கேள்வி பதில்கள் :
நெல்லைத்தமிழன் :
1. இவ்வளவு awareness இருந்தும், இப்போது நாம் மனைவிக்கு சரிசமமான இடம் கொடுக்கிறோமா? உணவு தயாரிப்பு, ஓய்வு, பொழுதுபோக்கு, பயணம் என்று எல்லாவற்றிலும்?
# கொடுப்பதில்லை. அதிர்ஷ்ட வசமாக அவர்களும் அதைப் பொருட்படுத்துவதில்லை.
& பொதுவாகப் பார்த்தால், "இல்லை, இன்னும் முழுமையாக சரிசமமான இடம் கொடுக்கப்படவில்லை" என்பதே உண்மைக்கு நெருக்கமான பதில்.
நகர்ப்புறங்களிலும், கல்வியறிவு அதிகமான குடும்பங்களிலும், கணவன்-மனைவி இருவரும் பொறுப்புகளைப் பகிர்ந்து கொள்ளும் நடைமுறை அதிகரித்து வருகிறது. குழந்தை பராமரிப்பு, சமையல், பயணத் திட்டமிடல் போன்றவற்றில் கூட்டுப் பொறுப்பு உருவாகி வருகிறது.
எனவே, awareness சமத்துவத்தைப் பற்றி நமக்கு கற்றுக் கொடுத்திருக்கிறது; ஆனால் அந்த சமத்துவம் எல்லா குடும்பங்களிலும் முழுமையாக நடைமுறைக்கு வந்துவிட்டது என்று சொல்ல முடியாது.
2. ஒரு பயணம் அல்லது வெளியிடங்களுக்குச் சென்று வந்த பிறகு, ஆண்கள் பொதுவாக ஓய்வு எடுப்பதும், பெண்கள் உடனேயே வீட்டு வேலைகளைப் பார்க்க ஆரம்பிப்பதும் (அப்படி எதிர்பார்ப்பதும்) எதைக் காண்பிக்கிறது?
# ஆயிமாயிரமாண்டுகளாக இருந்து வரும் ஆதிக்க மனப்பாங்கு அவ்வளவு எளிதாக மறைந்து விடுமா ?
& வீட்டில் வேலைக்காரர்கள் இருந்தால் இந்தப் பிரச்சனை வராது. வேலைக்காரர்கள் இல்லாவிட்டாலும் க & ம பொறுப்புகளைப் பகிர்ந்துகொண்டாலும் பிரச்சனை வராது.
3. நிறைய உணவு தயாரிப்பு காணொளிகள், செய்முறைகள் ஊடகங்களில் வந்துவிட்டதால், பாரம்பர்ய உணவுச் சுவையை வரும் தலைமுறை இழந்துவிடுமா?
# பாரம்பரிய உணவுச்சுவையை அப்படியே நிலை நிறுத்தி வணிகப் படுத்தப் பெருமுயற்சிகள் எடுக்கப் பட்டு வருகின்றன.
& அப்படி சொல்லிவிட முடியாது.
உணவு காணொளிகள் மற்றும் சமூக ஊடகங்கள் காரணமாக:
மறைந்து போகக்கூடிய பல பாரம்பரிய சமையல் முறைகள் பதிவாகி பாதுகாக்கப்படுகின்றன.
இளம் தலைமுறையினர் தங்கள் ஊர் உணவுகளைப் பற்றி மீண்டும் அறிந்து கொள்கிறார்கள்.
அரிய வகை அரிசிகள், சிறுதானியங்கள், பாரம்பரிய காய்கறிகள் போன்றவற்றின் பயன்பாடு பற்றி அறிந்துகொள்ள யு ட்யூப் போன்ற ஊடகங்கள் உதவுகின்றன.
சென்ற வாரம் என் உதவியாளரிடம், பருப்பு உருண்டை மோர்க் குழம்பு செய்ய முடியுமா என்று கேட்டேன். உடனே யு ட்யூப் பார்த்து பிரமாதமாக செய்தார். பல வருடங்களுக்கு முன் சாப்பிட்ட ப மோ கு - யு ட்யூப் உபயத்தால் எனக்குக் கிடைத்தது!
4. முழுமையாக இனிப்பை ஒதுக்கிவிட்டால் டயபடீஸ் வராது என்பதற்கு ஏதேனும் உத்தரவாதம் உண்டா?
# இருந்தால் கெடுதல் செய்யும். இல்லாவிட்டால் பயமில்லை.
& diabetes ஒரு பரம்பரை வியாதி என்று சொல்கிறார்கள். என் பெற்றோருக்குக் கிடையாது. எனக்கும் கிடையாது. நான் இனிப்பைக் கண்டால் பயப்படாமல் சாப்பிடுவேன்!
5. ஒரு வீட்டிற்குச் செல்லும்போது இனிப்பு, பழங்களை ஏன் கொண்டு செல்கிறோம்? ஏன் மிக்சர் போன்ற கார வகைகளைக் கொண்டு செல்வதில்லை? இயல்பாகவே இனிப்புதான் சிறப்பு என்ற நம் எண்ணம் காரணமா?
# என் இனிய நண்பர் என்று தானே சொல்கிறோம் ? மிகப் பெருமளவு விரும்பப்படும் சுவை இனிப்பு தானே. இதுதான் காரணம்.
& இப்படி இருக்கவேண்டாம் என்றுதான் நான், நீங்கள் என் வீட்டிற்கு வந்தபோது கார வகை மட்டும் கொடுத்தேன்!
= = = = = = = = = = = = =
படமும் பதமும் :
நெல்லைத்தமிழன் :
சரோஜாதேவி பகுதி 03. " நெற்றியில் சிறு காயம்!"
பாபா கொண்டு வந்த ஜாதகத்தை நோட்டமிட்டான் நாநா.
' பிறந்த ஊர், நேரம், நாள், மாதம், வருடம் எல்லாவற்றையும் துல்லியமாக எழுதி வைத்துள்ளார் உங்க அப்பா பாலகுரு' என்றான் நாநா.
" என் அப்பா பேரு இதுல இருக்குதா? "
" இல்லை. "
" ஆனா உங்க ஆதார் கார்டுல இருக்குதே! "
" அதை நீங்க எப்போ .. ஆமாம் ஏற்கெனவே சொன்னீங்களே - ஆனாலும் நீங்க அங்கே எப்படி .. .. "
" அதெல்லாம் அப்புறம் சொல்றேன். இப்போ இங்கே வந்து, சமத்தா என் பக்கத்துல உட்காருங்க. நான் உங்களுக்கான சரோஜா மெமரி கார்டை calibrate செய்யப்போகிறேன். உங்க இடது கையில ஒரு வாட்ச் போன்ற கருவியைக் கட்டுவேன். உங்கள் வலது கையில் இந்த பிரஸ் பட்டன் கொடுப்பேன். அதை என் கம்ப்யூட்டரோடு இணைப்பேன். "
" அப்புறம்?"
" நான் சொல்லும்போது உங்க இடது கையில் உள்ள வாட்ச் அமைப்பில் ஸ்டார்ட் பட்டன் அமுக்கிவிட்டு கவனமாக இருங்கள். அந்த வாட்ச்ல திடீரென்று ஒரு அதிர்வு வரும்போது வலது கையில் உள்ள பிரஸ் பட்டனை அமுக்குங்க. அவ்வளவுதான். "
" சரி "
பாபா கையில், தான் சொன்ன கடிகார அமைப்பைக் கட்டினான் நாநா. வலது கையில் பிரஸ் பட்டன் கொடுத்து, அதிலிருந்து வருகின்ற cable யுஎஸ்பி இணைப்பை தன் லாப்டாப்பில் இணைத்தான். " ரெடியா இருங்க"
நாநா தன்னுடைய லாப்டாப்பில் ஏதோ சில செட்டிங்ஸ் செய்தான்.
பிறகு சொன்னான் : " ஸ்டார்ட்"
பாபா தன் வாட்ச் அமைப்பில் ஸ்டார்ட் என்ற பட்டனைத் தட்டிவிட்டு காத்திருந்தான். சரியாக 195 வினாடிகளில் அதிர்வு தெரிந்தது. உடனடியாக பிரஸ் பட்டனை அமுக்கினான்.
" ஓ கே - நீங்கள் பிறந்த - அதாவது உங்கள் இதயத் துடிப்பு ஆரம்பித்த நேரம் வினாடி சுத்தமாகப் பதிவு செய்துவிட்டேன். பிரஸ் பட்டனை இங்கே கொடுங்கள். நீங்கள் பிறந்த நேரத்தை உங்கள் சரோஜா மெமரி கார்டில் பதிவு செய்து, உங்களுக்கான பிரத்யேக 256 gb மெமரி கார்ட் ஒன்றை பத்து நிமிடங்களில் தயார் செய்கிறேன்." என்று சொல்லி பாபா கைகளில் இருந்தவற்றை வாங்கிக்கொண்டான் நாநா.
தன்னுடைய லாப்டாப் பையிலிருந்து வேறு ஒரு சிறிய கருவியை வெளியில் எடுத்தான். "இதுதான் சரோஜா மெமரி கார்ட் மேக்கர். இதில் ச மெ கா 256 (SMC 256) உருவாக பத்து நிமிடங்களுக்கு மேலே ஆகும். " என்று சொல்லி தன்னுடைய லாப்டாப்புடன் மெமரி கார்ட் மேக்கர் இணைத்து, ஏதோ சில பட்டன்களை தட்டினான். கம்ப்யூட்டர் இயங்கத் தொடங்கியதும், கொஞ்சம் ஓய்வாக சுற்றிலும் நோட்டமிட்டான் நாநா.
பாபா தெருப்பக்கம் இருந்த ஜன்னல் வழியாக எதையோ பார்த்துக்கொண்டிருந்தான்.
" எதிர் வீட்டில் யாரைப் பார்க்கிறீர்கள் ? வீணாவா அல்லது விமலாவா ?" என்று கேட்டான் நாநா.
திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தான் பாபா.
" வீணா, விமலா பேரெல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும்? நான் பார்த்தது விமலாவை." என்றான் பாபா.
" அதான் அவங்க பேர் எல்லாம் இந்த பகுதியின் வாக்காளர் பட்டியலில் உள்ளதே! வீணா வயது 26, விமலா வயது 22. அப்பா பெயர் ஜெயராமன். " என்றான், நாநா.
" வாக்காளர் பட்டியல் உங்களுக்கு எப்படி கிடைத்தது? "
" இதெல்லாம் என்ன கேள்வி? தேர்தல் கமிஷன் ஆபீஸ்ல வேலை பார்க்கும் ஒருவர் மூலமாக சென்னை மாநகர வாக்காளர் பட்டியல் சி டி யை தந்திரமாக கடத்தி வந்து, என் லாப்டாப்புக்கு காப்பி செய்துகொண்டு திருப்பிக் கொடுத்துவிட்டேன். இப்போ உங்க ச மெ கா தயார் ஆகிவிட்டது. ஒரு டெஸ்ட் ரன் செய்து பார்க்கலாமா ?"
" சரி" என்றான் பாபா.
ச மெ கா வை (SMC256) வேறு ஒரு வாட்ச் போன்ற கருவியின் உள்ளே பதித்து, அதை பாபாவின் இடது கை மணிக்கட்டு அருகே உள்பக்கத்தில் - நாடித் துடிப்பு தெரியும் இடத்தில் வாட்ச் பகுதி வரும் வகையில் அதைக் கட்டிவிட்டான் நாநா.
அந்த சதுரமான வாட்ச் அமைப்பில் நான்கு ஓரங்களிலும் மைக்ரோ பட்டன் இருந்தது.
O = Power On
A = Analyse
P = Predict
Off = Power off.
என்று விளக்கம் சொன்னான் நாநா.
" இப்போ பவர் ஆன் பட்டன் அமுக்குங்க. "
செய்தான் பாபா.
"இப்போ A பட்டன்"
அமுக்கினான் பாபா.
" இரவு எத்தனை மணிக்குத் தூங்கப் போவீர்கள்?" என்று கேட்டான் நாநா.
" பத்து மணிக்கு " என்றான் பாபா.
தன்னுடைய லாப்டாப்பில், 'இரவு பத்து மணி வரை' என்று set செய்தான் நாநா.
சில நிமிடங்கள் கழித்து " இப்போ P பட்டன்" என்றான் நாநா.
ஒரு நிமிடம் கழித்து " பவர் ஆஃப் செய்யுங்க" என்றான் நாநா.
பவர் ஆஃப் செய்தான் பாபா.
தன்னுடைய லாப்டாப் திரையை சற்று நேரம் கவனித்த நாநா, " உங்கள் வீட்டில் handy plast இருக்கா ? " என்று கேட்டான்.
" இருக்கு."
" டெட்டால் ?"
" இருக்கு "
" எடுத்து தயாராக வைத்துக்கொள்ளுங்கள். இன்னும் அரைமணி நேரத்திற்குள் உங்கள் நெற்றியில் சிறு காயம் ஒன்று ஏற்பட வாய்ப்பு இருக்கு " என்றான் நாநா.
" இதுதான் சரோஜா ஜோஸ்யமா ? -ஏதோ படத்துல விவேக் பார்க்கும் 'சிவகாமி ஜோஸ்யம் - தண்ணியில கண்டம்' போல எதையோ சொல்றீங்களே !" என்றான் பாபா.
ஆனாலும் உள்ளே சென்று மருந்து அலமாரியிலிருந்து, ஹேண்டி பிளாஸ்ட், டெட்டால் சிறிய பாட்டில் ஆகியவைகளைக் கொண்டு வந்து, எதிரே மேஜை மீது வைத்தான்.
" நான் சொன்னது சரோஜா மெமரி கார்ட் மூலம் உங்கள் இன்றைய அதிர்வு விவரங்களின் அடிப்படையில் அடுத்த பத்து மணி நேரத்திற்கு உங்களுக்கு ஏற்படப்போகும் நிகழ்வுகளின் ஒரு சிறு interpolation prediction "
" சரி. அதையும் பார்த்து விடுகிறேன். இப்போ கொஞ்சம் எதிர் வீட்டு வம்பு கதை சொல்கிறேன் " என்றான் பாபா.
" சொல்லுங்க பாபா " என்றான் நாநா.
(தொடரும்)
இன்னமும் பிளாக்கிற்கு யாரும் வரலையா?
பதிலளிநீக்குபிரார்த்தனை செய்பவரையும் காணோமே
அதானே!
நீக்குஇப்படி இருக்கவேண்டாம் என்று காரம் கொடுப்பதை இனிப்பு பிரியனான என்னிடமிருந்து ஏன் ஆரம்பித்தீர்கள்?
பதிலளிநீக்கு:))))
நீக்குஎங்களுக்கு பருப்புருண்டை மோர்குழம்புதான் தரலை. எந்தக் காணொளி என்று என்னிடம் பகிரலாமே
பதிலளிநீக்குபகிர்கிறேன்.
நீக்குதொடர்கதை தேவையான நீளத்தில் இருக்கிறது.
பதிலளிநீக்குஅழகிய படம் உங்கள் கலையார்வத்தை (ஜொள் அல்ல ஹிஹி) காண்பிக்கிறது
ஹா ஹா ஹா அது...
நீக்குபடம்? அதீத ஜோடனையாகத் தெரியவில்லை? AI- யை கையாண்டவர் (அதைச் செய்-- இதைச் செய் என்று) செம பெண்டெடுத்து விட்டார் போலிருக்கு.
பதிலளிநீக்குமுழுப் பதிவில் இந்தப் பெண் ஜீவி சார் மனதைக் கவர்ந்துவிட்டாரே
நீக்குஆஹா ! விமலா வாழ்க.
நீக்குஎதற்கும் வீணா வரட்டும். பிறகு தீர்மானிக்கலாம், நெல்லை.
நீக்குவீணா...வா, விரைந்து வா!
நீக்குவீணா கெட்டபேர் வாங்காம வீணா விரைந்து வா...!
நீக்கு:))))
நீக்குஆதார் கார்டில் பாபா என்றா பெயர் இருக்கிறது?
பதிலளிநீக்குஎதற்கும் சரி பாத்க்கவும்.
ஆதார் கார்டில் இருக்கும் பெயரை நாநா இதுவரை கதையில் சொல்லவில்லை.
நீக்குகுழந்தை பிறந்த நேரத்தில் இல்லை, அது கர்ப்பத்தில் இருக்கும் பொழுதே அதற்கு இதயம் துடிக்க ஆரம்பித்து விடும் என்று அந்த நாநா-விடம் சொல்லிடுங்க-- சரியா?
பதிலளிநீக்குஆம் நீங்கள் சொல்வது சரி. குழந்தையின் அதிர்வெண் கர்ப்பத்தில் இருக்கும் போது அம்மாவின் அதிர்வெண்ணிலிருந்து வேறுபடாது. தொப்புள் கொடி இணைப்பு துண்டித்த பின்+ மூச்சு முதல் முறையாக விடத் தொடங்கும் போது வேறுபட ஆரம்பிக்கும். நாநா சார்பில் நன்றி!
நீக்குகுழந்தையின் அதிர்வெண் கர்ப்பத்தில் இருக்கும் போது அம்மாவின் அதிர்வெண்ணிலிருந்து வேறுபடாது. //
நீக்குகௌ அண்ணா, என்னதான் பனிக்குடம் அதுஇது என்று குழந்தைக்குப் பாதுகாப்பு இருந்தாலும், சில சத்தங்கள், 85 டெசிபல் எல்லாம் குழந்தையை பாதிக்கும். அதன் செவித்திறன் வளரும் மாதங்கள் 5 மாதத்திலிருந்து 6 ஆம் மாதத்திற்குள் டெசிபல் கூடுதலான சத்தங்கள் கேட்டால் பிறவிச் செவிடாக வரவும் வாய்ப்புண்டு. மன அழுத்தம், இதயத் துடிப்பையும் கூட்ட வாய்ப்புண்டு.
அதனால்தான் கர்பகாலத்தில் மிகவும் அமைதியான சூழல் பரிந்துரைக்கப்படுகிறது. நல்ல மெல்லிய மனதிற்கு இசைவான இசை கேட்கவும் சொல்லப்படுகிறது.
கீதா
முருகா சரணம்
பதிலளிநீக்குசரணம் முருகா சண்முகா
நீக்குநலமே வாழ்க
பதிலளிநீக்குவாழ்க வாழ்க
நீக்குஅர்ஜண்ட்: பாபா -- நாநா. இதென்ன ரெண்டு எழுத்து பெயர் குழப்பம்?
பதிலளிநீக்குபாபாவிடம் சந்திக்க நேரம் கேட்டு அவன் வீட்டிற்கு நாநா வருகிறான். சரியா?
அதற்கு மேல் தான் குழப்பம் ஆரம்பிக்கிறது.
பாபா கொண்டு வந்த ஜாதகம் -- அப்போ வந்தது துப்பறியும் நிபுணன் பாபாவா?
நா நா
உங்களுக்கு என்ன குழப்பம் என்று எனக்கு தெரியவில்லை.
நீக்குசுருக்கத்தை விட்டு கதையை இணைப்பு மூலம் முழுவதுமாகப் படிக்கவும்.
நீக்குமுழுமையாகப் படித்ததும் தான் இந்தக் குழப்பமே முழுமை அடைந்தது.
நீக்குநாநா-வின் பெயரை நாராயணன் என்று இனி பதியவும். வாசிப்பவர் நிம்மதி பெருமூச்சு விடுவர்.
இரண்டாம் பகுதி இறுதி இது: // ந்த சரோஜா கார்டை ஒரு analyser gadget ல போட்டு உங்கள் பிறந்த தேதி, பிறந்த இடம், பிறந்த நேரம் எல்லாவற்றையும் துல்லியமாக கொடுத்துவிட்டால், உங்களுக்கான அடிப்படை அதிர்வு எண் (vibration number ) தெரிந்துவிடும். அதன் அடிப்படையில் உங்கள் நிகழ்காலம், எதிர்காலம் எல்லாமே கணித்து சொல்ல முடியும். "
நீக்கு" அப்போ கொஞ்சம் இருங்க. நான் உள்ளே போய் என்னுடைய ஜாதகத்தைக் கொண்டுவருகிறேன். அதில்தான் என்னுடைய பிறந்த நேரம் எல்லாம் இருக்கும். "
" சரி. கொண்டு வாங்க பா பா. "//
இதில் குழப்பம் எதுவும் இல்லை.
காலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
பிரார்த்தனைக்கு நன்றி.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்று மேலே முதல் கருத்தில் சகோதரர் நெ. தமிழர் குறிப்பிட்டபடி சற்று வர தாமதமாகி விட்டது . (அதற்கு நேற்றைய பதிவுக்கு நான் மட்டுமே தாமதமின்றி வந்து வந்து சற்று போரடித்து விட்டேனோ., என்ற எண்ணம் மட்டுமல்ல..! சகோதரி கீதா ரெங்கன் அவர்களின் பதிவின், இயற்கை வனப்பிற்கும், அவர் குறிப்பிட்ட பீமநேரி கோவில் அன்னையின் அற்புதமான செயலுக்கும், கட்டுண்டு சிறிது நேரம் அங்கேயே தங்கி இருந்து விட்டேன். மன்னிக்கவும். இப்போது எபியின் பதிவை படித்து விட்டு வருகிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி.
நீக்குமுழுமையாக இனிப்பை ஒதுக்கிவிட்டால் டயபடீஸ் வராது என்பதற்கு ஏதேனும் உத்தரவாதம் உண்டா? //
பதிலளிநீக்குபெரிய NO. இது சும்மா ஒரு myth. நம் உடம்பு நாம் உட்கொள்வதை (இனிப்பு அல்ல) காய்களானாலும், சாதம், சப்பாத்தி இவற்றில் இருக்கும் சர்க்கரையை சரியாக ப்ராஸஸ் செய்ய முடியலைனா சர்க்கரை நோய் வர வாய்ப்புண்டு. இன்சுலின் ரெஸிஸ்டன்ஸ் பொருத்து.
கீதா
diabetes ஒரு பரம்பரை வியாதி என்று சொல்கிறார்கள். என் பெற்றோருக்குக் கிடையாது. எனக்கும் கிடையாது. நான் இனிப்பைக் கண்டால் பயப்படாமல் சாப்பிடுவேன்! //
பதிலளிநீக்குகௌ அண்ணா அது மட்டும் காரணமல்ல. உங்கள் மெட்ட பாலிஸம் இந்த விஷயத்தில் சரியா இருக்கு அவ்வளவுதான். நீங்கள் சாப்பிடுவதை உடம்பு சரியா ப்ராஸஸ் செய்ய்து ப்ளஸ் இன்சுலின் ரெஸிஸ்டன்ஸ்
கீதா
அப்படியா! நன்றி.
நீக்கு& இப்படி இருக்கவேண்டாம் என்றுதான் நான், நீங்கள் என் வீட்டிற்கு வந்தபோது கார வகை மட்டும் கொடுத்தேன்!//
பதிலளிநீக்குஹாஹஹாஅ...நான் ஸ்வீட்டுங்கோ!!!
கீதா
ஆமாம், நான் கொடுத்தது non-sweet!
நீக்குநெல்லை முதல் படம் செம. பார்க்கவே கவர்கிறதுஅத்தனையும் அள்ளிப் போக்குக் கொண்டுவிடலாம்ன்ற மாதிரி.
பதிலளிநீக்குநம்ம ஊர்ல உணவுத்தரக்கட்டுபாடு சுத்தமா இல்லை, நெல்லை. அதுதான் காரணம். சட்டம் வலுவாக இல்லை. மக்களுக்காக மக்கள்தான் எங்களுகு முக்கியம்னு வாய் கிழிய பேசும் எந்த அரசும் அதைப் பத்திக் கவலைப்படலை.
Organic, zero maida, helathy, No oil, No transfat என்று கடைகளில் வரும் எந்தப் பொருளும் உண்மை கிடையாது. இதை ஏன் fssai ஏன் கண்டு கொள்ளவில்லை? எல்லாப் பொருளும் fssai முத்திரை குத்திக் கொண்டு வருவதில்லையே...அப்படியே குத்தப்பட்டவைகளிலுமே கூடச் சந்தேகம் வரும் அளவிற்கு நம் ஊர் சட்டங்கள் இருக்கின்றனவே. எப்ப நமக்கு சட்டத்தின் மீது முழு நம்பிக்கை வரும்படி ஆட்சி அமைகிறதோ அப்பதான்...
கீதா
கீதா
வீணா ஏன் விமலாவைப் பார்க்கற பாபா...இந்த நாநா என்னவோ ஆளு போல இருக்கான்...மாட்டிக்காத பாபா...துப்பறிவாளன் உனக்குக் கண்டுபிடிக்க முடியலையா!!!! - ஹிஹிஹி
பதிலளிநீக்குகீதா
:))))
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய கேள்வி பதில்கள் அனைத்தும் எப்போதும் போல் அருமை.
இப்போது என்றில்லை... அப்போதே பல குடும்பங்களில் கணவன் மனைவி இருவருமே சம பங்கீடாக இல்லத்தின் வேலைகளை பகிர்ந்து செய்வது பழக்கமாகி விட்டதே..!
டயபடீஸ் பற்றி விளக்கம் தந்த சகோதரி கீதா ரெங்கனுக்கு நன்றி. எது எது எப்ப வர நினைக்கிறதோ, அது அது அப்போது வந்தே தீரும். நல்ல பலன்கள் என்றில்லை..! உடல் நோய்களும், சுக துக்கங்களும் அப்படித்தான்.! எதற்குமே நம் முயற்சியென நாம் ஆனந்தப்படுவோம். ஆனால், அது நம் விதியை ஒட்டி இறைவன் வகுக்கும் வழி.
சகோதரர் நெல்லைத் தமிழர் அவர்கள் பகிர்ந்த படங்கள் நன்றாக உள்ளது. இத்தனைப் பழங்களின் வகையை இப்போதுதான் பார்க்கிறேன். நன்றி அவருக்கு.
தங்களின் கதைப்பகுதி நன்றாகப் போகிறது. ஹேண்டி பிளாஸ்டர், டெட்டால் இவற்றிற்கு எதிர் வீட்டு வம்புதான் துணைச் செய்யுமோ .? அதுதான் இங்கு விதி என்பது. ஜோதிடத்தின் விளைவை அறிய காத்திருக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
விளக்கமான கருத்துரைக்கு நன்றி.
நீக்குஇன்றைய கேள்வி பதில்கள் அருமை.
பதிலளிநீக்குபழங்கள் படம் சாப்பிடத் தூண்டுகிறது.
கதைப்பகுதி கண்டோம் . வீணா, விமலா எல்லோரும் வருகிறார்கள் .....என்ன திருப்பமோ ?.
சாத்திரம் பலிக்குமா ? அடுத்த .....தொடருக்கு காத்து இருக்கிறோம்.