிறது.

   நீக்கு
 19. விடியற்காலையிலேயே வந்து விட்டேன்...
  ஆனாலும் வேலைக்கு நேரம் ஆயிற்று...

  கதையின் கடைசி வரிகள் ..

  நெஞ்சில் தைக்கும் நெருஞ்சி முள்...

  அது ஏற்படுத்தும் தாக்கம் சொல்லற்கரியது....

  அருமை... அருமை...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க... துரை செல்வராஜு சார்.... கதையை ரசித்தமைக்கு மிக்க நன்றி.

   இன்னொன்று சொல்லணும்னு நினைத்தேன்... நாம் கதை எழுதும்போது நம்மை அறியாமல், நாம்-கதையாசிரியர் உபயோகப்படுத்தும் வார்த்தைகள் (நம் சமூகத்தில் புழங்கும் வார்த்தைகள்) வந்துவிடுவதைக் கவனித்திருக்கிறீர்களா? நமக்கு முற்றிலும் அந்நியமான சமூகக் கதையை எழுதும்போது அந்த நேட்டிவிட்டி குறைந்துவிடும்.

   உங்கள் பாராட்டுக்கு நன்றி.

   நீக்கு
  2. /// நாம் எழுதும்போது நம்மை அறியாமல் நாம் புழங்கும் வார்த்தைகள் வந்துவிடுவதை...///

   அப்படித்தான் வரவேண்டும்...

   அது தான் கதையின் வெற்றி....

   தங்களைப் போலத்தான் நானும்....

   எனது கதையில் வார்த்தைகளுக்கு நான் தடுமாறியதே இல்லை....

   வாழ்க நலம்...

   நீக்கு
  3. நீங்கள் சொல்வது சரி துரை செல்வராஜு சார்... ஆனா நீங்க ஒரு பிராமண வீட்டில் நடக்கும் கதையை எழுதணும்னு நினைத்தால், அங்க புழங்கும் வார்த்தைகள் நன்றாகத் தெரிந்திருக்கணும், இல்லை உங்களுக்குப் பழக்கமா இருக்கணும். அவங்க வச்சிக்கற பேரு, பேசும் மொழி எல்லாம் சரியா வந்தால்தான் கதையை ரசிக்க முடியும். இப்படி எழுதுவதே பெரிய திறமைதான் (அதாவது தாங்கள் அறியாத சூழலை சரியாக கதையில் கொண்டுவருவது)

   நீக்கு
 20. பதில்கள்
  1. வாங்க திண்டுக்கல் தனபாலன். மிக எளிமையானது 'ஊருக்கு உபதேசம்'தானே... அதுனாலதானே பசங்க இப்போல்லாம் பெற்றோர் சொல்றதை அவ்வளவாகக் கேட்பதில்லை. அப்பா வாட்சப்பில் தஞ்சம் புகுந்துவிட்டு, பையனை, செல்ஃபோன் உபயோகிக்காதேன்னா எப்படிக் கேட்பான்?

   நீக்கு
 21. கதை சிறப்பு! அதுவும் அந்த கடைசி வரி... அடடா! பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 22. ஸ்ரீராம் சார், நாளைய பதிவு முழுவதும் இன்றே எனக்கு வந்து விட்டதே...

  கவனிக்க : பதிவு முழுவதும்

  எனக்கும் ஒரு சமயம் இதுபோல் ஏற்பட்டது... ஆனால் "Insert Jump Break" பயன்படுத்துவதால், பதிவின் ஆரம்பத்தில் உள்ள சில வரிகளே வந்தது... "Reader"-ல் வலைத்தளங்களை தொடரும் அனைவரும் இதை அறிவார்கள்... கவனம் முக்கியம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்தத் தளத்துல தெரியலையே தி.தனபாலன்... 'நாளைய செய்தி இன்றே' தலைப்பிலேயே ஒரு கதை எழுதிவிடலாம் போலிருக்கே.... (சிவகார்த்திகேயன் படம் போல்)

   நீக்கு
  2. தவறுதலாக "Publish" செய்து விட்டார்... சில நொடிகளில் "Revert to draft" செய்து விட்டால் யாருக்கும் அது தெரியாது... ஆனால் சில நிமிடங்களில் Reader அந்தப் பதிவை கைப்பற்றிக் கொள்ளும்... "Insert Jump Break" பயன்படுத்தி இருந்தால், அது பொறுத்து Reader-ல் வரும்...

   நீக்கு
  3. நான் இப்போத் தான் கவனித்தேன் டாஷ் போர்டில், ஆனால் பதிவு இல்லை.

   நீக்கு
  4. உண்மைதான் டிடி... தவறு நிகழ்ந்து விட்டது. என் பதிவுகளில் 99 % ஜம்ப் பிரேக் வைப்பதோடு ஷெட்யூல் செய்துதான் மூடுவேன். இது கேஜிஜி ஸேவ் செய்த பதிவு என்பதால் ஷெட்யூல் செய்யப்படாமலிருப்பதைக் கவனிக்க மறந்து போனேன். ஜம்ப் பிரேக் இல்லாததையும் கவனிக்கவில்லை. கவனக்குறைவுக்கு வருந்துகிறேன்.

   நீக்கு
 23. படித்துறை முதியவர் இன்னும் எத்தனை பேர்களுக்கு கதை கொடுக்கப்போகிறாரோ?  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. படித்துறைப் படத்தினாலேயே அவர் எவ்வளவு பேருக்குத் தெரிந்தவராகிவிட்டார், எத்தனை கிளைக்கதைகளுக்குக் கருப்பொருளாகிவிட்டார்... அதுவும் ஒரு அதிர்ஷ்டம்தானே பா.வெங்கடேச்வரன் மேடம்...

   நீக்கு
  2. பானுக்கா இதே பெரியவரின் கதை ஒன்று என் வேர்ட் ஃபைலில் பாதில இருக்கு...எப்ப முடிக்கப் போறேனோ ஹிஹிஹி

   கீதா

   நீக்கு
  3. @கீதா ரங்கன்.... சீக்கிரம் கதையை முடித்து வெளியிடுங்க. இல்லைனா அந்தப் படித்துறைப் பெரியவரே "போதும் என்னைப்பற்றி கற்பனைக் கதைகள் எழுதினதுக்கு' என்று சொல்லிடப்போறார்...

   நீக்கு
 24. எங்கள் நெருங்கிய உறவினர் ஒருவர், மனைவி இருக்கும் வரை கிராமத்தில் இருந்தார். மனைவி இறந்ததும், அவர் மகன், அவரை சென்னைக்கு அழைத்து வந்தார். ஆனால் அந்த முதியவரால் சென்னையில் மகன் வீட்டில் இருக்க முடியவில்லை காரணம், கிராமத்தில் கதவை மூட மாட்டார்கள். தெருவில் நடப்பவர்களிடம் பேச்சு கொடுக்க முடியும். சென்னையில் கதவை எப்போதும் மூடிக்கொண்டு, பேசுவதற்கும் யாரும் இல்லாமல் இருப்பது ஜெயிலில் இருப்பது போல இருக்கிறது என்று கூறி, மீண்டும் கிராமத்திற்கே சென்று விட்டார். இத்தனைக்கும் அவருடைய மகனும், மருமகளும் அவரை நன்றாகவே கவனித்துக் கொண்டனர். இப்படியும் சில இடங்களில் நடக்கிறது.


  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதை தான் இந்த கதையில் மகன் சொல்கிறார் பானு.

   என் உறவினர் ஒருவர் தன் வயதான தாய் தந்தையரை வந்து வந்து பார்த்துக் கொள்வது கஷ்டம் என்று சென்னை கூட்டி போனார் அவர்களுக்கு அந்த சூழ்நிலை பிடிக்கவில்லை, உடல் நலம் கெட்டது, இறந்து விட்டார் ஒரு வருடத்தில். அவர் மனைவியும் இரண்டு வருடத்தில் கணவர் போன கவலையில் இறந்து விட்டார்.

   மாயவரத்தில் தெரிந்த மாமி அப்படித்தான் மாமா போன் பின் மகனுடன், மகளுடம் போய் இருந்தார்கள் அடுக்குமாடி குடியிருப்பில் யாரும் யாருடனும் பேசமாட்டேன் என்கிறார்கள் , மாயவரத்தில் என் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்தால் போகிறவர்கள், வருகிறவர்கள் பேசி போவார்கள், எதிரில் பிள்ளையார் கோவில். உதவி செய்ய ஆட்கள் இருக்கிறார்கள் என்று மாயவரம் திரும்பி விட்டார்கள். நீங்கள் சொல்வது போல்.
   குழந்தைகள் தங்கமாய் தாங்கினாலும் மனம் இருந்த இடத்தை விட்டு வர பிடிக்காது.

   நீக்கு
  2. ஆமாம் பானுமதி வெங்கடேச்வரன் மேடம்... அப்படியும் சில இடங்களில் நடக்கிறது. உதாரணமா, மகனோடோ இல்லை மகளோடோ இருந்துவிட்டு வருவோம்னு 6 மாசம் அமெரிக்கா போறவங்களுக்கே, பகலெல்லாம் என்ன செய்யறதுன்னு மோட்டுவளையைப் பார்த்துக்கிட்டு உட்கார்ந்திருக்காங்க. அந்த வாழ்க்கை போரடிச்சுடும். அதே சமயம் இந்தியாவுல இருந்தாங்கன்னா, பக்கத்து வீடு, கோவில், பஜார் என்று அவங்க பாட்டு, நடந்தோ இல்லை ஆட்டோலயோ போய் வேலையும் செய்யமுடியும், பொழுதும் போகும்.

   பொதுவா, திருமணம் செய்துகொடுத்தபிறகு, நம்கூடவே அவங்க ஆரம்ப காலத்துலேர்ந்து இருக்கலைனா, பிற்காலத்தில் உறவு ஒட்டாது, 'ஒண்டவந்தவர்கள்' மாதிரியே தெரிவோம் என்றுதான் நான் நினைக்கிறேன்.

   நீக்கு
  3. @கோமதி அரசு மேடம்... அந்த மாதிரிச் சூழ்நிலைல, பெற்றவர்களே விரும்பி அந்த மாதிரி வாழ்க்கையை வாழறாங்க. அப்போ யாருக்கும் கஷ்டமும் இருக்காது, குற்ற உணர்ச்சியும் இருக்காது. ஆனா, அதே பெற்றோர்கள், நாங்க எங்க இடத்தை விட்டு வரமுடியாது, நீ, பக்கத்துலயே எங்கயாவது வேலை பார்த்துக்கோ இல்லைனா, வாரா வாரம் எங்களைப் பார்க்க வந்துவிடு என்று சொன்னால், அது பிள்ளைக்குச் செய்யும் INJUSTICE ஆகிவிடும்.

   நீக்கு
  4. நீங்கள் சொல்வது போல் நீதிக்கு மாறாக நடந்து கொண்டு தான் இருக்கிறது.

   நீக்கு
  5. கோமதி மா .திடமுடன் திரும்பி வந்த மாயவரத்து மாமிக்கு பாராட்டுகள்.

   நீக்கு
 25. இந்தப் பெரியவரின் நிலைப்பாட்டில்தான் இன்று நான் இருக்கிறேன் நண்பரே...

  ஆகவே உங்களுக்கு விரிவாக கருத்துரை எழுத ஆசைதான் இயலவில்லை காரணம் விழிகளில் நீர்த்திரை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கில்லர்ஜி...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

   நிறைய எழுதணும்னு தோன்றுது எனக்கு... 'நினைப்பதெல்லாம் நடந்துவிட்டல் தெய்வம் ஏதுமில்லை..... நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றும் இல்லை' என்ற பாட்டுதான் பாடத் தோன்றுகிறது.

   நீக்கு
  2. கில்லர்ஜி, உங்கள் வாழ்க்கை இனிமையாக மகன்,மருமகள், பேரன், பேத்திகளோடு கழியப் பிரார்த்தனைகள்.

   நீக்கு
  3. இருவருக்கும் நன்றிகள் கோடி...

   நீக்கு
 26. //ஏம்பா… இதை எழுதும்போது கிராமத்துல தனியா இருக்கற நம்ம தாத்தா நினைவுக்கு வரலையா?//

  கதாசிரியருக்கே சவுக்கடியா ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கதை இந்தக்காலத்தில் நடப்பதுதான். உணர்ச்சிப் பூர்வமானது. ஒரு பையன் என்ற அடிப்படை இந்தக்கால நிகழ்ச்சி. உங்கள் கதைப்பிரகாரம் உடல்நலக்குறைவு எதுவுமில்லை தகப்பனாருக்கு. அதே இடத்தில் இரண்டு மூன்று பிள்ளைகளிருந்தும்,வேலைக்குப் போகும் மனைவிகளால் கவனிக்க முடியாது என்ற காரணம் காட்டி ,உடல் நலமில்லாத தந்தையை, பிறர் பொருப்பில் தள்ளிவிட்டு, கவனிக்காத பிள்ளைகளும் இருக்கிறார்கள். ஆளுக்கு மூன்று மாதம் என ஏலம்போடும் ஸந்தானங்களையும் பார்க்கிறோம். நன்றாக வைத்துக் கொள்பவர்களும் உண்டு. அவர்களதிஷ்ட்டம் நோயற்ற தாய்தந்தைகளாக இருக்க வேண்டும். பிள்ளைகள் நல்ல நிலையிலிருந்தால்,மனமிருந்தால் பண ஒத்தாசையாவது கிடைக்கும். அது கூட செய்யாதவர்களையும் பார்க்கிறோம்.நல்லவேளை. உங்கள் கதைப்படி கிராமத்திலிருந்தவர். உறவினரும் உதவுபவர்கள். நல்லபடி இருக்கட்டும் இம்மாதிரி நிகழ்வுகளை மனதில் வாங்கிக்கொள்ள முடிவதில்லை. கதை இல்லை.நிஜம். அன்புடன்

   நீக்கு
  2. வாங்க காமாட்சி அம்மா.... நீங்க சொல்கிற மாதிரி நிறைய நிகழ்வுகள் இருக்கின்றன. எல்லாம் காலத்தின் கோலம். நீங்க சிம்பிளா, 'அவரவர் அதிர்ஷ்டம்' என்று சொல்லிட்டீங்க. மனமிருந்தும் உடலால் உதவமுடியாதவங்களும் இருக்காங்க. 'நோயற்ற தாய்தந்தையர்'-உண்மை. அதுனாலதான் ஹெல்த் இஸ் வெல்த் என்று சுலபமாச் சொல்லிட்டாங்க. நம்ம கையிலா இருக்கிறது....

   கதையைப் படித்து கருத்துச் சொன்னதற்கு நன்றி. சோக முடிவுள்ள கதை தந்ததற்கு வருந்துகிறேன்.....

   நீக்கு
  3. @கில்லர்ஜி... சின்னப் பசங்களுக்குள் உள்ள வெள்ளந்தி மனம்தான் தைரியமாக இந்த மாதிரி கேள்விகளைக் கேட்கத் தூண்டுகிறது... நன்றி

   நீக்கு
  4. காமாட்சி அம்மா சொல்லுவது நிஜம்.
   உண்மை சில நேரம் கசக்கும்.
   கன்னியகுமரியில் வயதான பெரியவர்களை விட்டு செல்லுவது நிறைய இருக்காம்.
   முதியவர்களுக்கு பொருளாதார வசதி, உடல் நலம், தெய்வ நம்பிக்கை எது நடந்தாலும் இறைவன் விருப்பம் என்ற மனநிலை வர வேண்டும். வயதானவர்களை நிறைய யோசிக்க வைத்து இருக்கிறார் நெல்லை.

   நீக்கு
  5. விகடன் தீபாவளி மலரில் சில வருடங்களுக்கு முன்னால் வந்திருந்தது... நிறையபேர், 'காசியில் இறந்தால் மோட்சம்' என்பதால், தங்கள் பெற்றோர்களை, குறிப்பாக வயதான தாயாரை, அங்கு இருக்கும் மடத்தில் 3-5 லட்ச ரூபாய் கட்டிவிட்டு சேர்த்துவிட்டுட்டுப் போயிடுவாங்களாம். அந்தப் பணம் காலியானால் (அப்படீன்னு மடத்தில் சொல்லி) சில வருடங்களில் துரத்திவிட்டுடுவாங்களாம். அவங்க, தினமும் கங்கையில் குளித்துவிட்டு, கோவில்களுக்குப் போய், அங்க அங்க கிடைக்கும் அன்னதானத்தில் உயிர் வாழ்ந்துகொண்டு, உயிரின் முடிவை எதிர்நோக்கிக் காத்துக்கொண்டிருப்பார்களாம்... அந்தக் கட்டுரை படிக்கவே அச்சமாக இருந்தது.

   நீக்கு
  6. சமீபத்தில் கோவை, நானா நானியில் (வயதானவர்களுக்கான ரிடையர்மெண்ட் ஹோம்) தங்கியிருப்பவர்கள் அவர்களுக்கு 'நானா நானி' மேனேஜ்மெண்டால் கொடுக்கப்படும் கஷ்டங்களும், எப்படி அவங்க அவர்களை ஏமாற்றுகிறார்கள் என்பதெல்லாம் பற்றி வாட்சப்பில் வந்தது. ஆனால், அங்கு தங்கியிருப்பவர்களது பசங்க, அமெரிக்காவிலோ இல்லை வேறு வெளிநாட்டிலோ வாழ்ந்துகொண்டிருப்பாங்க. தங்கள் பெற்றோர் நல்லாத்தான் இருக்காங்க என்று நினைத்துக்கொண்டிருப்பார்கள்.

   இந்த சப்ஜெக்டை நிறைய எழுதி நிறையபேரை கலங்கடிக்க விரும்பவில்லை.

   நீக்கு
  7. ஒரு சிலர் கோவை நானா நானி நன்றாகக் கவனிப்பதாயும் சொல்கின்றனர். ஆனால் எங்க சிநேகிதி ஒருத்தர் தன் கணவனோடு அங்கே போய்த் தங்க ஏற்பாடுகள் செய்து விட்டுச் சென்னை அண்ணா நகர் வீட்டைக் காலி செய்து கொள்ளாமல் சில சாமான்களை மட்டும் விட்டுவிட்டுப் போனார். ஒரே மகன் சிங்கப்பூரில் குடும்பத்தோடு! ஒரு மாதம் தான் நானா நானியில் இருந்தார். மறுமாதமே மீண்டும் அண்ணா நகர் வந்தவர் மனம் உடைந்து விரைவில் இறந்து விட்டார். :(((((

   நீக்கு
  8. எங்கள் உறவினர் இருக்கிறார்கள் நீங்கள் சொல்வதை கேட்க
   பயமாய் இருக்கே

   நீக்கு
  9. வாட்சப்பில் வந்த மெஸேஜ் - கோவை நானா நானி Phase I ல் வாங்கியவர்களுக்கான facilities (as promised in contract) , புதிய phase IIவில் உள்ளவர்களும் பயன்படுத்திக்கொள்ளும்படி காம்பவுண்டை இடித்து ஒன்றாகச் செய்கிறார்கள், பட்டா இன்னும் தரப்படவில்லை, எதிர்ப்பு தெரிவிப்பவர்களுக்கு கரண்ட் கட், facilities cut என்று செய்கிறார்கள், குழுவாகச் சேர்ந்து கேட்டால், விரட்டி அடிக்கிறார்கள், பலர் தங்கள் பசங்க வெளிநாட்டில் இருக்காங்க, எதுக்கு வம்பு, வேற போக்கிடம் கிடையாதே என்று டைஜஸ்ட் பண்ணிக்கொள்கிறார்களாம். நீங்க அட்வான்ஸ் கொடுத்திருந்தீங்கன்னா அதை வாபஸ் வாங்கிக்கோங்க, நாங்க கஷ்டப்படுகிறோம் என்று வாட்சப்பில் வந்தது.

   நீக்கு
  10. நான் சொன்னது நடந்தது ஐந்தாண்டுகள் முன்னர் கோமதி! ஒருவேளை இப்போது நன்றாக நடக்கலாம்.

   நீக்கு
 27. குச் குச் ஹேஒத்தா ஹே:)....
  பதறிப்போயிட்டேன்ன்ன் இன்று புதன்கிழமையோ என நினைச்சு:)...

  இன்றும் அதிராவுக்காக பப்ளிஸ் பண்ணிட்டு மறைச்சிட்டார் ஶ்ரீராம் ஹா ஹா ஹா நான் நாளைய போஸ்ட்டும் படிச்சிட்டேன்ன்ன்ன்ன்:)...
  இன்று கொஞ்சம் லேட்டாத்தான் வருவேன் தனிமரம் படிக்க நெ தமிழன்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. https://media.tenor.com/images/4cc9774e3b51e7631126e4662affdb49/tenor.gif

   நீக்கு
  2. ஹிந்தி வால் அதிரா... வாங்க. லேட்டாவே வாங்க... நீங்கதான் அட்வான்ஸ்ட் ஆச்சே.... வியாழன் போஸ்டும் படிச்சிருந்தால், எனக்கு ஆச்சர்யம் இல்லை...

   நீக்கு
  3. //ஹிந்தி வால் அதிரா.//

   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) எனக்கு ஹிந்தியிலயும் டி என அறிஞ்சு நெ.தமிழனுக்குப் பொறாமை:)).. அது வால் இல்லை.. வாஆஆஆஆஆஆஆஆஆலி:)) ஹா ஹா ஹா..

   நீக்கு
  4. அதிரா... இந்தப் பட்டத்தை நான் ஞாபகம் வச்சிக்கறதுக்குள்ள நீங்க புதுப் பட்டத்தோட வந்துடுவீங்க... என்ன செய்ய?

   நீக்கு
  5. என்னுடைய இந்தப் பட்டங்கள் வருங்கலத்தில் “பொதுஅறிவு” லிஸ்ட்டில் சேர்க்கப்போவதாக அறிஞ்சேன்ன்:) அதனால பாடமாக்கி வச்ச்சிருக்கவும்:)) பேரப்பிள்ளைகளுக்குச் சொல்லிக் குடுக்க உதவும்:))

   நீக்கு
  6. ஏஞ்சலின் சொன்னாங்க...இப்பவே உங்க பேரப்பிள்ளைகளுக்கு நீங்கள் சொல்லிக்கொடுத்துக்கொண்டிருப்பதாக. வாழ்த்துகள்

   நீக்கு
  7. ///ஏஞ்சலின் சொன்னாங்க...இப்பவே உங்க பேரப்பிள்ளைகளுக்கு நீங்கள் சொல்லிக்கொடுத்துக்கொண்டிருப்பதாக//

   வரவர வலியுலகில் எல்லோரும் ரொம்ப ஷார்ப்பா தெளிவா இருக்கிறீங்க ஹா ஹா ஹா:)).. எல்லாம் அதிராவாலதான்:)) எப்பவும் கிரடிட்டை நானே எடுத்துக் கொள்வேன், தராவிட்டால் வீட்டில கேட்டே வாங்கிக் கொள்வேன்ன்.. இதிலெல்லாம் நோ வெய்க்கம் நோ ரோசம் எனக்கு ஹா ஹா ஹா:)).

   நீக்கு

 28. வாத்தியாரின் சாயல் கதையின் நடையில் பிரதிபலிக்கிறது.
  Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜெயக்குமார் சார்.... என்னைக் 'கலாய்க்கலையே'..ஹாஹா

   நீக்கு
 29. கடைசி வரி மனதை கனக்க செய்தது ..பாவம் தாத்தா ..இந்தமாதிரி நிறைய தாத்தாங்க பாட்டிங்க இங்கிருக்காங்க .ஊரிலிருந்து கூட்டிட்டு வந்து ஆனா :( கவனிப்பாரில்லாம ஹோமில்
  மகன் மேல் இருந்த கோபம் அப்படியே அப்பாவுக்கு ஒரு நொடியில் தாவினது ..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு (இந்திய, இலங்கையர்கள், தங்கள் பெற்றோரைத் தன்னுடன் வைத்துக்கொண்டால்) இன்னும் கஷ்டம்தான் ஏஞ்சலின்.

   ஒரு தடவை பிலிப்பைன்ஸில் எனக்கு வகுப்பு நடத்திய சிங்கப்பூர் கன்சல்டண்ட் சொன்னார், சிங்கப்பூர்ல, ஒருத்தர் பெற்றோரைத் தன்னுடன் வைத்துக்கொண்டால், அவங்களுக்கு வரில நிறைய சலுகைகள் தருகிறார்களாம்.

   அப்படி இருக்கு நாட்டு நிலைமை.

   நீக்கு
 30. சங்கிகள் என்றால் என்ன...? அதற்கு உதாரணம் கூற முடியுமா...?

  அனைவரும் அறிய இதோ :-

  ஐயா.. நெல்லைத் தமிழன் ஐயா... கொஞ்சம் கீழ்கண்ட பதிவிற்கு நேரம் ஒதுக்கினால், மிக்க நன்றி ஐயா...

  // “ஏம்பா… இதை எழுதும்போது கிராமத்துல தனியா இருக்கற நம்ம தாத்தா நினைவுக்கு வரலையா?” //

  நம் வலையுலக தாத்தா (gmb ஐயா... தாத்தா என்பதற்கு வருத்தம் கொள்ள மாட்டார்...)

  https://gmbat1649.blogspot.com/2019/04/blog-post.html

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. திண்டுக்கல் தனபாலன் - நான் ஜி.எம்.பி சார் எழுதின இடுகையைப் படித்து என் கருத்தை எழுதிவிட்டேன்.

   ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கும். அவருடைய கருத்தை அவர் எழுதியிருக்கார். நான் ஜி.எம்.பி. சாரின் கருத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. சிலர் ஏற்றுக்கொள்ளலாம். ஒவ்வொரு கருத்துக்கும் ஆதரவும் இருக்கும், எதிர்ப்பும் இருக்கும். 'ஆதரிக்கிறவர்கள் நியாயவான்கள்', 'எதிர்க்கிறவர்கள் நியாயமற்றவர்கள்' என்று நினைப்பதே சர்வாதிகாரப் போக்காகிவிடுமல்லவா?

   நீக்கு
  2. அவ்வாறே இருந்தால் நலம்...

   ஆனால் நேர்மை நியாயம் என்பதை மறந்து விட்டு, சங்கிகள் போல ஆக வேண்டுமா...?

   நீக்கு
  3. தனபாலன்... இந்தத் தளத்தில் அரசியல் எழுதுவதை எ.பி. ஆசிரியர் குழுமம் பெரும்பாலும் விரும்புவதில்லை. நானும் அரசியல் பேச விரும்பமாட்டேன். அது ஒவ்வொருவரின் கருத்து, அசெஸ்மெண்ட், அரசியலை கவனிக்கும் விதம், அவங்களுக்கு எந்தக் கட்சியால் லாபம் என்று பல்வேறு ஃபேக்டர்கள் உண்டு. அவங்க அவங்கதான் தீர்மானிக்கணும். 'நான் சொல்வதுதான் சரி' என்று ஒவ்வொருவரும், அரசியலைப் பொறுத்தவரை நினைப்பாங்க.

   'நேர்மை, நியாயம்' என்பதே ஒவ்வொருத்தரைப் பொறுத்து மாறுபடும். மானுக்கு, தன்னைக் கொலைசெய்யும் சிங்கம் செய்வது 'அநியாயம்'. சிங்கத்துக்கு, அடுத்த மிருகங்களை வேட்டையாடுவது, அதன் வயிற்றுக்குச் செய்யும் நியாயம். இயற்கைக்கு, சூழ்நிலையில் ஒரு பேலன்ஸ் கொண்டுவருவது நியாயம்.

   நீக்கு
  4. அங்கு நம் தலைவர் ஸ்ரீராம் சார் கருத்துரை தான் top...!

   நீக்கு
  5. நான் ஒரு வழக்குரைஞரை லண்டனில் சந்தித்தேன். மதிய உணவின்போது, அவரிடம் அப்போதைய பிரதமர் டோனி ப்ளேரைப் பற்றி ஒரு கருத்தைச் சொன்னேன். அப்போது அவர், 'எப்போதுமே அரசியல், மதம் இந்த இரண்டையும் பேசக்கூடாது. அது பெரும்பாலும் கருத்து வேறுபாடுகள்ல கொண்டுவந்து விடும். அதனால் நான் இந்த இரண்டையும் பொதுவெளில எவரிடமும் பேசுவதில்லை' என்று சொன்னார். அதை பெரும்பாலும் நான் ஃபாலோ பண்ணுகிறேன், வெகு சில சந்தர்ப்பங்கள் தவிர...

   நீக்கு
  6. கௌதமன் ஐயா இங்கு (கருத்துரையில்) பேசலாம் என்பதை, போன வாரம் புதன் அன்று சொல்லி உள்ளார் என்பதை அறியவும்...

   நீக்கு
  7. பொது வெளியில் பேசுவதற்கு திறமை வேண்டும்... அது 'அ(ந்த)'சிங்கத்திற்கு கிடையாது...

   கேட்ட கேள்விக்கு பதில் கிடைக்காது... அதுவே நம் நாட்டிற்கு கிடைத்த சாபம்...

   நீக்கு
  8. அன்புள்ள டிடி!

   முதலில் உங்கள் கேள்வி என்ன? அதைச் சொல்லுங்கள், நீங்கள் எதிர்பார்க்கிற பதில் வேண்டுமானால் வரத் தாமதம் ஆகலாம்! அவ்வளவுதானே!

   நீக்கு
  9. https://gmbat1649.blogspot.com/2019/04/blog-post.html

   மேற்படி ஜி.எம்.பி ஐயாவின் பதிவில் சொல்லி உள்ளேன்... அதை கேள்வியாகவும் வாசிக்கலாம் ஐயா...

   நீக்கு
 31. எந்த நிகழ்வு ஒருவரை பாதிக்கிறதோ அதுவே ஒரு சிறு கதைக்கு வித்தாகலாம் பொதுவாக நான் கருத்து எழுதும் முன் பிறர் கருத்ஹுகளைப் படிக்கமாட்டேட் ஆனால் இப்பதிவில்விதி விலக்காக முதலில் பிறர் கருத்துகளைப் படித்தேன் என்னைப் பொஆஉத்தவரை நான் ஒரு இண்டிபெண்டெண்ட் எனக்கு என் சுதந்திரம்மிக முக்கியம் அதனால் தான் தனியே இருக்கிறோம் நானோ என் மன்சைவியோ போய் விட்டால்இன்னும் நினைத்துப் பார்க்கவில்லை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நிறைய தட்டச்சுப் பிழைகள் மன்னிக்கவும் என் பதிவு பற்றியும் பேசி இருக்கிறார்கள் அரசியலை முற்றும் ஒதுக்க முடியாது கருத்து சொல்ல விரும்பாதவர்கள் இருக்கிறார்கள் தானே

   நீக்கு
  2. வாங்க ஜி.எம்.பி சார்... உங்க பாயிண்ட் 'நான் ஒரு சுதந்திரமானவன்' என்பதை ஃபாலோ செய்யும் நிறையப் பேரை நான் பார்த்திருக்கிறேன். உண்மையில், நானும் அப்படியே, அப்படித்தான் இருக்க விரும்புகிறேன்.

   'இருக்கு இல்லை' என்பதுபோல், சேர்ந்து, தனியாக இருக்கவும் செய்யலாம்.

   //நானோ என் மனைவியோ// - நம் கையில் இல்லாதவற்றைப் பற்றிப் பேசுவதாலோ சிந்திப்பதாலோ என்ன நிகழ்ந்துவிடப் போகிறது?

   நன்றி ஜி.எம்.பி. சார்...

   நீக்கு
 32. வணக்கம் சகோதரரே.

  நல்ல அழகான உணர்வு பூர்வமான கதை. படங்களும் கதையை படிக்கும் போது பொருத்தமாக அதில் முனைப்பாக இருக்க உதவியது. ஆழ்ந்து நிதானமாக படிக்கையில் கண்கள் நிறைந்து கண்ணீர் பெருகியது. கடைசியில் மகன் கேட்டதும் அவர் மனசு குற்ற உணர்வில் தவிக்காதா? முக்கால்வாசிப் இப்படித்தான் இருக்கிறார்கள். வாழ்க்கையை கற்றும் படிப்பினை இல்லாமல்.. இல்லை, போதாமல், மிகவும் கஸ்டமாக உள்ளது. ஆனால் அந்த கடைசி வரி மிகவும் மனதை தாக்கியது. அது கதை எழுதியவரின் மனதையும் தாக்கி எப்படி மாற்றியதா, இல்லையா என்பதையும் ஒரு இயல்பான கதையாக தொடரலாமே...! மனதில் நிறைந்த சிறப்பான கதையை தந்த தங்களுக்கு மனம் கனிந்த பாராட்டுக்கள். நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கமலா ஹரிஹரன் மேடம்.. கதையைப் படித்து விமர்சித்ததற்கு நன்றி.

   வாழ்க்கைல நாம எல்லோரும் தவறுகள் செய்கிறோம். ஆனா சட் என்று நமக்குப் புரிபடும்போது, சரி செய்தால் உயர்வோம். அந்தத் தருணத்தைத் தவறவிட்டால் சரிசெய்யக் கிடைத்த வாய்ப்பு நழுவி, காலம் நமக்குப் பாடம் கற்பிக்கும் வாய்ப்பைக் கொடுத்தவராகிவிடுகிறோம்.

   மிக்க நன்றி உங்க கருத்துக்கு

   நீக்கு
 33. முக்கால்வாசிப் பேர் என எழுதினேன். தவறுதலாக "பேர்" என்பது விடுபட்டு விட்டது. நன்றி.

  பதிலளிநீக்கு
 34. கதையில் நான்அனுப்பியுள்ள கடைசி இரண்டு படங்களைப்பற்றி யாராவது குறிப்பிடுவார்களா என்று எதிர்பார்த்தேன். நெல்அலைச்ந்த சீமையைச்ப் சேர்ந்தவர்கள்கூட கேட்கலையே.

  படங்கள் நான் எடுத்தவை. தாமிரவருணி ஆற்றுத் தீரம். கசிந்த கண்ணீருடன் கதைக்குப் பொருத்தமாயிருக்கும் என்று சேர்த்திருந்தேன். இதுபற்றி கொஞ்ச நேரத்தில் எழுதுகிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோதரரே

   கரையில் அமர்ந்திருக்கும் பெரியவர் படம் நம்மிடையே பிரபலமானதுதான். மற்ற மூன்று படங்களும் அழகாக பசுமையாக உள்ளது. அழகான நீர் நிலை படங்களும்,நீர் நிலை நோக்கிச் செல்லும் படித்துறை படங்களும், தாமிரவருணி சம்மந்தபட்டவை என்பதறிந்து கொண்டேன். தி. லி என்றாலும், தாமிரவருணி ஓடும் இடமெல்லாம் செல்ல எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. கல்லிடையில், உறவுகள் இருந்ததினால், அங்குள்ள ஆற்றங்கரை சென்று தாமிரவருணியை ரசித்திருக்கிறேன். மற்றபடி தற்சமயந்தான் தி. லி க்கு செல்லும் போது அகஸ்தியர் அருவி, அருகிலிருக்கும் தாமிரவருணி ஆற்றங்கரை என பல இடங்களுக்கு சென்று வந்தோம். இன்னமும் பாபநாசம் செல்லும் வாய்ப்பு கிடைக்கவில்லை. தாங்கள் மிகவும் அழகாக படங்களை எடுத்துள்ளீர்கள். மேலும் விபரங்களை அறிய ஆவலாய் உள்ளேன்.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   நீக்கு
  2. ஆவ்வ்வ்வ்வ் அந்த முதல் படம்தான் என் கண்ணைக் கவர்ந்தது.. காவேரியோ எனக் கேட்க வந்தேன்.. இது கடசிக் கொமெண்ட்டில் போட்டிருக்கிறீங்க அதனால என் கண்ணில் பட்டுது, ஏனைய கொமெண்ட்ஸ் இன்னும் படிக்கவில்லை.

   இப்படித்தான் தஞ்சாவூரிலும் காவேரி ஓடுவது பார்க்கிறேன் ரிவி நாடகம் “கல்யாணவீட்டில்”.

   நீக்கு
  3. முதல் படம் தாமிரவருணி ஆறு... கோடகநல்லூரில். (நவ கைலாசத்தில் ஒன்று). நான் புஷ்கரத்துக்குச் சென்றிருந்தபோது எடுத்த படம். அருகே புகழ் பெற்ற பெருமாள் கோவிலும் இருக்கிறது. இந்த ஊரில் பாம்புகள் நிறையகாணப்பட்டாலும் மனிதர்களை ஒன்றும் செய்ததில்லையாம் (கார்க்கோடக பாம்பு பெயரால் கோடகநல்லூர்)

   நீக்கு
  4. கடைசி இரண்டு படங்கள் நான் 4 வயதிலிருந்து விளையாடிய எங்க ஊர் தாமிரவருணிஆறு.

   இதில் முதல் படத்தில் செடிகளாக இருக்கும் இடம் முழுவதும் மணலாக இருந்தது. மணல் வீடு கட்டி விளையாடியது, கல்லூரிக் காலத்தில் யூனிவர்சிடி பரீட்சைகளின்போது மணலில் அமர்ந்து பரீட்சைக்குத் தயார் செய்தது, என் பெரியப்பா, மற்றும் கசின்களின் கூட்டத்தோடு மணலில் விளையாடியது...... எல்லாம் பொய்யாய்ப் பழங் கனவாய்ப் போய்விட்டது. தேசத் துரோகிகள், ஆற்று மணலைக் கொள்ளையடித்து தாமிரவருணி ஆற்றுக்கும் அதனைச் சுற்றியுள்ள மக்களுக்கும், தலைமுறைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்திவிட்டனர்.

   ஆற்றின் நடுவில் தெரியும் பாறையில்தான் சாயும் வேளையில் எங்கள் பெரியப்பா, எங்களுக்கு சாதமும், குழம்பும் கையில் போடுவார். நடுப்பாறை என்று சொல்லப்படும் இடமே சிதிலமடைந்ததுபோல் இருக்கிறது.

   தங்கள் சொத்தான ஆற்றைக் கெடுக்க அனுமதித்துவிட்டு, தண்ணீருக்குப் போராடும் மக்களைப் பார்க்க பரிதாபமாக இருக்கிறது.

   நீக்கு
  5. கடைசிப் படம், ஆற்றின் படித்துறை... ஆற்றில் வெள்ளம் போகும்போது, இங்கிருந்துதான் எல்லோரும் ஆற்றில் டைவ் அடிப்பார்கள். நானும் பல மார்கழி மாதங்களில், கருக்கலில் இந்தப் படிகளிலேயே அமர்ந்து குளித்திருக்கிறேன்.... அந்த இடத்தைப் பார்த்தபோது மனதை என்னவோ செய்தது.

   அந்த ஊர்க்கார்ர், என் பையனிடம், உங்க அப்பா இதுலேர்ந்து ஜம்ப் பண்ணுவார், ரொம்ப வாலு என்று சொன்னார்... அந்த இடம் என்னை நினைவுகளால் அலைக்கழித்தது.

   நீக்கு
  6. ஓ உண்மையாவோ....மனதை என்னமோ பண்ணுது..

   இதனால்தான் எனக்கும் ஊருக்குப் போகவே பிடிக்கவில்லை.. இழந்தது இழந்ததாகவே இருக்கட்டும், திரும்ப போய்ப் பார்த்து கவலையை வளர்ப்பானேன் என எண்ணுவேன்.

   நீக்கு
  7. அதிரா.... இழந்தது இழந்ததுதான். நீங்க போய்ப்பார்த்து, பல வீடுகளின் சிதிலங்களையோ அல்லது தெரிந்தவர்களின் துயரங்களையோ தெரிந்துகொண்டு என்ன ஆகப்போகிறது? நீங்கள் கேன் & ஏபல் புத்தகம் (ஜெஃப்ரி ஆர்ச்சர்?) படித்திருப்பீங்க என்று நினைக்கிறேன். அதில் ஏபல், தன் வயதான காலத்தில் போலந்துக்குப் போய் தன் வயதான தாயாரைப் பார்க்கும்போது, அவர் மிக மிக முதிர்ந்த நிலையில் இருப்பார். பணக்கற்றையை அவரிடம் கொடுக்கும்போது, அந்தத் தாயார், அதனை அடுப்பில் போட்டு எரித்து தன்னைச் சூடு படுத்திக்கொள்வார்.... கடந்த ஸ்டேஷன்களுக்குத் திரும்பிப் போய்ப் பார்க்க ஆசை வரும்... ஆனால் பெரும்பாலும் அது ஏமாற்றத்தில் முடியும்.

   நீக்கு
  8. ///படித்திருப்பீங்க என்று நினைக்கிறேன். ///

   ஹா ஹா ஹா.. எங்கள் உறவில் ஒரு பெண் இருக்கிறா... நீங்க என்ன கேள்வி கேட்டாலும் பதிலுக்கு பலமாக ஒரு சிரிப்பு சிரிப்பா:)).. அப்படி வாழ நானும் பழகி வருகிறேன்ன்.. ஹா ஹா ஹா:))

   நீக்கு
  9. படிக்கலைனா கண்டிப்பா படிங்க. ரொம்ப அருமையான புத்தகம். நான் பல முறை அதனைப் படித்திருக்கிறேன்.

   நீக்கு
 35. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 36. //‘அப்பா… என்னை ஆளாக்கறதுக்கு நீங்க ரொம்பவே கஷ்டப்பட்டுட்டீங்க. நான் நல்ல உத்தியோகத்துல இருக்கேன். எனக்கு கொஞ்சம் வசதியான பெண்ணாப் பாருங்க’
  //
  மகனே அப்படிச் சொல்லும்போது, போஸ் பண்ணிக் கட்டி வைக்க முடியாதே.. அது நல்லதுமில்லை. நாம் ஒரு விசயத்தில் பிள்ளைகளைப் போஸ் பண்ணினால், நமக்காக அவர்கள் ஓம்படக்கூடும், ஆனா பின்பு அவர்கள் வாழ்வில் ஏதும் ஒரு சிக்கல் நடந்தால்ல்.. சாகும்வரை நாம் நொந்து நொந்தே மடிய வேண்டி வரும்... நாம்தானே போஸ் பண்ணிச் செய்ய வைத்தோம் என.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவரவர் ஆசைப்படி நம்மால் முடிந்த அளவு அவங்க வாழ்க்கைக்கு உதவணும். தடியால் அடித்து பழமாக்க முடியுமா?

   அவரவர் வாழ்க்கையை அவழவரே வாழணும்.

   நீக்கு
 37. //அதுக்கு ஒத்தாசையா இருக்கறமாதிரி கொஞ்சம் பணக்காரக் குடும்பத்துலதாம்பா எனக்கு பொண் பார்க்கணும். அம்மாவுக்கு இதெல்லாம் புரியாதுப்பா. அவள்டயும் என் எண்ணத்தைச் சொல்லிடு”//

  பொதுவா அம்மாவுக்குத்தான் ஐஸ் வச்சு அப்பாவை சமாதானப்படுத்தும்படி சொல்வார்கள் ஆனா இங்கு மாறி நடக்கிறதே... ஆனா எங்கள் குடும்பத்திலும் அம்மாதான் படு ஸ்ரிக்ட்:)).. அப்பா எங்கட விருப்பத்துக்கு வளைஞ்சு குடுப்பார்ர்:))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எப்போவுமே பசங்களுக்கு அம்மாவிடம்தான் நெருக்கம் அதிகம். ஆனால் இங்க, மகன் கட்டிக்க மறுப்பது, அம்மாவின் சகோதரன் மகளை. அதனால் அம்மா மனம் நோக்க்கூடாது என்று அப்பாவின் மூலமாகச் சொல்கிறாரோ?

   நீக்கு
 38. //ரங்கநாதனின் பேச்சு அவருக்கு வருத்தத்தை அதிகப்படுத்தியது. கையில் இருக்கும் வைரத்தை விட்டுவிட்டு இன்னொன்றைக் கேட்கிறானே பையன் என நினைத்தார்.//

  உண்மைதான், எல்லாமே பொருந்தி வந்தால், நல்லவர்களாக இருந்தால்ல்.. எங்கோ ஒரு இடத்தில் குழப்பம் வரும்.. சில இடங்களில் பிள்ளைகள் விரும்புவார்கள்.. சொந்தம் விட்டுக் குடுக்காமல் தடுக்கும் ஹா ஹா ஹா:).

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவரவர்களுக்கு எது ப்ராப்தமோ, நல்லதோ அதுவே நடக்கும், அதிலும் திருமண விஷயத்தில். ஒருத்தன் ஆசைப்பட்டா மட்டும் நடந்திடுமா? அது அந்தப் பெண், இரு குடும்பங்கள் சம்பந்தப்பட்ட விஷயமல்லவா?

   நீக்கு
 39. ஆனா ஒன்று, இக்கதையில் வந்த மருமகளைக் குறையாகச் சொல்லப்படவில்லை, அப்போ மாமாவின் மகளைக் கட்டியிருந்தால்கூட, மகன் வெளியூரில்தானே இருந்திருப்பார் வேலை நிமித்தம்.. அப்பவும் பெற்றோர் தனியாகத்தானே இருந்திருப்பினம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இருக்கலாம்... ஆனால் உறவு என்று வரும்போது, நம்ம மாமா, அத்தை என்ற எண்ணம் அந்தப் பெண்ணுக்கு இருக்கும். அதுபோலவே, உதவியாக இல்லை என்றாலும், கணவனின் பெற்றோர், அந்தப் பெண்ணை குறை சொல்ல மாட்டார்கள்... நம்ம மருமவள்தானே என்று நினைப்பார்கள்.

   இதுபற்றி கீசா மேடம், மற்ற அனுபவஸ்தர்கள் சரியாச் சொல்லுவாங்க..

   நீக்கு
  2. என்னோட அனுபவத்தில் உறவில் திருமணம் செய்து கொண்டு அந்தப் பெண்ணைத் தூக்கி வைத்துக் கொண்டாடியவர்களையும் பார்க்கிறேன். உறவில் திருமணம் செய்து கொண்டு சொந்த அத்தையையே தூக்கி எறிந்த மருமகளையும் பார்த்திருக்கேன்/பார்க்கிறேன். இதெல்லாம் அவரவர் மனப்பான்மையைப் பொறுத்து!

   நீக்கு
  3. நான் சொல்லுவதெல்லாம் சரி என்றே சொல்ல முடியாது! என் அனுபவம் வேறே! பொதுவான அனுபவம் வேறே! ஒவ்வொருத்தர் அனுபவமும் வெவ்வேறு! என் பார்வையில் படுவதெல்லாம் சரியாகுமா?

   நீக்கு
 40. ///நாம நல்லா வாழ்ந்தோம் என்பதற்கு என்ன அர்த்தம்? பெத்த பசங்களை படிக்கவைத்து ஆளாக்குவது மட்டும்தான் வாழ்க்கையோட நோக்கமா? அவனுக்குன்னு ஒரு குடும்பம்னு ஆனப்பறம் நாம ஒதுங்கிடணுமா? அதுக்கப்புறம் நாமே, நம்முடன் கூட யாரும் வராத சாலையில் நம் முடிவை நோக்கி பயணத்தைத் தொடரணுமா?///

  என்னைக் கேட்டால் இதுக்கு விடை யேஸ் என்றுதான் சொல்லுவேன். என்னைப்பொறுத்து பிள்ளைகளைப் படிப்பிப்பது ஆளாக்குவது பெற்றோர் பொறுப்பு, ஏனெனில் நம்மைக் கேட்டு நம் பிள்ளை பிறக்கவில்லை, நாம் நமக்காகப் பிள்ளை பெற்று வளர்க்கிறோம், வளர்க்கும்போதே மனதை ரெடி பண்ணிடோணும், அவர்கள் காலத்தில் அவர்களை சுகந்திரமாக விட்டிட வேண்டும் என.

  அதுக்காக அவர்களுக்குப் பாசம் இல்லாமல் போயிடாது, பாசம் இருக்கோ இல்லையோ நாம் அவர்களுக்கு சுமைபோல ஆகிடக்கூடாது.

  நம் நாட்டுப் பெற்றோர் செய்யும் தவறு, கையில் இருக்கும் பணம் சொத்து பத்து அனைத்தையும் பிள்ளைகளிடம் கொடுத்து விடுவார்கள்.. அதுதான் தப்பாகிறது. படிப்பிச்சு விட்டாலே போதும், பின்னர் நம்மிடம் ஓவராக இருந்தால் குடுக்கலாம், இல்லை எனில், ந்ம்மிடம் இருப்பது, நாம் இறந்தபின்னர் பிள்ளைகளுக்கு, என எழுதி வைக்க வேண்டும்... பிள்ளைதானே என நினைச்சிடக் கூடாது, ஏனெனில் திருமணமாகும் வரைதான், நம் பிள்ளைகள் நம் வளர்ப்பின்படி இருப்பார்கள், பின்பு அவர்கள் துணையோடு சேர்ந்துதான் முடிவெடுப்பார்கள்.. அப்படித்தானே எடுக்கவும் வேண்டும், அதனால பிள்ளை ஆயினும் நம்மிடம் உள்ளதை எல்லாம் தாரை வார்த்திடாமல், கடசிவரை நமக்குத் தேவையானதை வைத்துக் கொண்டுதான் மிகுதியைக் கொடுக்க வேண்டும்.

  எங்கள் ஊரில்கூட, பெண் பிள்ளைகளுக்கு வீட்டை சீதனமாக எழுதிக் குடுக்கும்போது, பெற்றோருக்குப் பின்னரேதான் இந்த வீட்டை விற்கலாம், பெற்றோருக்கு “சீவியம்”[அதற்குப் பெயராம்] என வைத்து எழுதுவார்கள்.

  நாம் நல்லா வாழ்ந்தோம் என்பதற்கு அர்த்தம்.. கணவன் மனைவி கடசிவரை ஒரே அன்போடும் பாசத்தோடும் இருப்பதுதான்... துப்பரவாகத் திரும்பியே பார்க்காத பிள்ளை எனில்தான் கவலைப்பட வேண்டும், நம்மை வந்து பார்த்து சுகம் விசாரிச்சுக் கொண்டிருக்கிறார்கள் எனில் அது போதும்தானே.. அதுக்கு மேல் எதிர்பார்க்கவும் கூடாது, பெற்றோர் நமக்குத் தொல்லை எனப் பிள்ளைகள் எண்ணுமளவுக்கு கஸ்டம் கொடுக்கவும் கூடாது... இப்படித்தான் நாம் எப்பவும் நினைப்பது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. "நாம் அவர்களுக்கு சுமை போல ஆகிவிடக் கூடாது" - அருமை அருமை... ஆனால் இது விதியின் கைகளில்தானே இருக்கிறது.

   சொத்து பற்றி என் அப்பா எனக்கு நிறைய செய்திகளை, பிறர் அனுபவங்களைச் சொல்லியிருக்கார்.. அவரவர் சொத்து கடைசி காலம்வரை அவரவர் இடம்தான் இருக்க வேண்டும். திருமணம் செய்து கொடுத்திட்டால் அவங்க, அவங்க சம்பாத்தியத்துலதான் வாழ்க்கை நடத்தணும்.

   உங்கள் எண்ணம் சிறப்பாக இருக்கு. நல்ல அமைதியான வாழ்க்கை தொடரட்டும்.

   நீக்கு
 41. //நம்ம தலைமுறைல நான் வேலைக்காக பக்கத்தூருக்குப் போனாலும், அப்பா அம்மாவோட சேர்ந்துதானே வாழ்ந்தோம். //

  அந்தக் காலம் வேறு, இந்தக் காலம் வெறு.. பழைய காலங்களில் பெற்றோரை விடப் பிள்ளைகள் படித்திருப்பர்கள், அப்படிப்பட்ட குடும்பத்தில் பெற்றோரும் அடங்கி நடப்பார்கள்.. ஆனா இப்போதைய காலங்களில் பெற்றோரும் படித்தவர்களாக இருப்பதால், பிள்ளைகள் விசயத்திலும் பேரப் பிள்ளைகள் விசயத்திலும் மூக்கை நுழைப்பார்கள்.. தமக்குத்தான் அனுபவம் அதிகம் தாம் சொல்வதைத்தான் கேட்கொணும் என்பதுபோல சட்ட திட்டங்களும் அமைப்பார்கள்.. அதனாலதான் பிள்ளைகளும் விட்டுவிட்டுத் தூர ஓட நினைக்கின்றனர்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்த "மூக்கை நுழைப்பதை" நான் நிறைய குடும்பங்களில் பார்த்திருக்கிறேன். திருமணம் செய்துகொடுத்துவிட்டால், அவங்களைத் தழைக்க விடணும். சும்மா அட்வைஸ், கைடன்ஸ்னு டார்ச்சர் பண்ணக்கூடாது. பொதுவா என்னிடம் கற்றுக் கொடுக்கும் பொறுமை குறைவு. அப்படி இருக்கும்போது, கற்றுக் கொடுக்க முயன்றால் நம்மை அறியாமல் நாம் அவர்களது வாழ்வை வாழ ஆரம்பிப்போம். அது தவறு.

   கடவுள் ஒவ்வொருவருக்கும் திருமண வாழ்க்கை, குடும்பம் நடத்துவது என்ற பொறுப்பைக் கொடுத்திருக்கிறார். அதை அவரவர்கள்தாம் வாழ வேண்டும்.

   நீக்கு
 42. /// இந்தத் தலைமுறைல, நம்மை கரை ஏற்றும் கடமை பசங்களுக்குக் கிடையாதா? இப்போ உள்ள வாழ்க்கைல, அப்பாவோ அம்மாவோ, பசங்களுடைய வாழ்க்கைல வெறும் கருவேப்பிலைதானோ?///

  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) இது தேவையில்லாத புலம்பல்.. சிம்பதி கலக்ட் பண்ணுகிறார்ர்ர்ர்ர் ஹா ஹா ஹா:))..
  பெற்றோர்தானே பிள்ளைகளைக் கரை ஏற்ற வேண்டும்... சில வயதானோருக்கு, இப்படிப் புலம்பித் தீர்ப்பதிலும் ஒரு மகிழ்ச்சி:)).. அதாவது தான் தனியே இருக்கிறேன் தன்னை ஆரும் கவனிப்பதில்லை இப்படிச் சொல்லித் திரிவதில்.. ஆனா இப்படிப் புலம்புவதற்கு முக்கிய காரணம் பொருளாதார வசதி இன்மைதான். தன் கையில் ஒரு வருமானம் வரும்படி, ஏதாவது ஒரு முறையை ஏற்படுத்திட வேண்டும். பின்பு பொழுது போக்குக்காக ஏதாவது ஒரு கைவேலையோ.. புளொக் எழுதுவதோ:) ஹா ஹா ஹா... கதை எழுதி அனுப்பலாம், ஏதோ ஒன்று செய்யப் பழகிக் கொள்ளோணும்.. அப்போதான் புலம்பாமல் பொழுதைப் போக்க முடியும்:))

  பெற்றோர் கறிவேப்பிலை அல்ல... ஏணிப்படிகள்தான் என்றுமே... இல்லை எனில் பிள்ளை எப்படி நன்றாக முன்னேறி வந்திருக்க முடியும்?..

  ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்சப்பா முடியல்ல:)) ஹா ஹா ஹா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க அதிரா... உண்மையாவே... பிடிங்க "சிந்தனைச் சிற்பி அதிரா" பட்டம்.

   ஆம்.. பெற்றோர், ஆசிரியர் இருவரும் வாழ்க்கையில் ஏணிப்படிகள்தாம். அதனால உயர்ந்தவங்க, வந்து பார்த்து நன்றி சொன்னால் அதிருஷ்டம்.. இல்லாவிட்டாலும், அவர்கள் உயர காரணமாயிருந்தோம் என்ற திருப்தி.

   நீக்கு
  2. ஹா ஹா ஹா ஹையோ மெதுவாச் சொல்லுங்கோ பட்டத்தை:) இங்கின பலர் கொலை வெறியோடு என்னைப் பார்க்கினம்:)

   நீக்கு
  3. //இங்கின பலர் கொலை வெறியோடு // - நானும் அதில் ஒருத்தனா என்று யோயோயோசிசிசிசிசித்துச் சொல்கிறேன். ஹாஹா.

   நீக்கு
 43. //“ஏம்பா… இதை எழுதும்போது கிராமத்துல தனியா இருக்கற நம்ம தாத்தா நினைவுக்கு வரலையா?”//

  இன்று இப்படிக் கேட்கும் பேரனும்:)) நாளைக்கு தன் குடும்பம் என வரும்போது அதைத்தான் செய்யப்போகிறார் என ரெடியாக இருக்கோணும்:))

  எதிர்பார்ப்பு இருந்தால்தானே ஏமாற்றம் இருக்கும்:))..

  ஒரு ஐபாட்டும், கிண்டிலும் வாங்கி ரெடியாகச் சொல்லுங்கோ மதவனிடம்:).. ஒன்-லைன் ஸ்ரோறி படிச்சே வாழ்க்கையை ஓட்டிடலாம் ஹா ஹா ஹா:))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான் அதிரா... ஆனால் பெற்றோர்களைப் பார்த்து வளரும் பசங்க, பெற்றோர் செயலைப் பார்த்துத்தான் கத்துப்பாங்க. தாங்கள் பெற்றோருக்குச் செய்யாமல், பசங்க மட்டும் நமக்குச் செய்வாங்க என்று நினைப்பது வீண்வேலை.

   நீக்கு
  2. பெற்றோரைப்பார்த்து வளரும் பிள்ளையும் அப்படித்தான் இருக்கும் எனவும் சொல்ல முடியாது நெ.தமிழன், எல்லாம் பெற்றோர் வாங்கி வரும் வரமே:).. நல்ல பெற்றோஒருக்கு உதவாக்கரைப் பிள்ளை உருவாகியிருக்கு.. அதேபோல குடிகார அப்பாவுக்கு தங்கமான மகன் உருவாகியிருப்பார்ர்...

   நீக்கு
 44. உண்மையில நல்ல வித்தியாசமாக நல்ல அழகாக எழுதியிருக்கிறீங்க நெல்லைத்தமிழன்.. இதுக்காக மேலே படத்தில் இருக்கும் தாமிரபரணி ஆற்றின் ஒரு பகுதியை உங்கள் பெயருக்கு எழுதிக்குடுக்கச் சொல்லி, மோடி அங்கிளுக்கு மெனுக் குடுக்கப் போறேன்ன்ன்:)..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி அதிரா..... நேரம் கிடைக்காதபோதும் வந்து கதையைப் படித்துக் கருத்துச் சொன்னதற்கு நன்றிகள்.

   அது "மெனு"வா? இன்னும் திங்கக்கிழமை பதிவிலிருந்து வெளில வரலையா? ஹோட்டல் மெனு ஞாபகமாகவே இருக்கீங்களே. நீங்க சொல்ல வந்தது, "மனு".... ஐயோ ஐயோ

   நீக்கு
  2. ஹா ஹா ஹா:)) ஒரு ஃபுளோல வந்திடுச்சு:)).. எல்லாம் என் தோசை வாலி செய்யும் மாயம்:))

   நீக்கு
 45. திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்...

  வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும் அதிராட பெயர் சொல்ல வேணும்:)..

  அதிரா போல் யாரென ஊர் சொல்ல வேண்டும்.. ஹா ஹா ஹா மீ எஸ்கேப்பூஊஊஊஊ:))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதிரா....

   மனம் போன போக்கிலே கனவு காணலாமா
   கற்பனையாய் கதைகளை எழுதிப்பார்க்கலாமா.... ஹாஹா

   நீக்கு
  2. நிஜத்தில் காண முடியாததை எல்லாம் கனவிலதானே காண முடியும்.. மைண்ட் கிராவ் என ஒரு ஹேம் இருக்கு எக்ஸ்பொக்ஸ் இல்.. அதில பிள்ளைகள் விளையாடுவது பார்க்க ஆசையாக இருக்கும்:)..

   அதாவது காணி வாங்குவார்ர்கள், தங்கம் கிண்டி எடுப்பார்கள், 5 ஸ்டார் ஹோட்டேன் போல வீடு கட்டுவார்கள் அதில் றூம் பெட், பாத்றூம் கிச்சின் என இப்படி விதம் விதமாக அலங்கரிப்பார்கள்.

   பெரிய பெரிய தோட்டம் வாங்குவார்கள் அதில் ஆடு மாடு வளர்ப்பார்கள். அதில் இன்னொரு புதினம், பெண் ஆட்டையும் ஆண் ஆட்டையும் கிட்டக் கொண்டுபோய் முட்ட வைப்பார்கள், உடனே மேஏஏஏஎ என ஒரு குட்டி ஆடு அதில் வந்திடும் ஹா ஹா ஹா...

   நீக்கு
  3. நீங்க Virtual Games அல்லது அந்தக் கண்ணாடி போட்டுக்கிட்டு காடுகள், மலைகள் இல்லைனா பயங்கர மிருகங்களோடு பயணிப்பதுபோல விளையாடியிருக்கீங்களா? எங்க ஊர்ல சுமார் 2 பவுண்டுக்கு 5 நிமிடம் விளையாடலாம். அப்போ அந்த இடங்களுக்கே நாம பயணிக்கறமாதிரி இருக்கும், பயமாக இருக்கும்.

   நீக்கு
  4. யேஸ்ஸ்ஸ்ஸ் இங்கு வேர்க்கிங் பிளேஸ்களில் கெட்டுகெதர் வைப்பார்கள்.. அப்போது இப்படியான கேம்ஸ் எல்லாம் ஃபிரீயாக வைத்திருப்பார்கள்.

   நான் செலக்ட் பண்ணியது, ஒரு மலை உச்சியில் நிறு நடப்பதைப்போல... ஹையோ காலை எடுத்து வைக்கவே முடியல்ல, கீழே பாதாளமாக தெரிஞ்சுது, நானோ மலையின் விளிம்பில் நிற்கிறேன்ன்.. அப்போ ஒரு முயல்போல ஒரு மிருகம் என்னை நோக்கி துள்ளித்துள்ளி வரத்ட் ஹொடங்கிட்டுது.. நானைஓ காலைத்தூக்கி அடிச்சுத் துள்ளி கத்தி.. ஹா ஹா ஹா பெரிய முசுப்பாத்தியாப் பொச்சு:))..

   ஆனா அடிக்கடி மெய் மறக்காமல், நான் இருப்பது நிலத்தில, இது ஹேம் என மனதுக்கு சொல்லிக்கொண்டிருந்தேன்ன் இருப்பினும் பயமாக இருந்துது:).

   நீக்கு
 46. மனசைப் பிசைந்த கதை. இந்தக் கதை கிளப்பும் உணர்வுகள் பற்றி மனசுக்குள்ளே தான் புதைத்துக் கொள்ள முடியும். அல்லது இப்படியான கதைகள் எழுதி புழுக்கத்தைப் பிறரிடம் பகிர்ந்து கொண்ட உணர்வில் கொஞ்சமானும் மட்டுப்படுத்திக்கலாம்.

  ஆனால் அக்குவேறு ஆணிவேறாக உரத்த குரலில் அலசி கதையின் ஜீவனைக் கிளறிப் பார்ப்பின் மாபாதகம் செய்தோராவும் என்ற உணர்வு மட்டும் மனசில் நிரந்திரமாகத் தேங்கிவிட்டது.

  பத்திரிகைகளை நம்பி பிரயோஜமில்லை. கதைகள் படிப்பதற்குத் தான் பத்திரிகைகள் இருந்தன என்பது மாறிப் போன காலம் இது. அவைகளுக்கும் வேறு வேலைகள் சூழ்ந்து விட்டன.

  தமிழகத்தின் பெரிய பத்திரிகைகள் செய்யாத காரியத்தை நிறைவேற்றி பெருமை கொண்ட எங்கள் பிளாக்குக்கும், பிரமாதமான மன உணர்வுகளை ஆர்ப்பாட்டம் இல்லாமல் அடக்கமாக பகிர்ந்து கொண்ட முரளிக்கும் மனசார வாழ்த்துக்கள்.

  கதையில் அமைதியக வலம் வந்த வாசு இதே மாதிரி இன்னொரு கதை படிக்கைற வரை நிச்சயம் நினைவில் நிற்பான். இதே மாதிரி இன்னொரு கதை வாசிக்கும் கொடுப்பினையும் இப்போதைக்கு இல்லை என்றெ தோன்றுகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜீவி சார்.... நீங்க கதையைப் படித்துவிட்டு கருத்தும் சொன்னது எனக்கு மிகுந்த சந்தோஷத்தை வரவைத்தது.

   எழுதுபவனுக்கு கதை நல்லா வந்துவிட்டது என்று தோன்றினாலே, திரும்ப படிக்கும்போதும் நல்லாவே இருக்கு என்ற எண்ணம் தோன்றிவிட்டால், ஓரளவு பிறரும் ரசிப்பார்கள் என்ற எண்ணம் வந்துவிடும். நான் எழுதின கதைகளில் சிலவற்றிர்க்கு அவ்வாறு தோன்றியிருக்கிறது.

   நன்றி ஜீவி சார்.... (எனக்கும் ஆச்சர்யம்... ஒரு எழுத்தாளரின் பையனும் எழுத்தாளராக ஆசைப்பட்டு அதனையும் செய்வது. வாழ்த்துக்கள் உங்கள் இருவருக்கும்)

   நீக்கு
 47. மை டியர் ஸ்வாமீ, எனது தாமதமான வருகைக்கு என்னை முதலில் தாங்கள் க்ஷமிக்கணும். இன்றுதான், இப்போதுதான் இந்தக் கதையைப் படிக்க, எனக்குக் கொஞ்சம் சந்தர்ப்பம் அமைந்தது. பொறுமையாகப் படித்தேன். மிக அருமையாகவே எழுதியுள்ளீர்கள்.

  அதுவும் கதையில் ஓர் தந்தை, ஓர் படத்தைப் பார்த்துவிட்டு, அதற்கு ஏற்ப கதை எழுதுவது போலவும், அவரின் மகன் அதனைப் படித்துவிட்டு, தனிமையில் தவித்து வரும், தன் தாத்தா பற்றிய விஷயத்தைத் தன் தந்தைக்கு எடுத்துச் சொல்லி நினைவூட்டுவது போலவும் ’நச்’ என்று முடித்துள்ளது மிகச் சிறப்பாக உள்ளது.

  நம் அன்றாட வாட்ஸ்-அப் அரட்டைகளிலேயே, உங்களிடம் எவ்வளவோ தனித்திறமைகள் உள்ளன என்பதை, நானும் என் ஆத்துக்காரியும் உணர்ந்து, எங்களுக்குள் உங்களைப்பற்றி அடிக்கடி சிலாகித்துப் பேசிக்கொள்வது உண்டு. இந்தத் தங்களின் எழுத்து அதை மேலும் நிரூபிப்பதாக அமைந்துள்ளது.

  இந்தத் தங்களின் சிறுகதையிலும், வீட்டுக்கு வீடு, மனிதருக்கு மனிதர், நடந்து கொள்ளும், உலக யதார்த்தங்களைத்தான், யாரோ ஒருவர் ஒரு படத்தைப் பார்த்து கற்பனையில் எழுதியுள்ளதாக சொல்லியுள்ளீர்கள். அதனை சுவைபட சொல்லிய பாணி வித்யாசமாக உள்ளது. அதற்கு என் மனமார்ந்த பாராட்டுகள் + வாழ்த்துகள்.

  இது ஒன்றும் உண்மை நிகழ்வல்ல. சும்மா ஒருத்தர் எழுதிய கதை மட்டும்தானே என ஈஸியாக எடுத்துக்கொள்ளும் வாசகர்களாக இங்கு பலரும் இருக்கலாம். அவர்களுக்கு உலக அனுபவம் பத்தாமலும்கூட இருக்கலாம். ஒரு நாணயத்துக்கு இரண்டு பக்கங்கள் உண்டு என்பதை அறியாதவர்களாகவும் அவர்கள் இருக்கலாம்.

  நல்ல பழுத்த அனுபவசாலிகளான வாசகர்களும், இந்தக் கதையைப் படித்து உடனே கலங்கி விட மாட்டார்கள். வீட்டுக்கு வீடு நடக்கும் சாதாரண விஷயம்தானே என அவர்கள், தங்களுக்குள் நினைத்துக்கொள்வார்கள். இருப்பினும் தாங்கள் கதை சொன்ன பாணி எனக்கு மிகவும் பிடித்துள்ளது.

  மகனிடம் பாசம் வைக்கும் + எதிர்பார்ப்புகளை வளர்த்துக்கொள்ளும் அப்பா என்றால் கொஞ்சம் அப்பாவியாகத்தான் இருப்பார். இந்தக் கதையில் வரும் அப்பாவும் அதற்கு விதிவிலக்கல்ல.

  குழந்தைப்பருவம் தாண்டி, வாலிபப்பருவத்தை எட்டி, திருமணமும் ஆகி பொண்டாட்டியும் வந்து விட்டால், அதன்பின் அப்பாவாவது, அம்மாவாவது, பந்தமாவது பாசமாவது? எல்லாமே சுத்தப் பேத்தலாகும்.

  இந்தக் கதையில் வரும் பிள்ளையாண்டான், மிகவும் சுயநலவாதியாக இருப்பினும், அப்பாவுக்காக பணத்தை வாரி இரைக்கத் தயாராக இருக்கிறான். அவனின் பெரிய இடத்து வசதியுள்ள மனைவியும் அதற்கு ஏதும் தடை விதிக்கவில்லை போலிருக்குது. அதுவரை ஓரளவுக்கு நாம் சந்தோஷப்பட்டுக்கொள்ளலாம்.

  முதுமை காலத்தில் மனைவியை இழந்த கணவர் பாடும், கணவரை இழந்த மனைவி பாடும் திண்டாட்டம் தான். எதற்கும் ஓர் கொடுப்பிணை வேண்டும். அந்தப் பிராப்தம் எல்லோருக்கும், எல்லா நேரங்களிலும் இருப்பது இல்லை. அவரவர் தலைவிதிப்படி கடைசி காலம் கசப்பாகவோ அல்லது இனிப்பாகவோ அல்லது புளிப்பாகவோ அறுசுவையில் ஏதோவொன்றாக அமைந்து விடுகிறது.

  சில பசையுள்ள பெற்றோர்கள், தங்கள் காலத்திற்கு பிறகு தங்கள் சொத்துக்களை, தங்கள் வாரிசுகள் எப்படி பிரித்துக்கொள்ளணும் என உயில் எழுதி வைப்பதும் உண்டு. இவர்கள் உயிரோடு இருக்கும்வரை அந்த உயிலால் ஒரு பிரயோசனமும் இல்லை என்பது அந்த வாரிசுகளுக்கும் தெரியும். அதி சீக்கரமாக அந்த உயிலுக்கு உயிரூட்ட சதித்திட்டமிடும் வாரிசுகளும், இந்தக் கலிகாலத்தில் உண்டு.

  ஒவ்வொரு மாதமும் ஒரு படத்தைக் காட்டி, அதற்கு ஏற்ப கதை எழுதி அனுப்புங்கோ என ஒரு போட்டி வைத்து, சிறந்த கதைகளில் First, Second & Third பரிசளிக்கலாமா என சில ஆண்டுகளாகவே நான் எனக்குள் சிந்தித்தது உண்டு. அந்த சிந்தனையை மீண்டும் கிளறும் விதமாக அமைந்துள்ளது தங்களின் இந்தக்கதை.

  அன்புடன் கோபு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கோபு சார்...

   //தாமதமான வருகைக்கு// - அதனால என்ன சார்... விட்டுவிடாமல் நீங்கள் படித்து கருத்தெழுதியதே எனக்கு மிக்க மகிழ்ச்சியை உண்டாக்குகிறது. உங்கள் பாராட்டுக்கு நன்றி. எனக்குத் திருப்தி தந்த கதை, உங்களுக்கு போரடிக்காமல் 'நச்' என முடிவடைந்தது என்று சொல்லியதே எனக்கு சந்தோஷம்.


   //உங்களைப்பற்றி அடிக்கடி சிலாகித்துப் பேசிக்கொள்வது உண்டு.// - இல்லாத திறமையை இருப்பதாக பிறரை நம்பவைப்பதே ஒரு பெரிய திறமை அல்லவா? அந்தத் திறமை எனக்குக் கைவரப்பெற்றது குறித்து மகிழ்ச்சி. இணைய நட்பு, வீட்டிலுள்ளவர்களுக்கும் அறிமுகமான நட்பாக மாறியது கண்டு எனக்கு மிக்க மகிழ்ச்சி. பொதுவா இணையதளத்துல எழுதறவங்க, தங்களின் குடும்பத்தில் நிகழும் விழாக்கள் போன்றவற்றையும் விஸ்தாரமாகப் பதிவு செய்வதால், அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் நேரில் சந்திக்காவிட்டாலும் மிகவும் பரிச்சையமானவர்களாக ஆகிவிடுகிறார்கள். அதிலும் உங்கள் வீட்டாரை நான் சந்தித்திர்ப்பதால், இன்னும் நெருங்கிய நட்பு உண்டாகிவிடுகிறது.


   நீக்கு
  2. //ஒரு நாணயத்துக்கு இரண்டு பக்கங்கள் உண்டு// - நூற்றிலொரு வார்த்தை. நான் என் சிறிய அனுபவத்தில் பார்த்திருப்பது, பெரும்பாலும் எல்லா மனித உயிர்களும் இன்னும் தங்கள் குவாலிட்டியில் இன்னும் முன்னேறவேண்டும் என்றே அவர்களது அந்தராத்மா அவர்களை உத்வேகப்படுத்துகிறது. அதனால நேரடியாக 'அநியாயங்கள்' செய்ய அனுமதிப்பதில்லை, செய்தாலும் அவர்களது மனசாட்சி அவர்களைக் குத்திக்காண்பித்துக்கொண்டே இருக்கும்.

   இதில் பையன், அப்பாவை 'கைவிட வில்லை'. ஆனால் சூழ்நிலை அப்படி ஆகிவிடுகிறது.

   //பாசம் வைக்கும் + எதிர்பார்ப்புகளை வளர்த்துக்கொள்ளும் அப்பா// - நான் எப்போதும் எழுதுவதுபோல, 'பாசம்' என்பது கீழ்நோக்கிப் பாயும் நீர்வீழ்ச்சியைப் போல. அது தன் குழந்தைகளிடம் உள்ள அளவில் கால் பங்கு கூட தன் பெற்றோர்களிடம் இருக்காது. அதனால் பசங்களை வளர்த்து அவங்களுக்கு ஒரு குடும்பத்தை உருவாக்கிக்கொடுப்பதுடன் பெற்றோர் கடமை முடிந்துவிட வேண்டும். தங்களுக்கான வருங்காலத்துக்கு தாங்கள்தான் ஏற்பாடு செய்துகொள்ளவேண்டும்.

   //எல்லாமே சுத்தப் பேத்தலாகும்.// - உண்மை. ஏனென்றால், திருமணம் ஆகும்வரை நம் குடும்பத்தில் ஒரு உறுப்பினராக இருந்த மகனோ மகளோ, அவர்களுடைய குடும்பம் என்று வந்தான பிறகு, அதற்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும், கொடுப்பார்கள். நல்ல பெற்றோர், தங்கள் மகனோ மகளோ, தங்களிடம் செடியாக வளர்ந்து, பிற இடத்தில் மரமாக நெடிதுயர்ந்து வளர்ந்து பரிமளிப்பதைத்தான் விரும்புவார்கள். அது, கனிகளை தங்களிடம் கொடுக்கும் என்று எதிர்பார்ப்பது நியாயமில்லாதது. அப்படி எதிர்பார்த்தால், தங்கள் குழந்தையை வளர்த்தது சுயநலத்தால் என்று அவர்களே ஒப்புக்கொள்வதுபோல் ஆகிவிடும்.

   //பணத்தை வாரி இரைக்கத் தயாராக இருக்கிறான்.// - இதுவே பெரிய விஷயமல்லவா? கிருஷ்ணர் கதையில், சுதாமாவுக்கு (குசேலன்) அதைவிட அதிகமான செல்வத்தைக் கொடுத்துவிடக்கூடாது என்று ருக்மணி கிருஷ்ணர் கையைப் பிடித்துத் தடுத்தார் என்று படித்திருக்கும் நாம், மருமகள் அவ்வாறு செய்யும்போதுமட்டும் மனவருத்தம் கொள்ளலாமா?

   நீக்கு
  3. //மனைவியை இழந்த கணவர் பாடும்// - பொதுவாக, கணவரை இழந்த மனைவி, தான் இருக்கும் பிள்ளையின் வீட்டில் ஓரளவு அட்ஜஸ்ட் செய்துகொண்டு இருந்துவிடுவால். ஆனால் மனைவியை இழந்த கணவர்களால் அவ்வாறு அட்ஜஸ்ட் செய்து இருப்பது கடினம். அந்த மாதிரி சமயத்தில், 'போய்ட்டாளே புண்ணியவதி, என்னை அப்போ அப்படி கவனித்துக்கொண்டாளே' என்று மனதில் பாராட்டுப் பத்திரம் வாசிப்பதைவிட, மனைவி இருக்கும்போதே அவளுடைய முக்கியத்துவத்தை உணர்ந்து கொஞ்சம் சந்தோஷமாக வைத்துக்கொள்வது சிறப்பு அல்லவா? (பெண்களுக்கு என்ன செய்தாலும் திருப்தி வராது என்றபோதும்..ஹாஹாஹா)

   //அறுசுவையில் ஏதோவொன்றாக அமைந்து விடுகிறது// - ஆமாம்... அதுவும் நம் ப்ராப்தம்தான். இருந்தாலும் 'தீதும் நன்றும் பிறர் தர வாரா' என்று மனதைத் தேற்றிக்கொள்ளவேண்டியதுதான், ஒருவேளை அனுபவம் கசப்பாக இருந்துவிட்டால்.

   நீக்கு
  4. //அதி சீக்கரமாக அந்த உயிலுக்கு உயிரூட்ட சதித்திட்டமிடும் வாரிசுகளும்// - சார்... பசையிருக்கோ இல்லையோ.. பத்துப் பைசா மட்டும் வைத்திருந்தாலும், தங்கள் இறுதிக்காலம் வரை தங்கள் கையிலேயே பணத்தை, சொத்தை வைத்திருக்கணும். எப்போதும் எதைச் செய்தாலும், அதனை நன்றியோடு சிறிது காலம்தான் நினைப்பார்கள். அதனால், பையனுக்கு ஒரு வீடு இருக்கட்டுமே, நாம்தான் அவனோடேயே இருக்கப்போகிறோமே என்று நினைத்து இருக்கும் ஒரு வீட்டையும் எழுதிவைத்து, நம் பணத்தையும் அவர்களிடமே கொடுத்துவைப்பது, புத்திசாலித்தனமாகாது. முடிந்தவரை, அவர்களை எதிர்பார்க்காமல், தன்னால் அவர்களுக்கு அதீத செலவு ஏற்படாமல் வாழ்ந்து மறைவதுதான் நல்லது.

   நம் கடமை அவர்களை குடும்பஸ்தனாக ஆக்குவதோடு முடிகிறது. அவர்களும் அதற்குப் பிறகு எதையும் பெற்றோரிடமிருந்து (உடல்ரீதியான உதவி தவிர) எதிர்பார்க்கக்கூடாது. இதற்கு நிறைய உதாரணங்கள் பார்த்திருக்கிறேன். என் அப்பா எனக்குச் சொன்ன பெரிய அட்வைஸ் இதுதான். (அவர் சொன்னார்... அவருக்குத் தெரிந்த ஒருவருக்கு வீடும் அதற்கு முன்பாக வெற்று நிலமும் இருந்ததாம். திருமணமான மகன, இடம் சும்மாதானே இருக்கிறது, அங்கு ஷெட் போட்டு லேத் வேலை செய்து சம்பாதித்துக்கொள்கிறேனே என்று சொன்னதால், அப்பா இரக்கப்பட்டு அந்த இடத்தை உபயோகப்படுத்திக்கச் சொன்னாரம்... தொழில் கொஞ்சம் வளர வளர, முழு இடத்தையும் ஆக்கிரமித்து, உன் வீட்டிலேயே நாங்களும் இருந்துகொள்கிறோம் என்று வீட்டையும் ஆக்கிரமித்துக்கொண்டு அவரது பிரைவசியே இல்லாமல், சாப்பாட்டுக்குக்கூட எதிர்பார்க்கும் நிலைமையை உண்டாக்கிவிட்டார்களாம்... இதுபோல பல கேள்விப்பட்ட செய்திகளைச் சொல்லுவார். சாதாரண குடும்பத்தில் இப்படி நேரிடும் என்று நினைத்தால் ரேமண்ட்ஸ் ஓனருக்கே கடைசி காலத்தில் பணமில்லாத நிலையை அவருடைய பையன் ஆக்கிவிட்டான் என்று படிக்கிறோம்.)

   நீக்கு
  5. //அந்த சிந்தனையை மீண்டும் கிளறும் விதமாக அமைந்துள்ளது தங்களின் இந்தக்கதை// - நீங்கள் இந்த மாதிரி போட்டிகள் வைக்கக்கூடியவர்தான். கண்ணைமூடிக்கொண்டு பரிசுகளை (அதுவும் ஏனோ தானோவென்று இல்லாமல், அழகாக விசிறிபோல் செய்து கண்ணைக்கவரும்விதமாகப் பரிசளிப்பவர்) கொடுப்பவர்தாம்.

   இது கதை எழுதும் பலருக்கு உத்வேகமாக இருக்கக்கூடும்.

   /சிறந்த கதைகளில் First, Second & Third // - நல்ல சிந்தனை என்றே தோன்றுகிறது. இதுல ஒரு பிரச்சனை என்னன்னு பார்க்கிறேன் என்றால், அந்தப் படம் (அல்லது கருத்து) பலவிதமான கதைப் புனைவுகளுக்கும் இடமளிக்கணும். ஒரு குறிப்பிட்ட மோல்டில் இருந்தால், கதை முடிவு இப்படித்தான் எல்லாக் கதைகளிலும் இருக்கும் என்று படிப்பதற்கு முன்பே தீர்மானிக்கக்கூடியதாக ஆகிவிடும்.

   தமிழ்ப்புத்தாண்டு பிறக்கப்போகிறது. உங்கள் எண்ணம் ஈடேற வாழ்த்துகள்.

   நேரக் குறைவு இருந்தபோதும், படித்து நீண்ட கருத்தெழுதியதற்கு மிக்க நன்றி கோபு சார். (எனக்கு வைகோ சார் என்று எழுதப்பிடிப்பதில்லை. அரசியல்வாதி 'வைகோ'வின் ராசி மனதில் எப்போதும் இருப்பதால் ஹாஹா)

   நீக்கு
  6. ஐயா சாமீஈஇ முடியல்ல முருகா.... இவரை அவரு புகழ, அவரை இவரூஊ புகழ:)... தாங்க முடியல்ல முருகாஆஆஅ ..... இதுக்கெல்லாம் காரணம் அந்த குண்டா சுவீட்தேன்ன்ன்ன்ன்.. இனிமேல் நல்ல உறைப்பு மிக்‌ஷராக் குடுங்கோ ஸ்வாமி( ஹையோ என்னதிது கோபு அண்ணனின் பாசையே வருதே நேக்கு கர்ர்ர்ர்ர்:))....

   (பெண்களுக்கு என்ன செய்தாலும் திருப்தி வராது என்றபோதும்..ஹாஹாஹா)////
   //////
   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்*8790456321768
   நாங்க ஆரும் இதைப் படிக்க மாட்டோம் எனும் தெகிறியம் போல :).. உச்சிப்பிள்ளையார்கோயில் கேணியில தண்ணி முட்டியிருக்கு என்பதை மரக்கவாணாமாம் என கோபுஅண்ணனிடம் கொஞ்சம் ஜொள்ளி விடுங்கோ நெ தமிழன்

   நீக்கு
  7. ///தமிழ்ப்புத்தாண்டு பிறக்கப்போகிறது. உங்கள் எண்ணம் ஈடேற வாழ்த்துகள்.////
   அச்சச்சோஓஓஓ பிள்ளையாரே என இவ்ளோநாளும் அவர் தானும் தன் ஸ்நக்ஸ் கடையுமென தன் பாட்டில் இருந்தவை உசுப்பி விட்டிட்டார்ர்ர் ஜாமீஈஈஈ... ஹையோ அதிரா இப்போ அந்தாட்டிக்காவில இருக்கிறேன்ன்ன்... :).... சே செ ஒரு மனிசர் நிம்மதியா இருக்க முடியுதோ இந்த நாட்டில :) பீதியைக் கிளப்பி விடுவதே தொழிலாப் போச்சூஊஊ:)....
   எனக்கெதுக்கு ஊர் வம்பு மீ தொம்ப நல்ல பொண்ணு:)..

   நீக்கு
  8. //இவரை அவரு புகழ, அவரை இவரூஊ புகழ:)...// - ஏங்க அதிரா... அவரை நான் புகழ்வது அவர் தகுதி கருதி. அவர் 'சின்னப் பையன்... பாராட்டித்தான் வைப்போமே..காசா பணமா' என்று பாராட்டி எழுதியிருப்பார்.

   ஆமாம்... ஏன் தேம்ஸுக்குப் புகைவருது?..... பாருங்க... நீங்க செஞ்ச ... அது என்னது.. மறந்துபோச்சே... ஆங்.. கேபேஜ் இலை சுண்டல்... அதை ஆஹா ஓஹோன்னு புகழ்ந்தும் உங்களுக்கு திருப்தி வரலை பாருங்க....

   நீக்கு
  9. //பீதியைக் கிளப்பி விடுவதே தொழிலாப் போச்சூஊஊ:)// - அதிரா.... அவர், 'கதை எழுதும் போட்டி வைக்கிறேன்' என்றுதானே சொல்லியிருக்கார். 'அதில் அதிராவும் கதை எழுதுவார்'னு சொல்லலையே... அப்புறம் எப்படி பீதியடையறீங்க?

   //தானும் தன் ஸ்நக்ஸ் கடையுமென// - பாவம்... தெரியாம அப்பாவித்தனமா இப்படி ஒரு தடவை சொல்லிட்டு, எல்லார்கிட்டயும் மாட்டிக்கிட்டு முழிக்கிறார் (ஆனா உண்மையிலேயே நிறைய ஸ்னாக்ஸ் பாக்கெட்டுகளை படுக்கை பக்கத்துல வச்சிருக்காரு. எப்படித்தான் அவங்க வீட்டுல அனுமதிக்கறாங்களோ...... டயட் கண்ட்ரோல்ல இருக்கறதுக்கு முதல் ரூல், ஸ்னாக்ஸ் கைக்கு எட்டும் தூரத்தில் இருக்கக்கூடாது... வீட்டிலேயே இருக்கக்கூடாது. ஆனா இதை யாரு அவர்கிட்ட சொல்றது? ஹாஹா)

   நான் 196 கமெண்ட்ஸோட முடிந்தது என்று நினைத்துக்கொண்டிருந்தேன்....

   நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!