கடுகோரைக்கான கடுகு பச்சடி/கடுகு குழம்பு
ஹை! ஃப்ரென்ட்ஸ் வணக்கம். ரொம்ப நாளாச்சோ?! சரி… நாம இன்னிக்கு கடுகு ரெசிப்பி ஒன்னு பார்க்கப் போறோம். கடுகுன உடனே அங்க யாரு ‘கடுகு தாளிக்கத்தான் யூஸ் பண்ணுவம்’னு கடுகு போல வெடிக்கறது!!! ஓ!! நம்ம பூஸார்! நோ கடுகு தாளிப்பு!! இது ரொம்ப நல்லாருக்கும் பூஸார்! நாம புளியோதரை செய்வோம் இல்லையா? நீங்க கூட நெல்லையின் புளியோதரை ரெசிப்பி செய்திருந்தீங்களே!! (நீங்கதானே செஞ்சீங்க?!!! இல்லை நெல்லையோட ஃபோட்டோவா ஹா ஹா) அது போல இது கடுகோரை செய்ய உதவும். தொட்டுக் கொண்டும் சாப்பிடலாம்.