கடையில் தொங்கிய கல்கியை வாங்கிக் கொண்டு ஜபல்பூரில் ரயில் ஏறும்போது மணி இரவு 2.45.
அது பிலாஸ்பூரிலிருந்து இந்தூருக்கு மேற்கு நோக்கிச் செல்லும் வண்டி. சென்னை செல்ல, இடார்சியில் இறங்கி G T யில் ஏற வேண்டும்.
அது பிலாஸ்பூரிலிருந்து இந்தூருக்கு மேற்கு நோக்கிச் செல்லும் வண்டி. சென்னை செல்ல, இடார்சியில் இறங்கி G T யில் ஏற வேண்டும்.
என் இடுப்பில் முழங்கை ஊன்றியிருந்தவர் சற்றே காக்கை போலத் தலை சாய்த்து என்னுடன் கூடவே படிக்க முயற்சித்ததில் அவரும் தமிழர் என்று புரிந்தது. கொஞ்சம் இடைவெளி விட்டு கல்கியைக் கீழே வைத்தால் உடனடியாகக் கடன் கேட்கும் அபாயம் இருந்ததால், மெல்ல நிதானமாகப் படிக்கத் தொடங்கினேன்.
பயணங்களில் நாம் வாங்கும் பத்திரிக்கை, செய்தித் தாள்கள் நமக்குச் சொந்தமானவை அல்ல! நாம் சற்றே கை அயர்ந்து, கொஞ்சம் தாழ்த்தினால் காத்திருந்த கை ஒன்று அதைக் கேட்டு நீளும்.
சமயங்களில் அது கை மாறி, கைமாறி நம் அனுமதிக்குக் காத்திராமல் எங்கெங்கோ செல்லும். இது போன்ற அனுபவங்கள் நிறையவே உண்டு!
கொஞ்ச நேரம் சென்றிருக்கும்.