Love all. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Love all. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

14.2.12

காதல் கட்கவி...

       
                      
பேதைக் காதல், பெதும்பைக் காதல், 
அறியாக் காதல், உண்மைக்காதல், 
ஒருதலைக் காதல், சுயநலக் காதல்...
முதிர்ந்த காதல், இளமைக் காதல்.
ஜெயித்த காதல், தோற்ற காதல்,
   
ஆயிரம் உண்டிங்கு காதல்   
எந்தக் காதல் உசத்தி என்று
எதை வைத்துச் சொல்வீர்?
                
ஐந்து வயதில்
அன்னையைக் காதலித்தேன்
பத்து வயதில் படிப்பைக் காதலித்தேன்
பதினைந்து வயதில் 
சினிமாவைக் காதலித்தேன்
பதினெட்டு வயதில்
பெண்ணைக் காதலித்தேன்
கல்யாணத்துக்குப் பின்
மனைவியைக் காதலித்தேன்
பின்னர் குழந்தைகளைக்
காதலித்தேன்
    
முப்பது வயதில்
வேலையைக் காதலித்தேன்
நாற்பது வயதில் 
பணத்தைக் காதலித்தேன்
ஐம்பது வயதில் ஓய்வைக் காதலித்தேன்..
அறுபது வயதில்
கடந்து வந்த
அனுபவங்களைக் காதலித்தேன் 
      
எப்போதுமே நான்
என்னைக்
காதலித்ததால்
எல்லாக் காதலுமே 
சுலபக் காதலானது !
    
ஒவ்வொரு முறையும் மாறியது முந்தைய காதல்
ஒரு முறையும் மாறாதது
இசையின்மீது காதல்.. ருசியின் மீது காதல்...     
    
ஒரு காதல்
வரும்போது
முந்தைய காதல் மறைவது
வழக்கமாயிற்று 
காதல் மட்டுமே
மாறாத பழக்கமாயிற்று !
           
வாழ்வைக் காதலித்த நான்
சாவையும் காதலிக்கப் 
பழகி வருகிறேன்.
                  
காதல் இல்லா மனிதன் இல்லை
இதில் எதையாவது
காதலிக்காத(வன்)
மனிதனே இல்லை !
              
ஆணும் பெண்ணும் காதலிப்பதுதான்   
காதல் என்று
நாள் வைக்காமல்
எல்லா நாளும்
எல்லாவற்றையும் காதலித்தால்
காதலின் மீதே காதல் வரும்.