செவ்வாய், 17 பிப்ரவரி, 2015

பிரம்மாக்களுக்கு -2

அதிகாலை என்ன செய்கிறோம், என்ன செய்யலாம் என ஒரு பதிவு பார்த்த நினைவு இருக்கிறதா ?

                                                                Image result for early morning images

நம் ஃபோகஸ் மாணவர் அல்லாத பால பருவம் கடந்தவர்கள் மட்டுமே. மாணவர் என்ன எப்போது எப்படிச் செய்யலாம் என்பதை எளிதாக வரையறுத்துச் சொல்லிவிடலாம்.

                                                                Image result for early morning images

காலை டிஃபன், லஞ்ச் பாக்ஸ், பள்ளி /கல்லூரிக்கு அனுப்ப ஏற்பாடுகள் என்று அன்னையர்க்கு கடமைகள் அழைக்கும் பட்சத்தில் நான்கு மணிக்கு எழுந்தாலுமே கூட கடிகாரத்தோடு போட்டி போட்டுக் கொண்டு ஓட வேண்டியவர்களுக்கும் கூட காலை என்ன செய்யலாம் எனும் பிரச்சினை இல்லை ! 

அதிகாலை கண் விழித்து "என்ன செய்யலாம்" என்பதில் சாய்ஸ் இருக்கும் என் போன்றோர்க்குதான் இது ஒரு சவால் !


தியானம், நற்சிந்தனை நிகழ்ச்சிகள், கிளர்ச்சியூட்டாத இசை, ஆன்மீகப் படிப்பு அல்லது (தொ.கா) பார்த்தல், எளிய உடற் பயிற்சி -- அநேகமாக இவற்றில் ஒன்றோ பலவோ மட்டும்தான் சாத்தியம் என்று சொல்லலாமா ?

பத்து பதினைந்து நிமிடம் "தியானம்" பலமாக சிபாரிசு பலராலும் செய்யப்படுகிறது. தியானம் என்றால் என்ன ? அது எப்படிச் செய்யப்பட வேண்டும் ?

                                                                         Image result for early morning images

இறைவனை மனம் ஒருமுனைப் பட்ட நிலையில் ஆழ்ந்து, தொடர்ந்து சிந்திக்க வேண்டும். அல்லது மனம் எண்ணங்கள் ஏதுமற்ற சம நிலையில் விருப்பு வெறுப்பற்று வேண்டுதல் வேண்டாமை தவிர்த்து இருக்க வேண்டும். 


மனம் சலனமுற்றால் அதை மீண்டும் குறியில் கொண்டு வர ஒரு மூர்த்தமோ, பொருளற்ற ஒரு சொல்லோ (மந்திரமாக) -- மனத்தை அதன் போக்கில் சற்று நேரம் அலைய விட்டுப்பின் மெதுவே அமைதிக்குக் கொண்டு வர ஆலோசனை தருகிறார்கள். என்றாலும் மனத்தை அமைதியாக நடத்திச் செல்வது அவ்வளவு  எளிதோ, சாத்தியமோ இல்லை என்பது என் அனுபவம். உங்களுக்கு வேறாக இருக்கக் கூடும்.  

                                                                            Image result for yoga images


கொஞ்ச நேரம் கண்டபடி அலைந்தபின் 'அட' என்று உறைத்தபின் சற்று ஆயாசத்துடன் மீண்டும் அலைன் ஆவது அடிக்கடி நடப்பது.

தியானம் குறித்து மட்டும் உங்கள் அனுபவம் எப்படி ? நல்ல டெக்னிக் ஏதும் அறிந்தவர் பகிரலாமே ! 

16 கருத்துகள்:

 1. கொஞ்ச நேரம் கண்டபடி அலைந்தபின் 'அட' என்று உறைத்தபின் சற்று ஆயாசத்துடன் மீண்டும் அலைன் ஆவது அடிக்கடி நடப்பது.
  உண்மைதான்

  பதிலளிநீக்கு
 2. அமைதியாக தியானம் செய்யவேண்டும் என்று நினைப்பது உண்டு.ஆனால் ஒரு முறைகூட செய்ததில்லை.முயற்சித்துப் பார்க்கவேண்டும்

  பதிலளிநீக்கு
 3. நல்ல தூக்கம் - நினைவில் இருக்கிறதா...? அதுவே தியானம்...!

  பதிலளிநீக்கு
 4. தியானமா? அப்பதான் மனது அதிகமா அலைபாயும்.

  //மனத்தை அதன் போக்கில் சற்று நேரம் அலைய விட்டுப்பின் மெதுவே அமைதிக்குக் கொண்டு வர ஆலோசனை தருகிறார்கள்.//

  தெரியவில்லை. முயற்சி செய்ய வேண்டும்.

  பதிலளிநீக்கு
 5. தியானத்தின் போது தான் அதிகம் அலைபாயும் மனம்! :)))) அன்றைய வேலைகள் வரிசையாகக் கண் முன்னே வரும். தினம் சொல்லும் ஶ்ரீராமஜயம் கூட மறந்து போகும். எங்கோ நழுவிக் கொண்டிருக்கும் அதைப் பிடித்து இழுத்து வர வேண்டி இருக்கும்! :(

  பதிலளிநீக்கு
 6. என்னுடைய பதினைந்து வயதில் நாங்கள் வெல்லிங்டனில் இருந்தபோது தியானம் பற்றி யோசித்து விடிகாலை அந்த ஊரில் ஐந்து மணிக்கு எழுந்து குளிர் நீரில் ஸ்நானம் செய்து வீட்டின் ஒரு மூலையில் பத்மாசனத்தில் அமர்ந்து கண்களை மூடி “ஓம். ஓம்” என்று விடாது சொல்லி மனதை ஒழுங்கு படுத்த முயன்றதுண்டு. ஆனால் போகப் போக எந்த பலனும் கிடைக்காத்தால் கை விட்டதும் இந்தப் பதிவைப் படிக்கும் போது நினைவுக்கு வருகிறது

  பதிலளிநீக்கு
 7. எதையெல்லாம் செய்ய வேண்டுமென்று நினைப்பேனோ எல்லாமே பாதிப்பாதியாய்...

  பதிலளிநீக்கு
 8. GMB அழகாய் சொல்லிவிட்டார்.

  என் கருத்து - தியானம் என்பது ஒரு ஏமாற்று வேலை.

  பதிலளிநீக்கு
 9. ஈஷாவில் சேர்ந்து தியானம் கற்றுக் கொள்ளும்போது நன்றாய்த்தான் இருந்தது .ஒரு மண்டல நாட்களாவது தொடர்ந்து செய்தால், தியானம் தானாகவே வந்துவிடும் என்றார்கள் ,நாற்பத்தைந்து நாட்கள் செய்வதற்குள் போரடித்து விட்டது :)

  பதிலளிநீக்கு
 10. விடியற்காலையில் எழுந்திரிக்கவே முடியாது. தப்பி தவறி எழுந்துவிட்டால் மீண்டும் போர்வையை போர்த்திக்கொண்டு தூங்கும் சுகம் இருக்கிறதே...அதைவிட ஆனந்தம் எந்த தியானத்திலும் மற்ற பயிற்சிகளிலும் கிடைக்காது. DD சரியாக சொன்னார்.

  பதிலளிநீக்கு
 11. மனக் குரங்கினை இழுத்துப் பிடித்து விட முடிவதில்லை......

  தியானம் என்று உட்கார்ந்து கொண்டு சாதாரணமான நேரத்தினை விட அதிகமாக ஓடி என்னைப் பார்த்து கெக்கலிக்கிறது மனது!

  பதிலளிநீக்கு
 12. நான் மூன்று வருடங்கள் தியானம் செய்து விட்டவன். விட்டது தவறு. என் மாஸ்டர் என்ன சொன்னார் என்றால், தியானம் என்பது ஒரு பழக்கம். அதைத் தொடர்ந்து செய்யவேண்டும். மனதை எதிலும் அலைபாய விடாமல் ஒன்றையே நினைத்து இருக்கச் செய்ய முயற்சி செய். அந்த லைனிலேயே போ..போ.. போய்க்கொண்டே இரு. எல்லா நாளும் தொடர்ந்து செய், என்றார். இது யோகா மாதிரி உடனடி பலன் தரக்கூடியது அல்ல. எல்லா நாளும் சரியாக வரும் என்பதற்கு உத்தரவாதம் கிடையாது. அதாவது, யோகாவில், 10 வாரம் செய்யும்போது, 11வது வாரம், அது இன்னும் மெருகேரும். ஆனால், தியானம், சில நாட்களில் கிடைக்கவே கிடைக்காது. இது நமக்குமட்டுமல்ல, யோகிகளுக்கே அதுதான். இதில் இன்னுமொரு விஷயம். மனிதன் அமைதியாக இருக்க இருக்க, அவனுடைய சக்தி பெருகிவரும். நாள்தோரும் 1 மணி நேரமாவது மௌனத்தைக் கடைபிடிக்கவும். அன்புடன்.

  பதிலளிநீக்கு
 13. அலைபாயும் மனதை ஒரு நிலைக்கு கொண்டுவர முயற்சிப்பதே தியானம்.
  கடமைகளை முனைப்போடு அதே நினைவோடு செய்கிறோமே அதுவே தியானம் தான்.

  கண்ணை மூடி ஒரு இடத்தில் உடகார்ந்து செய்யும் போது உள் மனதில் உள்ள எண்ணங்கள் வரத்தான் செய்யும். தியானம் பழக பழக தான் அதன் பலன் தெரியும்.

  பதிலளிநீக்கு
 14. கொஞ்ச நேரம் கண்டபடி அலைந்தபின் 'அட' என்று உறைத்தபின் சற்று ஆயாசத்துடன் மீண்டும் அலைன் ஆவது அடிக்கடி நடப்பது.// ஹஹாஹ்ஹ இதுதாங்க ரொம்பவே படுத்தும்....அதனால நாங்க நல்ல ஆழ்ந்த தூக்கம் போட்டுடுவோம்....தியானம் என்று அதற்கென்று தனியாக நேரம் ஒதுக்கி மனதை ஒருனிலைப்படுத்தி....அதெல்லாம் கொஞ்சம் கஷ்டமான விஷய்ம...அதைவிட நாம் செய்யும் வேலையில் மனதை கவனம் சிதற விடாமல் செய்வதும் கூட தியானம்தான்.

  சும்மா இருன்னு சொல்லுவாங்க ஆனா அப்பதான் மனசு குரங்காகும்.....அப்போ நல்ல இசையை மனதிற்கினிய இசையை போட்டுக் கேட்டால் அதுவும் தியானமே....

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!