திங்கள், 22 ஜனவரி, 2018

"திங்க"க்கிழமை 171113 - மாங்காய் ஊறுகாய் - நெல்லைத்தமிழன் ரெசிப்பி


மாங்காய் ஊறுகாய்க்கு ஒரு பதிவான்னு நினைக்காதீங்க. மாதா ஊட்டாத சோற்றை மாங்காய் ஊட்டும் என்று சும்மாவா சொல்லியிருக்காங்க? 


எனக்கு சிலவற்றின் மீது ரொம்ப கிரேஸ். மாங்காய், நுங்கு, பலாப்பழம், பச்சைக் காய்கறிகள், இனிப்புவகைகள். மாங்காய், நுங்கு, பலாப்பழம் எங்க பார்த்தாலும் நான் தேவையோ தேவையில்லையோ வாங்கிடுவேன். புது மாங்காய் ஊறுகாயை, மோர் சாதம் மட்டுமல்ல, அரிசி உப்புமா, ரவா உப்புமா, தோசை ஆகியவற்றுக்கும் தொட்டுக்கொள்வேன். 

இந்த ஊர்ல மாங்காய் அனேகமாக வருடம் முழுவதும் கிடைக்கும் என்றாலும், நம்ம ஊர் மாதிரி எல்லா வகைகளும் கிடைக்காது. வெயில் காலத்துல ரொம்ப காயாகவும் இருக்காது. அதுனால, அங்கேயிருந்து வரும்போதெல்லாம் 4-5 மாங்காய்கள் கொண்டுவருவேன். ஒரு காலத்துல (10 வருடங்களுக்கு முன்பு வரை), நான் மாங்காய் ஊறுகாய் (புதியது, வீட்டில் செய்தது), தயிர் சாதத்தின் அளவைவிட அதிகமாகத் தொட்டுக்கொள்வேன். (அதிகப்படுத்தி எழுதலை. என் ஞாபகத்துக்காகவே, அப்படி ஒரு தடவை சாப்பிடும்போது புகைப்படம் வேறு எடுத்துவைத்துக்கொண்டேன்). 


மாங்காய் தேர்ந்தெடுப்பதில் நான் ஓரளவு எக்ஸ்பர்ட். காம்பை நீக்கினால், மாங்காய் கண்ணீர் வடிக்கவேண்டும். அந்த வாசனையிலேயே தெரிந்துவிடும் இது ஊறுகாய் மாங்காயா அல்லது பழைய மாங்காயா அல்லது மஞ்சனாத்தி மாங்காயா என்று. மாங்காய் ஊறுகாய்க்கு எனக்கு மிகவும் பிடித்தது சிறிய ருமானி மாங்காய். அது இல்லையென்றால் கிளிமூக்கு மாங்காய் அல்லது வேறு வழியில்லைனா நீலன். பங்கனப்பள்ளி மாங்காயும் (பச்சரிசி மாங்காய்) நல்லா இருக்கும் ஆனால் புளிப்பு குறைவு, வாசனை ரொம்ப நல்லா இருக்கும். சென்னைல ஓ.எம்.ஆர் ரோடுல ஃபெப்ரவரில ருமானி மாங்காய் கிடைக்கும்.

மாங்காய் ஊறுகாய்க்கு நல்லெண்ணெய், கடுகு, வெந்தயம், பெருங்காயம், மிளகாய்ப் பொடி மற்றும் உப்பு வேண்டும்.முதல்ல, மாங்காயை நன்றாக அலம்பி, ஓரளவு பெரிய துண்டுகளாக திருத்திக்கோங்க. எனக்கு கல்யாணங்கள்ல சின்ன சின்னத் துண்டமாக (ரொம்ப சிறியது) போட்டிருக்கும் மாங்காய் ஊறுகாய் அவ்வளவு பிடிக்காது, ஏன்னா அது ஜாஸ்தி வேணும். கான்டிராக்டர்களோ, ஒரு ஸ்பூன் இல்லைனா ரெண்டு ஸ்பூனுக்குமேல் போடமாட்டாங்க. பெரிய துண்டம்னா, ரெண்டு மூணு நாளானாலும் ஃப்ரெஷ் ஆகத் தெரியும்.  மாங்காய்த் துண்டங்களோட தேவையான உப்பு சேர்த்து கொஞ்சம் குலுக்கிக்கொள்ளுங்கள்.வெந்தயத்தை (ரெண்டு மாங்காய்க்கு 1 மேசைக்கரண்டி) வாணலில் எண்ணெய் இல்லாமல் வறுத்துக்கொண்டு, ஆறினபின் மிக்சியில் பொடியாக்கிக்கோங்க.இப்போ, காரப்பொடி, பெருங்காயம் (கொஞ்சம் பொடித்து இருக்கவேண்டும். இல்லைனா பெருங்காயம் ஊறுகாயில் இறங்குவதற்கு நாளாகும்) ரெண்டையும் ரெடியா வச்சுக்குங்க.வாணலியில் 5 ஸ்பூன் நல்லெண்ணெயைக் காயவைங்க. காய்ந்ததும், அதில் கடுகு போட்டு பொரிந்ததும், பெருங்காயம் சேருங்க. நல்லா வறுபட்டதும், அடுப்பை அணைத்துவிட்டு, மிளகாய்ப் பொடி 2 ஸ்பூன் சேர்த்து கலக்கிவிட்டு உடனே அதை உப்பு போட்டு ரெடியா இருக்கும் மாங்காய்த் துண்டங்களின் மீது விடவும். அதோட வெந்தயப் பொடியையும் சேர்த்துக் கலக்கிக்கோங்க.

அடுப்பு எரியும்போதே மிளகாய்ப் பொடியைச் சேர்த்தாலோ, இல்லை கொஞ்ச நேரம் (சில வினாடிகள்) அதிகமாக, கொதிக்கின்ற எண்ணெயுடன் காரப்பொடி சேர்ந்தாலோ, கருகிவிடும். இது மட்டும் கொஞ்சம் ஜாக்கிரதையாப் பாத்துக்குங்க.நான் மாங்காய் ஊறுகாய் பண்ணுவதற்கு முன்னமேயே தயிர் சாதம் ரெடி செய்து வைத்துக்கொள்வேன். எழுதும்போதே, எப்போது மீண்டும் மாங்காய் கிடைக்கும் என்று யோசிக்கிறது மனம்.

நீங்களும் செய்துபார்த்துவிட்டுச் சொல்லுங்கள்.

அன்புடன்,

நெல்லைத்தமிழன்.


தமிழ்மணத்தில் வாக்களிக்க.....

98 கருத்துகள்:

 1. இனிய காலை வணக்கம்!!!ஸ்ரீராம் துரை செல்வராஜு அண்ணா மாங்காய் மணக்குது

  கீதா

  பதிலளிநீக்கு
 2. துரை அண்ணா இப்போ உடல் நலம் தேவலாமா?...தயவாய் கவனித்துக் கொள்ளுங்கள்!

  ஸ்ரீராம் இப்ப வரிசைல நிறைய பேர் நிக்கத் தொடங்கிட்டாங்க!! பானுக்கா, கீதாக்கா வந்திருக்கீங்களா!! உங்களுக்கும் காலை வணக்கம்...

  கீதா

  பதிலளிநீக்கு
 3. முக்கனிகளில் முதற்கனி...
  பல பதிவுகள் எழுதலாம் இதனைப் பற்றி....

  பதிலளிநீக்கு
 4. காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.. லீவு கிடைத்து விட்டதா?

  பதிலளிநீக்கு
 5. ஸ்ரீராம் அவர்களுக்கு...
  சொல்லியிருக்கிறேன்... நல்லது நடக்கும்..

  பதிலளிநீக்கு
 6. மாதா ஊட்டாத சோற்றை
  மாங்காய் ஊட்டும் என்பது சொல் வழக்கு.

  பதிலளிநீக்கு
 7. துரை செல்வராஜூ ஸார்... ஸ்ரீராம் என்று அழையுங்கள்... 'அவர்களுக்கு' எல்லாம் வேண்டாம்.

  பதிலளிநீக்கு
 8. ஒன்று தெரியுமா...
  பெரும்பாலான காதல்கள் மாந்தோப்பில் தான் தோன்றி இருக்கின்றன...

  பதிலளிநீக்கு
 9. //ஒன்று தெரியுமா... பெரும்பாலான காதல்கள் மாந்தோப்பில் தான் தோன்றி இருக்கின்றன..​//​

  மாந்தோப்பில் நின்றிருந்தபோது மாம்பழம் வேண்டுமென்று கேட்பதுவும், அதைக் கொடுத்தாலும் வாங்காமல் அந்தக் கன்னம் ரெண்டும் வேண்டும் என்பதுவும்.....!!!

  பதிலளிநீக்கு
 10. நெல்லை நாவில் நீர்!!!

  சூப்பர்ஆ இருக்கு!! நான் இந்த வெந்தயம் பெருங்காயம் வறுத்துப் பொடி செய்து வைத்துக் கொண்டுவிடுவேன் ஃப்ரிட்ஜில்...தேவயானப்ப டக்கென்று பயன்படுத்திக் கொள்ள. (பெருங்காயக் கட்டி பயன்படுத்துவதால் வெறும் வாணலியில் வறுத்துப்பொடி செய்து வைத்தல்)

  இதையே உப்பில் மாங்காயைப் போட்டு ஊறவைத்து அப்புறம் நல்லெண்ணையில் மத்ததெல்லாம் தாளித்துப் போடல் அடமாங்காய் என்று வீட்டில் சொல்லுவது...

  கீதா

  பதிலளிநீக்கு
 11. நான் தாமதம்! ஹெஹெஹெஹெ, கணினியைத் திறக்கறச்சேயே ஆறு மணிக்கு மேல் ஆயிடுச்சு! அதனால் வரலை! இந்த மாங்காய் ஊறுகாய் பிடிக்காதவங்க யாரு? நான் வெந்தயத்தோடு கூடவே கொஞ்சம் கடுகையும் வெறும் வாணலியில் வறுத்து இரண்டையும் சேர்த்துப் பொடித்து வைச்சுப்பேன். எல்லா ஊறுகாய்களுக்கும் இந்தப் பொடியைச் சேர்ப்பேன். நீண்ட நாட்கள் நிற்க வேண்டி கடுகு சேர்ப்பது வழக்கம். அல்லது கடுகு எண்ணெய் விடுவாங்க! கொஞ்சம் கசப்பாக இருந்தாலும் ஊறுகாய் நன்றாக இருக்கும். நீண்ட நாட்கள் வரும். நான் நல்லெண்ணெய் தான் ஊற்றுகிறேன். ஏனெனில் ஊறுகாய் எங்க வீட்டில் விரைவாகச் செலவாகும். :)))))

  பதிலளிநீக்கு
 12. நமது தளத்திலும் மாங்காய் பதிவு ஒன்று - மதியத்துக்குப் பிறகு!...

  மகிழ்ச்சியுடன்....

  பதிலளிநீக்கு
 13. தயிர் சாதம் மாங்காய் படம் சூப்பர் மா.
  ருமானி நம் வீட்டில் மாவடு வந்திருக்கும். இரண்டு மாதங்களில்
  மாங்காய் காய்த்துவிடும்.
  வித விதமாய் ஊறுகாய் போட நாந்தான் அங்க இல்லை.
  அற்புதமான வாசனை இங்கே வருகிறது.

  பதிலளிநீக்கு
 14. காலை வணக்கம்! மனதுக்கு பிடித்த மாங்காய்!!!ஸ்ஸ்ஸ்!

  பதிலளிநீக்கு
 15. கீதாக்கா என் மாமியாரும் கடுகு பொடி செய்து சேர்த்துப்பாங்க..ஓ நீண்ட நாள் வரத்தான் கடுகா?! தெரிந்து கொண்டேன்....நானும் எல்லா ஊறுகாய்களையும் நல்லெண்ணையில்தான் செய்யறேன்...

  துரை அண்ணா அட நீங்களும்மாங்காய் பதிவா மதியத்திற்கு மேல்..இங்க சொல்லிட்டீங்கல்ல வந்துருவோம்...

  துரை அண்ண மாங்காய் தோப்புக் காதல் பத்தி சொல்ல அதுக்கு ஸ்ரீராம் + பண்ணிச் சேர்க்க கதுப்புக் கன்னங்கள் வேண்டும் என்று சொல்லி ஆஹா நெல்லையோட ஊறுகாயோடு சேர்த்து அச்சுவையுடன் இவங்க ரெண்டு பேரும் வேறு சுவை பாட!! சூப்பர் போங்க இந்த மாங்காய் செய்யும் மாயாஜாலம்!!

  கீதா

  பதிலளிநீக்கு
 16. ஊறுகாய் பற்றிய தொடக்க புராணமே அருமை நண்பரே...
  எஜிப்தியர்கள் எல்லாவிதமான ஊறுகாயும் செய்வார்கள் எனக்கு பிடிக்கும்.

  பதிலளிநீக்கு
 17. தமிழகத்தில் இருக்கும் வரை நான் ஊறுகாய்க்கு சாதத்தை தொட்டு சாப்பிடுவேன் இங்கே நார்த் இண்டியன் நண்பர்களின் பார்டிக்கு நான் தையி சாதமும் வீட்டில் செய்த ஊறுகாயும்தான் எடுத்து செல்வேன் ...


  எங்கள் வீட்டிற்கு வரும் நண்பர்கள் என் வீட்டில் இருந்து சுட்டு செல்வது நான் செய்யும் ஊறுகாயைத்தான்

  பதிலளிநீக்கு
 18. பதிவு பிங்க் கலரில் இருந்ததும் இது அதிரா போட்ட பதிவா என்று நினைத்தேன்

  பதிலளிநீக்கு
 19. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 20. நான் இந்த சமையல் கலைப் பக்கம் எல்லாம் எட்டிப் பார்ப்பதில்லை. மாங்காய் ஊறுகாய் எனக்கு ரொம்பவும் பிடிக்கும் என்பதாலும், நம்ப நெல்லைத் தமிழன் ரெசிப்பி என்பதாலும் வந்து பார்த்தேன். படிக்கும் போதே, அந்த மாங்காய் ஊறுகாயின் உறைப்பும் உப்பும் நாவில் சப்பு கொட்ட வைத்தது. வீட்டில் அவர்கள் பாணியில் தான் 'தாளி'ப்பார்கள். எனவே நெல்லைத் தமிழன் செய்முறையில் சந்தர்ப்பம் அமையும் போது, நான்தான் செய்துதான் பார்க்க வேண்டும். -

  பதிலளிநீக்கு
 21. தமிழ்மணம் பராமரிப்பில் இருப்பதால் - த.ம ஓட்டு போடவில்லை.

  பதிலளிநீக்கு
 22. உங்கள் வலைத்தளத்தை Indiblogger - Tamil இல் இணைத்தால் என்னை போன்றவர்களுக்கு (தமிழ்மணம் இல்லாத குறையைப் போக்கும் ) சவுகரியமாக இருக்கும்.

  பதிலளிநீக்கு
 23. மாங்காயைப்பார்க்கும்போதே ஆசையாக இருக்கிற்து. எனக்கு எப்போதுமே கிளிமூக்கு மாங்காய்தான் சாய்ஸ்! அதுவும் செங்காய்கள் என்றால் சுவை மேலும் அதிகம்! இதை நாங்கள் வெந்தய மாங்காய் என்று சொல்லுவோம்.

  படமும் செய்முறையும் அருமை!!

  பதிலளிநீக்கு
 24. //.. வாங்காமல் அந்தக் கன்னம் ரெண்டும் வேண்டும் என்பதுவும்.....!!!//

  ’அந்தக் கன்னம் வேண்டும்..’ என்றுதான் சொன்னான் அந்த மடையன். ரெண்டும் வேண்டுமெனக் கேட்கத் தெரியாத அசட்டுக் காதலன்..!

  பதிலளிநீக்கு
 25. எல்லோருக்கும் இனிய வணக்கம்!

  ஆஹா!….
  மணக்க ருசிக்கச் சகோதரர் நெல்லைத் தமிழனின் மாங்காய் ஊறுகாய்!
  அருமை!..

  மணக்க மணக்கமாங் காயூறு காய்!நல்
  இணக்கம் எனக்கும் இதுவே! - கணக்கற்ற
  கைப்பக்கு வம்நெல்லை கைவசம் கண்டுமனப்
  பைக்குள்ளே இட்டேன் பதிந்து! …:))

  அருமையாக இருக்கிறது குறிப்பு!
  இதனை நாங்கள் மாங்காய் உடன் ஊறுகாய்
  என்றே சொல்வோம். இதற்கு அதிக புளிப்பில்லாத மாங்காய் எடுத்துக்கொள்வோம்.
  யாழ்ப்பாணத்தில் லேசான புளிப்புச் சுவையுள்ள பாண்டி மாங்காய் என்றோர் இனம் உண்டு.
  நல்ல முற்றிய காயெனில் கிட்டத்தட்ட நம் கையால் ஒரு சாண்
  அளவிற்குப் பெருத்து இருக்கும். அதனைச் சும்மாவே கடித்துச் சாப்பிடலாம்.
  தேங்காய்ச் சொட்டுப்போல் நல்ல ருசி! நினைத்தாலே வாயூறுகிறது!..

  அருமையான ஊறுகாய்க் குறிப்பு சகோதரரே!
  இதே போலவே கொஞ்சம் மஞ்சள் பொடியும் தூவிப் பிரட்டுவார் என் அம்மா!
  படங்களைப் பார்க்கவே வாயூறுகிறது!...:)
  காலையிலேயே மாங்காய் வாங்கக் கடைக்குப் போக வைத்துவிட்டீர்கள்!..:)

  அருமையான பகிர்வு + பதிவு!
  சகோதரர் ஶ்ரீராமுக்கும் உங்களுக்கும் நன்றிகள் பல!
  அனைவருக்கும் நல் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 26. நானும் இப்படித் தான் செய்வேன். படிக்கும் போதே நாவில் நீர். மாழ்பழமும், மாங்காயும் நான் வேண்டாமென்றே சொல்ல மாட்டேன்..:)

  பதிலளிநீக்கு
 27. மா...

  கொஞ்சம் தாமதமாகிவிட்டது..
  நமது தளத்தில் பதிவு வெளியாகியுள்ளது..

  அன்புடன்.,

  பதிலளிநீக்கு
 28. வணக்கம் சகோதரரே

  அருமையான மாங்காய் ஊறுகாய் பற்றிய பதிவு. மாங்காய் ஊறுகாய் வேண்டாதவர் உண்டோ? படங்களும், செய்முறைகளும் ஊறுகாயுடன் தயிர் சாதம் உண்ட திருப்தியை ஊட்டி விட்டன. நன்றி சகோதரர் நெல்லை தமிழன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 29. ஆஆஆவ்வ்வ்வ்வ் மாங்காய் ஊறுகாய்.. மாங்காயை எதுக்குக் கஸ்டப்படுத்தோணும்.. கொஞ்சம் உப்பில் தொட்டே சாப்பிட்டு முடிச்சிடலாம்... ஊறுகாய் செய்யும்வரை பொறுமையாக மாங்கயைப் பாதுகாக்க முடியாது என்னால:)...

  ///
  மாங்காய் ஊறுகாய்க்கு ஒரு பதிவான்னு நினைக்காதீங்க. மாதா ஊட்டாத சோற்றை மாங்காய் ஊட்டும் என்று சும்மாவா சொல்லியிருக்காங்க? //

  ஓ இந்தப் பழமொழி இப்போதான் கேள்விப்படுகிறேன்... பொதுவாக ஆண்களுக்கு மாங்காய்.. மற்றும் புளிப்பு அதிகமான உணவுகள் பிடிப்பதில்லையே.. இங்கு எல்லாமே புதுசா இருக்கெனக்கு:))

  பதிலளிநீக்கு
 30. விடிய கண் முழிச்ச உடனேயே கொமெண்ட்ஸ் போட்டு விட்டால், தப்பிடுவேன், இல்லை எனில் நேரம் கிடைக்காது.. இப்போதான் இங்கு வர முடிஞ்சுது..

  //புது மாங்காய் ஊறுகாயை, மோர் சாதம் மட்டுமல்ல, அரிசி உப்புமா, ரவா உப்புமா, தோசை ஆகியவற்றுக்கும் தொட்டுக்கொள்வேன்.
  ///

  ஹா ஹா ஹா என் அலைவரிசையிலேயெ ஒருவர்:)).. எனக்கும் ஊறுகாய் எனில் பன் உடன் பிரெட்டுடன் எல்லாம் சாப்பிடுவேன்... அம்மா சென்னையில் இருந்து புதினா ஊறுகாய் வாங்கி அனுப்பியிருந்தா.. அதுவும் ஒரு வித்தியாசமாக சூப்பரா இருந்துது.

  // மாங்காய் கண்ணீர் வடிக்கவேண்டும். //

  ஹா ஹா ஹா அதுதான் ஃபிரெஸ் மாங்காய்க்கு அறிகுறி.. எங்கள் வீட்டிலும் பல மாமரங்கள்.. நாங்கள் மாம்பழம் சாப்பிட்டே வளர்ந்தவர்கள்... எங்கள் ஒரு பப்பியாருக்கும் மாம்பழம் ரொம்பப் பிடிக்கும் .. ஆனா இப்போ கிடைப்பதில்லை மாங்காய்:(, பழம் கிடைக்கும் இங்கு காய் கிடைக்காது... சில அஃப்றிக்கன் கடைகளில் கிடைக்கும் அது குட்டிக் குட்டி... பபபபபபபச்சைப் புளி:)...கர்ர்ர்ர்ர்ர்:))

  பதிலளிநீக்கு
 31. உன்மையில் மிக நல்ல குறிப்பு.. ஆனா உடனே செய்து உடனே சாப்பிட்டிருக்கிறீங்க.. இதெ முறையில் ஆனா கொஞ்சம் அவிச்சு எடுத்தபின்பு நெல்லிக்காயில் ஊறுகாய் செய்தேன்... கிரேவி நல்லா இருந்துது ஆனா நெல்லிக்காயின் சுவை பிடிக்கவில்லை எனக்கு...

  நீங்கள் இங்கு பாவித்திருக்கும் மாங்காய் புளிப்பே இல்லாததுதானே? பெயர் தெரியவில்லை ஆனா ஒரு தடவை சாப்பிட்டிருக்கிறேன்.

  எங்கள் நாட்டில் இளமதி சொன்னதைப்போல, பச்சையாகச் சாப்பிட கிளிச்சொண்டு எனச் சொல்லப்படும் மாங்காய்தான் பேமஸ்.... புளிக்காது.. ஒரு வித இனிப்பாக இருக்கும், வெளிர் பச்சை நிறம்.. பெரிய நீள் வட்டமாக கீழ் கூர், கிளியின் உதடுபோல வளைந்திருக்கும்.. அதனாலேயே கிளிச்சொண்டு மாங்காய் என்போம்.

  பதிலளிநீக்கு
 32. தயிர்சாதம் ஏன் இப்படி பால்சோறுபோல இருக்கு.. அவ்ளோ தயிர் ஊத்துவீங்களோ? சாதம் எனில் கட்டியாக, ஒரு கிண்னத்தில் போட்டால் அப்படியே வடிவம் மாறாமல் இருக்கும் அதைத்தானே தயிர்ச் சாதம் என்பினம் கர்ர்ர்:))..

  இம்முறைதான் உங்கள் சுவாமிப் படமெல்லாம் ஒழுங்காக தெரியுது.. பிள்ளையாரைக் காணவே இல்லையே.. முருகன் லக்ஸ்மி ஆரையுமே காணவில்லை:)...

  பதிலளிநீக்கு
 33. நன்றி எங்கள் பிளாக் ஸ்ரீராம், வெளியிட்டமைக்கு. நான், மாங்காய் ஊறுகாய்தானே, அதனால் வெளிவரலையோன்னு நினைத்தேன்.

  பதிலளிநீக்கு
 34. வாங்க துரை செல்வராஜு சார். இந்தப் பதிவைப்பார்த்து, மாங்காய் ஞாபகம் வந்து நீங்க ஒரு பதிவு போட்டிருப்பதைப் பார்த்தேன். அதுவும் 'மாந்தளிர் மேனி' என்று சிலமுறை உருகியிருக்கீங்க. அதுக்காக, தேவி படத்தில் ஆரம்பத்தில் கிராமத்துப் பெண்ணாக வருபவரை ஞாபகப்படுத்திவிட்டீர்கள் என்று சொல்லமாட்டேன்.

  பதிலளிநீக்கு
 35. துரை செல்வராஜு சார்... குயில் தோப்பில் ஒருவர் கண்ணம்மாவை நினைத்துப் பாடினார் என்று தெரியும். மாந்தோப்பில் 'காதல்' தோன்றியதாக நான் கேள்விப்பட்டதேயில்லையே. (ஸ்ரீராம் சொல்லும் பாடல், முடிந்த அளவு ஆபாசமாக படம் எடுத்திருப்பார்கள். நிஜமாகவே கவிஞர் இதை நினைத்து எழுதியிருப்பாரா என்று எண்ணும்படி)

  பதிலளிநீக்கு
 36. வருக தில்லையகத்து கீதா ரங்கன். என் மனைவியும் இங்க வந்தபோது, கூட்டு சுலபமா பண்ண ஒரு 'பொடி' தயார் செய்துவிட்டுப் போனாள். ஆனால் நான் வாரத்துக்கு ஒரு முறை கூட்டு பண்ணினாலே அதிகம். 'நீங்க என்னடான்னா, மாங்காய் ஊறுகாய்க்கே பொடி தயார் பண்ணி வச்சுப்பேன்னு சொல்றீங்க.

  'அடைமாங்காய்' என்பது வேறு இல்லையோ? நாள்பட மாங்காய் ஊறுகாய் இருக்கணும்னா, மாங்காயை கட் பண்ணி, உப்பு போட்டு வெயிலில் நன்றாக காயவைத்து, அதை வைத்து மாங்காய் ஊறுகாய் போடுவாங்க. 'அடைமாங்காய்'க்கு (எனக்குத் தெரிந்தவரை), மாங்காயின் இரு புறமும் கதுப்பை வெட்டி (ஒரேயடியாக கட் பண்ணாமல்), அதற்குள் தேவையான மசாலாக்கள் சேர்த்து அடைத்து, அப்படியே பரணியில் வைத்துவிடுவார்கள். ஊறினால் சாப்பிட மிகவும் சுவையா இருக்கும் (யார் இதெல்லாம் பண்ணித்தரப் போறாங்க...ம்ம்ம்). என் உறவினர் ஒருவர் (நான் பதின்ம வயதில் இருந்தபோது) இந்த அடைமாங்காய் தயார் செய்தார். எனக்கு மோர் சாதத்துக்குப் போடுங்க என்றதற்கு, இது, 'மாப்பிள்ளை நாளை வருவார்' என்று தயார் செய்திருக்கிறேன் என்று சொல்லிவிட்டார். மாப்பிள்ளையும் வந்தார், அவ்வளவா விருப்பப்பட்டு சாப்பிடலை. அதுக்கு மறு'நாள், எனக்கு அந்த உறவினர் மோர் சாதத்துக்கு அடைமாங்காயைப் போட வந்தபோது, எனக்குப் பிடிக்காது என்று சொல்லிவிட்டேன் (அப்போ ரோஷம்னு நினைக்கிறேன்)

  பதிலளிநீக்கு
 37. வருகைக்கு நன்றி கீதா சாம்பசிவம் மேடம். எனக்கு 'கடுகுப் பொடி' பற்றித் தெரியாத விஷயத்தைச் சொல்லியிருக்கீங்க. நன்றி. ஊறுகாய்க்கு நல்லெண்ணெய்தான் பெஸ்ட்.

  பதிலளிநீக்கு
 38. வாங்க வல்லிசிம்ஹன் அம்மா. எங்கள் வீட்டிலும் (சென்னையில், அம்மா வீடு) ருமானி மரம் பெரிதாக இருந்தது. ஆனால், கிளைகளை வெட்டி வெட்டி, இப்போ சிறிய மரமா இருக்கு. அவங்களுக்கு மாங்காய்ல இஷ்டமில்லை (ஏற்கனவே இருந்த 6 பெரிய மரங்களையும், மல்கோவா, பங்கனபள்ளி, நீலன், கிளிமூக்கு, மஞ்சனாத்தி, வீடு கட்டும்போது வெட்டிட்டாங்க. எனக்கு ரொம்ப மனதுக்கு வருத்தமா இருந்தது).

  மைலாப்பூர் போகும்போது, உங்களை நினைவில் இருத்திக்கொள்ள வைத்துவிட்டீர்கள்.

  பதிலளிநீக்கு
 39. வாங்க பானுமதி வெங்கடேஸ்வரன். நம்மைப் போல் மாங்காய்ப் பிரியர் பலர் இருப்பது அறிய மகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு
 40. வருகைக்கு நன்றி கில்லர்ஜி... துபாயில் இருந்தாலும் இருந்தீங்க... எகிப்தியர்களின் ஊறுகாயைப் புகழ ஆரம்பிச்சிட்டீங்க. எனக்கு, மும்பை ஊறுகாயே பிடிக்காது. தமிழ்'நாட்டுல போடற ஊறுகாய்தான் பிடிக்கும்.

  பதிலளிநீக்கு
 41. வாங்க அவர்கள் உண்மைகள் மதுரைத் தமிழன். நீங்களும் ஊறுகாய் எக்ஸ்பர்ட் என்று அறிந்து மகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு
 42. தமிழ் இளங்கோ சார்.. உங்களை 'திங்கக் கிழமை' பதிவில் பார்ப்பதற்கு மிக்க சந்தோஷமா இருக்கு. மாங்காய் காலம் வேற விரைவில் வந்துக்கிட்டே இருக்கு. வருகைக்கும் கருத்துக்கும், அதிலும் 'நம்ம' விற்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 43. வருகைக்கு நன்றி மனோ சாமினாதன் மேடம். பெரும்பாலும் கிளிமூக்கு மாங்காய் எல்லாக் காலங்களிலும் கிடைக்கும் என்பதால் கல்யாணத்தில் அதனை உபயோகப்படுத்துவார்கள். கிளிமூக்கு மாங்காய்ல கொஞ்சம் அசட்டுத் திதிப்பு உண்டு. சில கிளிமூக்கு மாங்காய்ல (கொஞ்சம் முரட்டு சைசுல இருக்கும்), ஊறுகாய் செய்தால் நல்லா இருக்கும்.

  பதிலளிநீக்கு
 44. வாங்க ஏகாந்தன் சார்... ஊறுகாயைவிட, உங்களை, 'கன்னம்' கவர்ந்துவிட்டதா?

  "ரெண்டும் வேண்டுமெனக் " - ரெண்டு கன்னத்தையும்தானே சொல்கிறீர்கள்? :-)

  பதிலளிநீக்கு
 45. ஹையோ என் கண்ணுக்கு மட்டும் தனியா தெரியுதே யாரோ ரெண்டு பேர் மாங்காய்கன்னம் னு லதாவை சைட்டிங் :) இப்போவே மெரினா போய் சொல்லிட்டு வரேன்

  பதிலளிநீக்கு
 46. நெல்லைத்தமிழன் ஹை 5..எனக்கு ரொம்ம்ம்ம்ம்ப பிடிச்சது மாங்காய் ஊறுகாய் :) நானும் ப்ரெட் சப்பாத்தி பொங்கல் உப்புமா இட்லி தோசை கஞ்சி எல்லாத்துக்கும் தொட்டுப்பேன்

  பதிலளிநீக்கு
 47. வாங்க கவிதாயினி இளமதி. வெண்பாவை ரசித்தேன்.

  மணக்க மணக்கமாங் காயூறு காய்!நல்
  இணக்கம் எனக்கும் இதுவே! - கணக்கற்ற
  கைப்பக்கு வம்நெல்லை கைவசம் கண்டுமனப்
  பைக்குள்ளே இட்டேன் பதிந்து!

  நம்ம பேரையும் போட்டு ஒரு பாடல் உருவாக்கிட்டீங்களே. மிக்க நன்றி இளமதி.

  ஆந்திராவுக்குச் சென்றிருந்த என் ஆபீஸ் நண்பரை, அங்கிருந்து மாங்காய் வாங்கிவரச் சொன்னபோது, நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அந்த மிகப் பெரிய மாங்காயை வாங்கிவந்தார். கொஞ்சம்கூட புளிப்பு இல்லாமல், வெறும்ன சாப்பிடும்படி இருந்தது (வாழ்க்கையில் முதல் முறையாக அத்தகைய மாங்காயைப் பார்த்தேன்).

  நீங்கள் இருக்கும் இடத்தில் நினைத்தபோது மாங்காய் கிடைக்குமா? நானிருக்கும் இடத்தில், எல்லாக் காலங்களிலும் மாங்காய் கிடைக்கும், என்ன, நிறைய சமயங்களில் அதைவைத்து ஊறுகாய் போடமுடியாது.

  பதிலளிநீக்கு
 48. எங்கஅப்பா உங்க செய்முறையில் தான் செய்வார் ,மாங்காய் கிச்சிலிக்காய் கடாரங்காய் நாரத்தை எல்லாம் செய்வார் ஹ்ம்ம் அப்புறம் களாக்காய் ஊறுகாயும் செய்வார் அவர் இருந்தவரை எனக்கு பார்சலில் வீட்டு ஊறுகாய் தவறாமல் வரும்

  பதிலளிநீக்கு
 49. எங்க வீட்ல கிளி மூக்கு மாங்காய் காய்க்கும் அதில் செய்வோம் .இங்கே கிடைக்கிற மாங்காய் எல்லாம் சூடான் ஆப்பிரிக்கா வகை ..அவ்ளோ நல்லா இருக்காது .பங்களாதேஷ் கடைல கிடைக்கும் சம்மர் டைம் விலை ரொம்ப .எனக்கு இன்னிக்கு பதிவில் தயார் செய்து வைத்த தயிர் சாதம் நாவூற வைக்குது :) நானும் அப்படித்தான் கிண்ணத்தில் தயிர் சாதம் போட்டு குட்டி ஸ்பூனால் சாப்பிடுவேன் :)

  பதிலளிநீக்கு
 50. ///நெல்லைத் தமிழன் said...
  வாங்க கவிதாயினி இளமதி. வெண்பாவை ரசித்தேன்.///

  அவர்களே ஜொள்ள மறந்திட்டீங்க ஹா ஹ ஹா.. இப்போ வருவா சகோ என்னைக் கவிதாயினி என ஜொள்ள வாணம் ஜஸ்ட் இளமதி போதும்:) என.. மீ ஜொள்ளிட்டேன்ன்ன்ன்ன் இளமதி மேடம்ம்ம்ம்ம்ம்ம் எனச் சொல்லோணும்:)) ஹா ஹா ஹா விடுங்கோ விடுங்கோ மீ தேம்ஸ்க்குப் போறேன்ன் அங்கு நேஎக்கு ரெம்ம்ம்ம்ப வேர்க் இருக்கு:))..

  பதிலளிநீக்கு
 51. ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு கவலை:) ஏகாந்தன் அண்ணனுக்கு, ஸ்ரீராம் அந்த ரெண்டு கன்னத்திலயும் டச்சூஊஊஊஊ பண்ணி விட்டிட்டாரே எனக் கவலை:)) ஹையோ எனக்கு இண்டைக்கு என்னமோ ஆச்ச்ச்ச்ச்ச்:))..

  பதிலளிநீக்கு
 52. ///Angel said...
  எங்க வீட்ல கிளி மூக்கு மாங்காய் காய்க்கும் //

  ஹலோ மிஸ்டர்:).. அது கிளியின் மூக்கு இல்லை சொண்டாக்கும் கர்ர்ர்ர்ர்:)) கிளிக்கு எங்கின இருக்கு மூக்கு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) மூக்காம் மூக்கு... அணிலுக்கு செயார் போட்ட கதைபோலதான் இருக்கு இதுவும்:))

  பதிலளிநீக்கு
 53. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 54. miyyaw :) http://2.bp.blogspot.com/-mmmVZVQqrNs/U2m7Id4W3zI/AAAAAAAAJD8/z_elNV49H8k/s1600/images.jpg

  பதிலளிநீக்கு
 55. ஹலோ இதில மூக்கு எங்க இருக்குதாக்கும்.. அது சொண்டூஊஊஊஊஊஊஊஊஊஊ:))

  http://m3.i.pbase.com/g3/56/441856/2/113473793.BxYvmMrY.jpg

  பதிலளிநீக்கு
 56. என்னை ஆரும் பேய்க்காட்ட முடியாதூஊஊஊஊஊஊ:) இப்போ எனக்கு கிளியின் மூக்கு வேணும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்:))

  பதிலளிநீக்கு
 57. :) @மியாவ் என்னை சும்மா வம்புக்கிழுத்தா அப்புறம் பிளாஸ்டிக் எதிர்ப்பு க்ளைபாசெட் அவேர்னஸ் அப்படி இப்படின்னு விழிப்புணர்வு பதிவு போடுவேன் சொல்லிட்டேன் be careful

  பதிலளிநீக்கு
 58. படம்,பதம்எல்லாம்அருமை.மாங்காய் ஊறுகாய், தளரத்தளர தயிர்சாதம். அன்புடன்

  பதிலளிநீக்கு
 59. 1) //அந்தக் கன்னம் வேண்டும்..’ என்றுதான் சொன்னான் அந்த மடையன். ரெண்டும் வேண்டுமெனக் கேட்கத் தெரியாத அசட்டுக் காதலன்..!//

  2) //ஹையோ என் கண்ணுக்கு மட்டும் தனியா தெரியுதே யாரோ ரெண்டு பேர் மாங்காய்கன்னம் னு லதாவை சைட்டிங் :) //

  3) //ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு கவலை:) ஏகாந்தன் அண்ணனுக்கு, ஸ்ரீராம் அந்த ரெண்டு கன்னத்திலயும் டச்சூஊஊஊஊ பண்ணி விட்டிட்டாரே எனக் கவலை:))//  ரெண்டு கன்னம் இல்லையோ....? சிவப்பு மல்லியை தாஸ் அண்ணன் கூட "ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம்"னு பாடினாரே... எல் ஆர் ஈஸ்வரி காதில் ஒரு கன்னம் வேண்டும் என்று கேட்டதாகத்தான் காதில் விழுந்ததோ.. அடுத்த கன்னத்தை சும்மாவே வைத்திருப்பாரோ.. கவலைகளும், கேள்விகளும் எனக்குள்.

  பதிலளிநீக்கு
 60. //யாரோ ரெண்டு பேர் மாங்காய்கன்னம் னு லதாவை சைட்டிங் //

  ஏஞ்சல்.... அடுத்த கவலை யார் லதா? அவர் எங்கு இங்கு வந்தார்?

  பதிலளிநீக்கு
 61. நன்றி ஆதி வெங்கட். உங்களுக்கென்ன இப்போது... ஸ்ரீரங்கம் தாத்தாச்சாரியார் தோட்ட மாம்பழங்கள் சுலபமா கிடைக்கும். அதைவைத்து ரெசிப்பியும் எழுதுங்க.

  பதிலளிநீக்கு
 62. வாங்க கமலா ஹரிஹரன் மேடம். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 63. @ ஸ்ரீராம் அது எனக்கு மூவிஸ் பற்றி அவ்ளோ தெரியாதா :) சரோஜா தேவி யை லதான்னு நினைச்சுக்கிட்டேன் :)

  பதிலளிநீக்கு
 64. வாங்க அதிரா. உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

  எப்படி, புதுசு புதுசா கண்டுபிடிக்கிறீங்களோ. ஆண்களுக்கு புளிப்பு பிடிக்காதுன்னு யாரு சொன்னா?

  நீங்கள் சொன்னதுபோல், பன்/பிரெட்டுக்கும் ஊறுகாய் ரொம்ப நல்லா இருக்கும். (எனக்கு எலுமிச்சை கார ஊறுகாய், சப்பாத்திக்கு, பன்/பிரெட்டுக்கு பிடிக்கும்)

  //நாங்கள் மாம்பழம் சாப்பிட்டே வளர்ந்தவர்கள்.// - உண்மையிலேயே எனக்கு வருத்தத்தை வரவழைத்தது. மரங்கள் சூழ்ந்த இடங்களில் இருந்துவிட்டு, இப்போ அப்படி இல்லாதது கஷ்டம்தான். உங்களுக்கு பரவாயில்லை, நல்ல இயற்கையான சூழல்ல இப்போ வீடு. நாங்க கான்கிரீட் வீடுகள்லதான் வாசம்.

  நெல்லிக்காய் ஊறுகாய் - வேகவைத்துத்தான் செய்யணும். ரொம்ப நல்லா இருக்குமே.

  நான் உபயோகப்படுத்தியது ருமானி மாங்காய். புளிப்பு இருக்கும். 'வெடுக் வெடுக்' என இருக்கும். இதுக்காகவே ஃபெப்ரவரி/மார்ச்சில் சென்னை செல்லவேண்டும்.

  //பால்சோறுபோல இருக்கு// - தயிர் சாதம் தயார் செய்யும்போது ரொம்பவே நெகிழ நெகிழ இருக்கும். இல்லைனா, மத்தியானம் சாப்பிடும்போது கெட்டியா கல் மாதிரி இருந்துடும்.

  நாங்க கிளிமூக்கு மாங்காய்னு சொல்றதை நீங்க கிளிச்சொண்டு மாங்காய்னு சொல்றீங்க. கிளிக்கு 'மூக்கு' (அலகு) தானே உண்டு, உதடு எங்க இருக்கு?

  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அதிரா.

  பதிலளிநீக்கு
 65. //சரோஜா தேவி யை லதான்னு நினைச்சுக்கிட்டேன்//

  ஏஞ்சல்... மறுபடியும் திருத்தம்! உண்மையில் அது சரோஜா தேவியும் இல்லை! அவர் ரத்னா என்றொரு நடிகை!

  :)))

  பதிலளிநீக்கு
 66. வாங்க ஏஞ்சலின்.

  //லதாவை சைட்டிங் :) // - அவங்களைப் பத்தி நமக்கு என்ன கவலை. அவங்களுக்கெல்லாம் குறைந்தது 65-70 வயசாவது ஆகியிருக்கும் (லதாவை நினைக்கறவங்களுக்கு)

  பொங்கலுக்கு (நான் சொல்றது வெண்பொங்கல்) எலுமிச்சை கார ஊறுகாய் தொட்டுப்பாருங்க. நல்லா இருக்கும், மாங்காய் ஊறுகாயைவிட.

  ஏஞ்சலின் - சமையல் செய்முறையைச் சொல்லும்போது உங்களுக்கு அப்பா ஞாபகம்தான் வருது. (எல்லா இடங்களிலும் பார்த்திருக்கிறேன்). பெண்கள், அப்பாகிட்ட அதிக அன்பு வச்சிருப்பாங்க என்பதை நிரூபிக்கிறீங்க.

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 67. அதிரா - சீராளனுக்கு 'கவிஞர்' பட்டம் தாராளமாக் கொடுக்கலாம். அதேபோல இளமதி அவர்களின் திறமைக்கும் 'கவிதாயினி' கொடுக்கலாம். இரண்டுபேரும் திறமைசாலிகள். பாரிஸ் கம்பன் கழக தலைவர் பாரதிதாசன் ஐயா, அவங்க ரெண்டுபேருக்கும் பட்டம் கொடுத்திருக்கார். (பாட்டரசர் பாரதிதாசன் ஐயா எக்ஸ்பெர்ட். அவர் பட்டம் கொடுக்கணும்னா, சும்மாவா?)

  பதிலளிநீக்கு
 68. வாங்க காமாட்சிம்மா. உங்கள் பின்னூட்டம் கண்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். நன்றி.

  பதிலளிநீக்கு
 69. @நெல்லைத்தமிழன் அது பூனைக்கு ஒருநாள் animal anatomy பாடம் எடுக்கணும்னு நினைக்கிறேன் :)

  பதிலளிநீக்கு
 70. @ ஸ்ரீராம், @ நெல்லை, @ அதிரா, @ ஏஞ்சலின் :

  நான் குறிப்பிட்ட கன்னம்..(அதிராவின் கர்.. கேட்கிறதே!) -ம்ஹ்ம்ம்.. அந்தப்பாடல்வரிகள் இப்படிச் செல்கின்றன:

  நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்
  அவன் மாம்பழம் வேண்டுமென்றான்..
  அதைக் கொடுத்தாலும் வாங்கவில்லை..
  இந்தக் கன்னம் வேண்டுமென்றான்..!

  என்று ஆச்சரியப்பட்ட ஈஸ்வரி. நல்லகாலம், அந்தப் படக்காட்சியைப் பார்க்கவில்லை நான். அதனால் பாடலை ரசித்துக் கற்பனையைக் கொஞ்சம் ஓட்ட முடிந்தது!

  வண்டி வேறு ட்ராக்கில் ஓடுகிறது. ட்ராக் மாத்தி இன்றைய ஹீரோவான மாங்காயிடம் வருவோம். கிராமத்தில் வளர்ந்தவனாதலால் கிராமத்து சிறுவர்களோடு சுற்றி, மாமரங்களோடு அட்வென்ச்சர்கள் செய்ததுண்டு. கல்லால் அடித்து சாப்பிடும் மாங்காயின் சுவை, கடையில் வாங்கித் தின்கையில் வருமா! எத்தனை மாந்தோப்புகளில் அலைந்திருக்கிறோம்..வருமா அப்படியொரு காலமினி..?

  எங்களின் சிறுவயதில், எங்கள் அம்மா செய்து போட்ட மெந்திய மாங்காய் ஊறுகாய் -மேலே நெல்லை செய்திருப்பதில் சிறு வேறுபாடு மசாலா விஷயத்தில் இருக்கும் என நினைக்கிறேன் - அம்மா கை மாங்காய்க்கு இணையாகவா பாட்டிலில் அடைத்த ப்ராடக்டுகள் வந்திடும்? சான்ஸே இல்லை. சில சமயங்களில் நான் ஏன் பெரியவனானேன் என்றிருக்கிறது..

  அதிராஜி, தமிழ்நாட்டில் கிளிமூக்கு மாங்காய் எனச் சொல்லித்தான் பழக்கம். கிளிச்சொண்டு மாங்காய்..? சரி..!

  பதிலளிநீக்கு
 71. ஸ்ரீராம் - கவலைகளும், கேள்விகளும் எனக்குள். - இந்தக் கன்னம் என்றுதானே பாடல். அதுல 'ஒரு கன்னம்' என்று ஏன் எடுத்துக்கறீங்க. 'ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம்'னு பாடினது, ரெண்டு கன்னத்திலும் பெரிய குழி விழறதனால இருக்கும் (அழகுக் குழி. நீங்க 90 வயசு பாட்டியை நினைக்கக்கூடாது). இன்னொரு பாட்டில், மாம்பழக் கதுப்பு போல உப்பியிருக்கு என்று கவிஞர் கற்பனை பண்ணறார் (எனக்கு வரும் கேள்வி, யார் நடிக்கப்போறான்னு பார்த்து இந்தக் கவிஞர் பாடல் எழுதுவாங்களா இல்லை, எந்த ரசிகன் பாடல் வரிகளைக் கவனிக்கப்போறான்னு நினைச்சு இந்த டைரக்டர்கள் தாங்கள் விரும்பிய நாயகிகளை நடிக்க வைப்பாங்களா?)

  //அவர் ரத்னா என்றொரு நடிகை!// - அட ராமா (இது வேற 'ராமா'). இவ்வளவு ஆராய்ச்சியா ஸ்ரீராம் செய்யறார்.

  பதிலளிநீக்கு
 72. அஆவ் @ஸ்ரீராம் அப்போ அது சரோஜா தேவியும் இல்லையா :) நானா சினிமா டீட்டெயில்சில் ரொம்ப வீக் :) எனக்கு எல்லார் முகமும் ஒரே மாதிரி தெரியும்

  பதிலளிநீக்கு
 73. ஏஞ்சலின் - "பூனைக்கு ஒருநாள் animal anatomy பாடம் எடுக்கணும்னு" - நான் இந்த விளையாட்டுக்கு வரலை. இளமதியும் 'கிளிச்சொண்டு மாங்காய்'னு சொல்வாங்க. அங்க ரெண்டு ஓட்டு, இங்க ரெண்டு ஓட்டு.

  பதிலளிநீக்கு
 74. ஏகாந்தன் சார்... எனக்கும் சிறுவயது ஞாபகங்கள் அலைமோதுகிறது. எங்கு மாமரம் பார்த்தாலும் (சீசனில்) மாங்காய் பறிப்பது உண்டு (தெரிந்து அல்லது தெரியாமல்). அதேபோல், புளியமரங்கள் சாலையின் இருபுறமும் இருந்த ஊரில் இருந்தபோது (5 வது வகுப்பு), இளம் புளியம்பிஞ்சைப் பறித்து, ஒரு வெங்காயம், உப்பு சேர்த்து, கிடைத்த இடத்தில் (எல்லாம் எங்க வயசுப் பசங்களோட) கல்லைக் கொண்டு நசுக்கி, சாப்பிடுவோம். (இதுக்கு கடைக்குப் போய், கடைக்காரன் வேறுபுறம் திரும்பும் சமயம் உப்பை, ஒரு வெங்காயத்தைத் திருடிக்கொண்டுவருவோம்). இப்போ அந்தக் காலத்தை நினைத்தால் 'சென்ற பாதை திரும்ப வருமா'ன்னு இருக்கு. சின்ன வயதில் செய்த சேட்டைகளை நினைத்தால், எனக்கு இப்போது சிரிப்பாகத்தான் இருக்கு.

  பதிலளிநீக்கு
 75. வாலி வடித்த அந்தப்பாடலுக்கு இசையை விஸ்வனாதன் - ராமமூர்த்தி அமைத்திருந்தனர் என்பதை இப்போதுதான் அறிந்தேன்.

  பதிலளிநீக்கு
 76. @ஏகாந்தன் சார் அண்ட் நெல்லைத்தமிழன்

  //சென்ற பாதை திரும்ப வருமா'ன்னு இருக்கு. சின்ன வயதில் செய்த சேட்டைகளை நினைத்தால், எனக்கு இப்போது சிரிப்பாகத்தான் இருக்கு.// யெஸ் :) கொடுக்காப்புளி அப்புறம் குட்டி நெல்லி இதுவும் சில வீட்டு மதில் இலிருந்து வெளியே விழும்

  இந்த சந்தோஷத்தையெல்லாம் இந்த காலத்து பிள்ளைங்களும் செய்றாங்களானு தெரிஞ்சிக்க ஆசையா இருக்கு

  பதிலளிநீக்கு
 77. @நெல்லை: உங்கள் அனுபவம் கிட்டத்தட்ட ஒத்துப்போகிறது இங்கேயும். எங்கள் கிராமத்தில் புளியமரங்கள், தென்னை மரங்கள் மிக அதிகம். புளியமரம், மாமரம் என அலைகையில் யாருடைய ட்ரவுசர் பாக்கெட்டிலாவது உப்புப்பொட்டலம் (அந்தக்காலத்திய கல் உப்பு) இருக்கிறதா என்று உறுதிசெய்துகொள்வோம். சிலசமயங்களில் ரெண்டு பட்டமிளகாயும் கிடக்கும் பாக்கெட்டில்! புளியம்பிஞ்சோடு, இளம்பச்சை நிற புளியங்கொழுந்து, பழுப்பு, மஞ்சள் நிறப் பூக்கள் எனப் பறித்து சேர்த்துப் பாறையில் வைத்த அறைப்போம். உருட்டி உள்ளே தள்ளுவோம். வீட்டுக்கு திரும்புகையில் ‘எங்கே வெயில் பாழாப்போய்டப்போறதோன்னு காட்டுப்பக்கம் சுத்திட்டு வர்றயா!’ என்கிற அதட்டல் வரவேற்பு..

  அது ஒரு கனவுலகம்..

  பதிலளிநீக்கு
 78. @ ஏஞ்சலின்:
  அடடா.. கொடுக்காப்புளியை மறந்திருந்தேன். நினைவு படுத்தியமைக்கு நன்றி.
  கூடவே, கலாக்காய், சூரப்பழம் (கருப்பாக மிளகு சைஸில்), காரப்பழம் (கொஞ்சம் பெரிசாக ஆரஞ்சு நிறத்தில்)-இரண்டும் முட்புதரில்தான் காய்க்கும்- பறிப்பதே ஒரு சாகஸம் !
  கிராமத்துப் பெண்களின் நாட்டுப்புறப் பாடலொன்று இப்படி ஆரம்பிக்கும் :

  காரப்பழம் தின்ன மக்க,
  காத்தடிச்சு செத்த மக்க..!

  நல்லகாலம், தப்பித்தோம் ..

  பதிலளிநீக்கு
 79. ///Angel said...
  அஆவ் @ஸ்ரீராம் அப்போ அது சரோஜா தேவியும் இல்லையா :) நானா சினிமா டீட்டெயில்சில் ரொம்ப வீக் :) எனக்கு எல்லார் முகமும் ஒரே மாதிரி தெரியும்////

  ஹையோ ஹையோ ஏதோ சினிமாவில மட்டும்ம்ம்ம்தேன்ன்ன் வீக்க்காஆஆஆஆஆஆமேஏஏஏஏஏஏஏ என்னால முடியல்ல வைரவா:) மீ நடந்தே காசிக்குப் போயிடுவேன் போல இருக்கே:))...

  எச்சூச்ச்மீஈஈஈஈஈஈஈ நெல்லைத்தமிழன்.. அலகு எண்டால் ஒத்த சொல் மூக்கு என ஆர் ஜொன்னதூஊஊஊஊஊஊஉ.. ஹையோ அலகு என்றால் உதடு.. உதடு எண்டால்ல்ல் சொண்டூஊஊஊஊஊஊஊ... என்னை ஆரும் பேய்க்காட்ட முடியாதூஊஊஊஉ மீக்கு டமில்ல டி ஆக்கும்:))..

  நில்லுங்கோ கன்னம் மட்டருக்கு வாறேன்ன்ன்:))

  பதிலளிநீக்கு
 80. ஏகாந்தன் Aekaanthan ! said...
  //////அதிராஜி,///// தமிழ்நாட்டில் கிளிமூக்கு மாங்காய் எனச் சொல்லித்தான் பழக்கம். கிளிச்சொண்டு மாங்காய்..? சரி..!//

  ஆவ்வ்வ்வ்வ் நேக்கு டமில்ல டி .. அத்தோடு நேற்று எனக்கு அரபு மொழியும் தெரியுமெண்டு சொன்னதாலதான் போல மருவாதை கூடிட்டேஏஏஏஏஏஏஏ போகுதூஊஊஊஊ:)) ஹையோ என்னால முடியல்ல:))...

  ஏகாந்தன் அண்ணன் ... நெல்லைத்தமிழன் எஸ்கேப் ஆகிறார்ர்..:) ஸ்ரீராம் கன்னத்தை மட்டுமே பேசிட்டு நழுவிட்டார்ர்:)) நீங்க உண்மையைச் சொல்லுங்கோ.. மூக்குக்கு அலகு என ஒத்த சொல் இருக்கா? அலகு எண்டால் சொண்டு/உதடு தானே?:)).. நான் தேம்ஸ்ல ஒரு பாதியை வித்தாவது இதுக்காக வழக்காட ரெடீஈஈஈஈஈஈ:))..

  பதிலளிநீக்கு
 81. @ அதிரா:

  அலகென்றால் வாய்..உதடு என்றுதான் வரும் . சரிதான்.

  ஆனால் ஏதாவது சிவப்பான ஒன்றைக் குறிப்பிடுகையில், கிளியின் மூக்குபோல் சிவந்திருக்கும் என்றல்லவா சொல்வார்கள். பெண்களில்கூட சிலருக்கு மூக்கு முன்னால் கொஞ்சம் கீழ்நோக்கி வளைந்திருந்தால் (கண்ணாடி தேடாதீர்கள்), அவர்களை ‘யாரு..அந்தக் கிளிமூக்கா சொன்னா?’ என்று குறிப்பிடுவதை கவனித்திருக்கிறேனே..

  பதிலளிநீக்கு
 82. @ஏகாந்தன் சார் மற்றும் எலலாருக்கும் ..இப்போ நான் ஒரு ஐடியா தரேன் அத்துப்படி செய்ய சொல்லுங்க பூனையை :)

  அதாவது கிளிமூக்கு அரக்கன் அப்படின்னு ஒரு பேரை முகப்புத்தகத்தில் கேள்விப்பட்டிருக்கேன் ..அதிரா உங்களுக்கு என்ன சந்தேகம்னாலும் ஒரு போய் கேளுங்க மூக்கு என்றால் சுண்டா சாண்டா சொண்டான்னு :)
  கேட்டு விசாரிச்சிட்டு வாங்க அதிரா நாங்க இங்கியே வெயிட்டிங்

  இனிமே வாயே திறக்க மாட்டாரே பூனையார் :)

  பதிலளிநீக்கு
 83. ஓகே. கன்னம் மேட்டரை இதோடு விட்டு விடுவோம் (இன்னொரு பாட்டில் மாம்பழத்தை விட்டு விட்டு 'செம்பவளக் கன்னங்கள்' என்று வரும். அதுவும் இப்போது வேண்டாம்!) தஞ்சையில் நான் மாங்காய் பறித்த அனுபவங்கள் பெரிய கதை! திருட்டு மாங்காய்தான். ஜட்ஜ் வீட்டில் பணியாளர்கள் ஒருமுறை மோட்டார் ரூமில் என்னையும் என் நண்பனையும் வைத்துப் பூட்டி விட்டார்கள். அண்ணன் வந்து காப்பாற்றினார்! வாண்டையார் வீட்டில் பெரிய பெரிய நாய்களை அவிழுத்து விட்டார்கள். சுவரேறி தப்பித்தேன். அது ஒரு (அ)சிங்கமான இளமை வரலாறு!

  பதிலளிநீக்கு
 84. மாங்காய்க்காகவா மோட்டர் ரூமில் அடைச்சு , பைரவர்களை அவிழ்த்து விட்டாங்க சே மோசம் மனுஷங்க

  நானாயிருந்தா ..வாப்பா இந்த எடுத்திட்டுப்போன்னு ரெண்டு மூணு மாங்காய் கட்டி கொடுத்திருப்பேன் .திரும்பவும் திருடும் ஐடியா வந்தே இருக்காது :)

  பதிலளிநீக்கு
 85. தீர்ப்பு ஏகாந்தன் அண்ணன் ஜஜ் மூலம் .. அதிராவுக்கு ஜாதகமாக:) வெளியாகியிருக்கூஊஊஊ:) நெல்லைத்தமிழன் ஓடி வந்து படிங்கோ:).... இருப்பினும் ஏகாந்தன் அண்ணன் மீடையில மண் ஒட்டவே இல்லை என்றே ஜொள்ளுறார் கர்ர்ர்ர்ர்ர்ர்ர் :)...

  ஸ்ரீராம் உங்க மாங்காய்க் கதை படிச்சேன்.... ஆஆஆ....சிங்கமா இருக்கூஊ ஹா ஹா ஹா:)....

  அஞ்சூஊஊ என்னாதூஊஊஊ வாப்பவோ? இது எப்ப தொடக்கமாக்கும்:) ஹையோ மதம் மாறிட்டீங்களோ.... உலகத்தில ஒரு பகலுக்குள் என்னமோ நடந்திடுதே:).... வைரவா என்னைக் காப்பாத்துங்ங்ங்ங்... :)

  பதிலளிநீக்கு
 86. //நெல்லைத் தமிழன் said...
  வாங்க கவிதாயினி இளமதி. வெண்பாவை ரசித்தேன்……//

  எழுதிய வெண்பாவை ரசித்துப் பாராட்டியமைக்கு மிக்க நன்றி சகோ நெல்லைத் தமிழன்!
  ஆஹா…. ரசித்த கையோடு கவிதாயினிப் பட்டமா?…. :))
  பாருங்கள் அதிரா அதற்கு என்ன றியாக்‌ஷன் தந்திருக்கிறார் எண்டு..:))

  ஜேர்மனியினரின் கடைகளில் ஆபிரிக்க மாங்காய்கள் வருவதுண்டு.
  நாங்கள் ருசித்துச் சாப்பிட்ட இன மாங்காய்கள் இங்கு கிடைப்பதில்லை.
  நம்மவர் நடாத்தும் ஏசியன் கடைகளில் நல்ல மாம்பழங்கள் விற்பார்கள். காய் மாங்காயும் உண்டு. சரியான புளிப்ப்ப்ப்பு அவை..:)

  /// athiraமியாவ் said...
  ///நெல்லைத் தமிழன் said...
  வாங்க கவிதாயினி இளமதி. வெண்பாவை ரசித்தேன்.///

  அவர்களே ஜொள்ள மறந்திட்டீங்க ஹா ஹ ஹா.. இப்போ வருவா சகோ என்னைக் கவிதாயினி என ஜொள்ள வாணம் ஜஸ்ட் இளமதி போதும்:)….///
  கர்ர்ர்ர்….. :))அதிராஆ..ஆ… ஏன்ன்ன் இங்கையும் அங்கத்தை செய்தியைக் கொண்டந்து
  அலசுறீங்கள்….. வேண்டாம்ம்ம் போதும்..:)) நான் இனி யார் எப்பிடிக் கூப்பிட்டாலும் ஒண்ணும் சொல்லமாட்டேன்…சரியா..:))

  // நெல்லைத் தமிழன் said...
  அதிரா - சீராளனுக்கு 'கவிஞர்' பட்டம் தாராளமாக் கொடுக்கலாம். அதேபோல…….//
  சகோ!.. நீங்கள் சீராளனைக் கவிஞர் எனக் கூறலாம். என்னையும் அவ்வாறு கூறுவதைக் கேட்க ரொம்ப ( அதிரா பாஷையில்) ஷையாக இருக்கிறது!.. நான் ஏற வேண்டிய படிகள் இன்னும் இருக்கிறது. முழுமையான மரபுப் பாவியற்றலை அடையப் பயணிக்கும் தூரம் நீண்டு கிடக்கிறது.

  பாரதிதாசன் ஐயா வழிகாட்டலில் நான் மிக மிகச் சிறிய அளவே இதுவரை கற்றுள்ளேன்.
  எங்களை ஊக்குவிக்கு முகமாகப் பட்டமளிப்புச் செய்துள்ளார்.
  அந்தப் பட்டமெல்லாம் படிக்கும் ஆவலை தூண்டுவதற்கான படிமுறைகள்!..:)

  எங்களுக்குக் கிடைக்கும் பாராட்டு எல்லாம் எங்கள் ஆசானுக்கே சேரும்!
  தங்களின் அன்பான பாராட்டிற்கு உளமார்ந்த நன்றி சகோ நெல்லைத் தமிழன்!

  பதிலளிநீக்கு
 87. ஸ்ரீராம் - வேண்டாம்னு சொன்னா 'வேண்டும்'னு சொல்றமாதிரி என் காதுல விழுதே.

  செம்பவளக் கன்னங்கள் - பழைய காலத்தில் இயல்பான நாணத்தில், கன்னங்கள் சிவந்தன. இப்போ அதுக்கு சான்ஸ் இல்லாததுனால, மேக்கப் கிட் வந்துவிட்டன. உங்கள் வரிகள், 'ஒரு நாள் யாரோ என்ன பாடல் சொல்லித் தந்தாரோ' என்ற திரைப்படப் பாடலை நினைவுகொள்ள வைத்துவிட்டது.

  பதிலளிநீக்கு
 88. இளமதி - உங்கள் பின்னூட்டம் படித்தேன்.
  //நாங்கள் ருசித்துச் சாப்பிட்ட இன மாங்காய்கள் இங்கு கிடைப்பதில்லை.// - இங்க இப்போது கென்யா மாம்பழம் கிடைக்கிறது. பார்க்க அழகா இருக்கும். வாசனையே இருக்காது. இதற்கு முன்பு எகிப்து மாம்பழம் கிடைத்துக்கொண்டிருந்தது (முழுப் பச்சை.. உள்ளே ஆரஞ்சு வண்ணம். வாசனை இல்லை, ஆனால் இனிப்பு உண்டு. 1 மாம்பழமே 1 கிலோவுக்கு மேல் இருக்குமாறு கிடைக்கும்). மார்ச்சிலிருந்து இந்திய மாம்பழங்கள் வரத்து ஆரம்பித்துவிடும். பாதாமி, ராஜ்பூரி, அல்ஃபோன்சா.. அதற்கு சற்று முன்பு ஏமன் போன்ற நாடுகளிலிருந்து மாம்பழம் வரும். பிறகு மே-ஜூனில் பாகிஸ்தான் மாம்பழம் வர ஆரம்பித்துவிடும். ஜூலை/ஆகஸ்டில் பாகிஸ்தான் பாதாமி (பங்கனப்பள்ளி மாதிரி) வரும்போது இந்திய மாம்பழ சீசன் முடிவுக்கு வரும். பிறகு எகிப்து, கென்யா. கிட்டத்தட்ட 9 மாதங்கள் மாம்பழம் கிடைக்கும்.

  பதிலளிநீக்கு
 89. ஏகாந்தன் சார்.. நான் 2-3வது வகுப்பு படித்தபோது, எங்கள் தெரு முக்கில், ஒரு இஸ்லாமிய பாட்டி, வேகவைத்த நெல்லிக்காய்களில் காரம் போட்டு, மாங்காய், அரி நெல்லிக்காய், கொடுக்காய்புளி போன்ற பலவும் கொண்டுவந்து தரையில் விரித்த சாக்கில் விற்பார். அதனை அசூயை இல்லாமல் சாப்பிட்டிருக்கிறேன். இப்போ ஹோட்டல்களே, சுத்தமாக இல்லைனா சாப்பிடப் பிடிப்பதில்லை. அவையெல்லாம் ஒரு காலம்தான்.

  இப்போ, எப்போதாவது திருப்பதிக்கு நடந்து செல்லும்போது (இனி அப்படி நடக்கமுடியுமா என்று தெரியலை), அங்கு, கிளிமூக்கு மாங்காய் காரம் போட்டு, முழு மாங்காயா 5-10 ரூபாய்க்கு விற்பார்கள் (காளிகோபுரம் தாண்டியவுடன்). அதை சாப்பிடப்பிடிக்கும். (கண் முன்னாலதான் மாங்காயை கொஞ்சமா திருத்துவாங்க).

  பதிலளிநீக்கு
 90. ஏஞ்சலின் - //நானாயிருந்தா ..வாப்பா இந்த எடுத்திட்டுப்போன்னு ரெண்டு மூணு மாங்காய் கட்டி கொடுத்திருப்பேன் //

  இதுபற்றி ஒரு கதை படித்திருக்கிறேன். எப்போதும் இளமை முறுக்கு இருக்கும்போது (50-60 வயதுவரை கூட), எல்லாப் பொருட்களின்மீதும் பற்று இருக்கும், யாருக்கும் கொடுக்கத் தோன்றாது. ஆனால் அதற்குப் பின்பு, தளர்வுற்றதும், எதுக்காக இப்படி பற்று கொண்டோம்னு இருக்கும். நான் படித்த கதையில், வாதா மரங்களிலிருந்து வாதாங்காய் பறிக்க வரும் குழந்தைகளை ஒரு தாத்தா விரட்டுவார். கீழே விழும் வாதாம்பழத்தை ஒரு அறையில் சேமித்துவைப்பார். ஒரு சமயத்தில் தாத்தா இறந்ததும், பாட்டி அவர் நினைவாக, பசங்களை வரச்சொல்லி, அறை முழுவதும் சேமித்துவைத்த வாதாம்பழங்களை எடுத்துக்கொள்ளச்சொல்வார்.

  எதையுமே நாம் கொண்டுவரவில்லை. எதையுமே கொண்டுசெல்லமுடியாது. இடையில் நகை, பணம் போன்ற பலவற்றின்மீது நாம் வைக்கும் ஆசை, அர்த்தமே இல்லாதது.

  என் அப்பா சொன்ன வார்த்தைகளோடு இதை முடிக்கிறேன்.

  எனக்கு 10 ரூபாயின் மதிப்பு தெரியும். அதைச் சேர்க்க எவ்வளவு கஷ்டப்பட்டேன் என்று எனக்குத் தெரியும். அந்த 10 ரூபாயை உன்னிடம் கொடுத்தால் உனக்கு அது 'வெறும் பத்து ரூபாய்'. இதைப்போல, உனக்கு, நீ சேர்த்த 100 ரூபாய் பெரிதாகத் தெரியும், உன் பையனுக்கு அது 'வெறும் நூறு ரூபாய்'.

  பதிலளிநீக்கு
 91. மாங்காய் பதிவு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது

  பதிலளிநீக்கு
 92. அசோகன் குப்புசாமியின் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!