Friday, January 5, 2018

வெள்ளி வீடியோ 180105 : ஆயிரம் மின்னல் ஓருருவாகி ஆயிழையாக வந்தவள் நீயே
வீ தக்ஷிணாமூர்த்தி  இசையில் ஒரு அற்புதமான பாடல். 


     தர்மவதி ராகத்தில் அமைந்தது.  இந்த ராகத்தில் அமைந்த வேறு சில பாடல்கள் 'ஒட்டகத்தைக் கட்டிக்கோ', அழகன் படத்தில் வரும் 'தத்தித்தோம்', உத்தரவின்றி உள்ளே வா படத்தின் 'காதல் காதல் என்று பேச கண்ணன் வந்தானோ', வருஷம் 16 படத்தில் 'ஏ அய்யாசாமி', வீரா படத்தில் 'கொஞ்சிக் கொஞ்சி அலைகளாட',  அப்புறம்  அட  அந்த புகழ் பெற்ற 'ஆயிரம் நிலவே வா' (அடிமைப்பெண்) பாடல் கூட தர்மவதிதானாம்.  இந்தப் பாடலை மதுவந்தி ராகம் என்றும் சொல்வார்கள்.  ஏன் இந்த பாடல் லிஸ்ட் தருகிறேன் என்றால், இந்தப் பாடல் கேட்கும்போது அந்தப் பாடல்களின் வாசனை அடிக்கிறதா என்று பார்க்கத்தான்!  இருந்தாலும் ஒட்டகத்தைக் கட்டிக்கோ எங்கே?  நந்தா நீ என் நிலா எங்கே!

     7G ரெயின்போ காலனி படத்தில்  கனாக் காணும்  காலங்கள்', மற்றும் மன்மத லீலை படப் பாடல் 'ஹலோ மை டியர் ராங் நம்பர்' கூட இதே ராகம்தானாம்.

     வீ தக்ஷிணாமூர்த்தி (1919 -2013) மலையாளத்தில் பிரபல இசை அமைப்பாளர்.  தமிழில் மிகச்சில படங்களுக்கு இசை அமைத்துள்ளார்.  ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது (நல்ல மனம் வாழ்க), ஒரு கோவில் இரு தீபங்கள் (முத்து முத்து புன்னகையே முக்கனித் தோட்டம்)அப்புறம் இந்த நந்தா என் நிலா.

     எஸ் பி பாலசுப்ரமணியத்தின் குரலில் தேனான பாடல்.  என்ன ஒரு குழைவு..  என்ன ஒரு bhaaவம்..  அவரின் டிரேட்மார்க் மெல்லிய சிரிப்புடன்...

     பாடலை எழுதியவர் பெயர் பழனிச்சாமி என்கிறது தகவல்.  எனக்கு யார் என்று தெரியவில்லை.  ஆனால் கவரும் பாடல் வரிகள்.

ஆயிரம் மின்னல் ஓருருவாகி 
ஆயிழையாக வந்தவள் நீயே 
அகத்தியன் போற்றும் அருந்தமிழ் நீயே 
அருந்ததி போலே பிறந்து வந்தாயே... 

ஆகமம் தந்த சீதையும் இன்று 
ராகவன் நான் என்று திரும்பி வந்தாளோ 
மேகத்தில் ஆடும் ஊர்வசி எந்தன் 
போகத்தில் ஆட இறங்கி வந்தாளோ 

65 comments:

துரை செல்வராஜூ said...

வாழ்க..

Thulasidharan V Thillaiakathu said...

இனிய காலை வணக்கம் துரை சகோ அண்ட் ஸ்ரீராம்...இன்னும் வேறு யாரேனும் வந்திருந்தால்

கீதா

துரை செல்வராஜூ said...

வணக்கம் ஸ்ரீராம்..

துரை செல்வராஜூ said...

வணக்கம் கீதா..

ஸ்ரீராம். said...

இனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.

துரை செல்வராஜூ said...
This comment has been removed by the author.
ஸ்ரீராம். said...

இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன்.

ஸ்ரீராம். said...

//பழைய பாடல் தான் எனினும் கேட்டதாக நினைவு இல்லை..//

மிக இனிமையான பாடல்துரை செல்வராஜூ ஸார். அவசியம் கேளுங்கள். என்னுடைய எஸ் பி பி லிஸ்ட்டில் என்றும் இந்தப்பாடல் உண்டு.

துரை செல்வராஜூ said...

அதுதானே...

இந்தப் பாடலைக் கேட்காமல் இளமையைக் கடந்திருக்க முடியுமா!..(...70 களில்)....

Thulasidharan V Thillaiakathu said...

நெட் சதி....

அழகான தர்மவதி பாடல்...நீங்க சொல்லிருக்கார் எல்லா தர்மவதி, மதுவந்தி... கேட்டுருக்கேன்...இன்னொன்னு உண்டு. இருங்க வரேன்

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

எஸ். ஹாலோ மை டியரும் இதே ராகம்தான்

கீதா

துரை செல்வராஜூ said...

அதற்குள்..பதில் சொல்லி விட்டீர்களே...

பாடலின் மயக்கத்தில் வந்த கோளாறு!....

பார்த்ததாக என்பதற்கு பதில் கேட்டதாக என்று பிழையானது..

அதனால் தான் அதனை நீக்கி விட்டேன்..

இந்தப் பாடலைக் கேட்டதில்லை என்றால் ரதியும் மன்மதனும் மன்னிக்கவே மாட்டார்கள்..

சிவ.. சிவ..

Thulasidharan V Thillaiakathu said...

ஹாஹாஹாஹா.....துரை சகோ ரத்தியும் மன்மதனும்னு சொல்லிட்டு சிவ சிவ...

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

ஸ்ரீராம் வி தக்ஷிணாமூர்த்தி. அவர்கள் மிகiga arumaiyaana isaiamaippaalar...

Appuram varen...மொபைல அடிக்கறதும் ஹிஹிஹி

கீதா

ஸ்ரீராம். said...

//அதற்குள்..பதில் சொல்லி விட்டீர்களே... பாடலின் மயக்கத்தில் வந்த கோளாறு!.... பார்த்ததாக என்பதற்கு பதில் கேட்டதாக என்று பிழையானது.. அதனால் தான் அதனை நீக்கி விட்டேன்.. இந்தப் பாடலைக் கேட்டதில்லை என்றால் ரதியும் மன்மதனும் மன்னிக்கவே மாட்டார்கள்.. சிவ.. சிவ.. ​//​

ஹா... ஹா... ஹா... துரை செல்வராஜூ ஸார்.. அதானே.. இந்தப் பாடலை கேட்காமல் இருந்திருக்க முடியாதே! உங்கள் பின்னூட்டங்கள் அசத்துகின்றன.

Geetha Sambasivam said...

ஏஞ்சலினின் அழைப்பையும் அவர் எழுதி இருந்ததையும் படித்துக் கொண்டிருந்ததில் இங்கே வரணும் என்பதே மறந்து போச்சு! :) தூக்கத்த்திலே இருந்து முழிச்சாப்போல் இங்கே வந்தால் ஆறே கால் ஆயிடுச்சு! :)

Geetha Sambasivam said...

படமும் பார்த்ததில்லை, பாடலும் கேட்டதில்லை!:))))

ஸ்ரீராம். said...

வாங்க கீதாக்கா... படம் நானும் பார்க்கவில்லை. நிறைய நான் ரசிக்கும் பாடல்கள் இடம்பெற்ற படங்களைப் பார்த்ததில்லை.

Thulasidharan V Thillaiakathu said...

ஸ்ரீராம் அந்த இன்னுரு பாடல் நினைவுக்கு வ்ந்துருச்சு...ரமணா படத்தில் வானவில்லே வானவில்லே வந்ததென்ன இப்போது பாடல்

நீங்க கேட்டிருப்பீங்கனு நினைக்கறேன்....

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

நந்தா என் நிலா அப்போது ரொம்ப ஃபேமஸ்/. படம் எல்லாம் தெரியாது...ரேடியோ அதுவும் இலங்கை வானொலி..உபயம் தான் டீக்கடைகளில்...

கீதா

ஸ்ரீராம். said...

//ரமணா படத்தில் வானவில்லே வானவில்லே வந்ததென்ன இப்போது //

கேட்டிருக்கேன் கீதா... அதுவும் இந்த ராகம்தானா? இனிமையான பாடல்.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

ரசனையான பாடல்.

கரந்தை ஜெயக்குமார் said...

நன்றி நண்பரே
இதோ காணொலியினைக் காணச் செல்கிறேன்
தம +1

நெல்லைத் தமிழன் said...

மிக அருமையான பாடல். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளில், பாடும் திறமையைக் காட்ட, பாடப்படுவது. இதில் குரலின் குழைவுகாட்டும் திறமை தெரியும்.

துரை செல்வராஜூ said...

ஆயிரம் மின்னல் ஓருருவாகி!?.....

அட போங்கப்பா...

ஒரு மின்னல்...னாலே தாங்கமுடியாது..

இதுல... ஆயிரம் மின்னல்... ஆயிழை...சேயிழை...நூலிழை...

நல்லவேளை..... தப்பித்தோம்!...

Thulasidharan V Thillaiakathu said...

ஸ்ரீராம் பூப்பூக்கும் மாசம் தை மாசம்...பாடலும் நினைவுக்கு வந்தது..அதுவும் தர்மாவதி...படம் தெரியலை அப்புறம் கூகுள் ட கேட்டேன்.படம் வருஷம் 16

கீதா

KILLERGEE Devakottai said...

திரு. வீ தெட்சிணாமூர்த்தியை பலருக்கும் தெரியாது என்றே நினைக்கிறேன் மலையாள இசையின் தந்தை என்றே சொல்லலாம்.

நாட்டாமையின் வாயசைப்பில் பாடலை இரசித்தேன் ஸ்ரீராம்ஜி

G.M Balasubramaniam said...

/. அதுவும் இந்த ராகம்தானா? இனிமையான பாடல்/இந்த ராகம் என்பதே ஒரு புதிர் ஆங்கிலத்தில் the clock clicketh as the fool thinketh என்று சொல்வார்கள் ஏதாவது ஓசை ஒருஇசை போல் தெரியும் நான் இந்த ஆட்டத்துக்கு வரவில்லை

இளமதி said...

வணக்கம் சகோதரர் ஶ்ரீராம் & வலையுறவுகளே!...

ஆஹா.... "நந்தா என்நிலா" இன்றா...:)
ஆயிரமாயிரமாய்ப் பாடல்கள் வந்தாலும் அத்தனையும் நினைவில் நிற்பதுமில்லை.
நெஞ்சில் நிறைவதுமில்லை.
நீங்கள் தந்த பாடல் நானும் எத்தனையோ தடவை கேட்டிருப்பேன். ஆனாலும் ஒவ்வொரு தரம் கேட்கும்போதும் உள்ளத்தை அள்ளும் வரிகள், இசை, எஸ் பி பியின் காந்தக் குரல் எல்லாமே ஏதோ புதிதாக ரஸிப்பது போன்ற உணர்வைத் தருகின்றன.

இங்கே இதே ராகத்தில் அமைந்ததென நீங்களும், கீதாவும் காட்டிய ஏனைய பாடல்களுங்கூட ஏதோ வகையில் எங்களைக் கட்டிப்போட்டு வைத்த பாடல்களே! மிக அருமை!

நன்றியுடன் எல்லோருக்கும் நல் வாழ்த்துக்கள்!

Asokan Kuppusamy said...

மிகவும் அருமை பாடல் பாராட்டுக்குரியது

Srikanth said...

அருமை :)

athiraமியாவ் said...

நந்தா என் நிலாப் பாடல் முன்பு நீங்க போட்டதுபோல ஒரு பீலிங்சூ வருதே:)... பிரமையோ தெரியல்ல..
. நந்தா கதையும் எழுதியிருக்கிறீங்க முன்பு.

ஒரு மின்னலுக்கே தாக்குப் பிடிக்க முடியாது இதில ஆயிரம் மின்னலென்றால் என்ன ஆகும்.... என்பதைத்தான் மேலே துரை அண்ணன் சொல்லியிருக்கிறார்:)..

PaperCrafts Angel said...

@அதிரா மியாவ் :) பிரமையில்லை ஸ்ரீராம் ஏற்கனவே போட்ருக்கார் இந்த பாட்டு வித் அண்ணன் தம்பி ஸ்டோரி ..:)

PaperCrafts Angel said...

தம்பிக்கு Life threatening disease

PaperCrafts Angel said...

மேலே சொன்ன எல்லா பாட்டும் கேட்டிருக்கேன் :) ஊரில் ஸ்கூல் காலேஜ் போகும்போது காதில் விழும்:) ஒட்டகத்தைக்கட்டிக்கொ கொஞ்சம்கூட எட்டல்லியே இந்த ராகத்துக்கு ஆனா ஆயிரம் நிலவே வா நெருங்குது 90 பெர்சன்ட்

PaperCrafts Angel said...

இங்கே படங்கள் டிவிடி பார்க்கும்போது PG Parental Guidance இல்லைன்னா 12 அபவ் போடுவாங்க :) இந்த பாட்டெல்லாம் அந்த காலத்தில் காதால் கேட்டதோடு சரி :)

பாரதி said...

வா....வ்..!! என்று வியந்து ரசிக்க வைக்கும் பாடல்கள்....!!!!! ரசனையோ ரசனை...!!

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரரே

அருமையான பாடல். எஸ்.பி.மாலசுப்பரமணியத்தின் தேனாான குரலுக்கு மயங்காதவர் உண்டா என்ன? நீங்கள் குறிப்பிட்டுள்ள பாடலையும் நிறைய தடவை கேட்டிருக்கிறேன். மற்றொரு முறையும் கேட்க வைத்ததற்கு நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

ஏகாந்தன் Aekaanthan ! said...

படம் பார்த்ததில்லை.(தப்பித்தேன்). பாடல் இப்போதுதான் கேட்கிறேன். இனிமையான இளங்குரல். மியூசிக் தழைந்து மிருதுவாக வெளிப்பட்டதால் மயக்கம் சேர்க்கிறது. பாலசுப்ரமணியத்தோடு, தட்சிணாமூர்த்தியையும் வெகுவாகப் பாராட்டவேண்டும். இப்போதிருப்பவர்களிடம் இதனைக் கொடுத்தால், இந்த வார்த்தைகளுக்குமேல் சம்மட்டியால் அடித்து, சத்தம் பலவாக எழுப்பி, எப்படி இருந்தது என்பார்கள். அதையும் ஆஹா! என்று கைதட்டி மகிழ்வான் ஆவரேஜ் தமிழன்!

’நந்தா என் நிலா’ என்கிறதை சினிமாவின் தலைப்பாக மட்டுமே, பாடலின் வரியாக மட்டுமேதான் இங்கு பலர் கேட்டிருப்பதாகத் தெரிகிறது. மேற்கொண்டு ஏதாவது யாராவது சொல்வார்களா என்று பார்த்தேன்.. நானே சொல்கிறேன்: சாவி ஆசிரியராக இருந்த தினமணிகதிர் புகழ்பெற்று, குமுதத்தையும் விகடனையும் பெண்டெடுத்த காலத்தில்(எழுபதுகள்), சாவியின் உந்துததால், சுஜாதா, விந்தன், பாலகுமாரன் ஆகியோரது படைப்புகள் அதில் வெளிவந்து அசத்திக்கொண்டிருந்தன. வந்தார் ஸ்ரீவேணுகோபாலன். சுஜாதாவின் தொடர்களோடு, ஸ்ரீவேணுகோபாலனின் ’நந்தா என் நிலா’ எனும் தொடர்கதையும் வாராவாரம் தினமணிகதிர் நோக்கி ஏங்கவைத்தது வாசகர்களை. அதில் ஹீரோயின் பெயர் நந்தா. சின்னவயதில் மனதை சின்னாபின்னமாக்கியக் காதல் கதை. அந்தத் தலைப்பைத்தான் காப்பி அடித்து வைத்திருக்கிறார்கள் இந்தப் படத்திற்கு..

ஸ்ரீராம். said...

ஏகாந்தன் ஸார்.. நீங்கள் சொல்லும் கதை ' நீ நான் நிலா ' என்று நினைக்கிறேன். நான் படித்திருக்கிறேன். கதை முடியும் வரி : தேன் பால் பலா அல்லது ஒருவேளை நீங்கள் சொல்லும் தலைப்பிலும் கதை வந்ததோ என்னவோ... நான் படித்தது மாத இதழ் ஒன்றில். மாலைமதியோ, ராணிமுத்தோ...

ஸ்ரீராம். said...

அதிரா, ஏஞ்சல்...

பாடல் முன்னரே எங்கள் தளத்தில் வந்ததுதான். ஆனால் வியாழன் கதையில். வெள்ளி வீடியோவில் இப்போதுதான்... (அவ்வ்வ்....)

ஸ்ரீராம். said...

நன்றி ஜம்புலிங்கம் ஸார்.

ஸ்ரீராம். said...

நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்

ஸ்ரீராம். said...

நன்றி நெல்லைத்தமிழன்

ஸ்ரீராம். said...

நன்றி துரை செல்வராஜூ ஸார்

ஸ்ரீராம். said...

நன்றி கில்லர்ஜி

ஸ்ரீராம். said...

நன்றி ஜி எம் பி ஸார்.

ஸ்ரீராம். said...

நன்றி சகோதரி இளமதி

ஸ்ரீராம். said...

நன்றி அசோகன் குப்புசாமி ஸார்.

ஸ்ரீராம். said...

நன்றி அதிரா

ஸ்ரீராம். said...

நன்றி ஏஞ்சல்

ஸ்ரீராம். said...

நன்றி பாரதி

ஸ்ரீராம். said...

நன்றி சகோதரி கமலா ஹரிஹரன்

ஸ்ரீராம். said...

நன்றி ஸ்ரீகாந்த்.

Jeevalingam Yarlpavanan Kasirajalingam said...

உள்ளம் தொட்டுச் செல்லும் பாடல்
அருமை

Geetha Sambasivam said...

அட? எனக்கும் உள்ளுக்குள் சந்தேகமா இருந்தது! "நீ, நான், நிலா" நாவல் தான் "நந்தா என் நிலா" என்று வந்திருக்கோனு! ஆனால் அதைக் குறிப்பிட மறந்துட்டேன். இப்போ ஏகாந்தன் சார் சொல்லி இருக்கார்! அதிலிருந்து அதான்னு நினைக்கிறேன். அந்தக் கதை வந்தப்போ பள்ளி மாணவினு நினைக்கிறேன். அல்லது 11 ஆம் வகுப்பு? நினைவில் இல்லை! ஆனால் தினமணி கதிருக்காகக் காத்திருந்து காத்திருந்து போட்டி போட்டுக்கொண்டு படித்து உருகுவோம். புஷ்பா தங்கதுரையும் அதில் உருகி உருகி எழுதி இருப்பார்! ஹிஹிஹி, ஶ்ரீவேணுகாபாலன் அவர்கள் பக்தி, ஆன்மிகம்னாத் தான் சொந்தப் பெயரில் எழுதுவாராம்! இம்மாதிரிக் கதைகளுக்குப் புஷ்பா தங்கதுரைனு பெயரில் எழுதி இருக்கார்! அப்போல்லாம் அவர் எழுத்து, சுஜாதாவோடதுனால் ஒரே பைத்தியம்!

கீத மஞ்சரி said...

என்னுடைய ஃபேவரிட் பாடல்களில் முதல் வரிசைப் பாடல்களுள் இதுவும் ஒன்று. எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத பாடல்.. இசையும் எஸ்பிபியின் குரலும் அப்படியொரு வசீகரம். இந்தப் படத்தின் பெயர் மட்டுமல்ல.. கதை வசனம் புஷ்பா தங்கதுரைதான். தினமணிகதிரில் வெளிவந்தது என்றே படத்தின் துவக்கத்தில் குறிப்பிட்டுள்ளனர். இசை வி.தக்ஷ்ணாமூர்த்தி என்பது இன்றுதான் அறிந்தேன். அழகிய பாடல் பகிர்வுக்கு நன்றி.

ஏகாந்தன் Aekaanthan ! said...

@ ஸ்ரீராம், @ கீதா சாம்பசிவம்:

நீங்கள் இருவரும் சொன்னது சரியேதான். ’நீ, நான், நிலா’ -இந்தப் பெயரில் தினமணிகதிரில் வந்ததைத்தான் நந்தா என்கிற அந்த கதாநாயகி பெயரைச்சேர்த்துப் போட்டார்கள் ’நந்தா என் நிலா’ என்கிற சினிமாவாக. இதே போல் புஷ்பா தங்கதுரையின் ‘ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது’ கதையும் அதே பேரில் வந்தது சினிமாவாக.

புஷ்பாதங்கதுரை என்கிற பெயரில் காதல் சங்கதிகளையும், ஸ்ரீவேணுகோபாலன் என்கிற பெயரில் ‘திருவரங்கன் உலா’ போன்ற நூல்களையும் எழுதிய குறிப்பிடத்தகுந்த எழுத்தாளர் ஸ்ரீவேணுகோபாலன். அப்போது சுஜாதா, பாலகுமாரன் க்ரேஸ் வெள்ளத்தில்மூழ்கியிருந்த வாசக உலகத்தில் சிலர் , இவரை சரியாக கவனித்ததில்லை. ஆனால் அருமையான நடையில் சுவையான கருத்துக்களத்தில் காதல் கதைகள், சர்ச்சைக்கதைகள் எழுதிய எழுத்தாளர். 2013-ல் நோயினால் மறைந்தார். தமிழுலகம் அவருக்கு சரியாக மரியாதை செய்யவில்லை என்பது என் கருத்து.

ஏகாந்தன் Aekaanthan ! said...

எல்லாம் சரி. அந்த பழனிச்சாமியைப்பற்றிச் சொல்வோர் யாருமில்லையா?

ஸ்ரீராம். said...

ஏகாந்தன் ஸார்.. இன்னொரு விஷயமும் ஸ்பெஷல். புஷ்பா தங்கதுரையின் அந்த "ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது" படத்துக்கும் தக்ஷிணாமூர்த்திதான் இசை. பதிவிலேயே எழுதி இருக்கிறேன் பாருங்கள். அவர் கசமுசா கதையாக முதலில் எழுதியது என் பெயர் கமலா.

Geetha Sambasivam said...

ஶ்ரீராம், "என் பெயர் கமலா" முழுக்க முழுக்க நடந்த நிகழ்வுகள்னு சொல்லி இருக்கிறார் புஷ்பா தங்கதுரை! முதலில் வந்தப்புறமும் கூட மறுபடி அதே கமலாவையே வைத்தும் எழுதி இருந்தார். ஓர் ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது நாவலும் படிச்சிருக்கேன். என்றாலும் "நீ, நான், நிலா" மாதிரி அது மனதில் நிற்கவில்லை.

Geetha Sambasivam said...

உங்களோட பதிவுக்கு வர மறுபடியும் சுத்தோ சுத்துனு சுத்த வேண்டி இருக்கு. முகநூல் வழியா வந்தேன்! :) அநேகமா உங்களுக்கெல்லாம் பிரச்னை இருக்காதே! ஹிஹிஹி!

ஸ்ரீராம். said...

ஆமாம். ஙின்று காலை முதல் எனக்கும் பிரச்னை. நானும் முகநூல் வழியாக மட்டுமே வரமுடிகிறது. தம கண்டுக்குத் தெரியவில்லை.

ஸ்ரீராம். said...

ஆமாம் கீதா அக்கா.. என் பெயர் கமலா உண்மை நிகழ்வுகள் என்றுதான் சொல்லியிருந்தார். தொடர்ச்சி வந்ததும் நினைவிருக்கிறது.

வெங்கட் நாகராஜ் said...

பாட்டு கேட்டு ரசித்திருக்கிறேன் இப்போது மீண்டும் ஒரு முறை கேட்டு ரசித்தேன். பார்க்கும் தைரியமில்லை.

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!