penalty for non-conformance லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
penalty for non-conformance லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

16.9.10

யார் அடிச்சாரோ?

பெங்களூரில் சில இரண்டு சக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் ஆகியவற்றில், வண்டியின் பதிவு எண் - விவரங்கள் முழுவதுமே கன்னடத்தில் பார்ப்பதுண்டு. தமிழ்நாட்டிலும், இதே போன்று எல்லாமே தமிழில் ஒரு சிலர் எழுதி இருக்கிறார்கள். வட மாநிலங்களில், இந்தி எழுத்துகள், இந்தி எண்கள் பார்த்த ஞாபகம் உள்ளது. 

ஒரு வண்டிக்கு பதிவு எண் என்பது எதற்காக? 

எனக்குத் தெரிந்தவரையிலும், ஒரு வண்டி விபத்தில் சிக்கினால், அல்லது விபத்து ஏற்படுத்தினால், அந்த வண்டியின் சொந்தக்காரரை அல்லது ஓட்டுனரை அடையாளம் காண இந்த எண் இன்றியமையாதது. காப்பீடு சம்பந்தப்பட்ட வழக்கு, வியாஜ்யங்களில் கூட, இந்த பதிவு எண், மிகவும் முக்கியமானது. கோர்ட்டில் விசாரணையின்பொழுது சாட்சிகளிடம் வண்டி எண் பற்றி கேள்விகள் கேட்கப்படும். 

இவ்வளவு முக்கியமான பதிவு எண் பற்றி, மத்திய மோட்டார் வாகன சட்டம் எண் 51 (Central Motor Vehicle Rule 51) சொல்வது என்ன தெரியுமா? 
சட்டம் எண் 51 (பகுதி) பதிவு எண் பலகையில், உள்ள எழுத்துகள் எல்லாம் ஆங்கிலத்திலும், எண்கள் அனைத்தும், அராபிய எண் உருவாக (1,2,3,4,5,6,7,8,9,0) இருக்க வேண்டும். 

சட்டம் எண் 50 : இந்த விதியை எந்த வகையிலாவது மீறுபவர்கள், ரூபாய் நூறு அபராதம் செலுத்தவேண்டும். 

அப்போ, ஒருமுறை அபராதம் செலுத்திவிட்டால், தொடர்ந்து அந்த சட்டத்திற்குப் புறம்பான பதிவு எண் பலகையை வைத்திருக்கலாமா? அல்லது அந்தப் பதிவு எண்ணைப் பார்க்கும் பொழுதெல்லாம் டிராபிக் போலீஸ்காரர்  (சார் - கோர்ட்டுக்கு வந்தால் நூறு ரூபாய் அபராதம்; இங்கேயே - ஐம்பது கொடுத்தால்....) பையை நிரப்பிக் கொள்ளலாமா? 

இதைப் படிக்கும் பொதுமக்கள், தங்கள் செல் காமிராவால், சட்டத்திற்குப் புறம்பான பதிவு எண் கொண்ட வாகனங்களை, படமெடுத்து, அந்தந்த மாநில டிராபிக் கமிஷனர் அலுவலகத்திற்கு அனுப்பி, விதி மீறல்களை சரி செய்ய சொல்லிக் கேட்டுக் கொள்ளமுடியுமா? 

(இதை நான் எழுதும் பொழுது, வாசலில், ಕೆ ಯೆ ೦೧ ಎಂ ಯೆ ೯೦೮೬ வண்டி ஓட்டுனர் என்னைப் பார்த்துக்கொண்டே இருக்கின்றார். முஜே பச்சாவ் !!)