நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
22.12.13
21.12.13
பாஸிட்டிவ் செய்திகள் - சென்ற வாரத்தில்.
1) அறுவைச் சிகிச்சை கருவிகள் விற்பனை செய்து வந்த இவர் தற்போது அந்தத்
தொழிலையே விட்டு விட்டு, முழுநேரமும் சமூக சேவைக்காகத் தன்னையே
அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் ராமநாதபுரத்தில் தன்னார்வத்துடன் ரத்ததானம் வழங்கும் இளைஞர்களை ஒன்று
சேர்த்து அவர்களிடம் சமூக சேவையின் மகத்துவத்தை பற்றி விளக்கிக்
கொண்டிருந்தார் மதுரை கோரிப்பாளையத்தில் கியூர் அறக்கட்டளையை நடத்தி வரும் வி.பி.இளையபாரி. உடல் தானம், உடல் உறுப்பு தானம், கண் தானம், ரத்த தானம் ஆகியன குறித்து
விழிப்புணர்வு ஏற்படுத்துதல், ஆதரவற்ற சடலங்களை நல்லடக்கம் செய்தல், மதுப்
பழக்கத்திலிருந்து மனிதர்களை விடுவித்தல், சிறுநீரகம் பாதித்தவர்களுக்கு
அதிகச் செலவில்லாமல் இயற்கை மருத்துவம் மூலம் பலரையும் காப்பாற்றுதல் என
இவரது சேவைப் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது...
4) விளம்பரம் விரும்பாமல் உதவி செய்த இவர் ஒரு பாஸிட்டிவ் மனிதர் என்பதில் என்ன சந்தேகம்?
6) படிக்கும் காலத்தில் ஃபுட்போர்டில் தொங்காமல், சினிமா, ஊர் சுற்றல் என்றில்லாமல் சுய தொழில் பழகும் மாணவர்கள், குறிப்பாக ஜனகவிஷ்ணு
மும்பைப் போலீஸ் சுஜாதா பற்றி கல்கியில் படித்தது.
கனமான போக்குவரத்து நெரிசலில், ஓரம் கட்டிய ஒரு காரை, காரணம் அறிய நெருங்கிய போக்குவரத்துப் போலீஸ்காரர், அதில் ஸ்டியரிங் வீல் மேலே கவிழ்ந்துகிடந்த ஓட்டுனரின் வியர்வையையும், தவிப்பையும் கண்டு அருகில் 'பீட்'டில் நின்றுகொண்டிருந்த சுஜாதாவுக்குத் தகவல் சொல்ல, விரைந்து வந்த சுஜாதா, அவர் மார்வலியால் பாதிக்கப்பட்டிருப்பது புரிந்து, விரைந்து செயலாற்றி, அருகிலிருக்கும் ஆஸ்பத்திரிக்குத் தகவல் சொல்லி, தயார் நிலையில் இருக்கச் செய்து, மேலும் அடுத்தடுத்து இருக்கும் போக்குவரத்து சிக்னல்களுக்கு 'வாக்கி டாக்கி' மூலம் 'கொஞ்ச நேரத்துக்கு சிவப்பு சிக்னல் வேண்டாம்' என்று கட்டளை பிறப்பித்து விட்டு, தானே அருகிலிருந்த ஒரு காரில் அவரை ஏற்றி, காரை ஒட்டிக்கொண்டு, அருகிலிருந்து தகவல் சொன்ன போலீஸ்காரரை பாதிக்கப்பட்ட நபரின் நெஞ்சை நீவி விட்டுக் கொண்டே வரச் செய்து, மருத்துவமனையில் சேர்த்து, காப்பாற்றியிருக்கிறார்.
காப்பாற்றப்பட்ட அந்த நபர் கிரிக்கெட் வீரர் (தற்போது ஒரு தொழிலதிபர்) 'வினோத் காம்ப்ளி' என்று பின்னர் தெரிந்தது.
20.12.13
வெள்ளிக்கிழமை வீடியோ 131220: மீரா - பத்தாம் வகுப்பு 'ஏ' பிரிவு! :
இந்தக் குறும்படம் தயாரித்தவர், எங்களுடைய முக நூல் நண்பர் திரு Raajesh Padmanabhan, Dubai)
படம் நல்லா இருக்கு. பார்த்து மகிழுங்க!
18.12.13
பிரபல கொலை வழக்குகள்
புத்தகத்தில் ஏராளமான அச்சுப் பிழைகள். 2012 இல் வெளிவந்த புத்தகம்.
கொஞ்சம் எதிர்பார்ப்புடன்தான் படிக்க ஆரம்பித்தேன்.
பல வழக்கு விவரங்கள் விவரமாக சொல்லப் படாமல், கேட்டதை வைத்துக் கொண்டு எழுதியது போல விவரங்கள். சில வழக்குகளின் முடிவில் 'இதை அடிப்படையாக வைத்து சில பாலிவுட் படங்கள் வந்தன' என்கிறார். என்னென்ன என்று சொல்லவில்லை. (அது முக்கியமில்லை என்று சொல்லலாம். ஆனால் படிக்க முழுமை கிடைக்கவில்லையே)
விஷ ஊசி கொலைவழக்கு பற்றி மிக முன்பு குமுதத்தில் படித்திருக்கிறேன்.
ஆஷ்
கொலை வழக்கு பற்றி எழுதும்போது சுப்ரமணிய சிவா தொழுநோயால் அவதிப்பட்டு
சீக்கிரமே காலமானது பற்றி, நீலகண்ட பிரம்மச்சாரி இந்த வழக்கிலிருந்து
வெளிவந்ததும் மறுபடியும் தேச சேவையில் ஈடுபட்டு அப்புறம் கடைசிக் காலத்தில்
சுவாமி ஓம்கார் என்ற பெயரில் ஆன்மீகத்தில் ஈடுபட்டது போன்ற
விவரங்களையும், வ உ சி கப்பலை நஷ்டம் வந்து ஆங்கிலேயரிடமே விற்றபோது
பாரதியார் அதை 'வெட்கக்கேடு' என்று விமர்சித்தது என்று சிறு சிறு
குறிப்புகள் வரைந்துள்ளார். விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமிழ்நாட்டில்
முதலும் கடைசியுமாக நிகழ்ந்த ஒரே கொலைச் சம்பவம் என்கிறார்.
ஆங்கிலேயர்களின் கல்வி அடிப்படையிலேயே கல்வி பயில ஜாமீன் பரம்பரைகளுக்கு சென்னையில் DMS வளாகம் இருக்கும் இடத்தில் நியூயிங்டன் பள்ளி இருந்ததாம்.
1955இல் அகுஜா கொலை வழக்குக்குப் பிறகுதான் ஜூரிகள் சிஸ்டத்தை இந்தியாவிலிருந்து எடுத்தார்களாம்.
நுண்ணுயிரியைக் கொண்டு கொலை செய்யும் கலை 1931 லேயே நடந்திருக்கிறது. அந்த வழக்கு பற்றி பகூர் கொலை வழக்கில் சொல்கிறார்.

அப்பாதுரை சமீபத்தில்கூட லட்சுமிகாந்தன் கொலை வழக்கு பற்றி எழுதியிருந்தார். இதிலும் அதே அளவு சுருக்கமாக எழுதியிருக்கிறார்.
எம் ஜி ஆர், எம் ஆர் ராதா சுட்டுக் கொண்ட வழக்கும் அவ்வண்ணமே.
நாவரசு கொலை வழக்கு போலவே துண்டு துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்ட ஆளவந்தான் பற்றி விவரம்அடுத்தக் கட்டுரையில்.
ஆளவந்தான், நானாவதிக் கதையின் சம்பவங்கள் இன்றளவும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
மற்ற கட்டுரைகள் சீக்கிரம் சீக்கிரமாக முடிக்கப்
பட்டு வந்து பத்தாவதாக மர்ம சந்நியாசிக்குள் நுழைகிறார் ஆசிரியர். அநேகமாக
அந்த ஒரு வழக்கைப் புத்தகமாகப் போட நினைத்து அதனுடன்தான் மற்றவைகளையும்
சேர்த்துக் கொண்டிருக்க வேண்டும்.
விஷ ஊசி கொலை வழக்கையே ஐந்தரைப் பக்கங்களில் முடித்து விடுகிறார். அப்புறம் இந்த 'மர்ம சந்நியாசி' வழக்கு விவரம்தான். ஆனால் சும்மா சொல்லக் கூடாது. படிக்க ரொம்ப சுவாரஸ்யமாய் இருப்பதும் இதுதான். விளக்கமாய் எழுதப் பட்டிருப்பதும் இதுதான்.
1909 லிருந்து சம்பவம் தொடங்கி இறுதித் தீர்ப்பு லண்டன் பிரிவி நீதிமன்றத்திலிருந்து வந்த நாள் 1946. உச்ச நீதிமன்றம் இந்தியாவில் இல்லாததால் அந்நாட்களில் இறுதி கட்ட உச்ச வழக்குகள் இங்குதான் முடிவு செய்யப் பட்டன. எம் கே டி பாகவதர்- என் எஸ் கிருஷ்ணன் சம்பந்தப்பட்ட 'லட்சுமிகாந்தன் கொலை வழக்கு'க் கூட இங்கிருந்துதான் இறுதித் தீர்ப்பைப் பெற்றது.
கிழக்கு வங்காளத்தில் இருக்கும் பாவல் ஜாமீன் இளைய சகோதரர் 25 வயது மேஜோ குமார் விடுமுறைக்காக மலை வாசஸ்தலம் சென்ற இடத்தில் நோய்வாய்ப்பட்டு இறந்ததாக அறிவிக்கப்பட்டு உறவினர் நட்புகள் பெருமளவில் கூடுமுன் அவர் மைத்துனர் குழாமால் அவசர அவசரமாக எரியூட்ட எடுத்துச் செல்லப்படும் வழியில் பெருமழை தாங்காது 'சடலத்'தை ஓரமாக வைத்து ஒதுங்கி நின்று திரும்பிவந்து பார்க்கும் நேரம் சடலம் காணோம். தேடித் பார்த்தும் தோல்வி. தங்கியிருக்குமிடம் திரும்புபவர்கள் மறுநாள் காலை வெள்ளைத் துணியால் மூடப்பட்ட ஒரு உருவத்தைக் கொண்டு போய் எரிக்கிறார்கள். செய்யவேண்டிய சாஸ்திரங்கள் எதுவும் செய்யாமலேயே. மைத்துனர் 30,000 ரூபாய்க்கு செத்தவர் பெயரில் ஒரு பாலிசி எடுத்திருக்கிறார். அதையும் மற்ற பணங்களையும் சகோதரிக்குத் தராமலே அவர் அடைகிறார். ஜமீனிலிருந்து வரும் பென்ஷன் மட்டும் மேஜோ குமார் மனைவிக்கு.
மேஜோ குமார் உறவினர்களுக்குச் சந்தேகம் இருந்தாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. மேஜோ குமாரின் மனைவி ஒன்றும் அறியாதவராக இருக்கிறார். சுமார் 7 வருடங்களுக்குப் பிறகு அந்த ஊருக்கு வரும் ஒரு சந்நியாசி மேஜோ குமார் போல இருக்கிறார். பின்னர் பல கட்ட விசாரணைக்குப்பின் அவர்தான் என்று முடிவெடுக்கப்பட்டாலும், ஊர் மக்களும், மேஜோ குமாரின் சகோதரிகள் ஒத்துக் கொண்டாலும், அவர் மனைவி ஏற்றுக் கொள்ளத் தயாரில்லை.
வழக்கு, விசாரணை, தீர்ப்பு. அவர்தான் மேஜோ குமார் என்று கடைசியில் தீர்ப்பானாலும், அந்நாட்களில் டி என் ஏ சோதனை இல்லாததால் நிரூபணங்களுக்கு நிறைய கஷ்டப்படுகிறார்கள். இந்த விவரங்கள் மிகவும் சுவாரஸ்யமாய் இருக்கின்றன. இறுதித் தீர்ப்பு வரும்போது மேஜோ குமாருக்கு 63 வயது.
பத்திரிகைகளிலும், நாட்டு மக்கள் மத்தியிலும், ஏன், லண்டனிலும் கூட மிகவும் பரபரப்பாக பேசப் பட்ட வழக்கு.
இதைத் தழுவி நிறைய படங்கள் வந்திருக்கலாம். 'திகம்பர சாமியார்' கிட்டத்தட்ட இதன் அடிப்படையில் எடுக்கப் பட்டது என்று தெரிகிறது.
பொதுவாகவே அந்நாட்களிலேயே ஊடகங்களின் தாக்கம் அதிகம் இருக்கிறது என்று சொல்லி வழக்கை வேறு மாநிலங்களுக்கு மாற்றியிருக்கிறார்கள். வழக்கைப் பாதிக்குமளவு ஊடகங்களின் (ஊடகங்கள் என்ன, செய்தித்தாள்கள்தான்) கருத்துத் தாக்கம் இருந்திருக்கிறது. உள்ளூர் மக்கள் அபிப்ராயமும் அப்படியே.
பிரபல கொலை வழக்குகள்
SP சொக்கலிங்கம்
கிழக்குப் பதிப்பகம்
196 பக்கம் 140 ரூபாய்
16.12.13
இவரைத் தெரியுமா... - டாக்டர் ஹரி சங்கர்.
சிலர் தங்கள் வேலை நேரம் தவிர மற்ற நேரங்களில் பொதுச்சேவை செய்வார்கள். சிலர் எப்போதுமே சேவை மட்டுமே செய்வார்கள். டாக்டர் ஹரி சங்கர். பாஸிட்டிவ் செய்திகளில் இடம்பெற வேண்டிய மனிதர்.
இவர்
தனது வேலையையே பொதுச் சேவையாகச் செய்கிறார். முதியோர் நல மருத்துவர்.
சமீபத்தில் எங்கள் வீட்டு சீனியர் சிட்டிசனைப் பார்க்க வந்தபோது அறிமுகம்.
இன்று (11-12-13) பொதிகைத் தொலைக் காட்சியில் அவரது பேட்டி என்று பார்த்ததும்
காத்திருந்து பார்க்க வைத்தது.
இவர் தனது எம் பி பி எஸ் படிப்பின் மூன்றாவது வருடப் படிப்பின்போது தனது பாட்டிக்கு மார்பகப் புற்றுநோய் வந்தபோது வயதான அவரை வெளியிடங்களுக்கு மருத்துவ சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல முடியாத நிலையில், பல மருத்துவர்களிடமும் வேண்டியும் வராத நிலையில் PG செய்துகொண்டிருந்த ஒரு சீனியர் மாணவர் (அறுவை சிகிச்சை படிப்பு) உதவியதைச் சொன்னார்.
படிப்பு முடிந்ததும்
நோயாளிகளைப் பார்க்கும் நேரம் போக மற்ற நேரம் என்ன செய்யலாம் என்று
யோசித்தபோது, நகர முடியாத நோயாளிகளை வீட்டிலேயே சென்று பார்த்தால் என்ன
என்று தோன்றியபோது, அப்படி இருப்பவர்கள் யார் என்று யோசித்து, அறுபது வயது
முதல் 100 வயது வரை (அல்லது அதற்கும் மேல்) இருக்கும் முதியவர்களை அவர்கள்
இருக்கும் இடத்துக்கே சென்று வைத்தியம் பார்ப்பது என்று ஆரம்பித்தாராம்.
இதற்கான சிறப்புப் படிப்பும் படித்துள்ளார் (Gaediatrics).
இவர் குரு திரு வி எஸ் நடராஜன் என்றார். அந்த திரு வி எஸ் நடராஜன் "60 வயதுக்குப் பிறகு..." என்ற நூலை எழுதியவர். டாக்டர் வி.எஸ். நடராஜன், முதியோர் மருத்துவச் சேவைக்காக பெருமை வாய்ந்த டாக்டர் பி.சி. ராய் தேசிய விருதைப் பெற்றவர். 1978-ல் சென்னை அரசுப் பொது மருத்துவமனையில் முதியோர் நலப் பிரிவைத் தொடங்கியவர், முதியோர் மருத்துவத்தின் முக்கியத்துவத்தை நாட்டுக்கு அறிமுகப்படுத்தியவர், முதியோருக்கு அவர்களுடைய வீட்டுக்கே சென்று சிகிச்சை அளிக்கும் திட்டத்தைத் தொடங்கியவர் என, முதியோர் மருத்துவம் தொடர்பான பல முதல் முயற்சிகளை மேற்கொண்ட சாதனையாளர்.
second childhood என்று சொல்லப்படும் வயதானவர்களுக்கு வரும் வியாதிகள் எளிதில் கண்டறிய முடியாதவையாக, வேறு ஏதோ என்று நினைத்து உறவினர்கள் பயப்படும் வண்ணம் இருக்கும் என்றார். வீட்டில் சென்று பார்த்து எளிய முறையில் அவர்களோடு கலந்து பேசி மருத்துவம் பார்க்கும்போது அவர்களும் புரிந்து கொள்கிறார்கள் என்றார்.
கையில்
15 கிலோ எடையுள்ள தோள்பையுடன்தான் செல்கிறார். அதில் அவசர மருத்துவ
உதவிக்கான அனைத்து சாதனங்களையும் வைத்திருக்கிறார். தனியாக ஒரு நோட்புக்
வைத்திருக்கிறார். அதில் அவர் பார்க்கும் நோயாளிகள் புகைப்படத்துடன் கூடிய
விவரங்களை எழுதி வைத்திருக்கிறார். மருத்துவ விவரங்கள்-என்ன செய்ய
வேண்டும், என்ன செய்யக் கூடாது என்ற விவரங்கள் அடங்கிய - கையேடு
ஒன்றினையும் தான் சென்று வரும் வீட்டில் கொடுத்து விட்டு வருவாராம்.
முதியவர்கள் என்று மட்டுமில்லை, நகர முடியாத நிலையில் இருக்கும் சிறுவயது நோயாளிகளையும் வீட்டில் சென்று பார்ப்பதாகச் சொன்னார். இவரது சட்டையில் உள்ள பேட்ஜ் இவரது துறைச் சிறப்பைச் சொல்கிறது.
473
நோயாளிகள் அவர் லிஸ்ட்டில் (இதுவரை) இருப்பதாகச் சொல்லும் அவர்
திருமணமாகாதவர் என்று பேட்டியிலிருந்து தெரிந்தது. அவர் தனது வீட்டுக்கே
விசிட் செய்யும் டாக்டர் போலத்தான் வருவதாகவும், தந்தை, தாய் சகோதரி
ஆகியோரின் ஒத்துழைப்பு இல்லாமல் இதைச் செய்ய முடியாது என்றும் சொல்கிறார்.
எங்களுக்குத் தெரிந்த அளவில் அவர் நங்கநல்லூரில் வசிக்கிறார். அவரது அலைபேசி எண் : 9688620597
முதியோர் மருத்துவம் மற்றும் ஆசியாவிலேயே முதல் முதலாக சென்னையில்தான் முதியோர் மருத்துவம் என்ற சிறப்புப் பிரிவு தொடங்கப் பட்டது என்ற விவரத்துடன் பயிற்சிப்பட்டறை பற்றிய விவரங்கள்
எங்களுக்குத் தெரிந்த அளவில் அவர் நங்கநல்லூரில் வசிக்கிறார். அவரது அலைபேசி எண் : 9688620597
முதியோர் மருத்துவம் மற்றும் ஆசியாவிலேயே முதல் முதலாக சென்னையில்தான் முதியோர் மருத்துவம் என்ற சிறப்புப் பிரிவு தொடங்கப் பட்டது என்ற விவரத்துடன் பயிற்சிப்பட்டறை பற்றிய விவரங்கள்
15.12.13
14.12.13
பாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்
1) பள்ளியில் இருந்த மைதானத்தில் பல்வேறு உபயோகமான மரங்கள் வளர்த்து பசுமை சேர்ப்பதோடு, விழிப்புணர்ச்சியும் ஊட்டும் புதுக் கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி.
தற்போது 135 மாணவிகளுடன் 263 பேர் படிக்கும் இப்பள்ளியில் வேம்பு, புங்கன், சரக்கொன்றை, மயில்கொன்றை, வாகை, செம்மரம், அத்தி, இலுப்பை, மலை வேம்பு, உதியன், மாவிலிங்கம் உள்ளிட்ட சூழலைக் காக்கும் 1250 மரங்கள் புவிக்கு குடையாக உள்ளன. பள்ளியில் பயிலும் மாணவர்களைவிட 5 மடங்கு அதிகமாகவே மரங்கள் இங்கு உள்ளன.
கிராம மக்கள் மரங்களின் மகத்துவத் தைப் புரிந்துகொண்டதால் விடுமுறை நாள்களில், கிராம மக்களே மரங்களைப் பாதுகாக்க ஒத்துழைக்கின்றனர். நாட்டின் எதிர்காலமே வகுப்பறையில்தான் தீர்மானிக் கப்படுவதால் மாணவர்களிடையே கல்வி யைக் கற்றுக்கொடுப்பதோடு மட்டுமில்லா மல் இயற்கை வளங்களையும் சூழலை யும் காப்பதும் நமது கடமை என்பதை மாணவர்கள் உணரவேண்டும் என்கிறார் பள்ளியின் தலைமை ஆசிரியர் எஸ். பாபு.
3) எல்லோருக்கும் பயன்படவேண்டும் என்று டீக்கடையையே நூஅகமாக மாற்றிய பட்டதாரி அஷெரப் அலி.
4) பிரஷாந்த் பாண்டே.
பெங்களுருவிலிருந்து மும்பைக்குப் புறப்பட்ட ஆம்னி பஸ் டிரைவரின்
தூக்கத்தால் ஹாவேரி நெடுஞ்சாலையில் சாலை நடுவில் இருக்கும் சிமெண்டில்
உரசி, தீப்பிடிக்க தூக்கத்திலிருந்த பயணிகளை சத்தம் போட்டு எழுப்பி,
தலைக்கு மேலே இருந்த ஏர் விண்டோவைக் காலால் உதைத்துத் திறந்து தான் மட்டும்
தப்பிப்பதா என்று தன்னால் முடிந்த அளவு (20பேர்) கை பிடித்து மேலே
தூக்கிக் காப்பாற்றியிருக்கும் இளைஞர்.
5) அனுதாபம் விரும்பாத தன்னம்பிக்கை. மாளவிகா.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)



















