வியாழன், 28 பிப்ரவரி, 2019

மொபைல் பையில், பை வண்டியில், வண்டி?புதுமணத்தம்பதிகள் முன்னே புடவை, வேஷ்டி சரசரக்க நடக்க, மற்றவர்கள் குழுக்குழுவாக தங்களுக்குள் உரையாடியபடியே தொடர்ந்தார்கள்.

நாங்கள் ஆறு பேரும் ஒருகுழுவாக "உரையாடியபடியே"  கூட நடந்தோம்.  

வழியில் எதிர்ப்படும் கடைகளில், போலீஸ்காரரிடம், சேவார்த்திகளிடம் "இங்கு நெட் சென்டர் எங்கிருக்கிறது?" என்று விசாரித்தபடியே சென்றோம்.  அப்போது எங்களுக்குத் தெரிந்திருக்கவில்லை!

எல்லோருமே அந்தச் சாலையின் முடிவில் ஒரு நெட் சென்டர் இருக்கிறது என்றார்கள்.  சற்றே வேகமாக நடந்தோம்.  அப்போது எங்களுக்குத் தெரிந்திருக்கவில்லை.ஒருவழியாய் உள்நுழையும் இடத்தில் எங்கள் குழுவினர் கையில் இருந்த பேப்பரைக் காட்டிக்காட்டி பேட்ச் பேட்சாக உள்ளே சென்று கொண்டிருக்க, எங்களையும் அங்கே "ஜாரித்து" பார்க்கச் சொன்னார் எங்கள் குழுவைச் சேர்ந்த ஒருவர்.

"ஜாரித்தோம்"!  ஊ...   ஹூம்...  "அதெப்படி ஸார்...  புக் செய்யும்போதே அதிலிருந்த கண்டிஷன் விதிமுறைகள் படிக்கவில்லையா?" என்றார்கள்.  யார் படித்தார்கள்?  புக் செய்தது எங்கள் வீட்டு கடைக்குட்டி.  தொலைபேசியில் கல்யாணப்பெண்ணின் அப்பா எப்படி இயக்கினாரோ, அப்படி இயங்கி புக் செய்தார்.  அப்புறம் நாங்களும் யாரும் அதைத் திறந்து பார்க்கவில்லை. 

"இதோ அங்கே லாஸ்ட்ல ஒரு நெட் சென்டர் இருக்கு...   அங்கே போய் பிரிண்ட் எடுத்து வாங்க...   ஆறுமணிக்கு முன்னால் வந்தால் உள்ளே விடறேன்" என்றார்.  அப்போது மணி நாலரை!

மகன்கள் இருவரும் ஓடினார்கள்.  அப்போதும் நாங்கள் உணர்ந்திருக்கவில்லை.

காத்திருந்தோம்.  நேரம் ஓடிக்கொண்டிருந்தது.  மக்கள் வெள்ளம் உள்ளே சென்றுகொண்டே இருந்தது.  அதைப் பார்த்துக்கொண்டு வெட்டியாய் நின்றிருந்தோம்.  அசட்டுத்தனமாய் உணர்ந்தோம்.  

எங்கள் மேலேயே எங்களுக்குக் கோபம் வந்து கொண்டிருந்தது.

மகன்கள் வருகிறார்களா என்று தூரத்தில் வரும் அலைகடல் மக்கள் அலைகளுக்கிடையே இருவர் தலையை அடையாளம் காண முயன்று கொண்டிருந்தோம்.

ப்ரிண்டவுட் தயாராய் வைத்து உள்ளே சென்ற அந்த உறவுக்கூட்டத்தில் ஒருவராவது முன்னரே அதுபற்றி எங்களிடம் பேசி இருக்கலாம் என்று பேசிக்கொண்டோம்.  நாங்களாவது பேசி இருக்கலாம் என்று பேசிக்கொண்டோம்.  வேஷ்டி உட்பட வாங்கத் தெரிந்த எங்களுக்கு ப்ரிண்டவுட் எடுக்க நேரமாகியிருக்காது!  விதி இருந்தால் மதி இருந்திருக்கும்.  மதி இருந்தால் விதியை வென்றிருக்கலாம்...!!

தூரத்தில் தெரிந்த தலைகளுக்கிடையில் மகன்கள் தலை தெரிந்தது.  பரபரப்பானோம்.  இங்கிருந்து நாங்கள் ஆர்வத்தில் கேட்ட சைகைக் கேள்விகளுக்கு அவர்களுக்குத் தெரியவில்லையா, அல்லது தெரிந்தே சும்மா வந்தார்களா என்று தெரியவில்லை, வேகமாக அருகில் வந்தார்கள்.

"என்னடா  ஆச்சு?  எடுத்தாச்சா?"  அப்போதும் உணரவில்லை நான்!

"எடுக்கவில்லை...  முடியவில்லை..."

"ஏண்டா?  கூட்டமா?"

"சொல்லவிடேன்..   குறுக்க குறுக்க கேள்வி கேட்காம பேசறதை கேளு"

"சொல்லு"

மூச்சு விட்டுக்கொண்டான் மகன்.  

"கூட்டமெல்லாம் இல்லை...   இரண்டு மூன்று பேர் இருந்தார்கள்...  சட்டென போய் இடம் பிடித்துவிட்டேன்.  ஆனால்..."

தொடரக் காத்திருந்தேன்.

"ஆனால் மெயில் லாகின் செய்ததும் கூகுள் செக்யூரிட்டி செக்கிங் வருது...."

"ஆமாம்...   வரும்தானே...   இங்கயிருந்து லாகின் செய்தா வரும்தான்..."  மின்னலடித்தது.   அடடே ஆமாம்...  

"ஆமாம்ப்பா...    வரும்தான்...   ஆனால் மெசேஜ் ரிஸீவ் செய்து அதில் திருப்பி கொடுக்கணுமே...  மொபைல்?"

எனக்குதான் ஏற்கெனவே மின்னலடித்து விட்டதே...  புரிந்தது! மொபைல் எங்கள் பையில் இருக்கிறது.  பை வண்டியில் இருக்கிறது.  வண்டி எங்கே இருக்கிறது?!!!!

எங்களுக்குப் புரிந்தது பாஸுக்குப் புரியவில்லை.  புரிய வைத்தோம்.

யார்மேல் என்று தெரியாமல் பாஸுக்கு ஆத்திரம் வந்தது. 

வண்டியிலிருந்து இறங்கிய இடத்தை நோக்கி வேகமாக நடக்கத் தொடங்கினோம்.  அம்மாவால் வேகமாக நடக்க முடியவில்லை.  82 வயது. மூச்சு இழுத்தது. ஆனாலும் "என்ன?  உள்ளே போக முடியாதா?  ஏண்டி?  நான் முடியாமல் கூட அதற்காகத்தானே வந்தேன்?" என்று பாதி கேள்வியாகவும், பாதி புலம்பலாகவும் கேட்டபடியே வந்து கொண்டிருந்தார்.

மகன்கள் வேகமாக முன்னால் நடந்தார்கள்.  வண்டியைத் தேடத் தொடங்கினார்கள்.  இந்நேரம் தரிசனத்துக்கு உள்ளே சென்றவர்கள் பாதி வழி கடந்திருக்கக் கூடும்.

(சென்ற வாரம் இந்தத்தொடர் வராததை யாருமே கேட்கவில்லை என்றாலும் நான் விடமாட்டேன் இல்ல!  நான் எதை எழுதி பக்கத்தை நிரப்ப?!!)

=============================================================================================


நேற்று சுஜாதாவின் நினைவு நாள்.  முன்னர் ஆறு வருடங்களுக்கு முன்னால் பகிர்ந்த இதை எதற்கு இன்று இங்கே பகிர்கிறேன் என்றால் காரணம் அதிலேயே சொல்லி இருக்கிறேன்.


===============================================================================================

விங் கமாண்டர் அபிநந்தன் பற்றிப் படித்தபோது சுஜாதா எழுதிய '14 நாட்கள்' நினைவுக்கு வந்தது.  சுட்டு வீழ்த்தப்படும் விமானத்திலிருந்து பாராசூட்டில் தப்பிக்கும் ஸ்குவாட்ரன் லீடர் குமாரை பிடிக்கிறான் பாகிஸ்தான் லீடர் மொஹம்மத்.  சர்வதேச போர் விதிமுறைகளை மீறி குமாருக்கு இழைக்கப்படும் கொடுமைகள்...
அபிநந்தன் சுஜாதாவின் குமார் போல கொடுமைகள் அனுபவிக்காமலேயே பத்திரமாக நாடு திரும்பப் பிரார்த்தனைகள்.என்னிடம் புத்தகம் இருக்கிறது.  அதிலிருந்து முக்கியமான பக்கங்களை பகிர நினைத்தேன்.  நேரம் ஒத்துழைக்கவில்லை.


==============================================================================================================


'தி இந்து' வில் 'கிரேசி மோகன்' பதில்கள். 2015 இல் வந்தது.   தன்னுடைய சிறுவயது கிரிக்கெட் அனுபவங்களை மிகவும் ரசிக்கும்படி எழுதி இருப்பதால் இங்கு பகிர்கிறேன்!=======================

லதா ரகுநாதன், சென்னை.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறும் நேரத்தில் தங்களின் கிரிக்கெட் அனுபவத்தைக் கூறுங்களேன்?

70-களில் மந்தைவெளியில் எங்கள் காலனியில் சுவரில் கரித் துண்டால் ஸ்டம்ப்ஸ் வரைந்து, ஆறிப் போன பூரியைப் போல இருக்கும் லப்பர் பாலில் அண்டராம்ஸ் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தோம். அப்போதுதான் ‘மினிமேக்ஸ்’என்ற கிரிக்கெட் குழுவை ஆரம்பித்தான் ‘பெரியப்பா’என்று நாங் கள் மரியாதையாக அழைக்கும் எஸ்.வி!

‘பெரியப்பா’ அவ்வப்போது எங்களுக்குக் கணக்கு சொல்லித் தருவான். நவராத்திரி கொலு சமயத்தில் படுதா கட்டி ‘காளிதாஸன்’ நாடகம் போடுவான். அவனுக்கு வளர்த்தி ஜாஸ்தி. பதினோரு வயதிலேயே எதிர் போட்டு ஷேவ் செய்துகொள்ளும் அளவுக்குக் கன்னம் சொரசொரவென்று இருக்கும்.

எனது பால்ய அறிவுஜீவி காம்ரேட் எஸ்.வி, ‘மினிமேக்ஸ் என்கிற பேர் எப்படி இருக்கு?’ என்றான். ‘‘போடப் போறது என்னமோ சமஸ்கிருத டிராமா. எதுக்குடா இங்லீஷ்ல பேரு?’’ என்றேன்.

‘‘முட்டாள்... அதான் உனக்குக் கணக்கு சரியா வர மாட்டேங்குது. டிராமா இல்லடா கிரிக்கெட் டீம்’’ என்று என் தலையில் ஓங்கி உலகளந்து குட்டினான். அவன் குட்டிக் குட்டியே இன்றும் என் தலை பத்தாங்குத்து பாறாங்கல் பம்பரம் போல மேடு பள்ளமாயிருக்கும்.

‘‘அது என்னடா பெரிப்பா ‘மினிமேக்ஸ்’? ஏதோ ஐஸ்கிரீம் பேரு மாதிரி இருக்கு?’’ என்றான் மூணு பிட்ச் முரளி. அவன் எங்கள் குழுவின் ஸ்பின் பவுலர். மூணு தபா பிட்ச் ஆகித்தான் பந்து பேட்ஸ்மேனை வந்து சேரும்.

முதல் பிட்ச்சில் ‘ஃஹாப் பிரேக்’ ஆகி, இரண்டாவது பிட்ச்சில் ‘லெக் பிரேக்’ ஆகி, மூன்றாவது பிட்ச் ஆனதும் வீரியம் குறைந்து… நிறைமாதக் கர்ப்பிணியைப் போல ‘என்னை யாராவது சிக்ஸர் அடியுங்களேன்…’ என்று கெஞ்சும் பாவனையில் நிதானமாக பந்து வரும்.

‘‘டேய் முரளி... இப்படிக் கேள்வி கேக்கறதாலதான் உனக்குக் கணக்கு சரியாவே வரலை’’ என்றான் எஸ்.வி. எங்கள் எல்லா குறைகளுக்கும் கணக்கைக் காரணம் காட்டி, எங்கள் வாயை அடைப்பான்.

‘‘நம்ப டீம்ல நான்தான் பெரியவன். கணக்குத் தெரிஞ்சவன். நீங்கள்லாம் சின்னப் பசங்க, அதான் மினி மேக்ஸ்” என்று கோனார் நோட்ஸ் போட் டான்.

ஒரு வாரம் பிராக்டீஸ். தான்தான் ஓப்பனிங் பவுலர் என்று எதேச்சதிகாரமாக சாயங்காலம் வரை லப்பர் பந்தை பெரியப்பா எங்கள் கண்ணிலேயே காட்டவில்லை. பெரியப்பாக்கு மட்டும் ஒரு ஓவருக்கு 60 பால். ஓப்பனிங் பேட்ஸ்மேனும் அவன்தான். போடும் பந்தை எல்லாம் மார்பால் தடுத்து ‘மார்பிடபுள்யு’ ரூல்ஸ் பிரகாரம் ‘கிடையாது’ என்று அழுகுனி ஆட்டம் ஆடுவான்.

திருவள்ளூர் ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் கம்பெனி குழுவோடு மோத, நாங்கள் அவர்கள் அனுப்பிய பஸ்ஸில் போனோம். அந்த டீமில் 11 பேரும் ‘நிர்மா வாஷிங்’ வொய்ட் அண்ட் வொய்ட்டில் கிறிஸ் கெய்ல் ஜாடையில் வாட்டசாட்டமாக இருந்தார்கள். ‘‘பயமா இருக்குடா மோகன். படாத இடத்துல கட்டபால் பட்டுவெச்சுதுன்னா நாளைக்கு பாத்ரூம் கூட சரியா போக முடியாது’’ என்றான் பத்து.

‘‘பத்து… நீதான் பதினொண்ணுல இல்லையே டுவெல்த் மேன்தானே…’’ என்று நான் அவனை சமாதானப்படுத்த, ‘‘இல்ல... பத்து டீம்ல இருக்கான். என்னோட ஓபனிங் அவன்தான். ஏன்னா… பத்துக்குக் கணக்கு நல்லா வரும்’’ என்று சொல்லி பத்துவின் பயந்த வயிற்றில் சுடச்சுட காச்சின பாலை வார்த்தான் பெரியப்பா.

கணக்குக்கும் கிரிக்கெட்டுக்கும் என்ன அப்படி ‘பம்மல் கே சம்பந்தம்’னு இன்று வரை எனக்குப் புரியவில்லை.

டாஸ் போட அழைத்தார்கள். பெரியப்பா இரண்டு பக்கமும் ‘தலை’ இருப்பது போல, தான் தயாரித்து வைத் திருந்த 10 பைசா நாணயத்தைச் சுண்டி எறிந்து ‘தலை’ என்றான். பூவா- தலையாவில் ஜெயித்த பெரியப்பா, ‘பவுலிங்’ என்கிற முடிவை எடுத்து எங்கள் வயிற்றில் புளியைக் கரைத்தான்.

‘‘ஏண்டா எஸ்.வி (ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் வளாகத்துக்குள் யாராவது தன்னை ‘பெரியப்பா’ என்று விளித்தால் டீமைவிட்டு விலக்கிவிடுவதாக எஸ்.வி எச்சரித்திருந்தான்) பவுலிங் செலெக்ட் செஞ்சே …’’ என்று நடராஜர் காலடியில் நசுங்கிக் கொண்டிருக்கும் குள்ள ராட்சஸன் ‘முயலகன்’ ஜாடையில் இருந்த முனுசாமி கேட்க, பெரியப்பா வழக்கம்போல ‘‘இப்ப புரியுதா முனுசாமி... உனக்கு ஏன் கணக்கு வரலேன்னு’’ என்று, தனது அரித்மெடிக் அஸ்திரத்தை வீச, கணக்கில் நூத்துக்கு ‘மூணு’சாமியான முனுசாமி கப்சிப் ஆனான்.

அப்புறம் என்ன? முதலில் விளை யாடிய ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் டீம் ஆயிரத்து சொச்சம் ரன்கள் குவித்தனர். பேட்ஸ்மெனுக்கு வெகு அருகில் ஷார்ட்-லெக்கில் கேட்ச் பிடிக்க குப்புசாமி நின்றபோது கேப்டன் எஸ்.வி அவனைத் தள்ளி நிற்கச் சொன்னான். ‘‘இல்லடா எஸ்.வி இங்கேதான் பால் வரும்…’’ என்று முனுசாமி சொல்ல ‘‘மூதேவி… அதனாலதான் சொன்னேன்.

பால் பேட்லேர்ந்து வேகமா வரும். உனக்கு அடிகிடி பட்டு வெச்சுதுன்னா உங்க அப்பன், ஆயிக்கு எவன் பதில் சொல் றது?’’ என்று சொல்லி ஷார்ட் லெக்கை பவுண்ட்ரி-லைன் அருகில் மாற்றினான். ஒரு ரன்னையெல்லாம் லப்பர் பால் ஃபீல்டு செய்தே பழகிய நண்டுபிடி நாக ராஜன் கட்ட பாலை ‘கவட்டை’ வழியாக நழுவவிட்டு ஃபோர் ஆக்கினான்.

மூணு பிட்ச் முரளியின் ஸ்பின்னை ஸ்பின்னி எடுத்தார்கள் ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் ஹேய்டன்களும் கில்க்ரிஸ்ட்டுகளும். அவர்கள் அடித்த ஆயிரத்து சொச்சத்துக்கு பதிலாக ‘மினிமேக்ஸ்’ சொச்சம் கூட அடிக்க வில்லை.


‘‘ஏண்டா… பெரிப்பா... முதல்ல ஏன் பவுலிங் எடுத்தே? எப்படியும் தோத்திருப்போம். நாம முதலில் விளையாடியிருந்தா மேட்ச்சாவது சீக்கிரம் முடிஞ்சிருக்குமே…’’ திரும்பிப் போகும்போது பெரிப்பாவைக் கேட் டேன். ‘‘முண்டம்… அவங்க மொதல்ல விளையாடியதாலதான் மேட்ச் ‘லஞ்ச்’வரை போச்சு. அதனாலதான் நமக்கும் பிரியாணி, புலவு ரைஸ் கிட்டைச்சுது’’ என்ற பெரியப்பா என்னைப் பார்த்து விஷமமாக சிரித்தபடி ‘‘இப்ப புரிஞ்சுதா மோகன்… உனக்கு ஏன் கணக்கு சரியா வர மாட்டேங்குதுன்னு’’ என்று கூறி பிரியாணி ஏப்பம் விட்டான்!
  ========================================================================================================

ஒவ்வொருவரும் எத்தனையோ விதங்களில் ஏமாறுவோம்!  இது நான் பள்ளியில் படித்த காலத்தில் ஏமாந்த கதை!  சகதோழன் என்னை அப்போது புதுமையான முறையில் ஏமாற்றினான்.  

நேற்றைய தனது பதிவில் ஏஞ்சல் ஏமாற்றிய / பொய்சொன்ன ஒரு கேள்வி கேட்டிருக்கிறார்.  எங்கள் ப்ளாக்கில் வரவேண்டிய கேள்வியை இங்கே கேட்கிறேன் என்று எழுதி இருந்தார்.  அங்கே சொல்லவேண்டிய பதிலை நான் இங்கே சொல்கிறேன்!!! 


161 கருத்துகள்:

 1. இனிய மகிழ்வான காலை வணக்கம்! ஸ்ரீராம், துரை அண்ணா, தொடரும் எல்லாருக்கும்!

  இனிய மாலைவணக்கம் வல்லிம்மா..
  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இனிய மகிழ்வான காலை வணக்கம் கீதா ரெங்கன்.

   நீக்கு
  2. என்னாச்சு இன்றைக்கு இன்னும் கீதாக்காவைக் காணலை...

   காலையில் வருபவர்கள் யாராவது காணலைனா மனம் தேடுகிறது ஏன் என்று...

   கீதா

   நீக்கு
 2. ஆமாம் ஸ்ரீராம் அபினந்தன் கொடுமைகள் அனுபவிக்காமல் நாடு திரும்ப வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்வோம்...

  ஆஹா சுஜாதா கதை இருக்கா...வாசிக்கனுமே...நெட்டில் கிடைக்கும் என்று நினைக்கிறேன்

  கீதா

  பதிலளிநீக்கு
 3. தலைவர் தலைவர்தான்!! சுஜாதாவின் பதில் என்ன அட்டகாசமான பதில் இல்லையா ஸ்ரீராம்!!! ரொம்ப ரொம்ப ரொம்பவே ரசித்தேன்....

  கீதா

  பதிலளிநீக்கு
 4. இன்னிக்கு நிறைய வந்திருக்கு...தில்லி ராஜாவின் பதிவுக்கே நான் இன்னும் முடிக்கலை...கில்லர்ஜி க்கு ஆஜர் வைச்சுருக்கேன்...இங்கயும் நிறைய நல்ல ஸ்வாரஸ்யமான விஷயங்கள்...வரேன் காப்பி ஆத்திட்டு,,,வேலை முடிச்சுட்டு

  கீதா

  பதிலளிநீக்கு
 5. திருப்பதி - அடடா.... ரொம்பவே கஷ்டம்..... தரிசனம் கிடைத்தால் நல்லது.

  பதிலளிநீக்கு
 6. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம்.
  இப்படிக்கூடத் திருப்பதியில் கஷ்டப்படுவார்களா. பெருமாளே. பாவம் அம்மா.

  ஆமாம் சுஜாதா வலம் வந்து கொண்டிருக்கிறார். தேசிகனில் ஆரம்பித்து இன்னும் நிறைய பேரின்
  பதிவுகளைப் படித்தேன்.
  ஆயிரம் வருடங்களுக்கு ஒரு முறை வரும் எழுத்து அவருடையது.

  ஒன்பதாவது வகுப்பில் இப்படி ஒரு போக்கிரியா.
  அப்பா கோபிக்காமல் இருந்தாரா.

  க்ரேசி மோகன் கதையைப் படிக்கும் போது சுஜாதா சாரின் ஸ்ரீரங்கம் கண்ணில் வலம் வந்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் வல்லிம்மா...

   பெருமாள் கஷ்டம் தருவார். நஷ்டப்பட விடமாட்டார்!

   அம்மா பாவமாய்த்தான் இருந்தது.. எங்கள் சுய கோபத்தில் நாங்கள் யாரையும் கவனிக்கவில்லை!!

   நேற்று முகநூலில் நிறைய சுஜாதா நினைவுகள். ரிஷபன்ஜி காகிதச் சங்கிலிகள் வார்த்தையை நினைவு கூர்ந்திருந்தார்.

   நீக்கு
 7. அபி நந்தன் நல்ல படியாகத் திரும்பி வரவேண்டும். Have a very good Day Friends.

  பதிலளிநீக்கு
 8. சென்ற வாரம் இந்தத் தொடர் வராததை//

  ஸ்ரீராம் எனக்குத் தோன்றியது ஆனா நான் லேட்டா வாசித்து பதில் கொடுத்ததில் அதை மறந்து போனேன் கருத்தில் கேட்க...ஹிஹிஹி நமக்குத்தான் மறதி என்பது ரொம்பவே....கரீக்டா கேட்க வேண்டிய இடத்தில், கேட்க வேண்டிய நேரத்தில் கேட்காமல் விட்டுட்டு ..இது எனக்கு வீட்டிலும் நேரும் ஹா ஹா ஹா ஹா...

  உங்களுக்குத் திருப்பதி பயணம் ரொம்பவே நொந்து போக வைத்திருக்கு...ஸாரி நான் உங்க எழுத்தை வாசித்து சில இடங்களில் சிரித்துவிட்டேன்....

  எனக்குத்தான் மின்னல் அடித்ததே......"சொல்லவிடேன்.. குறுக்க குறுக்க கேள்வி கேட்காம பேசறதை கேளு"// இப்படியான இடங்களில்

  ஸ்ரீராம் பரபரப்பான நேரத்தில் இப்படித்தான் பலதும் நினைவுக்கு வராது...நம் மனசு அந்தப் பிரின்ட் அவுட் வந்து கோயிலுக்குள் போவதையே நினைத்திருப்பதால் அதுவும் மத்தவங்க எல்லாரும் உள்ள போயாச்சு...குழு வேறு..நீங்களும் முடிச்சுட்டுப் போய் அவங்களோடு சேரணும்...இந்த எண்ணமெல்லாம் பரபரப்பைக் கூட்டியிருக்கும்..அதான்....

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. "தப்பிச்சோம்டா" என்று நீங்கள் எல்லாம் நினைப்பது எனக்குக் கேட்டு விட்டது கீதா... விடுவேனா?!!!

   நீக்கு
 9. அன்பின் ஸ்ரீராம்....

  பாரதத்தின் வீரமகன் அபிநந்தனைத் துபுறுத்தும் காட்சியும் எனக்குக் கிடைத்திருக்கிறது.. சர்வதேச விதிகளின்படி இப்படியான படங்களை வெளியிடக் கூடாதாம்... அபிநந்தன் துன்புறும் காட்சிகளுக்கு இந்நாட்டின் புறச் சமயத்துப் பெயரில் வெளியாகியுள்ள கருத்து இரத்தத்தைக் கொதிக்க வைக்கும்... இதற்கிடையில் தினமலரில் தேர்தலில் வாக்களிப்பது பற்றி வேறொரு அமைப்பு வெளியிட்டிருக்கும் அறிக்கையும் வெளியாகியிருந்தது... மிக மிக உளைச்சலுக்கு ஆளானேன்....

  எத்தகைய சூழலில் இந்நாட்டின் பெரும்பான்மையினர் சிக்கிக் கொண்டிருக்கின்றனர்?....

  இந்நிலையில் அபிநந்தன் பத்திரமாக மீள்வதற்கு வேண்டி நிற்போம்....

  ஜெய்ஹிந்த்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அண்ணா அபிநந்தன் துன்புறுத்தப்படுகிற காட்சியா?

   கீதா

   நீக்கு
  2. ஆம்.... அபிநந்தன் துன்புறுத்தப்படும் காட்சி...

   நீக்கு
  3. ஆமாம் துரை செல்வராஜூ ஸார்... எல்லோருக்குமே அது வாட்ஸாப்பில் கிடைத்தது. மனம் வேதனைப்பட்டது. ரத்தம் கொதித்தது. ஜெனீவா ஒப்பந்தம், சர்வதேச விதி... இதை எல்லாம் மதிக்கக் கூடியா நாடா அது?

   நீக்கு
  4. அவரை மக்கள் அடித்தார்கள் ஆனால் ராணுவம் எதுவும் செய்யவில்லை என்றே அல்லவா சொல்லியிருந்ததாக ஒரு வீடியோ வந்தது எனக்கு அது சரியாகக் கேட்கவில்லை...

   இப்போது அவர் விடுவிக்கப்பட்டதாக செய்தி வந்ததே...இறைவா அவர் வந்துவிட வேண்டும் என்றுதான் நம் எல்லோரது பிரார்த்தனைகளும்.

   வீர வணக்கம் அபிநந்தன் அவர்களுக்கு...

   கீதா

   நீக்கு
  5. ஸ்ரீராம் நேற்று எபி வாட்சப்பில் வந்ததே முகமெல்லாம் ரத்தக்கறையுடன்...அதுதானே..ஹையோ அது ரொம்ப வேதனை அளித்த ஒரு படம்...

   அந்த லோக்கல் மக்களும் பகைமை பாராட்டி....ம்ம்ம்ம்..

   கீதா

   நீக்கு
  6. 'Pakistan backs down to Indian fury and agrees to release captured pilot' The Sun, UK பத்திரிக்கையில் செய்தி சில மணிநேரங்களுக்கு முன். நமது ஆங்கில டிவி சேனல்களில் மாலையிலிருந்தே ஓடிக்கொண்டிருக்கிறது .

   இந்தியாவுடன்(சுஷ்மா சுவராஜ், அஜித் டோவல்) தொடர்ந்து நேற்றெல்லாம் பேசியபின் பாக். கிற்கு அமெரிக்கா கொடுத்த பெரும் அழுத்தம் தவிர்க்கமுடியாக் காரணங்களில் ஒன்று. கடந்த சில வருடங்களாக சர்வதேச வெளியில் மோதி இந்தியாவுக்காக ஏற்படுத்தியுள்ள நல்லெண்ணம், நட்பு வட்டம் பலன் தந்துள்ளதும் குறிப்பிடப்படவேண்டியது.

   நீக்கு
 10. இந்திய வீரர் அபிநந்தன் அவர்களது குடும்பத்தினரை நினைத்தால் மனம் பதறுகிறது. அவர் நலமுடன் வீடு திரும்பவேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 11. அபிநந்தனை பொதுமக்கள்தான் அடித்தார்கள். பின்னர் பாகிஸ்தானிய ராணுவத்தால் அவர் நன்கு நடத்தப்படுகின்றார் என்றும் அவரே பேசிய வீடியோ டான் இதழில் வெளியாகியுள்ளது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முனைவர் ஜயா உங்கள் தகவலுக்கு நன்றி. இது புதிய தகவல்...

   நேற்று முகநூலில் பகிரப்பட்டதாக எபி வாட்சப்பில் வந்தது. அது எனக்குச் சரியாகக் கேட்கவில்லை...

   நெட்டில் பார்க்க வேண்டும்...என்றாலும் அவர் நல்லபடியாகத் திரும்ப வேண்டும் என்று மனம் வேண்டுகிறது எல்லோருக்கும்...

   கீதா

   நீக்கு
  2. அவரே பேசும் அந்த விடீயோவையும் பார்த்தேன் ஸார். என் நாட்டுக்குத் திரும்பி சென்றவுடன் மாற்றிப்பேசமாட்டேன் என்று சொல்லி இருப்பதாகவும் படித்தேன்.

   நீக்கு
  3. ஆமாம் அதே அதே ஸ்ரீராம் நானும் அந்தச் செய்தி வாசித்தேன்...

   கீதா

   நீக்கு
  4. ’தி டான்’ அவர்களது பத்திரிக்கை, இது அவர்கள் தயாரித்த வீடியோ என்பது புரிகிறதா? எதிரிகள் எப்படி ‘நன்கு’ கவனித்தார்கள் என்பது போகப்போகப் புரியும். அபிநந்தனின் குரலைப்போன்ற simulated voice-ல் 'நான் பாகிஸ்தானிலேயே இருக்கிறேன். ஜாலியாக இருக்கிறது!' என்றும் சத்தம் வரும்படி, அபிநந்தன் சொல்வதுபோல் செய்யலாம் !நம்புவதற்கு மக்கள் எப்போதுமே தயார்..

   நீக்கு
 12. கடைசியில் பெருமாளை சேவித்தீர்களா இல்லையா? ரொம்பவும் சஸ்பென்ஸாக நிறுத்தி விட்டீர்கள்.
  அபிநந்தன் நல்லபடியாக வீடு திரும்ப வேண்டுகிறேன். நேற்று வாட்ஸ்ஆப்பில் ஒரு ஜோக்கை பகிர்ந்து விட்டேன். பிறகு எல்லலயில் நம் வீரர்கள் அவஸ்தை பட்டுக் கொண்டிருக்கும் பொழுது ஜோக் ஒரு கேடா? என்று தோன்றியது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இருந்தாலும் -

   நலிவுற்ற மனதை நகைச்சுவையால் ஆற்று.. அப்படின்னு பெரியவங்க சொல்லியிருக்காங்க!...

   நீக்கு
  2. ​​//கடைசியில் பெருமாளை சேவித்தீர்களா இல்லையா?//

   அதை இன்னும் எழுதி சேவ் செய்யவில்லை!! அதனாலேயே சென்ற வாரம் விடுபட்டுப்போனது! அடுத்த வாரம் இந்தத்தொடரை முடித்து விடுகிறேன் எப்படியாவது....

   நீக்கு
 13. க்ரேஸி மோகனின் கற்பனை கலந்த நிஜம் ஸ்வாரஸ்யம். சுஜாதாவின் கதை படித்தது போலவும் இருக்கிறது, ஆனால் முழுமையாக ஞாபகம் வரவில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸ்ரீரங்கத்து தேவதைகள் தொடரில் சுஜாதா தனது கிரிக்கெட் நினைவுகள் ஒன்றை எழுதி இருப்பார். அதுவும் மிக மிக ரசிக்கக் கூடியது.

   நீக்கு
  2. தொடரா? அது சிறுகதைகளின் தொகுப்பு அல்லவா!

   நீக்கு
 14. சுஜாதாவை நினைவு கூர்ந்து நீங்க அடுக்கியிருக்கும் அவரது கவித்துவமான தலைப்புகள்...இதில் ஒரு சில மட்டும்தான் தெரிந்தது.. (அதாவது தலைப்பைத்தான் சொன்னேன் ....வாசித்ததில்லை..அப்படியே வாசித்திருந்தாலும் ஜஸ்ட் அது தொடரா வந்தப்ப சில பகக்ங்கள், யார் வீட்டிலும் மேகசின்ஸ் இருந்தால்... அவ்வளவே. அந்தச் சில பக்கங்களே என்னை ஈர்த்தது என்றால்...பார்த்துக் கொள்ளுங்கள்...!!)

  உங்கள் வதனப்புத்தக பதிவையும் ரசித்தேன்...ஆமால இப்பத்தான் நினைவுக்கு வருது ஃபெப் 27 ....

  அவர் மறைந்தது போலவே மனதில் இன்னும் ஏறலை ஸ்ரீராம்...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //அவர் மறைந்தது போலவே மனதில் இன்னும் ஏறலை ஸ்ரீராம்...
   //

   அப்படிச் சொல்லுங்க...

   நன்றி கீதா.

   நீக்கு
 15. கிரேசி மோகன் எழுத்து ரசிக்கும்படி இருந்தது. ஆனால் அவர் டூ மச் 'பன்' சேர்த்து கொஞ்சம் அயர்ச்சியடையச் செய்வார். வெகு திறமைசாலி. சினிமா வசனம் ஒரு காட்சிக்கு எழுதச் சொன்னா, 7-8 பக்கம் எழுதி, அதில் 4-5 வரிகளை எடுத்துக்கொள்ளச் சொல்லும் அளவு திறமையான எழுத்தாளர்.

  இன்னும் திருப்பதி தரிசனம் ஆகலையா? ஆதார், பிரிண்ட் அவுட், வேஷ்டி, துப்பட்டா, மைனஸ் செல்ஃபோன்/கேமரா இல்லாமல்தான் திருப்பதி செல்லவேண்டும். சென்ற வாரம் கேட்கலை. நீங்க ரொம்ப பிஸிலயும் விடாம வியாழன் பதிவு போடுவதால்.

  படம் போட திருப்பதி பெருமாள் படம் கிடைக்கலையா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //ஆதார், பிரிண்ட் அவுட், வேஷ்டி, துப்பட்டா, மைனஸ் செல்ஃபோன்/கேமரா இல்லாமல்தான் திருப்பதி செல்லவேண்டும்.//

   வார்த்தை சரியாய் அமைந்திருக்கிறதா?!!!

   நீக்கு
  2. //படம் போட திருப்பதி பெருமாள் படம் கிடைக்கலையா?//

   இல்லையா? நெட்டில் இப்படிதான் கிடைத்தார். ஆனாலும் இதற்கு ஒரு பதில் இருக்கிறது!

   நீக்கு
  3. இரண்டு வாக்கியமாக வருவதை ஒன்றாக்கியதில் வந்த சிக்கல். நான் காலை 5 மணி சேவைக்கு, கையில் மொபைலைக் கொண்டு போய், எங்க வைக்கிறதுன்னு தெரியாமல் (அவ்வளவு தூரம் நடக்கவோ இல்லை டெபாசிட் செய்யவோ முடியலை) ரொம்ப கஷ்டப்பட்டுட்டேன். ஆனாலும் திருப்பதியில் நிறைய படங்கள் வெளியில் எடுத்திருக்கிறேன்.

   முகத்துலயே கண்டுபிடிச்சுடலாமே இது திருப்பதியா இல்லை வேறு ஏதேனுமா என்று.

   நீக்கு
  4. உள்ளே செல்லும்போது மொபைலைக் கொடுத்தால் நீங்கள் தரிசனம் முடிந்து வெளியே வரும்போது அங்கே அதை பத்திரமாக வாங்கிக்கொள்ளலாம் என்று சொன்னார்கள்.

   நீக்கு
  5. அது 300 ரூபாய் கியூவில். (இப்போது அந்த ஃபெசிலிட்டி). நான் போனது '5 மணி ஜீயர் சேவை' ஹாஹா.

   மொபைலை/செருப்பை/கேமரா போன்றவற்றை எந்த கவுண்டரிலும் (கியூ காம்ப்ளக்ஸ் இடத்துக்கு அருகில் பல கவுண்டர்கள் இருக்கின்றன) கொடுத்து, பஸ் ஸ்டாண்ட் போகும் வழியில் இருக்கும் பெரிய இடத்தில் (அங்கு 8-9 கவுண்டர்கள் இருக்கின்றன) பெற்றுக்கொள்ளலாம். ஆனா அதுக்கும் மெயின் கோவிலுக்குமே ரொம்ப தூரம்.

   நீக்கு
 16. அந்த வயசுலேயே வித்தியாசமாதான் ஏமாற்றியிருக்கிறார் அந்த பாஸ்கர்..

  இப்படி எங்க கிராமத்துலயும் நடந்திருக்கு ஸ்ரீராம்...அதாவது பக்கத்து கிராமத்துப் பையன் எங்க கிராமத்து பசங்களை ஏமாத்தியது...கிராமத்துல பசங்க சொல்லிருக்காங்க அது பேனா, பென்சில், நோட்புக்ஸ் (எல்லாமே புதுசு...) அப்புறம் அந்தப் பையன் இப்படி சினிமா பார்க்க எல்லாம் வாங்கியதுண்டாம் கேட்டா...இந்த விஷயம் அவன் அப்புறம் வராமல் போனபிறகுதான் தெரிந்ததாம்..திருப்பிக் கேட்டால்..தன் வீட்டு ஏழ்மையைப் பாடி எல்லோர் கண்ணிலும் கண்ணீர் வரவழைத்து அப்புறம் தான் வாங்கியதைத் தன் தங்கச்சிக்குக் கொடுத்துவிட்டதாக அல்லது தொலைத்து விட்டதாகச் சொல்லி ஒரு நாள் தன் தங்கைக்கு உடம்பு சரியில்லை என்று பணம் கூடக் கலெக்ட் செய்து அப்புறம் வரவே இல்லை...அப்புறம் பார்த்தா அவனுக்குத் தங்கச்சி கிடையாது...அவன் வளர்ந்தது அவன் மாமா வீட்டில் என்பதெல்லாம் இவர்கள் தங்களுக்கு கலெக்ட் செய்து கொடுத்த 100 ரூபாயை கேட்டு அலைஞ்சப்ப...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பாஸ்கர்...! அப்புறம் அந்தப்பெயரே எனக்கு கொஞ்ச காலம் அலர்ஜியானது. வகுப்பில் எனக்கு ஓரளவு நெருங்கிய நண்பனாய் இருந்தவன் அவன். நான்கைந்து வருடங்களுக்குப் பின் அவனை ஒருமுறை நேரில் பார்த்தேன். அவனும் பேசவில்லை, நானும் பேசவில்லை! ஃபிராட்!

   நீக்கு
  2. ஸ்ரீராம் அவருக்கும் மறந்திருக்காது அப்ப செஞ்சது...குற்றமுள்ள மனம்...ஆனால் அப்போதுதான் அப்படிச் செய்துட்டார்... இப்பவாவது ஒரு ஸாரி சொல்லிருக்கலாம்...இப்பவும் அந்தப் பக்குவம் வரலைனா....ஹூம்...நீங்க சொன்ன அந்தக் கடைசி வார்த்தைதான்!!!

   கீதா

   நீக்கு
 17. கிரேஸி மோகன் கிரிக்கெட் அனுபவம் வாசித்து சிரிச்சுட்டேன் பல இடங்களில்...வெரி க்ரியேட்டிவ்.....

  கீதா

  பதிலளிநீக்கு
 18. வெளியூருக்கு போகும்போது ஆதார் கார்ட், வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டைன்னு எல்லாத்துலயும் ஒரு காப்பி எடுத்துக்கிட்டு போகனும்.

  அபிநந்தன் நலமோடு வீடு திரும்ப எல்லாரும் வேண்டிப்போம். கிரேசி மோகன் கதைக்குலாம் ஒருகாலத்தில் நான் விசிறியாக்கும்!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //வெளியூருக்கு போகும்போது ஆதார் கார்ட், வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டைன்னு எல்லாத்துலயும் ஒரு காப்பி எடுத்துக்கிட்டு போகனும். //

   யார் இல்லைன்னாங்க? என்னிடமும் இதெல்லாம் இருந்ததே...

   நீக்கு
 19. அபிநந்தன் அவர்கள் நலமுடன் திரும்புவார் என்கிற நம்பிக்கை இருக்கிறது...

  வதனப் புத்தகம் - உபயம் : மின்னல்வரிகள் திரு.பாலகணேஷ்

  பிரியாணி தான் முக்கியம்... ஹா... ஹா...

  திருப்பதி அனுபவம் படித்தவுடன் எனக்கு ஒரு பதிவு ஞாபகம் வந்தது... "பாதுகாப்பு முக்கியம்" ---> (http://dindiguldhanabalan.blogspot.com/2017/04/gmail-security.html) எனக்கு முன் கருத்துரை இட்ட சகோதரி ராஜி அவர்களை கேட்டால், விளக்கமாக சொல்வார்...

  கூகுள் செக்யூரிட்டி செக்கிங் பற்றி பாஸுக்கு முதலில் சொல்லிருக்க வேண்டாமோ...? அப்படி சொல்லியிருந்தால் இந்த அலைச்சல் இருந்திருக்காது...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ராஜி சொன்னால் கேட்டுக்கொள்கிறேன் DD. அபிநந்தன் மனதில் ஊவாமுள்ளாய் உறுத்துகிறார். சொந்தம் ஒன்று அல்லலில் இருக்கிறது...

   செக்யூரிட்டி செக்கிங் பற்றி பாஸிடம் முன்னரே சொல்லி என்ன ஆயிருக்கப்போகிறது!

   நீக்கு
 20. ஏழுமலை ஆண்டவனே ! இப்படி சோதிக்கலாமா ஸ்ரீராம் குடும்பத்தை?
  எப்போது தரிசனம் செய்ய விட்டாய் பெருமாளே?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஏழுமலைப் பெருமாளுக்கு சோதிப்பதே விளையாட்டு கோமதி அக்கா!

   நீக்கு
 21. அபிநந்தன் சுஜாதாவின் குமார் போல கொடுமைகள் அனுபவிக்காமலேயே பத்திரமாக நாடு திரும்பப் பிரார்த்தனைகள்.//
  நானும் உங்களுடன் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.

  "தாயே உனக்காக" படம் இரண்டு நாள் முன்னர் வைத்தார்கள் தொலைக்காட்சியில் .
  அமைதி புறவே !அமைதி புறவே ! அழைக்கின்றேன் உன்னை, நிம்மதியே ந்ம்மதியே நேசிக்கிறேன் உன்னை என்ற பாடல் வரும். நானும் அதையே விரும்புகிறேன் போரால் எவ்வளவு இழப்புகள் !

  வீரர்களின் குடும்பவாழ்க்கையில் எவ்வளவு பிரச்சனைகள் அவர்கள் நாட்டுக்கு உழைக்கும் போது அவர்கள் வீட்டை நினைக்க முடியாது.
  "கருநீல மலை மீது தாய் இருந்தாள், காஷ்மீர பனிமலையில் மகன் இருந்தான்" என்ற சீர்காழியின் குரல் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.
  அபிநந்தனின் அம்மாவும் இப்படித்தான் காத்து இருப்பார் மகனின் வரவுக்கு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தாங்கள் குறிப்பிட்டுள்ள இரண்டு பாடல்களும் உள்ளத்தை உருக்குபவை....

   நீக்கு
  2. ஆமாம்.தாய் காத்து இருப்பாள் ஆனால் பிள்ளை 10 நிமிடம் கூட பேச முடியாமல் போய் விடுவார்.
   போர் மேகம் சூழும் போது எல்லாம் இந்த படம் திரையிடுவார்கள்.

   நீக்கு
  3. அமைதிப்புறாவே பாடலை நாளை பகிரலாம் என்ற எண்ணமும் இருந்தது. நீங்கள் சொல்லி இருக்கும் இரண்டு பாடல்களுமே மிக அருமையான பாடல்கள்.

   பைலட்கள் வாழ்வில் ஒவ்வொரு நாளும் ஒத்திகை நடக்குமாம். இது மாதிரி போருக்கென கிளம்பும் சமயம் எல்லோரும் கிளம்பும் வீரர்களுக்கு சல்யூட் செய்து அனுப்பி வைப்பார்களாம்.

   எந்த நாள் யார் மாட்டுவார், யார் திரும்புவார் என்று தெரியாது என்பதால் அவர்கள் ஒவ்வொரு கிளம்பலும் இப்படி ஒரு இறுதி சல்யூட்டுடன்தான் இருக்குமாம்.

   தொலைக்காட்சியில் ஒரு பைலட் சொன்னார்.

   நீக்கு
  4. அபிநந்தன் ரிலீஸ் செய்யப்பட்டுவிட்டார் என்று செய்தி வெளியாகி உள்ளது போலத் தெரிகிறது.

   ..அவரை அங்கு கேள்விகள் கேட்டதில் இந்தியாவில் நீங்கள் எந்த இடத்திலிருந்து...

   அபினந்தன் : அதை நான் சொல்லக் கூடாது என்று...

   ஆனால் நம் மீடியாவிலோ...அவர் இருக்கும் இடம் முதல்....அவருடன் யார் யாரெல்லாம் தங்கியிருக்காங்கனு அக்கு வேறு ஆணி வேறா போட்டுருக்காங்க....மீடியா இப்படி வெளியிடுவது எவ்வளவு தவறு இல்லையா? அதுவும் அவர் அங்கு அவர்களிடம் மாட்டிக் கொண்டிருக்கும் வேளையில்....இப்படித்தான் எதையெல்லாம் ரகசியாமாக வைத்திருக்க வேண்டுமோ அதை எலலம் மீடியா வெளிச்சம் பொட்டுக் காட்டுது.

   மும்பைத் தாக்குதல் போதும்....மீடியா, எங்கெல்லாம் ரகசிய காமெராக்கள் இருக்கின்றன என்பதை வெளியிட்டது....இது பத்திரிகை சுதந்திரம் என்று சொல்ல முடியுமா?

   கீதா

   நீக்கு
  5. ஸ்ரீராம் உங்க தகவல் ஆமாம் நானும் இதை எங்கோ வாசித்த நினைவு....

   என்ன ஒரு மனோதைரியம் இல்லையா!!! வீரம்!! சல்யூட் அத்தனை வீரர்களுக்கும்!! அபிநந்தனுக்கும்!!!

   இப்ப இம்ரானின் செய்தி வந்ததைப் பார்த்தேன் ஆல்ப்ஸ் தென்றல் நிஷா வின் தளத்தில்.... அங்கும் கருத்து போட்டேன் தஞ்சையம்பதியிலும் சொன்னேன்....

   இப்படியான பேச்சை அவர் அன்றே செய்திருக்கலாம்...எப்போது புல்வாமா செய்தி வெளியாகியதோ அப்போதே.

   அவர் அன்றெ இதைச் செய்திருந்தால் அதாவது இதில் பாகிஸ்தான் அரசிற்கும் குண்டு வெடிப்பிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை இது தீவிரவாதம் ஸோ நாங்கள் எங்கள் நாட்டில் அதைக் களைய முயற்சிக்கிறோம் என்று சொல்லி பேசியிருக்கலாம். ஆனால் அவரது பேச்சு அதைப் பற்றிப் பேசவே இல்லை என்பது என்னவோ நெருடுகிறது.

   தீவிரவாதிகள் அழித்திருப்பது நம் இராணுவ வீரர்களை... அதனால்தான் இந்தியா அங்கு ஊருக்குள் சென்று மக்கள் மீதோ அவர்கள் இராணுவத்தின் மீதோ குண்டு போடவில்லை....தீவிரவாதிகளின் கூடாரத்தின் மீதுதான். இது போர் அல்ல..தீவிரவாதத்திற்கு எதிரான போர் அல்லாமல் நாட்டின் மீதான போர் அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இதைப் புரிந்து கொண்டால் அனாவசியமான போர் உயிரிழப்பு இருக்காது..

   எனவே இது தீவிரவாதத்திற்கு எதிராகத்தான் அதை எப்படி ஒழிப்பது என்றுதான் இரு நாடுகளும் பேச வேண்டுமே அல்லாமல் அவர் பேசியது போர் அடிப்படையில் பேசியிருப்பது சரியில்லை என்றே தோன்றுகிறது.


   கீதா

   நீக்கு
  6. ஸ்ரீராம் அந்தப் பாடல்களை முடிந்தால் பகிருங்கள் கேட்டதில்லை என்று நினைக்கிறேன்...

   கீதா

   நீக்கு
  7. அபிநந்தன் ரிலீஸ் செய்யப் பட்டிருந்தால் அதைவிட மகிழ்ச்சியான செய்தி வேறில்லை.

   நீக்கு
  8. /இது பத்திரிகை சுதந்திரம் என்று சொல்ல முடியுமா? // - இதுக்கு அவங்களுக்கு எங்கேயிருந்து காசு கிடைக்கும்னு நீங்க சொல்ல முடியுமா?

   அபிநந்தன் நாளை இரவுக்குள் விடுதலை செய்யப்படுவார்னு செய்திகள் சொல்லுது.

   நீக்கு
  9. @ கீதா //.. அவர் பேசியது போர் அடிப்படையில் பேசியிருப்பது சரியில்லை என்றே தோன்றுகிறது. //

   ரொம்ப மெதுவாக பவ்யமாக சொல்கிறீர்களே ! பச்சைக்கொடிக்காரர்கள் என்ன பிரச்னையைத் தீர்க்கவா முனைகிறார்கள்? உங்களுக்கு தீரா பிரச்னைகளை உண்டுபண்ணுவதுதானே, அழிவுகளை ஏற்படுத்துவதுதானே அந்த நாட்டின் லட்சியம்? நீங்கள் என்னடா என்றால் இம்ரான் ஒரு தேவதூதன் போல நினைந்துருகி, அவர் இப்படி பேசியிருக்கிறாரே என்று கவலைப்படுகிறீர்களே..
   தமிழ் சேனல்களைக் கடாசிவிட்டு, நமது ஆங்கில சேனல்களை -டைம்ஸ் நௌ, ரிபப்ளிக், சிஎன்என்- நியூஸ் 18 - என்றெல்லாம் கொஞ்சமாவது பார்த்தால்தானென்ன? ஆங்கிலம் தெரிந்தவர்கள்கூட இதையெல்லாம் பார்க்கவில்லை என்றால், ஆங்கிலம் என்றாலே தொண்டை சிக்கும் தமிழர்களா இதனைப் பார்க்கப்போகிறார்கள்?

   நீக்கு
  10. இதைப்பற்றி இந்த வாரம் பாசிடிவ் செய்திகளில் இல்லை என்று இன்று (02/03/2919) பதிவு செய்கிறேன்...

   இதன் பிறகு அதைப் பற்றி என்ன வந்தாலும் அது நெகடிவ் செய்தி அல்லது சமாளிப்பு செய்தி...

   நன்றி...

   நீக்கு
 22. பெரியப்பா இரண்டு பக்கமும் ‘தலை’ இருப்பது போல, தான் தயாரித்து வைத் திருந்த 10 பைசா நாணயத்தைச் சுண்டி எறிந்து ‘தலை’ என்றான். பூவா- தலையாவில் ஜெயித்த பெரியப்பா, ‘பவுலிங்’ என்கிற முடிவை எடுத்து எங்கள் வயிற்றில் புளியைக் கரைத்தான்.//

  இரண்டு பத்து பைசாவை ஒட்டி என் அண்ணன் எங்களை ஏமாற்றுவான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஷோலே திரைபபடம் நினைவிருக்கிறதா கோமதி அக்கா? அமிதாப் அப்படியான ஒரு நாணயத்தைதான் வைத்திருப்பார். அவர் இறந்தபிறகு தர்மேந்திரா அதை உணருவார்.

   நீக்கு
 23. கமல் அரசியல் பேசினால் கலாய்க்கிறோம். சுஜாதா அரசியல் பேசினால் ரசிக்கிறோம்.

  ஒரு துறையில் துறைபோகியவர்கள், இன்னொரு துறையில் மூக்கை நுழைக்கக் கூடாது என்று எதிர்பார்ப்பது எவ்வகையில் நியாயம்? தெரியவில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஜீவி ஸார்... கமல் போல சுஜாதா அரசியலில் இறங்கவில்லை. சும்மா கொஞ்சம் பேசி இருப்பார் அவ்வளவுதானே...

   நீக்கு
  2. கேள்வி கமலை சினிமாக்காரராய் மட்டுமே பார்ப்பதைக் குறித்து.

   சுஜாதாவுக்கு அந்தப் பிரச்னை இருந்ததில்லை.

   நீக்கு
  3. ஜீவி சார்... அதற்கு லாஜிக்கலான காரணம் இருக்கு. சுஜாதா எழுத்தாளர். அரசியலையும் எழுதலாம். ஆனா அவர், ஒரு கட்சியில் சேர்ந்து பிறகு அரசியல் எழுதினா, பல்லிளித்துவிடும். அதுபோல அவர், ஒரு கட்சி மாநாட்டில் கலந்துகொண்டு, இல்லைனா ஒரு அரசியல் மேடையில் கலந்துகொண்டு, பல்லிளித்து வாழ்த்துப்பா பாடி, ஆஹோ ஓஹோ என்று புகழ்ந்துவிட்டு, பிறகு 'நாணயமான அரசியல், நேர்மை, ஊழல் இன்மை' என்று பேசுவது ரொம்பவே பல்லிளிக்கிறது. அதனால்தான் அவரை எல்லோரும் கலாய்க்கிறார்கள்.

   இப்போ எம்.ஆர்.ராதா, என்.எஸ்.கிருஷ்ணன் போன்றவர்கள் அரசியல் பேசும்போது அது ஓரளவு நேர்மையா இருந்தது. கமலஹாசன் அப்படியா?

   நீக்கு
 24. வர வர எங்கள் ப்ளாக் வாட்ஸ்ஆப் க்ரூப் மாதிரி ஆகிவிட்டது. அங்கங்கே கிளை பிரிந்த, கிளை பிரிந்து..
  மரமே காணாமல் போய்..

  பதிலளிநீக்கு
 25. ///மொபைல் பையில், பை வண்டியில், வண்டி?//

  ///நாங்கள் ஆறு பேரும் ஒருகுழுவாக "உரையாடியபடியே" கூட நடந்தோம்.

  வழியில் எதிர்ப்படும் கடைகளில், போலீஸ்காரரிடம், சேவார்த்திகளிடம் "இங்கு நெட் சென்டர் எங்கிருக்கிறது?" என்று விசாரித்தபடியே சென்றோம். ///அப்போது எங்களுக்குத் தெரிந்திருக்கவில்லை!//

  ஆவ்வ்வ்வ்வ் முதல் பந்தியிலேயே கண்டுபிடிச்சிட்டனே விசயத்தை.. ஹா ஹா ஹா மீ கிளவராக்கும்:).. இது வேற கிளவர்:), ஆனா அஞ்சுவால இப்பூடிக் கண்டுபிடிக்க முடியாது ஹையோ ஹையோ:)) ஹா ஹா ஹா..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சும்மா அஞ்சுவை சீண்டிகிட்டே இருக்கீங்க அதிரா?!!! நீங்க எதைக் கண்டு பிடிச்சீங்க?

   நீக்கு
  2. ஹலோ ஏஞ்சலுக்கு அசாத்திய நினைவுத்திறம் என்பதை புலியூர் பூஸானந்தா மறந்திடக் கூடாது என்பதை இங்கு தாழ்மையுடன் சொல்லிக் கொள்கிறேன்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

   கீதா

   நீக்கு
  3. //நீங்க எதைக் கண்டு பிடிச்சீங்க?//

   ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர் 4 ஸ்ரீராம்:)..

   ///அப்போது எங்களுக்குத் தெரிந்திருக்கவில்லை!///// இது என்ன மற்றர் என்பதனைக் கண்டு பிடிச்சிட்டனே:) கீதாகூட அப்போ கண்டுபிடிக்கேல்லையாக்கும்:).. ஆனா அஞ்சுவும் கீதாவும் கெட்ட பழக்கம் வச்சிருக்கினம், கீழ இருந்து மேலே படிக்கிறது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:), அதனால விசயம் என்ன என்பதனை அறிஞ்ச பின்னரெ கொஸ்ஸனுக்கு வருவினம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) அது அலாப்பி வெளாட்டூஊஊஊஊ:))

   நீக்கு
  4. ஹலோ குண்டு பூனை :) இன்னிக்கு நான் மேலிருந்து தான் வந்தேனாக்கும் :) எனக்கும் பார்த்தவுடனே புரிஞ்சிடுச்சி :) மெயில் வெளியிடத்தில் திறக்காது செக்யூரிட்டி கோட் கேக்கும்னு :)
   ஆமா நேத்து //அந்த என்பும் உரியர் பிறர்க்கு // குறளை இம்போசிஷன் எழுத சொன்னேனே முடிச்சிங்களா ??

   நீக்கு
  5. ///Angel28 பிப்ரவரி, 2019 ’அன்று’ பிற்பகல் 5:50
   ஹலோ குண்டு பூனை :) இன்னிக்கு நான் மேலிருந்து தான் வந்தேனாக்கும் :) எனக்கும் பார்த்தவுடனே புரிஞ்சிடுச்சி :) மெயில் வெளியிடத்தில் திறக்காது செக்யூரிட்டி கோட் கேக்கும்னு :)////


   ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ஸ்ரீராம் ஓடிவாங்கோஓஓஓஓஓஓஓஒ நான் சொன்னனே ஃபிஸ்ஸூ தூண்டில்ல மாட்டிடிச்சூஊஊஊஊஊஊஊ அஞ்சுக்குப் புரியல்ல விசயம், அவ வேறு சொல்றா ஹா ஹா ஹா...

   மற்றர் அதுவல்ல:)) ஹா ஹா ஹா... ஃபோன் இவர்கள் கையில் இல்லை, அது இல்லை என்பது ஸ்ரீராம் ஆட்களுக்கு தெரியாது.. அதைத்தான் சொல்றார் அடிக்கடி..

   ///அப்போது எங்களுக்குத் தெரிந்திருக்கவில்லை!////

   நீக்கு
  6. //ஆமா நேத்து //அந்த என்பும் உரியர் பிறர்க்கு // குறளை இம்போசிஷன் எழுத சொன்னேனே முடிச்சிங்களா ??//

   ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) நா வள்ள இந்த ஆட்டத்துக்க்கு:).. இதை நெல்லைத்தமிழன் பார்த்தல் யோசிப்பார்:), ஆனாலும் அவருக்குப் புரிய ஞாயமில்லையே:))

   நீக்கு
  7. ஹலோ போன் மேட்டர்லாம் எனக்கு தெரிஞ்சுது ஆனா நான் ஸ்ரீராம புக் விஷயத்தில் ஏமாத்தினானே அந்த மாணவன் பத்தி நினைச்சி நாம மைண்டும் அங்கேயே நின்னுடுச்சி :) அதான் பின்னூட்டத்தில் எழுதலை

   நீக்கு
 26. //மதி இருந்தால் விதியை வென்றிருக்கலாம்...!!//
  விதியில் எழுதப்பட்டிருந்தால், விதி விடாது மதி இயங்க:).. அப்படியே ஃபிரீஸ் ஆக்கி விட்டிடும்..

  ஆனானும் எவ்ளோ உலைச்சல்... கெட்ட கெட்ட கோபமாகத்தான் வரும், ஆனால் ஆரை நோவது என நினைச்சு அமைதியாக சிரிச்சுக் கொண்டு இருக்கோணும்.. எல்லாம் பகவான் செயல்:)..

  பதிலளிநீக்கு
 27. ///மகன்கள் வேகமாக முன்னால் நடந்தார்கள். வண்டியைத் தேடத் தொடங்கினார்கள். இந்நேரம் தரிசனத்துக்கு உள்ளே சென்றவர்கள் பாதி வழி கடந்திருக்கக் கூடும்.////

  எங்களுக்கு எத்தனை மணி எத்தனை நிமிடம் எத்தனை நொடிக்கு பகவானின் தரிசனம் கிடைக்கோணும் என எழுதப்பட்டிருக்கோ அப்போதானே கிடைக்கும், ஆனாலும் உங்கள் விடாமுயற்சி, நிட்சயம் தரிசித்துவிட்டுத்தான் வந்திருப்பீங்கள்.. அடுத்த தொடரில் முடிவு தெரிந்துவிடும்:)) ஹா ஹா ஹா..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. // அடுத்த தொடரில் முடிவு தெரிந்துவிடும்:))//

   என்றுதான் நம்புகிறேன்!

   ஹா... ஹா... ஹா...

   நீக்கு
 28. //(சென்ற வாரம் இந்தத்தொடர் வராததை யாருமே கேட்கவில்லை என்றாலும் நான் விடமாட்டேன் இல்ல! நான் எதை எழுதி பக்கத்தை நிரப்ப?!!)///

  சென்றவாரம் இதுபற்றி நீங்கள் சொல்லவில்லை என்பதனை, இப்போதான் நினைக்கிறேன் ஹா ஹா ஹா,.. ஏனெனில் போனகிழமை, நல்ல இன்றஸ்ரிங்காக இருந்ததெல்லோ போஸ்ட்... அதனால இதை மறக்கடித்துவிட்டதோ என்னமோ..:)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவ்வளவு சுவாரஸ்யமாகவா இருந்தது போனவாரம்? சும்மா ஜல்லியடிக்காதீங்க!!!!!

   நீக்கு
  2. ஹா ஹா ஹா இங்கு ஒரு விசயம் சொல்லியே ஆகோணும்:).. ஒரு ஸ்பீச்சில் கேட்டேன், சிலருக்கு இல்ல இல்ல முக்கால்வாசிப் பேருக்குமே ஒரு விருப்பம் இருக்காம் என்னவெனில்,

   நான் கூடாத ஆள்:), என் எழுத்துக்கள் சரியில்லை:), எனக்கு யாருடனும் பழகத் தெரியவில்லை:), நான் அழகில்லை:),.... இப்படி சொல்லுவினமாம் ஹா ஹா ஹா,

   அதுக்கு நாங்க ஓடிப்போய்.. இல்ல இல்ல என்ன இப்பூடிச் சொல்லிட்டீங்க, நீங்க எவ்ளோ நல்லவர் தெரியுமா? உங்களிடம் எவ்ளோ திறமை இருக்குத் தெரியுமோ? நீங்க எவ்ளோ அழகு தெரியுமோ? உங்களை நான் ரசிப்பேன், ஆனா சொன்னதில்லை ....

   இப்படி எல்லாம் சொல்லுவோம் எல்ல்லோ.. அதைக் கேட்கும் ஆசையிலதான், பெரும்பாலானோர் தம்மைக் குறைத்துச் சொல்லுவினமாம் ஹா ஹா ஹா...

   ஆனா சிலர் இருக்கினம், தப்பித்தவறிக்கூட தம்மைக் குறைத்துச் சொல்ல மாட்டினம், தாம் தான் பெரிசு, தன் எழுத்துத்தான் சிறந்தது எனச் சொல்வார்கள்:)...

   நீக்கு
  3. என்னில ஒரு பழக்கம் இருக்குது ஸ்ரீராம்.. அது நல்லதோ கெட்டதோ தெரியாது, ஆனா நான் யாரோடாவது கொஞ்சம் அதிகம் பழகத் தொடங்கிட்டால், தயங்காமல் குறையாயினும், நல்லதாயினும் நேரே சொல்லிடுவேன்... குறை சொல்வது சிலருக்குப் பிடிக்காமல்கூடப் போகலாம், ஆனா நான் நினைப்பது உண்மையைச் சொல்லிக் கெட்ட பெயர் எடுத்தாலும் பறவாயில்லை என்று..

   நீக்கு
  4. ஏஞ்சலின்.... இந்த மாதிரி ஸ்பெல்லிங் மிஸ்டேக்லாம் சொல்லாதீங்க. அவங்க ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லாம எழுதிட்டாங்கன்னா, நம்ம எல்லாருக்கும் சுட்டு ஆறாத தண்ணியைத் தெளித்துத்தான் எழுப்பணும்.

   நீக்கு
  5. அல்லோ மிஸ்டர்:) வல்லாரை குடிச்சும் இந்த மற்றர் நினைவில நிக்குதில்லையே அஞ்சுவுக்கு கர்ர்:)).. மீ ஓல்ரெடி/ஆல்ரெடி சொல்லியிருக்கிறேனெல்லோ.. எனக்கு கருப்பு.... பரவாயில்லை.. இது இரண்டும் ர தான் வருமெனத் தெரிஞ்சாலும், ஏனோ அப்படி உச்சரிப்பு பிடிக்கவே இல்லை எனக்கு.. அழுத்தி உச்சரிப்பதே பிடிச்சிருக்கு அதனால ற போட்டுத்தான் எழுதுவேன் என ஹையோ ஆண்டவாஅ.. காசிக்குப் போய் நிம்மதியா இருக்கலாம் என்றால் அதுவும் முடியிற காரியம் போல தெரியல்ல:)

   நீக்கு
  6. // நம்ம எல்லாருக்கும் சுட்டு ஆறாத தண்ணியைத் தெளித்துத்தான் எழுப்பணும்.//

   ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

   நீக்கு
  7. @ நெல்லைத்தமிழன் ..அது எனக்கு இரவு தூங்கும்போது நல்லா தூக்கம் வரணும் ,கனவெல்லாம் அதாவது கெட்ட கனவெல்லாம் வரப்படாது அடுத்தது நிறையா நாய்க்குட்டி பூனைக்குட்டி சிங்கக்குட்டி இதெல்லாம் வரணும் என் எடை அப்படியே மெயின்டைன் பண்ணனும் அப்படின்னா இதுக்காகெல்லாம் நான் தினமும் நல்ல காய்கறி உணவு வல்லாரை ஜூஸ் அப்புறம் இங்கே கும்மி அதுக்கெல்லாம் மேலே ஒரு நாளில் ஒரு முறையாவது அதிராவை வம்பிழுக்கனும் :) ஹஹாஹாஹா அதுக்காகத்தான் கிடைச்ச சந்தர்ப்பத்தை யூசிங் :)

   நீக்கு
  8. @ஸ்ரீராம், சென்ற வாரம் தொடர் வரலைனு கவனிச்சேன். உங்களிடம் மெயில் கொடுத்துக் கேட்க நினைச்சு எனக்கு வந்த அடுத்தடுத்த பிரச்னைகளில் மறந்தே போனேன். :)

   நீக்கு
 29. ஓ நீங்கள் சொல்லியுள்ள் சுஜாதா அவர்களின் புத்தக லிஸ்ட்டில் எதுவும் நான் படித்ததாக நினைவில்லையே.. எழுதி எடுக்கிறேன், நெ.தமிழன் சொன்னவைகளோடு இதனையும் தேடுறேன் இம்முறை தமிழ் ஏரியா போகும்போது.

  அது சின்ன வயதில், இன்னாருடையதைப் படி என ஆரும் சொல்லவில்லை, நானாக தேடித்தேடி, தலைப்பு நல்லாயிருக்கும் புத்தகமாக எடுத்துப் படிப்பேன்.. கண்டதையும் கல்.. என்பதுதான் மனதில் நின்றதோ என்னமோ, ஆனா அண்ணனுடைய செலக்ஸன்ஸ் ஆலதான் எனக்கும் கண்ணதாசன் அங்கிள் பக்கம் மனம் திரும்பியிருக்கலாம்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சுஜாதா நிறைய நம்பிப் படிக்கலாம் அதிரா... நிறைய நெட்டிலேயே கிடைக்கிறது.

   நீக்கு
  2. ஸ்ரீராம் நான் 14 நாட்கள் வாசிக்கத் தொடங்கிவிட்டேனே....நெட்டில்!!! அதனால் அதை முடிச்சுட்டுத்தான் வலைப்பக்கம்...ஹா ஹா ஹா

   கீதா

   நீக்கு
  3. ரொம்....ப சுவாரஸ்யமான கதை கீதா... படியுங்கள்.

   நீக்கு
  4. ஒ எனக்கு என்னமோ இதுவரை நெட்டில் படிச்சுப் பழக்கமில்லை, பிடிப்பதுமில்லை, பார்ப்போம் முயற்சிக்கிறேன் என் ஐ பாட்டில்.

   நீக்கு
 30. ஒரு தபால் கார்டை எடுத்து அதில் தனக்குத் தோன்றியதை எழுதி பக்கத்து தபால் ஆபிசுக்கோ, தெரு முனை போஸ்ட் பாக்ஸில் சேர்ப்பித்தோ... அந்த லதா ரகுநாதன் அவ்வலவு மெனக்கிட்டிருப்பார் என்று நினைக்கிறீர்கள்?...

  பத்திரிகைக்கு கடிதம் எழுதிய அனுபவம் யாருக்காவது இருந்தால் சொல்லுங்கள்.

  உங்கள் கடிதத்தையும் அதற்காக எதிர்வினையையும் பத்திரிகையில் பிரசுரமாகிப் பார்ப்பது அவ்வளவு எளிதான விஷயம் இல்லை.

  உதகை....... வும் , கல்லிடைக்குறிச்சி......ஜூம், புதுவை....யும் பொள்ளாச்சி..... வும் நிஜ மனிதர்களோ?

  அப்பாவி அண்ணாசாமி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நிறைய நிஜ மனிதர்களும் உண்டுதானே ஜீவி ஸார்? அண்ணா அன்பழகன் அந்தணப்பேட்டை, இன்னும் சில பெயர்கள் எல்லாம் அப்போது மிக மனப்பாடம்.

   சில பத்திரிகைகள் கற்பனையாகவும் வெளியிடுமாக இருக்கலாம்!

   நீக்கு
  2. நீங்கள் (தபால் கார்டு - இன்லாண்ட்) கேள்விகள் அனுப்பியதில்லை என்று தெரிகிறது.

   இப்போ கூட அனுப்பி அந்த அனுபவத்தைச் சொல்லலாம்.

   நீக்கு
  3. எஸ் எஸ் மணி - திருவனந்தபுரம், அரகண்டநல்லூர் கே பிரதாப், த சத்தியநாராயணன் அயன்புரம், தடுத்தாட்கொண்டபுரம் ஜ பிரதாபன் (ஸ்ரீராமின் உறவினர்) இவர்கள் கடிதங்களும் ஆசிரியருக்குக் கடிதங்கள் பகுதியில் அடிக்கடி பார்த்திருக்கிறேன். க கோ கௌதமன் சென்னை - 7 கூட சிலசமயங்களில் (!) (அது நாந்தான்!)

   நீக்கு
  4. திரைக்குப் பின்னால் வெறுமனஏ எல்லாத்தையும் வாசித்துக் கொண்டிருந்த கேஜியை வெளியே கொண்டு வந்தாச்சு... :)

   குமுதத்தில் தன்னை நையாண்டியாகத் திட்டுபவர்களுக்கு முன்னுரிமை.. கெக்கே பிக்கேன்னு
   ஒரு பாணி.. எதையும் நேரடியாக் குறிப்பிடாத வழா வழா ஸ்டைல்.ன்னு சில குவாலிபிகேஷன்ஸ் இதுக்கு இருக்கு.. ஒண்ணு ரெண்டு பிரசுரமானா இந்த பாணி பழக்கப்பட்டுப் போய் அந்த சகதிலேந்து வெளிவராம ஜாக்கிரதையா பாத்துக்கும்.

   ஜோக் எழுதினவங்க லிஸ்ட்டில் உ.ராஜாஜி ஒரு பக்க கதை எழுத வரைக்கும் தேறினார்.

   படுதலம் சுகுமாரன் (ஆ.வி. அட்டைப்பட ஜோக்.. ஆசிரியர் பாலு சிறை சென்றது எல்லாம் ஞாபகம் இருக்கா?) உருப்படியா தேறி வந்தவர். தினமலர்-- வாரமலர் இவரது கதைகளைத் தொடர்ந்து பிரசுரித்து ஆதரவாக இருந்தது.

   குமுதம் புகழ் வேதா கோபாலனும் நாளாவட்டத்தில் சிறுகதைகள் எழுத ஆரம்பித்து விட்டார்.

   நீக்கு
  5. ஜீவி சார்... படுதலம் சுகுமாரன் பெயர் பெற்றது, ஆ.வி. போட்டியில், ஒரு ஜோக்குக்கு 25,000 ரூபாய் பரிசு வாங்கினதுலதான்.

   நீக்கு
  6. உ ராஜாஜி, படுதலம் சுகுமாரன், வேதா கோபாலன் மூன்றுபேரும் நினைவிருக்கு....

   கீதா

   நீக்கு
  7. சிம்பு தேவன் கூட ஆவில மாணவர் எழுத்தாளராக இருந்து அதுல எழுதின ராஜா ஜோக்ஸ் தொகுத்துதான்..கதையாக 23 ஆம் புலிகேஸி எடுத்ததாகக் கூட எங்கேயோ வாசித்த நினைவு...

   கீதா

   நீக்கு
  8. படுதலம் சுகுமாரனின் ஜோக் ஒன்றை படத்துடன் ஆனந்த விகடன் அட்டைப்படத்திலேயே போட்டு
   (அந்த ஜோக்கும் படமும் ஞாபகம் இருந்தால் அதைப் பற்றி இப்பொழுது சொல்ல வேண்டாம்) எம்ஜிஆர். காலத்தில் பெரிய ரகளையாகி ஆவி ஆசிரியர் பத்திரிகையில் அந்த ஜோக்குக்காக வருத்தம் தெரிவிக்க ஏதுமில்லை என்று சிறை தண்டனை ஏற்றார். அப்பொழுதே படுதலம் பிரபலம்.

   நீக்கு
 31. //விங் கமாண்டர் அபிநந்தன்//

  நானும் படிச்சேன், படம் பார்த்தேன், மனம் பதைபதைப்பாக இருக்கு.. இவர் ஒரு தமிழர் ஆமே, திருமணமானவராம்... நானும் கடவுளைக் கேட்டுக் கொண்டே இருக்கிறேன் நலமோடு திரும்பிட வேண்டும் என.

  முன்பு ஒரு தடவை பிரித்தானியாவைச் சேர்ந்த ஒரு ரீச்சர், ஆவ்கானிஸ்தானோ எங்கோ[அங்கு வேலை செய்ய ஆர்ம் போகமாட்டினமாம், இவ சேவைக்காக விரும்பிப் போனா] படிப்பிக்கப் போன இடத்தில், ஸ்கூலில் ஒரு குழந்தை பொம்மையை எடுத்து வந்ததாம், அப்போ அந்தப் பொம்மைக்கு என்ன பெயர் எனக் கேட்க, குழந்தை சொன்னதாம் இன்னும் பெயர் வைக்கவில்லை என, அப்போ நாம் பெயர் வைப்போமா என ரீச்சர் கேட்டுவிட்டு.. ஏதோ மொகமட்.. என்பதுபோல வைத்தாவாம், சரியாக நினைவில்லை எனக்கு..

  அதைக் குழதை வீட்டுக்குப் போய்ச் சொன்னதும், கடவுள் பெயரை பொம்மைக்கு வைத்துவிட்டா எனச் சொல்லி, அந்த ரீச்சரை ஜெயிலில் போட்டு, வெளியே எடுக்க முடியாமல் கஸ்டப்பட்டு, பின்னர் இங்கு பிரித்தானியாவில் பெரும் பதவியில் இருந்த ஒரு அந்நாட்டைச் சேர்தவர், நேரே போய்ப் பேசி, கையுடன் ரீச்சரைக் கூட்டி வந்தார்.

  அப்படி ஏதும் பாகிஸ்தானைச் சேர்ந்தோர், இந்தியாவில் பெரும் பதவியில் இருப்பின், நினைத்தால் ஒருவேளை சாத்தியப்படலாமோ என்னமோ.. மனம் இப்படி எல்லாம் எண்ணுகிறது. நான் அந்தக் குடும்பத்தினர் இடத்தில் இருந்தே யோசிக்கிறேன், எப்படி இருக்கும் அவர்களுக்கு:(. நல்லதே நடக்கட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்கள் சொல்லும் விஷயம் படித்த மாதிரி இருக்கிறது அதிரா.

   நீக்கு
  2. வாங்க... வாங்க... அப்புறமாவும் வாங்க!

   நீக்கு
  3. எங்க ஊரில் ஒரு பிரிடிஷார் (எங்க கம்பெனில வேலை பார்த்துக்கொண்டிருந்தவர், ஒரு ரெஸ்டாரெண்ட் செயினை மேனேஜ் பண்ணினவர்), தன் மேசை டிராயரை, மேசையைக் கிளீன் பண்ணும்போது, தேவையில்லாததை குப்பைக் கூடையில் போட்டார். அதில் குரான் புத்தகமும் சேர்ந்துவிட்டது. அது ரொம்பப் பெரிய விஷயமாக சில மணி நேரங்களில் ஆகிவிட்டது. உடனே கம்பெனி மேனேஜ்மெண்ட், அவசர அவசரமாக அவரை ஏர்போர்ட் போகச் சொல்லி, வெளி ஊருக்கு உடனே போகச்சொல்லிட்டாங்க. அப்படி இருந்தும் பெரிய ஊர்வலம் அப்படி இப்படின்னு பெரிய பிரச்சனை ஆச்சு. அதுபோல நான் (நல்ல பொசிஷனில் இருந்தேன்) இன்னொரு ஜி.எம்.-அரபி அறையில் சிறிய குரான் புத்தகங்கள் அழகழகாக இருந்தன. அது அழகா இருக்குன்னு சொன்னதும் அவர் திறந்து காண்பித்தார். அந்த பேஜில் ஒரு பாராவைத் தொட்டவுடன், அவர் தீயை மிதித்ததுபோல் துள்ளினார். ஏன் புத்தகத்தைத் தொட்டீங்க. அது கடவுள் வார்த்தைனா. இஸ்லாமியர்களே சுத்தமாக இல்லாதபோது தொடப் பயப்படுவோம் என்றார். இதுபோல நிறைய சம்பவங்களை நான் பார்த்திருக்கிறேன். ஒரு அரபியை, நான் அவசர வேலையாக இன்னொரு தேசத்துக்குப் போகச் சொன்னேன் (ஒரு நாள் வேலை). கண்டிப்பா போகணும், அது அர்ஜண்ட் என்று சொல்லவும், அவன் ஹெச்.ஆர் ல போய் கம்ப்ளெயிண்ட் பண்ணிட்டான். எனக்குப் புரியலை. என்னை எல்லோருக்கும் தெரியும் என்பதால், அவங்க என்னிடம், 'எந்த அரபியும் ரமலான் நோன்பு இருக்கும்போது பிரயாணப்பட விரும்ப மாட்டான். அதிலும் பெரும்பான்மையோர் அதை செண்டிமெண்டாக நினைப்பாங்க' என்றார்.

   அவங்க அவங்க செண்டிமெண்ட் நமக்கு நல்லாத் தெரியலைனா ரொம்பப் பெரிய பிரச்சனைல கொண்டுவந்து விட்டுவிடும்.

   நீக்கு
  4. //அவங்க அவங்க செண்டிமெண்ட் நமக்கு நல்லாத் தெரியலைனா ரொம்பப் பெரிய பிரச்சனைல கொண்டுவந்து விட்டுவிடும்.//
   உண்மைதான் நெல்லைத்தமிழன், ஆனா வேண்டுமெனச் செய்து தண்டனை கொடுத்தால் ஓகே, தெரியாமல் செய்துவிட்டால் அதுக்கு தண்டனை கொடுப்பது நீதியில்லை, விளங்கப் படுத்தி மன்னிச்சு விட்டிடலாமெல்லோ.

   நீக்கு
  5. புத்தர் டாட்டூ போட்ட லேடியை கூட இலங்கையில் இருந்து டீபோர்ட் செஞ்சாங்க டாட்டூ போடக்கூடாதுன்னு அவருக்கு தெரியுமா ? . ஆனா அந்த நர்ஸ் கேஸ் போட்டு காம்பன்சேஷன் வின் பண்ணார்

   நீக்கு
  6. //புத்தர் டாட்டூ போட்ட லேடியை கூட இலங்கையில் இருந்து டீபோர்ட் செஞ்சாங்க டாட்டூ போடக்கூடாதுன்னு அவருக்கு தெரியுமா ? .//

   OMG!

   நீக்கு
 32. பெரியப்பா- பிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ராஆஆஆணிக் கதை முக்கால்வாசி புரிஞ்சது:).

  ஹா ஹா ஹா ஏமாற்றுக் கதை... எப்படியெல்லாம் திட்டம் போட்டு ஏமாற்றுகிறார்கள்.

  என் வயதை ஒத்த நண்பி, ஆனா என்னைவிட ஒரு வகுப்பு கீழே படித்தார், பிக்கோஸ் மீ டபிள் புரொமோசனில் படிச்சேன் ஒரு வகுப்பு மேலே:).. அப்போ அவ என்னை அக்கா எனத்தான் கூப்பிடுவா, ஊரில் அப்படித்தானே ஒரு வகுப்பு மேலே எனில் மரியாதை குடுப்போம் எல்லோ.

  அவ என்னோடு நன்கு நன்கு ஒட்டிப் பழகுவா, உண்மையைச் சொன்னால் எனக்கு அவவைப் பிடித்ததை விட, அவவுக்கு என்னை ரொம்பவும் பிடிக்கும், அதனால தன் ரகசியம் எல்லாம் சொலுவா.. நான் அப்பவும் சரி இப்பவும் சரி, ஒருவர் என்னிடம் “ரகசியம் சொல்லிடாதே எனச் சொல்லிச் சொன்னால் உயிர்போனாலும் முன்பு யாரிடமும் சொல்ல மாட்டேன், பின்பு என் கணவர் தவிர ஆரிடமும் சொல்ல மாட்டேன்”[ஓவரா சொல்கிறேனோ.. இல்லை சத்தியமாக நான் அப்படித்தான்].

  அப்போ இந்த நண்பிக்கு ஒரு காதல் வந்துவிட்டது, எனக்கது பிடிக்கவில்லை, சும்மா 9ம் வகுப்பிலேயே தன் வகுப்பை ஒத்த இன்னொரு ஸ்கூல் போயை லவ் எனச் சொல்லி கடிதப் பரிமாற்றம்,- இது வேண்டாம் விட்டுவிடு என எவ்வளவோ சொன்னேன்.... அது முத்திப்போய், 9ம் வகுப்பிலேயே இவவும் இன்ன்னொரு பெண்ணுமாக வெளிக்கிட்டு[மற்றப் பெண்ணுக்கும் ஒரு boy].. ஓடிப்போகப்போகினமாம்.. என அந்த இரு போய்ஸ் ஐயும் வரச்சொல்லி இருக்கினம், ஒரு பஸ் ஸ்ராண்டுக்கு.. அங்கிருந்து சேர்ந்து எங்காவது ஓடிடலாம் என.. என்னா தைரியம் பாருங்கோ.

  இந்தக் கதை எனக்குத் தெரியாது, ஏனெனில் நான் தான் லவ் ஏ வேண்டாம் விடு எனச் சொல்லிட்டேன்[அவர்கள் குடும்பம் எனக்குத் தெரியும், நல்ல குடும்பம்] என்பதால எனக்குச் சொல்லவில்லைப்போலும்,

  ஆனா அடுத்த நாள் தகவல் வருகிறது, இவர்கள் இருவரும் போய் ஒரு அடைவுக்கடையில், தம் தோட்டையும் கையில் போட்டிருந்த மோதிரத்தையும் அடைவு வைத்து, பெயர் கேட்ட இடத்தில் என் பெயரை.. என் அப்பாவின் பெயரோடு முழுப்பெயராகக் கொடுத்துப் பணம் பெற்றிருக்கிறார்கள்.

  பஸ் ஸ்ராண்ட் போயிருக்கினம், அந்த போய்ஸ் வரவில்லை.. எப்படி வருவார்கள்.. குஞ்சுப்பார்ட்டி எல்லோ.. 14-15 வயசுதானே.. அதனால இவர்கள் திரும்பி லேட் நைட் வீடு போய்ப் பிடிபட்டு, இக்கதை தெரியவந்துது... அன்றிலிருந்து ஸ்கூலை விட்டு வெளியேறும்வரை நான் அவவோடு பேசவே இல்லை, ஏனோ மனம் வரவில்லைப்பேச.

  இது என்னை ஏமாற்றிய வரிசையில் வருமோ தெரியாது, ஆனா நம்பிப் பழகினதுக்கு துரோகம் என வரலாம்...:).

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அது மியாவ் 6 ஆம் க்ளாஸிலேயே தேவிகாவுக்கு சீட் ரெகமெண்டேஷனுக்கு போனீங்களே அந்த விஷயம் தெரிஞ்சி உங்களை பெரிய்ய்ய ஆளுன்னு நினைச்சி உங்க பேரை குடுத்திருப்பாங்கா ஹாஆஆஹாஆ :)) just kidding :))

   இது பச்சை துரோகம் யாரும் தவறான விஷயத்துக்கு அவர்களது தேவைக்கு நம் பேரை பயன்படுத்த விடவே கூடாது .இந்த காரணத்தினாலேயே அப்பாவின் பெயரை சொல்லவில்லை .யாரை நமது பெயரை யூஸ் பன்றாங்கன்னு நமக்கு தெரியுமா ? என் உறவினர்( not blood related ) ஒருவரே தனது சொந்த காரியத்துக்காக என் அப்பாவின் பெயரை உபயோகப்படுத்தினது பிடிக்கலை .அதானால் நீங்க நட்பை தவிர்த்ததில் தவறே இல்லை ..

   நீக்கு
  2. உண்மைதான் அஞ்சு, அவ பேச ட்றை பண்ணினா ஆனா ஏனோ எனக்கு மனம் வரவில்லை:(. அவ்ளோதூரம் அவவை அணைச்சு வச்சிருந்து கதை சொல்வேன், நல்லா படி அதுதான் முக்கியம் எண்டெல்லாம்.

   நீக்கு
  3. //அது மியாவ் 6 ஆம் க்ளாஸிலேயே தேவிகாவுக்கு சீட் ரெகமெண்டேஷனுக்கு போனீங்களே //
   ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. தேவிகாவுக்கு இப்போ ஒரு மகன் இருக்கிறார்:).

   நீக்கு
  4. ஹஹ்ஹா :) இப்பவும் கணவர் கிட்ட சொல்லி சிரிப்பேன் :) நீங்க சீட் ரெக்கமண்டேஷனுக்கு கூட்டிட்டு போனதை :)
   எதுக்குன்னா என் ப்ரண்ட்ஸ் எல்லாரும் ஒரே மாதிரினி அவருக்கு புரியவைக்கும் இல்லையா :)

   நீக்கு
  5. யாரும் நம் நேமை பயன்படுத்த விடக்கூடாது .ஒரு நண்பி எங்க வீட்டுக்கு வராதா என் பேரை சொல்லி அவளது காதலனுடன் போயிருக்கா வீட்டுக்கு டைமுக்கு வராததால் அவங்கப்பா எங்க வீட்டுக்கு போன் பண்ண என் அம்மாவுக்கு செம கோபம் .உனக்கு இப்படிப்பட்ட நட்புகள் தேவையான்னு செம மண்டகப்படி :) நம்ம ராசி செய்யாத தப்புக்கு தண்டனைன்னு எழுதி ஒட்டி வச்சிருக்கு :))))
   அப்புறம் சொல்லிபோட்டேன் இனிமே என் பேரை யூஸ் பண்ணாதேனு ஸ்ட்ரிக்ட்டா

   நீக்கு
  6. ஏஞ்சல் என்னாது 6 ஆன் கிளாஸ்லயே பூசார் ரெக்கமெண்டேஷன் எல்லாம் கூட்டிட்டுப் போனாரா...ஓ அப்ப அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்ளோ பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய ஆள்!!! அதான் இப்ப கூட ட்ரம்ப் அங்கிள், மோடி அங்கிள், உங்க ஊர் ராணி எல்லாருக்கும் அஸிஸ்டென்டா இருக்காங்க!!!!...உங்களையும் அவங்களுக்கு செக் காக..ரெண்டு அர்த்தம்....(அப்பப்ப நீங்க அவங்களுக்கு ஜெர்ரி யாக கவுண்டர் செக்!!!!! ஹா ஹா ஹா ஹா)

   கீதா

   நீக்கு
  7. அதிரா சொல்லி இருக்கும் காதல் கதை படித்து நொந்துபோனேன். இதுபோன்ற பிஞ்சுக்காதல்களுக்கு திரைப்படங்களே முக்கிய காரணம்.

   நீக்கு
  8. அதிரடியின் நண்பி செய்தது பச்சை, சிவப்பு, மஞ்சள்னு எல்லாக் கலர்லேயும் துரோகம். மற்றபடி எனக்கு துரோகிகள் வெளியே அதிகம் இல்லை. வீட்டுக்குள்ளேயே தான்! :)))))))))) விபரமாகச் சொன்னால் ஆச்சரியமாக இருக்கும்.

   நீக்கு
 33. ஸ்ரீராம் சில நேரம் இப்படி தடங்கல் தடைகள் வரும் ஆனாலும் நாம் அதையெல்லாம் தாண்டி எப்படி சாதிக்கின்றோம் என்பதில் முழு கருத்தா இருக்கணும் .கொஞ்சம் சலிப்பு வந்தாலும் அப்செட்டாகிடும் .எல்லாம் இறைவன் விளையாட்டுன்னு நினைச்சுக்கோங்க .
  போன் சுவிட்ச் ஆஃப் செஞ்சி கூட கொண்டுபோக முடியாதா ? ..
  புது இடத்தில அதுவும் வேறே ஸ்டேட்டில் மெயில் திறந்தா சந்தேகம் வருமே :) இங்கே ஒரு தெரு தாண்டி இல்லைனா அப்பக்கத்து சிட்டியில் மெயில் திறந்தாலும் இப்படி செக்யூரிட்டி அலெர்ட் வரும் .அதிலும் கணவரின் பாஸிவ்வ்ர்டை அடிக்கடி மாற்றுவேன் .இவர் போகுற இடத்திலெல்லாம் மெயிலை கம்பியூட்டரில் திறக்க எனக்கு அலெர்ட் வரும் நோட்டிபிகேஷனில் :)
  82 வயது அம்மா பாவம் அவரையாவது யார் துணையுடனாவது உள்ளே விட்டிருக்கலாம் தரிசனத்துக்கு ..

  பதிலளிநீக்கு
 34. ஆ ,ஸ்ரீரங்கத்து தேவதைகள் ,24 ரூபாய் தீவு அப்ஸரா ,கரையெல்லாம் செண்பகப்பூ (இதை படிச்சது 8 ஆம் வகுப்பில் வீட்டில் அம்மா பைண்ட் பண்ணி வச்சிருந்தாங்க ) காயத்ரி ,கமிஷினருக்கு ஒரு கடிதம் ,கணயாழியின் கடைசி பக்கம் ,கனவுத்தொழிற்சாலை ,3 குற்றங்கள் ,3 நாள் சுவர்க்கம் ,,நைலான் கயிறு ,பிரிவோம் சந்திப்போம் ,பூக்குட்டி ப்ரியா ,இதெல்லாம் படிச்சிருக்கேன் :) சுஜாதா கதைகளில்

  பதிலளிநீக்கு
 35. வணக்கம் சகோதரரே

  திருப்பதி தரிசனம் என்றால், கொஞ்சம் கஸ்டந்தான். அதனால்தான் "அவன்" அழைக்கும் நேரத்தில்தான் எல்லாமே செட்டாகி அந்த ஒரு நிமிட தரிசனம் நல்லபடியாக நிறைவேறும் என்கிறார்கள் போலும்.! ஆனால் தாங்களும் இவ்வளவு போராட்டங்களுக்கு நடுவே நல்லபடியாக தரிசனம் கண்டு திருப்தி அடைந்திருப்பீர்கள் என நினைக்கிறேன். தாங்களும் பல இடங்களில் சிரமங்களை சிரித்துக் கொண்டே கடந்திருக்கிறீர்கள். தங்கள் எழுத்திலும் எங்களையும் சிரிக்க வைத்திருக்கிறீர்கள். அம்மாதான் பாவம்.. ஆங்காங்கே வேக நடை கஷ்டம். சென்ற வாரம் நான் வியாழன் பதிவுக்கு வரவிலலை. அதனால் விட்டுத் தொடர்ந்ததும் இப்போதுதான் கண்டேன்.

  சுஜாதா கதைகள் நீங்கள் குறிப்பிட்டுள்ள தில் சிலவற்றை படித்துள்ளேன். தாங்கள் கடைசியில் குறிப்பிட்டுள்ளதை படிக்கவில்லை.

  அபிநந்தன் நல்லபடியாக நாடு திரும்ப வேண்டுமென அனைவரைப் போலவும் நானும் வேண்டிக் கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. "அவன் அழைக்கும் நேரம்தான்"

   ஆமாம் அக்கா.. அப்படிதான் எல்லோரும் சொன்னார்கள்... சொல்கிறார்கள்! நடந்தால் அப்படி, நடக்காவிட்டால் இப்படி!!!

   நீக்கு
 36. அபிநந்தனை பாகிஸ்தான் விடுவிக்க போறதா செய்தி இங்கே பார்த்தேன் .எல்லா விஷஜயமும் நல்லபடியா நடக்க பிரார்த்திப்போம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவர் நம் நாட்டுக்குள் வரும் வரை டென்ஷந்தான் ஏஞ்சல் பிரார்த்திப்போம்....நமக்கே இப்படினா அவங்க குடும்பத்துக்கு எப்படி இருக்கும் இல்லையா...நினைத்துப் பார்த்தேன்...பிரார்த்தனை வலுக்கிறது.

   கீதா

   நீக்கு
 37. ஹாஹாஹா ஸ்ரீராம் அந்த மாணவன் நிறைய பேருக்கு அப்படி செய்திருக்காரா ..ஆனா எப்படி இப்டிலாம்னு வருந்தியிருப்பிங்க இல்லையா ..பெரிய பெரிய சம்பவங்கள் எல்லாம் நடந்திருக்கு எனக்கு எதையும் தாங்கலாம் ஆனா நம்பிக்கை துரோகம் நமக்கு கெட்ட பெயரை வாங்கி கொடுக்கும் நட்புக்கள் சே மோசம் ...
  எனக்கு நிறைய நடந்திருக்கு ரெண்டு /மூன்று வருஷம் முன்னாடி கூட அறியாமல் மாட்டியிருக்கிறேன்
  நமது பெயரை அவர்களது நன்மைக்காக யூஸ் செய்யமட்டும் விடவே கூடாதது .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நமது பெயரை அவர்களது நன்மைக்காக யூஸ் செய்யமட்டும் விடவே கூடாதது .//

   யெஸ் ஆனா ஏஞ்சல் அதுக்கு நமக்கு செம சாதுர்யம் வேனுமே!!! மீ க்கு அது இல்லாமல் பேக்கு மாதிரி மாட்டிக்குவேன்..இதெல்லாம் ரொம்ப வருஷம் முன்... எடுத்துச் சொன்னாலும் நம்ப மாட்டாங்க...அதுக்குப் பிறகு வாய் கப்சிப் தான்..ஹா ஹா ஹா ஹா...

   கீதா

   நீக்கு
  2. ஏஞ்சல்... அவன் நான்கைந்து பேரிடம் அப்படி வாங்கி ஓரளவு காசு பார்த்து விட்டான்! கெட்டிக்காரன். இப்போது என்னென்ன யார் யாரை புதுசு புதுசா ஏமாற்றிக் கொண்டிருக்கிறானோ... இல்லை திருந்தி நல்லவனாகிட்டானோ!

   நீக்கு
 38. கிரேசி எப்பவும் பார்த்தாலே sirikka vaikum முகம் .நானும் கணவரும் லுப்தான்ஸா எற காத்திருந்தோம் ஏர்போர்ட்டில் எங்களுக்கு அருகில் இவர்களின் full குழு சிங்கப்பூர் போக காத்திருந்தாங்க எனக்கு செம ஹாப்பி மொத்தபேரையும் பார்த்ததில் .இப்போ எத்தனை பேர் தெரிலா நாடக க்ரூப்பில்

  பதிலளிநீக்கு
 39. நம் அபிநந்தன் நேற்று பாகிஸ்தானிடம் மாட்டிக் கொண்டதிலிருந்து மனது பிரார்த்தனையில் இருந்தது. இப்போது இந்தியத் தாயின் வீரமகன் அபிநந்தன் நாளை விடுதலை ஆகிறார் என்ற செய்தி மனதிற்கு மிகவும் மகிழ்ச்சி தருகிறது. அவர் நம் நாட்டிற்குள் வருவது வரை கொஞ்சம் டென்ஷன் தான். பிரார்த்திப்போம்.

  உங்கள் திருப்பதி பயணம் மிகவும் சிரமமாகிப் போனது போல் உள்ளது. க்ளைமாக்ஸ் நல்லபடியாக சுபம் போட்டு முடியும் என்று நம்புகிறோம்.

  சுஜாதா அவர்களின் பதில் அம்சம்! அருமை!

  கிரேஸி மோகன் அவர்கள் தங்கள் இளம்பருவ கிரிக்கெட் விளையாடியது பற்றிய வர்ணனை சிரிக்க வைத்துவிட்டது.

  நீங்கள் பள்ளியில் ஏமாந்தது போல் நானும் ஏமாந்திருக்கிறேன். அதன் பிறகு இப்படியான அனுபவங்கள் உஷாராக்கிவிட்டாலும் சில சமயம் நம்மையும் மீறி நடக்கும் ஏமாற்றங்கள் தொடர்கின்றதுதான்.

  இந்த வாரம் உங்கள் கவிதைகள் எதுவும் இல்லையோ? ஸ்ரீராம்ஜி!

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கவிதையைத் தேடி என்னை நெகிழ்த்திய துளஸிஜிக்கு நன்றி.

   நீக்கு
 40. வணக்கம் சகோதரரே

  கிரேசி மோகனின் நகைச்சுவை மிகுந்த பேட்டியை ரசித்தேன்.

  தங்களது பால்ய பருவத்தில் சக மாணவன் அப்படி ஏமாற்றியது வருத்தம் நிறைந்த ஆச்சரியமாக இருக்குறது. அந்த வயதிலேயே பலரை இப்படி ஏமாற்றும் அளவுக்கு அறிவாளியாக இருந்துள்ளாரே...
  அந்த சமயத்தில் தங்களுக்கு மனவருத்தம் அதிகமாக இருந்திருக்கும். எனக்கும் இதே மாதிரி ஒரு சம்பவம், ஏழாவதோ, எட்டாவதோ படிக்கும் போது நடந்தது நினைவுக்கு வந்தது. அந்த காலத்தில் பாட புத்தகங்களை விற்று அந்த பணத்துடன் கூட பணம் போட்டு பழைய புத்தகங்களை வாங்கித் தானே படித்து வந்தோம். என்னிடம் வாங்கியப் பெண் பணம் தர தாமதமானதால், புத்தகங்களை விற்ற பெண் நெருக்கடி தர, வீட்டில் நீயே சாமர்த்தியமாக விற்றதற்கு பணத்தை கேட்டு வாங்கு என நச்சரிக்க, பட்ட பாடு.... நினைவுக்கு வந்தது.புதிதாக எப்போது வாங்கப் போகிறோம் என அப்போது தோன்றவேயில்லை. காரணம் பெற்றோர்களின் கஸ்டத்தை உணர்ந்தததுதான். இதில் முதல் பாடத்தையும், கடைசியையும், சிலவற்றில் விற்றவர்கள் கரைத்துக் குடித்திருப்பார்கள். நாமும் இந்த கொடுக்கல், வாங்கலில், முதல் பாடத்தை எங்கே கவனிப்பது? (சாய்ஸில் விட வேண்டியதுதான்.ஹா ஹா) இப்படியாக படித்து கிழித்தாகி விட்டது. இப்போது ப்ரீகேஜுக்கே வாங்கிய பணத்திற்கு ஏற்ப ஒரு புது புத்தக மூட்டையை முதுகில் சுமக்கிறோம். என் குழந்தைகளுக்கும், பள்ளியில் கொண்டு விடும் சமயங்களில் வாசனை நிரம்பிய புது புத்தகங்களை நான்அப்படித்தான் சுமந்தேன்.
  நான் படிக்கும் காலத்தில் அப்போது நடக்காதது தானாகவே நடந்தது. நினைவுகள் என்று நிறைய எழுதி விட்டேன் என நினைக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் அனுபவத்தையும் தெரிந்து கொண்டேன்.

   நீங்கள் புதிய பதிவிட்டிருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது.

   நன்றி கமலாக்கா.

   நீக்கு
 41. என்னாச்சு இன்றைக்கு கீதாக்காவை காணோம் !! பிஸி இல்லைனா பிரயாணமா ?

  பதிலளிநீக்கு
 42. கீதாக்கா உங்களை அதிரா மியாவ் தேடவேயில்லைக்கா அதையும் இங்கே பதிவு செஞ்சிடறேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர் அந்த 40+35 மற்றர்தானே?:) ஹையோ அதை ஆரம்பிச்சு வச்சதே நெல்லைத்தமிழன் தான்:)..

   நீக்கு
  2. "கீதாக்கா... கீதாக்கா... கீதாக்கா... "

   எங்கே காணோம்? யார் கூப்பிட்டாலும் ஆளைக் காணோம்! ஆனால் திங்கட்கிழமையே அன்றைய பதிவில் அவர் லீவ் சொல்லியிருந்த நினைவு!

   நீக்கு
  3. நான் திங்கட்கிழமையே லீவெல்லாம் சொல்லவில்லை ல்லவில்லை, லவில்லை, வில்லை, ல்லை, லை, ஐ, ............ திடீர்னு நேத்திக்கு வரமுடியலை! :)

   நீக்கு
  4. அதிரடிக்கு வம்பு இழுக்க ஆள் கிடைச்சால் போதுமே! எல்லோரையும் மறந்துடுவாங்க! :))) அதான் தேடலை! தேடினவங்களுக்கும், தேடாமலேயே காணோமேனு நினைச்சவங்களுக்கு நன்னி ஹை!

   நீக்கு
 43. க்ரேசியைப் பேட்டி கண்ட லதா ரகுநாதன் நம்ம முகநூல் நண்பர் ஜெயராமன் ரகுநாதனின் மனைவி தானே? அவங்க தான் க்ரேசி குடும்பத்தின் நீண்ட நாள் நண்பர் எனக் கேள்விப் பட்டிருக்கேன். எப்போவோ ரகுநாதனும் எழுதி இருந்த நினைவு. :)))) லதா பெயரைப் பார்த்ததும், க்ரேசி பேட்டியையும் பார்த்ததும் தோன்றிய எண்ணம்.

  பதிலளிநீக்கு
 44. மத்தப் பின்னூட்டங்களையும் பார்க்கணும். பார்ப்போம். முடியுமா இப்போனு தெரியலை! நிறைய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் இருக்குப் போல!

  அது சரி, டிக்கெட் புக் செய்த உடனேயே பிரின்ட் அவுட் எடுக்கணும்னு நினைவில்லையா?

  பதிலளிநீக்கு
 45. அருமையான ஒரு தலைப்பு தலைப்புக்கேற்ற தங்களின் தாங்கள் எழுதிய விதம் அருமை.
  அபிநந்தன் - எல்லோருடைய பிராத்தனையும் வீணாகவில்லை.

  பதிலளிநீக்கு
 46. நல்ல தொகுப்பு.

  பயண அனுபவங்கள் தொடரட்டும். மிக சுவாரஸ்யமான நடை.

  பதிலளிநீக்கு
 47. பத்வில் பல விஷயங்கள் எதற்கு பின்னூட்டமிடுவது ஒரே கன்ஃப்யூஷன் தரிசனம் ஆயிற்றா

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!