புதன், 10 ஜனவரி, 2018

180110 வார வம்பு.


இந்த வார வம்பு கேள்வி:

இதற்கு ஆதார் , அதற்கு ஆதார் என்று நச்சு பண்ணுகிறார்களே, அது பற்றி உங்கள் கருத்து என்ன?

உங்களுக்கு ஆதார் எண் இருக்கா?
இல்லை என்றால், ஏன் எடுக்கவில்லை?

வம்பு ஆரம்பிப்போம் வாங்க!

தமிழ்மணம்


44 கருத்துகள்:

 1. ஹை வம்பு சானல் தொறந்திடுச்சு!!!!! வரேன் கௌ அண்ணா

  கீதா

  பதிலளிநீக்கு
 2. எப்படி தமிழ்மணத்துல சப்மிட் பண்ணாம வாக்களித்தீங்க வெங்கட்?

  பதிலளிநீக்கு
 3. ஸ்ரீராம், எங்கள் ப்ளாக், வெங்கட்ஜி ப்ளாக், துரை சகோ ப்ளாக் எல்லாம் தான் நேரம் எடுக்குது கமென்ட் பப்ளிக்ஷ் ஆக....கீதாக்கா ப்ளாக், வல்லிம்மா ப்ளாக், நேத்து அதிரா ப்ளாக் எல்லாம் கமென்ட் உடனே யே போயிருச்சு...

  ப்ளாகர் ஆண்களின் தளங்களை வஞ்சனை செய்யுதோ!!!?? ஹா ஹா ஹா ஹா ஹா ஹா அதிரா, ஏஞ்சல் கீதாக்கா காணலையே!! எனக்கு பரபரனு வருதே!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நோ கீதா... கமெண்ட் மாடரேஷன் இருக்கும் இடங்களில் தொல்லை இல்லை. அது இல்லாத இடங்களில் கமெண்ட் போக இரண்டு மூன்று நிமிடங்கள் எடுக்கின்றன. கொடுமை. எப்போது சரியாகுமோ?

   நீக்கு
 4. வெங்கட்ஜி வணக்கம்...நீந்த ஃபர்ஸ்ட் நான் செகன்ட் ஹா ஹா ஹா

  தானைத் தலைவி கீதாக்கா ஸிஸ்டம் சரி செய்யப்போறேனு சொன்னாங்களே!! ஸ்ரீராம், வெங்கட்ஜி துரை சகோ எல்லாரும் தலைவியைப் பிடியுங்க....ஹா ஹா ஹா ஹா...ப்ளாகர் கூட பெண்களுக்குத்தான் சப்போர்ட் பண்ணுது போல ஹிஹிஹிஹி

  கீதா

  பதிலளிநீக்கு
 5. ஆதார் இணைப்பு என்பது நல்ல விஷயத்திற்காகக் கொண்டு வரப்பட்டாலும், அதிக மக்கள்தொகை கொண்ட நம்மூரில் அதுவும் கிராமங்கள் அதிகம் இருக்கும் நம்மூரில் அதை இன்னும் கொஞ்சம் திட்டமிட்டு கொண்டுவந்திருக்கலாம். ஒவ்வொரு படியும் திட்டமிட்டுக் கொண்டு வந்திருக்கலாம். ஏனென்றால் நம்மூரில் பணியாளர்கள் அதிகம் என்றாலும் அவர்கள் வேலை செய்யும் விதம் நாம் எல்லோரும் அறிந்ததே. எனவே அதில் நிறைய குளறுபடிகள் இருந்தன முதலில். இப்போது அது குறைந்துள்ளதாகத் தெரிகிறது.

  ஆதார் என்பது அமெர்க்காவின் சோசியல் செக்யூரிட்டி நம்பருக்கு இணையாகச் சொல்லலாம் தான். இங்கு இது புதிது.ஆனால் ஆதாரினால் நிறைய நல்லது நடக்க வாய்ப்புண்டு. தில்லுமுல்லு குறையும். எல்லாமே ஆதாருடன் இணைவதால் ஆதார் எண்ணை அடித்தால் போது நம் சரித்திரமே வந்துவிடும்..சோசியல் செக்யூரிட்டி நம்பர் போல்..

  இப்ப எல்லாம் பல ஜோசியர்களும் கணினி வழியாக ஜாதகம் குறித்தும் பலன் பார்த்தும் தகவல்களைச் சேமித்து வைத்தும் பிஸினஸ் செய்வதால் ஜோசியர்களூம் இனி ஆதாரைக் கேட்பார்க்ளோ?!! ஹா ஹா

  எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ஆதார் உண்டு. ஜோஸியம் பாக்கும் பழக்கமும் நம்பிக்கையும் இல்லாததால் ஜாதகத்தைத் தவிர மற்ற ஆவணங்களுடன் இணைத்தாயிற்று!!!

  கீதா

  பதிலளிநீக்கு
 6. இறந்தவரின் ஆதார் எண் கேட்கப்படுவதாகச் சொல்லப்பட்டு இடையில் கலாய்த்தலும் நடந்தது. ஆதார் எண் கேட்பதில் தவறில்லை. ஏனென்றால் மரணம் பதிவு செய்யப்படும். அப்போ வாக்குச் சாவடியில் மரனம் அடைந்தவரின் பெயரில் ஓட்டு விழாமல் தடுக்க முடியும்...அதற்கு இந்த ஆதார் எண் உதவும்..ஆனால் இத்தனை மக்கள் தொகை கொண்ட நாட்டில், பல சிறிய சிறிய ஊர்கள் உள்ள அதுவும் எங்கோ காட்டில் கூட ஓரிரு வீடுகளே இருக்கும் நம் நாட்டில், ஒரு வருடத்திற்குள் அல்லது இரு வருடத்திற்குள் ஆதார் வழங்கபப்டுதல் முழுவதும் நடந்திருக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு முழு ப்ராஸஸும் முடிந்திருக்க வேண்டும். அதற்கான விது முறைகளை மிகவும் தெளிவாகக் கொடுத்து படிப்பறிவு இல்லாதவரும் புரிந்து கொள்ளும் வகையில்...பல இடங்களில் ஸ்மார்ட் கார்ட் டுக்காகக் குடும்பத் தகவல் சேகரிக்க வரும் போது புள்ளி விவரம் சேகரிப்பவர் மிகவும் அஸால்டாக சேகரித்தார். சரியாக எழுதிக் கொள்ளவில்லை. இது எனது நேரடி அனுபவம். வீட்டில் ஆள் இல்லை என்றால் அப்படியே சென்றுவிட்டார். அந்த வீட்டிற்கு ஒரு சிட்டு வைத்து இங்கு வந்து தர வேண்டும் என்றோ அல்லது தேதியும்நேரமும் கொடுத்து அன்று வருவோம் என்று தகவல் சொல்லியோ சென்றிருக்க வேண்டும். ஆனால் அப்படி எதுவும் செய்யவில்லை.... புள்ளி விவரங்கள் ஒழுங்காக இல்லை என்றால் எப்படி சிஸ்டம் ஒழுங்காக வேலை செய்யும்????!!!

  ஆதார் வந்தால் இரு மாநில எல்லைக் கோட்டில் வசிப்பவர்கள் இரு மாநில ரேஷன் கார்ட் வைத்துக் கொண்டு தில்லுமுல்லு செய்ய முடியாது. இதற்கு ஒரு உதாரணம் தருகிறென் இங்கு...

  கீதா

  பதிலளிநீக்கு
 7. இங்கே குவைத்தில் Civil ID என்று அடையாளா அட்டை வழங்கப்படுகின்றது..

  இதற்குள் -
  நமது புகைப்படம், பாஸ்போர்ட் எண், கை ரேகைகள், இரத்தத்தின் வகை, மருத்துவப் பரிசோதனை, வேலை செய்யும் நிறுவனம், வாங்கும் சம்பளம், தங்கியிருக்கும் முகவரி ஓட்டுனர் உரிமம் - என, அனைத்தும் உள்ளடக்கம்..

  20 ஆயிரம் சம்பளம் வாங்கும் ஒருவர் வரம்புக்கு மீறி அதிகப்படியான தொகைகளை Money Exchange மூலமாக பரிமாற்றம் செய்திருந்தால் விசாரணை வீடு தேடி வரும் என்பது விசேஷம்..

  அரபுக் கூட்டமைப்பு நாடுகளில் ஏதாவது குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்தால் கூட கைரேகை பதிவில் மாட்டிக் கொள்ள முடியும்..

  நகை மற்றும் தொலைபேசிகளை வாங்கினாலும் Civil ID அவசியம்..
  அவ்வப்போது Offer ல் புதிய Sim Card வாங்குவது என்றாலும் Civil ID அவசியம்..

  தவணை முறையில் பொருட்களை வாங்குவதற்கும் Civil ID அவசியம்..
  தவணை முறையில் பொருட்களை வாங்கியபின் ஏமாற்றி விட்டு நாடு திரும்ப முயன்றால்
  விமான நிலையத்தில் ஆப்பு காத்திருப்பதும் சிறப்பு..

  பாரதத்தில் ஆதார் அட்டைக்கு எதிராக தொண்டை கிழிய கூச்சல் இடுவோர் கூட,
  குவைத் மற்றும் அரபு நாடுகளுக்கு வேலை செய்ய வந்தால் Civil ID க்கு அடங்கிப் போவது குறிப்பிடத் தக்கது..

  பதிலளிநீக்கு
 8. இங்கு அரபு தேசங்களில், Identity Card உண்டு (எல்லோருக்கும்). சௌதியில் இகாமா என்றும், பஹ்ரைனில் CPR (Central Population Registration) Number என்றும், துபாயில் ரெசிடென்சி ஐடென்டிடி கார்ட் என்றும் பெயர். இது இல்லாம இங்கு எங்கும் செல்லமுடியாது. எந்தச் சமயத்திலும் போலீஸ் நம் கார்டைக் காண்பிக்கச்சொல்லிக் கேட்கும் (பாஸ்போர்டோ அல்லது இந்த கார்டோ அல்லது அந்த அந்த தேசத்தின் ஓட்டுனர் உரிமமோ-அதில் இந்த நம்பர், நம்ம படம் இருக்கும்). சௌதியில் இன்னும் பிரச்சனை. தகுந்த கார்டை காண்பிக்காவிட்டால் உடனே ஜெயில் (யாரிடமும் communicate பண்ணமுடியாது, அவங்க அரபி மட்டும்தான் பேசுவாங்க. இவனைக் காணோம் என்று உடனே நம் ஸ்பான்ஸர்-அந்த அந்த தேசத்தவர் கிட்ட சொன்னால், அவர் லோகல் போலீசைத் தொடர்பு கொண்டு கண்டுபிடித்து தேவையானதைச் செய்வார். இது ஓரிரண்டு நாட்களாகலாம் அதுவரை இலவச உணவு ஜெயிலில்)

  நம்ம தேசத்துக்குன்னு ஒரு ஐடென்டிடி கார்டு வேண்டாமா? அதைத்தான் 'ஆதார்' மூலமாகச் செய்கிறது. ஆனால் அரசு ரொம்பவும் அவசரப்படுகிறது. நம்ம ஆட்களும் (வேலை பார்ப்பவர்கள்) தொழில் நேர்த்தியில் குறைந்தவர்கள், வரும் கஸ்டமரும் (மக்கள்) அதிக அறிவு இல்லாதவர்கள். அதனால்தான் ஆதார் பதிவதில் குறைபாடு நேரிடுகிறது. மற்றபடி ஆதார், நமக்கு ஆதாரம்.

  நிறையபேர், நம் தகவல்கள் எல்லாம் பிறருக்குச் சென்றுவிடுகிறதே என்று கவலைப்படுகின்றனர். அது இயல்பானது. ஏனென்றால், இந்தியாவில் நேர்மையானவர்கள் மிக மிகக் குறைந்த சதவிகிதம்.

  பதிலளிநீக்கு
 9. இன்னொன்றையும் நீங்க கவனிக்கணும். ஸ்பெஷல் இரயில் விடும்போது, அல்லது முன்பதிவு செய்யும்போது, ஏன் உடனே எல்லா சீட்டுகளும் நிறைந்துவிடுகிறது? ஏனென்றால், இதனை கள்ளத்தனமாக Block செய்யறாங்க (டிராவல் ஏஜென்ஸி போன்றவை). இப்போ இதுக்கும் ஆதார் என்பதெல்லாம் கொண்டுவந்தால், யார் எத்தனை பிளாக் செய்யறாங்க என்றெல்லாம் கண்டுபிடிக்கமுடியும். எதற்கும் ஆதார் தேவை என்று கொண்டுவந்தால் நல்லது.

  ஆனால், நம்ம நாட்டில், ஆதார் எண்ணை பதிவதில் குறைபாடு உண்டு (இந்த டிரான்சேக்ஷனுக்கு இந்த ஆதார் நம்பர் என்று). இதில் கள்ளத்தனமும் நடைபெறும்.

  பதிலளிநீக்கு
 10. மேலும் விரிவான தகவல்கள்...
  திருமிகு நெல்லை அவர்களுடைய விவரங்கள் கருத்தில் கொள்ளத் தக்கவை..

  பதிலளிநீக்கு
 11. 'ஆதார் லிங்க்' -- உடனே நினைவில் வந்த ஜோக் (நன்றி : வாட்சப் / முகப்புத்தம் )
  பேஷண்ட் , 'ENT' டாக்டரிடம் : ரெண்டு நாளா மூக்கு காதெல்லாம் அடைச்சு இருக்கு.
  டாக்டர் : காது, மூக்கு ரெண்டையும் உங்க ஆதார் நம்பரோட லிங்க் பண்ணிட்டீங்களா ?
  பேஷண்ட் : இல்லை டாக்டர்.
  டாக்டர் : அதான்....! இப்ப, எதெதலாம் ஆதாரோட லிங்க் பண்ணலியோ, அதெல்லாம், ஒண்ணொண்னா 'block' ஆயிட்டு வருது...

  பதிலளிநீக்கு
 12. இந்த ஆதார் அட்டை வேண்டும் என்பதே எமது கருத்து காரணம் நான் இவன்தான் என்பத்ற்கு ஆதாரம் வேண்டும். மேலும் திருடர்களை பிடித்தாலும்கூட இவன் இந்த மாநிலத்தவன், இந்த ஊர்க்காரன் என்ற உண்மையான அடையாளம் புகைப்படமும் இருப்பதால் உடனே கிடைத்து விடுகிறது.

  எல்லாம் சரி மோடி இந்த ஆதார் அட்டையை கொண்டு வந்ததே எனது வலைத்தலத்தை படித்த பிறகுதான் என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும் ?

  எனது இந்த பதிவில்

  http://killergee.blogspot.com/2014/11/1.html

  நாட்டார் அட்டை என்று ஒரு சிஸ்டத்தை கொண்டு வந்தேன் அதைப் படித்த மோடி ஆதார் என்ற பெயரில் கொண்டு வந்து விட்டார். பரவாயில்லை எனது யோசனையும் நாட்டுக்கு உதவுகிறதே சந்தோஷம் - கில்லர்ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆதார், காங்கிரஸ் காலத்திலேயே ஆரம்பிச்சாச்சு. மோடி காலத்தில் தீவிரம் அடைந்திருக்கிறது.

   நீக்கு
  2. கௌ அங்கிள் ஏன் மெயிலே பார்ப்பதில்லை? அல்லது பதில் சொல்வதில்லை?!!!

   நீக்கு
 13. என் மகனுடன் படித்த பையன் நல்ல சாமர்த்தியமான பையன். பாண்டிச்சேரி டெரிட்டரியில் யானம், மாஹே, காரைக்கால் வரும். என்வஏ பாண்டிச்சேரி பிரஜை என்பதால் அங்கு கால்நடை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தால் (மத்திய அரசின் மான்யம் பெற்ற மத்திய அரசின் கீழ் வந்தது அப்போது..) ஃபீஸ் கிடையாது. என் மகனின் வகுப்பு மாணவன் யானம் ஆந்திரா ரெண்டு ரேஷன் கார்டும் இருந்தது எப்படி? யானத்தில் தாத்தா பாட்டி, எல்லைப்பகுதி ஆந்திராவில் பெற்றோர். அவன் ஆந்திராவில் இருந்து கொண்டு எல்லை தானே ஒரு 5, 6 கிமீ தூரத்தில் யானத்தில் இருந்த பள்ளியில் படித்து, யானம் பாண்டி என்பதால் பாண்டிச்சேரியில் ஃபீஸ் இல்லாமல் படித்து அப்புறம் மேற்படிப்பிற்கு பரீட்சை எழுதினான். எல்லாமே யானம் டாக்குமென்ட்ஸ். அது எம் வி எஸ்ஸிக்கு மத்திய அரசுத் தேர்வு. அதில் அவன் ஏதோ ஒரு ரேங்கில் வந்திருந்தான் அவனுக்கு கவுன்ஸலிங்கிற்கு அழைப்பும் வந்தது. அப்ளிக்கேஷனில் அவர்கள் சில ஆதாரங்கள் கேட்டிருந்தார்கள்...பெறற்றோர் வசிப்பது... என்று சில ஆதாரங்கள்..அப்படிப்பார்த்தால் இவன் ஆந்திரா. ஆனால் இவன் யானம் என்று சொல்லி ஃபீஸ் இல்லாமல் படித்துவிட்டான்...மத்திய அரசு கவுன்சலிங்கிற்குச் சென்ரால் மாட்டிவிடுவோம் என்று கவுன்கலிங்கிற்கு எங்களுடன் வரவில்லை. அதற்குப் எதோ காரணம் சொன்னான். அப்புறம் இப்போது ஆந்திரா மாநிலத்தில் கவர்ன்மெட்ன் ஜாபும் சேர்ந்துவிட்டான்....ஆந்திரா ஆவணங்களுடன்...இப்போது வீடு கட்டியிருப்பது பெற்றோர் இருப்பது யானத்தில்...ஒரு மாநிலத்தில் கல்லூரிப் படிப்பு படிக்க வேண்டுமென்றால் அதற்கு டொமிசைஸ் ஆவணம் முக்கியம். அதில் பல தில்லுமுல்லுக்கள் நடக்கிறது...ஆதாரும் வந்து சட்டமும் ஒழுங்காக இருந்தால் இதெல்லாம் குறையலாம்..

  கீதா

  பதிலளிநீக்கு
 14. இணையம் கட் ஆகிவிட்டதால் நான் சொல்ல இருந்த கருத்துகள் யாவும் நெல்லை, துரை செல்வராஜு சகொ கில்லர்ஜி சொல்லிவிட்டார்கள். எனவே அவற்றை அப்படியே நானும் டிட்டோ செய்கிறேன்....
  ஆதார் இஸ் எ மஸ்ட்
  கீதா

  பதிலளிநீக்கு
 15. ஆமாம் கௌதம் அண்ணா, ஆனால் அப்போதும் இந்தப் புள்ளிவிவரச் சேகரிப்பு எல்லாம் அடி வாங்கியது...இப்போது அது தீவிரப்படுத்தப்பட்டது...இப்போதும் அதில் குளறுபடிகள் இருக்கின்றனதான்...ஆனாலும் ஆரம்பநிலையை விடப் பரவாயில்லை...இனி நாள்பட சரியாகி ஒழுங்காக வந்துடும் என்று நம்புவோம்...

  கீதா

  பதிலளிநீக்கு
 16. ஆனா இந்த விவரங்கள் சமூக விரோதிகளிடம் போனால் கொஞ்சம் கஷ்டம். ஆதார் மூலமா எல்லாவற்றையும் அறிந்துகொள்ளமுடியும். (உதாரணமா, கீதா ரங்கன் வீட்டில் எத்தனை பேர் இருக்காங்கன்னு தெரியும். அவங்க தில்லிக்கு டிக்கெட் புக் பண்ணினது தெரியும். வங்கி டிரான்சாக்ஷன் கண்டுபிடிக்கமுடியும். கொஞ்சம் 'எமத் திருடன்'னா இருந்தா, எப்போ வீடு புகுந்து திருடலாம்னு தெரியும், அல்லது எங்களைப் போல உள்ளவங்க, எப்போ அவங்க வீட்டுக்குப் போனா ஸ்வீட்ஸ் கிடைக்கும்னு தெரியும்).

  பதிலளிநீக்கு
 17. //ஆனால், நம்ம நாட்டில், ஆதார் எண்ணை பதிவதில் குறைபாடு உண்டு (இந்த டிரான்சேக்ஷனுக்கு இந்த ஆதார் நம்பர் என்று). இதில் கள்ளத்தனமும் நடைபெறும்.//

  டிட்டோ...

  கீதா

  பதிலளிநீக்கு
 18. ஹையோ பாருங்க நெல்லை எனது இரு கருத்துகள் வேலிட் கருத்துகள் அதுவும் உதாரணத்துடன் கொடுத்திருந்தேன் காணவே இல்லை...உங்க கருத்துகள் காணாமல் போனா மாதிரி என்னோடது காணாமப் போச்சு....ஒரு வேளை ஆதார் எண் கேக்குதோ....ஹா ஹா ஹா

  கீதா

  பதிலளிநீக்கு
 19. நெல்லை அதனாலதான் மொபைல்ல கள்ளத்தனமா பேங்க் பெயர் சொல்லி உங்க ஆதார் எண்ணைக் கொடுங்கனு சொல்லி பணம் ஆட்டையப் போடறாங்க...ஆதாருக்கும் செக்யூரிட்டி வேணும் அது இங்கு செய்யப்படலை...

  கீதா

  பதிலளிநீக்கு
 20. இரு மாநில எல்ளைகளில் இருப்பவங்க ரெண்டு மாநில ரேஷன் கார்டும் வைச்சுக்கிட்டு நல்லா ஆட்டையப் போடுறாங்க அதை நிறுத்த இந்த ஆதார் உதவும் தான்.

  உதாரணமாக பாண்டிச்சேரியில் அதன் பிரஜைகளுக்கு ஃப்ரொஃபஷனல் காலேஜ்ல அதாவதுகவன்ர்ன்மென்ட் காலேஜ்னா ஃபீஸ் இல்லாம படிக்கலாம். தனியார்னா அதுல கட்டணக் குறைவு உண்டு...

  என் மகனுடன் படித்த பையன் யானம், ஆந்திரா எல்லையில் இருப்பவன். ஒரு கால் ஆந்திரா ஒரு கால் யானம்...அதாவது பெற்றோர் ஆந்திரா, தாத்தா பாட்டி யானம். எனவே யானம் எல்லையில் உள்ள பள்ளியில் படித்து அந்த ஆவணங்களுடன் பாண்டிச்சேரியில் ஃப்ரீயாகப் படித்தான். மேற்படிப்பு படிக்க மத்திய அரசு தேர்வை எழுதினான். கவுன்ஸலிங்க் வந்தது. அதில் அவன் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவன் பெற்றோர் விவரங்கள் கேட்கப்பட்டதால் இவன் கவுன்ஸலிங்க் தில்லிக்கு வரவில்லை எங்களுடன். அவன் ஏதேதோ சொல்லி மழுப்பினான். எங்களுக்கு அப்புறம் தான் தெரிந்தது இது சர்வசகஜமாகப் பலர் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று. அதில் இவனும். இவன் இப்போது ஆந்திரா மாநிலத்தில் கவர்ன்மென்ட் வேலையில் இருக்கான்...எப்படி ஆவணங்கள் வந்தன??!!!! இவன் ஆந்திராவைச் சேர்ந்தவன் என்று? பாண்டியில் யானத்தைச் சேர்ந்தவன் என்று எப்படி ஆவணங்கள் வந்தன ஃப்ரீயாகப் படித்தான். இப்போது அரசு வேலையில்.....எனக்கு இதெல்லாம் ரொம்பவே ஆச்சரியமாக் இருந்தது.

  இப்படியான திருவிளையாடல்கள் இந்த அதாரினால் ஒழியலாம்.

  ஸ்மார்ட் கார்ட் வந்தப்போ கூட புள்ளிவிவரங்கள் சேகரிக்க வந்தவர்கள் வீட்டில் ஆள் இல்லை என்றதும் ஒரு சிட்டுக் கூட வைக்கவில்லை...இங்கு வந்து உங்கள் விவரங்களைக் கொடுங்கள் என்றோ, இல்லை நாங்கள் இந்த தேதியில் வருகிறோம் என்றோ கூட எந்த அறிவிப்பும் இல்லாமல் சென்றுவிட்டனர். என் பக்கத்து வீட்டில் யாரும் இல்லாத போது ....இது என் நேரடி அனுபவம். இப்படி சரியான தகவல்கள் இல்லை என்றால் எப்படி ஸிஸ்டம் ஒழுங்காக இருக்கும்??!!

  கீதா

  பதிலளிநீக்கு
 21. வந்தது போனது பற்றி தகவல் சொல்லாத பணியாட்களால் பற்பல பிரச்னைகள்.. இத்தகைய மூடர்களால் தான் அரசு அமைப்பிற்குக் கெட்ட பெயர்..

  40 ஆண்டுகளுக்கு முன்
  எனது முகவரியை பட்டுக்கோட்டை தாலுகா புதுக்கோட்டை மாவட்டம் என்று எவனோ ஒரு கிறுக்கன் எழுதியதால் 15 நாள் தாமதமாக வந்தது ஒரு நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு...

  பதிலளிநீக்கு
 22. செல்வராஜூ என்று தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதிக் கொடுத்த பின்னும் செல்வராஜ் என்று வாக்காளர் அட்டை வந்தது..நேரில் சென்று கேட்டும் அலட்சியம் தான் விடை...

  பிறகு பாஸ்போர்ட் புதுப்பிக்கும் போது எத்தனை எத்தனை பிரச்னைகள்...

  அலட்சியம்... அகங்காரம்.. இது தான் பெரும்பாலான அரசு ஊழியர்களின் பொது அடையாளம்..

  பதிலளிநீக்கு
 23. நாங்கள் எட்டாம் வகுப்பு படிக்கும் போதே ஓரளவுக்குப் பெரிய ஊரைச் சொன்னால் அது எந்த மாவட்டத்தில் உள்ளது என்று சொல்லும்படிக்கு பழக்கப்பட்டிருந்தோம்..

  இன்றைக்கு ஒரு பட்டதாரி சொல்கிறான் - வேதாரண்யம் நான் கேள்விப்பட்டதே இல்லை என்று..

  இப்படிப்பட்ட அறிவாளி அரசுப் பணியில் சேர்ந்தால் -

  கள்ளிக்கோட்டை po,
  தேவகோட்டை ஊரணி ,
  புதுக்கோட்டை தாலுகா,
  பட்டுக்கோட்டை மாவட்டம் -

  என்று தான் ஆகும்..

  பதிலளிநீக்கு
 24. எனக்கும் என் கணவருக்கும் ஆதார் போட்டோ எடுக்கத் தந்த அப்பாயிண்ட்மெண்ட் தேதி சென்னை வெள்ளம் வடிந்த பின் டிசம்பர் ..16 ,ம் தேதி .

  பழைய தேதி பெண்டிங்கு அப்பாயிண்ட்மெண்ட் ஆளுங்களோட சேர்த்து....நாறடிச்சுட்டாங்க ..... வீட்டிலிருந்து ரெண்டு கிலோ மீட்டர் தூரம் தான் ... நல்ல வேளை.... எங்கே போனாலும் சோறு கட்டிக்கொண்டு போய் விடுவேன் .... அதனால் பிழைத்தேன் .....

  பதிலளிநீக்கு
 25. ஸ்ரீராம்- கௌ அங்கிள் ஏன் மெயிலே பார்ப்பதில்லை? - ஒருவேளை அவர் திரி கொளுத்தியபிறகு அந்த இடத்தைவிட்டுச் சென்றுவிடுகிறாரோ?

  பதிலளிநீக்கு
 26. //தானைத் தலைவி கீதாக்கா ஸிஸ்டம் சரி செய்யப்போறேனு சொன்னாங்களே!! ஸ்ரீராம், வெங்கட்ஜி துரை சகோ எல்லாரும் தலைவியைப் பிடியுங்க.// என்னத்தைப் பார்க்கிறீங்க? படிக்கிறீங்க? புரியலை! நேத்தே சொன்னேனே, திங்கள் வரை ரொம்ப பிசினு! இப்போக்கொஞ்ச நேரம் கிடைச்சதூ வம்பு என்னனு பார்க்க வந்தேன். :)))  1

  பதிலளிநீக்கு
 27. ஆதார் நிச்சயம் தேவை என்பதற்கான ஆதாரபூர்வமான தகவல்கள் பல உள்ளன! முக்கியமாய் எரிவாயு மானியம் எங்களுக்கிட்டத்தட்ட நான்கு வருடங்களாகத் தொடர்ந்து கிடைக்கிறது. ஆனால் ஆதார் எண்ணைக் கொடுத்தாலும் வங்கிகள் பலவற்றிலும் இருந்து KYC க்கு உங்கள் ஆதார் எண்ணை உடனே பதிவு செய்யுங்கள் என்று இன்று வரை அலைபேசியிலும், இ மெயிலிலும் செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன.

  பதிலளிநீக்கு
 28. இவ்வளவு கொடுத்தும் இத்தனை தூரம் மெனக்கெட்டுச் செய்தும் எங்களுக்கு வந்திருக்கும் ஸ்மார்ட் கார்டில் நம்ம ரங்க்ஸுக்கு 39 வயசுனு போட்டதோடு இல்லாமல் நாங்க இருப்பதும் திம்மசமுத்திரம் என்று வந்திருக்கு. மற்றபடி ஆதார் எண், அவங்க அப்பா பெயர், அவரோட பெயர் எல்லாமும் சரியா இருக்கு! வயசு தான் என்னைவிட ரொம்பச் சின்னவரா ஆயிட்டார்! :))))) ஹெஹெஹெஹெ கிட்டத்தட்ட எங்க பையரை விட 2,3 வயசு தான் அதிகம்! :)))))))

  பதிலளிநீக்கு
 29. அரசு ஆதார் எண்ணாஐக் கொண்டு வருவதற்கான காரணங்களை சொல்ல வேண்டும் காங்கிரஸ் ஆட்சியில் அதார்வேண்டும் என்று சொல்லப்பட்ட போது அப்போதுகுஜராத் முதல் மந்திரியாக இருந்த மோதி தீவிர எதிர்ப்புதெரிவித்தார் இப்போது மத்தியில் ஆட்சிக்கு வந்தவுடன் இன்னதற்குத்தான் ஆதார் வேண்டும் என்று இல்லாமஒல் எல்லாவற்றுக்கும் சகட்டு மேனிக்கு ஆதார் எண்ணைக் கேட்கிறசர்கள் இது தனி மனிதனின் ப்ரைவசியில் ஊடுருவுவதாக வழக்கு இருக்கிறது ஆகவே சப் ஜுடிஸ் எனலாமா

  பதிலளிநீக்கு
 30. ஆதாரைக் குறித்து எமது கருத்து நாளை எனது தளத்தில்... புகைப்படமாய்...

  பதிலளிநீக்கு
 31. பெரும்பான்மையான நாடுகளில் இது போன்ற அடையாள அட்டைகள் இருக்கின்றன. ஓமானில் ரெசிடெண்ட் கார்ட் என்று உண்டு. நாம்தான் அரசு எதைக் கொண்டு வந்தாலும் எதிர்க்க வேண்டும் என்று வைத்துக் கொண்டிருக்கிறோம்.

  அதன் நன்மைகளை மக்கள் புரிந்து கொள்வதற்குள் ஏமாற்றுகிறவர்கள் எப்படி ஏய்ப்பது என்று கண்டு பிடித்து விடுகிறார்கள்.

  நம் ஊரில் ஓட்டர்ஸ் ஐ.டி., ஆதார் கார்ட் இவைகளுக்கு புகைப்படம் எடுப்பதை அவுட் சோர்ஸ் செய்திருக்கிறார்கள். அந்த ஆட்கள் தகுதியானவர்களா என்று பார்ப்பதில்லை. ஆதார் கார்டுக்கு நான், என் மகன், மகள் மூவரும் ஒரே நாளில், ஒரே இடத்தில்தான் விண்ணப்பித்தோம். எங்களை தனித்தனியாக புகைப் படம் எடுத்து விட்டு விலாசத்தை எங்களை விட்டே சரி பார்க்க சொன்னார். நான் ஆங்கிலம், தமிழ் இரண்டையும் சரி பார்த்தேன். என் மகனுக்கும், மகளுக்கும் தமிழ் தெரியாததால் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யப் பட்டிருந்த விலாசத்தை மட்டும் சரி பார்த்து விட்டு வந்து விட்டனர். ஆகவே அவர்களின் ஆதார் கார்டில் ஆங்கில விலாசம் சரியாக இருக்கும் தமிழ் விலாசமோ தாறு மாறாக இருக்கும். மகளின் ஆதார் கார்டில் அவளுடைய தொலைபேசி எண்ணும் தவறாகவே இருந்தது. ஆன் லைனில் மாற்ற வேண்டுமென்றால் தொலைபேசி எண் அவசியம். மிகவும் கஷ்டப்பட்டு மாற்றினாள்.

  என்னுடைய ஓட்டர்ஸ் ஐ.டி.யில் என் பெயர் BANUMATI VENGADESH என்று இருக்கும். மற்ற ரெகார்டுகளில் BHANUMATHY VENKATESWARAN என்று இருக்கும்.

  பதிலளிநீக்கு
 32. In voters id, they interchanged photos of my husband and myself.:(. Applied for correction which is pending....for more than 3 years...
  Aadhar is ok for us surprisingly

  பதிலளிநீக்கு
 33. ஆதார் மிகவுமவசியம்தான். எவ்வளவு முன்நேற்பாடுகள் செய்தாலும் ஏதேனும் குறை வந்துதான் தீரும். கடல் அலை ஓய்ந்தபின் தான் குளிக்க வேண்டும் என்றால் ஆவது ஓன்றுமில்லை.குறை கள் வரும்போது அவற்றை சரி செய்து கொள்ளவேண்டியதுதான். அடிப்படையில் ஒரு முக்கிய மாற்றத்தை செய்தால் நன்றாக இருக்கும் . அது என்ன?

  பலதரப்பட்ட ID களில் இரண்டு முக்கியமானவை, ஒன்று ஆதார் கார்டு. மற்றதுNational REgister of Citzens in India வில் உள்ள பதிவு. இரண்டாவது குடி உரிமைக்கு சான்று. ஆதார் கார்ட் உள்ளவர்கள் குடிமகனாக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆதார் கார்டை குடி உரிமை உள்ளவர்கட்கு மட்டும் கொடுக்க வேண்டும் அதை ஆவணமாகக் கொள்ள வேண்டும். பின்னர் voters ID, Pan Card போன்ற அனைத்தையும் ஒழித்து விடலாம். Non-citizens who are residents (legally) can be provided with a differnt ID. This would have been viable from the start of UiDAI but for the projudice of the then HM PC.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!