புதன், 4 மார்ச், 2020

புதன் 200304 : சொந்த கருத்தை வெளிப்படையா சொல்ல தயக்கம் வந்ததுண்டா ?



பானுமதி வெங்கடேஸ்வரன்: 

சினிமா, விளம்பரங்கள் எல்லாவற்றிலும் திருமணத்திற்கு முன்பே   ஆணும்,பெண்ணும் சேர்ந்து வாழ்வதாக காட்டுவது சகஜமாகி வருகிறதே? இது சரியா?




# திருமணம் என்பது ஒரு சடங்கு மட்டும் என்றாகிவிட்டது. சேர்வதும் பிரிவதும் முன்யோசனை இன்றி ஒழுங்கற்றதாகிவிட்டது. சிறந்த மனப்பாங்கு இருந்தால் சடங்குகள் இன்றியும் வாழலாம். இல்லாது போனால் திருமண பந்தம் என்பது பெயரளவில் மட்டும் தானே இருக்கும் ?

& அதாவது, அவங்க சொல்ல நினைப்பது என்னவென்றால், திருமணத்துக்கு முன்பு அவங்க சந்தோஷமா இருக்காங்க என்பது மட்டும்தான். மேலும் பல சினிமாக்களில், கல்யாணம் அல்லது கோர்ட் சீன் வந்தால், படம் முடிந்துவிட்டது என்று பொருள். அப்புறம் தியேட்டரில் யாரும் இருக்கமாட்டார்களே! 

தான் கனவு கண்ட வாழ்க்கை பறிபோன ஆத்திரத்தில் ஒரு ஊரையே எரித்த கண்ணகிக்கு சிலை வைப்பபவர்கள், கணிகையர் குலத்தில் பிறந்தாலும் கோவலன் இறந்ததும், துறவு வாழ்க்கையை மேற்கொண்டு, தன் மகளையும், அற வழியில் திருப்பிய மாதவிக்கு ஏன் சிலைவைப்பதில்லை?

 # கண்ணகி மாதவி இரண்டு பேருக்கும் வேறு யாருக்கானாலும் சிலை தேவையில்லை என்பது என் கட்சி.  தன்மகளை சந்யாசினி ஆக்கும் வேறு எந்த அன்னையை நாம் ஆதரிக்க முடியும்?  கற்பனா பாத்திரங்களுக்கு சிலை !!

& மாதவிக்கு சிலைதானே, வைத்துவிடுவோம். நிதி திரட்டுவோம். எல்லோரும் என் பெயருக்கு செக் அல்லது டிமாண்ட் டிராப்ட் அல்லது paytm - என்று ஏதாவது ஒரு வழியில் ஆளுக்கு ஆயிரம் ரூபாய் அனுப்புங்க. 


  (அடப்பாவி இந்த ஆளு யாருக்கு சிலை வெக்கப்போறான்!)

சில செலிபிரட்டிகளை பார்க்கும் பொழுது நமக்குத் தெரிந்த சிலர் நினைவுக்கு வருவார்கள். சம்பந்தப்பட்ட இருவருக்கும், உருவத்தில் எந்த ஒற்றுமையும் இருக்காது. உதாரணமாக நதியாவை திரையில் பார்க்கும் பொழுதெல்லாம் ஏஞ்சல் நினைவுக்கு வருவார். என்ன,காரணமாக இருக்கும்?

# நதியா (பலருக்கு) ஒரு ஏஞ்சல் என்பதால் இருக்கும்.

& நம்ம மைண்டு பலவகை உருவங்களையும், காட்சிகளையும் வார்த்தைகளையும் தினுசு தினுசா முடிச்சு போட்டு நினைவில் வைத்துக்கொள்ளும். இந்த அரிய வகை நினைவாற்றலுக்கு Similariyo Sync scenario recognitech என்று கூறுவார்கள். 

நதியாவைப் பார்க்கும்போது உங்கள் நினைவுக்கு ஏஞ்சல் வரக் காரணம், இதுதான் : 

நதியா படங்களில் பெரும்பாலும் வெள்ளை உடை அணிந்து வந்து ஆடிப்பாடுவார். (என் மாமன் கிட்ட மோதாதே - அவர் ராஜாதி ராஜனடா!) 
பாரதிராஜா படங்களில் காதல் காட்சிகளில் தந்தன தந்தன என்று பாடி ஆடும் தேவதைகள் வெள்ளை உடை அணிந்திருப்பார்கள். பள்ளிக்கூட நாட்களில் நம்  நண்பர்கள் நடித்த பாடல், நாடக காட்சிகளிலும் தேவதைகள் வெள்ளை frock அணிந்து, ஒரு ஈர்க்குச்சியில் சில்வர் ஸ்டார் ஒன்றை ஒட்டிவைத்துக்கொண்டு வந்து தலையை இடது பக்கமும் வலது பக்கமுமாக ஆட்டியபடி rhymes சொல்வார்கள். 

இந்தக் காரணங்களால், உங்களுக்கு 
நதியா -> வெள்ளை -> ஆடல், பாடல் -> தேவதை -> ஏஞ்சல் என்று ஞாபகம் வருது. 


முன்பெல்லாம் ஐந்து நாட்கள் நடக்கும் டெஸ்ட் மாட்ச்சில் நடுவில் ஒரு நாள் ப்ரேக் இருக்கும் என்பதை என் மகன் நம்ப மறுத்தான். அதே போல மெய்டன் ஓவர் என்று ஒரு விஷயம் உண்டு என்பதே இன்னும் கொஞ்ச நாட்களில் மறந்து விடுமோ?

 # அவசர, ஊதாரி யுகத்தில் பிரேக் விட இடமில்லை. மெய்டன் ஓவர் அவ்வளவு சீக்கிரம் காணாமல் போய் விடாது.

& கிரிக்கட்டைப் பார்த்து வளர்ந்த என் பையன், இதே போல எங்கள் ஊரில் நாங்க கிட்டிப்புள் என்று ஒரு ஆட்டம் ஆடுவோம் என்று சொன்னால் நம்ப மறுத்தான். என்னுடைய பேரன் star wars படம் பார்த்து கதையை சொல்லும்போது எனக்கு, அதற்கும் மகாபாரதப் போருக்கும் நிறைய ஒற்றுமைகள் இருப்பது போலத் தோன்றும். எல்லாம் காலம் செய்யும் மாயம். 


திரையிசைத் திலகம் கே.வி.மஹாதேவன், மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், இசைஞானி இளையராஜா, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், தேனிசைத் தென்றல் தேவா இவர்களில் தங்கள் டைட்டிலை ஜஸ்டிஃபை செய்வது யார்?

# எனக்குத் தெரியாது.

& எல்லோருமே. அதிகம் ரசித்தவை முதல் இரண்டு பேர் இசை அமைத்தவை. 

ஏஞ்சல் :         

1.  நாம் நல்லவர் அனைத்திலும் சிறந்தவர் என்ற உணர்வு  உங்களுக்கு தோன்றியதுண்டா ? அது எப்ப உங்களுக்கு ஏற்பட்டது ?எனக்கு தோணினதே இல்லை அதான் கேட்டேன் :) ஒருவேளை யாருக்கும் அவங்களை பற்றி அபிப்பிராயம் இருக்காதோ ??

$ எனக்கும்தான்..நான் அவ்வளவு நல்லவனில்லையோ?

# தான் பெரிய புத்திசாலி என எல்லாருக்கும் தோன்றாது. ஆனால் தான் நல்ல மனிதர், தன் வாதம் நியாயமானது எனும் உணர்வு எல்லாரிடத்திலும் இருக்கும்.

& நான் நல்லவன், அனைத்திலும் சிறந்தவன் என்ற உணர்வு தோன்றுவதா! அது எப்பவுமே இருந்துகிட்டு இருக்கு. மறைந்தால்தானே திரும்பத் தோன்ற! 

2,  சொந்த கருத்தை வெளிப்படையா சொல்ல தயக்கம் வந்ததுண்டா ?

$ 98 சதவிகிதம் என்  சொந்தக் கருத்துகள் அபத்தம் வெளியிட தயக்கம் நிச்சயம். 

# நிறைய. இப்போதும்.

& தயக்கம் வந்ததே இல்லை. மற்றவர்களின் சொந்தக் கருத்தை தயங்காமல் சொல்லுவேன். சொல்லிவிட்டு, இது அவர்களுடைய சொந்தக் கருத்து என்பதையும் மறைக்காமல் சொல்லிவிடுவேன். மண்டகப்படி எல்லாம் அவர்களுக்கே போகட்டுமே! 


3,நேசிப்பது அல்லது வெறுப்பது இதில்  எது  சுலபம் மற்றும் எளிதில் உடனடியா வருவது ?

$ சுலபம் கஷ்டம் என்பது போல் விருப்பம் வெறுப்பும் இரண்டுமே...
இருங்க இருங்க.. எங்கேயோ மானும் மீனும் இரண்டும் இன்றி... என்று பாட்டு...

 # இரண்டுமே உடனடியான வெகு சுலபம்.

& இரண்டுமே இல்லாமல் இருப்பது கஷ்டம். ஆனால், விருப்பு / வெறுப்பு இல்லாமல் இருப்பதுதான் ஆனந்தம் என்று ஆன்றோர் கூறுகின்றனர். 


4, ஒருவர் ஒரு விஷயத்தையோ அல்லது நபரையோ  அதிகமா வெறுக்கிறாங்கன்னா அதன் காரணம் என்னவா இருக்கும் ?   கசப்பான அனுபவமா ? 

$ சூடு பட்ட பூனை?

# சினம் மற்றும் அவமான உணர்வு.


5, இதெல்லாம்  தேவையற்ற விஷயங்கள் என்று நீங்கள் கருதுபவை எவை ? 

 $ ஐயோ அதுக்கு ஒரு நாள் பதிவு போதாதுங்கோ.

# அரசியல் தலைகள் சினிமா தாரகைகள் வழிபாடு. 
   
6, யாராலாவது ஏமாற்றப்பட்டு அவரை மீண்டும் சந்தித்த அனுபவம் உண்டா ?

$ சாயம் போகாது என்று சத்தியம் செய்தவரையும் மற்றும் பலரையும்.

# (நல்ல வேளையாக) இல்லை.

& உண்டு. ஆனால் மீண்டும் சந்திக்கும்போது பழைய உணர்வுகளை மறந்துவிடுவேன். ஆனால் ஜாக்கிரதையாக பழகுவேன். 

7, இதுவரைக்கும் எத்தனை புத்தகங்களை வாசித்து முடிச்சிருக்கீங்க ?     எந்த புத்தகத்தையாவது இரண்டுமுறைக்கும் மேலே வாசித்ததுண்டா ?

$ படித்து சேர்த்து வைத்திருப்பது 3000 என்றால் மொத்தம் எத்தனை இருக்கும் என்று தெரியவில்லை. பல புத்தகங்களை 3 முறை கூட படித்ததுண்டு.

 # எண்ணிக்கை சொல்வது கடினம். உத்தேசமாக 3500~4000.
பல புத்தகங்கள் இரண்டு தடவைக்கும் மேலாக வாசித்ததுண்டு. இரண்டொன்று ஐந்தாறு முறை கூட. ஆரம்பித்து முடிக்காமல் சுமாராக 50.

& ஆயிரக்கணக்கில் இருக்கும். 1972 to 1978 காலகட்டத்தில் ஒரு நாளைக்கு ஒரு புத்தகம் என்று வாசித்திருக்கிறேன். 
சின்ன வயசுல வாய்ப்பாடுன்னு ஒரு புத்தகம். அதை பலமுறைகள் வாசித்தது உண்டு. ஆரல் மணீஸ் வாய்ப்பாடு புத்தகம். 
                
8, எல்லா ஜீவராசிகளைவிடவும் நமக்கே 6 ஆம் அறிவான பகுத்தறியும் திறன் இருந்தும் வீணாய்ப்போன மனிதன் அதை பெரும்பாலும் பயன்படுத்தாமல் வீணாக்குறானே என்ற சிந்தனை அடிக்கடி எனக்கு தோணுது இப்படி நீங்களும் யோசிச்சதுண்டா ?

 $ பகுத்தறிவு என்பது மனிதருக்கு மனிதர் வேறுபடும். மனிதராய்ப் பிறந்ததால் மட்டும் ஆராய்ந்து பார்க்கும் திறன் வந்துவிடுமா என்ன?

# மனுஷன் வீணாக்குறானே என்று தோன்றாது, நான் வீணாக்கிவிட்டேனே என்று தோன்றும்.
                      
9, சமூகத்தின் தலையாய பொறுப்பு குறிப்பா  நம் மக்களின்  சமூகக்கடமை எது ?

 $ நிலம் நீர் காற்று இவை மாசுபடுவதை நம்மால் இயன்ற  அளவு குறைத்தல். 

 # சட்டங்களை மதித்து வெறுப்பை நீக்கி பொறுப்பு உணர்வோடு நடந்து கொள்வது. 

& Prioritization of activity based on value. Value = Ratio of worthiness to the cost (of any product or service) 
              

10,  பல வெப்சைட்டுகளில் What is your reaction? ஹாப்பி ,லவ், கோபம், வருத்தம்.. இதை பார்த்திருப்பீங்க நிச்சயம் . இது உண்மையில் அவசியமானதொன்றா ?

$ அவர்களது சேவையின் தரத்தை உயர்த்திக் கொள்ள ஒரு வழி.

# நான் பார்த்ததில்லை. அந்த தளத்துக்கு உரியவர்கள் இவற்றில் ஒன்று மட்டும் சாத்தியம் என்று நினைக்கலாம். 

& Some way of getting customer feed back. It is an important step for achieving customer satisfaction through continuous improvement. 

வல்லி சிம்ஹன் :   1, கொரோனா வைரஸ் பற்றியது.
நம் ஊரில் எந்த அளவில் நடவடிக்கைகளூம் பயங்களும்
இருப்பதாக நினைக்கிறீர்கள்.?

 $ எதிர்க்கட்சி தலைவர் என்ன செய்தீர்கள் என்று கேட்காத அளவுக்கு.

# பயம் இப்போது தான் தலை தூக்குகிறது. நடவடிக்கைகள் சரியாக இருப்பதாகவே தோன்றுகிறது.

& பயம் எல்லோருக்கும் இருக்கு. நடவடிக்கைகள் பற்றி சரியாகத் தெரியவில்லை. 
     
===========================================

4, 13, 22, 31 தேதிகளில் பிறந்தவர்களைப் பற்றி நல்லதா நாலு வரிகள் சொல்லிவிட்டு, அப்புறம் வாயை மூடிக்கொள்வது நலம் என்று நினைக்கிறேன். காரணம் அப்புறமா கடைசி வரியில் சொல்றேன். 

நான்காம் எண் கூட்டுத்தொகை வரும் நாட்களில் பிறந்தவர்கள், தனித்தன்மை வாய்ந்தவர்கள். எல்லா விஷயங்களையும் எதிர் கோணத்தில் பார்த்து, அலசி ஆய்வு செய்வார்கள். இவரை அறியாமலேயே இவரை வெறுக்கும் எதிரிகள் இருப்பார்கள். ஆனால், அவர்களால் இவரை ஒன்றும் செய்ய இயலாது! 

சட்ட திட்டம், கட்டுப்பாடு இதெல்லாம் இவர்களுக்குப் பிடிக்காது. எல்லாவற்றையும் ஏன், எதற்கு என்று கேள்வி கேட்பார்கள். 

1, 2, 7, 8 எண்காரர்களுடன் நட்பாக இருப்பார்கள். ஆனால் மிகவும் குறைந்த எண்ணிக்கையில்தான் நண்பர்கள் இவர்களின் நட்புப் பட்டியலில் இருப்பார்கள். 

எதிராளியின் ஏதேனும் ஒரு வார்த்தையில் அல்லது ஒரு சிறிய செயலில் சுலபமாக மனம் காயம் பட்டு, ஒதுங்கிப்போய்விடுவார்கள். 

நாலாம் எண்காரர்கள் :

ஜார்ஜ் வாஷிங்டன், பைரன், மைக்கேல் ஃபாரடே, ஆர்தர் கானண்டாய்ல் (ஷெர்லாக் ஹோம்ஸ் காரெக்டரைப் படைத்தவர்), ஐசக் பிட்மன் (சுருக்கெழுத்து).

நம்ம ஊருல என்று தேடினால், 
சட்டென்று என் ஞாபகத்திற்கு வருபவர்கள் தியாகராஜரும், (Saint Tyagaraja) திரிஷாவும்தான். ( தியாகராஜர், திரிஷா, என் மருமகள் எல்லோரும் மே நான்காம் தேதி பிறந்தவர்கள்.) 

என் திருமதியும், நான்காம் எண்காரர்.  

===============================================

மீண்டும் சந்திப்போம். 

===============================================

143 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் அனைவருக்கும்.

    அருமையான கேள்விகள். சுவாரஸ்ய பதில்கள்.
    மாதவிக்கு சிலை வைப்பது ஆஹா. :)
    மணிமேகலைக்கு சிலை இருக்கிறது என்று நினைக்கிறேன்.
    லிவிங்க் டுகெதர்......அலுப்பு ஏற்பட்டால் பிரிந்து போக
    நல்ல வழி. பந்தம் இல்லாத சொந்தம்.
    சில திருமண வாழ்க்கைகளைப் பார்க்கும் போது
    இது கூடப் பரவாயில்லையோ என்று தோன்றுகிறது.

    // # கண்ணகி மாதவி இரண்டு பேருக்கும் வேறு யாருக்கானாலும் சிலை தேவையில்லை என்பது என் கட்சி. தன்மகளை சந்யாசினி ஆக்கும் வேறு எந்த அன்னையை நாம் ஆதரிக்க முடியும்? கற்பனா பாத்திரங்களுக்கு சிலை !!// சூப்பர்ப்.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வல்லிம்மா.. இனிய காலை வணக்கம்.

      நீக்கு
    2. வல்லிம்மா - கற்பனைப் பாத்திரங்கள் - நான் ஏற்கவில்லை. பிறகு வருகிறேன் சண்டை போட.

      நிகழ்வு நடந்த இடங்களின் பெயர்கள் அதன் உண்மைத் தன்மை தெரிந்துமா?

      கர்ர்ர்ர்ர்ர் ஹாஹா

      நீக்கு
    3. வாங்க, வாங்க. எல்லோருக்கும் வணக்கம். முதல் கருத்துரையிலேயே பஞ்சாயத்து ஆரம்பிச்சாச்சா!

      நீக்கு
  2. அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும் பிறன்பழிப்ப தில்லாயின் நன்று..

    வாழ்க நலம்...

    பதிலளிநீக்கு
  3. தன் கனவு வாழ்க்கைக்காக கண்ணகி ஊரை எரித்தாளா? என்ன மாதிரியான இன்டர்ப்ரடேஷன்? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ழ

    காலை வணக்கம் அனைவருக்கும் குருஷேத்திரத்திலிருந்து (அதனால்தானோ சண்டைக்கு வரும் கருத்து?)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை... காலை வணக்கம். குருக்‌ஷேத்திரமா? ஆஹா...

      நீக்கு
    2. தர்ம க்ஷேத்ரே குருக்ஷேத்ரே !

      நீக்கு
  4. மேகலை - மணிமேகலை...

    என்ன சொல்வது... சென்ற வாரம் கூட துறவறம் பூண்டிருக்கிறாள் ஒரு பெண்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு பெண் துறவறம் பூண்டாள் என்பது செய்யத் தகாத செயலல்ல !

      நீக்கு
    2. அதானே...

      ஔவையார் மண வாழ்க்கை வேண்டாம் என்று தவ வாழ்க்கையை ஏற்றுக் கொண்டார்...

      ஆனாலும் அவர் அருளிய திருவாக்கு -
      இல்லறமல்லது நல்லறமன்று...

      இல்லறத்தால் தானே
      அன்னையும் பிதாவும் என
      முன்னறி தெய்வம் என ஆக முடியும்!...

      நீக்கு
    3. ’முன்னறி தெய்வமாக’ ஆவது எப்படி என ஏங்கியவர்களில் எல்லாப் பெண்களும் இருந்திருக்கவேண்டியதில்லையே!

      நீக்கு
    4. இருந்திருக்கத் தானே வேண்டும்...

      நீக்கு
    5. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    6. துறவறத்தை வலியுறுத்தும் காப்பியம் அதன் நாயகி துறவியாகத் தானே இருக்க வேண்டும்.அதோடு மாதவி தான் கண்ணகிக்குச் செய்த தீங்கை நினைத்து வருந்தித் தன் மகளையும் ஓர் துறவியைப் போல் வாழும்படி வற்புறுத்துகிறாள். என்றாலும் மணிமேகலைக்கும் சோதனைகள் வந்து பின்னரே எல்லாம் சரியாகிறது.

      நீக்கு
    7. இப்போதும் ஜைனர்களில் இளம்பெண்கள் துறவறம் மேற்கொள்வது உண்டு. அவர்களுக்கு இருக்கும் கட்டுப்பாடுகளை நினைத்தால் நமக்கெல்லாம் நினைத்துப் பார்க்கவே முடியாது.

      நீக்கு
    8. பிரம்ம குமாரிகள் என வந்தார்கள் ஒரு புரோகிராமில்.. அவர்களும் துறவு வாழ்க்கையில் நுழைந்தவர்கள் தானே.

      மீ ஞாஆஆஆனீஈஈஈ துறவி இல்லை ஹா ஹா ஹா

      நீக்கு
    9. பிஞ்சு, எனக்குத் தெரிஞ்சு திருமணம் ஆன பிரம்மகுமாரிகள் உண்டு. நாங்க குஜராத்தில் இருந்தப்போ ஒரு கர்நாடகா தம்பதியரில் மனைவி இரு குழந்தைகளுக்குப் பின்னர் பிரம்மகுமாரி இயக்கத்தில் சேர்ந்து விட்டார். கணவர் திண்டாடினார் இரு குழந்தைகளையும் வைத்துக்கொண்டு. :(

      நீக்கு
  5. கேள்வி பதில்கள் அருமை...

    சமூகத்தின் தலையாய பொறுப்பு - பதில் சிறப்பு...

    பதிலளிநீக்கு
  6. சிக்கலான கேள்விகள்..சீரான சிந்திக்க வைக்கும்படியான பதில்கள்..வாழ்த்துகளுடன்..

    பதிலளிநீக்கு
  7. கேள்வி, பதில்கள் படிச்சேன். பல விஷயங்களில் எனக்கு மாறுபட்ட கருத்துகள். (அது இல்லைனாத் தான் அதிசயம்னு ஸ்ரீராம் நினைக்கிறார்.) முக்கியமா மணிமேகலை விஷயத்திலும் லிவிங் டு கெதர் விஷயத்திலும். வல்லி கூட லிவிங் டு கெதரை ஆதரிப்பது ஆச்சரியத்தை அளிக்கிறது. மற்றபடி கண்ணகி விஷயத்தில் கோவலன் தான் கேவலனாக நடந்து கொண்டான். ஆனால் அதுக்குப் போய்க் கண்ணகி மதுரையை எரிச்சுட்டாளேனு எனக்கும் கோபம் உண்டு. :(((( என்ன செய்வது? இப்போக் கடமைகள் அடுத்தடுத்து அழைப்பதால் அப்புறமா வரேன். மருத்தவரிடம் வேறே போகணும். வீட்டில் இருந்தால் வரேன். :))))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வல்லிம்மா லிவிங் டுகெதரை ஆதரிக்கிற மாதிரி தெரியவில்லை. பெரிதாய் எதிர்க்கவில்லை, அவ்வளவுதான். அப்புறம் கீதா அக்கா, என் மைண்ட் வாய்ஸாக நீங்கள் சொல்லி இருப்பதை மறுக்கிறேன்!

      நீக்கு
    2. அப்படியா? வல்லி பரவாயில்லைனு சொன்னதைப் பார்த்தால் வருத்தம் வந்தது.

      நீக்கு
    3. //அப்புறம் கீதா அக்கா, என் மைண்ட் வாய்ஸாக நீங்கள் சொல்லி இருப்பதை மறுக்கிறேன்!// ஹாஹாஹா, விளையாட்டுக்குத் தானே சொன்னேன்.

      நீக்கு
  8. கேள்வி பதில்கள் சுவாரஸ்யமாக இருந்தது ஜி

    பதிலளிநீக்கு
  9. அருமையான கேள்விகள். சுவாரஸ்ய பதில்கள்

    பதிலளிநீக்கு
  10. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  11. கேள்விகளும் பதில்களும் அருமை.

    பதிலளிநீக்கு
  12. இதோ மீ அரைவ்ட் :)))))))))))))))))))))))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க, வாங்க! net problem இருந்ததால் இப்போதான் திரும்ப வரேன்.

      நீக்கு
  13. /சினிமா, விளம்பரங்கள் எல்லாவற்றிலும் திருமணத்திற்கு முன்பே   ஆணும்,பெண்ணும் சேர்ந்து வாழ்வதாக காட்டுவது சகஜமாகி வருகிறதே? இது சரியா?//

    என்னது ?? விளம்பரங்களிலுமா ??? நோ தமிழ் தொல்லைக்காட்சி அதனால்தான் எனக்கு தெர்ல :))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ப்ரூக்பாண்ட் த்ரீ ரோஸஸ் விளம்பரம் பாருங்க ஏஞ்சல். அதை ஏன் தடை செய்யவில்லை, யாருமே ஏன் எதிர்க்கவில்லை என்பதும் புரியவில்லை. எங்கோ ஓரிரண்டு பேர் அந்த விளம்பரத்திற்கு வருத்தம் தெரிவித்துச் சொல்லி இருந்தார்கள். பெரும்பான்மை வாய் மூடிக் கொண்டு இருக்கிறது. இதை வைச்சு ஒரு திரைப்படமே மணிரத்னமோ யாரோ எடுத்திருக்காங்களே!

      நீக்கு
    2. யூ ட்யூபில் கிடைக்குமா லிங்க் ..எங்களுக்கு தமிழ் செனல்ஸ் இல்லை அதனால்தானே ஒன்னும் தெரியலை 

      நீக்கு
    3. என்னென்னமோ ad லாம் வருது ஆனா அந்த லிவிங் டுகெதர் அட்வார்டைஸ்மென்ட் மட்டும் கிடைக்கமாட்டது எனக்கு கர்ர்ர்ர் :))நெட்டில் 

      நானும் அந்த திரைப்படத்தின் ரிவ்யூ மட்டும் படிச்சேன் ஈர்க்கலை சோ பார்க்கலை :) ஆனால் லிவிங் டுகெதர் பற்றி மற்றும் அரேஞ்ட் திருமணம் இரண்டு பற்றியும் நம் ஊர் சிறியோர்களுக்கு இளையோர்களுக்கு புரிதல் இல்லை .புரிதலில்லா எதுவும் உருப்படப்போவதில்லை 

      நீக்கு
    4. மணிரத்னம் எடுத்திருந்த படம் ஓகே கண்மணி. அதற்குப் பிறகு நான் பார்த்த சில ஹிந்தி படங்கள், சில வெப் சீரீஸ் எல்லாவற்றிலும் திருமணத்திற்கு முன் சேர்ந்து வாழ்வதும், உறவு கொள்வதும் வெகு இயல்பான விஷயங்களாக காட்டப்படுகின்றன. 

      நீக்கு
    5. துண்டு துண்டா பேசுவது எதோ செயற்கையாய் இருக்கும் இரத்தின சுருக்கமா சொல்ல வராரோ :) என்னமோ நாயகனை மற்றும் அலைபாயுதே தவிர வேறெதுவும் ஈர்க்கவில்லை அவர் இயக்கிய படங்களில் .மணியின் இணை காட்டும் பந்தாக்களும் இன்னும் வெறுப்பேற்றுவதால் என்னமோ அவர் படங்கள் பெரிதா பார்க்கவில்லை ரீசண்டா 

      நீக்கு
    6. நானும் இந்த வகை படங்கள், விளம்பரங்கள் எதையும் பார்த்ததில்லை. கடவுளுக்கு நன்றி.

      நீக்கு
  14. //&    & //மாதவிக்கு சிலை :))))))))))))

    உங்களுக்குள்ள ஒரு மா பெரும் மாதவி ரசிகர் ஒளிஞ்சிருப்பதை இன்னிக்குதான் கண்டுபுடிச்சோம் :))))))))))))))))))))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா, நான் கேஜிஜி சாரைக் கேட்க வேண்டிய கேள்வி, நீங்க சொல்லிட்டீங்க!

      நீக்கு
    2. ஹாஹ்ஹ்ஹா !!கீதாக்கா  எப்படி இருக்கீங்க சுகம் தானே !! இன்னிக்கு free அதான் கும்மிக்கு ஓடி வந்துட்டேன் :))

      நீக்கு
    3. welcome. மாதவி என்று போட்டு கூகிள் images தேடியபோது கிடைத்த படங்கள் அவை.

      நீக்கு
  15. //. இவரை அறியாமலேயே இவரை வெறுக்கும் எதிரிகள் இருப்பார்கள்//

    கன்னாபின்னாவென வழிமொழிகிறேன் :) நான் ஆச்சர்யப்பட்டுப்போன விஷயம் இது :) எனக்கும் எதிரிகள் உண்டு என்பதை உணர வைத்த சில சம்பவங்கள் இருக்கு  ஒரு கட்டத்தில் கூட இருந்தே எனக்கே தெரியாம எனக்கே உள்குத்து போஸ்ட் போட்டும் அதையும் புரிஞ்சிக்காம அதுக்கும் லைக் போட்டு காலம் கடந்து சீ என வெறுத்து ஓடி வந்துட்டேன் :) 

    பதிலளிநீக்கு
  16. //#//
    இங்கே ஒரு நதியா ரசிகர்  ஒளிந்திருக்கிறார் :))))))))
    @பானுக்கா உங்களால் பல தாரகைகளின்  ரசிகர்கள் வெளித்தெரிகிறார்கள் :)))))

    பதிலளிநீக்கு
  17. //எதிராளியின் ஏதேனும் ஒரு வார்த்தையில் அல்லது ஒரு சிறிய செயலில் சுலபமாக மனம் காயம் பட்டு, ஒதுங்கிப்போய்விடுவார்கள். //
    ரைட்டோ ரைட்டு :)))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரைட்டோ ரைட்டு. என் கணவர் அப்படிதான். இப்படி தொட்டால் சுணுங்கியாக இருந்தால் என்ன கற்றுக் கொள்ள முடியும்?

      நீக்கு
    2. ஹாஹாஹா பானுக்கா ..அது தொட்டார் சிணுங்கி என்கிறதை விட நாங்க மென்மனத்துள்ளார் :) 

      நீக்கு
    3. கருத்துரைகளுக்கு நன்றி.

      நீக்கு
  18. //நான்காம் எண் கூட்டுத்தொகை வரும் நாட்களில் பிறந்தவர்கள், தனித்தன்மை வாய்ந்தவர்கள். எல்லா விஷயங்களையும் எதிர் கோணத்தில் பார்த்து, அலசி ஆய்வு செய்வார்கள்//

    தேங்க்ஸ் தாங்ஸ் :)) ஹையோ ஜாலியா இருக்கு எங்களை பற்றிய உண்மைகள் அப்படியே தெரியவரும்போது :) 
    நான் எப்பவுமே எதிர் கோணத்தில் இருந்துது ஆராய்வேனே :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. cheiro சொன்னது என் திருமதிக்கும் ஒத்துப்போகிறது. நாலாம் எண்காரர்கள் நியாயத் தராசு போன்றவர்கள். யார் செய்தாலும் ஒரு செயல் தவறு என்று நினைத்தார்கள் என்றால், அதை அவர்களின் முகத்துக்கு நேரே போட்டு உடைத்து சொல்லிவிடுவார்கள்.

      நீக்கு
  19. ///Nature of The number 4 Persons
    The 4 persons as a rule have a very strong memory. They do not forget things like others. Whatever they hear becomes printed in their memory. They exhibit instant recall of the information stored in their brains.//

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் கணவரைப் பொறுத்த வரை a big NO! அவருக்கு காலையில் சொன்னது மாலையில் நினைவு இருக்காது. ஆனால் மெமரி விஷயத்தில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் நிறைய வித்தியாசம் உண்டு(எதில்தான் இல்லை). ஏஞ்செல் உங்கள் கணவர் பாடு திண்டாட்டம் இல்லையோ?!

      நீக்கு
    2. ஆமாம்க்கா :) அவர் சிஸ்டர்ஸ் பிறந்தநாளைக்கூட நான்தான் நினைவு வச்சி சொல்லணும் :) இங்கே வெளிநாடுகளில் அடிக்கடி பழைய கேள்விகள் கேட்பதுண்டு .இங்கே வந்த முதல் தேதி அதுக்கு முன்னே வசித்த தெரு எண் போஸ்ட் கோட் இப்படி ..எல்லாம் என் நினைவில் இருக்கு :) எனக்கு நானா first job ல் சேர்ந்த முதல் நாள் கூட நினைவில் இருக்கு இதில் என் கணவரும் 4 ஆம் நம்பர்தான் :)

      நீக்கு
    3. // Nature of The number 4 Persons
      The 4 persons as a rule have a very strong memory. They do not forget things like others. Whatever they hear becomes printed in their memory. They exhibit instant recall of the information stored in their brains.// Yes. They have long term memory.

      நீக்கு
  20. ராமானுஜர் (22 ) அப்புறம் சரோஜினி நாயடு இவங்களும் முன்னாள் பிரதமர் குஜ்ரால் 4 ஆம் நம்பர் 

    பதிலளிநீக்கு
  21. //என் திருமதியும், நான்காம் எண்காரர்.  //
    நான் அப்புறம் பிஞ்சு எழுத்தாளிணி பட்டங்கள் நாயகி :)  அதிரடி ஸ்கொட்டிஷ் பூஸார் இருவரும் நான்காம் எண் காரர்களே :))))))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட! ஒரு பட்டாளமே இருக்குதே!

      நீக்கு
    2. திரு திருமதி அஞ்சு, திரு திருமதி அதிரா—— நால்வரும் நாலாம் எண் தான் ஹா ஹா ஹா

      நீக்கு
  22. ///ஆனால் மிகவும் குறைந்த எண்ணிக்கையில்தான் நண்பர்கள் இவர்களின் நட்புப் பட்டியலில் இருப்பார்கள். //
    அதே அதே :))

    பதிலளிநீக்கு
  23. கொஞ்சம் நேரத்தில் மீண்டும் வருவேன் 

    பதிலளிநீக்கு
  24. பதிவர்களில் பலரும்சொந்தக்கருத்தைக்கூறுவதில்லை அதனால் பிறர்மனம்புண்படுமாம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜி எம் பி சார்... சொந்தக் கருத்தைச் சொன்னால், அது தனக்குப் பிடித்ததாக இருக்கும்போது, சரியான கருத்து என்றும், பிடிக்காத்தாக இருந்தால் பயாஸ்டு என்று சண்டைக்கு வந்தால், யார்தான் வேலியில் போகும் ஓணானை வேட்டிக்குள் விட்டுக்கொள்ள முயற்சிப்பார்கள்? அதனால் உண்மைக்கருத்து வெளிப்படுவதில்லை

      நீக்கு
  25. //ஆனால் மிகவும் குறைந்த எண்ணிக்கையில்தான் நண்பர்கள் இவர்களின் நட்புப் பட்டியலில் இருப்பார்கள்.// என் கணவரைப் பொறுத்த வரை இதுவும் தவறு. அவருக்கு நிறைய நண்பர்கள் உண்டு. சிறு வயதில் தெருவில் கோலி, பம்பரம் விளையாடியவர்கள் கூட இறுதி வரை நண்பர்களாக இருந்தார்கள். நான் படித்த எண் கணித ஜோதிட புத்தகத்தில் நாலாம் எண்காரர்கள் மிகச் சுலபமாக நண்பர்களை ஏற்படுத்திக் கொள்வார்கள் என்று குறிப்பிடப் பட்டிருந்தது.
    இன்னொரு முக்கிய விஷயம் நாலாம் எண்காரர்கள் செலவாளிகள். அது மட்டுமல்ல அவர்களுக்கு பத்து ரூபாய் பணம் வரப்போகிறது என்றால் பதினைந்து ரூபாய்க்கு செலவு வந்து காத்துக் கொண்டிருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அது மட்டுமல்ல அவர்களுக்கு பத்து ரூபாய் பணம் வரப்போகிறது என்றால் பதினைந்து ரூபாய்க்கு செலவு வந்து காத்துக் கொண்டிருக்கும்.//
      உண்மை :) நான் செலவு செய்ய யோசிப்பேன் ஆனாலும் செலவு எங்கிருந்து வருதுன்னே தெரியாது வந்து நிக்கும் 

      நீக்கு
    2. செலவாளிகள் என்று சொல்லிவிடமுடியாது. அனாவசிய செலவுகள் செய்யமாட்டார்கள்.

      நீக்கு
    3. நாமிருவரும் 4 ம் எண்காரர்கள்.... செலவாளிகள்.... ஆனா நண்பர்கள் எனும்போது எல்லோருடனும் நட்பு இருக்கும் ஆனா நெருங்கி ப் பழகுவதென்பது ஒரு சிலரோடு மட்டும்தான்:)..

      நீக்கு
  26. பொதுவாக நாலாம் எண்காரர்கள் வாழ்க்கையை அனுபவிப்பார்கள். வாழு, வாழ விடு என்னும் கொள்கையை உடையவர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னுடைய கொள்கை “செய் அல்லது செத்துப்போ”.... அதாவது எதுவாயினும் ஒழுங்கா நல்லதா இருக்கோணும்... ச்சும்மா பெயருக்காக எதையும் செய்வது/ ஷோ பண்ணுவது பிடிக்காது..

      நீக்கு
  27. Saint Thiyagaraja நாலாம் எண்காரர் என்று எப்படி சொல்கிறீர்கள்? அவர் காலத்தில் ஆங்கில காலண்டர் புழக்கத்தில்  வந்து விட்டதா? அல்லது ephemeris பார்த்து சொல்கிறீர்களா? பி.வி. ராமன் ரிசர்ச் சென்டரில் 100 வருட ephemeris கிடைக்கும். இவருடைய காலம் அதற்கும் முற்பட்டது அல்லவா? 

    பதிலளிநீக்கு
  28. //பல வெப்சைட்டுகளில் What is your reaction? ஹாப்பி ,லவ், கோபம், வருத்தம்.. இதை பார்த்திருப்பீங்க நிச்சயம் . இது உண்மையில் அவசியமானதொன்றா ?//இந்த ரியாக்ஷன் விகடன் தலத்தில் பார்த்தேன் .ஒரு சில  ஜந்துக்கள்  யாரோ செத்ததுக்கு ஹாப்பி என்று க்ளிக்கியிருக்குங்க ..அதனால்தான் கேட்டேன் இதுங்க மனா வக்கிரத்தை காட்ட இது சான்ஸா அமைஞ்சுடுது அதனால்தான் இது தேவையான்னு கேட்டேன் 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏஞ்சலின்... விகடன் என்ன காரணத்துக்காக இதனை போட்டிருக்கிறார்களோ தெரியாது.

      அவங்க, அந்தக் கட்டுரை எழுதப்பட்ட விதம் உங்களுக்கு ஏற்படும் உணர்வைத் தெரியப்படுத்துங்கள் என்ற அர்த்தத்தில் இருக்கணும்.

      வாசகர்களில் பலருக்கு இதன் உபயோகம் தெரியாது. சும்மா எதையோ க்ளிக் பண்றாங்க. அதனால் அபத்தமா இருக்கு.

      உதாரணமா ஒரு அரசியல்வாதி ஊழல் செய்தான் என்ற கட்டுரைக்கு நான் ‘கோபம்’ என்பதை செலக்ட் செய்யக் காரணம், கட்டுரை பயாஸ்ட், எழுதினவர் வேண்டுமென்றே பொய்யாக எழுதியிருக்கார் என்பதாக இருக்கும். இன்னொருவர், அடப்பாவி அந்த அரசியல்வாதி இவ்வளவு கொள்ளையடிக்கிறானா? இவனை சும்மா விடலாமா என்ற கோப உணர்வை கோபம் ஸ்மைலியை செலக்ட் செய்வதன்மூலம் காண்பிக்கிறார்.

      இப்படி அர்த்தமில்லாத ஃபீட்பேக் வாங்குவதால் விகடனுக்கு ஒரு உபயோகமும் இல்லை. வெட்டி வேலை ஹா ஹா ஹா

      நீக்கு
    2. //உதாரணமா ஒரு அரசியல்வாதி ஊழல் செய்தான் என்ற கட்டுரைக்கு நான் ‘கோபம்’ என்பதை செலக்ட் செய்யக் காரணம், கட்டுரை பயாஸ்ட், எழுதினவர் வேண்டுமென்றே பொய்யாக எழுதியிருக்கார் //

      ஆஹா சூப்பரா விளக்கியிருக்கிங்க நெல்லைத்தமிழன் .

      நீக்கு
  29. லிவிங்க் டுகெதெர் பற்றிய என் கருத்து ஒரு பாசிங்க் thought.
    @Geetha ma,
    கல்யாண பந்தத்துக்குள் கட்டுப்படுகிறார்கள்.
    பிறகு தெரிய வருவது இருவருக்கும் உள்ள வித்தியாச சிந்தனைகள்.
    கணவனோ மனைவியோ பழக்கத்துக்கோ,
    பழக்கங்களுக்கோ அடிமையாகி
    கண்ட நாள் முதல் இந்த நாள் வரை
    சண்டை போட்டு,கொடுமைப்பட்டு,மனம் கசந்து
    பெற்றோர்களும் வருந்தி ,பிறகு விவாகரத்து
    வரை வருவதற்கு , இருவர் மட்டுமே சேர்ந்திருந்து நன்றாகவும் வாழலாம்.
    இந்த ஒரு சாய்ஸ் ,இத்ற்காகவே அதைச் சொன்னேன்.
    வருத்தப் படவேண்டாம்.
    நேற்று கூட, 25 வருட திருமண வாழ்க்கை நடத்திய தம்பதியினருக்குப் பரிசு
    கொடுத்த கையோடு தான் இதை எழுதினேன்.
    அவர்களுக்கு வாழ்க்கையில் எத்தனையோ இன்னல்கள்.
    இருந்தும் ஒருவர் மீது ஒருவருக்கு இருக்கும் அபரிமிதமான அன்பினால்

    வாழ்க்கையை சமாளித்து வருகிறார்கள்.

    இந்த மாதிரி இல்லாமல், ஒரு கோட்பாட்டுடன் வாழ்க்கை நடத்தாதவர்களுக்கு
    எத்ற்குத் திருமணம் என்னும் புனித சடங்கு.
    3 கோடி செலவழித்துத் திருமணம் செய்து
    இன்னும் அம்மா அப்பாவுடனே கொஞ்சிக் குலாவும் பெண்ணினால்
    அந்தப் பையனுக்கு என்ன நிம்மதி.
    இது இரண்டு வருடங்களுக்கு முன் நடந்த கதை.

    திருமணங்களுக்கு எதிராக என் கருத்து இல்லை.
    கட்டுப்பாடுகளுக்குள்
    வராத பெண் ,ஆண்களைப் பற்றித் தோன்றிய சிந்தனை. வருந்த வேண்டாம்.
    அடுத்த ஜன்மத்திலும் சிங்கத்தையே மணக்க இறைவனை வேண்டுகிறவள்
    நான். எங்கள் குழந்தைகளும்
    திருமண பந்தத்தில் மிக நம்பிக்கை வைத்திருப்பவர்கள்.
    Of all the persons in the world I do not want to hurt anyone by my thoughts.
    Especially you.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இந்த ஒரு சாய்ஸ் ,இத்ற்காகவே அதைச் சொன்னேன்.
      வருத்தப் படவேண்டாம்.// மிகவும் மனம் வருத்தப் படும்படி சொல்லிட்டேனோ? :( போகட்டும், இதோடு இதை மறந்துடலாம். ஆனால் நம் காலத்தில் சரியென இருந்தது எல்லாம் இப்போது இல்லை என்று ஆகிவிட்டது. திருமணம் உள்பட. அதை ஒட்டியே திரைப்படங்கள், விளம்பரங்கள் வருகின்றன. இனி என்ன ஆகுமோ எதிர்காலத்தில் என்னும் கவலை தான்! மற்றபடி உங்களைத் தனிப்படச் சொல்லவில்லை. ஏனெனில் எவ்வளவு மன வருத்தம் இருந்திருந்தால் நீங்கள் இதைச் சொல்லி இருப்பீர்கள் என்பதையும் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. நீங்க சொல்லுவது போல் கிட்டத்தட்ட கோடி செலவு செய்து சின்ன வயசிலேயே திருமணம் ஆன பெண் கணவனுடன் ஒரு நாள் கூட வாழாமல் பிரிந்து விட்டாள். அம்மாவுடன் இருக்கிறாள். இப்படி எல்லாம் பார்க்கையில் மனம் வெறுத்துத் தான் போகிறது!

      நீக்கு
  30. @ பானுக்கா :))
    //உதாரணமாக நதியாவை திரையில் பார்க்கும் பொழுதெல்லாம் ஏஞ்சல் நினைவுக்கு வருவார். என்ன,காரணமாக இருக்கும்?//
    தாங்க்யூ தாங்க்யூ :) இதெல்லாம் பார்க்காம இந்த குண்டு பூனை என்ன பன்றார்:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் பானுமதி அக்கா சொல்லியிருப்பது... அந்த நிஜ ஏஞ்சலை எண்டெல்லோ மீ நிம்மதியா ரீ குடிச்சேன்ன்ன் இதென்ன இது புதுக்கதை:))... நாட்டாமை தீர்ப்பை மாத்துங்கோ.... இல்லை எனில் உண்ணாவிரதம் ஆரம்பம் தேம்ஸ் கரையில:)

      நீக்கு
    2. ரீ குடித்துக்கொண்டே உண்ணாவிரதமா! பேஷ், பேஷ், ரொம்ப நன்னாயிருக்கே!

      நீக்கு
  31. //மாதவிக்கு சிலைதானே, வைத்துவிடுவோம். நிதி திரட்டுவோம். எல்லோரும் என் பெயருக்கு செக் அல்லது டிமாண்ட் டிராப்ட் அல்லது paytm - என்று ஏதாவது ஒரு வழியில் ஆளுக்கு ஆயிரம் ரூபாய் அனுப்புங்க. // 
    ஹை! உங்களுக்கு பிடித்த நடிகைக்கு நீங்கள் சிலை வைக்க நாங்கள் ஏன் பணம் அனுப்ப வேண்டும்? அஸ்கு,புஸ்கு ! ஆசை தோசை அப்பளம் வடை! சினிமா நடிகைக்கெல்லாம் சிலை வைத்து விட்டு தேவகோட்டையாரிடம் யார் வாங்கி கட்டிக் கொள்வது?  

    பதிலளிநீக்கு
  32. முக்கியமா மணிமேகலை விஷயத்திலும் லிவிங் டு கெதர் விஷயத்திலும். வல்லி கூட லிவிங் டு கெதரை ஆதரிப்பது///மாதவி அனுபவித்து முடித்தவள்.
    தான் செய்யாத ஒரு காரியத்தை மகளைச் செய்ய வைப்பது என்ன நியாயம்
    என்கிற ஆதங்கத்தில் அதைச் சொன்னேன்.
    சமண மதத் தத்துவம் தானே இந்தத் துறவறம். பானு
    எழுதியதை மேற்கோள் காட்டி இருந்தேன்.

    கண்ணகி கனவு வாழ்க்கை வாழ்ந்ததாகவும் நான் எண்ணவில்லை.
    அவள் வாழவே இல்லை. அந்தக் கோபம்
    மதுரையை எரிக்கும் நிலைக்கு அவளைத் தள்ளியது.
    நிறைய முரண்கள் சிலப்பதிகாரத்தில். This is a laywoman's thought.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்ணகி தன் வாழ்க்கையைத் தானே கெடுத்துக் கொண்டாள் என்றே என் தனிப்பட்ட கருத்து. தன் கணவனைத் தன் பிடிக்குள் கொண்டுவர முடியாமல் இன்னொரு பெண்ணிடம் தோற்றுப் போய் அந்த ஆத்திரத்தை மதுரை மன்னனிடமும், மக்களிடமும் காட்டி விட்டாள் கண்ணகி! மாதவி தன் தவறை உணர்ந்து கொண்டதால் தன் பெண்ணால் இன்னொரு குடும்பம் பாழாக வேண்டாம் என நினைத்து அவளைத் துறவு மனப்பான்மையோடு வளர்த்துவிட்டாள். இரண்டுமே அதீதமே!

      நீக்கு
  33. @ நெல்லைத்தமிழன்,நான் சரித்திரங்களை மறுக்கவில்லை.:)

    பதிலளிநீக்கு
  34. //இந்த மாதிரி இல்லாமல், ஒரு கோட்பாட்டுடன் வாழ்க்கை நடத்தாதவர்களுக்கு
    எத்ற்குத் திருமணம் என்னும் புனித சடங்கு.
    3 கோடி செலவழித்துத் திருமணம் செய்து
    இன்னும் அம்மா அப்பாவுடனே கொஞ்சிக் குலாவும் பெண்ணினால்
    அந்தப் பையனுக்கு என்ன நிம்மதி.
    இது இரண்டு வருடங்களுக்கு முன் நடந்த கதை.

    திருமணங்களுக்கு எதிராக என் கருத்து இல்லை.
    கட்டுப்பாடுகளுக்குள்
    வராத பெண் ,ஆண்களைப் பற்றித் தோன்றிய சிந்தனை. //

    அருமை வல்லிம்மா. இந்த ஆவேசம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

    பதிலளிநீக்கு
  35. உங்க பழைய தங்க நகையை.. பணமில்லா பரிவர்த்தனை.. இந்த ரெண்டையும் இணைத்த கேள்விக்கு அடுத்த புதன் தான் பதிலா?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ ! அது விட்டுப் போயிடுச்சே! சாரி. அடுத்த வாரம் பதில் சொல்கிறோம்.

      நீக்கு
  36. லிவிங் டுகெதர் என்பதும் புரிதலுடன் அணுகப்படவேண்டியஒன்று .வெளிநாடுகளில் திருமணம் செய்ய நிறையபேர் யோசிப்பாங்க காரணம் துணை பிரியும்போது சொத்தில் பாதி பிரித்தாகணும் :) பிரபல மருத்துவர்கள் எஞ்சினியர்கள் இங்கே இந்தியர்களில் பலர்  இன்னும் லிவிங் டுகெதர் தான் .ஆனால் நம்மூரில் திருமணமாகி விவாகரத்தான ஒரு பெண்ணை மறுமணம் செய்யவே எத்தனை பேர் முன் வருவார் ???எத்த்னை பேருக்கு ப்ரோட் மைண்ட் இருக்கு ?? ஏதேனும் ஒரு கட்டத்தில் நிச்சயம் குத்தி  காட்டும் குணம் நம்மவர்களுக்கு இருக்கு ..லிவிங் டுகெதர் அல்லது பெற்றோர் பார்த்த திருமணம் இரண்டையுமே புரிந்து நடத்தி செல்ல மன பக்குவம் வேண்டும் .அது இப்போ நிறையபேருக்கில்லை .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஆஆஆ அஞ்சுவின் அறிவைப் பார்த்து மீ வியக்கேன்ன்ன்ன்:)..
      அழகாக சொல்லிட்டீங்க அஞ்சு

      நீக்கு
    2. எனக்கு இந்த லிவிங் டுகெதெர் எல்லாம் பிடிபடாத விஷயங்கள்.

      நீக்கு
    3. அன்பு ஏஞ்சல் . உங்கள் ஊரில் இருப்பவர்களின் பெண்ணும் இந்தியவிருந்து வந்த பையனும் திருமணம் செய்து ஒரு பெண் குழந்தைக்குப்பிறகு பிரிந்து விட்டார்கள். சட்டப்படி பெண்ணின் சொத்தான ஒரு வீட்டில் வேறு ஒரு நாட்டில் இருக்கிறான். ஒன்றும் சொல்ல முடியவில்லை.

      நீக்கு
    4. @ வல்லிம்மா .இப்படி நிறைய இருக்கும்மா இங்கே .பலருக்கு நமது வாழ்க்கை முறை திருமண பந்தம் ஆச்சர்யம் .விவாகரத்து புரிவதில் டாப் லிஸ்டில் இருப்பவங்க நம் நாட்டினர் தான் இங்கே. குறிப்பா இங்கே பிறந்து வளரும் பிள்ளைகளுக்கு இங்குள்ள ஆணை தேர்வு செய்வது விவாகரத்து வரை செல்வதை குறைக்கும் ஆனால் இவர்கள் நம் நாட்டில் இருந்து புது மனிதரை புது கல்ச்சருக்கு நுழைக்கும்போது பல குழப்பங்களை ஏற்படுத்துது 

      நீக்கு
    5. //கௌதமன் 4 மார்ச், 2020 ’அன்று’ பிற்பகல் 8:02
      எனக்கு இந்த லிவிங் டுகெதெர் எல்லாம் பிடிபடாத விஷயங்கள்.//

      அதுக்கும்ம்ம்ம் மேலே நிறைய இருக்கு இங்கே அதெல்லாம் கேள்விப்பட்டா மயக்கமாகிடுவீங்க 

      நீக்கு
    6. நான் என்னையே கிள்ளி பார்த்துக்கறேன் எங்க தலைவி என்னை பாரட்டிப்புட்டாங்களே :))))))))))

      நீக்கு
    7. @ஏஞ்சல், எங்க வீட்டிலேயே விவாகரத்து ஆன பெண்களுக்கு மறுமணம் செய்து வைத்து சந்தோஷமாகவே வாழ்கின்றனர். நீங்க சொல்லுவதைப் போல இது அவரவர் மனோநிலையைப் பொறுத்தது.

      நீக்கு
    8. கீதாக்கா .அதேதான் எல்லாத்துக்கும் மனமே காரணம் .விவகாரத்துகூட பிரிவுகள் கூட சில நேரம் சேர்ந்து ஒற்றுமையின்றி இருக்கிறதை விட பிரிவது மேல்னு தோணுது .ஒரு பெண் ஒருவரை காதலித்தா அவள் பேரன்ட்ஸ் வேணாம்னு சொல்லியும் அடமா இருந்தா சரி 2 வருடங்களில் திருமணன்னு ஏற்பாடு திடீரென அப்பெண் தற்கொலை முயற்ச்சித்திருக்கா காரணம் அந்த ஆணின் பொஸசிவ்னெஸ் எல்லை மீறிப்போனதே இதை சொல்லவும் முடியாம திருமணத்தை தடுக்கவும் முடியாம தவிச்சு தன்னை முடிச்சிக்க பார்த்து தப்பிட்டா .இப்போ கல்யாணமாகி 4 வருஷம் ஆச்சு ஆனா இன்னும் அவளை அவனை ஏமாத்திட்டான்னு ஊர் சொல்லுது .இவள் முன்னாள் லவரை  திருமணம் செஞ்சிருந்தா லைஃப் நரகமாகியிருக்கும் .இப்படி மன ஒற்றுமை புரிதல் எல்லாத்துக்கும் தேவை .உங்க குடும்பத்தில் அந்த பெண்ணுக்கு இறைவன் நல்லதை செஞ்சிருக்கார் எதோ ஒரு காரணமிருக்குக்கா எல்லாம் நன்மைக்கே .

      நீக்கு
    9. ஏஞ்சலின்.... லிவிங் டு கேதர்ல என்ன புரிநல் வேண்டிக்கிடக்கு? இதைப்பற்றி லேப்டாப்லனா நிறைய எழுதுவேன். இல்லாத்துனால தப்பிச்சீங்க.

      சட்டத்தை வளைத்தால் அது நியாயமாகிடுமா?

      பெண்களை எக்ஸ்ப்ளாய்ட் பண்ணக்கூடாது, இந்தியா மாதிரி திருமணம் என்பது இரு குடும்பங்களின் உறவு மேற்கில் கிடையாது என்பதால் வீக்கர் செக்ஸை ப்ரொடக்ட் பண்ண சட்டம் போட்டா, இவங்க லிவிங் டு கேதர் என்ற கமுட்மென்ட் இல்லாத வாழ்க்கை வாழ்வாங்களாம். அது நல்ல மெதடாம்.

      கர்ர்ர்ர்ர்ர்ர் ஏஞ்சலின். இருந்தாலும் நீங்க சொன்னதன் அர்த்தத்தைத் தெளிவுபடுத்துங்க

      நீக்கு
    10. //
      நெல்லைத்தமிழன்6 மார்ச், 2020 ’அன்று’ முற்பகல் 10:49
      ஏஞ்சலின்.... லிவிங் டு கேதர்ல என்ன புரிநல் வேண்டிக்கிடக்கு? இதைப்பற்றி லேப்டாப்லனா நிறைய எழுதுவேன். இல்லாத்துனால தப்பிச்சீங்க.///
      //கர்ர்ர்ர்ர்ர்ர் ஏஞ்சலின். இருந்தாலும் நீங்க சொன்னதன் அர்த்தத்தைத் தெளிவுபடுத்துங்க////

      ஆவ்வ்வ்வ்வ்வ் அஞ்சுப்பிள்ளை யூப்பர் மாட்டீஈஈஈஈஈஈஈஈ... இப்பூடி வார்த்தை கேட்க.. பல வருடம்ம்ம்ம்ம் காத்திருந்தேன்ன்ன்ன்:)).. ஹா ஹா ஹா ஜந்தோஜம் பொயிங்குதே.. ஜந்தோஜம் பொயிங்குதே.. ஜந்தோஜம் தலையில் பொயிங்குதே ஹா ஹா ஹா.. விடாதீங்கோ நெ.தமிழன், அதிராவுக்கு தலையிடி என்பதால மீ அதிகம் அன்று களமிறங்கவில்லை:)) அதைச் சாட்டா வச்சு:) அதிரா இல்லை எனும் தைரியத்தில, அஞ்சு புகுந்து விளையாடுறாவாம்ம்ம்ம்ம்:)).. ஹா ஹா ஹா..

      ஊருக்கேற்ற.. மண்ணுக்கேற்ற குணம் என்பினம்:)) அதௌ உண்மைதான் போல:)) குருஷேத்திரம் போனதும் போர் தொடுக்கிறார் நெல்லைத்தமிழன்:)).. ஹையோ அங்கின இண்டநெட் செண்டர்கள் இருக்கும்.. காசா இப்போ முக்கியம்.. அங்கு போய் கொம்பியூட்டரில:) பெரிய பதில் இல்ல இல்ல கேள்விக்கணைகளைத் தொடுங்கோ நெ.தமிழன்.. மீ கச்சான் வறுத்தெடுத்துக் கொண்டு தேரோட்ட வருகிறேன்ன் ஹா ஹா ஹா....

      நீக்கு
    11. என் கருத்து நெல்லைத்தமிழன், லிவிங்ருகெதர் என்பது, இந்நாடுகளில் பொழுதுபோக்குமாதிரி இல்லை, இவர்கள் அதை ஒருவித திருமண பந்தமாகவே பார்க்கின்றனர், அப்படியே வாழ்ந்து குழந்தை பெற்று வளர்க்கின்றனர், எந்த ஒளிவு மறைவுமின்றிப் பேசுவார்கள், இவர் என் பார்ட்னர் என.. திருமணமாகிட்டால்தான் ஹஸ்பண்ட் எனச் சொல்வார்கள்.. நம்மவர்கள்போல பொய் பேச மாட்டினம்...

      என்னைப்பொறுத்து நம் மனம் இப்படி வாழ்க்கையை ஏற்காது, இப்போ நம் பிள்ளைகள் அப்படி வாழ விரும்புகின்றனர் எனில், நம்மால் மனம் ஒத்து ஓகே சொல்ல முடியாது, வேறு வழியின்றி சொல்லலாம்..


      ஆனா நம் நாட்டுக் கலாச்சாரம் வேறு, நம் நாட்டில் திருமணம் என்பதே பல இடங்களில் பொய் சொல்லிச் செய்கின்றனர், முதல் திருமணத்தை மறைத்து அடுத்தது செய்கின்றனர், அப்போ இரு குடும்பங்கள் சேர்ந்து செய்து வைக்கும் திருமணமே நம்பிக்கை குறைவாகிடுதே எனும் நிலையில்..லிவிங் 2 கெதரை எப்படி நம்புவது... அங்குதான் பெண்களை யூஸ் பண்ணுவதற்கும், பணம் பறிப்பதற்கும் லிவிங்டுகெதர் என குழி தோண்டுப் படலாம்

      //பெண்களை எக்ஸ்ப்ளாய்ட் பண்ணக்கூடாது,//
      பெண்கள் என்ன பொம்மைகளோ இதில் எக்புளோய்ட் பண்ணுவதற்கு, இது ஒன்றும் றேப் இல்லைத்தானே, இருவரும் ஒத்து, விரும்பித்தானே இவ்வாழ்வை ஏற்கின்றனர்.. இதில் பெண் என்ன ஆண் என்ன இருவருக்கும் கற்பென்பது ஒன்றுதானே..

      இந்நாடுகளில்..லிவிங் 2 கெதர் மூலம் குழந்தை கிடைச்சாலும், பிரிந்தபின் அக்குழந்தையின் பொறுப்பில் தந்தைக்கும் பங்குண்டு.. அதே நேரம் தாய்க்கு தொழில் வசதி இல்லை எனில் அரசாங்கம் பொறுப்பேற்கும் என்பதாலும், திருமணமாகி பின் டிவோஸ் க்கு அலைவதை விட இது பெட்டர்தான் போல தோணும்...
      இந்தியாவிலும் இப்போ லிவிங்2 கெதர் அதிகரித்திருக்கிறது, ஆனா இப்படி இருக்கும்போது ஆரும் குழந்தை பெற்றதாக அங்கு இன்னும் தகவல்கள் இல்லை, ஒருவேளை குழந்தை கிடைச்சால்கூட, இப்போதைய தலைமுறையில் இருவரும் படிச்சவர்களாகவே இருக்கின்றனர் என்பதனால கஸ்டம் இருக்காது.

      நம் நாட்டில் திருமண பந்தம் கட்டாயம் என கொண்டுவரப்பட்டதன் அடிப்படைக் காரணமே.. பெண்ணை ஆண் கடசிவரை காப்பாற்றி, உணவு உடை உறையுள் வழங்க வேண்டும் எனும் கோட்பாடுதானே, ஆனா இன்றைய பெண்களுக்கு பிரிஞ்சிட்டாலும், தம்மைக் காப்பாற்ற கைவசம் படிப்பு இருக்கிறது, அந்த தைரியத்திலேயே இப்படி ஒன்றாக சேர்ந்திருக்க ஆரம்பித்திருக்கின்றனர் என எண்ணுகிறேன்.

      நீக்கு
    12. ஆஆஆ!!இதோ வந்துட்டேன் :)எங்க தலைவி அழகா சொல்லிட்டாங்க இதுக்குமேல நானா சொல்ல ஒண்ணுமில்ல :))
      புரிதல்னு நானா சொன்னது மனபக்குவம்னு நானா சொன்னது அந்த ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் ஆண் பெண் அவங்க புரிதல்னு சொன்னேன் ..ஊரில் திருமண பந்தத்தில் பெரும்பாலும் பெண் ஆணை சார்ந்திருப்பதால்தான் பெண்ணின் பெற்றோர்  ஆணை தேர்வு செய்து மணமுடிக்கின்றனர் .இங்கே ஆண் பெண் இருவர் மட்டுமே முக்கிய கேரக்டர்ஸ் மாமியார் மாமனார்களாம் சீனில் வர மாட்டாங்க .40 வருஷமா லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருப்போரையும் தெரியும் இங்கே .இவங்களைப்பொறுத்தவரை ஊர்க்கூட்டை கல்யாணம் செய்வதில்லை ஆனால் அதே அன்பு அதைவிட அன்பு இருக்கும் .ஆனாநம்மூருக்கு இது சரி வாராதது :) அதே தான் நானும்  சொல்ல வந்தது .இங்கே ஸ்கூலில் கூட பெண் தனது குழந்தைக்கு தனது sir நேமை யூஸ் பண்ணலாம் .நம்மூரில் இதை கிண்டலடிக்கவே gossip கூட்டம் இருக்கும் .இதையெல்லாம் தான் மனபக்குவம்னு சொன்னேன் .,,,இன்றும் நாளையும் வேலை அதனால் நான் மிச்ச பதில்கள் அப்புறம் thareeeeen :) உங்களுக்கு ஏதாச்சும் சந்தேகம் இருந்த அத்தெளிவுபடுத்த எங்க தலைவி மேதகு பிஞ்சு எழுத்தாளர் இருக்கிறாரா அவரை கேட்டுகொள்ளவும் ..

      நீக்கு
    13. ///லிவிங் 2 கெதரை எப்படி நம்புவது... அங்குதான் பெண்களை யூஸ் பண்ணுவதற்கும், பணம் பறிப்பதற்கும் லிவிங்டுகெதர் என குழி தோண்டுப் படலாம்//
      yes i totally agree writer :)

      அதோடு ஒரு பெண் எக்ஸ்பிலாய்ட் ஆவது அவள் கையில்தான் இருக்கு .அவள் தெளிவா யிருந்தா எதற்கு எக்ஸ்பிலாய்ட் ஆகப்போறாங்க .இங்கே காதல் தோல்வி என்னை கல்யாணம் பண்ணட்டாட்டில் நான்  தற்கொலை /இதைத்தான் செய்யணும் அவன்கூட பேசாதே இப்படி இரு அப்படி இரு இதெல்லாம் ஆண்கள் சொல்ல மாட்டாங்க .இருவரும் வேலை இருவரும் குடும்பப்பொறுப்பில் பங்கு குழந்தைவளர்ப்பில் பங்கு என எல்லாவற்றையும் ஷேர் செய்வாங்க .நம்மூரில் அப்படியா ?? இல்லையே அதனால்தான் நம்மூருக்கு லிவ் இன் உறவுமுறை புரிதலற்ற வேஸ்ட் என்றேன் .

      நீக்கு
    14. அதோடு வெளிநாட்டடினர் ஊர்க்கூட்டி திருமணம் செய்வதில்லை ஆனால் நம்மூரில் எப்படி பொறுப்பா குடும்பத்தை கவனிக்கிறாங்களோ அதே அன்பு பாசம் பொறுப்பு இருக்கும் .இதை நம்மூர் மக்கள் இங்கே வந்து அடடா லிவ் இன் இல் இருந்தா கவுன்சில் வீடு சிங்கிள் மதர் பெனிபிட்ஸ் குழந்தை வளர்ப்பு செலவு இதெல்லாம் கிடைக்குதேன்னுட்டு திருமணத்தை மறைத்தும் வாழும் அவலமுண்டு :( வெவ்வேறு அட்ரஸ் கொடுத்து வாழும் கப்பிள்ஸ் நானறிவேன் ..இதைத்தான் நம்மூர் மக்கள் தமக்கு சாதகமாக்கி லிவ் இன்  உறவை பணம் சம்பாதிக்க பிரதானமாக்கியிருக்காங்க .

      நீக்கு
  37. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  38. //என்னுடைய பேரன் star wars படம் பார்த்து கதையை சொல்லும்போது எனக்கு, அதற்கும் மகாபாரதப் போருக்கும் நிறைய ஒற்றுமைகள் இருப்பது போலத் தோன்றும். எல்லாம் காலம் செய்யும் மாயம்.//
      இவ்வளவு என் நான் கூட லயன் கிங் பார்ட் ஒன் பார்த்துட்டு சூர்யவம்சம் மாதிரி இருக்கேனு நினைச்சுக்கிட்டேன்   :)))))))))))

    பதிலளிநீக்கு
  39. செளகரியப்பட்ட போது பதில் சொல்வதற்கான கேள்வி:

    எவ்வளவு வேண்டுமானாலும் ப்ரிமியம் தொகை இருக்கட்டும்.
    ஆண்டுக்கு ஆண்டு ப்ரிமியம் தொகை புதுப்பிப்பதாக இருந்தாலும் சரி.

    இதற்கு முன்னால் அனுபவித்த அல்லது அனுபவிக்கும் நோய்களுக்கு மருத்துவ உதவி கிடையாது என்று
    புறக்கணிக்காத -- நேர்மையான செட்டில்மெண்ட் பாரம்பரியம் கொண்ட
    Health Insurance Policy (Cashless) ஏதாவது இந்தியாவில் உண்டா?.. இருப்பின் தெரிவியுங்களேன். உபயோகமாக இருக்கும்.
    (அமெரிக்க ஹெல்த் இன்ஷூரன்ஸ்கள் எல்லாம் இப்படித்தான். ப்ரிமியம் கட்டி விட்டால் போதும்.
    எந்த நோய் வந்தாலும் ஹாயாக ஆசுபத்திரிகளை நாடலாம். பென்னி பேமண்ட் இல்லாமல் ட்ரீட்மெண்ட் நடக்கும். இன்ஷூரன்ஸ் கம்பெனிக்கும் மருத்துவ மனைக்கும் தான் தொடர்பே.. நம்மை எதற்கும் தொந்தரவு படுத்த மாட்டார்கள். Pre payment எதுவும் இருக்காது. அந்த மாதிரி ----- )

    பதிலளிநீக்கு
  40. முக்கியமான விஷயம்: 75 வயது மேற்பட்டவர்களுக்கு என்ற வார்த்தை விட்டுப் போய் விட்டது.

    பதிலளிநீக்கு
  41. 4ம் நம்பர் நோட் பண்ணிட்டேன்ன்... கிளவிகளும் சே சே கேள்விகளும் பதில்களும் அழகு நன்று ரசித்தேன்.. அதிகம் பேச முடியவில்லை பிக்கோஸ் மீ வேர்க்கிங்:)...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அதிகம் பேச முடியவில்லை பிக்கோஸ் மீ வேர்க்கிங்:)...//

      ஆமா :) இப்போ எதனால் உங்களுக்கு வேர்க்குது :))))))))))

      நீக்கு
  42. சிறப்பு. ஒவ்வொரு விடயத்தையும் அழகாக தொகுத்திருக்கிறீர்கள். சிறப்பு. தொடருங்கள், தொடர்வோம்.

    தமிழ்மணத்துக்கு மாற்றாக வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை .
    இதேநேரம் நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக ஒன்பது வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அத்துடன் தங்களது புதன் 200304 : சொந்த கருத்தை வெளிப்படையா சொல்ல தயக்கம் வந்ததுண்டா? பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அடுத்த மாதம் முதல் தமிழ்மணம் போல தனிப்பதிவுகளாக அனைத்து வலைத்தளங்களையும் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன்.

    உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்

    எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்

    பதிலளிநீக்கு
  43. கேள்வி பதில்கள் வழமை போல ஸ்வாரஸ்யம்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!