வியாழன், 20 அக்டோபர், 2022

யாரைத் திருப்திப்படுத்த....

 பள்ளிப் புகைப்படத்தில் போஸ் கொடுத்தபோது டீச்சர், பெற்றோர் பற்றிய எண்ணம் மட்டுமே மனதில் நின்றது.

கல்லூரி புகைப்படத்தில் சிரித்துக் கொண்டிருந்த போது வேலை கிடைப்பதற்கு இடையே இருக்கப்போகும் சந்தோஷ நாட்களை பற்றி மட்டுமே எண்ணம் இருந்தது. 

வேலை கிடைத்த பின் எடுத்த புகைப்படத்தில் திருமணத்துக்கு முந்தைய சுதந்திரமான நாட்கள் பற்றிய எண்ணங்கள் மட்டுமே இருந்தது.

புது மனைவியுடன் போட்டோவில் சிரித்தபோது குழந்தை பற்றிய எண்ணம் எதுவும் இல்லை 

குழந்தை, மனைவியுடன் போட்டோவில் நின்றபோது சொந்த வீடு, நல்ல சம்பள கவலை முகத்தில் தெரிய தொடங்கியது 

கிரஹப்ரவேச போட்டோவில் குழந்தைகளுக்கு இணை தேடும் கவலை கூட நின்றது.

இப்போது என் பள்ளிப் புகைப்படத்தைப் பார்த்து நான் என்ன நினைப்பது? 

வாகனத்தில் ரிவர்ஸ் கியர் போட்டு சரியான பாதைக்குத் திரும்புவது போல வாழ்க்கையில் செய்ய முடிவதில்லை.  திரும்பியது திரும்பியதுதான்.  ஆரம்ப நாட்களில் சிறிய தவறுகளாய் காட்சியளித்தவை பின்னாட்களில் பூதாகாரமாய் வளர்ந்து நிற்கின்றன.  கற்பனையை க.பி என்று ஓட விட வேண்டாம்.  பொதுவாகத்தான் சொல்கிறேன்!

நான் எனது 15 வயதுக்கு மறுபடி சென்று தொடங்க ஆசைப்படுகிறேன்... 

கொஞ்சம் இருங்கள்...  15 என்றா சொல்லி இருக்கிறேன்?  

ஊ ஹூம்...   12....  

வேண்டாம் 18 ஓகே என்று தோன்றுகிறது.  இல்லை 25 வைத்துக் கொள்ளலாமா...  கொஞ்சம் டயம் கொடுங்கள்.  யோசித்துச் சொல்கிறேன்.

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


என்ன சொல்லி என்ன..   பாக்ஸ் ஆபீஸ் ஹிட்.  டைட்டிலிலேயே  மூலக்கதை கல்கி என்றுதான் போடுகிறார்கள். கல்கியின் பொன்னியின் செல்வன் என்று போடவில்லை.   மணிமேகலை எங்கே என்று கேட்கக் கூடாது.  கந்தமாறன் பார்ட் அவ்வளவுதானா என்று கேட்கக்கூடாது.  இவளா பூங்குழலி என்று கேட்கக் கூடாது.  அட, வானதியின் இயல்பான பயத்தையும் கூச்சத்தையுமே காணோம்.  ஐஸ்வர்யா நந்தினியைப் பார்த்தால் "ஹை..யா" என்று இருப்பதற்கு பதில், ஆயா என்று இருக்கிறது.  ஐஸ்வர்யாவுக்கு வயதாகி விட்டது மணிக்கு இன்னும் தெரியவில்லை போலும்.   

குந்தவைக்கு கொஞ்சம் த்ரிஷா ஜாடை தெரிகிறதோ...!

த்ரிஷாதான் குந்தவையாம்..  இருங்கள்..  கொஞ்சம் சிரித்துக் கொள்கிறேன்.  அவ்வளவு பெரிய கொண்டையை அவர் தலையில் வைப்பதற்கு எவ்வளவு சிரமப்பட்டார்களோ...  ஒற்றைக்கல் பெரிய கோவில் உச்சியில் வைத்தாற்போல...  எப்படியோ பாலன்ஸ் செய்து நடக்கிறார்..  அநிருத்த பிரம்மராயருக்கு இவர்கள் செய்திருப்பது அநியாயம்.  கும்பலில் நின்று தபாலைப் பிரித்துப் படிக்கிறார்.  குந்தவைக்கு டஃப் கொடுப்பவரா அவர்? ஆழ்வார்க்கடியான் என்றால் முப்பது வயது சொல்லலாம், முப்பத்தைந்து வயது சொல்லலாம்.  தளர்ந்து போன தோலுடன் இவ்வளவு உயரமாக...   ஊ ஹூம் பொருந்தவில்லை.  அதனால்தான் அவரது பார்ட்டையும் குறைத்து விட்டார்கள் போலும்.  எவ்வளவு உயர்ந்த தியேட்டரில் பார்த்தாலும் காதைக் கிழிக்கும் இரைச்சல், வீட்டுக்கு வந்தபின்னும் செவிகளிலிருந்து வழிந்து ஓடிக்கொண்டே இருந்தது!  நாசர்தான் வீரபாண்டியனாம்.  கதவு மூடித் திறந்த ஒரு கணத்தில் தெரிந்தது அவர் முகமாகத்தான் இருக்க வேண்டும்.  கல்கியைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் பொழுதுபோக்காகப் பார்க்கலாம் - காதுகளை பொத்திக்கொண்டு!  விக்ரம் சிறப்பாகச் செய்திருக்கிறார். சில நாட்டியக்கோர்வைகள் கவர்கின்றன.

======================================================================================================

அவரே எழுத்திருக்கிறாரா, அல்லது யாராவது எழுதியதைப் பகிர்ந்திருக்கிறாரோ தெரியவில்லை.  சுஜாதாவின் கடைசிப்பக்கங்கள் என்கிற பேஸ்புக் பக்கத்தில் ஜெ. பிரதாபன் பகிர்ந்திருப்பது கீழே....  எனக்கு இதை வாட்சாப் பகிர்விலும் பார்த்த ஞாபகம்.

12-10-22/18:05

சங்க இலக்கியங்களில் மெய்ஞானப்புலம்பல் என்று ஒரு துறை உண்டு.
செய்யுள் வடிவத்தில் இருக்கும் அவற்றை உரைநடைக்கு கொண்டுவந்தால் இப்படித்தான் இருக்கும்.
ஒருசில மணிநேரங்களில் அழுகுரல்கள் முழுமையாக அடங்கியிருக்கும், அடுத்த வேளை உணவுக்கான ஆர்டர்கள் ஹோட்டலுக்கு சென்றிருக்கும், பேரன் பேத்திகள் ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருக்க, வந்த கூட்டத்தில் ஓர் இளம்பெண்ணும் ஆணும் காதல் புன்னகையுடன் பரஸ்பரம் போன் நம்பர்கள் மாற்றிக்கொள்வர்.
படுக்கப் போகும் முன் காலாற நடந்து வரலாமென சில ஆண்கள் தேநீர்க்கடை வரை சென்றிருப்பர். சாப்பிட்ட இலைகளயும், குப்பைகளையும் இன்னும் கொஞ்சம் தள்ளிக் கொட்டியிருக்கலாம் என உங்கள் பக்கத்து வீட்டுக்காரர் மனதுக்குள் பொறுமிக் கொண்டிருப்பார். ஒரு அவசர சூழ்நிலையால் நேரில் வர இயலவில்லையென உறவினர் ஒருவர் உங்கள் மகளிடம் போனில் பேசுவார்.
மறுநாள் விருந்தில், கறியில் காரம் போதவில்லையென ஓரிருவர் குறைபட்டுக் கொள்வார்கள், எலும்பை நீக்கி, கறியை மட்டும் குழந்தைக்கு ஒரு அம்மா ஊட்டிக் கொண்டிருப்பார். இத்தனை தூரம் வந்தாச்சு போற வழியில் அங்கேயும் பார்த்துவிட்டுப் போலாமா என வெளியூர் உறவுகள் சுற்றுலாத் திட்டங்கள் ரகசியமாய் வகுத்திருப்பர்.
தன்னுடைய பங்குக்கு மேல் சிலநூறு ரூபாய்கள் அதிகமாக செலவாகி விட்டதென ஒரு பங்காளி கணக்கிட்டு நொந்துக் கொண்டிருப்பார். கூட்டம் மெல்ல மெல்லமாய்க் கரையத் தொடங்கும்.
அடுத்து வரும் நாட்களில் நீங்கள் இறந்ததே தெரியாமல் உங்கள் தொலைபேசிக்கு சில அழைப்புகள் வரக்கூடும். உங்கள் அலுவலகம் உங்கள் இடத்துக்கு வேறொருவரை அவசரமாகத் தேடத் துவங்கியிருக்கும்.
இரண்டு வாரங்களில் உங்கள் மகன் மகளின் எமெர்ஜென்சி லீவு முடிந்து பணிக்கு திரும்பிடுவர், ஒருமாத முடிவில் உங்கள் வாழ்க்கைத்துணை டிவியில் வரும் ஏதோ ஒரு நகைச்சுவைக் காட்சிக்கு சிரிப்பார், அடுத்து வரும் மாதங்களில், உங்கள் நெருங்கிய உறவுகள் மீண்டும் சினிமாவுக்கும், பீச்சுக்கும் சகஜமாய்ச் செல்லத் துவங்கியிருப்பர், அத்தனை பேரின் உலகமும் எப்போதும்போல் மிக இயல்பாக இயங்கிக் கொண்டிருக்கும்,
ஒரு பெரிய ஆலமரத்தின் இலை ஒன்று வாடி உதிர்ந்ததற்கும், நீங்கள் வாழ்ந்து மறைந்ததற்கும் எள்ளளவும் வித்தியாசம் இல்லாதது போல, அத்தனையுமே சுலபமாய், வேகமாய், எந்தச் சலனமுமின்றி நடக்கும்.
நீங்களே வியக்கும் வேகத்தில் இந்த உலகத்தால் நீங்கள் மறக்கப்படுவீர்கள். இதற்கிடையில் உங்கள் முதல் வருடத் திதி கொடுத்தல் மட்டும் மிகச்சிரத்தையாக நடக்கும்.
கண்மூடித் திறக்கும் நொடியில் வருடங்கள் பல ஓடியிருக்கும், உங்களைப் பற்றிப் பேச யாருக்கும் எதுவுமே இருக்காது, என்றாவது ஒருநாள், பழைய புகைப்படங்களைப் பார்க்கையில் மட்டும், உங்கள் வாரிசுகளில் ஒருவர் உங்களை நினைவு கொள்ளக்கூடும், உங்கள் ஊரில், நீங்கள் நெருங்கிப் பழகிய ஆயிரம் ஆயிரம் பேர்களில், யாரோ ஒருவர் மட்டும், நீங்கள் இருந்ததாய், அபூர்வமாய் உங்களைப் பற்றி யாரிடமோ பேசக்கூடும்.
மறுபிறவி உண்மையென்றால் மட்டும் நீங்கள் வேறெங்கேயோ, வேறு எவராகவோ வாழ்ந்து கொண்டிருக்கக்கூடும். மற்றபடி, நீங்கள் எதுவுமே இல்லாமல் ஆகி,பேரிருளில் மூழ்கி பல பத்தாண்டுகள் ஆகியிருக்கும்.
இப்போது சொல்லுங்கள்...
உங்களை இத்தனை சீக்கிரம் மறக்கக் காத்திருக்கும் மனிதர்களில் யாரைத் திருப்திப்படுத்த இன்று, இப்போது, இவ்வளவு பதற்றமாய் ஓடிக்கொண்டிருக்கிறீர்கள்?

======================================================================================================

கோரா பக்கத்திலிருந்து எடுத்த ஒரு புகைப்படம். அந்த இரயில் நிலையத்தைப் பாருங்கள். ரயில் நிலையத்தின் பெயர்ப்பலகை எதுவும் இல்லை. அஸ்பெஸ்டாஸ், கான்கிரீட் கட்டடங்கள் இல்லை. அனாவசிய கடைகளோ தடைகளோ எதுவுமே இல்லை. இயற்கைச் சூழலில் மரங்களுக்கு நடுவே ஒரு நடைமேடை மட்டும். இப்படி ஒரு ரயில் நிலையத்தைக் கண்டால் தினசரி அங்கு சென்று உட்கார்ந்து விட விரும்புகிறது மனம். கண்களை நகர்த்த முடியாமல் பார்க்க வைக்கும் ரம்மியமான இடம் / படம்!

=======================================================================================


=======================================================================================

பொக்கிஷம்

40 களில் இந்தியாவில் அல்லது சென்னையில் பஞ்சம் என்று அறிக! காலம் காட்டும் கண்ணாடி!


"ஏன் லே.. நியாயமா லே இது? என்னை என்ன குடுமி வச்சவன்னு நெனச்சீரோ...?"


"குன்னக்குடி வயலின் கேட்டிருக்கீங்களா?

"கேட்டுப்பார்த்தேன்.. தரமாட்டேன்னுட்டார்" - S V சேகர் ஜோக்!

நல்லவேளை.. முக்கால் இல்லை!

188 கருத்துகள்:

 1. அது சரி. அந்த ரயிலின் கடைசிப் பெட்டியில் மட்டும் ஏன் அந்த பெருக்கல் குறி?
  ஒவ்வொரு பெட்டியின் பின்பக்கமும் இந்தப் பெருக்கல் குறி இருக்குமா, என்ன?

  (உரையாடல் பானியில் கேள்வியையும் அமைத்தால் அழகாகத் தான் இருக்கும் போல)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இருக்காது!  அதுவே கடைசி பெட்டி என அறிய!  கொடியசைக்கும் ஸ்டேஷன் மாஸ்டர் கவலையின்றி இருக்க!

   நீக்கு
  2. அப்போ கடைசிப் பெட்டிக்கென்று ஏதானும் தனித்தன்மைகள் உண்டோ?

   நீக்கு
  3. உண்டு. நிறைய. அதில் ஒன்று brake. இணையத்தில் பாருங்கள்.

   நீக்கு
  4. வாசிப்பவர்களுக்கு சுவாரஸ்யம் ஏற்படுத்தவே துணைக் கேள்விகள்.
   இப்பொழுது அந்தக் கடைசிப் பெட்டி முக்கியப்படுத்தப் பட்டு விட்டது பாருங்கள்.

   நீக்கு
 2. பொசெயின் ஆரம்ப பரபரப்பெல்லாம் புதுக் கல்யாண மோகம் போல ஆகி விட்ட நேரத்தில் நீங்கள் என்னடாவென்றால் சாவகாசமாய்...
  (கணினி ரிப்பேரான பொழுது வியாழன், வியாழனாகவே இல்லை. நல்லவேளை
  .. இருள் நீங்கி பொழுது புலர்ந்த உணர்வு எங்களுக்கு)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி.  இன்னமும் கூட ஒரு நிலைக்கு வரவில்லை.  நேற்றும் கூட இரவு ஒரு அவசரப்பதிவாக வெளியிடப்பட்டதே இன்றைய பதிவு!

   பொன்னியின் செல்வன் பற்றி எழுத எனக்கே வெட்கமாகத்தான் இருந்தது!

   நீக்கு
 3. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்விதமான கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக மலர வேண்டுமென இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 4. மணியன் ஓவியத்தில் அந்த வானதியின் முகத்தில் தான் என்ன களை பார்த்தீர்களா?
  அறியா பருவமடா.. என்று மனம் தன்னாலே
  இசைத்தது உண்மை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அந்த பாவத்தை படத்தில் காணோமே... திமிரு படத்தில் நடித்த நாயகி போன்ற ஒரு பெண் வானதி!

   நீக்கு
  2. திமிரு படத்தில் நடித்த ரீமா சென் / ஷ்ரியா ரெட்டி / கிரண் இவர்களில் யார்?

   நீக்கு
  3. நான் சொல்வது இந்தப் படத்தில் சித்தரிக்கப்பட்டிருப்பது!

   நீக்கு
 5. சுஜாதாவா?.....

  அடப்போங்க.. எபியிலேயே செவ்வாய், சனியில் கூட எழுத்து நடையெல்லாம் உன்னிப்பாய் கவனித்து யார் படிக்கிறார்கள், என் கிறீர்கள்?..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என்ன செய்வது..  ஆப்ஷன்ஸ் அதிகமாகும்போது விசிட்டுகள் ஸம்ப்ரதாயமாகி விடுகின்றன.

   நீக்கு
  2. அது சுஜாதாவின் எழுத்தே அல்ல....ஆனால் ஸ்ரீராம் சொல்லியிருப்பது ஜெ பிரதாபன் எழுதியிருக்கிறாரா அல்லது வேறு யாரோடதும் பகிர்ந்திருக்கிறாரா என்றுதான் நான் அர்த்தப்படுத்திக் கொண்டேன்.

   கீதா

   நீக்கு
  3. சரியாய் சொல்லி இருக்கிறீர்கள் கீதா.
   .

   நீக்கு
 6. நாற்காலியின் கால்களை அடுப்பெரிய உபயோகித்துக் கொண்டார்கள், போலும்!
  ஆ.வி.யின் நகைச்சுவைக்கு மட்டும் எந்தக் காலத்திலும் பஞ்சம் ஏற்படவில்லை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மையிலேயே இப்போது நீங்கள் சொன்ன பிறகுதான் எனக்கு அர்த்தம் புரிந்தது!

   நீக்கு
 7. வாழ்க்கை 

  ஓடிக்கொண்டிருக்கும் இருசக்கர வாகனம்.பின்னோக்கி ஓட முடியாது.மனிதனுக்கு மட்டுமல்ல, உயிரினங்கள் எல்லாவற்றிற்கும். 

  பொன்னியின் செல்வன் விமரிசனம்..... 

  பாவம் எவ்வளவு கஷ்டப்பட்டு இத்தனை பேரை நடிக்க வைத்து எடுத்திருக்கிறார் மணி. பாராட்டவில்லை எனினும் அழ  வைக்காதீங்க.

  மெய்ஞ்ஞானப் புலம்பல்;

   மனிதனின் மதிப்பு மெய்யுடலுடனேயே மறைந்து போகிறது என்றாலும் ஒரு சில மனிதர்களின் நற்செயல் அவர்களை என்றும் நினைவில் நிறுத்துகிறது. இது உண்மை 

  புகைப்படத்தில் உள்ள ரயில் நிலைய பெயரை துளசி சார் கூறுவார். அவர் ஊருக்குப் பக்கத்தில் தான் இந்த நிலையம்..கவிதையை இப்படி போட்டால் நன்றாக இருக்கும்.

  மழை.

  மனம் நிறைந்த அளவு 
  உடல் நனையவில்லை 
  மகிழ்ச்சி. 

  பாட்டுக்குப் பாட்டு. 

  அளவோடு பெய்தால் 
  வளமோடு வாழ்வோம்.
  மனமும் மகிழும் 
  கனிவாயோ மழையே?

  கடி ஜோக்குகள் தற்போது அரிதாகி வருகின்றன.

  Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மணி யானது மனிரத்தினம் அல்லாமல் வேறு யார்? 

   நீக்கு
  2. மனிக்கு மணி தான்  தேவை. அது கிடைத்து விட்டது. 

   நீக்கு
  3. அப்படியா சொல்றீங்க?
   திரைப்படக் கதாசிரியனும்
   டைரக்டரும்
   என்னத்தைக் கண்டான் சொல்லுங்க..
   குதிர்குதிரா நெல்லு விளைஞ்சாலும்
   உழுதவனுக்கு ஆழாக்கு சேருமா சொல்லுங்க..

   நீக்கு
  4. நன்றி ஜெயக்குமார் சந்திரசேகர் சார்

   பொன்னியின் செல்வன் விமர்சனம் இப்போது எழுதுவது மிகவும் தாமதமான விஷயமாக இருப்பதால் பெரிய அளவில் எழுத எதுவும் இல்லை

   ஏற்கனவே எல்லோரும் எழுதிவிட்டார்கள்
   மெய்ஞான புலம்பல் விஷயம் நம்மை எந்த இடத்தில் எந்த நேரத்தில் அடைகிறது என்பதை பொறுத்து இது என்னை அடைந்த நேரம் என்னை மிகவும் பாதித்த ஒன்றாக இருந்தது அதற்கு காரணத்தை வெளியில் சொல்ல பாட்டுக்கு பாட்டு ஓகே

   நீக்கு
  5. ஜெஸி ஸார்! மணி பற்றிய பின்னூட்டத்தைத் தொடர்ந்தீர்கள் என்றால் அது வேறு ஒரு விஷயத்திற்கு கொண்டு போய் விடும். அதற்காகத் தான் 'ஆரானும் அந்த மணி?" சீண்டல்..

   நீக்கு
  6. ராஜஸ்தான்/ம.பி மார்க்கத்திலும் ம.பி/உ.பி மார்க்கத்திலும் இம்மாதிரி ரயில் நிலையங்களை நிறையப் பார்க்கலாம். ராஜஸ்தான்/ம.பி மார்க்கத்தில் "பாதாள்பூர்" என்றொரு ரயில் நிலையம்! சொர்க்கமே தான்.

   நீக்கு
 8. வணக்கம் சகோதரரே

  இன்றைய வியாழன் அவசர பதிவு (அதுவும் எப்போதைய வழக்கத்தைப்போல சொந்த முயற்சியில்) நன்றாக உள்ளது.

  தங்களின் எண்ணமான முதல் பகுதி என் பழைய வயதையும் அதன் இனிமையான காலங்களையும் கண்முன்னே கொண்டு வந்தது. நம் பழைய நினைவுகள் நமக்கென்றுமே சொர்க்கந்தான். ஆனால் வாழ்வில் சரியானபாதை எது? அததது நடந்து கொண்டுதானே உள்ளது. நம் பாதையை வகுத்த இறைவன் அதில் தங்கு தடையின்றி பயணிக்கவும் செய்து விடுகிறானே..! .ஆனால், எந்த வயதிலும் நம்மோடு பயணிக்கும் யாரையுமே நம்மால் அவர்களின் மனத்தை திருப்திபடுத்த இயலாமல்தான் அடுத்தடுத்த நிலைகளை பற்றி அப்போது எண்ணி யோசித்திருக்கிறோமோ எனவும் எனக்குத் தோன்றுகிறது. . இப்போதும் நிறைய யோசிக்க வைக்கும் தங்களின் எண்ணப்பதிவுக்கு நன்றி.

  கோரா ரம்மியமான புகைப்படம் அருமையாக உள்ளது. ரயில் கடைசி பெட்டியயை பார்க்கும் போது "கிழக்கே போகும் ரயில்"படம் நினைவுக்கு வருகிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எந்த வயதிலும் அடுத்தவர்களை திருப்பதி படுத்த முடியாது. அவர்கள் எதிர்பார்ப்புக்காக அல்ல நம் வாழ்க்கை. அது நம்முடையது. அது சரி, நம் எதிர்பார்ப்பை நம்மால் திருப்பதி படுத்த முடிந்திருக்கிறதா?

   நீக்கு
  2. சின்ன வயசுக்குத் திரும்ப முடிஞ்சால் ஓரிரு தவறுகளைச் சரிப்படுத்திடலாமோ என நினைப்பேன். ஆனால் அந்த வயசுக்குரிய புத்தி தானே அப்போவும் இருக்கும். நாம் திரும்பி வந்திருக்கோம் என்னும் நினைவு இருக்குமா?

   நீக்கு
 9. வாழ்க வளமுடன்
  வாழ்க வையகம்..

  அன்பின் வணக்கம்..

  பதிலளிநீக்கு
 10. அடப்போங்கப்பா..
  நீங்களும் உங்க
  பொ செல்வனும்!..

  பதிலளிநீக்கு
 11. கவிதையின் உல்டா:

  மழையில்
  உடை நனைந்த அளவு
  மகிழ்ச்சியில்
  .....................

  (பூர்த்தி செய்ய யாராவது
  உதவுங்களேன், ப்ளீஸ்..)

  பதிலளிநீக்கு
 12. கருத்துரைகளுக்கு நன்றி..

  உப்பில்லாத ரசம்..

  நன்றி மீண்டும் வருக..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் துரை செல்வராஜ் சகோதரரே

   கருத்துரைகளை படித்து வலும் போது, என்ன பதில் இது..? இது எதற்கான பதில் என சற்று குழம்பினேன். கீழே தெளிவாக எடுத்து குறிப்பிட்டமைக்கு நன்றி. அதே போல் தன் நிலையை அதை தெளிவாக்கும் (சற்றே குழம்பியிருக்கும் ரசத்தை தெளிய வைத்து தந்த தெளிவான ரசம் மாதிரி) வண்ணம் குறிப்பிட்ட சகோதரர் கௌதமன் அவர்களுக்கும் நன்றி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   நீக்கு
  2. மனதில் ஏமாற்றம் வந்திருக்கும்தான். மன்னிக்கவும். ஆனால் சமயங்களில் நம் சொந்த நிலை இந்நிலையில் இருந்தாலும் வந்தவர்களை மதித்து ஒரு பதிலாவது சொல்லிவிட வேண்டும் என்கிற எண்ணமும் உண்டு.

   நீக்கு
 13. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
  இறைவன் அருளில் எல்லோரும் நலமாக இருக்க வேண்டும்.

  ஸ்ரீராமின் 12,15,18 வயது நினைவுகள் நம்மையும்
  அந்தக் காலத்துக்கு அழைத்து செல்கிறது.
  இன்னும் விவரமாகப் படிக்க ஆசை.


  அந்தக் கால விகடன் ஜோக்குகள் அனைத்துமே சூப்பர்.
  விறகுப் பஞ்சமா!!! ஆஹா.

  மீல்ஸுக்கு அரை டிக்கட் முழு டிக்கட்? பிரமாதம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மையிலேயே child meals என்ற அரை டிக்கெட் சில உணவகங்களில் உண்டு.

   நீக்கு
  2. வாங்க வல்லிம்மா... இன்னும் விவரமாக படிக்க ஆசை என்பதைவிட இன்னும் விவரமாக எண்ணிப்ப்ர்க்க ஆசை என்று சொல்லலாமா? அவரவர்கள் அனுபவம்!


   அரை மீல்ஸ் நானும் கேள்விப்பட்ட நினைவு JC ஸார்.

   நீக்கு
  3. இந்தியாவில் பரவலாக இருப்பதாய்த் தெரியலை, குழந்தைகளுக்கு என நம் உணவில் இருந்து தான் கொடுக்க வேண்டி இருக்கு.

   நீக்கு
 14. "ஏன்லே...நியாயமா லே. "

  யார் அந்த திருநெல்வேலிக்காரர்?.

  அறிய ஆவல்.

  பதிலளிநீக்கு
 15. Quora Train படம் மனசில் பதிகிறது. அந்தக் கால ரயில் பயணங்கள்
  சுகமானவை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //அந்தக் கால ரயில் பயணங்கள்//

   அது தனி அனுபவம். இந்த மாதிரி ரயில் நிலையம் சுகானுபவம்!

   நீக்கு
 16. "ஏன் பிடில் தான் வாசிக்கறாரு..."

  'ஓ.. நான் வயலின் வாசிக்கறாரோன்னு நெனைச்சேன்.."

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பாலமுரளி வயோலா என்று ஒன்று வாசிப்பார் தெரியுமோ?!!

   நீக்கு
  2. அப்பு வயோலா கத்துண்டு இருக்கா நிகழ்ச்சிகள். கொடுத்திருக்கா.

   நீக்கு
 17. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
 18. குழந்தை பருவம்தான் கவலை இல்லா பருவம் என்பார்கள், ஆனால் குழந்தைகளுக்கும் தன்னை கவனிக்க வேண்டும், தன்னுடன் பொழுதுகளை அம்மா, அப்பா, சுற்றம் செலவிட வேண்டும் என்று நினைக்கும்.

  //எந்த வயதிலும் நம்மோடு பயணிக்கும் யாரையுமே நம்மால் அவர்களின் மனத்தை திருப்திபடுத்த இயலாமல்தான் அடுத்தடுத்த நிலைகளை பற்றி அப்போது எண்ணி யோசித்திருக்கிறோமோ எனவும் எனக்குத் தோன்றுகிறது. . //

  கமலா அவர்கள் சொன்னதுதான் நிஜம்.
  நீங்கள் சொன்ன பருவங்களில் பள்ளி பருவம் தான் துள்ளி விளையாடி மகிழ்ந்த காலங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அறிவுள்ளவர்கள் நிறைந்த சபையில், அறிவை ஒரளவு கற்று தேர்ந்து விட எண்ணி ஒதுங்கியிருக்கும் நானும் எனக்கு தோன்றியவற்றை ஏதோ கருத்தாக தந்துள்ளேன். அதையும் படித்து நீங்களும் குறிப்பிடமைக்கு மிகவும் நன்றி சகோதரி. 🙏.

   நீக்கு
  2. குழந்தைகளுக்கு தன்னை கவனிக்க வேண்டும் என்கிற எண்ணம் இருக்கும்தான். நான் அதற்கொரு வாட்சாப் வீடியோ வைத்திருக்கிறேன். பார்க்கவே கண்கள் கலங்கும். அந்தத் தாயின் மேல் கோபம் வரும்!

   நீக்கு
  3. //அறிவுள்ளவர்கள் நிறைந்த சபையில், அறிவை ஒரளவு கற்று தேர்ந்து விட எண்ணி ஒதுங்கியிருக்கும் நானும் எனக்கு தோன்றியவற்றை//

   ஆம் கமலா அக்கா.. நானும் உங்களை போலதான். நான் எழுதுவதையும் அனைவரும் ரசிப்பது போல மகிழ்விக்கிறீர்கள்.

   நீக்கு
 19. முதல் பகுதி எனது ஆரம்ப கால பதிவுகளை நினைவூட்டியது... (மனிதனின் மகிழ்ச்சிக்குத் தேவையான மூன்று முத்துகள் என்ன...? + இதே வாழ்க்கை தான் வாழ்வீர்களா...?)

  பொ.செ :- பார்க்க வேண்டும் என்ற எண்ணம் ஏனோ தோன்றவில்லை...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதோ இன்னும் சில நாட்களில் அமேசானில் வந்து விடும். பார்த்து விடலாம். அங்காவது சத்தம் குறைவாய் இருக்கவேண்டும்!

   நீக்கு
 20. மணியம் அவர்களின் ஓவியம் பகிர்வு அருமை.
  விமர்சனம் எல்லாம் படித்து படம் பார்க்கும் ஆசை இல்லை. தொலைகாட்சியில் வந்தால் பார்த்து கொள்ளலாம்.
  மழை-கவிதை, நகைச்சுவை துணுக்குகள், ரயில் படம் அனைத்தும் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி கோமதி அக்கா. இன்னும் சில நாட்களில் அமேசானில் வருகிறதாம் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன்.

   நீக்கு
 21. ஸ்ரீராம், முதல் பகுதி செம - சமீபத்துல வீடு மாறியப்ப ப்ழைய ஃபோட்டோஸ் எல்லாம் அடுக்கினப்ப இப்படித்தான் நிறைய தோன்றியது. ஆனா பாருங்க சின்ன வயசு சந்தோஷம் எங்கிறோம்...ஆனால் அப்போதைய பிரச்சனைகள் நமக்குப் பயமுறுத்தியிருக்கும்தான்....இப்போதைய பிரச்சனைகள் அதைவிடப் பெரிசு என்பதால் இப்படித் தோன்றுகிறதோ என்னவோ....

  அதானே டைம் மெஷின்ல போய் கொஞ்சம் அதை மீண்டும் அனுபவிச்சுட்டு வரலாமோ? அது சரி இப்ப நமக்கு, "அட அப்ப இப்படி செய்திருக்கலாமோ அப்படிச் செய்திருக்கலாமோ எனும் லாமோஸ் விட்ட குறை தொட்ட குறை எல்லாம் மீண்டும் டைம் மெஷினில் போனால் தீர்த்துக் கொண்டு வர முடியுமா??!!!!

  இப்பகுதியை ரசித்து வாசித்தேன்.....இதுல எனக்கு ரொம்ப சின்ன வயசும் அதாவது இலங்கையில் இருந்த வயதும், கல்லூரி வயதும் மட்டும் போய் அனுபவிக்க ஆசை....எத்தனை போட்டிகள் எத்தனை பரிசுகள், வாய் கிழிய பேசித் தீர்த்திருக்கிறேன் மேடைகளில்....இப்ப பாரதி பாஸ்கரைப் பார்க்கறப்ப ரொம்பத் தோன்றும்....

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கீதா.. உங்களுக்கும் தோன்றி இருக்கிறதா? சின்ன வயது பிரச்னைகள் இப்போது சின்னவையாய் தோன்றினாலும் அப்போது அவை பெருசுதான்!


   எல்லா வயதிலும் எல்லா அனுபவங்களும் இருக்கும். சின்ன வயதுக்கு போனதும் சட்டென முப்பது வயசுக்கு போயிட்டா பரவால்லே என தோன்றுமோ!

   நீக்கு
  2. //எத்தனை போட்டிகள் எத்தனை பரிசுகள்,// பாராட்டுகள் கீதா ரங்கன்(க்கா)... குடும்பத்திற்காகக் கொடுத்த விலை என்றுதான் இப்போது இருக்கும் நிலையை நினைத்துக்கொள்ளணும். இப்போதுமே நீங்கள் நிறைய திறமைகளைக் காட்டுகிறீர்கள், சமைப்பதில், மற்ற பார்ட் டைம் வேலைகளை எடுத்துக்கொள்வதில் என்று..

   நீக்கு
  3. ஹாஹாஹா நெல்லை நன்றியோ நன்றி.....கொடுத்த விலை..ம்ம்ம் அது அப்போதைய சூழல்...என் எண்ணங்களே வேறாக இருந்தன. இப்போது அபப்டி ஒன்றும் திறமை இல்லை நெல்லை....பதிவு நல்லா எழுதணும் என்று நினைக்கிறேன் முடியவில்லை..அதுவும் சமீபகாலமாக....கதைகள் பாதில இருக்கு...சமையல் குறிப்புகள் படங்களோடு இருக்கின்றன எழுதலை...

   என் பிறந்த வீட்டில் என்னை எல்லாரும் "கற்பனைலதான் இருப்பா" என்று சொல்வதுண்டு. கதை, கவிதை, கட்டுரை என்று இருந்த காலம்....இப்போது இரு நாள் முன்னர் கூட ஒரு தங்கை என்னிடம் அடுத்த நவராத்திரிக்கு நல்ல பேக் டிராப் டிசைன் ஒண்ணு செஞ்சு குடு என்று கேட்டாள். செஞ்சு கொடுக்க மனம் ஒத்துழைக்குமா என்று தெரியலை...ஸோ நான் ஐடியா தரேன்னு சொல்லிருக்கிறேன்.

   அது சரி நான் சமைப்பதில் திறமைன்னு இப்படிச் சாப்பிட்டுப் பார்க்காம எல்லாம் சொல்லக் கூடாதாக்கும்!!!! ஹாஹாஹாஹா

   கீதா

   நீக்கு
 22. //யாரைத் திருப்திப் படுத்த இந்த ஓட்டம்?// இந்தக் கேள்வியே தவறு. திருமணம் என்ற உறவை நாம் விரும்பி ஏற்கிறோம். எதுவும் வெறும்ன வராது. கூடவே அதற்குரிய கடமைகளையும் கூட்டிக்கொண்டுவரும். நாம் செய்த திருமணம், நாம் பெற்ற குழந்தைகள் என்று அவர்களுக்காக நாம் செய்யவேண்டிய கடமைக்காக ஓடுகிறோம். பொருள் தேடணும். வேலைக்குச் செல்கிறோம். சம்பளம் தொடர்ந்து வரணும், கடுமையாக, சில நேரங்களில் நம் சுகதுக்கத்தை மறந்து உழைக்கிறோம்... எல்லாமே நாம் ஏற்றுக்கொண்ட, குடும்பம் என்ற பொறுப்புக்காக. காலம் முழுவதும் உழைக்கவேண்டி வந்துவிடெ் கூடாதே என்று, அவர்களை ஒரு பொறுப்புக்கு வரப் பாடுபடுகிறோம். அனைவரும் நம்மை மறப்பர். உண்மைதான். எல்லோரும் நினைவில், குறைந்தபட்சம் இந்த ஆசாமி யார் என்று தெரிந்துகொள்ளவேண்டும் என்றால், திருமணம் செய்துகொள்ளாமல், சம்பாதித்து, அதனை ஊர் நலனுக்குச் செலவிடலாம். அப்போதும் நம்மைப்பற்றிய நினைவு குறுகிய காலம்தான்.

  அதனால நாம ஏதோ தியாகம் செய்வது மாதிரியும், கஷ்டப்பட்டு உழைக்கிற மாதிரியும், ஏதோ செயற்கரிய செயலைச் செய்துகொண்டிருப்பதுபோலவும் எண்ணி, நமக்குக் கல்வெட்டு வைப்பாங்க, காலம் பூராவும் கண்ணீர் வடிப்பாங்க என்றெல்லாம் கனவு காணுதல் வீண். ஆள் போயாச்சுனா, அவன்/அவள் பெரியதாக எண்ணிய எல்லாப் பொருளும் போம். உபயோகித்த போற்றிப் பாதுகாத்த எல்லாம் போம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //திருமணம் என்ற உறவை நாம் விரும்பி ஏற்கிறோம். //

   அப்படியா? எல்லோருமா?


   வாழ்க்கையை வாழ்கிறோம். அனுபவிக்கிறோமா? தியாகம் செய்வது போல எல்லாம் சொல்வதில்லை. ஆனால் ஒரு ஜீவன் மனதிலாவது நிலைத்து இருக்கவேண்டும்.

   நீக்கு
  2. //திருமணம் என்ற உறவை நாம் விரும்பி ஏற்கிறோம். //

   இல்லை. எல்லோரும் கிடையாது. ஒரு சிலர் இல்லை என்ற கணக்கில் நானும் உண்டு. என் எண்ணங்களே வேறாக இருந்தன. காலையில் விட்டுப்போன ஒன்று

   //வாழ்க்கையை வாழ்கிறோம். அனுபவிக்கிறோமா? //

   ஹைஃபைவ் ஸ்ரீராம் நான் இதை அடிக்கடி சொல்வதுண்டு.

   // ஆனால் ஒரு ஜீவன் மனதிலாவது நிலைத்து இருக்கவேண்டும்.//

   டிட்டோ...(பேராசையோ!!!!)

   கீதா

   நீக்கு
  3. ஹா..  ஹா..  ஹா...   ஸேம் பின்ச்!

   நீக்கு
 23. என்னவோ தெரியவில்லை பொ செ பார்க்கத் தோன்றவில்லை....இசை பிடிக்கவில்லை முதல் பாயின்ட்....அடுத்து வானதி பூங்குழலி, முக்கியமா ஆழ்வார்க்கடியான் சரியா காட்டப்படவில்லை என்று தெரிந்ததும் ஆசை போய்விட்டது.....ஸ்ரீராம்

  மணிரத்தினத்தின் டைரக்ஷன் திறமை முன்னே நிற்கிறது என்பது தெரிகிறது.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நாவலை வாசிப்பவர்கள் மனதில் கனவு விரியும். அதனை யாராலும் காட்சிப்படுத்த இயலாது. ஐம்பது சதம் திருப்திப்படுத்த முடிந்தாலே போதும். தமிழக வசூல் 200 கோடி அதைத்தான் காண்பிக்கிறது. இது கல்கி, மணிரத்னம் வெற்றி

   நீக்கு
  2. /அதனால நாம ஏதோ தியாகம் செய்வது மாதிரியும், கஷ்டப்பட்டு உழைக்கிற மாதிரியும், ஏதோ செயற்கரிய செயலைச் செய்துகொண்டிருப்பதுபோலவும் எண்ணி, நமக்குக் கல்வெட்டு வைப்பாங்க, காலம் பூராவும் கண்ணீர் வடிப்பாங்க என்றெல்லாம் கனவு காணுதல் வீண். ஆள் போயாச்சுனா, அவன்/அவள் பெரியதாக எண்ணிய எல்லாப் பொருளும் போம். உபயோகித்த போற்றிப் பாதுகாத்த எல்லாம் போம்./

   இவ்வுலகில் பிறந்த ஒரு மனித வாழ்வின் வாழும்/வாழ்ந்த பலன்களை அருமையாக சொல்லியிருக்கிறீர்கள் நெல்லைத் தமிழர் சகோதரரே. பாராட்டுக்கள்.

   நீக்கு
  3. ஆமாம் நெல்லை....படம் வெற்றிதான்....கல்கியின் வர்ணனைகளையோ நம் மனதில் இருப்பதையோ காட்சிப்படுத்த முடியாதுதான்....ஜெயராம் மிகச் சிறந்த நடிகர்தான்...ஆனால் ஆழ்வார்க்கடியான் பாத்திரம் அந்த ஹைட்...ஆழ்வார்க்கடியான் என்றாலே எனக்கு எங்கள் நண்பர் ஆவிதான் நினைவுக்கு வருவார் ரொம்ப ஆப்ட்டாக இருப்பார்......வானதி பூங்குழலி, ஆழ்வார்க்கடியான் அதைக் கூட விட்டுடலாம் ஆனால் பாடல்கள் மனதில் ஒட்டவில்லை...

   கீதா

   நீக்கு
  4. //அருமையாக சொல்லியிருக்கிறீர்கள் பாராட்டுக்கள்.// கமலா ஹரிஹரன் மேடம்..நன்றி... என்னைக்காவது, எதையாவது சாப்பிடும்போது, என் அம்மா மிக்சி, கேஸ் அடுப்பு இல்லாமல், வெறும் குமுட்டி அடுப்பிலேயே இதைச் செய்துதருவா பாரு...அவ்வளவு ருசி..என்று அம்மாவை நினைத்துக்கொள்வோமே...அதுதான் பலன். அப்பாவைப்பற்றி என்ன நினைப்போம்? ஏதேனும் ஒண்ணுன்னா, ஆலோசிக்க முடியாமல் போய்ச்சேர்ந்துவிட்டாரே என்றுதான்.

   நீக்கு
  5. அப்பாவைப் பற்றி நினைக்க ஒன்றுமில்லையா நெல்லை?

   நீக்கு
 24. ஶ்ரீராம் யோசிக்காத்து, திரும்பவும் புத்தகங்கள் படித்து எக்சாம் எழுதி, ரிசல்ட் வர வரைக்கும் நகத்தைக் கடிக்கணுமே, அப்பாவின் உதையிலிருந்து தப்பணுமே என்பதை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹாஹா நெல்லை நானும் பள்ளி கல்லூரினு கருத்தில் சொல்லியிருக்கிறேன் யாரு மார்க் எக்ஸாம் எலலம் நினைச்சுப் பார்த்தா....பள்ளி கல்லூரினாலே எனக்கு நினைவுக்கு வருவது என் எக்ஸ்ட்ரா கரிக்குலர் தான். பேச்சு, கட்டுரை, நாடகம், பாட்டு, கவிதை, பெரிய நட்பு வட்டம் என்று (வீட்டுல இது பத்தி பேச முடியாது பள்ளி கல்லூரி போறப்ப அப்படிப் மத்தது எல்லாம் மறந்து ) இருந்த காலம்...எத்தனை சான்றிதழ்கள் வாங்கியிருந்திருக்கேன்னு இப்பவும் சமீபத்துல வீடு மாறினப்ப எடுத்துப் பார்த்து.....

   கீதா

   நீக்கு
  2. ஹா.. ஹா.. ஹா... பரீட்சை பற்றி எல்லாம் எங்கே யோசிக்கிறோம்? ஆனால் நானும் 18 அல்லது 25 தானே சொல்லி இருக்கிறேன்!

   நீக்கு
 25. //பொ செ பார்க்கத் தோன்ற வில்லை..இசை பிடிக்க வில்லை முதல் பாயின்ட்.. அடுத்து வானதி பூங்குழலி, முக்கியமா ஆழ்வார்க்கடியான் சரியா காட்டப்படவில்லை என்று தெரிந்ததும் ஆசை போய் விட்டது...ஸ்ரீராம்.. //

  நல்லவேளை.. கல்கி அப்பொழுதே போய் விட்டார்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இல்லை.. வில்லை வளைக்க முயன்றிருக்கிறாரே எனப் பெருமிதம் அடைந்திருப்பார். உதே படத்தை 40 வருடங்கள் முன்பு பல பாகங்களாக எடுத்திருந்தால், கல்கி பக்கம் நெருங்கியிருக்கலாம். கல்கி காட்டிய அந்த உணர்வை ரசிக்கும் ஆடியன்ஸ் இப்போது சொல்பம்.

   நீக்கு
  2. நான் சொல்ல நினைத்தேன்...நெல்லை நீங்க சொல்லிட்டீங்க....அதே..அப்போவே எடுத்திருந்தா அதுவும் பல பாகங்களாக எடுத்தால் மட்டுமே கொஞ்சமேனும் ஜஸ்டிஃபை பண்ண முடியும்

   கீதா

   நீக்கு
  3. என்ன குறை சொன்னாலும் படத்தை ஓரளவுக்காவது ரசிக்க முடிகிறது துரை செல்வராஜூ ஸார். ஒரேயடியாக குறை சொல்ல முடியாது. எந்த ஒரு புத்தகமாக வந்த நாவலையும் படமாக எடுத்தால் அத்தனை பெரும் ஏற்றுக் கொள்வார்கள் என்று சொல்ல முடியாது. விதிவிலக்கு சில நேரங்களில் சில மனிதர்கள். அதை ஜெயகாந்தனே எடுத்தார்.

   நீக்கு
 26. மெஇழ்ச்சியில் நனைந்த அளவு, உடல் நனையவிடவில்லை. என்றிருந்தால் சரியாக இருக்குமோ? மழை எனக்குக் கொடுக்கும் மகிழ்ச்சி அலாதியானது. நடுவீட்டில் முற்றம் வைத்துக் கட்டப்பட்ட வீடுகளைச் சமீபத்தில் கிராமத்தில் பார்த்து மகிழ்வுற்றேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம். அதேதான். மழையைப் பார்த்ததும் வரும் மகிழ்ச்சி மனதில் நிறைகிறது. உடல் நனைய தடைகள் இருக்கின்றன. உடம்பு சரியில்லாமல் போகலாம். அல்லது மழையைப் பார்த்த மகிழ்ச்சியைக் காட்டிலும் இது பெரிதல்ல என்று தோன்றலாம்.

   நீக்கு
 27. இரண்டாவது பகுதி - செம....அருமை. அதுவும் கடைசி வரிகள் நச்! அதானே எதற்காக ஓடிக் கொண்டிருக்கிறோம்...நமக்காக நாம் வாழாமல்??!!!

  ஸ்‌ரீராம் உங்களுக்கு நினைவிருக்கா? முன்பு ஒரு வியாழன் பதிவில் நீங்கள் ஒரு விஷயம் எழுதி பகிர்ந்திருந்தீங்க....கவிதையாக என்று நினைவு அல்லது சிறு பகுதியாகவோ....தன் அம்மாவின்? மரணத்திற்கு வரும் ஒரு குடும்பம் காரில் பயணித்த போது வழியில் இறங்கி ஹோட்டலில் சாப்பிட்டு என்று ஒன்று நீங்கள் சொல்லியிருந்த நினைவு

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவருக்கு நினைவில் இருக்கின்றதோ.. இல்லையோ..

   எனக்கு நினைவு இருக்கின்றது.. அதைத் தொடர்ந்து அதற்கான கதையை இரண்டு பகுதிகளாக எழுதியது..

   அதனை அடுத்தடுத்து வெளியிட்டு, எபி - சிறப்பித்ததும் நினைவில் இருக்கின்றது..

   நீக்கு
  2. ஆமா துரை அண்ணா நீங்கள் எழுதியது எனக்கு நன்றாக நினைவில் உள்ளது. அதைத் தொடர்ந்து நான் எழுதிய க்தையும் வந்தது எபியில்....

   கீதா

   நீக்கு
  3. ஆம் கீதா. உங்களுக்கு இருநூறு மார்க்! எனக்கும் இதைப் படித்ததும் அதேதான் நினைவுக்கு வந்தது. அது மட்டுமல்லாமல் திருமூலரின் நீரினில் மூழ்கி நினைப்பொழிந்தாரேயும்!

   நீக்கு
  4. ஆம் துரை அண்ணா... எனக்கும் நினைவிருக்கிறது.

   நீக்கு
  5. அதனுடன் நான் எழுதிய இன்னொரு கவிதையும் ( அழுது கொண்டிருந்த
   அனைவரும் ) நினைவுக்கு வந்தது. அதைச் சொல்ல மறந்து விட்டேன்.

   நீக்கு
 28. //டைரக்ஷன் திறமை முன்னே நிற்கிறது என்பது தெரிகிறது.//

  நாவலில் ஆழ்ந்தவர்களுக்கு இது சரியில்லை என்று மனதில் தோன்றும் போது

  டைரக்ஷன் திறமை என்ன டைரக்ஷன்?..

  நான் தப்பித்தேனடா வந்தியத்தேவா!..

  சுந்தர சோழரின் மகள் குந்தவை நாச்சியாருக்கு அன்பின் வணக்கம்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்கள் இவர்களை - இவற்றை - மறந்து விட்டு சம்பந்தமில்லாத ஒரு சரித்திரப்படத்தைப் பார்ப்பது போல பாருங்கள் துரை அண்ணா... ரசிக்கலாம். தஞ்சையில் எந்தத் தியேட்டர்?

   நீக்கு
 29. நீங்களே வியக்கும் வேகத்தில் இந்த உலகத்தால் நீங்கள் மறக்கப்படுவீர்கள். இதற்கிடையில் உங்கள் முதல் வருடத் திதி கொடுத்தல் மட்டும் மிகச்சிரத்தையாக நடக்கும்.//

  அதே அதே....

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அடுத்தடுத்த வருடம் அனாதை ஆஸ்ரமங்களிலும், ஐநூறு ரூபாய் வாழைக்காய் பருப்பிலும் கடக்கப்படுவீர்கள்!

   நீக்கு
 30. மனசாட்சியை ஓரங்கட்டி விட்டு நமக்கு நாமே - பலே பாடிக் கொள்ள வேண்டியது தான்..

  பதிலளிநீக்கு
 31. எந்த ஒன்றை ஒதுக்க நினைக்கின்றோமோ அந்த ஒன்றே எதிரில் வந்து நிற்கும்..

  மானாவின் செல்வன் - என்ன கொடுமையடா இது!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இப்போது எங்கே வந்து நின்றது?

   ஒன்று தெரியுமா? இந்தப் படம் வெளிவருகிறது என்று தெரிந்த உடன் பொன்னியின் செல்வன் புத்தகங்கள் இன்னும் வேகமாக விற்கத்தொடங்கின. அது என்ன கதை என்று பலரும் தெருந்து கொல்லப் பறந்தனர். யு டியூபில் கதைகள் தேடித்தேடி கேட்கப்பட்டன. எங்கள் மாமாக்கள் பால்ய நண்பர் பாம்பே கண்ணன் ஒரு டிவிடி போட்டிருந்தார் - பொன்னியின் செல்வன் பற்றி... அது இப்போது அப்படியே டபுள் மடங்காக விலை ஏற்றி சொல்லி இருக்கிறார். (இதை நான் ஆரம்பத்திலேயே ஒன்று வாங்கி வைத்திருக்கிறேன். நம் பிளாக்கர் அநன்யாதான் அதில் குந்தவைக்கு குரல் கொடுத்திருப்பார்)

   நீக்கு
 32. கல்கியைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் பொழுதுபோக்காகப் பார்க்கலாம்
  உண்மை
  அருமை

  பதிலளிநீக்கு
 33. ஆஹா நம்ம கேரளா ஸ்டேஷன் படம். மலப்புரம் பக்கம். நிலம்பூர் பக்கம் போகும் போதே இப்படித்தான் இருக்கும். ஷோரனூர் லருந்து கண்ணூர் அப்படிச் செல்லும் போது...கரெக்ட்டா ஸ்டேஷன் தெரில...செருகராவா, மேலட்டூரா என்று மேலட்டூரும் இப்படி பச்சையின் காட்டின் நடுவில்தான் இருக்கும்....

  துளசி இருக்கும் பகுதி. அவர் பார்த்து கருத்து சொன்னா இது என்ன ஸ்டேஷன் என்று சொல்லுவார் என்று நினைக்கிறேன்.

  கீதா

  பதிலளிநீக்கு
 34. //ஆள் போயாச்சுனா, அவன்/அவள் பெரியதாக எண்ணிய எல்லாப் பொருளும் போம். உபயோகித்த போற்றிப் பாதுகாத்த எல்லாம் போம்..//

  இதற்காகத் தான் நெல்லை அவர்களே ...

  பட்டினத்தார் பாடுகின்றார்.. -

  வித்தாரமும் கடம்பும் வேண்டா மட நெஞ்சே..
  செத்தாரைப் போலத் திரி...

  - என்று..

  பதிலளிநீக்கு
 35. ஷோரனூர் லிருந்து நிலம்பூர் (துளசியின் இருப்பிடம்) வழி முழுவதும் அஅவ்வளவு அழகாக இருக்கும்....அதன் பின் காசரகோடு மங்களூர், கோவா போகும் வரையிலும் காட்சிகள் சொல்லி முடியாது....அவ்வளவு...அப்பகுதி கேரள எல்லைக்குள் இடையிடையே இப்படித்தான் அழகான ஸ்டேஷன்கள் வரும்....கடைகள் எதுவும் இருக்காது சின்ன ஸ்டேஷன் மனித நடமாட்டம் இருக்காது....பச்சைக்கொடி காட்டும் ஸ்டேஷன் மாஸ்டர் மட்டுமே...அமைதியான அமைதி....எனக்கு மிகவும் பிடித்த பயணப்பகுதி. ஒரு முறை நானும் மகனும் துளசி வீட்டிற்குச் சென்ற போது ஷோரனூரிலிருந்து ரயிலில் சென்றோம். அப்போது எடுத்த படங்கள் வலைப்பக்கத்தில் பகிர்ந்தேனா என்று நினைவில்லை பார்க்கிறேன் இல்லை என்றால் எக்ஸ்டர்னல் ஹார்ட் டிஸ்கில் இருந்து அது ஒத்துழைக்கும் போது எடுக்க வேண்டும்...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா.. சொல்லும்போதே அல்லது படிக்கும்போதே காட்சி கண்களில் விரிகிறது.

   நீக்கு
 36. //கல்கியைப் பற்றி எல்லாம் கவலைப் படாமல் பொழுது போக்காகப் பார்க்கலாம்
  உண்மை
  அருமை//

  அதுதானே..

  கல்கி இந்த நாவலை எழுதி இருக்காவிட்டால் இவர்களுக்கு எப்படி இவ்வளவு பெரிய டப்பு கிடைத்திருக்கும்?..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதுதான் மூலக்கதை கல்கி என்று டைட்டிலில் போட்டிருக்கிறார்கள்.... ஆமாம், கல்கி கல்கி என்கிறீர்களே.. யார் அவர்?

   நீக்கு
 37. மழை 1 - கவிதை சூர்ப்பர்....

  மழை 2 அடுத்த பகுதியில் வருமோ!!!

  கீதா

  பதிலளிநீக்கு
 38. பொக்கிஷம் ஓகே...

  ஃபிடில், எஸ் வி சேகர் ஜோக்...கொஞ்சம் ரசிக்க முடிந்தது...

  கீதா

  பதிலளிநீக்கு
 39. //கருத்துரைகளுக்கு நன்றி..//

  நேற்றைய பதிவின் எனது கருத்துகளுக்கு
  எபி அளித்திருந்த பதில் இது..

  அதற்கான பதில் தான் -

  உப்பில்லாத ரசம்..

  மனம் வெறுத்து இருந்தாலும்

  நன்றி மீண்டும் வருக..

  அவ்வளவு தான்..

  குழம்புவதற்கு வேறொன்றும் இல்லை..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மன்னிக்க வேண்டுகிறேன். நேற்று சில நெருக்கடியான சூழ்நிலையில், எங்கள் blog உட்பட எந்த கணினி வேலையும் செய்ய இயலவில்லை. மாலையில் கொஞ்சம் நேரம் கிடைத்தபோது, அவசரம் அவசரமாக எல்லோருக்கும் நன்றி நவிலல் நடத்தினேன். (பதில்கள் பதிவு செய்யப்பட்ட நேரம், இடைவெளி ஆகியவற்றைப் பார்த்தால் 8.33 to 8.45 pm ) இது தெரிந்திருக்கும். நன்றி.

   நீக்கு
  2. ரசமே இல்லாமல் போவதை விட உப்பில்லாத ரசம் மேல்! பத்தியம்!

   :))

   நீக்கு
 40. தங்களது புராணத்தை யோசித்த பிறகு சொல்லுங்கள் ஜி

  ''பொன்னியின் செல்வன்'' இன்னும் அலை ஓயவில்லை போலும். இதோ இப்போது ஜெ.... மரணத்தின் பின்னணி ஓடுகிறது இந்த மக்களுக்கு நல்ல ''அவல்'' கிடைத்துக் கொண்டே இருக்கிறது...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம். ஆம். இது இன்னும் சுவாரஸ்யமான அவலாய் இருக்கிறது. திருக்குறள், மர்மம் நெகிழ்வு, சோகம் என்று தாளித்திருக்கிறார்கள்.

   நீக்கு
 41. வணக்கம் சகோதரரே

  சுஜாதாவின் கடைசி பக்கங்கள் வாழ்வின் நிதர்சனம். இந்த நிதர்சனத்தால்தான் உலகம் இன்னமும் இயங்கி கொண்டிருக்கிறது. மனிதர்களாகிய நாமும் "முடிவின் எல்லை தெரியாத அவன் தந்த பாதை இது" என அதன் முடிவை காணாது, அல்லது கவலை கொள்ளாமல் நடந்து சென்று கொண்டிருக்கிறோம். எந்த இடத்தில், நம் முடிவை (செல்லும் பாதையின் முடிவை) தெரிவிக்க வேண்டுமென்று நம் நிழலாக நம் விதியும் உடன் தொடர்கிறது. கட்டுரையை ரசித்தேன்.

  பொன்னியின் செல்வன் படம் பார்க்க ஆசைப்படுகிறேன். பத்து பதினைந்து வருடங்களாக பொதுவாக எந்த புதுப் படங்களும் பார்த்ததேயில்லை. (அதற்கு முன்பும் அப்படித்தான்.. (டிவியிலும் பார்ப்பதில்லை.) அதுவும் தியேட்டரில் சென்று பார்த்து பல வருடங்கள் ஆகிவிட்டது. பார்க்கலாம்.

  மழைக்கவிதை அருமை. உள்ளம் நிறைந்த மகிழ்ச்சி சில சமயம் உடலுக்கு தெரிவதில்லை. அதனால்தான் அதை "மகிழ்ச்சி வெள்ளம்" என குறிப்பிடுகின்றோமோ..?

  பொக்கிஷ பகிர்வு அனைத்தும் அருமை. படித்து ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //பத்து பதினைந்து வருடங்களாக பொதுவாக எந்த புதுப் படங்களும் பார்த்ததேயில்லை.// - பஹ்ரைன்ல இருந்தபோது, புதுப் படங்களை உடனேயே கஷ்டமில்லாமல் பார்த்துவிட முடியும். பாப்கார்ன்லாம் ரொம்பக் கொள்ளையடிக்க மாட்டாங்க. (500 ரூபாய் பாப்கார்னாம் இங்கு. விளங்குவானா?). நான் எப்போது தியேட்டர் போனாலும், போஸ்டர் படம், தியேட்டரில் ஒரு படம் என்று எடுத்துவிடுவேன்.

   பெங்களூர்ல, என் வீட்டிற்கு அடுத்து இருக்கும் Mallல் படம் பார்ப்பது சுலபமாக இருக்கிறது. 240ரூபாய்க்குள் டிக்கெட் இருந்தால் பார்ப்பேன். பொதுவா வாரநாட்களில் 8-10 மணி காலை ஷோவுக்கு டிக்கெட் விலையும் குறைவுன்னு நினைக்கிறேன்.

   நீக்கு
  2. நானும் நடுவில் தியேட்டருக்குப்போய் பல வருடங்கள் படம் பார்க்காமல் இருந்து அப்புறம் பாஹுபலி பார்த்தேன். அப்புறமும் கூட தியேட்டரில் மூன்று படங்கதான் பார்த்திருக்கிறேன்.

   நீக்கு
 42. ///புது மனைவியுடன் போட்டோவில் சிரித்தபோது///
  ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) பழைய மனைவி எனவும் இருக்கோ:)).. எப்பவும் மனைவிதான் புதுசு பழசு எல்லாம் சொல்லப்பிடாதாக்கும்:))... ஊ.கு: இது அதிரா டிக்‌ஷனரியில் இருந்து ஹா ஹா ஹா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எப்பவும் டிரெஸ்தான். ஆனால் புதுசு பழசுன்னு அதைச் சொல்றோமே.... ஆரம்ப நாட்களில் அவள் என்ன உளறினாலும் ம் கொட்டி ஆர்வமாக் கேட்கிறோமே... அப்புறம் பசங்கள்லாம் வந்தப்பறம், அவள் முக்கியமானதைச் சொன்னாலும், ரொம்ப அசிரத்தையா இருக்கோமே..ஏன்? அந்த புதுசு பழசு வித்தியாசம்தானே

   நீக்கு
  2. ஆனால் அதிரா.. எனக்கு என் பாஸ் இப்பவும் புதுசுதான்! புரிந்து கொள்ளவே முடிவதில்லை!!! ஹிஹிஹி... நெல்லை உங்களுக்கு நல்ல பதில் சொல்லி இருக்கிறார்!

   நீக்கு
  3. //நெல்லைத் தமிழன்20 அக்டோபர், 2022 அன்று பிற்பகல் 4:37
   எப்பவும் டிரெஸ்தான். ஆனால் புதுசு பழசுன்னு அதைச் சொல்றோமே....///

   ஹையோ ஆண்டவா பழனியில வடப்பக்கமிருக்கும் வைரவா... ட்ரெஸ் உம் மனைவியும் ஒன்றென்பதுபோல பேசுறாரே.. என்னால முடியல்ல என்னை ஆராவது தூக்கிப்போய்த் தேம்ல போடுங்கோ பிளீஸ்ஸ்ஸ்ஸ்:)).

   //அப்புறம் பசங்கள்லாம் வந்தப்பறம், அவள் முக்கியமானதைச் சொன்னாலும், ரொம்ப அசிரத்தையா இருக்கோமே..ஏன்? அந்த புதுசு பழசு வித்தியாசம்தானே//

   நெல்லைத்தமிழன் அண்ணாஆஆஆஆஆ.. இப்போ டெலிவாப்புரியுதெனக்கு:)).. பழசானது அண்ணி அல்ல .. அது நீங்கள்தான் ஹா ஹா ஹா...:))

   நீக்கு
  4. //
   ஸ்ரீராம்.20 அக்டோபர், 2022 அன்று பிற்பகல் 5:14
   ஆனால் அதிரா.. எனக்கு என் பாஸ் இப்பவும் புதுசுதான்! புரிந்து கொள்ளவே முடிவதில்லை!!! ஹிஹிஹி..//

   ஸ்ரீராம்.. இன்னும் புதுமாப்பிள்ளை நினைப்பிலேயே இருந்தால் எப்பூடி?:)).. நிதானத்துக்கு வாங்கோ.. ஹா ஹா ஹா

   நீக்கு
  5. பொண்ணு ஓவியம் போலிருந்தா புதுமாப்பிள்ளைக்கு யோகம்தானே..  கமல் தாத்தாவே சொல்லி இருக்கார்..

   நீக்கு
 43. //இப்போது என் பள்ளிப் புகைப்படத்தைப் பார்த்து நான் என்ன நினைப்பது? //

  அட எவ்ளோ யங்கா.. காண்ட்சம் ஆ இருக்கிறேன் அப்போது, என சந்தோசப்படோணுமாக்கும்:)).. அப்போ இப்போ நான் அப்படி இல்லையா எனக் கேய்க்கப்பிடாது:), அது ஸ்ரீராமை நேரில் பார்த்தால்தானே சொல்ல முடியும்...:)))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உருவத்தைப் பற்றி நான் கவலைப்படவில்லை. ஏனெனில் இப்பவும் நான் அதே யங்காகத்தான் இருக்கிறேன்! உள்ளம்தான்!

   நீக்கு
 44. //நான் எனது 15 வயதுக்கு மறுபடி சென்று தொடங்க ஆசைப்படுகிறேன்... ///

  ஹா ஹா ஹா இது பொல்லாத ஆசை, ஹையோ ஆண்டவா எனக்கு இந்த ஆசை எப்பவும் வருவதில்லை, ஆனா அடிக்கடி அந்த வயசுகளையும் அப்போதிருந்த நிகழ்வுகளையும் நினைச்சு மகிழ்ந்து, புல்லரிச்சுப்போவதுண்டு.

  ஏன் தெரியுமோ, நாம் இப்போ எவ்ளோ விசயங்களைக் கடந்து வந்துவிட்டோம், இனித் திரும்ப அந்த வயசுக்குப் போனால், மீண்டும் கஸ்டப்படோணுமே.. எத்தனை எக்ஸ்சாம்ஸ் எழுதோணும் எவ்வளவு கஸ்டப்படோணும்:)).. நான் நினைப்பது, பிள்ளைகள் வளர்ந்து, யுனிக்குப் போனபின்.. அதாவது பள்ளிப்படிப்பை முடிச்சபின்னர், பெற்றோருக்கு ஒரு ரிலாக்ஸ், அவர்களைத் தனியே எங்கும் அனுப்பலாம், விடலாம், நாமும் அவசரப்பட்டு எலாம் வச்சு எழும்பிக் கஸ்டப்படும் வேலை எல்லாம் இல்லை.. மைண்ட் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆக இருக்கும் தருணம் இதுதான் என நினைப்பேன்.

  சத்தியமாக, குழந்தைகளை நேசரிக்குக் கூட்டிப் போகும் பெற்றோரைப் பார்த்து மனதில நினைப்பேன்.. கடவுளே இன்னும் எவ்ளோ காலம் கண் முழிச்சு ஹோம் வேர்க் சொல்லிக் கொடுத்துக் கஸ்டப்படோணுமோ என ஹா ஹா ஹா அதே நேரம் அந்தக் குழந்தையும் இன்னும் எவ்ளோ விசயம் தாண்டி வரோணுமே நம்மைப்ப்போல வர எனவும்...

  அவை எல்லாம் மகிழ்ச்சியான காலங்கள்தான் இருப்பினும் திரும்பவும் அதை செய்வது என்பது நினைக்க கஸ்டம்... ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்சப்பா சொன்னதில களைச்சிட்டேன்:)).

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதிரா என் மகனும் சொல்வான்....அம்மா ப்ளீஸ் ஸ்கூல், காலேஜ் டேய்ஸ் நு நினைவுபடுத்தாதமா,,,போதும் எழுதி எக்ஸாம் எல்லாம்...இப்பத்தான் இங்க வந்தும் கடைசியா ஒரு எக்ஸாம் எழுதி முடிச்சு அதுலருந்து விடுதலைனு....

   கீதா

   நீக்கு
  2. அது ஏன் கஷ்டங்கள் நினைவில் நிற்பது போல மகிழ்ச்சியான தருணங்கள் மனதில் நிற்பதில்லை?

   ஒன்று செய்வோம். திரும்ப அந்தக் காலத்துக்குப் போகும்போது சில செயல்களை எளிதாகக் கடக்க வழி செய்துகொண்டு போவோம்! விரும்பிய இடங்களில் மட்டும் ஸ்டாப்!

   நீக்கு
  3. உண்மைதானே கீதா மகன் சொல்வதும்..

   //, ஸ்ரீராம்///
   கடந்து வந்த பாதையில இருக்கும் மகிழ்ச்சியைப்பற்றி நினைப்பதனாலதானே அவ்வயதுக்கு மீண்டும் போகவேணும் எனும் ஆசை வருது, ஆனா சில விசயத்துக்கு உண்மைதான், நீங்க சொன்னதைப்போல விட்ட தவறுகளைத் திருத்த முடியுமாக இருக்கலாம்:))

   நீக்கு
  4. ஆனால் திருத்த முடிந்தால் வாழ்க்கைப் பாதையே மாறிப்போகுமோ?  சந்தேகம் கேட்கலாம்னா ஸ்டீஃபன் ஹாக்கிங்க்ஸும் செத்துப் போயிட்டார்...!

   நீக்கு
 45. பொன்னியின் செல்வன் பற்றித்தான் எங்கும் பேச்சாக இருக்கிறது, நல்லதோ கெட்டதோ, தலைப்பின் பெயரால் மக்கள் மனதில் இடம்பிடிச்சு, பணமும் உழைச்சுக் கொடுத்துவிட்டது.. வேறென்ன வேண்டும்?:))..
  புத்தகத்தில் இன்னும், முதல் பாகத்திலேயே நான் நிற்பதால், எனக்கு இப்போ படம் பார்க்கும் ஆவல் இல்லை, இப்படித்தான் பாகுபலியையும் பார்க்காமல் இருந்து பின்பு பார்த்து ப் பரவசமாகி ரிவியூ எழுதினேன்.. இதுவும் நெட்பிளிக்ஸ் க்கு வரும்தானே அப்போ பார்க்கலாம் ஹா ஹா ஹா.

  ஆனா, த்ரிஷாவின் நகை செய்ய மட்டும், ஒரு வருடம் எடுத்ததாமே.. இப்படத்துக்கு.. அப்போ நீண்ட கால உழைப்பு என மட்டும் புரியுது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பாதொ அ, உண்மைதான் ரொம்ப நீண்ட கால உழைப்புதான். முழு குழுவுமே ரொம்பவே உழைத்திருக்காங்கதான். அந்த உழைப்பிற்கு இன்னும் கொஞ்சம் பொசெ ஒரிஜினலுக்குப் பக்கத்தில் போயிருக்கலாமே என்றுதான்....ஓட்டப்பந்தயத்திற்காக அவ்வளவு தூரம் ஓடிப் பயிற்சி எல்லாம் எடுத்துவிட்டு இறுதியில் இலக்கைத் தொட கொஞ்சம் பின் வாங்கியது போல!!!

   கீதா

   நீக்கு
  2. உழைப்பு அதிகம்தான். இவ்வளவு கஷ்டப்பட்டால்தான் இப்படி பாராட்டையும் பெறமுடியும்! எதிர்ப்பாளர்களும் ஒருவகையில் படத்துக்கு விளம்பரமாகிறார்கள். முன்னர் கல்கி சிவகாமியின் சபதம் என்று ஒரு அஃதையும் எழுதி இருக்கிறார். கல்கியின் படைப்பை படமாக எடுத்த நினைத்தவர்கள் குழம்பிப்போய் பொன்னியின் செல்வனிலிருந்து செல்வனையும், சிவகாமியின் சபதத்திலிருந்து சிவகாமியையும் எடுத்து படம் எடுத்தார்கள் தெரியுமா?

   நீக்கு
 46. //ஒரு பெரிய ஆலமரத்தின் இலை ஒன்று வாடி உதிர்ந்ததற்கும், நீங்கள் வாழ்ந்து மறைந்ததற்கும் எள்ளளவும் வித்தியாசம் இல்லாதது போல, அத்தனையுமே சுலபமாய், வேகமாய், எந்தச் சலனமுமின்றி நடக்கும்.//

  சத்தியமான உண்மை, சில சமயங்களில் மனித வாழ்வை நினைச்சுப் பார்க்க, பிறந்திருக்கவே கூடாது எனும் எண்ணம் கூட வரும், பிறந்துவிட்டால் வயசாகக்கூடாது, மரணம் வரக்கூடாது, வருத்தம் வரக்கூடாது!!!.. இதை எல்லாம் போய் ஆரிடம் சொல்வது ஹா ஹா ஹா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பிறந்ததால் அல்லவோ இவ்வளவு எண்ணமும் மனதில்... நிறைவேறா வரையில்தான் எண்ணங்களுக்கும் மதிப்பு!

   நீக்கு
 47. ரயில் நிலையம் ரம்மியமாக இருக்கிறது, ஆனால் பயமாக இருக்கிறதே.. ஆர் துணையும் இல்லாமல் அங்கு போக முடியாது போல இருக்குது.. அருகில் குட்டிக் கடைகள் இருப்பது நமக்கு ஒரு பாதுகாப்பு + உதவிதானே...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அடடே... அப்போ அழகில் எப்பவும் ஆபத்திருக்கும் என்பது உண்மைதான் என்று சொல்லுங்கள்!

   நீக்கு
 48. மழைக் கவிதை சிந்தனையை தூண்டுது... ஆனா மனம்தானே அனைத்துக்கும் காரணம், நீங்கள் மாறி எழுதியிருக்கிறீங்கள்:))..

  மழையில் உடல்
  குளிர்ந்த அளவுக்கு,
  மனம் குளிரவில்லை!!! ஆஆஆஆஆஆஆ கவித கவித...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சொல்லலாம். நானும் இதை எழுதியபோது மாற்றியும் சொல்லலாம் என்று எழுதி இருந்தேன்!

   நீக்கு
 49. பொக்கிஷம்//
  முதல் ஜோக் இம்முறை பார்த்ததும் புரிஞ்சுபோச்ச்ச்ச்ச்.. காலகள் விறகுக்கு எடுத்தாச்சு, கடசியும் புரிஞ்சுபோச்சு, இது பெரும்பாலும் படங்களிலும் பார்த்த நினைவு. நடுவார்கள் இரண்டும் புரியவில்லையாக்கும்.. போனால் போகட்டும் இது என்ன புரியாதது எனக்கொன்றும் புதிசில்லையே ஹா ஹா ஹா.. அப்போ நான் வரட்டே...:))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆச்சர்யம். எனக்கு முதல் ஜோக் ஜீவி சார் சொன்னதும்தான் புரிந்தது. டியூப் லைட் நான்!

   நீக்கு
 50. கவிதை எழுதி ஒரு கொமெண்ட் போட்டனே.. காணல்லியே ...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பாக்கிஸ்தான் கவிதை எல்லாம் நாங்க படிக்க மாட்டோம் - கில்லர்ஜி

   நீக்கு
  2. ஹாஹாஹா கில்லர்ஜி நான் கிட்டத்தட்ட இதேதான் சொல்ல வந்தேன் ...

   அதிரா நீங்க பாகிஸ்தானைத் தொட்டதுனால இங்க வரும் முன் கருத்து எல்லாம் பயங்கர செக்யூரிட்டி செக் முடிச்சுதான் வருமாக்கும்...இந்தக் கவிதைல ஏதாவது இருக்கா!!! அதான் பயங்கர செக்யூரிட்டி செக் போல!!!!! ஹாஹாஹாஹாஹா"

   கீதா

   நீக்கு
  3. இருக்கே... மேலே இருக்கே... பதிலும் சொல்லி இருக்கிறேனே...

   நீக்கு
  4. //KILLERGEE Devakottai20 அக்டோபர், 2022 அன்று பிற்பகல் 3:43
   பாக்கிஸ்தான் கவிதை எல்லாம் நாங்க படிக்க மாட்டோம் - கில்லர்ஜி///

   //கீதா..
   //அதிரா நீங்க பாகிஸ்தானைத் தொட்டதுனால இங்க வரும் முன் கருத்து எல்லாம் பயங்கர செக்யூரிட்டி செக் முடிச்சுதான் வருமாக்கும்//

   இம்முறை மோடி அங்கிளைச் சந்திக்க முடியாமல் போயிட்டுது, அவர் சொன்னார் தனக்குக் காய்ச்சல் நீங்கள் சுற்றுலாவுக்கு வந்திருக்கிறீங்கள் அதிரா:), என் காய்ச்சல் உங்களுக்குத் தொத்திட்டால் கஸ்டமெல்லோ.. அதனால அடுத்த முறை சந்திக்கிறேன் என:))..

   அடுத்த முறை ஜந்திப்பில சே..சே.. சந்திப்பில, பாகிஸ்தான் பற்றித்தான் பேசப்போறேனாக்கும்:))

   நீக்கு
  5. அது வரைக்கும் பாகிஸ்தான் இருக்கணுமே...!

   நீக்கு
 51. சிறு வயது காலம்தான் மகிழ்ச்சியான காலம் பட்டாம் பூச்சிபோல பறந்து திரியும் காலம்.

  கோரா மிகவும் அழகு பசுமை சூழ கண்ணுக்கும் மனதுக்கும் நிறைவு.

  ஜோக்ஸ் ரசனை.

  பதிலளிநீக்கு
 52. அழகாக் எல்லோரது மன ஓட்டங்களையும் பகிர்ந்திருக்கிறீர்கள், ஸ்ரீராம்ஜி. பொதுவானவர்களின் ஆசைகளையும் சொல்லி இருக்கிறீர்கள்.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
 53. பொன்னியின் செல்வன் பார்த்தேன். எழுத நினைத்தேன். ஆனால் அதைப் பற்றி பல காணொளிகள், விமர்சனங்கள் வந்துவிட்டதால் எழுதாமல் விட்டுவிட்டேன். படம் ஓகே. எனக்குக் கதை தெரியும் என்பதால் பிரச்சனை இல்லை. ஆனால் என் மனைவிக்கும் மகளுக்கும் புரியவில்லை. நிறைய கதாபாத்திரங்கள் என்று.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இன்னும் ஆதித்த கரிகாலன் கொலையே நிகழவில்லை. இரண்டாம் பாகத்தில் கதை இன்னும் வேகமாகவும் நெருக்கமாகவும் இருக்கும். புதியவர்களுக்கு புரிவது சிரமம்.

   நீக்கு
  2. ஆதித்தகரிகாலன் கொலை பற்றி கல்கி எழுதியதாக நினைவில்லை. அது மர்மமாகவே தான் இருந்தது. ஆனால் தற்போது அதைப் பற்றி ஒவ்வொரு கருத்து நிலவுகிறது என்பது காணொளிகள் சில பார்த்த போது தெரிகிறது.

   ஆமாம் புதியவர்களுக்குப் புரிவது சிரமம் தான்.

   இரண்டாவது பாகம் அடுத்த வருடம் வரப்போவதாகச் சொல்கிறார்கள்.

   துளசிதரன்

   நீக்கு
  3. சங்கத்தாரா மற்றும் அத்திமலைத்தேவன் படித்திருக்கிறீர்களா துளஸிஜி?

   நீக்கு
 54. நமக்கென்று சில கடமைகள் உண்டு. அதைச் செய்து கொண்டே போக வேண்டும்தான். எல்லா மரணங்களுமே சில காலங்களில் மறக்கப்படும்தான்...நம் அம்மா அப்பா உடன் பிறப்புகளை அவ்வப்போது நினைப்பதுண்டுதானே.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
 55. அந்த ரயில் நிலையம் எங்கள் ஊர் பக்கம்தான். ஆனால் இப்போது பல மாற்றங்கள். இது பழைய ஃபோட்டோ என்று நினைக்கிறேன்.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓ... இப்போது இந்த அழகு இருக்காதா?

   நீக்கு
  2. அதிகம் என்று சொல்ல முடியாது. ஆனால் மாற்றங்கள் உண்டுதான். மழைக்காலத்திலும், மழைக்காலம் முடிந்தும் பசுமையாக இருக்கும்.

   துளசிதரன்

   நீக்கு
  3. இயன்றபோது சென்று பார்க்க வேண்டும்!

   நீக்கு
  4. //ஸ்ரீராம்.20 அக்டோபர், 2022 அன்று பிற்பகல் 7:13
   ஓ... இப்போது இந்த அழகு இருக்காதா?//

   அப்போ வயசாகிட்டுதோ:)) நான் ஸ்டேசனைச் சொன்னேன் ஹா ஹா ஹா:))

   நீக்கு
  5. இந்த இடத்தில் நீலாம்பரி ஆண்ட்டி சொல்வதை நினைவுபடுத்த விரும்புகிறேன் அதிரா...!!

   நீக்கு
 56. ரிவர்ஸ் கியரில் செல்ல யாருக்குதான் ஆசை இல்லை? சொல்லிய விதம் அருமை. பள்ளி க்ரூப் ஃபோட்டோ இருந்தால் அதைச் சேர்த்திருக்கலாம்:)!

  பொ.செ 1, தொடரை வாசித்த பலருக்கும் திருப்தி அளிக்கவில்லைதான். ஆதங்கத்தை வெளிப்படுத்தும் அழகான விமர்சனம். மற்றபடி வாசித்திராத எனக்குப் படம் பிடித்திருந்தது:)!

  மழை கவிதை அருமை.

  தொகுப்பு நன்று.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பள்ளி க்ரூப் போட்டோ என்னுடையது இல்லை.  கல்லூரி க்ரூப் போட்டோ தொலைந்து விட்டது!

   நன்றி ராமலக்ஷ்மி.

   நீக்கு
 57. @ ஸ்ரீராம்..

  தஞ்சையில் எந்தத் தியேட்டர்?..

  உண்மையில் தெரியாது!..

  பார்ப்பதற்கு ஆவல் இருந்தால் தானே!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆனால் நீங்கள் எந்தத் திரைப்படமுமே இப்போதெல்லாம் பார்ப்பதில்லை என்றும் நினைக்கிறேன்.  சரிதானே?

   நீக்கு
 58. @ ஸ்ரீராம்..

  எங்கே முடிகிறது!?..

  அது தொடங்கும் போது / இடத்தில் இது முடியும்..

  பதிலளிநீக்கு
 59. @ ஸ்ரீராம்..

  //ஆமாம், கல்கி கல்கி என்கிறீர்களே.. யார் அவர்?..//

  அதானே.. யார் அவர்?..

  பதிலளிநீக்கு
 60. இன்னும் மணியின் செல்வனைப் பார்க்காத நிலையில் நான் எப்படி குறை சொல்ல முடியும்..

  வந்தியத்தேவனோ குந்தவை நாச்சியாரோ கண்ணில் தெரியவில்லை..

  இசை!.. அமைத்தவருக்குத் தான் வலி தெரியும்..

  அருணகிரி நாதர் படப்பிடிப்பின் போது TMS அவர்கள் பெருநோயயாளராக ஒப்பனையுடன் இருந்ததைக் கண்டு படப்பிடிப்பு அரங்கில் இருந்த நடிகை சாரதா மயங்கி விழுந்து விட்டாராம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //வந்தியத்தேவனோ குந்தவை நாச்சியாரோ கண்ணில் தெரியவில்லை..//

   அவர்கள் அதில் இல்லை!

   //இசை!.. அமைத்தவருக்குத் தான் வலி தெரியும்..//

   இல்லை... கேட்பவர்களுக்கும் தெரியும்! காதில்!

   நீக்கு
 61. மழைக் கவிதை வழக்கம் போல் அருமை.

  நகைச்சுவைத் துணுக்குகளில் நாற்காலி புரியவில்லை. மற்றவற்றை ரசித்தேன்.

  அரை டிக்கெட் முழு டிக்கெட் - பெங்களூரில் பை டு என்று சொல்வார்களாம், கேள்விப்பட்டதுண்டு.
  பஸ் என்று நினைத்து அரை டிக்கெட் என்று கேட்கிறார் போலும்! மீல்ஸிலும், டிஃபனிலும் பாதி கொடுப்பார்களோ. அரை டிக்கெட்தான் தற்போது மினி மீல்ஸ், மினி டிஃபன் என்று வந்திருக்கிறாதாக இருக்கலாம்.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி துளஸிஜி. 

   பஞ்சம் என்பதால் நாற்காலியின் காலை எடுத்து அடுப்பெரித்து விட்டார்களாம்!

   நீக்கு
 62. அடுப்பு எரிக்க விறகுக்கு பஞ்சம் வந்தது. பின்னால் மண்ணெண்ணைக்குப் பஞ்சம் வந்த பொழுது மரத்தூளைக் கெட்டித்து அடுப்பெரிக்கும் பழக்கம்
  பழக்கமானது. ஒன்று போய் இன்னொன்று. மனிதன் இது இல்ல்லையே என்று எக்காலத்திலும் சோரவேயில்லை. Necessity is the mother of invention.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான்.  பனிமலையில் சிக்கிக்கொண்ட ஒரு குழுவில் இருந்த சிலபேர் உணவு கிடைக்காதபோது...  

   வேண்டாம் விடுங்கள்!  சம்மந்தமில்லாத விஷயம் ஆரம்பிக்கிறேன்!

   நீக்கு
 63. என் செக் இருக்கிறா தானே.. அதாவது கு.கு அஞ்சு... [உங்கட விருப்பப்படி விரிவாக்கம் செய்யுங்கோ], அவாவுக்கும் திரும்ப கொயந்தையாகிட விருப்பமாம், அப்போ நான் சொன்னேன், சின்ன பட்ட பிரச்சனை, எக்ஸாம் எல்லாம் எடுக்க ரெடியோ எண்டு, உடனே கட்சி மாறிச் சொல்றா, தனக்கு சின்னனில கால் உடைஞ்சதாம், அதனால சின்ன வயசு திரும்ப வேண்டாமாம்.. மறுபடியும் ஆர் கால் வலி எல்லாம் அனுபவிக்கிறதாம்.. ஹையோ ஹையோ..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. // கு.கு அஞ்சு... // = குட்டிக்குட்டி அஞ்சு (உங்களுக்கு செல்லம்தானே?) குறும்புக்குட்டி அஞ்சு சரியா?

   இந்த பயத்தை வைத்துதான் இறைவனின் பிழைப்பு நடக்கிறது!!

   நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!