தங்கத் தவளைப் பெண்ணே சவடால் கதைப் போட்டியில் பங்கேற்று, எங்களை உற்சாகப் படுத்திய பதிவர்கள், வாசகர்கள் எல்லோருக்கும் எங்கள் நன்றி.
வோட்டெடுப்பில், பதிவான வாக்குகளில் பாதிக்கு மேல் பெற்று, பெரு வெற்றி பெற்ற, 'மீனாக்ஷி' எஸ் பி எஸ் - அவர்களுக்கு எங்கள் வாழ்த்துகள்.
வோட்டெடுப்பில், பதிவான வாக்குகளில் பாதிக்கு மேல் பெற்று, பெரு வெற்றி பெற்ற, 'மீனாக்ஷி' எஸ் பி எஸ் - அவர்களுக்கு எங்கள் வாழ்த்துகள்.
எங்கள் ஆசிரியர் குழுவினர் தேர்ந்தெடுத்த முதல் பரிசு கதைகளும், கதாசிரியர்களும், காரணங்களும்:
1) ரேவதி நரசிம்ஹன் என்கிற வல்லி சிம்ஹன் - ஐஸ் ப்ரேக்கர் - முதல் கதை எழுதியவர், போட்டியில் பங்கேற்ற முதல்வர்; முதல் கல்லை எறிந்தவர். நம்ம ஏரியா பதிவில் அதிகம் பங்கேற்றவர். சுட்டிகள்: பகுதி 1 , பகுதி 2
2) கீதா சாம்பசிவம். இவர் பதிவில் இருந்த நகைச் சுவையையும், போட்டி குறித்து இவர் எழுதிய பின்னூட்டங்களில் இருந்த நகைச் சுவையையும் வெகுவாக ரசித்தோம். சுட்டி இது இதுவும்
3) கணேஷ்: எங்களுக்குப் புதியவர். அவர் கதை எழுதி இணைப்பும் எங்களுக்கு அனுப்பிய பின்தான் - எங்கள் ஆசிரியர்கள் பலருக்கு இப்படி ஒரு சுவையான பதிவுகள் எழுதுபவர் இருக்கின்றார் என்பது தெரிந்தது. அதற்கு முன்பு நம்ப பின்னூட்டப் பெருமாள் ஆசிரியருக்கு மட்டும்தான் தெரிந்திருந்ததாம்! சுட்டி
4) கீதா சந்தானம்: இது நம்ப ஏரியா பதிவு போட்டிகளில் மிக்க ஆர்வமுடன் பங்கேற்று நிறைய படங்கள் அனுப்பிக் கொண்டிருப்பவர். நகைச் சுவையும், சீரியஸ் கதையும் சம அளவில் கலந்து கொடுத்திருக்கின்றார்.
5) அப்பாதுரை. இவர் கதைகளை தராசில் நிறுத்திப் பார்க்கின்ற தகுதி எங்கள் யாருக்கும் கிடையாது. இவர் இந்தப் போட்டியில் பங்கேற்றார் என்பதே - இவர் எங்களுக்கு அளித்த பரிசு. சுட்டி இது
6) வாசகர்கள் பெரும்பான்மை அளித்தது ஒரு புறம். கதையின் இறுதியில் 'அவரை' என்று முடிக்க வேண்டிய இடத்தில், அந்த வார்த்தைக்கு ஒரு புதிய டைமென்ஷன் கொடுத்திருந்தது மிகவும் சிறப்பு. எங்கள் ப்ளாக் பதிவில், ஏற்கெனவே 'சூப்பர் படைப்பாற்றல் கொண்டவர்' என்று தேர்ந்தெடுக்கப்பட்டவர், மீனாக்ஷி அவர்கள். சுட்டி இங்கே
குரோம்பேட்டைக் குறும்பன் போட்டிக் கதை பற்றிய பதிவாக ஒரு சிறு குறிப்பு மட்டும் எழுதி, (பஸ் டிக்கெட் குறிப்பு) அதை மட்டும்தான் அனுப்பி வைத்திருந்தார். அதை எங்கள் ஆசிரியர் ஒருவர்தான் விரிவாக்கம் செய்து, பதிவாக வெளியிட்டார். ஆதலால் - கு கு வுக்கு, பரிசு கிடையாது என்று முன்பே தீர்மானித்துவிட்டோம். நல்ல வேளை - வாக்களித்தவர்களும் கு கு வின் டெப்பாசிட்டை காலி செய்துவிட்டார்கள்! கு கு வுக்கும் இது மகிழ்ச்சியே - ஏன் என்றால், அவருடைய ஐடென்டிடி - (எங்கள் ஆசிரியர்கள் உட்பட) யாருக்கும் தெரிய வேண்டிய நிலைமை ஏற்படவில்லையாம் .... (அவருடைய சமீபத்திய மெயில் மூலமாக இதைக் கூறி இருக்கிறார்.)
பரிசு பற்றி முன்பு அறிவித்ததிலிருந்து சிறிய மாறுதல். ஆறு முதல் பரிசுகள். மேலே பட்டியலிடப்பட்ட ஆறு பேர்களுக்கும் பரிசு கொடுப்பது என்று தீர்மானித்து விட்டோம். பரிசுப் புத்தகத்தின் தலைப்புக்கும், குரோம்பேட்டைக் குறும்பன் எழுதிய போட்டிக் கதைத் தலைப்புக்கும் ஓர் ஒற்றுமை உள்ளது.
அது என்ன? (any guess?)
பரிசை இந்த மாத இறுதிக்குள், கொடுத்து விடுவோம். மேற்கண்ட ஆறு பேர்களில் சென்னையில் இருப்பவர்கள் அல்லது சென்னை விலாசம் கொடுப்பவர்களுக்கு, புத்தகத்தை நேரில் தருவதற்கு முயற்சி செய்கின்றோம். இந்தியாவுக்குள் இருக்கின்ற மற்ற விலாசத்திற்கு கூரியர் அனுப்புகின்றோம். வெளிநாடு வாழ் மக்கள் - (இந்த ஆறு பேரில்தான்!) எந்த (இந்திய) விலாசத்திற்கு புத்தகத்தை அனுப்பவேண்டும் என்று மெயில் எழுதித் தெரிவிக்கவும். (engalblog@gmail.com மின்னஞ்சலுக்கு தெரியப் படுத்தவும்.)
வாழ்த்துக்களுடன்,
ஆசிரியர்கள்,
எங்கள் ப்ளாக்.
