ஹோட்டலுக்குச் செல்லும்போது இன்றைய மெனு என்று எழுதி இருப்பதைப் படித்து தெரிந்துகொண்டு செல்வோம். சமயங்களில் தாலி பாலி என்று என்ன இருக்கும் என்று மனப்பாடமாகத் தெரியும் என்ற அளவில் வாங்கி சாப்பிடுவோம்.
வீட்டிலும் இன்று இதுதான் சமையல் என்று சொல்லி அது செய்யப்பட்டு சாப்பிடுவதைவிட இன்று என்ன இலையில் வந்து விழப்போகிறது என்று தெரியாமல் சஸ்பென்சாக சாப்பிடுவது இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும் என்று எனக்குத் தோன்றும்.
மெனுவை முன்னதாகச் சொன்னால் 'ஹையோ.. பாகற்காயா.. உவ்வே' என்று மனம் நினைத்து விடலாம். 'இன்னிக்கும் கோவைக்காயா' என்ற அலுப்பு தோன்றும். அதையே சொல்லாமல் தட்டில் விழுந்தால் மனதில் எதிர்ப்புணர்வு இல்லாமல் சாப்பிட்டு விடுவோம். என்ன சொல்கிறீர்கள்? நான் சமைக்கும்போது என்ன மெனு என்று சொல்லாமல்தான் செய்வேன்.
டாக்டர் கூட இப்போது நான் ஊசி போடப்போகிறேன் அறிவிக்காமல், ஊசியை எடுத்து தயார் செய்துகொண்டே நம்மிடம் பேசிக்கொண்டே தயாரானாள் நாமும் சாதாரணமாக சட்டைக்கு கையை தள்ளிக் கொண்டு தயாராவோம்!
ஆபீசில் கூட நான் இதற்கு உதாரணம் சொல்வேன். என்னுடன் பணியாற்றுபவர்கள் "நாளை லீவு போடணும்.. மேடம் என்ன சொல்வாங்களோ" என்று கவலைப்படுவார்கள். எனக்கு ஆச்சர்யமாக இருக்கும். ஏனென்றால் நான் லீவு தேவைப்படும்போது அதிகாரிகளிடம் சென்று முன்னறிவிப்பு செய்து அனுமதி வேண்டுவதில்லை. லீவு லெட்டருடன் செல்வேன். நிமிர்ந்து கூட பார்க்காமல் லீவு லெட்டரில் 'கொக்கி' போட்டு அனுப்பி விடுவார்.
இவர்கள் போய்க் கேட்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள்.. பேனாவை கீழே வைத்து விட்டு தாவாங்கட்டையில் விரல் வைத்து கொஞ்சம் யோசிப்பார்.
"நாளை கல்பனா வர்றாங்களோ... அவங்களை ஒரு வார்த்தை கேட்டுடுங்க..." என்பார்.
இல்லை என்றால் "நாளையா.. வேண்டாமே... அடுத்த வாரம் எடுங்களேன்" என்பார். நான் என்னுடன் வேலை செய்யும் பணியாளரிடம் 'நோட்டட்' என்று எழுதி கையெழுத்து வாங்கியே செல்வேன்.
இதை எல்லாம் சொன்னதும் அவர்களும் அப்புறம் முயற்சித்துப் பார்த்துவிட்டு, ஆமாம் சார்.. வொர்க்கவுட் ஆவுது.. இது ஏன் இவ்வளவு நாள் எங்களுக்கு தோணலை?" என்பார்கள்! 'அவர்களுக்கு ஆப்ஷன் கொடுக்கக் கூடாது. தகவல்தான் கொடுக்க வேண்டும்' என்பேன். அவர்களை போய் அபிப்ராயம் கேட்பது போல கேள்வி கேட்டால் அவர்கள் தங்கள் அறிவையும் அதிகாரத்தையும் உபயோகிக்க ஆரம்பித்து விடுகிறார்கள்!
மாமியாருக்கு உடம்பு சரியில்லை. உயிர் பிழைத்து ஆஞ்சியோவுக்குப்பின் இன்னும் முறையான ஆகார வகைக்கு வரவில்லை. தொண்டைக்குள் கைவிட்டு ஊசி போட்டு விட்ட்டார்கள் என்பது அவர் வாதம். தொண்டை வலிக்கிறது விழுங்க முடியவில்லை என்பார்.
வெறும் நீராகாரம் மட்டுமே 99 சதவிகிதம். பாஸிடம் அவரிடம் முன்னறிவிப்பு இல்லாமல் அவருக்கு எப்போதும் பிடிக்கும் ஏதாவது ஒன்று கொடு என்பேன். அட, இட்லி கொடுத்தால் கூட "இன்று இட்லி தரப்போகிறேன்.. சரியா" என்று ராகமிழுக்காமல் கொடு என்று சொல்வேன். ஆனால் அப்படி ராகமாக முன்னறிவிப்பு செய்துதான் தருவார் பாஸ். மாமியார் அப்போதே எதிர்ப்புணர்வுடன் மறுக்கத் தயாராகி விடுவார்.
விஷயங்களுக்கு முன்னறிவிப்பு தேவைதான் என்பதை நானும் அறிவேன்.
சொல்லி விட்டு செய்வது ஒரு மாதிரி, சொல்லாமல் செய்வது ஒரு மாதிரி..
======================================================================================
மனசாட்சியம் - 9
KGY Raman
நான் அடிக்கடி பார்க்கும் ஒரு விஷயம் youtube. இது எல்லாருக்கும் பொதுவான ஒரு வியாதி என்பதை நன்கு உணர்ந்திருக்கிறேன். யூட்யூப் பார்க்கலாமா கூடாதா, அளவாகப் பார்ப்பது நல்லதா, என்ன பார்க்கிறோம் என்பதை சரி செய்து கொண்டால் எவ்வளவு வேண்டுமானாலும் பார்க்கலாமா இதெல்லாம் கிளைக் கேள்விகள்.
ஆனால் நான் சொல்ல வந்தது அது அல்ல. இன்று நான் யூடியூப் திறந்து பார்க்கும் போது என் கண் முன்னே வந்தது " சட்டைக்கு சரியாக இஸ்திரி போடுவது எப்படி " என்று ஒரு பதிவு. ஆவலால் தூண்டப்பட்டு அதைத் திறந்து பார்க்கும் போது எனக்கு அங்கே ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. யாரோ ஒரு வெளிநாட்டவர் வெளியிட்ட அந்தப் பதிவைக் கிட்டத்தட்ட ஒரு கோடிப் பேர் பார்த்திருப்பதாகப் பதிவாகி இருக்கிறது.
மிக சாதாரண விஷயங்களைப் பற்றி யூட்யூபில் பதிவுகள் இருப்பதும் அவை பெருமளவில் பார்க்கப்படுவதும் ஒரு ஆச்சரியம். புது மொபைல் வாங்கின உடனே " Unpacking Samsung galaxy A34 5G" என்று தேடினால் அமேசானிலிருந்து வருகிற பார்சலைப் பிரித்து உள்ளிருந்து ஃபோனை எடுத்து சார்ஜரில் போட்டு அது சரியாக இருக்கிறதா என்று எப்படிப் பார்க்க வேண்டும் என்று மிகத் தெளிவாக ஒரு வீடியோ. இதே போல தனித்தனியாக பிரிக்கப்பட்டு நமக்கு அனுப்பப்படும் நாற்காலி போன்றவற்றை நாம் எப்படிச் சரியாக ஒன்று சேர்த்து உருவாக்கிக் கொள்ளவேண்டும் என்று மிகத் தெளிவான விளக்கங்கள் யூடியூபில் காணக் கிடைக்கின்றன. இதனாலெல்லாம் நம் போன்ற ஒன்றும் அறியாத அப்பாவிகளுக்கு மிகப் பெரிய உதவி கிடைக்கிறது என்பதில் ஐயமில்லை.
ஒரு தமாஷுக்காக " காய்கறி வெட்டுதல் " என்று யூட்யூபில் தேடிப் பார்த்ததும் அதிலும் பலப் பல பதிவுகள் - ஐந்து லட்சம் பத்து லட்சம் பார்வையாளர்களைக் கவர்ந்த பதிவுகள் காணக் கிடைத்தன.
எங்கள் குடும்பத்திலேயே கூட காய்கறி வெட்டுவதை ஒரு கலையாகப் பயில்பவர்கள் உண்டு. அவர்கள் எல்லோரும் பாவம் வாட்ஸ் அப்பில் உறவினர்களுக்குத் தகவல் சொல்வதோடு திருப்தி அடைந்து விடுகிறார்கள். வெங்காயம் வெட்டுதல் முட்டைக்கோஸ் நறுக்குதல் இவற்றைப்பற்றி விலாவாரியாக பதிவுகள் இட்டு லட்சக்கணக்கான பார்வையாளர்களைக் கவர முடியும் என்கிற சூட்சுமத்தை இவர்கள் அறிந்திருக்கவில்லை.
50 பேருக்கு பிரியாணி 100 பேருக்கு கறிக் குழம்பு என்று பெரிய அளவு சமையல் பற்றி மட்டுமே பதிவுகள் போட்டு மிகப் பிரபலமான யூடியூபர்கள் உண்டு.
அதேபோல சுமார் 12 பேர் சாப்பிடக்கூடிய அளவு சாப்பாட்டை போட்டுக்கொண்டு அதை ஒருவரே சாப்பிட்டு முடிக்கும் வீடியோக்கள் மிகவும் பிரபலம்.
இப்படி ஆயிரக்கணக்கிலும் லட்சக் கணக்கிலும் பார்வையாளர்கள் பார்க்கும் விதமாக வாராவாரமோ மாதா மாதமோ அல்லது உங்களுக்குத் திறமை இருந்தால் - தினசரியோ பதிவுகள் போட்டு வந்தீர்களேயானால் விரைவில் நீங்கள் கோடீஸ்வரராகும் சாத்தியம் நிறைவே இருக்கிறது.
இதைப் புரிந்து கொண்டு பயன்படுத்துகிற ஆர்வம் யாரோ இரண்டொருவருக்கு வந்து அவர்கள் ஏற்றம் கண்டால் அது ஒரு மகிழ்ச்சிக்குரிய செய்திதானே.
======================================================================================
நல்லது செய்யவும் மனம் வேண்டும்; அதற்கும் பணம் வேண்டும். இந்தப் பெண்மணி எப்படி சமாளிக்கிறார் பாருங்கள்.. நல்ல மனம் வாழ்க...
========================================================================================
தினமணி கதிர் இதழில் வந்த ஒரு கதை போன்ற...
அடியேனுக்கு அல்ஸர்.
"உங்களுக்கு வயிற்றில் புண் வந்திருக்கிறது" என்றார் டாக்டர் என்னை பரிசோதனை பண்ணிப் பார்த்து விட்டு.
"என்னது?"
"அல்சர் ஐயா உமக்கு! ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் ஆபத்து"
"அப்படியா? என்ன செய்ய வேண்டும் என்கிறீர்கள்?"
"இதுபோல அல்சர் வருவதற்கே காரணம் கோபததையும். வெறுப்பையும் மனசுக்குள்ளேயே அடக்கி அடக்கி வைத்துக் கொள்வதுதான். இனி அப்படிச் செய்யாதீர்கள்"
அவர் சொன்னது நூற்றுக்கு ஒரு உண்மை என்று ஒப்புக்கொண்டதுடன் இனி அல்சர் வராமல் பார்த்துக் கொள்வதென்றும் அப்போதே முடிவு கட்டினேன்.
"கோபம் வந்ததென்றால் உடனடியாக கொட்டித் தீர்த்து விடுங்கள். தப்பில்லை. கோபத்தில் குதிப்பதும் கன்னாபின்னாவென்று கத்துவதும் வெட்கப்படவேண்டிய சமாச்சாரமில்லை. எனவே உமக்கு அல்சர் வராமல் இருக்கவேண்டுமானால், கோபத்தை அடக்காதீர்" என்று டாக்டர் தொடர்ந்தார்.
அன்று மாலை வீடு திரும்பும் மோது டாக்டர் சொன்னதைக் கடைப்பிடித்து விடுவது என்று உறுதியோடு வந்தேன். வழக்கம்போல வாசலுக்கு வந்து வரவேற்ற என் மனைவி ஆசையாக என்னைக் கட்டிக் கொண்டாள் - வழக்கம் போலவே.
"என்ன இது விளையாட்டு" என்று எதிர்பாராதவிதமாகச் சீறினேன். அவள் இதை எதிர்பார்க்கவில்லை. வழக்கம்போல நானும் கொஞ்சுவேன் என்று எதிர்பார்த்தாள் போலிருக்கிறது.
'இப்போதுதான் கல்யாணம் ஆன புதிது என்று நினைப்பாக்கும்? ஒரு நாளைப் போல கொஞ்சல் என்ன வேண்டிக் கிடக்கிறது?" என்று இன்னொரு முறை சீறினேன்.
"உங்களுக்கு என்ன வந்து விட்டது இன்றைக்கு?" என்றபடி மீண்டும் அருகில் வர முயன்றாள்.
"வராதே! கிட்டே நெருங்காதே! நீ இது மாதிரி என்னை தெருங்கினாலே எனக்கு எரிச்சலாக இருக்கிறது!" என்று மூன்றாவது சீறல்.
முகத்தைத் தூக்கிக்கொண்டு உளளே போய் விட்டாள் அவள். அப்போதே அல்ஸர் எதோ கொஞ்சம் குணமாகத் தொடங்கிவிட்டது போலப் பிரமை எனக்கு.
சாப்பிட உட்கார்ந்தோம். சாப்பாட்டின் நடுவே. ''அப்பா! அந்த உருளைக்கிழங்கை இப்படிக் கொஞ்சம் தள்ளுங்களேன்!" என்றான் என் ஒன்பது வயதுப் பையன்.
"என்னடா இது! நீ உன் மனசிலே என்னை என்னவென்று நினைத்துக் கொண்டாய்? நான் என்ன உனக்கு வேலைக்காரனா" என்று கத்த ஆரம்பித்தேன். பையன் நடுங்கிப் போய்விட்டான். "தினமும் கேட்கிற மாதிரிதானே கேட்டேன்... இன்றைக்கென்ன திடீரென்று கோபம் வந்து விட்டது?" என்று சன்னமாக முணுமுணுத்தான்.
"ஏன்! கோபம் வரக்கூடாதா எனக்கு? நான் சுத்த மரக்கட்டை என்ற நினைப்போ உனக்கு? இல்லை, அப்பாவுக்கு அல்சர் வந்து நன்றாகத் திண்டாட்ட்டுமே எண்ணமா?..." என்று கூச்சல் போட்டேன்.
"நீ ஏண்டா அவர் வம்புக்குப் போகிறாய்!... வாயை மூடிக் கொண்டு இருக்க மாட்டாய்?.." என்று அவனை அதட்டி அடக்கிய மனைவி
"அந்த உருளைக்கிழங்கை இப்படி எடுத்துக் கொடுத்தால்தால்தான் என்னவாம்?" என்று பரிவாக ஆரம்பித்தாள்.
'ஓகோ! நீ அவனுக் சிபாரிசுக்கு வருகிறாயாக்கும்" இன்று உருளைக்கிழங்கை கொண்டு வா என்கிறவன் என்கிறவன் நாளைக்கு துடைப்பத்தைக் கொண்டு வா என்பான். அதற்கடுத்த நாள் சிகரெட் கொண்டு வா என்பான். இப்படியே போய்க் கொண்டிருந்தால் அப்புறம் உருப்படுவது எப்படி? அப்பன்காரனிடம் மரியாதையாக இருக்க வேண்டாமோ?"
அம்மாவும் பிள்ளையும் வாயை மூடிக்கொண்டு விட்டார்கள்.
சாப்பிட்டு விட்டுப் படுக்கையைத் தட்டிப் கொண்டிருக்கும்போது வாசல் மணி ஒலித்தது. பேப்பர் போடுகிற பையன் வந்திருந்தான்.
"என்னப்பா? என்னவிஷயம்?" என்று கேட்டேன்.
"பேப்பர் பணம் கொடுகிறீர்களா?"
"என்னது? பேப்பர் பணமா? அதற்கு இந்த ராத்திரியில்தான் வேளை பார்த்தாயா? இங்கே பாங்கா வைத்திருக்கிறேன் நோட்டை எண்ணிக் கொடுப்பதற்கு? பணமும் கிடையாது: ஒன்றும் கிடையாது! போ போ" என்று விரட்டியடித்துக் கதவைச் சாத்தினேன் படீரென்று. என் கோபத்தின் முழு வலிமையில் அது முனகியது. எனக்கே என்னவோ போலிருந்தது.
அரை மணி ஆகியிருக்கும். மறுபடியும் வாசல் மணி, கதவைத் திறந்தால் அதே பையன் நின்று கொண்டிருந்தான் - தன்அப்பாவுடன்.
"பேப்பர் போட்டதற்குப் பணம் கேட்டால் தர முடியாது என்று சொன்னீர்களாமே?"
"ஆமாம் ஐயா... முடியாது என்றுதான் சொன்னேன். உடனே வக்காலத்துக்கு அழைத்துக் கொண்டு வந்துவிட்டானா? ஹூம்! அவனுக்கு வசூல் பண்ணிக் கொண்டு போகத் துப்பில்லை, நீ வந்திருக்கிறாயாக்கும்! போய்யா சரித்தான் வேலை கெட்ட ஆளு!"
"'சார்! வார்த்தை ரொம்ப நீளுது . ராங் ஸைட்லே போகாதீங்க . ஆமாம், அவ்வளவுதான் சொல்வேன்!..."
"என்னய்யா ரொம்பப் பயமுறுத்தறே? உன்னாலே என்ன செய்துட முடியும்? எவன் கிட்டே இந்தப் பூச்சி காட்டற வேலையெல்லாம்? நம்ம கிட்டே எதுவும் பலிக்காது! போ, உன் வேலையைப் பார்த்துக் கொண்டு"
"இருய்யா, உன்னைச் சரியானபடி கவனிச்சுக்கறேன்" என்று ஆத்திரத்துடன் வெளியேறினான் அவன்.
"கவனி! நல்ல கவனி.. அதற்கெல்லாம் கலங்கிப் போய் விடுகிற ஆளில்லை நான்! நானும் உன்னைக் கவனிக்கிறேண்டா..." என்று ஆவேசக் கூச்சவ் போட்டேன்.
என் கோபம் வெளிப்பட வெளிப்பட எனக்கே ஒரு தெம்பு பிறந்தது போலிருந்தது. அன்று அதற்கப்புறமும் இன்னும் மூன்று பேரிடம் கோபத்தைக் கொட்டி அவர்களைப் பிரமிக்க வைத்த பிறகே தூங்கப் போனேன்.
இரண்டு நாட்களுக்குப் பிறகு டாக்டரைப் பார்த்தேன். "என்ன, உடம்பு எப்படி இருக்கிறது?...'' என்று விசாரித்தார்.
''ஓ! ஃபைன்!"
"நான் சொன்னபடி கோபம் வந்தபோது அடக்காமல் இருந்தீர்களா?"
"பின்னே?"
"பலன் எப்படி?!"
"அதைச் சொல்லி விட்டுப் போகத்தான் வந்தேன்" என் பையன் காலையிலே வீட்டை விட்டு ஓடிவிட்டான். என் மனைவி பிறந்தகம் போவதற்கு மூட்டை முடிச்சு கட்டிக்கொண்டி ருக்கிறள்....
*"அடடே! அப்புறம்?"
"இதோ பார்த்தீர்களா, முகவாய்க் கட்டையிலும் கன்னத்திலும்.. ?"
"அடி கிடி பட்டதா எங்காவது?"
"படவில்லை சுவாமி! கொடுத்தான் ஒருத்தன்... பேப்பர் போடுகிற பையனின் அப்பா என் முகவாய்க்கட்டையைப் பெயர்க்காமல் விடுவதில்லை என்று சொல்லி, கொடுத்த பரிசு இது....."
"அடப் பாவமே!"
"இன்னும் கேளுங்கள்... என் மாமியார் எங்கள் வீட்டுக்கு வரப் போவதாக போனில் சொன்னாள். "அடிக்கடி வர இது என்ன தர்ம சத்திரமா? என்று கோபத்தில் இரைந்தேன். 'மாப்பிள்ளையின் முகத்திலேயே விழிப்பதில்லை என்று அவள் சபதம் எடுத்துத் கொண்டிருக்கிறாளாம்...."
.
"அப்புறம்?"
"சாப்பாட்டுக்கு ஒரு நாள் எங்கள் வீட்டுக்கு வாருங்களேன்" வீட்டுக்காரர் கூப்பிட்டார். அவருக்கும் காரமாகப் பதில் சொன்னதிலிருந்து அவர் என்னிடம் சரியாக முகம் கொடுத்துப் பேசுவதே இல்லை"
"இன்ட்ரெஸ்டிங்காக இருக்கிறது. . மேலே சொல்லுங்கள்!"
"வேறென்ன இருக்கிறது?.... 'கஞ்சன்' 'கருமிப் போவழி' என்று எனக்குப் பட்டம் கிடைத்திருக்கிறது"
"அதெப்படி?"
"செஞ்சிலுவைச் சங்கநிதி என்று உண்டியலத் தூக்கிக் கொண்டு இரண்டு பெண்கள் வந்தார்aள். விரட்டோ விரட்டு என்று கோபத்துடன் விரட்டியடித்தேன; பலன்; பட்டம் கிடைத்துவிட்டது"
"ஐ ஸீ " என்ற டாக்டர், "உமக்கு இத்த வைத்தியம் ஒத்து வராது போலிருக்கிறது... பேசாமல் கால்ப் ஆடிப் பாருங்களேன்!..." என்றார் மெள்ள.
"இத்தனைக்கு அப்புறம் இதைச் சொல்கிறீர்களே! முன்னடியே சொல்லித் தொலைப்பதுதானே? மூளை எங்கே போயிற்று?" என்று கோபத்துடன் சுத்தினேன் நான்.
"அட்டெண்டா முதலில் இந்தக் கோபக்கார ஆசாமியைக் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளு" என்று உத்தரவிட்டார் டாக்டர்.
- ஆர்ட் புச்வால்ட்.
=======================================================================================
ஜெயமோகன் சொன்னது...
சென்ற தலைமுறையில் சுஜாதா, பாலகுமாரன், இந்துமதி, வாசந்தி, சிவசங்கரி போன்ற நட்சத்திர அந்தஸ்து கொண்ட வணிகக் கேளிக்கை எழுத்தாளர்கள் இருந்தனர்.
அவர்களின் வாசகர்களில் ஒரு சாரார் பின்னர் இலக்கிய வாசகர்களாக ஆனார்கள். - ஜெயமோகன் , 2013
======================================================================================
சிவாஜியிடம் பாரதிராஜாவுக்கு ஏற்பட்ட அதிருப்தி....
பாரதிராஜா தீவிர கடவுள் பக்தர். தினமும் பூஜை செய்வார். ஏன் இப்படி பூஜை செய்கிறார் என்று கேட்டபோது தனக்கு உதவி செய்த எல்லோருக்கும் நன்றி சொல்ல வேண்டும்யா என்பார். கடலை படம் எடுத்தால் பின்னர் அந்த கடற்கரை சென்று கடலுக்கு நன்றி சொல்வாராம்.
லொகேஷன்களுக்கெல்லாம் நன்றி சொல்வாராம். அழுகையே வருமாம் அவருக்கு. அவர் உதவி இயக்குனராய் கஷ்டப்பட்ட காலங்களில் உதவி நடிகையாய் இருந்த ஒருவர் அவருக்க உதவிகள் செய்தாராம். அவருக்கு நாம் இயக்குனரானதும் ஏதாவது நல்ல ரோல் கொடுத்து உதவ வேண்டும் என்று நினைத்திருந்தாராம். மூன்று படங்கள் முடித்தும் அவர் கண்ணிலேயே படவில்லை. அந்தக் காலத்தில் போன் நம்பர் அது இது என்று எதுவும் கிடையாது. சிகப்பு ரோஜாக்கள் படப்பிடிப்பு நடந்த சமயம் ஒருநாள் அவர் பாரதிராஜா அலுவலகத்தில் உற்கார்ந்திருப்பதைப் பார்த்தி ருக்கிறார் உதவி இயக்குனர். உள்ளே சென்று முக்கிய வேலைகள் முடித்து பத்தே நிமிடங்களில் வெளியே வந்து பார்த்தால் அவரைக் காணோம். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அவர் ஏன் இங்கே வந்தார், ஏன் பார்க்காமலே சென்றார் என்று புரியவே இல்லை என்று வருத்தப்பட்டார் பாரதிராஜா. என்னுடைய படங்களுக்கு இளையராஜா இசை அமைத்தது பெரிய தூக்கு தூக்கிக் கொடுத்தது என்கிறார்.
'முதல் மரியாதை' படத்தில் சிவாஜி நடிப்பு பாரதிராஜாவுக்கு திருப்தியே வராமல், அஸிஸ்டண்ட்களிடம் சிவாஜியை மாற்றி விட்டு SPB அலலது மலேஷியா வாசுதேவனை நடிக் க வைக்கலாமா என்று பேசினாராம். சித்ரா லட்சுமணன் தான் அவரை கடிந்து கொண்டாராம். 'அவர் நடிப்பு சக்கரவர்த்தி, நடிப்பு இமயம்.. பார்த்து பேசுங்க' என்று சொன்னாராம்.
நான்கைந்து நாட்கள் வந்து ஷூட்டிங் ஆரம்பித்து கொஞ்ச நேரத்திலேயே பேக்கப் சொல்லி விடுவாராம் பாரதிராஜா. பூங்காற்று திரும்புமா பாடல் காட்சி எடுக்கப்படாமலேயே ஓடிக்கொண்டிரு க்க சிவாஜியிடம் பேசுவதற்கு அவர் தங்கி இருந்த இடத்துக்கு போனார் நாரதிராஜா.
அங்கே கமலா அம்மா வெளியே உட்கார்ந்து மீன் வ்றுத்துக் கொண்டிருந்தவர் என்னப்பா இன்னிக்கும் சீக்கிரமே அனுப்பி ட்டியாமே என்று சொல்லி உள்ளே இருக்காரு போயி பாருன்னாங்களாம் ,. உள்ளேபோய் சிவாஜியைப் பார்த்தவர் அப்படியே நின்று விட்டாராம். 'இதான்.. இவரைத்தான் தேடிக் கொண்டிருந்தேன்..' என்று கேஷுவல் லுக்கில் அமர்ந்து கொண்டிருந்த சிவாஜியைப் பார்த்து "அண்ணே.. இதாண்ணே இதுதான் வேண்டும் எனக்கு.. நாளைக்கு ஷூட்டிங்குக்கு இப்படியே வாங்கண்ணே" ன்னாராம்.
சிவாஜி "அட என்னப்பா விக்கு.." என்று இழுக்க, "அட அதுதாண்ணே பிரச்னை. நானே சொல்லி ஏற்பாடு செய்த விக் தான். ஆனால் அது சரியில்லை.. இதுதான் சரி" என்று சொல்லி வந்து, அப்புறம் எடுத்தாராம் படத்தை. ராதா பாரெதிராஜாவுக்கு மகள் போலவாம்!!! எட்டே நாட்களில் அவர் போர்ஷனை முடித்து அனுப்பி விட்டாராம்.
"இந்தப் படம் ஓடாது.. கிழவர் படம் எடுத்திருக்கே... இதுக்கு காசு வேண்டாம்" என்று சொல்லி இளையராஜா வழக்கம்போல தன் உழைப்பைக் கொட்டி இசையமைத்துக் கொடுத்தாராம். படம் வெற்றியடைந்ததும் மறுபடி காசு கொடுக்கச் சென்ற பாரதியிடம் "நான் சொன்னது சொன்னதுதான் காசு வேண்டாம்" என்று விட்டாராம் இளையராஜா (இதையே இன்னொரு பேட்டியில் யாரோ படம் வெற்றி அடைந்ததும் இளையராஜா இப்போ காசு குடு என்று கேட்டதாகவும், பாரதிராஜா அப்போ வேணாம்னே இல்ல? அவ்வளவுதான். காசு தரமாட்டேன் என்று சொல்லி விட்டதாகவும் ஒரு வெர்ஷன் உண்டு)
- டைரக்டர் சுப்ரமணிய சிவா
=====================================================================================
அப்போது வெளியான ஒரு படத்துக்கான சுருக்கமான விமர்சனம்.

படத் தொடர்கதை! தொடர் சித்திரக் கதை!
========================================================================================
மனதைத் தாக்கும் இந்தப் பாடலின் உருக்கம் பாடலின் டியூனால் வந்ததா? சுசீலாம்மாவின் குரலால் வந்ததா? கண்ணதாசன் வரிகளால் வந்ததா? இல்லை அந்தக் கதை சொல்லும் நெருடலான வாழ்க்கைச் சோகத்தால் வந்ததா?
மறக்க முடியாத பாடல். 'இளமை எல்லாம் வெறும் கனவுமயம்தான்' வரிகள்.. மறவேன் மறவேன் என்றார் உடனே மறந்து விட்டார் தோழி என்னும்போது வெளிவரும் சோகம்.. இவள் சோகம் அறியாமல் தியொழியும் "அவள் கணவனும்" அதை ரசிப்பது...
11 பாடல்களில் சந்திரகௌன்ஸ் ராகத்தில் அமைந்திருக்கும் இந்தப் பாடலுக்கு வீணை மேதை பிச்சுமணி அய்யர் வீணை வாசித்திருக்கிறார். இசை மெல்லிசை இரட்டையர்.













காலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா.. வணக்கம். பிரார்த்திப்போம்.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய வெள்ளி சிதறல் எப்போதும் போல் அருமை. அருமையான தலைப்புக்கேற்ற வரிதேடி இறுதிக்கு வந்து விட்டேன். நல்ல பாடல். இந்தப்பாடலின உருக்கமும், சௌக்கார் ஜானகியின் நடிப்பும் எத்தனை முறை கேட்டாலும், பார்த்தாலும் மனதை கவரும் வண்ணம் இருக்கும். இப்போதும் கேட்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி அக்கா. சல்லென்று கடைசிவரை ஒரு பார்வை பார்த்து விட்டீர்கள் போல...
நீக்குஇல்லையில்லை. முதலில் பார்த்ததே கடைசியைதான். எடுத்தவுடன் அந்த தலைப்பை பார்த்தும் இந்த பாடல் நினைவுக்கு வந்தது. இல்லை இது வேறு ஏதாவது என பார்க்க வந்தேன். கடைசியில் இந்தப்பாடலை இடம் பெற்றிருப்பதால், பாடலுக்கு முதல் கருத்தாக தந்து விட்டேன். :))
நீக்குஆஹா.. புரிந்துகொண்டேன் நன்றி கமலா அக்கா
நீக்குவணக்கம் சகோதரரே
நீக்குஹா ஹா ஹா. குப்பன் விளம்பரம் ரசித்தேன். உலகில் இருக்கிற மோசமான காரியங்கள் செய்யத்தான் இந்த பானம் போலும்..! இதில் இவர் குடும்பத்தலைவர். சிரித்து மாளவில்லை.
குறிப்பிட்ட அந்தப்படம் "சினிமா பைத்தியமா.?" நன்றி
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
இன்னமும் இறுதியிலிருந்தே தொடர்கிறேன். முதல் பகுதிகள் படித்து கருத்து தெரிவித்து விட்டால், பின் இறுதிவரை படித்தாலும், கருத்துகள் தர முடியாமல் சில நாட்கள் கடந்து விடுகிறது. அதனால் இப்படி.
நீக்குஅந்த விமர்சனம் புத்திசாலி பைத்தியங்கள் என்கிற படத்துக்கு என்று நினைக்கிறேன்.
நீக்குகாத்திருக்கிறேன் அக்கா.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குயாருக்கு மாலை பட தொடர்கதை முடியாமல் வெள்ளி சிதறலாக தொடர்ந்து விட்டதே.!! ஜெ ஓவியங்கள் அழகு. இது இன்று ஆரம்பிக்கும் முன்பே ஒரு தொடர்தானா.? இருப்பினும் அடுத்த வெள்ளியில் கதை புரியுமென நினைக்கிறேன்.
அடுத்தடுத்துள்ள ஒவிய கேரக்டர்கள் யாரென புரிந்து கொண்டேன். சந்திரா அவர்களின் ஒவியங்களும் மிக அழகாக உள்ளன. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நல்ல கதையா இருக்கே.. யாருக்கு மாலை ஒரு ஸ்பெசிமன் படம்தான். அது போச்சு 25 வாரம். ஒவ்வொரு வாரமும் இரண்டு மூன்று பக்கங்கள் இருக்கும். அதை எப்படி இங்கே கொண்டுவ் அறுவது!
நீக்கு/நல்ல கதையா இருக்கே.. / நானும் அதைத்தான் சொல்ல வந்தேன். நீங்கள் வேறு தொணியில் சொல்லியிருக்கிறீர்களோ. ? :))
நீக்கு25 வாரத் தொடரா? நான் படித்தாக நினைவில்லை. முன்பெல்லாம் (தி. முன்) இந்த மாதிரி படக்கதைகளுக்கு வாரந்திரிகளை எதிர்பார்த்து பிறந்த வீட்டில் காத்திருப்போம் . தி. பின்னுக்கு பின் அதுவெல்லாம் போயே போச்சு. புகுந்த வீட்டின் கடமைகள் படிக்கும் பழக்கத்தை ஒரு கடமையாக நினைத்து நிறுத்தி விட்டது.
ஆமாம்.. கல்கி உட்பட பல புத்தகங்களிலும் சித்திரக்கதை வந்திருக்கிறது. நானும் ரசித்திருக்கிறேன்.
நீக்குஅதென்ன தி.முன் தி.பின்
கி. மு. கி. பி மாதிரி. நம் வாழ்விலும் நடைபெறுவது.( திருமணத்திற்கு முன் சுதந்திர பறவைகள் மாதிரி)
நீக்குஓஹோஹோஹோஹோ...
நீக்கு// திருமணத்திற்கு முன் சுதந்திர பறவைகள் மாதிரி)// அப்போ அம்மாக்களுக்கு குழந்தை திருமணம் ஆகி புகுந்த வீடு சென்றுவிட்டால் சுதந்திரம் கிடைத்தது போன்றும், அதற்கு முன்பு சுதந்திரம் இல்லாதது போலவும் இருக்குமோ?
நீக்குபிறந்த வீட்டில் இருக்கும் சுதந்திரம் புகுந்த வீட்டில் இருக்காதுதான்..
நீக்குஅதுதான் உண்மை.
நீக்குஇதைத்தான் நான் சொல்கிறேன். ஒருவருக்கு சுதந்திரம் என்றால் இன்னொருவருக்கு சுகமான சுமை அல்லது சிறை. பெண்கள் புகுந்த வீட்டில் சுதந்திரமாக இருக்க அவர்களது அம்மா, சுமையைச் சுமக்க வேண்டும். பெண் திருமணமாகிச் சென்றுவிட்டால் அக்கடா என்று இருக்கும், மனதில் இந்தப் பெண் புகுந்த வீட்டில் நல்லா இருக்கணுமே என்ற கவலை இருந்தாலும். அதனால் ஒருவருக்கு சுதந்திரம் என்றால் இன்னொருவருக்கு சுமை
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குமுதல் பகுதியில் தங்களது அபிப்பிராயங்களும், அணுகுமுறையும் மிகவும் சரிதான். நாம் ஒன்றை சொல்லி விட்டால், உடனே ஒரு மறுப்பு எதிராளியிடமிருந்து கண்டிப்பாக வரும். இது ஒரு வகையில் மனித குணமும் கூட என்றுதான் நான் நினைப்பேன்.
எனக்கும் தங்களைப் போல செயலாற்றத்தான் பிடிக்கும். ஆனால், ஒரு பொது மரியாதை நிமித்தம் குடும்பத்தில் (சமையல் உட்பட) ஒரு கருத்து கேட்பேன். என் மகள் உறுதியாக சொல்வாள். "உன்னால் முடிந்ததை, வீட்டிலிருப்பதை வைத்து என்ன சமையல் செய்ய முடியுமென்பதை தீர்மானித்து செய்து விடேன். எதற்கு எங்களிடம் கேட்க வேண்டும். பிறகு நாங்கள் அனைவரும் எங்கள் மனதில் பட்டதை கூறுவோம். பிறகு நீதான் திண்டாடுவாய்" என்பாள். அவள் சொல்லும் போது எனக்கும் (பிறகு) நியாயமாகப்படும். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
பிரச்னை அனவுன்ஸ் செய்யாமல் செயலாற்றுவது பற்றி அக்கா!
நீக்குமுருகா சரணம்
பதிலளிநீக்குவாங்க செல்வாண்ணா.. வணக்கம்.
நீக்குசில சமயங்களில் கீதா ரங்கன் அக்காபோல, படிக்கப் படிக்க கருத்து எழுதிடணும். முக்கால் போர்ஷன் படித்துவிட்டேன். சுவாரசியத்தில் தொடர்ந்து படித்திருக்கிறேன். இனி பதினோரு மணி வாக்கில்தான் கருத்திட இயலும்.
பதிலளிநீக்குவாங்க நெல்லை.. எந்த ஒரு பிளாக்கிலும் நான் படிக்க படிக்க கருத்து எழுதி விடுவேன். Y because பின்னர் அந்த ப்ளோ இருக்காது அல்லது மறந்து விடும்!
நீக்குஇதுவும் சரிதான். அப்போ மனதில் தோன்றுவது பிறகு தோன்றாது. ஆனால் இன்று படித்தவரை ரசனையாக இருந்தது
நீக்குநன்றி.
நீக்கு//சில சமயங்களில் கீதா ரங்கன் அக்காபோல, படிக்கப் படிக்க கருத்து எழுதிடணும்.// ஹூம், நானெல்லாம் அப்படித்தான் பண்ணிட்டு இருக்கேன். கண்டுக்கறவங்க தான் இல்லை. :))))
நீக்குஎன்ன இப்படி பொசுக்குன்னு சொல்லிட்டீங்க கீசா மேடம்? நான் பதிலெழுதாமல் இருந்ததே இல்லையே
நீக்குநானும் அப்படிதானே...
நீக்குவாழ்க நலம்
பதிலளிநீக்குநலமே விளைக
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குதங்கள் மாமியார் இப்போது எப்படியிருக்கிறார்.? படித்ததும் மனதுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. இட்லியில் மோர் விட்டு தர முயற்சிக்கலாமே.!! அது விழுங்குவதற்கு கொஞ்சம் இலகுவாக நன்றாக இருக்குமே.! அவர் விரைவில் பழையபடி பூரண குணமடைய இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன். நன்றி சகோதரரே .
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஸாலிடாக எது கொடுத்தாலும் 'உவ்வே'தான்! ஆனால் திடமாக இருக்கிறார்.
நீக்குPrayers. இயற்கை உபாதைகளைக் கழிக்கத் தானாகவே போய்விட்டு வருகிறார் அல்லவா? அப்போ ரொம்பக் கவலை வேண்டாம். மருந்துகளின் தாக்கத்தில் இப்படி இருக்கலாம். சாதத்தைக் குழைவாக வடிச்சுட்டுக் கொஞ்சமா உப்புச் சேர்த்து மிக்சியில் அடிச்சுட்டுத் தெளிவு ரசம் விட்டுக் கரைச்சாற்போல் ஒரு அரை தம்பளர் கொடுத்துப் பாருங்க. பிடிச்சால் சாப்பிடட்டும். ஆனால் கேட்க வேண்டாம். இல்லைனால் புழுங்கலரிசியை வறுத்துக் கொண்டு அதைக் கஞ்சியாகப் போட்டு அதிலேயே தக்காளிச் சாறு மிளகு, ஜீரகப்பொடி, உப்புச் சேர்த்து நன்றாக நீர்க்கப் பண்ணிக் கொஞ்சமாய்க் கொடுங்க ஆரம்பத்தில். பிடிச்சுச் சாப்பிட்டால் மெல்ல மெல்லக் கூடக் கொடுக்கலாம். பருப்பு ஜலமாக அதில் சேர்க்கலாம். பருப்புக் கரைச்சுச் சேர்க்க வேண்டாம்.வெந்த பருப்பில் ஜலம் ஊற்றி ஒரு கலக்குக் கலக்கிட்டு மேலே தெளிந்து வரும் நீரை மட்டும் ஆரம்பத்தில் சேருங்கள். பழச் சாறு கூடக் கொடுக்கலாம், சாப்பிடலாம் என்றால். நீராகாரமாகக் கொடுப்பதால் குறைந்தது இரண்டு மணிக்கொரு தரம் அரை தம்பளர் ஆகாரம் கொடுக்கலாம்.இதில் பழச்சாறுகளும் கொடுக்கலாம். காலையில் ஆரஞ்சு அல்லது சாத்துக்குடி ஜூஸ். மாலை நான்கு மணி அளவில் மாதுளை அல்லது ஆப்பிள் அல்லது வேறே பழம்.
நீக்குகீதா அக்கா.. ஒரு மிளகு சேர்த்தாலும் கா.... ரம் என்று சாப்பிட மாட்டார். சாதத்தை மிக்சியில் அடித்துக் கொடுத்தாலும் வெளியில் கொண்டு வருகிறார். என்ன சொல்ல.. ஆனால் தெம்பாகத்தான் இருக்கிறார்.
நீக்குமுதல் பகுதிக்கும் தலைப்புக்கும் என்ன சம்பந்தம்?
பதிலளிநீக்குசொல்லாமல், சாப்பிட உட்காரும்போது, நமக்குப் பிடித்தது இருந்தால் அதன் மகிழ்ச்சியே தனி. ஆர்வம் இல்லாத்து இருந்தாலும் பாதகமில்லை.
என்னிடம் உள்ள கெட்ட குணம், இன்றைக்கு இது என மெனு தெரிந்தபின், மாற்றிவிட்டால் என்னதான் எனக்குப் பிடித்தவையாக இருந்தாலும், மாற்றுவதை விரும்புவதில்லை.
முன்னறிவிப்பு செய்தால் சுவாரஸ்யம் குறைந்து விடுகிறது, அல்லது லேசான எதிர்ப்புணர்வு வருகிறது என்கிறேன் நான்!
நீக்குஉண்மைதான். ஆனால் எங்கள் வீட்டு வழக்கப்படி என் மெனுதான். இது பற்றி இன்று எழுதறேன்.
நீக்குஎங்கள் வீட்டில் எல்லார் கருத்துக்கும் மதிப்பு அளிக்கப்படும்! ஆனால் அன்றே வருமோ இன்னொரு நாள் வருமோ..
நீக்குஎன் வழி தனி வழி. பசங்க ஆசைப்பட்டவை சமைக்கப் பட்டாலும், எனக்குப் பிடித்தவை மாத்திரமே சாப்பிடுவேன். என் மெனு இருந்தாலும் பசங்களுக்குப் பிடித்தவைகளையும் சேர்த்துக்கொள்வார். நான் செய்வது அராஜகம்தான்.. என்ன செய்ய?
நீக்குஇப்போதெல்லாம் சரியா சாப்பிடுவதில்லை. எடை கூடும் என்ற அப்சஷன், கம்பல்சிவ் டிஸ்ஆர்டர்..ஹா ஹா ஹா
எங்க வீட்டிலேயும் பிறந்த வீட்டிலும் சரி, புகுந்த வீட்டிலும் சரி, அப்பாவும், நம்ம ரங்க்ஸும் சொல்லுவது தான். கூட்டுக்குடும்பமாக இருந்தப்போ அப்படிச் செய்ய முடியலை. அதனால் முதல் நாள் இரவே எல்லோரும் வீட்டில் இருக்கும் நேரமாகப் பார்த்து இரவு ஒன்பது மணி அளவில் மாமியாரைக் கேட்டுக் கொண்டு முடிவு செய்துப்பேன். காலை எழுந்ததும் வசதியாக இருக்கும். இதில் எதிர்பாராமல் நேர்வது கீரை வாங்கினால் தான். அன்னிக்குப் பண்ண இருந்த காய் என்னனு பார்த்து கீரைக்குத் தோதாக எது வருமோ அதைப் பண்ணணும்.
நீக்குஇந்தப் பழக்கத்தில் உள்ள பிரச்சனை, அவங்க சொல்லலைனா, இன்று என்ன பண்ணுவது என்பதை முடிவு செய்வதே கஷ்டமாயிடும் இல்லையா?
நீக்குஅதெல்லாம் இல்லை. இருப்பதை வைச்சு நானாகவே ஏதானும் பண்ணிடுவேன். அநேகமாக சாம்பார் வைச்சுடுவேன். ஏனெனில் பெரும்பாலும் சாம்பார் தான் எதிர்பார்ப்பார்கள். அதிலும் கடைசி நாத்தனார் சாம்பார் இல்லைனா சாப்பிடவே மாட்டாங்க. காய்கள் தான் கொஞ்சம் யோசித்துப் பண்ணுவேன். கத்திரி+உருளை+வெங்காயம் போட்டு வதக்குவேன். அல்லது கத்திரிக்காய்ப் பொரிச்ச கூட்டுனு பண்ணுவேன். கூட்டில் எல்லாம் பருப்புப் போட மாட்டேன். அது சாதத்தோடு சாப்ப்பிடும் கூட்டுன்னாத் தான் பருப்பு. தொட்டுக்கப் பண்ணும் கூட்டு எனில் பருப்பில்லாமல் தான். ஆனாலும் விமரிசனங்கள் கடுமையாகவே இருக்கும். கடைசி நாத்தனார் இருந்தாங்கன்னா மதுரைச் சமையல் இன்னிக்கு பருப்பே இல்லாமல்னு கேலியும், கிண்டலுமாகக் கோபமாகவும் பேசுவாங்க. மாமனார் கலத்துப் பருப்புப் போடுனு சொல்லுவார். சாம்பார்தான் இன்னிக்குனு சொன்னாலும் கூட்டு, ரசத்திலே பருப்பு இல்லையேனு சொல்லுவாங்க. பருப்பு நிறையவே வேணும்.
நீக்குநாங்கள் செவ்வாய் வெள்ளியில் சாம்பார். மற்ற நாட்களில் வெந்தய குழம்பு, பொரிச்ச குழம்பு போல.. நான் சொல்வது எப்பவாவது அம்பலம் ஏறும்!
நீக்குyesso yessu
நீக்குபல தகவல்களைத் திரட்டித் தந்துவிட்டு
பதிலளிநீக்குசிதறல் என்றால் எப்படி?
ஹிஹிஹி.. சொல்லலாம் இல்லை?
நீக்குநான் சமைக்கும் காலங்களில் அன்று என்ன பண்ணப் போகிறேன் எனச் சொல்ல மாட்டேன். உண்மையாகவே கிச்சனைள் நுழைந்ததும் மனதில் ஐதிப்பதைப் பண்ணுவேன். சில நேரங்களில் பாதியில் மெனு மாறும். இதைச் செய்யலாம் என நினைத்து நுழைந்தபின் மெனு மாறுவதும் உண்டு. பசங்கள்ட, இது பெருமாள் நினைப்பதுன்னு சொல்லிடுவேன்.
பதிலளிநீக்குநேற்று மாலை மனைவி என்னவோ செய்துகொண்டிருந்தார். நானோ ஆறு மணிக்குமேல்்சாப்பிடுவதில்லை, அனேகமா. மாலை, அரை மணி நடந்துவிட்டு வந்ததும், .அதிசயமா சாப்பிட்டேன். நேற்று செய்த வெஜ் பிரியாணி ரொம்பப் பிடித்திருந்தது. இன்றும் செய்யச் சொல்லியிருக்கேன்.
இங்கும் அவ்வப்போது மெனு மாறுவதுண்டு!
நீக்குஎனக்கென்னவோ பிரியாணி வகைகள் பிடிப்பதில்லை. முன்பு ஃபிரைட் ரைஸ் பிடித்தது. இப்போது அதுவும் போர்!
இங்கு பெங்களூர் கஃபேனு ஒரு இடத்தில் பிரியாணி சாப்பிட்டேன், மூன்று நாலு வருடங்களுக்கு முன். அவ்வளவு ருசி. (500 ரூ என நினைவு) அதன் பிறகு நேற்றுதான். வெஜ் பிரியாணி, நல்ல வெஜ் ஹோட்டலில் சாப்பிடணும்னு எண்ணம். ஆனால் பொதுவா நான் சாதம் சாப்பிடுவதில்லை.
நீக்குசாதாரணமாக ஏலக்காய், கிராம்பு, இஞ்சி, பச்சை மிளகாய் போட்டே ஃப்ரைட் ரைஸ் பண்ணிடுவேன். மாமனார், மாமியாரெல்லாம் சாப்பிடுவாங்க என்பதால். ஆனால் மாமனார் சாப்பாடு விஷயத்தில் பேதம் பார்த்தது இல்லை. மாமியார் நேர் மாறாக ரொம்பவே பிரச்னை. :)))) நீ உன் பழக்கத்துக்குப் பண்ணிடறே, எங்களுக்கெல்லாம் பிடிக்க வேண்டாமா என்பார்.
நீக்குஇந்த மாதிரியான கலந்த சாத வகைகளை என் புகுந்த வீட்டில் அறிமுகம் செய்ததே நான் தான். இஃகி, இஃகி. அவங்க எப்போவுமே ஒரே மாதிரி சாம்பார், கறி அல்லது கூட்டு, சாதம்னு தான் பண்ணிட்டு இருந்தாங்க. ரசமெல்லாம் தினம் இருக்காது. நான் தான் ரசம் வைப்பேன். சமையலிலும் மோர்க்குழம்பு, பொரிச்ச குழம்பு, வத்தக்குழம்பு வற்றல் போட்டு, வற்றல் போடாத வெறும் குழம்பு, கூட்டு வகைகள்னு மாத்தினேன். :)))) கலந்த சாதம் எல்லாம் குழந்தைகளுக்கு மத்தியானம் லஞ்ச் பாக்ஸில் வைக்கனு பண்ணுவேன். மோர் சாதமெல்லாம் கொடுக்க மாட்டேன்.
நீக்குஇந்த கலந்த சாதம் பண்ணுபவர்கள், மிகச் சுலபமானது என்பதற்காகத்தானே இதனைச் செய்கிறார்கள்? இதனால்தான் கலந்த சாதம், உப்புமா என்றால் குழந்தைகள் முழங்கால் பிடறியில் பட ஓடுகிறார்களோ?
நீக்குகலந்த சாதம் ஒண்ணும் சுலபமெல்லாம் இல்லை. சாமான்கள் சேகரித்து வகையாப் பண்ணினால் தான் சாப்பிட முடியும்.
நீக்குஃபிரைடு ரைஸில் ஏலக்காய், கிராம்பா? இஞ்சி பேஸ்ட்டா? அதெல்லாம் போடமாட்டோம். அதிக பட்சம் வெள்ளை மிளகுப்பொடி. சமயங்களில் பிரைடு ரைஸ் சாத் பொடி..
நீக்குகலந்த சாதம், பொரிச்ச குழம்பு மாறுதல்கள் நீங்கள்தான் செய்தீர்களா? அப்போ அதற்குமுன் அவர்கள் என்னதான் செய்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்?
நீக்குபிற்காலத்தில் கலந்த சாதம் என்பது கலந்த சேவை என்று உருவும் மாறியது!
நீக்கு//அதற்குமுன் அவர்கள் என்னதான் செய்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்?// தினமும் மாறுதலே இல்லாமல் நிறையப்பருப்புப் போட்டுப் பொடி போட்ட சாம்பார் தான். சாம்பார்னா எங்களுக்கெல்லாம் வறுத்து அரைச்சா தான். பொடி போட்டுப்பண்ணுவதைப் பருப்புக் குழம்புனு சொல்லுவோம். என் மைத்துனர், நாத்தனாரெல்லாம் இன்னமும் மாறிக்கலை. சாம்பார் தான் தினமும். இங்கே வந்தால் மாறுதலாச் சாப்பிடும்போது வயிறே நிரம்பலை என்பார்கள். நானெல்லாம் வாரம் ஒரு நாளாவது துவையல் அரைப்பேன். கூட்டு அல்லது பச்சடி தொட்டுக்கப் பண்ணுவேன். ஆனால் என் புக்ககத்தில் துவையல் அரைச்சால் அன்னிக்கு ஒரே சண்டை தான். கூட்டுக்குடும்பமாக இருக்கும்போது கூட நான் எங்க நாலு பேருக்கு மட்டும் துவையல், பச்சடினு பண்ணிப்பேன். அவங்கல்லாம் சாம்பார்தான்.
நீக்கு//ஃபிரைடு ரைஸில் ஏலக்காய், கிராம்பா? இஞ்சி பேஸ்ட்டா? // நீங்க சைனீஸ் ஃப்ரைட் ரைஸ் சொல்றீங்களோ? அதுக்கெல்லாம் தினுசு தினுசாக சாஸ் வேணும். நான் சும்மா இந்தத் தாளிதத்திலேயே பச்சை மிளகாய் , இஞ்சி பொடியாக நறுக்கிச் சேர்த்துக் கொண்டு காய்களைச் சேர்த்து நன்கு வதக்கிக் கொண்டு மஞ்சள் பொடி, மி;பொடி, தனியாப் பொடி சேர்த்துக் கொஞ்சமாக மசாலா போடுவதற்குப்பதிலாக பட்டை, பெரிய ஏலக்காய்ப்பொடியைச் சேர்த்து மிளகு பொடி, ஜீரகப் பொடி சேர்த்துக் கடைசியில் கொத்துமல்லி, புதினா சேர்ப்பேன். புதினாவும் மாமனார், மாமியார் சாப்பிடமாட்டாங்க என்பதால் அவங்களுக்குத் தனியா எடுத்து வைச்சுட்டுப் போடுவேன். சில சமயங்களில் காய்கறிகளோடு தக்காளி சேர்க்காமல் தக்காளியைக் கொதிக்கும் நீரில் போட்டு ப்ளாஞ்ச் செய்து அதன் சாறை மட்டும் எடுத்துக் காய்களோடு சேர்ப்பேன். ஏலக்காய், கிராம்பு ஸ்ராத்தங்களில் சேர்ப்பதால் பெரியவங்க சாப்பிடுவாங்க. ஆர்ட்ஸ் ஆஃப் லிவிங்கில் இருந்தப்போ இப்படிச் சாதம் அல்லது சேவையில் பண்ணி எடுத்துண்டு போயிடுவோம். அங்கே மத்தவங்க கொண்டு வரதோட இதையும் பகிர்ந்துப்போம். சுமார் 30 பேருக்குக் குறையாமல் வருவாங்க.
நீக்குவிதம் விதமா செய்வதற்கு ஐட்டங்கள் இருக்கு என்பது தெரியாத வரை அவர்களுக்கு அவர்கள் சாப்பிட்டது அலுத்திருக்காது!
நீக்குபிரைட் ரைஸில் நான் இவ்வளவு சோதனை செய்ததில்லை!
ஹெஹெ, எனக்கெல்லாம் இதை மாத்தி, அதை மாத்தி எப்படி வருதுனு பார்க்கணும்னு ஆவல் வரும். ஆகவே மாற்றங்கள் எப்போதும் இருக்கும். திடீர்னு புளியஞ்சாதம் உடனடியாகப் பண்ணும் ஆவல் வரும். புளிக்காய்ச்சல் காய்ச்சல்லாம் பொறுமை இருக்காது. ஆகவே அரிசியைக் களைஞ்சு ஊறினதும் ரைஸ் குக்கரில் போட்டுட்டு அரை வேக்காடு விடுவேன். அதுக்குள்ளே கெட்டியாகப் புளி ஜலம் தயார் பண்ணி வைச்சுடுவேன். அந்தப் புளி ஜலத்தை அரை வேக்காடு சாதத்தில் சேர்த்துட்டு உப்பு, மஞ்சள் பொடி, பெருங்காயப் பொடி அல்லது பெருங்காயம் சேர்த்து நல்லெண்ணெய் ஒரு சின்ன குழிக்கரண்டியால் ஊத்திட்டு மறுபடி குக்கரை மூடுவேன். அரிசி முழுதும் வெந்து பொல பொலவென வந்ததும் வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி முதலில் மி.வத்தலைக் கருக எடுத்துக் கொண்டு பின் வேர்க்கடலையை முதலில் தாளித்துப் பின்னர் கடலைப்பருப்புப் போட்டுக் கடுகு சேர்த்துக் கருகப்பிலை, பெருங்காயம் சேர்த்துத் தாளிதத்தை அந்தச் சாதத்தில் விட்டுவிட்டு வெறும் வாணலியில் வறுத்த எள்ளுப்பொடி, வெந்தயப் பொடி, கடுகுப் பொடி, கொத்துமல்லிப் பொடியை எல்லாவற்றிலும் இரண்டு டீஸ்பூன் போட்டு நன்கு கலந்து இன்னும் கொஞ்சம் நல்லெண்ணெய் தேவைப் பட்டால் ஊத்திட்டு மூடி வைச்சுடுவேன். அரை மணி கழிச்சு எடுத்தால் சுவையான புளியஞ்சாதம் தயார்.
நீக்குதமிழகத்தில் பொதுவாக, யாரேனும் நல்லது செய்தால் பாராட்ட மாட்டாங்க. எங்க திருடியிருப்பானோ.. இல்லை உழைக்காமல் வந்த பணமோ? நல்ல பேர் எடுக்க முயற்சிக்கிற ஆன், அப்படீன்னா ஏதோ திருட்டு வேலை செய்கிறான்...இந்த மாதிரி பொதுவா தம்மைப் போலவே பிறரையும் எண்ணுவார்கள். அது நடிகர் பாலா, மயில்சாமி என யாராக இருந்தாலும் இப்படித்தான் எண்ணுவார்கள்.
பதிலளிநீக்குபாலா மேல் ஏதோ குற்றச்சாட்டு வந்தது. மயில்சாமி மேல் அப்படி எதுவும் தவறான கருத்து வந்ததில்லை.
நீக்குயூடியூபில் சம்பாதிப்பது, அதிலும் எந்த தொழிலிலும் சம்பாதித்துப் பெரியாளாக வருவது அவரவர் விதிப்பயன். இப்போதெல்லாம், சம்பாதித்தது பத்தாது என, அவர்கள் சேனலை பணம் கட்டிப் பார்க்கச் சொல்றாங்க. பேராசை காரணமாக கண்டதையெல்லாம் ப்ரொமோட் செய்யறாங்க. இந்த மாதிரி பைத்தியங்களைக் கண்டாலே எரிச்சல் வருகிறது.
பதிலளிநீக்குஅது என்னமோ தெரியலை, நான் யூ ட்யூபெல்லாம் பார்த்ததே இல்லை. பார்க்கவும் தோணினது இல்லை. சில படங்கள் பார்க்கலாம்னு சொல்றாங்க. பார்க்கணும். ஆனால் நினைப்பு வரதில்லை. நம்ம ரங்க்ஸ் தான் தினம் தினம் விடாமல் யூ ட்யூப் எல்லாம் பார்ப்பார். அதிகம் பார்ப்பது ஜோசியங்கள், அண்ணாமலை பற்றிய பதிவுகள். தொலைக்காட்சின்னால் வட இந்திய சானல்கள் மட்டுமே பார்ப்பார்.
நீக்குயூ டியூப் பார்க்க ஆரம்பித்தால், நேரம் போவதே தெரியாது. கடைசியில் என்ன பார்த்தோம் என்ன கத்துக்கொண்டோம்னு யோசித்தாலும் ஒண்ணும் இருக்காது
நீக்குயூ டியூப்முன்னர் எப்பவோ பார்த்திருக்கிறேன். இப்பல்லாம் ரீல்ஸ்தான். ஆனால் பாட்டு கேட்க எப்பவும் யு டியூப்தான்.
நீக்குசமீப காலத்தில் பார்வையாளர்களை ஈர்க்க ஏஐ உபயோகப்படுத்தி புளுகுவதும், ஆபாச படங்களை முகப்பில் போட்டு இழுப்பதும், பொய்த்தகவல்களையே உண்மை போலச் சொல்லுவதும், மிக மிக அதிகமாகிவிட்டது. யூடியூபின் நம்பகத் தன்மையே இல்லை. சமையல் காணொளிகள் தவிர பெரும்பாலும் ஃபிராடு காணொளிகள்தாம்.
பதிலளிநீக்குமறுபடி சொல்கிறேன்.. நான் பாட்டு கேட்க மட்டும்தான் அங்கே போவேன். ஆங்.. சில பேட்டிகள்...
நீக்குஅனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவாங்க கோமதி அக்கா.. வணக்கம்.
நீக்கு//லீவு லெட்டருடன் செல்வேன். நிமிர்ந்து கூட பார்க்காமல் லீவு லெட்டரில் 'கொக்கி' போட்டு அனுப்பி விடுவார். //
பதிலளிநீக்குநீங்கள் சொல்வது நல்லா இருக்கே!
//பாஸிடம் அவரிடம் முன்னறிவிப்பு இல்லாமல் அவருக்கு எப்போதும் பிடிக்கும் ஏதாவது ஒன்று கொடு என்பேன்.//
நீங்கள் சொல்வது சரியென்றாலும், நீங்கள் கொடுப்பதை வேண்டாம் வேறு ஏதாவது கொடு என்று கேட்டால் என்ன செய்வது, கேட்பது நல்லது வயதானவர்களிடம். சில பெரியவர்கள் இன்று இதை செய்து கொடுக்கிறாயா என்று கேட்பார்கள்.
உங்கள் மாமியார் விரைவில் நலம்பெற வேண்டும் .
கொடுப்பதை மறுத்து வேறு ஏதாவது கொடு என்று பெரும்பாலும் யாரும் கேட்க மாட்டார்கள் கோமதி அக்கா.. ஸைக்காலஜி! இன்னிக்கி இதான்னு விட்டுடுவாங்க..
நீக்குமனசாட்சியம் - 9
பதிலளிநீக்குயூடியூப் பகிர்வுகளை நல்லதை தேடி படிக்க வேண்டும்.
யூடியூப்பில் பதிவுகள் போட்டு பணம் சம்பாதிப்பது ஒரு கலைதான்.
yessu..
நீக்குஉமா ராணி பேசியது அருமை.
பதிலளிநீக்குநல்லது செய்ய வருபவர்களை பாராட்டி வாழ்த்தவேண்டும். உமா வயதானவர்களை அப்படியே தூக்கி விடுகிறார், மெலிதான தேகம் ஆனால் மன வலிமை,மற்றும் அன்பு அப்படி முதியவர்களை தூக்கி அவர்களுக்கு உதவி செய்ய முடிகிறது.
குடிகாரர்களுக்கு உணவு கொடுக்கமாட்டேன் என்பதற்கு அவர் சொல்லும் காரணம் அருமை.
மற்றவைகளுக்கு கருத்து சொல்ல நாளை காலை வருகிறேன்.
என்னையும் அந்த காணொளி நெகிழ்த்தி விட்டது.
நீக்குகுப்பன் என்கிற பெயரில் மறைந்திருக்கும் கழக எம் எல் ஏ யாரென்று கடைசிவரை சொல்லவே இல்லையே!
பதிலளிநீக்கு
நீக்குஹா.. ஹா.. ஹா.. ஜாடை கூட தெரியலையா?
மாலைப்பொழுதின் மயக்கத்திலே.. எத்தனை காலம் கழித்துக் கேட்டாலும், மனதைக் கிறங்கவைக்கிற பாடல். இசையும், சுசீலாவின் குரலுமே காரணம்.
பதிலளிநீக்குவழி மறந்தேனோ
நீக்குவந்தவர் நெஞ்சில் சாய்ந்து
விட்டேன் தோழி
அவர் மறவேன்
மறவேன் என்றார் உடனே
மறந்து விட்டார் தோழி
பறந்து விட்டார் தோழி
கனவில் வந்தவர்
யாரென கேட்டேன் கணவர்
என்றார் தோழி
கணவர் என்றால்
அவர் கனவு முடிந்ததும்
பிரிந்தது ஏன் தோழி
Stunning lyrics. Beautifully sung by the great singer.
நீக்குThe words sound divine.. because it is sung so soulfully.
நீக்குஅருமையான பாடல். மாலைப்பொழுதின் மயக்கத்திலே பாடல். அதிலும் கணவன் உயிரோடு இருக்கையில் அவன் பிரிந்து இறந்து விட்டான் என நினைத்துப் பாடும் பாடல். இந்தப் படம் சௌகாருக்கு ஒரு மைல் கல்லாக இருந்திருக்கணும். வங்காளக் கதை. அப்போல்லாம் நிறைய வங்காளக் கதைகள் திரைப்படமாக வந்திருக்கு.
பதிலளிநீக்குசொல்லாமல் சமையல் வேணாப் பண்ணிடலாம். ஆனால் அலுவலகத்துக்கு லீவ் போடுவதெல்லாம் கேட்காமல் செய்ய முடியாது.
யூ ட்யூப் பத்தி எழுதிட்டேன். உமா ராணியை மத்தியானமாத் தான் விசாரிக்கணும்.
அடியேனுக்கு அல்சர் படிக்கையில் ஜராசு, கடுகு இருவரும் நினைவில் வந்தனர்.
ஜெயமோகன் சொல்லுவது எல்லாம் பேத்தல் அன்ட் பினாத்தல் தான். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
இந்த முதல் மரியாதை படம் எடுத்த விதம்னு ஒரு கட்டுரையே வந்திருக்கு. அநேகமாக தினமலர் சினிமா மலரில் வந்ததோனு நினைவு. இதெல்லாம் படிச்சு ரொம்பவே வருஷஙள் ஆச்சு. :)
ம்ம்ம்.. எல்லாத்தையும் கவர் பண்ணிட்டீங்கன்னு நினைக்கறேன்.
நீக்குபுத்திசாலிப் பைத்தியங்கள்னு ஒரு படமா? இதைப்படிச்சதும் எனக்கு பத்ரகாளி படம் நினைவில் வந்தது. அதில் தான் முதல் மனைவியாக நடித்த ராணி சந்திரா(?) தினம் தினம் கணவனைப் பார்ப்பதற்காகப் பைத்திய வேஷம் போட்டுக் கொண்டு கணவன் வீட்டு வாசலில் வந்து அமர்க்களம் பண்ணுவார். சிவகுமார் அவரைக் கோவிக்கையில் மெதுவாக அவர் காதில் மட்டும் விழும்படியாக, "இல்லைனா நான் எப்படிய்யா தினம் உன்னைப் பார்ப்பேன்?" என்பார். சிவகுமார் கண்களில் கண்ணீர் ததும்பும்.
பதிலளிநீக்குகுப்பன் எல்லாம் இப்படித் தான். இதை எல்லாம் ஒதுக்கித் தள்ளிடணும்.
சித்திரங்கள் தான் ஏற்கெனவே சொல்லிட்டேன்.
சித்திரத் தொடர்கதை படிக்கணும். படிக்க முடியுதானு பார்க்கிறேன்.
பாட்டைப் பத்தி எல்லாம் ஏற்கெனவே சொல்லிட்டேனே.
// "இல்லைனா நான் எப்படிய்யா தினம் உன்னைப் பார்ப்பேன்?" என்பார்.//
நீக்குஅப்படியா? எனக்கு ஞாபகமில்லை. அப்படீன்னா அவர் படத்தில் புத்தி பேதலித்தவர் இல்லையா?
புத்தி பேதலிச்சிருக்கும் தான். ஆனால் கொஞ்சம் கொஞ்சம் புத்திசாலித் தனமும் எட்டிப் பார்க்கும். கணவன் மேல் அபார காதல். அவன் வேறு கல்யாணம் பண்ணிக் கொண்டாலும் மறக்க முடியலை.
நீக்குசித்திரத் தொடர்கதை அடுத்த இதழில் முடியும்னு போட்டிருக்கே? அதையும் கிடைச்சால் எடுத்துப் போட்டுடுங்க. சஸ்பென்ஸ் தாங்கலை.
பதிலளிநீக்குஹிஹிஹி... அப்போ முன்னாடி பின்னாடி எதுவும் வேணாமா?
நீக்குகிடைச்சால் முழுசாவே போட்டுடுங்களேன்.
நீக்குஒரு பைண்டிங் புக்கின் ஒரு பக்கத்தில் கிடைத்த படம் அது!!
நீக்குஉமா ராணியின் காணொளி கண்டோம் அவரின் சேவைக்கு பாராட்டுகள்.
பதிலளிநீக்குஇன்றைய பாடல் பகிர்வு...மனதை உருக்கும் அருமையான பாடல்.
ஆமாம். நன்றி மாதேவி.
நீக்குமாலைப்பொழுதின் மயக்கத்திலே.... மனதை வருடும் பாடல்.. மிக நல்ல பகிர்வு.
பதிலளிநீக்குமுன்பெல்லாம் அன்றைய பதிவைப் பொறுத்து அன்று என்ன கிழமை என்பது நினைவில் இருக்கும். என்னவோ அதில் நீங்கள் குளறுபடி செய்து தினத்தை நினைவு வைத்துக்கொள்ள வேறு வழியைப் பார்க்க வைத்துவிட்டீர்கள். ஏதோ உங்களாலானது. ஹா ஹா
இந்த சம்பவம் ஆரம்பித்து ஒன்பது மாதங்களுக்கு மேல் ஆகிறதே...
நீக்குமூன்று கேரக்டர்கள் யார் யார் என யாருமே எழுதலையே. எந்தத் தொடர்கதை என்றும்.
பதிலளிநீக்குநம் முன்னால் புலிகேஸியோ இல்லை ராஜராஜ சோழனோ இல்லை மகேந்திர பல்லவரோ வந்தால், நீங்க அவர் இல்லையே... வேறு மாதிரின்னா அவர் இருப்பார் என்று சொல்லும் விதத்தில் ஆரம்ப கால ஓவியர்கள் நம்மை சரித்திர கதாபாத்திரங்களுடன் ஒன்றச் செய்துவிட்டார்கள்.
அட? நான் எழுதி இருந்தேனே? "சிவகாமியின் சபதம்" தொடராகக்கல்கியில் வந்தப்போ ஓவியர் சந்திரா தான் படங்கள் வரைந்திருந்தார். பின்னால் சிவகாமியின் சபதம் புத்தகமாக மங்கள நூலகத்தால் வெளியிடப்பட்டப்போவும் ஓவியர் சந்திரா தான் முழுப்பக்க ஓவியங்களாக வந்திருக்கும். பின்னர் வந்த வெளியீடுகள் வானதி பதிப்பகமாக இருக்கும். அது குறித்துத் தெரியாது. இந்தப் படங்கள் முதல் படம் மஹேந்திர பல்லவர், (நிச்சயமாய் நரசிம்ம பல்லவர் இல்லை. முகம் வேறே மாதிரி இருக்கும்.) சிறுத்தொண்டர் என்னும் பரஞ்சோதி அடிகள், புலிகேசி என்று எல்லோரையும் குறிப்பிட்டு இன்னும் நீளமாக ஒரு கருத்து எழுதி இருந்தேன். அதைக் காணோமே. :(
நீக்குகரீட்டாக சொல்லிருக்கார் கீதா அக்கா.
நீக்குஎன்னதான் நன்றாக நடித்திருந்தாலும், அளவுக்கு அதிகமாக குண்டாகியிருந்தார் சிவாஜி. அவரை வைத்து இந்தப் படம் எடுத்ததற்கே பாரதிராஜாவுக்கு தைரியம் அதிகம் என்று சொல்லலாம் என நினைத்தால், எஸ்.பி.பியை அவருக்கு மாற்றாகப் போடலாம் என்று நினைத்திருந்திருக்கிறாரே
பதிலளிநீக்குஅந்த கேரக்டரை உருவாக்கியவர் மனதில் என்ன உருவம் இருக்கிறதோ அதானே?
நீக்குகதாபாத்திரத்துக்குப் பொருத்தமில்லை என்றால், என்னதான் நமக்கு நெருக்கமானவராக இருந்தாலும் படத்தில் போட முடியாது இயக்குநர்களுக்கு. இல்லையா? அல்லது அவருக்கு ஏத்த பாத்திரத்தை உருவாக்கணும்.
பதிலளிநீக்குநான் ஒரு இயக்குனராக இருந்தால் இதற்கு பதில் சொல்வேன்!
நீக்குஉமா ராணி தவமொழி....... மிக அருமையான பகிர்வு.
பதிலளிநீக்குவயதானவர்களுக்கு பொறுமையாக உதவுவதற்கு எல்லோராலும் முடியாது. அசூயை இல்லாத மனம் வேண்டும். மிகச் சிலருக்கே இறைவன் அந்த மனதைக் கொடுத்திருக்கிறான். அப்படிப்பட்டவர்களில் பலரே செவிலியர்களாக ஆக முடியும்.
என் பெண் ஒரு முறை என்னைக் கேட்டாள், எத்தனை முறை குழந்தையா இருந்தபோது நீங்க பேம்பர்ஸ் மாத்தியிருக்கீங்க என்று.
செவிலியர் மனம் கொண்டவர் கீதா ரங்கன் அக்கா என்பதையும் நான் இங்கு நினைவுகூறுகிறேன்.
உமாராணி செவிலியர் இல்லை. ஆனாலும் எங்கள் வீட்டிலும் இப்படி ஒரு மதர் தெரேசா இருக்கிறார். அவருக்கு புவனா என்று பெயர்.
நீக்குகிட்டத்தட்ட வெள்ளிக்கிழமையைத் திங்கற கிழமையா மாத்திட்டேன் போல! :(
பதிலளிநீக்கு//• செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
பதிலளிநீக்குசெயற்கரிய செய்கலா தார்.
• பொருள்:
செய்ய முடியாத அரிய செயல்களைச் செய்து முடிப்பவரே பெரியவர்கள் ஆவார். அவற்றைச் செய்ய முடியாதவர்கள் சிறியவர்கள் ஆவர்.// கண் மருத்துவரை பார்க்கச் செல்ல வேண்டும். வந்து மற்ற கருத்துகள்
''தெளிவும் அறியாது முடிவும் தெரியாது மயங்குது எதிர்காலம்''. மிக அருமையான பாடல்.1960 இல் முதலில் கேட்டேன் என்று நினைக்கிறேன். இப்போதும் ரசிக்கும் பாடல்.சுசீலா அம்மா நலமாக இருக்க வேண்டும்.
பதிலளிநீக்குமிகச் சிறந்த பதிவு. சில காரணங்களால் உடனே பின்னூட்டம் இட முடியவில்லை. நன்றி ஶ்ரீராம். எத்தனையோ அலுவல்களுக்கு நடுவே இத்தனை சிறப்பாகச் செயல் படுவது மனம் நிறை மகிழ்ச்சி தருகிறது.ஆசிகள்.
பதிலளிநீக்குதினமணி கதிர் இதழில் வந்த ஒரு கதை எல்லோருக்கும் ஒரு படிப்பினை என்று தான் நினைக்கிறேன்.
பதிலளிநீக்குகோபத்தை அடக்க கூடாது என்பதற்காக கோபத்தை வெளியே காட்டி அனைத்து சொந்தங்களையும் இழந்து விட்டாரே! தவறான கருத்தை சொல்லி விட்டார் டாக்டர்.
சினத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டும். என்பார் மகரிஷி அதை பயிற்சி செய்ய வேண்டும் என்பார்.
வீட்டில் இருந்து கோபத்தோடு போனால் அது தொடர் சங்கிலி போல அப்படி ஒருவரிடமிருந்து ஒருவருக்கு தாவி விடும்.
மற்ற பகிர்வுகளும் படித்தேன்.
பதிலளிநீக்குபாடல் மிகவும் பிடித்த பாடல். கேட்டு மகிழ்ந்தேன்.