9.6.26

​சிறுகதை :: அது ஒரு காலம் - டால்ஸ்டாய் கதை - வல்லிக்கண்ணன் மொழிபெயர்ப்பு..


அது ஒரு காலம்

டால்ஸ்டாய் கதை

வல்லிக்கண்ணன் மொழிபெயர்ப்பு..


ஒரு நாள் சில குழந்தைகள் கணவாய் ஒன்றில் தானிய மணி போன்ற ஒரு பொருளைக் கண்டெடுத்தார்கள். அதன் நடுவே ஒரு கீற்று ஓடிக் கிடந்தது. ஆனால் அது கோழிமுட்டை அளவு பெரியதாக இருந்தது.

அவ்வழியாகப் போய்க்கொண்டிருந்த பிரயாணி ஒருவன் அந்தப் பொருளைப் பார்த்தான். ஒரு காசு கொடுத்து குழந்தைகளிடமிருந்து அவன் அதை வாங்கினான். அதை நகரத்துக்கு எடுத்துப்போய், ‘அதிசயப் பொருள்’ என்று சொல்லி அரசனிடம் அவன் விற்று விட்டான்.

அரசன் தனது மந்திரிகளை அழைத்தான். அது என்ன பொருளாக இருக்கும் என்று கண்டுபிடிக்கும்படி சொன்னான். மதியூக மந்திரிகள் அனைவரும் யோசித்தார்கள். யோசித்து யோசித்துப் பார்த்தார்கள். அவர்களுக்குத் தலையும் புரியவில்லை, வாலும் விளங்கவில்லை. கடைசியாக ஒரு தினத்தில், அது ஜன்னல் ஓரத்தில் கிடந்த சமயம், பெட்டைக்கோழி ஒன்று உள்ளே புகுந்து அதைக் கொத்தி அதில் சிறு துவாரம் ஒன்று ஏற்படுத்தி விட்டது. அப்பொழுது, அங்கிருந்த ஒவ்வொருவருக்கும் புரிந்து விட்டது, அது தானிய மணிதான் என்று.

உடனே அவ் அறிஞர் பெருமக்கள் அரசனை நாடிச் சென்றார்கள். ‘இது ஒரு தானிய மணி ஆகும்’ என்று அறிவித்தார்கள். இதைக் கேள்வியுற்ற அரசன் அதிக வியப்படைந்தான். அத்தகைய தானியம் எப்பொழுது எங்கே விளைந்தது என்று கண்டுபிடிக்கும்படி அரசன் மதியூக மந்திரிகளுக்குக் கட்டளையிட்டான். அவ் அறிவு மணிகள் மீண்டும் ஆலோசித்தார்கள்; அகப்பட்ட நூல்களில் எல்லாம் ஆராய்ந்து பார்த்தார்கள். எனினும் அதைப்பற்றி எதுவுமே புலனாகவில்லை.

ஆகவே அவர்கள் மன்னனிடம் சென்று முறையிட்டார்கள் 'நாங்கள் எவ்விதமான பதிலும் தருவதற்கில்லை. அதைப் பற்றி எங்கள் புத்தகங்களில் ஒன்றுமே இல்லை. தாங்கள் குடியானவர்களைத் தான் விசாரிக்க வேண்டும். ஒருவேளை அவர்களில் சிலர் அவர்களது தந்தையரிடமிருந்து கேள்விப்பட்டிருக்கலாம், தானியம் இந்த அளவுக்கு எந்தக் காலத்தில் எங்கே விளைந்தது என்று.'

ஆகையினால், மிகவும் வயதாகிப் போன குடியானவன் எவனையாவது தன் முன்னே கொண்டுவந்து நிறுத்தும்படி அரசன் ஆக்கினை செய்தான். அவனது பணியாளர்கள் அப்படிப்பட்ட மனிதன் ஒருவனை மன்னன் முன்னால் கொண்டு வந்து நிறுத்தினார்கள்.

முதிர்ந்து, கூன் விழுந்து, சாம்பல் போல் நிறம் வெளுத்து, பல் இழந்து காணப்பட்ட அந்த மனிதன் இரண்டு கோல்களின் ஆதரவோடு தள்ளாடி வந்துதான் ராஜாவின் திருமுன்னிலே நிற்க முடிந்தது.

அரசன் அவனிடம் அந்தத் தானியத்தைக் காட்டினான். ஆனால் அக் கிழவன் அதைச் சரியாகப் பார்க்கக்கூட இயலவில்லை. எனினும் அவன் தன் கைகளில் அதை வாங்கி, தொட்டுத் தடவிப் பார்த்தான்.

இத்தகைய தானியம் எங்கே விளைந்தது என்று உன்னால் சொல்ல முடியுமா, கிழவா? இதுமாதிரி தானியத்தை நீ எப்பொழுதாவது வாங்கியது உண்டா? அல்லது உன் வயல்களில் விதைத்தது உண்டா? என்று மன்னன் கேட்டான்.

அந்த வயோதிகனின் காதுகள் மந்தமாகியிருந்தன. அதனால் ராஜாவின் பேச்சை அவன் சிரமப்பட்டுத்தான் கிரகிக்க முடிந்தது. மிகுந்த சிரமத்தோடுதான் அவன் அதைப் புரிந்துகொள்ள முடிந்தது.

முடிவில் அவன் அறிவித்தான்; ‘இல்லை, இது போன்ற தானியத்தை நான் என் வயல்களில் விதைக்கவுமில்லை, அறுக்கவுமில்லை. நாங்கள் தானியம் வாங்கிய காலத்தில், தானிய மணிகள் இப்பொழுது உள்ளதுபோல் சிறியனவாகவே இருந்தன. ஆனாலும் நீங்கள் என் தந்தையை விசாரித்துப் பாருங்கள். இந்த ரகமான தானியம் எங்கே விளைந்தது என்பதை அவர் கேள்விப்பட்டிருக்கலாம்.’

எனவே அக் கிழவனின் தந்தை கண்டுபிடிக்கப்பட்டு ராஜா முன் கொண்டு வரப்பட்டான். அவன் ஒரு கோல் ஊன்றி நடந்து வந்தான்.

மன்னன் அவனிடம் அந்தத் தானியத்தைக் காண்பித்தான். அவ்வயோதிகக் குடியானவனுக்கு இன்னும் பார்வை நன்றாகவே இருந்தது. அவன் தானியத்தைக் கூர்ந்து நோக்கினான்.

‘இதுமாதிரி தானியம் எங்கே விளைந்தது என்று உம்மால் சொல்ல முடியுமா, பெரியவரே? இதுபோல் நீர் வாங்கியது உண்டா? இல்லையேல் உமது வயல்களில் பயிரிட்டதாவது உண்டா?’ என்று அரசன் கேட்டான். அவ் வயோதிகனுக்குக் காதுகள் தெளிவாகக் கேட்காவிட்டாலும்கூட, தனது மகனைவிட நன்றாகக் கேட்டுத் தெரிந்து கொள்ள முடிந்தது அவனால்.

‘இல்லை. இது போன்ற தானியத்தை நான் எனது வயலில் விதைக்கவுமில்லை, அறுக்கவுமில்லை. வாங்குவதுபற்றிச் சொல்லப் போனால், என் காலத்தில் பணம் என்பது பழக்கத்துக்கு வரவேயில்லை. ஒவ்வொருவனும் தனக்கு வேண்டிய தானியத்தைப் பயிரிட்டான். அவசியம் ஏற்படுகிறபோது பரஸ்பரம் பங்கிட்டுக் கொள்வதும் உண்டு. இதுமாதிரி தானியம் எங்கே விளைந்தது என்று எனக்குத் தெரியாது. நாங்கள் பயிரிட்ட தானியம் இந்தக் காலத்துத் தானியத்தைவிட அளவிலும் பெரிதாக இருந்தது. மாவும் அதிகமாகக் கிடைத்தது. ஆனாலும் இத்தகைய தானியத்தை நான் பார்த்ததேயில்லை. என் தந்தை காலத்தில் தானியம் ரொம்பவும் பெரியதாக விளைந்தது, மிக அதிகமாக மாவும் இருந்தது என்று அவர் சொல்லக் கேட்டிருக்கிறேன். நீங்கள் அவரை விசாரிப்பது நல்லது’ என்று அவன் சொன்னான்.

ஆகவே ராஜா அந்தக் கிழவனின் தகப்பனைத் தேடி ஆட்களை அனுப்பி வைத்தான். அவர்கள் அவனையும் கண்டுபிடித்து விட்டார்கள். அவனும் மன்னன் முன்னால் அழைத்து வரப்பட்டான்.

அவன் ஊன்றுகோலின் உதவி இல்லாமலே தாராளமாக நடந்து வந்தான். அவன் பார்வை அருமையாக இருந்தது. காதுகள் நன்றாகக் கேட்டன. பேச்சும் தெளிவாக இருந்தது. அவனிடம் அரசன் அந்தத் தானியத்தைக் காட்டியதும், அவன் அதை வாங்கிப் பார்த்தான்; தனது கையில் வைத்து உருட்டினான்.

‘இப்படிப்பட்ட அருமையான தானியத்தை நான் கண்ணால் கண்டு ரொம்ப காலம் ஆகிவிட்டது’ என்று சொல்லி அவன் அதில் கொஞ்சம் கிள்ளி எடுத்து வாயில் போட்டு ருசி பார்த்தான். ‘அதே ரகம் தான்’ என்றும் சொன்னான்.

‘இந்த ரகத் தானியம் எங்கே எப்பொழுது விளைந்தது என்று சொல்லு, தாத்தா. இதுமாதிரி நீ எப்பொழுதாவது வாங்கியது உண்டா? அல்லது வயல்களில் பயிரிட்டது உண்டா?’ என்று அரசன் கேட்டான்.

அம் முது பெருங்கிழவன் தெரிவித்தான்; ‘இது போன்ற தானியம் எனது காலத்தில் எங்கு பார்த்தாலும் விளைந்து வந்தது. எனது சின்ன வயதிலே இத்தகைய தானியத்தைத் தின்றுதான் நான் வளர்ந்தேன். மற்றவர்களை ஊட்டி வளர்த்ததும் இதுபோன்ற தானியத்தினால்தான். இந்த ரகத் தானியத்தையே நாங்கள் விதைத்தோம்; அறுத்தோம்; கதிர் அடித்தோம்.’

‘நீ அதை எங்கிருந்தாவது வாங்கினாயா? அல்லது நீயாகவே பயிரிட்டு உருவாக்கினாயா? சொல்லு தாத்தா’ என்று ராஜா விசாரித்தான்.

அம் முதியவன் புன்னகை புரிந்தான். ‘எனது காலத்தில் உணவுப் பொருளை விற்பனை செய்வது அல்லது விலைகொடுத்து வாங்குவது என்கிற பாபத்தைப்பற்றி எவரும் எண்ணியது கூடக் கிடையாது. பணம் எனும் விஷயமாக எங்களுக்கு எதுவும் தெரியாது. ஒவ்வொருவனுக்கும் அவனுக்கே சொந்தமான தானியம் கிடைத்து வந்தது’ என்றான்.

‘அப்படியானால், தாத்தா உன் வயல் எங்கே இருந்தது? இதுபோன்ற தானியத்தை நீ எங்கே பயிரிட்டாய்?’ என்று அரசன் கேட்டான்.

கிழவன் பதிலளித்தான்: ‘கடவுளின் பூமிதான் எனது நிலம். எங்கெங்கு நான் உழுதேனோ அங்கெல்லாம் எனது வயல்தான். நிலம் தாராளமாகக் கிடந்தது. அதைத் தனது உடைமை என்று எந்த மனிதனும் சொந்தம் கொண்டாடியதில்லை. உழைப்பை மட்டுமே தங்களுக்குச் சொந்தமானது என்று மனிதர் குறிப்பிட்டு வந்தனர்.’

‘இன்னும் இரண்டு கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்லு, போதும். முதலாவது, பூமி அந்தக் காலத்தில் மட்டும் ஏன் இத்தகைய தானியங்களைத் தந்தது, இப்பொழுது ஏன் இப்படி விளைச்சல் தருவதில்லை? இரண்டாவதாக, உனது பேரன் இரண்டு கோல்கள் ஊன்றி நடப்பானேன்; உன் மகன் ஒரு கோலின் துணையோடு நடப்பது ஏன்; நீ மாத்திரம் கோல் எதுவும் இல்லாமல் நடப்பது எதனால்? உனது கண்கள் ஒளி நிறைந்து உள்ளன. உன் பற்கள் வலிவுடன் இருக்கின்றன. உனது பேச்சு தெளிவாகவும் காதுக்கு இனியதாகவும் இருக்கிறது. இதெல்லாம் எப்படி நேர்ந்தது?’ என்று ராஜா கேட்டான்.

‘இவையெல்லாம் இவ்வாறு ஏற்பட்டிருப்பதன் காரணம் என்னவென்றால்—தங்கள் உழைப்பைக் கொண்டே வாழும் வழக்கத்தை மக்கள் இழந்து விட்டார்கள். மற்றவர்களின் உழைப்பை நம்பி வாழப்பழகிக் கொண்டார்கள். அந்தக் காலத்தில், மனிதர்கள் கடவுளின் கட்டளைப்படி வாழ்க்கை நடத்தினார்கள். தங்களுக்கு உரியது எதுவோ அதைக்கொண்டு திருப்தி அடைந்தார்கள்; மற்றவர்கள் உற்பத்தி செய்ததை அபகரிக்க வேண்டும் என்று அவர்கள் ஆசைப்பட்டதில்லை.’ இப்படி விளக்கம் கொடுத்தான் அந்தக் கிழவன்.

=====================================================================================

சுகி சிவம் பதில்கள் துக்ளக் 2015

கேள்வி : பரிகாரங்கள் தேவையா?

பதில் : குரு சரியில்லைன்னு சொன்னால், உடனே கொத்துக்கடலை எடுத்துக்கிட்டுப்போய் தட்சிணாமூர்த்திக்குப் போடுவதைப் பரிகாரமாகச் செய்கிறோம். தட்சிணாமூர்த்தி வேறு; குரு என்ற கிரஹம் வேறு.
ஆனாலும், அதுதான் பரிகாரம் என்று நினைக்கிறோம். அதற்குப் பதிலாக குரு சரியில்லாத நேரத்தில், உங்கள் பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள், உங்களுக்கு வேறு சில திறமைகளைக் கற்றுக் கொடுத்தவர்கள், இவர்களைத் தேடிப் போங்கள். அவர்களுக்கு என்ன தேவையோ, அதைச் செய்து அவரைச் சந்தோஷப்படுத்தி விட்டு வாருங்கள். அது நல்ல பரிகாரமாக அமையும்.
அதே போல சனிக்குப் பரிகாரம் செய்ய வேண்டி வந்தால் ஊனமுற்றோர் இல்லங்களுக்குப் போங்கள். அங்கு நல்லெண்ணெய் வாங்கிக் கொடுங்கள். திருநள்ளாறில் லட்சம் பேர் எண்ணெய் தேய்த்துக் குளித்துக் குளத்தைக் களங்கப்படுத்துவதை விட, கோவில் முழுக்க எண்ணெயை ஊற்றி புகையைக் கிளப்பி, மாசு செய்வதைவிட, ஊனமுற்ற குழந்தைகளுக்கு எண்ணெய் வாங்கிக் கொடுங்கள். அதற்குப் பலன் இருக்கும்.. நமது ஜோதிடர்கள் எல்லாம் சக மனிதர்களுக்கும், சமூகத்துக்கும் உதவும் பரிகாரங்களைச் சொல்ல முன்வர வேண்டும்.
கேள்வி : செய்கிற பாவங்களை எல்லாம் செய்துவிட்டு, கோவிலுக்குக் காணிக்கை, நன்கொடை, சில சமூக சேவைகள் என்று செய்வதால் பாவத்தின் பாரம் குறையுமா?

பதில் : ஹிந்து மதத்தைப் பொறுத்தவரை, பாவத்தின் கணக்கு தனி, புண்ணியத்தின் கணக்கு தனி. ஒன்றினால் ஒன்று ஏறாது, இறங்காது. கிறிஸ்தவ மதத்தில் புண்ணியம் செய்யச் செய்யப் பாவத்தின் பாரம் குறைவாதான தத்துவம் உள்ளது. ஆனால் ஹிந்து மதத்தில் அப்படியில்லை. பாவத்திற்கான தண்டனை தனியே உண்டு. புண்ணியத்துக்கான பலன் தனியே உண்டு. இதுவும் அதுவும் டாலி ஆகாது.
கேள்வி : நாம் நம் பெற்றோர் பேச்சைக் கேட்டது போல நம் பிள்ளைகள் நம் பேச்சைக் கேட்க மாட்டேன் என்கிறார்களே....

பதில் : இன்றைக்கு 80 சதவிகித அப்பா, அம்மாவிற்கு குழந்தைகளுக்கு அட்வைஸ் பண்ணவே அருகதையே இல்லை என்பது என் கருத்து. நமது அப்பா, அம்மாக்கள் தர்மசாஸ்திரத்துக்குக் கட்டுப்பட்டவர்களாக இருந்தார்கள். அவர்கள் தவறான வழியில் பணம் சேர்க்க விரும்பவில்லை. நேர்மையாக வாழ்ந்தார்கள்.
நம்மை நல்லவர்களாக வளர்க்க முற்பட்டார்கள். இன்றைய பெற்றோர் தனது பிள்ளைகள் நல்லவனாக இருக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. தந்திரசாலிகளாகவும் சாமர்த்தியசாலிகளாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்...............
கேள்வி : இறைவனை முழுமனதுடன் வழிபடும் பக்தர் வாஸ்து சாஸ்திரம், ஜோதிடம், நியூமராலஜி, ஜாதகம், நல்ல நேரம், கெட்ட நேரம் எல்லாவற்றையும் நம்பினால், 'இவன் நம்மை முழுமையாக நம்பாமல் மற்றவற்றை நம்புகிறானே' என்று கடவுள் நினைக்க மாட்டாரா?

பதில் : கடவுளுக்குக் கோபம் வராது. ஆனால், அவருக்கு (பக்தருக்கு) கடவுள் நம்பிக்கை இல்லை என்றுதான் சொல்லுவேன். முழுமையான பக்தி இருந்தால் இதெல்லாம் பார்க்க மாட்டார்.
ஞானசம்பந்தர் இதெல்லாம் பார்த்தாரா? 'நாள் என் சேயும், வினைதான் என் செய்யும், எனை நாடி வந்த கோள்தான் என் செய்யும்' என்று அருணகிரிநாதர் பாடவில்லையா? திருப்பாவை வியாக்யானத்தில் 'கோள் விழுக்காட்டில் நாள் விழுந்தாற்போல' என்று கூறப்பட்டுள்ளது.
நல்ல சிந்தனையோடு, நீங்கள் பாட்டுக்குப் போனால், அது தானாக நல்ல நாளாக அமையும். ஸ்ரிவித்தையில் கோ பூஜை, கஜபூஜைக்குப் பசுவையோ, யானையையோ ஃபிக்ஸ் பண்ணக் கூடாது. நீங்கள் பூஜை நடத்தும்போது பசுவோ, யானையோ தானாக வந்து நிற்கும். அதுதான் நிஜமான ஸ்ரிவித்தை.
பசுவுக்கும், யானைக்கும் காசு கொடுத்துக் கூட்டி வந்தால், அது நிஜமான கோ பூஜை கஜ பூஜை ஆகாது. இன்னும் பிராவ்பஞ்சம் உங்கள் பேச்சைக் கேட்குமளவு நீங்கள் வளரவில்லை என்று அர்த்தம். இறைவனிடம் தன்னை முழுமையாக அர்ப்பணித்து சித்தி பெற்றவர்கள் ஸ்ரிவித்தை செய்தால், பசுவோ, யானையோ எங்கிருந்தாவது கட்டறுத்துக் கொண்டு வந்து நிற்கும்.

கேள்வி : அப்பா அம்மா உயிரோடு இருக்கும்போது அவர்களைச் சரியாகக் கவனிக்காமல், அவர்கள் இறந்தபிறகு முன்னோர் வழிபாடு செய்கிறார்கள்... இது குறித்து?

பதில் : அப்பா அம்மாவை வைத்துக் கொள்வதைவிட, அவர்கள் படத்தை வைத்துக்கொள்வது ஈஸி! அப்பா அம்மாவை வைத்துக் கொண்டால் நிறைய கேள்விகள் கேட்பார்கள், நிறைய யோசனை சொல்வார்கள். படத்தை வைத்துக் கொள்வதில் பிரச்னையில்லை! ஆனால் இது தர்மத்துக்கு விரோதம்.
.... ...... அதே நேரம் நான் முதியோர் இல்லங்களுக்கு எதிரானவன் அல்ல.
ஹிந்து தர்ம சாஸ்திரப்படி பிரம்மச்சரியம், க்ரஹஸ்தத்திற்கு அடுத்து வானப்ப்ரஸ்தம், சந்நியாசம் வேண்டாமா? கடைசி வரைக்கும் மகன் அல்லது மகள் வீட்டிலேயே உட்கார்ந்து சாப்பிட வேண்டும் என்று நினைக்கக் கூடாது. உலக வாழ்க்கையை விட்டு மெதுவாக விலகி ஆஸ்ர்மங்களுக்குப் போகப் பழக வேண்டும்.
நிச்சயமாக மடங்கள், ஆஸ்ரமங்கள் எல்லாம், முதியோர்களுக்கான முதியோர் இல்லங்கள்தான் நடத்த வேண்டும். அவர்களுக்கு மரண பயத்தை நீக்கி, நாம் இறைவனிடம் போகிறோம் என்று அவர்களைப் பக்குவப்படுத்த வேண்டும். ஆனால், அவைகளோ 20 வயது, 22 வயது இளைஞர்களைப் பிடித்து மொட்டைகளாக்குவதிலேயே ஆர்வம் காட்டுகிறார்கள். ......

சுகி சிவம் - துக்ளக் கேள்வி-பதில் - 2015

=================================================================================

23 கருத்துகள்:

  1. பிறரை சீண்டி விட்டு சுகம் காண்பதே பல சமயங்களில் துக்ளக்கின் வேலையாக இருந்திருக்கிறது
    பெரிய இந்து சமய தத்துவவாதி பாருங்கள், இந்த ஆளிடம் போய் இந்து மத அடிப்படை ஞானங்கள் பற்றி கேள்வி கேட்டுக் கொண்டு!.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆனால் அது வெளியான தேதியைப் பாருங்கள் ஜீவி ஸார்..   அவர் மூளை கெடாமலிருந்த நேரம்...

      நீக்கு
    2. உங்கள் அரசியலில் அவர் தலையிடாத காலம் தான் அவர் செயல்பாட்டைத் தீர்மானிக்கிறதா என்ன?
      அவர் என்றைக்குமே அவராகத் தான் இருக்கிறார்!

      நீக்கு
    3. உதாரணத்திற்கு. அண்ணா திமுகவிம் இழுத்த இழுப்புக்கெல்லாம்
      போகாமல் தனிப்பெரும் இயக்கமாக பாஜக தமிழ் நாட்டில் வளர. வேண்டும் என்று ஆடையும் அபிலாஷையும் கொண்ட அண்ண்சமலை அவர்கள் கொஞ்ச காலம் நடைமுறை அரசியலில் பங்கு கொள்ளாது விலகி இருந்தார்.
      வரும் காலத்தில் தான் சார்ந்த இயக்கத்திற்கு திமுகவுடன் உறவு நீண்டு
      தனிக்கட்சியாக செயல்படுவதில் தளர்ச்சி ஏற்பட்டு விடுமோ என்ற அயர்வில் தான் மட்டுமாவது தனியே தான் சார்ந்த இயக்கத்தை வளர்ப்போம் என்று விரதம் பூண்டிருக்கிறார்.
      இது தான் என் வழி நேர் வழி என்று தனி நபர்களின் மாற்றமில்லாத செயல்பாட்டுக்கு உதாரணம்.

      நீக்கு
    4. நான் சொல்ல வந்தது இந்தக் காலகட்டத்துக்கு அப்புறம்தான் அவர் போக்கில் பணத்தினாலோ வேறு எதனாலோ மாறுதல் ஏற்பட்டது.

      நீக்கு
  2. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா. வணக்கம். இணைந்து பிரார்த்திப்போம்.

      நீக்கு
  3. ஆக டாலஸ்டாய் கதை வழி சொல்லும் அறிவுரை என்ன? -- என்ற கேள்விக்கு தாங்கள் வாழும் வாழ்க்கையின் மூலம் பதில் கண்டவர்கள் பாக்கியசாலிகள்.

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    நல்ல கதை. தானிய சத்துக்களின் குறைப்பாட்டை விளக்கும் நல்ல சிறுகதை. காலம் ஓடிக் கொண்டேதான் உள்ளது. அதில் மாற்றமில்லை. நம் மாற்றங்களினால், எதையும் மாற்றி, நம்மை நாமே ஏமாற்றிக்கொண்டும், ஏதோ வாழ்ந்து வருகிறோம்.

    /இவையெல்லாம் இவ்வாறு ஏற்பட்டிருப்பதன் காரணம் என்னவென்றால்—தங்கள் உழைப்பைக் கொண்டே வாழும் வழக்கத்தை மக்கள் இழந்து விட்டார்கள். மற்றவர்களின் உழைப்பை நம்பி வாழப்பழகிக் கொண்டார்கள். அந்தக் காலத்தில், மனிதர்கள் கடவுளின் கட்டளைப்படி வாழ்க்கை நடத்தினார்கள். தங்களுக்கு உரியது எதுவோ அதைக்கொண்டு திருப்தி அடைந்தார்கள்; மற்றவர்கள் உற்பத்தி செய்ததை அபகரிக்க வேண்டும் என்று அவர்கள் ஆசைப்பட்டதில்லை.’ /

    நல்ல விளக்கம். கதை நன்றாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  5. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  6. இன்றைய சிறுகதையை இளம் வயதிலேயே படித்திருக்கின்றேன்...
    மகத்தான கதை...

    பதிலளிநீக்கு
  7. குரு வேறு ... தக்ஷிணாமூர்த்தி வேறு...
    உண்மை தான்...

    ஆனால் ஜால்ரா அடிக்கும் போது
    குரு என்பது குருவே அல்ல.
    அது என்பது அதுவே அல்ல..

    உன்மத்தம்...

    பதிலளிநீக்கு
  8. கதை நன்று. முன்னரும் படித்திருக்கிறேன்.

    சுகி சிவம் - இவரை எல்லாம் கண்டுகொள்ளவே கூடாது.

    பதிலளிநீக்கு
  9. டால்ஸ்டாய் என்றாலே 'சண்டையும் சமாதானமும்' தான். இக்கதை கம்யூனிச சித்தாந்தத்தை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டது. அதாவது 'உழைப்பே மூலதனம்' என்பது. தற்காலத்துக்கு சாத்தியமற்றது.

    Jayakumar

    பதிலளிநீக்கு
  10. உழைப்பு மனிதனை எப்படி வைத்திருந்தது....கம்யூனிஸ சித்தாந்தக் கதையாக ஒரு பக்கம் பார்த்தாலும், அதாவது நிலம் எல்லாம் பொதுவுடைமை என்ற ரீதியில்...அதன் பின் நிலம் பிரிக்கப்படுகிறது...என்று பார்த்தாலும் அதுவும் ஒரு வகையில் உண்மைதானே. நமது என்றாகும் போது....மாற்றங்கள்.

    ஆனால் மிகவும் தெளிவாகத் தெரிவது தலைமுறையில் ஏற்படும் மாற்றங்கள் வாழ்வியல் மாற்றங்கள்....இப்பவும் பொருந்தும். நம்ம மூதாதையர்க்கு இருந்த ஆரோக்கியம் இப்ப இருக்கா? என் பாட்டி செய்த உடலுழைப்பை இப்ப என்னால் செய்ய முடியுமா? முடிந்திருக்கும் ஆனால் வாழ்வியல் மாறியதால் உடம்பும் மனமும் அதற்கேற்ப மாறிவிடுகிறது. எல்லாத்துக்கும் ஆட்கள், மெஷின்கள் வந்தாச்சே!

    நிலங்கள் பிரிக்கப்பட்டு குறுக்கப்பட்டு இப்ப காணாமல் போகின்றனதானே? அப்படிக் குறுகும் போது அப்போது பயன்படுத்திய தானியங்கள் பொருட்கள் இப்போது? இந்த வாழ்வியல் மாற்றத்தையும் மனிதன் அதற்கேற்ப மாறி ஆரோக்கியத்தைக் கெடுத்துக் கொள்வதையும் சொல்லும் விதமாகவும் மிக அழகாகச் சொல்லப்பட்ட கதை. இப்பவும் பொருந்தும் வகையில்

    கீதா

    பதிலளிநீக்கு
  11. சுகி சிவம் அவரின் கருத்து மிகவும் யதார்த்தம். எனக்குப் பிடித்திருக்கிறது.

    ஆனால் இப்படி நல்ல சிந்தனைகளோடு இருந்தவர் அதைச் சொல்லியவர் பின்னர் மாறியதை என்ன சொல்ல?ம்ம்ம்ம்

    கீதா

    பதிலளிநீக்கு
  12. சுகி சிவத்தை எல்லாம் இப்போது நான் பார்ப்பதே இல்லை கேட்பதும் இல்லை அவர் என்ன சொல்கிறார் என்ற ஆர்வமும் வருவதில்லை

    கீதா

    பதிலளிநீக்கு
  13. நல்ல கதைப் பகிர்வு. அன்றைய மனிதர்கள் வாழ்ந்த நேர்மையான வாழ்க்கை ,உழைப்பு அவர்கள் உணவு, அதனால் வரும் ஆரோக்கியவாழ்வு சிக்கன வாழ்வு என நல்லதோர் வாழ்க்கைதான்.

    இப்பொழுது உள்ளவர்களிடம் இவை எல்லாம் இல்லை என்பதை ஏற்கத்தான் வேண்டும்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!