செவ்வாய், 20 அக்டோபர், 2015

டாக்டர் நோயாளியைக் காப்பாற்றினால் ஃபீஸா? கொன்றால் ஃபீஸா?


சுலப கேஸ்!  அப்பீல் எல்லாம் கிடையாது போலும்!

 
பேராசைக்கார டாக்டர் ஒருவர் இருந்தார்.  வசதி படைத்தவர்களுக்கே வைத்தியம் பார்த்து வந்த அவரிடம் ஹோட்டலில் பணி புரியும் ஒருவன் தன் மனைவியை சிகிச்சைக்கு அழைத்து வந்தான்.  

மருத்துவர் சிகிச்சை அளிக்க முதலில் ஒப்புக் கொள்ளவே இல்லை.  மீண்டும், மீண்டும் கெஞ்சிய அந்தத் தொழிலாளி, "அவளை நீங்கள் பிழைக்க வைத்தாலும் சரி, கொன்றாலும் சரி, உங்களுக்குரிய கட்டணத்தைக் கொடுத்து விடுகிறேன்"  என்று எழுதியே கொடுத்தான்.

                                                                            Image result for smiley images
அதற்குச் சம்மதித்த மருத்துவர் அவளுக்கு வைத்தியம் பார்த்தார்.  பலனில்லை.  அவள் இறந்து விடுகிறாள்.  

மருத்துவர் அந்தத் தொழிலாளிக்கு மீண்டும் மீண்டும் பில் அனுப்பியும் பணம் வந்து சேரவில்லை.


                                                                    Image result for smiley images

வழக்குக் கோர்ட்டுக்குப் போனது.

மருத்துவர் : "எழுதிக் கொடுத்தபடி இவர் எனக்குப் பணம் தரவில்லை"

கோர்ட் :  "அவளை நீங்கள் பிழைக்க வைத்தீர்களா?"

மருத்துவர் : "இல்லை"

கோர்ட் : "அவளை நீங்கள் கொன்றீர்களா?"

மருத்துவர் : (பதைபதைப்புடன்) "இல்லை..இல்லை"

கோர்ட் : "நீங்கள் அவரைக் கொல்லவும் இல்லை, பிழைக்க வைக்கவும் இல்லை.  அவர் எழுதிக் கொடுத்திருக்கும் இரண்டையுமே செய்யவில்லை என்று ஒப்புக்கொள்ளும் நீங்கள் எப்படி அதற்குப் பணம் எதிர்பார்க்கிறீர்கள்?  கேஸைத் தள்ளுபடி செய்கிறோம்"

   
                                                                     Image result for smiley images


பேராசை பெரு நஷ்டம்.  தன் வினை தன்னைச் சுடும்.  முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்..  இதில் எது இந்தச் சம்பவத்துக்குப் பொருத்தம்? 


                                                                           Image result for smiley images


அந்தக் கணவர் செய்தது சரியா?  கோர்ட் சொன்னது சரியா?

 **************************************************************

இதே போல இன்னொரு கதை சமீபத்தில் படித்தேன்.  ஒரு மருத்துவர் காரில் செல்லும் வழியில் அடிபட்டுக் கிடக்கும் ஒருவரைப் பார்க்கிறார்.


அவர் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார்.  அவருக்குத் தேவையான மிகக் காஸ்ட்லி ஊசி ஒன்று மருத்துவரிடம் அப்போது கைவசம் இருக்கிறது. வேறொரு நோயாளிக்காக எடுத்துச் சென்று கொண்டிருக்கிறார்.  

அதை அந்த விபத்தில் சிக்கிய மனிதருக்கு போட்டு விடுகிறார்.  தானாகத்தான் முன்வந்து இதைச் செய்கிறார்.  ஆனால் அந்த மனிதர் இறந்து விடுகிறார்.

இப்போது மருத்துவர் அந்த ஊசிக்கான பணத்தை எதிர்பார்ப்பது நியாயமா?  பாதிக்கப்பட்ட அந்த நோயாளி அல்லது அவர் உறவினர்கள் அந்தப் பணத்தை மருத்துவருக்குத் தர மறுத்தால் அது நியாயமா?  யார் பக்கம் நியாயம்? 

 =======================================================






முதல் சம்பவம் 60 களில் ஆஸ்திரேலியாவில் நிஜமாக நடந்த வழக்காம்.  மஞ்சரியில் படித்தது!







படங்கள் :  நன்றி இணையம்.




27 கருத்துகள்:

  1. வியாபாரத்துக்கும் மனதாபிமானத்துக்கும் இடையே இருக்கும் ஒரு நூலிழை இடைவெளி என்பதுதான் சரி..

    பதிலளிநீக்கு
  2. கொன்றதாக ஒப்புக்கொண்டால் இரண்டு கிடைக்கும்-பணம்,தண்டனை!
    ஊசிக்கான தொகையைக் கொடுப்பதே நியாயம்!

    பதிலளிநீக்கு
  3. காப்பாற்றிய மருத்துவர் பணத்தை எதிர் பார்த்து செய்யவில்லை இருப்பினும் பணத்தைக் கொடுப்பதே முறையானது

    பதிலளிநீக்கு
  4. முதல் மருத்துவம் : வியாபாரம்...

    இரண்டாவது மருத்துவம் : சேவை...

    பதிலளிநீக்கு
  5. கில்ல்லர்ஜி,,
    ஊசி போட்டும் அவர் இர்ந்து விடுகிரார௧ அப்ப பணம் கொடுப்பதா? அதே மாதிரி வக்கீலிடம் ஒரு கேஸ் எடுத்துக்கொண்டு போகிறேன். வாதாடி வாதை என் கேஸ் தோற்றுவிட்டது; அப்ப வக்கீளுக்கு நான் பணம் கொடுக்கனுமா?

    தமிழ்நாட்டில் சேவை செய்யப் போய் நோயாளிக்கு ஊசி பூட்டு செத்தால், பொது ஜனம் டாக்டரை அடித்து கொன்னுடும். பொது ஜனம் டாக்டரை கொல்லவில்லை என்றால் போலீஸ்காரன் காட்டில் மழை; எப்படியும் டாக்டர் செத்தான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை நம்பள்கி!

      உண்மையில் இரண்டாவது கதையில் காஸ்ட்லி ஊசி போட்டும் அந்த நபர் இறந்து விடுவதாகத்தான் இருக்க வேண்டும்.

      நீக்கு
  6. செத்தாலும் பிழைத்தாலும் சரி என்று எழுதிக் கொடுத்து இருந்தால் டாக்டர் கேட்பது கிடைத்திருக்கும் :)

    பதிலளிநீக்கு
  7. முதலாவது : மருத்துவருக்கு பணத்தைக் கொடுப்பதுதானே நியாயம்...

    இரண்டாவது : தானே முன்வந்து செய்த சேவை... அதற்கான பணம் கொடுத்தாலும் வாங்கினால் செய்த செயலுக்கு மரியாதையில்லை...

    பதிலளிநீக்கு
  8. பகவான்ஜி!: அங்க தான் நீங்க தப்பு பண்றீங்க. நாங்க யார்? மண்ணின் மைந்தர்கள்---தமிழன்டா!
    உயிர் பிழைத்தால் காசு. அப்ப செத்தால்? சாகுமுன்னே நாங்க தான் ரெண்டு கிட்னியையும் திருடிவிடுவோமே? படிக்காமலே ஐந்து கோடி கொடுத்து டாக்டர்கள் Mch டிகிரி வாங்க போட்ட காசை எப்படி எடுப்பது?
    ஒரு கோடிக்கு ஒரு மாத வட்டி ஒரு லட்சம்! ஐந்து கோடிக்கு ஐந்து லட்சம். யார் கொடுப்பா? வருடத்திற்கு வட்டியே முக்கால் கோடி! யார் கொடுப்பா?

    தமிழ் நாட்டில் எல்லோரும் அம்மணமாக இருக்கும் போது, டாக்டர்கள் மட்டும் கோமணம் கட்டனும்னு என்று எதிர்பார்ப்பது நியாமா?

    பதிலளிநீக்கு
  9. வணக்கம்
    ஐயா
    நல்ல மனம் உடையவர்கள் நிச்சயம் விட்டுக்கொடுப்பார்கள்.. நல்ல உரையாடல் ஐயா த.ம 6
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  10. மருத்துவர்களிடம் மனிதாபிமானம் மங்கி வரும் காலம் நண்பரே இன்றைய காலம்
    நன்றி
    தம +1

    பதிலளிநீக்கு
  11. [[[[கரந்தை ஜெயக்குமார் said...
    மருத்துவர்களிடம் மனிதாபிமானம் மங்கி வரும் காலம் நண்பரே இன்றைய காலம்
    நன்றி]]]

    நீங்கள் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை!
    இப்படி பணம் வாங்கி கல்லூரிகள், பள்ளிகள் மருத்தவ கல்லூரிகள்---இவை எல்லாம் ஆரம்பித்து வைத்தது புரட்சி தலைவர் எம்ஜீயார்.

    VIT, SRM, Ramacndraa medical college---எல்லாம் நம் தலிவர் எம்ஜீயார் புண்ணியம். அவரை அவரின் கொள்கைகளை எவன் எதிர்க்கிறான்------நீங்கள் எதிர்த்து இருக்கிறீர்களா?? ஆட்டோ வரும் என்ற பயம் இருக்கலாம்.

    ஐந்து கோடி கொடுத்து இந்த--பல்கொலை''' நிறுவத்தில் படித்த டாக்டர்கள் Mch டிகிரி வாங்க போட்ட காசை எப்படி எடுப்பது? எப்படி வட்டி கட்டுவது?
    _____________________
    இதற்ககு யார் பதில் சொல்வார்கள்?

    என் சொத்தை என் மகன்கள்/மகள்கள் இவர்க்ளுக்குன் மாற்ற நான் சென்ற போது, பதிவாளர் சொத்து மதிப்பை வைத்து இதனை சதவீதம் லஞ்சம் கேட்டார். என் நியாமான சொத்து; நான் கொடுக்கிறேன். அந்த ------ மவன்களுக்கு எதுக்கு லஞ்சம் கொடுக்கணும்?

    இன்று வரை என் சொத்தை என்னால் கொடுக்க முடியவில்லை..இது ஒரு அரசா! அதை எதிர்த்து ஒரு கேள்வி கேளுங்கள் கரந்தையாரே!

    முக என்றால் கேள்வி கேட்கலாம். நீங்கள் கேட்கலாம்! இப்ப . இங்கு கேள்வி கேட்டால் ஆட்டோ வரும் என்ற பயம் உங்களுக்கு இருக்கலாம். பயம் இல்லை என்றால் இப்ப கேள்வி கேளுங்கள்...!

    இன்னும் என் சொத்து என் வாரிசுகளுக்கு மாறவில்லை (family settlement). பிச்சக்கார நாயிகள். டாக்டர்கள் திருடுவது சரியே!

    பதிலளிநீக்கு
  12. சில ஸ்ட்ராங் நிலைப்பாடுகள். இவர்கள் யாரிடமும் மாட்டாமல் இருக்க அந்த தெய்வம்தான் துணை நிற்கவேண்டும் ....! சரியா...?

    பதிலளிநீக்கு
  13. 1968ல் என் கண் முன்னே நடந்த காட்சியை இப்போது முன் வைக்கிறேன்.

    மணப்பாறை இல் நாங்கள் இருந்த சமயம் அது.

    ஒரு நாள் காலை எங்கள்டாக்டரைப் பார்க்கச் சென்றேன்.அவர் வீடு தான் மருத்துவகம் ஆக இருந்தது.

    அப்போதெல்லாம் கன்சல்டிங் பீஸ் ரூபாய் 2 தான். பல கால கட்டங்களில், டாக்டரே மருந்தும் தந்து விடுவார். இன்ஜக்சன் போட்டால் ரூபாய் 3.

    பெரிய க்யூ இருந்தது. என் முறைக்காக காத்து இருந்தபோது, ஒரு ஐந்தாறு பெண்கள் தப தப என்று உள்ளே ஒரு இள வயதுப்பெண்ணை கைத்தாங்கலாக கூட்டிக்கொண்டு வந்தார்கள்.

    அவர்கள் உடனேயே டாக்டரை பார்க்கவேண்டும் என்று சொன்னதால் உடன் அவருக்கு முன் போக அனுமதி கிடைத்தது.

    உள்ளே சென்றவர்கள் அடுத்த ஐந்தே நிமிடங்களில் வெளி வந்து விட்டார்கள். அந்த பெண்ணை அவசர அவசரமாக கூட்டிக்கொண்டு சென்று விட்டார்கள்.

    எனது முறை வந்தபோது, டாக்டரிடம் நான் கேட்டேன். அவர் எனது நண்பரும் கூட. என்ன டாக்டர் அந்த பெண்ணுக்கு ? என்று கேட்டபோது அவர் சொன்ன செய்தி !!!

    அந்த பெண் அன்று காலையில் தான் பிரசவித்து இருக்கிறாளாம். அவளுக்கு ஹார்ட் அட்டாக். அதற்கான மருத்துவ சிகிச்சை இந்த ஊரிலே இல்லை.உடனடியாக அவர்களை திருச்சி மருத்துவ மனைக்கு எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அழைத்துப்போக சொல்லிவிட்டேன். என்னால் செய்ய முடிந்தது எல்லாம், அவள் மார்பு வலி குறைவதற்கு என்னிடம் இருந்த பி 12 இஞ்சக்ஷன் போட்டு அனுப்பினேன். அவர்கள் அடுத்த 2 மணி நேரத்துக்குள் திருச்சி சென்றால் அதிருஷ்டம் என்றார்.

    என்னுடைய அரைகுறை வைத்திய அறிவை வைத்துக்கொண்டு, என்ன டாக்டர் !சார் ! உங்களிடம் ஹெபரின் இல்லையா ? இல்லை, இங்கே கடைகளிலே கிடைக்காதா ? அதப் போட்டிருந்தால் ஒரளவுக்கு ஸ்டேபிள் ஆகி இருப்பார்களே என்றேன்.

    அதற்கு அவர்: ஹெபரின் என்னிடமே இருக்கிறது. ஒரு வயால் தான் இருக்கிறது. அது ரூபா 30 ஆகும். அதை அவர்கள் தர இயலாது. என்னாலும் அத்தனை ஈய இயலாது. நான் போட்ட இஞ்சக்ஷனுக்கே நான் பணம் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன் என்றார்.

    நான் வந்த காரியத்தை கவனித்து விட்டு, வீடு திரும்பி விட்டேன்.

    அடுத்த நாள் காலையில், திருச்சி ரயிலைப் பிடிக்க நான் கிளம்பினேன்.
    வீட்டை விட்டு கிளம்பி ரோட்டை அடைந்தப்போது அங்கே ஒரு ஊர்வலம். ஆம். இறுதி ஊர்வலம்.
    சற்று நின்றேன். என்னையும் அறியாமல், இறந்தவர் முகம் பார்த்தேன்.

    அது அந்தப்பெண் தான்.

    கிட்டத்தட்ட் 47 வருடங்கள் ஆகிவிட்டன. இன்னமும் அந்த டாக்டர் செய்தது சரியா தவறா என்று என்னால் நிர்ணயிக்க முடியவில்லை.
    என்னால் அந்த நிகழ்வினை மறக்கவும்
    முடியவில்லை.

    சுப்பு தாத்தா

    பதிலளிநீக்கு
  14. நோயாளிக் காப்பாற்றினால், டாக்டருக்கு Fees நோயாளி இறந்தால், நோயாளி Rest in Peace.

    பதிலளிநீக்கு
  15. பணமே வாழ்க்கை அல்ல! எனபதை யாருமே நினைப்பதில்லை!

    பதிலளிநீக்கு
  16. முதலாவது வெறும் வியாபார ஒப்பந்நம் போன்றது என்பதால் டாக்டருக்கு கோர்ட்டுக்கு போக தார்மீக உரிமை இல்லை.

    இரண்டாவதில் கடமையைச் செய்; பலனை எதிர்பாராதே என்று நடந்துக் கொண்ட டாக்டருக்கு மருந்துக்கான மணத்துடன் உரிய ஃபீஸும் தரப்பட வேண்டும்.....!!!

    பதிலளிநீக்கு
  17. டாக்டர்கள் தற்போது நியாய தர்மம் பார்ப்பது இல்லை! சுப்பு தாத்தாவின் பின்னூட்டம் அன்றும் அப்படித்தான் என்று எண்ண வைக்கிறது!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!