வியாழன், 25 ஏப்ரல், 2024

சொல்லாமல் வைத்திருக்கும் சுகம்


உன்னைப் பற்றியே
இருக்கிறது
என்னிலிருந்து தொடங்கும்
எந்தக் கவிதையும்

உன்னைச் சேர்க்காமல்
என்றும் முடிந்ததில்லை
என்
விருப்பப் பட்டியல்

பூவைப் பாடச் சொன்னால் 
மனதில் 
உன் புன்னகை 
விரிகிறது 
தென்றலைப் பாடினால் 
உன் ஸ்பரிசம் 
தெரிகிறது 
எதைப் பாடினாலும் 
அதில் 
நீ வந்து விடுகிறாய் 
நீயும் நானும் இல்லாமல் 
உன்னையும் என்னையும் இணைக்காமல் 
எதையும் நினைக்க முடிவதில்லை 
என்னால் 
எதிலும், எல்லாவற்றிலும் 
நீ இருப்பாய்!

மறக்க முடியாமல் 
மனம் 
மருகும்போதெல்லாம் 
கண்கள் கலங்கி 
காட்சியை 
மாற்ற முயன்று 
தோற்கின்றன 

புரியாமல் போன உன் மீது 
வரும் கோபத்தை விட, 
என்னை உனக்கு 
புரிய வைக்க தெரியாத 
என் மீதுதான் 
எனக்கு 
அதிக கோபம் 
வருகிறது.

கைகோர்த்து 
முகம் சேர்த்து 
கன்னம் நனைத்து 
இறுக அணைத்து 
இச்சை தீர்ந்தால்தான் 
காதலா?
விழிகளில் வாங்கி 
இமைகளால் மூடி 
இதயத்தில் இருத்தி 
சொல்லாமல் வைத்திருப்பதும் 
சுகம்தான்.

சொன்னால்  
மறுக்கப்படுவோமோ 
என்று  
சொல்லாமல் 
மருகுவது வேறு சுகம்.
காதலில் ஒரு ரகம் ......

படித்து விட்டு 
பத்திரமாய் மேசை மேல் 
வைத்தாள் மீரா 
என் கவிதைகளை 

"நல்லா எழுதி இருக்கீங்களே..
நாயகி யாரோ?"

"காதலி இருந்தால்தான் 
கவிதை எழுத வேண்டுமா என்ன?"
கைகளை மோவாயில் இருத்தி
ஈர்க்கும்  
அவள் கண்களை பார்த்தேன்

"சொல்ல நினைத்தால் சொல்லலாம் 
சொன்னால் 
உங்கள் பாரம் குறையலாம்"

ஏனோ எனக்கும் 
இன்று 
இவளிடம் சொன்னால் என்ன 
என்று தோன்றியது.

அண்மையில் 
வந்தவளிடம் எதற்கு என் 
சொந்தக் கதை?

எண்ணம் தோன்றினாலும் 
எழுந்து நடந்தபடி
தொடங்கினேன்..
 

உன் பெயர்தான் அவளுக்கும்..
பள்ளிக் காலத்தில் 
பார்த்தது 
பளிச்சென்றிருப்பாள் 
ஈரக் கூந்தலில் இணைந்து 
இருக்கும் வாசமல்லிகை 
தாண்டிச் சென்ற சிலபோது 
அவள் அமர்ந்த இருக்கையில் 
உதிர்ந்த ஒரு மல்லிகை இதழும் 
ஒரு ரோஜாவும் 
இன்றும் என் புத்தகத்தில் 
வைத்திருக்கிறேன்.
அவள் அமர்ந்த இருக்கையில் 
கொஞ்ச நேரம் 
அமர்ந்து 
முக்தி அடைய 
முயற்சித்திருக்கிறேன் 

மூச்சுக் காற்றில் அவள் வாசம் 
மனம் முழுவதும் 
அவள்மேல் நேசம் 
அவளிடம் இருக்கும் உடைகள் 
எனக்கு மனப்பாடம் 
அதைத்தவிர ஏறியதில்லை
வேறு பள்ளிப் பாடம் 
வைத்திருக்கிறேன் நானும் 
அவள் நினைவாய் 
ஒரு பாதி பென்சில், ஒரு கிளிப்,
இன்னும் சில உதிரிப் பொருட்கள் 
பாட்டி கொடுத்தாள் 
என்று பத்திரமாய் வைத்திருந்த 
அவள் பேனா ஒன்றும் 
எடுத்து வைத்திருக்கிறேன் 
பத்திரமாய் இன்னும்  
காணாமல் தேடியவள் கண்கள் 
என்னையும் ஒருமுறை தீண்டி 
தாண்டின.

பள்ளிக் காலம்தானே என்று 
சொல்லி விட துணியவில்லை 
மனம் 
தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தேன் 
தினம்  

கனிந்து உருகி 
என் 
கண்களில் வழிந்த 
காதலை 
அவள் 
கண்டு கொண்டாளா அறியேன் 
சந்திக்கத் துணிந்ததில்லை 
அவளை 
ஒரு நாளும் தனியே 

கடக்கும் நேரங்களில் 
கிடைக்கும் ஓரக்கண்
பார்வைகளை 
நேச முத்திரையிட்டு  
நெஞ்சுக்கூட்டில் 
கொஞ்சம் கொஞ்சமாய் சேமித்து 
இன்றும் 
பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன்.

பள்ளிக்காலம் முழுதும் 
வருவாள் 
கல்லூரிக்காலம் நுழையும் நேரம் 
சொல்லிக்கொள்ளலாம் 
என்று 
என் காதல் முட்டையை 
கவனமாய் 
அடைகாத்து வந்தேன். 

சொல்லிக்கொள்ளாமலே 
ஒருநாள் 
பள்ளியை விட்டுப் போனாள் 
வருவாள் வருவாள் 
என்று காத்திருந்து 
கலங்கிய கண்களில் 
காட்சிகள் மறைய 
விண்டு போனது மனம் 
சிரிப்பிழந்து பேச்சிழந்து 
நானும் ஆனேன் நடைபிணம்.

சொல்லாக் காதல் 
செல்லாக் காசானது 
படித்து முடித்து பணிக்கு வந்தாலும் 
அடைகாத்த முட்டை 
உடையும் 
நாளுக்காய்க் காத்திருக்கிறது 
பணியில், சாலையில், உணவகத்தில் 
அனுதினம் கடக்கும் பெண்களில் 
தேடுகிறேன் அவளை நாளும் 
பனித்திரை விலக்கி 
ஈரக்கூந்தலில் வாசமல்லியுடன் 
ஒருநாள் 
எதிர்ப்படுவாள் என் தேவதை 
என்று காத்திருக்கிறேன் நானும் 

இதுவரை 
யாரிடமும் சொன்னதில்லை 
சொல்லமனம் வந்ததில்லை 
நேரத்தைச் செலவிட்டு உன்னிடம் என் 
பாரத்தை இறக்கி வைத்தேன் 
ஏனென்று புரியவில்லை 
காரணம் தெரியவில்லை..."


சற்றே மௌனம் 
உற்றுப்பார்த்தாள் விரல்களை 
நகங்களை ஆராய்ந்தபடி 
நாலுநிமிடம் யோசித்தாள் 
ஒன்றும் சொல்லாமல் 
வெளியில் நடந்தாள் 
வேதனையுடன் நின்றேன் 
விம்மலை அடக்கி
 
'சொல்லி இருக்க வேண்டாமோ?
மதிப்பிழந்து போனேனோ?'

சிறுபொழுதில் மறுபடி 
வந்தாள் எனை நோக்கி 
கூந்தலைப் பிரித்து 
கைகளால் அளைந்து 
நுனியில் முடிச்சிட்டாள் 
கைகளில் வைத்திருந்த 
மல்லிகைச் சரமொன்றை 
பின் கூந்தலில் நுழைத்து 
சரிபாதியாய் பிரித்து 
தொங்கவிட்டாள் 
தலையை உதறி 
முகத்தை நிமிர்த்தி 
என்னை நோக்கினாள் 
கையில் ஒற்றை ரோஜா 

"தெரியவில்லையா என்னை இன்னும்?"

  ===================================================================================================

நியூஸ் ரூம் 

பானுமதி வெங்கடேஸ்வரன் 

News room 25-04-24

- வெப்ப அதிகரிப்பு காரணமாக பாக் ஜலசந்தி உள்ளிட்ட பகுதிகளில் பவளப்பாறைகள் பரவல் குறைந்து வருவதாக தேசிய கடல் ஆய்வு மைய அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

- தமிழகத்தில் ஒரே நாளில் டாஸ்மாக்கில் 400 கோடிக்கு மது விற்பனை. தமிழகத்தில் தேர்தலை முன்னிட்டு இந்த மாதம் 17,18,19 ஆம் தேதிகளில் டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டன. மூன்று நாட்களுக்கு தேவையான மதுவை வாங்கி ஸ்டாக் வைத்துக் கொள்ள டாஸ்மாக்கில் குவிந்து 400 கோடிக்கு வியாபாரம் செய்திருக்கிறார்கள் குடிமகன்கள். 

- கொல்கட்டாவில் அரசு தொலைகாட்சியில் லோபாமுத்ரா சின்ஹா என்பவர் வெப்ப அலை தொடர்பான செய்தி வாசித்துக் கொண்டிருந்த பொழுது திடீரென வார்த்தைகள் குழறி, இருக்கையிலேயே மயங்கி சரிந்தார். கடும் வெப்ப அலை காரணமாக அவருடைய ரத்த அழுத்தம் குறைந்து,மயங்கியதாக தெரிகிறது. - What a coincidence!

- பொதுவாகவே கோடையில், ஜுஸ், ஐஸ்க்ரீம் போன்றவைகளின் நுகர்வு அதிகமாக இருப்பதால் சர்க்கரையின் தேவை அதிகரிக்கும். இந்த வழக்கத்தைவிட கோடையில் வெப்ப அலை அதிகம் என்பதோடு தேர்தல் சூடும் சேர்ந்து கொண்டதில் சர்க்கரையின் தேவை அதிகரித்துள்ளது.

நிழல் இல்லாத நாள் பெங்களூருவில் அரிய நிகழ்வு.  பெங்களூரு பூமிக்கு செங்குத்தாக சூரியன் இருக்கும் போது நிழல் இல்லாத நாள் ஏற்படும். இந்த தனித்துவமான வானியல் நிகழ்வு பெங்களூருவில் நேற்று நிகழ்ந்தது.  நிழல் இல்லாத நாள் ஆண்டுக்கு இரு முறை கடக ரேகைக்கும், மகர ரேகைக்கும் இடைப்பட்ட பகுதிகளில் நிகழும். அங்கு நண்பகலில் சூரியனின் கதிர்கள் பூமியின் மேற்பரப்பில் செங்குத்தாக இருக்கும்.  இதனால் செங்குத்தாக இருக்கும் கட்டடங்கள், பொருட்கள், மனிதர்களின் நிழல் தரையில் விழாது.  பெங்களூரு 13 டிகிரி வடக்கு அட்ச ரேகையில் அமைந்துள்ளதால், நேற்று இந்த நிகழ்வைக் காணும் வாய்ப்பை பெற்றது.  இந்த நிகழ்வு பூமியின் அச்சுடன் தொடர்புடையது. அப்போது, சூரியன் குறிப்பிட்ட அட்சரேகைக்கு நேர் உச்சியில் இருக்கும் போது இந்த அற்புதமான தருணம் ஏற்படும். சுற்றுப்புறங்கள் நிழல்கள் இல்லாத பகுதியாக மாறும்.



==========================================================================================

சுவாரஸ்யமாய் இரு செய்தி...  (இங்கு 'க்ளிக்'கலாம்) 

புதுடில்லி: குஜராத்தில் 2005ல் கண்டறியப்பட்ட புதைபடிமப் பொருள், 47 கோடி ஆண்டுகளுக்கு முன் இருந்த, 'வாசுகி' இன பாம்பைச் சேர்ந்தவை என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

குஜராத் மாநிலம் கட்ச் பகுதியில் உள்ள நிலக்கரி சுரங்கத்தின் அருகே, 2005ம் ஆண்டு தொல்லியல் துறை ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, மிக நீளமான உருவ அமைப்புடன் கூடிய படிமப் பொருள் ஒன்றை கண்டறிந்தனர். அது, முதலை இனமாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதினர்.

எனினும், அந்த படிமப்பொருள் தொடர்பாக உத்தரகண்டில் உள்ள ஐ.ஐ.டி., ரூர்க்கியைச் சேர்ந்த டெபாஜித் தத்தா, சுனில் பாஜ்பாய் ஆகிய விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். இவர்களது ஆய்வுக் கட்டுரை, 'ஜர்னல் சயின்டிபிக் ரிப்போர்ட்ஸ்' என்ற அறிவியல் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஆய்வுக் கட்டுரையில், 'கடந்த 2023ல் கட்ச் பகுதியில் கண்டறியப்பட்ட புதைபடிமப் பொருளில், 27 பாகங்களின் எலும்புகளை ஆய்வு செய்தபோது, அவை ஒன்றுடன் ஒன்று தொடர்புடையதாக இருந்தது. அது, மிக நீளமான பாம்பு இனத்தைச் சேர்ந்தது.

'குறிப்பாக, இது, பழங்காலத்தில் வாழ்ந்ததாக நம்பப்பட்ட வாசுகி பாம்பு இனத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம்' என தெரிவித்துள்ளனர். 'இதன் நீளம் 36 அடி முதல் 50 அடி வரை இருந்திருக்க வாய்ப்பு உள்ளது. நீண்ட மற்றும் உருளை வடிவமாக இந்த பாம்பு இருந்திருக்கும்.

'முழுமையான எலும்புக்கூடு இல்லாததால், இந்த பாம்பின் மொத்த நீளம் எவ்வளவு என்பதை கண்டறிய முடியவில்லை' என, விஞ்ஞானிகள்தங்கள் ஆய்வுக் கட்டுரையில் சுட்டிக்காட்டி உள்ளனர்.3

இதற்கு முன், தென் அமெரிக்காவின் கொலம்பியாவில் நடந்த புதை படிவ ஆராய்ச்சியில், அழிந்துபோன உயிரினமான டைட்டானோபோவா என்ற மிகப்பெரிய பாம்பு இனத்தின் முழு உடல் பாகங்கள் கண்டறியப்பட்டன. பாம்பின் நீளம் 43 அடியாக இருந்தது. வாசுகி பாம்பு, புராணங்களில் நாகங்களின் அரசனாக திகழ்ந்ததாகவும், 50 அடி வரை வளரக்கூடியதாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

===========================================


பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் நீல சோலைபாடி, பழுப்பு மார்பு ஈபிடிப்பான் ஆகியவை புது வரவாக வந்துள்ளது பறவைகள் கணக்கெடுப்பில் உறுதியாகி உள்ளது.

சென்னையில் வேளச்சேரி முதல் மேடவாக்கம் வரை பள்ளிக்கரணை சதுப்பு நிலம் பரவி உள்ளது. இப்பகுதியை பாதுகாக்கப்பட்ட இடமாக வனத்துறை பராமரித்து வருகிறது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், தமிழகம் வழியே இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு செல்லும் வலசை பறவைகள் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்துக்கு வருவது வழக்கம். இந்த வகையில் இங்கு, 196 வகை பறவைகளின் வருகை ஆதாரப்பூர்வமாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

இது குறித்து சென்னை மாவட்ட வன அலுவலர் சரவணன் கூறுகையில், ''வலசை சீசன் முடியும் நிலையில் பள்ளிக்கரணை சதுப்பு நில பகுதியில் நிலபரப்பு பறவைகள் வருகை அதிகரித்துள்ளன. இது தொடர்பான விபரங்களை திரட்ட மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பு தற்போது தான் முடிந்துள்ளது,'' என்றார்.

இது குறித்து, இங்கு பறவைகள் கணக்கெடுப்பில் ஈடுபட்டு வரும், 'தி நேச்சர் டிரஸ்ட்' அமைப்பின் நிறுவனர் திருநாரணன் கூறியதாவது:

பள்ளிக்கரணையில் தற்போது புது வரவாக, நீல சோலைபாடி, பழுப்பு மார்பு ஈபிடிப்பான் ஆகிய இரண்டு பறவைகள் இணைந்துள்ளன. இத்துடன் சேர்த்து இங்கு, 198 வகை பறவைகளின் வருகை ஆதாரப்பூர்வமாக உறுதியாகி உள்ளது.

இதில் நீல சோலைபாடி எனப்படும் பறவை இங்கு அரிதாக வந்துள்ளது.


இமயமலையை ஒட்டிய பகுதிகளில் இனப்பெருக்கம் மேற்கொள்ளும் வலசை பறவையான இது, இலங்கை செல்லும் வழியில் பள்ளிக்கரணை போன்ற இடங்களுக்கு வருகிறது.


இதே போன்று பழுப்பு மார்பு ஈ பிடிப்பான், தென் சீனா மற்றும் மியான்மர், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் காணப்படும். சிறு பூச்சிகளையே இது உணவாக எடுத்துக்கொள்ளும் என்பதால், நீர் நிலை மட்டுமல்லாது புதர் காடுகளில் தான் இது காணப்படும்.

இது மட்டுமல்லாது, நீல தொண்டை ஈ பிடிப்பான், செந்தலை பூங்குருவி, அரசவால் ஈ பிடிப்பான், கொண்டை குயில், பழுப்பு ஈ பிடிப்பான் போன்ற பறவைகளும் பள்ளிக்கரணையில் தற்போது முகாமிட்டுள்ளன.

நீர் நிலை மட்டுமல்லாது புதர்காடுகள் அடிப்படையிலும் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் உயிர் சூழலில் முன்னேற்றம் இருப்பதை இது காட்டுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


==================================================================================

இணையத்தில் படித்தது...  இதயத்தில் நின்றது...

மாடர்ன் தியேட்டர்சிலிருந்து ஒரு பிரிவு காலி பண்ணிக் கொண்டு சென்னைக்குப் போனபோது லாரியின் ஓரமாக நின்றுகொண்டிருந்த ஒரு சிறுவனைக் கையைக்காட்டி ‘இவனை அழைத்துப் போங்கள். ‘ஜெனோவா’ படத்தில் ஹிட்டான பாடல்களுக்கெல்லாம் மெட்டமைத்தவன் இந்தப் பையன்தான்’ என்றாராம் எஸ்.எம்.சுப்பையா நாயுடு.

அதன்படியை அந்தப் பையனையும் சென்னைக்கு அழைத்து வந்திருக்கிறார்கள். அவர்தான் எம்.எஸ்.விஸ்வநாதன்.

அதை மனதில் வைத்துக்கொண்ட எம்.எஸ்.வி பாப்புலரான பிற்பாடு எஸ்.எம்.சுப்பையா நாயுடு மறைந்து போகிறார். நேராகச் சுடுகாட்டிலிருந்து எஸ்எம்எஸ்ஸின் மனைவியைக் கையோடு வீட்டிற்கு அழைத்துவரும் விஸ்வநாதன் தமது மனைவியைக் கூப்பிட்டுச் சொன்னாராம்,

“இதோ பார்…. இன்றுமுதல் இவர்கள் நம் வீட்டில்தான் இருக்கப்போகிறார்கள். சாகும்வரைக்கும் நான் காப்பாற்றுவதாக வாக்குக் கொடுத்திருக்கிறேன். எனக்கு சாப்பாடு போடாவிட்டால்கூடப் பரவாயில்லை. இவர்களுக்கு சாப்பாடு போட்டு நீ கவனித்துக்கொள்ள வேண்டும்”

கடைசிவரைக்கும் அதன்படியே நடந்து அவர்களுக்கான ஈமக்கிரியைகளையும் அவர்தான் செய்தார்.

ஒரு படத்தில் கண்ணதாசன் மெஸ்ஸை நடத்துபவராக விஸ்வநாதன் நடித்தார். அதில் அவர் சம்பளம் வாங்கியதும் செய்த முதல் வேலை பணத்தில் சரிபாதியை ராமமூர்த்திக்குக் கொண்டுபோய்க் கொடுத்துவிட்டு வந்ததுதான்.

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது எம்.எஸ்விக்கு ஒரு விழா எடுத்தார். அதில்  பணமுடிப்பும் அவருக்கு வழங்கப்பட்டது. இந்த விழாவிற்கு வருகை தரவேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா சொன்னபோது அவரிடம் விஸ்வநாதன் சொன்ன வார்த்தை ‘ராமமூர்த்தியையும் அழைத்தால் வருகிறேன்’

அப்படிப்பட்ட நற்குணம் கொண்டவர் எம்.எஸ்.வி.

எம்.எஸ்.விஸ்வநாதன் பற்றி அவரது மகள் ஒரு பேட்டியில் சொன்னது;

“அப்பா ரொம்பவும் மனவருத்தப் பட்ட சமயம் என்றால், அது ஸ்ரீதர் தயாரித்து வெளியான ‘இளமை ஊஞ்சலாடுகிறது’ பட வெளியீட்டின்போதுதான்.

“ஸ்ரீதரே என்னை விட்டுவிட்டார்” என்று வருத்தப்பட்டவர், காலை டிபனைக்கூட சாப்பிடவில்லை. போய் அவரது அறையில் நுழைந்து கதவைச் சாத்திக் கொண்டார்.

நாங்களெல்லாம் பயந்துவிட்டோம். மதியம் ஒரு மணி இருக்கும், கதவைப் படாரென்று திறந்துகொண்டு அவரே வெளியே வந்தார்.

“இதுக்கெல்லாம் கவலைப்பட்டால் எப்படி? நான் அறிமுகமானபோது இதே போலத்தானே நடந்திருக்கும்? அப்போது இன்னொரு இசையமைப்பாளர் கவலைப்பட்டிருப்பார் இல்லையா?” என்றார். இதுதான் அப்பாவின் குணம்” என நெ​கிழ்ந்து கூறினார்​ அவர் மகள்.

====================================================================================================

Face Book ல் பகிர்ந்திருந்தேன்...!

'இந்த நாளில் அன்று' என்று பார்ப்போம் இல்லையா?   சென்ற க்ரோதி வருடத்தை எடுத்து புரட்டிப் பார்த்தேன்...

சென்ற க்ரோதி வருடத்தில்...

இந்தியா மூன்று பிரதமர்களை பார்த்தது.  ஜவாஹர்லால் நேரு, குல்சாரிலால் நந்தா, லால்பகதூர் சாஸ்திரி 

சர்வபள்ளி ராதாகிருஷ்ணனும் ஜாகிர் ஹுசேனும் ஜனாதிபதி, உதவி ஜனாதிபதியாக இருந்த வருடம்.

பின்னர் ஜனாதிபதியாகப்போகும் வி வி கிரி கேரளாவின் கவர்னராயிருந்தார்.

க்ரோதி வருடம் ஆரம்பிபபதற்கு இரண்டு மூன்று நாட்கள் முன்பு 32 உறுப்பினர்கள் வெளியேறியதால் கம்யூனிஸ்ட் பார்ட்டி உடைந்தது! 

IDBI வாங்கி, விஸ்வ ஹிந்து பரிஷத், சிரிமாவோ- சாஸ்திரி ஒப்பந்தம் இந்த வருடத்தில்.

அமெரிக்காவில் டிசம்பர் 18 ஆம் தேதி ஏற்பட்ட ஒரு பெருவெள்ளத்திற்கு கிறிஸ்துமஸ் வெள்ளம் என்றே பெயரிட்டிருக்கிறார்கள்.  ஜனவரி 17 வரை நீடித்த வெள்ளம்.  பெரும் சேதம்.

சேகுவேரா அமெரிக்க பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்தினார்.

மார்ட்டின் லூதர்கிங் ஜூனியர் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றார்.

ஹாக்கி ஆட்டக்காரர் சரண்ஜீத் சிங்குக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

அமித் ஷா பிறந்த வருடம்.  மற்றும் நடிகர் முரளி, இளவரசு, ரமேஷ் அர்விந்த், பொன்வண்ணன் ஆகியோர் பிறந்த வருடம்!

கமலா ஹாரிஸ், டான் ப்ரவுன் பிறந்த வரும்.  இலங்கையின் தொண்டமான் பிறந்த வருடம்.

பாரதிதாசன், நேரு மறைந்த வருடம்.  புகழ்பெற்ற குரு தத் மறைந்த வருடம்.  அமெரிக்க ஜனாதிபதி ஜான் எஃப் கென்னடி கொலை செய்யப்பட்ட வருடம்.  இயான் பிளெமிங் மறைந்த வருடம்.  

சங்கம், தோஸ்தி, காஷ்மீர் கி கலி, வோ கௌன் தி போன்ற படங்கள் வெளியான வருடம்.

ஒன்றும் மோசமில்லை..  இல்லையா?

==================================================================================================



பொக்கிஷம்  :- 







49 கருத்துகள்:

  1. எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண் டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு..

    வாழ்க தமிழ்..

    பதிலளிநீக்கு
  2. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  3. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  4. தண்செய்யும் வாழ்க.. தஞ்சையும் வாழ்க..

    தளிர் விளைவாகித்
    தமிழும் வாழ்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஊர் வாழ்க உறவு வாழ்க 
      பேர் வாழ்க பெருமை வாழ்க 
      நட்பு வாழ்க நற்றமிழும் வாழ்க 

      நீக்கு
    2. ஆஹா!...

      இதை நான் பயன்படுத்திக் கொள்ளலாமா!..

      அனுமதி வேண்டுகின்றேன்..

      நீக்கு
  5. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  6. கவிதை நன்றாக இருக்கிறது.

    //ஈரக்கூந்தலில் வாசமல்லியுடன்
    ஒருநாள்
    எதிர்ப்படுவாள் என் தேவதை
    என்று காத்திருக்கிறேன் நானும் //

    //சிறுபொழுதில் மறுபடி
    வந்தாள் எனை நோக்கி
    கூந்தலைப் பிரித்து
    கைகளால் அளைந்து
    நுனியில் முடிச்சிட்டாள்
    கைகளில் வைத்திருந்த
    மல்லிகைச் சரமொன்றை
    பின் கூந்தலில் நுழைத்து
    சரிபாதியாய் பிரித்து
    தொங்கவிட்டாள்
    தலையை உதறி
    முகத்தை நிமிர்த்தி
    என்னை நோக்கினாள்
    கையில் ஒற்றை ரோஜா //

    வந்து விட்டாள் தேவதை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மையில் இத்துடன் முடிக்க நினைத்து கடைசி வரியை நீக்கினேன் இன்று காலை.  பின்னர் இருக்கட்டும் என்று மறுபடி சேர்த்து விட்டேன்.  பொருள்  :  மீரா அதே மீராவாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை.  இவள் அந்த மீராவாக விரும்பி இருக்கலாம்.
      நன்றி கோமதி அக்கா.

      நீக்கு
    2. ஆமாம், மீராவாக விரும்பியது புரிந்தது.

      நீக்கு
  7. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  8. நியூஸ் ரூம் செய்தி நிழல் இல்லாத நாள் பெங்களூருவில் அரிய நிகழ்வு.
    வியப்பு.

    வலசை வந்து சொந்த நாடு திரும்பா பறவை பறவைகள் படம் அழகு.

    எம்.எஸ்.விஸ்வநாதன் மகள் தன் தந்தையின் நல்ல குணங்களை சொன்னது அருமை.

    Face Book ல் பகிர்ந்தவை படித்தேன், பொக்கிஷபகிர்வு எல்லாம் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒவ்வொன்றையும் பொறுமையாகப் அப்டித்து ரசித்ததற்கும், கருத்திட்டதற்கும் நன்றி கோமதி அக்கா.

      நீக்கு
  9. வணக்கம் சகோதரரே

    இன்றைய வியாழன் கதம்பம் எப்போதும் போல் அருமை.

    முதல் பகுதி கதையாக கவிதை, கவிதையோடு கதை என வித்தியாசமான படைப்பு. படித்து ரசித்தேன்.

    /படித்து முடித்து பணிக்கு வந்தாலும்
    அடைகாத்த முட்டை
    உடையும்
    நாளுக்காய்க் காத்திருக்கிறது
    பணியில், சாலையில், உணவகத்தில்
    அனுதினம் கடக்கும் பெண்களில்
    தேடுகிறேன் அவளை நாளும்
    பனித்திரை விலக்கி
    ஈரக்கூந்தலில் வாசமல்லியுடன்
    ஒருநாள்
    எதிர்ப்படுவாள் என் தேவதை /

    தேடியவள் வந்து விட்டாள். இதுநாள் வரை தேடி நின்ற காலங்களை போல இனி வரும் நாட்களிலும் தேடி களைப்பாகாமல், நாட்தோறும் கவிதை மலர் பெற தேடியவள் வந்து விட்டாள்.

    இனி ஈரக் கூந்தலின் மல்லிகை வாசம் மட்டுமல்ல..! நாயகனின் கவிதை மலரும் அவளைச்சுற்றி மணம் பரப்பும். வாழ்க மன(ண)ம் மாறாத காதல்.
    பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தேடியவள் வந்துவிட்டால்?- சின்ன வயதில் பழகி மனதைப் பறிகொடுத்த பெண்களை (ஹி ஹி ஹி. அந்த அந்தப் பருவங்களில் அப்பாவுக்கு இடமாற்றம் அமையும்போது புதுப் பெண் மனதில் அமர்வாள்) இப்போது பார்க்க நேரிட்டு, மனதின் கற்பனை உருவம் கலைந்துவிடுமோ என அச்சப்படுவது உண்டு. கூடவே வாழும்போதுதான் இருவரும் உடல்நிலை மாற்றங்கள் பெற்றாலும் கண்ணுக்குத் தெரியாது இல்லை மனம் பெரிதுபடுத்தாது)

      நீக்கு
    2. நெல்லை! உங்கள் நினைவுகள் மாதிரியே எபியில்
      24-9-19 அன்று செவ்வாய்க் கதையாகியிருக்கிறது. ஆர்வம் ஏற்படின் பார்க்கவும்.

      நீக்கு
    3. தேடியவள்தான் வந்தாள் என்று நினைக்கிறீர்களா நெல்லை?  அப்புறம் எவ்வளவு ஊர் மாறினாலும் முதற்காதல் என்றும் நினைவில் இருக்கும்.  ஆழ்ந்த அன்பினால் மலர்ந்த திருமணத்துக்குப் பின்னான காதல் கடைசி வரை கூட வரும்.

      நீக்கு
    4. நினைவுகள்  சில சமயங்களில் வரம் ஜீவி ஸார்.  உடனடியாக உங்களுக்கு இது நினைவுக்கு வந்தது வியப்பு.  அது இங்கிருந்து அங்கு.  இது இங்கிருந்து அங்கு.

      நீக்கு
    5. முதற் காதலை வெட்டி விட்டுப் போகும் மின்னல் என்பார் காண்டேகர். இதை விட சிறப்பாக முதற்காதலின் வேகம் பற்றி சொல்ல முடியுமா என்று யோசிக்கிறேன்.

      இதில் இன்னொரு கோணமும் இருக்கிறது.

      முதல் காதல் என்றும் நினைவில் இருக்கும் என்கிறீர்கள்.

      ஆணுக்கு இப்படி என்றால் பெண்ணுக்கு?..

      நீக்கு
    6. தம்பி செல்வராஜூ,

      இதோ ஊற வைத்த இட்லி அரிசி, உளுந்து, கொஞ்சம் வெந்தயம்
      எல்லாம் ரெடி.

      ஒரு செவ்வாய்க்கு?...

      இருக்கவே இருக்கு,
      நான் அரைப்பது.

      நீக்கு
    7. // அது இங்கிருந்து அங்கு. இது இங்கிருந்து அங்கு. //

      இதிலேயே ஒரு திருத்தம் இருக்கிறது!  'அது இங்கிருந்து அங்கு.  இது அங்கிருந்து இங்கு' என்றிருக்க வேண்டும்,

      பெண்ணைப் பற்றி பேசவரும்போது தற்போதைய கணவன் மனநிலையை வைத்து இப்படி கேட்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.  எல்லாப் பெண்களாலும் வெளிப்படையாய் பேச முடியாது.

      நீக்கு
    8. தற்போதைய கணவன் மன நிலையா?.. இது என்ன புதுசா இடையில் இடைஞ்சலா?..

      'இரு கட்சிக்கும் பொதுவில் வைப்போம்' என்று சொன்ன பாரதியின் வழியே நம் வழி அல்லவா? ...

      பொறுத்திருங்கள்,

      தம்பி இத்தனை நேரம் ஒரு செவ்வாய்க் கதைக்கு ரெடியாகியிருபார் என்று நினைக்கிறேன்.
      என்ன சொல்வார் என்று பார்ப்போம்.

      நீக்கு
  10. கவிதை அருமை. படித்துக்கொண்டே வரும்போது செவ்வாய் சிறுகதையை மறந்துபோய் இங்கே எழுதிவிட்டாரோ என யோசித்தேன். முடிவு நாடகமாக இருக்கிறது.

    ஆனால், என் கல்லூரி காலத்தில் நடந்தது நினைவுக்கு வந்தது. என்னுடன் இளங்கலையில் குருராஜ் என்பவனும் படித்துவந்தான். மூன்று வருடம் முடிந்த சமயத்தில்தான் இவன் பரமக்குடியில் நம்மோடு இரண்டாம் வகுப்பு படித்த குருராஜாக இருப்பானோ எனத் தோன்றியது. அவன் வீட்டில் ஒரு நாள் இரவு உணவு (2ம் வகுப்பின் காலத்தில். அன்றைக்கு அவன் வீட்டில்தான் புதிதாக வந்திருந்த அலுமினிய பத்து காசைப் பார்த்தேன். அதற்கு முந்தி இரும்போ பித்தளையோ) சாப்பிட்டிருக்கிறேன். ஆனால்இவற்றைப் பேசி அவன்தான் குருராஜ் என்பதை நிச்சயத்துக்கொள்ளாமல் விட்டுவிட்டேன். அந்த நிகழ்வு நடந்திருக்கும்கோது கூடிருந்தவள் அவள் எனத் தெரியாமல் போனதில் வியப்பேது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதலில் இருக்கும் கவிதைகளை மட்டும் சென்ற வாரம் முதலில் எழுதினேன்   மதியத்துக்கு மேல் அவளுக்கும் 'உன் பெயர்தான் அவளுக்கும்'  என்று தனியாக ஒரு தீம் எழுதினேன்.  அந்நேரம் இரண்டையும் இணைத்து கதைபோலாக்கலாம் என்று தோன்றியது, ஒரு வியாழனை ஒப்பேற்றி விடலாம் என்றும் தோன்றியது.  செய்து விட்டேன்.  கடைசி வரியை நீக்கி இருக்கலாம் என்பது நேற்றிவு முதலான சிந்தனை!

      நீங்கள் கூட குருராஜ் ஒரு கேள்விக்குறி என்று ஒரு சிறுகதை எழுதி இருக்கலாம்.

      நீக்கு
  11. /// பனித்திரை விலக்கி
    ஈரக்கூந்தலில் வாசமல்லியுடன்
    ஒருநாள்
    எதிர்ப்படுவாள் என் தேவதை ///

    கவித.. கவித!..

    பதிலளிநீக்கு
  12. அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கும் வழக்கமான
    செவ்வாய்க் கிழமைகளுக்கு (!)

    இன்றைய பதிவு சிறப்பு..

    பதிலளிநீக்கு
  13. மற்றுமொரு சிறப்பு - செய்தியறைத்தொகுப்பு..

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
  14. சங்கம் முதல்
    இன்று வரை
    நாளையும் கூட ஏன்
    நிரந்தர கருப்பொருள்
    காதல்.
    காதல் என்பது என்ன
    தெரியவில்லை
    ஆனால் கட்டியவளை
    காதலிப்பதே
    கடைசி காதல்.
    கவிதை கொஞ்சம் நீளமாகி விட்டது.
    நினைவிருக்கிறதா?
    ஜிவி சார் மௌனியின் அழியாச்சுடர் பற்றி எழுதியிருந்தார். அச்சுடர் போல் அழியா நினைவு அந்த ஒற்றை ரோஜாவிலா? அல்லது மல்லிகைச்சரத்திலா?

    பெங்களூரு என்றில்லை எல்லா ஊர்களுக்கும் குறிப்பிட்ட நாளில் சூரியன் நேர் செங்குத்தாக இருக்கும்போது நிழல் விழாது. கிட்டத்தட்ட அன்று சென்னையிலும் இது போன்று நடந்திருக்கலாம். பெங்களூருவும் சென்னையும் ஒரே latitude.

    பறவைகள் பள்ளிக்கரணையில் அபார்ட்மெண்ட் வாங்கி விட்டனவோ? காலி செய்ய மனசில்லை.

    ஜோக்குகள் பரவாயில்லை ரகம் தான்.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதை வடிவத்துக்காக வேண்டி கவிதை கொஞ்சம் நீளமாகி விட்டது.   காதல் என்றும் கருக்காமதேனு!

      நன்றி JKC ஸார்.

      நீக்கு
  15. ஜெஸி ஸார்! உங்கள் உடல் நிலை பரவாயில்லையா? மெளனி பற்றிய தங்கள் நினைவு கூறல் இந்த இடத்தில் மிகச் சரியான பொறுத்தமாக அமைந்து விட்டது.

    பதிலளிநீக்கு
  16. கவிதை அருமையாக உள்ளது ஜி மிகவும் இரசித்தேன்

    பதிலளிநீக்கு
  17. .. ஒன்றும் மோசமில்லை.. இல்லையா?//

    இங்கே இப்போதுதான் வருகிறேன். இதற்கான பதிலை குரூப்பில் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்:

    ‘இந்த வருடத்தில் இன்னும் மாதங்கள் பாக்கியிருக்கின்றன’.

    ஆங்கில வருடம்/நம்ம குரோதி இரண்டையும் மனதில் ஒருசேரக்கொண்டே இதைப் படிக்கலாம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குரோதியை ஜனங்கள் குரோதமாகவே பார்க்கிறார்கள்!  நன்றி ஏகாந்தன் ஸார்.

      நீக்கு
  18. கவிதை நன்கு பிடித்தது.
    நியூஸ்ரைம் நன்று.

    வலசை பறவைகள் தகவல் படங்கள் அருமை.
    வாசுகி இன பாம்பு தகவல்,
    ஜோக்ஸ் என அனைத்தும் நன்று.

    பதிலளிநீக்கு
  19. /சொல்லாமல் வைத்திருக்கும் சுகம்/ சுகமோ மெல்லிய சோகமோ, சொல்லாத அன்பு கவித்துவமானது என்பதை நிரூபித்து விட்டீர்கள்:).

    செய்திகளுக்கு நன்றி. பெங்களூரில் நிழல் இல்லாத நாள் பற்றி அறிய வந்தேன். வலசை பறவைகள் பற்றிய செய்திகள் சுவாரஸ்யம். வாசுகி பாம்பு பற்றிய தகவல் வியப்பூட்டுகிறது.

    சென்ற க்ரோதி வருடம் சிறப்பானதே :)!

    பதிலளிநீக்கு
  20. // சென்ற க்ரோதி வருடம் சிறப்பானதே :)! //

    ஆமாம்... ஆமாம்...


    நன்றி ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!