ஞாயிறு, 11 ஜூன், 2023

நான் வியந்த ஓவியர் – மாருதி – பகுதி 1:: நெல்லைத்தமிழன்

 

எனக்கு ஓவியங்கள் மிகவும் பிடிக்கும். அதனால் கதைகளுக்கான ஓவியங்கள் எப்படி வரைந்திருக்கிறார்கள் என்று ஊன்றிக் கவனிப்பேன். 

எனக்குப் பிடித்த ஓவியர் ஜெ… இதன் காரணம் கம்ப சூத்திரமல்ல. பதின்ம வயதில் எங்களைக் கவர்வதுபோல படங்கள் வரைந்த ஓவியர் அவர். அதிலும் சுஜாதா தொடர்கதைகளுக்கு அவர் வரையும் ஓவியம் எனக்கு மிகவும் பிடித்தமானது. 


ஓவியர் மாருதியின் ஓவியங்கள் என்னைப் பெரும்பாலும் கவர்ந்தில்லை. இதன் காரணம், பதின்ம வயதினர் எதிர்பார்க்கும் ‘கவர்ச்சி’ அவற்றில் இருக்காது. ஆனாலும் அடர்த்தியான புருவம், அழகிய கண், தெளிவான முகம் என்பதில் அவர் கைதேர்ந்தவர். 


சாண்டில்யன் நாவல்களுக்கு ஓவியர் லதா அவர்கள் வரையும் ஓவியங்களும் என்னைக் கவர்ந்தவை.  ஓவிய மணியம் அவர்கள், கல்கியின் வரலாற்று நாவல்களுக்குப் படங்கள் வரைந்து அவற்றை நம் கண் முன்னால் கொண்டுவந்தவர். வந்தியத் தேவன் என்றால் இப்படித்தான் இருந்திருக்கவேண்டும், இந்த இந்த கதாபாத்திரம் இப்படித்தான் இருந்திருப்பார்கள் என்று நம்மை எண்ணவைத்தவர். ஓவியர் வினு இன்னும் சிறப்பானவர் என்பது என் அபிப்ராயம். மணியம் செல்வனின் ஓவியங்கள் அது ஒரு விதம். குறை சொல்ல ஒன்றுமில்லை. இருந்தாலும் நிறைய கோடுகளுடன் கூடிய ஓவியங்கள் அவருடையது. எனக்கு அவ்வளவாகப் பிடிக்காதது. 

ஓவியர் பத்மவாசன் அவர்கள், கல்கி வரலாற்று நாவல்களுக்கு வரையும் ஓவியங்கள். அவரைக் குறை சொல்லவில்லை. ஆனால் அந்த ஓவியங்கள் என்னைக் கவரவில்லை.  

அது சரி… நான் வியந்த ஓவியர் என்று தலைப்பு கொடுத்துவிட்டு, எனக்கு ஜெ.. வரையும் படங்கள்தாம் பிடிக்கும் என்றால் என்ன அர்த்தம்? அவசரப்படாதீங்க… தலைப்புக்கு வருகிறேன்.

இந்த ஓவியர்கள் வரையும் பெண் உருவங்களைப் பார்த்தால் ஓரளவு ஒரே மாதிரி அமைந்திருக்கும். (சில விதிவிலக்குகள் உண்டு).  ஆனால் சமீபத்தில், தேவியின் கண்மணி பத்திரிகையின் முகப்பு அட்டைகள் சிலவற்றைப் பார்த்தபோது, ஒவ்வொரு இதழில் உள்ள பெண்ணின் முகமும் வித்தியாசமாக அமைந்திருந்தார் ஓவியர் மாருதி அவர்கள். 

ஒரு ஓவியர், இத்தனை வித்தியாசமாக இத்தனை பெண் உருவங்களை ஓவியமாகத் தீட்ட முடியுமா? இதுவே என் வியப்புக்குக் காரணம். அந்தப் பத்திரிகை அட்டைப் படங்களுக்கு மிக மிகக் குறைவான கவனமே செலுத்தி ஓவியர் வரைந்திருக்கிறார் என்றே கருதுகிறேன் (வரவு மிகக் குறைவாக இருந்திருக்கும். அதனால் சட் சட் என்று வரைந்திருக்கிறார்).  அல்லது என் அனுமானமே தவறாகவும் இருக்கக்கூடும். காரணம் பத்திரிகை, தன் அட்டைப் பட ப்ரிண்டிங்கை சீப்பாக பிரிண்ட் செய்திருக்கலாம். இருந்தாலும் ஒவ்வொரு முகத்தையும் வித்தியாசமாகக் காண்பித்தது என்னை மிகவும் கவர்ந்தது. இதனை ஞாயிறு பதிவாக ஆக்கலாமா என்ற சந்தேகம் வந்து கௌதமன் சாரின் அனுமதியைப் பெற்றேன்.  

ஒரு வாரத்தில் முடித்துவிடலாம் என்று பார்த்தால் என்னிடம் இருந்தது 120க்கும் அதிகமான முகங்கள். அப்புறம் என்ன? மூன்று வாரத் தொடராக இது வரும்.

அவர் மிகுந்த கவனம் செலுத்தி வரைந்த ஓவியங்களாக நான் கருதுவதையும் ஒவ்வொரு வாரமும் இறுதிப் பகுதியில் பகிர்கிறேன். மிக அழகாக வரையும் திறமை உடையவர் அவர்.


பிறகு சந்திப்போம். 
= = = = = =

94 கருத்துகள்:

 1. எந்தெந்தப் படங்கள் எந்தெந்த நடிகையின் இன்ஸ்பிரேஷனில் வரையப்பட்டது என்று ஒரு போட்டி வைக்கலாம்!  

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸ்ரீராம்ஜி அனுஷ்காவை மனதில் வைத்து வரைந்து இருப்பார் மாருதி.

   நீக்கு
  2. நானும் அப்படி யோசித்துப் பார்த்தேன். சில படங்கள் பிடிபடுவதுபோல் இருந்தன. இருந்தாலும் காம்பினேஷன்களில்தான் ஓவியர் வரைந்திருக்கக்கூடும். இதுவே நான்கு பகுதிகளாக வரும், வெவ்வேறு சந்தர்ப்பங்களில்

   நீக்கு
  3. மீனா, பானுப்ரியா முகங்கள் சட்டென பிடிபடுகின்றன.  மீனா முகத்தை  அவருக்கு  ரொம்பப் பிடிக்கும் போல..

   நீக்கு
  4. தேவகோட்டையாரே...   எந்தப் படத்திலும் அனுஷ்கா சாயல் இல்லை.  பாவனா சாயல், சரோஜா தேவி முகத்தோடு வேறு சாயல் கலந்து என்றெல்லாம் இருக்கிறது!

   நீக்கு
  5. மீனா, பாவனா இத்தனை தொழில்நுட்பம் எனக்கு தெரியாது ஸ்ரீராம்ஜி

   நீக்கு
  6. //மீனா முகத்தை// ஒருவேளை நமக்குப் பிடிப்பதால் எந்த முகத்தைப் பார்த்தாலும் மீனா சாயல் தெரிகிறதா?

   நீக்கு
  7. //மீனா, பாவனா இத்தனை தொழில்நுட்பம் எனக்கு தெரியாது// - பின்ன... திரைத்துறையினரை கூத்தாடி கூத்தாடின்னு சொல்லிக்கிடிருந்தா, அவங்கள்ட உள்ள நுண்ணிய அழகியலை மனது எப்படிக் காணும்?

   நீக்கு
 2. காக்க காக்க
  கனக வேல் காக்க..
  நோக்க நோக்க
  நொடியில் நோக்க..

  இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
  பிரார்த்திப்போம்..

  எல்லாருக்கும் இறைவன்
  நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

  நலம் வாழ்க..

  பதிலளிநீக்கு
 3. நல்ல பதிவு..
  அழகான படங்கள்..

  வெயிலின் தாக்கம் இனிமேலாவது குறையட்டும்!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க துரை செல்வராஜு சார்.. எங்க ஊர்லயே மதிய வெயில் சுளீர்னு இருக்கு. இன்னும் இரண்டு வாரங்களாகலாம்.

   நீக்கு
 4. அற்புதமான ஓவியங்கள் நானும் வியந்துதான் பார்க்கிறேன் படங்களை...

  பதிலளிநீக்கு
 5. ஒவ்வொரு முகமும் வித்தியாசமாகவே இருக்கின்றன. ஓவியத்தின் மீதுள்ள ஆர்வத்தால் நான் மிகவும் ரசித்தேன். அவர் 2000-3000 முகங்களுக்கு மேல் வரைந்திருப்பார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மையில் எனக்கு பெரிய வித்தியாசம் தெரியவில்லை. ஒரு குடும்பத்துப் பெண்களின் சாயல் போல கிட்டத்தட்ட ஒரே முகம்..

   நீக்கு
  2. என்னாது.... வித்தியாசம் தெரியவில்லையா? ஓ..அப்படியா? சரி சரி... ரொம்ப வயசாயிடுச்சு போலிருக்கு. எனக்கு ஒவ்வொரு முகமுமே வித்தியாசம் நன்றாகத் தெரியும்படித்தான் இருக்கிறது. தவறுதலாக ஓரிரு முகத்தைத் திரும்பவும் போட்டுவிடக் கூடாது என்பதற்காக கவனித்துத் தந்திருக்கிறேன்.

   நான்கு பகுதிகளும் வெளிவந்தபிறகு, ரிபீடட் ஆக வந்த முகங்களைக் கவனித்து கேஜிஜிக்கு அனுப்பவும், யார் அதிக முகங்களைக் கண்டுபிடிக்கிறார்களோ, அவர்களுக்கு, அவர்களுக்கு.... கேஜிஜி பரிசு தருவார்னு சொல்லிடவேண்டியதுதான்.

   நீக்கு
 6. மாருதி அவர்களது ஓவியங்களைப் பற்றி இத்தனை மதிப்பீடுகள் என் மனதில் இல்லை

  என்றாலும்
  கச்சிதமான தொகுப்பு..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஏன் அப்படிச் சொல்லிட்டீங்க துரை செல்வராஜு சார்?

   நீக்கு
 7. இவற்றில் ஒரு சில படங்கள் என்னிடமும் உள்ளன என்பதில் மகிழ்ச்சி..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்தப் படங்களை எப்படி, எங்கிருந்து, இதில் சேமிப்பீர்கள்?

   நீக்கு

  2. @ ஸ்ரீராம்..

   கொட்டிக் கொடுப்பதற்குத் தான் கூகிள் இருக்கின்றதே.. கேட்டதையும் கூடவே கேட்காததையும் கொடுக்கின்றதே...

   நீக்கு
  3. டெலக்ராம், கூகுள் என்று ஏகப்பட்டது உள்ளது. ஒண்ணொண்ணும் செயின் போல இன்னொன்றுக்கு இட்டுச் செல்லும். இது தவிர நான் கண்மணி அட்டைப் படங்களின் பெண்கள் படத்தைத்தான் இங்கு பெரும்பாலும் கொடுத்துள்ளேன்.

   நீக்கு
 8. மாருதி அவர்கள் வேறு விதமாகத் தீட்டிய சித்திரங்களும் இருக்கின்றன..

  அவற்றைக் கருத்தில் கொள்வதில்லை..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓவியம் ஓவியம்தானே... இருந்தாலும் பெண்களை அழகான சித்திரமாகத் தீட்டுவார் மாருதி

   நீக்கு
 9. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருப்பார். நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கமலா ஹரிஹரன் மேடம்... தினம் ப்ரார்த்தனையுடன் நாள் துவங்குகிறது. என்னவோ போகுது.

   நீக்கு
 10. ஓவியங்களுக்கென்று ஒரு பதிவு? மகிழ்ச்சியாக இருக்கிறது! சகோதரர் நெல்லைத்தமிழனுக்கு நன்றி!
  தலை குளித்து வெள்ளைத்துணி கட்டி புன்னகையுடன் நம்மைப்பார்க்கும் அந்த ஓவியம் மிகவும் அழகாய் இருக்கிறது!
  பாவங்களுடன் வரைந்த 'வினு', கோட்டோவியங்களில் அரசாட்சி செய்த சில்பி, வண்ணக்கலவைகளில் பிரமிக்கவைத்த 'நடராஜன்' -இவர்களைத்தான் நான் மானசீக குருவாய் கொண்டு சிறு வயதில் ஓவியம் வரைய ஆரம்பித்தேன். அப்படிப்பட்ட ஓவியங்கள், ஓவியர்கள் எல்லாம் மறைந்து போய் ரொம்ப காலமாகி விட்டது!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க மனோ சாமிநாதன் மேடம். ஓவியங்களை ரசிப்பதற்கு நன்றி. நான் ஓவியங்கள், சிற்பங்களின் ரசிகன். கொண்டையா ராஜுவை விட்டுவிட்டீர்களே. எனக்கு வினு ஓவியங்கள், குறிப்பாக சி.ச, பொ.செ போன்ற நாவல்களுக்கானது, மிகவும் பிடிக்கும். 74-75ல் ஆயனர், மகேந்திர்ர், சிவகாமி என கல்கியில் வரைந்த ஓவியங்கள் நினைவில் நிற்கின்றன

   நீக்கு
  2. எல்லா முகங்களுக்குமே மாடர்ன் ட்ரெஸ் செட் ஆகாது என்று (மாருதி அவர்களின் ஓவியங்கள்) நான் நினைக்கிறேன். மாடர்ன் ட்ரெஸ் செட் ஆவது ஜெ.., மணியம் செல்வன், இன்னும் சிலரின் ஓவியங்களில் மாத்திரமே என்பது என் எண்ணம். ஓர் ஓவியராக உங்கள் எண்ணம் என்ன?

   நீக்கு
 11. வணக்கம் நெல்லைத் தமிழர் சகோதரரே.

  இன்றைய பதிவாக ஓவியர் மாருதி அவர்கள் வரைந்த ஓவிய படங்கள் அத்தனையும் அருமையாக உள்ளது. எனக்கும் மாருதி அவர்களின் ஓவியங்கள் மிகவும் பிடிக்கும். அந்த கண்மணி அட்டைப்பட புத்தகம் கூட நானும் இவரின் அழகான ஓவியத்திற்காக பத்திரமாக வைத்திருக்கிறேன்.

  சாமுத்திரிகா லட்சணபடி ஒரு பெண், ஆண் ஓவியங்களை வரைந்திருப்பார். இவரின் ஓவியங்களை பார்க்கும் போது, நடிகை மீனாவின் சாயல் தெரியும். ஆனால் அவர் அப்போதிலிருந்தே இப்படித்தான் வரைகிறார். நீங்கள் சொல்வது போல் அடர்ந்த புருவம், அழகான கண்கள், தெளிவான முக அமைப்பு இவரின் ஓவியத்திற்கு ஒரு நல்ல பெயரை பெற்றுத்தரும்.

  மனிதர்கள் அழகாக பிறப்பதும் ஒரு வரம். அந்த அழகை நம் கண் முன்னே கொண்டு தரும் இந்த ஓவியக்கலையை இவர் பெற்றதும் ஒரு வரம். தொடர்கிறேன்.வித்தியாசமான இந்த ஞாயிறு பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கமலா ஹரிஹரன் மேடம். சாமுத்திரிகா லட்சணப்படி என்று சொல்ல இயலவில்லை. ஓவியர் லதா அதனை மனதில்கொண்டு வரைந்திருப்பார்.

   அது சரி.. சாமுத்திரிகா லட்சணப்படி இடை சிறுத்து....... என்றெல்லாம் இருக்கணுமாமே... முடிகிற காரியமா?

   நீக்கு
  2. மனிதர்கள், குறிப்பாகப் பெண்கள், மிக அழகாகப் பிறப்பது வரமா இல்லை சாபமா?

   நீக்கு
  3. வணக்கம் சகோதரரே

   வரமா? சாபமா? அதனால்தான் நான் பொதுவாக மனிதர்கள் எனச் சொன்னேன். ஆனால் பெண்களின் அழகை ஒரு போதையாய் நினைத்துப் பார்க்கின்றவர்களின் நடுவில் அந்த பெண்களுக்கு இது ஒரு சாபந்தான்.
   தெய்வீக அழகோடு வேறெந்த உள்நோக்கமுமின்றி, கையெடுத்து வணங்குகின்ற மாதிரி அமைந்தால் அது ஒரு வரமே.. எல்லாம் இறைவனின் படைப்பு.

   அழகை வைத்து ஒருவரின் மனோபாவங்களை, குணாதிசயங்களை நிர்ணயக்கவும் இயலாது. என்பதை நாம் அறிவோம். அழகால் அழிந்தவர்களும் உண்டு. அழகில்லாமல் பிறந்து மனம் சிதைந்தவர்களும் உண்டு. கர்ம வினைகளின்படிதான் தோற்றமும், வாழ்வும், முடிவும். எதுவும் சொல்வதற்கில்லை. நன்றி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   நீக்கு
  4. //வேறெந்த உள்நோக்கமுமின்றி, கையெடுத்து வணங்குகின்ற மாதிரி அமைந்தால்// - அப்படி அமைவது மிக மிகக் கடினம். அழகோ அழகின்மையோ இல்லை சுமாரோ (நம் மனக்கண் அளவில்), இது பிறப்பின்போது வருவது, சாதி மதத்தைப் போல. அதில் பெருமைகொள்ள ஏதுமில்லை. அப்படிப்பட்டவர்கள் பொதுவெளியில் (திரை, தொலைக்காட்சி) வரும்போது பிறர் கண்டு ரசிக்க ஏதுவாயிருக்கும்.

   (இதை எழுதும்போது கல்கியின் சிவகாமியின் சபதம் நினைவுக்கு வருகிறது. பல்லவ இளவரசர் குதிரை ஏறி ஆயனர் வீட்டிற்கு வருவார். அப்போது சிவகாமியைப் பார்ப்பார் (வழியில்). ஆனால் அரச குலத்தின் கண்ணியத்திற்கிணங்க திரும்பிப் பார்க்கமாட்டார் என்று கல்கி எழுதியிருப்பார். கண்ணியமிக்கவர்களிடமிருந்துதான் கண்ணியம் மிக்க எழுத்து வெளிவரும்)

   நீக்கு
  5. அழகு, மேன்லினெஸ் எதுவுமே ஒருவருக்கு கர்வத்தைத்தான் தருகிறது. ஆனால் நிலையில்லாதது. (இருந்தாலும்...ஹிஹி.. அவங்களைப் பார்த்தால், இது கல்கி காலம் இல்லையே.. திரும்பிப் பார்த்தால்தான் என்னவாம் என்று தோன்றுகிறது)

   நீக்கு
  6. //நெல்லைத்தமிழன்11 ஜூன், 2023 அன்று முற்பகல் 9:11
   மனிதர்கள், குறிப்பாகப் பெண்கள், மிக அழகாகப் பிறப்பது வரமா இல்லை சாபமா?//

   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) இதிலென்ன சந்தேகம் வரம்தேன்ன்ன்ன்:)).. அதுவும் இக்காலத்தில் பெண்கள் என்றாலே அழகுதான்... எப்படியோ அழகாகிவிடுகிறார்கள்... சிலரை முதல் நாள் பார்க்கும்போது, கொஞ்சம் லட்சணக்குறைவாக இருக்கே என மனம் நினைக்கும் ஆனா 3ம் 4ம் பார்வையில ரொம்ப அழகாத் தெரிவினம்... :) ஹா ஹா ஹா..

   நீக்கு
  7. உங்களுக்குத் தெரியுமா அதிரா.... முதல் ஒன்றிரண்டு தடவைதான் ஒரு பெண்ணின் அழகிய முகம் எங்களுக்குத் தோன்றும். அதன் பிறகு அந்த அழகு மறைந்துவிடும். அவங்களில் பெர்சனாலிட்டி (உங்க பாஷைல பெசனாலிட்டி) மட்டும்தான் நம் கண்ணில் படும்.

   நீங்க ஏதோ புது தியரி சொல்றீங்கன்னு மூணு நாலு தடவை ஒரே பெண்ணைப் பார்த்தால், அந்தப் பெண்ணிடம் அறை வாங்குவது யார்?

   நீக்கு
 12. ஓவியர் மாருதி அவர்களின் ஓவியங்கள் எனக்கும் பிடிக்கும். சில படங்களை முன்னர் பார்த்து இருக்கிறேன். நல்லதொரு தொகுப்பு. ஓவியம் குறித்த இந்த மூன்று VRA தொகுப்பினைக் காண ஆவலுடன் காத்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி வெங்கட் நாகராஜ். இதுதான் அழகு, இது அழகில்லை என்று யாராலும் define பண்ணமுடியாது. அதனால் ஒவ்வொரு ஓவியமும் (முகமும்) எனக்கு வசீகரமாகத்தான் தெரிகிறது. ஓவியர் மாருதி மிகத் திறமை வாய்ந்தவர்.

   நீக்கு
 13. சாமுத்ரிகா லட்சணம் என்பது நில்லாதோடும் ந்தியின் அழகைப் போன்றது..

  பதினாறில் இருந்து பதினெட்டு வரை..

  அதற்கு அடுத்து இருபத்தொன்று வரை தான்..

  கோடித் துணி ஒரு வெள்ளைக்கு.. குமரிப் பெண் ஒரு பிள்ளைக்கு!.. - என்றார்கள் நம்மவர்கள்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என்ன இப்படிச் சொல்லிட்டீங்க. தாய்க்குலம் பொங்கி வரப்போகிறார்கள். நம்ம மணிரத்னம் கூட இதனை நம்புவதில்லை. இல்லைனா, ஐஸ்வர்யா ராயை, நந்தினி வேடத்திற்குப் போட்டு, பல இடங்களில் நம்மைச் சோதனைக்கு உள்ளாக்கியிருப்பாரா?

   நீக்கு
  2. ஏதாவது சொல்லி விட்டுப் போகட்டும்..

   கல்கி எழுதியது
   புத்தகமாகவே இருந்திருக்கலாம்..

   நீக்கு
  3. நீங்களும் படம் பார்த்து நொந்துபோன க்ரூப்பில் ஒருத்தரா? எனக்கு பிரம்மாண்டமாக இருந்தது. நல்லாவே எடுத்திருந்தார் மணிரத்னம்.

   எப்போதுமே முதல் பாகத்தைத் தூக்கியடிக்கும்படியாக இரண்டாவது பாகம் இருந்தால்தான் படம் நல்லா இருக்குன்னு அர்த்தம். பாஹுபலில, இரண்டாவது பாகத்தில் பாடல்கள் கொஞ்சம் சுமாரா இருந்தாலும், தமன்னா பகுதி இல்லை என்றாலும், கதையும் சம்பவமும் படத்தைத் தூக்கி நிறுத்திவிட்டது. பொ.செ.வில் அது தலைகீழ்.

   நீக்கு
 14. கழுத்தில் மாங்கல்யம் தாங்கிய பெண்ணை ஏறிட்டு நோக்கவே கூடாது என்றார்கள் அந்தக் காலத்தில்..

  திரைத்துறைக்கு வருகின்ற
  பெண்கள் இதற்கு விதி விலக்கு..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சென்னைக்குச் சென்றிருந்த திருமணத்தில், ஜெர்மன்காரர்கள் (ஆண்கள் பெண்கள்) வந்திருந்தார்கள். அவர்களுக்கு மாங்கல்யதாரணம், சப்தபதி, மெட்டி போன்றவற்றைச் சொல்லிக்கொண்டிருந்தேன். பெண்ணின் காலைப் பார்த்து அவள் திருமணமானவளா என்று அறிவதுதான் எங்கள் கலாச்சாரம் என்றேன். ஆனால் இந்தக் கலாச்சாரங்களெல்லாம் கலக்க ஆரம்பித்திருக்கின்றன. வகிட்டில் குங்குமம் வைத்துக்கொள்வது தமிழர் மரபில்லை என்றே எண்ணுகிறேன். அது வடவரின் கலாச்சாரம். அது இப்போது தமிழர் மரபில் கலக்கிறது.

   நீக்கு
 15. வணக்கம் சகோதரரே

  /அது வடவரின் கலாச்சாரம். அது இப்போது தமிழர் மரபில் கலக்கிறது/

  வடவர் என்றால் வடக்கில் உள்ளவர்களா? ஆமாம் அவர்தாம் நெற்றி முகப்பிலிருந்து நடு தலை வரை குங்குமம் தீற்றிக் கொள்வார்கள். அங்கிருந்துதான் இப்போது மெகந்தி விழா திருமணத்திற்கு முன்தினம் திருமணந்தோறும் வந்துள்ளது.

  நெற்றி வகிட்டில் குங்குமம் வைத்துக்கொள்வது/ விடுவது இப்போதுதான் (ஒரு நூறு ஆண்டுகளாக) கட்டாய பழக்கமாகி உள்ளதென நினைக்கிறேன். திருமணமான பெண்கள் திருமணநாளான அன்றைய தினத்திலிருந்து வகிட்டில் வைக்கத் தொடங்கி விட வேண்டும் என்பார்கள்.

  எங்கள் நெருங்கிய உறவுகளில் ஒருவர், திருமணமாகி முதல் குழந்தை உண்டானவுடன் சீமந்த விழா (இது பையன் வீட்டில்தான் அந்த காலத்தில் செய்வார்கள். இப்போது எப்படியோ?) செய்யும் போதுதான் இந்த வகிட்டில் குங்குமம் வைக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பார். எது உண்மையோ ? சிலர் வீட்டில் இந்த சீமந்த விழாவே கிடையாது. பெண் வீட்டில் நடத்தும் வளைகாப்பு விழா மட்டுமே உண்டு. (எங்கள் வீட்டிலும் சீமந்தம் கிடையாது) அவர்கள் என்ன செய்வார்கள்?

  இந்த மாதிரி கலாசாரங்களை நம் விருப்பத்திற்கு, சௌளகரியத்திற்கு என அந்த காலந்தொட்டு மாற்றிக் கொண்டு விட்டு காலம் அநியாயமாக மாறி விட்டதென நாம் அநாவசியமாக நினைக்கிறோமோ என எனக்குள் தோன்றுவதுண்டு. கருத்துக்களைப் பார்த்ததும், என்னவோ என் மனதில் பட்டதை கூறுகிறேன். தவறெனின் அனைவரும் பொறுத்துக் கொள்ளவும். நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நிறைய மாறுதல்கள் நடக்கின்றன. அவை தவறு என்ற த்வனியில் நான் குறிப்பிடவில்லை. கலாச்சாரங்கள் கலக்கின்றன. இவை காலத்திற்கேற்ற மாறுபாடுகள் என்று எடுத்துக்கொள்ள வேண்டியதுதான். (தாவணி போனதும் அப்படித்தான்).

   மெஹந்தி அப்புறம் இன்னும் என்ன என்னவோ வர ஆரம்பித்துவிட்டது. வியாபாரிகளுக்குக் கொண்டாட்டம்தான்.

   நீக்கு
 16. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. குமரிப் பெண் ஒரு பிள்ளைக்கு!.. - என்பது
   பெற்றெடுக்க வேண்டும் என்றில்லை.

   இயற்கையின் வனப்பே காட்டிக் கொடுத்து விடும்!..

   நீக்கு
 17. முகங்கள் அனைத்தும் ஒன்றே போல் - புஷ்டியாக...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹாஹா. முழு அட்டையிலும் ஒரு முகம் வரையணும்னா, புஷ்டியாக இருந்தால்தானே சாத்தியம் திண்டுக்கல் தனபாலன்.

   நீக்கு
 18. ஆஅவ்வ்வ்வ்வ் இம்முறை நான் 1ம் பாகத்துக்கே வந்திட்டேனே... பூஸோ கொக்கோ:).. நெல்லைத்தமிழன் இப்போ அழ்ந்த குரட்டையில் இருப்பார்:).. கண் முழிப்பதுக்குள் சொல்றதைச் சொல்லிப்போட்டு ஓடிடுறேன்ன்:))

  //எனக்குப் பிடித்த ஓவியர் ஜெ… இதன் காரணம் கம்ப சூத்திரமல்ல.//

  அப்போ வேறு ஏதோ சூத்திரமாக்கும் .. எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ் மீ ரொம்ப நல்ல பொண்ணூஊஊ:))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதின்ம வயதில் இருந்தவர்களுக்குப் பிடித்த ஓவியர் ஜெ.... தான். அதிலும் சுஜாதாவின் தொடர்களுக்கு அவரது ஓவியங்கள் செமயாக இருக்கும், கொலையுதிர்காலம் போல. ஏன் சிவசங்கரியின் தொடர்களுக்கும்....ம்ம்ம்ம்ம் யம்மி படங்கள் (மம்மி படங்கள்னு படிக்காதீங்க)

   நீக்கு
 19. ///ஒரு வாரத்தில் முடித்துவிடலாம் என்று பார்த்தால் என்னிடம் இருந்தது 120க்கும் அதிகமான முகங்கள். அப்புறம் என்ன? மூன்று வாரத் தொடராக இது வரும்.///

  ஆவ்வ்வ்வ்வ் அத்தனையும் பெண்கள் படமோ:)... என்னால முடியேல்லை ஜாமீஈஈஈ என்னை விடுங்கோ கையை விடுங்கோ ஆரும் தடுக்காதீங்கோ.. நான் தேம்ஸ் ஆச்சிரமத்துக்குப் போய்த் தியானத்தில அமரப்போகிறேன்ன்ன்ன்:)))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அடடா... எனக்கு இது தெரியாமல் போய்விட்டதே... இது நாலு வாரத் தொடர். இன்னும் மூன்று வாரங்கள், ஆனால் பெரும் இடைவெளிவிட்டு விட்டு வரும்.

   நீக்கு
 20. அடுத்த முறை ஒவ்வொரு படத்துக்கும் இலக்கம் போடச் சொல்லிச் சொல்லிவிடுங்கோ நெ தமிழன், அப்போ பேச இலகுவாயிருக்கும்...

  நாம் பார்க்கும்போது இடதுபக்கம் ஒன்று வலதுபக்கம் 2, பின்பு கீழே இடது 3, வலது 4.. இப்படி நினைச்சுச் சொல்கிறேன், 2ம் படத்தைப்பார்க்க, இலங்கையில் இருந்துவந்த பிக்பொஸ் பெண் ஜனனி போலவே இருக்குது(ஆனா அழகில் என்ன இருக்குது.. உள்ளளகுதானே முக்கியம்:)).

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பிக்பாஸ் ஜனனி ..... நல்ல அழகு... நீங்க சொன்னபடி, அக அழகுதான் மிக முக்கியம். அதுதான் நிலைத்து நிற்கும்.

   நீக்கு
 21. 4 = யுவராணி
  18= கே ஆர் விஜயா??
  26= அசின்
  28 = ரேகா
  29 = மகேஷ்வரி
  41 = ஸ்ரீதேவி- விஜயகுமார் அங்கிள்ஸ்...

  இவ்வளவும் எனக்குப் பார்த்ததும் தோன்றியது, ஏனையவை புரியவில்லை...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இவ்வளவு ஊன்றி படங்களையெல்லாம் பார்த்திருக்கீங்களே அதிரா... அதுக்கே உங்களுக்குப் பாராட்டுகள். இரவு கனவில் ஒரே பெண்கள் முகமாக இன்று உங்களுக்கு வரப்போகுது. என்ன செய்யப் போகிறீர்களோ?

   நீக்கு
  2. ஹா ஹா ஹா எல்லோரையும் தேம்ஸ்ல தள்ளி விட்டிடுவேன்:))

   நீக்கு
  3. /ஹா ஹா ஹா எல்லோரையும் தேம்ஸ்ல தள்ளி விட்டிடுவேன்:))/

   ஹா ஹா ஹா. சிரித்து முடியவில்லை அதிரா சகோதரி. இன்று நீங்கள் அனைவரையும் தேம்ஸ் நதியில் தள்ளும் காட்சியாக என கனவில் வரப்போகிறது.உறங்கவே பயமாக வேறு இருக்கிறது. ஹா ஹா ஹா.

   நீக்கு
  4. கம்பவாரிசு [என்னைச் சொன்னேன்:)] இருக்கப் பயமெதுக்கு கமலாக்கா:)) என் சின்னி விரலைப்பிடிச்சுக் கொண்டு தெகிறி:)யமா நித்திரையாகுங்கோ:)) ஆனா ஜாமத்தில முழிச்சிடாதையுங்கோ ஹா ஹா ஹா:))

   நீக்கு
  5. .

   /ஆனா ஜாமத்தில முழிச்சிடாதையுங்கோ/

   ஏன்..? அப்போ அந்த சின்ன (சின்னி) விரலுக்குரியவரும் தேம்ஸிலோ...! தயவு செய்து நீங்கள் குதித்து விடாதீர்கள். (ஏனெனில் எனக்கு நீச்சல் உண்மையாகவே தெரியாது.இப்போதே நித்திரைக்கு முன் அதையும் சொல்லி விடுகிறேன். )
   ஹா ஹா ஹா
   அட ராமா.. ஈஸ்வரா,... நாராயணா....இவர்களில் அப்போது யாரையெல்லாம் கூப்பிட வேண்டுமென இப்போதே மனதுக்குள் ஒத்திகை பார்த்துக் கொள்கிறேன். :))))

   நீக்கு
 22. நெல்லை படங்கள் எல்லாம் செமையா இருக்கு....எனக்கும் ஓவியங்கள் ரொம்பப் பிடிக்கும். எல்லாமே எங்கள் வீட்டில் கள்ளத்தனமாகத்தான் செய்தது அதாவது வரைந்து பார்ப்பது, வரைவது எல்லாமே. அதனாலேயே பாட்டு, வரைதல், தையல் எல்லாமே நுனிப்புல்.. மாருதியின் படங்களை நானும்மிகவும் ரசித்ததுண்டு...ஆங்காங்கே பத்திரிகை இதழ்கள் பார்க்கக் கிடைத்தால்....டக்கென்று கண்டும் பிடித்துவிடலாம்.

  நல்ல கலெக்ஷன்

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மாருதியின் ஓவியங்கள் எனக்கு ரொம்பப் பிடிக்கும்... அந்த அடர்த்தியான புருவம்...நளினம்...முகத்தில் உள்ள களை...ஒவ்வொரு பெண்ணின் முகமும் வித்தியாசமாக ரிஉக்கும்...அந்தச் சிரிப்பு உட்பட...புன்னகை சிரிப்பு பல் தெரியும் சிரிப்பு என்று...அவரது ஓவியங்கள் யுனிக்...டக்கென்று கண்டுபிடிக்க முடியும்..

   லதா எனக்கு டக்கென்று நினைவுக்கு வரவில்லை.

   மணியம் வரலாற்று நாவல்கள் என்றால் அவர்தான் என்று மனதில் பதிந்த ஒன்று. ரொம்பப் பிடிக்கும்

   இதெல்லாமே கள்ளத்தனமாகப் பார்த்து ரசித்தவை...கிராமத்தில் யார் வீட்டிலாவது வாங்குவாங்க...யார் வீட்டுக்கும் போகவும் கூடாது....கோயில் போனால் நேரே கோயில்...திரும்ப வீடுதான் நேரே....எந்த வீட்டினருடனும் தெருவிலும் நின்று பேசக் கூடாது...இப்படிப் பல கட்டுப்பாடுகள்...எனவே திருட்டுத்தனமாக...ஆனால் போட்டுக் கொடுக்க படுபாவிங்க நிறைய இருப்பாங்க...மாட்டிக்குவேன் அப்புறம் என்ன டின்னுதான்..

   கீதா

   நீக்கு
  2. வாங்க கீதா ரங்கன்(க்கா). பெண்களின் ஓவியங்களைப் பார்ப்பதிலும் கட்டுப்பாடா? (கள்ளத்தனமாகப் பார்த்து ரசித்தவை.). என் அப்பா, நான் குமுதம் பத்திரிகை பார்த்தாலே திட்டுவார் (பொம்பளைப் பத்திரிகையை ஏண்டா படிக்கற என்று). அவரைப் பொறுத்தவரையில் துக்ளக், கல்கி, கல்கண்டு, விகடன் போன்றவை ஓகே.

   நீக்கு
  3. நானும் சிறு வயதிலிருந்தே படம் வரைவேன். என் அப்பா, படிக்காம எதுக்கு புள்ளையார் படம் வரையற (இன்னும் மோசமாக) என்று திட்டுவார். அவருடைய கவலை அவருக்கு.

   இதை எழுதும்போது, 78-80களில் விகடன், குங்குமம், சாவி, இதயம் பேசுகிறது, கல்கி, குமுதம்...என்று தொடர்ந்து நிறைய வார இதழ்களைப் படித்ததும், அவை ஒன்றுக்கொன்று போட்டி போட்டுக்கொண்டு தொடர்கதைகள் என்று சிறப்பித்ததும் நினைவுக்கு வருது (மயன், பாக்யா, உஷா போன்றவையும்). ஜெ. அவைகளில் வரையும் படங்கள் எங்கள் பதின்ம வயதைக் கொள்ளைகொள்ளும்.

   நீக்கு
  4. ///நெல்லைத் தமிழன்11 ஜூன், 2023 அன்று பிற்பகல் 8:59
   வாங்க கீதா ரங்கன்(க்கா). /////

   ஏன் நேரடியாக எழுதப் பயம்ம்ம்மாக்க்கிடக்கோஒ ஹா ஹா ஹா:))

   நீக்கு
  5. ஒரு மாதம்தான் வித்தியாசம். ஒரு வருஷம்னா தைரியமா நேரடியா எழுதுவேன். இன்னொன்று, நாங்க ரெண்டு பேரும் நின்றோம்னா, அவங்க என் தங்கச்சி மாதிரித் தெரிவாங்க. .ஹா ஹா (அதுக்கு காரணம் எனக்கு மனசில் வஞ்சமில்லை, சாப்பிடும் சாப்பாடு உடலுக்கு சக்தி தருதுன்னு நீங்க நினைச்சீங்கன்னா...நினைச்சீங்கன்னா......)

   நீக்கு
 23. இங்கு ஆசை தீரப் பார்த்துக் கொண்டேன்...கணினி தானே!!!

  இரண்டாவதும் மூன்றாவதும் மீனா போல இருக்கு

  முதல் படம் ஸ்ரீதேவி சாயல்...நான்காவது ஃபெமிலியர் ஆனா டக்கென்று நினைவுக்கு வரமாட்டேங்குது.. 5 ம் அதே போல..6 ம் அப்படிஏ....அஞ்சு போலவும் சாயல் இருக்கோன்னு..வேறொருவரின் சாயல்...ச்சே பெயர் எதுவும் டக்குனு வர மாட்டேங்குது...அதுக்கெலாம் CK இருக்கணும்!!! ஹாஹாஹா

  7 நதியா கொஞ்சமே கொஞ்சம் தெரியராப்ல....8 வது படம் எனக்கு அனுராதா ஸ்ரீராம் போல ஹிஹிஹிஹி அப்ப அவங்க எங்க...

  அடுத்தாப்லயும் நிறைய ரிசெம்ப்ளன்ஸ் ஆனா பெயர் தெரிய மாட்டேங்குது டக்குனு...கூடவே எண்ணுவது சிரமமா இருக்கு..

  சோ இம்புட்டுத்தான்..

  ஆனா எல்லாமே ரொம்ப ரசித்தேன். எவ்வளவு வித்தியாசம் ஹையோ...செம..

  கீதா
  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கண்ணில் கூட வித்தியாசம் உணர்ச்சிகள் தெரியும்படி கொண்டு வந்திருக்கிறார்...

   கீதா

   நீக்கு
  2. ஒவ்வொரு முகமுமே வித்தியாசம். ஆனால் மாருதி அவர்கள், டீன் ஏஜுக்கான மாடர்ன் கதைகளுக்குச் சரிப்படமாட்டார் என்பது என் அபிப்ராயம். கிராமக் கதைகளுக்கு செட் ஆவார்.

   பெண்களின் முகங்கள் (இங்கு மாருதி அவர்கள் வரைந்தவை) எல்லாமே அழகுதான்.

   நீக்கு
  3. நல்லாத்தான் இருக்கு என்றாலும் என்னைப் பொறுத்தவரை கோபுலுவுக்குப் பின்னாடி தான் மத்தவங்க.

   நீக்கு
  4. கோபுலுவின் பாணியே தனி. அதில் அழகியலைப் பார்க்க முடியாது, ஆனால் realityயைப் பார்க்கலாம். ஒரு கூட்டத்தை அவர் வரைந்தால் ஒவ்வொருவரும் ஒவ்வொருமாதிரி இருப்பார் என்பது உண்மைதான்.

   நீக்கு
 24. 2018 வரை வரைஞ்ஜிருக்கார் ஆனா அனுஷ், தமனா ஜாடை எதிலும் தெரியலை!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

  கீழிருந்து மேலே போறப்ப 4 ல இடப்புறம் பச்சை, பச்சை மாலை அது விஜயகுமார் பொண்ணு போல இருக்கு...கொஞ்சம்...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்க சொல்ற அனுஷ், தமனா லாம், எனக்கு முந்திய ஜெனெரேஷன் அல்லவா?

   நீக்கு
  2. ஹலோ......என்னாது...முந்தைய ஜென்? ஒரு வருஷம் முன்ன வரை எபில தமனா படம் இல்லைனா ஜொள்ளி போடச் சொன்ன ஆளு ....இப்ப முந்தைய ஜெனரேஷனாம் தமனா!!!!

   கீதா

   நீக்கு
  3. தமனாவுக்கு வயசாகும் என்று நான் கண்டேனா? அவருடைய காலம் பாஹுபலியுடன் ஓவர். எனக்கு வயது ஆகவில்லை என்பதால், தமனா ஓல்ட் ஜெனெரேஷன்.

   நீக்கு
  4. ///நெல்லைத் தமிழன்11 ஜூன், 2023 அன்று பிற்பகல் 9:14
   தமனாவுக்கு வயசாகும் என்று நான் கண்டேனா?///

   ஆவ்வ்வ்வ் அப்போ இப்போ புதுசா ஒரு சுண்டெலி வலையில மாட்டி விட்டதுபோலும் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) விடமாட்டேன், புதுசைக் கண்டதும் பழசைக் கழட்டி விட்டிட்டார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).. நான் இப்பவே போகிறேன் காண்ட் கோர்ட்டுக்கு.. எனக்கு நீஈஈஈஈதி வேணும்ம்ம்ம்ம்:)))

   நீக்கு
 25. ஜெ - ஹாஅஹாஹ எனக்கும் பிடிக்கும் ஆனால் வீட்டில் பத்திரிகைகள் வாங்க மாட்டாங்களே....இந்த மாதிரி படங்கள் எல்லாம் என்னவோ எங்களைக் கெடுத்துவிடும் என்பது போன்ற எண்ணத்தில்!!!!

  மேலாக்கு சரிஞ்சா, பாவாடையின் சட்டை கொஞ்சம் லோ நெக் நா உடனே - அதாவது ஊர்ப் பெண்களாக இருந்தாலுமே - என்ன ஜெ படம் போடறாப்ல போட்டிருக்க...வெக்கமா இல்ல?ந்னு நம் வீட்டு பெரியவங்க...ஊருக்கே ராணுவ அதிகாரி கேட்டு விரட்டி ஒழுங்கா போடச் சொல்லிடுவாங்க!!!

  வீட்டுல கண்ணாடி (முகம் பார்க்கற கண்ணாடிதான்...) அதை எடுத்துக் கொஞ்சம் கூட ஒரு நிமிஷம் பார்த்தாலே அம்புட்டுத்தான்....எனக்குப் பிடிக்காத காலம்...கண்ணாடியில் முகம் பார்ர்கும் பழக்கமோ அதன் முன் நிற்கும் பழக்கமோ கூட இப்ப வரை கிடையாது..இப்ப நினைச்சாலும்...நினைக்கப் பிடிக்காத காலம்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கீழநத்தத்துல ஓரிரு நண்பர்கள் எல்லா பத்திரிகைகளையும் வாங்கி, மாத வாடகைக்கு எல்லாப் புத்தகங்களையும் கொடுப்பாங்க. அப்படிப் படித்தவைதான். (அதுக்கு காசு எப்படித் தேற்றினேன் என்று இப்போ நினைவில்லை).

   நான் வரைந்து பார்ப்பவை எல்லாமே ஜெ... அவர்கள் போடும் படங்கள்தாம். எனக்கு பல ஓவியங்கள் நினைவில் இருக்கிறது.

   //கண்ணாடியில் முகம்// - ஹா ஹா. 7வது படிக்கும்போது ஒரு நாள் நான் பவுடர் போட்டுக்கொண்டேன் என்பதற்காக, என் அப்பா, அடி பின்னி எடுத்துவிட்டார். அதனால் அவர் வீட்டில் இருந்தால், நான் பவுடர் போட மாட்டேன்.

   நீக்கு
  2. நானுமே கல்யாணம் ஆகி வந்தப்புறமாத்தான் பவுடர் எல்லாம். நாங்க மறுவீடு வந்தப்போ அந்த விஷயம் அப்பாவுக்குத் தெரிஞ்சு போய்க் கத்தோ கத்துனு கத்தி, மாப்பிள்ளையிடம் இனி இப்படி எல்லாம் செய்தால் நன்கு அடி வெளுத்து வாங்கிடுங்கனு எல்லாம் சொல்லி! இஃகி,இஃகி,இஃகி,இஃகி, இப்போ நினைச்சால் கூடச் சிரிப்பு வரும். அப்புறமா என் மன்னி, தம்பி மனைவி எல்லாம் பவுடர், ஸ்நோ என முழங்கியது எல்லாம் தனிக்கதை. நெற்றியில் சாந்துப் பொட்டு வைச்சுண்டதுக்கு என் தம்பியே என்னைக் கோவிச்சிருக்கான். கடைசியில் அவன் மனைவி சாந்துப் பொட்டுத் தான் வைத்துக்கொண்டாள் பல வருடங்கள்.

   நீக்கு
 26. @ நெல்லை..

  /// நீங்களும் படம் பார்த்து நொந்து போன க்ரூப்பில் ஒருத்தரா?.. ///

  இல்லை..

  மானா ரானா எடுத்த பொன்னியின் செல்வன் கதையைப் பார்க்கவே கூடாது என்று நானும் என் மனைவியும் என் மகனும்!..

  பொன்னியின் செல்வனை மனதார ஆராதிப்பவர்கள் நாங்கள்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதே, அதே! நாங்களும் பார்க்கலை, பார்க்கப் போவதும் இல்லை.

   நீக்கு
  2. கீசா மேடம்..எதுக்கு தேவையில்லாமல் அவரையும் சேர்த்துக்கறீங்க? அதுவும் தவிர, பொதிகைலலாம் பொ.செ. வருவதற்கு வாய்ப்பே இல்லையே.

   நீக்கு
  3. //பொன்னியின் செல்வனை மனதார ஆராதிப்பவர்கள் நாங்கள்..// உங்களை மாதிரி தமிழர்கள் மிக மிகக் குறைவு என்று தமிழக அரசுகள் கருதுகின்றன. அதனால்தான் வரலாற்றில் (பாடப் புத்தகத்தில்) மொகலாயரின் பெருமைகள் பேசின அளவு மற்றவர்கள் பேசப்படவில்லை அல்லது குறிப்பிடப்படவில்லை.

   நீக்கு
 27. @ கீதா, @ நெல்லைத்தமிழன்:

  அடடா! முகத்தைக் காட்டும் கண்ணாடி. அது ஒரு அப்பவியாச்சே.. அதுவே ஒரு அழகாச்சே.. அதைப் பார்க்கவிடாத அந்தநாள் பெரிசுகள்! அதுகளுக்கு என்ன கோபமோ, என்னவெல்லாம் பயமோ? இருந்தாலும் அவர்களுக்கு நம் மரியாதைகள். நமக்குத் தகுதியிருக்கிறதோ இல்லையோ, நம்மை ஒரு அதீத அக்கறையோடு பாதுகாக்க முயன்றதற்காக..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. "உருவத்தைக் காட்டிடும் கண்ணாடி  உலகத்தை வைத்தது என் முன்னாடி "  பாடல் நினைவிருக்கிறதா?

   https://www.youtube.com/watch?v=EhkepRRneZ8

   நீக்கு
  2. ..உலகம் நாராசமானது. அவலமானது. பார்க்காதே நீ.. என்று நினைத்துச் சொல்லியிருப்பார்களோ அப்படி..

   நீக்கு
  3. எங்க அப்பா ஹெட்மாஸ்டராக இன்னொரு பள்ளியில் இருந்தார். பையன் பதின்ம வயதில் பவுடர் போட்டு ஷோக்கு காண்பிக்க ஆரம்பிச்சான்னா, அப்புறம் காதல்தான்னு (நான் படித்தது இருபாலாரும் படிக்கும் பள்ளி) நினைச்சிருப்பாரோ (அவர் அப்படி நினைக்கும்படிதான் நான் நடந்துகொண்டேன் போலிருக்கு ஹி ஹி)

   நீக்கு
 28. ஓவியர்கள் பற்றி நல்ல.கணிப்பு. ஓவியங்களும் அழகு.

  பதிலளிநீக்கு
 29. ஓவியர் மாருதி அவர்களின் தொகுப்பு படங்கள் எல்லாம் அருமை.
  நானும் மாருதி அவர்களை பற்றிய பதிவு போட்டு இருக்கிறேன்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!