அதிகாலை நேரமே.. சிந்தனைத் துளிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அதிகாலை நேரமே.. சிந்தனைத் துளிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

17.2.15

பிரம்மாக்களுக்கு -2

அதிகாலை என்ன செய்கிறோம், என்ன செய்யலாம் என ஒரு பதிவு பார்த்த நினைவு இருக்கிறதா ?

                                                                Image result for early morning images

நம் ஃபோகஸ் மாணவர் அல்லாத பால பருவம் கடந்தவர்கள் மட்டுமே. மாணவர் என்ன எப்போது எப்படிச் செய்யலாம் என்பதை எளிதாக வரையறுத்துச் சொல்லிவிடலாம்.

                                                                Image result for early morning images

காலை டிஃபன், லஞ்ச் பாக்ஸ், பள்ளி /கல்லூரிக்கு அனுப்ப ஏற்பாடுகள் என்று அன்னையர்க்கு கடமைகள் அழைக்கும் பட்சத்தில் நான்கு மணிக்கு எழுந்தாலுமே கூட கடிகாரத்தோடு போட்டி போட்டுக் கொண்டு ஓட வேண்டியவர்களுக்கும் கூட காலை என்ன செய்யலாம் எனும் பிரச்சினை இல்லை ! 

அதிகாலை கண் விழித்து "என்ன செய்யலாம்" என்பதில் சாய்ஸ் இருக்கும் என் போன்றோர்க்குதான் இது ஒரு சவால் !


தியானம், நற்சிந்தனை நிகழ்ச்சிகள், கிளர்ச்சியூட்டாத இசை, ஆன்மீகப் படிப்பு அல்லது (தொ.கா) பார்த்தல், எளிய உடற் பயிற்சி -- அநேகமாக இவற்றில் ஒன்றோ பலவோ மட்டும்தான் சாத்தியம் என்று சொல்லலாமா ?

பத்து பதினைந்து நிமிடம் "தியானம்" பலமாக சிபாரிசு பலராலும் செய்யப்படுகிறது. தியானம் என்றால் என்ன ? அது எப்படிச் செய்யப்பட வேண்டும் ?

                                                                         Image result for early morning images

இறைவனை மனம் ஒருமுனைப் பட்ட நிலையில் ஆழ்ந்து, தொடர்ந்து சிந்திக்க வேண்டும். அல்லது மனம் எண்ணங்கள் ஏதுமற்ற சம நிலையில் விருப்பு வெறுப்பற்று வேண்டுதல் வேண்டாமை தவிர்த்து இருக்க வேண்டும். 


மனம் சலனமுற்றால் அதை மீண்டும் குறியில் கொண்டு வர ஒரு மூர்த்தமோ, பொருளற்ற ஒரு சொல்லோ (மந்திரமாக) -- மனத்தை அதன் போக்கில் சற்று நேரம் அலைய விட்டுப்பின் மெதுவே அமைதிக்குக் கொண்டு வர ஆலோசனை தருகிறார்கள். என்றாலும் மனத்தை அமைதியாக நடத்திச் செல்வது அவ்வளவு  எளிதோ, சாத்தியமோ இல்லை என்பது என் அனுபவம். உங்களுக்கு வேறாக இருக்கக் கூடும்.  

                                                                            Image result for yoga images


கொஞ்ச நேரம் கண்டபடி அலைந்தபின் 'அட' என்று உறைத்தபின் சற்று ஆயாசத்துடன் மீண்டும் அலைன் ஆவது அடிக்கடி நடப்பது.

தியானம் குறித்து மட்டும் உங்கள் அனுபவம் எப்படி ? நல்ல டெக்னிக் ஏதும் அறிந்தவர் பகிரலாமே ! 

10.2.15

பிரம்மாக்களுக்கு வேண்டுகோள்



                                                                      


மேல்/இதர நாடுகளில் எப்படியோ தெரியாது இங்கு அதிகாலைப்பொழுது விசேஷமாகக் கருதப்படுகிறது. பிரம்ம முகூர்த்தம் எனப் பெயரிடப் பட்டுள்ளது அதற்கு தெய்வீகம் கறபிக்கப்பட்டுள்ளதை உணர்த்துகிறது. இந்த வேளையில் சில செயல்கள் நிறைவு தருவதும், வேறு சில சங்கடப் படுத்துவதும் எளிதில் காணக் கூடிய ஒன்று. 

                         


காலை எழுந்தவுடன் படிப்பு, தொடர்நது கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு என பாரதியார் சிபாரிசு செய்கிறார்.  ரண்டக்க ரண்டக்க கதியிலோ வயிற்றில் பலமாகக்குத்தியதால் எழும்பும் ஊளையிடல் மாதிரியான வல்லிசைப்பாடல்களில் கனிவோ நல்ல தன்மையோ அதிகாலைப்போதில் கிடைத்தலரிது. துரதிருஷ்ட வசமாக நம் ஊடக பிரம்மாக்களுக்கு இந்த விஷயம் விளங்குவதில்லை. அது கிடக்கட்டும்..


                                                    


நம்மில் பலர் வைகறைத்துயிலெழுகிறோம் என்று நினைக்கிறேன். கழிவறை, பல்விளக்கத்துக்குப்பின் காபிக்கடன்.  அதற்கும் பின், மணி என்ன ?

என்போன்ற "பெரிசு" களுக்கு 5:15. உங்களுக்கு என்னவோ ?


                                                     

இனி அடுத்த ஆக்டிவிட்டி அவர் எனக்கு 7:30. 

இந்த இரண்டு மணி அவகாசம் எப்படிக் கழிகிறது ? நல்ல முறையில் கடக்க வேண்டுமானால் என்ன செய்யலாம் ?


                                                      

என்ன எப்படிச் செய்கிறேன் என்று அப்புறம் சொல்கிறேன். நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று சொல்லலாம் எனில் சொல்லுங்கள், அல்லது நான் என்ன செய்யலாம் என்று ஆலோசனை தாருங்கள்.

தயவு செய்து நகைச்சுவை, நக்கல், கிண்டல் வேண்டாம்.  சீரியஸ் ஆக நம் பிரம்ம முகூர்த்தங்களுக்கு சிறப்புக்கூட்ட முடியுமா என்று பார்ப்போமே !
  

ராமன்