புதன், 1 மே, 2019

புதன் 190501 : பொன்னியின் செல்வனில் உங்களைக் கண்டதுண்டா?


குறள் : 
இரவார் இரப்பார்க்கொன்று ஈவர் கரவாது
கைசெய்தூண் மாலை யவர்.


கையால் தொழில் செய்து, உணவு தேடி உண்ணும் இயல்புடைய தொழிலாளர், பிறரிடம் சென்று இரக்கமாட்டார், தம்மிடம் இரந்தவர்க்கு ஒளிக்காமல் ஒரு பொருள் ஈவார்.
எல்லோருக்கும் இனிய தொழிலாளர் தின வாழ்த்துகள்! 

எங்கள் சென்ற வாரக் கேள்வியாகிய,

உங்கள் வாழ்க்கையில் நீங்க கடந்து வந்த நாட்களில், ஏதோ ஒரு நாளை, திரும்ப கொண்டுவரலாம் என்றால், நீங்கள் திரும்பக் கொண்டு வர நினைக்கின்ற நாள் எது? ஏன்? 




என்பதற்கு 

விவரமாக பதில் அளித்து, கருத்துப் பரிமாற்றங்கள் செய்த 

கீதா சாம்பசிவம், நெல்லைத்தமிழன், வல்லிசிம்ஹன், கீதா ரெங்கன், பானுமதி வெங்கடேஸ்வரன் ஆகியோருக்கு எங்கள் மனமார்ந்த நன்றி! 

நெல்லைத்தமிழன் : 

நான் கனவு காணும் சமயம், (எங்க அப்பாவுடன் சந்திப்பது போன்றோ இல்லை முக்கியக் கடவுகளோ), போட்டோ எடுக்க முயல்வேன். கேமரா ஆபரேட் பண்ணாது. எவ்வளவு அமுக்கினாலும் படம் விழாது. இது எப்போதும் நடக்கும். என்ன காரணமாயிருக்கும்?


$ ஏதோ ஒரு செய்கை.  மறுபடி மறுபடி முயற்சிக்கிறோம்; ஆனால் ஏதோ ஒரு தடங்கல். இது அனைவருக்கும் வரும் கனவா சிலருக்கு மட்டுமா என்று தெரியும் அளவுக்கு ஞானம் இல்லை.  ஆனால் அப்படிப்பட்ட கனவுகள் வரும்போது நாம் செய்யவேண்டிய ஏதோ ஒரு முன்னேற்பாடு நிறைப்பெறவில்லை என்றாகியிருக்கிறது.

# சிக்மண்ட் ஃப்ராய்டு இப்படிச்சொல்லக்கூடும்: 
  
அப்பாவை  அவர் வாழ்நாளில்  சரிவர கவனித்துக் கொள்ளவில்லை அதை இப்போது சரி செய்ய இயலாது எனும் ஆதங்கத்தின் வெளிப்பாடு இந்தக் கனவு.

என்னைக் கேட்டால், "எனக்குத் தெரியாது" !

& உங்களுக்கு கனவுகள் கூட சஸ்பென்ஸ் சேர்ந்து, சுவாரஸ்யமாக வருகிறது என்று தெரிகிறது. 
பழங்காலத்தில் வந்த ஒரு கேமரா விளம்பர வாசகம் ஒன்று நினைவுக்கு வருகிறது! " Shoot someone you love! " 



கீதா சாம்பசிவம் : 

1) இப்போது திருமணம் ஆகாமல் பல "முதிர்கன்னர்கள்" இருப்பதற்கு உண்மையான காரணம் எது என நீங்கள் கருதுகிறீர்கள்?

$ இருபாலரும் வருமானம் போதாத கவலையில் தீர்மானத்தை தள்ளிப்போட்டு வயதாகிவிடுவதனால் என்று தோன்றுகிறது.

#  சம்பாதிக்கிற மகன் ஆதரவு குடும்பத்துக்கு அவசியமாக இருக்கிறது. மணமான பின் அது தரிக்காது எனும் அச்சம்.

நட்சத்திர /ஜாதக அமைப்பு காரணமாக வாய்ப்புகள் நழுவுகின்றன.

என்ன காரணத்தினாலோ பிள்ளைக்கு யாரையும் பிடிக்கவில்லை.

கல்யாணம் கால்விலங்கு என  நினைக்கிறான்.

வழுக்கை, கருப்பு, குட்டை-நெட்டை என விலக்குவர் என்று அச்சம்.
பெரும் படிப்புக்கு இணையான தகுதி உத்யோகம் பெண்ணுக்கு  இல்லை. 

பெரிய்ய இடத்து சம்பந்தம் வேண்டும் என்ற பேராசை.

பெண் வெளிநாடு செல்ல விருப்பம் இல்லை (அல்லது இந்தியா திரும்ப)

தன் காதலை சொல்லத் தயக்கம்.

பொறுப்பற்ற பெற்றோர். 

இப்படி எவ்வளவோ !

& கொஞ்சம் சிக்கலான கேள்விதான். இந்தக் காலத்தில், மணப்பெண் தரப்பு எதிர்பார்ப்புகள் மிக மிக அதிகமாகிவிட்டன என்பது ஒரு முக்கிய காரணம். 

சில ஆண்டுகளுக்கு முன் நான் பெங்களூர் பார்க்கில் சந்தித்த ஒரு நண்பர், தன் பையனுடன் இங்கே வசிப்பதாக கூறினார். பையனுக்கு அப்போ நாற்பது வயது. 'அவன் திருமணம் செய்துகொள்ளவில்லை' என்றார். 'ஏன்' என்று கேட்டேன். 'அது என்னவோ தெரியவில்லை; வேண்டாம் என்கிறான்' என்றார். 

நெருங்கிய உறவினர் ஒருவரின் பையனும் கிட்டத்தட்ட இதே நிலைதான் - 'திருமணம் வேண்டாம்' என்கிறான். ஏன், எதற்கு என்ற கேள்விகளுக்கெல்லாம் சரியான பதில் கிடைக்கவில்லை. 

மனோதத்துவ நிபுணர்கள் உதவியுடன்தான் இந்த சிக்கல்களை தீர்க்க இயலும் என்று தோன்றுகிறது. 

2) பெண்கள் இப்போதெல்லாம் திருமண வாழ்க்கையில் நிபந்தனைகள் பல போடுகின்றனர். அது சரியா? எங்க சொந்தத்திலேயே ஒரு பெண் நாத்தனார் இருக்கக் கூடாது என நிபந்தனை போட்டு அப்படி வந்த ஒரு பையரையே திருமணமும் செய்து கொண்டாள். இது சரியா?



$ நிபந்தனை போடுபவர்கள்  அவை நிறைவேறிய பின் திருப்தியாக இருக்கிறார்களா?

# சரி இல்லைதான். ஆனால், அவள் அப்படிச் சொல்லக் காரணம் என்ன என ஆராய்வது நல்லது. 


3) இப்போதைய பெற்றோர் பெரும்பாலும் ஒரே குழந்தையுடன் நிறுத்திக் கொள்கின்றனர். இது சரியான முடிவா? என்னைப் பொறுத்தவரை முதல் குழந்தைக்குத் தாய் தந்தையர் அளிக்கும் மிகப் பெரிய பரிசே அதற்கு ஓர் தம்பியோ, தங்கையோ கொடுப்பது தான் என்னும் கருத்து! இது சரியானதா?



$ நாங்கள் பெரீய்ய்ய கூட்டுக்குடும்பத்தை சேர்ந்தவர்கள்.  இருப்பினும் இளைய தலைமுறைகள் இரண்டுக்குப்பின் வேண்டாம் என்பதிலிருந்து ஒன்றே போதும் என்பதில் தீவிரமாக இருக்கிறார்கள்.
ஒரு வகையில் ஜனத்தொகை கட்டுப்பாட்டுக்குள் வரும் என்றாலும் வருங்காலத்தில் லீவு எடுக்க சாக்குகள் சொற்பமாகிவிடும்! பின்னே என்ன! சித்தப்பா, பெரியப்பா, அத்தை, பெரியம்மா, சின்னம்மா எல்லோரும் அரிதாகி விடுவர். ஒற்றைக்குழந்தைகள் அடுத்தவரை அனுசரித்துப் போக சிரமப்படுவதும் ஒரு காரணம்.

# குழந்தைகளுக்கு உடன்பிறப்புகள் தேவைதான். 
முன்பு மாதிரி வத வத என்று கு. பிறப்பதில்லை. லைஃப் ஸ்டைல் எஃபெக்ட்.
தற்காலத்தில் குழந்தைகளை சிறந்த வழியில் வளர்க்க எக்கச்சக்க செலவு பிடிக்கிறது.

ஒன்றே போதும் என்பது தீவிர கு.க பிரசாரத்தின் தாக்கம். இது அதிகம் தற்போது இல்லை என நினைக்கிறேன். 


4) இந்தியாவிலேயே திரைப்பட நடிகர்களின் மேல் ஓர் ஈர்ப்பு இருக்கத் தான் செய்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் அது மிக அதிகமாக, அவர்களைக் கடவுள் போல் நினைப்பது ஏன்? இந்த நிலை மாறவே மாறாதா?


$ என் அடுத்த பதிலை காண்க ! 

# முதலில் இசைவல்லமை காரணமாக எம் கே டி மாதிரி நடிகர்களுக்கு ரசிகர் கூட்டம் இருந்தது.

எந்தப் பிரச்சினையையும் முஷ்டியை மடக்கித் தீர்க்கும் சூப்பர் ஹீரோக்கள் வந்து அவர்கள் ரசிகர் கூட்டத்தை பணம் செலவழித்துப் பெருக்க முற்பட்ட சமயம் முதிர்ச்சியில்லாத இளைஞர் பட்டாளம் அவர்கள் பின் ஓடத் தொடங்கியதே இதன் வித்து.

பிற மாநிலங்களில் இது ஏன் இல்லை என்றால், இங்கு மட்டுமே அரசியல் கட்சிகள் சினிமாவிலிருந்து முளைத்துக் கிளைத்தன. எம் ஜி ஆர் முகத்தைக் காட்டினால் மூன்றுலட்சம் வோட்டு என அண்ணா சொன்னது நினைவில்லையா ? 

& ஹீரோ வொர்ஷிப் இப்போ கொஞ்சம் குறையத் துவங்கியுள்ளது என்று நினைக்கிறேன். பார்ப்போம். 

5) ஒரு திரைப்படம் வெளிவந்தால் எல்லோரும் உடனே போய்ப் பார்த்துக் கருத்து/விமரிசனம் என்னும் பெயரில் எழுதி விடுகிறார்கள்.இது ஆர்வமா? திரைப்பட மோகமா?


$ என் அடுத்த பதிலை காண்க ! 

# இது ஒரு பழக்கம். ஊடகங்களில் முந்தியிருப்பதில் ஆர்வம். லைக்குகள் க.பதிவுகள் மீதுள்ள மோகம்.

& அதனால்தான் நான் படம் எதுவுமே பார்ப்பதில்லை என்று முடிவு செய்துவிட்டேன். மற்றபடி விமரிசனம் எழுதுபவர்கள் எல்லோரும் I first syndrome உள்ளவர்கள் என்றும் நினைக்கலாம். 

          

6) படத்துக்கான டிக்கெட் எல்லாம் இப்போது நூற்றுக்கணக்கில் இருப்பதாகச் சொல்கின்றனர். (ஹிஹிஹி, எனக்குத் தெரியாது, தியேட்டர்களுக்குப் போய்ப் படம் பார்த்து 30 வருஷம் இருக்கலாம்.) அவ்வளவு பணம் கொடுத்து டிக்கெட் வாங்கிப் படம் பார்ப்பதால் கிடைக்கும் நன்மை என்ன?

$ என் அடுத்த பதிலை காண்க ! 

# பொழுதுபோக்குதான். 
வசதிகள், வருமானம் பெருகினால் டிக்கட் விலையும் பெருகத்தானே செய்யும் ? ஊதாரித்தனம் யுக தர்மம் ஆகிவிட்டது.

& சில வருடங்களுக்கு முன்பு, பையன் ரிசர்வ் செய்த படம் ஒன்றுக்கு பையனுடனும் பேரன்களுடனும் சென்று பார்த்தேன். 3D படம். நல்லா சௌகரியமாக காலை நீட்டி, இருக்கையில் அமர்ந்து பார்க்கக்கூடிய சீட் அரேஞ்ச்மெண்ட். படம் + கார் பார்க்கிங் கட்டணம் + சிற்றுண்டி வகையறா செலவு என்ன என்று தெரிந்தபோது தலைசுற்றியது. கிட்டத்தட்ட என்னுடைய ஒரு மாதத்து பால், தயிர், மோர் + அரிசி + எண்ணெய் செலவை அதை வைத்து செய்துவிடலாம்! 

7) ஒருத்தருக்கே250 ரூ டிக்கெட் என வைத்துக் கொண்டால் நான்கு பேர் கொண்டஒரு குடும்பத்துக்கு டிக்கெட் மட்டுமே ஆயிரம் ரூபாய் ஆகிவிடுகிறது. ஒரு மாசத்துக்கான எரிவாயுவுக்கான விலைனுவைச்சுப்போம்.(மானியம் இருக்கு இல்ல, அதான், வைச்சுக்கச் சொல்றேன்.) இதைத் தவிர்த்துப்போக வரச்செலவுகள், அங்கே ஏதேனும் வாங்கித் தின்றால் அந்தச் செலவுனு ஐநூறு ஆயிடும்னு நினைக்கிறேன். இவ்வளவு பணம் செலவு செய்து திரைப்படம் பார்ப்பது தேவையான ஒன்றா?


4 to 7 : $  ஊம்ஹும் நான் சத்யாவுக்குப் பிறகு தியேட்டர் பக்கமே போனதில்லை.

# முடியும் என்றிருப்பதால் தேவையாகி விடுகிறது. 

& தேவை இல்லை என்று நமக்குத் தோன்றுகிறது. இளைய சமுதாயத்திற்கு அப்படித் தோன்றுவதில்லை!            
         
8) ஒரு காலத்தில் படிப்பில் நன்றாகப் படிக்கணும், புரிந்து படிக்கணும் என்பதே முக்கியமாக இருந்து வந்தது. ஆனால் இப்போது? மதிப்பெண் வாங்குவதற்காகவே படிக்கின்றனர். இது நல்லதா?
பாடங்களைப் புரிந்து கொண்டு படிப்பது நல்லதா? மதிப்பெண் குறைந்தாலும் பரவாயில்லை என இருப்பது நல்லதா?
இந்தக் குழந்தைகள் படிக்கும் இந்தப் பாடங்கள்/பாடத் திட்டங்கள் அவர்கள் வாழ்க்கைக்குப் பயன் தரக் கூடியதா?


$ மார்க் வாங்கப் படிப்பது தப்பில்லை.

# கல்வியின்அடிப்படை நோக்கம் சிந்திக்கும் திறனை மேம்படுத்துதலே.
ஆனால் போட்டி அதிகமாகும்போது மார்க் முக்கியத்துவம் பெற்று விடும். வேறு வழி ?

பாடத் திட்டம் எப்படி இருந்தாலும் படிக்கும் பாங்கு சரியாக இருந்தால் இலட்சியம் நிறைவேறும். 

9) இப்போது முதல் மதிப்பெண் பெற்றுத் தொலைக்காட்சி, தினசரிகளில் இடம் பெறும் குழந்தைகள் கல்லூரிப் படிப்பிலும் அவ்வாறு முன்னிலையில் இருப்பார்களா?/இருந்திருக்கிறார்களா?


$ நிறையப்பேர் மேற்படிப்பு படிக்கும் முயற்சியில் தோல்வி அடைவதைப் பார்க்கிறோம்!

# பெரும்பாலும் இல்லை போலிருக்கிறது. இதற்கு சரியான பதில் தர நமக்கு வசதி திறன் இரண்டுமே இல்லை.
   
10) நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என அரசியல் கட்சிகள் அறிவித்துள்ளன. ஆனால் கடந்த இரு வருடங்களாக அரசுப் பள்ளி மாணவ, மாணவியர் பலரும் நீட் தேர்வு முறையில் மருத்துவப் படிப்புக்கான இடம் பெற்றுப் படிப்பதைப் பற்றிச் செய்திகள் வந்தன. யாரும் இதுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அரசே இலவசப் பயிற்சி முகாம்களை நடத்தவும் செய்கிறது. இந்நிலையில் நீட் தேர்வை ரத்து செய்வது/செய்ய வேண்டும் என்று கோருவது சரியா?



$ போட்டி பரீக்ஷை என்றாலே சினிமா நாயகர்கள் மாதிரி சென்றோம், வென்றோம், வந்தோம் என்றிருக்க வேண்டுமானால் தேர்வெதற்கு?

செலெக்ஷன் தேர்வில் 40 ,30 என்று வாங்கி வந்த மருத்துவர் திறமையானவராக இருப்பதில்லை என்றுதானே வேறு மருத்துவர்களை நாடுகிறோம்.
 
# நிச்சயம் சரி இல்லை. ஆனால் யாரும் கேட்காமலே கட்சிகள் இதை வோட்டு வேட்டை ஆயுதமாக்கி இருக்கின்றன.
             

வல்லிசிம்ஹன் : 

1. வந்தியத்தேவனா பாஹுபலியைப் போட்டால் எப்படி இருக்கும்? 

# அவருக்கு வுடன் ஃபேஸ் சிண்ட்ரோம் இருக்கிறது. 


& வந்தியத்தேவன் = வீரம் + நகைச்சுவை + விவேகம் கொண்ட காரெக்டர். பிரபாஸ் இதற்கு சரிவரமாட்டார் என்று தோன்றுகிறது. 



2, நீங்கள் கொடுத்திருக்கும் பொன்னியின் செல்வன் படம்
எந்தப் பத்திரிக்கையில் எப்போது வந்தது? 


& அது தெரியாது. எல்லாப் படங்களும், கூகிளாண்டவர் அருளிய படங்கள்! 


கில்லர்ஜி :

திரைப்படங்களில் வரும் ஆபாசக்காட்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது நமது கடமையா ? அல்லது அரசின் (தணிக்கைக்குழுவின்) வேலையா ?


# அரசின் கடமைதான். நாம் சொல்லி எவர் கேட்பார் ?

என் அந்தக் கால சக ஊழியர் புலம்பல்:

"ஆபாசக் காட்சி இருக்குன்னாங்க. இரண்டு தடவை பார்த்துட்டேன். ஒண்ணுமில்லை. சுத்த ஏமாத்து" (ஜயமாலினி படம்)
               

திண்டுக்கல் தனபாலன் : 

ஒரு வேளை நாம் பொன்னியின் செல்வனில், அதாவது நம் வலைப்பதிவர்களுக்கு என்னென்ன வேடம் மற்றும் மற்ற பொறுப்புகள்...?

# பொது மக்கள், அரசவை பிரமுகர்தான். வேறு என்ன ?

& இதற்கு நாங்கள் ஏதாவது பதில் கூறி, பதிவர்களின் சாபத்துக்கு + கோபத்துக்கு ஆளாவதை விட, எங்களின் இந்த வாரக் கேள்வியாக இதையே மாற்றி கேட்டிருக்கிறோம். திண்டுக்கல் தனபாலனுக்கு நன்றி. 

வாட்ஸ் அப் கேள்விகள் : 


பானுமதி வெங்கடேஸ்வரன் :

நாத்திக வாதம் தமிழ் நாட்டில் மட்டும் தான் வலுவிழந்ததா? அல்லது உலகம் முழுவதும் இப்படித்தானா?
        

# இதற்கு பதிலளிக்க நம்மிடம் தகவல்கள் இல்லையானாலும் நாத்திகம் உலகளவிலும் வலுவிழந்ததாகவே தோன்றுகிறது. 

& இன்றளவில் உண்மையான நாத்திகவாதமோ அல்லது ஆத்திகவாதமோ இல்லை. சுத்தமான சந்தர்ப்பவாதம் ஒன்றுதான் உள்ளது. 

மேற்கண்ட கேள்வியின் தொடர்ச்சி: அதற்கு காரணம் என்ன?             

# இதற்கு முதன்மைக் காரணம்: எது ஒன்று எதிர்க்கப்படுகிறதோ அது பெரும்பான்மை மக்களுக்கு பெருந்தீங்கு செய்வதாக உணரப்பட வேண்டும். மாறாக கடவுள் நம்பிக்கை அடிப்படையில் கஷ்டங்களை எதிர்கொள்ளவும் நல்லனவற்றை எதிர்பார்க்கவும் ஒரு மன நிலை உருவாக  வழிவகுக்கிறது.
                  

சிறு வயதில் அல்லது வாழ்வின் ஏதாவது கட்டத்தில் மற்றவர்கள் செய்யும் செயலைப் பார்த்து "எப்படி இதை செய்கிறார்கள்?" என்று அதிசயப்பட்ட, அல்லது ஆத்திரப்பட்ட அல்லது அருவருப்பு பட்ட ஏதாவது ஒரு செயலை பின்னாளில் நீங்கள் செய்திருக்கிறீர்களா?
        

# அதிசயப் பட்ட பலவற்றையும் செய்யும் அதிர்ஷ்டம் இல்லை.

என்றோ எனக்கு ஆத்திரம், அருவருப்பு உண்டாக்கியவற்றை நானும் பிற்காலத்தில்  செய்திருக்கக் கூடும். ஆனால் அவற்றை கவனத்தில் கொள்ளும் திறன் எனக்கு இருந்ததில்லை.

& நான் இன்னும் சிறுவயது நிலையிலேதான் இருந்து வருகிறேன். ஆனால், 'எப்படி இதை செய்கிறார்கள்' என்று யாரையும் பார்த்து இதுவரை அ / ஆ / அ கொள்ளவில்லை. 
        

கட்சித் தலைவர்கள் செய்யும் தேர்தல் பிரசாரங்களுக்கு நிஜமாகவே பலன் இருக்கிறதா?
              

# தலைவர்கள் பிரசாரம் நிச்சயம் பலன் தரும். அண்ணா, கருணாநிதி பிரசாரம் இல்லாதிருந்திருந்தால் தி மு க ஆட்சிக்கு வந்திருக்க முடியாது. 
(அந்த சமயம் - 1962 & 67 - காங்கிரஸில் நல்லவர்கள் வல்லவர்கள் இருந்தனரே தவிர திறமையான பிரசாரகர்கள் இல்லவே இல்லை)

& நிஜமாகவே பலன் இருக்கும் என்றுதான் தோன்றுகிறது. ஆனால் அது (-) பலனா அல்லது (+) பலனா என்பதுதான் மில்லியன் $ கேள்வி! 

 =====================================

எங்களின் இந்த வாரக் கேள்வி. 

இந்த வாரத்தில், பொன்னியின் செல்வன் குறித்த கேள்விதான் கேட்கவேண்டும் என்று சென்ற வாரமே நினைத்திருந்தேன். அதற்கு ஏற்ப DD கேட்ட கேள்வியும் அமைந்துவிட்டது. 

நாம் ஒரு நாவலை அல்லது தொடரை அல்லது கதையைப் படிக்கும்போது, அதில் வருகின்ற ஏதோ ஒரு கதாபாத்திரத்தை நாமாகவோ அல்லது நமக்கு மிகவும் நெருக்கமாகத் தெரிந்த ஒருவராகவோ கற்பனை செய்து படிப்போம். 

பொன்னியின் செல்வனை ஆழ்ந்து படிப்பவர்களுக்கு இந்த நிலை ஏற்படாமல் போவது அரிது. 

அப்படி, உங்கள் வாசிப்பு அனுபவத்தில், நீங்கள் பொன்னியின் செல்வன் படித்தபோது, அதில் வருகின்ற எந்த கதாபாத்திர படைப்பில் உங்கள் சாயலைக் கண்டீர்கள்? வேறு எந்த கதாபாத்திரமாவது உங்களுக்கு நன்கு தெரிந்த ஒரு நபரை பிரதிபலித்ததாக தோன்றியதா? 

இந்தக் கேள்வியை என்னிடம் கேட்டால், எனக்கான என் தேர்வு : சேந்தன் அமுதன். என் மனைவியின் கேரக்டர் : பூங்குழலி. 

ஒரு புள்ளிவிவரம் : இதே கேள்வியை பல ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் குடும்ப உறுப்பினர்கள் (சுற்றம் + சொந்த பந்தங்கள் சேர்த்தால், இன்றளவில் எங்கள் கூட்டம் ஐநூறைத் தாண்டுகிறது!) குழுவில் கேட்டபோது, எங்களில் இருபத்தேழு வந்தியத்தேவர்கள் (நான்கு பெண்கள் உட்பட!) , ஐந்தாறு நந்தினிகள், இரண்டு பழுவேட்டரையர்கள், நான்கு பூங்குழலி, ஒரு சேந்தன் அமுதன் (!) மூன்று ராஜராஜசோழன், ஒரு வானதி, நான்கு குந்தவை இருப்பது தெரியவந்தது! 

நீங்க எல்லோரும் ஆரம்பியுங்க உங்க கச்சேரியை! 

மீண்டும் சந்திப்போம்! 

============================================

167 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. வருக, கோடை மழை அதிரா!

      நீக்கு
    2. பின்ன... கேஜிஜி சார் இஷ்டப்படி இடுகையை ஊருக்கு முன்னால் வெளியிட்டால் ஏன் பர்ஸ்ட்டூ வரமாட்டீங்க? இன்னைலேர்ந்து சமைக்கணுமேன்ற கவலையில் தூக்கம் வராம இருந்தீங்க போலிருக்கு..

      நீக்கு
    3. நேற்று பெங்களூரில் ஒரே இடி, மின்னல், மழை! வீட்டுக்குள்ளே எல்லாம் மின்னல் ஒளிர்ந்து கண் காணாமல் போய்விடப்போகிறது என பயந்தேன். காலையில் பார்த்தால் காணாமல்போனது வந்து நிற்கிறது!

      நீக்கு
    4. இடி, மின்னல், மழை, ஐந்து ஓவர் கிரிக்கட் எல்லாவற்றையுமே இரசித்தேன், நேற்று இரவு.

      நீக்கு
    5. //நெல்லைத்தமிழன்1 மே, 2019 ’அன்று’ முற்பகல் 9:48
      ///
      கெள அண்ணன் வெளியில வாங்கோ:).. இதென்ன இது நான் காணாமல் போன நேரம் இன்னொரு புதுவரவை உள்ளே விட்டிருக்கிறீங்க:)). எனக்கு பொட்டு வைக்காத தமனாக்காவைத்தான் தெறியும் சே..சே.. தெரியும்:).. இவரைத் தெரியாதே:)).

      நீக்கு
    6. //பின்ன... கேஜிஜி சார் இஷ்டப்படி இடுகையை ஊருக்கு முன்னால் வெளியிட்டால் ஏன் பர்ஸ்ட்டூ வரமாட்டீங்க? //
      //

      ம்ஹூம்ம்.. லேட்டா போட்டால் மட்டும் இவர் ஓடி வந்திடுவாராக்கும் 1ஸ்ட்டாஆஆஆஆ கர்ர்ர்ர்ர்ர்:)).. முதலாவதா வந்த பிள்ளையை வாழ்த்தி ஒரு என்வலப்புக் கையில வைக்காமல் ... கர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்:))..

      நீக்கு
    7. ///ஏகாந்தன் !1 மே, 2019 ’அன்று’ முற்பகல் 10:25
      நேற்று பெங்களூரில் ஒரே இடி, மின்னல், மழை! வீட்டுக்குள்ளே எல்லாம் மின்னல் ஒளிர்ந்து கண் காணாமல் போய்விடப்போகிறது என பயந்தேன்.///

      ஹா ஹா ஹா ஏ அண்ணனை எனக்கு நல்லா நினைவிருக்குது:)). கையில கிரிக்கெட் ரிமூட் உடன் எப்பவும் இருப்பாரே அவர்தானே:)).

      /// காலையில் பார்த்தால்
      காணாமல்போனது
      வந்து நிற்கிறது!//////

      ஹா ஹா ஹா கவித கவித கவித:))

      நீக்கு
  2. பதில்கள்
    1. காணாமல் போன இல்லை; கண்டும் காணாமல் போன !

      நீக்கு
    2. ஹா ஹா ஹா இல்ல கெள அண்ணன் இண்டைக்கு முதலாம் திகதி எல்லோ உண்மைதான் பேசுவேன்ன்ன்... வராவிட்டால் படிக்க மாட்டேன் போஸ்ட்... இனித்தான் கிண்டிக்கிளறப்போறேன் எல்லாம்:)... என் செக் ஒரு மட்டர் சொன்னவ:)... அதுக்கும் கொமெண்ட்D போடோணும்;)

      நீக்கு
    3. மீக்கு டமில்ல டி ஆக்கும் கெள அண்ணன்:).

      நீக்கு
    4. table = டேபிள்
      tamil = தமிழ்

      கெள அண்ணன் கொஞ்சம் நெல்லைத்தமிழன் புரொபிஸரைக் கூப்பிட்டு இதுக்கு விளக்கம் டொல்ல டொல்லுங்கோ... ரேபிள் என்பதை டேபிள் எண்டு எழுதோணுமாம், ஆனா தமிழை டமில் என எழுதினால் டப்பாம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா ஹையொ எனக்கு இண்டைக்கு சனி உச்சம் பெற்றிருக்குது போல:)

      நீக்கு
    5. நோ நோ இன்னிக்கு புதன்தான் உச்சம். சனி இல்லை!

      நீக்கு
  3. மீதான்ன்ன்ன்ன்ன் பெஸ்ட்டூஊஊஊ நொட் கீசாக்காஆ:)..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆர்வத்துக்கு நன்றி!

      நீக்கு
    2. வந்தாச்சு, வந்தாச்சு, கோடை மழை வந்தாச்சு! வெப்பம் தணிந்ததுவே, நல்வரவு கோடை மழை!

      நீக்கு
    3. தங்கூ கீசாக்கா. கோடை மழையுடன் கூட மின்னனும் வருமே:)).. இன்னும் காணல்லே... மின்னலே வந்திட்டுப் போம்மா:)) நான் என் செக் ஐக் கூப்பிடல்லே:))

      நீக்கு
    4. அட எங்க தலைவி நள்ளிரவில் குதிச்சிருக்காக :)

      நீக்கு
  4. அன்பின் KGG, ஸ்ரீராம், கீதாக்கா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் 🐍கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)

      நீக்கு
    2. நல்வரவு - கர்ர்ர் முதல் (துரை) சார் வரை!

      நீக்கு
    3. நல்வரவு அளித்த துரைக்கும் மற்றவர்களுக்கும் நல்வரவு, வணக்கம், வாழ்த்துகள்.

      நீக்கு
    4. நல்வரவு துரை ஸார். மற்றும் அதிரா உள்ளிட்ட நண்பர்களுக்கும் நல்வரவு.

      நீக்கு
  5. ///பொன்னியின் செல்வனில் உங்களைக் கண்டதுண்டா?///

    பொன்னியின் செல்வனில், அனுக்கா (அனுஸ்:))))) வைக் கண்டேன்ன்ன்:) படம் இருக்கு பின்பு ஆதாரத்தோடு நிரூபிக்கிறேன்:)..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிரூபியுங்க என்று ஆர்வத்துடன் சொல்கிறார் ஸ்ரீராம்.

      நீக்கு
    2. ஶ்ரீராமோ? அதாரது கெள அண்ணன்?:).. எனக்கு அனுக்காவைத்தான் நினைவிருக்கு:)

      நீக்கு
    3. அம்மா ஊருக்குப் போயாச்சா அதிரா?

      நீக்கு
  6. உழைக்கும் கைகளே...
    உருவாக்கும் கைகளே...
    உலகைப் புது முறையில்
    உண்டாக்கும் கைகளே!...

    அன்பின் இனிய மே தின நல்வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடா டா ! எம்ஜியார் கைகளை மட்டும் ஆட்டாமல், தலையையும் சேர்த்து ஆட்டிய பாடல் அல்லவா!

      நீக்கு
    2. ஹையோ கெள அண்ணன் ஓடுங்கோ ஓடுங்கோ ஓடிப்போய்க் கட்டிலுக்குக் கீழ ஒளியுங்கோ:) எம் சி ஆர்:) ரசிகர்கள் கலைக்கப் போகினம்:).. ஹா ஹா ஹா...

      நீக்கு
    3. பார்த்துவிடுகிறேன் ஒரு கை !

      நீக்கு
  7. >>> நீங்க எல்லோரும் ஆரம்பியுங்க உங்க கச்சேரியை!.. <<<

    ஆகா... வெவரமானவங்க ஆரம்பிக்கட்டும் கச்சேரிய!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதெல்லாம் நடவாது. உங்கள் காரெக்டர் எது? அதைச் சொல்லுங்க தொரே !

      நீக்கு
    2. >>> கலா அண்ணிதேன்ன்ன்ன்:)<<<

      காணாமல் போய் மீண்டு வந்த அதிராவின் கைங்கர்யமா இது!...

      ஆனாலும் அதற்குள் உண்மையும் இருக்கிறது... எப்படி...

      இப்படி!..

      கலா அண்ணி தேன்!...

      இத வூட்ல யார் கிட்டயும் ஜொல்லிடாதீங்கோ!...

      நீக்கு
    3. தெளிவா இருந்தேன். இப்போ குழப்பிட்டீங்க !

      நீக்கு
  8. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
    அதிரா வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  9. எல்லோருக்கும் இனிய தொழிலாளர் தின வாழ்த்துகள்!

    குறள் பகிர்வும், மு.வரதராசனார் விளக்கமும் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  10. கேள்விகளும், பதில்களும் நன்றாக இருக்கிறது.
    "கலங்கரை விளக்கு" படத்தில் சரோஜாதேவி
    சிவாகமியின் சபதம் படித்து தன்னை
    சிவகாமியாக கற்பனை செய்து கொண்டு ஆகி விடுவார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொன்னெழில் பூத்தது புது வானில் - எனக்குப் பிடித்த பாடல்களில் ஒன்று.

      நீக்கு
    2. எனக்கும் பிடித்த பாடல்

      நீக்கு
    3. அந்தப் படத்தில் எம்ஜி ஆர் சிவாவைக் காமி சிவாவைக் காமி என்று மீண்டும் மீண்டும் கேட்டும் சரோஜா தேவி சிவாவைக் காமிக்காமலே இருப்பார் இல்லை?

      நீக்கு
  11. ///பானுமதி வெங்கடேஸ்வரன் :

    நாத்திக வாதம் தமிழ் நாட்டில் மட்டும் தான் வலுவிழந்ததா? அல்லது உலகம் முழுவதும் இப்படித்தானா? ////

    இதென்ன புயுக்கதை:) பானுமதி அக்கா சட்டுப்புட்டென எப்படி இப்பூடிச் சொல்லிட்டீங்க?:)... நீங்களே முடிவு பண்ணிட்டீங்களோ இப்படி?...:)

    பதிலளிநீக்கு
  12. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    உழைப்பாளர் தின வாழ்த்துகள். உழைப்புக்கேற்ற
    மதிப்பும் மரியாதையும் பெற வேண்டும்.

    பதிலளிநீக்கு
  13. ///கீதா சாம்பசிவம் :

    1) இப்போது திருமணம் ஆகாமல் பல "முதிர்கன்னர்கள்" இருப்பதற்கு உண்மையான காரணம் எது என நீங்கள் கருதுகிறீர்கள்?////

    அது கீசாக்கா பெற்றோர் எல்லாம் செல்வந்தர்களாக இருப்பதால், திருமணம் முடிச்சால் உழைச்சுக் கஸ்டப்படோணும்:) அதை விடபெற்றோருடன் சொகுசு வாழ்க்கை வாழ்வது மேல் என நினைக்கினம்:)... தேவையானதைப் பணம் கொடுத்துப் பெற்றிட்டால் போதும் என நினைக்கினமோ என்னமோ.....

    பதிலளிநீக்கு
  14. பொன்னியின் செல்வன் சரித்திரத்தில் வானதிகள் பலரை எங்கள் வீட்டில்
    பார்த்திருக்கிறேன்.
    ராஜராஜனாக எங்க சித்தப்பா நன்றாக இருந்திருப்பார்.
    வந்தியத்தேவனாக வேறு யார் எங்கள் சிங்கம் தான்.

    பதிலளிநீக்கு
  15. /////என்பதற்கு

    விவரமாக பதில் அளித்து, கருத்துப் பரிமாற்றங்கள் செய்த

    கீதா சாம்பசிவம், நெல்லைத்தமிழன், வல்லிசிம்ஹன், கீதா ரெங்கன், பானுமதி வெங்கடேஸ்வரன் ஆகியோருக்கு எங்கள் மனமார்ந்த நன்றி! /////

    விடுங்கோ என்னை விடுங்கோ மீ தேம்ஸ்க்குப் போறேன்ன் இதில என் பெயர் இல்லை:)....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்து உரைக்கவில்லையே - சென்ற வாரப் பதிவில்!

      நீக்கு
    2. ஹா ஹா ஹா கெள அண்ணன் நான் உப்பூடித்தான் சவுண்டு விடுவேன்:).. நீங்க ஏதும் மதிலைப் பிடிச்சுக் கொண்டு ஸ்ரெடியா நிக்கோணும்:)...

      நீக்கு
    3. களாஸுக்கு வந்து பதில் சொல்லாம அட்டெண்டன்ஸ் ரெஜிஸ்டர்ல ப்ரெசன்ஸ் போடச் சொல்றது சவுன்ட் விடறது யாருங்கோ அது? கா போ அ அது யாருங்கோ!!?? ரெஜிஸ்டர்ல வேற பெயரல்லோ இருந்தது...அப்பப்ப இப்படி மாற்றினால் அப்புறம் க்ளாஸ்ல எப்படி விடுவது பாஸ்போர்ட் அல்லது இந்திய ஆதார் கார்ட் காமிச்சாத்தான் என்ட்ரி ஹிஹிஹிஹி...

      கீதா

      நீக்கு
  16. ////நெல்லைத்தமிழன் :

    நான் கனவு காணும் சமயம், (எங்க அப்பாவுடன் சந்திப்பது போன்றோ இல்லை முக்கியக் கடவுகளோ), போட்டோ எடுக்க முயல்வேன். கேமரா ஆபரேட் பண்ணாது. எவ்வளவு அமுக்கினாலும் படம் விழாது. இது எப்போதும் நடக்கும். என்ன காரணமாயிருக்கும்?////

    நம்மை விட்டுப் போய் விட்டவர்கள் என்பதால் இப்படித்தான் நடக்குமாம்., கூட நின்று படமெடுத்தாலோ இல்லை அவர்களோடு பயணம் போவதுபோல எல்லாம் கனவு வராது, வந்தால் அது உயிரோடிருப்போருக்கு நல்லதல்ல எனச் சொல்லக் கேட்டிருக்கிறேன்ன்ன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லைத்தமிழரே ! நீங்க என்ன சொல்றீங்க?

      நீக்கு
    2. அதிரா... வாங்க.. மே தினத்தில் வந்திருக்கீங்க. இன்றிலிருந்தாவது நீங்க சமையலறையில் உழைத்துச் சாப்பிடுங்க... ரெண்டு வாரம் அம்மாவை சமையல் செய்யச் சொல்லி சாப்பிட்டதுபோல் இல்லாமல்.

      கேள்விக்கான சரியான பதிலைச் சொல்லியிருக்கீங்க. எனக்குத் தோன்றாத சரியான விளக்கம். பாராட்டுகள்.

      நீக்கு
    3. ஏனெனில் எனக்கும் இப்படி அடிக்கடி கனவு வரும்.. பயணம் போக அவர்களோடு சேர்ந்து பஸ்ல ஏறுவேன்.. பாதியில நின்றுவிடும்.. இப்படி எல்லாம்..

      நீக்கு
    4. நீங்க அப்போ போட்ட கொமெண்ட் என் மெயிலுகு வந்துது ஆனா அப்படியே பதில் சொல்லாமல் காணாமல் போயிட்டேன்ன்.. அம்மாவின் இருப்பிடம் கனடா.

      இங்குதான் நிற்கிறா இப்போ. இன்னும் கொஞ்சக் காலம் நிற்பா நம்மோடு இங்கு. பகலில் வர முடியாமல் இருக்கு அதனாலதான் நைட் ஜம்ப் ஆனேன்ன்.. இனி எல்லோர் பக்கமும் போகோணும் இல்லை எனில் அதிரா இஸ் எ பாட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட் கேள் எனச் சொல்லிடப்போகினமே:)).

      ///இன்றிலிருந்தாவது நீங்க சமையலறையில் உழைத்துச் சாப்பிடுங்க...//

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) அப்பூடி எனில் டேக் .. ரேக் எவே:))எவேக் காரர்கள் பாவமெல்லோ:) கடையை இழுத்து மூடிடபோகினம்:))...

      நீக்கு
  17. காசிக்குப் போனவர்கள் திரும்ப வந்திட்டினமாம் எனக் கேள்விப்பட்டேன்ன்ன்:).. ஆனா அனுக்கா ரசிகரை அங்கின படிக்கட்டில விட்டுப்போட்டு வந்திட்டினமோ:)... ஆளைக் காணல்லியே இங்கின எனக் கேட்டேன்ன்ன்:)... சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்:).... மீ ரொம்ப நல்ல பொண்ணு:)...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. டினம், டினம் ..... ஸ்ரீராம் இப்போதான் பெட் காபி சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்!

      நீக்கு
    2. அம்மா ஊருக்குப் போயாச்சா அதிரா?

      நீக்கு
    3. இல்ல ஶ்ரீராம், யூன் எண்ட் உடன் சமர் ஹொலிடேய்ஸ் ஆரம்பம்... அப்போதான் அம்மா திரும்புறா... நாங்களும் அ ம்மாவுடன் ஹொலிடேக்கு கோவிந்தா கோவிந்தா:))

      நீக்கு
    4. கோவிந்தா கோவிந்தா அப்ப தேம்ஸ்லருந்தே கனடாவுக்கு உருண்டுக் கொண்டேவா க்யூவிலா கோவிந்தா கோவிந்தா!!!

      கீதா

      நீக்கு
  18. "பொன்னியின் செல்வன்" நாவலில் வந்தியத் தேவன் கதாபாத்திரம் எனக்கு மிகவும் பொருந்தும் வண்ணம் உள்ளது. அதே படபடப்பு, அவசரம், வார்த்தைகளை விட்டு விட்டுத் தவிப்பது, குடுகுடுவென ஏதேனும் செய்துவிட்டுப் பின்னர் மாட்டிக் கொண்டு முழிப்பது. சுரங்கத்திற்குள் நுழைந்த வந்தியத்தேவனுக்கு வேர்த்து விறுவிறுத்துப் போனதைப் போல் எனக்கும் நடக்கும். நல்லது செய்யப் போய்ச் சிக்கலில் மாட்டிக் கொள்வது! எனப் பலவும்! இப்போதும் என்னளவில் நடந்து வருகிறது. ஒரு காரியத்தை நினைத்த உடனே செய்யும் வந்தியத் தேவன் போல் நானும் நினைப்பதும், அதைச் செய்வதும் ஒன்றே தான் எனப் பலமுறைகள் இருந்திருக்கேன்/இருக்கேன். அது சரியா, தப்பா என்பதைக் காலம் தான் சொல்லும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரி சரி கீதா சாம்பசிவம் மேடம்... பெரிய இடத்துப் பெண் அரசியல்வாதி குந்தவைக்கு கணவனா அடிமையா இருக்கணும்னு நினைக்கிறீங்க.... உங்க ஆசையைக் கெடுப்பானேன்... வாழ்க வளமுடன்.

      நீக்கு
  19. கேள்வி, பதில்களுக்குப் பின்னர் வருகிறேன். குறளும் விளக்கமும் அருமை!

    பதிலளிநீக்கு
  20. "முதிர்கன்னர்கள்"- தற்காலப் பிரச்சனைகள் தெரிந்த ஒருவர் பதிலளித்திருக்கலாம். "பெண்கள் கிடைப்பதில்லை", இருக்கும் சிலரோ ரொம்ப எதிர்பார்ப்பில் இருப்பதால், நிறையபேருக்கு பெண்கள் கிடைப்பதில்லை. இதில் ஒன்றில்தான் காலம் நூற்றாண்டுக்குள் பழி வாங்குகிறது.

    கேரளாவில் பெண்கள் அதிகம் என்பதால் கேரளப் பெண்களைத் திருமணம் செய்துகொள்வது (பணம் கொடுத்து) தமிழர்களிடையே அதிகரித்துள்ளது எனவும் படித்தேன். சில சமூகங்களில் வேறு வழியில்லாமல் மாற்று மத்த்தினரையும் திருமணம் செய்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  21. பதில்கள் அனைத்தும் ரசிக்க வைத்தன.
    எனக்கு பதில் அளித்தமைக்கும் நன்றி ஜி

    பதிலளிநீக்கு
  22. வணக்கம் சகோதரரே.

    அனைவருக்கும் தொழிலாளர் தின நல்வாழ்த்துகள். கேள்வி பதில்கள் இன்னமும் முழுமையாக படிக்கவில்லை. படித்த வரை மிகவும் அருமையாக உள்ளது. மிகுதியும் படித்த பின் வருகிறேன். குறளும், அதன் விளக்கமும் நன்றாக உள்ளது.பொன்னியின் செல்வனில் எந்த பாத்திரத்திற்கு நான் உகந்ததாய் இருப்பேனென்று சொல்லத் தெரியவில்லை யோசித்து கொண்டிருக்கிறேன்.

    காலையிலேயே இவ்வளவு பேர் கருத்துரையா என வந்தவுடன் பார்த்ததில் கா.போ.அதிரா வந்து சபை களைகட்டி இருப்பதை கண்டு கொண்டேன். நிறைய நாட்களாக காணாமல் போய் வந்த சகோதரி அதிராவுக்கு வாழ்த்துக்கள்.

    கண்டிப்பாக இன்றுக்குள் இருநூறுக்கும் மேலாக தாண்டும் கருத்துரைக்குள் "நானும் காணாமல் போய் விடுவேனோ " என்ற பயம் என்னை பதிவை முழுதாக படிக்க விடாமல், பாதியிலேயே கருத்தை பகிர்ந்து கொள்ள இங்கு வந்து நிறுத்தியிருக்கிறது போலும்.. ஹா ஹா. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாங்கள் யாரையும் காணாமல்போக விடமாட்டோம்! கருத்துரைக்கு நன்றி!

      நீக்கு
    2. வணக்கம் சகோதரரே

      தங்கள் பதில் மகிழ்வை தருகிறது. மிக்க நன்றி. நகைச்சுவைக்காகத்தான் அப்படி கோர்த்து எழுதினேன். தவறாக நினைக்க வேண்டாம்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    3. புரிந்துகொண்டோம். கவலை வேண்டாம்!

      நீக்கு
  23. அனைவருக்கும் தொழிலாளர் தின நல்வாழ்த்துக்கள்!. உழைப்பாளியாகிய நான் இன்று விடுமுறை எடுத்துக் கொண்டிருக்கிறேன். அதனால்தான் மெதுவாக வருகை! அதற்குள் இங்கே அதகளம். ஃபென்னி புயல் ஏமாற்றிவிட்டது, அதிரா புயல் வந்து விட்டது, இன்னும் கரையை கடக்கவில்லை என்றே நினைக்கிறேன். ஆனால் இது சேதம் செய்யாத நல்ல புயல். நாளும் வருக என்று வரவேற்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெங்களூரில் மழை கொட்டிக் குளிர்வித்தது. சென்னையில் இருக்கும் புழுக்கத்தை அதிகமாக்கிவிட்டது.... இதில் புயலை வரவேற்கிறார்களாம்... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

      நீக்கு
    2. கிர்ர்ர்ர் ஃபானி ஹோ க யா !

      நீக்கு
  24. உழைப்பாளர் தினத்தன்று பொருத்தமான குறளோடும், அதற்கு மு.வ.வின் அழகான விளக்கத்தோடும் தொடங்கியிருக்கிறீர்கள். பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  25. மனதின் ஆழ்நிலை நினைவுதான் கனவு என்கிறார்கள். கனவில் ஓடுவோம் ஓடமுடியாது. இதுதான் கனவுக்கும் நனவுண்க்குமான வித்தியாசம்!

    பதிலளிநீக்கு
  26. நாத்தீக வாதத்தைப் பற்றிய என் கேள்விக்கு அதிரா? நானே அப்படி முடிவு கட்டி விட்டேனா? என்று கேட்டிருக்கிறார்.
    இல்லை,நானாக முடிவு கட்டவில்லை. தமிழ்நாட்டை பொருத்தவரை பகுத்தறிவு பாசறையிலிருந்து வந்தவர்களே இதை
    தங்கள் செயல்களால் நிரூபித்து வருகிறார்கள். ஒரு முறை அன்பழகனே அவர்கள்," நாத்தீக வாதம் நீர்த்துப் போய்தான் விட்டது, இதை ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும்" என்றார்.

    புராணங்களையும், ஜோதிடத்தையும் கேலி செய்தவர்களின் தொலைக்காட்சி சானலில் தினமும் காலையில் ஆலய வழிபாடு, ஆன்மீக கதைகள், ஜோதிடம் என்று நிகழ்ச்சிகள். எட்டு முப்பதிலிருந்து, எட்டு நாற்பது வரை ஒருவர் கைரேகை பார்க்க கற்றுத் தருகிறார். பிறகு 9:00 - 9:30 ஜெய் ஹனுமான், 9:30 -10:00 விநாயகர், 10:00 - 10:30 சாய் பாபா என்று இவர்கள் எந்த புராணங்களையும் மகான்களையும் கேலி செய்தார்களோ அந்த புராண கதைகள். இதற்குப் பெயர் என்ன? கொள்கை வேறு தொழில் வேறு என்று சொன்னால் அது .....

    இந்த பகுத்தறிவு பாசறைகளின் வீடுகளில் பூஜை அறை இருப்பதும், அவர்கள் செய்யும் ஹோமங்களும்தான் பத்திரிகைகளிலும், வாட்சாப்பிலும் சிரிப்பாய் சிரிக்கிறதே? உங்களுக்குத் தமிழக நிலை தெரியாது. எனக்கு வெளி இடங்களின் நிலை தெரியாது. அதனால்தான் மற்ற இடங்களில் எப்படி என்று கேட்டிருந்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நியாயமான பார்வை. நானும் இதை நினைப்பதுண்டு.

      நீக்கு
    2. "நாத்தீக வாதம்" என்பது வந்ததற்கு ஒரே ஒரு காரணம்தான் உண்டு. அது பிராமணர்களின் டாமினேஷனைக் குலைக்கவேண்டும் என்று நினைத்ததுதான். ஏனென்றால் அதன் பெயராலேயே, அவர்கள் சமூகத்தில் அதிகமான பங்கு பெறுகிறார்கள் என்பதுதான். அதனால்தான் 'கடவுள் இல்லை' என்ற கோஷமே வந்தது. கருணாநிதியோ இல்லை கி.வீரமணியோ மற்ற மடாதிபதிகளை (பிராமணர் அல்லாதவர்களை) சந்திப்பதில் தயக்கம் காட்டாததன் காரணமும் இதுதான்.

      உண்மையாவே 'கடவுள் இல்லை' என்ற கொள்கை நோட்டா % ஐவிட மிகக் குறைவான மக்களுக்கு இருக்கலாம். மற்ற எல்லோரும் கடவுளை ஏற்றுக்கொள்பவர்களே.

      நீக்கு
  27. முதிர் கன்னர்கள் அதிகமாக இருப்பதற்கு பல்வேறு காரணங்கள்:
    unrealistic expectations on both sides.
    ஜோதிட ரீதியாக பார்க்கும் பொழுது சில குறிப்பிட்ட கால கட்டங்களில் பிறந்தவர்களுக்கு திருமணம் லேட்டாக நடக்கும். 1951,1957,1976(நவம்பர் முதல் 1977 ஜனவரி வரை), 1979, 1985 இந்த ஆண்டுகளில் பிறந்தவர்களுக்கு திருமணம் தாமதம்.
    ஜாதகத்தில் குரு, சுக்கிரன், ராகு போன்றவை திருமண வாழ்க்கையை தீர்மானிக்கின்றன. மகர ராசியில் ராகு இருக்க பிறந்த பலருக்கு விரைவில் திருமணம் முடிந்து விடும். சில விதி விலக்குகளும் உண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்குத் தெரிந்து இதில் குறிப்பிட்ட வருடங்களுள் சிலவற்றில் பிறந்தவர்களுக்கு 19 வயது, 23 வயது மற்றும் 20 வயதுகளில் (அனைவரும் பெண்கள்) திருமணம் ஆகியுள்ளது. அதற்கு கிரஹங்கள் எப்படி இருந்திருக்கும்? 76 நவம்பர் முதல் 77 ஜனவரி வரை என்பதில் சிலருக்குச் சீக்கிரம், சிலருக்கு 35 வயதும் ஆகி உள்ளது.

      நீக்கு
    2. பானுமதி சொன்னது மட்டும் காரணம் இல்லை. பெண்கள் குறைவாக இருப்பதும் ஒரு காரணம். எழுபதுகளில் இருந்தே திருமணம் ஆனவர்கள் பெண் குழந்தைகள் வேண்டாம் என ஒதுக்கியதால் வந்த விளைவும் கூட! கள்ளிப்பால் கொடுப்பது மட்டுமல்ல, பல்வேறு முறைகளிலும் பெண் குழந்தை பிறந்தால் என்ன செய்வது எனப் பெற்றோர் நினைத்துப் பெற்றுக் கொள்ளாததன் விளைவு! அதுவும் தமிழ்நாட்டில் ஒரு குடும்பத்தை எடுத்துக் கொண்டால், ஒரே பெண் அல்லது ஒரே பிள்ளை என்றே இருக்கிறது. எண்பதுகளுக்குப் பின்னர் இது அதிகம்.

      நீக்கு
    3. //இதில் குறிப்பிட்ட வருடங்களுள் சிலவற்றில் பிறந்தவர்களுக்கு 19 வயது, 23 வயது மற்றும் 20 வயதுகளில் (அனைவரும் பெண்கள்) திருமணம் ஆகியுள்ளது.// இதற்கு குருவருள், இறையருள் காரணமாக இருக்கலாம். சிலர் நல்ல நேரத்தை நழுவ விட்டிருப்பார்கள். அவரவர் ஜாதகத்தில் கிரகங்கள் அமைந்திருக்கும் விதம் என்று ஒன்றிருக்கிறதே.

      நான் சொன்ன வருடங்களில் பிறந்தவர்கள் எல்லோருக்கும் திருமணம் டிலே என்று கூறவில்லை. திருமணம் ஆகாதவர்கள் இந்த வருடங்களில் பிறந்திருக்கிறார்கள் என்றேன்.

      முன்பெல்லாம் இளம் வயதில் விதவையானவர்கள், மனைவியை இழந்து மறுமணம் செய்து கொண்டவர்கள் நிறைய இருந்தார்கள். அதுவே இப்போது, டைவர்ஸ், ரீ மேரேஜ் என்று மாறியிருக்கிறது.

      நீக்கு
  28. @கில்லர்ஜி - //எதிர்ப்பு தெரிவிப்பது நமது கடமையா // - நமது கடமை என்றே நினைக்கிறேன். தணிக்கைக்குழு பாரபட்சமாக செயல்படும்போதுதான் இத்தகைய பிரச்சனை எழும். அப்போதுதான் நாம் அதனைப் பார்க்க வாய்ப்பு கிடைக்கும். பார்த்துவிட்டு (ரசித்துவிட்டு) பிறகு நமது எதிர்ப்பைத் தெரிவிக்கலாம் (மத்தவங்க பார்க்கக்கூடாது என்ற நல்லெண்ணத்தில்.. அல்லது படத்தைப் பார்க்க நினைக்காதவனும் பார்க்கட்டும் என்ற எண்ணத்தில்)

    பதிலளிநீக்கு
  29. //எப்படி இதை செய்கிறார்கள்?" என்று அதிசயப்பட்ட// - நான் 7வது படிக்கும்போது, எங்க ஊரில், ஒருவரை படுக்கவைத்து அவர் மீது போர்வை போர்த்தி, ஒரு ஆள் உயரத்துக்கு அது மெதுவாக உயரும்படி செய்தார்கள். பிறகு அந்த உயரத்திலேயே அது ஒரு சுற்று சுற்றியது. இத்தனைக்கும் எனக்குத் தெரிந்து எந்த டகால்டி வேலையும் அவங்க பண்ணலை. எப்படிப் பண்ணியிருப்பாங்கன்னு இன்னுமே அதிசயப்படறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புரியலையே? இது எதுக்கு பதில்?

      நீக்கு
    2. //சிறு வயதில் அல்லது வாழ்வின் ஏதாவது கட்டத்தில் மற்றவர்கள் செய்யும் செயலைப் பார்த்து "எப்படி இதை செய்கிறார்கள்?" என்று அதிசயப்பட்ட, அல்லது ஆத்திரப்பட்ட அல்லது அருவருப்பு பட்ட ஏதாவது ஒரு செயலை பின்னாளில் நீங்கள் செய்திருக்கிறீர்களா?// - சரியாக குறிப்பிடவில்லை நான், கீசா மேடம்...

      நீக்கு
  30. //அவள் அப்படிச் சொல்லக் காரணம் என்ன என ஆராய்வது நல்லது.// - இதுதான் மிகச் சரியான பதில், ஏன் 'நாத்தனார் இல்லாத இடத்தில் திருமணம் செய்யணும்' என்ற கேள்விக்கு. சிலர், தங்கள் அனுபவம், பார்த்தவை போன்றவற்றால் வித்தியாசமாக கண்டிஷன் போடுகிறார்கள். ஆனாலும் அவர்களுக்கு விதி வசத்தால் வேறு பிரச்சனைகள் வந்தே தீரும். இந்தப் பெண், தன் அம்மா, தன் அப்பாவின் சகோதரியால் பட்ட பாட்டினைப் பார்த்திருக்கலாம். இல்லை, சகோதரியால் தன் அப்பா பட்ட கஷ்டங்களையும் ஏமாற்றப்பட்டதையும் மனதில் வைத்திருக்கலாம். இல்லை, சகோதரிக்காக, அப்பா, தன் வீட்டை கவனிப்பதைவிட, அவளின் நலனையே பார்த்து, தன் குடும்பத்துக்கு நிறைய சிக்கல்களை வரவைத்ததை அனுபவித்திருக்கலாம்... எத்தனை கதைகள் இதில் புனையலாம்...

    எனக்குத் தெரிந்தவர், தன் கணவன் தன்னைப்போல் செக்கச் செவேல் என இருக்கணும் என்று ஆசைப்பட்டு திருமணம் செய்து வாழ்க்கை மிக சுமாராகப் போனது-கஷ்டத்தோடு. இன்னொருவர், கணவன் வேலையைவிட அவன் ஜம்முனு இருக்கணும் என்பதற்காக முக்கியத்துவம் கொடுத்து வாழ்க்கையில் அடிபட்டார்-இப்போ பசங்க நல்ல நிலைமைக்கு வந்துட்டாங்க.

    பதிலளிநீக்கு
  31. //ஊம்ஹும் நான் சத்யாவுக்குப் பிறகு தியேட்டர் பக்கமே போனதில்லை.// சத்யா என்றொரு படமா? படங்கள் பார்ப்பதுனு வைத்துக் கொண்டால் தியேட்டர் பக்கம் போகாமலேயே நிறையப் படங்கள் பார்த்திருக்கேன். என்னோட கேள்வியே தியேட்டர்களில் படம் வெளியிடுவதும், அதைப் போய்ப் பார்ப்பதும் அனாவசியச் செலவு என்பதே! நாங்க தியேட்டருக்குப் போனது எப்போன்னாக் கடைசியா எண்பதுகளில் வந்த "மை டியர் குட்டிச் சாத்தான்" படம் பார்க்கப் போனது தான்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது தவறான எண்ணம். ஒரு படத்தை தியேட்டருக்குப் போய்ப்பார்ப்பது நமக்கும் பொழுது போக, கவலைகளை மறந்து ஜாலியா ஒரு அவுட்டிங் போவதுமாதிரியான நிகழ்வு. (அதுக்காக, கோவிலுக்குப் போவேனே என்றால் சொல்பவர்கள் வயது 60+, எங்கயும் போகவேண்டாம்..இருப்பிடத்திலேயே கடவுளை கும்பிட்டுக்கொள்வேன் என்றால், வயது 80+). ஆனா எது பிரச்சனை என்றால் (எனக்கும்தான்), அங்கு கொள்ளை விலையில் விற்கும் உணவுப் பொருட்களை வாங்குவது... இது நாகரீகம் என்ற பெயரால், பெற்றோர் காசு கொள்ளைபோவதை அனுமதிப்பது. 15 ரூபாய் பாப்கார்ன் 120 ரூபாய்.. கொள்ளைக்கு அளவில்லையா?

      நான் பாகுபலி 1, 2 இரண்டையும் நாலு நாலு முறை பார்த்தேன். ஒரு தடவையும் சாப்பிட ஒரு சல்லிக் காசும் செலவு செய்யவில்லை... இந்த மாதிரி படங்களை தியேட்டரில்தான் பார்க்கமுடியும்.

      நீக்கு
    2. நாங்கள் சிறுவர்களாக இருந்த பொழுது, சினிமாவுக்குச் செல்ல வேண்டும் என்று பெர்மிஷன் கேட்டால், எங்கள் மாமா, பாட்டி இவர்களெல்லாம், " அந்த பணத்தில் ஒரு வாரத்துக்கு கறிகாய் வாங்கலாம், ஒரு மாசத்துக்கு காபி காபி பொடி வாங்கலாம்.." என்றெல்லாம் சொல்வார்கள். அப்போதெல்லாம் முதல் வகுப்பே ரூ.2.50 தான். கறிகாயும், காபிபொடியும் மட்டுமா வாழ்க்கை? man is not living on bread alone.

      நீக்கு
    3. குடும்ப நிலைமை அப்படி இருக்கும்போது வேறென்ன சொல்வார்கள்? குழந்தைகள் நிலைமை புரியாமல் கேட்டால் பெரியவங்களுக்கு தர்மசங்கடமாகவும் இருக்கும். உண்மையைச் சொல்லப் போனால் காசு கொடுத்துத் திரைப்படம் போவது என்பது எங்க அப்பா வீட்டில் இருந்தவரைக்கும் லக்சுரி தான்/ஆடம்பரம் தான்! பாஸ் கிடைச்சால் தான் திரைப்படத்துக்கே போவோம். இது நிதர்சனம் பின்னாட்களிலும் அதிகம் படங்களுக்கு எனச் செலவு செய்ததில்லை. முன்பதிவு செய்து பார்த்த ஒரே திரைப்படம் குட்டிச் சாத்தான். அதுக்கு அப்படித் தான் போகணும்னு வைச்சிருந்தாங்க!அதுவே ஒரு ஊருக்குப் போறாப்போல் காலம்பர டிஃபன், மத்தியானச் சாப்பாடு என எல்லாம் கொண்டு போக வேண்டி இருந்தது. தியேட்டர் 2 பேருந்து மாறிப் போகும் தூரம். அந்த ஒரே தியேட்டரில் தான் ஓடிக் கொண்டிருந்தது.

      நீக்கு
    4. முதல் வகுப்பு 2.50 தான் என்று சொன்னாலும் அந்த இரண்டரை ரூபாய்க்குப் பெரியவங்களுக்குச் சிரமமாகத் தான் இருக்கும். அதுவும் நாலைந்து குழந்தைகள் இருந்தால்? அப்போதெல்லாம் சம்பளமும் இரண்டு இலக்கங்களில் தான் அநேகமா! மூன்று இலக்கச் சம்பளம் என்றாலே பணக்காரங்க!

      நீக்கு
  32. //நாம் ஒரு நாவலை அல்லது தொடரை அல்லது கதையைப் படிக்கும்போது, அதில் வருகின்ற ஏதோ ஒரு கதாபாத்திரத்தை நாமாகவோ அல்லது நமக்கு மிகவும் நெருக்கமாகத் தெரிந்த ஒருவராகவோ கற்பனை செய்து படிப்போம்.//
    நான் அப்படி செய்வதில்லை. அப்படி செய்தால் அந்த கதையை, கதா பாத்திரத்தை நம்மால் சரியாக புரிந்து கொள்ள முடியாது. ஆனால் படிக்கும் பொழுது, அல்லது படித்து முடித்த பிறகு நமக்கு தெரிந்த சிலரை பிரதிபலிப்பது போல தோன்றும்.

    சாதாரணமாக கதாசிரியர்கள் கதா பாத்திரங்களை அமைக்கும் பொழுது, அதில் அவர்களை பாதித்தவர்களின் பாதிப்பு இருக்கும், ஆனால், நிஜத்தை அப்படியே எழுதி விட முடியாது. நிஜத்தோடு தங்கள் விருப்பங்களை கூட்டியோ, குறைத்தோதான் எழுத முடியும். (மோக முள் எழுதியதைப் பற்றிய தி.ஜானகிராமனின் பதிவு ஒன்று எ.பி. வாட்சாப் க்ரூபில் கூட வந்ததே). மோக முள் ஜமுனா மாதிரி ஒரு பெண்ணை நான் பார்த்ததே இல்லை.

    அதைப் போலத்தான் பொன்னியின் செல்வனும். கல்கியின் அபார கற்பனை அதில் பெருக்கெடுத்து ஓடும். அதில் வரும் பாத்திரங்களோடு நிஜத்தில் வாழும் மனிதர்களை இணைத்து பார்க்க முடியாது.

    இருந்தாலும் நான் என் அம்மாவை வந்தியத்தேவி என்பேன். ஏனென்றால் அதில் வரும் வந்தியத்தேவனை பற்றி எழுதும் பொழுது கல்கி, அவன் ஒரு செயலை செய்ய வேண்டும் என்று நினைப்பதற்கும், செய்து முடிப்பதற்கும் கால வித்தியாசமே இருக்காது, செய்ய வேண்டும் என்று நினைக்கும் பொழுதே செய்து முடித்து விடுவான் என்று எழுதியிருப்பார். எங்கள் அம்மாவுக்கும் அப்படிப்பட்ட ஒரு செயல் வேகம் உண்டு. ஆனால், அவசரக்காரர் கிடையாது.

    பதிலளிநீக்கு
  33. நான்தான் ஆழ்வார்க்கு அடியான். எங்கேயாவது எப்போதாவது திடீரென்று தலையைக் காட்டுவேன். வந்தியத்தேவன் போகுமிடம் (படிக்கும் பிளாகுகள் ) எல்லாம் நானும் போவேன்
    வந்தியத்தேவன் யார் என்பது உங்களுக்கு முன்னமே தெரியும்.

    ​​Jayakumar

    பதிலளிநீக்கு
  34. ஆஆஆஆஆஆஆஆஅ மீ தான் 100 ஆவதூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ:)).. ஆதியும் மீயே அந்தமும் மீயே.... ஹா ஹா ஹா:))

    பதிலளிநீக்கு
  35. வந்தியத்தேவன் யார் என்பது உங்களுக்கு முன்னமே தெரியும். //////////யார்..தெரியவில்லையே.

    பதிலளிநீக்கு
  36. அனைவர்க்கும் உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  37. எல்லாரும் குறிப்பா எங்கள் பிளாக் ஆசிரியர்கள் நான் கேள்வி கேட்காததால் ரொம்ப சந்தோஷமா இருக்காப்ல தோணறது இதோ வந்துட்டே இருக்கு :) உங்களை நோக்கி

    பதிலளிநீக்கு
  38. எங்கள் சென்ற வாரக் கேள்வியாகிய,

    உங்கள் வாழ்க்கையில் நீங்க கடந்து வந்த நாட்களில், ஏதோ ஒரு நாளை, திரும்ப கொண்டுவரலாம் என்றால், நீங்கள் திரும்பக் கொண்டு வர நினைக்கின்ற நாள் எது? ஏன்? //

    ஆஹா இப்போதான் பார்க்கிறேன் இதை ..
    எத்தனையோ சம்பவம்ஸ் இருக்கு சிலவற்றை திருப்பி கொண்டுவர முடியாது .அததை அப்போவே ரசிச்சிடனும் என்ஜோய் செஞ்சிடணும் . என் பட்டு ரோஜா குட்டி பிறந்து 3 நாளில் என்னை பார்த்து பொக்கை வாய் கன்னக்குழி காட்டி சிரிச்சா அது இப்போ பார்க்கணும் அப்புறம் எங்க கல்யாண நாள் எங்க இருவரின் உடைகளையும் ( காஞ்சிபுரம் வெண் சந்தன பட்டு /மற்றும் கணவரின் கோட் சூட் ) இவற்றை வரிசை தட்டில் வச்ச ஆளை தேடிப்பிடிக்கணும் ..யார் வச்சானே தெரில ரெண்டு பேருக்கும் ஒற்றுமையா வர மாதிரி விலை சீட்டை கழட்டாமலேயே வச்சிருக்காங்க அது தெரியாம ரெண்டு பேருமே ரசீதோடயே எங்க திருமணத்தில் சுத்திட்டிருந்திருக்கோம் கர்ர்ர்ர்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா ! சூப்பர் நினைவலை.

      நீக்கு
    2. அந்த price tags இன்னும் ரிமூவ் பண்ணவில்லையே நாங்க :)

      நீக்கு
    3. அதோடு ஒரு ஃபோட்டோ போட வேண்டியதுதானே? கல்யாணத்திற்கு தைத்த ப்ளவுஸ் இப்போது போட முடியாதுதான்... வேறு ப்ளவுஸ் போட்டுக்கொள்ளுங்கள்.

      நீக்கு
  39. குறளோடு ஆரம்பித்தது சிறப்பு...

    அனைத்தும் அருமை...

    நன்றி...

    பதிலளிநீக்கு
  40. 1, உண்மை பேசுவதாக நினைத்து பிறர் மனதை புண்படுத்துவது சரியா ?
    அப்படி சமீபத்தில் நடந்த நிகழ்வு அல்லது சம்பவம் இருக்கா ?

    2, கடவுள் இல்லை என்கிறார்களே அது எப்படி அவர்களுக்கு தெரியும் ? atheism கற்றுக்கொடுப்பது எதை ?

    3, தீயன தீமை இல்லாமல் நல்லதை புரிந்துகொள்ள முடியுமா ?

    4, நம் வாழ்க்கையில் எதையெல்லாம் நம்மால் கண்ட்ரோலில் வைக்க முடியும் ? கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும் என்று நீங்கள் நினைப்பது எவையெவை ?

    5,உலகம் அழிந்தபின் நாமெல்லாம் மேலே போய்டுவோமே அங்கேயும் வாழ்க்கை இப்படித்தான் இருக்குமா ?
    இது கண்டிப்பாக சிரி :) யஸ் கேள்விதான் ஒரே இடத்தில நாமெல்லாம் கூடவே அனுஷ் தமன்ஸ் இவங்களும் இருந்தா எப்படி இருக்கும்னு நினைச்சி பார்த்தேன் :))))))))))))

    6, வாழ்க்கை என்பது கொஞ்ச காலம்தான் அதனால் இயன்றவரை சந்தோஷமா இருக்கணும் நாலுபேரையாவது சிரிக்க வைக்கணும் என்ற கொள்கை பற்றி உங்கள் கருத்து என்ன ?

    7, இறந்தோருக்கு மறைந்தோருக்கு மரியாதை கொடுக்கணும்னு தானே நம் பெற்றோர் சொல்லி வளர்த்திருக்காங்க,ஆனா அப்படி மறைந்தவர்களின் இருண்ட பக்கங்களை தோண்டி எடுப்பது நியாயமா ?

    8, வரும் முன் காப்பது நல்லதா ? வந்த பின் காப்பது நல்லதா ? இதிலநோய் பற்றி மட்டும் கேட்கலை பொதுவா வாழ்வில் எதிர்கொள்ளும் பல விஷயங்களை அலசி யோசித்து கேட்கிறேன் . நீங்கள் வரும்முன் காப்போனா அல்லது வந்தபின் காப்பவரா ?

    9, நான் அஞ்சாங்க்ளாஸில் படிக்கும்போதிருந்து லவ் ,4 வது படிக்கும்போதிலிருந்து லவ் ,அப்பா பர்சில் திருடினேன் கடையில் திருடினேன் , டீச்சரை சைட் அடிச்சேன் சிகரெட் திருட்டு தம்மடிச்சேன் என்று பப்லிக்கா காதல் மற்றும் சுய பிரதாப பெருமைகளை அள்ளிவீசுவோர் செய்வது சரியா ? இதுங்க பாட்டுக்கு இப்படி சொல்கிறார்கள் இதைப்பார்த்து சபலத்தில் வீழ்வது மனவலிமையற்ற சின்னஜிறுசுகள் அல்லவா ?
    இதெல்லாம் பெருமைக்குரிய விஷயம்னு பொது வெளியில் சொல்லக்கூடியவைகளா ???

    10,இதை செய்யணும் செய்யணும்னு நினைத்து அதை செய்ய சந்தர்ப்பம் அமையாமற்போன விஷயம் ஏதேனும் உண்டா ?

    11, ஜஸ்ட் ஈட் (just eat) ஆன்லைனில் உணவு ஆர்டர் கொடுத்து செக்கவுட் வரும்போது ஒரு மசாலா தோசை விலை மட்டுமே நம்மூர் கணக்கில் நானூறு ரூபாயா என்று அலறி கேன்ஸல் செய்து அவசர அவசரமா அரிசி உப்புமா கிளறுவோர் பற்றி உங்கள் கருத்து ??
    இந்த கேள்விக்கு மட்டும் நல்ல பதில் பாராட்டுக்களுடன் வேண்டும் :))))))))))))))))

    12,நல்ல சந்தோஷமான திருமண வாழ்க்கைக்கு முக்கியமானவை எவையெவை ??
    நான் நினைத்து வைத்திருப்பதை அடுத்த வாரம் சொல்வேன் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ////11, ஜஸ்ட் ஈட் (just eat) ஆன்லைனில் உணவு ஆர்டர் கொடுத்து செக்கவுட் வரும்போது ஒரு மசாலா தோசை விலை மட்டுமே நம்மூர் கணக்கில் நானூறு ரூபாயா என்று அலறி கேன்ஸல் செய்து அவசர அவசரமா அரிசி உப்புமா கிளறுவோர் பற்றி உங்கள் கருத்து ?////

      ஹா ஹா ஹா இது அஞ்சுட ஜொந்த அனுபவம்போல இருக்கே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)...

      நம்மவர்கள் சிலரைத் திருத்தவே முடியாது:)..

      நான் இங்கு வந்த புதிசில் அப்படித்தான் ஊர்க் காசைக் கொன்வேர்ட் பண்ணிப் பண்ணி மயங்கி மயங்கி விழுவேன்... என் கணவர் சொன்னார் இனி ஊர்க்காசை மறந்திடோணும் இங்கத்தையதை... அப்படியே ஏற்றுக் கொள்ளுங்கோ என... அத்தோடு பழகிட்டேன்.

      நீக்கு
    2. ஆங் இன்னொரு கேள்வி

      13, கோவிந்தா கோவிந்தா என்பது எதை குறிப்பது ?
      எப்ப எந்த சூழலில் சொல்லப்படுவது ..( மேலே எங்க தலைவி எழுதின பின்னூட்டத்தை வைச்சிதான் இந்த கேள்வி உதித்தது )

      நீக்கு
    3. நன்றி ஏஞ்சல் - பதில் அளிப்போம்.

      நீக்கு
    4. கோவிந்தா கோவிந்தா:).... இது அம்மாதான் கேள்வி கேட்டா என்னை:)...
      திருப்பதிக்குப் போய் அங்கு அம்மா அரோகரா என்றாவாம்... மாமா சொன்னாராம் இல்ல இங்கு கோவிந்தா எனத்தான் சொல்லோணும் என:)... எனக்கும் ஏனெனப் புரியேல்லை:)...
      பதில் வரட்டும்

      நீக்கு
    5. அரோகரா கந்தனுக்கு தான் சொல்வாங்க னு நினைக்கின்றேன் .சரியான பதிலை poosaarukku தெளிவா சொல்ல கீதாக்காவை சபைக்கு வருமாறு அழைக்கின்றேன்

      நீக்கு
    6. ஹரஹரோஹரா என்பது சிவனுக்குள்ள நாமம், கோவிந்தா என்பது விஷ்ணுவின் நாமம். ஏற்கெனவே மார்கழி மாதப் பதிவுகளில் கோவிந்தாவின் விளக்கம் எழுதினேன். சுட்டி தேடித் தருகிறேன். என்னை அழைத்ததுக்கு அஞ்சுவுக்கு நன்றி.

      நீக்கு
    7. 14,எச்சூஸ்மீ கௌதமன் சார் .இன்னொரு கேள்வியும் சேர்த்துக்கோங்க :)
      ஒருவரை அதிகபட்சம் கோபப்படுத்தவைப்பது கோபப்படுத்துவது எது ?
      a ,விளையாட்டு சீண்டல்கள் எல்லைமீறும்போது ?
      b ,ஒருவரின் மனநிலையை உணராமல் எதிரிடத்தில் உள்ளவர் பேசும் பேச்சு ?
      c ,உணவு, சூழல், மருந்துகள் ?
      d ,புரிதலின்மை ?

      15, யுக்தி /குயுக்தி எப்படி வேறுபடுகிறது ?
      முகப்புத்தகத்தில் ஒரு பழக்கமில்லா மியூச்சுவல் நட்பு புகைப்படத்தை இன்பாக்ஸ் செய்தார் .பின்பு உடனே அசோ இது வேறொருவருக்கு அனுப்ப வேண்டியது தெரியாமல் உங்களுக்கு அனுப்பிட்டேன் என்று சொன்னார் .இது யுக்தியா குயுக்தியா ?
      இப்படிப்பட்ட சில குள்ளநரி உக்தியுள்ள குயுக்தியுள்ள மனிதர்களை இனம் காணுவது எப்படி ?
      நான்தான் வந்தபின் காப்போனாச்சே :) அ :) அதான் கேட்கிறேன்

      நீக்கு
  41. ஹலோ ப்ரண்ட்ஸ் கொஞ்சம் நாள் முன்னாடி எல்லாரும் கீதாக்கா சொல்லி பொம்மை திரைப்படம் பற்றி பேசி அதன் யூ டியூப் லிங்க் தேடினோம் நினைவிருக்கா அந்த படம் லிங்க் இப்போ யூ டியூபில் இருக்கு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்க இன்னமும் பொம்மைக் காலத்திலேயா இருக்கிறீங்க அஞ்சு கர்ர்ர்ர்ர்ர்ர்:)..
      காஅ காஅ காஅ .... நான் சிரிக்கிறேன்:)

      நீக்கு
    2. கர்ர்ர்ர் :) அது நீயும் பொம்மை நானும் பொம்மை பாட்டு எவ்ளோ பிரபலம் உங்க அங்கிள் ஜேசுதாஸ் பாடினது அது நினைவில் ஹம் செஞ்சிட்டே கேள்விகளை எழுதும்போது சும்மா யூடியூபில் தேடினதும் படம் கிடைச்சது

      நீக்கு
    3. ஓஓ எனக்கு ரொம்ம்ம்ம்ம்ம்பப் பிடிச்ச பாட்டது...

      நீக்கு
    4. உண்மையில் அருமையான தத்துவப்பாடல் .ஹம் செய்யும்போதே லிங்க் கிடைச்சது ..இன்னிக்கு எதேச்சையா ஹம்மினேன் ..அதில் ஆத்மார்த்தமான எதோ ஒன்று ஒளிந்துள்ளது .இன்னிக்கு கொஞ்சம் மைண்ட் அப்செட் வேறயா இங்கே வந்து பேசி கேள்வி கேட்டு அதோடு பாட்டையும் கேட்டு நல்லா தெளிவாகிட்டேன்

      நீக்கு
    5. கிடைச்சது, கிடைச்சது, தாங்கீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ், அந்தக் காலங்களில் இது மதுரை மேலமாசி வீதி, வடக்கு மாசி வீதி சேரும் இடத்தில் இருந்த பழநி என்ற சந்திரா தியேட்டரில் இரு முறை திரையிடப்பட்டுக் கூட்டம் தெரு தாங்காமல் போக்குவரத்தே ஸ்தம்பித்தது. இந்தப் படத்திற்கு எங்களுக்குப் பாஸ் கிடைக்கவில்லை. :P நாங்க தான் டிக்கெட் வாங்கி எல்லாம் ஜினிமா பார்க்கும் ரகமே இல்லையே! அதனால் பார்க்கவே இல்லை. இன்னிக்கு மத்தியானம் மின்சாரம் இருக்கணும்! பார்த்துட்டு நெல்லைத் தமிழர் விருப்பப்படி ஒரு விமரிசனம் எழுதிடலாம். என்ன சொல்றீங்க??

      நீக்கு
    6. கீதாக்கா சீக்கிரம் ரிவியூ போடுங்க :))))))

      நீக்கு
    7. ஏஞ்சல் மூவி லிங்க் கிடைத்துவிட்டது....நானும் திடீரென்று வேறு எதற்கோ பொம்மை என்று போட்டுத் தேட லிங்க் கிடைத்தது இங்கு பதிய முடியவில்லை வந்து பார்த்தால் நீங்களும் சொல்லிருக்கீங்க.

      பார்க்கணும் படம்..

      கீதா

      நீக்கு
  42. //அவள் அப்படிச் சொல்லக் காரணம் என்ன என ஆராய்வது நல்லது.// இது குறித்து நெ.த.விளக்கமாக பதில் எழுதியிருக்கிறார். ஆனால் இவை எல்லாம் வாழ்க்கையில் தவிர்க்க முடியாதவை என்பதையும், நாத்தனார்,மன்னி/தம்பி மனைவிக்கு இடையே எழும் சிறு பூசலில் குழந்தைகள் தலையிடக் கூடாது என்பதையும் தாயோ தந்தையோ குழந்தைகளுக்கு புரிய வைத்தால் நாத்தனார் இல்லாத இடம் வேண்டும் என்று கேட்டிருக்க மாட்டாள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில நாத்தனார்கள் அண்ணனுக்குத் திருமணம் ஆகி 40 வருஷம் ஆனாலும் எங்க அண்ணா, நான் தான் சமைத்துச் சாப்பாடு போடுவேன், நான் தான் அண்ணாவுக்கு எல்லாம் செய்வேன், எங்க அண்ணா இப்படித்தான் சாப்பிடுவார், இது சாப்பிட மாட்டார் என்றெல்லாம் தலையிடுவார்கள்! தலையிட்டுக் கொண்டும் இருப்பார்கள்/இருக்கிறார்கள். அண்ணன் மனைவி அண்ணாவுக்குப் பிடித்தது/பிடிக்காதது எனச் சொல்வதை ஏற்கவே மாட்டார்கள். அதுக்கு என்ன பண்ண முடியும்? தலைவிதியே என அந்த அண்ணன் மனைவி அனுபவிக்க வேண்டியது தான்! :)))) இஃகி,இஃகி,இஃகி!

      நீக்கு
    2. நா கொ வால் ரொம்ப பாதிக்கப்பட்டவர் போலிருக்கு!

      நீக்கு
    3. // நாத்தனார்,மன்னி/தம்பி மனைவிக்கு இடையே எழும் சிறு பூசலில் குழந்தைகள் தலையிடக் கூடாது என்பதையும் தாயோ தந்தையோ குழந்தைகளுக்கு புரிய வைத்தால்// கோல்டன் வேர்ட்ஸ்.

      நீக்கு
  43. நாம் எல்லோரும் பூங்குழலியை சாரி தி.கீதாவை மறந்து விட்டோமே? எங்கே அவர்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தி/கீதா, ஏதோ வீட்டில் இருந்தே பணி செய்வதாகவும், அதனால் வரமுடியாது எனவும் சொல்லிக் கொண்டே இருந்தாங்களே! நினைவில் இல்லையா?

      நீக்கு
  44. ஆஆஆஆ பூஸோ கொக்கோ... மீக்கும் கொஸ்ஸன் வருதே:)

    நெம்பர் வன்1.-
    ஏன் பறவை விலங்குகளில் மட்டும் ஆண்தான் அழகு... உதாரணம்.. மான், மயில், சிங்கம், காகம்.

    நெம்பர் ரூ2.-
    சில மனிதர்கள், சக மனிதர்கள் துன்பப்பட்டால் பெரிதாக கவனிக்க மாட்டினம் ஆனால் ஒரு விலங்கோ பறவையோ எனில் துடிப்பார்கள், பணம்கூடச் செலவளிப்பார்கள்... இந்த மைண்ட் செட்டப் உள்ள மனிதர்பற்றி என்ன நினைக்கிறீங்க?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹலோ குண்டு பூனை :) இப்போ என்ன சொல்ல வரீங்க ..பூனையாகிய உங்களுக்கு ஒண்ணுன்னா மனுஷங்க நாங்க கண்டுக்காம போகணுமா ??

      நீக்கு
    2. சரி என்னோட பதிலை இன்னிக்கே தந்துடறேன் .மனுஷங்க செய்றா ஒவ்வொண்ணும் அவங்களே தெரிஞ்சே செய்றது அவர்களின் செயல்களுக்கு அவர்களே பொறுப்பு .விழுந்தாலும் எழும்பும் வலிமை மனிதருக்குண்டு .ஆனா விலங்குகள் அப்படியில்லையே அதுங்க இடத்தை ஆக்கிரமித்த அதுங்க உணவை சூறையாடிய மனிதராகிய நாம் தான அதுங்களுக்கு ஜெல்ப் பண்ணனும் ? நம்மை
      எங்க சர்ச்சில் ஒரு பெண்மணி இருக்கிறார் சாரிட்டி வெர்க் செஞ்சு 100 பவுண்ட் கலெக்ட் பண்ணா 50 ஐ மனுஷருக்கு 50 ஐ வாயில்லா ஜீவனுக்குனு பகிர்ந்து கொடுப்பர்

      நீக்கு
  45. அழகான தொகுப்பு. தொடர வாழ்த்துக்கள். பொன்னியின் செல்வன் நாவலைப் பல முறை வாசித்து விட்டேன். ஆனால் இவ்வாறு யோசிக்கவில்லை. கொஞ்சம் யோசித்து தான் சொல்ல வேண்டும்.

    https://newsigaram.blogspot.com

    பதிலளிநீக்கு
  46. கௌதமன் சார் நான் மொத்தம் 15 கேள்வி கேட்டிருக்கேன் :))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எதுக்கு இப்போ திடீரென ஓடிவந்து கவுண்டிங் குடுக்கிறா:).... என்னவா இருக்கும்:)... எங்கினமோ இடிக்குதே ஜாமீஈஈ:)...

      15 கிளவிகள் எனில் சே சே டங்கு ஸ்லிப்பாகுதே ஜாமி:) கேள்விகள் எனில் ஏதும் வைர மோதிரம் கொடுப்பாரோ கெள் அண்ணன்???? எதுக்கும் உஜாரா இருப்போம்ம்:)..

      நீக்கு
  47. அனைத்துக் கேள்வி பதில்களும் அருமை. மதிப்பெண் கேள்விக்கு ஆசிரியராகச் சொல்வது. மதிப்பெண் மிக மிக அவசியமாகிப் போகிறது. போட்டி என்று வரும் போது வேறு எப்படித் தேர்வு செய்ய முடியும் அதுவும் லட்சக் கணக்கில் அப்ளிக்கேஷன் வரும் போது.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  48. 10 ஆம் வகுப்பில், 12 ஆம் வகுப்பில் முதல் மதிப்பெண் வாங்குபவர்கள் பின்னாளில் மிளிர்வ்தில்லை என்பதே யதார்த்தத்தில் அறிவது. அப்படி மிளிர்பவர்கள் வெரி ரேர்.

    மதிப்பெண் பெறுவது என்பது வேறு சிந்தனைத் திறன் மற்றும் அப்ளிக்கேஷன் ஓரியண்டட் லேட்டர்ல் திங்கிங்க் அறிவு என்பது வேறு. என்றாலும் நாம் விரும்புவதைப் படிக்க மதிப்பெண் அவசியமாகிப் போகிறதுதான். இல்லை என்றால் அதிகமாகக் கட்டணம் கட்டிப் படிக்க வைக்க வேண்டிய நிலை.

    இதுதான் யதார்த்தம் இங்கு

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மதிப்பெண்ணுக்கும், திறமைக்கும் இங்கு நிறைய வித்தியாசம்/Gap இருக்கிறது. எல்லாக் குழந்தைகளும் எதிலாவது திறமை மிக்கவர்கள்தாம்.

      என் பெண் சொன்னாள். சில வருடங்களுக்கு முன், சி.ஏ தேர்வில் முதல் 20 ரேங்க் வந்தவர்களுக்கு சிஏ அகாடெமியே 4-5 கம்பெனிகளுக்கு வேலைக்கு இண்டர்வியூவுக்கு அனுப்புமாம். அதில் 3-4 ரேங்க் எடுத்தவனை 5 கம்பெனிகளும் 'இவனுக்குத் தெரியலை' என்று ரிஜெக்ட் பண்ணியவுடன், சி.ஏ. இன்ஸ்டிடியூட் ஆராய்ந்தபோது, இந்தப் பையன், மனப்பாடம் படித்து தேர்வு எழுதினவன், புத்தகத்தில் இருந்த உதாரணங்கள் மாதிரி எக்ஸாமில் வந்ததை சரியாக எழுதியிருக்கிறான், ஆனால் நாலெட்ஜ் இல்லை என்று கண்டுபிடித்தார்களாம். சிஏவிலும் 'மனப்பாடம்-வாந்தி' இருப்பதை எண்ணி எனக்கு ஆச்சர்யம்.

      நீக்கு
  49. கல்வி பற்றிய கேள்விகள் வந்துள்ளதால் நான் இக்கருத்தை இங்கு பதிய விரும்புகிறேன். கல்வியோ பள்ளியின் பக்கமோ சென்றே இருக்காத ஒரு குடும்பத்திலிருந்து ஒரு குழந்தை அதற்கான ஒதுக்கப்பட்ட பட்டியலில் பள்ளியில் சேர்க்கப்படும் சமயத்தில் பள்ளியில் சேர்வது வரை மட்டுமே பேசப்ப்டுகிறது. அக்குழந்தைக்கோ வீட்டில் சரியான சூழல் கிடையாது. அப்போது அக்குழந்தைக்கு சரியான கல்வி புகட்டி அதை இப்போட்டி உலகில் தகுதியுள்ள குழந்தையாக்குவது யாருடைய கடமை ஆகிறது? பள்ளியின் கடமை அல்லது அரசின் கடமை ஆகிறது அதாவது ஆசிரியர்களின் கடமை ஆகிறது. அதுதான் முக்கியம் சேர்க்கப்படுவது மட்டுமில்லை முக்கியம். அக்குழ்ந்தைக்கு நல்ல மோட்டிவேஷன் கொடுத்து இப்போட்டி உலகில் போட்டியிடத் தகுதி உள்ளக் குழந்தைகயாக வர வேண்டும். ஏனென்றாக் இக்குழந்தை 12 ஆம் வகுப்பிலும் தேர்ச்சி பெற்று பின்னர் கல்லூரியிலும் சேர்ந்து அத்தலைமுறையில் முதன் முறை கல்லூரியில் அடி எடுத்து வைக்கும் குழந்தை ஆகிறது. அப்போது அக்குழந்தை திணறுகிறது. கல்லூரியில் படிக்க முடியாமல். எங்கு தவறு நிகழ்கிறது? அடிப்படைக் கல்வியில்.

    இதற்கு ஒரு நல்ல உதாரணம் என்னைப் பாதித்த ஒர் உதாரணம். என் மகன் கல்லூரியில் சேர்ந்த போது காரைக்காலில் இருந்து ஒரு பெண்ணும் சேர வந்திருந்தார். அவர்தான் அவர்கள் குடும்பத்தில் கல்லூரியில் அடி எடுத்து வைக்கும் முதல் குழந்தை அதுவும் ப்ரொஃப்ஷனல் கல்லூரியில். ப்ளஸ் 2 வில் 94 சதமானம் மருத்துவ சீட் கிடைக்கவில்லை. சாதிப் பட்டியலில் இருந்தாலும். அதனால் கால்நடை படிப்பு படிக்க சேர்ந்தார். அவரது குடும்பமே வந்திருந்தது 15 பேர் குடும்பத்தினர் அத்தனை பேரும் மாமா, அத்தை, பாட்டி தாத்தா என்று சின்னசிறுசுகள் எல்லாம் வந்திருந்தனர். கல்லூரியை புளகாங்கிதத்துடன் சுற்றிப் பார்த்தனர். எனக்கு ஒரே சந்தோஷமாக இருந்தது.

    இதில் என்ன வருத்தம் என்றால் அக்குழந்தைக்கு கல்லூரியில் கொடுக்கப்பட்ட அட்மிஷன் ஃபார்ம் மற்றும் ஹாஸ்டல் ஃபார்ம் ஃபில்லப் செய்யத் தெரியவில்லை. அவர்கள் வீட்டிலும் யாருக்கும் படிப்பறிவு இல்லை. எனவே நான் அவளுக்கு உதவினேன். அவள் பேசுவதற்குக் கூட முடியவில்லை. அடிப்படைக் கம்யூனிக்கேஷன். சேர்ந்தாயிற்று. ஹாஸ்டலில் யாருடனும் அதிகம் பேசவில்லை. இத்தனைக்கும் கூடப் படித்த மாணவிகள் அவளுக்கு மிகவும் உதவியாக இருந்த்னர். அவள் பாவம் என்று. மகன் நான்காவது வருடம் வந்தாயிற்று அப்பெண் முதல் வருடம் கூட பாஸ் செய்ய முடியவில்லை. கால்நடை படிப்பில் அரியர்ஸுடன் அடுத்த வகுப்பு செல்ல முடியாது. வீட்டிற்குச் சென்ற மாணவி தற்கொலை செய்து கொண்டாள். என்னை அன்று பாதித்த இந்த நிகழ்வு இப்போதும் கூட அதை நினைக்கும் போது மிகவும் வருத்தமாகிடும்.

    அப்பெண்ணின் அடிப்படைக் கல்வியில் நேர்ந்த குறைபாடு. கல்லூரியில் படிக்க இயலவில்லை. அக்குழந்தைக்கு பள்ளியிலேயே நல்ல கவனம் கிடைத்திருந்தால்...அதாவது மதிப்பெண் அல்ல மற்றவற்றிலும் ஊக்கப்படுத்தி வாழ்க்கையை ஃபேஸ் செய்ய வேண்டிய பக்குவத்தை அடிப்படைக் கல்வி அளித்திருந்தால் மோட்டிவேஷன் இன் லைஃப் கிடைத்திருந்தால் இது நிகழ்ந்திருக்காது. இதைத்தான் நான் இப்படியான பல குழந்தைகளிடமும் காண்கிறேன். இதோ இப்போதும் என் வீட்டிற்கு அடுத்த வீட்டில், என் தெருவில் இருக்கும் இப்படியான குழந்தைகளிடம் படிக்கும் ஆர்வமோ, மோட்டிவேஷனோ இல்லாததை. சும்மா பள்ளியில் சேர்ந்தால் மட்டும் போதாதே. நான் சொல்லிக் கொடுக்கும் குழந்தைகளுக்கு அடிப்படைக் கணக்கு கூடத் தெரியவில்லை பெருக்கல் தெரியவில்லை. ஆங்கிலத்தில் எறும்பு என்பதன் ஆங்கில வார்த்தை எழுதத் தெரியவில்லை. கன்னடத்தில் கூட சரியாக எழுதத் தெரியவில்லை. அறிவியல் சுத்தமாகத் தெரியவில்லை. வகுப்பு என்ன என்று கேட்டால் 6 ஆம் வகுப்பு என்கிறாள் அக்குழந்தை. நான் இந்த லீவில் சொல்லிக் கொடுக்கிறேன் என்று கூப்பிட்டால் டிமிக்கி. வீட்டிலோ அதற்கான சூழல் இல்லை. சரி அதை விஉங்கள் நீ எந்த மாநிலத்தில் இருக்கிறாய் என்றல்ல் தெரியவில்லை. நம் தேசியக் கொடி தெரியவில்லை. இந்தியா தலைநகரம் தெரியய்வில்லை. கர்நாடகாவின் கேப்பிட்டல் தெரியாது. மனம் நம் கல்வியை நினைத்து நொந்தது.

    இருந்தாலும் எங்களால் முடிந்தவரை இப்படியான குழந்தைகளை மோட்டிவேட் செய்து கொண்டே இருக்கின்றோம். ஒரு குழந்தையாவது மோட்டிவேட் ஆகி நல்ல கல்வி பெறாதா என்ற நம்பிக்கையில். நப்பாசையில். இக்குழந்தைகளுக்கும் கல்லூரியில் அடி எடுத்து வைக்கும் இப்படியான இளைஞர்கள் மாணவிகளுக்கும் சேர்க்கை மட்டுமல்ல மோட்டிவேஷன் மற்றும் சிந்தனைகளைத் தூண்டும் அறிவை கல்வியைத் தேடிப் பெறுதல் தன்னை இப்போட்டி உலகிற்கு ஏற்பத் தயார்படுத்தித் தகுதி பெற மொட்டிவேஷன் மற்றும் தன்னம்பிக்க என்பதுதான் முக்கியம் என்பதும் இவர்களுக்குக் கிடைக்கப் பெற வேண்டும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @கீதா ரங்கன் - //இப்படியான குழந்தைகளை மோட்டிவேட் செய்து கொண்டே இருக்கின்றோம். ஒரு குழந்தையாவது மோட்டிவேட் ஆகி நல்ல கல்வி பெறாதா என்ற நம்பிக்கையில். // - இன்றைக்குத்தான் எதேச்சயாக உங்கள் பின்னூட்டத்தைப் படிக்க நேரிட்டது. மேற்கத்தைய நாடுகளில் இந்த ரெஸ்பான்சிபிலிட்டி பள்ளியை, அதில் உள்ள ஆசிரியரைச் சேர்ந்தது.(பள்ளிக்கல்வி இறுதி வரை). நம்ம ஊரில் ஒரு சில ஆசிரிய/ஆசிரியைகளைத் தவிர, மற்றவர்களுக்கு இந்த ரெஸ்பான்சிபிலிட்டி தங்களுடையது என்ற எண்ணமே கிடையாது என்பது ரொம்பவும் வருந்தத்தக்கது.

      உங்களுடைய சமூகச் சிந்தனையைப் போற்றுகிறேன். அத்தகைய எண்ணம் எனக்கு வரலை என்பது வெட்கமாகத்தான் இருக்கிறது. வாழ்த்துகள்.

      நீக்கு
    2. பயனுள்ள கருத்துப் பரிமாற்றங்கள். எல்லாவற்றையும் ஆர்வமுடன் படித்தேன். நன்றி.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!