புதன், 1 டிசம்பர், 2021

லேலண்ட் ஏன் ஸ்கானியா, வோல்வோ போன்று மல்டி ஆக்ஸெல் பஸ் தயாரிக்கவில்லை?

 

நெல்லைத்தமிழன் : 

1. எந்தப் பிராணியையும் வளர்ப்பது சரியா? அதனதன் இயற்கைக்கு மாறாக?  வீட்டில் பசு/எருமை/கோழி... போன்றவை வளர்ப்பவர்கள் எதையும் கட்டுப்படுத்துவதில்லை. நாய், பூனை போன்று பலவற்றை வளர்ப்பவர்கள் அப்படி இல்லை.    

# வளர்ப்புப் பிராணிகள் மிக மகிழ்ச்சியாக "எஜமானர்கள்" நட்பை ரசிப்பதைப் பார்த்தால் செல்லப் பிராணிகள் வளர்ப்பது தவறல்ல என்று தோன்றுகிறது.

& செல்லப்பிராணிகள் வளர்ப்பு ஒரு தொல்லை என்றே நினைப்பவன் நான். (மற்ற ஆசிரியர்கள் அப்படி நினைப்பவர்கள் அல்ல) 

2.  சால்வை, மாலை சமீப காலங்களில் பூச்செண்டு போட்டு /கொடுத்துக் காசை வீணடிப்பவர்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?   

# சால்வை மாலை போன்றவை மரியாதையின் அடையாளம் என்ற வரை சரி.  பிரமுகர்களுக்கு மிகப்பல சார்த்தும் போது அதுவே சலிப்புத் தருவதும் உண்மை.

& அதான் சொல்லிட்டீங்களே ! காசை வீணடிப்பவர்கள். 

3. பாஜக அரசு 2014ல் அமைந்த பிறகு நேரடியாக நீங்கள் அரசிடமிருந்து பெற்ற நன்மை(கள்) என்ன என்ன?

# தெரியவில்லை.  பெற்ற அசௌகரியங்கள் எதுவுமில்லை என்பதே சிறப்பு.

& 2009, 2014, 2019 என்று ஒவ்வொரு தேர்தல் முடிவுகளும் வந்த அன்று, பங்கு சந்தையில் நான் பங்குகளை அதிக விலைக்கு விற்று, குறைந்தது ஒரு நாளில் ஆயிரம் ரூபாய் லாபம் பெற்றேன். 2014 ஆண்டின் ஆரம்பத்தில், என்னுடைய நிகர மதிப்பு (Net worth) அறுபது இலட்ச ரூபாயாக இருந்தது. இன்று அது எழுபத்தாறு இலட்ச ரூபாயாக உள்ளது. நேரடியாக எந்த அரசிடமிருந்தும் எதுவும் பெற்றதில்லை.  

4. எப்படி விநோதமான குணங்கள் ஒரு தாயின் வயிற்றில் பிறந்தவர்களிடம் இருக்கிறது? (எஸ்பிபி மிக மிக நல்ல ஆத்மா என்ற உணர்வு தோன்றும்போது ஷைலஜா ரொம்ப அடாவடிப் பேர்வழி என்று தோன்றுவது போல)

# பெற்றவர்களையும் தாண்டி வேறு உறவுகளிடமிருந்தும் குணாதிசயங்கள் வருவதாகச் என்று சொல்கிறார்கள். இல்லாவிட்டால் நல்ல தாய்க்கு வாய்த்த கணவர் பேரில் பழி வந்து விடும்.  "அவல குணத்துக்கு அத்தையைக் கொண்டிருக்கு" என்ற வழக்கு நினைவுக்கு வருகிறது. இல்லை டி என் ஏ பிறழ்வு தற்செயலாகவும் இருக்குமோ என்னவோ !

கீதா சாம்பசிவம் :

1. சாப்பாடு/சமையல் முறை உலகெங்கும் பொதுவானதாக இருக்கச் சிலருக்கு அது மட்டமாகத் தெரிவது ஏன்?

# நல்ல உணவு இயல்பாக எளிதாகக் கிடைத்தால் "சமையல் குறிப்புகள்" அநாவசியமாகத் தோன்றலாம்.

& மட்டம் என்று யார் சொன்னாங்க? விளக்கமாக சொல்லுங்க. 

2.சமையல் பற்றிப் பேசினாலோ/கேள்விகள்கேட்டாலோ அது சிலருக்கு ஏன் பிடிப்பதில்லை? அவங்கல்லாம் சாப்பிட மாட்டாங்களா?

# அவர்களுக்குப் பிடிக்கவில்லை என்பது எதை வைத்துச் சொல்வது ? ஆர்வம் இல்லாதிருக்கலாம். நல்லா சமைச்சுப் போட ஆள் இருந்தா குறிப்பெல்லாம் வேண்டாததாத்தான் இருக்கும்.

3.உங்களுக்கு உங்க சமையல்/அம்மா சமையல்/மனைவி சமையல்/பெண் சமையல் / மருமகள் சமையல் இவற்றில் யாரோட சமையல் பிடிக்கும்?

 # எல்லார் சமையலிலும் பல பிடிக்கும் சில பிடிக்காது.

& அம்மா சமையலை விரும்பி சாப்பிட்டது மட்டும் ஞாபகம் உள்ளது. special உணவு வகைகள் : மனைவி மற்றும் மருமகள் நன்றாக செய்வார்கள். பெண் சமையலை சாப்பிட்ட ஞாபகம் இல்லை. என் சமையல் எனக்குப் பிடிக்காமல் போனதில்லை. 

4. எந்தப் புத்தகக் கண்காட்சி வைத்தாலும் சமையல் புத்தகங்கள் மட்டும் விற்றுப் போவதன் காரணம் என்ன?

# நல்ல சமையல் திறன் பரவலாகக் குறைந்து விட்டதும் வெரைட்டியில் நாட்டம் அதிகரித்திருப்பதும் தான்.

5. தொலைக்காட்சித் தொடர்களை விடாமல் பார்க்கும் வழக்கம் உங்களில் யாருக்கு உண்டு?

# எனக்கு இல்லவே இல்லை.

& நானும் அந்த தண்டனைகளை வேண்டி விரும்பிப் பார்த்து அவதியுறுவதில்லை. 

6 . நம்ப முடியாதபடிக்கு அதில் பெண்கள் அடியாட்கள் எல்லாம் வைத்துக்கொண்டு தனக்குப்பிடிக்காதவர்களைப் பழி வாங்குவதும், சர்வ சாதாரணமாக "அவனைத் தூக்கிடறேன்!" என்று சொல்வதும் சரியா?

# தொலைக்காட்சி த் தொடர்களில் சரியா தப்பா என்பதற்கு இடம் இல்லை. பார்ப்போர் அதிகமா இல்லையா என்பதுதான் முக்கியம்.  புதிது புதிதாக வில்லத் தனங்களைக் கண்டு பிடிக்க முயல்வதால் வன்முறைச் சம்பவங்கள் பெருகிக் கொண்டே இருக்கின்றன.

ஜெயகுமார் சந்திரசேகரன் : 

1. கடிகாரங்களில் உள்ள முட்கள் எப்போதும் வட்டப்பாதையில் சுற்றி வந்து நேரத்தைக் காட்டுகின்றன. ஏன் நேர்கோட்டுப்பாதையில் காட்டுவதில்லை. உதாரணமாக அடி ஸ்கேலில் மேலே நிமிட முள்ளும் கீழே மணி முள்ளும் நகர்ந்து நேரம் காட்டுவது போன்ற கடிகாரங்கள் ஏன் செய்யப்படவில்லை? (circular motion vs linear motion).

# நீங்கள் சொல்கிற மாதிரி மணி காட்ட வேண்டும் என்றாலும் வட்டப் பாதைச் சுழற்சி தேவைப்படும். எனவே அநாவசியமான கருவிப் பகுதிகள் தேவைப்படும். சிறிய அளவில் தயாரிப்பது இன்னும் சிரமம்.  பார்க்கவும் கடினம்.  எனவே ...

$ டிஜிட்டல் கடிகாரங்கள் வந்த பின் பல display modes have been made available

2. பண்டமாற்று முறையில் இருந்து பணமாற்று முறையில் பொருட்கள் வாங்குதல் விற்றல் மாறியபோது யார் தங்கம் வெள்ளியை பணமாக அறிமுகப்படுத்தினர்? ஏன்?  ரொம்ப நாளாக மனதில் இருந்த கேள்வி.

# எது அரிதாகக் கிடைப்பதோ, அது பண்ட மாற்றின் அளபெடையாக ஏற்கப் பட்டது. கொண்டு வந்தது யார் என்று காண்பது கடினம்.  ஏனென்று அறிவது  எளிதானது.

 3. லேலண்ட் ஏன் ஸ்கானியா, வோல்வோ போன்று மல்டி ஆக்ஸெல் பஸ் தயாரிக்கவில்லை? விடை கூகிள் ஆண்டவர் கொடுத்து விட்டார். உங்கள் விடை கூடுதல் காரணங்கள் தரக்கூடும. எதிர்ப்பார்க்கிறேன். 

 # யார் தேவைக்கு ஒரு பொருள் தேவையோ அதன் நியாயமான விலைக்குள் அதை உற்பத்தி செய்யுமளவுக்கு அதன் விற்பனை அளவு இல்லாத போது உள்நாட்டு உற்பத்தி தலை தூக்காது.

& சென்ற ஆண்டு முதலே அசோக் லேலண்ட் பல அச்சு பேருந்து சோதனை கட்டங்களில் உள்ளது என்றும், வேலூர் நெடுஞ்சாலையில் பரிசோதனை ஓட்டங்கள் நிகழ்த்தப்பட்டன என்றும் தெரியும். தற்போது என்ன நிலை என்று என் நண்பர்களைக் கேட்டுச் சொல்கிறேன். பல அச்சு goods வண்டிகள் பல வருடங்களுக்கு முன்பே அசோக் லேலண்ட் உற்பத்தி செய்திருந்தாலும் பயணிகள் வண்டி விலை உட்பட பல காரணங்களால் இதுவரை உற்பத்தி செய்யப்படாமல் இருந்து வந்தது. 

= = = = =

 சென்ற வார புதன் பதிவில் 

ஏற்கெனவே நீண்ட பதிவைப் படித்து களைத்துப் போயிருப்பீங்க (இதுவரை யாராவது பொறுமையாக எல்லாவற்றையும் படித்தவர்கள் இருந்தால், கருத்துரையில் " படிக்கவில்லை" என்று எழுதவும். )

எனவே இந்த வாரம் நாங்க கேள்விகள் எதுவும் கேட்டு உங்களை தொந்தரவு செய்யப்போவதில்லை." 

என்று குறிப்பிட்டிருந்தேன். ஆனால் கருத்துரை பகுதியில் யாருமே " படிக்கவில்லை " என்று கருத்து பதிவு செய்யவில்லை. 

ஆக சென்ற வார பதிவை யாருமே முழுமையாகப் படிக்கவில்லை என்று தெரிகிறது. 

சரி. இந்த வாரம் " படித்தேன் " என்று கமெண்ட் செய்யவும். 

= = = = 

படம் பார்த்துக் கருத்து பதிவு செய்யுங்கள் :

1) 

2) 

3) 


= = = =

108 கருத்துகள்:

  1. //நாய், பூனை போன்று பலவற்றை வளர்ப்பவர்கள் அப்படி இல்லை. /

    கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்களே. இவைகளை யார் கட்டுப்படுத்துகிறார்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதான் வளாகத்தில் பார்க்கிறேனே... கார்த்திகையில் பல நாய்கள் கட்டுக்குள் இருக்காமல் திமிருவதை. நடைப்பயிற்சிக்கைப் போகும்போது அதனை இழுத்துக்கொண்டு செல்பவரை மீறி பாய்ந்திவிடுமோ எனத் தோன்றும்.

      பெங்களூரில், வளர்ப்பு நாய் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்படுத்துதல் உண்டு

      நீக்கு
    2. ஆம். உண்மை. எங்கள் வளாகத்தில் வலம் வரும் வளர்ப்பு நாய்கள் என் வீட்டுத் தோட்டத்தை டாய்லெட் ஆகப் பயன்படுத்துவதைப் பார்த்து க்ரில் வேலி அமைத்தேன்.

      நீக்கு
    3. உங்கள் இருவரின் பதில்களை பார்க்கும் போது இந்தியாவில் செல்லப் பிராணிகளை வளர்ப்பவர்களுக்கு அதை வளர்க்கும் முறை தெரியவில்லை என்றே தெரிகிறது

      நீக்கு
    4. ஆம், உண்மை. வளாகங்களுக்கு செல்லப்பிராணிகள் வளர்ப்பு முறை பற்றி தனி விதிகள் உள்ளன. ஆனால் சிலர் அவற்றை இலட்சியம் செய்வதில்லை.

      நீக்கு
  2. //சமையல் பற்றிப் பேசவோ//- ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரசனை. எனக்கு கவிதை, இலக்கியம், பல கதாசிரியர்கள்... இவர்களைப் பற்றிப் பேசுவதோ படிப்பதோ பிடிக்காது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 1.கதாசிரியர்களை/திரைப்பட நடிகர்களை தெய்வமாக நினைப்பவர்கள் பற்றி உங்கள் கருத்து என்ன?

      2. இலக்கியம் என்பதன் வரைமுறை என்ன? எவை எல்லாம் இலக்கியத்தில் சேரும்?
      3. ஒருவரின் எழுத்துப் பிடித்தால் அதை ரசிக்கலாம், பாராட்டலாம், ஆனால் ஒவ்வொரு முறையும் அவரை அலசி ஆராய்ந்து எழுதினால் தான் உண்மையான ரசனை/விமரிசனம் என்றாகுமா?
      4. ஒரு கதையின் ஒவ்வொரு அம்சத்தையும் விவரித்து எழுதுவது தான் அந்தக் கதாசிரியருக்குச் செய்யும் பாராட்டா?
      5. உங்களுக்குப் பிடித்த கதாசிரியர் எனில் அவரையே உங்கள் மானசிக குருவாக ஏற்றுக் கொள்வீர்களா?/ஏற்றுக் கொண்டது உண்டா?

      நீக்கு
    2. நெல்லைத்தமிழன் என்னைப் போலவே இருக்கிறார் போல எனக்கு சமையல் என்றால் இஷ்டம்

      நீக்கு
    3. எனக்கும் சமையல் கலையில் ஆர்வம் உண்டு. விதம் விதமாகச் சமைத்துப் பிறருக்குக் கொடுத்து அவர்கள் மகிழ்வதைப் பார்ப்பதில் தனி சந்தோஷம்! :))))

      நீக்கு
  3. 1. குட்டிச் சுட்டி

    2. பெண்:லவ் யூ வா சொல்ற..? நீச்சல் குளத்தில் தள்ளி விட்டு விடுவேன்
    ஆண்: நான் சென்னையிலிருந்து வருகிறேன், ஸோ, நோ ப்ராப்ளம்

    3. அசலும்,நகலும்

    பதிலளிநீக்கு
  4. தொலைகாட்சி தொடர்கள் பற்றிய கீதா அக்கா கேள்விகளை பார்த்தால் ட.வி.சீரியல்களை அவர் விடாமல் பார்க்கிறாரோ என்று தோன்றுகிறது. சொல்வதென்னவோ 'கர்மா' மட்டும் பார்ப்பேன் என்பார். ஹாஹா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @பானுமதி, தொலைக்காட்சித் தொடர்களை நான் பார்க்கணும்னு இல்லை. என் நண்பர்கள் முகநூலில் எழூதறாங்க என்பதோடு நம்மவர் சாயந்திரம் ஆறரைக்குப் போட்டால் இரவு பத்தரை வரை பார்ப்பார். ஏழு மணியில் இருந்து உடனே படுத்துக்கப் போகக் கூடாதுனு நானும் சில நாட்கள் எட்டு, ஒன்பது வரை உட்கார்ந்திருப்பேன். அநேகமாக மொபைலில் முகநூல் பக்கம் போவது அப்போத் தான் அதிக நேரம். அந்தச் சமயம் சீரியலின் காட்சிகள்/வசனங்கள் கண்கள்/மனதில் படத்தான் செய்யும். சில நகைச்சுவையாக ரசிக்கும்படியும்/சில ஆத்திரம் வரும்படியும் இருக்கும். அவ்வளவே. நான் பார்ப்பது எட்டரைக்குக் "கண்ணான கண்ணே!" மட்டும் தான். அதை நான் மறுத்ததே இல்லை. இப்போக் கொஞ்ச நாட்களாகக் "கர்மா"வும் பார்க்க முடிவதில்லை. 65 வரைக்குமோ என்னமோ பார்த்தேன். கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகிவிட்டது. எதுவும் பார்க்க முடியலை. எப்போதுமே நான் சாயங்காலம் தொலைக்காட்சிப் பெட்டி முன் உட்கார்ந்திருப்பதைப் பற்றிச் சொல்லி வருகிறேன்.

      நீக்கு
    2. //சொல்வதென்னவோ 'கர்மா' மட்டும் பார்ப்பேன் என்பார். ஹாஹா!// ஹிஹிஹி, அண்ணாத்த, சூரரைப் போற்று, ஜெய் பீம் குறித்தும் எழுதி இருக்கேனே! இஃகி,இஃகி,இஃகி,இஃகி! :))))))) ஒரு கேள்விக்கே இப்படின்னா இன்னும் தொலைக்காட்சித் தொடர்கள் பற்றிப் பல கேள்விகள் இருக்கே! கேட்கலாமா, வேண்டாமா? யோசிச்சிங்க்! :))))

      நீக்கு
    3. வரேன், பின்னாடி! இன்னிக்குக் கதாசிரியர்கள்/திரைப்பட நடிகர்கள் மாட்டிக் கொண்டாங்க! :))))))

      நீக்கு
  5. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் கௌதமன் சார். என்றென்றும் மன அமைதியுடனும் மகிழ்ச்சியுடனும் நூறாண்டு வாழ வாழ்த்துகள். பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  6. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    இறையருள் சூழ்க எங்கெங்கும்..

    வாழ்க வையகம்..
    வாழ்க வளமுடன்..

    பதிலளிநீக்கு
  7. எல்லாக் கேள்விகளுக்கும் பதில் அளித்த எங்கள் ப்ளாக் ஆசிரியக் குழாமுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  8. போன வாரமும் முழுக்கப் படிச்சேன். இந்த வாரமும் முழுக்கப் படிச்சேன்.
    முதல் படம் அருமை.
    இரண்டாவதில் யார் ஜெயிக்கப் போறாங்க?
    மூன்றாவது saint gopain advt.?

    பதிலளிநீக்கு
  9. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  10. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  11. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்! கெளதமன் சார், வாழ்க வளமுடன்
    வணக்கம்.

    பதிலளிநீக்கு
  12. வணக்கம் கெளதமன் சகோதரரே

    இன்று பிறந்த நாள் காணும் தங்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகளும். நீங்கள் ஆயுள் ஆரோக்கியத்தோடு நீண்ட வருடங்கள் சிறப்பாக வாழ வேண்டுமென இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன். நன்றி.

    அன்புடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  13. கேள்விகளும் பதில்களும் நன்றாக இருக்கிறது.
    கேள்விகளையும், பதில்களையும் முழுதாக படித்தேன்.

    படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது. குதுகில் சுமந்து செல்லும் நாய்குட்டிக்கு அன்போடு லாலிபப் கொடுக்கும் பெண் வளர்ப்ப்ய் செல்லங்களை நேசிப்பவர் என்று தெரிகிறது.

    குளிர் என்று நீச்சல் குளத்தில் இறங்காமல் இருந்தால் எப்படி ? தள்ளி விட போகிறார் நீச்சல் குளத்தில்.


    வியப்பாய் பார்க்கிறான் குட்டி பையன்.

    பதிலளிநீக்கு
  14. ஒரு தாய் வயிற்றில் பிறந்தவர்கள் அனைவரும் ஒரேமாதிரி இருந்தால் ???

    நல்லவர்கள் குடும்பம் நல்லவர்களாகவும் கெட்டவர்கள் குடும்பம் கெட்டவர்களாகவும் தொடர்ந்து வருமே...

    பிறகு வாழ்வு சுவாரஸ்யமாக இருக்காது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னங்க இப்படிச் சொல்றீங்க? பெண் வெளில இருந்து வேற குடும்பத்துல இருந்துதானே வர்றாங்க

      நீக்கு
    2. அதுவும் சரிதான். யோசிக்க வேண்டிய விஷயம்!

      நீக்கு
    3. நான் படித்ததில், 30 சதம் ஆண், பெண்ணிடமிருந்தும் (அப்பா, அம்மா.. 60 சதம் மொத்தம்), 15 சதம் 15 சதம், அவர்கள் பெற்றோரிடமிருந்தும், 5,5 சதம் அவர்களுடைய பெற்றோர்களிடமிருந்தும் வருமாம். இதில் சில பல வேறுபாடுகளும் இருக்குமாம். இதுவும், கடந்த 3 தலைமுறைகளுக்கு தர்ப்பணம் செய்வதன் காரணமாம்.

      அதனாலத்தான் பெற்றோர்களுக்கு டயபடீஸ் இருந்தால் குழந்தைகளுக்கு வரும் வாய்ப்பு அதிகம் என்று சொல்வதன் காரணம்.

      நீக்கு
    4. //குடும்பம் நல்லவர்களாகவும்// - முழுவதும் நல்லவர்கள் என்று கூறத்தக்க ஒருவரை நான் இதுவரை சந்தித்ததில்லை. அப்படி இருக்க வாய்ப்பே இல்லை. அதிகபட்சம் 80 சதம் நல்லவராக இருக்கலாம். அவ்வளவுதான்.

      நாம் ஒருவரை நல்லவர், கெட்டவர் என்று சொல்வது/அநுமானிப்பது, அவர் நமக்குக் காண்பிக்கும் பக்கத்தை வைத்துத்தான். கணவரை ஓரளவு அறிந்தவள் மனைவி, ஓரளவு அறிந்தவன்/ள் உயிர் நண்பன்/நண்பி... யாருமே அடுத்தவரை முழுமையாக அறியவும் சாத்தியமில்லை

      நீக்கு
    5. நெ த - தெளிவாக ஆரம்பிச்சு - குழப்பிவிட்டார்!!

      நீக்கு
  15. வணக்கம் சகோதரரே

    நேற்று ஆரம்பித்த குழப்பம் இன்றைய புதன் பதிவு வரை தீரவில்லையா?:) படித்ததை படிக்கவில்லை எனச் எப்படி சொல்வது? ஆனாலும், சென்ற புதனை சந்தர்ப்ப சூழ்நிலைகளில் நான் உண்மையிலேயே படிக்கவில்லை. அதனால் அதை அவ்விதமே ஒத்துக் கொள்கிறேன்.

    இன்று இன்னமும் முதலில் கேள்வி,பதில்களை படிக்கவில்லை. ஆனால், எங்களுக்கான கேள்வி,பதிலில் எங்களை "படித்தேன்" என சொல்லச் சொல்லியிருக்கிறீர்கள். அதனால் அதை மட்டும் படித்ததாக ஒத்துக் கொள்கிறேன். ஆக சென்ற வாரமே இப்படி எங்களை குழப்ப ஆரம்பித்து விட்டீர்கள் எனத் தெரிகிறது. ஹா.ஹா.ஹா.

    பிறகு படிக்காத பதிவு முழுவதையும் படித்து விட்டு, படித்தேன் எனச் சொல்ல வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  16. ஒரு குடும்பத்தில் முற்றிலும் வேறுபட்ட குணங்கள் கொண்டவர்களும் உண்டு... வளர்க்கப் பட்ட விதம் / வளர்ந்த விதம் / சூழல் / இடம் / நட்பு - போன்ற பல காரணங்கள்...

    பதிலளிநீக்கு
  17. படித்தேன்:)

    திரு.கெளதம் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

    1)லாலி பப் சுவைத்துப் பாரு.

    2)நீயா நானா .

    3) என்னைப் போல இருக்கிறாயே!

    பதிலளிநீக்கு
  18. 1. மொபைலை அவசரத்துக்குப் பயன்படுத்துவீர்களா? அல்லது எப்போதுமே அதில் ஆழ்ந்திருப்பீர்களா?
    2. நாம் அழைத்தால் பிசி, பிசி என்னும் நண்பர்களில் பலரும் முகநூலில், குழுமங்களில் ஆர்வமாகப் பங்கெடுத்துக் கொண்டு இருப்பார்கள். அப்போ எப்படி நேரம் கிடைக்குது அவங்களுக்கு? அல்லது அங்கே நேரம் செலவாகிவிடுவதால் நம் அழைப்பைப் புறக்கணிக்கிறார்களா?
    3. முகநூல் குழுமங்களில் உங்களை அதிகம் ஈர்த்தது எது? மொபைலில் முகநூலில் குழுமங்களில் மூழ்கி இருப்போருக்குத் தான் பதில் சொல்ல முடியும். ஶ்ரீராம், கௌதமன் சார் இருவரும் பதில் சொல்வார்களோ?
    4. நேற்று ஒரு குழுமத்தின் வாட்சப்பில் ஒரு பெண்மணி இரவு ஒன்றரை வரை மொபைலில் ஏதோ "கேம்" விளையாடிக் கொண்டிருப்பது அவர் வழக்கம் என்று சொல்லி இருந்தார். தூக்கத்தைக் கெடுத்துக்கொண்டு இது அவசியமா?
    5. இப்போதெல்லாம் நேரடியாகப் பேசிக் கொள்வதை விட மொபைல் மூலம் அழைத்தாலே பலரும் பேசுகின்றனர். இது பொதுவாக மக்கள் மனதில் எந்தவிதமான மாற்றங்களை ஏற்படுத்தும்?

    பதிலளிநீக்கு
  19. சால்வை, மாலை சமீப காலங்களில் பூச்செண்டு போட்டு /கொடுத்துக் காசை வீணடிப்பவர்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? //

    அதேதான் என் கருத்தும் வேஸ்ட்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சால்வை நல்ல சால்வையாகக் கொடுத்துட்டாங்கன்னா அதைக் குளிருக்குப் போர்த்திக்கலாமே! நம்ம ரங்க்ஸுக்கு ஜாம்நகரில் அப்படித் தான் ஒரு பெரிய உல்லன் சால்வை கொடுத்தாங்க. பிள்ளைக்குப் போர்த்திக்கக் கொடுத்தோம். இன்னொன்றை அவரே வெளி ஊர் போகும்போது பயன்படுத்திப்பார்.

      நீக்கு
    2. அப்படியா! உபயோகப்படுத்தக்கூடிய சால்வைகள் அளிக்கப்படுவது மிக சொற்பம்.

      நீக்கு
    3. கீதாக்கா சால்வை எல்லாம் அரிதாகிவிட்டது. சால்வை வந்தால் நீங்க சொல்றாப்ல எங்க வீட்டிலும் பயன்படுத்தியதுண்டு. ஆனா பெரும்பாலும் பொன்னாடைன்னு ஜிங்கிச்சா தான்...

      கீதா

      நீக்கு
    4. ஆமாம், அதுவும் வந்தன பல்வேறு நிறங்களில்.

      நீக்கு
  20. 6. முகநூல் குழுமங்களில் ஒரு பதிவு போட்டுவிட்டு அதற்கு "லைக்ஸ்" "கருத்துகள்" வாங்குவதில் பலரும் போட்டி போடுகிறார்களே! அது சரியா?
    7. என் பதிவை வெளியிடவில்லை, ஆனால் அதே கருத்துள்ள இன்னொருத்தர் பதிவை ஏன் தடை செய்யலை என்றெல்லாம் பிரச்னைகள் வருதே! எப்படிச் சமாளிக்கின்றனர்?
    8. அந்த வாரத்தின் சிறந்த பதிவு என ஓர் குழுமம் தன் வாசகர்களுக்குக் கொடுத்து வருகிறது. அந்தக்குழும நண்பர்களுக்கும் அதை வாங்குவதே லட்சியமாக இருக்கிறது. இதைப்பார்த்தால் சிப்புச் சிப்பாய் வரலை?
    9. இதை எல்லாம் படித்துவிட்டுப் பின்னர் விமரிசிக்கும் என்னைப் பற்றி என்ன சொல்வது?
    10. என்னால் எல்லோரையும் போல் முகநூலிலோ, வாட்சப்பிலோ ஆழ்ந்து போக முடியலை. அவ்வப்போது முக்கியமான செய்திகள் வந்திருக்கானு பார்ப்பதோடு சரி. நண்பர்களின் பதிவுகள் என் டைம்லினில் வந்திருந்தால் படிப்பேன். இல்லைனா தேடிக் கொண்டு போவதில்லை. ஏன்? என்ன காரணமாக இருக்கும்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //முகநூலிலோ, வாட்சப்பிலோ ஆழ்ந்து போக முடியலை. // - ஆழ்ந்து போகாமலேயே நல்லா உள்வாங்கி ஆயிரத்தெட்டு கேள்விகள்/சந்தேகங்கள். இன்னும் ஆழ்ந்து போக ஆரம்பித்தால்,

      1. ஏன் இந்த சீரியலில் இந்தப் பெண் பச்சை நிற பார்டரில் சிவப்பு நிறம் வரும்படியாகவே முந்தானை அணிந்திருக்கிறார்? 2. நேற்று, அந்த சீரியலில் அந்தப் பெண், அத்தை என்று அழைப்பதற்குப் பதிலாக ஏன் மாமி என்று அழைத்தார்? இப்படி உறவு முறைகளைக் குழப்புவதைப் பற்றி ஸ்ரீராம், கௌதமன் என்ன நினைக்கிறார்கள் 3. ஒரு தொலைக்காட்சி உள்ள வீட்டில், கணவர் இரவு 6-10 மணி வரை தொலைக்காட்சித் தொடர்களைப் பார்த்தால், மனைவி என்ன செய்வாங்க? கணவர் பார்ப்பதையே தானும் பார்க்க வேண்டும் என்பது நியாயமா? என்றெல்லாம் கேள்விக்கணைகளைக் குவித்துவிடுவார் போலிருக்கு இந்த கீசா மேடம். ஹா ஹா ஹா

      நீக்கு
    2. நெல்லை, பொதுவாக நான் அவ்வளவாக உடைகளைக் கவனிப்பதில்லை. நம்மவர் இரவு பத்தரை வரைக்கும் தொலைக்காட்சி பார்ப்பதால் வீட்டில் அநாவசியப் பேச்சு வார்த்தைகள் இல்லை. நான் பாட்டுக்குச் சில நாட்கள் எட்டரைக்குச் சில நாட்கள்
      ஒன்பது, ஒன்பதரைக்குனு தூங்கப் போயிடுவேன். எந்தத் தொடரானாலும் சில நாட்கள் தொடர்ந்தெல்லாம் பார்க்க முடியாது என்னால். ஆனால் அதுக்காகப் போச்சே/போச்சே என்றெல்லாம் வருத்தப்படுவதில்லை. மறுநாள் பார்த்தால் முதல்நாள் நடந்தது தானே புரியும். ஒரு வாரத்துக்கு ஜவ்வு மாதிரி ஒரே விஷயத்தை இழுக்கிறாங்களே!

      நீக்கு
    3. சும்மா எழுதினதுக்கு சீரியஸா பதில் சொல்லியிருக்கீங்க.

      நீக்கு
  21. எப்படி விநோதமான குணங்கள் ஒரு தாயின் வயிற்றில் பிறந்தவர்களிடம் இருக்கிறது? //

    இதற்கு ஒரு காரணம் ஜீன். ஒரு சிலருக்கு மூதாதையரின் ஜீன் ஆதிக்கம் இருக்கும். இது அறிவியல் படி.

    நடைமுறையில் வளர்ப்பு முறை (எத்தனை வீடுகளில் ஆண் குழந்தைகளையும் பெண் குழந்தைகளையும் ஒரே போன்று வளர்க்கிறார்கள்???) நட்பு, சுய புரிதல் மற்றும் சுயமாகத் தெரிந்து கொண்டு அதாவது பிறர் செய்யும் தவறுகளப் பாடமாக எடுத்துக் கொள்ளல் என்று தன்னை மேம்படுத்திக் கொள்வது (மெச்சூரிட்டி ஆஃப் த மைன்ட்) சூழல் என்று பல உள்ளன. என் புரிதல் எல்லாப் பெற்றோரும் தங்கள் குழந்தைகளுக்கு நல்லது சொல்லிக் கொடுப்பதில்லை. அவர்களும் நல்ல எண்ணங்கள் நடவடிக்கைகள் கொண்டிருப்பதில்லை. எனவே சூழல்...அந்தச் சூழலைப் புரிந்து கொண்டு தவறு செய்யக் கூடாது என்று ஆராய்ந்து கற்றல்...இதற்கு மெச்சூரிட்டி அவசியம்..

    நிறைய சொல்லலாம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஆண் குழந்தைகளையும் பெண் குழந்தைகளையும் ஒரே போன்று வளர்க்கிறார்கள்???// - என்னாது... ஒரே போல வளர்ப்பதா? அப்படீன்னாக்க என்னா?

      பொதுவாக ஆண் குழந்தை என்றால் கொஞ்சம் செல்லம் அதிகமாகவும், பெண் குழந்தை என்றால் இன்னும் கட்டுப்பாடாக வளர்ப்பது இயல்புதான். இதற்குக் காரணம், என்றைக்கு இருந்தாலும் இவளை வேறிடத்தில் நட்டு நல்ல பயிராக ஆகவேண்டும் என்ற நடைமுறை வாழ்க்கைதான்.

      அதேபோல, சிறிது வளர்ந்ததும், பெண்ணுக்கு வித விதமாக உடைகள் மற்றவைகளும், ஆணுக்கு அப்படிச் செய்யாததும் உண்டு என்பதையும் இந்தப் பெண்கள், குறிப்பாக கீதா ரங்கன்(க்கா) போன்றவர்கள் உணரவேண்டும். ஹாஹா

      நீக்கு
    2. என் அனுபவம், பெண் ரொம்ப மெச்சூர்டு (சிறிய வயதிலிருந்தே). ஆண் மெச்சூரிட்டியில் குறைந்தது 3 வருடங்கள் பெண்ணைவிடக் குறைவு. (அதைவிட அதிகமாகவும் இருக்கும்). அதிலும் மூத்த குழந்தை பெண் குழந்தையாக இருந்துவிட்டால், பொறுப்பு, மெச்சூரிட்டியில் ரொம்பவே சூப்பராக இருப்பார்கள். அப்பா, அந்தப் பெண்ணிடம் ஆலோசனை கேட்கலாம் (பதின்ம வயது கடந்த பிறகு).

      அதனால பேச்சலர்களுக்கு என்னா நான் சொல்றேன்னா, வாய்ப்பு கிடைத்தால் (அது எங்க கிடைக்குது? பெண்கள்தான் குறைவாச்சே) குடும்பத்தில் முதல் பெண்ணை மணந்துகொள்ளுங்கள். (மூத்த பெண்ணை என்று எழுதினால், என்னைவிட வயசானவளையா என்று எதிர்க்கேள்வி வரும்)

      நீக்கு
    3. ஒரே பெண்ணாக இருந்தால் என்ன செய்வதாம் நெல்லை? இஃகி,இஃகி,இஃகி!

      நீக்கு
    4. கொஞ்சம் யோசிக்க வைக்கும் கேள்வி. எங்க இந்தப் பெண், அவள் பெற்றோருடன் இருக்கணும் என்று சொல்வாங்களோ என்ற சந்தேகம் முன்பு வரும். இப்போதெல்லாம் ஆண்கள் பக்கத்தில் இதனைப் புரிந்துகொண்டு, ஆணின் பெற்றோரே தங்களுடனும் பெண்ணின் பெற்றோர் இருந்துகொள்ளலாம், பெண் தன் கணவனுடன் தனிக்குடித்தனம் போகலாம் என்றெல்லாம் சொல்லுவதை மேட்ரிமோனியல் வாட்சப் க்ரூப்பில் படிக்கிறேன்.

      நீக்கு
    5. இப்போது என்ன இப்போது நெல்லை? அந்தக் காலங்களிலேயே பெண்ணை மட்டும் பெற்றவர்கள் கடைசிக் காலத்தில் பெண்ணுடனும்/மாப்பிள்ளையுடனும் இருந்தார்கள். இருந்திருக்கார்கள். ஏன், எங்க வீட்டிலேயே தம்பி மனைவிக்கு ஒரே ஒரு அக்கா தான். பெற்றோர் கடைசிக்காலங்களில் மாறி மாறி இரு பெண்களிடமும் இருந்தார்கள். அப்பா இறந்ததும் தம்பி மனைவி தன் அம்மாவைத் தன்னுடனேயே வைத்துக் கொண்டாள். அக்காவுக்கு உடம்பு சரியில்லை என்பதால். அப்போ எங்க அப்பாவும் இருந்தார். யாரும் ஆட்சேபிக்கவில்லை. இதெல்லாம் மனிதர்களின் மனோநிலையைப் பொறுத்தது.

      நீக்கு
  22. தொலைக்காட்சித் தொடர்களை விடாமல் பார்க்கும் வழக்கம் உங்களில் யாருக்கு உண்டு?//

    நோ தொலைக்காட்சி ஸோ நோ தொல்லைக்காட்சி...ஆனால் கணினி இணையம் இருக்கு அதில் பார்க்க வேண்டும் என்றால் பார்க்கலாம் தான் ஆனால் ஆர்வம் கிடையாது.

    விருப்பமானதைக் கணினியில் பார்ப்பதுண்டு. பெரும்பாலும் அறிவியல், நம் நட்புகளின் யுட்யூப் சானல்கள். நல்ல படங்கள். (த்ரில்லர்/சஸ்பென்ஸ்/இன்வெஸ்டிகேஷன் அல்லது நல்ல நகைச்சுவை)

    கீதா

    பதிலளிநீக்கு
  23. நம்ப முடியாதபடிக்கு அதில் பெண்கள் அடியாட்கள் எல்லாம் வைத்துக்கொண்டு தனக்குப்பிடிக்காதவர்களைப் பழி வாங்குவதும், சர்வ சாதாரணமாக "அவனைத் தூக்கிடறேன்!" என்று சொல்வதும் சரியா?//

    கீதாக்கா குடும்பங்களில் அப்படிச் செய்பவர்கள் உண்டு. தமிழ் செய்தித்தாள்கள், தமிழ் செய்திச் சானல்கள்ல (சென்னையில் இருந்தப்ப வாசித்தது! பார்த்தது!!!!) வருதே. ஆனால் சீரியல்கள் மிகைப்படுத்தல். டிஆர்பி ரேட்டிற்காக.

    அது போல பெண் தாதாக்களும் உண்டு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழில் "தாதா" எனில் அர்த்தமே வேறே! அதே ஹிந்தியில் "தாதா" "தாதி" எனில் தந்தை வழித்தாத்தா/பாட்டி ஆவார்கள். சாச்சா என்றால் சித்தப்பா. சாச்சா நேருவைத் தமிழர்கள் "மாமா நேரு" "நேரு மாமா" என்கிறோம். மாமாவுக்கு ஹிந்தியிலும் மாமா தான். இப்போ எதுக்கு ஹிந்தி வகுப்பு எடுக்கிறேன்னு புரியலையே? ம்ம்ம்ம்ம்ம்?

      நீக்கு
    2. //கீதாக்கா குடும்பங்களில் அப்படிச் செய்பவர்கள் உண்டு.// இதன் அர்த்தம் என்ன? தமிழ் இப்படி மாட்டிக்கிட்டு முழிக்குதே

      நீக்கு
    3. அதானே! கீதாக்காக் குடும்பங்களில் அப்படிச் செய்பவர்கள் உண்டுன்னா என்ன அர்த்தம்? மாட்டிக்கிட்டாங்களே! ஜாலிலோ ஜிம்கானா! டோலிலோ கும்கானா!

      நீக்கு
  24. ஆஹா அறிவியல் பொது அறிவுக் கேள்விகளும் இடம்பெற்றுள்ளதே!

    பேப்பர் கரன்சி அறிமுகப்படுத்தியது சீனர்கள் என்று படித்த நினைவு. அது போல நாணயங்கள் ஐரோப்பாவில் இப்போதைய டர்க்கி (லிடியா அப்போது) பகுதியில் உருவாக்கி அறிமுகப்படுத்தினார்கள் வெள்ளியும் தங்கமும் கலந்து அதில் அப்போதைய டினாமினேஷன் பொறிக்கப்பட்டு வந்தன. கடைசி லிடிய அரசன் தான் முதன் முதலில் தங்க நாணயத்தை அறிமுகப்படுத்தியதாகப் படித்த நினைவு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. as rich as croesus என்று ஆங்கிலத்தில் சொல்வதுண்டு அதாவது இந்த Croesus எனும் புகழ்பெற்ற லிடியா அரசன்தான் மிகப் பெரிய பணக்காரராக இவ்வுலகில் இருந்தாராம். எனவே மிக மிக அதீதமான செல்வந்தர்களைச் சொல்லும் போது இந்த உவமை அல்லது இடியம்/Idiom சொல்லப்படும்.

      கீதா

      நீக்கு
    2. கருத்துரைகளுக்கு நன்றி.

      நீக்கு
  25. " ஏற்கெனவே நீண்ட பதிவைப் படித்து களைத்துப் போயிருப்பீங்க (இதுவரை யாராவது பொறுமையாக எல்லாவற்றையும் படித்தவர்கள் இருந்தால், கருத்துரையில் " படிக்கவில்லை" என்று எழுதவும். )
    எனவே இந்த வாரம் நாங்க கேள்விகள் எதுவும் கேட்டு உங்களை தொந்தரவு செய்யப்போவதில்லை."

    என்று குறிப்பிட்டிருந்தேன். ஆனால் கருத்துரை பகுதியில் யாருமே " படிக்கவில்லை " என்று கருத்து பதிவு செய்யவில்லை. ஆக சென்ற வார பதிவை யாருமே முழுமையாகப் படிக்கவில்லை என்று தெரிகிறது. //

    கௌ அண்ணா ஆஆஆ இப்படி எல்லாம் சொல்லலாமோ இந்த நல்ல குழந்தைகளை!! வகுப்பிற்கு வந்து எல்லாம் வாசித்தும் பதில்/கருத்து சொல்ல விட்டுப் போச்சுன்னா இப்பூடியா!!!!!!!!!!!!!!!!!!!! ஹாஹாஹா

    அதனால இந்த வாரம் படித்தேன் அப்படின்னு எல்லாம் சொல்ல மாட்டேனாக்கும்!!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  26. 1. ஹை ஜுஜ்ஜிமா உன்னை அப்படியே லவட்டிக்கிறேன் குரல் எழுப்பி அவகிட்ட போட்டுக் கொடுத்துடாத இந்தா இந்த லாலிப்பாப் தரேன் ஓகெவா சப்பிக்க சத்தம் வராது!!!!!

    2. நான் நீச்சல் சாம்பியன்னன்னு எங்கிட்ட சொன்னியே உடான்ஸா இல்லையான்னு இப்ப தெரிஞ்சுடும் பாரு!!

    3. ஆ யாரது? என்னை மாதிரியே அதுவும் செய்யுது!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  27. கௌ அண்ணா MANY MORE HAPPY RETURNS OF THE DAY BY THE GRACE OF THE ALMIGHTY!

    கீதா

    பதிலளிநீக்கு
  28. புதன் கேள்வி - Many more happy returns of the day - அப்படீன்னாக்க அர்த்தம் என்ன?

    பதிலளிநீக்கு
  29. கெளதமன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  30. பின்னூட்டங்களையும் சேர்த்து முழுமையாக படித்து விட்டேன்.

    பதிலளிநீக்கு
  31. அன்பின் கெளதமன் அவர்களுக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!